Jeyamohan's Blog, page 30
September 12, 2025
மதுரை புத்தகத் திருவிழாவில் இன்றும் இருப்பேன்
மதுரை புத்தகவிழா 5 செப்டெம்பர் (வெள்ளி) முதல் 15 செப்டெம்பர் (திங்கள்) வரை நிகழ்கிறது. விஷ்ணுபுரம் அரங்கு எண் 44 மற்றும் 45.
மதுரை புத்தகவிழாவில் இன்று (13 சனி 2025) மாலை 5 முதல் இருப்பேன். நண்பர்களை வரவேற்கிறேன்
2025 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெற்ற ரமேஷ் பிரேதன் அவர்களின் படைப்புகள் கிடைக்குமா என விசாரிக்கிறார்கள். மதுரை புத்தகவிழாவில் யாவரும் புத்தக அரங்கில் அவர் நூல்கள் கிடைக்கும்.
எங்கள் புதிய நூல்கள்ஜெயமோகனின் புதிய நாவல். கடல் என்னும் திரைப்படம் இந்நாவலை ஒட்டி உருவானது. செவ்வியல் தன்மை கொண்ட இப்படைப்பில் ஓர் ஆன்மாவின் கடலில் தெய்வமும் சாத்தானும் மோதிக்கொள்ளும் அலைகள் கொந்தளிக்கின்றன. மகாகவி தாந்தேயின் டிவைன் காமெடியின் நீட்சியென அமையும் படைப்பு இது.
ஜெயமோகன் கீதை பற்றி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். நான்கு நாட்களில் ஆற்றிய தொடர் உரை என்பதனால் எளிய நடையில், நேரடியாக வாசகனுடன் பேசும் தன்மைகொண்டது. கீதைக்குள் நுழைய இன்றைய நவீன வாசகனுக்கு திறக்கப்படும் மிகச்சிறந்த வாசல்.
பண்பாடு பற்றிய ஜெயமோகனின் கட்டுரைகளின் தொகுப்பு. நாம் ஆன்மிகம், பண்பாடு என எண்ணியிருப்பவை பலசமயம் சம்பிரதாயமான கருத்துக்கள். அவற்றை நவீன வாழ்க்கையுடன் இணைத்துப்பார்க்கும் பார்வைகள் கொண்ட நூல் இது.
சுந்தர ராமசாமியின் ஆளுமையை தன் நினைவுகளினூடாக ஜெயமோகன் சித்தரிக்கும் இந்நூல் அக்காலகட்டத்தில் நிகழ்ந்த அழகியல் விவாதங்களையும் தொட்டுக்கொண்டு ஒரு நாவலைப்போல் விரிவது. நுணுக்கமான காட்சிவிவரணைகளும், புன்னகைக்கவைக்கும் தருணங்களும் கொண்டது.
தினமலரில் தொடராக வந்த எளிமையான கட்டுரைகள். இவை நம் ஜனநாயகத்தின் அடிப்படைகளை விவாதிக்கின்றன. நாம் அறிந்த தகவல்களை அறியாத கோணத்தில் காட்டி இன்றியமையாதவற்றைப் புரியவைப்பது இவற்றின் பாணி.
நாஞ்சில்நாடனைப் பற்றிய ஜெயமோகனின் நூல். அவரை பிரியமான நகைச்சுவையுடன் மதிப்பிடுகிறது, நட்பை விவரிக்கிறது.
எங்கள் நூல்கள்
தமிழில் விஷ்ணுபுரம் அளவுக்கு எந்த நாவலும் அத்தனை கவனமான வாசிப்பைப் பெற்றதில்லை. பல கோணங்களில் அவரவர் அரசியலுக்கும் கருத்துநிலைக்கும் ஏற்ப அதை வாசித்துள்ளனர். இரண்டாவது தலைமுறையில் விஷ்ணுபுரம் குறியீடுகளின் அடுக்குகள் செறிந்த, உணர்வுநிலைகள் உச்சம் தொட்ட, ஒரு நவீன இந்தியக் காவியநாவலாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் உலகவாசகர்களின் வாசிப்புக்குச் செல்லவுள்ளது.
குறைத்துச்சொல்லும் அழகியல் கொண்ட கதைகள். இளம்படைப்பாளியான விஷால்ராஜாவின் குறிப்பிடத்தக்க சிறுகதைத் தொகுதி இது. வாழ்க்கையின் மென்மையான புதிர்களைப் பேசும் கதைகள்
பின்தொடரும் நிழலின் குரல் தமிழின் முதன்மையான அரசியல் நாவலாக பல விமர்சகர்களால் மதிப்பிடப்பட்டது. அரசியலின் அடிப்படையாக உள்ள கருத்தியல் என்பதை ஆராயும் நாவல் இது. ஒரு கருத்துநிலைபாடு சாமானியனை எப்படி அபாயகரமான ஆயுதமாக ஆக்கிவிடுகிறது என்னும் கேள்வி வரலாற்றில் என்றும் உள்ள ஒன்று. அதை ஆராயும் படைப்பு இது.
மைத்ரி ஓர் உருவகக் கதை. ஒரு மலை. ஒரு பயணி. ஒரு காதல். ஆனால் இந்த பயணம் மலையின் ஆழங்களின் மடிப்புகளில் இருந்து மலையுச்சியின் வெறுமையின் பரவசம் வரை நீள்கையில் ஆன்மிகமான இன்னொரு பரிணாமத்தை அடைகிறது.
மருபூமி வைக்கம் முகமது பஷிர் தன்னந்தனியாக பாலைவனத்தை கடந்த அனுபவத்தைப் பற்றி எழுதிய சுருக்கமான குறிப்பில் இருந்து விரிவாக்கம் செய்யப்பட்ட குறுநாவல். ஓர் அகப்பாலையை கடக்கும் ஒருவனின் அனுபவம் என வகைப்படுத்தலாம். புகழ்பெற்ற பல சிறுகதைகள் அடங்கிய நூல்.
அல்கிஸா தமிழின் முதல் இஸ்லாமிகேட் நாவல் என்று விமர்சகர்களால் குறிப்பிடப்பட்டது. இஸ்லாமிய அழகியல் உச்சம் என சொல்லத்தக்க கவாலி இசை, இஸ்லாமிய ஆன்மிக உச்சம் என சொல்லத்தக்க சூஃபி மரபு ஆகியவை ஓர் அழகிய காதல்கதையால் இணைக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் விரைவில் வெளிவரவுள்ளது.
தமிழின் தலைசிறந்த நாவல் என வாசகர்கள் பலரால் கருதப்படும் காடு மனித உறவின் உருவகமான குறிஞ்சி நிலத்தில் நிகழும் ஒரு காதல்கதை. வாழ்க்கையில் பாலை வரலாம். காதல் என்றும் ‘வறனுறல் அறியாச் சோலை’தான் என இந்நாவல் காட்டுகிறது.
சினிமாப்பின்னணியில் எழுதப்பட்ட ஓர் இழந்த காதலின் கதை. கறுப்புவெள்ளை சினிமாவின் உலகம் கவித்துவக்குறியீடாக ஆக்கப்பட்டுள்ளது இந்நாவலில். கற்பனாவாத அழகியல் கொண்ட படைப்பு.
முதுநாவல் ஜெயமோகனின் 133 சிறுகதைகளின் தொகுப்புகளான 14 நூல்களில் ஒன்று. இந்திய சூஃபி மரபின் ஆன்மிகநிலைகளில் இருந்து இந்திய வாழ்க்கையை ஆன்மிகம் வந்து தொடும் தருணங்களைச் சொல்லும் மகத்தான சிறுகதைகள் அடங்கியது. இதில் பல கதைகள் இன்று உலகப்புகழ்பெற்ற அமெரிக்க இலக்கிய இதழ்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
கதாநாயகி ஓரு பேய்க்கதை. ஆனால் அந்தப் பேய்க்கதை சமகாலத்தில் இருந்து பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தை அடைகிறது. அதற்கு முந்தைய லண்டனை ஊடுருவி ரோமாபுரிக்காலம் வரை நீள்கிறது. பல அடுக்குகளாலான நாவல் இது.
முற்றிலும் மங்கலத்தன்மை கொண்ட நாவல். மதுரை மீனாட்சி திருமணத்தின் அழகியபெருந்தோற்றம். ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் வரவிருக்கிறது.
