துறைசார் நூல்கள்
அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம். உங்கள் நலம் சிறக்க வாழ்த்துகள். தங்களுடைய இந்த கட்டுரை https://www.jeyamohan.in/87918/ ‘துறைசார் நூல்கள்‘ மே 28, 2016ல் வந்துள்ளது. அதைப் படித்துக் கொண்டிருந்த போது 1970களில் திமுக அரசு கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் முன்னெடுப்பில் கல்லூரி கல்வி சார்ந்து வெளியிடப்பட்ட நூல்கள் பிறகு நாப்பது ஆண்டுகளாக மறுபதிப்பு செய்யப்படவில்லை என்று சொல்லி இருக்கிறீர்கள். அந்த நூல்கள் எல்லாமே முக ஸ்டாலின் திமுக அரசு 2021ல் வந்ததில் இருந்து முழுவதுமாக எல்லா நூல்களுமே வெளியிடப்பட்டுள்ளது. விற்பனைக்கு உள்ளன. https://tntextbooksonline.com/product-category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/
இந்த இணையத்தளத்தில் கிடைக்கிறது. சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் உள்ள நூலங்காடியிலும் நேரடியாக விற்பனைக்கும் உள்ளது. உங்கள் கட்டுரையை படித்தவுடன் இதை பகிர்ந்து கொள்ள தோன்றியது. நன்றி.
அன்புடன்,
அ.லவ்சன்.
Published on October 05, 2025 11:31