Jeyamohan's Blog, page 24
September 19, 2025
ரமேஷ், தனிவாழ்க்கை, இன்னொரு ஒரு கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
சில ஆண்டுகளுக்கு முன்பு விமலாதித்த மாமல்லன் ரமேஷ் பிரேதனுக்கு நிதிச்சேகரிப்பு ஒன்றை நடத்தினார். ஆனால் அந்த நிதியெல்லாம் பிரேமா என்பவருக்குச் செல்கிறது என்றும் பிரேமாவுடன் ரமேஷுக்கு தொடர்பு உள்ளது என்றுமெல்லாம் விரிவாக எழுதி, ரமேஷை சாக்கடை என்றெல்லாம் வசைபாடினார். அந்தக் கட்டுரைகள்தான் இப்போது நாம் தேடும்போது உடனடியாகக் கிடைக்கின்றன. (வசைகளை எழுதி அவற்றை பிரபலப்படுத்துவதில் மாமல்லன் ஒரு நிபுணர். அவருடைய ஒரே இலக்கியப்பங்களிப்பும் அதுதான் என நினைக்கிறேன்). நீங்கள் ரமேஷுக்கு அளித்த பணமும் அப்படி வீணடிக்கப்பட்டது என்று எழுதியிருந்தார். நான் இந்த விஷயத்தில் உங்களுடைய எதிர்வினையை அறிய விரும்புகிறேன்.
ராம.சங்கரநாராயணன்
   
அன்புள்ள சங்கரநாராயணன்,
ரமேஷ் பிரேதனுக்கு விருது அறிவிக்கப்பட்டபின் எந்த அளவுக்கு வாழ்த்துக்கடிதங்கள் வந்தனவோ அதைவிட கூடுதலாகவே வம்புவிசாரிப்புகளும் வந்தன. ஆனால் ஒன்றும் செய்வதற்கில்லை. அவர் இங்கே உத்தேசித்ததே நம் சமூகமனதிலும், ஒழுக்கவியலிலும் ஒரு நிலைகுலைவைத்தான். அந்த நிலைகுலைவு அவருடைய படைப்புகளுக்குள் செல்வதற்கான ஓர் அழைப்பு, அவரை புரிந்துகொள்வதற்கான ஒரு தொடக்கம். ஆகவே அது நல்லதுதான்.
பொதுவாக இன்னொருவர் வாழ்வை விசாரிப்பது அநாகரீகம். ஓர் உதவியை நிபந்தனையுடன் செய்வது அராஜகம். இன்னொருவர் வாழ்வின்மேல் நிபந்தனை விதிக்க எவருக்கும் உரிமையில்லை.
ரமேஷ் அவர்களுக்கும் பிரேமா அவர்களுக்குமான நட்பு பற்றி நான் நேரில் அவரிடம் கேட்டு அறிந்தேன். அவர் ரமேஷின் பள்ளித் தோழி. அவர் பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாக ஆனபின்னர்தான் பிரேமா ரமேஷை மீண்டும் சந்திக்கிறார். பத்தாண்டுகளாக ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் ரமேஷை வந்து பார்த்து, உடல்தூய்மை செய்து, அறையைச் சீரமைத்து கவனித்துக்கொள்கிறார். ரமேஷ் எடைமிக்கவர். அப்பணிவிடைகளை செய்வது எளிதல்ல.
நமக்கே தெரியும், இன்று குடும்பங்களில்கூட நோயுற்றவர்களை நீண்டகாலம் இப்படி எவரும் கவனித்துக்கொள்வதில்லை. இன்னொருவருக்கு எவரும் பொறுப்பேற்றுக் கொள்வதில்லை. பல லட்சரூபாய் ஊதியமாக அளித்தால்கூட இதற்கு இன்று ஆள் கிடைப்பது அரிதினும் அரிது. மனிதர்களுக்கிடையே மிகமிக அரிதாக உருவாகும் நட்பு இது. முன்பு நகுலனுக்கு மட்டுமே அத்தகைய ஒரு தூய நட்பு அமைந்தது. அதை மிக எளிதாகக் கொச்சைப்படுத்தும் மலின உள்ளங்களை நவீன இலக்கிய வம்புச்சூழல் உருவாக்கியுள்ளது.
பிரேமாவுக்கு தமிழிலக்கிய உலகம் கடன்பட்டிருக்கிறது. நகுலனை கவனித்துக்கொண்ட பிறுத்தா அம்மையாருக்குக் கடன்பட்டிருப்பதுபோல. விஷ்ணுபுரம் விழாவில் அவரையும் மேடையேற்றி ஒரு மலர்ச்செண்டு அளிக்கவேண்டும் என்பது எங்கள் விருப்பம். மகத்தானவை சில இங்கே நிகழும் என்பதை நமக்கு நாமே உறுதிசெய்து கொள்வதற்காகவும்தான்.
ஜெ
பாண்டிச்சேரியில்… ரமேஷ் ஒரு கடிதம்உடல்நலிந்த நிலையில் இருக்கும் ரமேஷ் பிரேதனுக்கு தனிப்பட்ட முறையில் உதவிசெய்ய விரும்புபவர்கள் செய்யலாம்.
RAMESH . MS.B. A/C. No. 32821202848STATE BANK OF INDIAMUTHIALPET BRANCHIFSC CODE: SBIN0015420நம் பேச்சுக்கள் ஏன் இப்படி இருக்கின்றன?
