ரமேஷ் பிரேதன், கடிதங்கள்
அன்புள்ள ஜெ
ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தமிழில் இலக்கியம் என்பது ஒரு சின்ன துளி டீ சிந்திக்கிடப்பதுபோல. அதில் மொய்க்கும் ஈ போலத்தான் வாசகர்களும் எழுத்தாளர்களும். ஒரு குட்டி உலகம். இதில் நம்பிக்கை இழக்காமல் செயல்படுபவர்களின் கொடை மிகப்பெரியது. இந்தச் சமூகத்திற்கு அக்கறை இல்லை என்று தெரிந்தாலும் செயல்பட்டுக்கொண்டே இருப்பவர்கள் அவர்கள். அவர்களில் ஒருவர் ரமேஷ். அவருடைய சிறுகதைகளை மட்டும்தான் நான் வாசித்துள்ளேன். ஐந்தவித்தான் நாவலை வாசிக்க தொடங்கி பல காரணங்களால் முடிக்கவில்லை. வாசிக்கவேண்டும். அவர் மீது ஒரு புதிய வாசகர் கவனம் உருவாக இந்த விருது உதவியிருக்கிறது.
சந்திரசேகர்
அன்புள்ள ஜெமோ
நான் சென்ற ஆண்டு விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு வந்திருந்தேன். சனியன்று நிகழும் விவாத அரங்கு ஒரு பெரிய இலக்கிய விழாவுக்கு நிகரானது. ஒரு அமர்வில் சராசரியாக 400 பேர் வரை இருக்கிறார்கள். ஆகவே அந்த அரங்கிலே இடம் போதவில்லை. மிகப்பெரிய கூட்டத்தில் இருந்துகொண்டு எழுத்தாளரைச் சந்திக்கமுடியவில்லை. கேள்வி கேட்பதும் முடியவில்லை. பலர் இடம் இல்லாமல் வெளியே நின்றிருக்கிறார்கல்.
இந்தியாவிலுள்ள லிட் ஃபெஸ்ட்களில் பல அமர்வுகள் உள்ளன. அதேபோல இங்கும் இரண்டு அரங்குகளை ஏற்பாடு செய்யலாமே? ஓர் அரங்கை இன்னொரு கூடத்தில் அமைக்க வாய்ப்புண்டா என்று யோசிக்கவும். ஓர் அரங்கில் இருநூறுபேர் இருந்தால் கேள்விகேட்கவும் கவனிக்கவும் கூடுதல் வாய்ப்பு என நினைக்கிறேன்.
மா.கிருஷ்ணசாமி
உடல்நலிந்த நிலையில் இருக்கும் ரமேஷ் பிரேதனுக்கு தனிப்பட்ட முறையில் உதவிசெய்ய விரும்புபவர்கள் செய்யலாம்.
RAMESH . MS.B. A/C. No. 32821202848STATE BANK OF INDIAMUTHIALPET BRANCHIFSC CODE: SBIN0015420
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
