Jeyamohan's Blog, page 26

September 16, 2025

ரமேஷ் பிரேதன், வாழ்த்துக்கள்

எங்கள் மூத்தவர், எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டிருக்கும் செய்தி எல்லையற்ற மகிழ்ச்சியை தருகின்றது. என்னால் உணர்ச்சி வசப்படுதலை தவிர்க்க முடியவில்லை. நேற்று நள்ளிரவு வரையில் நண்பர்களுடன் கைபேசியில் உரையாடி தன்னிறைவடைந்தேன்.

இலக்கியத்திற்கான அத்தனை விருதுகளுக்கும் தகுதியானவர் எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அவர்கள் என்பதை இலக்கியம் அறிந்த எவரொருவரும் மறுக்கப்போவதில்லை. அவருடைய படைப்புகள் எல்லையற்று உலகெங்கும் சென்றிருக்க வேண்டும்!. அதுவும் நிகழும் என்ற நம்பிக்கையையும் விஷ்ணுபுரம் விருது அறிவிப்பு செய்தி தந்திருக்கின்றது.

ஒட்டுமொத்த தமிழ் இலக்கிய உலகின்மேல் இருந்த குறை ஒன்று சரிசெய்யப்பட்டுள்ளது. என்போன்ற பலருடைய நீண்ட கால ஆதங்கம் ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளது. இதைச் சாத்தியமாக்கிய விஷ்ணுபுரம் அமைப்பில் அங்கம் வகிக்கும் நண்பர்கள் அனைவரின் கைகளையும் பேரன்புடன் பற்றிக்கொள்கிறேன். நன்றி!.

வாசு முருகவேல்

அன்புள்ள ஜெ,

விஷ்ணுபுரம் விருது ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சி அளிக்கிறது. ரமேஷ் அவர்களின் இலக்கியப் பங்களிப்பு ஐயத்துக்கு அப்பாற்பட்ட ஒன்று. உடல்நலம் குன்றிய நிலையிலும் தொடர்ச்சியாக இலக்கியப்படைப்புகளைச் செய்துகொண்டிருக்கிறார். புகழ் , அங்கீகாரம் அனைத்துக்கும் அப்பால் ஆக்ரோஷமாக தன்னை வெளிப்படுத்துவதொன்றையே செய்துகொண்டிருக்கும் கலைஞர் அவர்.

ஆனால் சென்ற சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் மனம்கசந்து சில கடும் கண்டனங்களை தனிவாழ்க்கை சார்ந்து எழுதியபோது அதை ஒரு வம்பாக ஆக்கி கொண்டாடியவர்களில் பத்தில் ஒருவர் கூட அவருக்கு இப்படி ஒரு விருது அளிக்கப்பட்டபோது ஒரு வாழ்த்து தெரிவிக்கவில்லை. எழுத்தாளர்களிலேயே அந்த வாழ்த்தைத் தெரிவித்தவர்கள் மிகச்சிலர்தான். ஒரு விருதுக்கு சக படைப்பாளிகள் மரியாதை நிமித்தம் வாழ்த்துவதுகூட நம் சூழலில் அருகிவிட்டிருக்கிறது. இது என்ன நாகரீகம் என தெரியவில்லை. இன்றைய சமூக ஊடகச்சூழல் அனைவரையும் வம்பு மட்டுமே பேசுபவர்களாக ஆக்கிவைத்துள்ளது.

ரமேஷ் இந்தச்சூழலிலும் எழுதும் படைப்புகளில் அவருடைய இலக்கியப்பார்வை, அவர் எடுக்கும் வடிவங்கள்மேல் அவர் கொண்டிருக்கும் ஆழ்ந்த நம்பிக்கை வெளிப்படுகிறது. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நா.பத்மநாபன்

 

உடல்நலிந்த நிலையில் இருக்கும் ரமேஷ் பிரேதனுக்கு தனிப்பட்ட முறையில் உதவிசெய்ய விரும்புபவர்கள் செய்யலாம்.

RAMESH . MS.B. A/C. No. 32821202848STATE BANK OF INDIAMUTHIALPET BRANCHIFSC CODE: SBIN0015420
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 16, 2025 11:32

அவள்- அஜிதன் சிறுகதை

அவர்கள் அவள் உடலை நிர்வாணமாக்கி பாதி அழுகிய நிலையில் சவுக்கு மரத்தோப்பில் விட்டுச்சென்றிருந்தனர். முகமும் உடலின் மேல் பகுதியும் எல்லாம் அடையாளம் தெரியாதபடி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டிருந்தது. வாயில் திணிக்கப்பட்ட உள்ளாடை வெளிறிய பற்களின் இடையே பாதி கருகிய நிலையில் கிட்டிக்கப்பட்டிருந்தது.

அவள்- அஜிதன் சிறுகதை. மயிர் இதழ்
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 16, 2025 11:31

A socio-spiritual way

Relieving depression and other similar mental health issues is not easy; it is a contemporary challenge. We have been suffering from this problem for a long time, and we don’t know that the cause is a mental problem.

A socio-spiritual way

 

 

இன்றைய தலைமுறையின் பொறுப்பின்மை என்னும் தலைப்பை வாசித்ததும் நான் நீங்கள் ஏதோ கடுமையான குற்றச்சாட்டுக்களைச் சொல்லப்போகிறீர்கள் என்றும், இளைய தலைமுறை அதை பூமர் கருத்து என்று சொல்லப்போகிறது என்றும் நினைத்துக்கொண்டேன்.

இளையதலைமுறையின் சிக்கல்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 16, 2025 11:30

September 15, 2025

பாவண்ணனுக்கு சூர்ய விருது- வாழ்த்துக்கள்

எழுத்தாளர் சிவசங்கரி உருவாக்கியிருக்கும் ‘சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளை’ மூலம் அளிக்கும் சூரிய விருது இவ்வாண்டு எழுத்தாளர் பாவண்ணனுக்கு வழங்கப்படுகிறது. ரு மூன்று லட்சம் தொகையும் பாராட்டு இதழும் அடங்கிய விருது.

பாவண்ணனுக்கு வாழ்த்துக்கள்

பாவண்ணன் தமிழ்விக்கி

வாழ்த்த writerpaavannan2015@gmail.com , 9449567476

 

2 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 15, 2025 22:52

புதுவை வெண்முரசு வாசகர்கூடுகை

புதுவையில் நடைபெற்று வரும் வெண்முரசு மாதாந்திர கூடுகையின் 86வது அமர்வு

2025 செப்டம்பர் 19, வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணி முதல் 9:00 மணி வரை,

“ஶ்ரீநாராயணபரம்”, முதல் மாடி, #27, வெள்ளாழர் வீதி, புதுவை-605001

என்ற முகவரியில் நடைபெறுகிறது.

வெண்முரசு பெருநாவல்நிரையின் ஒன்பதாவது நூலான “வெய்யோன்” குறித்து நண்பர் செந்தூர் உரையாற்றுவார்.

நிகழ்விடம் : கிருபாநிதி அரிகிருஷ்ணன் “ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி, # 27, வெள்ளாழர் வீதி , புதுவை -605 001.

தொடர்பிற்கு:- 9943951908 ; 9843010306

பேசு பகுதி: வெண்முரசு நூல் – 9. “வெய்யோன்”

பகுதி 9 மயனீர் மாளிகை – 64 – 69 அத்தியாயம். (1 – 6 )

நிகழ்ச்சியில் பங்குகொள்ள வெண்முரசு வாசகர்களையும்ஆர்வமுள்ளவர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.

வெண்முரசு வாசகர்வட்டம் புதுவை

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 15, 2025 18:49

கருத்தியலும் இலட்சியவாதமும் வேறுவேறு!

நம் சூழலில் வெவ்வேறு கருத்தியல்களை சார்ந்திருப்பவர்கள், அதையொட்டி களமாடுபவர்கள் தங்களை இலட்சியவாதிகள் என நினைத்துக்கொள்கிறார்கள். முகநூலில் வெறுமே சத்தம்போடும் கூட்டம்கூடத்தான் தங்களை இலட்சியவாதிகள் என எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இலட்சியவாதமும் கருத்தியலும் வேறுவேறானவை…

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 15, 2025 11:36

நேபாளக் கிளர்ச்சி தன்னெழுச்சியானதா?

அன்புள்ள ஆசிரியருக்கு

தற்போது நேபாளத்தில் திடீரென மிகப் பெரும் கலவரம் வெடித்திருக்கிறது. இரண்டே நாளில் அதிபர் பிரதமர் ராஜினாமா செய்து விட்டார்கள். பார்லிமென்ட் கட்டிடம் முதல் அரசியல் தலைவர்கள் வீடுகள் வரை நீ வைத்து கொளுத்தப் படுகின்றன. முன்னாள் பிரதமர் மனைவி எரித்து கொல்லப்படுகிறார். எல்லா தலைவர்களையும் இராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கிறார்கள். இத்தகைய அராஜகம் யாரால் நடத்தப் படுகிறது. பொதுமக்கள் மாணவர்கள் நிச்சயமாக இப்படி திட்டமிட்டு தாக்குதல் நடத்த முடியாது. முதலில் இலங்கை. பிறகு வங்கதேசம். தற்போது நேபாளம். இந்தியாவின் எல்லா எல்லைகளிலும் பிரச்சினை. இது எதை நோக்கி செல்கிறது. விளைவு என்னவாக இருக்கும்.

அன்புடன் 

காந்தநாதன் 

வயநாடு 

அன்புள்ள காந்தநாதன்,

எனக்கு இந்தவகையான ‘தன்னெழுச்சியான’ கலவரங்கள் மீது ஆழமான அவநம்பிக்கை உருவாகத் தொடங்கியுள்ளது. அதற்கான காரணங்கள் நீங்கள் குறிப்பிட்ட இலங்கை, வங்காளதேசம் போன்ற நாடுகளில் நிகழ்ந்த அண்மைக்கால கிளர்ச்சிகளின் பின்விளைவுகளை பார்க்கையில் எவையுமே தன்னெழுச்சியானவை அல்ல என்னும் எண்ணம் உருவாகியுள்ளது.

இத்தகைய ‘தன்னெழுச்சி’யான கிளர்ச்சிகளின் முதல் முன்னுதாரணம் அரபுவசந்தம் என அழைக்கப்பட்ட கிளர்ச்சிகள்தான். அவை ‘ஜனநாயகத்துக்காக’ ‘ஊழலுக்கு எதிராக’ அந்நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கிளர்ந்தெழுந்தமையால் உருவானவை என்று நமக்குச் சொல்லப்பட்டது. அந்தக் கிளர்ச்சிகள் நிகழ்ந்த எகிப்து உள்ளிட்ட நாடுகளில் உண்மையில் நிகழ்ந்தது என்ன?

அண்மையில் எகிப்து சென்றிருந்தேன். அங்கே நிகழ்ந்த அந்த ‘வசந்தம்’ உண்மையில் என்ன என்று கண்கூடாகவே கண்டேன். வாசித்தும் மக்களிடம் பேசியும் அறிந்தேன். அங்கே இருந்தது ஒரு சோவியத் ஆதரவு அரசு, சற்று இடதுசாரிச் சாய்வும் கொண்டிருந்தது.ஆனால் சுற்றுலாவையும் பருத்தி வேளாண்மையையும் பொருளியல் அடித்தளமாகக் கொண்டிருந்த அந்த நாடு பொருளியல் வளர்ச்சி அடைந்து கொண்டே இருந்தது. 90 சதவீத மக்களும் வறுமையில் இருந்து மீட்சி அடைந்தனர். 100 சதவீத மக்களும் குடிசைகளில் இருந்து அடுக்குமாடி வீடுகளுக்கு குடிபெயர்ந்தனர்.

அந்த அடுக்குமாடிவீடுகள் முக்கால்வாசி கட்டப்பட்டபோதுதான் அங்கே மேற்படி ‘புரட்சி’ நிகழ்ந்தது. இஸ்லாமின் நண்பர்கள் என்னும் மிகச்சிறிய தீவிரவாதக் குழு திடீரென்று அலைபோல பெருகி எழுந்தது. அதற்கு மிகப்பெரிய நிதியுதவி வந்தது. மிகப்பெரிய ஊடக ஆதரவு கிடைத்தது. உலகமே அதை ‘புரட்சிகர இளைஞர்களின் இயக்கம்’ என்றும் ‘ஜனநாயக ஆதரவுச்சக்தி’ என்றும் ‘எகிப்திய அரசின் ஊழலுக்கு எதிரான மக்களின் மனசாட்சியின் எழுச்சி’ என்று கொண்டாடின. அவர்கள் ஆட்சியைப் பிடித்தனர்.

உடனடியாக சுற்றுலா இல்லாமலானது. அங்கே வரும் அத்தனை சுற்றுலாப்பயணிகளும் இஸ்லாமிய சட்டங்களை கடைப்பிடிக்கவேண்டும் என்று சொல்லப்பட்டதுதான் காரணம். கூடவே அருங்காட்சியகங்கள் மூடப்பட்டன. காரணம் அங்கே சிலைகள் இருந்தன. சுற்றுலாப்பயணிகள் பிரமிடுகளைப் பார்க்கவேண்டாம், மசூதிகளை மட்டுமே பார்த்தால்போதும் என்று சொல்லப்பட்டது. சில ஆண்டுகள் மொத்த எகிப்தே முழுமையான பொருளியல் வீழ்ச்சியில் இருந்தது.நாடே முழுப் பட்டினி. அரசூழியர்களுக்கே சம்பளம் இல்லாத நிலை.

மக்கள் பொறுமையிழந்தனர். அதைவிட ராணுவம் பொறுமையிழந்தது. இன்று ராணுவம் ஆட்சியைப் பிடித்து, ஒரு குடியரசாட்சியை படிப்படியாக உருவாக்கியுள்ளனர். சுற்றுலா மூன்றிலொன்று மீண்டுள்ளது. பட்டினி அகன்றுள்ளது. ஆனால் மொத்த நாடும் முக்கால்வாசி கட்டப்பட்ட கட்டிடங்களுடன் நின்றுவிட்டிருக்கிறது. முழுமையாக மீள இன்னும் கால்நூற்றாண்டாவது அமைதி தேவையாக இருக்கும். இப்போதும் கிராமங்கள் பழைய இஸ்லாமியக் குழுக்களின் பிடியில் இருக்கின்றது.

அந்நாட்டை வீழ்த்திய அந்த ‘மக்கள் எழுச்சி’ உண்மையில் என்ன? அது ருஷ்யாவுக்கு எதிரான மேற்குலகின், அமெரிக்காவின் சூழ்ச்சி மட்டுமே. அந்த அமைப்புக்கு வந்த மொத்த நிதியும் அமெரிக்கக் கொடை. அமெரிக்காவின் இலக்கு நிறைவேறியதும் அப்படியே அந்நாடு கைவிடப்பட்டது. இதுதான் அப்பட்டமான உண்மை.

இதுவே ஒவ்வொரு நாட்டிலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.ஒரு நாடு தன் பொருளியல் சிக்கல்களைத் தீர்த்துக்கொண்டு சற்று மேலெழுமென்றால் உடனடியாக அங்கே ‘தன்னெழுச்சியான’ கிளர்ச்சிகள் உருவாகின்றன. பொருளியல் அழிவு உருவாகி மீண்டும் வறுமை. மீண்டும் ஐரோப்பா– அமெரிக்காவைச் சார்ந்திருத்தல். இலங்கை, வங்கம், மணிப்பூர் எங்கும் நிகழ்வது ஒன்றே.

எந்த நாட்டிலும் உண்மையான அதிகாரம் என்பது ராணுவமே. ராணுவம் கொண்ட ஓர் அரசை இப்படி ‘மாணவர்கள்’ தெருவில் இறங்கி ஒரு வாரத்தில் தூக்கி எறியவெல்லாம் முடியாது. ராணுவம் அதை அனுமதிக்கிறது என்பதே அதன் பொருள். அதற்கான ‘புரிந்துணர்வு’ ஏற்கனவே ராணுவத்திற்கும் அந்த ‘இளைஞர் எழுச்சித்’ தலைவர்களுக்கும் இடையே உருவாகியிருக்கிறது. அதன்பின்னரே இவையெல்லாம் ஆரம்பமாகியுள்ளன.

எந்த நாட்டிலும் அந்நாட்டு நிதியில் பெரும்பகுதியை (ஏறத்தாழ 50 சதவீதம்) சூறையாடிக்கொண்டிருப்பது அதன் ராணுவமே. எந்த நாட்டிலாவது இந்த ‘மக்கள்’ திரண்டு ராணுவத்திற்கு எதிராக ஏதாவது செய்து பார்க்கட்டுமே. சீனாவில் டியானன்மைன் ஸ்குயரில் என்ன நடந்தது? அதுதான் விதியாக இருக்கும்.

இந்த நேபாளக் கிளர்ச்சியின் நோக்கம் சீனாவுக்கு எதிரானது என நான் நினைக்கிறேன். சீனாவுக்கு அமெரிக்கா அல்லது ஐரோப்பா அளிக்கும் செய்திதான் இது. கூடவே இந்தியாவுக்கும் இதிலுள்ள செய்தி முக்கியமானது. அதை இந்தியா உணர்ந்திருக்கும். இது சர்வதேச அரசியலாட்டத்தில் ஓர் அங்கம்.இதற்கு அங்குள்ள இளைஞர்கள், மாணவர்கள் இரையாகிறார்கள். இதை அவர்கள் நடத்திய போர் என அவர்கள் மெய்யாக எண்ணுவார்கள் என்றால் மீண்டும் தானாகவே எதையாவது செய்ய முயல்வார்கள். அப்போதுதான் அதிகாரத்தின் மெய்யான முகம், புன்னகைக்கு அடியிலுள்ள இரும்பு, தெரியவரும்.

உண்மையான அரசியல் நெருக்கடிகள், பொருளியல் வீழ்ச்சிகள் இந்நாடுகளில் இருக்கும். உண்மையான சீற்றமும் அங்கே இருக்கும். ஆனால் அவற்றை பயன்படுத்திக்கொள்பவை அன்னிய அரசியல் சக்திகள். இன்று அவர்களிடம் மிகப்பெரிய ஆயுதமாக உள்ளது சமூகவலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள். அமெரிக்கா அல்லது ஐரோப்பாவின் மிகப்பெரிய பலமே இதுதான். இதைத்தான் டியானன்மைன் ஸ்குயர் நிகழ்வுக்குப் பின் சீனா தன் நாட்டில் எந்த வகையிலும் அனுமதிக்காமலிருக்கிறது.

நான் எப்போதுமே எழுதிவருவது இதுதான். சாதாரணச் சூழலில் மிகப்பெரிய நிதியுதவியுடன் மேற்குலகு கீழையுலகு பற்றிய சமூகவியல், அரசியல் ஆய்வுகளைச் செய்துகொண்டிருக்கிறது. ஆய்வாளர்கள் நிதியுதவி பெற்று தரவுகளை திரட்டி அளித்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த தரவுகள் எல்லாமே மேற்குலகின் ஆயுதங்கள். எந்த கணமும் அவர்களால் ஒரு மதக்கலவரத்தை, இனப்பூசலை, சாதிச்சச்சரவை எங்கும் உருவாக்கிவிட முடியும். தரவுதிரட்டி அளிப்பவர்கள் ‘ஆய்வாளர்கள்’ அல்ல. அவர்கள் வெறும் நிதியுதவிபெறும் ‘தரவுத்தொழிலாளிகள்’ மட்டுமே.

நம் உள்ளம் ‘ஏதேனும் நிகழவேண்டும்’ என்று விரும்புகிறது. காரணம் நாம் அலுப்பையே அன்றாடமெனக்கொண்ட எளிய நடுத்தரவர்க்கத்தினர். வெண்முரசில் விதுரர் சொல்லும் ஒரு வரி உண்டு. ‘தங்கள் அன்றாடச் சலிப்பை வெல்ல வீட்டுக்கே தீவைப்பவர்கள் எளிய குடிமக்கள்’ என்று. அதைத்தான் நம் ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் பிரதிபலிக்கின்றன.

ஆகவே எந்தக் கிளர்ச்சியையும் நாம் மாற்றத்துக்கு வழிவகுப்பதாக நினைக்கிறோம். அவ்வாறு நாம் நம்பிய காலம் முடிந்துவிட்டது. இன்று ஊடகங்கள் இப்படி சிதறிப்பரந்துவிட்டபின், எந்த கிளர்ச்சியையும் நாம் ஐயப்படவே வேண்டும். எவருக்காக, எவரால், ஏன் நடத்தப்படுவது இது என உசாவியாகவேண்டும். இல்லையேல் நம்மையே நாம் அழித்துக்கொண்டவர்கள் ஆவோம்.

ஜெ 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 15, 2025 11:35

ஔவை நடராசன்

கல்வியாளர். கல்விநிலைய உயர்பதவிகளில் இருந்தார்.மரபான பார்வையில் கல்வித்தேவைகளின் பொருட்டு இலக்கிய ஆய்வுகளைச் செய்தார்.

ஔவை நடராசன் ஔவை நடராசன் ஔவை நடராசன் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 15, 2025 11:33

ரமேஷ் பிரேதனுக்கு விருது, வாழ்த்துக்கள்

ரமேஷ் பிரேதனுக்கு இந்தாண்டு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது‌ பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. மனம் நிறைந்த வாழ்த்துகள். இந்நேரத்தில் சித்ரனையும் லஷ்மி சரவணகுமாரையும் எண்ணிக்கொள்கிறேன். அவர்கள் தான் அவருடைய படைப்புலகத்தை அறிமுகம் செய்தார்கள். எல்லா இடங்களிலும் அவர்களை தங்கள் ஆதர்ச படைப்பாளிகளில் ஒருவராக முன்வைத்தார்கள். தற்போது அவரைத் தொடர்ந்து பதிப்பித்துவரும் ஜீவ கரிகாலனின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன்வாழ்த்துகள்.சுனீல் கிருஷ்ணன்அன்புள்ள ஜெ,ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ளமை நிறைவளிக்கிறது. ரமேஷ் தமிழின் நீண்ட இலக்கிய மரபில் தனக்கான ஒரு பார்வை கொண்டவர். பின்நவீனத்துவம் இங்கே அறிமுகமானபோது அதை ஒரு புனைவுவிளையாட்டு அல்லது உத்திச்சோதனையாக அணுகாமல் அதை நம் பண்பாட்டை ஆய்வுசெய்யவும், விமர்சிக்கவும், நிராகரிக்கவும் பயன்படுத்திக்கொண்டவர் என்னும் இடம் அவருக்கு உண்டு. அவருடைய நாவல்கள் புதுச்சேரியின் வரலாற்றில் நிகழ்ந்த மாற்றங்கள் திரிபுகளைப் பேசுகின்றன.சித்தர்கள், வள்ளலார் முதலான ஆன்மிகத்தையும் பேசுகின்றன. இவையனைத்தும் ஒரு நவீன மனிதனை எப்படி அலைக்கழிக்கின்றன என்னும் பெரிய சித்திரத்தை அளிக்கின்றன.வாழ்த்துக்கள்எம்.பாஸ்கர்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 15, 2025 11:31

பத்மா லட்சுமி, கடிதம்

Stories Of The True, USA, பரப்புரைகள் பத்மாலட்சுமி என்னும் சுப்பர் மாடல் அமெரிக்காவில் உங்கள் நூலை பரிந்துரைப்பதைக் கண்டேன். (பார்க்க  பத்மா லக்ஷ்மி இன்ஸ்டா பதிவு) . இதில் நாம் கவனிக்கவேண்டிய ஒன்று உண்டு

பத்மாலட்சுமி, அமெரிக்கா- கடிதம்

What I observed from the visitor numbers of those videos is that people are watching videos about depression, loneliness, and other concentration issues. It seems they are not interested in subjects like Western music, politics, or philosophy.

Depression- what the count shows…
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 15, 2025 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.