இன்றைய சூழலில் கோர்வையாக பேசும் ஒருவரை காண்பதென்பதே அரிதினும் அரிதாகவே உள்ளது. காரணம் பெரும்பான்மையோர் யாரும் வாசிப்பதில்லை. அப்படி வாசிப்பு இல்லாத ஒருவரிடம் அதிக நேரம் பேசுவது சலிப்பை ஏற்படுத்துகிறது. நண்பர்கள், சுற்றத்தார் ஆகியோரிடம் பேசும்போது எளிய நகைச்சுவைக்கு அப்பால் அங்கு அறிவாந்த உரையாடலே நிகழ்வதில்லை. அன்றாட அரசியல், சினிமா, உணவு பழக்கங்கள் ஆகியவையே மிகுதி. அதற்கும் அப்பால் நமக்கான ஒரு அறிவாந்த சுற்றத்தை அமைக்காவிடில் காலப்போக்கில் நாமும் சாமானியர்களாகிவிடுவோம்.
நம் பேச்சுக்கள் ஏன் இப்படி இருக்கின்றன?
But the applications I got mostly contained three or four simple lines. Some men applied through WhatsApp messages, without any detail. One application even had no name on it. When I asked about the name, he said that he thought that there was a number on that message and I could ask him his name if needed. Very strange.
Our youth, their mentality…September 18, 2025
இந்தியா மீதான அலட்சியம், சல்மான் ருஷ்தியின் விக்டரி சிட்டி.
மலையாள எழுத்தாளர் பி கே பாலகிருஷ்ணன் ஒரு பேட்டியில் சொன்ன வரி சட்டென்று இந்த பின்னிரவில் நினைவுக்கு வந்தது. ஒரு படைப்பை படித்து முடித்த கணம் அந்த மேஜை எப்படி இருக்கிறது என்பது எப்படியோ அந்த படைப்பு உருவாக்கும் மனநிலையுடன் சம்பந்தப்பட்டது. சல்மான் ருஷ்தியின் Victory City நாவலைப் படித்து முடித்தவுடன் என்னுடைய மேஜையை ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அருண்மொழி ஊரில் இல்லை. அவள் வீட்டில் இல்லாத போது வீடு எப்படி இருக்குமோ அப்படித்தான் மேஜை இருக்கிறது. அதாவது ஒட்டுமொத்தமாக ஒரு திறந்த குப்பைக் கூடை. அதன் நடுவே இந்தப் புத்தகம். மிக அழகாக தயாரிக்கப்பட்ட புத்தகம் பற்றி எனக்கு சாதகமாக ஏதேனும் சொல்வதற்கு இருக்கிறது என்றால் முதன்மையாக அது இது மட்டும்தான்.
இந்த நாவலை இப்படி சொல்லலாம், நான் இத்தாலிக்கு அல்லது ஸ்பெயினுக்குச் அங்கிருக்கும் பண்பாட்டை பற்றி அங்கு இருக்கும் நூல்களில் ஏதேனும் ஒன்றில் இருந்து சில செய்திகளை மேலோட்டமாகத் திரட்டி கொண்டு, அந்தத் தரவுகளைக் கொண்டு என்னுடைய இந்திய மனநிலையை ஒட்டி, என் இந்திய பொதுச்சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாவ்லை எழுதினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இந்த நாவல். இந்நாவலில் முற்றிலும் விடுபடுவது என்னவென்றால் ‘இந்தியத் தன்மை’ அல்லது ‘அசல் தன்மை’. இந்நாவல் இந்தியாவின் வரலாறு பற்றி, அல்லது இந்தியப்பண்பாடு பற்றி எந்த நுண்பார்வையையும் கொண்டிருக்கவில்லை. இந்தியக்களத்தை முன்வைத்து மானுடம் சார்ந்த எந்த அடிப்படைக் கேள்வியையும் எழுப்பிக்கொள்ளவில்லை. ஆகவே இது ஓர் எளிய புனைவு விளையாட்டாகவே எஞ்சுகிறது. காலாவதியாகிப்போன ஒரு விளையாட்டு.
சல்மான் ருஷ்டியின் இந்த நாவல் விஜயநகரப் பேரரசின் எழுச்சி- வீழ்ச்சியை குறித்த ஏதோ ஒரு சாதாரணமான புத்தகத்தை மட்டுமே சார்ந்து எழுதப்பட்டது. ஆகவே மிகமேலோட்டமான சில வரலாற்று நிகழ்வுகளை வேறொருவகையில் இது நகலெடுக்கிறது. அதன் கற்பனை என்பது லத்தீன் அமெரிக்கா மாய யதார்த்தவாதப் புனைவுகளைப் போலி செய்து அடையப்பட்டது. ருஷ்தியின் ஆங்கில விளையாட்டுத் தன்மை இந்த நூலின் நடையை சுவாரசியமாக வாசிக்கச் செய்கிறது. வீட்டில் எவருமில்லாததனால் இரண்டு நாட்களில் படித்து முடித்த நாவல் இது. இந்த ‘படிக்கவைக்கும் தன்மை’ என்பது தான் இந்நாவலின் ஒரே தனிச்சிறப்பு என்று நினைக்கிறேன். மிக விரைவான வாசிப்பு அனுபவத்தைத் தருவது ருஷ்தியின் இயல்பான ஒழுக்கு கொண்ட மொழிவிளையாட்டு.
The first circle of hell was right there in the council chamber, where Bukka Raya I was plunged in to the inferno of impossible choices – to support his wife and outlaw his children, or to protect the little princes and alienate Pampa Kampana ,may be permanently- while all around him were the members of the council, looking his direction trying to decide which way they would jumb after he had made his unhappy leap.
(இந்த வகையான் சொற்சுழற்சி ஆங்கிலத்தை அழகாக ஆக்குவது. இங்கே எவரேனும் இதை தமிழாக்கம் செய்கிறேன் என்று ஆரம்பித்து, இந்த மூலச் சொற்றொடர் அமைப்பை தமிழுக்கு அப்படியே மாற்ற தொடங்கினால் இது புதிர்ப்பாதை விளையாட்டாக மாறிவிடும். ஏனென்றால் தமிழின் எழுவாய் பயனிலை அமைப்பும் கூட்டுச்சொற்றொடர் அமைப்பும் ஆங்கிலத்தில் இருந்து முற்றாக வேறுபட்டவை. இந்தப் புரிதலற்றவர்கள் ஆங்கிலத்தில் எளிமையாக உள்ள கூட்டுச்சொற்றொடர்களே அப்படியே ‘தமிழ்ப்பெயர்த்து’ வைக்கிறார்கள். ஆங்கிலத்தில் படிக்கும் பழக்கம் இல்லாத உள்ளூர் எளிய வாசகர்கள் அந்த சொற்றொடர்ச் சிக்கல்தான் உயர் இலக்கியம் போலிருக்கிறது என்று பரவசம் அடைந்து, அதேபோல தமிழில் சொற்குதறல்களாகவே எழுதும் அபத்தம் இங்கே ஓர் இலக்கிய வகைமையாகவே ஆகியுள்ளது.
அவர்கள் இவ்வாறு இதை ‘தமிழில்’ வாசிக்கலாம். ‘நரகத்தின் முதல் வட்டம் கவுன்சில் அறையில் இருந்தது, அங்கு புக்க ராயன் I சாத்தியமற்ற தேர்வுகளின் நரகத்தில் மூழ்கடிக்கப்பட்டார் – அவரது மனைவியை ஆதரிப்பது மற்றும் அவரது குழந்தைகளை சட்டவிரோதமாக்குவது, அல்லது சிறிய இளவரசர்களைப் பாதுகாப்பது மற்றும் பம்பா கம்பனாவை நிரந்தரமாக அந்நியப்படுத்துவது – அவரைச் சுற்றிலும் கவுன்சில் உறுப்பினர்கள் அவரது திசையைப் பார்த்துக் கொண்டிருந்தனர், அவர் தனது மகிழ்ச்சியற்ற பாய்ச்சலைச் செய்த பிறகு அவர்கள் எந்த வழியில் குதிக்க வேண்டும் என்று முடிவு செய்ய முயன்றனர்.’ (கூகிள்).உண்மையில் தமிழில் வெளிவந்துள்ள பல மொழியாக்கங்களை விட இந்த கூகிளாக்கம் பல மடங்கு மேல்.
*
சல்மான் ருஷ்டியின் இந்த நூலில் உள்ள மாய யதார்த்தவாதத்தன்மைதான் இந்த நூலுக்கு எந்த வகையிலும் அசல் தன்மையை அளிக்காமல் இதை ஓர் எரிச்சல் ஊட்டும் அனுபவமாக ஆக்குகிறது. மாய யதார்த்த வாதம் என்பது ஒரு குறிப்பிட்ட அழகியல்முறை. அது லத்தீன் அமெரிக்காவுக்குச் சொந்தமானது. அதற்கு அவர்களுக்கு என சில பண்பாட்டு வேர்கள் உள்ளன.ஒன்று, அங்கே உள்ள பழங்குடிக்கதைகள், மற்றும் நம்பிக்கைகள். ஏற்கனவே ஃபாக்னர் போன்றவர்கள் அதையொட்டிய நுணுக்கமான புனைவுகளை எழுதிவிட்டனர். இப்போது வாசிக்கையில் அமெரிக்க யதார்த்தத்தை கறாரான மொழியில் எழுதிய ஜாக் லண்டனிலேயே லத்தீன் அமெரிக்க எழுத்தின் தொடக்கங்களைக் காணமுடிகிறது.
இரண்டு ஐரோப்பிய மாலுமிக்கதைகள். ஐரோப்பியக் கடலோடிகளின் நவீனத்தொன்மங்களுக்கு ஐரோப்பிய இலக்கியத்தில் ஒரு நீண்ட வரலாறு உண்டு. முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பியர்கள் உலகம் எங்கும் கடற்பயணம் செய்து வருகிறார்கள். அவர்கள் சென்ற கீழைநாடுகள் ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நிலஙகளை பற்றி அவர்களுக்கு இருந்த அறிவு மிகக் குறைவானது. அந்த நாடுகளின் அனுபவங்களை அவர்கள் தங்கள் ஐரோப்பிய உள்ளத்தைக் கொண்டு ‘புரிந்து கொள்ள’ முயன்றபோது உருவான மாயங்கள் அவை.ஐரோப்பாவில் ஒரு காலகட்டத்தில் மாலுமிக் கதைகள் பல வகையான புனைவுகளாக பெரும் புகழ் பெற்றிருந்தன. சாகசக் கதைகள், சிறுவர் கதைகள் அவ்வரிசையில் வரும். அதன் தொடக்கங்களை கலிவரின் பயணங்களிலோ, ராபின்ஸ் குரூஸோவின் சாகசங்களிலோ ,டிரஷர் ஐலேண்ட் போன்ற சாகசங்களிலோ தேடிச் செல்லமுடியும்தான்.
மேற்குறிப்பிட்ட இரு சரடுசுளும் நவீன எழுத்தின் கூறுமுறையால் மறுஆக்கம் செய்யப்பட்டபோது உருவான ஒரு நவீன இலக்கிய வடிவம் என்று மாய யதார்த்தவாதத்தைச் சொல்லலாம். அதன் வகைமாதிரிகள் வெவ்வேறானவை. கார்லோஸ் புயன்டஸ், போர்ஹெ போன்ற சிலர் தவிர பொதுவாக பெரும்பாலான லத்தின அமெரிக்கப் படைப்பாளிகள் ஒரு பொது வாசிப்புக்குரிய படைப்பு அளவுக்கே சரளமான வாசிப்புத் தன்மை கொண்ட படைப்புகளையே எழுதி இருக்கிறார்கள். அவர்களில நோபல் பரிசு பெற்ற லோசா போன்றவர்களை எந்த வகையிலும் இலக்கியத்தரமானவர்கள் என்று என்னால் சொல்ல முடிந்ததில்லை. யுவான் ருல்போவின் பெட்ரோ பரோமா போன்ற சில படைப்புகள் அவற்றின் கவித்துவத்தால் காலம கடந்து செவ்வியல் ஆக்கங்களாக நிலை கொள்கின்றன.
லத்தீன் அமெரிக்க யதார்த்தம் என்பது இந்த மாய யதார்த்தத்தால் மட்டுமே சொல்லத் தக்க சில அக உண்மைகள் கொண்டது. ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் ஐந்து புரட்சிகள் நடக்கும் என்றால் அதை யதார்த்தவாதத்தால் விளக்கமுடியுமா என்ன? லத்தின அமெரிக்காவின் மாய யதார்த்த கதைகள் அனைத்துமே அங்குள்ள மெய்யான அரசியல் சூழலை, அதனுள் உறைந்திருக்கும் அபத்தத்தை நோக்கித் திறப்பவை. அவற்றின் கலையமைதி அந்த மெய்நோக்கிய பயணத்தால்தான் உருவாகிறது. நாங்கள் நடத்திய சொல் புதிது இதழில் கப்ரியேல் கர்ஸியா மார்க்விஸின் உறைபனியின் உனது குருதியின் தாரை என்னும் கதையை செங்கதிர் (பின்னர் ராஜஸ்தான் ஐபிஎஸ் அதிகாரியானார்) மிகச்சிறப்பாக மொழியாக்கம் செய்திருந்தார். மார்க்யூஸின் மொழிவிளையாட்டையே தமிழிலும் ரசிக்கும்படிச் செய்திருந்தார்.அந்தக் கதையை ஒரு மகத்தான காதல் தோல்விக் கவிதையாக வாசிக்க முடியும். சிண்ட்ரெல்லா, ஸ்லீப்பிங் பியூட்டி, பியூட்டி ஆன்ட் பீஸ்ட் என பல தொன்மங்கள் முயங்கிய அழகியல் கொண்டது அது. அதை வெறும் கதைச்சூழ்ச்சி என புரிந்து கொண்ட ஒருவர் என்று சல்மான் ரஷ்யை நான் பார்க்கிறேன்.
ருஷ்தியின் முதல்நாவலில் மட்டுமே நேர்மையான இலக்கியத்திற்குரிய அகம் வெளிப்பட்டது. மற்ற எல்லா நாவல்களும் வெவ்வேறுவகையான சீண்டல்கள், மேலைநாட்டு வாசகர்களுக்கு விந்தையாகத் தென்படும் செய்திகளை சேகரித்து விளையாட்டாக அடுக்குதல்,மொழிவிளையாட்டு ஆகியவற்றுடன் சிறந்த சந்தைப்படுத்தல் வழியாக இலக்கியத்தில் ஓர் இடத்தை அடைந்துவிடலாம் என்னும் அவருடைய நம்பிக்கையின் வெற்றிச்சின்னங்கள் மட்டுமே.அவருடைய முந்தைய நாவல்களிலும் அந்த மாய யதார்த்தவாதம் வழியாக அவர் அடைய நினைப்பது என்ன என்று பார்த்தால் சலிப்பூட்டும் வெறுமையே எஞ்சியது. இந்நாவலிலும்தான்.
இதிலுள்ள இந்தியப்பின்னணி, அதனுடன் இணைந்த மாயங்கள் வழியாக ருஷ்தி வெளிப்படுத்தவோ கண்டடையவோ முற்படுவது என்ன? அக்கேள்வியுடன் இந்நாவலுக்குள் சென்றால் அவர் முன்வைப்பவை மிகமிகமிக எளிய அன்றாட அரசியல்சரிநிலைகள் மட்டுமே என்றும், அவற்றை ஒரு கலகக்காரரின் பாவனையுடன் சீண்டலாக முன்வைக்கிறார் என்றும் தெரியவருகிறது. இந்திய இலக்கியத்தில் இந்த எளிய சீண்டல்கள் எல்லாம் நிகழ்ந்து அரைநூற்றாண்டுகள் கடந்துவிட்டிருக்கிறது என அவர் இன்னமும் அறியவில்லை. இந்நாவலில் ஒரு மேலைநாட்டு வாசகருக்கு எளிய அறிதலின் வியப்பை அளிக்கும் தகவல்களைச் சொல்வதிலேயே அவருடைய கவனம் குவிகிறது. உதாரணமாக செரெல்தா லி பாம்பாவிடம் மன்மதனின் ஐந்து அம்புகளிலுள்ள ஐந்து மலர்களின் இயல்பை விவரிக்குமிடத்தைச் சொல்லலாம். இந்திய வாசகனுக்கு அது மேலும் கவித்துவமாக மேலெழாவிட்டால் அது வெறும் செய்திதான். ஆனால் அத்தகைய எளிய செய்திகளை திரட்டிவைத்துச் செல்கிறது இந்நாவல்.