தமிழகத்தின் தலித் எழுச்சியின் தொடக்கப்புள்ளியை, இந்தியப்பெரும் பஞ்சங்களின் பின்னணியில் திகைப்பூட்டும் கச்சிதத்துடன் சொல்லும் படைப்பு. ஆங்கிலத்தில் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் வெளியாகவுள்ளது. தெலுங்கில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆண் -பெண் உறவின் நுணுக்கமான சில ஆழங்களுக்குள் ஊடுருவிச்செல்லும் கன்யாகுமரி இருபத்தைந்தாண்டுகளாகத் தொடர்ச்சியாக வாசிக்கப்படும் நாவல். காலம் மாறுந்தோறும் அதன் அடிப்படை வினாக்கள் கூர்கொள்கின்றன.
பி.கே.பாலகிருஷ்ணன் என்னும் மலையாளச் சிந்தனையாளரின் கட்டுரைகள். நாவல் என்னும் கலையை புரிந்துகொள்ள, அதை வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முறையாகப் பயன்படுத்த வழிகாட்டும் நூல். கட்டுரை நூலாயினும் உத்வேகமிக்க வாசிப்பை அளிப்பது.
தமிழில் இளைஞர்களிடையே மிக அதிகமாக வாசிக்கப்படும் ஜெயமோகனின் நூல் இரவு. இது அவர்களின் உலகம். இரவில் விழித்து பகலில் தூங்கும் ஒரு சிறு சமூகத்தை சித்தரிக்கும் படைப்பு.
இலக்கியத்தை வாசிப்பதெப்படி? எது நல்ல இலக்கியம்? எது வணிக எழுத்து? இலக்கிய அடிப்படைகள் பற்றிய பல கேள்விகளுக்கு விடைசொல்லும் கட்டுரைகள் கொண்ட நூல்.
காமம் பாவமென உருக்கொள்வது சமூக உறவுகள் வழியாக. காமத்தையும் பாவத்தையும் பிரித்திப்பார்ப்பது ஒரு மனமுதிர்ச்சி. அனுபவத்தினூடாக நிகழும் பரிமாணம் அது. அந்த விடுதலையைப் பேசும் நாவல் இது.
இந்து மெய்யியலை மதத்தின் சம்பிரதாயங்கள் மற்றும் நம்பிக்கைகளில் இருந்து விலக்கி தத்துவமாகவும் ஆன்மிகமாகவும் அணுக முற்படும் நவீன மனத்திற்குரியவை இந்தக் கட்டுரைகள். விரிவான விவாதங்களை உருவாக்கியவை.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் செய்த பயணத்தின் நேரடிப்பதிவுகள். வடக்கின் அரசியலையும், பண்பாட்டையும் எளிய கோட்டுச்சித்திரம் வழியாக தெரியவைப்பது இந்நூல்.
ஜெயமோகன் கல்லூரிப்படிப்பை விட்டு அரைத்துறவியாக வீட்டைவிட்டுக் கிளம்பிச்சென்று திரும்பி வந்த அனுபவங்களைப் பேசும் நூல் இது. அவரது புனைவுகளுக்கு நிகரான உத்வேகத்துடன் சொல்லப்பட்ட நிகழ்வுகள் கொண்டது. விஸ்வநாதன் மொழியாக்கத்தில் ஆங்கிலத்தில் வெளிவரவுள்ளது.
உளச்சோர்வு நோயை வெல்ல ஒரே வழி
நான் கடந்த மூன்று வருடங்களாக depression treatment எடுத்துகொண்டிருக்கிறேன்.வாழ்வில் வெளிச்சமே இல்லாமல் இருந்த காலம் .அப்பொழுது தான் தங்களை YouTube மூலம் அறிந்துகொண்டேன்.உங்களது காணொளி ஒன்று விடாமல் பார்துகொண்டிருக்கிரேன் . unified wisdom வகுப்புகளில் கலந்து கொண்டேன்.தங்களின் புத்தகங்கள் படித்தேன்.ஆனால் எனக்கு concentration செய்ய இயலாததால் எதிலும் செயலாற்ற முடியவில்லை. அரதி மனநிலை தான்
உளச்சோர்வுநோயை வெல்ல ஒரே வழி
It is indeed a good opening for Tamil writing in world literature. Our younger generation has to read these stories; in fact,these stories are an excellent introduction for foreign-born Indian kids to understand Indian life and culture.
A review of Padma Lakshmiஉளச்சோர்வு நோயை வெல்ல ஒரே வழி

A review of Padma LakshmiSeptember 11, 2025
தமிழில் நாம் பெருமைப்பட ஏதேனும் உள்ளதா?
நாம் தமிழ்ப்பெருமிதத்தை வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருக்கும் ஒரு சமூகம். இந்த அளவுக்குப் பழம்பெருமை பேசும் ஒரு சமூகம் உலகளவிலேயே குறைவாகவே இருக்கும் என நினைக்கிறேன். உண்மையிலேயே நாம் பெருமைகொள்ளத்தக்க ஏதேனும் நம் மரபில் உள்ளதா?
சென்றகால ரத்தம், என்றுமுள்ள கண்ணீர்
நலம்தானே? இப்போதுதான் உங்கள் நாவல் பின்தொடரும் நிழலின் குரல் வாசித்து முடித்தேன். என் நண்பர்களிடம் அந்நாவல் பற்றிப் பேசினேன். இரண்டு வகையான கருத்துக்கள் வந்தன. ஒன்று, நாவல் கொள்கைவிவாதங்களை முறையாக எல்லா தரவுகளையும் இணைத்துக்கொண்டு செய்யவில்லை, உணர்ச்சிகரமான நிகழ்வுகளை நோக்கிச் செல்கிறது என்று ஒருவர் சொன்னார். இன்னொருவர் நாவல் முழுக்க ஜெயமோகனே வேறுவேறு கதாபாத்திரங்களாக நின்று பேசுவதாகச் சொன்னார். இரண்டும் இரண்டு வகை எதிர்நிலைகளாக எனக்கு தோன்றியது.
தன் அரசியல் நம்பிக்கைகளை ஆழமாக உலுக்கிய நாவல் என்று இதை நாலைந்து நண்பர்கள் சொன்னார்கள். அவர்களெல்லாம் கொஞ்சம் மூத்தவர்கள். அரசுப்பணியில் இருந்து ஓய்வுபெற்றவர்கள். எனக்கு அப்படி எந்த உலுக்கலையும் இந்நாவல் செய்யவில்லை. நான் கம்யூனிஸம், சோவியத் ருஷ்யா பற்றி எல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டதுதான். லெனின் பற்றியே கூட விக்கிப்பீடியா அறிமுகம்தான். நான் கல்லூரியில் படிக்கையில் கல்லூரில் அரசியலே இல்லை. எல்லாருமே டெக்கிகள் ஆவதற்கான முயற்சியுடனும் கனவுகளுடனும்தான் இருந்தார்கள். நானேகூட ஒரு கனவு வைத்திருந்தேன் என்றால் என்றைக்காகவது ஒரு ஸ்டார்ட்டப் தொடங்கவேண்டும் என்னும் கனவைத்தான் சொல்லவேண்டும்.
எனக்கு இந்நாவலில் முக்கியமானதாகப் பட்டது கணவன் மனைவி உறவின் பலவகையான வண்ணங்கள் இந்நாவலில் வந்ததுதான். புக்காரினுக்கும் அன்னாவுக்கும் உள்ள உறவு. நாகம்மைக்கும் அருணாசலத்துக்கும் இடையேயான உறவு. வீரபத்ரபிள்ளைக்கும் அவர் மனைவிக்குமான உறவு. அத்தனைக்கும் மேலாக கே.கே.எம்முக்கும் அவருடைய காதலிக்குமான உறவு எல்லாமே அபாரமான நுணுக்கத்துடனும், இயல்பான தன்மையுடனும் இருக்கின்றன.
அதன் பிறகு எனக்கு அந்நாவலில் மிக முக்கியமாகத் தோன்றியது ஓர் அமைப்புக்குள் என்னென்ன அதிகாரவிளையாட்டுக்கள் நிகழும், அதையெல்லாம் எப்படியெல்லாம் சூழ்ச்சியாகச் செய்வார்கள் என்னும் சித்திரம். மிக நம்பகமாகவும், மிகமிக நுணுக்கமாகவும் அவை சொல்லப்பட்டுள்ளன. அதெல்லாம் ஒரு கார்ப்பரேட் உலகத்திலும் அப்படியே நிகழ்பவைதான்.
நான் சோவியத் ருஷ்யாவின் புரட்சி, வீழ்ச்சி எதையும் சரியாக அறியவில்லை. அவற்றை அறிவதற்கான பொறுமையுமில்லை. ஆனால் இறுதியில் கினியாழ்வின் கதையில் கிறிஸ்து வரும் காட்சிகளெல்லாம் எனக்கு இன்றைக்கு காஸாவில் நிகழும் போர்க்களத்தையும், அங்கே கொல்லப்படும் குழந்தைகளையும்தான் ஞாபகப்படுத்தின. கண்ணீருடன் மட்டுமே என்னால் படிக்கமுடிந்தது. அந்தக் கொல்லப்பட்ட ஆத்மாக்களுக்காக அருணாசலம் செய்யும் நீத்தார்க்கடன் ஒரு ஸ்பிரிச்சுவலான இடம் என்று நினைத்தது. இந்த உலகம் தோன்றியது முதல் இப்படி அநீதியாகக் கொல்லப்பட்ட அத்தனைபேருக்கும் நாம் கடன் கழிக்கத்தான் வேண்டும் என்று நினைத்தேன்.
ஜெ.ரவீந்தர்
அன்புள்ள ரவீந்தர்,
ஒரு நாவலின் கதைக்களம், அதன் தர்க்கங்கள், அதற்குரிய தரவுகள் எல்லாமே ஏதோ ஒரு காலத்துடனும் இடத்துடனும் சம்பந்தப்பட்டவை. அவை காலத்தால் பின்னகரும். இந்நாவலை எழுதும்போதே நான் ஒரு பேட்டியில் சொன்னேன், லெனின் யார் என்று கலைக்களஞ்சியத்தில் தேடும் காலம் வரும், அப்போதும் இந்நாவல் பேசும் பேசுபொருள் எஞ்சியிருக்கும் என்று. ஒரு கலைப்படைப்பில் எப்போதும் எஞ்சியிருப்பவை உணர்வுகள், மெய்யியல்தருணங்கள்.
உங்கள் வாசிப்பில் இந்நாவலில் மேலெழுந்து வந்திருப்பவை எனக்கு வியப்பளிக்கவில்லை. ஒவ்வொரு காலகட்டத்திற்கும், ஒவ்வொரு வாசகருக்கும் அப்படி ஒரு பிரதியை அளிப்பதையே நாம் நல்ல படைப்பு என்று சொல்கிறோம். பின்தொடரும் நிழலின் குரல் அப்படி பல அடுக்குகள் கொண்ட படைப்பு. எல்லா இடங்களிலும் அது நுணுக்கமும் ஆழமும் கொண்டது என்றே நான் சொல்வேன். இன்று உருவாகி வந்துள்ள தலைமுறைக்கு அரசியல் கனவுகள் இல்லாமலிருப்பதும், உலகியல் இலக்குகளே கனவுகளாக இருப்பதும் இயல்பானதே. அவர்களுக்கு இந்நாவல் நம்பிக்கைகளின் வன்முறை பற்றிய நாவலாக பொருள்கொள்ளக்கூடும். அமைப்பின் வன்முறையாகவும் தெரியக்கூடும். அடிப்படையில் கேள்வி சிந்தனையின் சுதந்திரம் பற்றியதுதானே?.
பின்தொடரும் நிழலின் குரல் போன்ற ஒரு நாவல் அனைவருக்குமானது அல்ல. எளிமையான யதார்த்தவாத நாவலை, கதையை, வாசித்துச்செல்வதுபோல அதை வாசிக்கமுடியாது. தங்களுக்கு ஏற்கனவே தெரிந்த கதைக்களத்தையும் கதைமாந்தர்களையும் புனைவில் எதிர்பார்ப்பவர்களுக்குரிய படைப்பு அல்ல அது. அந்நாவலுக்கு வரலாறு, அரசியல், கருத்தியல், மதம் என பல பின்புலங்கள் உள்ளன. அவற்றை அறிந்திருக்கவேண்டும், அல்லது அந்நாவலே அவற்றை முன்வைக்கையில் அதன்வழியாகவே அவற்றை அறிந்துகொள்ளும் கவனம் இருக்கவேண்டும்.
தீவிரமான தத்துவ- கருத்து விவாதங்கள் கொண்ட நாவல்கள் தமிழில் இல்லை. நாம் சுருக்கமான, அகவயச் சித்திரங்கள் கொண்ட நவீனத்துவ நாவலுக்குப் பழகியவர்கள். தத்துவார்த்தமான நாவல்கள் விரிவான உரையாடல்கள், தன்னுரைகள், கடிதங்கள், கட்டுரைகள் என விரிபவை. தஸ்தயேவ்ஸ்கி முதல் தாமஸ் மன் வரை செவ்வியல் நாவல்களின் பெரும்பட்டியல் உள்ளது. சமகாலப் படைப்புகள் அந்த விவாத அம்சத்தை வெவ்வேறு புனைவுத்திகளுடன் இணைத்து விரித்தெடுக்கின்றன. உம்பர்ட்டோ எக்கோ, மிலன் குந்தேரா என அப்படியும் ஒரு நீண்ட பட்டியல் உண்டு.
இந்த வகையான தத்துவவிவாத நாவல்களில் நேரடி யதார்த்தம் ஓர் எல்லையில் மீறப்பட்டேயாகவேண்டும். ஒவ்வொரு தரப்புக்கும் மிகச்சிறந்த குரலே ஒலிக்கமுடியும். அப்போதுதான் விவாதம் கூர்மையடையும். அதுவே நல்ல படைப்புக்கான அடித்தளம். ஆனால் ஒரு சூழலில் அப்படி எல்லா தரப்புக்கும் உரிய மிகச்சிறந்த தரப்பினர் இயல்பாகப் புழங்குவது யதார்த்தம் அல்ல. அனைத்து முதன்மைக் குரல்களையும் ஆசிரியரே உருவாக்கவேண்டும். ஆசிரியரின் மிகச்சிறந்த மொழி அனைத்துக் கதைமாந்தர்களுக்கும் அளிக்கப்படவேண்டும்.அதற்கு ஆசிரியரின் தன்னிலை ஒவ்வொரு தரப்பாகவும் உருமாறியாகவேண்டும். எல்லா கதைமாந்தரிலும் ஆசிரியரின் ஆளுமை கொஞ்சமேனும் இருந்தாகவேண்டும்.
அதேசமயம் தர்க்கநோக்கில் தெளிவான வேறுபாடு இருக்கும். ஆளுமைச்சித்திரத்தில் தெளிவான வரையறை காணப்படும். தர்க்கம் என்பது அதன் உச்சியில் ஏறத்தாழ ஒன்றுபோலவே இருக்கும். ஊசிமுனை ஊசிமுனையை சந்திக்கும் புள்ளி அது. அதுவே நல்ல தத்துவநாவலின் அடையாளம். பின்தொடரும் நிழலின் குரல் வெளிவந்தபோது ‘எல்லா தரப்பையும் நியாயப்படுத்துகிறார்’ என்ற குற்றச்சாட்டு பொதுவாசகர்களிடமிருந்தும், அம்பை போன்ற எழுத்தாளர்களிடமிருந்தேகூட, வந்தது இதனால்தான். இது வாசிப்பு மற்றும் புரிதலின் எல்லையை காட்டுவது.
இவ்வியல்பை எல்லா தத்துவ விவாதம் கொண்ட செவ்வியல் நாவல்களிலும் காணலாம். தஸ்தய்வேவ்ஸ்கி நாவல்களில் சட்டென்று ஒரு சிறிய கதாபாத்திரகூட தஸ்தயேவ்ஸ்கியின் குரலில் பேச ஆரம்பிப்பதை வாசகர் அறியலாம். பெரும்பாலான கதாபாத்திரங்கள் உணர்வெழுச்சியுடன் தங்கள் தரப்பைச் சொல்வதையும் காணலாம். தாமஸ் மன் நாவல்களில் அந்த உணர்வெழுச்சி இருக்காது, ஆனால் உருவகத்தன்மை இருக்கும்.
இத்தகைய நாவல்கள் நம் சூழலிலுள்ள எளிய வாசகர்களுக்கு அறிமுகம் இல்லை. அவற்றை வாசிப்பதற்கான பொறுமையோ கவனமோ அடிப்படை அறிவுத்தளமோ இங்கே குறைவு. ஆகவேதான் நீங்கள் சொன்ன நண்பர் அதை ஒரு குறைபாடாகச் சொல்கிறார்.
