Jeyamohan's Blog, page 51
July 24, 2025
ஆசாரவாதம் என்னும் வைரஸ்
ஆசாரவாதத்தை முற்றாகத் தவிர்த்து தனக்கென ஞானம் சார்ந்த ஒரு பயணத்தை வைக்காதவர் தத்துவம் அல்லது தரிசனம் பற்றி எந்த உரையாடலை நிகழ்த்துவதற்கான எந்த தகுதியும் அற்றவர் என்றுதான் எப்போதும் எனக்கே ஆணையிட்டு சொல்லிக்கொள்கிறேன்.
Yes, we know life has many problems and toiling. But still we are living; no one is committing suicide. So we have some hope and dreams in life always with us. I want to read works balanced with that positive element.
Realism and hopeJuly 23, 2025
கடல், அகக்கடல்
அன்புள்ள ஜெ,
கடல் நாவல் முக்கால்வாசி படித்துவிட்டேன். முழுக்கப் படித்துவிட்டு எழுதவேண்டும் என்று இருந்தேன். ஆனால் எழுதாமலிருக்க முடியவில்லை. நான் பிறந்து வளர்ந்தது தஞ்சையில் வேளாங்கண்ணி அருகே ஒரு சிறிய ஊரில். கடலோரம் நன்கு அறிமுகம்தான். கிறிஸ்தவப் பள்ளியில்தான் படித்தேன். கிறிஸ்தவம் மேல் ஈடுபாடும் உண்டு. ஆகவே இந்நாவலை உடனே வாங்கினேன். வாங்கியதுமே வாசிக்க ஆரம்பித்துவிட்டேன்.
என் ஆன்மாவை இதுபோல கொந்தளிக்கவைத்த நாவல் என்றால் டாஸ்டாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும்தான். இந்நாவலில் உள்ள அந்த துன்பமும் அதிலிருந்து மீட்சி அடையும் தருணங்களும் மிகமிக ஆழமானவை. அவற்றை வாசிக்கையில் என்னால் அமர்ந்திருக்க முடியவில்லை. அறைக்குள் இருந்தும் வாசிக்கமுடியவில்லை. பெங்களூரில் வெவ்வேறு இடங்களில் அமர்ந்து வாசித்தேன். ஒரு கட்டத்தில் தனிமையில் அமர்ந்தும் வாசிக்க முடியவில்லை. ஆகவே காபி ஹஃவுஸ்களில் அமர்ந்து வாசித்தேன். எவரிடமாவது பேசியாகவேண்டும் என்று தோன்றியது. ஆனால் இந்நாவலைப் பற்றிப் பேசும் அளவுக்கு நெருக்கமானவர்கள், இலக்கியம் அறிந்தவர்கள் எவருமில்லை. ஆகவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
துன்பங்கள், கைவிடப்படுதல் ஆகியவற்றின் உச்சங்கள் உள்ளன இந்நாவலில். அதிலிருந்து அப்படியே குற்றங்களின் மறு எல்லை. குற்றங்களில் ஈடுபடும் உள்ளம் மனிதர்களை வேவுபார்த்துக்கொண்டே இருக்கிறது. அதிலுள்ள அந்த மூர்க்கமும் தீவிரமும் இன்னொரு பக்கம் என்னை பதறச்செய்தன. மூழ்கிச் சாகப்போகிறவன் கைக்குச் சிக்குவதைப் பிடிப்பதுபோல தாமஸின் தவிப்பை உணரமுடிந்தது. இந்நாவலில் உள்ள எந்த அனுபவமும் என்னுடையவை அல்ல. நான் சொகுசாகவே வாழ்ந்தவன், வாழ்பவன். ஆனால் இது என் ஆன்மாவின் கதை என்றும் தோன்றியது.
இந்நாவலை ஒரு சினிமாவுக்காக எப்படி எழுதினீர்கள் என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது. அதுவும் ஒரு பெரிய பட்ஜெட் கமர்ஷியல் படத்துக்காக இப்படி ஒரு கதையை எழுதியது என்பது மிகப்பெரிய அத்துமீறல். இதிலுள்ளது ஓர் ஆத்மாவின் கதறல். இன்னொரு ஆத்மாவின் முடிவற்ற பிரார்த்தனை. அந்த இரண்டு குரல்களும் இணைந்து உருவாகும் ஒரு அற்புதமான காஸ்பல் இசை. அதை எப்படி சினிமாவில் கொண்டு வர முடியும். இது ஒரு பெரிய முழக்கம் போல ஒலிக்கிறது. ஒரு பெரிய சர்ச்சில் ஆர்கன் முழங்குவதுபோல. நாவல் முழுக்க அந்த கதறலும் பிரார்த்தனையும் வார்த்தைகளாக ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. இதில் மகத்தான விஷுவல்கள் உள்ளன. ஆனால் இது மொழிக்கலை. இதை சினிமாவாக எழுதலாம் என எப்படி முடிவெடுத்தீர்கள்?
அதைவிட, உங்கள் படைப்புகளிலேயே நான் மகத்தானது என்று கருதும் இப்படைப்பை எப்படி ஏறத்தாழ பத்தாண்டுகள் அப்படியே விட்டுவிட்டீர்கள்? பிரசுரிக்க நினைக்கவே இல்லை. இது மின்னஞ்சலில் இருந்தமையால் கண்டுபிடித்து வெளியிடுவதாகச் சொன்னீர்கள். அதாவது உங்களிடம் பிரதிகூட இருக்கவில்லை. அது அழிந்துவிட்டிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? நினைக்கவே பதற்றமாக இருக்கிறது. ஏன் அந்த அலட்சியம்? இதை நீங்கள் பொருட்படுத்தவே இல்லையா?
கண்ணன் பார்த்தசாரதி
அன்புள்ள கண்ணன்,
ஒரு நாவலை நான் எழுத முடிவெடுப்பதில்லை – எழுத ஆரம்பித்துவிடுகிறேன். அதற்கு ஏதாவது ஒரு காரணம் அமைந்துவிடுகிறது. பல சமயம் காற்று வந்து மரத்தை உலுக்குவதுபோல. இந்நாவலை எழுதுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புகூட இந்த நாவலை எழுதும் எண்ணமே என்னிடமிருக்கவில்லை. ஆனால் பல நாட்களாக ஐரோப்பிய ஓவியங்களை கேட்டுக்கொண்டும், காஸ்பல் இசை கேட்டுக்கொண்டும் இருந்தேன். இந்நாவலுக்கு அடிப்படையான அந்த நிகழ்வு, அந்த டேப்ரிகார்டர் காட்சி, நினைவில் எழுந்தது. தாமஸை பார்த்துவிட்டேன், எழுத ஆரம்பித்தேன்.
எழுதத் தொடங்கியபோது இந்நாவாலை எப்படி சினிமாவாக ஆக்குவது என்று எண்ணிப்பார்க்கவே இல்லை. சொல்லப்போனால் எதையும் எண்ணிப்பார்க்கவில்லை. என் எண்ணமெல்லாம் இந்நாவல் உருவாக்கும் அகநெருக்கடிகளின் அடுத்தடுத்த கணங்களாகவே இருந்தது. எழுதியதுமே நான் அதிலிருந்து விடுவித்துக் கொண்டுவிட்டேன், வழக்கம்போல. பொருட்படுத்தாமல் இல்லை, எழுதுவதுடன் என் ஆர்வம் முடிந்துவிடுகிறது, நான் என் முடிச்சுகளை அவிழ்த்துக் கொண்டுவிட்டேன். இதை வெளியிடும் எண்ணம் இருக்கவில்லை. சொல்லப்போனால் மறந்தே விட்டேன். மின்னஞ்சலில் தற்செயலாக கிடைத்தது. முழுமையாக இருந்தது. ஆகவே நூலாக்கலாம் என்று தோன்றியது.
சினிமாவாக இது எப்படி நிகழமுடியும் என்று கேட்டீர்கள். இதிலுள்ள முதன்மைப்புள்ளிகள் என சிலவற்றைச் சொல்லலாம். ஒன்று, தாமஸின் அன்னை சாகும் இடம். இரண்டு, அவன் தன் தந்தையை தேடிச்செல்வது. மூன்று, அவனை சாம் கண்டடைவது, நான்கு அந்த இரண்டு தேவாலயக் காட்சிகள், ஐந்து தாமஸ் பியாவிடம் பாவமன்னிப்பு கோருமிடம். எண்ணிப்பாருங்கள், இந்த இடங்கள் எல்லாமே நாவலில் இருக்கும் அதே வீச்சுடன், ஆனால் முழுக்கமுழுக்க காட்சிவடிவமாக சினிமாவில் இருந்தன இல்லையா? அதிலுள்ள ‘எல்லா’ உணர்ச்சிகளும் திரையில் இல்லை. அது சாத்தியமும் இல்லை. சினிமா மினிமலிஸ்ட் கலை. காட்சிக் கலை. காட்சியாக அது அந்த உணர்வுகளை வலுவாகவே நிறுவியது என நினைக்கிறேன்.
கடல் சினிமாவின் பிரச்சினை அது மிகச்சுருக்கமாக ஆகிவிட்டது என்பதே. அந்தப்பாடல்களை முழுமையாக உள்ளே கொண்டுவந்தமையால் கதைக்கான நேரம் மிகக்குறைவாக ஆகிவிட்டது. ஆகவே கடல் உருவாக்கிய நீண்டகாலம், அகன்ற வாழ்க்கைச்சித்திரங்கள் படத்தில் வெட்டிச்சுருக்கப்பட்டு அது தாவிச்செல்லுவதாக ஆகிவிட்டது. உதாரணமாக செலினா சம்பந்தமான காட்சிகள் மிக அற்புதமாக எடுக்கப்பட்டிருந்தன, அவை சினிமாவில் இல்லை. அது நம் சினிமாவுக்குரிய சிக்கல். ஆனால் அந்நாவலை சினிமாவாக கனவுகாணமுடிந்ததே ஒரு சாதனைதான். இந்நாவல் உருவாக்கும் தொடர்ச்சியை கண்டபின் சினிமாவை இன்னொருமுறை பாருங்கள். அது விரியத்தொடங்கும்.
ஜெ
குறிஞ்சி பிரபா
தமிழில் எழுதிவரும் கவிஞர், பாடலாசிரியர், உதவி இயக்குனர்.குறிஞ்சி பிரபா ‘பிசாசு 2’ படத்தில் மிஷ்கினுடன் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். தெகிடி, சரபம், கூட்டாளி, ஸ்டார் ஆகிய படங்களில் பாடலாசிரியராக இருந்தார். யாழினி சேனல், கண்மணி தொலைக்காட்சித் தொடருக்கான பாடல்களின் ஆசிரியர்.

சு.ரா – கடிதம்
அன்புள்ள ஜெ,
20 ஆண்டுகளுக்கு முன், 2005-ல் சுரா இறந்தபோது உங்களின் நினைவின் நதியை படித்தபோது ஏற்பட்ட அதே உணர்வுகளை, இன்று ”ஓர் ஒளிர்விண்மீன்” படித்தபோதும் உணர்ந்தேன். கண்களில் நீர் தளும்பிக்கொண்டே இருந்தது.
1998-ல், காஞ்சீபுரம் இலக்கிய வட்ட நிகழ்வு ஒன்றில் சுந்தர ராமசாமியை முதலில் சந்தித்தேன். அப்போதே அவரது காற்றில் கலந்த பேரோசை, விரிவும், ஆழமும் தேடி, புளிய மரத்தின் கதை போன்ற நூல்கள் எனக்கு பைபிள்களாக இருந்தன. அடுத்த மாதம் நம் நிகழுவுக்கு சுரா வருகிறார் என்று அப்பா இலக்கிய வட்டம் நாராயணன் சொல்லியதிலிருந்து இனம்புரியாத மகிழ்ச்சியிலிருந்தேன். அவரை முதன்முதலாக சந்தித்த தருணத்தை நினைவு கூர்கிறேன். அன்று அவரை காஞ்சீபுர இலக்கியவட்ட நண்பர்கள் அமுதகீதன், தரும இரத்தினகுமார் ஆகீயோர் காலச்சுவட்டில் அப்போது வந்துகொண்டிருந்த தினமலர் விளம்பரங்களை வைத்து சாதிய + வணிக நோக்க எண்ணம் கொண்டவர் என்று தீவிரமாக எதிர்த்துப் பேசிக்கொண்டிருந்தனர். நான் அக்கூட்டங்களில் கலந்துகொண்ட காலங்களில் பிற எழுத்தாளர்கள் எவரையும் விட (சாரு நிவேதிதா உட்பட) அவர் மீது வன்மம் கொண்டு தாக்கியதாகவே உணர்ந்தேன். அதை அப்பா காஞ்சிபுரம் நாராயணன் அவர்களிடம் பகிரவும் செய்தேன்.
ஆனால், சுரா அவரது உரையில் இவை எவற்றையும் பொருட்படுத்தி பதில் சொல்லவேயில்லை. அவருக்கும், காஞ்சிபுரத்திற்கும் உள்ள உறவை, ஒரு வணிகராக அவர் காஞ்சிபுரத்தில் வந்து தங்கிய காலங்களை நினைவு கூர்ந்து சிலவற்றை கூறினார். அவர்மேல் வைக்கப்பட்ட அவதூறுகளுக்கு அவர் அங்கேயே பதிலுரைத்திருக்கவேண்டும் என்று அந்த இளம் வயதில் எனக்கு தோன்றியது. அவரை மதிய உணவு இடைவேளையில் பூக்கடை சத்திர PTVS வன்னியர் உயர் நிலைப்பள்ளி (அப்போது பெரும்பாலான இலக்கியவட்ட கூட்டங்கள் அங்குதான் நடக்கும்) பெஞ்ச் ஒன்றில் தனியாக அமர்ந்திருக்கும்போது தயங்கித்தயங்கி சந்தித்தேன். விரிவும் ஆழமும் தேடி நூலட்டையில் ஓவியர் ஆதிமூலம் வரைந்திருந்த தாடி வைத்த கோட்டோவியம் சுரா தான் என்பதை ஊகித்திருந்தேன். ஆனால் அன்று அவர் மழித்த முகத்துடன் வந்திருந்தார், அதனால் சற்று துணுக்குறல் ஏற்பட்டது. அவரிடம் என்ன பேசினேன் என்று ஞாபகமில்லை. ஏனெனில், நான் பேசியது ஓரிரு வார்த்தைகளுக்குள்தானிருக்கும். ஆனால், அவரிடம் அவரது காற்றில் கலந்த பேரோசை நூலில் கையெழுத்து வாங்கினேன். ஆனால் அதற்கு முன்புவரை அவரிடம் கையெழுத்து வாங்கலாமா, வேண்டாமா என்று ஒரு பெரும் விவாதம் என்னுள் நடந்துகொண்டிருந்தது (அப்போதைய ”பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தலும் இலமே” – மனநிலை). பின்னர் என். ராம், புக்கர் பரிசுபெற்ற அருந்ததி ராயிடம் வரிசையில் நின்று கையெழுத்து வாங்கியதை முன்னுதாரணமாகக் கொண்டு ஒருவாறாக என்னை சமாதானம் செய்துகொண்டு சுராவிடம் கையெழுத்து வாங்கினேன்.
பின்னர் ஒருமுறை 2003-ல் நாகர்கோவில் சென்று அவரை அவரது வீட்டில் சந்தித்தேன். மூன்று மணி நேரங்கள் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார்; தவறு நான் அவரிடம் என்னவெல்லாமோ (தமிழ் படங்களில் தமிழ் கலாச்சாரம் இல்லை – தேவர் மகன் படம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் – நீங்கள் கமல்ஹாசனை சந்தித்தது உண்மையா என்ற ரீதியில்…) பேசிக்கொண்டிருந்தேன். அன்று நான் பணகுடி திரும்பும்வரை என் வாழ்நாழிலேயே அதுவரை இல்லாத மகிழ்ச்சியுடனிருந்தேன். வீட்டிற்கு இரவில் மிகத் தாமதமாக வந்ததும் அப்படி என்னதான் அவ்வளவு நேரம் அவரிடம் பேசிக்கொண்டிருந்தாய் என்று சற்று எரிச்சலுடன் அப்பா கேட்டதும் ஞாபகமிருக்கிறது. ஆனால், நினைவின் நதியில் படித்தபின்பு, அது சுராவின் உயரிய குணங்களில் ஒன்றான கணவான் தன்மை என்று புரிந்தபின்பு, நான் ஒரு சாமானியன் என்று உணர்ந்ததும் சற்று துணுக்குற்றேன்.
அவரையும், கமல் ஹாசனையும் 2004’ல் நடக்கவிருந்த எனது திருமணத்திற்கு அழைக்கவேண்டும் என்ற ஆசையை அவரிடம் வெளிப்படுத்தினேன். வருகிறேன் என்று சொன்னார். ஆனால் எங்களது திருமணத்தின்போது அவர் அமெரிக்காவில் இருந்தார். பின்னர் சென்னை அண்ணாசாலையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வொன்றில் அவரிடம் பவானியை அறிமுகம் செய்துவைத்தேன். அப்போதே என்னிடம் ஒரு கையடக்க டிஜிட்டல் கேமரா இருந்தது. ஆனால், அவர் ஒத்துக்கொள்வாரோ என்ற தயக்கத்தால் அவரிடம் கேட்காமலேயே வந்துவிட்டேன். அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது சில மாதங்களில் அவர் மறைந்தபின்புதான் எனக்கு உரைத்தது. சலபதி இறுதி அஞ்சலிக்கு நாகர்கோவில் வருகிறீர்களா என அழைத்தார். நான் எனது அப்பா என்ன சொல்வாரோ என்ற தயக்கத்தால் போகவில்லை. என் அப்பா, சுராவின் (குழைந்தைகள், பெண்கள், ஆண்களுக்கு முந்தைய) ”எஸ் ஆர் எஸ்” ஸே தான்.
நினைவின் நதியில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது (கிளிஷே). ஆனால் அப்போதைய ’பதிவர்கள் உலகில்’ உங்களை சுராவின் சாவில் புகழ் வெளிச்சம் தேடுபவராகவே பலரும் அவதூறு செய்துகொண்டிருந்தார்கள். அந்தப் புத்தகம் என்னைப் பொறுத்த அளவில் அப்போதைய உங்களின் நூல்களில் உச்சம். அதன் முன்னுரையில் நீங்கள் இவ்வாறு எழுதியிருப்பீர்கள் – ”இது நானறிந்த சுந்தர ராமசாமி, வேறு பல சுந்தர ராமசாமிக்கள் இருக்கலாம்” (என் நினைவில் இருந்து எழுதுகிறேன்).
சுந்தர ராமசாமியை நான் இன்னும் அணுக்கமாக உணர்ந்தது அந்தப் புத்தகத்தினால் தான். அதில் வரும் சில வரிகள் நானும் அப்படித்தானே என உணர்ந்த இடங்கள் – உதாரணமாக அசம்பு ரோட்டில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் வாழைப்பழம் வாங்க சுரா பேரம் பேசும் இடம். கூடைக்காரிகள் குறித்த அவரது அவதானிப்பு, சுதர்சன் ஜவுளிக்கடையில் சேலை வாங்கவரும் அடித்தளத்திலிருந்து அப்போதுதான் மேலேறி வந்துகொண்டிருக்கும் மக்களின்மேல் அவருக்கிருந்த பெருமிதம் என்று அதில் விவரிக்கப்பட்டிருந்த பல்வேறு நிகழ்ச்சிகள் எனை அவர்பால் மேலும் ஈர்த்தன. உண்மையிலேயே அவரை அணுகியறிந்து, அவர்மேல் பெருங்காதல் கொண்ட ஒருவரால்தான் இவ்வாறு எழுதமுடியும் என்பதை உணர்ந்து உங்கள் மேல் நான் மேலும் ஈர்க்கப்பட்டேன். அந்தப்புத்தகம் உங்களையும் நான் மேலும் புரிந்துகொள்ள எனக்கு திருப்புமுனையாக இருந்திருக்கலாம் என இப்போது இதை எழுதும்போது உணர்கிறேன். (ஆம் நீங்கள் சுரா மரணத்தினால் ஆதாயம் அடைந்திருக்கிறீர்கள், ஹிஹி… – இதை எழுதும்போது இன்றைய செயற்கை நுண்ணறிவு இதை ஒரு ஆதாரமாக எடுத்துக்கொள்ளுமோ என்ற எண்ணமும் மேலெழுகிறது).
காந்தி குறித்த அவருக்கும் உங்களுக்குமான உரையாடல் கவித்துவத்தின் உச்சம். இவ்வாறு பல தருணங்கள் நினைவில் நதியிலுண்டு. ஒருமுறை தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து யுவனும் நினைவின் நதியில் தனக்கு பிடித்திருந்தது என்று சொன்னார். உண்மையில் சுரா இறந்தபின்பு அவர் குடும்பத்தினர் வெளியிட்ட நினைவுகூறல் புத்தகத்தைவிட நினைவின் நதியில் மூலம்தான் நான் சுராவை ஒரு சாமானியனாக, எழுத்தாளானாக, சிந்தைனையாளராக முழுமையாக புரிந்துகொள்ள உதவியது. அவரை இன்னும் காதலிக்க வைக்கவைத்தது. இன்று அது நிறுவவும்பட்டிருக்கிறது.
விஷ்ணுபுரம் வெளியீடாக வரும் நினைவின் நதியில் நூலை உங்கள் கையெழுத்துடன் பெற்றுக்கொள்ள ஆவலாக உள்ளேன்.
அன்புடன்
தங்கவேல்
அன்புள்ள தங்கவேல்,
சுரா நினைவின் நதியில் மறுபதிப்பு வெளிவந்த நாட்களில் ஒருமுறை இணையத்தில் சுந்தரசாமியுடன் ‘ஒட்டிக்கொண்டு’ நான் புகழ்பெற நினைத்து எழுதிய நூல் அது என்னும் வசையை ஒருவர் எழுதியிருந்தார். அரங்கசாமி அதைப்பற்றிப் பேசும்போது சொன்னார். ‘சுராவோட இணைந்து உங்களுக்கு புகழோ அடையாளமோ வரவேண்டியதில்லைன்னு தெரியாத ஒருவர் இலக்கியவாசகரே அல்ல, அவர் என்ன நினைச்சா என்ன?’.
ஓர் எழுத்தாளரைப் பற்றிய நினைவை எழுத ஒருவகையான உணர்ச்சிவேகம் தேவை. அவருடன் இருக்கையில் அவரை பெருங்காதலுடன் தொடர்ச்சியாகக் கவனிப்பது அந்த உணர்ச்சிகரத்தால்தான். பின்னர் நினைவுகூர்வதும் அதனால்தான். சுந்தர ராமசாமி பற்றி எழுதப்பட்ட பல அஞ்சலிகளைக் கண்டபோது அவர்களின் வாழ்க்கையில் அவரும் ஒருவர் என்பதற்கப்பால் எந்த இடமும் அவர்களால் அவருக்கு அளிக்கப்பட்டதில்லை என்று தெரிந்தது.
எனக்கு அப்படி அல்ல. அன்றுமின்றும் அவர்மேல் இருப்பது ஒரு கொந்தளிப்பான உணர்வுநிலைதான். அதே உணர்வுநிலைதான் வயக்கவீட்டு பாகுலேயன்பிள்ளை பற்றியும் உள்ளது. அன்பும், அன்பின் விளைவான தீவிரமான கோபங்களும், அணுக்கமும் விலக்கமும் எல்லாம் கலந்த ஒன்று.
சு.ரா மறைந்து கால்நூற்றாண்டு ஆகிவிட்டிருக்கிறது. நான் இன்றும் எல்லா உரையாடல்களிலும் ஏற்றோ மறுத்தோ அவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன். அவர் தோன்றாத தனிப்பட்ட உரையாடல்களே இல்லை. ‘இப்ப நீங்க மட்டும்தான் அவரைப் பத்தி ஓயாம பேசிட்டிருக்கீங்க’ என்று அண்மையில் அரங்கசாமி சொன்னார். ‘அவர் என் சொற்களில் மட்டும்தான் சிரஞ்சீவியாக இருக்கமுடியும்’ என்று நான் சொன்னேன். ‘காலந்தோறும் அப்டித்தான் வழக்கம்’
ஜெ
சு.ரா. நினைவின் நதியில் வாங்கசு.ரா- கடிதம்

வேதாசலம்,வாழ்த்துக்கள்- ஒரு கேள்வி.
தமிழ்விக்கி- தூரன் விருது: வெ.வேதாசலம் வேதாசலத்துக்கு விருது- கடிதம் வேதாசலம், மின்னஞ்சல் எதற்காக? நம் வரலாற்றாசிரியர்கள் ஏன் மறைக்கப்பட்டிருக்கிறார்கள்?
அன்புள்ள ஜெ
அந்திமழை இதழில் வேதாசலம் அவர்களின் பேட்டியை படித்தேன். ( வரலாற்றில் பொற்காலம் இருண்டகாலம் என்பது கிடையாது! -தொல்லியல் ஆய்வாளர் வெ.வேதாசலம் ) அதில் ஒரு வரி சொல்கிறார். “எனக்கு விருது கிடைத்ததற்கு எனது மாணவர்கள் வாழ்த்தவில்லை என்று ஜெயமோகன் வருத்தப்பட்டுள்ளார். அதைக்குறிப்பிட்டு என்னிடம் இது பற்றிக் கேட்டார்கள். என்னிடம் படித்த மாணவர்களும் எனது நண்பர்களும் நலம் விரும்பிகளும் விருது கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஜெயமோகன் தளத்தில் இது சார்ந்து அவர்கள் வாழ்த்து தெரிவிக்கவில்லையே தவிர என்னிடம் நேரிலும் தொலைபேசியிலும் மின்னஞ்சல்களிலும் வாட்ஸ் அப்பிலும் நிறைய பேர் விருதுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து இருக்கிறார்கள் என்பதைக் கூறிக் கொள்கிறேன்.”உங்கள் எதிர்வினை என்ன? நானறிந்து எவரும் முகநூலில்கூட ஒரு வரி எழுதவில்லை. அதைத்தான் நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். பொதுவெளியில் வாழ்த்து சொல்லாமல் தனிப்பட்ட முறையில் கூப்பிட்டு வாழ்த்துவது பிழையா என்ன?
அரங்க. ராமகோபாலன்.
இணையத்தில் கிடைக்கும் இலவச நூல்கள் திருவெள்ளறை வெ.வேதாசலம் எண்பெருங்குன்றம் வெ.வேதாசலம் அன்புள்ள ராமகோபாலன்,இதற்கான நேர்ப்பதிலை இப்படிச் சொல்லலாம். நிகழவிருப்பது வேதாசலம் அவர்களின் வீட்டு விசேஷம் அல்ல, அவருக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து சொல்வதற்கு. அவருக்கு லாட்டரியில் பணம் கிடைக்கவும் இல்லை. இது அவர் பெறும் பொது அங்கிகாரம், ஒரு வரலாற்றாய்வாளராக. ஆகவே அவருக்கு பொதுவெளியில்தான் வாழ்த்து சொல்லவேண்டும், ஒரு வரலாற்றாய்வாளராக அவர்மேல் உங்களுக்கு மதிப்பு இருந்தால் அதைப் பதிவுசெய்ய வேண்டும். அதுவே அடிப்படை நெறி. நெருக்கமானவர் என்றால் மட்டும் தனிப்பட்ட முறையிலும் சொல்லலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் சொல்லிவிட்டு, பொதுவெளியில் அமைதியாக இருப்பது ஒரு வகை தந்திரம் மட்டுமே. இதை திரும்பத் திரும்ப எவர் விருதுபெற்றாலும் காண்கிறோம்.

அதை ஏன் பொதுவெளியில் முன்வைக்கவேண்டும்? இங்கே ஒரு வரலாற்றாசிரியன், ஒரு எழுத்தாளன் பற்றி பொதுவெளியில் ஒரு வரிகூட எழுதப்படுவதில்லை. நூல்களை வாசிப்பவர்கள் அதைப்பற்றி எங்கேனும் ஒரு வரி எழுதுவது அரிதினும் அரிது. சிலருக்கு அதற்குத் தயக்கம் இருக்கலாம். ஒரு விருது ஓர் ஆய்வாளருக்கு வரும்போது ஒரு வரி வாழ்த்தை எழுதுவதன் வழியாக அவரை நாம் பொதுவெளியில் முன்னிறுத்துகிறோம். இன்னும் சிலருக்கு அறிமுகம் செய்கிறோம். அவ்வாறுதான் அறிஞர்கள் பேசப்படுகிறார்கள்.
கேரளத்தில் ஓர் அறிஞருக்கு ஒரு விருது வருமெனில் பல ஆயிரம் வாழ்த்துக்கள் வந்து குவிகின்றன. அதன் வழியாக அவர் இன்னும் பல ஆயிரம்பேரிடம் சென்று சேர்கிறார். அவ்வாறுதான் அறிவியக்கம் மக்களால் முன்னெடுக்கப்படுகிறது.

இங்கே ஒரு சாதாரண சினிமாவுக்கு குறைந்தது ஐந்தாயிரம் மதிப்புரைகள் வருகின்றன, ஒரு லட்சத்துக்கு மேல் சமூக ஊடகப் பதிவுகள் வருகின்றன. தமிழ்ச்சமூகம் சினிமா சார்ந்த மனநோய் கொண்டது என்பதனால் அது இயல்பே. அந்த ஒழுக்கில்தான் இங்கே எழுத்தாளர்கள், கட்டுரையாளர்கள் என்றெல்லாம் சொல்லிக் கொள்வோரும் இணைந்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்கக் கூடாதுதான்.
ஆனால் அந்த அறிஞரை அறிந்தவர்கள், அவருடைய வகுப்புகளில் ஒரு முறையேனும் பங்கெடுத்தவர்கள் ஒரு வரிகூட எழுதக்கூடாது என்று எச்சரிக்கையாக இருக்கிறார்கள் என்றால், ரகசியமாக அவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு அமைதியடைகிறார்கள் என்றால், அது சாதாரணமான ஒன்று அல்ல. அது திட்டமிட்ட ஓர் எதிர்மறைச் செயல்பாடு மட்டுமே. என்னால் அதை கீழ்மை என்று மட்டுமே கொள்ளமுடியும்.
ஜெ
கொற்றவை பயணம்

அன்புள்ள ஜெ,
வணக்கம்.
தொல்குடியினரின் காலத்திலிருந்த குமரி முதல் இன்றைய குமரி வரை ஒரு காலப் பயணம்.
கண்ணகி, கோவலன் , நீலி/கவுந்தியடிகளுடன் நெய்தல், மருதம், குறிஞ்சி, பாலை மற்றும் முல்லை ஆகிய ஐவகை நிலங்களின் வழியே பூம்புகாரிலிருந்து மதுரை நோக்கிய பயணம்.
வஞ்சிமா நகரில் இருந்து அன்னையின் ஆலயத்திற்கு ஏழு மலை குடிகளின் வழியே சேரன் செங்கூட்டுவனும், பெருந்தேவி, பரிவாரங்களுடன் சென்ற பயணம்.
இளங்கோவடிகளின் மதுரையில் இருந்து கழுகுமலையில் உள்ள மணிமேகலையின் அறச்சாலை நோக்கி நடந்த பயணம்.
எல்லோர் பசிப் பிணியும் தீர்க்க வழி செய்யும் மணிமேகலை அன்னையின் கடற் பயணம்.
டச்சு கப்பல் தலைவன் வான்– கோய்ஸ் கொடுங்கோளூருடன் நடத்திய போரின் கொடும் பயணம்.
தங்கள் குடும்பத்தினருடன் குமரி அன்னையையும், தங்கள் அன்னையையும் உணர்ந்த குமரி பயணத்துடன் முடிகிறது இந்த கொற்றவை பயணம்.
நான் மிகவும் விரும்பிய பயணம் சேரன் செங்குட்டுவனுடன் மலை மீது சென்ற பயணம். அன்றைய கேரளா நாட்டின் அழகில் மயங்கியது மனம். ஐவகை நிலங்களின் வர்ணனையும், அந்நிலங்களை மிகவும் விரும்பி வாழும் உயிரினங்களின் வழியே அவற்றை காண்பதும் பேரனுபவமாக இருந்தது.
(நெய்தல்– சுறா
மருதம்– தவளை
குறிஞ்சி– குட்டி குரங்கு
பாலை– செந்நாய்
முல்லை – கன்று குட்டி)
ஆனால் கோவலன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், அவனின் மரணத்தை நோக்கி, என்பது தெரிந்திருந்ததால் ஒருவகை படபடப்புடனே வாசித்துக் கொண்டிருந்தேன். மீள்வாசிப்பில் இன்னும் ரசிக்க முடியும் என்று நினைக்கிறேன்.
தமிழ் வார்த்தைகளில் விளையாடி இருக்கிறீர்கள். பண்டையன் பாண்டியனானது. அதேபோல் ‘தாலி‘ என்ற சொல்லும், அது எவ்வாறு வந்தது என்ற விளக்கமும் சிறப்பாக இருந்தது. (தாலம்– தட்டு, தலம்– இலை, அரசிலையை வைத்து அன்று தாலி கட்டினர். இப்போது அது பொன்னாலான அரசிலை தாலியாக மாறிவிட்டது. இலை வாடினாலும் அன்பு வாடாது என்பது கவிதை.)
ஒவ்வொரு வரியிலும் எத்தனை வர்ணனைகள். வஞ்சி பெருநகரில் அன்னையின் ஆலய பிரதிஷ்டை விழாவை நேரில் கண்டது போல் உள்ளது. நாள் குறித்ததில் தொடங்கி மக்களின் கொண்டாட்டமும் , மன்னன் கிளம்பி கலந்து கொள்வதும், நான்கு சமயங்களும் ஒன்று சேர்ந்து விழாவை நடத்துவதும் கண் முன்னே விரிகிறது.
இத்தனை பயணங்களையும், அதன் வழியே பல்வேறு அனுபவங்களையும் கொடுத்த உங்களுக்கு, மனதின் ஆழத்திலிருந்து மிக்க நன்றி.
என்றும் அன்புடன்,
S.ராஜேஷ்வரி
கோவை.
இந்திய தத்துவம் கற்றல்..
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் உங்களுடைய முழுமையறிவு குழு அறிவிக்கும் வகுப்புகளையும் அதை ஒட்டி நீங்கள் விவரித்து வெளியிடும் ஒளிப்பதிவுகளையும் வெகு நாட்களாக கவனித்து பின் தொடர்ந்து வருகிறேன். கடந்த மார்ச் மாதம் நடந்த ஆயுர்வேத வகுப்புகளில் கலந்து கொண்டதன் மூலம் முற்றிலும் புதியதோர் பரிமாணத்தில் என்னால் எல்லாவற்றையும் காணமுடிந்தது. நான் உண்ணும் உணவு முதல் அது தொடங்கி, நம்மை பாதிக்கும் ஜனநாயகம் வரை அது நீண்டது.
நித்திய வனத்தில் இருந்து நான் விடைபெற்று என் வீட்டை நோக்கி பயணிக்கும் போது தான் பல சிந்தனைகள் எனக்குள் தோன்றின. நான் யோசித்து கேள்விக்குள்ளாக்கி வைத்திருக்கும் பல மன மாதிரிகளை ஆயுர்வேத வகுப்புகள் தொட்டு, சில இடத்தில் பதில் அளித்து சென்றது. நீங்கள் சொல்லும் அறிவு இயக்கம் தமிழ்நாட்டில் நித்திய வனத்தில் தான் நிகழ்கிறது என்று உணர்ந்தேன். அங்கு நடக்கும் உரையாடல்களும் கருத்து மோதல்களும் அதிலிருந்து அடையும் புரிதல்களும் என்னை பிரமிப்பில் ஆழ்த்தின. இப்படியான விவாதங்களும் கருத்து பகிர்வுகளும் என்னுடைய அன்றாட வாழ்க்கை சூழலில் அமைவது மிகவும் அரிது. நானாக முன்னெடுத்து அவற்றை பேசினாலும் எளிதாக அதை திசைமாற்றி சினிமாவிற்கும், சமூக வலைத்தளத்தில் நிகழும் அற்பத்தனங்களுக்கும் கொண்டு சென்று விடுவார்கள். ஆனால் அறிவுபூர்வமான உரையாடல்களையும் சிந்திக்கதக்க கருத்துகளையும் அங்கு எளிதாக காண முடிந்தது.
அப்படி நடந்த சில உரையாடல்களில் நான் கவனித்தது அல்லது என் கவனத்தை வெகுவாக கவர்ந்தது நீங்கள் எடுக்கும் தத்துவ வகுப்பை சார்ந்ததாக இருந்தது. மிக சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஜெ எப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்வார் என்பது தான்.
உங்களுடைய படைப்புகளை படித்து இருக்கிறேன். மிகவும் பிடித்தவையும் கூட. மிக நெருக்கமானதாக உணர்ந்திருக்கிறேன். அதே சமயத்தில் நீங்கள் முன்வைக்கும் கருத்துக்களையும் வெகுவாக என்னால் புரிந்து கொள்ளவும் முடிகிறது. எனவே என்னுடைய கவனம் முழுக்க தத்துவ வகுப்பின் மீது திரும்பியது. நான் நித்திய வனத்தில் உள்ளவர்களிடம் ஆயுர்வேத வகுப்பின் சமயம் கேட்டபோது அவர்கள் வரும் ஜூன் மாதம் மீண்டும் தத்துவ வகுப்பின் முதல் நிலை வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என்றார்கள். அதன் அறிவிப்பை வலைத்தளத்தில் எதிர்பார்த்து எல்லா தினமும் தோன்றும்போதெல்லாம் எடுத்து பார்ப்பதுண்டு.
அப்படி சில நாட்களுக்கு முன் பார்த்த போது தான் உணர்ந்தேன், தத்துவ வகுப்பு ஐந்தாம் நிலைக்கான அறிவிப்பு தான் வந்திருக்கிறது. இதே போல நான்காவது நிலைக்கான அறிவிப்பு வந்த போதும் ஏமாற்றமடைந்தேன். ஆனால் இந்த முறை கடந்து போகவோ, காத்திருக்கவோ எனக்கு மனம் இல்லை. அதுதான் இந்த கடிதம் எழுதுவதற்கு காரணமும் கூட.
என்னுடைய உள்ளுணர்வு சொல்வதெல்லாம் எப்படியும் வர வேண்டாம் என நீங்கள் சொல்ல மாட்டீர்கள் என்பதுதான். அது தரும் தைரியத்தில் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். உங்களுடைய கருத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
நீங்கள் ஒரு பதிவில் கூறியது போல நான் என்ன சாப்பாடு கிடைக்கும் என்றெல்லாம் கேட்க மாட்டேன். தங்குவதற்கு வசதி எல்லாம் வேண்டியதில்லை. என்னிடத்தில் தங்கும் கூடாரம் உள்ளது. ஏற்கனவே அங்கு வந்த போதும் எனக்கு தோன்றியது, கூடாரம் அடித்து இரவின் ஓசையை நிதானமாக கேட்பதற்கு சரியான இடம் என்றுதான். எனவே அதையும் எடுத்துக் கொண்டுதான் வரவிருக்கிறேன். உங்களுடைய ஒப்புதல் வந்ததற்கு பின்.
இப்படிக்கு பேரன்புடன்,
ஹரி சரவணன்
அன்புள்ள ஹரி,
கோவை புத்தகவிழாவிலும் ஏராளமானவர்கள் என் தத்துவநூல்களை ஒரு தொகுப்பாக வாங்கியதாகச் சொன்னார்கள். அடுத்த தத்துவ முகாம் பற்றி விசாரித்ததாகவும் அறிந்தேன். முதல் தத்துவ முகாம் எப்போது நிகழும் என கேட்டார்கள்.
பலர் கோரிக்கைக்கு ஏற்ப செப்டெம்பரில் முதல் தத்துவ முகாமை மீண்டும் நடத்தலாமென நினைக்கிறேன். நீங்கள் அப்போது தொடர்பு கொள்ளலாம். முதல் தத்துவ முகாமிலிருந்து தொடர்ச்சியாக வருவதே உகந்தது.
அத்துடன் இந்த வகுப்புகளில் எந்த சமரசமும், விட்டுக்கொடுத்தலும் இல்லாமல் நடத்தவேண்டும் என உறுதியாக இருக்கிறேன். எப்படிக் கற்பிக்கப்படவேண்டுமோ அப்படி மட்டுமே தத்துவம் கற்பிக்கப்படும்.
ஜெ
The discussion focused on the natural rock formations and their symbolic significance. significance is a good one. I visited that place 30 years ago and still have that memory vividly in my mind.
Presence of Natureபன்றிவேட்டை, நூல்வெளியீடு
நாளை கோவையில் லக்ஷ்மி சரவணக்குமாரின் நாவல் பன்றிவேட்டை வெளியீடு. நாஞ்சில்நாடன், பால நந்தகுமார், லோகமாதேவி ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
July 22, 2025
வாக்னரின் மண்ணில் இருந்து…
வாக்னர் வாழ்ந்த இல்லம் சுவிட்சர்லாந்தில் உள்ளது. ஜூலை 6 2025 அன்று நானும் அருண்மொழியும் சைதன்யாவும் அங்கே சென்றிருந்தோம். நண்பர் வெங்கட் அழைத்துச் சென்றார். வாக்னர் வாழ்ந்த அந்த இல்லம் ஒரு நினைவகமாக உள்ளது. அந்த இல்லத்தை முன்வைத்து வாக்னர் பற்றி ஒரு சிறிய அறிமுக உரையாடல் சைதன்யாவுடன்.
—————————————————————————————————–
ஐரோப்பிய இலக்கியம்- இசை இரண்டிலுமே உச்சம் என கருதப்படும் வாக்னர் இலக்கியம் மற்றும் இசையை அறிமுகம் செய்யும் வகுப்பு. அஜிதன்.
நாள் ஜூலை 25, 26 மற்றும் 27
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers