Jeyamohan's Blog, page 7
October 15, 2025
சைவம் அறிந்து நெகிழ்ந்து…
The answer to the question about ritual, faith, and wisdom is precise and satisfying. This is the main question asked by commoners at all levels of life. Generally, we have a fear of knowledge.
The need of the hour…
இந்த முறை சைவ சித்தாந்த வகுப்பில் கலந்து கொண்டேன், ஆசிரியர் முத்தையா அவர்கள் முன்பாகவே எங்களுக்கு ஓர் பதிகம் அனுப்பி அதை வாசித்து விட்டு வர சொல்லி இருந்தார், அந்த பதிகம் எங்கள் பாட திட்டத்தின் சுருக்கிய வடிவம் என்பதை வகுப்பில் உணர்ந்து கொண்டோம்.
சைவம் அறிந்து நெகிழ்ந்து…“Stories of the True” நூலறிமுக விழா அழைப்பு – டாலஸ்
அமெரிக்காவின் முன்னணி பதிப்பகமான FSG வெளியிடும் “Stories of the True” நூலறிமுக விழா ஒன்று டாலஸ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புகழ்பெற்ற Barnes & Noble புத்தகக் கடையில் நடக்கும் இந்த விழாவில் கலந்துகொள்ள வரும் உங்களைச் சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறோம்.
நாள்: அக்டோபர் 22 2025, புதன்கிழமை
நேரம்: மாலை 6 மணி முதல் 8 மணி வரை
இடம்: Barnes & Noble, 5301 Beltline Road Suite 118, Dallas, TX 75254
ALTA போன்ற குறிப்பிடத்தக்க குழுமத்தின் விருதுக்கான இறுதி பட்டியலில் இடம் பெற்ற, இந்தியாவில் புகழ்பெற்ற ‘அறம்‘ நூலின் அமெரிக்க ஆங்கிலப் பதிப்பை வாங்கவும், ஆசிரியரை சந்திக்கவும், சிறிய உரையாடலுக்கான வாய்ப்பும் உள்ள இந்த நிகழ்வுக்கு வாசக நண்பர்களை அன்புடன் அழைக்கிறோம்.
நம் தமிழ்ச் சூழலையும், தமிழ் இலக்கியத்தையும் அமெரிக்காவில் படிக்கும் அடுத்த தலைமுறைக்கோ அல்லது அமெரிக்க நண்பர்களுக்கோ அறிமுகம் செய்ய சரியான தேர்வாகிய இந்தப் புத்தகத்தை ஆசிரியரின் கையொப்பத்துடன் பெற்றுக்கொள்ள கிடைக்கும் நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
நிகழ்வு குறித்து Barnes & Noble தளத்தில் : https://stores.barnesandnoble.com/event/9780062196180-0
நிகழ்வில் கலந்துகொள்ள முன்பதிவு எதுவும் தேவையில்லை. புத்தகக் கடையில் தேவைக்கதிகமாகவே இலவச பார்க்கிங் வசதியும் இருக்கிறது.
மேலும் தொடர்புக்கு: vishnupuramusa@gmail.com / +1 972-822-9639
அன்புடன்,
டெக்ஸஸ் நண்பர்கள்
October 14, 2025
கரூர் விபத்தில் கற்கவேண்டியவை…
பொதுவாக ஒரு விபத்து அல்லது பரபரப்பு நிகழ்வுகளுக்கு உடனே ஏதேனும் எதிர்வினையாற்றுவதை நான் செய்வதில்லை. ஆகவே கொஞ்சம் தாமதமாக இதை பேசியிருக்கிறேன். ஒரு நிகழ்வுக்கான உடனடி எதிர்வினை என்பதற்கு அப்பால் நாம் கருத்தில்கொள்ள வேண்டிய சில இந்த நிகழ்வில் உள்ளன.
வெளியேறும் வழி-2
(தொடர்ச்சி)
நாம் இன்று சிக்கிக்கொண்டிருக்கும் சுழல்பொறியில் இருந்து வெளியேறும் வழி இரண்டு. ஒன்று வெளியே உள்ள வெளி நோக்கி செல்வது. இன்னொன்று தன்னகத்தே ஒரு வழியை உருவாக்கிக் கொள்வது.
வெளியே உள்ள வெளி எப்போதும் அங்குதான் உள்ளது. நாம் சிக்கிக்கொண்டிருக்கும் இந்தப் பொறி நமக்களிக்கும் அனைத்தையும் துறந்து அதை நோக்கிச் சென்றவர்களின் ஒரு வரிசை எப்போதும் நம் முன் உள்ளது. நாம் தொடர்ந்து செய்திகளில் அவர்களைப் பற்றி கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம். உயர்ந்த வேலையை, சமூக இடத்தை துறந்து உள்ளத்திற்கு உகந்த சேவை ஒன்றிற்காக தங்களை ஒப்புக்கொடுத்தவர்கள் பலர். தங்கள் உள்ளம் விழைந்த கலைக்கும் இலக்கியத்துக்கும் அறிவுச்செயல்பாட்டுக்கும் தங்களை அளிக்கும்பொருட்டு முற்றாக உலகில் இருந்து விடுவித்துக் கொண்டவர்கள் அவர்கள்.
அவ்வாறு சென்றவர்கள் முதலில் நுகர்வைத் துறக்கிறார்கள். நுகர்வைத் துறந்தால் பணமீட்டியாகவேண்டிய பொறுப்பையும் துறக்கலாம். அதுவே விடுதலை. ஆனால் அதை எய்துபவர்கள் சராசரிக்கு மேம்பட்ட அகத்திறன் கொண்டவர்கள். வேண்டாம் என்று சொல்வதற்கு அதற்குரிய தனி உளஆற்றல் தேவை. தன்னைச் சூழ்ந்திருக்கும் ஒவ்வொரு உறவிலிருந்தும் விடுபடவேண்டும்.தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் வேண்டுகோள்களை, மன்றாட்டுக்களை நிராகரித்து, தன்னுடைய அகத்தின் குரலை மட்டுமே கேட்டு, முன நகரவேண்டும். அதன் விளைவு அப்போது கண்ணுக்குத் தெரியாது. நம் கனவு மட்டுமே நம்முடன் இருக்கும். அதை மட்டுமே நம்பவேண்டும். அதை இன்னொருவருக்கு புரியவைக்க முடியாது. அத்துடன் அதில் தோல்விகளும் நிகழலாம். அப்போது நாம் இளக்காரத்துக்கு உள்ளாவோம். கண்டிக்கப்படுவோம், பழிக்கப்படுவோம். அந்த முடிவை எடுப்பது மிகக் கடினமான ஒரு செயல். நேற்றைய துறவைவிட கடினமானது அது.
நுகர்வு இன்று ஒவ்வொருவருக்கும் வெறும் கேளிக்கையோ ஆடம்பரமோ மட்டுமல்ல. அது இன்று ஒருவரின் அடையாளம்தான். நீங்கள் என்ன ஆடை அணிந்து இருக்கிறீர்கள், என்ன செல்பேசி வைத்திருக்கிறீர்கள், எத்தகைய வீட்டில் தங்குகிறீர்கள், என்ன கார் வைத்திருக்கிறீர்கள் என்பதே உங்களுடைய அடையாளத்தை இன்று தீர்மானிக்கிறது. அந்நிலையில் நுகர்வு துறப்பு என்பது அடையாளத் துறப்பும் கூடத்தான். அடையாளத் துறப்பு எல்லாமே சாவுதான். அடையாளச் சாவிலிருந்து ஒருவர் மீண்டும் ஒரு புதிய அடையாளத்தில் பிறந்தெழுந்தாக வேண்டும். அதற்கான வாய்ப்புண்டு. ஆனால் அப்படி மீண்டும் நிகழாமல் போய்விடும் வாய்ப்பும் உண்டு. அந்த மறுபிறப்பும் புதிய அடையாளமு நிகழவில்லையேல் அது அவரது முற்றழிவாக ஆகிவிடக் கூடும்.
அத்துடன் இந்தியச் சூழலில் நாம் எவரும் தனிநபர்கள் அல்ல. இங்கே நாமெல்லாம் குடும்பமாகவே வாழ்கிறோம். ஒருவரை ஒருவர் நம்பி வாழ்கிறோம். ஆகவே ஒருவர் ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை துறக்கையில் அவருடன் அணுக்கமான அத்தனை பேரும் அந்த அடையாளத்தை துறக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவ்வாறன்றி ஒருவர் அவருடைய உறவுகளை அனைத்தையும் அவர் துறப்பது என்பது இன்னும் பெரிய ஒரு சாவாக முடியும். அந்த ஒரு காரணத்தினாலேயே தங்களுடைய எல்லைகளுக்குள் சிக்கிக்கொண்ட பலரை எனக்குத் தெரியும். பொறுப்புகளையும் கடமைகளையும் எவரும் எளிதாகத் துறக்கமுடியாது.
என் நண்பர் ஒருவர் அமெரிக்காவில் ஒரு பெரும் பதவியில் இருந்தார். அதை துறந்து ஒரு சிற்றூரில் வேளாண்மை செய்யத் தொடங்கினார். வேளாண்மைப் பணிக்காக இருசக்கர வாகனத்தில் வங்கிக்கு சென்று கொண்டிருந்த அவரை காரில் வந்த ஒருவர் காரை நிறுத்தி, கை சுண்டி , ‘யோவ் வாய்யா இங்க’ என்று அழைத்தார். நண்பர் அவருக்குள் அந்த நேரத்தில் எழுந்த கடும் சீற்றத்தை வெல்ல தனக்கு நீண்ட பொறுமை தேவைப்பட்டது என்றார். அந்தக் காரில் வந்த நபர் வைத்திருந்த காரை விட பத்துமடங்கு விலைமதிப்புள்ள கார் வைத்திருந்தவர் நம் நண்பர். அப்போதுதான் அவருக்கு தெரிந்தது, அவர் துறந்தது அவர் அமெரிக்காவில் ஆற்றிய அந்தப் பணியை மட்டுமல்ல, அது உருவாக்கிய சமூக அடையாளத்தையும் கூடத்தான். அந்த அடையாள இழப்பு அவரைவிட அவர் மனைவிக்கு பெரும் துயரத்தை அளித்திருக்கலாம். ஏனெனில் நம் தமிழ்ச் சூழலில் ஆண்கள் பெறும் புதிய அடையாளங்களை பெண்கள் அடைவதில்லை. ஆனால் அவர்கள் இழக்கும் பழைய அடையாளங்களை பெண்கள் உடனே இழந்து விடுகிறார்கள்.
ஒருவர் துறந்து வெளியேறி வெளியே தனக்கான இடத்தை தேடிக்கொள்ள முடியும். அதற்கு தேவையான ஆன்ம பலமும், உள்ள உறுதியும் மிகச்சிலருக்கே அமைகின்றன. அவ்வாறு இல்லாத பிறருக்கான வழி என்பது அகத்தே ஒரு வழியை தேடுவதுதான். தன் உழைப்பு-நுகர்வு என்னும் இயந்திரச்சுழற்சிக்குள் தனக்கான ஒரு சிறு இடத்தை உருவாக்கிக் கொள்வது. தனக்கான ஒரு செயலைக் கண்டடைவது, அதன் வழியாக விடுதலையை ஈட்டுவது என்று நான் சொல்வது அதையே.
நான் அமெரிக்காவுக்கு சென்றபோது பதினேழாம் நூற்றாண்டில் அஙகு ஒரு நம்பிக்கை இருந்த்தை அறிந்தேன். கருப்பினத்தார் தூங்குவது இல்லை என்று வெள்ளை இனத்தார் நம்பினார்கள். ஏனெனில் உண்மையிலேயே அடிமைகள் மிகக் குறைவான நேரம்தான் தூங்கினார்கள். வெளிச்சம் வந்த நேரத்தில் இருந்து வெளிச்சம் மறையும் நேரம் வரைக்கும் அவர்கள் உரிமையாளர்களின் வயல்களில் வேலை செய்தாக வேண்டும். அதன் பிறகுதான் அவர்கள் தங்களுடைய சிறு குடில்களுக்குச் செல்ல முடியும். அங்கு சென்று உணவு சமைத்துச் சாப்பிட்டுவிட்டு அவர்கள் தூங்க வேண்டும். ஆனால் அந்த தூங்கும் நேரத்தில் சற்றுப் பொழுதை எடுத்துக் கொண்டால் அவர்கள் பாடிக்கொள்ள முடியும். அன்புடன் உரையாடிக் கொள்ள முடியும். சிறிய கலைச் செயல்பாடுகளில் ஈடுபட முடியும். அவர்கள் தூக்கத்தை இழந்து அந்த சிற்று உலகத்தை உருவாக்கிக் கொண்டார்கள். அதைக்கண்ட உரிமையாளர்கள் கருப்பினத்தார் தூங்குவதே இல்லை என எண்ணினர்.
ஏன் அந்த தியாகம்? அந்தச் சிறியபொழுதில் அவர்கள் வாழ்வதுதான் அவர்களின் உண்மையான வாழ்க்கை. வயலில் வாழ்வது வெறும் அடிமை வாழ்க்கை மட்டும்தான். வாழ்வது என்பது மகிழ்வுடன் இருப்பதே. உழைப்பதும் உண்பதும் பிழைப்பது மட்டுமே. இன்றைய நவீன அடிமைகளுக்கும் அதுவே வழி. அவர்கள் அவர்களுக்குரிய ஒரு சிறுபொழுதே உருவாக்கிக் கொள்ள முடியும். ஒரு அகவாழ்க்கையை திரட்டிக்கொள்ள முடியும். அவர்களின் நேரத்திலும் அகத்திலும் ஒரு சிறு பகுதியை அவர்கள் அதற்காக ஒதுக்கிக் கொள்ள முடியும். அதன் வழியாக அவர்கள் தங்களின் அடிமைத்தனத்தை முழுமையாக அடையாமல் இருக்க முடியும். தங்களை அடிமைப்படுத்தும் அமைப்பை நோக்கி ஒரு ரகசியப் புன்னகையை புரிய முடியும்.
செயல் செயல் என்று திரும்பத் திரும்ப நான் சொல்வது இந்த விடுதலையையே. செயல் என்று சொல்லும்போது நான் அதன் வழியாகப் பணம் ஈட்டுவதையோ, அதிகாரம் எய்துவதையோ அல்லது அடையாளத்தை நாடுவதையோ குறிக்கவில்லை. ஒருவர் தனக்கு இன்பமும் விடுதலையும் அளிக்கக்கூடிய ஒரு செயலை கணடடைந்து, அதை செய்வதனூடாகத் தன்னை முழுமைப்படுத்திக் கொள்ளமுடியும் என்று மட்டுமே சொல்கிறேன். தன் ஆத்மாவை முழுமையாக விற்பனை செய்வதிலிருந்து தன்னை தடுத்துக் கொள்ளமுடியும். ஒரே வாழ்க்கையின் பொருளற்ற சுழற்சியில் இருந்து ஒரு சிறு இடத்தை மீட்டுக்கொள்ள முடியும். தான் ஓர் அடிமை அல்ல என்று அவர் அதன்பின் தனக்குத்தானே சொல்லிக்கொள்ள முடியும். அந்த விடுதலைக்காகவே செயல் என்று ஒன்றை கண்டடைய வேண்டும் என்று சொல்கிறேன்.
(மேலும்)
கே.பழனிவேலு
கவிஞர், எழுத்தாளர், ஆய்வாளர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். கல்வியியல் தொடர்பான நூல்களையும், கோட்பாடு சார்ந்த ஆய்வு நூல்களையும் எழுதினார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இளம் அறிஞர் விருது பெற்றார்.
கே.பழனிவேலு
கே.பழனிவேலு – தமிழ் விக்கி
“வாழ்க்கைபற்றி பேசுவது என்னும் குற்றம்”
அன்புள்ள ஜெ
நீங்கள் எழுதிய ரமேஷ் பிரேதனின் அஞ்சலிக்குறிப்பு பற்றிய விவாதங்களைக் கண்டேன். அதில் ஒரு பகுதி உங்கள் மேல் தனிப்பட்ட காழ்ப்பு கொண்ட சில்லறை எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் என்றுமே ஒரு பொருட்படுத்தத்தக்க எழுத்தை உருவாக்கிவிட முடியாது. வாழ்க்கை முழுக்க அவர்களால் முகநூல் வம்புகளில்தான் ஈடுபட முடியும். அதிலும் இதேபோல ஏதாவது முக்கியமான ஆளுமைகளை இழிவுசெய்யும்போது அவர்களுக்கு எதிரான அரசியல்கும்பல் வந்து ஆதரவு தெரிவிக்கும். தங்களுக்கு வாசகர்கள் இருப்பதாக இவர்கள் ஒரு போலி ஆறுதலை அடைவார்கள். எஞ்சியவர்கள் உங்கள் மேல் தீராத காழ்ப்பு கொண்ட வழக்கமான கூட்டம். பெரியாரிஸ்டுகள் முதல் கம்யூனிஸ்டுகள், இந்துத்துவர்கள் என எல்லா தரப்பினரையும் எதிரிகளாக ஆக்கி வைத்திருக்கிறீர்கள்.
ஆனால் முக்கியமான இன்னொரு அம்சம் உண்டு. அதைச் சுட்டிக்காட்டவே இதை எழுதுகிறேன். நீங்கள் சுந்தர ராமசாமி பற்றி சு.ரா.நினைவின் நதியில் எழுதியபோதுகூட இதேபோல எதிர்ப்புகள் வந்தன. அப்போது சமூகவலைத்தளங்கள் இல்லை என்பதனால் அதெல்லாம் சிறுவட்டத்திற்குள் நின்றன. அதற்கான காரணம்தான் முக்கியமானது. இங்கே ஒருவர் மாண்டால் அவரைப்பற்றி மிகச்சம்பிரதாயமான, தேய்ந்துபோன சில சொற்றொடர்களைத்தான் சொல்லவேண்டும்.
அதை எப்படி வேண்டுமென்றாலும் புகழலாம். எந்த பொய்யை வேண்டுமென்றாலும் சொல்லலாம். எல்லாவகை சைக்கோபன்ஸிக்கும் இடமுண்டு. பகுத்தறிவு முற்றிப்போய் ‘திரும்பிவா தலைவா!’ என்று கதறலாம். அதெல்லாம் இயல்பாகத்தான் கொள்ளப்படும். ஆனால் உண்மையில் அவர் வாழ்ந்த விதத்தைச் சொல்லக்கூடாது. அவருடைய கஷ்டங்களைச் சொல்லக்கூடாது. அந்தக் கஷ்டங்களைக் கடந்து அவர் சாதனைகளைச் செய்ததைக்கூடச் சொல்லக்கூடாது. மறைந்தவரின் ரசனை, மறைந்தவருடனான உரையாடல்கள் எதையுமே சொல்லக்கூடாது.
ஏன் நம்மவர்கள் மிகமிகச் சம்பிரதாயமான விஷயங்களைப் பேசுகிறார்கள்? காரணம் இதுதான். எது சொன்னாலும் நம்மவர் புண்படுவார்கள். அவமானப்படுத்திவிட்டார், இழிவுபடுத்திவிட்டார் என்று பொங்குவார்கள். சுந்தர ராமசாமி மறைந்தபோது அவரைப்பற்றி எவ்வளவு அஞ்சலிக் கட்டுரைகள் வந்தன என்று ஒருமுறை எழுதியிருந்தீர்கள். எல்லாமே வெறும் வார்த்தைகள். அவருடன் பழகியபோது நிகழ்ந்த ஒரு அனுபவத்தைக்கூட எவரும் எழுதவில்லை. ஒரு நினைவைக்கூட பகிரவில்லை. ஜெயகாந்தனின் மறைவுக்குப்பின்னரும் அதேபோல மிகச்சாதாரணமான பொதுவான சொற்றொடர்கள்தான் சொல்லப்பட்டன.
எவரைப்பற்றியும் எதுவுமே சொல்லக்கூடாது என்பதுதான் தமிழ்மனநிலை. பொய்யான புகழ்மொழி தவிர எதைச்சொன்னாலும் அதனை அவமதிப்பாகவே நினைப்பார்கள். எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றி டி.ஜெ.எஸ்.ஜார்ஜின் நூலை நீங்கள் எழுதியபோதும் இதேபோல உணர்ச்சிக்கொந்தளிப்பு எழுந்தது ஞாபகமிருக்கிறது. தமிழில் நீங்கள் எவருடைய வாழ்க்கையைப் பற்றி எழுதினாலும் அவமதிப்பு என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் வேறு எவருமே எந்த எழுத்தாளர் பற்றியும் எதுவுமே எழுதியதில்லை. அத்தனை பேரைப் பற்றியும் நீங்கள் மட்டுமே எழுதியிருக்கிறீர்கள். தமிழில் காமராஜ், அண்ணாத்துரை, பெரியார், எம்.ஜி.ஆர், கருணாநிதி எவரைப் பற்றியும் ஒரு நல்ல வாழ்க்கை வரலாறு இல்லை. வெறும் புகழஞ்சலிகள் மட்டுமே உள்ளன.
நீங்களே இதைப்பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் உண்மையில் கேரளப்பின்னணியில் இருந்து வருகிறவர். நான் 26 ஆண்டுகள் கொல்லம், எர்ணாகுளம் பகுதிகளில் வங்கியில் வேலைபார்த்தவன். அங்கே இந்தவகையான அசட்டுத்தனமான சம்பிரதாயப்பேச்சு இல்லை. அஞ்சலிக்கூட்டத்திலேயே மறைந்தவரின் பலவீனங்களைப் பேசுவார்கள். மென்மையாகவும் நட்பாகவும் நையாண்டிகூட செய்வார்கள். ஈ.எம்.எஸ் மறைந்தபோது அஞ்சலிக்கூட்டத்தில் அவரைப்பற்றி அன்பான கேலியுடன் பேசியதைக் கேட்டிருக்கிறேன். இங்கே நினைத்தே பார்க்கமுடியாது.
இது ஏன் என்றால் இறந்தவர்கள் எல்லாம் தெய்வமாகிவிட்டார்கள் என்ற பழைய நம்பிக்கை இப்போதும் ஆழ்மனதில் வேறு வடிவங்களில் இருப்பதனால்தான். சுந்தர ராமசாமிக்கு நடிகை சரிதாவை பிடிக்கும் என்று சு.ரா.நினைவின் நதியில் நூலில் நீங்கள் எழுதினீர்கள். அதை சுந்தர ராமசாமிக்கு வேண்டியவர்கள் அவருக்கான அவமதிப்பு என்று கொந்தளித்ததைப் பற்றி ஒருமுறை சொன்னீர்கள். அது ஏன் என்றால் அவர் ‘தெய்வத்திரு’ ஆகிவிட்டார் என நினைப்பதனால்தான்.
தமிழ்மக்களின் இந்த மனநிலையை நீங்கள் உணரவில்லை. ஓர் அந்நியராகவே நிற்கிறீர்கள். ஆனால் அந்த தூரம்தான் உங்களுக்கான சுதந்திரம், தனித்தன்மை ஆகியவற்றை அளிக்கிறது.
நட்புடன்
ரா. கிருஷ்ணகுமார்
சியாட்டில் நூலறிமுக நிகழ்வு
அன்புள்ள ஆசிரியருக்கு
சியாட்டல் நகருக்கு உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். இங்கே நிகழவிருக்கிற Stories of the True (அறம்) நூலறிமுக நிகழ்வின் விவரங்களை கீழே கொடுத்துள்ளேன். போஸ்டரையும் இணைத்துள்ளேன், தயவு செய்து தளத்தில் பகிரவும்.
இந்த நிகழ்வின் போது புத்தகம் விற்பனைக்கு கிடைக்கும், உங்களிடம் கையெழுத்தும் பெற்றுக்கொள்ளலாம் என்பது ஏற்பாடு. ஏற்கனவே இந்த படைப்பை வாசித்தவர்கள் ஒரு புத்தகத்தை வாங்கி தகுதியான ஒரு அமெரிக்க இந்திய குழந்தைக்கு பரிசளிக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட பரிந்துரை.
நிகழ்வு நிரலில் கேள்வி பதில் நேரம் உண்டு, வாசக நண்பர்கள் உங்களுடன் சிறிய அளவில் உரையாடவும் நேரம் இருக்கும், ஆனால் இந்த நிகழ்வுக்கு வந்து புத்தகங்கள் வாங்குமளவுக்கு ஈடுபாடு கொண்ட நண்பர்களுக்கு உங்களிடம் கேட்க மேலதிக கேள்விகள் இருக்கலாம், அவர்களுக்காக ஒரு தனிப்பட்ட வாசகர் சந்திப்பை ஏற்பாடு செய்யலாம் என திட்டம். அதில் விருப்பமுள்ள நண்பர்கள் RSVP செய்துவிட்டு ஒரு WhatsApp செய்தியோ மின்னஞ்சலோ அனுப்பலாம். +1 425 445 7874 / shankar.pratap@gmail.com.
நாளும் நேரமும் : Saturday, October 18, 2025 7:00-8:30 PM (6:45க்கு அரங்கு தயாராக இருக்கும்)
முகவரி : 6504 20th Ave NE, Seattle, WA 98115 (புத்தகக்கடையில் போதுமான பார்க்கிங் வசதி உண்டு, அது நிரம்பினால் அருகே நெரிசலற்ற தெருக்கள் உள்ளன, அங்கேயும் வாகனங்கள் நிறுத்தலாம்)
வருகைப்பதிவு செய்ய்யவேண்டிய தளம் : https://www.thirdplacebooks.com/event/jeyamohan
(அந்த தளத்தில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் நேரடியாய் இங்கே பதிவு செய்யலாம் : https://www.eventbrite.com/e/jeyamohan-presents-stories-of-the-true-tickets-1689201299559)
வணக்கத்துடன்
சியாட்டல் நகர நண்பர்கள்
Who is accountable for the development of Northeast India?
உங்களுடைய காணொளி வழியாக தான் உங்களுடைய இணையதளத்தைப் பற்றி அறிந்து கொண்டேன். உங்களுடைய தத்துவ வகுப்புகளுக்கு வர வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. நான் வெள்ளிமலையில் நிகழும் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். அந்த இடம் அந்த கல்விச்சூழல் ஆகியவை எனக்கு மிகவும் பிடித்தமானவையாக இருந்தன. அங்கே வரும் நண்பர்களின் பொதுவான மனநிலை கற்பதற்கும் உரையாடுவதற்கு உரியதாக இருக்கிறது.
சூழல், கடிதம்
In your speech, you pointed out who kept the Northeast stagnant for fifty years and who fostered communalism in the region. You mentioned that the construction of an airport and a six-lane highway has led to some form of economic boom.
Who is accountable for the development of Northeast India?October 13, 2025
வெளியேறும் வழி
என்னுடைய காணொளிகளில் மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கும் ஒரு கரு என்பது ‘அருஞ்செயல்களை ஆற்றுதல்’ ‘செயல்களின் ஊடாக விடுதலை அடைதல்’ என்பதுதான். இதை இந்த நூற்றாண்டில் திரும்பத் திரும்பச் சொல்வதற்கான சில காரணங்கள் உள்ளன.
இரண்டு நூற்றாண்டு முன்பு வரை நாம் ஒவ்வொருவரும் நம் பிறப்பால், சூழலால் நமக்குரிய செயல்களுடன் இணைக்கப்பட்டிருந்தோம். ஒவ்வொருவரும் அவரவர் சாதிக்குரிய செயல்களைத்தான் செய்ய முடிந்தது. ஆகவே எதைச் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கே இடம் இல்லாமல் இருந்தது. ஒவ்வொருவருக்கும் அவர்களின் தொழிலும் இல்லறமும் மிகமிக இளமையிலேயே தொடங்கின. எவருக்கும் அவர்களின் வாழ்க்கை இன்னொரு வகையாக அமைந்திருக்கலாம் என்னும் எண்ணமே உருவாகவில்லை.
அது ஓர் அடிமைத்தனம். ஒருவர் ஒரு நிலப்பகுதிக்கு, ஓர் அரசுக்கு, ஒரு கிராமத்துக்கு, ஒரு சாதிக்கு, ஒரு குலத்துக்கு, ஒரு குடும்பத்திற்கு முற்றிலும் கட்டுப்பட்டவராக இருந்தார். அந்த நூற்றாண்டுக்கு அது தேவைப்பட்டிருக்கலாம். ஏனென்றால் அதற்கு முந்தைய யுகம் என்பது பழங்குடிக் காலம். பழங்குடிகளாலான நிலப்பரப்பு என்பது நில்லாது அலையும் புள்ளிகளால் ஆன ஒரு பரப்பு போல. ஒவ்வொரு பழங்குடியும் தங்கள் இயல்பில் தங்களுக்கு உகந்த செயல்களை செய்து கொண்டிருந்தன. இன்னொன்றை விலக்கின. ஒன்றோடொன்று பூசலிட்டுக் கொண்டிருந்தன. அந்த நிலையற்ற சமூகப் பெரும் பரப்பை உறைய வைத்து, நிலையான சமூகப் பரப்பாக ஆக்க வேண்டிய கட்டாயம் நிலவுடைமைச் சமூகத்தில் உருவாகி வந்தது.
நிலவுடைமைச் சமூக அமைப்பு ஒவ்வொன்றையும் அதன் அதன் இடத்தில் பொருத்தியது. அவை புனிதமானவை என்றும், மாற முடியாதவை என்றும், மாறக்கூடாதவை என்றும் வகுத்தது. மனிதர்கள் அதற்குள் சிக்கிக் கொண்டார்கள். அந்த அமைப்பின் நன்மைகளும் தீமைகளும் பல. நன்மை என்பது நிலையான ஒரு சமுதாயம் உருவாகியது என்பது. உற்பத்தி, வினியோகம் ஆகியவை நிலைகொண்டன. அரசுகள் உருவாயின. ராணுவம் உருவாகியது. நெறிகள் பிறந்தன. அறங்களும் உருவாயின.
அந்த அமைப்பின் அடிப்படை அலகான தனிமனிதன் ஒரு கருங்கல் கட்டிடத்தின் சுவரிலுள்ள கல் உறுதியாக பதிக்கப்பட்டவன். ஆகவே தனிமனிதர்கள் அலைக்கழிவுகள் இல்லாமல் வாழ்வின் மீளாச்சுழற்சியையே நாட்கள் எனக்கொண்டு வாழ்ந்தனர். அதன் தீமை என்பது ஒவ்வொருவரும் தங்கள் தனியுள்ளங்களை ரத்துசெய்து அந்த அமைப்பில் பொருந்தியாகவேண்டும் என்பது. தனித்தன்மை என்பதே அனுமதிக்கப்படவில்லை என்பது. மீறல்களின் விளைவு அழிவு என்பதாகவே இருந்தது அன்று.
ஆனால் ஒருவர் தனக்கான சொந்த தேர்வுகள், தேடல்கள் கொண்டவர் என்றால் அவர் அந்த அமைப்பை விட்டு உதறி மேலெழுந்து முன் செல்லவும் வாய்ப்பு இருந்தது. அவ்வாறு முன்சென்றவர்கள் துறந்தோர் என்று அறியப்பட்டார்கள். எல்லாக் காலகட்டத்திலும் அவ்வாறு பல லட்சம் பேர் தங்கள் சாதியை, குடியை, ஊரைத் துறந்து சென்று கொண்டிருந்தார்கள். இந்து மரபு அவ்வாறு துறந்து செல்வதை ஆன்மிகப்பயணமாக ஏற்றுக்கொண்டது. நம் குடிகளில் இல்லத்தையும் சாதியையும் ஊரையும் தொடர்ந்து காசிக்கு சென்றவர்கள், கயிலைக்கு சென்றவர்கள் எப்போதும் இருந்து கொண்டிருந்தார்கள்.
அதன் பின் பௌத்தம் துறவை நிறுவனப்படுத்தி பிறப்படிப்படையில் உருவாக்கப்பட்ட அடையாளங்களில் இருந்து விலகிச்செல்ல வழிகாட்டியது. அதன்பின் சமணமும் துறவை முன்னிறுத்தியது. நிலவுடைமைக்கால மனிதனுக்கு இருந்த முக்கியமான விடுதலை வழி என்பது துறவு. ஒவ்வொரு மனிதனையும் அந்த அமைப்பு முற்றிலும் கவ்விச் சிறை பிடித்துக் கொண்டிருந்தாலும் இப்படி ஒரு விடுதலைக்கான வழியையும் அது கொண்டிருந்தது. எந்த ஒரு சிறையும் ஒரு விடுதலை வழியையும் வைத்திருக்கும்.
முதலீட்டியம் (Capitalism) இங்கே உருவானபோது அது மனிதனை உற்பத்தி மற்றும் நுகர்வு ஆகியவற்றின் அடிப்படை அலகாக மட்டுமே பார்த்தது. அதாவது உழைப்புச் சந்தையில் ஒவ்வொரு மனிதனும் விற்பனைப் பொருளாக மட்டுமே இருக்க வேண்டும், நுகர்வுத்தளத்தில் வெறும் ஏற்போர் மட்டுமாகவே இருக்க வேண்டும் என வகுத்தது. அந்த இரு நிலைகளிலும் அவரிடம் தனக்கான நிபந்தனைகள் எதுவும் இருக்கலாகாது. சாதி, மதம், ஊர் போன்ற எந்த வகையான கட்டுப்பாடுகளுக்கும் எதிரானதாகவே முதலீட்டியம் உள்ளது. முதலீட்டியம் உருவாக்கும் விடுதலை என்பது இதுதான்.
சென்ற நூற்றாண்டில் நிலப்பிரபுத்துவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட நினைத்த ஒவ்வொரு எளிய அடித்தள மனிதனும் இரண்டு வழிகளில் ஒன்றையே தேர்ந்தெடுத்தான். ஒன்று தொழிலாளியாக ஆவது, இன்னொன்று ராணுவ வீரனாக ஆவது. அவை இரண்டும் இரண்டு வேறு வகையான சுரண்டல்களே என்றாலும் அவருடைய முந்தைய அடிமைத்தனத்திலிருந்து அவை பல வகையிலும் மேம்பட்டதாக இருந்தன. தொழிலாளர்கள் உரிமைகளைக் கோரி போராட முடிந்தது. கல்வி வழியாக தங்கள் வாரிசுகளை அடுத்த நிலைநோக்கிச் செலுத்தவும் முடிந்தது.
இவ்வாறாக இன்றைய மனிதன் உருவாகி வந்திருக்கிறான். இன்றைய மனிதன் ஓர் உழைப்பவன், ஒரு நுகர்வோன் மட்டுமே அதற்கு அப்பால் அவனுக்கு ஆளுமை என எதுவும் இல்லை. நேற்றைய நிலவுடைமைச் சமூகம் ஒவ்வொருவரையும் சாதிக்குள், குலத்திற்குள், குடும்பத்திற்குள், ஊருக்குள் கட்டிப் போட்டது என்றால் இன்றைய முதலீட்டியம் ஒவ்வொருவரையும் அது உருவாக்கி வைத்திருக்கும் உற்பத்தி-நுகர்வு என்ற சுழற்சிக்குள் கட்டிப் போடுகிறது. முந்தைய அமைப்பைவிட இது மேலானது என்பதில் ஐயமில்லை. இதில் பிறப்பு அடிப்படையில் எவரும் அறுதியாக வரையறுக்கப்பட்டு விடுவதில்லை. ஆயினும் இதில் உள்ள சிறைப்படல் என்பதை நாம் உணராமல் இருக்கிறோம்.
இன்று ஒவ்வொரு உழைப்பாளியும் ஒரு நுகர்வோராக இருப்பதன் பொருட்டு உழைக்கிறார். உழைத்தவற்றை நுகர்வுக்கே அளிக்கிறார். இது ஒன்றை ஒன்று நிரப்பும் ஒரு வட்டம். சிக்கிக்கொண்டால் சுழன்றுகொண்டே இருக்கவேண்டியதுதான். இதைப்பற்றி மார்க்ஸியர், இருத்தலியர் வெவ்வேறு வகையில் விரிவாகப் பேசியிருக்கிறார்கள். அதற்கான காரணங்களை ஆராய்ந்துள்ளனர். நான் அந்த விவாதங்களுக்குள் செல்லவில்லை.
இன்று நமது அன்றாட வாழ்க்கையிலே நாம் பார்க்கலாம் என்பதை மட்டும் முன்வைக்கிறேன். இன்று நாம் பெற்றுக் கொண்டிருக்கும் கல்வி என்பது இன்றிருக்கும் உற்பத்தி அமைப்பின் ஒரு பகுதியில் நம்மைப் பொருத்திக்கொண்டு, அதற்கான பங்களிப்பை வழங்கி, அதன் ஊதியத்தைப் பெற்றுக் கொள்வதற்காக நம்மைத் தயாரிக்கிறது. கூடவே நம்ம இன்றைய நுகர்வுக்கும் பழக்கி அதற்கான ஊதியத்தைப் பெற்றுக்கொள்பவராக மட்டுமே பயிற்றுவிக்கிறது. அவ்வாறாக வெறும் நுகர்வோனாக நம்மை மாற்றிக் கொள்ளவும் அது நம்மை பழக்கப்படுத்துகிறது.
எண்ணிப்பாருங்கள், ஒருவர் இன்று வாங்கும் ஊதியத்தில் பெரும்பகுதி அடிப்படைப் பொருட்கள் முதல் செல்பேசிகள், கார்கள், இல்லங்கள், துணிமணிகள் மற்றும் பொருள்களை வரை வாங்குவதற்குச் செலவிடப்படுகிறது. அந்த ஆடம்பரப் பொருட்களை உற்பத்தி செய்யும் அமைப்பின் ஒரு பகுதியாகவும் அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரைப்போன்றவர்கள் உற்பத்தி செய்ய அவரைப்போன்றவர்கள் நுகர லாபம் மட்டும் வேறெங்கோ செல்கிறது. அந்த லாபம் கோடீஸ்வரர்களை, அரசியலை உருவாக்குகிறது. அதிகாரத்தை உருவாக்குகிறது. அந்த அதிகாரம் அனைவரையும் கட்டுப்படுத்துகிறது.
இந்தச் சுழற்சியில் சிக்கிக்கொண்டதை உணரும் ஒருவனுக்கு ‘நான் செய்ய வேண்டியது என்ன!’ என்னும் பெரும் திகைப்பு உருவாவது இயல்புதான். ‘நான் இதற்காக மட்டுமே பிறந்தவன்தானா?’ என்ற தவிப்பு அவனுக்கு எழுகிறது. சென்றகால நிலவுடைமை அமைப்பின் வாழ்க்கைச்சூழலில் பிறந்த ஒருவனுக்கு ‘என் வாழ்க்கை இந்த உழைப்புக்காகத்தானா? நிலத்துடனும் குலத்துடனும் இணைந்துள்ள மீள முடியாத இந்தப் பொறியில்தான் நான் வாழ்ந்து மடிய வேண்டுமா?’ என்ற எண்ணம் ஏற்பட்டது. அவன் அவன் ஒரு கணத்தில் ஆடையைக் கிழித்து ஒரு துண்டை கோவணமாகக் கட்டிக்கொண்டு ஊரை விட்டு விலகிச் செல்ல முடிந்தது. துறவியோ பிட்சுவோ ஆக முடிந்தது. இன்று அதே கேள்வி மீண்டும் எழுகையில் அதற்கான வேறொரு பதிலைத் தேட வேண்டி இருக்கிறது.
இன்று அவ்வாறு துறந்து செல்பவர்கள் உண்டு. எழுபதுகளில் ஐரோப்பாவில் நவீன நுகர்வும் நவீன உழைப்பும் உருவாகத் தொடங்கி, அன்றைய மனிதனை அழுத்தியபோது ஒவ்வொரு தெருவிலும் அனைத்தையும் துறந்து வெளியேறியவர்கள் அமர்ந்திருந்தனர். இன்றும் அங்கே அவர்கள் அமர்ந்திருப்பதை பார்க்கிறேன். போதைப் பொருள் பயன்படுத்துகிறார்கள், உழைப்புக்குப் பதிலாக தெருவில் பட்டினி கிடந்து சாகவும் தயாராகிறார்கள். பாடியே வாழ முடிவெடுக்கிறார்கள். நிலையின்றி அலைந்து திரிகிறார்கள். அப்படி ஓர் உதிரிக் கூட்டத்தை நவீன முதலீட்டியம் உருவாக்கிக் கொண்டேதான் இருக்கிறது. அவர்களை நேற்றைய துறவிகளின் இன்றைய வடிவம் என்றால் ஒருவகையில் அது சரிதான்.
நேற்றைய துறவிகளுக்கு அந்த மதங்கள் சில கொள்கைகளையும் நெறிகளையும் உருவாக்கி அளித்தன. அவை அந்தச் சமுதாயத்தால் ஏற்கப்பட்டன. ஒருவன் தனக்கு உணவு மட்டுமே போதும் என்று சொல்வான் எனில் அதை அளித்தாக வேண்டும் என்று இந்திய சமுதாயம் நம்பியது. ஆகவே இங்கு பிச்சைக்காரர்கள் எப்படியோ பேணப்பட்டார்கள். துறந்து சென்றவர்கள் எவரும் பட்டினியால் இறக்க நேரிடவில்லை. இந்தியா பெரும்பஞ்சத்தில் அழிந்து கொண்டிருந்த போது கூட இங்கே பிச்சைக்காரர்கள் எவரும் பட்டினியால் இறக்கவில்லை என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால் இன்றைய சூழலில் இந்தத் துறவு ஏற்கப்படுவதில்லை. அது இன்று மனிதர்கள் வெறும் குப்பைகளாக ஆவதாகவே பொருள்படுகிறது.
இந்தச் சூழலில் மரபான துறவு என்பது ஒருவகையில் பொருத்தமற்றதாக உள்ளது. அந்த துறவை மேற்கொள்வது என்பது இன்னொரு வகையான அமைப்புக்குள் சென்று சிக்கிக் கொள்வதாகவும் பல சமயம் மாறுகிறது. அப்படியென்றால் இன்று இருக்கும் ‘வெளியேறும் வழி’ என்ன? இந்த சுழற்சியில் இருந்து வெளியேற விரும்புபவர் என்ன செய்ய முடியும்?
(மேலும்)
விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 5 – அழகிய மணவாளன்
ரமேஷ் பிரேதன் நினைவாக 2025 ஆண்டில் வழங்கப்படும் விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது அழகியமணவாளனுக்கு வழங்கப்படுகிறது. அழகிய மணவாளன் மொழிபெயர்ப்பாளராகவும், செவ்வியல்கலை ஆர்வலராகவும் குறிப்பிடும்படி பணியாற்றி வருபவர்.
ரூ ஒருலட்சமும் சிற்பமும் அடங்கியது இந்த விருது.
அழகிய மணவாளன்
அழகிய மணவாளன் – தமிழ் விக்கிஅழகியமணவாளன் நூல்கள்
/* inline tdc_css att */.tdi_1{padding-top:12px !important;padding-bottom:8px !important;border-color:#eaeaea !important;border-style:solid !important;border-width: 1px 0px 1px 0px !important;}/* custom css */.tdi_1 .td_block_inner{width: 100%;
margin-left: -20px;
margin-right: -20px;
}.tdi_1:after{
content: '';
display: table;
clear: both;
}.tdi_1 .td-image-wrap{
padding-bottom: 100%;
}.tdi_1 .entry-thumb{
background-position: center 50%;
}.tdi_1 .td-image-container{
flex: 0 0 30%;
width: 30%;
display: block; order: 0;
}.ie10 .tdi_1 .td-image-container,
.ie11 .tdi_1 .td-image-container{
flex: 0 0 auto;
}.tdi_1 .td-module-container{
flex-direction: row;
border-color: #eaeaea !important;
}.ie10 .tdi_1 .td-module-meta-info,
.ie11 .tdi_1 .td-module-meta-info{
flex: 1;
}.tdi_1 .td-module-meta-info{
padding: 1% 5%;
border-color: #eaeaea;
}.tdi_1 .td_module_wrap{
padding-left: 20px;
padding-right: 20px;
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
border-color: #eaeaea;
}.tdi_1 .entry-thumb,
.tdi_1 .entry-thumb:before,
.tdi_1 .entry-thumb:after{
border-radius: 500px;
}.tdi_1 .td-post-vid-time{
display: block;
}.tdi_1 .td-post-category:not(.td-post-extra-category){
display: none;
}.tdi_1 .td-author-photo .avatar{
width: 20px;
height: 20px;
margin-right: 6px;
border-radius: 50%;
}.tdi_1 .td-excerpt{
display: none;
column-count: 1;
column-gap: 48px;
font-size:= !important;
}.tdi_1 .td-audio-player{
opacity: 1;
visibility: visible;
height: auto;
font-size: 13px;
}.tdi_1 .td-read-more{
display: none;
}.tdi_1 .td-author-date{
display: none;
}.tdi_1 .td-post-author-name{
display: none;
}.tdi_1 .td-post-date,
.tdi_1 .td-post-author-name span{
display: none;
}.tdi_1 .entry-review-stars{
display: none;
}.tdi_1 .td-icon-star,
.tdi_1 .td-icon-star-empty,
.tdi_1 .td-icon-star-half{
font-size: 15px;
}.tdi_1 .td-module-comments{
display: none;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0;
padding-bottom: 0;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:21px !important;line-height:1.2 !important;
}html:not([class*='ie']) .tdi_1 .td-module-container:hover .entry-thumb:before{
opacity: 0;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}/* landscape */@media (min-width: 1019px) and (max-width: 1140px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:20px !important;line-height:1.2 !important;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}/* portrait */@media (min-width: 768px) and (max-width: 1018px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:17px !important;line-height:1.2 !important;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}/* phone */@media (max-width: 767px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}var block_tdi_1 = new tdBlock();block_tdi_1.id = "tdi_1";block_tdi_1.atts = '{"modules_on_row":"","limit":"10","hide_audio":"yes","show_btn":"none","show_excerpt":"none","show_review":"none","show_com":"none","show_date":"none","show_author":"none","image_floated":"float_left","sort":"oldest_posts","category_id":"11301","image_width":"30","meta_padding":"1% 5%","modules_category":"","modules_category_margin":"","custom_title":"\u0bb5\u0bbf\u0bb7\u0bcd\u0ba3\u0bc1\u0baa\u0bc1\u0bb0\u0bae\u0bcd \u0bb0\u0bae\u0bc7\u0bb7\u0bcd \u0baa\u0bbf\u0bb0\u0bc7\u0ba4\u0ba9\u0bcd \u0ba8\u0bbf\u0ba9\u0bc8\u0bb5\u0bc1 \u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba4\u0bc1 2025 ","custom_url":"\/tag\/\u0bb0\u0bae\u0bc7\u0bb7\u0bcd-\u0baa\u0bbf\u0bb0\u0bc7\u0ba4\u0ba9\u0bcd-\u0ba8\u0bbf\u0ba9\u0bc8\u0bb5\u0bc1-\u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba4\u0bc1\/","post_ids":"-223403","tdc_css":"eyJhbGwiOnsiYm9yZGVyLXRvcC13aWR0aCI6IjEiLCJib3JkZXItYm90dG9tLXdpZHRoIjoiMSIsInBhZGRpbmctdG9wIjoiMTIiLCJwYWRkaW5nLWJvdHRvbSI6IjgiLCJib3JkZXItY29sb3IiOiIjZWFlYWVhIiwiZGlzcGxheSI6IiJ9fQ==","show_cat":"none","excerpt_col":"","m16_el":"20","ajax_pagination":"load_more","f_title_font_size":"eyJhbGwiOiIyMSIsImxhbmRzY2FwZSI6IjIwIiwicG9ydHJhaXQiOiIxNyJ9","f_title_font_line_height":"1.2","f_ex_font_size":"=","f_ex_font_line_height":"","image_height":"100","hide_image":"","modules_gap":"","meta_info_horiz":"","container_width":"100","image_radius":"500","tag_slug":"\u0bb0\u0bae\u0bc7\u0bb7\u0bcd-\u0baa\u0bbf\u0bb0\u0bc7\u0ba4\u0ba9\u0bcd-\u0ba8\u0bbf\u0ba9\u0bc8\u0bb5\u0bc1-\u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba4\u0bc1","block_type":"td_flex_block_1","separator":"","block_template_id":"","title_tag":"","mc1_tl":"","mc1_title_tag":"","mc1_el":"","category_ids":"","autors_id":"","installed_post_types":"","offset":"","show_modified_date":"","time_ago":"","time_ago_add_txt":"ago","time_ago_txt_pos":"","el_class":"","td_ajax_filter_type":"","td_ajax_filter_ids":"","td_filter_default_txt":"All","td_ajax_preloading":"","m_padding":"","all_modules_space":"36","modules_border_size":"","modules_border_style":"","modules_border_color":"#eaeaea","modules_border_radius":"","modules_divider":"","modules_divider_color":"#eaeaea","h_effect":"","image_size":"","image_alignment":"50","video_icon":"","video_popup":"yes","video_rec":"","spot_header":"","video_rec_title":"","video_rec_color":"","video_rec_disable":"","autoplay_vid":"yes","show_vid_t":"block","vid_t_margin":"","vid_t_padding":"","video_title_color":"","video_title_color_h":"","video_bg":"","video_overlay":"","vid_t_color":"","vid_t_bg_color":"","f_vid_title_font_header":"","f_vid_title_font_title":"Video pop-up article title","f_vid_title_font_settings":"","f_vid_title_font_family":"","f_vid_title_font_size":"","f_vid_title_font_line_height":"","f_vid_title_font_style":"","f_vid_title_font_weight":"","f_vid_title_font_transform":"","f_vid_title_font_spacing":"","f_vid_title_":"","f_vid_time_font_title":"Video duration text","f_vid_time_font_settings":"","f_vid_time_font_family":"","f_vid_time_font_size":"","f_vid_time_font_line_height":"","f_vid_time_font_style":"","f_vid_time_font_weight":"","f_vid_time_font_transform":"","f_vid_time_font_spacing":"","f_vid_time_":"","meta_info_align":"","meta_width":"","meta_margin":"","meta_space":"","art_title":"","art_btn":"","meta_info_border_size":"","meta_info_border_style":"","meta_info_border_color":"#eaeaea","meta_info_border_radius":"","modules_category_padding":"","modules_cat_border":"","modules_category_radius":"0","modules_extra_cat":"","author_photo":"","author_photo_size":"","author_photo_space":"","author_photo_radius":"","review_space":"","review_size":"2.5","review_distance":"","art_excerpt":"","excerpt_gap":"","excerpt_middle":"","excerpt_inline":"","show_audio":"block","art_audio":"","art_audio_size":"1.5","btn_title":"","btn_margin":"","btn_padding":"","btn_border_width":"","btn_radius":"","pag_space":"","pag_padding":"","pag_border_width":"","pag_border_radius":"","prev_tdicon":"","next_tdicon":"","pag_icons_size":"","f_header_font_header":"","f_header_font_title":"Block header","f_header_font_settings":"","f_header_font_family":"","f_header_font_size":"","f_header_font_line_height":"","f_header_font_style":"","f_header_font_weight":"","f_header_font_transform":"","f_header_font_spacing":"","f_header_":"","f_ajax_font_title":"Ajax categories","f_ajax_font_settings":"","f_ajax_font_family":"","f_ajax_font_size":"","f_ajax_font_line_height":"","f_ajax_font_style":"","f_ajax_font_weight":"","f_ajax_font_transform":"","f_ajax_font_spacing":"","f_ajax_":"","f_more_font_title":"Load more button","f_more_font_settings":"","f_more_font_family":"","f_more_font_size":"","f_more_font_line_height":"","f_more_font_style":"","f_more_font_weight":"","f_more_font_transform":"","f_more_font_spacing":"","f_more_":"","f_title_font_header":"","f_title_font_title":"Article title","f_title_font_settings":"","f_title_font_family":"","f_title_font_style":"","f_title_font_weight":"","f_title_font_transform":"","f_title_font_spacing":"","f_title_":"","f_cat_font_title":"Article category tag","f_cat_font_settings":"","f_cat_font_family":"","f_cat_font_size":"","f_cat_font_line_height":"","f_cat_font_style":"","f_cat_font_weight":"","f_cat_font_transform":"","f_cat_font_spacing":"","f_cat_":"","f_meta_font_title":"Article meta info","f_meta_font_settings":"","f_meta_font_family":"","f_meta_font_size":"","f_meta_font_line_height":"","f_meta_font_style":"","f_meta_font_weight":"","f_meta_font_transform":"","f_meta_font_spacing":"","f_meta_":"","f_ex_font_title":"Article excerpt","f_ex_font_settings":"","f_ex_font_family":"","f_ex_font_style":"","f_ex_font_weight":"","f_ex_font_transform":"","f_ex_font_spacing":"","f_ex_":"","f_btn_font_title":"Article read more button","f_btn_font_settings":"","f_btn_font_family":"","f_btn_font_size":"","f_btn_font_line_height":"","f_btn_font_style":"","f_btn_font_weight":"","f_btn_font_transform":"","f_btn_font_spacing":"","f_btn_":"","mix_color":"","mix_type":"","fe_brightness":"1","fe_contrast":"1","fe_saturate":"1","mix_color_h":"","mix_type_h":"","fe_brightness_h":"1","fe_contrast_h":"1","fe_saturate_h":"1","m_bg":"","color_overlay":"","shadow_shadow_header":"","shadow_shadow_title":"Module Shadow","shadow_shadow_size":"","shadow_shadow_offset_horizontal":"","shadow_shadow_offset_vertical":"","shadow_shadow_spread":"","shadow_shadow_color":"","title_txt":"","title_txt_hover":"","all_underline_height":"","all_underline_color":"","cat_bg":"","cat_bg_hover":"","cat_txt":"","cat_txt_hover":"","cat_border":"","cat_border_hover":"","meta_bg":"","author_txt":"","author_txt_hover":"","date_txt":"","ex_txt":"","com_bg":"","com_txt":"","rev_txt":"","audio_btn_color":"","audio_time_color":"","audio_bar_color":"","audio_bar_curr_color":"","shadow_m_shadow_header":"","shadow_m_shadow_title":"Meta info shadow","shadow_m_shadow_size":"","shadow_m_shadow_offset_horizontal":"","shadow_m_shadow_offset_vertical":"","shadow_m_shadow_spread":"","shadow_m_shadow_color":"","btn_bg":"","btn_bg_hover":"","btn_txt":"","btn_txt_hover":"","btn_border":"","btn_border_hover":"","pag_text":"","pag_h_text":"","pag_bg":"","pag_h_bg":"","pag_border":"","pag_h_border":"","ajax_pagination_infinite_stop":"","css":"","td_column_number":1,"header_color":"","color_preset":"","border_top":"","class":"tdi_1","tdc_css_class":"tdi_1","tdc_css_class_style":"tdi_1_rand_style"}';block_tdi_1.td_column_number = "1";block_tdi_1.block_type = "td_flex_block_1";block_tdi_1.post_count = "4";block_tdi_1.found_posts = "4";block_tdi_1.header_color = "";block_tdi_1.ajax_pagination_infinite_stop = "";block_tdi_1.max_num_pages = "1";tdBlocksArray.push(block_tdi_1);விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது 2025
விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 1 – தேவி லிங்கம்
விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 2 – சஜு
விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 3 – செல்வகுமார் பேச்சிமுத்து
விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 4 – அசோக் ராம்ராஜ்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

