Mathavaraj's Blog, page 11
January 7, 2022
“புதிய மனிதா, பூமிக்கு வா”- கார்ப்பரேட்களின் பாட்டு (பொய் மனிதனின் கதை -7)

“உண்மையான நேர்மையான மனிதனை விட
ஒரு பொய்யன் நம்பகத்தன்மை மிக்கவனாக தோன்றுவது
இன்றைய காலத்தின் பெரும் துரதிர்ஷ்டம்”
- முனியா கான்
“என் வாழ்க்கைல …. ஒவ்வொரு நாளும்….. ஒவ்வொரு நிமிடமும்….. ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா..” என்று நடிகர் அஜித் ஒரு படத்தில் பஞ்ச் வசனம் பேசுவார். திருமணமானதும் வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் போய், அங்கங்கு சில வருடங்கள் அலைந்து திரிந்தது வரை வேண்டுமானால் மோடியும் இது போன்று “நானா செதுக்குனதுடா” என மார்தட்டிக் கொள்ளலாம். ஆர்.எஸ்.எஸ்ஸில் இணைந்த பிறகு இந்துத்துவா வெறி அவரை செதுக்கியது. அதன் தொடர்ச்சியாக பிஜேபியில் இணைந்ததும் அரசியல் அதிகாரம் அவரை செதுக்கியது. குஜராத் கலவரங்களுக்குப் பிறகு இறுதியாக இந்திய ஆளும் வர்க்கமான கார்ப்பரேட் உலகம் அவரை செதுக்க ஆரம்பித்தது.
பத்து வருடங்களில் மோடியை ஒரு ’பிராண்ட்’ (வியாபார அடையாளம்) ஆக முன்னிறுத்தி சந்தையில் இறக்குவதற்கு தயாராக்கி இருந்தார்கள். தேர்தல், ஜனநாயகம், வாக்குரிமை, மக்களின் பிரச்சினைகள் என்று நாளும் பொழுதும் அக்கறையோடு அலசி ஆராயப்படும் அரசியலின் அடிப்படை அம்சங்கள் அனைத்தையும் தூக்கி எறிந்தார்கள். இந்தியக் குடிமக்கள் அனைவரையும் தங்களின் ‘சந்தை’யாக கார்ப்பரேட் உலகம் உள்ளங்கையில் எடுத்து வைத்துக்கொண்டு உற்றுப்பார்த்தது.
தங்களின் புதிய பிராண்டை சந்தையில் அறிமுகப்படுத்தி, அதனை நோக்கி வாடிக்கையாளர்களை இழுக்கும் அனைத்து விளம்பர உத்திகளும், வியாபார உத்திகளும் திட்டமிட்டு வகுக்கப்பட்டன. அதற்கெனவே மும்பையைச் சேர்ந்த ஜெயினின் தலைமையில் ஒரு குழுவும், பிரசாந்த் கிஷோர் தலைமையில் ஒரு குழுவும், ஹிரேன் ஜோஷி தலைமையில் ஒரு குழுவும், அரவிந்த் குப்தா தலைமையில் ஒரு குழுவுமாக மொத்தம் நான்கு குழுக்கள் இணைந்து மோடியின் ஒவ்வொரு அசைவையும், வார்த்தையையும் அளந்து அளந்து செதுக்கி செதுக்கி வடிவமைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யாரும் கண்ணுக்குத் தெரிய மாட்டார்கள். மோடி என்னும் பிராண்டின் முகம் மட்டுமே தெரியும். தெரிந்தது.
“விரும்பப்படுகிறாரோ, வெறுக்கப்படுகிறாரோ அது முக்கியமில்லை. ஒருவர் எவ்வாறு உணரப்படுகிறார் என்பதே முக்கியம். அதுதான் ஒருவரின் பிராண்ட்!” என்று அமெரிக்க மார்க்கெட்டிங் குருவும், பிராண்ட் குறித்து பல புத்தகங்கள் எழுதியவருமான டேவிட் ஆக்கர் சொல்கிறார். தொடர்ச்சியான, உறுதியான, செயல்பாடுகளின் மூலம் இந்த வகை பிராண்டு தன்னை நீட்டித்துக் கொள்ளும், இல்லையென்றால் ஒன்றுமில்லாமல் தன்னை அப்படியே கலைத்துக் கொள்ளும் என ‘பிராண்ட்’ குறித்த தன்மையை விவரிக்கிறார். 2003லிருந்து ‘துடிப்பு மிக்க’ குஜராத் (Vibrant Gujarat ) மூலம் மோடி அத்தகைய ‘பிராண்ட்’ ஆக உருவாக்கப்பட்டிருந்தார்!
பிஜேபியின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, தங்களின் பிராண்ட் நரேந்திர மோடிக்கு மூன்று முக்கிய சவால்கள் இருப்பதாக கார்ப்பரேட் உலகம் ஆராய்ந்து வைத்திருந்தது. முதலாவதாக மூன்று முறை குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி ஒரு பிரதேசத்தின் பிராண்ட் (Regional Brand)ஆக மட்டுமே தென்பட்டார். அவர் அகில இந்திய அளவில் ‘பிராண்ட்’ (National Brand) ஆக இல்லை. இரண்டாவது, 2002 குஜராத் கலவரங்களினால் ஏற்பட்ட கறைகள் மோடி மீது தேசீய அளவில் படிந்திருந்தது. மூன்றாவது, பெரும்பாலும் இந்தியிலேயே பேசும் அவர் நகர்ப்புறத்தைச் சேர்ந்த, மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களோடு நெருக்கமாக வேண்டும். 63 வயதான மோடி, அடுத்து வரும் தேர்தலில் 15 கோடி புதிய வாக்காளர்களான இளைஞர்களோடு தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும்.
தேசிய அளவில் மேலும் இருந்தது ஒரு பிராண்ட்தான். காங்கிரஸ் மட்டுமே. அதுவும் தனது பிராண்ட் தன்மையை இழந்து விட்டிருந்தது. மோடியை பிராண்ட் ஆக்குவதற்கு காங்கிரஸே இடம் கொடுத்திருந்தது.
‘ஒரு பொதுவான தேவையை உணர்த்தி அதற்குரிய விளைவுகளையும் ஒரு பிராண்டினால் உருவாக்க முடிந்தால், அதன் எல்லைகளை விரிவாக்க முடியும். என்கிற ’இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸின்’ பேராசிரியர் ஸ்ரீதர் சாமு, ஒரு பிரதேசத்தில் மட்டுமே இருந்த சரவணபவனும் ஹால்டராமும் எப்படி தேசீய பிராண்டாக தங்களை உயர்த்திக் கொண்டன என்பதை சுட்டிக் காட்டினார்.
குறுகிய காலத்தில் தேசத்தின் குறுக்கும் நெடுக்குமாக 5000க்கும் மேற்பட்ட நிகழ்வுகளில், 470க்கும் மேற்பட்ட அரசியல் கூட்டங்களில் பறந்து பறந்து மோடி கலந்து கொண்டார். பறவையின் பார்வையில் மேலிருந்து பார்த்தால் இந்தியாவை அப்படியே இறுக்கப் பிணைத்த ஒரு சிலந்தி வலையைப் போல அவரது பயணத்தின் பாதைகள் தெரிந்தன.
அடுத்ததாக மோடி மீது படிந்திருந்த குஜராத் கலவரக் கறைகளை என்ன செய்வது? ஒரு பிராண்டைப் பொறுத்த வரையில் அதை மறுக்கவும் கூடாது. அதே நேரம் அதுகுறித்து பேச்சை வளர்க்கவும் கூடாது. பேச ஆரம்பித்தால், அது குறித்த விவாதங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கும். மக்களின் நினைவுகளில் ஆழமாகப் பதிந்துவிடும். சர்ச்சைகளுக்கு இடமளிக்கக் கூடாது என்பது ஒரு ‘பிராண்டின்’ சூத்திரம்.
காட்பரிஸ் சாக்லெட்டில் புழு இருந்தது. கோக், பெப்சியில் நச்சுத்தன்மை இருந்தது. அந்த நேரத்தில் பதற்றத்தோடும் கடும் வேகத்தோடும் பேசப்பட்டன. கோக்கும் பெப்சியும் விற்றுக்கொண்டே இருந்தன. மெல்ல மெல்ல எதிர்ப்புகள் அடங்கி, முணுமுணுப்பாகி பின்னர் எந்தப் பேச்சும் இல்லாமலேயே போய்விட்டது. விளையாட்டு மற்றும் சினிமாவில் பிரபலமானவர்களின் கைகளில் பெப்சியும், கோக்கும் இருந்தன.
2003க்குப் பிறகு குஜராத் கலவரங்கள் குறித்து மோடி பேசுவதை குறைத்துக் கொண்டே வந்தார். அவரது ஒரே மந்திரமாக ‘வளர்ச்சி’ மட்டுமே இருந்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களின் அபிமானத்துக்குரியவர்கள் மோடியை சந்தித்த அல்லது மோடி அவர்களைப் போய் சந்தித்த நிகழ்வுகள் அரங்கேறின. அவர்கள் நெருங்கி நின்று சிரித்த வண்ணம் காட்சியளித்தனர். இரக்கமற்ற, கொடூரமான, வெறுப்பைக் கக்கிய உருவத்திலிருந்து உறுதியான, வேகமான, எதிர்காலம் குறித்து சிந்திக்கக் கூடிய கனவானின் உருவத்திற்கு மோடியின் பிம்பம் மாறியது. ’புதிய மனிதா, பூமிக்கு வா’ என கார்ப்பரேட்கள் கொண்டாடினார்கள்.
பிறகென்ன? கண்கள் மற்றும் காதுகள் வழியாக 2013 இறுதியில் இந்திய மக்கள் அனைவருக்குள்ளும் “ஆப் கி பார் மோடி சர்க்கார்” என்ற வார்த்தைகள் சொருகப்பட்டன. அதாவது “இந்த தடவை மோடி அரசு!”
மூன்றாவது நகர்ப்புறத்து மக்களோடும் இளைஞர்களோடும் தொடர்பு கொள்வதற்கு மோடி என்னும் பிராண்டுக்கு கிடைத்த வரப்பிரசாதம் சோஷியல் மீடியாக்கள். பிஜேபி தலைவர்கள் ஃபியூஸ் கோயல் மற்றும் அஜய் சிங் தலைமையில் ஒரு பெரும் படையே 24 மணி நேரமும் இயங்கியது. பிஜேபியின் தகவல் & தொடர்பு துறையினருக்கு இந்தியாவில் இருக்கும் ஃபேஸ்புக் ஊழியர்கள் பயிற்சி கொடுத்தார்கள்.
செய்திகளும், தகவல்களுமே அறிவாகவும், ஞானமாகவும் சுருக்கப்பட்டு இருந்தது. தகவல்களை வடிகட்டி, கடந்த காலத்தின் பின்னணியோடு பகுத்துப் பார்ப்பதுதான் அறிவு என்பதை அறியாமல் இருந்தார்கள். இரண்டு ஃபார்வேர்டு மெஸேஜ்களை படித்து விட்டு எல்லாம் தெரிந்தவர்களாய் தங்களை கருதிக் கொண்டார்கள். நுனிப்புல் மேய்ந்துவிட்டு தொடை தட்டி பேசுவதில் கெட்டிக்காரர்களாகி விட்டார்கள். பெரும்பாலான இந்திய மத்தியதர வர்க்கத்தையும் படித்த இளஞர்களையும் பீடித்த சாபம் மட்டும் அல்ல, ஒரு பிராண்டை அறிமுகப்படுத்துவதற்கும், வார்ப்பதற்கும் உற்ற சூழல் அது.
குஜராத்தில் எல்லா வாய்ப்புகளும், வசதிகளும் உருவாக்கப்பட்டிருப்பதாக, குஜராத்திற்கு வெளியே தொடர்ந்து வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் செய்திகள் ஃபார்வேர்டு ஆகிக் கொண்டே இருந்தன. டாட்டா, அம்பானி போன்ற கார்ப்பரேட்கள் வெளிப்படையாக மோடியை பாராட்டி வந்தார்கள். குஜராத்தில் தொழில்துறை, விவசாயத் துறை, தகவல் தொழில்நுட்ப துறை, உள் கட்டமைப்பு எல்லாம் அசுர வளர்ச்சி கண்டிருப்பதாக கானல் அலைகளை எங்கும் மிதக்க விட்டார்கள்.
ஆனாலும் மிக முக்கியமாக புதிய வாக்காளர்களான 15 கோடி இளைஞர்களை மோடி என்னும் பிராண்ட் தன் பக்கம் கவர வேண்டி இருந்தது.
எல்லாம் தெரிந்த, வலிமையான ஒரு தந்தையின் பிம்பத்தை மோடிக்கு கட்டமைப்பதில் அவர்கள் ஈடுபட்டார்கள். மோடியின் சிறு வயதுக் கதைகளை காமிக்ஸ் மூலமாகவும், புத்தகங்கள் மூலமாகவும், வாய்மொழி வழியாகவும் பரப்ப ஆரம்பித்தார்கள். முதலைகள் நிறைந்த குளத்தில் நீந்திய சிறுவனாக ஒரு கதை. இளைஞனானதும் பொது வாழ்க்கைக்காக குடும்பத்தை விட்டு வெளியேறியதாக ஒரு கதை. இரண்டையும் இணைத்துப் பார்த்தால் துணிவும், அர்ப்பணிப்பும் மிக்க ஒரு பிம்பம் அரூபமாய் மூளையில் படரும்.
‘நரேந்திர மோடி’யை ‘நமோ’ என சமஸ்கிருதச் சொல்லாடலோடு அழைக்க ஆரம்பித்தார்கள். மிக எளிதாக பெரும்பாலான மனிதர்களுக்குள் ஊடுருவும் வார்த்தையானது.’ப்ரோ’ என அழைத்துப் பழகும் இன்றைய நவயுக மனிதர்களுக்கும் ‘நமோ’ நெருக்கமானது.
கடும் கிண்டல்களும், கேலிகளும் ஒரு புறம் எழுந்தாலும், ஊதிப் பெருக்கப்பட்ட அந்தக் கதைகளின் முன்னே அவையெல்லாம் அலட்சியப்படுத்தக் கூடிய அளவில் சொற்பமாகவே இருந்தன.
இளைஞனான மோடி துடைப்பத்தால் பெருக்குவதைப் போன்று வெளியிடப்பட்ட போட்டோவை குறிப்பிட்டாக வேண்டும். வைரலாக எங்கும் பரப்பப்பட்டது. எளிமையான, பணிவான, உண்மையான, உழைக்கிற தோற்றம் யாரையும் சட்டென்று கவரும். அந்த போட்டோ பொய்யானது என்றும், போட்டோஷாப்பில் உருவமாற்றம் செய்யப்பட்டது எனவும் பின்னாளில் தெரிய வந்தது. அதற்குள் மக்களின் மனதில் அந்த பிம்பம் அழிக்க முடியாதபடிக்கு பதிய வைக்கப்பட்டிருந்தது.
ஃபேஸ்புக், ட்வீட்டரில் நரேந்திர மோடி 2009லிருந்தே இருந்தார். அதில் தொடர்ந்து அவர் பதிவு செய்தும் வந்திருந்தார். அவை யாவுமே அவரது நீண்ட கால, தீர்க்கமான இலக்குகளை நோக்கியதாக இருந்தன.
மிக முக்கியமாக, மோடியின் பேச்சாற்றலை குறிப்பிட வேண்டும். சிந்திக்கத் தூண்டாமல், உணர்ச்சி வசப்பட வைக்கும் தன்மை நிறைந்தது அது. வரலாற்றில் ஹிட்லரும் இது போன்று மக்களை ஆர்ப்பரிக்க வைக்கிற, வெறியேற்றுகிற பேச்சாளனாக இருந்தான். ’ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது நம்பப்பட்டுவிடும்’ என்பதை உலகுக்கு காட்டியவன். அப்படி மக்களை நம்ப வைக்க க் கூடியவராய் இருந்தார் மோடி.
2013 பிப்ரவரி 6ம் தேதி டெல்லி ’ஸ்ரீராம் காலேஜ் ஆஃப் காமர்ஸில்’ மோடி பேசினார். அன்றைக்கு இந்திய அரசியலில் ஒரு சாதாரண நிகழ்வாக பார்த்திருக்கக் கூடும். 15கோடி முதன்முறை வாக்காளர்களை குறிவைத்து அந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தங்கள் எதிர்காலம் குறித்து கனவுகளும், கவலைகளும் நிறைந்த அந்த கல்லூரி மாணவர்கள் திரண்டிருந்தார்கள். மோடி என்னும் ’பிராண்ட்’ அன்றுதான் அறிமுகப்படுத்தப்பட்டது.
“இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய மகாத்மா காந்தியின், வல்லபாய் பட்டேலின் பூமியிலிருந்து நான் வந்திருக்கிறேன்” என்று ஆரம்பித்து அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் நன்கு திட்டமிடப்பட்டு முன்வைக்கப்பட்டவை.
”உலக வரைபடத்தில் தனக்கான இடத்தை இந்தியா கண்டு கொள்ள வேண்டுமானால், நல்ல நிர்வாகம் வேண்டும்” என்றார். “இது விவேகானந்தரின் 150வது ஆண்டு. இதனை நாம் ‘யுவ வருஷமாக’ நினைவு கூர்வோம்” என்றார்.
“ஒரு முறை வெளிநாட்டு தூதுவர் என்னை பார்க்க வந்தார். இந்தியாவின் சவால்கள் என்னவென்று நினைக்கிறீர்கள் என்று என்னிடம் கேட்டார். இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதுதான் சவால் என்றேன். அவர் ஆச்சரியமடைந்தார். உலகில் அதிகம் இளைஞர்களைக் கொண்ட நாடு இப்போது இந்தியாதான் என்று சொன்னேன்” என்றார்.
“இந்திய இளைஞர்கள் இங்கே புதிய வாக்காளர்களாக பார்க்கப்படுகிறார்கள். நம் இளைஞர்களை நான் புதிய சக்தியாக பார்க்கிறேன்.” என்றார்.
திரும்பத் திரும்ப இளைஞர்களை தூக்கி வைத்து கொண்டாடினார் மோடி. அந்த புதிய வாக்காளர்கள் அப்படியே வசியம் செய்யப்பட்டிருந்தார்கள். ஆரவாரித்துக் கிடந்தார்கள். தங்களை இரட்சிக்க வந்த தேவதூதன் மோடிதான் என்று நம்பினார்கள்.
“இந்தியாவை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் மோடியிடம் அதற்கான ஆற்றலும் வேகமும் இருக்கிறது” என்றார் அந்தக் கல்லூரியில் பி.ஏ ஹானர்ஸ் படித்துக்கொண்டு இருந்த 19 வயதான அபிஷேக்.
“குஜராத்திற்கு மோடி நிறைய செய்திருக்கிறார். தேசீய அளவில் அவருக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்” என்றார் மிடல் குப்தா என்னும் மாணவர்.
“நாம் வல்லரசாக வேண்டுமென்றால், நமது பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டும். அதற்கு சரியான மனிதர் மோடியே!” என்றார் செஜ்வால்.
அன்றைய மோடியின் பேச்சையும், மாணவர்களின் கருத்துக்களையும் இந்தியாவின் ஊடகங்கள் அனைத்தும் மாற்றி மாற்றி ஒளிபரப்பின. ஃபேஸ்புக், ட்வீட்டர் எல்லாவற்றிலும் வைரலாயின.
அதே நாளில் மோடியின் வருகையை எதிர்த்து அதே கல்லூரி மாணவர்களில் சிலர் வெளியே நின்று கோஷங்கள் எழுப்பிக்கொண்டு இருந்தனர். ஊடகங்கள் அதனை கண்டு கொள்ளவில்லை. உலகமும் அறிந்திருக்கவில்லை.
எதிர்த்த அந்த மாணவர்களுக்குத் தெரிந்திருந்தது…. ’திரும்ப திரும்பச் சொன்னாலும் பொய் உண்மையாகி விடாது’ என்பது.
அதற்குப் பிறகான மீதிக் கதையும், இன்று வரையிலான தொடர்கதையும் அதுதான்.
ஆதாரங்கள்;
* Case study: The strategy and tactics behind the creation of Brand Modi
* Meet the advisors who helped make the BJP a social media powerhouse of data and propaganda
* Narendra Modi Is Everything Apart From What He Seems – Wire, April 8, 2021
* Narendra Modi used to swim past crocodiles, comic book on him reveals – One India, Mar 24, 2014
* Development alone is the solutions to all problems: Shri Modi delivers inspiring address at SRCC! – Narendramodi.in
January 4, 2022
க்ளிக் - 1 (தொடர்கதை)

கேண்டீனில் இவளும், டீம் நண்பர்களும் உட்கார்ந்திருக்கிறார்கள். தட்டுகளையும், கிண்ணங்களையும் சுமந்தபடி சர்வர் இவர்களை நோக்கி வருகிறான். அவரவர் ஆர்டர் செய்தபடி எடுத்து வைக்கிறான். இவள் தனக்கு வைக்கப்பட்ட கிண்ணத்தின் மூடியை திறந்து பார்க்கிறாள். அவித்த முட்டையின் மஞ்சள் கருக்களாய் இருந்தன.
"என்ன இது!" என அருவருப்படைந்து, "இதை நான் கேட்கலையே" என்கிறாள்.
சர்வர் அமைதியாக "இல்லை, மேடம், இதைத்தான் கேட்டீர்கள்." என்கிறான்.
"நான் சாப்பிட மாட்டேன். பிடிக்காது. வ்வே.." என குமட்டுவதாய் சொல்லி அங்கிருந்து எழுகிறாள். டீம் நண்பர்கள் கண்டிப்பாய்ச் சாப்பிட வேண்டும் என்கிறார்கள். கிண்ணத்திலிருந்து ஒரு மஞ்சள் கருவை எடுத்து நிஷாந்த் இவள் வாயருகில் கொண்டு வருகிறான். எழுந்து ஓடுகிறாள். அவர்கள் துரத்துகிறார்கள். லிப்ட் அருகே செல்லவும் கதவு திறக்கவும் சரியாக இருக்கிறது. உள்ளே போய் மூடிக் கொள்கிறாள். இவளது பிராஜக்ட் லீடர் அங்கே இருந்தான். அவன் கைகளிலும் மஞ்சள் கரு இருக்கிறது. முகத்தை மூடுகிறாள்.
"இதை மறுப்பது உன் கேரியருக்கு நல்லதல்ல." அருகில் வருகிறான். கூச்சல் போட்டு மறுக்கவும் விழித்துக்கொண்டாள் பூங்குழலி. பஸ்ஸில் போய்க்கொண்டு இருக்கிறோம் என்னும் பிரக்ஞை வந்தது. கனவுதான் என நிம்மதி அடைந்தாலும், சத்தம் போட்டு விட்டோமோ, யாரும் பார்த்து விட்டார்களோ என சுற்றிலும் பார்த்தாள். பக்கத்தில் இருந்த அந்த வயதான அம்மாள் வாயைத் திறந்து ஆழ்ந்து தூங்கிக் கொண்டு இருந்தார்.
கனவினைத் திரும்ப ஒருமுறை யோசித்துப் பார்த்தாள். ஆபிஸ் கேண்டினாக அறிந்தது இப்போது ஹாஸ்டல் டைனிங் ரூம் போலத் தோன்றியது. மஞ்சள் கரு பிடிக்காது என்பது உண்மைதான். நிஷாந்த் என்று ஒருவன் டீமில் எப்போதும் இருந்ததில்லை. தூக்கத்தில் தெளிவாகத் தெரிந்தவை இப்போது மங்கலாகவும் கோர்வையற்றும் வந்தன. விழித்த கொஞ்ச நேரத்துக்கு மட்டும் இந்த கனவுகள் குறித்த யோசனைகள் இருக்கின்றன. பின் அவையும் மறைந்து விடுகின்றன. இதுவரை எவ்வளவோ கனவுகள் வந்து சென்றிருக்கின்றன. ஒன்றுகூட நினைவில் இருக்கவில்லை. யாராவது துரத்துவதாகவும், தான் ஓடுவதாகவுமே கனவுகள் பெரும்பாலும் இருப்பதாக உணர்ந்தாள்.
கழற்றியிருந்த செருப்புகளை கால்களால் தேடினாள். அகப்படவில்லை. இருக்கையை நிமிர்த்தி, குனிந்து பார்த்தாள். முன் சீட்டு இருக்கையின் அடியில் கிடந்தன. கால்களை நீட்டி அவைகளை இழுத்து மாட்டிக் கொண்டாள். நிம்மதியாயிருந்தது. மீண்டும் சாய்ந்து கொண்டு திறந்திருந்த பஸ்ஸின் ஜன்னல் வழியாக பார்க்க ஆரம்பித்தாள். தூக்கம் கலைந்து அசையாமல் அப்படி உட்கார்ந்து இருப்பதும், அலுங்காத அந்த ஏர்-பஸ்ஸின் வேகத்தில் வீசும் இளம் காற்றும் பிடித்திருந்தது.
அருகில் இருப்பவைகள் சட் சட்டென தோன்றி மறைந்து கொண்டிருந்தன. தொலைவில் இருப்பவை மெல்ல தொடர்ந்து கொண்டிருந்தன. அந்தக் குளத்தின் நடுவில் இருந்த சின்னத் திரடும், அதிலிருந்த ஆலமரமும், வெள்ளையும் சிகப்புக் கோடுகளுமாய்த் தெரிந்த கோயிலும் அப்படியே இருந்தன. நினைவு தெரிந்த நாளில் இருந்து இந்த இடத்திற்கு வந்ததும் கவனம் கொள்ளும் சித்திரமாக இருக்கிறது. இதனைத் திறந்து ஊருக்குள் செல்வதும், பின் வெளியேறுவதுமாய் பயணங்கள் இருக்கின்றன. இருபத்து நான்கு வயதில் இதுவரை ஒருமுறை கூட அதன் அருகே சென்று பார்த்ததில்லை. பார்க்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் நினைத்துக் கொள்வாள்.
இன்னும் அரை மணி நேரத்தில் ஊர் வந்துவிடும். இங்குதான் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பதாகப் பட்டது. சென்னையை இழுத்துப் பிடித்து நினைவுக்கு கொண்டு வரவேண்டும். இரைச்சலும், நெரிசலும் நிறைந்த, சோடியம் வெளிச்சச் சாலைகளில் ஆட்டோவில் தடதடத்து, இந்தப் பையை சுமந்து ஓடிவந்து பஸ்ஸைப் பிடித்து நிம்மதியுடன் தண்ணீர் குடித்த நேற்றைய இரவின் கணங்கள் இப்போது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. அடர்ந்த அமைதியும், ஏசியின் பதமும், கம்ப்யூட்டரின் வெளிச்சத் திரைகளுமான ஆபிஸ் எங்கோ போய்விட்டிருந்தது. அரட்டைகளும், படுக்கைகளுமான ஹாஸ்டல் அறைகள் விலகி விட்டன. நேற்றைய நாள் வரையிலான தினசரி வாழ்வு கரைந்து போக, பழகிய ஊரின் வழியெல்லாம் நெருக்கமாகித் தெரிந்தன.
மொபைல் அழைக்கும் சத்தம் கேட்டது. ஹேண்ட் பேக்கிலிருந்து எடுத்துப் பார்த்தாள். முருகேசன் மாமா. "எங்க வந்துட்டிருக்கே..." கேட்டார். சொன்னாள். பஸ் நிலையத்தில் காத்திருப்பதாகச் சொல்லி முடித்துக்கொண்டார். வளவளவென்று போனில் அவர் பேசுவதில்லை.
வீட்டில் எல்லோரையும் பார்க்கப் போகிறோம் என்னும் ஆவல் மேலோங்கியது. கலைச்செல்வன் வருகிறான் என்பது முக்கியமாகப் பட்டது. அண்ணியையும், யாழினியையும் அழைத்து வருவதாகச் சொல்லியிருந்தான். நான்கைந்து வருஷங்களுக்குப் பிறகு அண்ணன் இந்த ஊருக்கு வரப் போகிறான். மற்றபடி இன்று இரவு இவளுக்கும் நரேனுக்கும் நடக்க இருக்கும் நிச்சயதார்த்தம் குறித்து சந்தோஷமோ, படபடப்போ பெரிதாய் இல்லை.
சென்ற வாரம் விஷயத்தைச் சொன்னபோது “வாவ்… “ என்று பூங்குழலியை கட்டிப் பிடித்து உற்சாகமானாள் சோபியா. ”கேமுக்குள்ள எண்டர் ஆகுற…” என்று சுவாரசியம் காட்டினாள்.
”அப்ப கல்யாணம் பண்ணிக்கலாமா, குழந்தை பெத்துக்கலாமா?” கண்ணடித்தாள் பூங்குழலி.
அவள் என்ன சொல்ல வருகிறாள் என சோபியாவுக்கு புரிந்தது. சிரித்தாள். “ஆல் இன் த கேம்..” என்று சொல்லி விட்டு இவளது கண்களை சிறிது உற்றுப் பார்த்தாள். செல்லமாய் இவளது கன்னங்களை தட்டி விட்டு அங்கிருந்து அகன்றாள்.
சோபியாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததையொட்டி அவளது வீட்டிற்கு ஆபிஸ் முடிந்து ஒருநாள் சாயங்காலம் பூங்குழலி சென்றிருந்தாள்.
“வாங்க, வாங்க” உற்சாகமாக வரவேற்றாலும் அந்த வீட்டில் ஒரு இறுக்கம் இருந்ததை, பேசிக்கொண்டிருந்த கொஞ்ச நேரத்தில் உணர முடிந்தது. இவளிடம் காட்டிய முகங்களுக்கும், சோபியாவும் விக்னேஷும் ஒருவருக்கொருவர் காட்டிக்கொண்ட முகங்களுக்கும் வித்தியாசம் அப்பட்டமய் தெரிந்தது. அழுத சோபை கலையாமல் இருந்த மூத்த பையனைத் தூக்கி வைத்து முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான் விக்னேஷ். முக்கிய எம்.என்.சியில் பிராஜக்ட் லீடராயிருந்தான். இருவரும் அவ்வளவு பொருத்தமாய் தோன்றுவார்கள். வேளச்சேரியில் ஒரு வில்லா வாங்கி சகல வசதிகளோடு இருந்தார்கள்.
இரண்டாவது குழந்தையும் ஆண் குழந்தைதான். படுக்கையில் கை காலை ஆட்டிக்கொண்டிருந்தது. “துருதுருன்னு இருக்கு” அருகில் சென்று சொல்லி முடிப்பதற்குள், “ஆமா ரொம்பத் துருதுருன்னுதான் இருக்கு” சோபியா அங்கலாய்த்துக் கொண்டு காபி கொண்டு வந்தாள்.
“குழந்தை அப்படி இருக்குறது நல்லதுதான்” சூழ்நிலையை இயல்பாக்க முயன்றாள் பூங்குழலி. பெரும் கேவலுடன் சோபியா சமையலறைக்குள் விரைந்தாள் . விக்னேஷ் அவன் மனைவி போன திசையை கடுப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான். என்ன பேசுவது என்று தெரியாமல் பூங்குழலி உட்கார்ந்திருந்தாள். சமையலறைப் பக்கம் செல்வதற்கு மெல்ல எழுந்தாள்.
விக்னேஷ் உடைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தான். “வேற ஒண்ணும் இல்ல, மூத்தவன் சஞ்சய் கொஞ்ச நேரமா அங்குமிங்கும் ஓடிக்கொண்டு இருந்திருக்கான். அவனோடு மல்லுக்கட்டிட்டு இருந்திருக்கா அவ. உள்ளே இந்த குழந்தை அழ ஆரம்பிச்சிருக்கு. சஞ்சய விட்டுட்டு குழந்தைக்கு பால் கொடுக்கப் போயிருக்கா. ஹாலில் விளையாடிக்கொண்டிருந்தவன் அதுக்குள்ள அந்த நாற்காலில ஏறிக் கீழே விழுந்து கூப்பாடு போட்டிருக்கான். அழுத கைக்குழந்தைய அப்படியே பெட்ல போட்டுட்டுப் போய் கீழே விழுந்தவனத் தூக்கி சமாதானம் பண்ணியிருக்கா. கரெக்டா அப்பத்தான் நா ஆபிஸ்ல இருந்து வந்தேன். மொத்த எரிச்சலையும் ஏங்கிட்ட காட்டுறா”
“பாவம் அவ என்ன செய்வா. அப்படித்தாம் இருப்பாங்க. நீங்கதான் ஒத்தாசையும், நம்பிக்கையாவும் இருக்கணும்” என்றாள் பூங்குழலி.
“எம்மேல கோபப்படட்டும். பெறந்த குழந்தை என்ன செய்யும். சனியன் அது இதுன்னு வார்த்தைகளைக் கொட்டுறா..”
“அந்தச் சனியனுக்கு என்ன அர்த்தம் விக்னேஷ். குழந்த மேல வெறுப்புன்னா நினைக்கிறீங்க? அவங்க கஷ்டம், இயலாமையை காட்டுறாங்க. அதுக்குப் போய் அப்படியேவா அர்த்தம் பார்ப்பீங்க”
சமையலறைக்குள்ளிருந்து பாய்ந்து வந்த சோபியா, “இதுக்குத்தான் நா முன்னமே சொன்னேன், இன்னொரு குழந்த வேணாம்னு. கேட்டாரா இவர். நாந்தான கஷ்டப்படுறேன்.” பொரிந்தவள் “இந்த ரெண்டு பேரையும் வளத்து ஆளாக்குறதுக்குள்ள இன்னும் என்ன பாடுல்லாம் படப் போறேனோ” அழ ஆரம்பித்தாள்.
“இவ மட்டுந்தா உலகத்துல குழந்தையப் பெத்து வளக்குறாளாக்கும். ஊர்ல நாட்டுல யாருமே பெத்துக்கலயா. எங்க அம்மாவுக்கு நாங்க நாலு பேரு. இப்படித்தான் அழுதாங்களா?” விக்னேஷ் இரைந்தான்.
“என்ன விக்னேஷ் இது..!” என்று கோபப்பட்டாள் பூங்குழலி. “ஒரு குழந்தைன்னா சும்மாயில்ல. அதக் கவனிக்குறதும் சாதாரணம் இல்ல. புரிஞ்சுக்குங்க” வேகமாகவேச் சொன்னாள். எதோ சொல்ல வந்தவனை நிறுத்தி, “அப்புறமா பேசலாம். மொதல்ல சோபியாவை சமாதானப்படுத்துங்க. தைரியம் கொடுங்க” என்றாள். அமைதியாக இருந்தான் அவன்.
அதற்கு மேல் இருக்க முடியாமல் விடைபெற்ற போது, “பூங்கி! நீ கல்யாணமே பண்ணிக்காத. பண்ணிக்கிட்டாலும் குழந்தயேப் பெத்துக்காத” என்றாள் சோபியா.
இப்போது “ஆல் இன் த கேம்” என்கிறாள். அதைச் சொல்லும்போது சோபியா சிரித்த மாதிரியும் இருந்தது. எதையோ இழந்த மாதிரியும் தெரிந்தது.
அவளும் அலையரசனும்தான் ஆபிஸில் பூங்குழலியிடம் நல்ல நட்போடு இருந்தார்கள். அவர்கள் வேறு டீமில் இருந்தாலும் இவள் நம்பிக்கையோடு பேசுவது அவர்களிடம் மட்டும்தான். ஆபிஸில் மற்றவர்களிடம் திருமணம் குறித்து உடனடியாக எதுவும் சொல்ல வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார்கள்.
“இப்பத்தான் அசிஸ்டெண்ட் பிராஜக்ட் எஞ்சீனியராகியிருக்கே. அந்த கடுவாப் பயல் மேனேஜருக்கும் உன் மேல் நல்ல ஒபினியன் இருக்கு. போன வாரம் அனுப்பிய அப்ரைசலில் நல்லா எழுதியிருக்கான்னு சொன்னாங்க. கல்யாணம்னா வேற மாதிரி பார்ப்பான். கல்யாணத்துக்கு லீவு, அப்புறம் மெட்டர்னிட்டி லீவு எல்லாம் கொடுக்கணும்னு கத்துவான். சீக்கிரமே வீட்டுக்குப் போகணும்னு நினைப்பு வரும்னு எரிச்சலடைவான்.” அலையரசன் அக்கறையோடு சொன்னான்.
“பயப்பட வேண்டாம். மெல்லச் சொல்லிக் கொள்ளலாம். அவங்களால தவிர்க்க முடியாதபடி டேலண்ட் உன்னிடம் இருக்கிறது. இம்ப்ரஸ் செய்யும் ஒரு பர்சனாலிட்டியாக இருக்கே. வீட்டிலயிருந்து பிராஜக்ட் ஒர்க்கை முடிப்பதற்கு ஏத்த மாதிரி பிராஸஸை கேட்டுக் கொள்ளலாம். இப்ப அனுமதிக்கிறாங்க.” நம்பிக்கை தந்தாள் சோபியா.
அலையரசனுக்கும் இவளது ஊர்தான். ஹைஸ்கூலில் இவளுக்கு இரண்டு வருஷம் சீனியர். அப்போது எல்லாம் பழக்கமில்லை. தெரியும். அவ்வளவுதான். டிரெய்னியாக இங்கு சேர்ந்த மூன்று மாதம் கழித்து கொடுக்கப்பட்ட பிராஸஸில் உதவி செய்ய வந்தான். அப்போதுதான் இங்கு வேலை பார்க்கிறான் என்பதே தெரிந்தது. ஊர், ஸ்கூல் குறித்து பேச ஆரம்பித்து நெருக்கமானார்கள். கிண்டல் செய்வான். உரிமையெடுத்து அவனாகவே முன்வந்து உதவிகள் செய்வான். லீவில் ஊருக்கு சேர்ந்தே சென்றிருக்கிறார்கள். வந்திருக்கிறார்கள்.
சென்ற வருடம் வீட்டுக்குப் போயிருக்கும் போது, இவளுக்கு பேன் பார்த்துக்கொண்டே, அலையரசனின் வீட்டில் இருந்து வந்து பெண் கேட்டதாகவும், விசாரித்துவிட்டு அவனோடு பிறந்தது நான்கு பேர், பெரிய குடும்பம், அதனால் வேண்டாம் என பாட்டி சொல்லிவிட்டதாகவும் அம்மா சொன்னாள். “அப்படியா, ஏங்கிட்ட அலை சொல்லவேயில்லயே...” என்று மொபைலில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தாள் இவள். தலைமுடிக்குள் சிறிது நேரம் அம்மாவின் விரல்கள் அலையாமல் இருந்தன.
அந்தமுறை சென்னைக்குத் திரும்பும் போது அலையரசன் அவளோடு சகஜமாக பேசவில்லை. இவளாக எதாவது சொல்வாள் என எதிர்பார்த்தது போலிருந்தது. இவள் எப்போதும் போல புன்னகையுடன் பழகினாள். எதையும் காட்டிக் கொள்ளவில்லை. தொடர்ந்து சில நாட்கள் அவஸ்தைக்குப் பிறகு அவனும் பழையபடி ஆனான்.
"மேடையில் அவனோடு ஒன்றாக நிற்கும்போது ஒருவருக்கொருவர் அர்த்தமில்லாமல் எதாவது சில வார்த்தைகள் பேசுவீர்கள். லேசாய் சிரித்து கைக்குட்டையால் முகம் துடைப்பீர்கள். அதை நாங்கள் பார்க்க முடியவில்லை என்பதுதான் வருத்தம். இருக்கட்டும். எல்லாவற்றையும் கல்யாணத்தின் போது சேர்த்து வைத்து தாளிக்கிறோம்" என்றான் நேற்று ஆபிஸ் விட்டுப் புறப்படும்போது அலையரசன்.
"போ, சுமார் மூஞ்சி குமாரு" கலாய்த்தாள். நரேனும் தானும் மேடையில் நிற்கும்போது அப்படி என்ன பேசிக்கொள்வோம் என நினைத்துப் பார்த்தாள். ஒன்றும் தோன்றவில்லை.
மொத்தக் குடும்பத்திற்கும் இந்தக் கல்யாணம் ஒரு பெரிய விஷயமாக இருக்கிறது. கல்லூரி முடித்து சென்னையில் சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிய ஆரம்பித்ததிலிருந்து, இவளது அம்மா சித்ராவுக்கும், பாட்டி பத்மாவதிக்கும் புத்தியெல்லாம் இவளது கல்யாணம் பற்றித்தான். சித்ராவின் அப்பா பூசைப்பழம் மளிகைக்கடையில் உட்கார்ந்து ஊர் உலகத்தில் விசாரிக்க ஆரம்பித்து விட்டார். தாய் மாமன் முருகேசன் மட்டும் இந்த விஷயத்தில் அவ்வளவாய் பட்டும் படாமல் இருந்தார்.
"டிரெய்னியாகத்தான் இருக்கிறேன். இன்னும் இரண்டு வருஷம் கழிச்சுப் பாக்கலாமே." எனச் சொல்லிப் பார்த்தாள்.
"இப்போதே பார்க்க ஆரம்பித்தால்தான் சரியாய் இருக்கும்" என நிலையாய் அம்மா, பாட்டி, தாத்தா மூவரும் நின்றார்கள். ஜாதகங்களின் நகல்களை கொடுத்துக்கொண்டும், வாங்கிக் கொண்டும், பொருத்தம் பார்த்துக்கொண்டும் இருந்தார்கள். அண்ணன், தம்பி, தங்கைகள் என நிறைந்திருக்கும் பெரிய குடும்பங்களை நிராகரித்து, 'இவள் குணத்துக்கு சரிப்பட்டு வராது. அனுசரித்துப் போக மாட்டாள். ஒருத்தர் ரெண்டு பேராய் இருக்கும் சின்னக் குடும்பம்தான் லாயக்கு' என ஒரு கணக்குச் சொன்னார்கள். புத்திசாலி, திறமைசாலி, பிரியமான பொண்ணு என வாய் நிறையச் சொன்னாலும், திமிர் பிடித்தவள் என்றும், அடங்கிப் போக மாட்டாள் என்றும் முணுமுணுத்துக் கொண்டார்கள்.
இவள் அப்பா ரவிச்சந்திரன் உயிரோடு இருந்திருந்தால், தங்களுக்கு ஏன் இவ்வளவு சிரமம் என தனிமையில் புலம்பிக்கொண்டார்கள். இந்தக் குடும்பத்திற்கும் ஜாதிக்கும் சம்பந்தமில்லாமல் சரண்யாவை கல்யாணம் செய்து கொண்டு போய்விட்டதாய் அண்ணன் கலைச்செல்வனை சபித்தார்கள்.
ஒவ்வொரு தடவை ஊருக்கு வரும்போதும், போகும்போதும் சொல்லப்படும் ஜாதகக் கதைகளும், சம்பந்தமில்லாத குடும்பங்களின் விபரங்களும் வெறுப்பேற்றுவதாய் இருக்கும். அதைக் காட்டிக் கொள்ளாமல் பூசைப்பழத்திடம், "தாத்தா, இன்னும் நயம் மாப்பிள்ளை கிடைக்கலயா?" சொல்லி சிரிப்பாள்.
'இந்தப் பொண்ணு மனசுல என்ன இருக்கு' யோசனை வந்தாலும் அவர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அப்படி இப்படி என்று இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. கடைசியில் நரேன் அமைந்திருக்கிறான்.
பிளஸ் டூ வரை படித்த மெட்ரிகுலேஷன் பள்ளி வந்து கடந்தது. ஆசையோடும், ஏக்கத்தோடும் பார்த்தாள். விபத்தில் அப்பா இறந்த பிறகு, அம்மாவோடு ஊருக்கு வந்து எட்டாம் வகுப்பிலிருந்து படித்த ஐந்து வருடங்களும் இங்குதான். இளமையின் ஆரம்பத்து ரகசியங்கள் ஏற்படுத்திய குறுகுறுப்போடும், "உன் படிப்புத்தான் உனக்குத் துணை" என சதா நேரமும் ஒலிக்கும் அம்மாவின் எச்சரிக்கையோடும் வாழ்ந்த நாட்கள். வரிசையாய் நின்ற அசோகா மரங்கள், கொஞ்சம் தள்ளி வேப்ப மரங்களுக்கும் சரக்கொன்றை மரங்களுக்கும் நடுவில் விரிந்திருந்த மைதானம், அதற்கு அப்பால் இருந்த கட்டிடம் எல்லாம் நினைவுகளால் நிறைந்திருந்தன. சைக்கிளை நிறுத்தும் இடம், ப்ளஸ் டூவில் அவள் படித்த வகுப்பறையின் ஜன்னல், உட்கார்ந்து சாப்பிடுகிற மரத்தடி, எப்போதும் உதிரப் போக்கு வாடையடிக்கும் கழிப்பறை எல்லாம் பின் சென்று கொண்டு இருந்தன. எந்த இடத்தைப் பார்த்தாலும் அதிலிருந்து காலம் ஊற்றெடுத்துக் கொண்டிருந்தது.
பள்ளியின் கடைசி நாளில் பிரகாஷ் தவிப்போடும், பதற்றத்தோடும் கம்பி வேலிக்கருகில் செல்லும் ஒற்றையடிப் பாதையில் இந்த இடத்தில் வைத்துத்தான் 'ஐ லவ் யூ' என பெரிதாக எழுதிய காகிதத்தைக் கொடுத்து வேகமாக சைக்கிளில் சென்றுவிட்டான். அவன் தந்த காகிதத்தை படபடப்போடும், ஆசையோடும் எத்தனை முறை வீட்டில் யாருக்கும் தெரியாமல் இவள் படித்திருப்பாள் என்பதைச் சொல்ல முடியாது. கண்ணாடியில் தன்னைப் பார்த்து பார்த்து சிலிர்த்துக்கொண்டாள். அதே நேரம் தன்னைக் காட்டிக்கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருந்தாள். மார்க்ஷீட் வாங்குவதற்கு வந்தபோது அவனைப் பார்த்தாள். எதையோ இழந்தவனைப் போல இவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
அவன் கோயம்புத்தூரில் பி.இ படித்துக்கொண்டு இருக்கிறான் என கேள்விப்பட்டாள். நான்காமாண்டு படிக்கிறபோது ப்ளேஸ்மெண்ட் ஆகி, சென்னையில் இவள் வேலைக்குச் சேர்ந்த பிறகு ஒருநாள் ஃபேஸ்புக் மெஸேஜில் வந்து “மேடம் பி.ஜி, ஹவ் ஆர் யூ” கேட்டிருந்தான். சந்தோஷமாக இருந்தது. மீசை, டிரிம் செய்த லேசான தாடியோடு ஆளே மாறியிருந்தான். கண்கள் ஊடுருவிப் பார்த்தன.
அவ்வப்போது சாட் செய்து கொள்வார்கள். படித்து முடித்தும் அவனுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை , சென்னையில் தாம்பரம் அருகே வீடு எடுத்து நான்கைந்து நண்பர்களோடு தங்கியிருக்கிறான், தேவைப்படும் கோர்ஸ்களை படித்துக்கொண்டு வேலை தேடுகிறான் என்பதையெல்லாம் தெரிந்து கொண்டாள். ஒரு சனிக்கிழமை மாலையில் இவளும் ஹாஸ்டல் ரூம் மேட் ஸ்ரீஜாவும் டி.நகரில் ஷாப்பிங் முடித்து விட்டுத் திரும்பும்போது எதிரே பாதையில் பிரகாஷையும் அவனது இரண்டு நண்பர்களையும் பார்த்தார்கள். ஆச்சரியமடைந்து டீ குடிக்க அழைத்தான். ஜாலியாய் இருந்தான். அவனது நண்பர்களை கலாய்த்துக்கொண்டு, ஸ்ரீஜாவிடம் கவிதைகளை பரிமாறிக்கொண்டு, இவளிடம் பள்ளியின் ஞாபகங்களை வரவழைத்துக்கொண்டு இருந்தான். இன்னொரு டீ குடிக்க வைத்தான். இரண்டு மணி நேரம் போனது தெரியவில்லை.
விடை பெற்றுக் கிளம்பும் போது, “என்ன இருந்தாலும், படிக்கும்போது பி.ஜியிடம் இருந்த சார்மிங் இப்போ மிஸ்ஸிங்” சொல்லி சிரித்தான். இரவில் சாட்டிங்கில் வந்தவன், அன்றைய மாலை மிகுந்த சந்தோஷமாக இருந்தது என்றான். இவளும் ஆமாம் என்றாள். தொடர்ந்து அரட்டையடித்தவன், “அந்தக் காகிதத்தை எப்போது கிழித்துப் போட்டாய்?” என்று கேட்டு இரண்டு ஸ்மைலி போட்டிருந்தான். பதில் சொல்லாமல் இவளும் இரண்டு ஸ்மைலியோடு நிறுத்தி கொண்டாள்.
பிரகாஷின் ஞாபகம் ஏன் இப்போது வருகிறது எனத் தோன்றியது.
(தொடரும்)
(function(d,e,s){if(d.getElementById("likebtn_wjs"))return;a=d.createElement(e);m=d.getElementsByTagName(e)[0];a.async=1;a.id="likebtn_wjs";a.src=s;m.parentNode.insertBefore(a, m)})(document,"script","//w.likebtn.com/js/w/widget.js");
தொடர்பு எல்லைக்கு வெளியே - 1 (தொடர்கதை)

December 4, 2021
போதி நிலா - சிறுகதை

எழுதிய முதல் சிறுகதை ’மண்குடம்’. பலரும் பாராட்டினார்கள். எழுத்தாளர்கள் கந்தர்வன், தனுஷ்கோடி ராமசாமி, மேலாண்மைப் பொன்னுச்சாமி, தமிழ்ச்செல்வன், எஸ்.வி.வேணுகோபால் போன்றவர்கள் உற்சாகப்படுத்தினார்கள். ‘இலக்கியச்சிந்தனை’ அமைப்பால் அந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. கணையாழியின் கடைசிப் பக்கத்தில் எழுத்தாளர் சுஜாதா அந்தக் கதையைப் பாராட்டி எழுதி இருந்தார். கொஞ்சநாள் கிறுகிறுத்துத்தான் போனேன்.
’ஞானப்பால்’ சிறுகதையை எழுத்தாளர் ஜெயகாந்தன் ‘கவிதைபோலிருக்கிறது’ என பாராட்டியதும், மீனாட்சி புத்தக நிலையத்தால்வெளிவந்த ‘இராஜகுமாரன்’ சிறுகதைத் தொகுப்பிற்கு அவர்முன்னுரை எழுதியதும் என் எழுத்துக்களுக்குகிடைத்த பேறாகவும், பெரும்வாய்ப்பாகவும் இன்றும் நினைத்துக் கொள்வேன்.
எழுத்தாளர்கள்ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, ச.கந்தசாமி, பொன்னீலன் நிறைந்தசபையில் - தமிழ் சாகித்தியஅகாதமியில்– ‘உயிரோட்டம்’ கதையை வாசிக்கும்வாய்ப்பு கிடைத்தது. இந்திரா பார்த்தசாரதிபக்கத்தில் வந்து அந்தக்கதையைப் பற்றி சிலவார்த்தைகள் சொல்லி சிறப்பாகஇருந்ததாகச் சொன்னது முக்கிய தருணமாகநிலைபெற்றிருக்கிறது
ஆனால் தொடர்ந்து சிறுகதைகள்எழுதாமல் நின்று விட்டேன்.
1986 முதல்1999 வரை செம்மலர், குமுதம், இதயம்பேசுகிறது, விசை, விழுது, திருப்பரங்குன்றம் இலக்கிய மலரில் வெளிவந்தபதினைந்து கதைகளை வம்சிபதிப்பகத்தால் ‘போதி நிலா’ தொகுப்பாக வெளியிடப்பட்டது. அந்தத் தொகுப்பைஇப்போது அமேசானில் வெளியிடுகிறேன்.
இதற்காக எழுத்துப் பிழைகள் சரிசெய்து கதைகளைத் திரும்பப்படிக்கிற போது – ஊரும், மனிதர்களும், அந்தக் காலத்தின்வாழ்வும் மட்டுமல்ல, என் எழுத்துக்களுமேஎனக்கு பிடிபட்டன. தொடர்ந்துகதைகள் எழுதத் தூண்டுகின்றன. போதி நிலா சிறுகதையைஅமேசானில் வாங்க, கிண்டிலில் படிக்க புத்தகத்தைகிளிக்குங்கள்:

December 3, 2021
பொய் மனிதனின் கதை - 6

“பொய் சொல்லவும், ஏமாற்றவும் தூண்டுகிறது அதிகாரம்”
- சமூக உளவியலாளர் கெல்ட்னர்
”மோடி எப்போதும் ஜெயித்துக் கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பார். இந்த இயல்பு அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும். எதாவது ஒரு உச்சத்தில்தான் அவரால் இருக்க முடியும். எதிர்காலத்தில் ஒன்று அவர் பிரதமராக வருவார். அல்லது ஜெயிலுக்குப் போவார்” என்று குஜராத்தின் முன்னாள் முதல்வர் ஒருவர் தன்னிடம் சொன்னதாக ’கேரவான்’ பத்திரிகையின் எக்ஸ்கியூட்டிவ் ஆசிரியர் வினோத் ஜோஸ் 2012ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி எழுதிய கட்டுரையில் ஒரு தகவல் இருக்கிறது.
அந்த குஜராத் முன்னாள் முதல்வர் யார் என்பதை அவர் குறிப்பிடவில்லை. மோடியை மிக நெருக்கமாக அறிந்தவர்களாகவும், சங் பரிவாரத்தை சேர்ந்தவர்களாகவும், குஜராத்தின் முன்னாள் முதல்வர்களாகவும் பின்னர் அவரது அரசியல் விரோதிகளாகவும் கேஷுபாய் படேலும், சங்கர்ஷின் வகேலாவும், சுரேஷ் மேத்தாவும் இருந்தார்கள்.
ஆர்.எஸ்.எஸ்ஸின் சாதாரண பிரச்சாரகராக இருந்து, குஜராத் மாநில பிஜேபியில் சேர்ந்து, அத்வானியின் ரத யாத்திரை உட்பட பல்வேறு யாத்திரைகளுக்கு வடிவம் கொடுத்தவராக செயல்பட்டு, குஜராத் மாநில இந்துத்துவ அரசியலில் முக்கியமானவராக உருவெடுத்து, ஆட்சி அதிகாரத்தில் மூக்கை நுழைத்து, அதனால் டெல்லிக்கு இடம் பெயர்க்கப்பட்டு, அங்கிருந்து குஜராத்தில் தன் இடத்திற்கான காய்களை நகர்த்தி, ஆர்.எஸ்.எஸ் அறிவுரையின் பேரில் வாஜ்பாயால் முதலமைச்சராக்கப்பட்டு, உள்கட்சி எதிர்ப்புகளை எல்லாம் ஓரம் கட்டி, குஜராத்தில் பிஜேபியின் முகமாகி, நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, இந்திய பிரதம மந்திரிக்கான பிஜேபி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடியின் அரசியல் பயணமெங்கும் வியாபித்திருப்பது ஒரே லட்சியம்தான். ‘அதிகாரம்!’
எல்லாவற்றையும் மறைத்து ‘டீ விற்ற பையன் நாட்டின் பிரதமராக..’ என்று மட்டும் மோடியை அறிமுகப்படுத்தும்போது அதில் அவருடைய உழைப்பு, அதிர்ஷ்டம், அர்ப்பணிப்பு, அனைவரையும் ஈர்க்கும் ஒரு அதிசயம் எல்லாம் அரூபமாக மக்களின் மனதில் தகவமைக்கப்படுகிறது.
குஜராத்திலும் பின்னர் இந்தியாவிலும் அரசு அதிகாரத்துக்கு மோடி வந்ததும் சரி, பிஜேபி கட்சியிலும், இந்துத்துவா குழுமங்களிலும் சர்வ வல்லமை மிக்கவராக ஒரு இடத்தை அவர் பிடித்துக் கொண்டதும் சரி, தனித்தனி கதைகள் இல்லை. குஜராத் அரசியலில் செல்வாக்கு பெற்றிருந்த சங்கர்சிங் வகேலா மற்றும் கேஷுபாய் பட்டேலில் இருந்து, இந்திய அரசியலில் செல்வாக்கு பெற்றிருந்த வாஜ்பாய் மற்றும் அத்வானி வரை பல அதிமுக்கிய அரசியல் தலைகள் மோடி கடந்து வந்த பாதையில் அங்கங்கு வீழ்ந்து போனார்கள். தாங்க முடியாத துரோகத்தை பார்த்த அதிர்ச்சி அவர்களின் கண்களில் தேங்கி இருந்தன. அந்த பெருங்கதையின் சுருக்கமே அதிர்ச்சி தரக் கூடியது.
1970களில் குஜராத்தில் சங்கர்சிங் வகேலாவும், கேசுபாய் பட்டேலும் ஆர்.எஸ்.எஸ்ஸின் உறுப்பினர்களாக இருந்து இந்துத்துவாவை மக்களிடம் கொண்டு சென்ற இணை பிரியாத ஜோடிகளாய் அறியப்பட்டிருந்தார்கள். பின்னர் அவர்கள் ஜனசங் கட்சியிலும், பிஜேபி கட்சியிலும் பணியாற்றி குஜராத் அரசியலில் பிரபலமாகத் தொடங்கினார்கள். 1980களில் அதே போன்ற ஒரு இணை பிரியாத ஜோடிகளாய் நரேந்திர மோடியும், பிரவீன் தொகாடியாவும் குஜராத்தில் இந்துத்துவாவை வளர்ப்பதிலும் தங்கள் அமைப்புகளை வலுவாக்குவதிலும் வலம் வந்தார்கள். முன்னாள் பிஜேபி எம்.எல்.ஏ ஹரேஷ் பத், “இருவரும் ஒரே தட்டில் உணவு அருந்தும் அளவுக்கு நெருக்கமானவர்கள்” என ’தி வீக்’ பத்திரிகையில் சொல்லியிருந்தார். 1987ல் மோடி பிஜேபியில் இணைந்து மாநிலத்தின் அமைப்புச் செயலாளராகவும், கிட்டத்தட்ட அதே சமயத்தில் தொகாடியா விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பொதுச்செயலாளராகவும் தத்தம் பாதைகளில் பிரிந்து, ’இந்துத்துவா’வுக்காக செயல்பட்டார்கள்.
’அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவோம் என்னும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கோஷத்தை 1989ல் பிஜேபி கையிலெடுத்தது. குஜராத்தின் சோமநாதபுரத்திலிருந்து அத்வானி ரதயாத்திரையை ஆரம்பித்தார். அதற்கான ஏற்பாட்டிலும், பயணத்திலும் மோடி முக்கிய பங்காற்றினார். அத்வானிக்கு மிக நெருக்கமானார்.
1991ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அத்வானியை எதிர்த்து பிரபல இந்தி நடிகர் ராஜேஷ் கன்னாவை டெல்லியில் நிறுத்தப் போவதாக காங்கிரஸ் அறிவித்தது. தேர்தலில் தனக்கு நிச்சயம் வெற்றி தரக்கூடிய நம்பிக்கையான தொகுதியை அத்வானி தேடியபோது குஜராத்தில் காந்திநகர் தொகுதியை அவருக்கு மோடி காட்டினார். அத்வானியின் நம்பிக்கைக்குரியவராய் மோடி உருவெடுக்கவும், காந்திநகர் தொகுதியில் ஏற்கனவே பிஜேபியின் எம்.பியாக இருந்த சங்கர்சிங் வகேலாவை குஜராத் அரசியலில் முக்கியமிழக்கச் செய்யவும் மோடி நகர்த்திய முக்கிய காய் நகர்த்தல் அது.
குஜராத்தில் 80களில் தொடர்ந்து நடந்த மதக் கலவரங்கள், தொகாடியாவின் வெறியேற்றும் பிரச்சாரம், அத்வானியின் ரத யாத்திரை எல்லாம் அம்மாநிலத்தை இந்துத்துவாவுக்கு இரையாக்கி இருந்தது. 1995ல் பிஜேபி ஆட்சிக்கு வந்தது. இரு முக்கிய தலைவர்களாய் இருந்த கேஷுபாய் பட்டேலுக்கும், சங்கர்சிங் வகேலாவுக்கும் அதிகாரப் போட்டி வெடித்தது. சங்கர்சிங் வகேலாவுக்கு மக்களிடமும், குஜராத் கட்சி அமைப்புகளிலும் செல்வாக்கு அதிகமாக இருந்த போதிலும் அத்வானியின் பரிந்துரையின் பேரில் கேசுபாய் பட்டேலே முதலமைச்சராக அறிவிக்கப்பட்டார். மோடியின் அடுத்த காய் நகர்த்தல் அது.
கேசுபாய் பட்டேலிடம் தொகாடியாவுக்கும் செல்வாக்கு இருந்தது. குஜராத் காவல்துறையில் தொகாடியாவின் சிபாரிசில் பலர் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டனர். கேசுபாய் பட்டேல் முக்கிய அரசியல் ஆலோசனைகளை தொகாடியாவிடம் கேட்பது வழக்கமாயிருந்தது. அதே போல் மோடியும் கேசுபாய் பட்டேலிடம் தன் நெருக்கத்தை அதிகரித்துக் கொண்டார். கட்சியின் முக்கிய பொறுப்புகளில் கேசுபாய் பட்டேலுக்கும், மோடிக்கும் வேண்டியவர்களுக்கு பொறுப்பு அளிக்கப்பட்டது,
நிலைமைகளை கவனித்த சங்கர்சிங் வகேலா தனக்கான எம்.எல்.ஏக்களை சேர்த்துக் கொண்டு கேசுபாய் பட்டேல் அரசை கவிழ்த்தார். முதன்முதலாக ஒரு மாநிலத்தில் அமைந்த தங்கள் அரசைக் காப்பாற்ற டெல்லியிலிருந்து வாஜ்பாய் வந்தார். குஜராத் அரசியலில் இருந்து டெல்லிக்கு மோடியை வெளியேற்றவும், கேசுபாய் பட்டேலுக்கு பதிலாக ’நடுநிலையாளராக’ கருதப்பட்ட சுரேஷ் மேத்தாவை முதலமைச்சராக்கவும் வாஜ்பாய் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் வகேலா சமரசத்திற்கு வந்தார்.
பிஜேபியின் தேசீய செயலாளராக மோடி டெல்லியில் பிஜேபி அலுவலகத்தில் நுழைந்தார். ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும், பிஜேபிக்குமான உறவைப் பேணி பராமரிப்பது மோடியின் காரியமாக இருந்தது. அங்கிருந்து வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்களின் காதுகளில் பேசிக்கொண்டே தனக்கான காய்களை நகர்த்தி வந்தார்.
தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என சங்கர்சிங் வகேலா திரும்பவும் கலகம் செய்தார். பிஜேபியிலிருந்து வெளியேறி ’ராஷ்டிரிய ஜனதா கட்சி’ ஆரம்பித்தார். காங்கிரஸோடு இணைந்து ஒரு வருடம் போல முதலமைச்சராக இருந்தார். பின்னர் நடந்த தேர்தலில் தோற்று முக்கியமற்றவராகிப் போனார். மோடியின் பாதையில் விழுந்த பிரபல தலை அது.
1998ல் மீண்டும் கேசுபாய் பட்டேல் முதல்வரானார். கேசுபாய் பட்டேலுக்கு எதிராக டெல்லியிலிருந்தபடியே மோடி காய் நகர்த்தினார். 2000ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பமும், நிவாரணப்பணிகளில் அரசு காட்டிய மெத்தனமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தின. வேறொரு புதிய முகத்தை களம் இறக்கி மக்களை சமாதானப்படுத்தும் தங்களுக்கே உரித்தான பாணியை பிஜேபி கையாண்டது. அடுத்த முதலைச்சர் தொகாடியாவா, மோடியா என்று கூட பேச்சு வந்தது. டெல்லியிலிருந்த மோடி குஜராத்திலிருந்த தொகாடியாவை முந்தினார். ஆர்.எஸ்.எஸ் பரிந்துரை, அத்வானியுடனான ஆலோசனைக்குப் பின் மோடியை குஜராத் முதலமைச்சராக வாஜ்பாய் அறிவித்தார். கேசுபாய் பட்டேல் என்னும் அடுத்த தலை வீழ்ந்தது.
2001 அக்டோபர் 7ம் தேதி குஜராத் முதலமைச்சராக மோடி பதவி ஏற்றார். ஆறு மாதங்களுக்குள் தேர்தலில் நின்று அவர் வெற்றி பெற்றாக வேண்டிய நிலைமை ஆனது. கேசுபாய் பட்டேலுக்கு அடுத்தபடி கட்சியிலும், மக்களிடமும் செல்வாக்கு பெற்ற தலைவராக உருவெடுத்திருந்த, உள்ளாட்சித்துறை அமைச்சராயிருந்த ஹரேன் பாண்டியாவிடம் அவரது எல்லீஸ்பிரிட்ஜ் தொகுதியை தனக்கு விட்டுத் தருமாறு மோடி கேட்டார். பாண்டியா மறுத்து விட்டார். ராஜ்காட்-2 தொகுதியில் இடைத்தேர்தலில் நின்று 2002 பிப்ரவரி 25ம் தேதி மோடி வெற்றி பெற்றார்.
அதிலிருந்து மிகச் சரியாக இரண்டாவது நாளில், 2002 பிப்ரவரி 27ம் தேதி கோத்ராவில் சபர்மதி ரெயிலின் 6வது பெட்டி எரிக்கப்பட்டது என்றும், அயோத்திக்குச் சென்று திரும்பிய கரசேவகர்கள் எரித்துக் கொல்லப்பட்டார்கள் என்றும் செய்திகள் பரவின. விஸ்வஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்புகள் முழு வேகத்தில் கலவரத்தில் இறங்கின. காவல்துறை வேடிக்கை பார்த்தது.
மனித உரிமை அமைப்புகள், உலக நாடுகள் எல்லாம் கண்டிக்கவும் விழித்துக் கொண்ட வாஜ்பாய் குஜராத் சென்று, “ராஜதர்மம் நடத்தப்பட வேண்டும்” என பத்திரிக்கையாளர்களிடம் தனது கண்டனத்தை மறைமுகமாகவும் சுருக்கமாகவும் தெரிவித்தார். அருகிலிருந்த மோடி வாஜ்பாயை உற்றுப்பார்த்து, “அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்.” என்றார். வாஜ்பாயே வெலவெலத்துப் போன இடம் அது.
டெல்லிக்குத் திரும்பிய வாஜ்பாய், மோடி ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அந்த அரசு கலைக்கப்பட வேண்டும் என கட்சியின் உயர் மட்டத்தில் தனது நிலைபாட்டை தெரிவித்தார். லால் கிருஷ்ண அத்வானி அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததோடு, மோடி அரசு கலைக்கப்பட்டால், உதவிப்பிரதமராக இருக்கும் தானும் ராஜினாமா செய்வேன் என முரண்டு பிடித்தார். வாஜ்பாய் பின்வாங்கினார்.
கலவரங்கள் நடந்து முடிந்த மூன்று மாதங்களுக்கு பிறகு நீதிபதி கிருஷ்ணய்யர் தலைமையில் நடந்த உண்மையறியும் குழுவிடம் ஹரேன் பாண்டியா சாட்சியம் அளித்ததாக ஒரு செய்தி கசிந்தது. கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்ட அன்றிரவு மோடியின் இருப்பிடத்தில் நடந்த ரகசிய கூட்டத்தில், “நாளை இதற்கு நீதி கிடைக்க வேண்டும், இந்துத்துவா சக்திகளின் பழிவாங்கலுக்கு காவல்துறையினர் குறுக்கே வரக் கூடாது” என்று மோடி சொன்னதாக பாண்டே சாட்சியத்தில் வாக்குமூலம் அளித்ததாகவும் தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து பிஜேபி கட்சித் தலைமையிடம் பாண்டியா குறித்து மோடி புகார் அளித்தார். அடுத்து வந்த குஜராத் சட்டசபைத் தேர்தலில் பாண்டியாவுக்கு எல்லீஸ்பிரிட்ஜ் தொகுதியை ஒதுக்க மோடி மறுத்தார். பதினைந்து வருடமாக அந்த தொகுதியின் வேட்பாளராக இருந்த பாண்டியா என்னும் பிராமணருக்காக கட்சியின் மேலிடமும் ஆர்.எஸ்.எஸும் மோடியிடம் வலியுறுத்தியது. அதற்கு செவி சாய்க்காத மோடி, தனக்கு உடல்நலமில்லை என ஆஸ்பத்திரியில் போய் படுத்துக் கொண்டார். அவர் இல்லாமல் சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்பதை உணர்ந்த கட்சியின் மேலிடமும் ஆர்.எஸ்.எஸ்ஸும் பின்வாங்கியது. எல்லீஸ் பிரிட்ஜ் தொகுதி வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்டது.
2002ல் குஜராத்தில் நடக்க இருந்த அந்த சட்டசபைத் தேர்தலின் போது இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையிலிருந்து மோடியிடம், “உங்கள் அரசியல் லட்சியம் என்ன?” என்று கேட்கப்பட்டது. “நான் லட்சியங்கள் கொண்டவனில்லை. கொடுக்கப்பட்ட பணியைச் செய்யக் கூடியவன் மட்டுமே” என்று பதிலளித்தார்.
சரி, கதைக்கு வருவோம்.
பாண்டியாவை இழக்க விரும்பாத ஆர்.எஸ்.எஸ்ஸும் கட்சி மேலிடமும் அவரை பிஜேபியின் தேசீய செயலாளராக்கி டெல்லிக்கு வரவழைக்க முடிவெடுத்தது. டெல்லிக்கு புறப்பட வேண்டிய அன்று பாண்டியா அகமதாபாத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார். பாகிஸ்தான் தீவீரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபானும் , தாவூத் இப்ராஹிமும் சேர்ந்து அவரைக் கொலை செய்ததாக காவல்துறையினரால் சொல்லப்பட்டது. 12 பேர் கைது செய்யப்பட்டு 8 வருடம் கழித்து குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்ப்டாமல் விடுதலை செய்யப்பட்டனர். குஜராத் ரெயில் எரிப்பு வழக்கு போல பாண்டியாவின் கொலையும் மர்மமாகிப் போனது. மோடியின் பாதையில் வீழ்ந்த இன்னொரு அரசியல் தலையாகிப் போனார் ஹரேன் பாண்டியா.
2004ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி தோற்றது. இடதுசாரி கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகளின் ஆதரவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. தோல்விக்கு முக்கிய காரணமாக ‘குஜராத் கலவரங்களை’ வாஜ்பாய் சுட்டிக்காட்டினார். அத்வானி உட்பட யாரும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. “புஷ்ஷைப் போல, ஏரியல் ஷரோனைப் போல இந்தியாவுக்கு மோடி வேண்டும்” என தொகாடியா கருத்து தெரிவித்தார். அசோக் சிங்கால் இறந்ததையொட்டி தொகாடியா விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவராகி இருந்தார் அப்போது. மோடிக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு இருந்தது. அடுத்து நடந்த பிஜேபி உயர் மட்டக் கூட்டத்தில் கூட்டத்தில் வாஜ்பாய் முக்கியத்துவம் இழந்ததோடு மட்டுமில்லாமல், தனித்தும் விடப்பட்டார். மனநிலை, உடல்நிலை எல்லாம் பாதிக்க அவரும் அரசியலில் இல்லாமல் போனார்.
அடுத்து இந்தியாவில் பிஜேபியின் முகம் என நினைத்துக் கொண்டு இருந்த மோடியின் குருவான அத்வானிக்கும் சோதனை வந்தது. தீவீர இந்துத்துவா தலைவராக அறியப்பட்டதாலும் பாபர் மசூதியை இடிப்புக்கு மூல காரணமாக இருந்ததாலும் தன்னை நாட்டின் பிரதமராக ஏற்றுக் கொள்ள மக்களும், கூட்டணிக் கட்சிகளும் முன் வரவில்லை என்பதை அத்வானியும் அறிந்திருக்க வேண்டும். மோடி தன் மீது படிந்துவிட்ட அதுபோன்ற களங்கத்தை துடைப்பதற்காக கார்ப்பரேட்களின் அரவணைப்பில் ‘குஜராத் வளர்ச்சி’ என மடை மாற்றிய நேரத்தில் அத்வானியும் வேறு விதமான முயற்சியில் ஈடுபட்டார்.
2005ல் பாகிஸ்தானுக்குச் சென்று, தான் பிறந்த இடத்தை பார்த்த கையோடு ஜின்னாவின் கல்லறைக்குச் சென்று, ”ஜின்னா மதச்சார்பற்ற தலைவர்” என்றும் “ஜின்னா இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு பாடுபட்டவர்” என்றும் யாரும் எதிர்பாராத வார்த்தைகளை வெளிப்படுத்தினார். ஆர்.எஸ்.எஸ்ஸும், விஸ்வ ஹிந்து பரிஷத்தும், பிஜேபியின் தலைவர்களும் அத்வானிக்கு கண்டனம் செய்தனர். தனக்கு நெருக்கடியும் சோதனையும் வந்த போதெல்லாம் பக்க பலமாகவும், அரணாகவும் நின்ற குருவின் பக்கம் நிற்காமல் மோடியும் அத்வானிக்கு எதிரே போய் நின்று கொண்டார். இந்துத்துவ அமைப்புகளுக்கு நம்பிக்கையானவராகவும். அபிமானம் மிக்கவராகவும் வெளிப்படுத்திக் கொள்ள கிடைத்த தருணத்தை மோடி இழக்க விரும்பவில்லை.
கூடவே தன் பால்ய நண்பரும், இந்துத்துவா பாதையில் கூடவே பயணித்தவருமான தொகாடியாவை ஒரம் கட்டும் காரியங்களையும் கவனமாக செய்து வந்தார். குஜராத் கலவரங்களுக்குப் பிறகு தொகாடியாவை கலந்தாலோசிப்பது, அவருக்கு முக்கியத்துவம் அளிப்பது எல்லாவற்றையும் படிப்படியாக நிறுத்திக் கொண்டார். 2008ல் அகமதாபாத் சாலையை விரிவுபடுத்த ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்த இந்துக் கோவில்களை இடிக்க மோடி உத்தரவிட்டபோது தொகாடியா அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மோடி சட்டை செய்யவில்லை.
தன்னை முன்னிறுத்துவதில் மிகுந்த கவனமாக மோடி காய்களை நகர்த்தி வந்தார். ‘வளர்ச்சியின் நாயகன்’ என்றும் ‘இந்தியாவின் நம்பிக்கை’ என்றும் கார்ப்பரேட்கள் அவரை ஏற்கனவே தங்களுக்கான பிரதமராக முன்னிறுத்த தொடங்கி இருந்தனர். இந்துத்துவா கூடாரத்தில் அத்வானி மட்டுமே மோடியின் பாதையில் குறுக்கே இருந்தார். என்ன நடக்கப் போகிறது என்பது அவருக்குத் தெரிந்தே இருந்தது. தொடர்ந்து அரசு அதிகாரத்தில் இருந்த மோடி சக்தி வாய்ந்தவராக காட்சியளித்தார். ஒரு காலத்தில் இந்தியாவையே அதிர வைத்த, சென்ற இடமெல்லாம் நெருப்பை பற்ற வைத்த அத்வானி அன்று மோடியின் முன்னே மிகவும் பலவீனமாகவும், பழைய மனிதராகவும் ஆகிப் போயிருந்தார். அவருக்காக ஒலித்த குரல்களும் முணுமுணுப்பாக மட்டுமே கேட்டன. பிஜேபியின் பிரதம வேட்பாளரை முடிவு செய்யும் கூட்டத்திற்கு செல்லாமல், ராஜினாமா கடிதம் எல்லாம் கொடுத்து சண்டித்தனம் செய்து பார்த்தார். எல்லாம் பரிதாபமான, அவலமான காட்சிகளாகிப் போயின.
இந்துத்துவா அமைப்பில் இருந்து வேறு ஒருவரை பிரதம வேட்பாளராக யோசித்துக் கூட பார்க்க முடியாதபடி மோடி தனித்துத் தெரிந்தார்.
2014 பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், ’தி எக்கனாமிஸ்ட்’ பத்திரிகையிலிருந்து மோடியிடம் பேட்டி காணப்பட்டது. அதில் மோடி சொன்ன பதில்களில் ஒன்று: “நான் லட்சியங்கள் கொண்டவனல்ல. என் கடன் பணி செய்து கிடப்பதே.”
அன்றும் என்றும் ஒரே பொய்தான்.
பொய் மனிதனின் கதை - 6ம் அத்தியாயம்

November 27, 2021
காற்றுக்கென்ன வேலி

அதிகாரத்தை மையப்படுத்தி, அதனைக் கைப்பற்றும் பெருங்கதையாகவே இதுவரையிலான வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. ஒட்டு மொத்த சமூகத்தையும் தீர்மானிக்கும் வல்லமையை அதிகாரம் எடுத்துக்கொள்கிறது.
அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் என அனைத்திலும் அதற்கென்று கருத்துக்களை வைத்திருக்கிறது. அதுதான் முழுமையானதென்று நம்பவைக்கிறது. மீறக்கூடது என்று கட்டளைகளை விதித்து, அதையே ஒழுக்கம் என்பதாக அறிவிக்கிறது. புனிதமாக போற்றுகிறது.
காலத்தின் மாற்றங்களுக்கேற்ப, அதிகாரத்தின் கைகள் ஒழுக்கத்தின் கோடுகளை அப்படியும் இப்படியுமாக கொஞ்சம் வளைத்தும், நெளித்தும் புதிய உருவாக்கங்களை கற்பிக்கிறது. அதாவது தனது நலன்களையும், செல்வாக்கையும் மேலும் மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான பாதைகளை அவ்வப்போது செம்மைப் படுத்திக் கொள்கிறது.
அந்த விதிகளின்படி ஒழுகும் மக்கள் நன்மக்கள் என்றும், மற்றவர்கள் கலகக்காரர்கள் என்றும் தன்னிச்சையாக கருதும் அளவுக்கு சமூகத்தின் பொது அறிவு புரையோடிப் போய் இருக்கிறது. அறிவியலுக்கு முரணான, ஜனநாயகத்துக்கு விரோதமான கருத்தாக இருந்தாலும் அதுகுறித்து எந்த யோசனையும் செய்ய இயலாமல், பிரமைகளுக்குள்ளும், மயக்கங்களுக்குள்ளும் மனிதர்களை அமிழ்த்திவிடுகிறது.
இந்தப் பிடியிலிருந்து உண்மைகளும், சுதந்திர உணர்வுகளும் எப்போதும் திமிறிக்கொண்டே இருக்கின்றன. அவை யார் மூலமாவது, எதாவது ஒரு வடிவத்தில், எதாவது ஒரு காலக் கட்டத்தில் வெளிப்பட்டே விடுகின்றன. அவை அதிகாரத்தின் கூறுகளில் எதாவது ஒன்றை சிராய்த்துவிட்டால் கூட போதும். அதுவரை சிரித்துக் கொண்டிருக்கும் அதிகாரத்தின் முகமும், தோற்றமும் மாறிவிடும்.
வெளிப்பட்ட அந்த உணர்வுகள் கடுமையான சோதனைக்குள்ளாக்கப்படும். அதன் தாக்கம் சமூகத்தின் மீது மேலும் ஏற்படவிடாமல் தடை செய்யப்படும். அதிகாரம் தன்னை தக்க வைத்துக் கொள்வதற்காக எதை வேண்டுமானாலும் செய்யும்.
பல சமயங்களில், இப்படிப்பட்ட உண்மைகளை, உணர்வுகளை எழுத்தின் வடிவில் வெளிப்படுத்தி, அதிகாரத்தின் கோபத்திற்கு ஆளானவர்கள் பலர் காலந்தோறும் நிறைந்திருக்கிறார்கள். அவர்களது இலக்கியங்கள் மக்களை நெருங்கவிடாமல் தடை செய்யப்பட்டிருக்கின்றன.
ஆனால் அந்த இலக்கியங்கள் அந்த தடைகளை மீறி மக்களை நெருங்கிவிடுவதுதான் சுவராஸ்யம். தொடர்ந்து அதிகார அமைப்புகள் தோற்றுப்போகிற இடமாக இலக்கியமே இருக்கிறது. இலக்கியம், எழுத்து என்பது காற்று போல சுதந்திர தாகம் இயல்பிலேயே கொண்டது. காற்றுக்கு வேலி கட்ட முடியாது.
காலவெளியில் எழுத்துக்களின் அப்படிப்பட்ட வெற்றிகளை கொஞ்சம் தொகுத்துப் பார்க்கலாம் எனத் தோன்றியது. முதலாவதாக, ‘காற்றுக்கென்ன வேலி’. அமேசானில் வெளியாகி இருக்கிறது.
புத்தகத்தைப் படித்த நண்பர்கள் Kindleல் தங்கள் கருத்துக்களை Review ஆக பதிவு செய்ய வேண்டுகிறேன்.
புத்தகத்தை பெற இனைப்பை கிளிக் செய்திடுங்கள்: காற்றுக்கென்ன வேலி
November 23, 2021
பொய் மனிதனின் கதை - 5ம் அத்தியாயம்

“பொய்யையும், வஞ்சகத்தையும் விட
உலகில் எதுவும் சிறந்ததே”- லியோ டால்ஸ்டாய்
”கொலைகாரன் மோடி!”
2003 ஆகஸ்டில், லண்டனின் வடமேற்கில் அமைந்துள்ள விம்ப்லேவில் மோடி கலந்து கொண்டு இருந்த கூட்டத்திற்கு வெளியே கோஷங்கள் உக்கிரமாக எழுந்தன. அப்போது அவர் பிரிட்டனுக்கு ஒரு அழையாத விருந்தாளி. ”அரசு ரீதியாக குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி வரவில்லை. தனிப்பட்ட முறையில் வந்திருக்கிறார்” என தன் தரப்பை பிரிட்டிஷ் அரசு சொல்லி முடித்துக் கொண்டது.
வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் மற்றும் வலிந்து அழைக்கப்பட்ட முதலீட்டாளர்களிடம் மோடி பேசிக்கொண்டு இருந்தார். அடுத்த மாதம் குஜராத்தில் நடக்கவிருக்கும் ‘துடிப்பு மிக்க குஜராத்’ ( Vibrant Gujarat) உச்சி மாநாட்டிற்கு அழைப்புகள் விடுத்துக் கொண்டு இருந்தார்.
2003ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி, ஆயுத பூஜை விடுமுறை நாட்களையொட்டி, ‘துடிப்பு மிக்க குஜராத்திற்கான’ உச்சி மாநாடு அகமதாபாத்திலும் சூரத்திலும் ஒரு சேர நடத்தப்பட்டது. அகமதாபாத்தில் இந்தியாவின் துணை பிரதமராயிருந்த அத்வானியும், சூரத்தில் ஒன்றிய நிதியமைச்சராய் இருந்த ஜஸ்வந்த் சிங்கும் துவக்கி வைத்தனர். குஜராத் மாநிலத்தில் தொழில், சுற்றுலா இரண்டையும் ஊக்குவிப்பதே அதன் நோக்கமாய் அறிவிக்கப்பட்டது. உள்நாட்டின் சில கார்ப்பரேட்களும், 48 நாட்டிலிருந்து பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். மாநாட்டின் முடிவில் 14 பில்லியன் முதலீட்டிற்கு 76 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
’துடிப்புமிக்க குஜராத்தின்’ நோக்கம் அப்போது மேலோட்டமாகத்தான் பிடிபட்டு இருந்தது. ‘சகிப்புத்தன்மையற்ற’, ‘மதவெறி மிக்க’, ’பாசிசத்தன்மை கொண்ட’, ‘கலவர’ பூமியாகக் கருதப்பட்ட குஜராத் குறித்த அபிப்பிராயத்தை மாற்றுவதற்கும், நேர்மறை சிந்தனைகளை உருவாக்குவதற்கும் மோடி முயற்சிக்கிறார் என்று ஊடகங்கள் கோடிட்டு காண்பித்தன. தன் மீதும், தன் அரசு மீதும் மனித இரத்தத்தோடு படிந்திருக்கும் களங்கத்தை துடைப்பதற்கு மோடி செய்யும் வித்தைகள் என்று ஜனநாயக சக்திகளும், முற்போக்கு சக்திகளும் கருதின.
2003 லிருந்து 2019 வரை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ‘துடிப்புமிக்க குஜராத்தின்’ மாநாடுகள் நடத்தப்பட்டன. இந்திய கார்ப்பரேட்களோடு மிக நெருக்கமாகவும், அவர்களுக்கு உகந்தவராகவும் மோடி புதிய அவதாரம் எடுத்த தருணம் அந்த மாநாடுகளுக்கு ஊடேதான் இருந்தது. உருமாறி ‘வளர்ச்சி நாயகனாக’ தோன்ற ஆரம்பித்தது அப்போதுதான்.
மே.வங்கத்தில் இருந்த சி.பி.எம் தலைமையிலான அரசு, அம்மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக டாடாவின் நானோ கார் திட்டத்திற்கு அனுமதி அளித்த காலத்தையும் இங்கு சேர்த்து நினைவுகூர்வது, வரலாற்றை அதன் பரிமாணங்களோடு அறிய உதவியாய் இருக்கும். நிலத்திற்கு ஈடாக உரிய முறையில் நிவாரணமும், வேலைவாய்ப்புகள் போன்ற பரிகாரமும் வழங்க மே.வங்க அரசு ஏற்பாடு செய்து கொண்டிருந்தது. சி.பி.எம்முக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், மாவோயிஸ்டுகள், பிஜேபி எல்லாம் தனித்தனியாகவும், இணைந்தும் இயக்கம் நடத்தின. கம்யூனிஸ்டுகள் என சொல்லிக் கொண்டு கார்ப்பரேட்களுக்கு சோரம் போவதாகவும், மக்களை வஞ்சிப்பதாகவும் பிரச்சாரங்கள் நடந்தன. மக்களும் தங்கள் நிலம் பறிபோவதை ஏற்காமல் போரட்டங்கள் நடத்தினர். இறுதியாக டாடாவின் நானோ திட்டத்தை சி.பி.எம் தலைமையிலான மே.வங்க அரசு கைவிட்டது.
உடனடியாக டாடாவின் நானோ திட்டத்திற்கு ’துடிப்புமிக்க குஜராத்தில்’ இடமளிப்பதாக மோடி அழைத்தார். 2008ல் டாடா மே.வங்கத்தில் இருந்து குஜராத்துக்குத் தாவினார். ஒரு புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான பூர்வாங்க காரியங்கள் முடிவதற்கு குறைந்தது 90லிருந்து 180 நாட்களாகும். மோடி இரண்டே நாட்களில் அனுமதியளித்தார். அதிவிரைவாக எல்லாம் நடந்தன. ஒரு முணுமுணுப்பும் இல்லாமல் மிக எளிதாக குஜராத்தில் 1100 ஏக்கரில் டாடாவின் நானோ கார் தொழிற்சாலை செயல்படத் துவங்கியது.
2009ம் ஆண்டு நடந்த ‘ துடிப்புமிக்க குஜராத்’ உச்சி மாநாட்டில் ரத்தன் டாடா, “மோடியின் தலைமையில் வேறெந்த மாநிலத்தையும் விட குஜராத் நிமிர்ந்து நிற்கிறது.” என உச்சி முகர்ந்தார். 30000 கோடி திட்டத்திற்கு மானியம், 0.6 சதவீத வட்டிக்கு கடன், 15 சதவீத வாட் வரியிலிருந்து விலக்கு எல்லாம் சும்மாவா?
“குஜராத் தங்க விளக்கைப் போல் ஜொலிக்கிறது. தொலைநோக்குப் பார்வையும், பயன் தரக்கூடிய தலைமையும் கொண்ட மோடிக்கே இந்த பெருமைச் சேரும்” என்று முகேஷ் அம்பானி புகழ்ந்து தள்ளினார்.
“ஒற்றை ஆளாக மோடி குஜராத்தை சக்தி வாய்ந்த மாநிலமாக்கி இருக்கிறார். மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக குஜராத் திகழ்கிறது” என்றார் அனில் அம்பானி.
“இந்தியாவே குஜராத்தை திரும்பிப் பார்க்கிறது. வளர்ச்சியை நோக்கி செலுத்தும் திறன் இந்த அரசுக்கு உள்ளது.” என்றார் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் மேனேஜிங் டைரக்டர் சாந்தா கோச்சார். (இவரும், இவரது கணவரும்தான் இப்போது 1875 கோடி பணமோசடி வழக்கில் சிக்கி இருக்கின்றனர்.)
1980களில் மஞ்சள் நிற பஜாஜ் ஸ்கூட்டர் வண்டியை அகமதாபாத் நகரத்தின் சாலைகளில் ஒட்டிக்கொண்டு குஜராத் அரசு அலுவலகங்களுக்குள் கடன் வாங்கவும், தொழில் துவங்கவும் அலைந்து கொண்டு இருந்த அதானி மோடியின் மிக நெருங்கிய நண்பராகி இருந்தார். அவரது கூரையைப் பிய்த்து மோடி கொடுத்துக் கொண்டு இருந்தார். இந்தியாவின் கார்ப்பரேட்களில் ஒருவராக அதானி வளர்ந்து கொண்டிருந்தார்.
மிக இள வயதிலேயே ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரான மோடிக்கு, இந்திய முதலாளித்துவத்தின் ஆசியும்,. ஆதரவும் இல்லாமல் அதிகாரத்தைப் பெறவோ, தக்கவைத்துக் கொள்ளவோ முடியாது என்பது தெரிந்திருந்தது. 2008ம் ஆண்டு குஜராத் தலைநகரான அகமதாபாத்தில் சாலைகளை விரிவுபடுத்தும் நடவடிக்கையில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த பல இந்துக் கோவில்களை இடித்திட உத்தரவிட்டார். அம்பானி, அதானி, டாட்டா உள்ளிட்ட இந்திய முதலாளிகளின் நம்பிக்கைக்கு உரியவராய், அவர்களுக்கு மிகுந்த விசுவாசமானவராய் மோடி தன்னை உறுதிபடுத்திக் கொண்டார்.
விகாஸ், விகாஸ் என சதா நேரமும், செல்லும் இடமெல்லாம் மக்களிடம் வளர்ச்சி குறித்தே மோடி பேசினார். ”நாங்கள் வளர்ச்சியை நம்புகிறோம். அந்த வளர்ச்சியின் நன்மைகள் கடைகோடி மனிதனையும் சென்றடைய வேண்டும் என நம்புகிறோம். ஒரு நல்ல காரியத்தை செய்கிறோம்.” என்று மோடி பிரகடனம் செய்தார்.
24 மணி நேரமும் தடை இல்லாமல் மின்சாரம் கிடைக்கும் மாநிலம் என்றும், சாலைகள், போக்குவரத்து, தொழில்நுட்பம் எல்லாவற்றிலும் பிரம்மாண்ட வளர்ச்சி கண்ட மாநிலம் என்றும் பெரும் அளவில் பிரச்சாரங்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன. வந்த செய்திகளையும் தகவல்களையும் அப்படியே நம்பி ஃபார்வேர்டு செய்து கொண்டு இருந்தனர் நகரத்து இளைஞர்கள். முதலீட்டாளர்களுக்கு இணக்கமான சூழலும், உள் கட்டமைப்பும் கொண்ட மாநிலமானது. பூவுலகின் சொர்க்க பூமி என்று வேற லெவலுக்கு குஜராத் கொண்டு செல்லப்பட்டது.
என்னதான் குஜராத்தில் நடக்கிறது, ஏன் இப்படி குஜராத் முன்னிலைப் படுத்தப்படுகிறது என்று அரசியலறிந்தவர்கள் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தனர். உண்மையில் குஜராத் வளர்ச்சி அடைந்திருக்கிறதா, மோடி சொன்னது போல் கடைகோடி மனிதனை வளர்ச்சியின் பலன்கள் சென்று அடைந்திருக்கிறதா என ஆய்வுகளும், விவாதங்களும் ஒரு புறம் ஆரம்பித்தன. வளர்ச்சி என்ற பெயரில் பொய்களும், நயவஞ்சகமும் அவிழ்த்து விடப்பட்டு இருப்பதெல்லாம் தெரிய வந்தன.
குஜராத்தில் தனிநபர் வருமானம் அதிகரித்து விட்டது என்று புள்ளி விபரங்கள் காட்டப்பட்டன. அதே வேளையில் தனி நபர் கடனும் கடுமையாக அதிகரித்து இருந்தது. மோடி முதலமைச்சரான போது குஜராத்திற்கு 6000 கோடி கடன் இருந்தது. அவர் முதலமைச்சராக இருந்த பத்து வருடங்களில் இந்த கடன் தொகை 182000 கோடியாக வளர்ந்திருந்தது. அதாவது குஜராத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் 35000/- ருபாய் கடனோடுதான் உலகத்தை கண் திறந்து பார்க்க வேண்டியிருந்தது.
குஜராத்தின் நகர்ப்புறம் கண்ட வளர்ச்சிக்கும், கிராமப்புறம் கண்ட வளர்ச்சிக்கும் சம்பந்தமே இல்லை. கிராமப்புற பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. அதுகுறித்து மோடியும், அவரது அரசும் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது புள்ளி விபரங்களில் அம்பலமானது.
நகர்ப்புறத்திலும் முஸ்லீம்களும் இந்துக்களும் அண்டை வீடுகளில் வசித்து வந்த நிலைமையெல்லாம் காணாமல் போயிருந்து. கலவரங்களால் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் வீடிழந்து, பாதுகாப்பு தேடி வேறு இடங்களுக்கு தஞ்சம் புகுந்திருந்தனர். அவர்கள் மீண்டும் பழைய வாழ்க்கைக்குத் திரும்பவே முடியவில்லை. அரசு அவர்களுக்கு எந்தவித உதவியும் செய்யவில்லை. நகர்ப்புறங்களில் அவலமான பகுதிகளில் ஒதுக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை இருந்தது.
தொழில் வளர்ச்சிக்காக கார்ப்பரேட்களுக்கு அள்ளி வழங்கிய அளப்பரிய சலுகைகளால், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளுக்கு போதிய நிதியை அரசால் ஒதுக்கீடு செய்ய முடியவில்லை. ஊட்டச்சத்து குறைவால் இறக்கும் குழந்தைகளும், தாய்மார்களும் குஜராத்தில் அதிகமாயிருந்தனர்.
நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென், “குஜராத் தொழில் ரீதியாக முன்னேறி இருந்தாலும் சமூக ரீதியாக பின்னடைவை சந்தித்திருக்கிறது. குறைந்த கல்வி, குறைந்த ஆயுட்காலம், அதிகரித்திருக்கும் ஆண் பெண் பாகுபாடு, சமத்துவமின்மை, மோசமான சுகாதார அமைப்பைத்தான் காண முடிகிறது. தொழில்துறையில் காட்டும் அக்கறையும் வேகமும் மனித வளத்தின் மீது காட்டப்படவில்லை. இதை வளர்ச்சி என்று சொல்ல முடியாது” என மிகச்சரியாக சுட்டிக் காட்டினார்.
ஊதிப் பெருக்கப்பட்ட ’துடிப்பு மிக்க குஜராத்’ குறித்தும், அதன் வளர்ச்சி குறித்தும் பேச ஆரம்பிக்கும்போது நிலைமை கிட்டத்தட்ட கை மீறிப் போயிருந்தது. குஜராத்தைப் போல இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல மோடி ஒருவரால்தான் முடியும் என தொடர்ந்து கார்ப்பரேட் ஊடகங்கள் ஊத ஆரம்பித்தன. மோடி என்றால் யாரென்று அறியாதவர்களைக் கூட திரும்பிப் பார்க்க வைத்தன.மெத்தப் படித்த இளம் தலைமுறையினரில் ஒரு பகுதியினரை என்ன ஏதென்று தெரியாமலே மோடி என்றவுடன் கையைத் தூக்க வைத்தனர். அதற்கு ‘மோடி அலை’, ‘மோடி அலை’ என அவர்களே பேரும் சூட்டிக் கொண்டனர். 2002ம் ஆண்டு குஜராத் குறித்த கொடும் நினைவுகள் எல்லாம் பழங்கதைகளாகவும், கெட்ட கனவாகவும் மங்கிப் போயின.
வளர்ச்சி என்பது புனிதச் சொல்லாகவும், மந்திரச் சொல்லாகவும் ஆகிப் போனது. வளர்ச்சிக்கு எதிராக சிந்தித்தாலும், பேசினாலும் துரோகிகள் போல சித்தரிக்கப்பட்டார்கள். நாட்டின் வளர்ச்சிக்காக அதன் பிரஜைகள் தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் துறக்கும் சித்தம் கொள்வதே அறம் என்பதாக நம்ப வைக்கப்பட்டு இருந்தது.
நாட்டின் வளர்ச்சி என்பது ஸ்டாக் மார்க்கெட்டின் குறியிடுகளோ, வளர்ச்சி விகிதம் குறித்த பொருளாதார புள்ளி விபரங்களோ அல்ல. அந்த நாட்டில் வாழும் அனைவரின் வாழ் நிலையையும்,. அந்த குடும்பங்களின் முன்னேற்றங்களையும் சேர்த்துதான் வளர்ச்சியை ஒட்டு மொத்தமாக கணக்கிட வேண்டும்.
மக்களையும், உழைப்பவர்களையும் விலக்கி வைத்து, அவர்களை ஒரு பொருட்டாக கருதாமல் வளர்ச்சி, வளர்ச்சி என முன் வைக்கப்படும் கோஷங்கள் அனைத்தும் அர்த்தமற்றவை மட்டுமல்ல, அயோக்கியத்தனமானவை. அதன்மூலம் அடைகிற அதிகாரம் மக்களுக்கானது அல்ல, கார்ப்பரேட்களுக்கானது மட்டுமே.
இப்படி குஜராத்திலிருந்து தனது அதிகார எல்லையை இந்தியாவுக்கு வளர்த்துக் கொண்துதான் மோடியின் ‘வளர்ச்சி’.
தனி நபரை விட இயக்கமும், சித்தாந்தமும்தான் பெரிது என சொல்லி வந்த ஆர்.எஸ்.எஸ் மோடியின் இந்த வளர்ச்சி குறித்து மௌனம் சாதித்தது. இந்துத்துவாவின் செல்வாக்கை அதிகரிக்கவும், இந்துத்துவாவுக்கான வெறியர்களை மேலும் உருவாக்கவும் மோடி அவர்களுக்குத் தேவைப்பட்டார். பிரதமர் பதவிக்காக காத்திருந்த அத்வானி ஓரம் கட்டப்பட்டார். மோடி பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
“அடுத்த பிரதமர் யார்?” பாராளுமன்றத் தேர்தல் என்றவுடன் இதுதான் முதல் கேள்வியாகவும், சுவாரசியம் நிறைந்த புதிராகவும் முன்வைக்கப்படுகிறது. தேர்தல் களம் பற்றி உரையாடுகிற அனைத்து ஊடகங்களிலும் ’அடுத்த பிரதமர் யார்’ குரல் திரும்பத் திரும்ப கேட்கப்படுகிறது. கருத்துக்கணிப்பு ஆய்வுகளும் ‘அடுத்த பிரதமர் யார்’ என்பதைக் குறிவைத்தே நடத்தப்படுகின்றன. அனைத்தும் கார்ப்பரேட்களின் பொம்மலாட்டம் என்பது மக்களின் சிந்தனைகளில் படிவதில்லை.
அந்தப் பிரதமரை ஒரு மகத்தான நாயகனாகவும், வானத்திலிருந்து தரையிறங்கி நம் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கப் போகிறவராகவும் ஒரு சித்திரத்தை முன்வைக்கிறார்கள். அதுகுறித்த மறுபேச்சோ, சிந்தனைகளோ, ஆராய்ச்சிகளோ எதுவும் அற்று எளிய மக்கள் அந்த ‘அவர்’ யாராக இருப்பார் என்று அறிந்துகொள்ள துடிக்கின்றனர். ஒரு‘தேவனின் வருகையை’ எதிர்பார்க்கின்றனர்.
அந்த நாயகனை ‘நீங்கள்தாம் தேர்ந்து எடுக்கப் போகிறீர்கள்’ என இரண்டு அல்லது மூன்று முகங்களை நீட்டுகிறார்கள். ‘அவர் அப்படிப்பட்டவர்’, ‘இவர் இப்படிப்பட்டவர்’ என பின்னணியில் குரல்கள் கேட்கின்றன. ஏற்பாடு செய்யப்பட்ட சிலர் வேகமாக அந்த முகங்களை நோக்கி கை நீட்டுகிறார்கள். மக்களும் தங்களை அறியாமல் அந்த முகங்களை நோக்கி கைகளை நீட்ட ஆரம்பிக்கிறார்கள். அந்த முகங்கள் பெரிது பெரிதாய் ஆகின்றன. ஒன்று மிகப் பெரிதாகிறது. அவரே ‘அடுத்த பிரதமர்’ ஆகிறார். ஒரு மாபெரும் தேசத்தின் மக்கள் தங்கள் மகத்தான ஜனநாயக் கடமையை ஆற்றிவிட்டதாக பெருமை பேசப்படுகிறது.
ஐந்து வருடத்திற்கு ஒருமுறை இப்படி ‘அடுத்த பிரதமர்’கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஐந்து வருடங்களில் அந்த பிரதமர்கள் தங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, தங்களை வாட்டி வதைத்து விட்டார் என்று மக்கள் தெரிந்துகொள்கிறார்கள். இங்கு தவறு செய்தது மக்கள் அல்ல. அப்பாவி மக்களை ஏமாற்றிய அந்த பிரதமர்தான். ஆனால் மக்களோ தாங்களும் தவறு செய்துவிட்டதாக உணர ஆரம்பிக்கிறார்கள். மக்களின் சம்மதத்தின் பேரிலேயே அனைத்தும் நடப்பதாக ஒரு மாபெரும் கண்கட்டி வித்தை இது.
2014லிலும் அந்த கேள்வி கேட்கப்பட்டது.
“அடுத்த பிரதமர் யார்?”
மோடி புறப்பட்டார்.
வளர்ச்சியினால் பலனடைந்த அதானியின் விமானத்தில் அவர் வானில் பறந்தார்.
வளர்ச்சியின் பலன் கிடைக்காத கடைகோடி மனிதர்கள் அங்கே கூடியிருந்தார்கள். மோடியின் வருகைக்காக அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அங்கும் மோடி பல பொய்களை சொல்ல வேண்டி இருந்தது.
November 17, 2021
உங்களை உற்றுப் பார்க்கும் மலைப்பாம்பு

‘ஆர்.எஸ்.எஸ்ஸும் ஆயிரம் முகங்களும்’ என ‘தமிழ் இந்து’வில் பத்திரிகையாளர் சமஸ் எழுதிய கட்டுரையில் ஆர்.எஸ்.எஸ் குறித்த அச்சத்திற்கு பதிலாக ஒருவித வியப்பு தொனித்தது. மோடி வெல்லப்பட முடியாதவர் என்னும் அவநம்பிக்கையை ஜனநாயக சக்திகளுக்கு ஏற்படுத்துவதாகவும் புரிந்தது. அதற்கு எதிர்வினையாக ’ஆயிரம் முக ஆர்.எஸ்.எஸ்ஸும் கோடிக் கால் பூதமும்’ என மாதவராஜ் எழுதிய கட்டுரை ஃபேஸ்புக்கிலும், பின்னர் ‘தீக்கதிர்’ பத்திரிகையிலும் வெளியானது.
அதோடு ‘காவியற்ற தமிழகம்’ எனவும், ‘உங்களை உற்றுப் பார்க்கும் மலைப்பாம்பு’ என மேலும் இரண்டு கட்டுரைகளோடு இந்த புத்தகம் அமேசானில் வெளியாகிறது. இந்திய பாசிசம் குறித்த புரிதலை ஓரளவுக்கு இந்த புத்தகம் தரலாம்.
இந்திய பாசிசம் மக்களிடம் அவநம்பிக்கைகளை விதைத்துக்கொண்டே இருக்கிறது. அருகில் இருப்பவர்களையே நம்ப முடியாத சூழலை ஏற்படுத்துகிறது. வேறு வழியில்லை என்னும் நிலைமைக்குத் தள்ளுகிறது. இந்த உளவியலை பயன்படுத்தி, ‘ஒரு தலை, பல கால்கள்’ என்பதை ஏற்க வைக்கிறது. அதாவது ஒரு தலை. அதுதான் சிந்திக்கும். பேசும். ஆணையிடும். கால்கள் அனைத்தும் ஒன்று போல அதற்கு கட்டுப்பட்டு நடக்கும். கூடவே நடக்கும் கால்களோடு தன் கால்களும் இருக்கின்றன என்பது எதொவொரு விதத்தில் மனிதனுக்கு நம்பிக்கையளிக்கிறது என்கிறார் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் எரிக் ஹோப்ஸ்வாம்.
இந்த ஆறு ஆண்டுகளும் தொடர்ந்து மக்களை ஒரு பதற்றத்திலேயே வைத்திருக்கிறது அரசு. மக்களை கீழ்படிய பழக்குவது பாசிசத்தின் தன்மை. அது ‘லெப்ட்’, ‘ரைட்’ என்று உத்த்ரவிட்டுக்கொண்டே இருக்கிறது. அது நில் என்றால் அனைவரும் நிற்க வேண்டும். உட்கார் என்றால் அனைவரும் உட்கார வேண்டும். ஓடு என்றால் அனைவரும் ஓட வேண்டும். வரிசையில் போய் நில் என்றால் நிற்க வேண்டும். பண மதிப்பிழப்பு நடவடிக்கை மக்களை ஓட வைத்தது. வரிசையில் போய் நிற்க வைத்தது. பண மதிப்பு இழப்பு நடவடிக்கை என்பது தோல்வி என்றும், மக்கள் விரோதமானது என்றும், கருப்புப் பணத்தை பிடிக்கவில்லை என்றும் நாம் பேசுகிறோம். இன்னொரு பக்கம் அரசு சாதித்தது என்னவென்றால் இந்த மக்களை கீழ்படிய வைத்தது. அரசு சொல்கிற படி கேட்க வைத்தது. ஜி.எஸ்.டி, ஆதார் என எதாவது சொல்லி மக்களை அலைக்கழிக்க வைத்தது. எதாவது ஒரு பயிற்சியைத் தொடர்ந்து கொடுத்து ஒரு பதற்றத்தில் மக்களை வைத்துக்கொண்டே இருக்கிறது.
வரலாற்றின் இருண்ட தருணங்களை கடப்பதற்கான வெளிச்சத்தை வரலாற்றிலிருந்தே பெற முடிகிறது. அவநம்பிக்கையிலிருந்து மீட்டு நம்பிக்கைகளை ஊட்டவும் வரலாற்றால் சாத்தியமாகிறது. அதைத்தான் இந்த புத்தகம் பேசுகிறது.
அமேசானில் புத்தகத்தை பெற : உங்களை உற்றுப் பார்க்கும் மலைப்பாம்பு
November 15, 2021
பொய் மனிதனின் கதை - 4ம் அத்தியாயம்

“அம்பு போல் நேராக செல்கிறது உண்மை.பாம்பு போல் நெளிந்து நெளிந்து செல்கிறது பொய்” – சுசி காசிம்
"அவர்கள் 60 பேரைக் கொன்றர்களா, இல்லையா" என்று மோடி மேடையிலிருந்து கேட்கிறார்.
"ஆம், கொன்றார்கள்" என்கிறது கீழே நின்றிருக்கும் கூட்டம்.
"நாம் அவர்களைக் கொன்றோமா?" அடுத்த கேள்வி.
"இல்லை" என பெரும் சத்தம்.
"நாம் அவர்கள் கடைகளுக்குத் தீ வைத்தோமா?".
"இல்லை".
"நாம் யாரையாவது கற்பழித்தோமா?".
"இல்லை".
"ஆனால் குஜராத்தின் எதிரிகள் குஜராத்தே தீப்பிடித்து எரிவதாகச் சொல்கிறார்கள்" என்று முடிக்கவும் கூட்டம் கோபம் கொண்டு கத்துகிறது.
"நாம் தீவீரவாதிகளா" என்று கேள்வி.
"இல்லை" என கொந்தளிக்கிறது கூட்டம்.
"நாம் தீவீரவாதிகளானால்..." என்று நிறுத்தி கூட்டத்தைப் பார்க்கிறார் மோடி. நிதானமாய். சட்டென்று உச்சஸ்தாயில் அதி உக்கிரத்துடன் "பாகிஸ்தான் உலக வரைபடத்திலேயே இருக்காது" என்று முடிக்கிறார். கூட்டம் கட்டுக்கடங்காமல் ஆர்ப்பரிக்கிறது.
குஜராத் கலவரங்களுக்குப் பிறகு நடந்த சட்டசபைத் தேர்தலை ஒட்டி மோடியின் இந்த வெறியேற்றும் பொதுக்கூட்டப் பேச்சினை அப்படியே இயக்குனர் ராகேஷ் சர்மா அவரது ‘இறுதி தீர்வு” (Final Solution) என்னும் ஆவணப்படத்தில்.பதிவு செய்திருக்கிறார்,
மோடி குறிப்பிட்ட ‘நாம்’ இங்கே இந்துக்களின் குறியீடாகவும்,, ‘பாகிஸ்தான்’ என்பதை ’மூஸ்லீம்களின் குறியீடாகவும் பகுத்துப் பார்க்க ஆழமான சமூக அரசியல் ஞானமெல்லாம் தேவையில்லை. இந்தியாவை அப்படி அவர்கள் பழக்கி வைத்திருக்கிறார்கள்.
2002 பிப்ரவரி 27ம் தேதி காலையில் கோத்ராவில் சபர்மதி ரெயிலில் ஆறாவது கோச் எரிக்கப்பட்டதில், அயோத்திக்கு சென்று திரும்பி வந்த கரசேவகர்களில் 59 பேர் உடல் கருகி இறந்து விட்டதாக எங்கும் காட்டுத் தீயாய் செய்திகள் பரவின. நாடு முழுவதும் பதற்றம் தொற்றியது. கோத்ரா மாவட்ட கலெக்டர், “இது ஒரு விபத்து. திட்டமிட்ட சதியல்ல” என்றே முதலில் ஊடகங்களிடம் சொல்லி இருக்கிறார். அன்று இரவு 7.30 மணிக்கு குஜராத் ஆகாஷவாணியில் முதலமைச்சராக இருந்த மோடி, இந்த கொடிய சம்பவத்திற்கு பின்னால் ஐ.எஸ்.ஐயின் சதி இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். ஆரம்பத்தில் இருந்தே ஐ.எஸ்.ஐ என்றும் பாகிஸ்தான் என்றுமே அவர் கூறி வந்தார்.
இது போன்ற பேச்சுக்களினால் ஏற்பட்ட விளைவுகளையும் அதே ஆவணப்படத்தில் காணலாம்.
வெளிச்சம் குறைந்த டிசம்பர் 15, 2002 இரவு வேளையில், பாரதீய ஜனதாக் கட்சியினரும், விஸ்வ ஹிந்து பரிஷத்துக்காரர்களும் குஜராத் சட்டசபை தேர்தலில் மோடி அரசு வெற்றி பெற்றதை ஆரவாரித்துக் கொண்டாடுகிறார்கள். வாகனங்கள் அலறும் சத்தங்களின் நடுவே நின்று தலையில் காவித்துணி கட்டிய ஒருவன் "பி.ஜே.பியின் வெற்றி எனது வெற்றி" என்கிறான். பத்து வயது கூட நிரம்பாத ஒரு சிறுவன் "கடவுளுக்கு நன்றி...முஸ்லீம் தாய்களை புணருங்கள்" என்கிறான்.
மோடியின் வார்த்தைகளையும், அந்த சிறுவனிடம் வெளிப்பட்ட வார்த்தைகளையும் சேர்த்துப் பார்த்தால் குஜராத் வன்முறைகளின் ஊற்றுக்கண்ணை அறிய முடியும். 60 பேரைக் கொன்றார்கள் என கோத்ரா ரயில் எரிப்பை, ஒட்டு மொத்த முஸ்லீம் மக்கள் மீதான இந்துக்களின் வெறுப்பாகவும், ஆத்திரமாகவும், வன்மமாகவும் முன்னிறுத்தியது யார் என்பது தெரியும்.
ரெயில் பெட்டியில் கருகிய கரசேவகர்களின் உடல்களை சட்ட விரோதமாக விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்களில் ஒருவரான ஜெய்தீப் படேல் வசம் ஒப்படைக்கப்பட்டது. இறந்து போனவர்களின் உடல்களோடு ஊர்வலமாய் சென்று பெரும் கூட்டமாக கலந்து கொண்ட இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து கலவரங்களும், வன்முறைகளும் வெடித்தது. முஸ்லீம் மக்கள் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்.
மனிதகுலம் அதிர்ச்சியோடு பார்த்த காட்சிகளும் நிகழ்வுகளும் தேசம் குறித்த நினைவுகளில் உறைந்தே இருக்கின்றன. கருகிய உடல்களும், வெட்டப்பட்ட மனித உறுப்புகளும், வாட்களின் முன்பு கதறி கையெடுத்துக் கும்பிட்ட கைகளும், வன்புணர்வு செய்யப்பட்ட பெண்களின் அலறல்களும் நிறைந்த பயங்கரமான நாட்கள் அவை.
2002 பிப்ரவரி 28ம் தேதியும் அப்படியொரு நாள்தான். குல்பர்க் சொஸைட்டியில் இந்து மத வெறிக் கும்பலால் முன்னாள் காங்கிரஸ் எம்.பி ஜாஃப்ரியும் 37 பேரும் வெறிகொண்ட இந்துத்துவ கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். இறப்பதற்கு முன்பு காவல்துறைக்கும் முதலமைச்சர் மோடிக்கும் மாறி மாறி தங்களைக் காப்பாற்றுவதற்கு ஜாஃப்ரி கதறி போன் செய்திருக்கிறார். எந்த பதிலும் இல்லை. பாதுகாப்பும் கிடைக்கவில்லை. ஜாஃப்ரியின் துணைவியார் ஜாகியா தொடுத்த வழக்கில் மோடியும் முக்கிய குற்றவாளியாய் கருதப்பட்டு இருந்தார்.
வழக்கின் உண்மைகளை அறிய சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வுக்குழு ( Special Investigation Team – SIT ) அமைக்கப்பட்டது. குஜராத் முதலமைச்சராக அதிகாரத்தில் மோடி இருந்த காலங்களில்தான் சிறப்பு புலனாய்வுக் குழுவும் செயல்பட்டது. அதில் இருந்த முரண்பாடுகள், குளறுபடிகள், மேலோட்டமான விசாரணை, காலதாமதம் எல்லாம் பெருங்கதை.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விசாரணை நடத்திய வர்மா கமிஷனால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்த குறைகளுக்கு பொறுப்பானவராக சுட்டிக்காட்டப்பட்ட போலீஸ் அதிகாரியும், அதனால் தமிழ்நாடு அரசின் துறை ரீதியான நடவடிக்கைகளால் வெகு காலம் பதவி உயர்வு பெற முடியாமல் போனவரும், வாஜ்பாய் அரசினால் புத்துயிர்ப்பு அளிக்கப்பட்டு சி.பி.ஐ டைரக்டராக ஆனவருமான ஆர்.கே.ராகவன்தான் அந்த சிறப்பு புலனாய்வுக் குழ்வின் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது ஒரு கிளைக்கதை.
கோத்ரா சம்பவம் நடந்து எட்டு வருடங்கள் கழித்து சிறப்பு புலனாய்வுக்குழு 2010ம் ஆண்டு மோடியிடம் மொத்தம் 71 கேள்விகள் கேட்டனர். மோடியின் பதில்களில் அவர் எத்தகைய மனிதர் என்பது புலப்பட்டது.
SIT: கோத்ரா சம்பவத்தை முன்கூட்டியே திட்டமிட்டது என்றும், பாகிஸ்தான் சதி அதில் இருப்பதாகவும் அறிவித்தீர்களா? அப்படியென்றால் அதற்கு ஆதாரமுண்டா?
மோடி : நான் அப்படி எந்த வார்த்தைகளையும் சட்டசபையில் சொல்லவில்லை. ஆனால் ஊடகங்கள் என்னிடம் அதுகுறித்து சில கேள்விகள் கேட்டபோது, விசாரணை முடிவு தெரியாமல் எந்த முடிவுக்கும் வர முடியாது என தெரிவித்திருந்தேன்
SIT-ன் கேள்விக்கு பதிலாய்ச் சொன்ன மோடியின் வார்த்தைகளுக்கும், இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் பொதுக்கூட்டத்தில் வெளிப்பட்ட மோடியின் வார்த்தைகளுக்கும் இடையே ஒளிந்திருந்தது பொய்.
தொடர்ந்த கேள்விகளிலும் மோடியின் மழுப்பலான பதில்களிலும் பல பொய்கள் நிறைந்திருந்தன.
சிறப்பு புலனாய்வுக் குழு: 27.02.2002 அன்று கோத்ரா ரெயில்வே ஸ்டேஷனில் சபர்மதி எக்ஸ்பிரஸ்ஸின் கோச் எரிக்கப்பட்டது எப்போது உங்களுக்குத் தெரியும்?
மோடி: 27.2.2002 அன்று காலை ஒன்பது மணி வாக்கில் அடிஷனல் சீப் செக்ரட்டரி திரு.அசோக் நாராயணன் தகவல் தெரிவித்தார்.
சிறப்பு புலனாய்வுக் குழு: உடனடியாக உங்கள் எதிர்வினை என்னவாக இருந்தது? அந்த சம்பவம் குறித்து என்ன நடவடிக்கைகள் எடுத்தீர்கள்?
மோடி: உள்ளாட்சித் துறை அமைச்சர் கோர்தான் ஜோடாஃபியா, அடிஷனல் சீப் செக்ரட்டரி அசோக் நாராயணன் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் பேசினேன். சட்டசபையில் பிரச்சினையாக எழும் என்பதால் அந்த சம்பவம் குறித்த உண்மைகளை கேட்டறிந்தேன். அந்த ரெயிலின் மற்ற பிரயாணிகளுக்கு மேலும் தாமதம் ஏற்பட்டால் பதற்றம் அதிகரிக்கும் என்பதால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவு பிறப்பித்தேன். கோத்ரா ஒரு பதற்றம் மிக்க பகுதி என்பதால், அங்கு ஊரடங்கு உட்பட நடவடிக்கைகள் எடுக்கவும், தேவைப்பட்டால் அந்த பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கவும் சொன்னேன்.
கோத்ரா ரெயில் எரிப்பு சம்பந்தமாக மோடி தகவல் அறிந்தது காலை 9 மணி. மேற்கண்ட துறை சார்ந்த அதிகாரிகளை சந்தித்து பேசியது காலை 10.30 மணி அளவில். அதற்கு முன்பே குஜராத் முதலமைச்சர் மோடியின் தனி உதவியாளருக்கும் விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச்செயலாளர் ஜெய்தீப் படேலுக்கும் இடையே 9.39க்கும் 9.41க்கும் இடையே இரண்டு தடவை தொலைபேசி அழைப்புகள் பதிவாகி இருந்தன. அந்த உண்மையை வெளிக்கொண்டு வருவதில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் தொடர்ந்த கேள்விகளில் உரிய அழுத்தம் கொடுக்கவில்லை என விமர்சகர்கள் சொல்கிறார்கள்.
சிறப்பு புலனாய்வுக் குழு: விஸ்வஹிந்து பரிஷத் பொதுச்செயலாளர் ஜெய்தீப் படேல் உங்களுக்குத் தெரியுமா? அவர் உங்களை கோத்ராவில் சந்தித்து, இறந்து போனவர்களை அகமதாபாத்திற்கு கொண்டு செல்லும் போது தானும் உடன் செல்வதற்கு அனுமதி கேட்டாரா?
மோடி: விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச்செயலாளர் ஜெய்தீப்பை எனக்குத் தெரியும். அவரை கோத்ராவில் சந்தித்தது ஞாபகமில்லை. இறந்தவர்களின் உடலை அகமதாபாத்திற்கு கொண்டு செல்வது குறித்த வழிமுறைகளை தீர்மானித்தது மாவட்ட நிர்வாகம். எனக்கு அது குறித்த விபரங்கள் தெரியவில்லை.
”ஞாபகமில்லை” என மோடி உண்மைகளை சாதாரணமாக கடந்தார்.
அடுத்தது தொடர் கலவரங்களுக்கு வித்திட்ட இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள். கோத்ரா ரெயில் பெட்டி எரிப்பில் இறந்த கரசேவகர்களுக்கு அகமதாபாத்தில் நடந்த இறுதிச் சடங்கில் பெரும் கூட்டம் கலந்து கொண்ட காட்சியை ரெய்ட்டர் செய்தி நிறுவனமும், சில இந்துத்துவா அமைப்புகளின் இணைய தளங்களிலும் பகிரங்கமாக வெளியிட்டு இருந்தன.
காவல்துறை கண்ட்ரோல் ரூமில் ( Police Control Room - PCR) பதிவான தகவல்களில் பிப்ரவரி 28 காலை 11.58 மணிக்கு ஜந்தநகரிலிருந்து ஹட்கேஷ்வர் மயானத்திற்கு 10 உடல்கள் எடுக்கப்பட்டு ஐயாயிரத்திலிருந்து ஆறாயிரம் பேரோடு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது என்பது பதிவாகி இருந்து.
Concerned Citizen Tribunal அறிக்கையின் 132ம் பக்கத்தில் பின்வருமாறு விவரிக்கப்பட்டு இருந்தது: ”கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் பெட்டியில் இறந்த பயணிகளின் உடல்கள் சாலை வழியாக அகமதாபாத்தில் உள்ள சோலா சிவில் மருத்துவமனைக்கு குதிரை வண்டியில் கொண்டு செல்லப்பட்டன. குதிரை வண்டிகளில் ராம சேவகர்கள் நிறைந்து இருந்தனர். இந்த செய்தியை ஒளிபரப்ப அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஊடகம் பயன்படுத்தப்பட்டது மற்றும் உள்ளூர் ஆகாஷ்வாணி வானொலி நிலையம் அகமதாபாத்தில் குதிரை வண்டிகள் புறப்படும் நேரத்தை அறிவித்தது. இறந்த உடல்கள் சிவில் மருத்துவமனையை அடைந்தபோது, ”நாங்கள் பழிக்குப் பழி வாங்குவோம்” போன்ற வெறித்தனமான கோஷங்களை ராம சேவகர்கள் எழுப்பினர். அதிக மக்கள் அங்கு கூடியிருந்தனர்.”
இவ்வாறு வெறியூட்டப்பட்ட, கலவரம் தூண்டப்பட்ட நிகழ்வுகள் சம்பந்தமாகவும் மோடியிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.
சிறப்பு புலனாய்வுக் குழு: கோத்ரா சம்பவத்தில் இறந்த ராமசேவகர்கள் மற்றும் வேறு சிலரும் அகமதாபாத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டனரா?
மோடி: கோத்ராவில் இறந்தவர்களின் இறுதிச் சடங்கில் பதற்றம் அதிகரிக்க விடக்கூடாது என்பதில் அரசு கவனமாய் இருந்தது. எனக்கு கிடைத்த தகவலின்படி காவல்துறையினர் இதில் முனைப்புடன் செயல்பட்டனர். இறந்தவர்களின் உடலை வாகனங்களில் எடுத்துச் செல்ல உறவினர்கள் சிலருக்கு வலியுறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒத்துழைத்தார்கள். எந்த அசம்பாவிதம் இல்லாமல் அமைதியாக நடந்தது. அடையாளம் காண முடியாத உடல்களும், சட்ட ரீதியான விதிகளின்படி அரசு ஆஸ்பத்திரியிலிருந்து 200 மீட்டர் தொலைவில் தகனம் செய்யப்பட்டன. எனவே இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது.
கிடைத்த ஆதாரங்கள், ஆவணங்களின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வுக்குழு மேற்கொண்டு கேள்விகளை எழுப்பி இருக்க முடியும். உண்மைகளை வெளிக்கொண்டு வருவதில் SIT கவனம் செலுத்தவில்லை என்னும் விமர்சனங்கள் மட்டுமே மிச்சமாகிப் போயின. இது போல கலவரங்கள் குறித்து வெளிவர வேண்டிய பல உண்மைகள் காணாமல் போயின.
2013ல் வெளியான சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கையில் மோடி அப்பழுக்கற்றவராய் அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து நாட்டின் பிரதம வேட்பாளராகவும் முன்னிறுத்தப்பட்டார். வெற்றி பெற்றார். இந்திய அரசியலில் பாசிசப் போக்கு அதிகாரத்தை நோக்கி பாய முடிந்த சம்பவமாக ’கோத்ராவில் சபர்மதி ரயில் எரிக்கப்பட்ட’ தருணம் அமைந்து விட்டது.
இவ்வளவுக்கும் மூல காரணமாக இருக்கும் – சபர்மதி ரயிலை கோத்ராவில் எரித்தது யார்? எப்படி எரித்தார்கள்? அவர்கள் அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனரா? என்ன குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன? அவை நிருபீக்கப்பட்தா? தண்டனை வழங்கப்பட்டனரா?
அதுகுறித்த செய்திகள் முக்கியத்துவம் அளிக்கப்படாமலும் கவனம் பெறாமலுமே இருக்கின்றன.
ரெயில் பெட்டி எரிக்கப்பட்டு 9 ஆண்டுகளுக்குப் பிறகு, குற்றஞ்சாட்டப்பட்ட 94 பேரில் 63 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 31 பேரில் 11 பேருக்கு தூக்குத் தண்டனையும் மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. மேல்முறையிட்டில் அந்த 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கூட ரஃபீக் ஹூசைன் பதுக் என்பவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
மிகப் பெரும் வன்முறைகளுக்கு வித்திட்ட அந்த சபர்மதி எக்ஸ்பிரஸ்ஸின் 6வது பெட்டியை யாரெல்லாம் எரித்தார்கள். எப்படி எரித்தார்கள் என்பது முழுமையாக தெரியவில்லை. ரெயிலின் உள்ளிருந்துதான் தீப்பிடித்திருக்க வேண்டும், வெளியிலிருந்து தீப்படிக்க சாத்தியமில்லை என்ற ஆய்வு உண்மைகளும் இருக்கின்றன. ஜஸ்டிஸ் பானர்ஜி கமிட்டி அறிக்கையில், “கோத்ரா சம்பவம் சதி அல்ல, விபத்து“ என்று சொல்லப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் கோத்ரா ரெயில் பெட்டி எரிப்பு சம்பவம் இன்று வரை மர்மம் நிறைந்ததாகவே இருக்கிறது.
மோடியால் திரும்பத் திரும்ப குறிப்பிடப்பட்ட ’சதி’ இன்னமும் நிரூபிக்கப்படமாலேயே இருக்கிறது.
அவர் குஜராத்தின் 14 வது முதலமைச்சராக 12 ஆண்டுகள் இருந்துவிட்டு, இந்தியாவின் 14 வது பிரதம மந்திரியாக ஏழு வருடங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.