(மேலும்)

ஐசக் பேசில் எமரால்ட்
ஐசக் பேசில் எமரால்டின் சிறுகதைகளின் உத்தியில் Interior Monologue எனப்படும் உள் உரையாடல் தன்மை இருப்பதாக , எழுத்தாளர் தமிழவன் குறிப்பிடுகிறார். ‘அபினி’ நாவல் நவீன இருத்தலியல் எழுத்து வகைமைக்குள் வருவதாக கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் மதிப்பிடுகிறார்.
ஐசக் பேசில் எமரால்ட் ஐசக் பேசில் எமரால்ட் – தமிழ் விக்கி
ஐசக் பேசில் எமரால்ட் – தமிழ் விக்கி

  ரமேஷ் பிரேதன், கடிதங்கள்
அன்புள்ள ஜெ
ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தமிழில் இலக்கியம் என்பது ஒரு சின்ன துளி டீ சிந்திக்கிடப்பதுபோல. அதில் மொய்க்கும் ஈ போலத்தான் வாசகர்களும் எழுத்தாளர்களும். ஒரு குட்டி உலகம். இதில் நம்பிக்கை இழக்காமல் செயல்படுபவர்களின் கொடை மிகப்பெரியது. இந்தச் சமூகத்திற்கு அக்கறை இல்லை என்று தெரிந்தாலும் செயல்பட்டுக்கொண்டே இருப்பவர்கள் அவர்கள். அவர்களில் ஒருவர் ரமேஷ். அவருடைய சிறுகதைகளை மட்டும்தான் நான் வாசித்துள்ளேன். ஐந்தவித்தான் நாவலை வாசிக்க தொடங்கி பல காரணங்களால் முடிக்கவில்லை. வாசிக்கவேண்டும். அவர் மீது ஒரு புதிய வாசகர் கவனம் உருவாக இந்த விருது உதவியிருக்கிறது.
சந்திரசேகர்
அன்புள்ள ஜெமோ
நான் சென்ற ஆண்டு விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு வந்திருந்தேன். சனியன்று நிகழும் விவாத அரங்கு ஒரு பெரிய இலக்கிய விழாவுக்கு நிகரானது. ஒரு அமர்வில் சராசரியாக 400 பேர் வரை இருக்கிறார்கள். ஆகவே அந்த அரங்கிலே இடம் போதவில்லை. மிகப்பெரிய கூட்டத்தில் இருந்துகொண்டு எழுத்தாளரைச் சந்திக்கமுடியவில்லை. கேள்வி கேட்பதும் முடியவில்லை. பலர் இடம் இல்லாமல் வெளியே நின்றிருக்கிறார்கல்.
இந்தியாவிலுள்ள லிட் ஃபெஸ்ட்களில் பல அமர்வுகள் உள்ளன. அதேபோல இங்கும் இரண்டு அரங்குகளை ஏற்பாடு செய்யலாமே? ஓர் அரங்கை இன்னொரு கூடத்தில் அமைக்க வாய்ப்புண்டா என்று யோசிக்கவும். ஓர் அரங்கில் இருநூறுபேர் இருந்தால் கேள்விகேட்கவும் கவனிக்கவும் கூடுதல் வாய்ப்பு என நினைக்கிறேன்.
மா.கிருஷ்ணசாமி
உடல்நலிந்த நிலையில் இருக்கும் ரமேஷ் பிரேதனுக்கு தனிப்பட்ட முறையில் உதவிசெய்ய விரும்புபவர்கள் செய்யலாம்.
RAMESH . MS.B. A/C. No. 32821202848STATE BANK OF INDIAMUTHIALPET BRANCHIFSC CODE: SBIN0015420

ங போல் வளை. கடிதம்
அன்புள்ள ஆசிரியருக்கு,
ஒரு சில புத்தகங்களை, காவியங்களை, இலக்கிய படைப்புகளை மீண்டும் மீண்டும் வாசிப்பவர்கள் இருக்கிறார்கள். அவ்வெழுத்து அவர்களது வாழ்வின் ஒரு பகுதியாக, வாழ்வை வழிநடத்தும் ஒரு ஆற்றலாக மாறிவிடுவதுண்டு. அப்படி வாசித்த அனுபவம் உள்ளவர்கள் அறியும் ஒன்றுண்டு. அந்த நூல் ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் ஒரு புதிய வெளிச்சத்தை, ஆழ்ந்த அறிதலை, அல்லது ஒரு நகர்வை அளித்துவிடும். ஒரு சிலருக்குத் திருக்குறள் அப்படி வாழ்நாள் மொத்தமும் உடன்வரும் நூலாக இருக்கும். பல தலைவர்களுக்கும் கீதை அவ்விதம் இருந்திருக்கிறது. ஒரே குறள் வெவ்வேறு வாழ்க்கைத் தருணங்களில் வெவ்வேறு விதமாகத் தன்னைத் திறந்து காட்டும். அது பேசப்படும் பொருளின் என்றைக்குமான தன்மை காரணமாகவும், அந்நூலை எழுதியவர்கள் தங்கள் வாழ்நாள் முழுமையையும் அந்த நூலின் உள்ளடக்கத்தின் செயல்முறை விளக்கமாக வாழ்வை நடத்திப் பார்த்தவர்களாக, அதாவது தங்கள் சாதனாவில் உறுதியாக அமைந்தவர்களாக இருப்பதையும் சற்று கவனித்தால் உணரலாம். வெறும் அறிவுத்திறனில், கற்பனைத்திறனில் இருந்து எழுதப்படும் சொற்கள் அவ்விதம் காலம்தாண்டி நீடிப்பதில்லை.
