Jeyamohan's Blog, page 1726

September 30, 2016

சிங்கப்பூர் விமர்சனம் குறித்த அறிவுரைகள்

ஆசியமொழிகள் பிரிவின் தலைவர் ஹதீசாவிடமிருந்து விடைபெறல் நினைவுப்பரிசு பெற்றுக்கொள்ளுதல்

அன்புள்ள ஜெ.

விமர்சனம் செய்வது என்பது எளிதான செயலாக நினைக்கவில்லை. தொடர்ந்த வாசிப்பின் மூலமும் சமூகப்போக்குகளும், இலக்கிய போக்குகளையும் அவதானிப்பதன் மூலம் மட்டுமே இது சாத்தியம். அதுவும் பல்வேறு அனுபவங்களும் தொடர்புகளும் இளைமையில் பெறுவது அதற்கு மிக முக்கியம். இத்தனை இருந்தும் ஒருவர் விமர்சனத்தை எடுக்காமல் தான் உண்டு தன் படைப்பு உண்டு என்று இருக்கும் எழுத்தாளர்களும் உண்டு. ஒரு சின்ன விமர்சனத்தை செய்ய நினைக்கும் ஒருவர் பல்வேறு பாவனைகளின் மூலமே அதைச் செய்யவேண்டியிருக்கிறது. விமர்சிக்கபடுபவர் முக்கிய ஆளுமையாக இருத்தல் கூடாது, அவர் காலமாகியிருக்கவேண்டும், எந்த அமைப்பையும் சாராதவராக இருத்தல் வேண்டும், பெண் எழுத்தாளராக இருத்தல் கூடாது இப்படி பல.

குறிப்பாக பெண் எழுத்தாளர்களை விமர்சிக்க நினைக்கும் ஒருவருக்கு கிடைக்கும் பட்டங்களும் அவமரியாதைகளும் மற்றதைவிட அதிகம். சாதாரணமாக அலுவலகங்களில்கூட சகபெண் ஊழியரை எதுவும் சொல்லிவிடமுடியாது. ஆண்களிடமிருந்து பெண்களைவிட அதிக கண்டனங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். இலக்கிய சூழலில் பெண் எழுத்தாளர்களை விமர்சிக்கும் முறை மிக மென்மையானதும் அதிகம் அவர்களை தூக்கிபிடிக்கும் நிலையே இருக்கிறது.

நீங்கள் விமர்சிக்கும் முறை முற்றிலும் வேறானது. மற்றவர்கள் எழுத நினைக்கும் பலவற்றை எந்த தயக்கமும் இன்றி செய்கிறீர்கள். பாராட்ட ப்பட வேண்டிய விஷயம்தான்.

ஆனால் ஏன் இத்தனை குதூகலமாக செய்கிறீர்கள் , அதில் ஒரு துள்ளலோடு கொடூர மனதோடு செய்வதாக படுகிறது அல்லது நான் அப்படி நினைக்கிறேனா தெரியவில்லை. உங்கள் பேட்டிகளில் சொல்லும்போது மிகச்சாதாரணமாக படுகிறது. ஆனால் விமர்சன கட்டுரையாக வரும்போது சம்பந்தப்பட்டவரை வேண்டுமென்றே பெரியளவில் காயப்படுத்த நினைப்பதுபோல் இருக்கிறது.

விமர்சனங்களில் அளவுகோல் வைக்கமுடியாது. விமர்சிக்கபடுபவர்களுக்கு அளவுகோல் இருக்கும்தானே ? வளர்ந்துவிட்ட எழுத்தாளர்களை நோக்கி வைக்கும் விமர்சனத்தில் ஒரு நியாயம் இருப்பதாகவும் படுகிறது. ஜெயகாந்தனுக்கு வைக்கும் அதே அளவு விமர்சனத்தை ஆரம்பநிலை எழுத்தாளனுக்கு வைக்கமுடியாது என நினைக்கிறேன். அத்தோடு இப்படி விமர்சிப்பதனால் நீங்கள் பெறப்போவது வெறுப்பும் தேவையற்ற ஆவேசங்களும்தான். நீங்கள் இதை விரும்புகிறீர்கள் என்றுகூட சிலநேரங்களில் நினைக்கிறேன். அதனால் கிடைக்கும் ஏச்சுகளாலும் விவாதங்களாலும் உங்கள்மேலும் உங்கள் எழுத்தின்மேலும் ஒரு பரபரப்பு கிடைக்கலாம் என்பதாலா? ஆனால் அது உங்கள் படைப்பாற்றலை விட்டு விலகவைக்கும் என நினைத்துக் கொள்கிறேன்.

சிங்கப்பூர் எழுத்தாளர்கள் மீது விமர்சனம் வைக்கும்போதே சர்ச்சைகள் வெளிகிளம்பும் என யூகித்தேன். நீங்கள் யூகிக்காமல் இருக்க முடியாது. இந்த மாதிரியான விமர்சனங்களால் நீங்கள் பெறப்போவது தான் என்ன? வெண்முரசு படைப்பில் இருக்கும்போது உங்கள் நேரத்தை விரயமாக்கி படித்து அதைப்பற்றி எழுதி ஆகப்போவது ஒன்றும் இல்லை என்று தெரிந்தே நீங்கள் செய்வது ஒருவகையில் வருத்தம்தான்.

நன்றி

அன்புடன்

கே.ஜே.அசோக்குமார்.

***

அன்புள்ள ஜெ

வெண்முரசு தவிர உங்கள் பயணக் கட்டுரைகளையும் தொடர்ந்து வாசித்து வரும் வாசகி நான்.

சமீபத்தில் சிங்கப்பூர் சென்று பணி புரிந்து வருவது பெருமைக்குரிய ஒன்று.

இது அதிகம் பேருக்குக் கிடைக்கக் கூடிய வாய்ப்பில்லை. உங்களுக்கு அமைந்தது பொருத்தமாக எனக்குப் பட்டது.

சமீபத்தில் சிங்கை எழுத்தாளர்களைப் பற்றி நீங்கள் எழுதியதை வாசித்த போது எனக்கு பகீரென்றே இருந்தது.

முதலாவதாக constructive criticism என்ற நோக்கில் உங்கள் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் நல்லது. அது அவ்வளவு சாத்தியமில்லை நடைமுறையில். இது உண்மை.

நீங்கள் உண்மையிலேயே மாற்றம் ஏற்பட வேண்டுமென்று நினைத்தால் உங்களின் அணுகுமுறை உதவி செய்யுமா என்று தெரியவில்லை.

நீங்கள் மிகவும் straight forward but bit blunt.

புலன் பெயர்ந்த எழுத்தாளர்களுக்கு தமிழ் பரிச்சயமும் , அனுபவமும், அறிய முயல வாய்ப்புகளும், நேரமும் அதிகம் இருக்காது. ஆனால் ஆர்வம் இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் அவர்களுக்குள்ள ஆர்வத்தினால் அன்னிய மண்ணில் தமிழ் வளரவும் வாழவும் உழைக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். முழுநேர எழுத்தாளர்களாக இருப்பது கொஞ்சம் கடினம். ஆனாலும் முயன்ற அளவில் தன்னால் ஆனதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாக இருப்பார்கள்.

நான் ஆஸ்திரேலியாவில் 25 வருடங்களாக வாழ்ந்து வருவதாலும் சில இலங்கை எழுத்தாளர்களை அறிந்துள்ளதாலும் இதை உங்களுக்கு எழுத நினைத்தேன்.

புலன் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் தமிழுக்கும் , சைவ சமயத்திற்கும், பரதம், வீணை, சங்கீதம் போன்ற கலைகளுக்கும் ஆற்றி வரும் சேவைகள் கவனிக்கப்பட வேண்டியதும் அங்கீகரிக்கப்பட வேண்டியதும் அவசியம் என்பது என் எண்ணம்.

ஆஸ்திரேலியாவில் எதிர் மறை எண்ணங்களை நேர்முறையாக்கிச் சொல்வார்கள். அந்த முறை கேட்பவர்களுக்கு வலிக்காது. எதிர்பார்க்கும் பலனைக் கொடுக்கும்.

நானும் அதை கடை பிடிக்கிறேன். என் மகளிடம் ஏனம்மா லேட்டாய் வருகிறாய் என்று கேட்க மாட்டேன். பதிலாக நான் உனக்காக காத்திருந்தேன் , நீ வராததால் சோர்வடைந்து உறங்கி விட்டேன் என்பேன். அவள், ஒன்று, லேட்டாக வர மாட்டாள். லேட்டானால் என்னை தொலைபேசியில் அழைத்து நேரமாகி விட்டது அம்மா. நீ காத்திருக்காதே என்பாள். எங்கேயம்மா இருக்கிறாய் என்றால் எனக்கு பதிலும் கிடைக்கும் அவளின் அன்பும் கிடைக்கும். கோபித்தால் பொய்தான். அன்பும் அரிதாகும்.

புலன் பெயர்ந்த எழுத்தாளர்களிடம் நிறைய கதைகள் உள்ளன. அவையெல்லாம் எழுதப்பட வேண்டும். தமிழிலும் ஆங்கிலத்திலும்.

இந்த கதைகளில் உயிர் உள்ளது. உங்களைப் போன்றோரின் உதவியுடன் அந்தக் உண்மைக் கதைகள் எழுதப் பட்டால் அவை வரலாறாகும் என்று நினைக்கிறேன்.

அசோகமித்திரன் , சுந்தர ராமசாமி போன்றவர்களின் கதைகள் வேறு. கி ராஜநாரயணன் கதை வேறு.

இந்தியாவை தாயகமாய் இன்னும் நினைக்கும் இந்தியாவை விட்டு பல ஆண்டுகளுக்கு முன்னர் புலன் பெயர்ந்தவர்களின் கதைகள் வேறு.

என் இரு மகள்களுக்கும் தமிழ் நன்றாக புரியும். சரளமாக பேச வராது. ஆனால் தன்னை தமிழர்கள் என்றே சொல்லிக் கொள்வார்கள். அவர்களுக்கு கதை சொல்லப் படவேண்டும். அதற்குத் தான் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுத வேண்டும் என்றேன்.

உங்களைப் போன்றோர் அந்த கதைகளுக்கு எப்படி உயிர் கொடுக்க வேண்டும் என்று வாய்ப்பிருக்கும் போது படிப்பிக்க வேண்டும்.

நீங்கள் criticize செய்யாமல் அந்த எழுத்தாளர்களை எல்லாம் அழைத்து உங்கள் கதைகளை இப்படி எல்லாம் எழுதுங்கள். எழுதினால் உங்கள் கதைகளுக்கு உயிரும் வலிமையும் கிடைத்திருக்கும் என ஒரு work shop வைத்திருக்கலாமோ என்று எனக்குத் தோன்றியது.

அரசாங்கம் வேறு ஆதரவு தருவதால் நீங்களும் அன்னிய நாட்டில் தமிழ் வளர ஒரு கருவியாக இருந்திருக்கலாம்.

இப்போது எல்லார் வாயிலும் பூர்ந்து புறப்படும் போல் ஆகிவிட்டது.

Hopefully you will take my points in a positive way.

கொஞ்சம் பயம் தான். காய்ச்சிடுவீங்களோ என்று. இருந்தாலும் சொல்லத் தோன்றியது. சொல்லிவிட்டேன்.

Please take it as a constructive criticism and try to see where I come from.

அன்புடன்

மாலா

இன்னொன்றும் தோன்றியது. நீங்கள் படிப்பித்திருந்தால் உங்கள் எழுத்து பாணி கடல் கடந்து அறியப்பட்டும் வழக்கப்பட்டும் ஆகி ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்கி இருக்கும்.

*

அன்புள்ள நண்பர்களுக்கு ,

பொதுவாக எழுத்தாளர்களை உபதேசம் செய்து சீர்திருத்தவேண்டிய பொறுப்பு வாசகர்களுக்கு உண்டு என்னும் நம்பிக்கை தமிழில் உண்டு. ஒருநாளில் எனக்கு வரும் கடிதங்களில் பாதிக்குமேல் எனக்கு அறிவுரை சொல்லி வழிகாட்டும் கருணை நிறைந்த கடிதங்களே. அரசியல்வாதிகள் , தொழிலதிபர்கள், கணிப்பொறி நிபுணர்கள், பள்ளி ஆசிரியர்கள், இதழாளர்கள், வணிகர்கள், வலைப்பூக்காரர்கள், குடும்பத்தலைவிகள், தலைச்சுமை வியாபாரிகள் அனைவரும் உபதேசம் அளித்தபடியே உள்ளனர். ஆகவே கோபம் எல்லாம் வரவில்லை. தமிழில் எழுதுவதன் மூலம் அடையும் ஒரு பேறு இது என ஆறுதல் கொள்ளவே செய்கிறேன். ஒரு சமூகமே திரண்டு எழுத்தாளனை ஆற்றுப்படுத்துவது வேறெந்த மொழியில் நிகழும்?

இது நம் பண்பாடு. சுந்தர ராமசாமி வாழ்ந்த காலம் முழுக்க அவரிடமிருந்து எதையேனும் கேட்டுத்தெரிந்துகொள்ள வந்தவர்கள் விரல்விட்டு எண்ணத்தக்க சிலரே. ஆனால் நாளுக்கு இருவர் அவரிடம் பேசி அவருக்கு வழிகாட்டத்தான் தேடிவந்துகொண்டிருந்தார்கள். ஏனென்றால் நாம் ‘தந்தைக்குபதேசம்’ செய்த தனயனை வழிபடுபவர்கள். ‘ஆசிரியன் தலையில் குட்டி’ அறிவுறுத்திய ஞானப்பழங்கள். நமக்கு பிறரிடமிருந்து ஒருவரியேனும் கற்றுக்கொள்ள இருப்பதில்லை. பிறருக்குச் சொல்லிக்கொடுக்கவே ஞானம் ஊறிக்கொண்டே இருக்கிறது.

அந்தத்தன்னம்பிக்கைக்கு முன்னால் என்னுடைய முப்பதாண்டுக்கால இலக்கிய வாசிப்போ, நான் எழுதியுருவாக்கிய இலக்கிய விமர்சனத் தொகுதியோ, பேசிய மதிப்பீடுகளோ, இலக்கிய முன்னோடிகளுடனான உறவோ பெரிதாகப்படுவதில்லை. என் முன்னோடிகளாகிய சுந்தர ராமசாமியோ, க.நா.சுவோ, புதுமைப்பித்தனோ இப்படித்தான் எழுதினர் என்பதும் கண்ணுக்குப்படுவதில்லை. உலக இலக்கியவிமர்சன மரபே இதுதான் என்பதும் தெரிவதில்லை. ஆனாலும் பேசிக் கொண்டிருக்கவேண்டியிருக்கிறது. நான் சுந்தர ராமசாமியையும் பி.கே.பாலகிருஷ்ணனையும் செவிகொடுத்துக் கேட்டதுபோல ஒரு நாலைந்துபேர் என்னையும் கேட்கக்கூடும் என்பது என் நம்பிக்கை.

இந்த உபதேசங்களைச் செய்யும்போதே நான் எழுதுவதையும் வாசித்தீர்கள் என்றால் என் நிலைபாடு புரியும். இரு வகையில் ஆரம்பகட்ட எழுத்தை அணுகுகிறேன். அதில் ஆண் பெண் என்னும் பாகுபாடெல்லாம் வைத்துக்கொள்ளக்கூடாதென்று உறுதியாக இருக்கிறேன்.

ஒன்று சூர்யரத்னா, கமலாதேவி அரவிந்தன் வகை எழுத்து. அது அறியாமையும் கூடவே மிதமிஞ்சிய தன்னம்பிக்கையும் கொண்டது. அந்த போலியான தன்னம்பிக்கை சற்றேனும் உடையாமல் அவர்களால் எதையுமே கற்றுக்கொள்ளமுடியாது. அவர்களிடம் சென்று இலக்கியக்கொள்கையையோ அழகியலையோ பேசுவது வீண். அறிவுறுத்துவது அசட்டுத்தனம். இதற்கு முன் அவ்வகையில் ‘அகிம்சையாக’ முன்வைக்கப்பட்ட கருத்துக்களை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்று சென்று பார்த்தால் இது தெரியும்.

மேலும் இந்த அசட்டு எழுத்தை வைத்துக்கொண்டே அவர்கள் பலவகையான லாபங்களை , புகழை, வெற்றிகளை அடைந்தும் இருப்பார்கள். ஆகவே தங்கள் எழுத்து மேல் அவர்களுக்கு ஐயமும் இல்லை. விமர்சனம் என்பது தங்கள் வெற்றிகளுக்கு எதிரான சதி என்றே அவர்களின் கண்ணுக்குத்தெரியும். இலக்கியமறியாத பெரும் கூட்டமே அவர்களின் வெளித்தோற்றத்தை நம்பிக்கொண்டும் இருக்கும். பல்வேறு லாபங்களுக்காக அவர்களைப் புகழ்ந்து பேசுபவர்களின் வரிசையும் உடனிருக்கும்.

விளைவாக உண்மையான எழுத்து உருவாகி வருவதற்கான பெரும் தடைச்சுவராக இவர்கள் நின்றிருப்பார்கள். மோசமான முன்னுதாரணமாக அடுத்த தலைமுறைக்கு காட்சியளிப்பார்கள்.

ஆகவே அவர்களின் தன்னம்பிக்கையை முடிந்தவரை உடைக்க வேண்டியிருக்கிறது. அவர்களின் உண்மையான மதிப்பு இதுதான் சூழலில் உரத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. அவர்களை நிராகரித்துத்தான் இலக்கியம் நோக்கிச் செல்லவேண்டும் என நிறுவவேண்டியிருக்கிறது. அவர்கள் சூழலில் உண்மையான எழுத்துக்குத் தடையாக இல்லை என்றால் அவர்களைப்பற்றிப் பேசவே வேண்டியதில்லை. நான் இதேதரம் கொண்ட பெரும்பாலானவர்களைப்பற்றி ஒரு சொல்கூட சொன்னதில்லை என்பதை வாசகர்கள் அறிவர்.

இன்னொரு வகை எழுத்து அழகுநிலா பாணி. அதை பிரியத்துடனும் அக்கறையுடனுமே அணுகியிருக்கிறேன் என வாசகர் காணலாம். குறைகளைச் சுட்டி , செல்லும் வழியையும் சுட்டியிருக்கிறேன். வாசிக்கவேண்டிய நூல்களை அடையாளம் காட்டியிருக்கிறேன். ஏனென்றால் அவர் கவனிக்கும் மனநிலையில் இருக்கிறார். அனைத்து இடங்களிலும் தன்னை துருத்திக்கொண்டு நிற்கவில்லை. மிகையான தன்னம்பிக்கையுடனும் இல்லை. அவர் வளர வாய்ப்பிருக்கிறது. அவரை எவ்வகையிலும் புண்படுத்தலாகாது என்பதே என் எண்ணம்.

இந்த அக்கறையை குறிப்பிடத்தக்க அத்தனை இளம்படைப்பாளிகளிடமும் நான் காட்டியிருக்கிறேன். இன்று தமிழில் எழுதிவரும் எனக்கு பிந்தைய தலைமுறையைச் சேர்ந்த அத்தனை படைப்பாளிகளையும் அவர்களின் படைப்புத்திறன் வெளிப்பட்ட முதல் தருணத்திலேயே அடையாளம் கண்டு சுட்டிக்காட்டியவன் நான். பெரும்பாலும் என் கடிதமோ குறிப்போதான் அவர்கள் அடையும் முதல்பாராட்டாக இருக்கும். அதை ஒரு நெறியாகவே இருபதாண்டுக்காலமாகக் கொண்டிருக்கிறேன். என் தளத்தை வாசித்தாலே தெரியும். அதில் ஆண் பெண் என்னும் பேதம் எப்போதும் இருந்ததில்லை.

அதேபோல முன்னோடிகளை விமர்சிக்கையில் அவர்களின் கலைத்திறனை தனியாகவும் வரலாற்றுப்பங்களிப்பைத் தனியாகவுமே விமர்சிக்கிறேன். என் விமர்சனங்களைப் பார்ப்பவர்கள் எதை கடுமையாக நிராகரிக்கிறேன் , எதை வகுத்துக்கொள்ள விழைகிறேன், எதை கனிவாக விமர்சிக்கிறேன், எதை ஊக்கப்படுத்துகிறேன் என எளிதில் புரிந்துகொள்ளமுடியும். இந்த வேறுபாட்டில்தான் என் அளவுகோலே இருக்கிறது.

நல்லுபதேசங்களுக்கு நன்றி. ஆனால் நான் செய்வதென்ன என்பது எனக்குத் தெரியும். அதன் விளைவுகள் என்னவென்றும் அறிவேன். இத்தனை ஆண்டுகளாக இலக்கியம் எழுதி வாசித்து விமர்சிப்பதனால் சுயபுத்தி என்பதும் கொஞ்சம் இருக்கிறது. தயவுசெய்து அதையும் கொஞ்சம் நம்புங்கள்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 30, 2016 11:33

September 29, 2016

சென்னையில் காந்தி பற்றி உரையாற்றுகிறேன்

05884aa23728fd8e765d73a75044fe34[1]

வரும் ஞாயிறன்று சென்னையில் காந்தி குறித்து உரையாற்றவிருக்கிறேன். இராமலிங்கர் பணி மன்றத்தின்  51 ஆம் ஆண்டு  “அருட்பிரகாச வள்ளலார், மகாத்மா காந்தி விழா” வருகின்ற 2016 அக்டோபர் முதல் வாரம் முழுக்க நிகழ்கிறது. அதில் அக்டோபர் இரண்டு அன்று பேசுகிறேன். இம்முறை ‘காந்தியம் தோற்கும் இடங்கள்’ என்ற தலைப்பில் பேசலாமென ஓர் எண்ணம்.

நாள் :  2-10-2017

இடம் : சென்னை AVM இராஜேஸ்வரி திருமண மண்டபம்

நேரம் : மாலை ஆறுமணி

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 29, 2016 21:24

திராவிட இயக்கம் அளித்த முதல்விதை

20160926_130337

தமிழ் நவீன மொழிப் பரிணாமத்தில் திராவிட இயக்க எழுத்துக்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. அவர்களுக்கு நவீனப் இலக்கிய பரப்பில் இடமில்லை என்றே விமர்சகனாக நான் நினைக்கிறேன். நவீன இலக்கியம் அவருடன் தொடர்பற்ற ஒரு தனிச் சரடாகவே உருவாகி வளர்ந்து இன்றைய நிலையை அடைந்திருக்கிறது. ஆனால் மொழியை கருத்தியல்ச் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தும் ஒரு காலகட்டம் தமிழில் தொடங்கியபோது அதன் ஒரு முக்கியமான தரப்பாக அவர்கள் ஒலித்திருக்கிறார்கள். மொழிச்செயல்பாட்டை மக்கள்மயகாக்கியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் காந்திய இயக்கமும் பின்னர் இடதுசாரிகளும் உருவாக்கிய கல்வி மற்றும் இதழியல் புரட்சியின் அடுத்த கட்டநீட்சியாக திராவிட இயக்கத்தவர்  மேலெழுந்து வந்தார்கள். அவர்கள் இதழ்களான திராவிட நாடு குடியரசு போன்றவை பரவலாக அவர்கள் உருவாக்கிய கிராமப்புற வாசகசாலைகளில் வாசிக்கப்பட்டன. பொன்னி போன்ற இதழ்களில் தொடர்ந்து அவர்களின் எழுத்தாளர்கள் எழுதினார்கள்.

திராவிட எழுத்தாளர்கள் என்று சொல்லும்போது இன்று திராவிட இயக்கத்தின் அனுதாபிகளைக்கூட சேர்த்துவிடும் ஒரு போக்கு இருக்கிறது. ஆனால் திராவிட இயக்க எழுத்தாளர் என்று வரையறுக்கும்போது திராவிட இயக்கக் கொள்கைகளை முற்றிலும் ஏற்றுக் கொண்டு, அவர்களின் மொழி மற்றும் அரசியலை தங்கள் அடையாளமாக கொண்டு, அவர்களின் இதழ்களில் எழுதிய எழுத்தாளர்களைக் குறிப்பிட வேண்டும். அவ்வகையில் எஸ்.எஸ்.தென்னரசு தான் அவர்களின் முதன்மையான படைப்பாளி என்று எனக்குத் தோன்றுகிறது. அவருடைய சில சிறுகதைகளும் கோபுரகலசம் என்ற நாவலும் முக்கியமானவை. சி.என்.அண்ணாத்துரை, மு.கருணாநிதி போன்றவர்களை இன்றைய சூழலில் திராவிட இயக்க எழுத்தாளர்கள் என்று சுட்டிக் காட்டத்தக்கவர்கள்

திராவிட இயக்க எழுத்துக்கு என சில அடையாளங்கள் உண்டு. அவை நேரடியாக எளிய வாசகனிடம் பேசக்கூடிய மொழிநடை கொண்டவை. வாசகனைக் கவரும் மிகையான ஒலியும் அப்பட்டமான உணர்வுகளும் நிறைந்தவை. பொதுவாக தனித்தமிழ் நோக்கிச் செல்லக்கூடியவை. சமூக சீர்திருத்தப் பிரச்சாரத் தன்மை அவற்றின் மையம். உரையாடல்களை அச்சுத்தமிழில் அமைப்பது அவர்களிடம் வழக்கமாக இருந்தது. பின்னாளில் பேச்சுத் தமிழில் அமைக்கும்போது கூட அது குறிப்பிட்ட சாதிய வட்டார அடையாளமில்லாத ஒரு பேச்சுத் தமிழில் அமைத்தனர்.

இன்று திராவிட இயக்கத்தின் இலக்கிய எழுத்துக்களை பார்க்கும்போது அவர்களுடைய முதன்மையான பிரச்னையாக இருந்தது ஆண் பெண் உறவுதான் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அவர்கள் அரசியல்கருத்துக்களையும் சீர்திருத்தக் கருத்துக்களையும் பெருவாரியாக கட்டுரைகளில்தான் எழுதியிருக்கிறார்கள். கதைகளை அகத்துறை சார்ந்தவையாகத்தான் அணுகியிருக்கிறார்கள்.

திராவிட இயக்க எழுத்தாளர்களுக்கு உண்மையில் அவர்களின் ஆண் பெண் உறவு சார்ந்த பார்வையில் ஒரு மிகப்பெரிய இக்கட்டு இருந்தது. அவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டதும், பொற்காலமாக முன் நிறுத்தியதும் சங்ககாலத்தையும் காப்பியகாலத்தையும்தான். ஆகவே சங்ககால, காப்பிய கால விழுமியங்களை அவர்கள் தங்களுக்கென எடுத்து முன் வைத்தார்கள். அவ்விழுமியங்கள் நவீன காலகட்டத்துடன் முரண்படுபவை. தொன்மையான பழங்குடிக்காலப் பண்பாடு கொண்டவை. ஆகவே பொதுவாக ஆணாதிக்கநோக்கு கொண்டவை. ஆனால் அவர்கள் பேசிய சமூக சீர்திருத்த நோக்கு ஆண்பெண் சமத்துவத்தை முன்வைப்பது

இந்த முரண்பாடை சமன் செய்வதற்காக அறிவுலகத்தில் ஒரு கழைக்கூட்டாட்டத்தை நிகழ்த்துகிறார்கள். அதன் பொருட்டே அவர்கள் அத்தனை கதைகளை திரும்ப திரும்ப எழுதியிருக்கிறார்கள். சி.என்.அண்ணாத்துரை, எஸ்.எஸ்.தென்னரசு போன்றவர்களின் கதைகளில் மாதவியும் கண்ணகியும் வெவ்வேறு வடிவங்களில் திரும்பத் திரும்ப வருவதைப்பார்க்கலாம். நவநாகரிகப் பெண்களை மாதவியாகவும், தமிழ்ப் பண்பாட்டின் விழுமியங்களைக் கட்டிக் காத்து நிற்கும் படித்த பெண்ணை கண்ணகியாகவும் உருவகித்து அவர்கள் எழுதியிருக்கிறார்கள்.

அவர்களுடைய பார்வையில் ஒருவனை மட்டுமே உள்ளத்தாலும் நினைக்கும் கற்பு, குடும்பத்துக்கு அடங்கி இருத்தல், கணவனுக்கு தோள் கொடுத்து நிற்றல், ஒருபோதும் ஆணின் அகந்தையை புண்படுத்தாமல் அவனுக்கு இணைந்து வாழ்தல் போன்ற விழுமியங்கள் உயர்ந்தவையாக கருதப்படுகின்றன. அதே சமயம் சாதிமத பேதங்கள் பிற்போக்காகவும் கருதப்படுகின்றன.  ஆகவே அவர் உருவாக்கும் கண்ணகி நவீன கல்வி பெற்றவளாகவும் ,சாதி மதம் போன்றவற்றின் பிடியில் இருந்து வெளிவந்தவளாகவும் ,அதே சமயம் விரும்பியே பழைய கண்ணகியின் பெண்ணடிமைத்தன வாழ்க்கையை ஏற்றுக் கொண்டவளாகவும் இருப்பதைப்  பார்க்கலாம். அவர்கள் முன்வைக்கும் மாதவி நவீன கல்வி கற்றவளாகவும், அதேசமயம் போகங்களில் திளைப்பவளாகவும், ஆண்களை துச்சமாக நினைப்பவளாகவும், தமிழ் பண்பாட்டை உதாசீனம் செய்பவளாகவும் இருப்பாள்.

இந்தக் கண்ணகி, மாதவி, கோவலன் என்ற மூன்று உருவகங்களைக் கொண்டே பெரும்பாலான திராவிட இயக்கப் படைப்புகளை புரிந்து கொள்ள முடியும். திராவிட இயக்க எழுத்துக்களுக்கு இன்று கலைப்பெறுமானம் உண்டா என்றால் இல்லை என்பதே என் பதில். அவை சென்ற காலத்தின் ஆவணங்கள் என்று மட்டுமே சொல்ல முடியும். சென்றகால வாழ்க்கையை அவை காட்டுகின்றனவா என்றாலும் இல்லை என்றே பொருள். அவை இங்கு நடந்த ஒரு கருத்தியல் பரிணாமத்தைக் காட்டுகின்றன. அதில் செயல்பட்ட உளநிலைகள் என்ன, அவர்கள் எவ்வாறு அந்த இக்கட்டைக் கடந்து வந்தார்கள் என்பதைப் பார்ப்பதற்கான மொழிப்பதிவுகள் அவை.

தமிழக நவீன இலக்கியம் திராவிட இயக்கத்திற்கு முன்னதாகவே உருவாகிவிட்டது. அதன் முன் பலவீனமான கலையை உருவாக்கும் பரப்பியக்கமாகவே திராவிட இயக்கம் இருந்தது. ஆனால் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் திராவிட இயக்கமே நவீன இலக்கியத்தை உருவாக்கியது. சிங்கப்பூரின் தமிழர்பெருந்தலைவரான சாரங்கபாணி திராவிட இயக்கத்தவர். ஈ.வே.ரா அவர்களின் நண்பர். திராவிட இயக்கத்தின் பங்களிப்பில் முக்கியமானது இது என்பதில் ஐயமில்லை.

சிங்கப்பூரின் திராவிட இயக்கச் சார்புள்ள தொடக்க காலகட்டத்தைச் சேர்ந்த படைப்பாளி திரு நா.பழனிவேலு அவர்கள். பாரதிதாசனின் பாசறையை சேர்ந்தவர் என்று அவரை அவரது நூல் அறிமுகம் செய்கிறது. பாரதிதாசனின் கவிதா மண்டலத்தில் இவரின் பல கவிதைகள் பிரசுமாகியிருக்கின்றன. 1940 முதல் 40 ஆண்டுகாலம் சிங்கை வானொலியில் அவர் பணியாற்றியிருக்கிறார்.  இளங்கண்ணன், இராம கண்ணபிரான் போன்றவர்களுக்கு முன்னோடி அவர்

IMG_20160921_110413_HDR

அவருடைய ’காதல் கிளியும் தியாக குயிலும்’ என்னும் தொகுப்பை வாசித்தேன். அதன் தலைப்பே சுட்டுவது போல நேரடியாக திராவிட இயக்க நெடி கொண்டது. திராவிட இயக்கம் முன்வைத்த அந்த இருமை தலைப்பிலேயே வெளிப்பட்டுவிடுகிறது. தலைப்புக்கதை எல்லா வகையிலும் திராவிட இயக்கம் உருவாக்கிய கண்ணகி-கோவலன் – மாதவி உருவகங்களால் ஆனது.

இளவயதிலேயே சம்பந்தனுக்கு விசாலாட்சி என்று முடிவாகிவிடுகிறது. அப்படியே அவர்கள் வளர்கிறார்கள். சம்பந்தன் வளர்ந்து வரும்போது இந்திராணி என்ற நவநாகரிக நங்கையைக் கண்டு காதலுறுகிறான். அவளைத் திருமணம் செய்ய விரும்புகிறான். விசாலாட்சியைக் கைவிட்டு விட்டு அவளைத் திருமணம் செய்யப் போகிறான். விசாலாட்சி தியாக உள்ளத்துடன் அவனுடைய அந்த மனமாற்றத்தை அங்கீகரித்து அவன் இந்திராணியை மணம் புரிந்துகொள்ளட்டும் என்று சொல்கிறாள். ஆனால் தான் காலம் முழுக்க கன்னியாகவே இருப்பேன் என்று சொல்கிறாள். சம்பந்தன் பலவாறு மன்றாடியும் கூட அவனை மறக்கவோ தன் நிலையிலிருந்து மாறவோ விசாலாட்சி முற்படவில்லை. ஏனென்றால் ஒருவரை ஏற்றுக்கொண்டபின் இன்னொருவரை எண்ணுவதும் பாவம் என நினைக்கும் தமிழ் விழுமியம் கொண்டவள் அவள்.

இந்நிலையில் மதனகோபாலன் என்பவன் விசாலாட்சியிடம் வந்து, ‘நான் உன்னைக் காதலிக்கிறேன். அவன் உன்னைக் கைவிட்டால் என்ன என்னை மணந்துகொள்’ என்று கேட்கிறான். விசாலாட்சி  அந்த ‘வீணனை’ வசை பாடி எந்நிலையிலும் சம்மந்தனை உளபூர்வமாக ஏற்றுக் கொண்ட மனைவியாகவே தான் இருப்பேன் என்பதைச் சொல்கிறாள்.

இதை புதர்மறைவிலிருந்து கேட்ட இந்திராணியும் சம்பந்தனும் வெளியே வருகிறார்கள். இந்திராணி விசாலாட்சியை இன்னமும் சம்பந்தனை நினைத்திருக்கிறாய் என்றால் நீ என் கணவனை கைப்பற்ற நினைக்கிறாய் என வசைபாடும்போது விசாலாட்சி தனித்தமிழில் தன் கற்பின் திறனையும் சம்பந்தனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தன் வாழ்க்கையும் பற்றி சொல்கிறாள். அவளுடைய கற்பின் மேன்மையைக் கண்ட சம்மந்தன் மனம் மாறி அவளையே திருமணம் செய்ய முடிவெடுக்கிறான்.

இந்தக் கதையின் அடுத்த கட்டம் என்பது இந்திராணி விசாலாட்சிக்கு எழுதும் ஒரு கடிதம் வழியாக அவள் எவ்வளவு நல்லவள் என்றும், விசாலாட்சியின் கற்புத்திறனைக் கண்ட அவள் சம்பந்தனே விசாலாட்சியை மணக்கவேண்டுமென்பதற்காகத்தான் அந்த நாடகத்தை ஆடினாள் என்றும் தெரியவருகிறது.

அங்கும் கதை முடியாமல் மேலும் நகர்ந்து சென்று இந்திராணி இன்னொருவனை மணக்கும் தகவல் வரும்போது சம்பந்தன் மருத்துவமனையில் படுத்திருக்க  விசாலாட்சி அவனுக்காக கன்னியாகவே காத்திருப்பதைக் காட்டுகிறது. சம்பந்தன் இறந்துவிடுகிறான். அச்செய்திகேட்டு விசாலாட்சி ’ஆ…!’ என்று அழுதபடி இறந்து விழுகிறாள். ஆம் ‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்’ என்னும் தருணம்தான்

இந்தக் கதையை இன்று படிக்கும்போது இதன் செயற்கைத் தன்மை நம்மில் ஒரு மெல்லிய புன்னகையைத்தான் உருவாக்குகிறது. குறிப்பாக இதில் உள்ள மேடைநாடகத்தன்மை. விசாலாட்சியும் மதனகோபாலும் பேசிக் கொண்டிருக்கும்போது  ‘புதர் மறைவி’லிருந்து அதைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் இந்திராணியும் சம்பந்தனும். இப்படி இருவர் முக்கியமான செய்தியைப் பேசிக் கொண்டிருக்கும்போது புதர் மறைவிலிருந்தோ பக்கத்திலிருந்தோ கேட்டுக் கொண்டிருக்கும் காட்சி இளங்கண்ணன் முதலிய சிங்கப்பூர் இலக்கியத்தின் ஆரம்பகாலப் படைப்பாளிகள்  பெரும்பாலானவர்களின் கதைகளில் வருகிறது.   இது அன்றைய மேடை நாடக செல்வாக்கை காட்டுகிறது. அப்படியெல்லாம் மிக அந்தரங்கமான உரையாடலை இன்னொருவர் எளிதில் கேட்டுவிட முடியாது என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.

அதேபோல கடிதங்கள் வழியாக ஒரு உணர்வை நேரடியாக சொல்வது. அக்காலத்தில் நிறைய கடிதங்கள் எழுதப்பட்டிருந்தாலும் தங்கள் அந்தரங்க விஷயங்களை நேரடியாக விளக்கமாக எழுதும் வழக்கம் தமிழ் சமூகத்தில் என்றுமே இருந்ததில்லை.  அந்த கடிதஉத்தி ஆங்கில இலக்கியத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது. ஆங்கில இலக்கியத்தில் கடிதங்கள் எழுதுவதும் Errand Boy  என்று அழைக்கப்படும் பையன்களிடம் கடிதங்களை கொடுத்தனுப்புவதும் சாதாரணமாக இருந்த வழக்கம். கணவன் மனைவிக்கே கடிதம் அனுப்புவதுண்டு. தமிழகத்தின் அக்கால மேடைகளில் கடிதம் வருவது ஒரு திருப்புமுனை அல்லது உச்சம்.

இவ்விரு உத்திகளுமே திராவிட இயக்கச் செல்வாக்கையே காட்டுகின்றன. திராவிட இயக்கம் மேடைநாடகத்தை இலக்கியத்தை விடமுக்கியமானதாக நினைத்தது. இலக்கியத்தையே மேடைநாடகம் போல எழுதியது. பாவலரின் முக்கியமான பங்களிப்பும் வானொலி நாடகங்களில்தான். சிங்கப்பூரின் ஆரம்பகாலத்தில் வானொலியே முக்கியமான இலக்கிய ஊடகமாக இருந்திருக்கிறது. வானொலி நாடகங்கள் என்னும் வடிவிலேயே பெரும்பலான புனைவுகள் உள்ளன. இவர்களின் எழுத்தில் வானொலியின் செல்வாக்கைப்பற்றி தனியாகவே ஆராயவேண்டும்.

இந்தக் கதையின் உருவகங்களில் சிலப்பதிகாரம் நேரடியாகவே உள்ளது. விசாலாட்சி கண்ணகியாக உருவகிக்கப்பட்டிருக்கிறாள். அவளை கைவிட்டுச் செல்லும் காதலன் மீது பெரும்பற்றுடன் இருக்கிறாள். அவனைக் காதலனாக அன்றி கணவனாகவே நினைக்கிறாள். அவனுக்குத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறாள். இன்றைய பெண்ணியவாதிகளுக்கு எரிச்சலூட்டும் பெண்ணாக விசாலாட்சி இருப்பாள் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவளை ஒரு லட்சியக் கதாபாத்திரமாக பழனிவேலு காண்கிறார்.

அதே போல சம்பந்தன்  தன்னை ‘உயிருக்குயிராய்’ காதலிக்கும் ஒரு பெண்ணை, தானும் நெடுங்காலம் காதலித்த பெண்ணை ,இன்னொரு பெண்ணின் பொருட்டு எளிதாக விட்டுச் செல்கிறான். பிறகு அவள் மேன்மையை உணர்ந்து அவன் மனந்திருந்துவது ஒரு மேன்மையான் விஷயமாக சொல்லப்படுகிறதே ஒழிய அவனுடைய தகுதிக்குறைவாக எண்ணப்படவில்லை. ஏனெனில் அவன் மலர்விட்டு மலர் தாவும் வண்டு. கோவலன் மாதவியிடம் செல்வது இயல்பான ஒன்றாகத்தானே தமிழ்மரபு காண்கிறது. கண்ணகி கற்புடன்  இருப்பது போலவே ஆணின் இயல்பாகவே அந்த கற்பின்மையும் நம் மரபில் முன்வைக்கப்படுகிறது.

இந்திராணி இங்கு மாதவியாக வருகிறாள். மாதவியை எப்படி கதை முடிவில் ஒரு லட்சியக் கதாபாத்திரமாக இளங்கோ  மாற்றுகிறாரோ அதே போல ஒரு கடிதம் வழியாக ஒரு இந்திராணியை ஆசிரியர் காட்டிவிடுகிறார். இவ்வளவுக்குப்பிறகும் கதையை முடிக்க அவரால் முடியவில்லை. ஏனெனில் விசாலாட்சி சம்பந்தனை மணந்து எட்டுபிள்ளைகளுக்கு அன்னையானாள் என்றால் அவள் கண்ணகியாக ஆகமாட்டாள். ஆகவே சம்மந்தன் தேவையின்றி நோய்ப்படுக்கைக்குச் செல்ல, இவள் கன்னியாகவே வாழ்ந்து அவன் இறந்த செய்திக்கு அப்புறம் உயிர் துறக்கிறாள். ஆகவே அவள் கன்னித்தெய்வ்மாக கோயில் கொள்கிறாள். அவளுக்கு சிங்கையில் மெர்லைன் பக்கத்தில் ஒரு சிலை வைக்கவேண்டுமென்ற கோரிக்கை மட்டும்தான் இக்கதையின் இறுதியில் மௌனமாக இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.

Singai Pavalar

பாவலரின் கதைகள்  பலவற்றில் இந்த ஒழுக்கச் சிக்கல் தொடர்ந்து பேசப்படுவதை நாம் பார்க்கலாம். ’என் கதாநாயகி’ என்ற கதையில் கதாசிரியரிடமே வந்து தனது கணவனுக்காக வாதிடும் கண்ணகியை நாம் பார்க்கிறோம். ”நாங்கள் இருவரும் மலரும் மணமும் போலவும் நகமும் சதையும் போலவும் மனம் ஒன்றி இன்ப வாழ்க்கை நடத்தி வருகிறோம் . என்றாலும் நீர் எழுதி வெளியிட்ட கதை என் மானத்தை குலைப்பதாக இருக்கிறது என்னைப்போன்ற  சகோதரிகளின் மன உறுதியைக் கெடுப்பதாக இருக்கிறது. ஆகவே உமது மேல் மானநஷ்ட வழக்குக் கொடுப்போம்” என்று கண்ணகி சொல்ல அக்கதையை எழுதிய கதாசிரியர் கனவிலிருந்து விழிப்பதாக முடியும் கதை இவர்களைத் தொடர்ந்து கண்ணகி கனவிலும் வந்து மிரட்டிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.

இது தவிர ’மத்தாப்பு சுந்தரி’ என்னும் கதை அந்தக் காலத்து திராவிட இயக்கத்துக் கதைகளுக்கு நிகரானது இது. நேரடியாகவே சிங்கப்பூர்ப் பெண்களை மணந்து கைவிட்டு விட்டுச் செல்லும் கணவர்களை சாடும் ஒரு தன்னுரையை நோக்கி சென்று முடிகிறது இக்கதை. இதைத் தவிர எளிமையான அறங்களை போதிக்கும் கதைகள் பல இத்தொகுப்பில் உள்ளன. ’நத்தைகள்’ என்ற கதையில் ஒரு குடும்பத்தின் டாம்பிகம் கேலி செய்யப்படுகிறது. கதையின் இறுதியில் ஆசிரியரே என்று அழைத்து அந்த டாம்பிகத்தை சுட்டிக் காட்டி அவர்களை நத்தைகள் என்று நமக்கு அறிமுகம் செய்கிறார்.

’இரக்கம் வென்றது’ என்ற கதையில் தான் மழை நனைந்து ஒதுங்க நேர்ந்த போதுதான் மழை நனைந்ததால் தாமதமாக வந்த ஊழியனின் தரப்பை  உணர்ந்த கணபதியாபிள்ளை மனநிலை காட்டப்படுகிறது.à

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 29, 2016 11:34

பாவலரின் கதைகள்  பலவற்றில் இந்த ஒழுக்கச் சிக்கல் தொடர்ந்து பேசப்படுவதை நாம் பார்க்கலாம். ’என் கதாநாயகி’ என்ற கதையில் கதாசிரியரிடமே வந்து தனது கணவனுக்காக வாதிடும் கண்ணகியை நாம் பார்க்கிறோம். ”நாங்கள் இருவரும் மலரும் மணமும் போலவும் நகமும் சதையும் போலவும் மனம் ஒன்றி இன்ப வாழ்க்கை நடத்தி வருகிறோம் . என்றாலும் நீர் எழுதி வெளியிட்ட கதை என் மானத்தை குலைப்பதாக இருக்கிறது என்னைப்போன்ற  சகோதரிகளின் மன உறுதியைக் கெடுப்பதாக இருக்கிறது. ஆகவே உமது மேல் மானநஷ்ட வழக்குக் கொடுப்போம் என்று கண்ணகி சொல்ல அக்கதையை எழுதிய கதாசிரியர் கனவிலிருந்து விழிப்பதாக முடியும் கதை இவர்களைத் தொடர்ந்து கண்ணகி கனவிலும் வந்து மிரட்டிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.

இது தவிர ’மத்தாப்பு சுந்தரி’ என்னும் கதை அந்தக் காலத்து திராவிட இயக்கத்துக் கதைகளுக்கு நிகரானது இது. நேரடியாகவே சிங்கப்பூர்ப் பெண்களை மணந்து கைவிட்டு விட்டுச் செல்லும் கணவர்களை சாடும் ஒரு தன்னுரையை நோக்கி சென்று முடிகிறது இக்கதை. இதைத் தவிர எளிமையான அறங்களை போதிக்கும் கதைகள் பல இத்தொகுப்பில் உள்ளன. ’நத்தைகள்’ என்ற கதையில் ஒரு குடும்பத்தின் டாம்பிகம் கேலி செய்யப்படுகிறது. கதையின் இறுதியில் ஆசிரியரே என்று அழைத்து அந்த டாம்பிகத்தை சுட்டிக் காட்டி அவர்களை நத்தைகள் என்று நமக்கு அறிமுகம் செய்கிறார்.

’இரக்கம் வென்றது’ என்ற கதையில் தான் மழை நனைந்து ஒதுங்க நேர்ந்த போதுதான் மழை நனைந்ததால் தாமதமாக வந்த ஊழியனின் தரப்பை  உணர்ந்த கணபதியாபிள்ளை மனநிலை காட்டப்படுகிறது.இந்தக்கதையும் ஆரம்பகால திராவிட இயக்க எழுத்திலுள்ள ஒரு இக்கட்டையும் அதை அவர்கள் ஒரு கதைமாதிரியை கையாண்டு கடந்துசென்றதையும் காட்டுகிறது.

அக்காலகட்டம் முதலாளி – தொழிலாளி முரண்பாட்டை பேசிய இடதுசாரிகளின் குரல் ஓங்கி ஒலித்த வரலாற்றுத்தருணம். முதலாளிக்கும் தொழிலாளிக்குமான உறவு ஆண்டை அடிமை உறவுதான் என்றும் சுரண்டலே அதன் அடிப்படை என்றும் அவர்கள் சொன்னார்கள். அது ஒரு உயிரோட்டமான அந்தரங்க உறவாகவே அன்றைய மக்கள் நினைத்துக்கொண்டிருந்தனர். மாறாக ,வலதுசாரிக்கதைகளில் அதை ஒரு மானுட உறவாக முன்வைக்கும் குரல் எழுந்தது.

திராவிட இயக்கத்தவர் நடுவே மாட்டிக்கொண்டார்கள். அவர்களின் பல சமூகக் கருத்துக்கள் இடதுசாரித்தன்மை கொண்டவை. சமூகசீர்திருத்தமும் மதச்சீர்திருத்தமும் அவர்களின் நோக்கம். ஆனால் அவர்களின் பொருளியல் நோக்கு வலதுசாரித்தன்மை கொண்டது. இந்த முரண்பாட்டை வெல்ல அவர்கள் ஒரு கழைக்கூத்தாட்டத்தை நிகழ்த்தினர். கொடுமையான முதலாளி இரக்கமின்றிச் சுரண்டுவதைச் சித்தரிப்பார்கள். ஆனால் அந்த முதலாளி உண்மையை உணர்ந்து மனம் மாறுவதாக முடிப்பார்கள்.

அல்லது அவரது மகனோ மகளோ இரக்கம் கொண்டவர்களாகவும் தொழிலாளர்களுடன் இணைந்து யோசிப்பவர்களாகவும் இருப்பார்கள். [இந்த ‘டெம்ப்ளேட்’ பின்னர் எம்.ஜி.ஆர் சினிமாக்களுக்கான ஒன்றாக மாறியது. எம்ஜியார் பலகதைகளில் கருணைகொண்ட முதலாளி அல்லது முதலாளியின் தொழிலாளர்சார்புடைய மகன்]. மொத்தத்தில் அவர்கள் சொல்ல வருவது முதலாளி தொழிலாளி உறவு ஒருவகை உணர்வுபூர்வ மானுட உறவுதான், அதன் அடிப்படை சுரண்டல் அல்ல என்றே. ஆனால் இடதுசாரிகள் உருவாக்கிய குரூரமான சுரண்டல்சித்திரத்தை அப்படியே எடுத்தாளவும் செய்தார்கள்.

ந.பழனிவேலு அவர்களின் கதை அந்த கதைக்கட்டுமானத்தை அப்படியே எடுத்துப்பயன்படுத்துகிறது. ஒருநாள் மழையில் நனைந்ததுமே கணபதியாபிள்ளைக்கு உழைப்பாளரின் துயர் புரிந்துவிடுகிறது. சிங்கையின் பின்னாளைய எழுத்தாளர்களான இளங்கண்ணன் போன்றவர்கள் இந்தச் சமரசத்தைச் செய்யாமலேயே எழுதியிருப்பதைக் காணலாம்.

இந்தவகையான கழைக்கூத்தாட்டம் இன்றும்கூட சிங்கை எழுத்துக்களில் நீடிப்பதைக் காணலாம். குறிப்பாக இங்கே எழுதப்படும் ‘பணிப்பெண்பிரச்சினை’ பற்றிய கதைகள். அவற்றில் பணிப்பெண்ணை உழைப்புச்சுரண்டலாகப் பார்ப்பதா அல்லது உறவாக அணுகுவதா என்னும் தடுமாற்றம் எப்போதும் உள்ளது. முன்னோடியால் உருவாக்கப்பட்ட ‘டெம்ப்ளேட்டுகள்’ எளிதில் அழிவதில்லை. உருமாறி எப்போதும் சூழலில் இருந்துகொண்டிருக்கும்.

*

திராவிட இயக்க எழுத்தாளர்களின் படைப்புகளின் பொதுத்தன்மைகளை ஆராய்வதற்கு அவர்கள் எதிர்கொண்ட சில பண்பாட்டு சிக்கல்கள், அவர்கள் உருவாக்கிய சில கதைக்கட்டுகள் முக்கியமான தடையங்கள். அவற்றில் முதன்மையானது மேலேசொன்ன கண்ணகிxமாதவி முரண்.  தொழிலாளர்x முதலாளர் முரண் இன்னொன்று.

ந.பழனிவேலு அவர்களின் எல்லாக் கதைகளையும் இப்படிச் சில அடிப்படை மாதிரிவடிவங்களாகச் சுருக்கி ஆராயலாம். அவரது திராவிட இயக்க முன்னோடிகளின் பார்வையின், அழகியலின் தொடர்ச்சியாக அவரை அணுகவேண்டும். அவரது வானொலிநாடகங்கள் உட்பட அனைத்துப்படைப்புகளும் பெருந்தொகுதிகளாக வெளிவந்துள்ளன. சிங்கப்பூர் தேசியக்கலைக்கழகம் அதற்கு நிதியுதவி செய்துள்ளது. எளிமையான மொழியில் அறசிக்கல்களைப் பேசும் நீதிக்கதைகள் இவை என்று பொதுவாக வரையறுக்கலாம்.

தொடக்ககாலக் கதைகள் என்றவகையில் இவை இன்று ஒரு வாசகனுக்கு எவ்வகையிலும் கலைரீதியாக பெறுமானமுடையவை அல்ல. ஆனால் இங்கு இலக்கியத்தின் அடிப்படைக் கவலைகளும் நிலைபாடுகளும் உருவாகிவந்த வரலாற்றைக் காட்டும் படைப்புகள் இவை. அந்தக் காலகட்டத்தில்  திராவிட இயகக்த்தின் பார்வை எவ்வாறு இங்கு செயல்பட்டது, பொற்காலங்களை இறந்தகாலத்தில் எப்படித் தேடினர், இறந்த கால விழுமியங்களை சம காலத்தில் கொண்டு வந்து பொருத்துவதற்காக ஆடிய கருத்துநடனம் என்ன அனைத்தையும் இவ்வெழுத்துக்கள் வழியாக அறியமுடியும். இன்றும் அவர்களின் விழுமியங்கள் எவ்வாறு சிங்கைத் தமிழ்ச் சமுதாயத்தில் கரந்து திரிந்து உறைகின்றன, எவை மாறியுள்ளன என்பதையெல்லாம் ஆராயமுன்வரும் சமூகவியலாளனுக்கு இப்படைப்புகள் முக்கியமானவை

’காதல் கிளியும் தியாக குயிலும்’. பாவலர் ந.பழனிவேலு

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 29, 2016 11:34

சிங்கப்பூர் கடிதங்கள் 3

6

ஜெ,

அருமையான கட்டுரை. ஆஃபாயில்களும் ஆல்பர்ப்பஸ் அங்கிள்களும் என்று ஒரு சினிமாத்திரைக்கதை எழுதிக்கொண்டிருக்கிறேன். முழுநீள நகைச்சுவைக்காவியம். யூஸ் பண்ணிக்கிறேன்.

ஆர். அருண்

***

அன்புள்ள ஜெ,

சிங்கப்பூர் இலக்கியம் பற்றி நீங்கள் எழுதிக்கொண்டுப்பவற்றை வாசித்தேன். நானும் நீங்கள் நீங்கள் சொன்னதையே நினைத்தேன். அங்கே ஒரு canon உருவாக்க நினைக்கிறீர்கள் என்று. எந்த ஒரு இலக்கியச்சூழலிலும் அவசியமானது அதுதான். canon இல்லாமல் ஒரு இலக்கியமரபை மதிப்பிடவோ அல்லது அதிலிருந்து அடுத்த கட்டத்தை உருவாக்கவோ முடியாது. அடுத்த தலைமுறைக்கு முன் இதெல்லாம் நிகழ்ந்திருக்கிறது. இன்னின்ன குறைநிறைகள் உள்ளன என்று சொல்வதன்மூலம்தான் canon உருவாகிவரமுடியும்

தமிழுக்கு அவ்வகையில் க.நா.சு மிகப்பெரிய பங்களிப்பாற்றியிருக்கிறார். இன்று நீங்கள் செய்யும் அதே பணிதான். அவர் அன்றைய நட்சத்திரங்களான கல்கி, சாண்டில்யன், தேவன், நா.பார்த்தசாரதி, அகிலன் ஆகியோரை நிராகரித்தார். ஆகவே அன்று அவரை வசைபாடினார்கள். ஆனால் அவர் சொன்னதே நிலைக்கிறதை இன்று காண்கிறோம். புதுமைப்பித்தன், மௌனி, கு.பரா, ந.பிச்சமூர்த்தி என்னும் மரபு அவர் உருவாக்கியதே.

அந்தத்தலைமுறையில் பலர் எழுதிக்கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் அதில் நால்வரைத்தான் க.நா.சு முன்னிறுத்துகிறார். இதுதான் canon உருவாக்குதல். அதை நீங்கள் செய்கிறீர்கள். அங்குள்ள அரைவேக்காடுகளுக்கும் போலிகளுக்கும் கடுப்பு கிளம்பும்தான். ஆனால் க.நா.சுவின் குரலை முன்னெடுக்க அழகிரிசாமியும் சுந்தர ராமசாமியும் பிரமிளும் வந்ததுபோல அடுத்த தலைமுறை வரும். வந்தால் அவர்களுக்கு நல்லது.

சாரங்கன்

***

ஜெ

டிவிட்டரில் சும்மா சூர்யரத்னா என அடித்துத் தேடிப்பார்த்தேன். என் வாழ்க்கையிலேயே அப்படிச் சிரித்தது இல்லை. அற்புதமான பல டிவிட்டுகள். விளையாடியிருக்கிறார்கள்

நன்றி. You made my day!

ஜெயபாலன்

***

அன்புள்ள ஜெமோ,

நீங்கள் விமர்சகர். பெரியமனிதர். ஆனால் சின்னத்தனங்களைச் செய்கிறீர்கள். சூர்யரத்னா கதைகளைப்பற்றி எழுதியிருந்ததைத்தான் சொல்கிறேன். என்னவேண்டுமென்றாலும் எழுதுங்கள். உங்கள் சுதந்திரம். ஆனால் உங்கள் கருத்தைக்கண்டு அந்த கருமாந்தரத்தை வாசித்த என்னைத்தான் செருப்பால் அடிக்கவேண்டும். என்ன ஒரு vulgar amateurism! தாங்க முடியவில்லை. இவையெல்லாம் எப்படி நூலாக அச்சாகின்றன? எப்படிப் பரிசு பெறுகின்றன? தமிழக விருது இந்த குப்பைக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. காசு வாங்கிக்கொண்டிருப்பார்கள் என்பது என் சந்தேகம். அந்தத் தமிழக அமைப்பு மீது ஏதாவது சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும் என்றே நினைத்துக்கொண்டேன்.

ஜெயராமன்

***

அன்புள்ள ஜெ

உங்கள் சிங்கப்பூர் இலக்கியம் குறித்த விமர்சனத்திற்குப் பதிலாக எழுதப்படுவனவற்றை கவனிக்கிறீர்களா? பாலு மணிமாறன் என்னும் ஆசாமி கீழ்த்தர வசைகளைக் கொட்டிக்கொண்டிருக்கிறார். அவர்தான் பிரசுரகர்த்தராம். காசு வாங்கி புத்தகம்போடுபவர் என நினைக்கிறேன். அவர்மேல்கூட நீங்கள் சட்டநடவடிக்கை எடுக்கலாம். கூடவே மாலன் போன்ற பிழைப்புவாதிகள் போய் ஜால்ரா அடிக்கிறார்கள். இந்த கூச்சலுக்கு அப்பால் நாலைந்து நல்ல இளம் படைப்பாளிகள் நீங்கள் எழுதுவதை வாசித்தால்கூட நல்லதுதான் என நினைக்கிறேன்

எஸ். கருணாகரன்

***

அன்புள்ள ஜெ

அந்தம்மாவின் எதிர்வினையை வாசித்தேன். நீங்கள் ரொம்ப லக்கி. நீங்கள் ஒருவரைப்பற்றி ஒன்று சொன்னால் அவர்களே பாய்ந்துவந்து அது உண்மைதான் எனறு நிரூபித்துவிடுவார்கள். என்ன ஒரு மொழிநடை. அதைவிட என்ன ஒரு ஆங்கிலம். அட! சிங்கப்பூரில் ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கைடு நன்றாக விற்க வாய்ப்புண்டு போலயே. அதிலுள்ள வசைகள், எளிமையாகக்கூட எதையும் புரிந்துகொள்ள முடியாத ஆர்ப்பாட்டம். [விளக்கு பிடிப்பது, எதையோ தேய்த்துக்கொண்டதுபோல எரிவது…] நடுவே மாலன் போன்ற ஆசாமிகள். இவர்களுக்கெல்லாம் அவர்தான் சரி. அவர் சும்மா ஆடமாட்டார். என்னவோ வசமாகச் சிக்கப்போகிறதென நினைக்கிறேன்

கல்யாணராமன்

***

அன்புள்ள ஜெ,

சிங்கப்பூர் இலக்கியச்சூழல் பற்றி நீங்கள் எழுதியிருப்பது உண்மையில் பீதியைக் கிளப்புகிறது. அங்கே ஆக்கபூர்வமான ஒரு உடைவு நிகழாமல் ஒன்றுமே வளராது. அதற்கு முதல்தேவை அங்குள்ள அதிகார அமைப்புக்கள் இந்தமாதிரியான போலிக்குரல்களை அடையாளம் கண்டு களையெடுப்பதுதான். சூழலை எவரும் மிரட்டிவைத்திருக்க அரசு அனுமதிக்கக்கூடாது. இதைப்பற்றி சிங்கப்பூர் அரசுக்கே ஒரு மனுவை எழுத்தாளர்கள் அளிக்கலாம் என நினைக்கிறேன்

எஸ். ராமச்சந்திரன்

***

அன்பு ஜெயமோகன்,

நலமா?

சூர்யா ரத்னாவின் கதை ஒன்றைப் படித்துப் பார்த்தேன். நீங்கள் சொல்கிற லட்சணத்தில் தான் இருக்கிறது. ஆனால் உங்கள் பதிவில் கடுமையைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம். அவரின் பிழைப்பைக் கெடுக்கிறதாய் நினைத்திருப்பதால் தான் அவர் இவ்வளவு மோசமான எதிர் வினையைப் புரிந்திருக்கிறார்.

அவரின் எழுத்து தமிழில் எழுதிக்கொண்டிருந்த விமலா ரமணியின் எழுத்து போன்றது வெவ்வேறு ஒழுக்க மதிப்பீடுகள் இருக்கும் போதும். இவை பெரிய எல்லைகளைத் தொட முடியாது என்று தான் தோன்றுகிறது. ஆனால் நான் ஏற்கெனவே குறிப்பிட்ட படி ‘குயில் கூவும் கானகங்களில் காகத்துக்கு இடம் உண்டு!‘.

அன்புடன்,

அஸ்வத்

***

அன்புள்ள ஜெ,

விமர்சனங்களுக்கு பதிலடியாக காவல்துறையை நாடியிருக்கும் போக்கு அதிர்ச்சிக்குரியது. இலக்கியம் பண்படுதலுக்கானது என நான் நினைக்கிறேன். இலக்கியவாதிகளாக அறிவித்துக் கொள்பவர்களே பண்படவில்லையென்றால் அவர்களின் படைப்பே அணுகத் தகுதியற்றது என்று நினைக்கிறேன். எவ்வளவு விமர்சனங்களை கருத்தியல் சார்ந்து வைத்தாலும் தமிழின் இறுதிவரை ஆதிக்கம் செலுத்தப்போகிற எழுத்தாளுமை நீங்கள். உங்களுக்கு எதிரான இந்த தாக்குதலை தமிழ்ச் சமூகம் ஒன்றுபட்டு எதிர்க்காவிட்டால் அதற்காக பணி செய்வதையே நீங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கும் இந்தப்போக்கு கடுமையான கண்டனத்திற்குரியது.

அன்புடன்,

அகில் குமார்

***

மதிப்பிற்குரிய ஜெ,

முகநூலில் சூர்யரத்னா என்னும் நாலாந்தரப் பெண் எழுத்தாளர் தங்களைப் பற்றி எழுதியதைப் படித்து மிகுந்த அருவருப்பு அடைந்தேன்.இலக்கியம் என்னும் கருத்து உருவாக்கம் கருத்து மோதல் மூலமே உருவாக முடியும் என்பதை அறியாத இந்த ஜென்மங்கள் எழுத்தாளர் என்று சொல்லித் திரிகின்றன.

இவர் எதையும் வாசித்தது இல்லை என்பது திண்ணம்.அவர் பதிவில் தெரியும் திமிர் (Is this guy, that guy) பொதுவாக கொஞ்சம்பணம் சம்பாதித்தவர்களிடம் காணக் கிடைப்பது. இவர்கள் தங்களை தாமாகவே உயர்த்தி பிடித்து கொண்டு மற்றவர்களை ஏறி மிதித்து அனைத்தையும் பணத்தால் மதிப்பிடுபவர்கள். அவருக்கு ஜால்ரா தட்டுபவர்களும் இருப்பதால் தாங்கள் பெரிய இதுகள் என்று புளாங்கிதம் அடைகிறார்கள். அதில் அம்மணிக்கு constructive criticism வேறு செய்ய வேண்டுமாம்

அரிபாலாஜி

===========================================================

சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் செல்நெறிகள்

இராம கண்ணபிரான் கதைகள் பற்றி

நா கோவிந்தசாமி

சூர்யரத்னா கதைகள் நூர்ஜகான் கதைகள்

கமலாதேவி அரவிந்தன்

உதுமான் கனி

புதுமைதாசன்

பெண் எழுத்தாளருகளின் ஆக்கங்கள் பற்றி

சிங்கப்பூர் இலக்கியம் கடிதங்கள் 1

சிங்கப்பூர் இலக்கியம் கடிதங்கள் 2

அழகுநிலா

சிங்கப்பூர் சிக்கல்கள் சூர்யரத்னாவின் வழக்குபற்றி

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 29, 2016 11:33

September 28, 2016

பறப்பதற்கு முந்தைய சிறகடிப்புகள்

Azhagunila 01

எங்கள் குடும்ப வழக்கப்படி நானும் இளமையில் நாட்டுப்புறத் தற்காப்புக் கலை பயிலச் சென்றிருந்தேன். நான் சென்றது சிலம்பப் பயிற்சிக்காக. கிட்டத்தட்ட எட்டு மாத காலம் சிலம்ப மைதானத்தின் ஒர்  ஓரத்தில் நிற்க வைத்து கையில் சிலம்பை கொடுத்து இடதும் வலதும் சுழற்ற சொல்லிக் கொடுத்தார்கள். ஒரு மாதகாலம் சுழற்றிய பிறகு என்னை ஆசிரியர் ஏமாற்றுகிறார் என்ற எண்ணம் வந்துவிட்டது. ஓரிரு மாதங்களுக்குள் எம்.ஜி.ஆர் போல சண்டை போடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். சில நாட்கள் நான் செல்வதைத் தவிர்த்தபோது அவர் என்னைக் கூப்பிட்டு  ‘ஏன் வரவில்லை?’ என்று கேட்டார். எனக்கு முறையாகச் சொல்லிக் கொடுக்கப்படவில்லை என்று நான் புகார் சொன்னேன்.

அப்போதுதான் இன்று வரை என் வாழ்க்கையில் தொடரும் முக்கியமான ஒரு பாடத்தை அவர் சொன்னார்.  ”எந்தக் கருவியைக் கையாள்கிறோமோ அந்தக் கருவி நம் சிந்தையிலிருந்து முற்றிலும் மறைவதற்குப் பெயர்தான் திறமை” என்று. அது பழக்கம் வழியாக மட்டுமே வரும். தட்டச்சுப்பலகையைப்பற்றி பிரக்ஞை உடையவனால் தட்டச்சு செய்ய முடியாது. சிலம்பைப்பற்றிய தன்னுணர்வு இருக்கும் வரைக்கும் சிலம்பு சண்டை போட முடியாது. முதலில் கை பழகவேண்டும். கை அறிந்ததை அகம் அறிய வேண்டும். நனவு அவற்றை முழுமையாக மறந்துவிட வேண்டும். ‘மெய் கண்ணாகுதல்’  என அதைச் சொன்னார். செந்தமிழும் நாப்பழக்கம் என்ற தொல்மொழி அதையேதான்  சுட்டுகிறது. சிந்தைப் பழக்கம் அல்ல. அது நாப்பழக்கம் மட்டுமே.

சிறுகதை அல்லது கவிதை போன்ற வடிவங்களில் அவ்வடிவத்தையும் மொழியையும் எந்த முயற்சியும் இன்றிக் கையாளும்திறன் வரும்போதுதான் தன்னியல்பாக அடுத்த கட்டத்தை நோக்கி நாம் செல்ல முடியும். அல்லது அவ்வடிவிலும் அம்மொழியிலுமே நாம் சிக்குண்டிருப்போம். விருத்தம் என்ற வடிவத்தை தளையெண்ணி எழுதியிருந்தால் கம்பனால் கம்பராமாயணம் எழுதியிருக்க முடியாது. அவன் பேசினாலே விருத்தம் அமைந்துவிட்டிருக்க வேண்டும். அதற்கு அக்கலையின் தொடக்க காலகட்டத்தில் மிகக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. இளம் எழுத்தாளர்களிடம்  ”தொடர்ந்து எழுதுங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு கதை எழுதுங்கள்” என்று நான் சொல்வதுண்டு. உலக எழுத்தாளர்களில் மிகச்சிறந்தவர்கள் பெரும்பாலும் அனைவருமே தினமும் எழுதியவர்களே.

மிகக்குறைவாக எழுதுவதாகத் தோன்றும் நல்ல எழுத்தாளர்கள் உண்மையில் பிரசுரிக்காத படைப்புகள் நிறைய வைத்திருப்பார்கள். உண்மையிலேயே மிகக்குறைவாக எழுதுபவர்கள் தங்களுக்கென்ற ஒரு நடையோ தனித்தன்மையோ இல்லாதவர்களாகத்தான் இருக்க முடியும். ஏனென்றால் நாம் எழுதுவது ஓர் அனிச்சை நிகழ்ச்சி. அனிச்சையாக நாம் செய்யும் எதையும் மிகுந்த முயற்சியுடன் மட்டுமே மாற்றிக்கொள்ளமுடியும். உதாரணமாக, பேசும்போது நீங்கள் கைகளை இயல்பாக அசைப்பதை வேறுவகையாக மாற்றுவதைப்பற்றி எண்ணிப்பாருங்கள். எழுதுவது அனைத்தையும் பிரசுரிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் பிரசுரிக்கும் வாய்ப்பு வந்தால் மட்டுமே எழுதவேண்டும் என்பது இளம் எழுத்தாளனுக்கு மிகப்பெரிய தடை. எழுத்திற்கு நாவும் கையும் பழகிய பிறகு உளஉந்துதலும் தேவையும் இருந்தால் மட்டும் எழுதலாம்.

சிங்கப்பூர் அல்லது இலங்கைப் படைப்புகள் பெரும்பாலானவற்றைப் பார்க்கும்போது இந்தப்பயிற்சியின்மை மொழியில் தெரிகிறது. சில சமயம் கதைக்கருக்களும் கதைவடிவும் கூட நன்றாக இருந்தும் கூட மொழி தனித்தன்மையற்றதாவும் தேர்ச்சியற்றதாகவும் உள்ளது.

அழகுநிலாவின் சிறுகதைகளில் முதலில் என்னைக் கவர்ந்தது தொடர்ந்த வாசிப்பு மற்றும் எழுத்து காரணமாக வந்த இயல்பான சரளத்தன்மை. சிங்கப்பூர்க் கதைகளில் அபூர்வமானது என்பதனாலேயே மிகுந்த புத்துணர்ச்சியுடன் இந்தத் தொகுப்பை படித்து முடித்தேன். இந்த ஒரு அம்சத்திற்காகவே இந்த சிறுகதைத்தொகுப்பு சிங்கப்பூர்ச் சூழலில் மட்டுமல்ல தமிழ்ச் சூழலிலும் முக்கியமானதென்று நான் கருதுகிறேன். கவனிக்கத்தகுந்த ஒரு தமிழ்எழுத்தாளராக அழகுநிலா வரக்கூடும் என்று அவதானிக்கிறேன்.

இந்த முதற்தகுதிக்கு அப்பால் அழகுநிலாவின் கதைகளில் இரு பிரதானமான குறைபாடுகளை என்னால் காண முடிகிறது. ஒன்று அதன் அன்றாடத்தன்மை. சிறுகதை என்பது அன்றாட உண்மைகளை, கணநேர விழிப்புணர்வுகளை சொல்வதற்கான வடிவம் தான்.  வாழ்க்கையை நோக்கி ஒரு கணம் ஒளிபாய்ச்சி அணையும் ஒரு கலை உத்தியாகவே அதை முன்னோடிகள் வடிவமைத்திருக்கிறார்கள். ஆரம்பகட்டப் படைப்பாளிகளிடமிருந்து நாம் அதைத் தான் பெற்றுக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு கலையும் தன்மேல் தான் ஏறிக் கடந்து செல்கிறது. சிறுகதையில் அன்றாட வாழ்க்கையின் தருணங்களை நூறு ஆண்டுகளாக எழுதித் தள்ளிவிட்டோம். அனேகமாக எல்லா தருணங்களும் ஏதோ ஒரு வகையில் எழுதப்பட்டுவிட்டன. இன்று எழுதுகையில் அவற்றை மறுகண்டுபிடிப்புதான் செய்ய வேண்டியிருக்கிறது.

இந்த ஊடகப்பெருக்கக் காலகட்டத்தில் அனைத்துத் தளத்திலும் மிதமிஞ்சிக்கிடைப்பது என்பதே முக்கியமான சிக்கல். ஒரு கதையை படிக்கும்போது இன்னொரு கதை நினைவுக்கு வருகிறது. பலசமயம் அது இன்னும் பெரிய படைப்பாளியால் இன்னும் வலுவாக எழுதப்பட்டிருக்கும். உதாரணமாக இத்தொகுதியில் உள்ள நல்ல கதை என்பது ’ஆறஞ்சு’. சிங்கப்பூர்ச் சூழலில் உள்ள முக்கியமான முதல் தேர்வு என்பது Primary Five  என்று சொல்லப்படும் ஐந்தாம் வகுப்பு முடிவுத்தேர்வு. இந்தத் தேர்வுக்காக ஒவ்வொரு குழந்தையையும் வாட்டி வதைப்பது இங்கு நடந்து கொண்டிருக்கிறது. ஆறாம் வகுப்பிலேயே மாணவர்களை மூன்றாக பிரித்துவிடுகிறார்கள். மதிப்பெண் குறைவாக வாங்கிய மாணவர்கள் உடலுழைப்பு சார்ந்த வேலைகளுக்குச் செல்லும் தகுதி கொண்டவர்கள் என்றும், நடுத்தர மாணவர்கள் நடுத்தர பணிக்காகவும் ,அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் உயர்தர கல்விக்கென்றும் பிரிக்கப்படுகிறார்கள்.   ஆகவே பெற்றோர் உச்சகட்டப் பதற்றத்தில் இருக்கிறார்கள்.

இந்தப் பிரச்னையைப்பற்றிப் பேசும் கதை ’ஆறஞ்சு’. ஒரு குழந்தையின் பார்வையில் எப்படி தான் தன்னை எவ்வகையிலும் உள்ளூற பாதிக்காத பெரியவர்களின் ஒரு தேர்வுமுறையை நோக்கி அழுத்தி செலுத்தப்படுகிறோம் என்பதைச் சொல்கிறது. தனக்குப்பின் வருபவர்களுக்கும் அது சென்று சேரும் விதத்தையும் சுட்டிக் காட்டுகிறது. ஒரு சாபம் தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு செல்வது போல அந்தத்தேர்வு கடந்து செல்வதை ஆரஞ்சு காட்டுகிறது.

ஆனால் அசோகமித்திரனின் ’கல்வி’ போன்ற கதைகள் இதைவிடக் கூர்மையாக கல்வி எனும் வதையைச் சொல்லிவிட்டிருக்கின்றன என்ற எண்ணமும் ஏற்படுகிறது. நவீனச்சிறுகதையின் சவால் இதுதான். ஒரு பிரச்னையை சரியாகச் சொன்னால் மட்டும் போதாது, அது முன்பு சொல்லப்படாத புதுஅழகியலையும் அடைந்திருக்கவேண்டும். அப்பிரச்னையுடன் சம்மந்தப்பட்டவர்களுக்கு அது வலுவான கதையாக இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் உரிய கதையாக, காலம் கடந்து நிற்கும் கதையாக மாறுவதற்கு நேற்று எழுதாத  ஒரு புதுமை அதில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்னும் கட்டாயம் உள்ளது.

ஆறஞ்சு ஒரு யதார்த்தக் கதை. குழந்தையின் பார்வையில் அதன் மேல் செலுத்தப்படும் அதன் வன்முறை காட்டப்படுகிறது. ஆனால் அழகியல் ரீதியாக ஏதோ ஒன்று மேலதிகமாக நடந்தால் ஒழிய இதை அசாதாரணமான கதை என்று சொல்ல முடியாது. என்ன நிகழ்ந்திருக்கலாம்? அழகுநிலாவின் ஒரு சக படைப்பாளியாக மனம் போன போக்கில் நான் இப்படி யோசித்துப்பார்க்கிறேன்.

அந்த பிரைமரி ஃபைவ் ஒரு சீன தேவதையாக அந்த குழந்தையைத் தேடிவந்திருக்கலாம். அல்லது கண்ணுக்குத் தெரியாத ஒரு வேற்றுலக ஜீவியாக வந்திருக்கலாம். ஒரு நோயாக அந்ததேர்வை  உருவகப்படுத்தியிருக்கலாம். அத்தனை குழந்தைகளையும் ஊனமுறச்செய்யும் ஒரு மர்ம நோய். ஆனால் அரசால் உருவாக்கப்பட்டு பெற்றோரால் குழந்தைக்கு அளிக்கப்படுவது. அல்லது குழந்தையை ஆட்டிப்படைக்கும் ஒரு எந்திரனாக உருவகிக்கப்பட்டிருக்கலாம். ஐந்தாம் வகுப்பிலிருந்து குழந்தை அதற்கு அடிமையாக வேண்டும். அது குழந்தையின் காவலனாகவும் பணியாளாகவும் எஜமானாகவும் இருக்கிறது.

அல்லது யதார்த்தத் தளத்திலேயே அக்கதை மேலும் நுட்பமான அர்த்தங்களை நோக்கிச் செல்லலாம். விரல்களுக்கான கழைக்கூத்தாட்டம் என ஃபூக்கோ எழுதும்கலையைச் சொன்னார். சீன எழுத்துக்களை குழந்தைகள் எழுதுவதைப்பார்க்கையில் அதை எண்ணிக்கொண்டேன். அத்தனைபேருக்கும் கழைக்கூத்தாட்டம் கட்டாயமாக்கப்பட்ட சமூகம் எப்படி இருக்கும்? அசாதாரணமான அறிவுத்திறன் கொண்ட குழந்தைகள் எழுதமுடியாமையாலேயே தோற்றுப்போகும் யதார்த்தம் இங்குள்ளது. எழுத்தே அன்னியமாகிப்போன நாளைய உலகில் இது எப்படிப்பார்க்கப்படும்? எவ்வளவோ சாத்தியங்கள் இருக்கின்றன. அப்படி ஒன்று நடந்து இந்தக் கதை அது இன்றிருக்கும் ஒரு யதார்த்த உண்மையை சுட்டுவதிலிருந்து மேலெழுந்து காலந்தோறும் பெரியவர்கள் சிறியவர்கள் மேல் கல்வி என்ற பெயரில் இழைக்கும் கொடுமைகளைச் சுட்டுவதாக ஆகியிருந்தால் அது ஒரு சர்வதேச கதையாகியிருக்கும்.

உர்சுலா லே குவின் எழுதிய   ‘ஒமல்லாசை விட்டுச் செல்பவர்கள்’ என்ற கதை நினைவுக்கு வருகிறது. ஓர் அழகிய ,அமைதியான, இன்பம் நிறைந்த நகரத்தின் நடுவில் சதுக்கத்தின் அடியில் சிறையில் ஒரு குழந்தை பிறந்தது முதல் நிரந்தரமாக அடைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழந்தையை அங்கு வைத்திருந்தால் மட்டும்தான் அந்த நகர் அப்படி இருக்க முடியும். அந்தக் குழந்தை அங்கு செல்பவர்களைப் பார்த்து கெஞ்சி அழுகிறது. அதை வெளியே விடமாட்டேன் என்கிறார்கள். அந்நகரத்துக்காக அந்தக் குழந்தை செத்து அழியத்தான் வேண்டும் என்கிறது அந்த ஊரின் நெறி. அந்த ஊர்மக்களின் மனசாட்சிக்கு விடப்பட்ட சவால் அது. ஒருவகையில் அந்தக் கதை பேசுவதும் அழகு நிலா பேசுவதைத் தானே?

இதையே நீட்டி யோசிப்போம், ஆறுவயதில் அம்மை குத்துவதைப்போல அல்லது உபநயனம் செய்து வைப்பதைப்போல குழந்தைகளுக்கு நாக்கை நீக்கும் ஒரு சடங்கை செய்வதாக இந்தக் கதை இருந்திருந்தால் இதன் பாதிப்பு வேறொரு கட்டத்துக்கு சென்றிருக்கும் அல்லவா. போர்ச்சுக்கீஸ் எழுத்தாளர் யோஸ் சரமகோவின் Blindness உதாரணமாகச் சுட்டப்படலாம்.  இப்படி எத்தனையோ சாத்தியங்கள்.

இன்று தேவையாக இருப்பது அன்றாட உண்மையிலிருந்து எழுந்து அதை மானுட உண்மையாக ஆக்கும் ஒரு பரந்த எழுத்து. அதற்கு தேவையான கற்பனை வளம். நடப்பதை சரியாக சொல்லிவிட்டோம் என்பது இனிமேல்  சிறுகதையின் வெற்றி அல்ல. அது இதே அளவுக்கு அல்லது இதைவிட வீரியத்துடன் இன்று குறுஞ்செய்திக்கட்டுரைகளாலும் சிறிய செய்திப் படங்களாலும் காட்டப்பட்டுவிடும். உண்மையிலேயே ஒரு குழந்தையின் தத்தளிப்பை மூன்று நிமிடம் பதிவு செய்து அக்குழந்தையின் திகைப்பு தெரியும் கண்களுக்கு அண்மைக்காட்சி வைக்கும் ஒரு செய்தித் துணுக்கு இந்தக் கதை உருவாக்குவதை விட அதிக பாதிப்பை நமக்கு அளித்துவிடும். கடந்து செல்வது எப்படி, தனித்தன்மையை பேணிக்கொள்வது எப்படி, பிற எந்த ஊடகமும் சொல்லாத ஒன்றை தான் சொல்வது எப்படி என்பதே சிறுகதையின் அல்லது இலக்கியத்தின் இன்றைய சவாலாகும்.

அழகுநிலாவின் கணிசமான கதைகளில் உள்ள இரண்டாவது குறைபாட்டை இவ்வம்சத்துடன் பொருத்திப்ப்பார்க்கலாம். இறுதிவிரிவு நிகழாமை. சிறுகதைக்கு முடிவு அல்லது இறுதிக் கண எழுச்சி மிக முக்கியமானது. சொல்லப்பட்ட தளத்திலிருந்து சிறுகதை சொல்லப்படாத தளம் நோக்கி வாசகனை தள்ளுவது அது. வாசகனின் முற்கணிப்பை மீறிச்சென்று புதிய ஒன்றை முன்வைப்பது . வாசித்த பிறகு கற்பனைக்கும் அமைதியின்மைக்கும் கேள்விகளுக்கும் அவனைக் கொண்டு சென்று அமர்த்துவது. வாழ்வில் சந்திக்கும் எந்த ஒரு நிகழ்வில் இருந்தும் ஆசிரியனுக்குள் திறந்துகொள்ளும் மேலதிகக் கேள்வி அல்லது கண்டடைதல்தான் சிறுகதைக்கான கருவை அளிக்க முடியும். ஒரு நிகழ்வை நேர்சக்தி என்றால் அதில் கிடைக்கும் திறப்பை எதிர்சக்தி என்று கூறலாம். இந்த யின் -யாங் சரியாக அமையும்போது மட்டும்தான் சிறுகதை நிகழ்கிறது. அத்தகைய வலுவான ஒரு முடிச்சு அல்லது திருப்பம் அல்லது உச்சம் சிறுகதைக்கு இன்றியமையாதது.

சிறுகதையின் செவ்வியல் வடிவம் நான் சொல்வது. நடுக்கால யதார்த்தவாதக் கதைகளில் ஒரு சாரார் அந்த முடிச்சை நீக்கி எளிமையான நிகழ்வுகளையே கதையாக்க  முடியுமா என்று பார்த்தார்கள். சா.கந்தசாமி அவ்வாறான கதைகளை நிறைய எழுதியிருக்கிறார். ஆனால் மிக விரைவிலேயே அக்கதைகள் வெறும் அனுபவப் பதிவுகள் என்ற இடத்தை மட்டும் அடைந்தன. அடுத்தகட்ட ஊடகவளர்ச்சி அவற்றை எளிதில் கடந்துசென்றது. சா.கந்தசாமியின் கதைகளில் ஓரிரு கதைகள் மட்டுமே இன்றைய வாசகன் நினைவில் நீடிக்கின்றன. அக்கதைகள் இறுதியில் வலுவான திருப்பமோ உச்சமோ கொண்டவை. உதாரணம் தக்கையின்மீது நான்கு கண்கள். ம் சிறுகதை அதன் செவ்வியல் வடிவுக்கே மீண்டும் வந்திருக்கும் காலம் இது.

அழகுநிலாவின்  பலகதைகள் அந்த உச்சம் நிகழாத சுவாரசியமான குறிப்புகளாக மட்டுமே நின்றுவிடுகின்றன. உதாரணம் ’வேர்க்கொடி’ . சிங்கப்பூரில் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்ததும் தொப்புள்  கொடியைக் கொண்டு வா அது ஒரு சடங்குக்கு தேவைப்படுகிறது, அதைப்பாதுகாத்து வைக்க வேண்டுமென்று அவள் கிராமத்து அன்னை சொல்கிறாள். அவள் குழப்பமடைகிறாள். அருகிலிருக்கும் பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்த பெண் இந்தியப்பண்பாட்டையும் சடங்குகளையும் ஆராய்ச்சி செய்பவள். அவள் அது ஏன் ஏதோ ஒரு பழைய மருத்துவ முறையில் முக்கியமானதாக இருக்கக்கூடாது என்கிறாள். அதைத்தானே நவீன மருத்துவம் ஸ்டெம் செல் என்று சொல்கிறது என ஒரு வியப்பு எழுகிறது. அவ்வளவுதான் கதை

சிறுகதைகள் எழுதப்படுவது இத்தகைய  முதிரா அறிவியல் ஊகத்தைச் சொல்வதற்காக அல்ல. தொப்புள் கொடி என்பது அதற்கு அப்பால் குறியீட்டு அர்த்தம் உள்ளது. உயிர்த்தொடர்பு, பண்பாட்டுத்தொடர்பு. அந்தக் குறியீட்டு அர்த்தத்தை நோக்கி இந்தக் கதையைக் கொண்டு சென்றிருந்தால் இது வேறொரு தளத்துக்கு போயிருக்கும். பொருட்களை அப்பொருட்கள் அளிக்கும் ஒட்டுமொத்த அர்த்தத்துடன் சொல்வதற்கு பெயர்தான் குறியீடு என்பது. பல சமயங்கள் நான் எண்ணியதுண்டு, மருத்துவ அறைகளில் இயந்திரங்களுடன் பொருத்தப்பட்டிருக்கும் நோயாளிகள் எதிர்காலம் என்ற அன்னையின் அல்லது தொழில்நுட்பம் என்ற அன்னையின் தொப்புள் கொடியோடு இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என.

இன்னொரு கதை உறவுமயக்கம். சிங்கப்பூர் சிறுகதைகள் அனைத்திலும் இருக்கக்கூடிய பணிப்பெண் பிரச்னை. பணிப்பெண்ணை எப்படி பார்ப்பது? நிலப்பிரபுத்துவ மரபில் வந்தவர்களுக்கு பணிப்பெண் ஒருவகையான அடிமை. ஆனால் அது ஓர் அறுபடா உறவு தொழில்முதலாளித்துவ மரபில் ஊன்றி நிற்பவர்களுக்கு பணிப்பெண்  ஊதியம் பெறும் ஒரு உழைப்பாளி.அது ஓரு வணிக ஒப்பந்தம். அவளை உணர்வு ரீதியாக எப்படி வகுப்பது என்பது இரு வகையினருக்கும் இருவகையான சவால்கள்.

இந்தக் கருவை சிங்கப்பூரில் வெவ்வேறு வடிவில் பெரும்பாலான பெண் எழுத்தாளர்கள் எழுதியிருப்பதைப் பார்க்கலாம். என்னுடைய சிறுகதைப் பயிற்சி வகுப்பிலேயே பலமாணவிகள் இந்தப் பிரச்னையைத்தான் எழுதினார்கள். அந்தப் பணிப்பெண் ஓர் அன்னை. ஒரு மகள், ஓர் உடன்பிறந்தவள்.  அவளை அப்படியெல்லாம் பார்க்கலாமே. இக்கதை அதைச் சொல்கிறது – பணிப்பெண்ணை உறவாகப்பார்க்கலாமே என்று. அவவ்ளவுதான் இக்கதை. ஆனால் இது ஒருவகை எளிய திறப்பு மட்டும்தான். இதிலுள்ளது பழகிப்போன அந்த மனிதாபிமானம் மட்டுமே.

இக்கதையிலும் வாசகன் தேடுவது மேலதிகமான ஒன்றை. நடைமுறையில் பணிப்பெண்ணை உறவாக அணுகினால் அவளுடனான வணிகஒப்பந்தம் அழிய ஆரம்பிக்கிறது, அது தொழிற்பிரச்சினைகளை உருவாக்கும். அது வெறும் வணிக ஒப்பந்தம் மட்டுமே என்றால் அதில் மனித அம்சம் இல்லை. இந்த முரண்பாடே நவீன உலகின் சிக்கல். அன்றாடவாழ்க்கை சென்று முட்டிநிற்கும் அத்தனை புள்ளிகளிலும் தத்துவச்சிக்கல் உள்ளது. அனைத்து தத்துவச்சிக்கல்களும் அறச்சிக்கல்களே. அதைத்தான் சிறுகதை எதிர்கொள்ளவேண்டும், எளிய விடைகளைச் சொல்வதல்ல அதன் பணி

இதனுடன் ஒப்பிடத்தக்க இன்னொரு கதை தோன்றாத் துணை. இதுவும் சிங்கப்பூரின் இயல்பான பிரச்னைகளில் ஒன்று. சிங்கப்பூர் குடிமகன் x வந்து குடியேறிவர்கள் என்ற இரட்டைமுரண். சிங்கப்பூர் குடியேறிகளை அயலவர்களாகக் கருதும் ஒரு சிங்கப்பூர் குடிமகள் ஓர் இக்கட்டில் அவர்கள் இயல்பாக உதவி செய்வதை வைத்து அவர்களைப் பற்றி புரிந்து கொண்டு நெகிழ்வதைக் காட்டுகிறது.  மிக இயல்பாக ஒரு கேள்வி அப்படி உதவாவிட்டால் அவர்களை வெறுக்கலாமா? அவர்கள் அன்னியர்களா? அவர்கள் உதவி செய்வதனால் தான் அவர்கள் வேண்டியவர்களாகிறார்களா? மனிதர்கள் எந்நாட்டிலும் எங்கும் சென்று குடியேறலாம் என்பதும் எந்த மண்ணில் வாழ்கிறார்களோ அந்த மண்ணின் உரிமையாளராக ஆகலாம் என்பதும் பிழையா? ஓர் இக்கட்டில் அவர்கள் தான் வந்து நிற்பார்கள் என்ற ஒற்றை வரிதான் அந்த பெரிய கேள்விக்கான விடையா?

இத்தகைய அன்றாட உண்மைகளை மையக்கண்டுபிடிப்புகளை முடிவாக கதைக்குள் நிறுத்தும்போது  அக்கதை மிக சாதாரணமானதாக ஆகிவிடுகிறது. நேர்மாறாக இலக்கியத்தின் சவால் என்பது அன்றாடவாழ்க்கையில் இருந்து பெரிய கேள்விகளை உருவாக்கிக்கொள்வதுதான்

அழகுநிலாவின் கதைகளில் வடிவ ரீதியாக மொழி சார்ந்து குறைகள்  சொல்ல ஏதும் இல்லை. ஒரு பயில்முறை எழுத்தாளரின் தளத்தில் இருந்து அவர் வெகுவாக மேலெழுந்துவிட்டிருக்கிறார். இனி அவரது சவால் என்பது சர்வதேச அளவில் எழுதப்படும் சிறந்த சிறுகதைகளை நோக்கி தன் எழுத்தைக் கொண்டு செல்வது என்பதே. ஆகவே தான் இந்த விவாதம்.

இத்தொகுப்பின் முக்கியமான கதையாகிய ’பச்சை பெல்ட்’ இந்தியாவிலிருந்து இங்கு வேலைக்கு வந்திருக்கும் இளைஞன் ஒருவனின் வாழ்க்கை. வாழ்ந்து கெட்ட குடும்பத்தில் பிறந்தவன். தந்தை சேர்த்துவைத்த கடன்களை அடைப்பதற்காக இங்கு வேலைக்கு வந்திருக்கிறான். தன் பங்காளி ஒருவர் அணிந்திருந்த பச்சை பெல்டை வாங்கி ஒரு முறை அணிந்துவிட்டு தருகிறேன் என்று சொன்னதற்காக அவரால் அவமதிக்கப்பட்ட அவன் தந்தை தன் மகன் சிங்கப்பூர் சென்று பணம் சேர்த்து ஒரு பச்சை பெல்ட் வாங்கி தனக்கு தரவேண்டும் என்று விரும்புகிறார். அவன் சிங்கப்பூர் செல்லும்போது அதை உண்மையில் நினைவும் படுத்துகிறார். ஆனால் இங்குள்ள உழைப்புச் சூழலில் அதை அவன் மறந்துவிடுகிறான். தந்தை அங்கு இறந்த செய்தி வருகிறது. பணம் செலவு செய்து இறுதிச் சடங்குகளுக்காக செல்ல முடியாத நிலையில் அவன் அதை தவிர்த்து விடுகிறான். இங்கிருக்கையில் தந்தை பெல்ட் வாங்கி தரும்படி கோரியது நினைவுக்கு வருகிறது. அவன் ஆழ்ந்த உளச் சோர்வு அடைந்து அழுகிறான்.

இந்தக் கதையின் கூறல்முறை நேர்த்தியுடன் அமைந்துள்ளது. நுண்தகவல்கள் சிறப்பாக உள்ளன. கதையின் எடுப்பும் முடிப்பும் ஆசிரியையின் அத்துமீறல்கள் ஏதுமின்றி நவீன இலக்கியத்துக்குரிய வடிவ அமைதியுடன் உள்ளன. ஆகவே சிறுகதை வடிவம் அல்லது கூறுமுறை பற்றி குறை செல்வதற்கு ஒன்றுமே இல்லை. ஆனால் திரும்பவும் இது அசோகமித்திரன் எழுதிய கதைத் தளத்திலிருந்து ஒரு படி கீழாக அந்தப்பாணியிலேயே அமைந்துள்ளது. இன்றைய எழுத்தாளர் அசோகமித்திரனை திரும்ப எழுத முடியாது ஏனெனில் அவர் எழுதிய தளத்தை முடிந்த வரை ஆற்றலுடன் அவரே எழுதிவிட்டார்.

இங்கு கதை அந்தப் பச்சைபெல்டை பற்றியது. தலைப்பும் அப்படித்தான் சொல்கிறது. அப்படியிருக்கையில் அந்த பச்சை பெல்ட் இன்னும் பலவாக விரிந்திருக்கலாம் அது அந்தஸ்தின் அடையாளமாக நுணுக்கமான விவரணைகள் வழியாக வெளிப்பட்டிருக்கவேண்டும்.  மதுரை, நெல்லை பகுதிகளில் அது சாதியடையாளம். ஆதிக்கசாதி அல்லாத ஒருவர் பட்டைபெல்டை அணிய முடியாது. அழகியல் ரீதியாக  பார்த்தால் அது மனிதர்களைக் கட்டியிருக்கும் ஒரு பாம்பு. இந்திய மரபு சார்ந்த குறியீடுகளைப் பார்த்தால் தெய்வங்கள் அணிந்திருக்கும் யோக பட்டம். எவ்வளவோ சாத்தியங்கள்.

எப்படியோ சொல்லப்பட்ட விதத்திலிருந்து அந்த பச்சைபெல்ட் மேலெழுந்திருக்க வேண்டும். அப்படி மேலெழும் பொருட்டு பச்சை பெல்ட் ஆரம்பத்திலேயே இக்கதையில் வந்திருக்க வேண்டும். இந்தக் கதை அப்பா பையன் கதையாக அல்லாமல் ஒரு பச்சை பெல்டின் கதையாக இருந்திருக்க வேண்டும். சிறுகதையின் இன்றைய சவால் என்பது இந்தக் கவித்துவத்தை அதற்கு அளிப்பது எப்படி என்பதுதான். அழகுநிலா அந்த சவாலை ஏற்றுக் கொள்வார் என்றால் சிங்கப்பூரின் முக்கியமான கதையாசிரியராகவும் நவீனத் தமிழிலக்கியத்தின் நிரந்தர இடம் உள்ள ஒருவராகவும் ஆக முடியும். வாழ்த்துக்கள்.

சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் செல்நெறிகள்

இராம கண்ணபிரான் கதைகள் பற்றி

நா கோவிந்தசாமி

சூர்யரத்னா கதைகள் நூர்ஜகான் கதைகள்

கமலாதேவி அரவிந்தன்

உதுமான் கனி

புதுமைதாசன்

பெண் எழுத்தாளருகளின் ஆக்கங்கள் பற்றி

சிங்கப்பூர் இலக்கியம் கடிதங்கள் 1

சிங்கப்பூர் இலக்கியம் கடிதங்கள் 2

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 28, 2016 11:35

சிங்கைப்பூசல்கள் -ஒரு விளக்கம்

IMG_4284

ஜெ

நீங்கள் விமர்சனம் செய்திருந்த சூர்யரத்னா என்பவர் உங்கள்மீது போலீஸில் புகார் செய்திருப்பதாக எழுதியிருந்ததை வாசித்தீர்களா? அதன் கீழே ஆல்பர்ப்பஸ் அங்கிள்ஸ்  எழுதிய கமெண்டுகளில் நீங்கள் கழுவி ஊற்றப்பட்டிருக்கிறீர்கள். வாசித்துப்பாருங்கள்.

https://www.facebook.com/suriya.rethnna/posts/1130910236991679

மகாதேவன்

அன்புள்ள மகாதேவன்,

சிங்கப்பூருக்குச் செல்லும்வரை அங்குள்ள கருத்துச்சூழல் குறித்து ஒரு குறிப்பிட்ட மனச்சித்திரம் என்னிடம் இருந்தது, அரசு சார்ந்த கட்டுப்பாடுகள் அங்கு மிக அதிகம்போலும் என்று. ஏனென்றால் அங்கே இலக்கியவிமர்சனம் என்பது அனேகமாக இல்லை. எல்லாமே பாராட்டுக்கள்தான். அங்குள்ளவர்கள் பாராட்டிக்கொள்வார்கள். இங்கிருந்து செல்பவர்கள்  மேலும் பாராட்டுவார்கள். ஆகவே தரம் தரமில்லாமை என்னும் பிரிவினையே இல்லை. அங்கு எழுதும் எல்லாருமே இலக்கியமேதைகள்தான். தனிப்பேச்சுக்களில் சிலர் இலக்கியமதிப்பீடுகளைச் சொல்வார்கள். பொதுமேடையில் பட்டியல்களும் பாராட்டுரைகளும் மட்டுமே.

இத்தகைய மனநிலை சலிக்காமல் எல்லா மேடைகளையும் ஆக்ரமிப்பவர்களுக்குச் சாதகமானது, ஆனால்  படைப்புத்திறன் கொண்டவர்களுக்கு எதிரானது என்பதைச் சொல்லவேண்டியதில்லை. இதற்குக்காரணம் அரசுசார்ந்த கெடுபிடிகளாக இருக்கலாமென்ற எண்ணம் எழுவது இயல்பே. ஆனால் உண்மையில்  கலை, இலக்கியத்தளத்தில் சிங்கப்பூர் அரசின் போக்கு அப்படி இல்லை என்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டது. அங்குள்ள அரசு சார்ந்த அமைப்புகளின் அணுகுமுறை இன்று சுதந்திரமான கலையிலக்கியச் செயல்பாடுகளுக்கு ஆதரவானதாகவே உள்ளது.

அங்குள்ள சீன , மலாய் எழுத்துக்கள் தரமானவையாகவே உள்ளன.அங்குசென்று அவ்வெழுத்துக்களை வாசித்தபோது வந்த சோர்வே சிங்கைத் தமிழிலக்கியத்தை விமர்சிக்கவேண்டுமென எண்ணவைத்தது. ஏனென்றால் சிங்கைத் தமிழிலக்கிய வளர்ச்சிக்குப் பெரும்பணம் செலவிடும் சிங்கை அரசுக்கு உண்மையில் இவர்களின் தரம் என்னவென்று தெரியாது. இங்கிருந்து செல்பவர்களும் பாராட்டிவிட்டு வருவதனால் அதை மதிப்பிடவே முடியாத நிலை. ஒட்டுமொத்தக் காரணம் விமர்சனமின்மை. சூழலில் உள்ள அச்சம். ஆனால் அதற்கு அரசு காரணம் அல்ல.

பிரச்சினை இருப்பது அங்குள்ள தமிழ்ச்சூழலில்தான். திருமதி சூர்யரத்னாவின் குறிப்பு அதற்கு மிகச்சரியான உதாரணம். அந்தக் குறிப்பை அது ஒரு சரியான உதாரணம் என்பதற்காக மட்டுமே பரிசீலிக்கலாம். இலக்கியச்செயல்பாட்டின் ஒரு பகுதியே கருத்தியல் மற்றும் வடிவம் சார்ந்த பரஸ்பர விமர்சனம் என்பதை சிங்கை எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் உணர்ந்திருப்பதில்லை. அதை அவர்கள் தனிப்பட்ட தாக்குதல் என்றே நினைத்துக்கொள்கிறார்கள். அது தாங்கள் வகிக்கும் பதவிகள், பெற்றுக்கொள்ளும் சலுகைகளுக்கு எதிரான செயல்பாடாக எடுத்துக்கொள்கிறார்கள். இலக்கியவிமர்சனம் என்னும் துறை இருப்பதே அவர்களுக்குத்தெரியவில்லை.

விமர்சனங்கள் கோபமூட்டுவது இயல்பு. எதிர்வினை கடுமையாக இருப்பதும் இயல்பு.ஆனால் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்கள் சிலர் எளிய விமர்சனங்களுக்குக்கூட நாம் இங்கே நினைக்கக்கூட முடியாத பல தளங்களில் எதிர்வினை ஆற்றுகிறார்கள். அரசு சார்ந்த அனைத்து அமைப்புகளுக்கும் பிற எழுத்தாளர்களைப்பற்றி முறையீடுகளை அனுப்புகிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கு புகார்க் கடிதங்கள் அனுப்புகிறார்கள். விமர்சனத்தை தனிப்பட்ட தாக்குதலாகச் சித்தரித்து வழக்கு தொடுக்கிறார்கள். வழக்கு தொடுப்பதாக மிரட்டுகிறார்கள். சூர்யரத்னாவின் குறிப்பில் அதைக்காணலாம்.

ஆகவே சிங்கப்பூரின் சில நபர்களைப்பற்றிப் பேசவே பலர்அஞ்சுகிறார்கள். அவர்கள் புகார்கடிதங்களைக்கொண்டே சூழலை மிரட்டி வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள். சூர்யரத்னாவை அவர்கள்தான் தூண்டிவிடுகிறார்கள். சூர்யரத்னாவின் பதிவில் பின்னூட்டம் வழியாக அவருக்கு ஊக்கமளிக்கிறார்கள்.

இது  நிகழக்காரணம் பல அமைப்புகளில் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்களுக்குத் தமிழ் தெரிவதில்லை என்பதுதான். அவர்களில் சீனரும் மலாயரும் அதிகம். உண்மையில் அவர்கள் மிகுந்த  நல்லெண்ணத்துடன் தங்களிடம் வரும் புகார்களை அணுகுகிறார்கள். அந்த நல்லெண்ணத்தை இவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். திரித்தும் வளைத்தும் இவர்கள் செய்யும் புகார்களை உள்ளே நுழைந்து உண்மையை அறிய மேலே இருப்பவர்களுக்கு அவகாசமில்லை. ஆகவே சூழலை அச்சம் ஆள்கிறது. விவாதமே நிகழ்வதில்லை.

திருமதி சூர்யரத்னாவின் பதிவைப்பாருங்கள். என் விமர்சனத்தொடரை வாசிக்கும் எவரும் நான் ஒரு சிங்கப்பூர்த் தனித்தன்மையை, சிங்கப்பூர் அழகியலைத்தான் தேடுகிறேன் என்பது புரியும். அவர்  அதை நேர்மாறாகத் திரிக்கிறார். நான் அங்கு பிறந்து வளர்ந்தவர்களுக்கு எதிராகவும் அங்கு சென்று குடியேறியவர்களின் சார்பாகவும் எழுதுகிறேன் எனும் பிரிவினையை சாதுரியமாக உருவாக்குகிறார். இந்தக்காழ்ப்பு அங்கு இவரைப்போன்றவர்களால் ஊடகங்களில் சென்ற சிலவருடங்களாகப் பரப்பப்படுகிறது. இப்படி முத்திரைகுத்துவது சிங்கப்பூரில் உள்ள பிரபலமான உத்தி. நான் அங்கே பணியாற்றும்பொருட்டு சென்றிருந்தேன் என்றால் இந்தப்பழியை அஞ்சி இலக்கியம் பேசுவதையே நிறுத்திவிட்டிருப்பேன்.

இதேபோல மத, இன , பாலியல் சார்ந்த உள்ளர்த்தங்களைக் கற்பித்து அத்தனை இலக்கிய விவாதங்களையும் திரிக்க இவர்களால் முடியும். சிங்கப்பூர் அரசு பல்லின ஒற்றுமையை ஒரு முக்கியமான விழுமியமாக நினைப்பதனால் அதற்கு எதிரான செயல்பாடாக எந்த ஒரு இலக்கியப் படைப்பையும் இவர்கள் சித்தரித்துவிடுவார்கள். இவர்களால் மொத்தச்சூழலும் இறுக்கமாகிவிட்டிருக்கிறது.

சிங்கப்பூரின் அவதூறு, பதிப்புரிமைச் சட்டங்களை நண்பர்களின் உதவியுடன் வாசித்தேன். இந்தியாவின் சட்டத்தின் அதே சொற்றொடர்களுடன் கிட்டத்தட்ட நகல் போல அமைந்துள்ளன. ஆனால் இந்தியாவை விட மேலும் சுதந்திரங்களை அளிப்பதாகவும் மேலும் பல துணைவகுப்புகள் வழியாக எழுதுபவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை அளிப்பதாகவுமே அச்சட்டங்களின் நோக்கு உள்ளது. [பார்க்க: சிங்கப்பூர் அவதூறுச் சட்டம் ] அதாவது சிங்கப்பூர் சட்டப்படி நான் எழுதியது எவ்வகையிலும் குற்றம் அல்ல. புகைப்படங்களைப் பிரசுரிப்பதில்கூட  சட்டரீதியாக காப்புரிமை பெறாது பொதுவெளியில் உள்ள படங்களைபிரசுரிப்பது தவறல்ல என்றே சட்டம் சொல்கிறது.அப்படங்களை திரிப்பதும் உள்ளர்த்தம் அளிப்பதுமே குற்றம். அப்படி பிரசுரித்தால்கூட புகைப்படங்களை நீக்கும்படி கோரி அப்படி நீக்காதபட்சம் மட்டுமே புகார் அளிக்கவும் முடியும்.

இத்தகைய நல்லெண்ணமும் நெகிழ்வும் கொண்ட சட்டத்தை பயன்படுத்தி எப்படி இப்படி ஒரு மிரட்டல் விடுக்கப்படுகிறது? ஏனென்றால் அதை வைத்து பலவகையிலும்  தொந்தரவு அளிக்கமுடியும். எழுதுபவர்களின் பணியிடங்களில் சிக்கல்களை உருவாக்க முடியும்.  இந்த மனநிலை உள்ள ஒரு சூழலில் எப்படி இலக்கிய விமர்சனம் உருவாக முடியும்?

அதேசமயம் திருமதி சூர்யரத்னா என்னைப்பற்றி பயன்படுத்தியிருக்கும் சொற்கள் நேரடியான அவமதிப்பு. நாய் என்று என்னை குறிப்பிடுகிறார். விளக்குபிடித்தல் போன்ற ஆபாசவசைகளைப் பயன்படுத்துகிறார். என் தனிப்பட்ட நேர்மையை குற்றம்சாட்டுகிறார். இந்தியச்சட்டப்படி நான் வழக்கு தொடுக்கமுடியும். சிங்கப்பூரின் அனைத்து அரசுசார் அமைப்புகளுக்கும் அவ்வழக்கு சம்பந்தமான தகவல்களைத் தெரிவித்து அவரைப்பற்றி முறையீடு செய்யவும் முடியும். சட்டப்படி அவர் பதிவில் உள்ள மிகக்கீழ்த்தரமான பின்னூட்டங்களுக்கும் அவரே பொறுப்பு.

ஆனால் நாம் பொதுவாக இங்கே அதைச் செய்வதில்லை. மறைந்த பிரமிள் இலங்கையிலிருந்து இந்தியாவந்து சட்டவிரோதமாகக் குடியிருந்தவர். அவரால் வாழ்நாள் முழுக்க மிகமிகக் கடுமையாக, தனிப்பட்டமுறையில்கூட எல்லைமீறிச்சென்று, தாக்கப்பட்ட வெங்கட் சாமிநாதன் இந்திய உளவுத்துறையில் உயர்பதவியில் இருந்தவர். சாமிநாதன் ஒரு சொல் சொல்லியிருந்தால் பிரமிள் சிறை சென்றிருப்பார். சாமிநாதன் அதைச்செய்யவில்லை. பிரமிளை எதிர்த்து எழுதினார்.ஏனென்றால் அதை செய்ய ஆரம்பித்தால் இலக்கிய விவாதங்களில் நாம் அதிகார அமைப்புகளை உள்ளே இழுக்கிறோம். அதிகபட்சம் பத்து மானநஷ்ட வழக்குகள் போதும், மொத்தக் கருத்தியல் இயக்கத்தையே முடக்கிவிடலாம்.

இந்திய நீதிமன்றங்களும் மானநஷ்டவழக்குகளை பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை. கருத்துச்சுதந்திரத்தின் தரப்பில் நின்றபடியே அவை அவதூறு வழக்குகளை நோக்குகின்றன. சட்டப்படி ஒரு கருத்து எப்படிப்பட்டதானாலும் தன்னளவில் அவதூறு ஆவதில்லை, அதைச் சொல்பவனின் நோக்கமே அதை அவதூறாக ஆக்குகிறது. சிங்கப்பூர் இலக்கியத்தின் மொத்தப்படைப்பிலக்கியத்தையும் நாட்கணக்காக அமர்ந்து வாசித்து எழுதிக்கொண்டிருக்கும்  தமிழகத்தின் புகழ்பெற்ற எழுத்தாளனாகிய நான்,  சூர்யரத்னா என்னும் முதிரா எழுத்தாளரின் புகழை அழிக்க சதி செய்யவேண்டியதில்லை. அதன் மூலம் அவருக்கு இழப்பு உருவாக்க முயலவும் வேண்டியதில்லை – மாறாக அவர் செய்வதுதான் ஒரு முக்கியமான எழுத்தாளனும் எழுத்தை தொழிலாகக்கொண்டவனுமாகிய என் நற்பெயரை அழித்து இழப்பை உருவாக்கும் திட்டமிட்ட குற்றநடவடிக்கை.

ஆக, செல்லுபடியாகும் ஒரு வழக்கே உண்மையில் இல்லை. ஆனால் சட்டநடவடிக்கை என மிரட்டமுடியும், தொந்தரவு அளிக்கவும் பணச்செலவு வைக்கவும் முடியும். அதைவைத்து மிரட்டி விமர்சனத்தையும் கருத்துச்செயல்பாட்டையும் முடக்க முடியும். அதையே அவர் செய்கிறார். யோசித்துப்பாருங்கள், இனி சிங்கை அரசு அழைக்கும் எவரேனும் ஏதேனும் விமர்சனக்கருத்தைச் சொல்ல துணிவார்களா? சிங்கை அரசு உருவாக்க முயலும் கருத்தியல்தளத்தையே அழிக்கும் செயல் இது. உண்மையில் அதைப்பற்றிக் கவலைப்படவேண்டியவர்கள் சிங்கப்பூர் பண்பாட்டுச்சூழல் பற்றி உண்மையான அக்கறை கொண்ட அங்குள்ளவர்கள்தான்.

இன்னும் ஒரு வேடிக்கையான விஷயத்தை வாசகர் கவனிக்கலாம்.  ஒர் எழுத்தாளர் ஒரு விருதை அரசிடமிருந்து பெற்றிருந்தார் என்றால் அதன்பின் அவரை எவரும் எவ்வகையிலும் விமர்சிக்கக்கூடாது என்கிறார்கள் சிங்கப்பூரில் சிலர். அவ்வாறு விமர்சிப்பது அந்த அரசுசார் அமைப்பை அவமதிப்பது என்று வாதிடுகிறார்கள். உடனடியாக அந்த அமைப்புகளிடம் அவர்களின் தேர்வை அந்த விமர்சகர் குற்றம்சாட்டுவதாகவும் அரசுக்கு எதிராகச் செயல்படுவதாகவும் புகார்களை அனுப்பிவிடுவார்கள். சூர்யரத்னா அதைச்செய்வதை அவரது குறிப்பில் காணலாம்.

அதாவது இந்தியச்சூழலில் வைத்துப்பார்த்தால் சாகித்ய அக்காதமி விருது பெற்ற ஒருவரை எவ்வகையில் விமர்சித்தாலும் அது சாகித்ய அக்காதமியை விமர்சிப்பது. அதற்கு நிதி அளித்த அரசை விமர்சிப்பது. ஆகவே அரசுக்கு எதிரான செயல். நடவடிக்கை வேண்டும். இந்தியாவில் இருந்துகொண்டு இந்த மனநிலையை நோக்கி நாம் சிரிக்கலாம். ஆனால் அங்கு தமிழ்ச்சூழலில் அது ஒரு முக்கியமான மிரட்டல். அரசுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை, இவர்களே செய்வது.

உண்மையில் இந்தியாவில் ஒருவர் அரசு அமைப்புகளை இப்படி தன்னை பாதுகாப்பதற்காக இழுப்பதுதான் குற்றம். அரசு சார்ந்த விருதுகளோ பரிசுகளோ அதைப்பெற்றவர்களால் ஒரு தகுதிச்சான்றாக  எங்குமே சொல்லப்படக்கூடாது.  ‘பரத்’ முதலிய பட்டங்களை பெயருக்குப்பின் சேர்ப்பதுகூட சட்டவிரோதம். அரசை அல்லது அதன் பண்பாட்டு அமைப்புகளை அதன் பரிசை பெற்றவர் தனக்கு ஆதரவாக எங்குமே மேற்கோள்காட்டக்கூடாது. ஆனால் சிங்கப்பூரில் பலர் இதைச் சொல்கிறார்கள். அங்கே எழுதும் அத்தனைபேருமே ஏதேனும் விருதுபெற்றவர்கள்தான். அப்படியென்றால் என்ன விமர்சனம் நிகழமுடியும்?

சூர்யரத்னா உள்ளிட்ட சிங்கப்பூர்வாழ் தமிழர்கள்   தமிழக எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லும் அவமதிப்புநிறைந்த ஒரு வரி உண்டு. ‘டாலருக்காகத்தானே வந்தாய்? பொறுக்கிக்கொண்டு எங்களை பாராட்டிவிட்டுப் போகவேண்டியதுதானே?” இதை அவர் தன் முகநூல் குறிப்பிலும் சொல்லியிருப்பதைக் காணலாம். உண்மையில் தமிழ் எழுத்தாளர் பலருக்கு அவர்களின் பணம் பெரிய தொகைதான். அவர்கள் பெரும்பாலும் மேலோட்டமான பாராட்டுகளை அளித்துவிட்டு வந்துவிடுவதும் உண்மை. அந்தப்பணம் பெரிதுதான்,  ஆனால் எனக்கு அல்ல.  அங்குள்ள உயர்தர ஆசிரியரின் ஊதியம் எனக்கு அளிக்கப்பட்டாலும்கூட இரண்டுமாதக் காலம்  அங்கிருப்பது எனக்கு பொருளியல் இழப்பே. நான் அங்குவந்தது ஒரு வளர்ந்த நாட்டின் சூழலை அறிய. அங்குள்ள மாணவர்களை சந்திக்க. சர்வதேசத்தரமுள்ள வகுப்புகளை அவர்களுக்கு அளித்திருக்கிறேன்.

*

சூர்யரத்னாவின் அந்த முகநூல் குறிப்பு பலவகையான குற்றங்களை ஆற்றுகிறது. ஒன்று, அங்கு  அரசு அழைப்பின்பேரில் வரும்  எழுத்தாளர்களை அவமதிக்கிறது. அவர்கள் கூலிக்காக வருபவர்கள் என இழிவுசெய்கிறது. இரண்டு, சிங்கப்பூரில் உள்ள நிரந்தரவாசிகள் x குடிமகன்கள் என்னும் பிரச்சினையை தேவையில்லாமல் சமூக ஊடகங்களுக்குக் கொண்டுவந்து வெறுப்பை வளர்க்கிறது. பின்னூட்டங்களில் மிகக்கடுமையான சமூகவெறுப்பு உள்ளது, அதற்கும் அவரே பொறுப்பு. மூன்று, சிங்கப்பூர் அரசு உருவாக்க நினைக்கும் இலக்கியம் சார்ந்த பொது உரையாடலுக்கு எதிராக எழுத்தாளர்களை  பிளாக்மெயில் செய்யும் உத்தியை சட்டவிரோதமாக பயன்படுத்துகிறது. நான்கு , இந்திய ,சிங்கப்பூர் அரசுநிறுவனங்களின் பெயரை தன் தனிப்பட்ட வணிகநோக்கங்களைப் பாதுகாக்க பயன்படுத்துகிறது.

*

ஏன் கடுமையான விமர்சனம்? நான் முன்னரே சொல்லியிருக்கிறேன். எழுத்து முயற்சி கடும்விமர்சனத்திற்குரியது அல்ல. கனிவுடன் நோக்கப்படவேண்டியது அது. ஆனால் சூர்யரத்னாவின் எழுத்துக்கள் அவரே சொல்வதுபோல அங்கே கல்விக்கூடங்களில் முன்னுதாரணங்களாகக் கற்பிக்கப்படுகின்றன. அவர் அங்கே உயர்நிலைப்பள்ளி அளவில் இலக்கியவகுப்புகளை நடத்துகிறார். [அவர் எழுதுவதே உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்காகத்தான் எனச் சொல்கிறார். பாலியல் வன்மங்கள் கொண்ட அந்தக்கருக்களை உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் படிக்கலாமா என அங்குள்ள கல்வித்துறைதான் முடிவுசெய்யவேண்டும்]

எப்படியானாலும் அங்குள்ள மாணவர்களுக்கு முன் ஒரு முன்னுதாரணமாக நிற்கையில் அவர் இன்னும் கொஞ்சம் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளலாமே என்பதுமட்டும்தான் என் கருத்து. சிங்கப்பூரின் தொழில்நுட்பக் கல்வியில் சர்வதேசத்தரம் கொண்ட ஆசிரியர்கள் அன்றி எவரும் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. பண்பாட்டுக்கல்வியில் மட்டும் ஏன் முதிரா எழுத்து முன்வைக்கப்படவேண்டும் என்பது மட்டுமே என் கேள்வி. நான் சுட்டிக்காட்டுவது எழுத்தின்வழி எனக்குக் கிடைக்கும் தரமின்மையை மட்டுமே. தனிப்பட்ட ஆளுமையை அல்ல.

அத்துடன் அந்த தேசம் பெரும்பணத்தை இதற்காக அளிக்கிறது. அதைப்பெற்றுக்கொள்பவர் தன் தகுதியை பெருக்கிக்கொண்டாகவேண்டும். அதற்காக உழைக்கவேண்டும். வாசிக்கவேண்டும்.  சூர்யரத்னா எழுத ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகின்றன. பலநூல்கள் வெளிவந்துவிட்டன. முதிரா எழுத்தையே அப்படியே வருடக்கணக்காக நீட்டி ஒரு அளவுகோலாகவே ஒரு சமூகத்தின்முன் வைப்பது அந்த அரசுக்கு எதிரான செயல்பாடு.

இங்கிருந்து பொருள்நாடிச் செல்லும் எழுத்தாளர்களின் போலிப்பாராட்டு அங்குள்ள எழுத்தாளர்களை இருளிலேயே வைத்திருக்கிறது. நான் அதை உணர்ந்தபின்னரே உண்மையை உடைத்துச் சொல்லிவிடவேண்டுமென முடிவெடுத்தேன். அதை முழுமையாக விரிவாக அனைத்துக்கோணங்களிலும் நோக்கும் விமர்சனத்தொடர்மூலம் முன்வைக்கவேண்டுமென நினைத்தேன்.

அங்குள்ள சூழலை மிக நன்றாக அறிந்தபின்னரே இக்கட்டுரைத் தொடரை எழுத ஆரம்பித்தேன். முதலில் அங்குள்ள ஒட்டுமொத்த இலக்கிய மரபைச் சார்ந்து ஒரு பொதுச்சித்திரத்தை உருவாக்கவேண்டுமென எண்ணினேன். ஏற்கனவே நா.கோவிந்தசாமி, இளங்கோவன்,ஸ்ரீலட்சுமி  ஆகியோர் கூரிய விமர்சன நோக்குடன் பொதுச்சித்திரத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அவை உதிரிக்குரல்களாக நின்றுவிட்டன.. அவர்களுக்கு மேலதிகமாக நான் அளிக்கக்கூடுவது மொத்தத் தமிழிலக்கியத்தின் பின்னணியில் சிங்கப்பூர் இலக்கியத்தை மதிப்பிடுவதும் உள்ளோட்டங்களை அடையாளம் காண்பதும்தான். அதைச் செய்யாமல் விமர்சனம் முன்னகர முடியாது.

அதாவது, முதலில் சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் canon எது என வகுக்கவேண்டும். அதை பலகோணங்களிலான விவாதம் மூலமே செய்யமுடியும். நான் அவ்விவாதத்தை தொடங்கி வைக்க விரும்பினேன். எழுதுபவர் எல்லாம் எழுத்தாளர் அல்ல என அவர்களுக்குச் சொல்ல விரும்பினேன். எவர் என்ன செய்திருக்கிறார்கள் என ஒரு குணரீதியான கணிப்பு என்னுடையது. அதற்காக நாளுக்கு நான்கு நூல்கள் வீதம் நாளும் ஐந்துமணிநேரம் அமர்ந்து வாசித்தேன். எனக்களிக்கப்பட்ட பணிகளுக்கு மேலதிகமாக.

வசைகளும் பூசல்களும்தான் பதிலுக்கு வருமென நான் அறிவேன். வரட்டும். நான் எழுதவேண்டியதை எழுதி முடிக்கிறேன். அது காலத்தின் முன் இங்கு கிடக்கட்டும். அடுத்த தலைமுறை எழுந்து வரும்போது அதைப் பரிசீலிக்கட்டும். விவாதிக்கட்டும் ,விரித்தெடுக்கட்டும், தேவையென்றால் விமர்சனப்பதிலோடு தூக்கிவீசட்டும். இது முழுமையான மதிப்பீடு அல்ல என்றும் நான் அறிவேன். ஆனால் இது ஒரு ஆத்மார்த்தமான தொடக்கம். எனக்கு நேர்மையான முயற்சிகள்மேல் நம்பிக்கை உண்டு, அவை காலம்கடந்தேனும் விளைச்சலையே அளிக்கும்.

============================================================

சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் செல்நெறிகள்

இராம கண்ணபிரான் கதைகள் பற்றி

நா கோவிந்தசாமி

சூர்யரத்னா கதைகள் நூர்ஜகான் கதைகள்

கமலாதேவி அரவிந்தன்

உதுமான் கனி

புதுமைதாசன்

பெண் எழுத்தாளருகளின் ஆக்கங்கள் பற்றி

சிங்கப்பூர் இலக்கியம் கடிதங்கள் 1

சிங்கப்பூர் இலக்கியம் கடிதங்கள் 2

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 28, 2016 11:32

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.