Mathavaraj's Blog, page 4
January 19, 2025
நான் என்ன செய்கிறேன் என்று உனக்குத் தெரியுமா? - 2

“நான் என்ன செய்கிறேன் என்றுஉனக்குத் தெரியுமா? ‘
“கருப்புப் பணத்தை
மீட்பதாகச் சொன்னீர்கள்
எல்லோர் கணக்கிலும் பதினைந்து லட்சம்
வரவு வைப்பதாய்ச் சொன்னீர்கள்
ஒவ்வொரு ஆண்டும்
இரண்டு கோடி பேருக்கு
வேலை தருவதாகச் சொன்னீர்கள்
பெட்ரோல் விலையை
குறைப்பதாகச் சொன்னீர்கள்
அமெரிக்க டாலருக்கு இணையாக
ருபாயின் மதிப்பை
உயர்த்துவதாகச் சொன்னீர்கள்
ஊழலை அடியோடு
ஒழிப்பதாகச் சொன்னீர்கள்
ஏழை மக்களுக்காக
ஆட்சி நடத்துவதாகச் சொன்னீர்கள்
கங்கை நதியை
சுத்தம் செய்வதாகச் சொன்னீர்கள்
ஜனநாயகத்தின் கோவிலென்று
பாராளுமன்றத்தைச் சொன்னீர்கள்!”
“போதும். நிறுத்து! நிறுத்து!!
செய்வதைக் கேட்டால்
சொன்னதையெல்லாம் சொல்கிறாய்!
துரோகியே!
இன்னுமா அதையெல்லாம்
நினைவில் வைத்திருக்கிறாய்”
ஆட்டம் (மலையாள சினிமா)

விரிவாக எழுதி தீராத பக்கங்களில்சேமித்துக் கொள்கிறேன்.
------------
ஒருநாடகக்குழு. பத்துப் பனிரெண்டு ஆண்கள். ஒரே ஒரு பெண் அஞ்சலி. நாடகத்தின் மீதான ஆர்வம்கொண்ட இளைஞர்கள் அவர்கள்.எல்லோரும்ஒரு இடத்தில் தங்க நேரும் ஒரு இரவில் அஞ்சலி அங்குள்ள ஒருவனால் பாலியல் சீண்டலுக்குஉள்ளாகிறாள். அவனது முகம் பார்க்கவில்லை. அவனிடமிருந்து கீழே விழுந்த பொருள் ஒன்றையும்,பிரத்யேகமான செண்ட்டின் வாசனையையும் வைத்து அவள் இன்னார்தான் என சந்தேகம் கொள்கிறாள்.
நாடகக்குழுவில்தனக்கு பிரியமான, நெருக்கமான ஆணிடம் அஞ்சலி தன் வேதனையைப் பகிர்ந்து கொள்கிறாள். அந்தஆண் தனக்கு நெருக்கமான இன்னொரு ஆணிடம் சொல்லி, அஞ்சலியிடம் தவறாக நடந்து கொண்ட ஆணைநாடகக்குழுவிலிருந்து நீக்க வேண்டும் என்கிறான்.
குற்றம்சாட்டப்பட்ட ஆணையும், குற்றம் சாட்டிய பெண்ணையும் தவிர மற்ற ஆண்கள் எல்லாம் ஒன்று கூடிவிவாதிக்கிறார்கள். என்ன செய்வது என திட்டமிடுகிறார்கள்.
இந்தப்புள்ளியை மையமாக வைத்து நடப்பதுதான் ஆட்டம். மாறி மாறிப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.ஒவ்வொருவரிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகள்தாம் ஆட்டத்தையே நடத்திச் செல்கின்றன. ஒவ்வொரு வார்த்தையும்,ஒவ்வொருவரின் வார்த்தைகளும் முக்கியமானவை. மனித மனங்களை, அவர்களுக்குள் ஒடும் சிந்தனையோட்டங்களை,மாறும் ஆண்களின் நிறங்களை பார்வையாளர்களுக்கு கடத்துகின்றன. ஆட்டத்தின் சுவாரசியமேஅதுதான்.
வார்த்தைகளைத்தவற விட்டு விட்டால் காட்சிகள் அதற்குரிய நிறத்தோடும் அர்த்தத்தோடு புலப்படாது. முகமூடிகள்அணிந்து கொண்டவர்களை அவர்களது உரையாடல்கள் மூலம்தானே அறிந்து கொள்ள முடியும்
குற்றம்சாட்டப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், குற்றம் செய்த அந்த ஆணை நாடகக்குழுவிலிருந்துநீக்க வேண்டும் என்று ஆரம்பித்து தொடரும் உரையாடல்களில் பனிரெண்டு ஆண்களும் தனித்தனியே இருக்கிறார்கள். நேரம் செல்ல செல்ல அந்த பிரச்சினைக்குபல்வேறு பரிமாணங்களும் சார்பு நிலைகளும் உருவாகி மேலும் மேலும் சிக்கலாகிறது. நம்பிக்கைசார்ந்து பேசுகிறார்கள். தங்கள் சுய அனுகூலங்கள் சார்ந்து பேசுகிறார்கள். பழைய காயங்களிலிருந்துவன்மம் கொண்டு பேசுகிறார்கள். முதலில் தண்டிக்க வேண்டும் என்கிறவர்கள் அடுத்து கொஞ்சநேரத்திலேயே அதிலிருந்து பிறழ்ந்து பேசுகிறார்கள். அவரவர்க்கான நிலைபாடுகளிலிருந்துதர்க்கங்களை முன்வைக்கின்றனர்.
ஒவ்வொருவருக்குள்ளும்இருந்து வெளிப்படும் ஆண்கள், நாம் ஏற்கனவே பார்த்த, பார்க்கிற ஆண்களாகவும், தனிமையில்பார்த்த நாமாகவும் இருக்கிறோம். அத்தனைக்கும் ஊடே ஒவ்வொருவரும் ஆணும் தன்னை சரியானவனாகவும்,நல்லவனாகவும், முற்போக்காளனாகவும் வெளிக்காட்டிக் கொள்ள செய்யும் பிரயத்தனங்கள் இருக்கிறதே,அதுதான் ஆட்டத்தின் சுவாரசியம்.
அந்தப்பெண்ணை அழைத்து நடந்ததை விசாரிக்க வேண்டும் என்கிறார்கள். தன்னைப் புரிந்து கொண்ட,பிரியமான ஆணிடம் பகிர்ந்து கொண்ட ஒரு சந்தேகம், அவளுக்குத் தெரியாமல் பனிரெண்டு ஆண்களால்விவாதிக்கப்பட்டு அவரவர்க்கான நியாயங்களோடு ஊதப்பட்டு இறுக்கமான நேரத்தில் அந்த பெண்அங்கு செல்கிறாள். தான் அதுவரை புரிந்து கொண்டிராத உலகில் நுழைகிறாள். ஆண்களின் வார்த்தைகளை அந்தப் பெண் எதிர்கொள்கிறாள். அதிர்ந்து போகிறது ஆட்டம்.
ஆண்கள்எழுப்பும் கேள்விகள், நடந்த நிகழ்வு குறித்து கொண்டிருக்கும் சந்தேகங்கள் அவளை குழப்பமடையச்செய்கின்றன. அவள் மிக நேர்மையாக, உண்மையாக பேசுகிறாள். அதற்கான வெளி ஆண்களிடம் இல்லைஎன்பது அவளுக்குத் தெரியவில்லை. ரகசியமாய் பாதுகாத்தவை அவளுக்கு எதிராகவே திரும்புவதைப்பார்க்கிறாள். மௌனமாக நிதானமாக எல்லோரையும் புரிந்து கொள்கிறாள். ஆனாலும் அவளிடமிருந்துஒரு வார்த்தையும் உண்மை தவறவில்லை.
அங்குஇல்லவே இல்லாத ஆண் மீது சாட்டப்பட்ட குற்றம் நிருபணம் ஆகாமல் போகிறது. பிரியமானவன்,தன்னைப் புரிந்து கொண்டவன் என்று அவள் நினைத்தவனே சக மனிதனாக இல்லாமல் எல்லோரோடும்வெறும் ஆணாகி நிற்பதைப் பார்த்து சிரித்து ஆட்டத்திலிருந்து வெளியேறுகிறாள். அந்த ஒரேபெண் மட்டும் முகமூடி இல்லாமல் கம்பீரமாக தெரிகிறாள்.
பிறகு ஆட்டம் வேறொரு இடத்தில் ஆரம்பமாகிறது. அங்குஅவள் பேசுகிறாள். ’உங்களிடம் ஒருவன் தப்பானவன் இருக்கிறான். அவன் யார் என்று நீங்கள்சொல்லவில்லை. அவன் யார் என்று தெரியும் வரை நீங்கள் அனைவருமே தப்பானவர்கள்’ என்கிறாள்.அந்த கடைசி காட்சி கிளாசிக். அது பெண்ணின் ஆட்டம்.
ஆண்களின்அக உலகத்தை, அதில் நிரம்பியிருக்கும் பொய்மையை சந்தர்ப்பவாதத்தை, போலித்தனத்தை எல்லாம்தோலுரிக்கிறது சினிமா. ’ஆட்டம்’ அழுத்தத்தோடும், தாக்கங்களோடும் சிந்தனையை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது.
மிகஎளிமையாக சொல்லப்பட்ட சினிமா. அதே நேரத்தில் அழுத்தமாக நினைவுகளிலும், உணர்வுகளிலும்பதியக் கூடியதாய் காட்சிகளும் உரையாடல்களும் இருந்தன. வேறு மொழிதான். இருந்தாலும் பார்வையாளர்களைஒன்ற வைத்ததோடு இல்லாமல் கதாபாத்திரங்களோடு தங்களை இணைத்துக் கொள்ளும் திரைமொழி வசப்பட்டிருந்தது.
அஞ்சலியாகநடித்திருக்கும் ஜரின் ஷிஹாப்பை இந்தப் படத்தில்தான் பார்க்கிறேன். மறக்க முடியாது.படத்தின் இயக்குனர் ஆனந்த் எகார்ஷி மற்றும் அவரது படக்குழுவினருக்கும் பாராட்டுகள்.
இந்தியஅளவில் சென்ற ஆண்டின் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
மகிழ்ச்சி.
அமேசான்பிரைமில் பார்க்கலாம்.
ஆட்டம் - வார்த்தைகளின் உலகம்

நான் என்ன செய்கிறேன் என்று தெரியுமா? - 1

எனக்குஎல்லாம் தெரியும்
உனக்குஒன்றும் தெரியாது
என்பதேஅது.
எளியவரின்இயலாமை
குறித்தஏளனம் அது
பீடத்தில்அமர்ந்து
கீழ்இருப்பவரைப் பார்க்கும்
அலட்சியம்அது.
வாழ்வோடுபோராடுகிறவர்களை
புழுக்களாய் நடத்தும்
அகங்காரம் அது
நானே முக்கியமானவன் என்னும் ஆணவம் அது
சர்வ வல்லமை படைத்த எனக்கு நீ சமமா என்னும் சனாதனம் அது
“நான்என்ன செய்கிறேன் என்று உனக்குத்தெரியுமா?”
என்னும்கேள்வியில்
அதிகாரத்தைத்தவிர
வேறொன்றும்இல்லை.
கேட்டது நானாய் இருந்தாலும் நீங்களாய் இருந்தாலும்
அரசனாயிருந்தாலும்
கடவுளாய்இருந்தாலும்
(பி.கு: இந்தக் கேள்வியோடு இன்னும் கவிதைகள் வரும்.)
நான் என்ன செய்கிறேன் என்று உனக்குத் தெரியுமா? - 1

January 17, 2025
அறிவிப்பு : எப்படியிருக்கிறது செயலி?

நண்பர்களே!
வணக்கம்.
இன்றோடு ஒரு வாரம் ஆகிறது.
தீராத பக்கங்களின் இன்னொரு பக்கமாக – மொபைல்செயலியாக உருவெடுத்திருக்கிறது.
(16.1.2025 ) முந்தாநாள் வரை இந்த மொபைல் செயலியைதரவிறக்கம் (Download) செய்தவர்கள் எண்ணிக்கையை 214 என்று காட்டுகிறது கூகிள்.
அதிகமாக எல்லாம் ஆசைப்படாததால், இந்த எண்ணிக்கைமகிழ்ச்சியே. ஐந்தாறு மாதங்களுக்குள் ஆயிரத்தைத் தொட முடிந்தால் பெரும்மகிழ்ச்சி.
சராசரியாக ஒரு பதிவை 300 பேர் படித்துக் கொண்டிருந்தவர்களின்எண்ணிக்கை இந்த வாரத்தில் 400 என உயர்ந்திருக்கிறது. உங்களுக்கு என் நன்றி.
இன்னும் தரவிறக்கம் (Download) செய்து கொள்ளாதவர்கள், இன்றே செய்து கொள்ளுங்கள்.உங்கள் மொபைலில் நிறுவிக் கொள்ளுங்கள். உங்களுக்குஎன் அன்பு வேண்டுகோள்.
சரி. விஷயத்துக்கு வருவோம். மொபைலில் தீராத பக்கங்களை படித்துக் கொண்டிருப்பவர்கள்தங்கள் அனுபவங்களைச் சொன்னால் இந்த செயலியை மேம்படுத்த உதவியாய் இருக்கும்.
1. செயலியைத் தொட்டவுடன் தீராத பக்கங்கள் திறக்கிறதா?
2. வடிவமைப்பும் எழுத்துருக்களும் படிக்க வசதியாகஇருக்கின்றனவா?
3. புதிய பதிவு வெளியானதும் ‘தீராத பக்கங்கள்’என்னும் குரலோடு உங்கள் மொபைலுக்கு அழைப்பு வருகிறதா?
4. லிங்க்கைத் தொட்டதும், அந்தப் பக்கத்துக்குஅழைத்துச் (Redirect) செல்கிறதா?
5. இடையிடையே விளம்பரங்கள் வராமல்தான் செயலிவடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதையும் மீறி விளம்பரங்களின் தொந்தரவு இருக்கிறதா?
6. சில வெளி நாடுகளுக்கு மட்டும்தான் AppAvailability Option கொடுக்கப்பட்டிருக்கிறது.யாராவது தெரியப்படுத்தினால் விரைவில் updateசெய்துகொள்ளலாம்.
7.கமெண்ட் செய்யும்போது Google Account signசெய்வதில் சிரமம் இருக்கிறதா?
8. இது தவிர வேறு எதேனும் issues / advices/ assessment இருந்ததால் தெரியப்படுத்துங்கள்.செயலியை சரி செய்யவும் மேம்படுத்தவும் உதவிகரமாக இருக்கும்.
மேற்கூறிய விஷயங்களில் உங்கள் கருத்துக்களை அவசியம்தெரிவியுங்கள் நண்பர்களே!
உங்கள் பொதுவான மதிப்பீடுகளை Play storeல் Mathavaraj App-ன் பக்கத்திற்குசென்று Rating and Reviewல் தெரியப்படுத்தினால்மிக்க மகிழ்ச்சி.
உங்கள் ஆதரவும், கருத்துக்களும் இந்த முன்முயற்சிக்குஊக்கமளிக்கும்.
நன்றி.
அன்புடன்
மாதவராஜ்
கட்டித்தங்கம் டீச்சர்!

முப்பதுவருடங்களுக்குப் பிறகு அந்தப் பள்ளியின் பழைய மாணவர்கள் மீண்டும் ஒருநாள் சந்தித்துக்கொண்டார்கள்.
முதலில்ஒருவருக்கொருவர் தங்கள் தோற்றங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைக் கண்டு அவை குறித்துபேசினார்கள். பின்னர் தங்களைப் பற்றி, தங்கள் குடும்பம் பற்றி, தங்கள் வேலை மற்றும்வியாபாரம் பற்றியெல்லாம் பகிர்ந்து கொண்டார்கள். தங்களைப் பற்றி யார் பேசினாலும் மற்றவர்களுக்குஅது ஒட்டாமல் வெறும் தகவல்களாகவேத் தெரிந்தன.
அந்தபள்ளியைப் பற்றியும், அதன் ஆசிரியர்கள் பற்றியும் யார் பேசினாலும் எல்லோரும் ஆர்வமாய் கேட்டார்கள். ஒவ்வொருவரிடமிருந்தும் கதைகள் கொட்டி வந்தன. எல்லோரிடமும்அவ்வளவு நினைவுகளும் அனுபவங்களும் நிறைந்து இருந்தன. பள்ளியும் ஆசிரியர்களும் அவர்களுக்குபொதுவாய் இருந்தனர்.
அப்படித்தான்கட்டித்தங்கம் டீச்சர் பற்றி அன்று பேச்சு வந்தது. எல்லோருக்குள்ளும் இன்னும் தேவதையாய்இருந்தார். அவரது நடை, உடை, பாவனை, பாடம் நடத்தும் முறை, தங்களிடம் காட்டிய பரிவு எனநேரம் தெரியாமல் பேசி மகிழ்ந்தார்கள். கட்டித்தங்கம் டீச்சரை ஒருமுறை பார்த்து வர ஆசைப்பட்டார்கள். அதற்கென ஒருநாளைக் குறித்துக்கொண்டார்கள்.
சிலமாதங்கள் கழித்து நரைத்த முடியும், தளர்ந்த உடலும், கண்ணாடிக்குள் கண்களும் கொண்ட வயதானவராய்தங்கள் கட்டித்தங்கம் டீச்சரைப் பார்த்தார்கள். தாங்கள் எந்த வருடம் படித்தோம் என்றுசொன்னார்கள். தங்கள் பேரைச் சொன்னார்கள். தாங்கள் இப்போது என்னவாக இருக்கிறோம் என்பதைச்சொன்னார்கள். எந்த வரிசையில் உட்கார்ந்திருந்தோம்என்றெல்லாம் குறிப்பிட்டார்கள். கட்டித்தங்கம் டீச்சரால் யாரையும் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை.
வகுப்பில்கட்டித்தங்கம் டீச்சர் எடுத்த பாடங்கள் குறித்துச் சொன்னார்கள். லேசாய் அவர் புன்னகைத்தார்.வகுப்பில் கொஞ்சம் கூட உட்காராமல் பாடம் நடத்துவது, போர்டில் பெரிது பெரிதாய் எழுதிப்போடுவது என தங்களிடமிருந்த காட்சிகளை தீட்ட ஆரம்பித்தனர். நினைவுக்கு வருவதாய் அவரதுமுகம் மலர்ந்தது. நல்ல மதிப்பெண் எடுத்தவர்களுக்குபேனா வாங்கிக் கொடுக்கும் அவரது வழக்கத்தை நினைவு படுத்தினார்கள். ஆச்சரியத்துடனும்அன்போடும் தன் முன்னாள் மாணவர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.
கட்டித்தங்கம்டீச்சரைப் பார்த்தது, பேசியது குறித்தெல்லாம் அவர்களுக்கு மகிழ்ச்சி இருந்தாலும், தங்கள் முகம் டீச்சருக்குத்தெரியவில்லையே என்ற ஏக்கமும் வருத்தமும் கொண்டனர்.
மரத்தின்கிளைகளும், இலைகளும், கனிகளும், மரத்தில் வந்து தங்கும் பறவைகளும் அதன் பாடல்களும்மண்ணிற்கு தெரிவதில்லை. அதற்குத் தெரிந்தது விதைகளும், வேர்களுமே.
January 16, 2025
கடிதத்தில் காலம் கரை புரண்டு ஒடுகிறது!

வைப்பாற்றங்கரையோரத்திலிருந்துமுப்பது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட கடிதம் இது. வாசிக்கும்போது அந்த நாட்களெல்லாம்கரை புரண்டு ஓடுகின்றன. கண்களும்தான்.
எனது முதல்சிறுகதை தொகுப்பு ‘இராஜகுமாரன்’ பற்றி, அப்போது வைப்பாற்றங்கரையில், வெள்ளக்கரை ரோட்டில்குடியிருந்த எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி அவர்கள் எழுதிய கடிதம். கதைகளைப் பற்றி மட்டுமாஎழுதியிருக்கிறார்? யாரெல்லாம் அதில் வருகிறார்கள்? ஒரு கடிதம் என்பது எவ்வளவு மகத்துவமானது!காலத்தை அடைகாப்பது!
அவரது உடல்நலம்குறித்து பகிர்ந்து கொள்கிறார். எழுத்தாளர்கள் கு.அழகிரிசாமி, லிங்கன், அ.முத்தானந்தம்,பாமா, தமிழ்ச்செல்வன், கோணங்கி, ஷாஜஹான், காமராஜ், இரா.முருகன் கவிஞர் லஷ்மிகாந்தன்,பிரியா கார்த்தி, வருகிறார்கள்.
சாத்தூரில்தான்அவரும் இருந்தார். ஏற்கனவே அந்த தொகுப்பு பற்றி நேரிலும் பேசியிருந்தார். இருந்தாலும்ஏன் அந்தக் கடிதம் எழுதினார்?
அவர் குறிப்பிட்டிருக்கும்காரணம் இன்றுதான், இப்படி நிறைவேறி இருக்கிறது.
சாத்தூர்
20.5.95
அன்பிற்குரிய மாதவராஜ்!
வணக்கம்.
இதுக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிற மாதிரி நெனவிருக்கு. அது அஞ்சாறு வருஷங்களுக்கு முன்ன இருக்கலாம்.
16.5.95 காலை 8.30 மணியளவில் உங்க ‘ராஜகுமாரன்’ தொகுப்ப படிக்க எடுத்தேன். பிற்பகல் 1.20 மணியளவில் எல்லாக் கதைகளையும் படிச்சு முடிச்சிருந்தேன்.
கால்ல செய்துகிட்ட சின்ன ஆபரேஷன்ல படிக்கிறதே கதியாப் போச்சு. 13.5.95ல செய்தது. அன்னைக்கு விருந்தினர் வந்துட்டாங்க. 14.5.95ல பாமாவின் ‘கருக்கு’ படிச்சேன். 15.5.95ல கோணங்கி வந்து நாள் முழுக்க பேசிக்கிட்டிருந்தான்.
16.5.95 இரவு 7 மணியளவுல உங்களுக்கு கடிதம் எழுதணும்னு உக்காந்தவுடனே… ‘தமிழ்ச்செல்வன் வந்திருக்கான்’னு மனைவி வந்து சொன்னாங்க. அப்புறம்…. நீங்க, காமராஜ், ஷாஜஹான், லட்சுமிகாந்தன், கார்த்திகேயன் இன்னுமொருவர்ன்னு வந்துட்டீங்க.
அன்னைக்கு கோணங்கிக்கு எம்மேல ரொம்ப கோவம் வந்திருச்சு. அதனால தான் அப்படிப்பட்ட உண்மை மயமான உரையாடல அவனோட வச்சுக்கிடறதில்ல.
அன்னைக்கு பத்து பேர் வந்து கண்ட மேனிக்கு பேசிக்கிட்டிருந்தது ரொம்ப நல்லாயிருந்துச்சு. எனக்கு ரொம்ப பெருமையா இருந்தது. என் கண்மணிகள் போன்ற நீங்க, ஷாஜஹான்…. போன்றோரைப் பாக்க பாக்க சந்தோஷம். இப்போ நெனைக்கும் போது கூட அப்படித்தான் இருக்கு.
17,18,19 தேதிகள்ள கூட உங்களுக்கு ஒரு கடிதம் எழுத ஆசப்பட்டேன். ஆபரேஷனுக்காக சாப்பிட்டு மாத்திரைகள்ள வயிற்றுக் கோளாறு பலமா வந்திருச்சு. அத்தோடு வலது தோள் பட்டை, கழுத்தில கடுமையான வலி.
’மாதவராஜ நேரில பாத்தப்போ…. தொகுப்ப முழுதும் பட்சிச்சிட்டேன்… கடிதம் எழுத நெனைச்சேன் வந்துட்டீங்கன்னு’ சொல்லியாச்சுல்ல இனி எதுக்கு கடிதம்…. மேக்கொண்டு கதைகளைப் பற்றிய விமர்சனத்தையும் சொல்லியாச்சுல’ன்னு மனசுக்குள்ள ஒரு எண்ணம் ஓடிச்சு.
ஒரு தொகுப்ப பற்றி நம்ம கருத்த எழுதிக் குடுக்குறதுதான் ரொம்ப சரி… அத திரும்பத் திரும்ப படிச்சும் பாக்க முடியும்… மத்தவங்கக் கிட்ட காட்ட முடியும். எழுதிக் குடுக்கணும்னு தோணிச்சு.
’தோழர்’ நாவலப் படிச்சுட்டு மாதவராஜ் எவ்வளவு நல்ல கடிதம் எழுதி கையில கொண்டு வந்து குடுத்தார்! ஏதோ ஒரு சிறுகதைய…. என் கதையைத்தான்… அது ‘அன்புள்ள..’வாக இருக்கலாம். காமராஜ் படிச்சுட்டு எவ்வளவு அற்புதமான கடிதம் எழுதி எங்கிட்ட குடுத்தார். அந்தக் கடிதம் என் கதைய விட நல்லாயிருக்கிற மாதிரி இருந்துச்சு…. காமராஜுக்குள் உள்ள படைப்பாற்றலை அது காட்டியது.
சின்ன ஆபரேஷன் வலி…. சிறிதாகவுள்ள தோள் வலி இவற்றுக்கிடையே… ஒரு பொதுவான… அன்பான… அபிப்பிராய கடிதத்த எழுதுறேன்.
’ராஜகுமாரன்’ தொகுப்ப கையில எடுத்து வாசிக்க தொடங்கியலேர்ந்து மேலும் மேலும் சந்தோஷமாயிருந்தது. எவ்வளவு நுட்பமா யாருக்கோ நேர்ந்தத எல்லாம் எழுதியிருக்காரேன்னு ஆச்சரியமாயிருந்தது. சமூகத்தில பொருளாதார மிகுதியால (முதன்மையால ) அழிஞ்சு போயிருக்கிற மனுஷத்தனம்…. சமூக வாழ்க்கை நெருக்கடி களுக்கிடையே தவித்து துளிர் விட்டிருக்கிற வாழ்க்கை நேசம்… இவற்றை ரொம்ப ஆச்சரியப்படும்படி சிறுகதைகளாக ஆக்கியிருக்கீங்க.
இந்தக் கதைகள் எல்லாவற்றையுமே ஏற்கனவே படிச்சிருக்கேன். ரெண்டு மூனு கதைகளத் தவிர மற்ற கதைகள எழுதுறதுக்கு முன்னாடி ஏங்கிட்ட சொல்லியிருக்கீங்க. அப்படியிருந்தும் திரும்ப வாசிக்க ஆனந்தமா யிருக்கு. அதுக்குப் பேருதான் கவித்துவம். இதில் பல கதைகள் அற்புதமான கவிதைகள்தான்.
இந்தக் கதைகளில் எதப் படிச்சிட்டும் யாருடைய மனசிலும் கெட்ட நெனப்பு, பயம், வக்கிரம் பிற தீமைகள் ஏற்பட்டிராது.
எனக்கு கு.அழகிரிசாமி கதைகள் ரொம்ப பிடிக்கும். என் கால எழுத்தாளர்களில் ‘லிங்கன்’, ‘அ.முத்தானந்தம்’ கதைகள் பிடிக்கும். வருகிற தலைமுறையில் ஷாஜஹான், இரா.முருகன் கதைகள் ரொம்ப பிடிக்குது. உங்க கதைகளும் ரொம்ப பிடிக்கு.
இதிலுள்ள பதினோரு கதைகளும் நல்ல கதைகள். ‘இயேசுவானவன்’, ’இன்னும் கிளிகள்’ இந்த ரெண்டைத் தவிர மற்ற ஒன்பது கதைகள் ரொம்ப நல்ல கதைகள்.
’வேகாத வெயில்’ கதையெல்லாம் ரொம்ப அற்புதமான கதை. பேச்சிகளுக்கு உள்ள பாடுகளும் துன்பங்களுந்தா எவ்வளவு? அங்கே போனா சோறு காச்சிப் போடாத அம்மாவ குடிகார அப்பன் தெருவுல போட்டு அடிச்சுக்கிட்டுருக்கான்….
’சாணி மெழுகிய களிமண் தரையில் கிடந்த வேர்க்கடலைத் தோல்கள் புழுக்கள் மாதிரி நெளிந்தன…..’ ‘அவளை உரசிப்போன கிடாவிடமிருந்து அசிங்கமான நாற்றம் வந்தது…’ போன்ற இயல்பான விவரணை மூலமா மிக நுட்பமான மன உணர்வுகளைக் காட்டியிருக்கீங்க.
ராஜகுமாரன் கதையின் இறுதிப் பகுதியை படிக்கும் போது பெரிதும் விம்மி அழுதுட்டேன். மீண்டும் அந்தக் கதையப் படிச்சேன். ‘தியாகு கொஞ்சம் உள்ள வாப்பா”ன்னு கூப்பிட்டு அம்மா ருபா கொடுக்கும்போது மீண்டும் தாயமையைத் தழுவி அழுகிறேன்.
’சுடலை குடிபோதையில் அவர்கள் யாருக்கும் அடங்காமல் நின்ற நிலையை திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்க ஆசையாய் இருந்தது. எதிரே ஓடி வந்த ரெண்டாவது மகனை வாரியெடுத்து “எம்புள்ளா” என்று உச்சி முகர்ந்து கொடுத்தாள்’னு ஒரு தலித் பெண்ணைக் காட்டியிருக்கீங்க. அந்த என் மகளை உச்சி முகர்ந்து நெற்றியில் முத்தமிடுகிறேன். உங்கள் நெஞ்சிற்கும் விரல்களுக்கும் என் முத்தங்கள்.
தனுஷ்கோடி ராமசாமி.
January 14, 2025
ஆன்மீக அரசியல்

’கும்பமேளாக்களுக்குலட்சக்கணக்கில் பக்தர்களும், சாதுக்களும் திரண்டனர்’ என்ற செய்திகளையும் நிர்வாணச்சாமியார்களின் ஊர்வலப் படங்களையும் கலாய்த்து, தலையிலடித்து கடந்து போகிறவர்களாய் இருந்தால்நீங்கள் அதிர்ந்து போகக் கூடும். அந்த சடங்குகளின் மீதும், சாமியார்களின் மீதும் நம்பிக்கைகொண்டு கன்னத்தில் போட்டு, கும்பிட்டு காலம் தள்ளுகிறவர்களாய் இருந்தால் நீங்கள் விழித்துக்கொள்ளக் கூடும். ‘ஆன்மீக அரசியல்’ புத்தகம் அப்படிப்பட்டது. 2023ம் ஆண்டில் வாசித்தபுத்தகங்களில் மிக முக்கியமானது.
இந்திய நிலப்பரப்பின்பெருமையும், வரலாறும் ஆன்மீகம் வழிவந்தது என்றும், சாதுக்களும், சன்னியாசிகளும் கண்டடைந்தஞானமே நம் மக்களின் வாழ்வுக்கான வழிகாட்டி என்றும் வழிவழியாய் கதைகள் சொல்லப்பட்டுவருகின்றன. அவை எல்லாவற்றின் தோலையும் உரிக்கிறது இந்த புத்தகம். சாதுக்களின் பயணத்தில்முதல் பலியே ஆன்மீகமும், துறவும்தான் என்பதை சர்வ நிச்சயமாய் காட்டுகிறது.
சாதுக்கள் என்றால்கோவில்களில் பூசை செய்து கொண்டும், மக்களிடையே புராணக்கதைகள் பேசிக்கொண்டும், தர்மத்தையும்,அறத்தையும் பிரசங்கம் செய்து கொண்டும் இருப்பார்கள் என்னும் புனித பிம்பங்கள் நம்மையறிமாலேயேபொதுப் புத்தியில் எழுப்பப்பட்டிருக்கின்றன. இந்த சாதுக்கள் எங்கிருந்து வருகிறார்கள்,எப்படி உருவாகிறார்கள், என்பதெல்லாம் அறியாமலேயே காலகாலமாய் அவர்களை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு திரிகிறது ஒரு பெரும்பான்மை சமூகம். வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்த அவர்களது வாழ்வையும்அதிகாரத்துக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் வெறி பிடித்தவர்கள் என்பதையும் நமக்கு ஆதாரங்களோடு கதை கதையாய் சொல்கிறது.பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தும் நிகழ்வுகளை அடுக்கடுக்காய் கொண்ட வரலாறாக அது நீள்கிறது.
300 பக்கங்கள்கொண்ட புத்தகத்தில் நித்தியானந்தாவுக்கு ஒன்றிரண்டு பத்தியும், காஞ்சி சங்கராச்சாரிக்குஒன்றிரண்டு பக்கங்களுக்குமே இடம் கிடைக்கிறது. இந்த புத்தகத்தில் சொல்லப்படும் ’ஆன்மீகஅரசியல்’ எவ்வளவு விரிந்து பரந்து அடர்த்தியானது என்பதற்கான அளவுகோல் அது. அயோத்தியைச்சுற்றி மட்டிலும் நூற்றுக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அதுபோல் தேசமெங்கும் நிறைந்திருக்கும்கோவில்கள், அதன் நில புலன்கள், சொத்துக்கள், மக்களிடம் வியாபித்திருக்கும் செல்வாக்குஎல்லாம் சாதுக்களை எப்படி ஆட்டிப் படைக்கின்றன, அந்த சாதுக்கள் அரசியலையும், அதிகாரத்தையும்எப்படி ஆட்டிப் படைக்கின்றனர் என்பதை கடந்த கால வரலாற்றின் தொடர்ச்சியாக புத்தகம் நிறுவுகிறது.
மன்னர்கள் காலத்தில்கூலிப்படைகளாய் இருந்த சாதுக்களும், சன்னியாசிகளும் பிறகு மொகலாய அரசர்களுக்காகவும்,பின்னர் ஆங்கிலேயர்களுக்காகவும் கூட சண்டைகள் போட்டிருக்கிறார்கள். அப்பேர்ப்பட்ட கடந்தகால வீரத்தையும் வலிமையையும் இழந்து விட்டதாக பெருமூச்சு விடுகிறார்கள். ஆனால் இப்போதும்சண்டைகளுக்கு குறைவில்லை. தங்களை நிலை நிறுத்திக் கொள்ளவும், அதிகாரம் நோக்கிய பதவிகளுக்குச்செல்லவும் சாதுக்கள் செய்கிற காரியங்கள் எல்லாம் சூழ்ச்சிகளாகவும், இரக்கமற்ற வன்முறைகளாகவுமேஇருக்கின்றன. இந்திய சினிமாக்களில் நாம் பார்த்த Gang War-களெல்லாம் சாதுக்களிடையேநடக்கிற சண்டைகளுக்கு முன்பு மிக மிகச் சாதாரணமானவையாய், அற்பமானவையாய்த்தான் தெரிகின்றன.
இந்திய அரசியல்அதிகாரத்தை கைப்பற்ற இந்த சாதுக்களை தன் வயப்படுத்த முனைந்தது ஆர்.எஸ்.எஸ். ஆரம்பத்தில்அதன் முயற்சிகள் பலிக்கவில்லை. அதற்கென நெய்யப்பட்ட வலையாக வி.ஹெச்.பி விரிகிறது. காந்தியும், நேருவும், இந்திரா காந்தியும் தோற்றுப்போன இடத்தில் வி.ஹெச்.பி நுழைந்து சாதுக்களின் உலகத்திற்குள் ஊடுருவுகிறது. ராம ஜென்மபூமியை கையிலெடுக்கிறது. மதச்சார்பற்ற நாட்டை மதச் சார்புள்ள நாடாக மாற்றுவதே ராம ராஜ்ஜியத்தின்நோக்கமாக இருக்கிறது. சாதுக்களின் உலகத்தை இந்துத்துவ மயமாக்குகிறது. ஆன்மீகத்தை சந்தையாக்குகிறது.அதன் விளைவுகளையும், தாக்கங்களையும் ‘ஆன்மீக அரசியல்’ முன்வைக்கிறது.
இந்திய அரசியல்குறித்து அறியப்படாத இருண்ட பக்கங்களை இந்த புத்தகம் சொல்லிச் செல்கிறது. அதை அறியமுன்வருவோமானால் இந்திய அரசியலையேக் கவ்வியிருக்கும் ஆபத்தை உணர முடியும். அந்த உலகம்குறித்த பிரக்ஞையில்லாமல்தான் நம்மில் பலரும் மேலோட்டமாக இங்கு அரசியல் பேசிக்கொண்டுஇருப்பதாகப் படுகிறது.
பத்தாண்டுகளுக்கும்மேலாக முமுமையாக தன்னை ஈடுபடுத்தி, பலரையும் சந்தித்து, வரலாற்றை சேகரித்து, ஆய்வுநடத்தி ஆதாரமான தரவுகளோடு எழுதி இருக்கிறார் திரேந்திர கே. ஜா. கொலை பாதகர்களின் செயல்களைசுவாரசியமாக தொகுத்திருக்கிறார்.
இப்படி ஒருபுத்தகத்தை இப்படி ஒரு காலத்தில் எழுதி வெளிக்கொண்டு வருவதே மிக துணிச்சலான, நேர்மையானகாரியம் என்பதை புத்தகத்தை படித்து அறிந்து கொள்ளலாம். அதனை மிக நேர்த்தியாக தமிழில்மொழியாக்கித் தந்திருக்கிறார் எழுத்தாளர் இ.பா.சிந்தன்.
சுவாரசியமாகதொடர்ந்து படிக்கும் மொழிநடை கொண்டது இதன் சிறப்பம்சம். அவருக்கு தமிழக அரசின் சிறந்தமொழிபெயர்ப்பாளருக்கான விருது கிடைத்திருப்பது எவ்வளவு சரியானது என்பதற்கு இந்த புத்தகமேசாட்சி.
சமகாலத்தில்அதிகம் கவனம் பெற வேண்டிய, நம் சமூகம் தொடர்ந்து உரையாட வேண்டிய புத்தகம் இதுவென கருதுகிறேன்.
புத்தகம் பற்றியகுறிப்புகள் :-
ஆன்மீக ஆரசியல்
எழுதியவர்: திரேந்திர கே.ஜா
மொழிபெயர்ப்பாளர்: இ.பா.சிந்தன்
பக்கங்கள்: 312
விலை. ரூ.375/-
வெளியீடு :
எதிர் வெளியீடு
தொலைபேசி :9942511302
வண்ணத்துப்பூச்சிக்கு தெரிகிறது!

என்னைத் தூக்க முடியாதுஎன்று
யானைக்குத் தெரிகிறது
வண்ணத்துப்பூச்சிக்குத்தெரிகிறது.
அதிகாரத்தின்முன்பும்
அன்பின் முன்பும்
நான்