Jeyamohan's Blog, page 12

October 6, 2025

திசைகளின் நடுவே மாடன்…

நான் எழுதிய மாடன் மோட்சம் கதை எப்படி சென்ற கால்நூற்றாண்டில் வெவ்வேறு வகையில் அர்த்தம்கொள்கிறது என்பதைப் பற்றி யோசிக்கும்போது ஒரு வரலாற்றின் ஒரு பரிணாமச்சித்திரத்தை உருவகிக்க முடிகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 06, 2025 11:36

ஹெக்கோடு நீனாசம் கலையிலக்கிய விழா

சென்ற ஆண்டு என் நண்பரும் கன்னட எழுத்தாளருமான விவேக் ஷான்பேக் என்னை அழைத்து கர்நாடகத்தில் ஷிமோகா அருகே ஹெக்கோடு என்னும் சிற்றூரில் இருக்கும் நீனாசம் என்ற அமைப்பின் இலக்கிய விழாவுக்கு விருந்தினராக நான் செல்ல முடியுமா என்று கேட்டார். ஆனால் அந்த நாட்களில் நான் அமெரிக்காவில் இருப்பது போல பயணத்திட்டம் போடப்பட்டிருந்தமையால் என்னால் செல்ல முடியவில்லை. என் வருத்தத்தை தெரிவித்தேன்.

ஆகவே இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே நான் என்னை முறைப்படி அழைத்து, நாட்களையும் தெரிவித்து விட்டார். என்னுடைய பயணத்திட்டத்தை அதற்கு ஏற்ப அமைத்துக் கொண்டேன். ஆனால் சென்ற ஆகஸ்ட் முதலே என் ஒவ்வொரு நாளும் நெருக்கடியாகச் சென்றுகொண்டிருந்தது. ஹெக்கோடு சென்றால் அங்கிருந்து வந்து இரண்டு நாள் இடைவெளியில் நான் அமெரிக்கா செல்ல வேண்டி இருக்கும். அதற்குள் செய்து முடிக்க வேண்டிய திரைப்படப் பணிகள், எழுத வேண்டிய பணிகள் மிச்சம் இருந்தன. ஆகவே அங்கு செல்வது என்பது ஒரு சுமையாக ஆகிவிடுமா என்ற ஒரு சஞ்சலம் எழுந்து கொண்டே இருந்தது.

செப்டம்பர் 18 ஆம் தேதி வீட்டில் இருந்து கிளம்பியது முதல் தொடர்ச்சியாக மூன்று நாள் இடைவெளியில் வெவ்வேறு ஊர்களிலாக பயணத்தில் இருந்து கொண்டிருந்தேன். ஆனால் நடுவே ரமேஷ் பிரேதனின் இறப்பும் அதை ஒட்டிய உளஅழுத்தமும் ஹெக்கோடு செல்வது ஒரு பெரிய விடுதலையாக இருக்கும் என்று எண்ண வைத்தன. உண்மையில் அந்த விழா என்னை எல்லாவகையிலும் மீட்டுக்கொண்டு வந்தது. மீண்டும் இங்கே செய்வன அனைத்திலும் முழுமையாக என்னை ஆழ்த்திக்கொள்ளச் செய்தது.

கோவையில் இருந்து செப்டெம்பர 30ஆம் தேதி காலை விமானத்தில் பெங்களூர் சென்று, அங்கிருந்து ஷிமோகாவுக்கு சென்றேன். ஷிமோகாவுக்கு கார் வந்திருந்தது. அங்கிருந்து சாகர் என்ற ஊருக்கு சென்று அவர்கள் ஏற்பாடு செய்த ஒரு விடுதியில் தங்கினேன். சாகர் ஒரு மிகச்சிறிய ஊர். மலைநாடு என கன்னடர் அழைக்கும் மேற்குத்தொடர்ச்சிமலைப் பகுதி. மழைநாடு என்றும் அழைக்கலாம். தென்னகத்தில் மிக அதிகமாக மழைபெய்யும் பகுதி. மழைக்குளிர், ஈரம் எப்போதும் உண்டு. கோடையில் நன்றாக வியர்க்கும். இப்பகுதிக்கு நாங்கள் பெரும்பாலும் ஆண்டுக்கு ஒரு முறை மழைப்பயணம் வருவதுண்டு. ஆனால் நான் நீனாசம் அமைப்புக்கு வருவது முதல்முறை. 1986ல் ஜி.சங்கரப்பிள்ளை இந்த இடத்தைப் பற்றிச் சொன்னார். அதன்பின் பலர் சொல்லியிருக்கிறார்கள். வரவேண்டுமென்ற திட்டம் இருந்தது. இப்போதுதான் வர முடிந்தது.

ஹெக்கோடு எட்டு கிமீ அப்பால் இருந்த்து. அதை ஒரு குக்கிராமம் என்று தான் சொல்ல வேண்டும். அங்கு தங்குமிடங்களோ உணவகங்களோ கிடையாது. அங்குதான் நாடக மேதை ஆகிய கே.வி.சுப்பண்ணா பிறந்தார். சுப்பண்ணா நாடகத்திற்காக உலக அளவில் புகழ் பெற்றவர். காந்தியவாதி. சிவராமகாரந்த, பி.வி.காரந்த், பிரேமா காரந்த், கிரீஷ் கர்னாட், ராமகிருஷ்ண ஹெக்டே போன்ற பலருக்கு அணுக்கமானவர். அவருக்கு அவருடைய நாடகப் பணிகளுக்காக மகசேசே விருது கிடைத்துள்ளது. அவர் தன் சொந்த கிராமத்தில் உருவாக்கிய ஒரு கலைமையம் தான் நீனாசம்.  அதன் முழுப்பெயர் நீலகண்டேஸ்வரா நாட்யசேவா சங்கம். நீனாசம் என்பதற்கு நீ, நான், இணைப்பு என்றும் பொருளுண்டு.

1940களில் கே.வி.சுப்பண்ணாவும் அன்றைய இளைஞர்களும் அவருடைய பூர்வீக இல்லத்தின் அருகே இருந்த ஒரு சிறு கட்டிடத்தில் ஒரு நூலகத்தை உருவாக்கி இலக்கியச் சந்திப்புகளை நடத்தினர். 1949ல் அங்கிருந்து அசோகா வார இதழ் என்னும் செய்தி – இலக்கிய இதழை தொடங்கி நடத்தினர். அப்போதுதான் நீனாசம் அமைப்பு உருவானது. அதில் சிவராம காரந்த் இருந்தார். 1957ல் அக்‌ஷரபிரகாசனா என்னும் பதிப்பகத்தை கே.வி.சுப்பண்ணா தொடங்கி இலக்கிய நூல்களை வெளியிடலானார். 800 நூல்களுக்கு மேல் இந்த பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 1967 முதல் நீனாசம் சித்ரசமாஜா என்னும் திரைப்படக்கழகம் நிறுவப்பட்டு திரைரசனை பயிற்றுவிக்கப்பட்டது. நீனாசம் ஒரு முதன்மையான நாடகப்பள்ளியாகவும் செயல்படுகிறது.

இன்று கே.வி.சுப்பண்ணாவின் மகன் கே.வி. அக்‌ஷரா நீனாசம் அமைப்பை முன்னின்று நடத்துகிறார். இந்தியாவிலும் பிரிட்டனிலும் நாடக்கலை பயின்ற அக்ஷரா நாடகக் கோட்பாட்டு நூல்கள், மொழியாக்கங்கள், மேடை ஒருங்கிணைப்பு ஆகியவற்றினூடாக கன்னட நாடக இலக்கியத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றியவர். அக்ஷராவின் மகன் இன்று அடுத்த தலைமை பொறுப்புக்கு வந்திருக்கிறார். மூன்று தலைமுறைகளாக நீனாசம் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது. கர்நாடக மக்களின் ரசனை வாசிப்பு ஆகியவற்றில் நீனாசம் அளித்த பங்களிப்பு என்பது பிறிதொரு அமைப்பை சுட்டிக்காட்ட முடியாத அளவுக்கு மிகப்பெரியது.

நீனாசத்தில் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு இந்திய அளவிலான கலை-இலக்கிய விழா நிகழ்கிறது. சென்ற ஆண்டு என் ‘யானை டாக்டர்’ நாடகத்தை அங்கே அரங்கேற்றினார்கள். இந்த ஆண்டு என்னுடைய நாடகமொன்று அரங்கேற இருப்பதாக சொன்னார்கள். அங்கு செல்வதுவரை அது ‘உலகம் யாவையும்’ என்ற சிறுகதையை ஒட்டிய நாடக ஆக்கம் என்று எனக்கு தெரியாது.

ஒன்றாம் தேதி காலையிலேயே பெங்களூரில் இருந்து சுசித்ரா வந்துவிட்டார். ஈரோடு கிருஷ்ணனும் மற்ற நண்பர்களும் அன்று மதியம்தான் வந்தனர். இந்தியாவின் வெவ்வேறு நாடகப்பள்ளிகளில் இருந்து இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து நீனாசம் விடுதிகளில் தங்கியிருந்தார்கள். நீண்டகாலமாக அனைவரையும் அங்கே தங்கவைப்பதே வழக்கமாக இருந்தது. நீனாசம் அமைப்பு பழைய மலைநாட்டு பாணியிலான ஓட்டுக்கட்டிடங்கள் கொண்டது. அறைகள் எளிமையானவை. இருவரை ஓர் அறையில் தங்கவைப்பார்கள். அஷிஷ் நந்தி முதல் ராமச்சந்திர குகா வரை இந்தியாவின் முதன்மையான சிந்தனையாளர்கள் அப்படி சிறிய அறைகளில் கூட்டமாக தங்கி இலக்கிய – நாடக நிகழ்வுகளை நடத்தியுள்ளனர்.

மரபான கட்டிடக்கலையில் அமைந்த ஐம்பதாண்டு பழைய கட்டிடங்கள். ஒருவகையில் அனைவரும் சேர்ந்து அமர்ந்து பேச அந்த ‘உள்ளூர்த்தன்மை’யும் எளிமையும் உதவியது. அத்துடன் மிகப்பெரிய சர்வதேச இலக்கியவிழாக்களில் பொதுவாகத் தென்படாத தீவிரமான இளைஞர்கள் நிறையப்பேர் இருந்தனர். இலக்கிய உரையாடல்கள், சட்டென்று வெடிக்கும் ஆங்காங்கே பாடல்கள் என ஓர் இலக்கியக் கலைச்சூழல் எங்கும் இருந்தது. அண்மையில் விஷ்ணுபுரம் விழாவுக்கு நிகரான ஓர் உண்மையான ஆர்வத்தையும் தீவிரத்தையும் நான் கண்டது நீனாசத்தில் மட்டும்தான். அநேகமாக எல்லா ஆண்டும் இனிமேல் அங்கே செல்வேன் என்று நினைக்கிறேன்.

அசோக்

மூன்று நாட்கள் அங்கே இருந்தேன் அங்கு நடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும் கலந்து கொண்டேன் பெரும்பாலான நிகழ்ச்சிகள் கன்னடத்தில் நிகழ்ந்தன. ஆனால் எனக்கு கன்னடம் ஓரளவு புரிந்தது. நான் கன்னடத்தை காஸர்கோட்டில் கேட்டு பழகியிருந்தேன். வெவ்வேறு கன்னட இலக்கிய ஆளுமைகளைச் சந்தித்துப் பேசிக்கொண்டே இருந்தேன். அவர்கள் ஆங்கிலம் வழியாகவும் கன்னட மொழியாக்கங்கள் வழியாகவும் என்னை அறிந்திருந்தார்கள். கன்னட இலக்கிய விமர்சகர் டி.பி.அசோக் என் படைப்புகள் மேல் மிகப்பெரிய ஈடுபாடு கொண்டவராகவும், ஆங்கிலத்தில் வெளிவந்த என் படைப்புக்கள அனைத்தையும் படித்தவராகவும் இருந்தார். செல்லுமிடங்களில் எல்லாம் என் படைப்புகளை அறிமுகம் செய்கிறேன் என்றார்.

முதல் நாள் மாலையில் ஒரு நாடகம் நிகழ்ந்தது புக்கர் பரிசு பெற்ற பானு முஷ்டக் அவர்களின் சிறுகதை ஒன்றை ஒட்டிய நாடகம். அவருடைய தொகுப்பின் முதன்மைக்கதை. ஆனால் மிகச்சுமாரான படைப்பு அது. அப்பட்டமான ஒரு ‘டிவிஸ்ட்’ மட்டுமே கொண்டது. மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை. மருமகள் மாமியாரை வெறுக்கிறாள், கூட இருக்கக்கூடாது என்கிறாள். வெறுத்துப்போன மகன் மறுமணம்செய்ய திட்டமிடுகிறான், தனக்கல்ல, தன் அம்மாவுக்கு. அம்மா அதற்கு ஒப்புக்கொள்கிறாள், மருமகள் கதறி அழுகிறாள். விகடன் போன்ற ஓர் இதழில் வெளிவரும் ஒரு விடம்பன கதை அது. அந்த கதையை இரண்டு மணி நேர நாடகமாக ஆக்கியிருந்தார்கள். நடிப்பு, அரங்க அமைப்பு, ஒலி, ஒளி எல்லாமே அபாரமாக இருந்தால்கூட உள்ளடக்கம் என்பது பலவீனமானதாக இருந்ததனால் அது சலிப்பூட்டியது.

அது கர்நாடக அளவிலான நாடகப்போட்டிக்காக தயாரிக்கப்பட்ட நாடகம். அந்த தொகுப்பு இஸ்லாமிய அடையாளம், பெண்ணிய அரசியல் என பல காரணங்களுக்காக விருது பெற்ற ஒன்று. அதே காரணத்தால் அது நாடகவிருதையும் பெறக்கூடும். அந்த நாடகத்தை அரங்கினர் ரசிக்கிறார்களா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. ரசிக்கிறார்கள் என்றால் அரங்கினரின் தரம் மிகச் சாதாரணமானது என்று முடிவுசெய்யலாம் என எண்ணினேன். ஆனால் மறுநாள் அந்த நாடகத்தைப் பற்றிய விவாதம் நகர்ந்த போது ஒவ்வொருவரும் அந்த நாடகத்தை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து, ஏறத்தாழ நாங்கள் உணர்ந்த எல்லாவற்றையுமே அங்கு கேள்விகளாக முன்வைத்தார்கள். அது அந்த அரங்கு பல மடங்கு மேடையை விட மேலானது என்ற எண்ணத்தை உருவாக்கியது.  

இரண்டாம் நாள் காலை அமர்வில் முந்தையநாள் நாடகத்தைப் பற்றி உரையாடலுக்குப் பிறகு 11 மணிக்கு அசோக் என்னைப் பற்றிய 40 நிமிட அறிமுக உரை ஒன்றை ஆற்றினார். என் முக்கியமான கதைகள், என் இலக்கிய வாழ்க்கை, என் வாழ்க்கை வரலாறு  பற்றிய மிக தீவிரமான ஓர் அறிமுக உரை. கன்னடத்தில் அதன் பிறகு இருபது நிமிடங்கள் நான் ஆங்கிலத்தில் ஓர் உரையாற்றினேன். எந்த திட்டமிடலும் இல்லாமல்தான் சென்றேன். அங்கே கூடியிருந்த நாடகக்காரர்கள், முந்தைய நாளின் நாடகம் ஆகியவை அந்த உரைக்கான கருவை அளித்தன.

இன்றைய சூழலில் கலை – இலக்கியத் துறைகளில் செயல்பட வேண்டியவர்கள் கடைக்கொள்ள வேண்டிய மூன்று எதிர்நிலைகளை பற்றியது அந்த உரை.

முதல் எதிர்நிலை அதிகாரத்திற்கு எதிரானது. குடும்பம், சமூகம், அரசு, கல்விக்கூடம் ஆகியவை நம்மை ஒருவகையாக வரையறை செய்கின்றன. அவற்றுக்கு எதிராக ஒவ்வொரு கணுவிலும் நாம் வளரவேண்டியுள்ளது.இரண்டாவது எதிர்நிலை,  நம்மை ஒவ்வொரு நாளும் சராசரிப் படுத்திக் கொண்டே இருக்கும் இன்றைய ஊடகங்களுக்கு எதிரானது. இன்றைய ஊடகங்களுக்கு நம்மை சராசரிப் படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது, ஏனெனில் ஒரு நுகர்வோர் என்பது ஒரு சராசரிநிலை. நம்மை ஒரு நுகர்வுச் சராசரியாக மாற்றும் முயற்சியைத்தான் இன்றைய அனைத்து ஊடகங்களும். செய்கின்றன. சமூக ஊடகங்கள் வழியாக நாமே நம்மை அப்படி ஆக்கிக்கொள்கிறோம். அந்த ஊடகங்களுக்கு எதிரான ஒரு எதிர்ப்பு நமக்கு இல்லை என்றால் நாம் அந்த பிரம்மாண்ட ஒட்டுமொத்தத்தில் கலந்து விடுவோம்.மூன்றாவது எதிர் நிலை என்பது சிந்தனைக் களத்தில் இன்று நடந்து கொண்டிருக்கும் துருவப் படுத்தல்களுக்கு எதிராக நாம் கடைக்கொள்ள வேண்டியது. நம்மை ஏதேனும் ஒரு தரப்புடன் இணைத்துக்கொண்டு அதன் ஒற்றைநிலையை மட்டுமே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எல்லா தரப்பும் நம்மிடம் சொல்கின்றன. அதற்கு எதிராக ஒவ்வொரு முறையும் நாம் நமக்கான பாதையை தெரிவுசெய்யவேண்டும். உண்மை எப்போதும் நுணுக்கங்களிலேயே உள்ளது.நடிகர்கள் ஶ்ரீகாந்த், ஆகாஷ்

அதன் பிறகு கேள்வி பதில். பெரும்பாலான கேள்விகள் மகாபாரதத்தை ஒட்டியதாக அமைந்தன. ஏறத்தாழ இரண்டு  மணி நேரத்திற்கு மேல் அந்த உரையாடல் நீடித்தது. வினாக்கள் பல கன்னடத்தில் இருந்தாலும் நான் புரிந்துகொள்ள முடிந்தது, நான் ஆங்கிலத்தில் பதில் சொன்னேன். நிகழ்வுக்குப் பின்னர் என்னைச் சூழ்ந்துகொண்டு கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தனர். மதியச்சாப்பாட்டின் போதும் கேள்விகள் தொடர்ந்தன. அன்று முழுக்க பேசிக்கொண்டே இருக்கவேண்டியிருந்தது.

மதிய அமர்வில் என் ‘உலகம் யாவையும்’ நாடகத்தை என்.வி.ஶ்ரீகாந்த், ஜி.ஆகாஷ் ஆகியோர் நடித்தார்கள். ஶ்ரீகாந்த் நீனாசம் அமைப்பின் நடிப்புப் பயிற்றுநர். ஆகாஷ் அவருடைய மாணவர். உலகம் யாவையும் கதையை எப்படி நாடகமாக நடிக்க முடியும் என்று எண்ணினேன். இரண்டு பேர் மட்டுமே வெவ்வேறு கதாபாத்திரங்களாக மாறி உணர்ச்சிகரமாக நடித்தது நாடகம் என்பது நடிப்பு மட்டுமே என்னும் என் நம்பிக்கையை உறுதிசெய்தது. என்  படைப்பை நாடகமாக, அல்லது இன்னொரு கலை வடிவில் பார்ப்பது என்பது எனக்கு எப்போதுமே மிக முக்கியமானது. ஏனெனில் நான் எழுதிய கதையை நான் படிக்கையில் அதந் பிழைகளும் அதன் தொழில்நுட்பமும் மட்டுமே எனக்கு தெரிகின்றன. அந்த அணுக்கமே எனக்கு தடையாகிறது.  ஆனால் இன்னொரு வடிவம் வழியாக அது என்னை நோக்கி வரும்போது அது முற்றிலும் புதிய ஒன்றாக, வெறும் ஒரு கலைப்படைப்பாக மட்டுமே இருக்கிறது.

உலகம் யாவையும் நாடகம் எனக்கு ஒரு பெரிய அனுபவத்தை அளித்தது. காரி டேவிஸ் உக்கிரமான அனுமவம் வழியாக உலகக்குடிமகனாக உருமாறும் அந்த தருணத்தை – நடித்த போது மெய்யாகவே எனக்கு அகம் சிலிர்த்து கண்ணீர் மல்கியது. அதன் பிறகு நாடகத்தைப் பற்றிய மீண்டும் மகாபாரதத்தை பற்றியும் மீண்டும் ஒரு மணி நேர உரையாடல் நிகழ்ந்தது.

மகாநிர்வாணம் என்னும் மராட்டிய நாடகம் தமிழிலும் புகழ்பெற்றது (அது தமிழினி வெளியீடாக வந்துள்ளது) அதன் ஆசிரியர் சதீஷ் அலேகரைச் சந்தித்து நாடகம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அடுத்த ஜனவரியில் புனேயில் நிகழவிருக்கும் நாடகவிழாவில் விருந்தினராக என்னை அழைத்தார். நான் வருவதாக ஒப்புக்கொண்டேன்.

சதீஷ் அலேகருடன். சதீஷ் அலேகர்

அந்த ஒரு நாளில் மட்டும் மேடையில் நாலரை மணி நேரம் பேசியிருந்தேன். மேடைக்கு வெளியே ஆறு மணி நேரத்திற்கு மேல் பேசி இருப்பேன் என்று நினைக்கிறேன். தொடர்ந்து புதிய வாசகர்கள், இளம் படைப்பாளிகளிடம் பேசிக்கொண்டே இருந்தேன். அவர்கள் அனைவருக்கும் என்னிடம் பேசுவதற்கு ஏதோ ஒன்று இருந்தது. அத்தகைய தீவிரமான வாசகர்களை நான் பெரிய தேசியநிகழ்வுகளில் பார்த்ததில்லை. அவை பெரும்பாலும் சம்பிரதாயச் சொற்கள், தொடர்பு உருவாக்கங்கள், குடி மட்டுமே. இந்திய இலக்கிய விழாக்களில்  ஆங்கிலத்தில் பேசுவார்கள். சரளமாக ஆங்கிலம் பேசுபவர்களே அதிகம் பேசுவார்கள். அவர்கள் பெரும்பாலும் மேலோட்டமானவர்கள், தேய்வழக்குச் சொற்களையும் வழக்கமான கருத்துக்களையுமே மிக வேகமான ஒரு உச்சரிப்புடன் பேசுவார்கள். தயங்கி தயங்கி பேசவரும் ஒரு புதிய வாசகனிடம் இருக்கும் ஆத்மார்த்தமும் உண்மையான கேள்வியும் அவர்களிடம் இருப்பதில்லை.

இன்றைய கல்விக்கூடங்களில் இலக்கியம் எனக் கற்பிக்கப்படுபவை பெரும்பாலும் அரசியல் சரிநிலைகளும் அரசியல் கருத்துக்களுமாக இருக்கின்றன. அல்லது இலக்கிய கோட்பாடுகள். மிக அரிதாகவே மெய்யான இலக்கிய ஆர்வமும், கலைசார்ந்த புரிதலும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள். ஆகவே உண்மையான கலையார்வம் கொண்ட இளைஞர்களுக்கு இருக்கும் சிக்கல் என்பது அவர்களின் மெய்யான கேள்விகளுக்கு கல்லூரிகளில் இடமில்லை என்பதே. என்னிடம் வந்த ஐயங்கள் இலக்கிய வடிவங்களின் நுட்பங்கள் சார்ந்தவை. அல்லது கலைப்படைப்புக்கும் தங்களுடைய உளநிலைக்குமான நுணுக்கமான உறவு சார்ந்த கேள்விகள்.    

ஆங்கிலத்தில் வாஜ்பாயின் வரலாற்றை (Believer’s Dilemma) எழுதிய அபிஷேக் சௌதுரி வந்து அறிமுகம் செய்துகொண்டார். என் உரையாடல் தன்னை பெரிதும் கவர்ந்ததாகச் சொன்னார். டெல்லியின் இலக்கியவாதிகள் எப்போதும் சமத்காரமாக, கணக்குகளுடன் பேசுவார்கள். எவரையும் பகைகொள்ள மாட்டார்கள். ஏனென்றால் ஒருவரின் நூல் பற்றி இன்னொருவர்தான் மதிப்புரை எழுதவேண்டும். என்னிடமிருந்த நேரடியான தீவிரம் தன்னை மிகவும் கவர்ந்ததாகச் சொன்னார். அவரிடம் அரசியல், இலக்கியம் பற்றி மிக விரிவாக பேசிக்கொண்டிருந்தேன்.

அபிஷேக் சென்னையில் பயின்றவர். பொருளியல் பயின்றபின் எழுத்தாளராக ஆனார். வாஜ்பாய் பற்றிய அவருடைய நூல் இன்று மிகவும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது, அது இந்தியாவில் எழுதப்படும் வழக்கமான துதிவரலாறு அல்ல. வசைவரலாறும் அல்ல. மேலைநாட்டு வரலாற்றாசிரியர்களின் பாணியில் கறாராக எல்லாம் உண்மைகளையும் திரட்டி முன்வைக்கும் வகையான வரலாறு. வாஜ்பாயின் தனிவாழ்க்கை, அவருடைய தோல்விகள் எல்லாமே விரிவாக பேசப்பட்ட நூல் அது.

மலைநாட்டின் நினைவாக எஞ்சியிருக்கும் ஒன்று, அங்குள்ள காபியின் சுவை. இந்தியாவின் எந்தப் பகுதியிலு சிக்கரி சேர்க்கப்படாத காபி கிடைப்பதில்லை. சிக்கரி என்பது ஒரு இமையமலைக் கிழங்கு. அதை காபிப்பொடியுடன் சேர்க்கிறார்கள். அது கசப்புச்சுவை கொண்டது. (முதல் உலகப்போரின்போது பிரேசிலில் இருந்து காப்பி வரவேண்டியிருந்தமையால் பிரிட்டிஷ் அரசு முப்பது சதவீதம் சிக்கரியை காபியில் சேர்த்தாகவேண்டும் என ஆணையிட்டது. அதுதான் அரசாணை – decree . கும்பகோணம் டிகிரி காபி என்பது அந்த அரசாணைப்படி தயாரிக்கப்பட்டது) அந்தக் காபிச்சுவை தமிழகத்தில் பெரும்பாலானவர்களுக்குப் பழகிவிட்டது. சிக்கரி காபி கெட்டியான பாலுடன் இணைந்தால்தான் ஓரளவு சுவையாக இருக்கும். எனக்கு அது பொதுவாகப் பிடிக்காது. நான் நல்ல காபியின் ரசிகன். மலைநாட்டு பகுதியில் அசல் காபி கிடைக்கும். எந்தச் சிறு கடையிலும் டீ சிறப்பாக இருக்கும். ஏனென்றால் இந்தியா உற்பத்தி செய்யும் காபியில் பெரும்பகுதி இங்கேதான் உருவாகிறது. சாகர் நகரில் காரந்த் உணவகத்தில் ஒரு காபி விலை ரூ பத்து மட்டுமே. ஆனால் ஷிமோகா விமானநிலையத்திற்குள் ரூ.360.

அபிஷேக்கும் நானும் சுசித்ராவும் ஜோக் அருவியைச் சென்று பார்த்தோம். பல நூறு பேர் சூழ்ந்திருந்து பார்க்கையிலும் தனக்கான தனிமேடையில் தன்னில் தானே நிகழ்ந்து கொண்டிருக்கும் பெரும் நடனக் கலைஞனைப் போல அது அங்கு நின்று கொண்டிருப்பதாகப்பட்டது. மறுநாள் காலை அங்கிருந்து கிளம்பி பெங்களூர் வழியாக திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவில் வந்து சேர்ந்தேன். ஜோக் அருவியும் நீனாசமும் எல்லாம் இணைந்த ஒரு கலவைச்சித்திரம் எஞ்சியிருந்தது. படிமங்கள் இப்படித்தான் திரள்கின்றன.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 06, 2025 11:35

விஷ்ணுபுரம் விருந்தினர் 7, அனுராதா ஆனந்த்

விஷ்ணுபுரம் விருது 2025 ஆம் ஆண்டுக்கு ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்படுகிறது. டிசம்பர் 20, 21 ஆம் தேதிகளில் நிகழும் இந்த விழாவில் வழக்கம்போல படைப்பாளர்கள், இலக்கியச் செயல்பாட்டாளர்கள் வாசகர்களை சந்திக்கும் நிகழ்வு அமைகிறது. இந்த ஆண்டு அனுராதா ஆனந்த் கலந்துகொள்கிறார்

அனுராதா ஆனந்த் அனுராதா ஆனந்த் அனுராதா ஆனந்த் – தமிழ் விக்கி/* inline tdc_css att */.tdi_1{padding-top:12px !important;padding-bottom:8px !important;border-color:#eaeaea !important;border-style:solid !important;border-width: 1px 0px 1px 0px !important;}/* custom css */.tdi_1 .td_block_inner{
width: 100%;

margin-left: -20px;
margin-right: -20px;
}.tdi_1:after{
content: '';
display: table;
clear: both;
}.tdi_1 .td-image-wrap{
padding-bottom: 100%;
}.tdi_1 .entry-thumb{
background-position: center 50%;
}.tdi_1 .td-image-container{
flex: 0 0 30%;
width: 30%;

display: block; order: 0;
}.ie10 .tdi_1 .td-image-container,
.ie11 .tdi_1 .td-image-container{
flex: 0 0 auto;
}.tdi_1 .td-module-container{
flex-direction: row;

border-color: #eaeaea !important;
}.ie10 .tdi_1 .td-module-meta-info,
.ie11 .tdi_1 .td-module-meta-info{
flex: 1;
}.tdi_1 .td-module-meta-info{
padding: 1% 5%;

border-color: #eaeaea;
}.tdi_1 .td_module_wrap{
padding-left: 20px;
padding-right: 20px;

padding-bottom: 18px;
margin-bottom: 18px;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;

border-color: #eaeaea;
}.tdi_1 .entry-thumb,
.tdi_1 .entry-thumb:before,
.tdi_1 .entry-thumb:after{
border-radius: 500px;
}.tdi_1 .td-post-vid-time{
display: block;
}.tdi_1 .td-post-category:not(.td-post-extra-category){
display: none;
}.tdi_1 .td-author-photo .avatar{
width: 20px;
height: 20px;

margin-right: 6px;

border-radius: 50%;
}.tdi_1 .td-excerpt{
display: none;

column-count: 1;

column-gap: 48px;

font-size:= !important;
}.tdi_1 .td-audio-player{
opacity: 1;
visibility: visible;
height: auto;

font-size: 13px;
}.tdi_1 .td-read-more{
display: none;
}.tdi_1 .td-author-date{
display: none;
}.tdi_1 .td-post-author-name{
display: none;
}.tdi_1 .td-post-date,
.tdi_1 .td-post-author-name span{
display: none;
}.tdi_1 .entry-review-stars{
display: none;
}.tdi_1 .td-icon-star,
.tdi_1 .td-icon-star-empty,
.tdi_1 .td-icon-star-half{
font-size: 15px;
}.tdi_1 .td-module-comments{
display: none;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0;
padding-bottom: 0;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:21px !important;line-height:1.2 !important;
}html:not([class*='ie']) .tdi_1 .td-module-container:hover .entry-thumb:before{
opacity: 0;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}/* landscape */@media (min-width: 1019px) and (max-width: 1140px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;

padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:20px !important;line-height:1.2 !important;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}/* portrait */@media (min-width: 768px) and (max-width: 1018px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;

padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:17px !important;line-height:1.2 !important;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}/* phone */@media (max-width: 767px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;

padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}var block_tdi_1 = new tdBlock();block_tdi_1.id = "tdi_1";block_tdi_1.atts = '{"modules_on_row":"","limit":"10","hide_audio":"yes","show_btn":"none","show_excerpt":"none","show_review":"none","show_com":"none","show_date":"none","show_author":"none","image_floated":"float_left","sort":"oldest_posts","category_id":"11301","category_ids":"12659","image_width":"30","meta_padding":"1% 5%","modules_category":"","modules_category_margin":"","custom_title":"\u0bb5\u0bbf\u0bb7\u0bcd\u0ba3\u0bc1\u0baa\u0bc1\u0bb0\u0bae\u0bcd 2025 \u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba8\u0bcd\u0ba4\u0bbf\u0ba9\u0bb0\u0bcd\u0b95\u0bb3\u0bcd","custom_url":"\/tag\/2025-\u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba8\u0bcd\u0ba4\u0bbf\u0ba9\u0bb0\u0bcd\/","post_ids":"-222756","tdc_css":"eyJhbGwiOnsiYm9yZGVyLXRvcC13aWR0aCI6IjEiLCJib3JkZXItYm90dG9tLXdpZHRoIjoiMSIsInBhZGRpbmctdG9wIjoiMTIiLCJwYWRkaW5nLWJvdHRvbSI6IjgiLCJib3JkZXItY29sb3IiOiIjZWFlYWVhIiwiZGlzcGxheSI6IiJ9fQ==","show_cat":"none","excerpt_col":"","m16_el":"20","ajax_pagination":"load_more","f_title_font_size":"eyJhbGwiOiIyMSIsImxhbmRzY2FwZSI6IjIwIiwicG9ydHJhaXQiOiIxNyJ9","f_title_font_line_height":"1.2","f_ex_font_size":"=","f_ex_font_line_height":"","image_height":"100","hide_image":"","modules_gap":"","meta_info_horiz":"","container_width":"100","image_radius":"500","block_type":"td_flex_block_1","separator":"","block_template_id":"","title_tag":"","mc1_tl":"","mc1_title_tag":"","mc1_el":"","tag_slug":"","autors_id":"","installed_post_types":"","offset":"","show_modified_date":"","time_ago":"","time_ago_add_txt":"ago","time_ago_txt_pos":"","el_class":"","td_ajax_filter_type":"","td_ajax_filter_ids":"","td_filter_default_txt":"All","td_ajax_preloading":"","m_padding":"","all_modules_space":"36","modules_border_size":"","modules_border_style":"","modules_border_color":"#eaeaea","modules_border_radius":"","modules_divider":"","modules_divider_color":"#eaeaea","h_effect":"","image_size":"","image_alignment":"50","video_icon":"","video_popup":"yes","video_rec":"","spot_header":"","video_rec_title":"","video_rec_color":"","video_rec_disable":"","autoplay_vid":"yes","show_vid_t":"block","vid_t_margin":"","vid_t_padding":"","video_title_color":"","video_title_color_h":"","video_bg":"","video_overlay":"","vid_t_color":"","vid_t_bg_color":"","f_vid_title_font_header":"","f_vid_title_font_title":"Video pop-up article title","f_vid_title_font_settings":"","f_vid_title_font_family":"","f_vid_title_font_size":"","f_vid_title_font_line_height":"","f_vid_title_font_style":"","f_vid_title_font_weight":"","f_vid_title_font_transform":"","f_vid_title_font_spacing":"","f_vid_title_":"","f_vid_time_font_title":"Video duration text","f_vid_time_font_settings":"","f_vid_time_font_family":"","f_vid_time_font_size":"","f_vid_time_font_line_height":"","f_vid_time_font_style":"","f_vid_time_font_weight":"","f_vid_time_font_transform":"","f_vid_time_font_spacing":"","f_vid_time_":"","meta_info_align":"","meta_width":"","meta_margin":"","meta_space":"","art_title":"","art_btn":"","meta_info_border_size":"","meta_info_border_style":"","meta_info_border_color":"#eaeaea","meta_info_border_radius":"","modules_category_padding":"","modules_cat_border":"","modules_category_radius":"0","modules_extra_cat":"","author_photo":"","author_photo_size":"","author_photo_space":"","author_photo_radius":"","review_space":"","review_size":"2.5","review_distance":"","art_excerpt":"","excerpt_gap":"","excerpt_middle":"","excerpt_inline":"","show_audio":"block","art_audio":"","art_audio_size":"1.5","btn_title":"","btn_margin":"","btn_padding":"","btn_border_width":"","btn_radius":"","pag_space":"","pag_padding":"","pag_border_width":"","pag_border_radius":"","prev_tdicon":"","next_tdicon":"","pag_icons_size":"","f_header_font_header":"","f_header_font_title":"Block header","f_header_font_settings":"","f_header_font_family":"","f_header_font_size":"","f_header_font_line_height":"","f_header_font_style":"","f_header_font_weight":"","f_header_font_transform":"","f_header_font_spacing":"","f_header_":"","f_ajax_font_title":"Ajax categories","f_ajax_font_settings":"","f_ajax_font_family":"","f_ajax_font_size":"","f_ajax_font_line_height":"","f_ajax_font_style":"","f_ajax_font_weight":"","f_ajax_font_transform":"","f_ajax_font_spacing":"","f_ajax_":"","f_more_font_title":"Load more button","f_more_font_settings":"","f_more_font_family":"","f_more_font_size":"","f_more_font_line_height":"","f_more_font_style":"","f_more_font_weight":"","f_more_font_transform":"","f_more_font_spacing":"","f_more_":"","f_title_font_header":"","f_title_font_title":"Article title","f_title_font_settings":"","f_title_font_family":"","f_title_font_style":"","f_title_font_weight":"","f_title_font_transform":"","f_title_font_spacing":"","f_title_":"","f_cat_font_title":"Article category tag","f_cat_font_settings":"","f_cat_font_family":"","f_cat_font_size":"","f_cat_font_line_height":"","f_cat_font_style":"","f_cat_font_weight":"","f_cat_font_transform":"","f_cat_font_spacing":"","f_cat_":"","f_meta_font_title":"Article meta info","f_meta_font_settings":"","f_meta_font_family":"","f_meta_font_size":"","f_meta_font_line_height":"","f_meta_font_style":"","f_meta_font_weight":"","f_meta_font_transform":"","f_meta_font_spacing":"","f_meta_":"","f_ex_font_title":"Article excerpt","f_ex_font_settings":"","f_ex_font_family":"","f_ex_font_style":"","f_ex_font_weight":"","f_ex_font_transform":"","f_ex_font_spacing":"","f_ex_":"","f_btn_font_title":"Article read more button","f_btn_font_settings":"","f_btn_font_family":"","f_btn_font_size":"","f_btn_font_line_height":"","f_btn_font_style":"","f_btn_font_weight":"","f_btn_font_transform":"","f_btn_font_spacing":"","f_btn_":"","mix_color":"","mix_type":"","fe_brightness":"1","fe_contrast":"1","fe_saturate":"1","mix_color_h":"","mix_type_h":"","fe_brightness_h":"1","fe_contrast_h":"1","fe_saturate_h":"1","m_bg":"","color_overlay":"","shadow_shadow_header":"","shadow_shadow_title":"Module Shadow","shadow_shadow_size":"","shadow_shadow_offset_horizontal":"","shadow_shadow_offset_vertical":"","shadow_shadow_spread":"","shadow_shadow_color":"","title_txt":"","title_txt_hover":"","all_underline_height":"","all_underline_color":"","cat_bg":"","cat_bg_hover":"","cat_txt":"","cat_txt_hover":"","cat_border":"","cat_border_hover":"","meta_bg":"","author_txt":"","author_txt_hover":"","date_txt":"","ex_txt":"","com_bg":"","com_txt":"","rev_txt":"","audio_btn_color":"","audio_time_color":"","audio_bar_color":"","audio_bar_curr_color":"","shadow_m_shadow_header":"","shadow_m_shadow_title":"Meta info shadow","shadow_m_shadow_size":"","shadow_m_shadow_offset_horizontal":"","shadow_m_shadow_offset_vertical":"","shadow_m_shadow_spread":"","shadow_m_shadow_color":"","btn_bg":"","btn_bg_hover":"","btn_txt":"","btn_txt_hover":"","btn_border":"","btn_border_hover":"","pag_text":"","pag_h_text":"","pag_bg":"","pag_h_bg":"","pag_border":"","pag_h_border":"","ajax_pagination_infinite_stop":"","css":"","td_column_number":1,"header_color":"","color_preset":"","border_top":"","class":"tdi_1","tdc_css_class":"tdi_1","tdc_css_class_style":"tdi_1_rand_style"}';block_tdi_1.td_column_number = "1";block_tdi_1.block_type = "td_flex_block_1";block_tdi_1.post_count = "6";block_tdi_1.found_posts = "6";block_tdi_1.header_color = "";block_tdi_1.ajax_pagination_infinite_stop = "";block_tdi_1.max_num_pages = "1";tdBlocksArray.push(block_tdi_1);விஷ்ணுபுரம் 2025 விருந்தினர்கள்







விஷ்ணுபுரம் விருந்தினர் – 1 – மு. குலசேகரன்





















விஷ்ணுபுரம் விருந்தினர் – 2 – அரிசங்கர்





















விஷ்ணுபுரம் விருந்தினர் – 3 – கே. நல்லதம்பி





















விஷ்ணுபுரம் விருந்தினர் – 4 – ஜீவ கரிகாலன்





















விஷ்ணுபுரம் விருந்தினர் – 5 – அழிசி ஶ்ரீனிவாசன்





















விஷ்ணுபுரம் விருந்தினர் – 6 – குணா கந்தசாமி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 06, 2025 11:32

ரமேஷ் – அஞ்சலிகள், கடிதங்கள்

ரமேஷ், கடிதங்கள் கலைஞனின் உயிர்த்தெழல் ரமேஷ் பிரேதன் நினைவஞ்சலி

அன்புள்ள ஜெ,

நீங்கள் மற்றும் உங்கள் நண்பர்கள் ரமேஷ பிரேதன் அவர்களுக்கு செய்த உதவிகள், அவருடைய இறுதி நாட்கள பற்றி எழுதிய அஞ்சலிக்குறிப்புகளைப் பார்த்தேன். ஓர் எழுத்தாளர் இங்கே எப்படி வாழ்ந்தார், எப்படி மறைந்தார் என்பதை உள்ளபடி பதிவு செய்திருக்கிறீர்கள். அது ஒரு வரலாற்று ஆவணம். எழுத்தாளன் இங்கே கைவிடப்பட்டதில்லை, அவனுடன் எழுத்தாளர்கள் உடன் இருந்தார்கள், அவர்கள் மட்டும்தான் இருந்தார்கள் என்பது பதிவு செய்யப்பட வேண்டும். அதை வருங்காலச் சந்ததியினருக்கு மட்டுமின்றி, எழுத்தாளர்களாக உருவாகிக் கொண்டிருக்கும் இளைய தலைமுறையினருக்கும் உணர்ச்சிகரமாகவும் வலுவாகவும் கடத்தியாக வேண்டும்.

உங்களுடைய அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அதை எழுதி இருக்கிறீர்கள் என்று புரிகிறது. உங்களுக்கு அமைப்பு சார்ந்த உதவியவர்கள் அனைவருக்கும்  நீங்களும் உங்கள் அமைப்பும் செய்தவை தெரிய வேண்டும் என்பதற்காக இதை எழுதியிருக்கிறீர்கள் என்று முதலில் நினைத்தேன். ஆனால் அனைவருக்கும் இது தெரிந்தாக வேண்டும் என்பதும், எதிர்காலத்திலும் எழுத்தாளர்கள் எழுத்தாளர்களுடன் இருக்கவேண்டும் என்பற்கான ஒரு அறிவிப்பாக இது அமைய வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது.

இங்கே முகநூலில் பல நூறு குரல்கள் ஒவ்வொரு நாளும் வம்புக்கென்று அலைந்து கொண்டிருக்கின்றன. எழுத்தாளர் நோயுற்றால், சாகக்கிடந்தால் இவர்களிடமிருந்து 10 காசு தேறாது. அவன் ஒரு நூல் எழுதினால், அல்லது விருது பெற்றால் ஒரு வார்த்தை எழுதமாட்டார்கள். ஆனால் அவன் வாழ்க்கையை வைத்துக்கொண்டு வம்பு வளர்ப்பதற்கும், செத்தால் அதன் வழியாக மேலும் வம்புகளை உருவாக்கிப் பதிவு தேற்றுவதற்கும் மட்டுமே இவர்கள் முன்வருவார்கள். இப்போதும் உங்களை வசைபாடி பதிவு போடும் சிலரை கவனித்தேன். ஒரு படைப்பாளியின் சாவின் போதுகூட வம்புகளுக்கும், வழக்கமான காழ்ப்புகளுக்கும் அப்பால் யோசிக்க முடியாத இவர்களெல்லாம் என்ன வகையான மனிதர்கள் என்ற திகைப்புதான் ஏற்பட்டது.

ரமேஷ் பிரேதனின் உடன் நின்றவர் அத்தனை பேருமே எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் என்பதைப் போல தமிழ் எழுத்து உலகம் பெருமைப்படத்தக்க செய்தி ஏதுமில்லை. அந்த பெருமிதம் உங்களுடைய குறிப்பிலும் இருந்தது. நன்றி.

அன்புடன்

எம்.பாஸ்கர்.

அன்புள்ள ஜே,

ரமேஷ் பிரேதன் அவர்களின் நினைவாக விருதுகள் அறிவிக்க இருப்பதாக குறிப்பிட்டீர்கள் .அந்த விருதுகளை முன்னரே உங்கள் தளத்தில் அறிவித்துவிட்டு, அதை விழா மேடையில் அளித்தால் அது வாசகர்களுக்கு அப்படைப்பாளிகளை முன்னரே அறியவும், அவர்களின் படைப்புகளை வாசித்துப் பார்க்கவும் வாய்ப்பாக அமையும். இப்போது சில விருதுகளில் இத்தகைய விருத்தாளர்களை அந்த மேடையில் ஒரு திடீர் அறிவிப்பாகச் சொல்வதென்பது ஒரு வழக்கமாக உள்ளது. அது ஒரு மேடைப் பரபரப்பை உருவாக்குமே ஒழிய இலக்கியத்திற்கு உகந்தது அல்ல. முன்னரே அவற்றை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

க.ரவிச்சந்திரன்

அன்புள்ள ஜெ,

ரமேஷ் பிரேதன் அவர்களின் இறுதி நாள் நிகழ்வு அவருடைய வாசகர்களாலும் நண்பர்களாலும் சிறப்புற நிகழ்த்தப்பட்டதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். நான் நாட்டுக்கு வெளியே தொலை தூரத்தில் இருக்கிறேன். ஆயினும் அங்கே ஒரு எழுத்தாளருடன் அவனுடைய சக எழுத்தாளர்கள் அத்தனை பேரும்  திரண்டு வந்து நின்றார்கள் என்பது எனக்கு ஓர் இலக்கியவாசகராக மிகுந்த பெருமிதத்தை அளிக்கிறது. அவருக்கு அவருடைய நோய்க்காலத்தில் நீங்கள் உட்பட எழுத்தாளர்கள் பலர் சேர்ந்து உதவினார்கள் என்பதைப் போல பெருமிதம் ஊட்டும் எதுவும் இல்லை. ஓர் அமைப்பு நிதியளித்தது, அல்லது பொதுமக்கள் நிதி திரட்டி உதவினர் என்பதை விட இது பல படி மேலானது. அதை நீங்கள் வரலாற்று ஆவணமாக பதிவு செய்ததும் அவசியமானதே. இல்லையேல் ஓராண்டுகூட கடப்பதற்குள் எவரும் எதுவும் செய்யவில்லை என்ற வழக்கமான பாட்டை ஆரம்பித்திருப்பார்கள்.

உங்களுடைய அஞ்சலிக்  குறிப்பில் உங்களுக்கும் அவருக்குமான அந்தரங்கமான உரையாடலின் பதிவு நெகிழ்ச்சியூட்டியது. ரமேஷ் நோயுற்று உதவிக்காக நம்பி இருந்தபோது கூட உங்களிடம் தனக்கு உதவும்படி கோரவில்லை. மாறாக ஆணை இடுகிறார், அதட்டிக் கேட்கிறார். உங்களுக்கிடையே இருந்த உரையாடலில் இருந்த கேலி, கிண்டல் எல்லாமே அழகானவை. கொடுப்பவர் எவ்வகையிலும் மேலே இல்லாத அந்த சமமான உறவும், அதிலுள்ள இயல்பான அணுக்கமும்தான் எல்லாவற்றையும் அழகாக ஆக்குகிறது. அவர் சாவைப்பற்றிப் பேசுகிறார். நீங்கள் அதை தவிர்த்து அவரை பகடி செய்துகொண்டே கடந்துசெல்கிறீர்கள்.

அவர் உங்களிடம் ‘விருதைக் குடுய்யா’ என்று கேட்ட அந்த உரிமைதான்   நட்பின் மிக உச்சம் என்று நான் நினைக்கிறேன். அவர் உங்களை அழைத்து ‘யோவ் பணம் கொடு’  என்று கேட்டதை வாசிக்கும்போது எனக்கு கண்ணீர் மல்கியது. ஒருவர் இன்னொருவரிடம் தனக்கு முழு உரிமையும் உண்டு என்றும், பணம் அல்லது உதவி பெறுவது என்பது தன் உரிமை என்றும், அதைச் செய்வது மற்றவரின் கடமை என்றும் நினைக்கும்போதுதான் உண்மையான உறவு நிகழ்கிறது. இன்று உறவினரிடம்கூட அத்தகைய நெருக்கம் இல்லை. பெற்ற மகனிடம் பணம் கேட்கக்கூட ஆயிரம் முறை யோசிக்கவேண்டும். ஒரு கிண்டலுக்குக்கூட இடமிருக்காது. உங்கள் நட்பின் நெருக்கத்தை இன்றைய சுயநலத் தலைமுறை புரிந்துகொள்ளமுடியாது. அத்தகைய நட்புகளின் காலம் முடிந்துவிட்டது என்றுகூட தோன்றியது.

நான் உங்கள் கோரிக்கைப்படி ரமேஷுக்கு பணம் அனுப்பியுள்ளேன். 2023ல் ரமேஷை புதுச்சேரியில் சென்று பார்த்தேன். அவர் உங்களையும் கோணங்கியையும் ஒருமையில் பேசியது என்னுடன் வந்த நண்பருக்கு மரியாதைக் குறைவாக தோன்றியது. ஆனால் அந்த இயல்பான நட்பும் நெருக்கமும் எனக்கு பரவசமூட்டுவதாக இருந்தது. நீங்கள் எழுதிய அந்த நட்புப்பதிவுகள் ஒருவகையான காலப்பதிவுகள்.

மா.கிருஷ்ணராஜ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 06, 2025 11:32

யோகம், ஓராண்டுப்பயணம்- திரு

I was just wondering if there is any chance of conducting these classes in English in the future. It will help people like me.

Classes in English Screenshot

அன்புள்ள ஜெ 

இந்த டிசம்பர் வந்தால் நான் யோகம் செய்ய ஆரம்பித்து மூன்று வருடங்கள் முடிகிறது. திரும்பி பார்க்கையில் நீண்ட நாட்கள் போலவும் அதே சமயம் மிக குறுகியது போலவும் உள்ளது. உங்களுடனானா ஒரு பயணத்தில் நீங்கள் நான் தவறாக அமர்ந்திருப்பதை சுட்டிக்காட்டி, குருஜி சௌந்தரை அறிமுகப்படுத்தியதில் இருந்து ஒரு வருடம் கழித்து, முழுமையறிவு வழியாக ஒருங்கிணைத்த முதல் யோகா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு ஆரம்பித்தது (டிசம்பர் 2022)

யோகம், ஓராண்டுப்பயணம்- திரு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 06, 2025 11:30

அஞ்சலி- நடன காசிநாதன்

தொல்லியல் துறை அறிஞர். வரலாற்றாய்வாளர். கல்வெட்டியல் ஆய்வாளர் நடன காசிநாதன் மறைந்தார். தொல்பொருள் துறை இயக்குநராகப் பணியாற்றினார். தமிழ்நாட்டில் பல்வேறு வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். ’வரலாற்றுப் பேரறிஞர்’ விருது, தமிழக அரசின் உ.வே.சா. விருது உள்படப் பல்வேறு விருதுகளை, பட்டங்களைப் பெற்றார்.

நடன காசிநாதன். தமிழ்விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 06, 2025 08:36

October 5, 2025

விஜய், கரூர், எழுத்தாளர்கள்

கரூர் சாவுகள், எழுத்தாளன் சொல்லவேண்டியவை

அன்புள்ள ஜெ,

உங்கள் நண்பரும் எழுத்தாளருமான சி.சரவண கார்த்திகேயன் எழுதிய குறிப்பு இது. ஏறத்தாழ இதே போன்ற ஒரு குறிப்பை உங்கள் நண்பர் அரவிந்தன் கண்ணையன் அவர்களும் இணையத்தில் எழுதியிருக்கிறார்.

உங்களை முகநூல் விவாதத்திற்குள் நான் இருக்க விரும்பவில்லை. ஆனால் எழுத்தாளரின் சமூகப் பொறுப்பு, எழுத்தாளர் சொல்ல வேண்டிய கருத்து பற்றி நீங்கள் ஒரு கட்டுரை எழுதியதைக் கண்டேன். அதன் தொடர்ச்சியாக எழுத்தாளர் எங்கு எப்போது எதிர்வினை ஆற்றலாம் என்று நினைக்கிறீர்கள் என்றும் எழுத்தாளர்கள் இந்த எதிர்வினை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்றும் நீங்கள் கூற வேண்டும் என்று விரும்புகிறேன் .

இந்த குறிப்பிட்ட நிகழ்வு பற்றி அல்ல நான் கேட்பது. பொதுவாக இந்த விஷயத்தில் உங்களுடைய நிலைப்பாடு என்ன என்று அறிய விரும்புகிறேன்.

ஜெ.ஆர். கார்த்திக் சுரேஷ்குமார்

சி.சரவணக்கார்த்திகேயன் பதிவு

கரூர் பரப்புரைச் சாவுகள் விவகாரத்தில் எழுத்தாளர்கள் தனித்தனியாக அரசை நோக்கியோ தவெகவை நோக்கியோ விரல் நீட்டி விமர்சிக்கலாம், கோரிக்கைகள் வைக்கலாம். அது அவர்களின் கருத்துச் சுதந்திரம். ஆனால் இப்போது எழுத்தாளர்கள் என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் நின்று இச்சம்பவத்துக்கு எதிர்வினையாற்ற வேண்டிய அவசியம்தான் என்ன?

ஓர் அரச அத்துமீறல் நடந்திருந்தால் அதைக் கண்டிக்கும் முகமாக எழுத்தாளர்கள் ஒன்று திரளலாம். அல்லது ஒடுக்கப்பட்டோர் மீதான அத்துமீறல் யாரும் செய்திருந்தால் அதில் எழுத்தாளர்கள் நுழைந்து நீதி கோரலாம். அல்லது ஓர் அரசை வீழ்த்தவோ ஓர் அமைப்பைப் புறக்கணிக்கவோ மக்களை நோக்கி எழுத்தாளர்கள் பேசலாம். அல்லது ஒரு புதிய சட்டத்தையோ வரப்போகும் போரையோ வேண்டாமென எழுத்தாளர்கள் எதிர்க்கலாம். இவற்றைப் பொதுமைப்படுத்திப் பார்த்தால் பாதிக்கப்பட்டோருக்கான குரலாக எழுத்தாளர்கள் கூட்டாக நிற்பதுதான் நானறிந்து இதற்கு முன் நடந்திருக்கிறது.

அதற்கு ஒரு வலுவான தேவை இருக்கிறது. அது மாற்றத்தை நிகழ்த்தும் என்பது தாண்டி ஒரு நிகழ்வில் ஒரு நிலத்தின் பெரும்பான்மை அறிவுஜீவித் தரப்பின் நிலைப்பாடு என்ன என்பதும் வரலாற்றில் அதன் வழியே பதிவாகிறது. எனவே அதைச் செய்கையில் அவர்கள் மீது ஒரு மரியாதை எழுகிறது. அதற்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது.

மாறாக, இந்தச் சம்பவத்தில் இரு தரப்பும் ஒருவர் மீது மற்றவர் மாற்றி மாற்றிக் குற்றம் சொல்கிறார்கள். முழுக்கவே இரு பக்கமும் அரசியல்தான் நடக்கிறது. எதன் வழியேனும் தேர்தல் மைலேஜ் எடுக்கப் பார்க்கிறார்கள். தவெக தரப்பு கூடுதல் கேவலமாக நடந்து கொள்கிறது என்பது மட்டும்தான் வித்தியாசம். இதில் எதற்கு இடையே புகுந்து ஒட்டுமொத்த தமிழ் எழுத்தாளர் சமூகம் கருத்து சொல்ல வேண்டும்? இதில் பாதிக்கப்பட்ட தரப்புதான் என்ன? என்ன தீர்வை எதிர்பார்க்கிறார்கள் எழுத்தாளர்கள்? Not a convincing problem statement. நிஜமாகவே இதன் dynamics, இதன் தாத்பர்யம் இரண்டும் விளங்கவில்லை.

இம்மாதிரி ஆர்வங்கள் எழுத்தாளர்கள் என்ற குழுமத்தின் தீவிரத்தை, அடர்த்தியை நீர்க்கச் செய்வதாகாதா? இதுதான் கலைஞர்கள் கூட்டமைப்பின் கடமையா? ஒருவேளை ஹேமமாலினி தலைமையிலான பாஜக எம்பிக்கள் குழுவுக்கான எதிர்வினையா?

அன்புள்ள கார்த்திக்,

கடந்த காலத்தில் தமிழ் எழுத்தாளர்கள் பொதுவாக அரசியல் மற்றும் ச்மூக விஷயங்களில் கருத்துக்கள சொல்வது இல்லை. எழுத்தாளர்கள இரண்டு வகை. அவர்களில் அன்று பெரும் முக்கியத்துவம் அடைந்து மக்கள் செல்வாக்குடன் இருந்த வணிக -கேளிக்கை எழுத்தாளர்கள் பொதுவாக எந்த அரசியல் சமூக விஷயங்களிலும் எந்த வகையான கருத்தும் சொல்லாமல் இருப்பதுதான் தமிழ் மரபு. ஏனெனில் அவர்கள் எல்லா அரசியல் தரப்புகளையும், எல்லா அதிகார மையங்களையும் நயந்து செல்ல வேண்டிய இடத்தில் இருந்தார்கள். சென்ற காலங்களில் சுஜாதா, பாலகுமாரன் தொடங்கி அனைவருமே எந்த மேடையிலும் எவரையும் சென்று புகழ்ந்து பேசுபவர்களாகவே திகழ்ந்தனர். காரணம், அவர்கள் பெருநிறுவனங்களை அண்டி எழுத வேண்டிய கட்டாயத்தில் இருந்தவர்கள்.செல்வாக்குள்ள எவரையும் பகைத்துக் கொள்ளும் ‘ஆடம்பரம்’ அவர்களுக்கு இருக்கவில்லை.

மிகச் சிறந்த முன்னுதாரணம் வாலி. அவர் ஆதரித்து புகழ்பாடாத எவருமே தமிழகத்தில் இல்லை. வைரமுத்து இன்று அதே முகத்துடன்தான் இருக்கிறார். பாரதிய ஜனதாவின் மேடைக்கு செல்வதிலும் திமுக மேடைக்கு செல்வதிலும் அவருக்கு எந்த வேறுபாடும் இல்லை. இவ்வாறு எழுத்தாளர்கள் இருப்பது தமிழ்ச் சூழலால் அங்கீகரிக்கவும் படுகிறது. வைரமுத்து மோடியை மொழிபெயர்ப்பதிலும், கூடவே திமுக ஆதரவாளர் போல பேசுவதிலும், தமிழரசி நடராஜனின் நெருங்கி நண்பராக இருந்து ஜெயலலிதாவின் புகழ் பாடியதிலும் எந்த  முரண்பாடும் இன்றுள்ள வாசகர்களோ அறிவுஜீவிகளோ காண்பதில்லை என்பதை கவனிக்கலாம்.

மறுபக்கம் சிற்றிதழ் இலக்கிய எழுத்தாளர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு தளத்தையே எழுதிக் கொண்டிருந்தார்கள். தமிழ் சிற்றிதழ் சார்ந்த எழுத்து என்பது பெரும்பாலும் தனிமனிதனின் அக நெருக்கடிகள், சமூகம் அவனிடம் அளிக்கும் அழுத்தங்கள் ஆகியவற்றை மட்டுமே முன்னிறுத்தக் கூடியதாக இருந்தது. சமூகம் என்பது தனிமனிதனில் எதிரொலிக்கும் வகையிலேயே அவர்கள் எழுத்தில் வெளிப்பட்டது. அவர்களுக்கு அரசியல் இருந்திருக்கலாம், ஆனால் புனைவுகளில் அவர்கள் முன் வைத்தது அந்த நூற்றாண்டு உருவாக்கிய தனிமனிதன் என்பவனையே. அந்த தனிமனிதனின் அகப்பரிணாமத்தில் உருவாகும் முக்கியமான இடர்களை பற்றி மட்டும் அவர்கள் அதிகமாக பேசினர். அரசியல்கொந்தளிப்புகளைக்கூட தனிமனிதர்கள் வழியாகவே அணுகினர். அசோகமித்திரனின் ‘பதினெட்டாவது அட்சக்கோடு’ ஒரு சரியான உதாரணம்.

மேலும் அவர்கள் அரசியல் கருத்துக்களைச் சொன்னால் அதை எழுதுவதற்கோ, மக்கள்  அவற்றைன கவனிப்பதற்கோ அன்று எந்த வாய்ப்பும் அன்று இல்லை. இருநூறு பிரதிகள் அச்சிடப்படும் ஒரு சிற்றிதழில் அரசியல் கருத்துக்களை எழுதுவதில் எந்த பயனும் இல்லை. அவற்றை வாசிப்பவர்களும் வேறு எழுத்தாளர்கள் மட்டுமேதான்.

ஆனால் அரசியல் கருத்துக்களை சொல்லும் ஒரு தரப்பு எழுத்தாளர்களுக்குள் அன்றும் இருந்தது. அவர்கள் பெரும்பாலும் இடதுசாரி எழுத்தாளர்கள். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம்,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகிய இரண்டு அமைப்புகளால் ஒருங்கு திரட்டப்பட்டவர்கள் அவர்கள். அவர்களில் பலர் கட்சி உறுப்பினர்கள், சிலர் கட்சி ஆதரவாளர்கள். ஆனால் அந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தனிப்பட்ட் முறையில் அரசியல் கருத்துக்களைத் தெரிவிப்பதை அந்த அமைப்புகள் விரும்பவில்லை. அவர்கள் ஒட்டுமொத்தமான ஒரு தரப்பாகவே அரசியல் கருத்துகளைத் தெரிவித்தார்கள். அந்த தரப்பு என்ன என்பதை அந்த கட்சிதான் முடிவெடுத்தது.கட்சியின் சார்பாக அந்த அமைப்புகளின் செயலாளர் அல்லது தலைவர் பொறுப்புகளில் இருப்பவர்கள் அறிக்கைகளை எழுதினர். அவற்றுக்குக் கீழே இவர்கள் கையெழுத்திட்டனர். நீண்ட காலம் அரசியல் பேசும் எழுத்தாளர்களின் கருத்து என்று இங்கே அறியப்பட்டவை எல்லாமே இந்த இரண்டு ஒருங்கிணைந்த அமைப்புகளை சார்ந்த எழுத்தாளர்கள் சார்பில் கட்சிகள் விடுத்த அறிக்கைகள்தான்.

திராவிட இயக்கம் இவ்வாறு எழுத்தாளர்களை ஒருங்கு திரட்டியதில்லை. அவர்கள் ஓர் அமைப்பாகவும்  செயல்பட்டதில்லை. திராவிட இயக்கங்களில் ‘இலக்கிய அணி’கள் உண்டு . ஆனால் அவை பெரும்பாலும் குறுஅரசியல்வாதிகளால் ஆனவை. அவற்றில் முக்கியமான எழுத்தாளர்களை வரும் செயற்பட்டது இல்லை. ஒருவகையில் அவை பெரிய பதவிகள் அளிக்கப்படாத சிறிய அரசியல்வாதிகளுக்கான சிறிய களங்கள். ஏன் திமுக போன்ற இலக்கிய அணிகளில் எழுத்தாளர்கள் செயல்படவில்லை என்றால், திமுக போன்றவற்றின் இலக்கிய அணிகள் எழுத்தாளர்களை உள்ளே விடவில்லை என்பதுதான் பதில். அவ்வாறு ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால் உள்ளே செல்லக்கூடிய மனநிலைகொண்ட  சிறு எழுத்தாளர்கள் எல்லா காலகட்டத்திலும் இருந்தார்கள்.

இந்தச் சூழலுக்கு அப்பால் தனித்து நின்று, எழுத்தாளனாக மட்டுமே நிலைகொண்டு , இலக்கியம், அரசியல், பண்பாடு ஆகிய அனைத்தைப் பற்றியும் கருத்துக்களைச் சொல்லி வந்தவர் ஜெயகாந்தன் மட்டுமே. அவர் இடதுசாரி ஆதரவாளராக இருந்தபோதும் சரி, அதன் பிறகு காங்கிரஸ் ஆதரவாளராக மேடைகளில் நேரடியாக பிரச்சாரம் செய்த காலத்திலும் சரி, அதன்பிறகும் சரி எந்த அமைப்பிலும் சேரவில்லை; எப்போதும் கூட்டத்தில் ஒருவராக மட்டும் இருக்கவில்லை. எல்லா காலகட்டத்திலேயுமே அவருடைய கருத்துக்கள் அவருடையதாக மட்டுமே  இருந்தன. அவர் அவற்றை விளக்கினார், வாதாடினார். அவருடைய அரசியல் கருத்துக்களுக்கு மட்டுமே தமிழில் ‘எழுத்தாளரின் கருத்து’ என்ற அளவில் மக்களிடையே மதிப்பு இருந்தது. அவருடைய அரசியல் மேடைப்பேச்சைக் கேட்பதற்காக, அவருடைய தரப்பைத் தெரிந்து கொள்வதற்காக வாசகர்கள் அன்று முன்வந்தனர்.

எழுத்தாளர்கள் ஓர் அணியாக கருத்துக்களை தெரிவிக்கும்போது அது அந்தக் கட்சியின் கருத்தாக மட்டுமே கருதப்பட்டது. மூட்டைதூக்குவோர் அணி, ஆட்டோ ஓட்டுவோர் அணி போல அந்த கட்சிக்கு இருக்கும் பல அணிகளில் ஒன்று அந்த எழுத்தாளர் அணி என்று மட்டுமே கொள்ளப்பட்டது. எழுத்தாளர்களின் கருத்து என்ற தனி முக்கியத்துவம் எதுவும் அவற்றுக்கு அளிக்கப்பட்டதில்லை.

இணையம் உருவாகி, கருத்துக்கள் சொல்வதற்கான களம் அமைந்தபோது எழுத்தாளர் அனைவரிடமும்  கருத்துச் சொல்லும்படியான கட்டாயம் உருவாகியது. அரசியல் கருத்துக்களை சொல்லாதவர்கள் அரசியல் அற்றவர்கள், ஊமைகள் என்றெல்லாம் வசை பாடப்பட்டார்கள். அதை அந்த அழுத்தத்தை எதிர்கொண்ட ஒரு சிலர் கருத்துக்களைச் சொல்ல முன் வந்தார்கள். அப்போதுதான் அவர்களிடம் எதிர்பார்க்கப்பட்டது எழுத்தாளராக இருப்பது அல்ல என்றும், தொண்டராக மட்டுமே அவர்கள் எதிர்பார்க்கப்பட்டனர் என்றும் தெரியவந்தது.

எழுத்தாளர்கள் அரசியல் கருத்துக்களை சொல்ல முன்வந்த போது ஏற்கனவே இருந்து கொண்டிருக்கும் தரப்பினில் ஒன்றாக மட்டுமே அவர்கள் கருத்து சொல்ல வேண்டிய கட்டாயம் உருவாகியது .அவர்களுக்கான தனிக்கருத்து என்று ஒன்று இருக்க முடியாது, அப்படி இருப்பது என்பது ஒரு வகையான ஆணவம் என்று சொல்லப்பட்டது. ‘கருத்து சொல்ல எழுத்தாளர் யார்?’ என்ற மனநிலையும் ‘எழுத்தாளர் கருத்து சொல்லியே ஆக வேண்டும்’ என்ற கட்டாயமும் ஒரே சமயம் உருவாகியது. எழுத்தாளர்களை எதிர்கொண்டவர்கள் வாசகர்கள் அல்ல, கட்சிகளின் தொண்டர் மற்றும் குண்டர் அணிகள்.  ஆகவே எழுத்தாளர்கள் அணிசேர்ந்து மட்டுமே கருத்து சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. ‘கருத்து சொல்!’ என்பது நடைமுறையில் ‘ஏதேனும் ஓர் அணியில் தொண்டனாகச் சேர்ந்துகொள்!” என்றுதான் பொருள்படுகிறது.

இதை வலுவாக உணர்ந்தவர் சுந்தர ராமசாமி. சுந்தர ராமசாமி மிக அரிதாக சில அரசியல் கருத்துக்களை சொல்லி இருக்கிறார். உதாரணமாக, மகாமகப் படுகொலைகளின் போதும் ஜெயந்திரர் கைதின்போது அவருடைய கடுமையான கருத்துக்கள் வெளிவந்தன. ஆனால் அதை ஒட்டி அவருக்கு வந்து அழுத்தம் என்பது அனைத்து விஷயங்களை அவர் கருத்து சொல்ல வேண்டும் என்பது. ஆனால் எந்த கருத்துச் சொன்னாலும் அது ஏதேனும் கட்சியின் கருத்தாகவே எதிர்த்தரப்பால் கொள்ளப்பட்டது. எழுத்தாளரின் தனிப்பட்ட கருத்து, எழுத்தாளராக நின்று அவர் சொல்லும் கருத்து என்பதை அன்றுமின்றும் தமிழ்ச்சமூகம் புரிந்துகொள்ளவில்லை. தனிப்பட்ட கருத்து சொல்லும் உரிமை எழுத்தாளருக்கு கிடையாது என்றும், அவர் சொல்லும் கருத்து கட்சி, ஜாதி அல்லது மதம் சார்ந்து மட்டுமே இருக்க முடியும் என்ற வகையில் தொடர்ந்து அரசியல் சில்லறைகளின் எதிர்வினைகள் வந்தன.

அதேசமயம் கருத்து சொன்னால் உருவாகும் எதிர்ப்பை எழுத்தாளர் தனிமனிதராக நின்று சமாளிக்கவேண்டும். எழுத்தாளர் என்றவகையில் அவருக்கு எந்த மதிப்பும் இல்லை, ஆகவே அவர் மீது அரசோ தனிமனிதர்களோ ஏதேனும் தாக்குதல் நடத்தினால் எவரும் ஆதரவளிக்கமாட்டார்கள். அவர் இயல்புக்கு அவரால் கூட்டத்துடன் கொடிபிடித்து தலைமைவழிபாடு செய்ய முடியாது. அவர் அரசியல் அல்லக்கை ஆக முடியாது. தனியாகக் கருத்துசொன்னால் அரசியல் அல்லக்கைகளை தாங்கிக்கொள்ளவும் முடியவில்லை. தொடர்ந்து அவர் கருத்துக்களை சொல்வதை நிறுத்திக் கொண்டார். இந்த சிக்கல் இன்றைக்கு எழுத்தாளர்களுக்கு நீடிக்கிறது.

எழுத்தாளர் என்பவர் தன் எழுத்தால் ஓர் அடையாளத்தை ஈட்டிக்கொண்டவர். தன் எழுத்தை அவர் தனிமனிதராகவே முன்வைக்கிறார். அப்படியே அவற்றை வாசகன் வாசிக்கிறான். ஆகவே தன் கருத்துக்களையும் எழுத்தாளர் தனிமையாக நின்று தனித்து முன்வைப்பதே சரியானது, நேர்மையானது என்பதுதான் என் எண்ணம். அந்தக் கருத்துக்களுக்கு கூடுதலாக ஒரு விளக்கம் கேட்கப்பட்டால் அவர்தான் அதற்கு பதில் சொல்ல வேண்டியுள்ளது. ‘இந்த நிலைப்பாடை நீங்கள் ஏன் எடுத்தீர்கள்?’  ‘இதற்கு இன்னின்ன் மறுப்புகள் இருக்கின்றனவே?’ என்று அவருடைய வாசகர்கள் கேட்பதற்கு உரிமை உண்டு. அவர் அதற்கு விளக்கம் அளித்தாக வேண்டும். அவருடைய படைப்புலகு ஓர் விளக்கமாக இருக்கலாம். அவருடைய வாழ்க்கை விளக்கமாக அமையலாம். கூடுதலாக அவர் தன்  தர்க்கத்தையும் முன்வைக்கலாம். ஆனால் எழுத்தாளர்கள் கூட்டாக கருத்துக்களை முன்வைப்பார்கள் என்றால் அவற்றுக்கு  தனிப்பட்ட முறையில் அவர் பொறுப்பேற்பதில்லை என்றுதான் பொருள். அவரிடம் நாம் தனிப்பட்ட முறையில் கேட்பதற்கு ஏதும் இல்லை என  ஆகிறது.

கூட்டறிக்கைகளில் அந்த கூட்டமைப்பு தான் அக்கருத்துக்குப் பொறுப்பு. அதிலுள்ள ஒவ்வொரு வரிக்கும் அந்த எழுத்தாளர் பொறுப்பு அல்ல. பெரும்பாலான தருணங்களில் ஒரு அறிக்கை உருவாக்கப்பட்ட பிறகு தொலைபேசியில் அதில் கையெழுத்து போடுகிறீர்களா என்று கேட்கப்படும். அதற்கு மறுப்பு தெரிவிக்க முடியாமல் சரி என்று சொல்லி இவர்கள் அந்த பட்டியலில் எழுத்தாளர்கள் இணைந்து கொள்கிறார்கள். அதில் உள்ள எல்லா வரிகளையும் அறிந்திருப்பதுகூட இல்லை. ஆனால் எழுத்தாளர்கள் அந்த வரிகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று சூழலால் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இதுதான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது.

கூட்டாக எழுத்தாளர்கள் அறிக்கை விடுவது என்பது எழுத்தாளர் என்று அடையாளத்திற்கு எதிரான ஒரு செயல். ஆனால் மிக அரிதான தருணங்களில் அது நிகழலாம் என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக மானுடம் சார்ந்த ஒரு பிரச்சினை, ஒட்டுமொத்தமான ஒரு பெரும் அடக்குமுறை நிகழும்போது எழுத்தாளர்கள் அணிதிரளலாம். அரசியல்வாதிகள் ஒட்டுமொத்தமாக அமைதிகாக்கும்போது கருத்து சொல்லும் பொறுப்பை எழுத்தாளர்கள் ஏற்றுக்கொள்ளலாம். அரசியல்வாதிகள் எவரும் சொல்லாத ஒரு தரப்பைச் சொல்ல எழுத்தாளர்கள் கூட்டாக முன்வரலாம். அப்போது மட்டுமே எழுத்தாளர்களின் கருத்துக்கு தனி மதிப்பு உருவாகிறது. மற்றபடி ஒவ்வொரு அரசியல்நிகழ்வின்போதும் கட்சிகள் ஒருங்கிணைக்கும் அமைப்புகள் வழியாக எழுத்தாளர்களின் குரல் வெளிவந்தால் அதற்கு எந்த மதிப்பும் கிடையாது.

இப்போது எழுத்தாளர்கள் இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.இது எந்த கருத்து மாற்றத்தை உருவாக்கியது? இதை எவர் கவனித்திருக்கிறார்கள்? திமுகவுக்கு ஆதரவான அல்லது இடதுசாரிகளுக்கு ஆதரவான பல அறிக்கைகளில் ஒன்று இது என்று ம்ட்டுமே இது கருதப்படுகிறது. ஒரு சிறிய செய்திக்கு அப்பால் இதற்கு என்ன மதிப்பு? இவ்வாறு எழுத்தாளர்கள் தங்கள் முக்கியத்துவத்தை தாங்களே அழித்துக் கொள்வது என்பது எழுத்தை தோற்கடித்துக் கொள்வது என்றுதான் பொருள். அரசியலில் உள்ள நாலாம்நிலை அல்லக்கைகளின் நிலைக்கு தங்களை தாழ்த்திக்கொள்கிறார்கள் இவர்கள். ‘சரி, கூடவே அந்த எழுத்தாளனுங்களைக் கூப்பிட்டு ஒரு அறிக்கைய விடச்சொல்லு, எழுதி கையெழுத்து வாங்கிரு… அவனுகளுக்கு வேணுங்கிறத குடுத்திரு’ என்று ஒரு மாவட்டச்செயலாளர் ஆணையிடும் இடத்தில்தான் இந்த எழுத்தாளர் அணி இன்று தங்களை வைத்திருக்கிறது.

ஏற்கனவே பாரதிய ஜனதா இதே போன்ற ஒரு எழுத்தாளர் அணியை திரட்டி இருக்கிறது. அவர்களுக்கு காசி சங்கமம் போன்ற அமைப்புகளை உருவாக்கி சில வாய்ப்புகளையும் வழங்குகிறது. ஆனால் பாரதிய ஜனதாவின் மனநிலை என்பது அள்ளிக் கொடுக்கும் தன்மை கொண்டது அல்ல. எழுத்தாளர்கள் என்பவர்கள் அவர்களின்  உள்ளத்தில் மேலும் சிறியவர்கள். ஆகவே கிள்ளித்தான் கொடுக்கிறார்கள். முழுநேரமாக கட்சிக்காக குரல் கொடுத்து வந்த மாலன் முதல் அரவிந்த நீலகண்டன் வரையிலானவர்களுக்கு கட்சி அநேகமாக எதையுமே கொடுக்கவில்லை. அவர்கள் குரல் கொடுக்க மட்டும்தான் செய்கிறார்கள், காத்திருந்து ஏமாறுகிறார்கள். ஆனால் அவர்களும் திமுக போல் அள்ளிக் கொடுக்க ஆரம்பித்தால் அங்கும் ஒரு ஒரு பெரிய அணி உருவாகி இதேபோன்ற அறிக்கைகள் வரும். வெவ்வேறு கட்சி சார்பில் இவ்வாறு அறிக்கைகள் வரும் என்றால் அதில் உள்ள எழுத்தாளர்களுக்கு என்ன இடம் இருக்க முடியும்? ஒரு அடிமாட்டு தொண்டர்குழுமம், வேறென்ன?

இதில் இன்னொரு அபாயமும் உள்ளது. எழுத்தாளன் சாமானியன், நடுத்தரவர்க்கத்தினன், ஆதரவற்றவன். அவனிடம் ஓர் அரசியல் கட்சி, அதிலும் அதிகாரத்திலுள்ள கட்சி, இப்படி ஓர் அறிக்கையில் கையெழுத்து கேட்டால் அவனால் மறுக்கமுடியாது. கேட்பவர் அக்கட்சியின் ஒரு சிறு ஊழியராக இருப்பார். அவர் தனக்கு அக்கட்சியில் ஒரு கௌரவம் அமைவதற்காக அந்தச் செயலைச் செய்கிறார். ஒரு குழுவைத் திரட்டிக்காட்டுபவருக்கு அரசியல்கட்சிகளில் ஓர் இடம் அமைவதுண்டு, அதற்காக மட்டுமே இது செய்யப்படுகிறது. ஆனால் எழுத்தாளருக்கு இந்தச் சிறு கட்சி அல்லக்கையே மிகப்பெரிய ஆளுமை. அவரை பகைத்துக்கொள்ள எழுத்தாளரால் முடியாது.

இத்தகைய அறிக்கைகளில் இணைந்துகொள்பவர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்துக்குரிய அச்சத்தினால்தான் இந்த கையெழுத்திட ஒத்துக் கொள்கிறார்கள். அதை பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். சிலர் திமுக போன்ற கட்சிகள் அளிக்கும் எளிய சலுகைகளை விரும்புகிறார்கள். மறுத்தால் எந்தச் சலுகையும் பெற முடியாமல் ஆகிவிடும் என்று எண்ணுகிறார்கள். இந்தக் கையெழுத்திட்ட நபர்களை எளிய நடுத்தர வர்க்கத்தினர் என்று மட்டுமே கொள்ளவேண்டும், எழுத்தாளர் என்று அல்ல.

ஜெ.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 05, 2025 11:35

விஷ்ணுபுரம் விருந்தினர் – 6 – குணா கந்தசாமி

2025 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்படுகிறது. நிகழ்வு 20 மற்றும் 21 டிசம்பரில் நடைபெறும். அந்நிகழ்வில் வழக்கம்போல இலக்கியச் சந்திப்புகள் அமைகின்றன. இவ்வாண்டு எழுத்தாளர் குணா கந்தசாமி கலந்துகொள்கிறார்

குணா கந்தசாமி குணா கந்தசாமி குணா கந்தசாமி – தமிழ் விக்கி/* inline tdc_css att */.tdi_1{padding-top:12px !important;padding-bottom:8px !important;border-color:#eaeaea !important;border-style:solid !important;border-width: 1px 0px 1px 0px !important;}/* custom css */.tdi_1 .td_block_inner{
width: 100%;

margin-left: -20px;
margin-right: -20px;
}.tdi_1:after{
content: '';
display: table;
clear: both;
}.tdi_1 .td-image-wrap{
padding-bottom: 100%;
}.tdi_1 .entry-thumb{
background-position: center 50%;
}.tdi_1 .td-image-container{
flex: 0 0 30%;
width: 30%;

display: block; order: 0;
}.ie10 .tdi_1 .td-image-container,
.ie11 .tdi_1 .td-image-container{
flex: 0 0 auto;
}.tdi_1 .td-module-container{
flex-direction: row;

border-color: #eaeaea !important;
}.ie10 .tdi_1 .td-module-meta-info,
.ie11 .tdi_1 .td-module-meta-info{
flex: 1;
}.tdi_1 .td-module-meta-info{
padding: 1% 5%;

border-color: #eaeaea;
}.tdi_1 .td_module_wrap{
padding-left: 20px;
padding-right: 20px;

padding-bottom: 18px;
margin-bottom: 18px;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;

border-color: #eaeaea;
}.tdi_1 .entry-thumb,
.tdi_1 .entry-thumb:before,
.tdi_1 .entry-thumb:after{
border-radius: 500px;
}.tdi_1 .td-post-vid-time{
display: block;
}.tdi_1 .td-post-category:not(.td-post-extra-category){
display: none;
}.tdi_1 .td-author-photo .avatar{
width: 20px;
height: 20px;

margin-right: 6px;

border-radius: 50%;
}.tdi_1 .td-excerpt{
display: none;

column-count: 1;

column-gap: 48px;

font-size:= !important;
}.tdi_1 .td-audio-player{
opacity: 1;
visibility: visible;
height: auto;

font-size: 13px;
}.tdi_1 .td-read-more{
display: none;
}.tdi_1 .td-author-date{
display: none;
}.tdi_1 .td-post-author-name{
display: none;
}.tdi_1 .td-post-date,
.tdi_1 .td-post-author-name span{
display: none;
}.tdi_1 .entry-review-stars{
display: none;
}.tdi_1 .td-icon-star,
.tdi_1 .td-icon-star-empty,
.tdi_1 .td-icon-star-half{
font-size: 15px;
}.tdi_1 .td-module-comments{
display: none;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0;
padding-bottom: 0;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:21px !important;line-height:1.2 !important;
}html:not([class*='ie']) .tdi_1 .td-module-container:hover .entry-thumb:before{
opacity: 0;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}/* landscape */@media (min-width: 1019px) and (max-width: 1140px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;

padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:20px !important;line-height:1.2 !important;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}/* portrait */@media (min-width: 768px) and (max-width: 1018px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;

padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:17px !important;line-height:1.2 !important;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}/* phone */@media (max-width: 767px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;

padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}var block_tdi_1 = new tdBlock();block_tdi_1.id = "tdi_1";block_tdi_1.atts = '{"modules_on_row":"","limit":"10","hide_audio":"yes","show_btn":"none","show_excerpt":"none","show_review":"none","show_com":"none","show_date":"none","show_author":"none","image_floated":"float_left","sort":"oldest_posts","category_id":"11301","category_ids":"12659","image_width":"30","meta_padding":"1% 5%","modules_category":"","modules_category_margin":"","custom_title":"\u0bb5\u0bbf\u0bb7\u0bcd\u0ba3\u0bc1\u0baa\u0bc1\u0bb0\u0bae\u0bcd 2025 \u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba8\u0bcd\u0ba4\u0bbf\u0ba9\u0bb0\u0bcd\u0b95\u0bb3\u0bcd","custom_url":"\/tag\/2025-\u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba8\u0bcd\u0ba4\u0bbf\u0ba9\u0bb0\u0bcd\/","post_ids":"-222754","tdc_css":"eyJhbGwiOnsiYm9yZGVyLXRvcC13aWR0aCI6IjEiLCJib3JkZXItYm90dG9tLXdpZHRoIjoiMSIsInBhZGRpbmctdG9wIjoiMTIiLCJwYWRkaW5nLWJvdHRvbSI6IjgiLCJib3JkZXItY29sb3IiOiIjZWFlYWVhIiwiZGlzcGxheSI6IiJ9fQ==","show_cat":"none","excerpt_col":"","m16_el":"20","ajax_pagination":"load_more","f_title_font_size":"eyJhbGwiOiIyMSIsImxhbmRzY2FwZSI6IjIwIiwicG9ydHJhaXQiOiIxNyJ9","f_title_font_line_height":"1.2","f_ex_font_size":"=","f_ex_font_line_height":"","image_height":"100","hide_image":"","modules_gap":"","meta_info_horiz":"","container_width":"100","image_radius":"500","block_type":"td_flex_block_1","separator":"","block_template_id":"","title_tag":"","mc1_tl":"","mc1_title_tag":"","mc1_el":"","tag_slug":"","autors_id":"","installed_post_types":"","offset":"","show_modified_date":"","time_ago":"","time_ago_add_txt":"ago","time_ago_txt_pos":"","el_class":"","td_ajax_filter_type":"","td_ajax_filter_ids":"","td_filter_default_txt":"All","td_ajax_preloading":"","m_padding":"","all_modules_space":"36","modules_border_size":"","modules_border_style":"","modules_border_color":"#eaeaea","modules_border_radius":"","modules_divider":"","modules_divider_color":"#eaeaea","h_effect":"","image_size":"","image_alignment":"50","video_icon":"","video_popup":"yes","video_rec":"","spot_header":"","video_rec_title":"","video_rec_color":"","video_rec_disable":"","autoplay_vid":"yes","show_vid_t":"block","vid_t_margin":"","vid_t_padding":"","video_title_color":"","video_title_color_h":"","video_bg":"","video_overlay":"","vid_t_color":"","vid_t_bg_color":"","f_vid_title_font_header":"","f_vid_title_font_title":"Video pop-up article title","f_vid_title_font_settings":"","f_vid_title_font_family":"","f_vid_title_font_size":"","f_vid_title_font_line_height":"","f_vid_title_font_style":"","f_vid_title_font_weight":"","f_vid_title_font_transform":"","f_vid_title_font_spacing":"","f_vid_title_":"","f_vid_time_font_title":"Video duration text","f_vid_time_font_settings":"","f_vid_time_font_family":"","f_vid_time_font_size":"","f_vid_time_font_line_height":"","f_vid_time_font_style":"","f_vid_time_font_weight":"","f_vid_time_font_transform":"","f_vid_time_font_spacing":"","f_vid_time_":"","meta_info_align":"","meta_width":"","meta_margin":"","meta_space":"","art_title":"","art_btn":"","meta_info_border_size":"","meta_info_border_style":"","meta_info_border_color":"#eaeaea","meta_info_border_radius":"","modules_category_padding":"","modules_cat_border":"","modules_category_radius":"0","modules_extra_cat":"","author_photo":"","author_photo_size":"","author_photo_space":"","author_photo_radius":"","review_space":"","review_size":"2.5","review_distance":"","art_excerpt":"","excerpt_gap":"","excerpt_middle":"","excerpt_inline":"","show_audio":"block","art_audio":"","art_audio_size":"1.5","btn_title":"","btn_margin":"","btn_padding":"","btn_border_width":"","btn_radius":"","pag_space":"","pag_padding":"","pag_border_width":"","pag_border_radius":"","prev_tdicon":"","next_tdicon":"","pag_icons_size":"","f_header_font_header":"","f_header_font_title":"Block header","f_header_font_settings":"","f_header_font_family":"","f_header_font_size":"","f_header_font_line_height":"","f_header_font_style":"","f_header_font_weight":"","f_header_font_transform":"","f_header_font_spacing":"","f_header_":"","f_ajax_font_title":"Ajax categories","f_ajax_font_settings":"","f_ajax_font_family":"","f_ajax_font_size":"","f_ajax_font_line_height":"","f_ajax_font_style":"","f_ajax_font_weight":"","f_ajax_font_transform":"","f_ajax_font_spacing":"","f_ajax_":"","f_more_font_title":"Load more button","f_more_font_settings":"","f_more_font_family":"","f_more_font_size":"","f_more_font_line_height":"","f_more_font_style":"","f_more_font_weight":"","f_more_font_transform":"","f_more_font_spacing":"","f_more_":"","f_title_font_header":"","f_title_font_title":"Article title","f_title_font_settings":"","f_title_font_family":"","f_title_font_style":"","f_title_font_weight":"","f_title_font_transform":"","f_title_font_spacing":"","f_title_":"","f_cat_font_title":"Article category tag","f_cat_font_settings":"","f_cat_font_family":"","f_cat_font_size":"","f_cat_font_line_height":"","f_cat_font_style":"","f_cat_font_weight":"","f_cat_font_transform":"","f_cat_font_spacing":"","f_cat_":"","f_meta_font_title":"Article meta info","f_meta_font_settings":"","f_meta_font_family":"","f_meta_font_size":"","f_meta_font_line_height":"","f_meta_font_style":"","f_meta_font_weight":"","f_meta_font_transform":"","f_meta_font_spacing":"","f_meta_":"","f_ex_font_title":"Article excerpt","f_ex_font_settings":"","f_ex_font_family":"","f_ex_font_style":"","f_ex_font_weight":"","f_ex_font_transform":"","f_ex_font_spacing":"","f_ex_":"","f_btn_font_title":"Article read more button","f_btn_font_settings":"","f_btn_font_family":"","f_btn_font_size":"","f_btn_font_line_height":"","f_btn_font_style":"","f_btn_font_weight":"","f_btn_font_transform":"","f_btn_font_spacing":"","f_btn_":"","mix_color":"","mix_type":"","fe_brightness":"1","fe_contrast":"1","fe_saturate":"1","mix_color_h":"","mix_type_h":"","fe_brightness_h":"1","fe_contrast_h":"1","fe_saturate_h":"1","m_bg":"","color_overlay":"","shadow_shadow_header":"","shadow_shadow_title":"Module Shadow","shadow_shadow_size":"","shadow_shadow_offset_horizontal":"","shadow_shadow_offset_vertical":"","shadow_shadow_spread":"","shadow_shadow_color":"","title_txt":"","title_txt_hover":"","all_underline_height":"","all_underline_color":"","cat_bg":"","cat_bg_hover":"","cat_txt":"","cat_txt_hover":"","cat_border":"","cat_border_hover":"","meta_bg":"","author_txt":"","author_txt_hover":"","date_txt":"","ex_txt":"","com_bg":"","com_txt":"","rev_txt":"","audio_btn_color":"","audio_time_color":"","audio_bar_color":"","audio_bar_curr_color":"","shadow_m_shadow_header":"","shadow_m_shadow_title":"Meta info shadow","shadow_m_shadow_size":"","shadow_m_shadow_offset_horizontal":"","shadow_m_shadow_offset_vertical":"","shadow_m_shadow_spread":"","shadow_m_shadow_color":"","btn_bg":"","btn_bg_hover":"","btn_txt":"","btn_txt_hover":"","btn_border":"","btn_border_hover":"","pag_text":"","pag_h_text":"","pag_bg":"","pag_h_bg":"","pag_border":"","pag_h_border":"","ajax_pagination_infinite_stop":"","css":"","td_column_number":1,"header_color":"","color_preset":"","border_top":"","class":"tdi_1","tdc_css_class":"tdi_1","tdc_css_class_style":"tdi_1_rand_style"}';block_tdi_1.td_column_number = "1";block_tdi_1.block_type = "td_flex_block_1";block_tdi_1.post_count = "5";block_tdi_1.found_posts = "5";block_tdi_1.header_color = "";block_tdi_1.ajax_pagination_infinite_stop = "";block_tdi_1.max_num_pages = "1";tdBlocksArray.push(block_tdi_1);விஷ்ணுபுரம் 2025 விருந்தினர்கள்







விஷ்ணுபுரம் விருந்தினர் – 1 – மு. குலசேகரன்





















விஷ்ணுபுரம் விருந்தினர் – 2 – அரிசங்கர்





















விஷ்ணுபுரம் விருந்தினர் – 3 – கே. நல்லதம்பி





















விஷ்ணுபுரம் விருந்தினர் – 4 – ஜீவ கரிகாலன்





















விஷ்ணுபுரம் விருந்தினர் – 5 – அழிசி ஶ்ரீனிவாசன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 05, 2025 11:34

அடிப்படைப் பொதுநூல்கள்… கடிதம்

துறைசார் நூல்கள்

அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம். உங்கள் நலம் சிறக்க வாழ்த்துகள். தங்களுடைய இந்த கட்டுரை https://www.jeyamohan.in/87918/ ‘துறைசார் நூல்கள்‘ மே 28, 2016ல் வந்துள்ளது. அதைப் படித்துக் கொண்டிருந்த போது 1970களில் திமுக அரசு கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் முன்னெடுப்பில் கல்லூரி கல்வி சார்ந்து வெளியிடப்பட்ட நூல்கள் பிறகு நாப்பது ஆண்டுகளாக மறுபதிப்பு செய்யப்படவில்லை என்று சொல்லி இருக்கிறீர்கள். அந்த நூல்கள் எல்லாமே முக ஸ்டாலின் திமுக அரசு 2021ல் வந்ததில் இருந்து முழுவதுமாக எல்லா நூல்களுமே வெளியிடப்பட்டுள்ளது. விற்பனைக்கு உள்ளன. https://tntextbooksonline.com/product-category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/

 இந்த இணையத்தளத்தில் கிடைக்கிறது. சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் உள்ள நூலங்காடியிலும் நேரடியாக விற்பனைக்கும் உள்ளது. உங்கள் கட்டுரையை படித்தவுடன் இதை பகிர்ந்து கொள்ள தோன்றியது. நன்றி.

அன்புடன்,

அ.லவ்சன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 05, 2025 11:31

காவியம், எதிர்காவியம்- சுதா

அன்புள்ள ஜெ,

காவியம் நாவல் மொழி, சமூகவியல், குடும்பம், உளவியல், தத்துவம், பௌத்தம், சாதி, வரலாறு என்று பல தளங்களில் விரிந்து  செல்கிறது. வெளிவந்த முதல் சில நாட்கள் வாசிக்க முயன்று விட்டு விட்டேன். பிறகு என் அன்னை சொன்னதால் ஒரு நாள் (36 ஆம் அத்தியாயம்) வாசிக்க ஆரம்பித்தேன். அவர் எனக்கு அதுவரை கதையை  சுருக்கமாக சொன்னார். அன்று இரவே 11- 35  அத்தியாயங்களை வாசிக்கத்  துவங்கி இரண்டு நாட்களில்  முடித்தேன். காவியம் நாவலில் இருந்து நான் பெற்றவைகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கிட்டத்தட்ட எல்லாப்  புலன்களும் செயலிழந்து  எல்லா உறுப்புகளும் பயனற்ற  நிலையிலும்,  இலக்கியம் என்ற ஒன்றே ஒன்றின் துணையோடு தன் நிழல்களோடு  உரையாடி நாயகன் மீண்டு வருவது இந்த நாவலின் உச்சம் என்று கருதுகிறேன். ஏன் இலக்கியம் படிக்க வேண்டும் என்பதிற்கான பதில்.

சில நாட்களுக்கு முன்  நான் தமிழில்  ஒரு சிறு கட்டுரை எழுதினேன், அதை எழுதி முடிக்கும் வரை ஒவ்வொரு பத்தியாக பிரதி(பேக்கப்) எடுத்து கொண்டே இருந்தேன். எதாவது காரணத்தால் site  down  ஆகிவிட்டால் எல்லாம் மறைந்து விடுமே  என்ற பதட்டம் . மொத்தமே  4 மணி நேரம் செலவழித்த எனக்கு குணாட்யர் தன்  பெருங்கனவான   மாபெரும்  காவியத்தை எழுதியவுடன்  முழுவதுமாக நெருப்பிலிட்டு  எரித்துவிட்டார் என்று படித்த போது அவர் அப்போது எத்தனை கொந்தளிப்பான மனநிலையில் இருந்திருப்பார் என்று கற்பனை கூட செய்ய முடியவில்லை.

ஒரு சொல்லுக்காக  காவியத்தில் பல நாட்கள் காத்திருக்க நேரும். அந்த சரியான சொல் நம்முள் முளைப்பது  கடவுளின் சித்தம் . “மாதா பூமி புத்ரோஹம் ப்ருத்வ்யா:” ” ப்ருத்வ்யா:” – ஒரு சொல்லுக்காக காத்திருந்த நாயகனை போல.  அந்த சொல் கிடைக்காவிட்டால் காவியம் துவங்க முடியாது அதுபோல எத்தனை தருணங்கள் அந்த காவியத்தில். தன்னுடைய காவிய  படைப்பை நெருப்பிலிட்டு  அழிப்பது என்பது தனக்கு  அளித்துக்கொள்ளும் மிகக்  கொடூரமான தண்டனை.  அதன்பிறகு அந்த மஹாகவி  தன்னைத் தானே மாய்த்துக்  கொண்டதில் எந்த வியப்பும் இல்லை.  

காவியத்தில் துகாராமிக்கு நிகழ்வது   ஒரு  கொடூரமான அநியாயம்.  எந்த தவறும் செய்யாமல் ஒருவன் வாழ்க்கை பறிக்கப்பட்டு , தனக்குப்  பிரியமானவள் கண் முன் கொல்லப்பட்டு , தான்  முற்றிலுமாக  முடமாக்கப்பட்டு  வாழ்வதே நரகம் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட பின்னரும்  அதற்கு காரணமானவரை பழி தீர்க்க கொள்ளும் வஞ்சத்தை ஏன் விட வேண்டும்? எஞ்சி இருக்கும் அனைத்தாலும் பழி தீர்க்க நினைப்பது தானே இயல்பு. ஒரு மாபெரும் குற்றம்  நமக்கு  நேரும் போது அதற்கு பழி தீர்க்க வஞ்சம் எப்படி தவறாக முடியம?  நியாயம் நிலைநாட்டப்  படவேண்டாமா?  எந்த தர்க்கமும் இதன் முன் எடுபடாது. ஏன் என்றால் இங்கு நிகழ்ந்து இருப்பது அநீதி.  இந்த கேள்விகளுக்கு கானபூதியின்  பல கதைகள்  வாயிலாக இறுதியாக துக்காராம் கண்டுஅடைவது அமைதி!  அந்த  வஞ்சம் என்னும் தீ , சற்றே தணிவதையும் மன்னிப்பு மலர துவங்குவதையும்  ராம்சரண்  நாயக்கிடம் நிழல்  “அவனுக்கு உன்னை நன்றாகவே தெரிந்திருந்தது. அவன் அந்தக் கழியால் இரண்டுமுறை தரையைத் தட்டியிருந்தால் நீ அப்போதே பிடிபட்டிருப்பாய்”  என்று கூறுவதன் வாயிலாக அறியலாம். இந்த கோணத்தில் இருந்து பார்க்கும் பொழுது முதலில் “why  to let  go” என்பது புரிந்தால் மற்றவை தானே நிகழும்.   “இலக்கியம் கூறுவதற்காக உள்ள ஊடகமல்ல. தேடலுக்கான ஊடகம் அது. கூறும் உண்மைகள் ஏதும் எனக்கு ஒரு பொருட்டே அல்ல. அவர் நூல்களினூடாக நான் அடைந்தவையே எனக்கு முக்கியம்.” என்ற தங்களின்  வரிகள்  விளங்கிற்று. 

“அவன் தன்னைத் தானே முடிவுசெய்துகொண்டவன்” கானபூதியின்   இந்த வரிகளை இப்பொழுதெல்லாம் அடிக்கடி நினைவுகூருகிறேன் . நீண்ட நாட்களாக என் மனதில் “How to  Let  Go ?” என்ற கேள்வி இருந்தது. “To err is human; to forgive, divine.” இது போல் பல நல்ல மேற்கோள்கள்  உள்ளன.  பல SelfHelp புத்தகங்கள் உள்ளன இந்த தலைப்பில். படிப்பதற்கு  நன்றாக  இருந்தாலும் என்னுள்  எந்த உணர்ச்சி மோதல்களோ  கொப்பளிப்போ ஏற்படுத்துவதில்லை. ஆழ்ந்த மாற்றம் நம்மிடம் வரவேண்டுமென்றால் ஒரு மானுட நாடகம் அவசியம்.  நேரடி   அனுபவம் என்பதைத்  தாண்டி இலக்கியம் வாயிலாகவே   அத்தகைய பல அனுபவங்கள் என்னைப்போன்ற  பலருக்கு  சாத்தியமாகிறது. 

“தன் குழந்தைகளுக்காக நீதியைக் கைவிடும் தாய் வேறொன்றுக்காகத் தன் குழந்தைகளையும் கைவிடுவாள். எந்நிலையிலும் நீதிக்காக நிலைகொள்பவளாக ருக்மிணி இருந்திருந்தால் ராதிகா கொல்லப்பட்டிருக்க மாட்டாள்,” அன்னையாக இருந்தாலும் தன மகனை காப்பாற்ற சமநிலை தவறுவது சரியல்ல. அதை சமப்படுத்த செயல்கள் நிகழும்.   நீதி பாரபட்சமற்றது. தவறிய  சமநிலையை சீர் செய்ய ஒரு சந்தர்ப்பம் மீண்டும் வரும் . ஆனால் அதை புரிந்து கொள்ள கடவுள் அருள் தேவை. நல்லவராக இருந்தாலும்   ஒருவர் சறுக்க நேர்வது இந்த இடத்தில தான்.  தங்கள் “கைமுக்கு” கதை நினைவுக்கு வந்தது. 

“ஒருவன் இன்னொரு உயிரைவிட தன்னை எவ்வகையிலேனும் மேலானவன் என்று ஒரு கணம் எண்ணினால் அகங்காரம் என்னும் பெரும்பழியால் அவன் ஞானத்தில் இருந்தும் நிர்வாணத்தில் இருந்தும் நூறுகாதம் பின்னால் செல்கிறான்.”

காவியம் சாதிமேட்டிமைக்கு எதிராக தங்கள் குரல். 100 நாற்காலிகளின்  மற்றோர் வடிவம். காவியம் உயர்மட்டம் என்று எண்ணுவோரின் கீழ்மைகளையும்,  அவர்கள் செல்வத்தையும் , அதை அடைய அவர்கள் கொடுத்த விலைகள், அதன் விளைவுகள், அந்த கீழ்மை எண்ணங்கள் எவ்வாறு உருவாகிறது என்ற உளவியல் சிக்கல்களையும்  பல சன்னதிகள் தாண்டி தொடரரும் அதன் தாக்கம்  என்று ஒரு complete  picture காட்டுகிறது. ரிஷிமூலம் நதிமூலம் பார்த்தால்   பிறப்பால் நாம் உயர்ந்தவர் என்று நினைப்பவர் பற்றி பல  அதிர்ச்சியான உண்மைகள் வெளியாகிறது. ஒரு மொத்த வரலாறும் காலம் தாண்டி நிற்கும்  கானபூதி வாயிலாக தெரிவதால்  இவர்கள் இவ்வளவு கீழானவராக  இருந்தாலும், பாவம் அவர்கள் என்ன செய்வார்கள். அவர்களை மீறிய ஒன்று அவர்களை இவ்வாறு  செயல் பட வைக்கிறது . இது ஒரு chain reaction  என்று ஒரு கருணை ஏற்படுகிறது. 

இதை தாண்டி வைக்கப்படும் முக்கியமான கேள்வி – குணாட்டியருக்கு தன்  காவியத்தை  அழிக்கும் உரிமை இருந்ததா? அவ்வளவு  மகத்தான படைப்பின் மூலம் (Source) என்பது யார்? அவரையும்  மீறிய  ஒரு படைப்புத்  தெய்வம் அல்லவா?  குணாட்டியர்  அந்த ப்ரம்மாண்டத்தின்  கருவி மட்டுமே. அந்த தெய்வம்  தேவைப்பட்டால் ஒரு காளிதாசனையோ காளமேகத்தையையோ உருவாக்க முடியும் தானே?  ஆகவே அழிக்கும் அச்செயல் ஒரு வித அகந்தையா? அதன் பலனாக அவர் இந்த பிறவியில் மாபெரும் கவிஞனாக ஆகும் பொருட்டே பிறந்த துகாராமாக காவியத்தை துவங்க முற்பட்டு “நான் எழுதி முடித்துவிட்டேன்” என்று செல்கிறார் .  வால்மீகியும் வியாசனும் உக்ரசிரவஸும் குணாட்யரும் கம்பனும் வள்ளுவனும அந்த கண்ணுக்கு புலப்படாத  மஹத்தின்  ஒரு சிறு சாதனம் தான் என்பது எவ்வளவு humbling truth.  வெண்முரசு முடித்தபின்னர் அதிலிருந்து வெளியே  வர முடிவதற்கு  உதவியதும் இந்த புரிதல் தானோ? இறுதியாக துகாராம் அதை கடந்து புன்னகையோடு தவழ்ந்து செல்வது  தான் யார் என்றும் தன்  பிறவியின் நோக்கம் என்ன என்றும் உணர்ந்த மிக அழகான தருணம்! இதை படித்த பொது  வெகு நேரம் கண்ணீர்விட்டுக்கொண்டிருந்தேன்.

முடிவாக, கூப்பிய கைகளுடனும்  ஞானத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பகதி குறித்து 

“அவள் எப்போது ஞானம் அடைவாள்?” என்றார்.

“அவளிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லாமல் ஆகும்போது” என்று ததாகதர் சொன்னார்.”

நாற்பதாண்டுகள்  ஆராய்ச்சி, மேற்கொண்ட பயணங்கள், அனுபவங்கள், குருவின் கருணை,  தரவுகள்,  தரிசணங்கள் அனைத்தின் சாரத்தையும் எல்லாருக்கும் பகிர்ந்து அளித்த  தங்கள் பேரன்புக்கும்  பெருங்கருணைக்கு மிக்க நன்றி! 

நன்றியுடன் 

சுதா 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 05, 2025 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.