அவ்விதம் என்னைத் தொடர்ந்து வழிநடத்திக் கொண்டே இருக்கும் இலக்கியப் படைப்பாக வெண்முரசை உணர்வதுண்டு. நமது வாசிப்பு மேம்படுவதால், நண்பர்களோடு தொடர்ந்து விவாதிப்பதால் அல்லது நாமும் அனுபவங்கள் வழியாக மாற்றமடைந்து கொண்டே இருப்பதால் அது ஒவ்வொரு முறையும் ஒரு திறப்பை அளிப்பதாக எண்ணிக் கொள்வேன். இது குறித்து ஒரு முறை நண்பரும் ஆசிரியருமான குருஜி சௌந்தரிடம் குறிப்பிட்ட போது, அதற்கு வேறு ஒரு பரிமாணத்தில் மற்றொரு காரணம் இருக்கிறது என்றார். நமது பிராணன் உத்தானன் ஆகும் போது, (மேன்மேலும் வளர்ச்சி அடையும் போது), இத்தகைய மேலான பேசுபொருள் கொண்ட ஆக்கங்களை மீள வாசிக்கையில், அந்த நூல்களின் உண்மையான சாரம், மேலான மெய்ப்பொருள் நம்மை வந்தடையும் என்றார்.
இந்த ‘ஙப் போல் வளை‘ என்னும் யோக நூலை, அது தொடராக வந்த போதும், அதன் பின்னரும், இன்று நூலாக நம் கையில் வந்தபிறகும் என பலமுறை வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் இதன் பல வரிகள் புதிய ஒளியில் தெரிகின்றன. தன் வாழ்வையே சாதனாவாக மாற்றி வைத்திருக்கும் ஒரு யோகியின் சொற்கள் என்பதால் வரும் செறிவு.
உதாரணமாக “ஒன்றுடன் வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டே இருப்பதை விட, அதை ஆளும் ஒன்றை, ஆற்றல் மிக்க ஒன்றாக மாற்றுவதையே யோகமுறைமை முன்வைக்கிறது” என்னும் வரி. பொருள் விளக்கம் தேவையற்ற எளிய சொற்கள். ஆனால் சாதனாவின் பாதையில் நமது அக எல்லைகளில் முட்டித் திகைத்து நிற்கும் போது சட்டென விளக்கேற்றி வைக்கிறது இந்த வரி.
இயம நியமங்கள் குறித்து சொல்லும் போது, “சந்தோஷமான மனநிலையை நீண்ட நேரம் தக்கவைத்துக் கொள்ளுதல், முடிந்தவரை ஒன்றின் மீது அதீத பற்றும், பிடிப்பும் கொள்ளாதிருத்தல். இது ஒரு தொடக்கப்புள்ளிதான். ” என்கிறார். சந்தோஷமாக நீண்ட நேரம் இருத்தலும், அதீத பற்றிலாதிருத்தலும் சிறு தொடக்கமே, அதைப் பயில் முயல்வதில் வரும் தொய்வுகளை அனுபவிக்கும் போது, இந்த வரி இப்போது மேலும் செறிவு கொள்கிறது
முதல் வாசிப்புக்கு எளிய நடை போல மயக்கம் காட்டிவிடக் கூடியது இந்த புத்தகம். ஆனால் இது தொட்டுக்காட்டும் பல முக்கியமான பேசுபொருட்கள், கடல்நீருக்கு மேல் தன் நுனி மட்டும் காட்டும் பனிமலைச் சிகரங்கள் போன்றவை. அலைகளைக் கடல் என அறிந்திருக்கும் முதல்நிலை கடந்து கடலை அறிவதற்கு ஆழத்தை நோக்கி இறங்குபவர்களுக்கு அடி காணவியலாது நிற்பது ஆழி. இந்த நூல் வழியாக யோகத்தில் நுழையும் ஒருவருக்கு புதிய ஆழங்கள் திறப்பது உறுதி.
இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகளை தொகுத்துக் கொள்ளும் வசதிக்காக மூன்று விதமாக வகைப்படுத்தலாம் என நினைக்கிறேன்.
முதலாவது மரபார்ந்த யோகக் கல்வியின் ஆதாரமான கருதுகோள்கள் – பஞ்ச கோஷங்கள், பஞ்ச பிராணன், நாடிகள், த்ரயக் தனாவ் எனப்படும் மூன்றடுக்குப் பதற்றங்கள், வாழ்வின் ஆறு நிலைகள், தமோகுணத்தின் ஐந்து நிலைகள், யோகத்தின் எட்டு அங்கங்கள், சங்கல்பம், சித்தாகாசம், முக்குணங்கள், மூன்று சரீரங்கள், ஷட் ஊர்மி எனப்படும் அறுவகைத் துயர்கள், ஷட்கர்மா என்னும் ஆறுவகை சுத்திகரிப்பு, மனதின் கட்டமைப்பு, மூன்று க்ரந்திகள், இரண்டு மார்க்கங்கள் போன்றவை. இவை குறித்த புரிதல் படிப்படியாக ஒரு ஆர்வலருக்கும், ஆரம்ப நிலை யோகப் பயிற்சியாளருக்கும், யோக சாதகருக்கும், ஆன்மீக சாதகருக்கும் ஆழ்ந்து விரிந்து கொண்டே போகக் கூடியவை.
இரண்டாவது வகைமை கட்டுரைகள் பயன்பாடு கருதி நேரடியாக பேசுபவை. இதில் யோகம் குறித்து அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும், ஏதோ ஒரு விதத்தில் யோகம் கற்றுக் கொண்டு மேற்செல்ல திசை தெரியாமல் வழி தேடுபவர்களுக்கும், யோகம் குறித்து பொதுவில் இருக்கும் தவறான தகவல்களில் தடுமாறி, யோகத்தை சரியாக அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் வழிகாட்டுபவை.
உதாரணமாக,
யோகப்பள்ளியைத் தேரந்தெடுக்கும் விதம், நான்கு விதமான மனிதர்களுக்கு ஏற்ற நான்கு முக்கிய யோகக்கிளைகள், யோகத்தை எல்லாம் வல்ல மாற்று மருத்துவமாக சித்தரிக்க முயலும் போலிகள் குறித்த கவனம், சரியான அளவான பயிற்சிகளுக்கான அவசியம், மனிதர்களின் ப்ரக்ருதிக்கேற்ற பயிற்சிகள், காலத்துக்கேற்ற பயிற்சிகள், யோகசிகிச்சையின் சாத்தியங்கள் மற்றும் எல்லைகள்,
முதுமையைக் கையாளும் விதம் என விரிந்து செல்பவை.
பந்தங்கள், முத்திரைகள், சக்கரங்கள், தாரணை, ஓஜஸ், போன்ற உயர்நிலை பயிற்சிகளைச் சுற்றியுள்ள மாயத்தை உடைத்து அதனை அறிமுகப்படுத்தும் மூன்றாவது வகைமைக் கட்டுரைகள்.
சித்த சுத்தி, நாத யோகம்,
சாதகருக்கான தடைகள், ஆயுள், ஆமம் குறித்த ஆயுர்வேதத்தின் பார்வை போன்ற செறிவான பல கட்டுரைகளும் இதில் அடங்கும்.
இந்த நூல் வெறும் யோக மரபின் பார்வை அல்ல, யோகமரபு – தாந்த்ரீகம் – ஆயுர்வேதம் என்னும் மூன்று துறைகளின் தொடர் உரையாடலின் நீட்சி என ஆசிரியரே குறிப்பிடுவது போல இந்தப் புத்தகத்தின் பார்வை யோகத்தை இந்திய ஞான மரபுகளின் ஒருங்கிணைவுப் பார்வையில் விளக்குகிறது. இத்தகைய ஒரு பார்வைக்கு பரந்துபட்ட வாசிப்பும், அதை வாழ்வாகப் பயின்ற அவரது அனுபவமும் கைகொடுக்கிறது.
தான் ஈடுபட்டிருக்கும் யோகமரபின் முதன்மை நூல்களான
பதஞ்சலி யோக சூத்திரம், ஸ்வாமி ஸ்வாதமாராமா எழுதிய ஹத யோக பிரதீபிகை, யோக உபநிஷத்துகள், ஷட் கர்ம சங்கிரஹம் தவிர கடந்த நூற்றாண்டு கண்ட முக்கியமான ஞானியர் அனைவரது யோகம் தொடர்பான பார்வைகளையும் விவரிக்கிறது இப்புத்தகம். அரவிந்தரின் பூர்ண யோகம், ஸ்வாமி சிவானந்தர், ஸ்வாமி சத்யானந்தர், குரு நித்ய சைதன்ய யதியின் பதஞ்சலி யோக சூத்திர உரை, சச்சிதானந்த சரஸ்வதியின் உரை, ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள் எனத் தான் எடுத்துக் கொண்ட தலைப்பை விளக்க பல்வேறு ஞானியரின் சொற்களில் தெளிவாக விவரிக்கிறார்.
ஒரு சிறு பகுதியை சொல்வதென்றால், “அளவுக்கு மீறிய தேகப்பயிற்சியால் ஆறுவிதமான தீங்குகள் நேரும் என்றும் தன் சக்திக்கு மீறி அவற்றை செய்பவன், யானையை வம்புக்கு இழுக்கும் சிங்கத்தை போல அழிவான்” என்று அஷ்டாங்க ஹிருதயத்தில் ஆச்சாரியர் வாக்பட்டர் எழுதியிருப்பதை சொல்கிறார். இது அளவான பயிற்சிக்கான அவசியம் குறித்து ஆயுர்வேதம் சொல்லும் தகவல்.
ஒரு கட்டுரையில், “இந்தியா போன்ற மிக நீண்ட, புராண, வரலாற்று, நவீனத்துவ பின்னணி கொண்ட தேசத்தில், எந்த ஒரு மரபார்ந்த கருத்திற்கும், புராணத்தில் அதன் இடம் என்ன? வரலாற்றுக் காலகட்டத்தில் என்ன நிகழ்ந்தது? நவீன காலத்தில் அதன் முக்கியத்துவம் என்ன? என்கிற இந்த மூன்று அல்லது ஐந்தடுக்கு கொண்ட பார்வையும் புரிதலும் முக்கியமாகக் கருதப்படும்.” என்கிறார். அதுவே இந்த புத்தகம் யோகத்தை அணுகும், விவரிக்கும் முறையாக இருக்கிறது.
உபநிடதங்கள், இதிகாச புராணங்கள் தொடங்கி,
நவீன மருத்துவம், நவீன உளவியல், தாந்த்ரீகம், ஆதிசங்கரரின் தத்வபோதம், ஆயுர்வேத முதன்மை நூல்களான சரக சம்ஹிதை, சுஸ்ருத ஸம்ஹிதை, வாக்பட்டர் எழுதிய அஷ்டாங்க ஹிருதயம், சாங்கிய தத்துவம், வெண்முரசு, சூஃபி மெய்ஞானம் சொல்லும் நப்ஸ் என ஒட்டுமொத்த இந்திய ஞானமும் இதில் யோகத்தை விளக்க உதவுகிறது. கிரிக்கெட், நீயா நானா, விளம்பரங்கள் என இன்றைய சமகாலம் வரை நீள்கிறது இதன் களம்.
அனல் குறித்த கட்டுரையில் ஆயுர்வேதத்தின் சரக ஸம்ஹிதை சொல்லும் பித்தம் எனும் அனல், யோக மரபின் ஜடராக்னி உதராக்னி குறித்த கருத்துக்கள், வேத மரபின் அக்னி எனும் தேவனுக்கான துதியும் வைஷ்வாநரன், மேதாக்னி எனும் உருவகங்களும் என அனைத்தையும் தொடர்புறுத்தி விளக்கும் பகுதி. இக்கட்டுரையின் இறுதி வரி அலாதியானது – “வைஸ்வாநரன் எனும் அக்னியோ எதையும் செரிக்கவல்லவன், மரண பயம் உட்பட.”
ஆயுர் வேதத்திலும் யோகத்திலும் விளக்கப்படும் ஓஜஸை நவீன மருத்துவத்துடன் ஒப்பிட்டு விளக்குதலும் அது போல ஒரு முக்கியமான பகுதி. சமீபத்தில் ஒரு யோக வகுப்பில் கலந்து கொண்ட பயிற்சியாளர் ஒருவர் இறுதிநாளில் தான் ஒரு மருத்துவர் என்பதைத் தெரிவித்தார். ஆசிரியர் சௌந்தரின் ‘சான்றுகள் அடிப்படையிலான அணுகுமுறை‘ (Evidence based approach) தனக்கு யோகத்தின் மீது மிகவும் நம்பகத்தன்மையை கொடுக்கிறது என்றார். எதையும் பகுத்து அறிய விழைபவர்களுக்கும் இப்புத்தகம் யோகம் குறித்த மிகச் சரியான அறிமுகம் எனலாம்.
முன்னர் ஒரு புத்தகத்தை வாசித்து முடித்த பின் வாசிப்பனுபவத்தை பேசிக் கொண்டிருந்த போது ஆசிரியர் சௌந்தர் சொன்னார் – “இந்த நூலின் ஒற்றை வரியாவது உனது வாழ்வை ஏதேனும் ஒரு விதத்திலாவது தொட்டிருக்கிறதா? எதேனும் ஒரு வரியையேனும் நீ அனுபவமாக மாற்றிக் கொண்டிருக்கிறாயா? இல்லையெனில் அந்த வாசிப்பு சுமைதானே?” என்று கேட்டார்.
அன்று முதல் எடை சுமப்பதில்லை என சங்கல்பம் எடுத்துக் கொண்டேன். இந்த நூலில் ஒரு கட்டுரையில், “ஒருவர் யோக பயிற்சிகளை படிப்படியாக கற்று தேர்வதன் மூலம், உடலளவில் அடைந்த சமநிலை, மெதுவாக காலப்போக்கில் உள்ளத்தளவிலும் அமைகிறது. இதை ‘சித்த சுத்தி‘ என்கிறது மரபு,… சித்த சுத்தி அடைந்த ஒருவர் அறிவு சேகரம் செய்வதையோ, அறிவுச் செயல்பாட்டில் ஈடுபடுவதையோ நிறுத்தி விட மாட்டார், ஒருவகையில் இன்னும் கூர்மையான மதி படைத்தவராக, ஆழ்ந்து வாசிக்கக் கூடியவராக, தனக்கான செய்திகளையும் தரவுகளையும் மட்டும் புத்தியில் வைத்துக்கொண்டு தேவையற்ற தரவுகளை அன்றாடம் அழித்து விடுபவராக மாறிவிடுகிறார்.” என்கிறார் ஆசிரியர்.
வாசிப்பதில் ஒரு துளியேனும் எனது ஒரு பகுதியாக மாறவில்லையெனில் அத்தகைய வாசிப்பை சுமந்தலைவதில்லை எனும் சங்கல்பம் வாசிப்பை கூர்படுத்தியிருக்கிறது. இந்த நூலின் பல வரிகள் நமது வாழ்வாக மாறக் கூடியவை. “இனி யோகம் பயில்வோம்‘ எனும் ஈற்றடிவரை.
அனைத்துக்கும் நன்றி குருஜி.
மிக்க அன்புடன்,
சுபா
SOUNDAR.G
SATYAM TRADITIONAL YOGA
11/15, south perumal Koil Lane
Vadapalani – Chennai- 600026
+91 9952965505

Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers