“Stories of the True” நூலறிமுக விழா அழைப்பு – டாலஸ்
அமெரிக்காவின் முன்னணி பதிப்பகமான FSG வெளியிடும் “Stories of the True” நூலறிமுக விழா ஒன்று டாலஸ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புகழ்பெற்ற Barnes & Noble புத்தகக் கடையில் நடக்கும் இந்த விழாவில் கலந்துகொள்ள வரும் உங்களைச் சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறோம்.
நாள்: அக்டோபர் 22 2025, புதன்கிழமை
நேரம்: மாலை 6 மணி முதல் 8 மணி வரை
இடம்: Barnes & Noble, 5301 Beltline Road Suite 118, Dallas, TX 75254
ALTA போன்ற குறிப்பிடத்தக்க குழுமத்தின் விருதுக்கான இறுதி பட்டியலில் இடம் பெற்ற, இந்தியாவில் புகழ்பெற்ற ‘அறம்‘ நூலின் அமெரிக்க ஆங்கிலப் பதிப்பை வாங்கவும், ஆசிரியரை சந்திக்கவும், சிறிய உரையாடலுக்கான வாய்ப்பும் உள்ள இந்த நிகழ்வுக்கு வாசக நண்பர்களை அன்புடன் அழைக்கிறோம்.
நம் தமிழ்ச் சூழலையும், தமிழ் இலக்கியத்தையும் அமெரிக்காவில் படிக்கும் அடுத்த தலைமுறைக்கோ அல்லது அமெரிக்க நண்பர்களுக்கோ அறிமுகம் செய்ய சரியான தேர்வாகிய இந்தப் புத்தகத்தை ஆசிரியரின் கையொப்பத்துடன் பெற்றுக்கொள்ள கிடைக்கும் நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
நிகழ்வு குறித்து Barnes & Noble தளத்தில் : https://stores.barnesandnoble.com/event/9780062196180-0
நிகழ்வில் கலந்துகொள்ள முன்பதிவு எதுவும் தேவையில்லை. புத்தகக் கடையில் தேவைக்கதிகமாகவே இலவச பார்க்கிங் வசதியும் இருக்கிறது.
மேலும் தொடர்புக்கு: vishnupuramusa@gmail.com / +1 972-822-9639
அன்புடன்,
டெக்ஸஸ் நண்பர்கள்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