ஆனால் இந்த கருத்து- தத்துவத்தளம் என்பது ஒரு பீடம்தான். எல்லா தரப்பையும் அவற்றின் கூரிய முனைகளை மட்டுமே நல்ல புனைவு அறிமுகம் செய்யும். அவற்றை வலுவான சொற்றொடர்கள், உருவகங்கள் வழியாக முன்வைக்கும். அதன் பின் உணர்வுநிலைகளுக்கும், அங்கிருந்து கவித்துவத்திற்கும், தரிசனத்திற்குமே செல்லும். அவ்வாறென்றால் அது நாவல் அல்ல. ஒரு கட்டுரை நூலிலுள்ள நீண்ட நேரடி விவாதம் நல்ல நாவல்களுக்குரியது அல்ல. (விதிவிலக்கான சில நாவல்களில் அதுவும் உண்டு. மாஜிக் மௌண்டைன் ஓர் உதாரணம்)
ஆகவேதான் வெறும் கட்டுரைகளை, அதிலும் மொழித்தீவிரம் அல்லது உருவகக் கவித்துவம் கைகூடாத அரசியல் விவாதக்கட்டுரைகளை வாசிக்கும் இன்னொரு வாசகர் உணர்வுநிலைகளைக் குற்றம் சொல்கிறார். பின்தொடரும் நிழலின் குரல் கதை அல்ல, அரசியல் விவாதமும் அல்ல, இரண்டும் இணைந்து மேலெழும் புனைவுவகை. அத்தகைய புனைவு தமிழில் அந்நாவல் வழியாகவே அறிமுகமாகியது. அதற்கான வாசகர்கள் அடுத்த தலைமுறையில்தான் சிலர் உருவாகி வந்தனர்.
ஐஸ்வரியாவின் மொழியாக்கத்தில் விரைவில் ஆங்கிலத்தில் வெளியாகவிருக்கும் நாவல் அது. மேலும் வாசகர்களை அது அடையக்கூடும்.
ஜெ
பின்தொடரும் நிழலின் குரல் மின்னூல் வாங்க பின் தொடரும் நிழலின்குரல் வாங்க
சமயவேல்
தமிழ்க் கவிஞர். எண்பதுகளில் எழுதவந்த குறிப்பிடத்தக்க கவிஞர்களில் சமயவேலும் ஒருவர். அலங்காரமற்ற இயல்புமொழிக் கவிதையை (Plain Poetry) முதலில் அறிமுகப்படுத்தியவர் என விமர்சகர்களால் சமயவேல் அடையாளப்படுத்தப்படுகிறார். சமயவேல் தொடர்ந்து கவிதைகள், சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எழுதி வருகிறார்.
சமயவேல் – தமிழ் விக்கிகவிதைத் தொகுப்புகள்காற்றின் பாடல் (1987)அகாலம் (1994)தெற்கிலிருந்து சில கவிதைகள் (தொகை நூல்)அரைக்கணத்தின் புத்தகம் (2007)மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும் (2010)பறவைகள் நிரம்பிய முன்னிரவு (2014)இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? (2019)சமகாலம் என்னும் நஞ்சு (2021)மின்னிப் புற்கள்சிறுகதைத் தொகுப்புஇனி நான் டைகர் இல்லை (2011)கட்டுரைத் தொகுப்புஆண்பிரதியும் பெண்பிரதியும் (2017)புனைவும் நினைவும்: வெட்ட வெளியில் ஒரு கரிசல் கிராமம் (2018)மொழிபெயர்ப்பு நூல்கள்அன்னா ஸ்விர் கவிதைகள் (2018)குளோரியா ஃப்யூர்டஸ் கவிதைகள் (2019)மரக்கறி (The Vegetarian), கொரிய நாவல்இலையுதிர்கால மலர் வாடுவதும் இல்லை வீழ்வதும் இல்லை (நவசீனக் கவிதைகள்) 2021
முடிவிலியின் புன்னகை
கொற்றவை படிப்பதற்காகவே கொடுங்கள்ளூர் கண்ணகி (வி.ஆர்.சந்திரன், தமிழில் ஜெயமோகன்), சிலப்பதிகாரம் நாவல் வடிவில் (கே.ஜி.ஜவர்லால்), தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் (ஜெயமோகன்) ஆகிய நூல்களை படித்தேன். இந்நூல்கள் கொற்றவையின் பல பகுதிகள் புரிவதற்கு உதவியாக இருந்தன.
குமரியில் ஆரம்பிக்கும் கதை கடல் கொண்ட சம்பாபுரி அன்னையின் கால் தொட்டு, புகாரில் பயணிக்கிறது. புகாரில் ஒன்றும் அறியாத பேதையாக இருக்கும் கண்ணகி, ஐந்நிலத்தைக் கடந்து மதுரையில் முப்புரம் எரித்த கொற்றவையாக மாறி நிற்கும் கதையே இந்த கொற்றவை.
கதையின் ஆரம்பத்தில் வரும் பழம் பாடல் சொன்னதில் பல வகையான வார்த்தைகளின் தொடக்கம் அல்லது மொழியின் தொடக்கத்தை கூறும் வாக்கியங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். உதாரணமாக
‘ நிரம்பியிருந்தமையாலும் நிரந்திருந்தமையாலும் நீர் என்றும், கடந்தமையால் கடல் என்றும் சொல்லப்பட்ட ஓய்வறியாப் பெருவெளியிலிருந்து காலத்தின் முதல் விளிம்பிலிருந்தே தொடர்ந்து வரும் அந்தச்சொல் மீண்டும் மீண்டும் பிறந்து வந்தபடியே இருந்தது.’
‘ஆ என்று காலப்பசிகொண்டு வாய்திறந்து வரும் அலை நா மடக்கி பெருவெளியில் ஒரு மிடறை விழுங்கித் திரும்பியது. அதை அவன் ‘ஆழம்’ என்றறிந்தான். ஆழமேயான ஆழி அலைகளால் தன்னை மறைத்த பேரமைதி. அதன் விளிம்புகள் ஊழி எனப் பெயர் கொண்டன.’
அதைப்போலவே ஓம், மால் என்று ஒவ்வொரு சொல்லின் தொடக்கத்தையும் கூறி மொழி இவ்வாறு தான் தொடங்கி இருக்கும் என்று நம்மை எண்ண வைக்கிறார். எத்தனை முறை கடல் கொண்டாலும் தமிழ் பொங்கி பெருகி வளர்ந்த கதையில் கொற்றவை தொடங்குகிறது.
புகாரில் மாதவியிடம் இருந்து பிரிந்து கண்ணகியுடன் கோவலன் கவுந்தி அடிகள் துணையுடன் மதுரை நோக்கி செய்யும் பயணத்தில் கதை சூடு பிடிக்கிறது. புன்னைக்காட்டு நீலி கவுந்தி அடிகள் உருவத்துடன் கண்ணகிக்கு துணையாக வருகிறாள். ஐவகை நிலங்களையும் கடந்து பல்வேறு மக்களை சந்தித்து பல இன்னல்களை கடந்து மதுரையை அடைகின்றனர்.
ஐவகை நிலங்களையும் கண்ணகி நீலியின் துணையுடன் பல்வேறு கண்கள் உடன் நோக்குகிறாள். நெய்தலை சுறா மீனின் கண்களுடனும், மருதத்தை தவளையின் கண்களிலும், குறிஞ்சியை குரங்கின் கண்கள் பெற்றும், பாலையை செந்நாயின் கண்களோடவும், முல்லையை பசுங்கன்றின் கண்களிலும் காண்கிறாள். பயணத்தின் ஊடாக நீரர மகளிரின் கதை, ஆதிமந்தியின் கதை, வள்ளி முருகனின் கதை, கொற்றவையின் கதை என்று பல்வேறு கதைகளுடன் நாமும் பயணிக்கிறோம்.
வெளியில் இருந்து பார்க்கும் பொழுது செழிப்பாக இருக்கும் மதுரை உள்ளே நீதி இல்லாமலும், மக்கள் மீது அக்கறை செலுத்தாத அரசாலும் அழுகி கிடைக்கிறது. அனைத்தையும் தூய்மையாக்கும் தீயினால் அதை சுத்தப்படுத்த வந்தாள் தாய். நம் திருவிழாக்களில் ஊருக்கு சன்னதம் வந்தாலே அந்த இடத்தையே கலக்கி விடுவார்கள். இந்தக் கதையில் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு சன்னதம் வந்து அவர்களுக்கு நடுவே கொற்றவையாக ஒற்றை முலை அறிந்து கண்ணகி வரும் காட்சியை நினைத்துப் பார்த்தாலே அச்சம் தொற்றிக் கொள்கிறது. மதுரையை எரித்து நீதியை நிலை நாட்டிய அன்னை எங்கேயும் நிற்காமல் நடந்து சேர மண்ணில் சாக்கிய நெறியை தழுவி கோவலனுடன் விண்ணகம் புகுகிறாள்.
காடு மலை ஏறி அன்னையை தரிசிக்க செல்லும் சேரன் செங்குட்டுவனின் கதை அடுத்தது. இளங்கோவின் கதையுடன் ஐயப்பனின் கதையை இணைத்திருக்கிறார் ஆசிரியர். சீத்தலைச் சாத்தனார் எரிந்த மதுரையை மீண்டும் சென்று பார்த்த கதை சுவாரஸ்யமானது.
பசியுடன் இருக்கும் மக்களுக்கு தீராமல் அன்னம் அளிக்கும் மணிமேகலையின் கதை, கொடுங்கலூர் பகவதியின் கதை, டச்சு வீரர்கள் அன்னையின் சக்தியை உணர்ந்த கதையானது கொடுங்கள்ளூர் கண்ணகி புத்தகத்திலும் வரும்.
குமரியில் ஆரம்பித்த கதை இறுதியில் ஆசிரியர் தன் குடும்பத்துடன் குமரியில் கடலையும் அன்னையையும் தரிசித்த கதையுடன் முடிகிறது.
கதை படித்த பிறகு எனக்கு தோன்றியது இது. ஆரம்பத்தில் இந்த புதிய நடை கொஞ்சம் தடுமாற வைக்கிறது. தளிர் நடையுடன் தட்டு தடுமாறி நடந்தாலும் கோவலன் கண்ணகி பயணத்துடன் வேகமாக நடை போடுகிறோம். மதுரைக்குள் நுழைந்தவுடன் நம் நடை ஒட்டமாகிறது. சேர நாட்டில் நுழைந்த பிறகு ஓட்டம் மீண்டும் நடையாகிறது. இறுதியில் குமரியின் கடற்கரையில் அன்னையின் கதையை மனதில் அசை போட்டபடி அமர்ந்து வானை பார்க்கும் போது நமக்கு தோன்றுகிறது ” நீலம் ஒரு புன்னகை “.
கிரிதரன் (முகநூலில்)
மதுரை புத்தகத் திருவிழாவில் இன்று இருப்பேன்
மதுரை புத்தகவிழா 5 செப்டெம்பர் (வெள்ளி) முதல் 15 செப்டெம்பர் (திங்கள்) வரை நிகழ்கிறது. விஷ்ணுபுரம் அரங்கு எண் 44 மற்றும் 45.
மதுரை புத்தகவிழாவில் இன்று (12 வெள்ளி 2025) மாலை 6 முதல் இருப்பேன். நண்பர்களை வரவேற்கிறேன்
2025 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெற்ற ரமேஷ் பிரேதன் அவர்களின் படைப்புகள் கிடைக்குமா என விசாரிக்கிறார்கள். மதுரை புத்தகவிழாவில் யாவரும் புத்தக அரங்கில் அவர் நூல்கள் கிடைக்கும்.
எங்கள் புதிய நூல்கள்ஜெயமோகனின் புதிய நாவல். கடல் என்னும் திரைப்படம் இந்நாவலை ஒட்டி உருவானது. செவ்வியல் தன்மை கொண்ட இப்படைப்பில் ஓர் ஆன்மாவின் கடலில் தெய்வமும் சாத்தானும் மோதிக்கொள்ளும் அலைகள் கொந்தளிக்கின்றன. மகாகவி தாந்தேயின் டிவைன் காமெடியின் நீட்சியென அமையும் படைப்பு இது.
ஜெயமோகன் கீதை பற்றி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். நான்கு நாட்களில் ஆற்றிய தொடர் உரை என்பதனால் எளிய நடையில், நேரடியாக வாசகனுடன் பேசும் தன்மைகொண்டது. கீதைக்குள் நுழைய இன்றைய நவீன வாசகனுக்கு திறக்கப்படும் மிகச்சிறந்த வாசல்.
பண்பாடு பற்றிய ஜெயமோகனின் கட்டுரைகளின் தொகுப்பு. நாம் ஆன்மிகம், பண்பாடு என எண்ணியிருப்பவை பலசமயம் சம்பிரதாயமான கருத்துக்கள். அவற்றை நவீன வாழ்க்கையுடன் இணைத்துப்பார்க்கும் பார்வைகள் கொண்ட நூல் இது.
சுந்தர ராமசாமியின் ஆளுமையை தன் நினைவுகளினூடாக ஜெயமோகன் சித்தரிக்கும் இந்நூல் அக்காலகட்டத்தில் நிகழ்ந்த அழகியல் விவாதங்களையும் தொட்டுக்கொண்டு ஒரு நாவலைப்போல் விரிவது. நுணுக்கமான காட்சிவிவரணைகளும், புன்னகைக்கவைக்கும் தருணங்களும் கொண்டது.
தினமலரில் தொடராக வந்த எளிமையான கட்டுரைகள். இவை நம் ஜனநாயகத்தின் அடிப்படைகளை விவாதிக்கின்றன. நாம் அறிந்த தகவல்களை அறியாத கோணத்தில் காட்டி இன்றியமையாதவற்றைப் புரியவைப்பது இவற்றின் பாணி.
நாஞ்சில்நாடனைப் பற்றிய ஜெயமோகனின் நூல். அவரை பிரியமான நகைச்சுவையுடன் மதிப்பிடுகிறது, நட்பை விவரிக்கிறது.
எங்கள் நூல்கள்
தமிழில் விஷ்ணுபுரம் அளவுக்கு எந்த நாவலும் அத்தனை கவனமான வாசிப்பைப் பெற்றதில்லை. பல கோணங்களில் அவரவர் அரசியலுக்கும் கருத்துநிலைக்கும் ஏற்ப அதை வாசித்துள்ளனர். இரண்டாவது தலைமுறையில் விஷ்ணுபுரம் குறியீடுகளின் அடுக்குகள் செறிந்த, உணர்வுநிலைகள் உச்சம் தொட்ட, ஒரு நவீன இந்தியக் காவியநாவலாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் உலகவாசகர்களின் வாசிப்புக்குச் செல்லவுள்ளது.
குறைத்துச்சொல்லும் அழகியல் கொண்ட கதைகள். இளம்படைப்பாளியான விஷால்ராஜாவின் குறிப்பிடத்தக்க சிறுகதைத் தொகுதி இது. வாழ்க்கையின் மென்மையான புதிர்களைப் பேசும் கதைகள்
பின்தொடரும் நிழலின் குரல் தமிழின் முதன்மையான அரசியல் நாவலாக பல விமர்சகர்களால் மதிப்பிடப்பட்டது. அரசியலின் அடிப்படையாக உள்ள கருத்தியல் என்பதை ஆராயும் நாவல் இது. ஒரு கருத்துநிலைபாடு சாமானியனை எப்படி அபாயகரமான ஆயுதமாக ஆக்கிவிடுகிறது என்னும் கேள்வி வரலாற்றில் என்றும் உள்ள ஒன்று. அதை ஆராயும் படைப்பு இது.
மைத்ரி ஓர் உருவகக் கதை. ஒரு மலை. ஒரு பயணி. ஒரு காதல். ஆனால் இந்த பயணம் மலையின் ஆழங்களின் மடிப்புகளில் இருந்து மலையுச்சியின் வெறுமையின் பரவசம் வரை நீள்கையில் ஆன்மிகமான இன்னொரு பரிணாமத்தை அடைகிறது.
மருபூமி வைக்கம் முகமது பஷிர் தன்னந்தனியாக பாலைவனத்தை கடந்த அனுபவத்தைப் பற்றி எழுதிய சுருக்கமான குறிப்பில் இருந்து விரிவாக்கம் செய்யப்பட்ட குறுநாவல். ஓர் அகப்பாலையை கடக்கும் ஒருவனின் அனுபவம் என வகைப்படுத்தலாம். புகழ்பெற்ற பல சிறுகதைகள் அடங்கிய நூல்.
அல்கிஸா தமிழின் முதல் இஸ்லாமிகேட் நாவல் என்று விமர்சகர்களால் குறிப்பிடப்பட்டது. இஸ்லாமிய அழகியல் உச்சம் என சொல்லத்தக்க கவாலி இசை, இஸ்லாமிய ஆன்மிக உச்சம் என சொல்லத்தக்க சூஃபி மரபு ஆகியவை ஓர் அழகிய காதல்கதையால் இணைக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் விரைவில் வெளிவரவுள்ளது.
தமிழின் தலைசிறந்த நாவல் என வாசகர்கள் பலரால் கருதப்படும் காடு மனித உறவின் உருவகமான குறிஞ்சி நிலத்தில் நிகழும் ஒரு காதல்கதை. வாழ்க்கையில் பாலை வரலாம். காதல் என்றும் ‘வறனுறல் அறியாச் சோலை’தான் என இந்நாவல் காட்டுகிறது.
சினிமாப்பின்னணியில் எழுதப்பட்ட ஓர் இழந்த காதலின் கதை. கறுப்புவெள்ளை சினிமாவின் உலகம் கவித்துவக்குறியீடாக ஆக்கப்பட்டுள்ளது இந்நாவலில். கற்பனாவாத அழகியல் கொண்ட படைப்பு.
முதுநாவல் ஜெயமோகனின் 133 சிறுகதைகளின் தொகுப்புகளான 14 நூல்களில் ஒன்று. இந்திய சூஃபி மரபின் ஆன்மிகநிலைகளில் இருந்து இந்திய வாழ்க்கையை ஆன்மிகம் வந்து தொடும் தருணங்களைச் சொல்லும் மகத்தான சிறுகதைகள் அடங்கியது. இதில் பல கதைகள் இன்று உலகப்புகழ்பெற்ற அமெரிக்க இலக்கிய இதழ்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
கதாநாயகி ஓரு பேய்க்கதை. ஆனால் அந்தப் பேய்க்கதை சமகாலத்தில் இருந்து பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தை அடைகிறது. அதற்கு முந்தைய லண்டனை ஊடுருவி ரோமாபுரிக்காலம் வரை நீள்கிறது. பல அடுக்குகளாலான நாவல் இது.
முற்றிலும் மங்கலத்தன்மை கொண்ட நாவல். மதுரை மீனாட்சி திருமணத்தின் அழகியபெருந்தோற்றம். ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் வரவிருக்கிறது.
தமிழகத்தின் தலித் எழுச்சியின் தொடக்கப்புள்ளியை, இந்தியப்பெரும் பஞ்சங்களின் பின்னணியில் திகைப்பூட்டும் கச்சிதத்துடன் சொல்லும் படைப்பு. ஆங்கிலத்தில் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் வெளியாகவுள்ளது. தெலுங்கில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆண் -பெண் உறவின் நுணுக்கமான சில ஆழங்களுக்குள் ஊடுருவிச்செல்லும் கன்யாகுமரி இருபத்தைந்தாண்டுகளாகத் தொடர்ச்சியாக வாசிக்கப்படும் நாவல். காலம் மாறுந்தோறும் அதன் அடிப்படை வினாக்கள் கூர்கொள்கின்றன.
பி.கே.பாலகிருஷ்ணன் என்னும் மலையாளச் சிந்தனையாளரின் கட்டுரைகள். நாவல் என்னும் கலையை புரிந்துகொள்ள, அதை வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முறையாகப் பயன்படுத்த வழிகாட்டும் நூல். கட்டுரை நூலாயினும் உத்வேகமிக்க வாசிப்பை அளிப்பது.
தமிழில் இளைஞர்களிடையே மிக அதிகமாக வாசிக்கப்படும் ஜெயமோகனின் நூல் இரவு. இது அவர்களின் உலகம். இரவில் விழித்து பகலில் தூங்கும் ஒரு சிறு சமூகத்தை சித்தரிக்கும் படைப்பு.
இலக்கியத்தை வாசிப்பதெப்படி? எது நல்ல இலக்கியம்? எது வணிக எழுத்து? இலக்கிய அடிப்படைகள் பற்றிய பல கேள்விகளுக்கு விடைசொல்லும் கட்டுரைகள் கொண்ட நூல்.
காமம் பாவமென உருக்கொள்வது சமூக உறவுகள் வழியாக. காமத்தையும் பாவத்தையும் பிரித்திப்பார்ப்பது ஒரு மனமுதிர்ச்சி. அனுபவத்தினூடாக நிகழும் பரிமாணம் அது. அந்த விடுதலையைப் பேசும் நாவல் இது.
இந்து மெய்யியலை மதத்தின் சம்பிரதாயங்கள் மற்றும் நம்பிக்கைகளில் இருந்து விலக்கி தத்துவமாகவும் ஆன்மிகமாகவும் அணுக முற்படும் நவீன மனத்திற்குரியவை இந்தக் கட்டுரைகள். விரிவான விவாதங்களை உருவாக்கியவை.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் செய்த பயணத்தின் நேரடிப்பதிவுகள். வடக்கின் அரசியலையும், பண்பாட்டையும் எளிய கோட்டுச்சித்திரம் வழியாக தெரியவைப்பது இந்நூல்.
ஜெயமோகன் கல்லூரிப்படிப்பை விட்டு அரைத்துறவியாக வீட்டைவிட்டுக் கிளம்பிச்சென்று திரும்பி வந்த அனுபவங்களைப் பேசும் நூல் இது. அவரது புனைவுகளுக்கு நிகரான உத்வேகத்துடன் சொல்லப்பட்ட நிகழ்வுகள் கொண்டது. விஸ்வநாதன் மொழியாக்கத்தில் ஆங்கிலத்தில் வெளிவரவுள்ளது.
Vijay and alternate politics
It is true that power politics is impossible without compromise. But the real meaning of democracy is people participating in the power and sharing it. So if the majority of people are away from power politics, it means letting the thugs and greedy people handle the power of a state.
Vijay and alternate politicsஇந்தியப்பெற்றோர் குழந்தைகளை அரசர்களைப் போல வளர்க்கிறார்கள். 22 வயதில் படிப்பு முடிந்ததும் அக்குழந்தை வேலைதேடும்போது பிச்சைக்காரன் ஆகிறர்கள். வேலைக்குப்பின் அடிமை ஆகிறது. இந்த மாபெரும் வீழ்ச்சி ஒரு பெரிய உளச்சிக்கலாக ஆகிவிடுகிறது.
இளையதலைமுறையும் பெற்றோரும்September 10, 2025
சூஃபி இலக்கியம், நாகர்கோயில் நிகழ்வு
சென்ற 10 செப்டெம்பர் 2025 அன்று பெங்களூரில் வாழும் எழுத்தாளர் எச். முகம்மது சலீம் அவர்கள் தொகுத்த ‘தெற்கிலிருந்து ஒளிரும் சூஃபி சுடர்கள்’ என்ற நூலின் வெளியீட்டு விழா நாகர்கோயில் ஹோலி கிராஸ் கல்லூரியில் நிகழ்ந்தது. நண்பர் ஹமீம் முஸ்தபா நூல்வெளியீட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். நண்பர் ஷாகுல் ஹமீது வண்டி ஓட்ட நான் காலை பத்துமணிக்கு கிளம்பிச் சென்றேன்.
நூலை நான் வெளியிட்டேன், மதிப்புக்குரிய மூத்தபடைப்பாளி பொன்னீலன் பெற்றுக்கொண்டார்.விழாவில் நண்பர் நிஷா மன்ஸூர் சூஃபி மரபு பற்றியும், தமிழக சூஃபி இயக்கத்தைப் பற்றியும் விரிவாக அறிமுகம் செய்து நூலின் கருத்தமைப்பு மற்றும் உணர்வுநிலை பற்றிய உரை ஒன்றை ஆற்றினார்.ஹோலி கிராஸ் தமிழ்த்துறைத் தலைவி வரவேற்புரை வழங்க, ஹோலிகிராஸ் கல்லூரி முதல்வர் தலைமையுரை ஆற்றினார். நான் வெளியீட்டுரை ஆற்றினேன்.
நீண்ட நாட்களுக்குப்பின் பொன்னீலனைப் பார்த்தேன். அவருடன அவருடைய மூத்த மகள் வந்திருந்தார். மகள் உதவியுடன் செந்தீ நடராசன் வந்திருந்தார். நீண்ட நாட்களுக்குப்பின் பேரா.ஜனார்தனனை பார்த்தேன். அனீஷ்கிருஷ்ணன் நாயர் வந்திருந்தார். தக்கலை ஹலீமா, அனந்தசுப்ரமணியம், ஜி.ஜவகர் என பல நண்பர்களை பார்த்தேன். நெல்லையில் இருந்து கவிஞர் மதார், மற்றும் அழிசி பதிப்பகம் நடத்திவரும் ஶ்ரீனிவாச கோபாலன் என பல நண்பர்கள் வந்திருந்தார்கள்.
நான் உரைக்குப்பின் விடைபெற்று கிளம்பினேன். நிஷா மன்ஸூரும் என் இல்லத்திற்கு வந்தார். ஒரு மணிநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பிச்சென்றார். ஒரு மகிழ்ச்சியான நாள்.
சூபி நிகழ்வில் என் உரை பதிவுசெய்யப்படவில்லை. என் நினைவிலிருந்து சுருக்கத்தை இவ்வாறு அளிக்கிறேன்.
சூபி மரபு, குமரியின் சூஃபிகள் மற்றும் நான்.
நண்பர்களே, நாங்கள் நண்பர்களுடன் இணைந்து குரு நித்யா பேரில் நடத்திவரும் முழுமையறிவு என்னும் கல்வி இயக்கத்தில் சூஃபி மெய்யியல் பயிற்றுவிக்கும் நண்பர் நிஷா மன்ஸூர் சிறப்பான ஓர் உரையை ஆற்றினார். இங்கே நான் அழைக்கப்படுவதற்கான காரணங்களில் ஒன்று முழுமையறிவு வகுப்புகள் என நினைக்கிறேன். அதன்பொருட்டு நன்றி.
இந்த அவையில் ஒரு நூலை அறிமுகம் செய்ய விரும்புகிறேன். ‘சூஃபியிசம் ஓர் எளிய அறிமுகம்’ என்னும் நூல் முனைவர் ஃபரீதா கானம் எழுதியது. மொழியாக்கம் மீரா. (குட்வேர்ட் புக்ஸ்). இந்நூல் சூஃபி மரபைப்பற்றிய ஒரு சுருக்கமான, ஆனால் மிக முழுமையான அறிமுகம். நான் வழக்கமாக மொழியாக்க நூல்களைப் பரிந்துரைப்பதில்லை, மொழியாக்கங்கள் படிக்கவே முடியாதபடிச் செய்யப்படுவது வழக்கம். இந்நூல் மிகச்சிறப்பான நடையுடன் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்நூலில் ஃபரீதா சூஃபி மரபின் தொடக்கம் பற்றிய ஒரு சித்திரத்தை அளிக்கிறார். சூஃபி என்னும் சொல் திண்ணை, கம்பிளி, வரிசை என்னும் வேறுவேறு சொற்களில் இருந்து உருவாகி வந்திருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. அரேபியாவுக்கு வெளியே பாரசீகத்திலும் கீழைநாடுகளிலும்தான் இது ஒரு பெரிய இயக்கமாக உருவெடுத்தது. நபியின் திண்ணைத்தோழர்கள் என்னும் மாணவர் அணி அவர் வாழ்வுடனேயே பிற உடைமைகளோ, பிற வாழ்க்கையோ இல்லாமல் பயணித்தது. அவர்களிடமிருந்தே சூஃபி என்னும் மனநிலை உருவாகி வந்தது.
சூஃபி இயக்கம் கீழைநாட்டில் மிகப்பெரிய பண்பாட்டுச் செல்வாக்கைச் செலுத்திய ஒன்று. ஆன்மிக நோக்கம் கொண்டு அதை அணுகலாம். மதநம்பிக்கை சார்ந்தும் அணுகலாம். இவை ஏதும் இல்லாதவர்களுக்குக் கூட அவ்வியக்கம் முக்கியமான ஒன்று. அதன் மூன்று தளங்கள் முக்கியமானவை. அறிவார்ந்ததும் தத்துவம் சார்ந்ததுமானதுமான முதற்தளம் கீழைச்சிந்தனையை, இந்திய சிந்தனையை அறிய முயலும் எவருக்கும் தவிர்க்கமுடியாது. அதன் பங்களிப்பின்றி கீழைச்சிந்தனை என்பதே இல்லை. இரண்டாவது தளம், உணர்வுபூர்வமானது, கலை சார்ந்தது. வேறு எதன்பொருட்டு இல்லை என்றாலும் சூஃபி இசையின் பொருட்டாவது அதை ஓர் அறிவியக்கவாதி அறிந்திருக்கவேண்டும். மூன்றாவது தளம் அதன் மெய்யியல், மெய்ஞானத்தளம்.
என் மகன் அஜிதன் இதைப்பற்றி பேச என்னைவிடவும் தகுதியானவன். படித்தேயாகவேண்டிய ‘ஐம்பதாயிரம் பக்கங்கள்’ என சூஃபி தத்துவம் பற்றி பேசும்போது ஒரு முறை குறிப்பிட்டான். மேலைநாட்டு பிளேட்டோவிய கருத்துமுதல்வாதத் தத்துவத்துடனும், கீழைநாட்டு மெய்யியல் மரபுகளுடனும் விவாதித்து விரிந்த ஒரு தத்துவப்பெரும் பரப்பு அது. நாம் சூஃபிகளை தத்துவம் கடந்தவர்கள், மெய்ஞானிகள் என நினைக்கிறோம். அது சரிதான். ஆனால் அத்தகைய நுண்ணிய அகப்பயணத்தை கருத்துநிலையாக ஆக்கும்போது உயர்தத்துவம் இயல்பாக உருவாகி வருகிறது. அதற்கான உருவகங்களும் உருவாகி வருகின்றன. (பாலைவனத்தை கடத்தல் என்னும் அனுபவத்தை சூஃபி உருவகமாக கொண்டு அஜிதன் எழுதிய மருபூமி இந்த தளத்தில் தமிழில் எழுதப்பட்ட மகத்தான ஆக்கங்களில் ஒன்று)
சூஃபி இசை பற்றி நான் பேசத் தகுதியானவன் அல்ல. என் அறிதல் மிகக்குறைவானது. சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். ஒரு தனிநபரின் குரல்வழி மீட்டலாக, அகவெளிப்பாடாக நீளும் ‘மெலடி’ என்னும் இன்னிசை மரபே கீழைநாட்டு இசை. அந்த இசையில் குரல்வழியாகவே ஒரு சேர்ந்திசை (ஆர்கெஸ்ட்ரல் தன்மை) உருவானது சூஃபி இசைமரபு வழியாகவே. அதுவே இந்து மரபுக்குள் பஜனை சம்பிரதாயமாக வந்தமைந்தது. அஜ்மீரில் மொய்னுதீன் சிஷ்டி அவர்களின் தர்காவில் அதைக் காணலாம். ஒருவர் பாட பலர் இணைந்துகொள்வார்கள். பாட்டு சென்றுகொண்டே இருக்கும்.பாடுபவர்கள் கிளம்பிச்செல்வார்கள், புதியவர்கள் வந்து அமர்வார்கள். (அஜிதனின் அல்கிஸா என்னும் நாவலில் இந்த அனுபவம் அற்புதமாகக் நிகழ்த்தப்பட்டுள்ளது)
ஃபரீதா சூஃபி மரபின் இரண்டு மனநிலைகளை குறிப்பிடுகிறார். அதை சூஃபியிசத்தின் அடிப்படையாகவே கொள்ளலாம். ஒன்று, ‘நபியின் கால்தூசிக்கு நிகரல்ல உலகியல்’ என்னும் வரி. இரண்டு ‘எல்லா பொழுதும் இறைவனுக்கே’ என்னும் வரி. அவைதான் சூஃபிகளின் ஆதாரசிந்தனையாக உள்ளது. சூஃபி இயக்கம் அந்த இரண்டு மனநிலைகளின் நீட்சியே.
ஃபரீதா தன் நூலில் சிஷ்டி மரபு. காதிரியா மரபு, சுஹ்ரவர்தியா மரபு, நக்ஷ்பந்தி மரபு, ஃபிர்தௌசி மரபு ஆகிய ஐந்து மரபுகள் சூஃபி இயக்கத்தில் இந்தியாவில் உள்ளன என்று குறிப்பிடுகிறார். தமிழகத்திலும் அந்த மரபுகள் உள்ளன. இங்கே காதிரியா மரபே (முகையிதீன் ஆண்டவர்) முதன்மையாக உள்ளது என அறிந்துகொண்டேன்.
நண்பர்களே, இன்னொரு நூலை நான் இங்கே குறிப்பிடவேண்டும். சூஃபி மரபு பற்றிய என் சிந்தனையை வகுத்தளித்த நூல்களில் இதுவும் ஒன்றி. The Foundations of the composite culture in india. என்னிடம் உள்ள பிரதியை காட்டுவதற்காகக் கொண்டுவந்துள்ளேன். நூலாசிரியர் மாலிக் முகமது அவர்கள் பத்மஶ்ரீ விருது பெற்றவர். கோழிக்கோடு பல்கலை துணைவேந்தராக இருந்தவர். நான் அவரை ஒருமுறை சந்தித்ததுண்டு, ஓரிரு சொற்கள் பேசினேன். அவர் நாகர்கோயிலில் வாழ்ந்தார், 2007ல் கொள்ளையர்களால் அவரும் மனைவியும் கொல்லப்பட்டார்கள். (செய்தி).
மாலிக் முகம்மது அவர்கள் தன் நூலில் சூஃபி மரபு இஸ்லாமிய ஆட்சிக்காலத்தில் ஆற்றிய பங்களிப்புகளை சுருக்கமாகச் சொல்கிறார். (சூஃபி மரபு பற்றிய அவருடைய இன்னொரு நூல் விரிவானது). இஸ்லாமிய ஆட்சியாளர்களின் போர்கள், அதிகாரப்போட்டிகள் வழியாகவே நாம் அவர்களை அறிந்துள்ளோம். அது சூழ்ச்சி என நான் நினைக்கவில்லை, அதுவே பதினேழாம் நூற்றாண்டு ஐரோப்பிய வரலாற்றெழுத்து முறை. ஆனால் ஐம்பதாண்டுகளாக உருவாகி வந்துள்ள வரலாற்றெழுத்துமுறை என்பது மக்கள் வாழ்க்கையை அளவீடாகக் கொண்டு வரலாற்றை எழுதுவது. அந்நோக்கில் மாலிக் முகமது முகலாயர் கால ஆட்சிமுறை, சமூகமுறையை மதிப்பிடுகிறார்.
அவர் ஓர் இரட்டைநிலை ஆட்சியை உருவகிக்கிறார். அதை இப்படிச் சொல்லலாம். காஸி- சூஃபி முறை. காஸிகள் இஸ்லாமிய நீதிபதிகள் மற்றும் நிதியதிகாரிகள். அவர்கள் மரபார்ந்த இஸ்லாமிய ஆட்சியை அரசப்பிரதிநிதிகளாக நின்று நிகழ்த்தினர். இஸ்லாமிய மதக்கொள்கைகளை செயல்நெறிகளாகக் கொண்டனர். சூஃபிகள் நெகிழ்வான பார்வைகொண்டவர்கள், அமைப்பு சாராதவர்கள். அவர்கள் இஸ்லாமிய மையப்போக்கைக் கடந்துசென்றவர்கள். அதிகாரத்திற்கு வெளியே எளிய மக்களுடன் வாழ்ந்தவர்கள். பிற மதங்களுடன் இசைவை உருவாக்கியவர்கள். அவர்கள் இஸ்லாமிய ஆட்சியின் கருத்தியல் ஏற்பை உருவாக்கினார்கள். ஆகவே இஸ்லாமிய ஆட்சி அவர்களை ஆதரித்தது. இந்தியாவின் சமூகத்தை ஒருங்கிணைவும் ஒத்திசைவும் உள்ளதாக ஆக்க சூஃபிகளே பெரும்பங்காற்றினர்.
தெற்கிலிருந்து ஒளிரும் சூஃபி சுடர்கள் என்னும் இந்நூலில் முகம்மது சலீம் அவர்கள் குமரிமாவட்ட சூஃபி இறைநேசச்செல்வர்கள் பற்றிய ஆய்வுகளை தொகுத்துள்ளார். குமரிமாவட்ட சூஃபி ஞானிகளில் முதன்மையானவரும் மூத்தவருமான தக்கலை பீர்முகம்மது அப்பா பற்றி மூன்று கட்டுரைகள் உள்ளன. பீர்முகம்மது அப்பா அவர்களை ஒரு கவிஞராக முன்னிறுத்தும் கட்டுரைகள் முக்கியமானவை. அவர் ஞானி, ஆனால் என்னைப்போன்ற ஒருவருக்கு எந்த ஞானமும் இலக்கியம் வழியாகவே வந்துசேரமுடியும்.
புகைப்படம் ஷாகுல் ஹமீதுஞானியார் அவர்களைப் பற்றியும், ஆலிப்புலவரின் மிகுறாஜ் மாலை பற்றியும் கட்டுரைகள் உள்ளன. இக்கட்டுரைகள் அந்த ஞானிகளின் வரலாறு மட்டுமல்ல அவர்களின் கவித்துவம் ஆகியவற்றை முன்வைப்பவையாக உள்ளன.
ஹாமீம் முஸ்தபா அவர்கள் மூன்று கட்டுரைகள் எழுதியுள்ளார். அவற்றில் முற்றோதல் பற்றிய கட்டுரை குறிப்பிடத்தக்கது. அதை அவர் நூலாகவே விரிவாக்கலாம்.
முற்றோதல் என்பது இஸ்லாமிய மரபிலிருந்து, சூஃபி மரபிலிருந்து, வந்து சைவம் வரை இன்று பரவியுள்ளது. முற்றோதல் என்றால் முழுக்க வாசிப்பது மட்டும் அல்ல. கூட்டாகக் கூடி ஒரு நூலை வாசிப்பது. அதிலுள்ள எல்லாச் சொற்களுக்கும் பொருள் கொள்வது. கூடுதலாக சொல்லிணைவின் எல்லா வகைப்பாடுகளையும் கொண்டு பொருள்கொள்ள முயல்வது. அரபு மொழியின் சொற்களை வெவ்வேறாக இணைத்துப் பொருள்கொள்ளலாம் என அறிந்துள்ளேன். அந்த மரபு இன்றும் நீடிக்கும் ஒன்று.
நிஷா மன்சூருடன். புகைப்படம் ஷாகுல்சூஃபி மரபின் இலக்கியத்தன்மையை இவ்வாறு வகுத்துக்கொள்ளலாம் என இந்நூல் காட்டுகிறது. ஒன்று, அவர்கள் மக்களுடன் மக்களாக இருந்தனர். ஆகவே மக்கள் மொழியில் எழுதினர். அவர்களின் பாடல்கள் எல்லாமே நாட்டார் அழகியல்கொண்டவையாக உள்ளன. செவ்வியல் ஆக்கம் ஒன்றுகூட இல்லை. மாலை, கண்ணி, ஏசல், கும்மி, குறத்திப்பாடல் என்னும் நாட்டுப்புற வகைகளிலேயே அவர்கள் எழுதினார்கள்.
சூஃபி மரபின் இன்னொரு தனித்தன்மை அவற்றின் வட்டார இயல்பு. குமரிமாவட்ட சூஃபி மரபைச் சேர்ந்த பாடல்களை ஆரல்வாய்மொழிக்கு அப்பாலுள்ளவர்கள் முழுக்க அறிந்துவிடவேண்டும் என்றால் கடும் முயற்சி எடுக்கவேண்டும். அவை அத்தனை தூரம் இப்பகுதியின் வட்டாரப்பண்பாட்டிலும் மொழியிலும் ஊறியவையாக உள்ளன. இந்த தனித்தன்மை சமய இலக்கியங்களில் சூஃபி படைப்புகளுக்க மட்டிலுமே உள்ளது.
அத்துடன் அவற்றின் சமயம் கடந்த தன்மையைச் சுட்டவேண்டும். சமயம் கடந்த என்றால் சமய மறுப்பு அல்ல. சமயம் சாமானியர்களுக்குரியது. ஆகவே சராசரித்தன்மை கொண்டது. அந்த சராசரித்தன்மையை தன் ஞானத்தேடலால் கடந்துசெல்வது என சூஃபி மெய்ஞானத்தைச் சொல்லலாம். ஆகவே அவை அனைவருக்கும் உரியவையாக, அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவையாகக்கூட உள்ளன.
நண்பர்களே, இன்று சூஃபி மரபைப் பற்றிய பேச்சுக்கள் வலுவடைந்து வருகின்றன. அவற்றிலுள்ள சமயம் கடந்த தன்மை, மதஒற்றுமைநோக்கு, அடித்தள மக்கள்சார்பு போன்ற பண்புகளே முன்வைக்கப்படுகின்றன. அவை அரசியல் நோக்குடன் விவாதிக்கப்படுகின்றன. அவை இல்லை என்று சொல்ல மாட்டேன். ஆனால் சூஃபி மரபு என்பது உண்மையில் அது மட்டும் அல்ல.
நூலாசிரியர் எச்.முகமது சலீம், பதிப்பாளர் மணலி அப்துல் காதர்அது மெய்ஞானம் சார்ந்தது. அகப்பயணம் வழியாகக் கண்டடைவது. நான் அஜ்மீர் செல்லும் அடியார்களில் ஒருவன் என்பது அனைவரும் அறிந்தது. என் இருபத்திரண்டாவது வயதில் முதன்முறையாக அங்கே சென்றேன். என் தாயும் தந்தையும் தற்கொலை செய்துகொண்டு, நான் உச்சகட்ட உள அழுத்ததுடன் வாழ்ந்த நாட்களில் ஒரு கனவு கண்டேன். இடுங்கலான தெருக்களினூடாக சென்றுகொண்டே இருக்கிறேன். தெரு எல்லைக்கு அப்பால் ஒளி.
அந்த இடம் அஜ்மீர் என தெரிந்ததும் கிளம்பிச் சென்றேன். சிலநாட்கள் அங்கே இருந்தேன். என் கொதிக்கும் தலை குளிர்ந்தது. அங்கே நான் அடைந்தது என்ன என்று இங்கே சொல்லப்போவதில்லை. சொல்லவும்கூடாது. இங்கே பலதரப்பட்டவர்கள் இருக்கலாம். நாத்திகர்கள்கூட இருக்கலாம். அவர்கள் உணரக்கூடியது அல்ல. அது எனக்கு மட்டுமேயான ஒரு தரிசனம்.
அந்த மெய்ஞானமே சூஃபிகள் நமக்கு அளிப்பது என நினைக்கிறேன். நன்றி.
*
புகைப்படங்கள் ஜி.ஜவகர்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers