Jeyamohan's Blog, page 107

May 17, 2025

இஸ்லாமிய தத்துவம் – சூஃபி மரபு வகுப்புகள்

நிஷா மன்ஸூர் நடத்தும் இஸ்லாமிய தத்துவம் – சூபி மரபு பற்றிய வகுப்புகள் மீண்டும் நிகழ்கின்றன. ஏற்கனவே நிகழ்ந்த இவ்வகுப்புகள் முற்றிலும் புதிய ஓர் ஆன்மிக உலகைத் திறந்தன என்று பங்கேற்றவர்கள் கூறினார்கள்.

இரண்டு வகைகளில் இந்த வகுப்புகள் முக்கியமானவை. இவை இந்தியாவின் பண்பாட்டை முழுமையாக உணர்வதற்கு இன்றியமையாதவை. கலை இலக்கியம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர்கள் கற்றே ஆகவேண்டிய வரலாற்று- ஞானப் பரப்பு இது. இஸ்லாமின் மெய்யியல், சூஃபிகள் இந்தியாவில் அதை நிலைநிறுத்திய வரலாறு, சூபி மரபின் உள்ளடக்கம் ஆகியவற்றை அறியாமல் ஒருவர் இந்திய இலக்கியம், இந்தியக் கலை, இந்திய இசை ஆகியவற்றை அறிந்தார் என்று சொல்ல முடியாது.

சென்ற ஆயிரமாண்டுகளாக இஸ்லாமின் ஆன்மிகமரபும் சூஃபி மெய்யியலும் இந்தியாவின் எல்லா மெய்ஞான மரபுகளிலும் செல்வாக்கு செலுத்தியுள்ளன. ராமகிருஷ்ண பரமஹம்சர் முதல் நாராயண குரு வரை பிற மரபுகளைச் சேர்ந்த ஞானிகள் கூட அதன் ஒளியை பெற்றுக்கொண்டவர்கள். இந்திய மெய்ஞான மரபின் சாரத்தை அகத்தே உணரவிரும்புபவர்களுக்கு அவசியமான வகுப்புகள் இவை.

நாள் ஜூலை4,5 மற்றும் 6 

programsvishnupuram@gmail.com

சமப்பார்வையை உருவாக்கிவிட முடியுமா? இஸ்லாம் ஒரு கடிதம் சூஃபி தரிசனம்- கடிதம் இஸ்லாம் கடிதம் இஸ்லாம் கடிதம் அறிவிக்கப்பட்ட வகுப்புகள்- இடமிருப்பவைபௌத்த தியானம்- விபாசனா தொடக்கப் பயிற்சி 

வி.அமலன் ஸ்டேன்லி கவிஞர், நாவலாசிரியர். தொழில்முறையில் அறிவியல் ஆய்வாளர். பௌத்த தியானம் மற்றும் மெய்யியலில் முறையான பயிற்சி கொண்டவர். அவர் நடத்திய பௌத்த மெய்யியல் – விபாசனா வகுப்பு பங்கேற்பாளர்களுக்கு மிகப்பெரிய தொடக்கமாக அமைந்தது என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.  முதல் வகுப்பு சென்ற ஜூலை முதல் வாரம் நிகழ்ந்தது, விரைவிலேயே அதன் இடங்கள் நிறைவுற்றமையால் மீண்டும் அடுத்த வகுப்புகள் அறிவிக்கப்படுகின்றன.

2005-ல் கோயங்கா தியானப் பயிற்சியோடு பௌத்த ஆய்வுப்பயணத்தை தொடங்கிய வி.அமலன் ஸ்டேன்லி போதி ஜென்டோவில் ஜென் பயிற்சி பெற்றார். 2008-ல் ஜென் துறவி திக் நாட் ஹஞ் அவர்களிடம் நேரடிப் பயிற்சியை வியட்நாமில் பெற்றுக் கொண்டார்.2010-ல் மூன்று வருடங்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து பாட்ரிக் கீர்னி எனும் விபசனா ஆசிரியரை கொடைக்கானலில் உள்ள போதி ஜென்டோ மையத்திற்குத்  தொடர்ந்து அழைத்து வந்து கற்றுக்கொண்டார். அவரிடம் தொடர்ந்து தவ முகாம் நடத்தவும் கற்றுக்கொண்டார். 2013-ல் சோகிஈமா ரின்போசே மூலம் திபெத்திய மகாமுத்ரா, ட்சோக்சென் பயிற்சி பெற்றார்.

இரண்டரை ஆண்டு அகவிழிப்புத் தியானப்பயிற்சி ஆசிரியராக The Awareness Training Institute and the Greater Good Science Center at the University of California மையத்தால் பயிற்சியும் சான்றும் (MMTCP) பெற்றுக் கொண்டார்

யோகமரபின் தொடக்கம் எது என நமக்குத் தெரியாது. சாங்கிய தரிசனத்தின் ஒரு கிளையாக அது பதஞ்சலியால் வரையறை செய்யப்பட்டது. பின்னர் சமண மதத்தில் வளர்ச்சி அடைந்தது. அதை முழுவிரிவை அடையச்செய்தவர்கள் பௌத்தர்கள். பௌத்த யோகாசார மரபே தியானம் என்பதற்கான இன்றைய அர்த்ததை உருவாக்கியது. அசங்கர், வசுபந்து, திக்நாகர், நாகார்ஜுனர், தர்மகீர்த்தி, தர்மசேனர், தர்மபாலர் என அதன் ஆசிரியர் மரபு மிக விரிவானது. போதிதர்மர் வழியாக சீனாவுக்குச் சென்று அங்கிருந்து ஜப்பான் சென்று ஜென் பௌத்தம் ஆகியது. பத்மசம்பவர் வழியாக திபெத் சென்று திபெத்திய பௌத்தமாக ஆகியது. திபெத்திய பௌத்தம் வஜ்ராயனம் எனப்படுகிறது.

பௌத்தம் வளர்த்தெடுத்த யோகாசார மரபு இந்தியாவில் பெரும்பாலும் மறைந்துவிட்டது, அதன் அடிப்படைகள் சில வேறுவகையில் நீடிக்கின்றன. பௌத்த தியான – மெய்யியல் மரபை அது இங்கிருந்து சென்று வளர்ந்து பேருருவம் கொண்டிருக்கும் திபெத், ஜப்பான், தாய்லாந்து பௌத்த மரபுகளிடமிருந்தே நாம் கற்கமுடிகிறது. இப்பயிற்சி அதற்கான முயற்சி.

செப்டெம்பர்

ஜூன்27, 28 மற்றும் 29  (வெள்ளி சனி ஞாயிறு)

தொடர்புக்கு programsvishnupuram@gmail.com

விபாசனா, கடிதம்

பௌத்தம்,விபாசனா- கடிதம்

வீடும் வகுப்பும், கடிதம்

அறிவிக்கப்பட்ட பயிற்சிகள்- இடமிருப்பவை

தியானம்- உளக்குவிப்புப் பயிற்சி, இரண்டாம்நிலை

தில்லை செந்தில் பிரபு நடத்தும் தியானம் – உளக்குவிப்புப் பயிற்சிகள் இன்றைய தலைமுறையில் தங்கள் அன்றாட வாழ்க்கையிலும் தொழிலிலும் கவனம்குவிக்கமுடியாத அகச்சிதறல் கொண்டவர்களுக்கும், மெய்யியல் நோக்கில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விழைபவர்களுக்குமாக குறிப்பாக வடிவமைக்கப்பட்டவை. நவீன முறையைச் சேர்ந்தவை.  தில்லை இந்த தியானப்பயிற்சியை வெவ்வேறு புகழ்பெற்ற அமைப்புகளைச் சார்ந்து சென்ற 20 ஆண்டுகளாக அளித்து வருபவர். பல்லாயிரம் மாணவர்கள் அவருக்கு உள்ளனர். இந்த பயிற்சி அவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியுள்ளது.

இது மதம்சார்ந்த பயிற்சி அல்ல, இந்து பௌத்த மரபுகளில் இருந்து உருவானது எனினும். ஒருவர் தன் அகத்தை திரும்பி நோக்கவும், அதன் கட்டற்ற பாய்ச்சலை புரிந்துகொள்ளவும், அதை தனக்கேற்றவகையில் பழக்கிக்கொள்ளவும் உதவும் முறைமைகள் இவை. தொன்மையானவை, நவீனப்படுத்தப்பட்டவை.

முந்தைய தியான வகுப்புகளில் கலந்துகொண்டவர்களுக்கான இரண்டாவது நிலை தியான வகுப்பு இது. தில்லை செந்தில் பிரபு பிற இடங்களில் நடத்திய தியான வகுப்புகளில் கலந்துகொண்டவர்களும் இதில் கலந்துகொள்ளலாம்.

முந்தைய வகுப்பு உளக்குவிப்பு – கவனக்கூர்மைக்கான முதல்நிலை பயிற்சிகள் அடங்கியது. இப்பயிற்சி அதன் இரண்டாம் நிலை. அகத்தை கட்டுப்படுத்தி செயலில் ஈடுபடுத்துவதற்கான கூடுதல் செயல்முறைகள் கொண்டது. வெவ்வேறு செயற்களங்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இது  மிக உதவியானது.

நாள் ஜூன் 6 7 மற்றும் 8

programsvishnupuram@gmail.com

வைணவ இலக்கியம்

ஜா.ராஜகோபாலன் மீண்டும் ஒரு வைணவ இலக்கிய அறிமுக வகுப்பை நடத்துகிறார்.

வைணவ இலக்கிய அறிமுகம் என்பது ஆழ்வார் பாடல்களின் கவித்துவத்திற்குள் உணர்ச்சிகரமாகச் செல்லும் ஓர் அனுபவப் பயிற்சிதான். வைணவ இலக்கியங்களின் மொழி ஆயிரமாண்டு தொன்மையானது. ஆகவே ஓர் ஆசிரியரின் உதவி அவற்றைக் கற்றுக்கொள்ள தேவையாகிறது. அவற்றின் தத்துவப்பின்புலத்தை உணர்வதற்கும் வழிகாட்டுதல் தேவை. அந்த வழிகாட்டுதலுடன் கூட்டாக அமர்ந்து கற்பதென்பது மிகத்தீவிரமான ஓர் உணர்வுநிலையை உருவாக்கும். ஒரு வகுப்பில் நாம் கற்றுக்கொள்ளும் வைணவ இலக்கியத்தை பல ஆண்டுகள் நூல்கள் வழியாகக் கற்கமுடியாது.

வைணவ இலக்கிய அறிமுகம் என்பது ஒரு பக்கம் பக்தி என்னும் உணர்வின் வெளிப்பாடு. இன்னொரு பக்கம் தூய தமிழ் அனுபவம். தமிழ்மரபை அறிய விரும்பும் எவரும் தவிர்க்கமுடியாத ஒன்று.

நாள் மே 30 31 ஜூன் 1

programsvishnupuram@gmail.com

நாலாயிரம் கடிதம் பிரபந்த வகுப்பு கடிதம்

பிரபந்தம், கடிதம்

பிரபந்தக் கல்வி, கடிதம் நாலாயிரம் கடிதம் பிரபந்தம், கடிதம் கண்ணனை அறிதல், கடிதம் வைணவம் கல்வி பிரபந்த வகுப்பு கடிதம் வைணவத்தை அறிதல் வருமாறு ஒன்றில்லையேல்… வரவிருக்கும் நிகழ்ச்சிகள்

யோகப்பயிற்சி.தொடக்கநிலை.

பிகார் சத்யானந்த குருமரபின் முதன்மை ஆசிரியர் (குரு) ஆக 26 ஏப்ரல் 2025 அன்று அறிவிக்கப்பட்ட நால்வரில் ஒருவர் குரு. சௌந்தர். இருபதாண்டுகளுக்கும் மேலாக சௌந்தரின் யோகப்பயிற்சிகள் இந்தியாவிலும், இலங்கை மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் நடந்து வருகிறன. ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் வாழ்க்கையின் திருப்புமுனை என்று கருதும் பயிற்சிகள் அவை.

அன்றாடவாழ்க்கையில் கவனக்குறைவு, பொறுமையின்மை, பதற்றம் போன்ற அகப்பிரச்ச்னைகளுக்கும்; முதுகுவலி, கழுத்துவலி, உடல்சோர்வு போன்ற பலவகையான புறப்பிரச்சினைகளுக்கும் ஒருங்கிணைந்த தீர்வாக அமைவது முறையான யோகப்பயிற்சி. யோக ஆசிரியர் யோகமுறைகளைப் பயிற்றுநர் என்பதுடன் வாழ்க்கை முழுக்க துணைவராக நம்மைக் கண்காணித்து, உடன் வருபவராகவும் அமையவேண்டும். சௌந்தர் அத்தகைய ஆசிரியர்.

நான்காண்டுகளாக நிகழும் இந்த வகுப்புகளில் ஏற்கனவே ஐநூறு பேருக்குமேல் முழுமையறிவு வகுப்புகள் வழியாக சௌந்தரிடம் பயின்றுள்ளனர்.

நாள் ஜூலை 11, 12, 13

ஜூலை 10 ஆம் தேதி குருபூர்ணிமா (வியாசபூர்ணிமா) நித்யவனத்தில் கொண்டாடப்படுகிறது. வெண்முரசு – மகாபாரத நாளாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. சௌந்தர் முன்னின்று நடத்துவார். யோகப்பயிற்சிக்கு வருபவர்கள் ஒருநாள் முன்னதாக வந்தால் அந்நிகழ்விலும் கலந்துகொள்ளலாம்

குருபூர்ணிமா நிகழ்வில் மட்டும் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தனியாக எழுதலாம்)

programsvishnupuram@gmail.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 17, 2025 18:59

இஸ்லாமிய தத்துவம் நமக்கு அந்நியமானதா?

தமிழ்ச்சூழலில் இஸ்லாம் ஒரு பிரிக்கமுடியாத பண்பாட்டுப் பகுதியாக மாறி ஆயிரமாண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்று வரை இந்துவாகிய ஓர் இஸ்லாமிய அறிஞர் உருவானதில்லை. மாறாக இஸ்லாமிய பின்னணியைச் சேர்ந்த பல இந்துஞானப் பேரறிஞர்கள் உண்டு. இந்த விலக்கம் மிகத்தீர்மானமாக தமிழுள்ளத்தில் உள்ளது. அதை மறைக்கவே இங்கே பொதுவாக முற்போக்கு, தாராளவாத, இஸ்லாமிய நட்புப் பாவனைகள் போடப்படுகின்றன. இச்சூழலில் இஸ்லாமிய மெய்யியலை பொதுவாக அனைவருக்குமாக அறிமுகம் செய்யும் ஒரு வகுப்பு என்பது புயலில் ஒரு சிறு சுடரைக் கொண்டு செல்வதுபோல. ஆனால் அப்படி ஒரு முயற்சி இருந்தேயாகவேண்டும்.

இஸ்லாமிய தத்துவ வகுப்புகள்

நாள் ஜூலை4,5 மற்றும் 6 

programsvishnupuram@gmail.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 17, 2025 11:36

‘டம்மி வாசகன்’

அன்புள்ள ஜெ

ஓர் உரையாடலில் ‘டம்மி’ வாசகன் என்னும் சொல்லைப் பயன்படுத்தினீர்கள். அந்தச் சொல் என்னை தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறது. நான் ஒரு டம்மி வாசகன் தானா? அப்படி ஆகாமலிருக்க என்ன செய்யவேண்டும்? இலக்கியம் வாசிப்பதே ஒரு தகுதி என நினைத்துக் கொண்டிருந்தேன். அதில் ஈடுபட்டு வாழ்க்கையைச் செலவழித்து ஒரு டம்மி ஆக மாறுவதென்பது பெரிய வீணடிப்பு. அதை விளக்கவேண்டும் என கோருகிறேன். வேடிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

சரவணன் குமரேசன்

*

அன்புள்ள சரவணன்,

இத்தகைய சொற்களைப் பயன்படுத்துவது, சொல்லப்படுவது கூர்மையாக நினைவில் தங்கவேண்டும் என்பதற்காகவே. இது ஒன்றும் இலக்கியக் கலைச்சொல் அல்ல, இப்படி ஒரு கருதுகோளும் இல்லை. ஆனால் புகழ்பெற்ற பல கலைச்சொற்கள் இப்படி கேலியாகவோ, கண்டனமாகவோ உருவாக்கப்பட்டு, நீடிப்பவைதான்.

போலிவாசகன் என்று ஒருவன் உண்டு. அவன் பொதுவாக வாசிப்பதில்லை. வாசிப்பில் நுழைந்த காலத்தில் மிகக்குறைவாக வாசித்திருப்பான். ஒட்டுமொத்தமாக ஒரு சித்திரத்தை ஆங்காங்கே கேள்விப்பட்டும், இலக்கியப்பூசல்கள் வழியாக அறிந்தும் இருப்பான். ஒவ்வொரு ஆசிரியர் பற்றியும், நூல் பற்றியும் ஓரிரு வரி கருத்துக்களை உருவாக்கி வைத்திருப்பான்.

இந்தக் கருத்துக்கள் பொதுவாக ஒரு சூழலில் புழங்கும் எதிர்மறைக் கருத்துக்களாகவே இருக்கும். ஏனென்றால் ஒரு சூழலில் கூடுதல் உக்கிரமாகச் செயல்படுபவர்கள் எதிர்மறை மனநிலை கொண்டவர்கள். தளராமல் அவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். அவதூறுகளை, முத்திரைகுத்தல்களைப் பரப்பிக்கொண்டே இருப்பார்கள். வெறுப்பும் காழ்ப்பும் அளிக்கும் ஆற்றல் அத்தகையது.

கூடவே அவர்கள் பெரும்பாலும் ஏதேனும் அரசியல் தரப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஆகவே கும்பலாகக் கூடிச் செயல்படுவார்கள். அமைப்பு அளிக்கும் வசதிகளும் உண்டு. ஆகவே அவர்கள் பெரிய பிரச்சார சக்திகள். போலிவாசகன் இந்த பிரச்சாரக் கருத்துக்களை அரைகுறையாகச் செவியில் வாங்கி, தானே வந்தடைந்த முடிவு போல தன்னம்பிக்கையுடன் சொல்லிக்கொண்டிருப்பான்.

இலக்கியம் என்பது எவ்வளவு நுணுக்கமானது, உள்ளோட்டங்கள் கொண்டது என்று இவனுக்குத் தெரியாதாகையால் போலிவாசகன் தன்னம்பிக்கையுடனும் அலட்சியத்துடனும் கருத்துக்களை உதிர்ப்பான்.

இவனைப் போன்றவர்கள் சமூகவலைத்தளச் சூழல் அமைந்தபின் பெருகிவிட்டனர். சமூக வலைத்தளச்சூழல், இணையத்தேடல் வசதி எவர் பற்றியும் எது பற்றியும் பொத்தாம் பொதுவானதும், அதிகம் பிரச்சாரம் செய்யப்படுவதுமான கருத்துக்களைக் கொண்டுவந்து தருகிறது.

டம்மி வாசகன் வேறுவகை. இவன் வாசிக்கக்கூடியவன். சிலசமயம் நிறையவே வாசிப்பான். ஆனால் எந்தப் படைப்புக்குள்ளும் நுழைய முடியாதவன். எந்தக் கருத்தையும் உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றல் அற்றவன். காற்றாலை ஓடுவதுபோல இவன் செயல்பட்டுக்கொண்டே இருப்பான். செயல்படச்செய்வது காற்றுதான், சூழல்தான். இவன் செயல் இவன் கையில் இல்லை.

இவனுடைய வாசிப்பு மண்புழு உணவுண்பதுபோல நடந்துகொண்டே இருக்கும். ஐந்து கிராம் எடையுள்ள ஒரு மண்புழு ஒரு நாளுக்கு சராசரியாக இரண்டு கிலோ மண்ணை உண்கிறது. அதற்குக் கிடைக்கும் சத்து அரை கிராமுக்கும் கீழேதான்.

இத்தகையோர் வாசிப்புச் சூழலில் அறியப்பட்டவர்களாக இருப்பார்கள். புதியதாக வரும் வாசகர்களுக்குத் திகைப்பை அளிப்பார்கள். ’எவ்வளவு வாசிக்கிறார்’ என்று மிரளச்செய்வார்கள். ஆனால் நாமே கொஞ்சம் தீவிரமாக வாசித்து, வாசித்ததை உள்வாங்க ஆரம்பிக்கும்போது இவர்களை வியப்புடனும் பரிதாபத்துடனும் பார்க்க ஆரம்பிப்போம்.

இவர்களின் இயல்புகளுக்குச் சில பொதுவான அடையாளங்களை மட்டும் சொல்கிறேன்.

1. படைப்புகளை பொத்தாம் பொதுவாக, மேலோட்டமாக ஒப்பிடுவார்கள். இவர்களின் இலக்கியப் புரிதல் என்பது நினைவுத்திறன் சார்ந்த இந்த தொகுப்பு மட்டும்தான். ’இந்த நாவலிலே அருவி வருது… க எழுதின அந்த நாவலிலேயும் அருவிதான். ரெண்டும் ஒண்ணு மாதிரி’ என்பார்கள். தனக்கு நினைவு வருவதே ஓர் இணைப்பு என்பார்கள். ‘சாப்பாடு பத்தி ச எழுதினதை வாசிச்சா சாப்பாடு பத்தி க எழுதினது மாதிரி இருக்கு’

இலக்கியத்தின் பேசுபொருட்கள் பெரும்பாலும் ஒன்றே. வெளிப்பாட்டின் அழகியலும், அதனூடாக அடையப்படும் தரிசனமும்தான் வேறுபாடு என்பது இவர்களால் புரிந்துகொள்ளவே முடியாது.

2. இலக்கியப் படைப்பில் ’கதைச் சுவாரசியம்’ தவிர எதுவுமே பிடிபடாது. எந்த நாவலையும் ‘நல்ல கதை’ என்பார்கள். இவர்களை அடையாளம் காண மிகச்சிறந்த வரி இவர்கள் சொல்வதுதான். ‘பாதி வாசிக்கிறப்பவே கதை முடிவு தெரிஞ்சிட்டுது…’

முடிவைக்கொண்டு திகைக்கவைப்பது இலக்கியத்தின் வழி அல்ல. முடிவு ஒரு கதையை மேலும் முன்னெடுத்துச் செல்வதுதான். வாழ்க்கையை அணுக்கமாக எழுதும் கதைகள் பொதுவாக திகைக்கச்செய்யும் முடிவுகளை முன்வைக்காது. ஏனென்றால் அக்கதைகள் கதைவிளையாட்டு அல்ல. வாழ்க்கையில் அந்த முடிவுகள் ஏற்கனவே ஏதோ ஒரு வடிவில் எப்போதும் இருப்பதனால் முற்றிலும் வாசகனுக்குத் தெரியாத ஒரு முடிவு நல்ல கதைகளில் அமையவும் முடியாது.

3. ஒரு படைப்பு உணர்த்தும் கருத்துக்குச் செல்லவே மாட்டார்கள். அப்படைப்பில் நேரடியாகப் பேசப்படும் எதுவோ ஒன்றுதான் அது சொல்ல வருவது என எடுத்துக்கொள்வார்கள். பலசமயம் வரிகளை அடிக்கோடிட்டு எடுத்துச் சொல்வார்கள்.

படைப்பில் பல கருத்துக்கள் நேரடியாகக் பேசப்படலாம், அவை படைப்பின் கருத்தாக அமையவேண்டும் என்பதில்லை. பேசப்படும் பல கருத்துக்களின் முரணியக்கமாக வாசகன் சென்றடையவேண்டிய ஒன்றுதான் அப்படைப்பின் தரப்பாக இருக்கும்.

4. ஓர் இலக்கியப் படைப்பை வாசித்து உள்வாங்க இவர்களால் முடியாது. அதை அந்த ஆசிரியனின் ஓரு ‘கருத்துரையாக’ எடுத்துக் கொள்வார்கள். இலக்கியப்படைப்பு என்பது பலவகையான குரல்கள், பலவகையான கதாபாத்திரங்கள் முரண்பட்டு இயங்கும் ஒரு தளம் என்பதே தெரிந்திருக்காது. அந்த ஆசிரியன் பேசும் கருத்து என்ன என்பதை பொதுவெளியில் அவனைப்பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதில் இருந்து புரிந்து வைத்திருப்பார்கள். ஆசிரியனின் பேச்சும் அவன் எழுதும் புனைவும் ஒன்றே அல்ல என்ற எளிய விஷயமே பிடிகிடைத்திருக்காது. எந்தக் கதையையும் அதில் என்னதான் பேசப்பட்டிருந்தாலும் ஒரேமாதிரி தங்கள் அரைகுறைப் புரிதலை அதில் ஏற்றி விளங்கிக்கொள்வார்கள்.

உதாரணமாக, நூறு நாற்காலிகள் கதையை இப்படி வாசித்த ஒரு மண்புழு அது இந்துத்துவக் கருத்தையும் சாதிமேலாதிக்கப்பார்வையையும் ‘புகுத்தி’ எழுதப்பட்டது என புரிந்துகொண்டது. அது நேர் எதிரான குரலை உக்கிரமாக வெளிப்படுத்தும் படைப்பு என அதற்கு பிடிகிடைக்கவில்லை. அந்தப்படைப்பில் அது எங்கே இருக்கிறது? இருக்கத்தானே வேண்டும்? எழுதியவர் அப்படி என்றுதானே ’எல்லாரும்’ சொல்கிறார்கள்? 

5. இலக்கியப் படைப்பில் அங்கதமாகவோ, ‘எதிர்மறைக்கு எதிர்மறை’ என்னும் வகையில் (வக்ரோக்தி)யாகவோ சொல்லப்பட்டிருக்கும் எதையும் டம்மியால் புரிந்துகொள்ள முடியாது. எல்லாமே நேரடிக் கருத்துத்தான் அதற்கு.

உதாரணமாக, பத்துலட்சம் காலடிகள் கதையில் அதன் கதைநாயகனாகிய ஔசேப்பச்சன் சொல்லும் ஒரு வரி. ‘அழகு என்பது (அதாவது அப்படி இங்கே உயர்சாதியினர் நினைப்பது) இனக்கலவையால் வந்தது. ஏனென்றால் உயர்சாதியினர்தான் பிறருடன் அதிகமாகக் கலந்து பழகியவர்கள். அந்த அழகு என்பது சாதிப்படிநிலைகளில் கீழே செல்லக் குறையும்’ என்கிறான்.

அது அவனுடைய கூர்மையான சாதிய விமர்சனம். உயர்சாதியினர் சொல்லிக்கொள்ளும் ரத்தத்தூய்மை என்பது எவ்வளவு கேலிக்குரியது என்று அவன் உத்தேசிக்கிறான். எல்லா கதைகளிலும் அவன் பார்வை சாதிமேட்டிமைக்கு எதிரான நையாண்டிதான்.

உண்மையில் அது ஒரு தலித் பார்வையிலான குரல். ஆனால் இங்குள்ள டம்மிகள் ‘சாதியில் கீழே உள்ளவர்கள் அழகற்றவர்கள் என்று ஜெயமோகன் சொல்கிறார். இது சாதிமேட்டிமைத்தனம்’ என்று கூவ ஆரம்பித்தனர். தமிழிலக்கிய வரலாற்றில் டம்மி வாசிப்புக்கு முதன்மையான உதார்ணநிகழ்வு இதுதான்.

6. ஒரு படைப்பில் ஒரு கதாபாத்திரம் சொல்லும் வரி, அந்தக் கதாபாத்திரத்தின் குணாதிசயம் மற்றும் அது என்ன வகையில் காட்டப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்தே பொருள்கொள்ளப்படவேண்டும். டம்மிகளுக்கு அது எப்போதுமே ஆசிரியரின் கருத்துதான்.

விஷ்ணுபுரம் நாவலில் எல்லா கருத்தும் எங்காவது மறுக்கப்பட்டிருக்கும். ஆனால் டம்மிகள் அதில் ஒரு வரியை ஆசிரியரின் தரப்பாக எடுத்துக் கொள்வார்கள்.

7. இலக்கியப் படைப்பைப் பற்றி விமர்சனமாக அழகியல் சார்ந்தோ, அதன் தரிசனம் சாந்ந்தோ எதுவுமே சொல்லமுடியாதவர்கள் இவர்கள். ஆகவே இரண்டு எதிர்விமர்சனங்களையே முன்வைப்பார்கள். ஒன்று, சில தகவல்கள் சரியில்லை. இரண்டு அந்தப் பார்வையுடன் உடன்பாடில்லை. அந்த தகவல்களை நம்பமுடியவில்லை என்பது மூன்றாவது.

ஓர் இலக்கியப்படைப்பு வாசகனுக்கு ஓர் உலகை உருவாக்கிக் காட்ட மட்டுமே தகவல்களைப் பயன்படுத்துகிறது. அதன் புனைவுலகமே அதன் கொடை. அத்துடன் வாசகன் அனைத்துத் தகவல்களையும் அறிந்தவனாக இருக்கவேண்டியதில்லை. அவனுக்குத் தெரியாத எல்லாமே பிழை அல்ல. வாசகனின் சிற்றறிவில் ஏற்கனவே ஏற்கப்பட்டுள்ள கருத்தை ஒரு படைப்பு சொல்லவேண்டும் என்றில்லை. அப்படிச் சொல்வது அசட்டுப்படைப்புதான்.

8. தான் ஏற்கனவே வாசித்தவற்றை நோக்கி புதியதாக வாசிக்கும் ஒவ்வொன்றையும் இழுத்துச் செல்லுதல் டம்மி வாசகனின் இயல்பு. பாராட்டாகவும் அதைச் செய்வான். நிராகரிப்பாகவும் அதையே செய்வான். ‘என்ன இருந்தாலும் தி.ஜா மாதிரி வருமா?’ ‘தி.ஜா மாதிரியே இருக்கு’ இரண்டுமே அபத்தமானதுதான்

ஓர் ஆக்கம் ஏற்கனவே வாசகன் கொண்டிருக்கும் எதிர்பார்ப்பை உடைத்து, அவனை புதிய இடத்திற்குக் கொண்டுசென்றால் மட்டுமே அது இலக்கியப்படைப்பு. வணிக எழுத்து வாசகனின் எதிர்பார்ப்பை நிறைவுசெய்தபடியே செல்லும். அதுவே சுவாரசியமான எழுத்து. ஆனால் அது வாசகனை வளர்ப்பதில்லை. உதாரணம், கல்கி அல்லது சுஜாதாவின் எழுத்து.

இலக்கிய ஆக்கம் வாசகனின் எதிர்பார்ப்பை சிதறடிக்கும். ஆகவே பலசமயம் வாசகன் ஓர் இலக்கிய ஆக்கத்திற்குள் நுழையவே முடியாது. அவன் தன் எதிர்பார்ப்புகளை துறந்து புதிய உள்ளத்துடன் முயன்று உள்நுழைந்தாகவேண்டும். வாசித்துச் செல்லும்போதே பலசமயம் இலக்கிய ஆக்கம் வாசகனைக் கைவிட்டுவிடும். அவன் மேலே தொடரமுடியாது. வாசகன் முயன்று தன்னை மாற்றிக்கொண்டுதான் அதைத் தொடரவேண்டியிருக்கும். ஆனால் இந்த மாற்றங்கள் எல்லாமே உண்மையில் வாசகனின் அகவளர்ச்சிதான். அந்த வளர்ச்சியை அளிப்பதே இலக்கியத்தின் நோக்கம்.

9. டம்மி வாசகனால் ஒரு விவாதத்தின் ஒட்டுமொத்தத்தை உள்வாங்க முடியாது. உதிரிக் கருத்துக்களை மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும். அதை மேற்கோளாகக் காட்டிக்கொண்டிருப்பான். பொதுவாக சூழலிலுள்ள சராசரிக் கருத்தையே அவனும் பெற்றுக்கொண்டிருப்பான்.

இலக்கிய, தத்துவச் சூழலில் கருத்துக்களுக்கு மதிப்பில்லை. கருத்துக்களை ஒன்றோடொன்று இணைத்தும், எதிரெதிராகப் பின்னியும் உருவாக்கப்படும் தரிசனங்களுக்கு மட்டுமே மதிப்பு. அவை எப்போதும் அறுதியான கருத்துக்கள் அல்லது நிலைபாடுகள் அல்ல. அவை வாசகன் தன் நோக்கில் மேலும் விரிவாக்கப்படவேண்டிய கருக்கள்.

*

டம்மி வாசகனாக ’ஆக’ எவராலும் முடியாது. ஏனென்றால் டம்மி வாசகர்கள் அப்படியே பிறக்கிறார்கள். குறைவான அறிவுத்திறன், குறைவான கற்பனைத்திறனே அவர்களை உருவாக்குகிறது. அவர்களை நல்ல வாசகர்கள் ஆக்கமுடியாது. அதேபோல கூர்ந்து வாசிப்பவன் டம்மி வாசகன் ஆக மாறுவதுமில்லை.

நல்ல வாசிப்பு என்பது மூன்று அடிப்படைகள் கொண்டது.

அ. இலக்கியம் என்பது நிகர்வாழ்க்கை. அந்த வாழ்க்கையை இலக்கியப்படைப்பின் வழியாக கற்பனை செய்து கொள்வது வாசகனின் கடமை. தன் வாழ்க்கையை அந்த கற்பனைவாழ்க்கையுடன் இணைத்து விரிவாக்குவதே அவன் செய்யவேண்டிய வாசிப்பு.

ஆ. எப்போதுமே இலக்கியப்படைப்பை நோக்கி முன்னகர்ந்துகொண்டே இருக்கவேண்டும். இலக்கியப்படைப்பை தன் எளிய அறிவு நோக்கி, தன் நிலைபாடு நோக்கி இழுக்கக் கூடாது. இலக்கியவாதியை மதிப்பிடவும் திருத்தியமைப்பதற்கும் முயலும் அசட்டுத்தனம் வரக்கூடாது.

இ. இலக்கியத்தை தொடர்ச்சியாக அறிந்துகொண்டே இருக்கவேண்டும். எங்கும் நின்றுவிடக்கூடாது

உ. இலக்கியம் சார்ந்து எந்த மதிப்பீடும், கருத்தும் சொந்தமாக அடையப்பெற்றதாக இருக்கவேண்டும் என்ற உறுதி தேவை. சூழலில் இருந்து கிடைக்கும் பொதுவான கருத்து எதுவானாலும் அது மொக்கை அரசியலாளர்கள் உருவாக்கிச் சுழலவிடும் அவதூறும் திரிபுமே என்னும் புரிதல் வேண்டும்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 17, 2025 11:35

தூ.ப.ரகுபதி

தூ.ப. ரகுபதி, நாடகத்துறை சார்ந்து நடிகர். நாடக ஆசிரியர், நாடகப் பயிற்றுநர் மற்றும் இயக்குநர் எனப் பல களங்களில் பணியாற்றியவராக அறியப்படுகிறார்.

தூ.ப.ரகுபதி தூ.ப.ரகுபதி தூ.ப.ரகுபதி – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 17, 2025 11:33

காவியம் – 27

யட்சன் யட்சி, மென்கல்செதுக்கு, சாதவாகனர் காலம் பொமு2ச்

கானபூதி என்னும் கதை சொல்லும் பிசாசு என்னிடம் சொன்னது. “நண்பனே, கதைகளை மூன்றுவகை மனிதர்களிடம் சொல்லக்கூடாது. கதைகளை வெறும் பொழுதுபோக்காக எடுத்துக் கொள்பவர்கள். கதைகளின் மேல் எளிய தர்க்கத்தைப் போட்டுப்பார்ப்பவர்கள். மூன்றாவதாக கதைகள் வெறும் கதைகளே என எண்ணுபவர்கள்.”

“ஆம், நான் காவிய மாணவன், எனக்குத் தெரியும்” என்று நான் சொன்னேன்.

“இது வெறும் கதைசொல்லுதல் அல்ல. இங்கே நாம் கதைகளைச் சொல்லும்போது மானுட வாழ்க்கைகளை கட்டமைக்கிறோம், திருத்தியமைக்கிறோம், சிதறடிக்கவும் திரட்டவும் செய்கிறோம். வரலாற்றை உருவாக்கியும் மாற்றியும் முன்செல்கிறோம். துயரங்களையும், அச்சங்களையும், பதற்றங்களையும் நம்மால் உண்டுபண்ண முடியும். இன்பத்திளைப்பையும் பரவசத்தின் அமைதியையும் உருவாக்க முடியும்.” கானபூதி தொடர்ந்து சொன்னது.

“இது ஒரு சூதாட்டம் என்று கொள். சூதாட்டம் என்பது விளையாட்டுபோலத் தோன்றும். ஆனால் அது மானுடவாழ்விலுள்ள புரிந்துகொள்ளவே முடியாத ஒன்றையே உண்மையில் கையாள்கிறது. அடுத்த கணம் என்ன நிகழ்கிறது என்று நம்மால் அறியமுடியாது, அது ஒட்டுமொத்தப் பிரபஞ்ச நிகழ்வுடன் தொடர்புகொண்டுள்ளது என்ற விந்தைதான் அது. கதைகளும் அவ்வாறே. இவை விளையாட்டு எனத் தோன்றும். ஆனால் மானுட உள்ளம் என்னும் முடிவிலா சாத்தியக்கூறும் மானுட உறவுகள் என்னும் முடிவிலா சாத்தியக்கூறும் ஒன்றையொன்று சந்திக்கும் புள்ளிகள் வழியாகவே வாழ்க்கை நிகழ்கிறது. ஆனால் மெய்யான வாழ்க்கையில் நிகழ்காலம் என்னும் மாயையால் அந்த பயமுறுத்தும் பேருருவம் நமக்குத் தெரியாமல் ஆகிவிடுகிறது. கதைகள் முக்காலத்திலும் நிகழ்கின்றன, காலமில்லாதவையாக நீடிக்கின்றன. ஆகவே அவை அந்த அடியில்லா ஆழத்தை அவை முன்வைக்கின்றன”

கானபூதியின் சொற்கள் சொல்லிச் சொல்லித் தேர்ந்த கதைசொல்லிக்குரிய துல்லியம் கொண்டிருந்தன.

”என் நண்பனே, எந்தக்கதையிலும் இயல்பாகத் திரண்டு வரும் ஒரு கேள்வி உண்டு. அதுவே அதன் மையம். கதையில் அதற்குப் பதில் இருக்க முடியாது. கதைகேட்பவனே அதற்குப் பதிலைச் சொல்ல முடியும். ஆனால் அந்தப்பதிலை கதை ஏற்றுக்கொள்ளவும் வேண்டும்” என்றது கானபூதி. “என் கதையின் கேள்விக்கு நீ பதில் சொன்னாய், அதை கதை ஒப்புக்கொண்டது. ஆகவே என்னிடம் ஒரு கேள்வியை கேட்கும் உரிமையை நீ பெற்றாய். உன் கேள்விக்கு நான் கதையாகவே பதில் சொல்ல முடியும்”

கதைசொல்லியான பிசாசு சொன்னது “கேள், கதை எப்போதும் நிகழ்காலத்தில் நடக்கிறது. ஆனால் அது இறந்த காலத்திலோ எதிர்காலத்திலோ உண்மையென்று நிகழ்வதும் கூட. இறந்தகாலத்தில் நிகழ்வது நிகழ்காலத்தில் நினைவு கூரப்படுகிறது. எதிர்காலத்தில் நிகழ்வதோ நிகழ்காலத்தில் முன்னுரைக்கப்படுகிறது. என் சொற்கள் ஒவ்வொன்றும் முற்றிலும் உண்மை என்பதனால் இங்கு நான் சொல்லும் ஒரு கதை அது நேற்று நிகழ்ந்தது, அல்லது நாளை அவ்வண்ணமே நிகழும். இருவகையிலும் அது முடிந்துவிட்ட நிகழ்வுதான்”

“கதையின் வழியாக என்னால் எதையும் நிகழச்செய்ய முடியும் என்று நீ அறிந்திருக்கிறாய். உன் கேள்வியினூடாக உன்னுடைய நோக்கங்களை நிறைவேற்றுகிறாய். ஆனால் எனக்கு வேறு வழியில்லை. இந்தக்  கதையாடலில்  உன்னை நான் சிக்க வைத்திருப்பது போலவே என்னையும் நீ சிக்கவைத்து விட்டாய். நல்லது, இணையான ஆற்றல் கொண்ட ஒருவருடன் ஆடுவதே இனிய விளையாட்டாக இருக்கமுடியும். இந்த ஆட்டத்தினூடாக நான் விடுதலை பெற முடியும் என்ற எண்ணமும் எனக்கு உருவாகியிருக்கிறது. அது நிகழட்டும்” கானபூதி சொன்னது.

“இந்தக் கதைகளினூடாக நான் செல்லும் இடமென்ன என்றெனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு கதையிலும் ஒரு கட்டவிழ்வதை உணர்கிறேன். ஒவ்வொரு கதையும் என்னிடமிருந்து எடையுடன் நழுவி அகல்வதை அறிகிறேன். அதன் பொருட்டு உன்னை  மகிழ்வுடன் தழுவிக்கொள்கிறேன். நீ என் இனிய மாணவனும் கூட உனக்கு மகிழ்ச்சியும் நிறைவும் அமைக” என்ற பின் கானபூதி என்னும் கதைசொல்லும் பிசாசு கதைசொல்லத் தொடங்கியது.

இளம் நண்பனே, நான் இப்போது பாட்னாவில் தேஷ்பாண்டே குடும்பத்தினரின் மாளிகையைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். பாட்னாவில் ஜௌகஞ்ச் என்னும் இந்தப் பகுதி உயர்குடிகள் வாழ்வது. தக்த் ஸ்ரீ ஹர்மந்திர் சாகிப் என்னும் குருத்வாராவின் அருகே இருக்கும் பாரே கி கலி என்னும் அகலமான தெருவில் தேஷ்பாண்டே குடும்பத்தினர் வாழும் இல்லம் நூறு ஆண்டுகளுக்கு முன் பெரிய தேஷ்பாண்டே எனப்படும் ஃபணீந்திரநாத் தேஷ்பாண்டே கட்டியது. பாட்னாவில் அன்று அவர் புகழ்பெற்ற வட்டித்தொழில் செய்பவராக இருந்தார். 

ஃபணீந்திரநாத் தேஷ்பாண்டே பாட்னாவுக்கு வருவதற்கு முன்பு வங்காளத்தில் வாடியா ராஜ் என்னும் ஜமீந்தாரி பகுதியின் ஆட்சியாளராக இருந்த திக்பிஜய்சந்த் மஹ்தாப் என்பவரின் அவையில் ஜோதிடராகவும் அவைப்புலவராகவும் இருந்தார். அவருக்கு அப்போது அங்கு ஒரு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருந்தார்கள். அவருடைய முன்னோர் ஏழு தலைமுறைக் காலத்திற்கும் மேலாக அங்கேயே அரசரின் ஆதரவில் வாழ்ந்தவர்கள். அதற்கு முன்பு அவர்கள் காசியில் இருந்து வந்தவர்கள் என்று ஒரு பேச்சு உண்டு. வங்காளத்தின் எல்லா பிராமணர்களும் காசியில் இருந்து வந்ததாகச் சொல்லிக்கொள்வார்கள். 

வாடியா ராஜ் ஜமீன்தார் ஒவ்வொரு நாளும் நோயிலும் தனிமையிலும் துயருற்று வந்தார். அவருடைய நிலம் பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கீழே இருந்தது. முடிவுகளை அனைத்தையும் அவர்களே எடுத்தனர். மகாராஜாதிராஜா பகதூர் என்னும் பட்டம் இருந்தாலும், மக்களால் அரசர் என அழைக்கப்பட்டாலும் அவருக்கு ஆட்சியில் எந்த உரிமையும் இருக்கவில்லை. எந்தச் சிறு முடிவையும் அவர்கள் எடுக்க முடியவில்லை, திவானையோ, பேஷ்காரையோ நியமிப்பதும் நீக்குவதும் தண்டிப்பதும்கூட பிரிட்டிஷ் அதிகாரிகளால்தான் முடிவெடுக்கமுடியும். 

ஆனால் ஆட்சி செய்கிறோம் என்ற தோற்றத்தை மட்டும் அவர்கள் மக்களுக்கு அளித்தாகவேண்டும். மக்கள் தங்களை ஆள்பவர்கள் அவர்கள்தான் என்ற எண்ணத்தை அடைந்தாகவேண்டும். அதபொருட்டே அவர்கள் அமரச் செய்யப் பட்டிருந்தனர்  ’பாவைக்கூத்தில் கிரீடத்துடன் வந்து நின்றிருக்கும் பாவைஅரசன் நான்’ என்று அரசர் திக்பிஜய்சந்த் மஹ்தாப் சொல்வதுண்டு. ’என் மேல் கட்டப்பட்ட சரடுகளில் அசைக்கும் விரல்களே இங்கு அனைத்தும் நிகழ்த்துகின்றன. எனக்கு வேடமிடவும் தோற்றமளிக்கவுமே உரிமை உள்ளது. பாவை என்றேனும் தன்னை அரசன் என்று எண்ணிக்கொண்டால் விரல்களின் அசைவுக்கு அப்பால் எதையேனும் செய்ய நினைத்தால் அக்கணமே அது முறிய நேரிடும்.’

இளமையிலேயே அதை உணர்ந்த பின்னர்தான் அவர் பட்டத்துக்கு வந்தாரென்றாலும், ஒவ்வொரு நாளும் அதைத் திரும்பத் திரும்ப தனக்கே சொல்லிக்கொண்டாலும், மாதத்திற்கு இருமுறையேனும் அவர் அவமதிப்பை அடைந்தார். துயருற்று தனிமையில் சரிந்து கண்ணீர் விட்டார். ஏனெனில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஒருவருக்கு அவருடைய இடத்தை மிகச்சரியாக அடையாளம் காட்டுபவை அவமதிப்புகளே என்று எண்ணினார்கள். அதன் வழியாகவே ஒருபோதும் அவர் தனக்களிக்கப்பட்ட எல்லையை மீறலாகாது என்ற ஆணையை அளிக்கமுடியும் என்று ஓர் ஆட்சியாளர் இன்னொரு ஆட்சியாளருக்குச் சொல்லிவிட்டு சென்றனர். அவமதிப்பைப் பற்றிய அச்சத்தால்தான் அவர்கள் அரசர்களை கைகால்களை கட்டி தங்கள் காலடியில் போட்டிருந்தனர். ‘இந்த மாபெரும் தேசத்தை நாம் ஆயுதங்களால் ஆளவில்லை, அச்சத்தால் ஆள்கிறோம்’ என்பது ஒவ்வொரு கவர்னரும் கலெக்டரும் தன் வாரிசுக்குச் சொல்லும் வரி. அவமதிப்பு பற்றிய அச்சமே அச்சங்களில் தலையாயது.

ஆகவே துல்லியமான அவமதிப்புகளை அரசர்களுக்கும் அதிகாரிகளுக்கும் செல்வந்தர்களுக்கும் அவர்கள் அளித்தபடியே இருந்தனர். மிகச்சிறிய அவமதிப்புகள். பூமுள் போல மலருக்குள்தான் எப்போதும் அவை இருந்தன. அவை மலரை நோக்கி புன்னகையுடன் கைநீட்டும்போது மட்டுமே குத்துபவை என்பதனால் மிக ஆழ்ந்த வலியை அளிப்பவை. குத்துப்பட்டவர் தவிர  எவருக்குமே அந்த வலி தெரியாது. மிக அந்தரங்கமாக வைத்திருக்க வேண்டும் என்பதனாலேயே அவை தொடர்ந்து வளர்ந்து பெருகுபவை. மருந்தோ மறுசெயலோ அவற்றுக்கில்லை என்பதனாலேயே மிகக் கொடியவை.

பிரித்தானியரான ஒரு ராணுவ காப்டன் அரசருக்கு விரல் சுட்டி ஆணையிடமுடியும். உடனே தன்னை அவர் ஒரு ராணுவ காப்டனுக்கு ஒரு படி கீழானவர், அதுதான் தன் இடம் என்று நினைத்துக்கொண்டால் அடுத்த முறை ஒரு லெப்டினெண்ட் அவருக்கு ஆணையிடுவான். அடுத்ததாக ஒரு செகண்ட் லெப்டினென்ட் கூட ஆணையிட முடியும். எந்த ஆணையை மீறலாம், எவரைவிட ஓர் இந்திய அரசர் மேலானவர் என்பது அதிகார அடுக்கில் வரையறை செய்யப்படவே இல்லை.

மனமுடைந்திருந்த மகாராஜா திக்பிஜய்சந்த் மஹ்தாப்புக்கு ஆறுதலையும் சிறிதளவேனும் மகிழ்ச்சியையும் அளித்துக்கொண்டிருந்தவை சோதிட அவைகளும் கவிஞர் அவைகளும்தான்.  சோதிட அவைகள் திரும்பத் திரும்ப அவருக்கு எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கையை அளித்துக்கொண்டே இருந்தன. ஒவ்வொரு நாளும் எவ்வாறு வருங்காலம் நன்கு விடியப்போகிறதென்று சோதிடர்கள் கணித்துக்கூறினர். ஒரே கனவை திரும்பத் திரும்ப நுண்ணிய மாறுதல்களுடன் முன்வைத்தனர். இன்னும் சில காலம், இன்னும் சில பருவங்கள், இன்னும் ஓரிரு சிறு  துயரங்கள்; அதன் பின் விடியும், புதிய ஒளி கிளம்பி வரும். கவிஞர்கள் அவரது இறந்த காலத்தை அவ்வாறே ஒவ்வொரு புனைந்து அவருக்கு அளித்தனர் அவருடைய தலைமுறைகளின் வெற்றி, அவர்கள் அடைந்த புகழ். அவர்கள் செய்த அறங்கள் நுகர்ந்த சோகங்கள். அவர்கள் நின்றிருக்கும் வரலாற்றுக்களங்கள். அவர்களுக்கு அருளிய தெய்வங்கள்.

ஒவ்வொன்றும் புனைவென்று ஒவ்வொருவரும் அறிந்திருந்த போதிலும் கூட புனைவுகள் தங்களைத் தாங்களே நிறுவிக்கொள்ளும் தன்மை உடையவை என்பதனால் அவை உண்மையாயின. உண்மைக்கு தேவைப்படும் நிரூபணங்கள் எதுவுமே புனைவுக்கு தேவைப்படுவதில்லை. புனைவின் தர்க்கம் முற்றிலும் வேறுபட்டதனால் தகவல்களைக் கொண்டு புனைவை மறுக்க முடிவதில்லை. அந்த ஒரு வசதியினாலேயே புனைவு என்பது உண்மைகளைக் கடந்து வேறொரு உண்மையாக தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறது. ஏனெனில் புனைவின் வேர் கற்பனையில் உள்ளது. அதற்கு உண்மை ஒரு பொருட்டல்ல. ஆனால் அதன் அடிமரமும் கிளைகளும் இலைத்தழைப்பும் புறவயமான உண்மை திகழும் அதே களத்திலேயே தாங்களும் நின்றிருக்கின்றன. உண்மையின் அதே வடிவையே அவையும் கொண்டிருக்கின்றன. உண்மையை விட அதிகமாக பூத்து குலுங்குகின்றன. கனிந்து பரவுகின்றன.

அரசரின் ஒரே மகன் ரண்பீர்சந்த் மஹ்தாப் லண்டனுக்கு அனுப்பி படிக்க வைக்கப்பட்டார். தன் மகன் தன்னைப் போல எழுதப்படிக்கத் தெரியாதவராக இருக்கக் கூடாது என்றும், அவன் உலகை அறிந்திருக்க வேண்டும் என்றும், தன் சிறு ஆட்சிப்பரப்பின் அன்றாடச் சடங்குகளின் வட்டங்களிலிருந்து அவன் விடுபடவேண்டும் என்றும் அரசர் எண்ணினார். அவனை பாட்னாவிலும் அதன்பின் காசி வித்யாபீடத்திலும் படிக்க வைத்தபிறகு அங்கிருந்து லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரிக்கு அனுப்பினார். அங்கிருந்து Inner Temple சட்டக்கல்லூரியில் பாரிஸ்டர் படிப்புக்குச் சேர்ந்தார். காந்தி பயின்ற அதே பள்ளி.

காசி வித்யாபீடம் வரை ரண்பீர்சந்த் ஓர் அரசகுமாரனாக இருந்தார். அங்கே ஒவ்வொருவரும் அவரை இளவரசரென அறிந்திருந்தனர். அதற்கான மரியாதைகளை அளித்தனர். உபசாரச் சொற்களை ஒவ்வொருமுறையும் கூறினர். இளமையிலிருந்தே அவர் அந்த மதிப்பிலும் உபசரிப்பிலும் வாழ்ந்தமையால் அவை தனக்களிக்கப்படும் சிறப்புகள் என்று எண்ணவில்லை, அவையே இயல்பானவை என்று எண்ணினார். அந்த மரியாதைகளுக்கும் உபசரிப்புகளுக்கும் இணையாகவே அவரிடம் கொடையும் பெருந்தன்மையும் ஆசாரங்களுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு ஒழுகும் தன்மையும் எதிர்பார்க்கப்பட்டது. அவையும் அவரிடம் இயல்பாகவே இருந்தன. ஆகவே விரும்பப்பட்ட இளவரசராகவும் அவர் திகழ்ந்தார்.

அங்கிருந்து லண்டன் சென்றபோது முதல் முறையாக அவர் தன் அடையாளங்கள் அனைத்தையும் களைந்து நிர்வாணமாகும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். அவருடைய ஆடைகள் மாறின. அவர் அதுவரை அணிந்திருந்த மதிப்புமிக்க வைர நகைகளை அணிய முடியாமலாயிற்று. அவரிடம் எவரும் பணியவில்லை. உபசாரச் சொற்களைக் கூறவும் இல்லை. எங்கும் அவருக்கு தனி இடம் அளிக்கப்படவுமில்லை. வெள்ளையர்களுடன் மட்டுமே அவர் நிகராகப் பழக முயன்றார். அங்கே ஒவ்வொரு இடத்திலும் அவர் சிறுமையை உணர்ந்தார். குருத்தெலும்பில் விழும் அடிகள் போல ஒவ்வொன்றும் பெருவலியை அளித்தன.

அவர் அதற்கு எதிராகத் தன்னை கெட்டிப்படுத்திக்கொண்டார். கட்டுப்பாடில்லாமல் குடிக்கத் தொடங்கினார். குடித்துவிட்டால் வெள்ளையர்களும் தங்கள் தோரணைகளை இழந்துவிடுவதைக் கண்டார், அப்போது ஒரு அரசுச் செயலாளரின் தோளைத் தட்டி, அவருடைய சுருக்கப்பெயரைச் சொல்லி அழைத்துப் பேச அவரால் முடிந்தது. அவர் பணத்தை அள்ளி வீசி ஒவ்வொருவரையும் திகைக்க வைத்தார். லண்டனில் சட்ட மாணவர்கள் நடத்திய விருந்தொன்றில் நூறு பவுன் நோட்டு ஒன்றை எடுத்து மெழுகுவர்த்திச் சுடரில் பற்ற வைத்து அந்தத் தீயைக்கொண்டு அவர் சுருட்டு பற்ற வைத்துக்கொண்டது லண்டன் முழுக்க கேலியாகவும் திகைப்பாகவும் பேசப்பட்டது. இரண்டு அரிய வைரங்களை தனது தோல் செருப்பின் முகப்பில் பதித்துக்கொண்டது மேலும் கதையாக மாறியது.

ரண்பீர்சந்த் நடனம் கற்றுக்கொண்டார். வெள்ளைத்தோல் பெண்களை ஒவ்வொரு நாளும் புணர்ந்தார். அவர்களுக்கு பணத்தை அள்ளி இறைத்தார். அதற்காக லண்டனின் கீழ்த்தட்டு மக்களை அவர் பயன்படுத்திக் கொண்டார். ஒரு லண்டன் விதவையை மணக்க விரும்பி அதற்காக கிறிஸ்தவ மதத்திற்கும் மாறி, அவளால் ஏமாற்றப்பட்டு, பெரும் பணத்தையும் இழந்து, தன் காதலனுடன் இருந்த அவளைச் சுடுவதற்கு முயன்று, பிடிபட்டு ,இளவரசர் என்பதனால் வழக்குப் பதிவுசெய்யப்படாமல் தப்பினார். மேலும் குடிகாரராக ஆனார்.

நான்காண்டுகளுக்குப் பின் பாரிஸ்டர் பட்டத்துடன் அவர் திரும்பி வந்தபோது முகம் கருத்து, உதடுகள் வெந்து, கண்களுக்குக் கீழே மெல்லிய பைகள் தொங்க, தாடை இறங்கி, மோவாயில் ஆழ்ந்த கோடுகள் விழுந்து பல ஆண்டு முதியவராக இருந்தார். இளம் கூனல். மது அருந்தியதன் விளைவான தொந்தி. எங்கும் பார்வை நிலைக்காத சிவந்து கலங்கிய கண்கள். எதற்கும் பொறுமையின்றி இடைமறித்து அலட்சியமாகவும் எரிச்சலுடனும் சொல்லப்படும் ஒற்றைச் சொற்றொடர் பதில்கள்.

தந்தை மறைந்த ஓர் ஆண்டிலேயே ரண்பீர்சந்த் மகாதாப் தன் ஜமீன்தாரியைக்  பெரும் கடனுக்குள் சிக்க வைத்தார். வரிகளை கட்டமுடியாமலானார். திவானும் பேஷ்காரும் அவரைத் தொடர்ந்து எச்சரித்தனர். ஆனால் அவரை விலக்கி இன்னொருவரைக் கொண்டுவர வேண்டும் என்றால் அவருடைய தந்தைக்கு வேறு மகன்கள் இருந்திருக்கவேண்டும். சமஸ்தானத்தின் முடியுரிமைப்படி அவர் அன்றி வேறெவரும் அந்த அரியணையில் அமர முடியாது. ஆகவே அவரை மேலும் மேலும் செயலிழக்கச்செய்து அதே பதவியில் நீடிக்க வைக்கவே பிரிட்டிஷார் முயன்றனர். அதன்பொருட்டு சர்க்கஸில் புலியைப் பழக்குவதுபோல அவருக்கு சிறுபரிசுகளையும் பெரும் தண்டனைகளையும் அளித்துக்கொண்டே இருந்தனர்.

பணத்தை அள்ளி இறைப்பதை மட்டுமே பழகி லண்டனிலிருந்து திரும்பி வந்த ரண்பீர்சந்த் ஒரு சிறுதொகைக்குக் கூட தன்னுடைய திவானிடமும் பேஷ்காரிடமும் கெஞ்சிக் கூத்தாடி, மன்றாடி, பலவிதமான நாடகங்களைப் போட்டு, சட்டப்படி எல்லா காகிதங்களிலும் கையெழுத்திட்டுப் பெறவேண்டும் என்ற நிலைமைக்கு வந்தார். அவருக்கு பணத்தை அளிக்குமிடத்துக்கு திவான் வந்தபோது திவானே ஆட்சியாளராக ஆனார். தன் முன் சம்பிரதாயமான பணிவையும் ஒடுக்கத்தையும் காட்டி நின்றிருக்கும் திவான் தன்னை ஒரு அசட்டுப் பொம்மையாக எண்ணுகிறார் என்று அவருக்கும் தெரிந்திருந்தது. அது அவையினர் அனைவருக்கும் தெரியும் என்பதும் ரண்பீர்சந்த் அறிந்திருந்தார்.

ஆகவே ஒவ்வொரு நாள் அவைக்கு திவானை சந்தித்த பின்னரும் அவர் சீற்றம் கொண்டு தன் அறைக்குள் கொந்தளித்துச் சுற்றி வந்தார். தன் ஏவலர்களை அறைந்தார். பணிப்பெண்கள் முகத்தில் உமிழ்ந்தார். அவரால் செய்யக்கூடுவது அரண்மனையில் அவர் கைக்குச் சிக்கிய அத்தனை பெண்களையும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்குவது தான். வயது பேதமின்றி உறவு முறையின்றி அவர் அப்பெண்களைப் புணர்ந்தார். தான் புணரும் ஒரு பெண்ணை முழுமையாக வெல்வதாகவும் புழுவைப்போல் தன் காலில் போட்டு சிதைப்பதாகவும் எண்ணிக்கொண்டார். அந்த வெற்றி ஒன்றே அவருக்கு உறுதியை அளிப்பதாக இருந்தது. அதிகாரமுள்ளவர் அல்ல எனினும் ஆணென்றாவது எஞ்ச முடிந்தது என நினைத்தார்.

ஆனால் மிகச்சில ஆண்டுகளிலேயே அவருடைய வெட்டை நோய் மருத்துவத்துக்கு கட்டுப்படாமல் ஆயிற்று. அவருடைய உதடுகளும் கண்களும் செவி மடல்களும் சிவந்து தடிக்கலாயின. அரண்மனையில் அவர் புணர்ந்த பெண்கள் அனைவரும் நோயுற்றவர்களானார்கள். தொடர்ந்து பழைய பெண்களை விலக்கி புதிய பெண்களை ஏவலர்கள் நியமித்த போதும் கூட அவரால் பெண்களைப் புணர முடியாமல் ஆயிற்று. புணர்வதென்பதே பெரும் வலியை அளிப்பதாகவும் ,அப்பெண்கள் சலிப்புற்று பெருமூச்சுவிடச் செய்வதுமாக மாறியது. அவரால் இயலாதென்று அறியாத பெண்களே எங்கும் இருக்கவில்லை.

ஒரு முறை அரண்மனையின் முதிய சேடி ஒருத்தியை அவர் அறைந்து கூந்தலைப் பிடித்து இழுத்துச்சென்று படுக்கையில் தள்ளி புணர முற்பட்டபோது அவரது உடல் ஒத்துழைக்க மறுத்து அசைவிழந்தது. அந்த சேடி எழுந்து ஆடையை அணிந்துகொண்டு அவரிடம் புன்னகைத்தபடி ”முடியாதெனில் இனி இதற்கெல்லாம் முயலாமல் இருக்கலாமல்லவா?” என்றாள்.

முதல் முறையாக ஒரு பெண் அவர் இயலாமையை அவரிடமே சொல்லக்கேட்டு தளர்ந்து படுக்கையில் அமர்ந்திருந்தார். அப்போதுதான் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டவரானார்.

“இந்த அரண்மனையில் எல்லா நபும்சகங்களும் இதைச் செய்கின்றன. அவர்கள் பெண்களிடம் மூர்க்கமாக நடந்துகொள்கிறார்கள். ஆனால் அவர்களால் பெண்களை அடையவும் முடிவதில்லை. அதனால் இன்னும் மூர்க்கம் அடைகிறார்கள். நபும்சங்கங்களை அரசர் கண்டிக்க வேண்டும்” என்று அந்தப்பெண்மணி மீண்டும் சொன்னார்.

“வெளியே போ” என்று அரசர் கத்தினார்.

”நாங்கள் தங்களிடமன்றி எங்கு முறையிடமுடியும் இங்கே நபும்சகங்கள்…” என்று அவள் மேலும் சொன்னாள்.

”வெளியே போ! வெளியே போ!” என்று கத்தி அவளை நோக்கி கையை ஓங்கி சென்ற வேகத்தில் கம்பளம் காலைத்தடுக்க அவர் குப்புற கீழே விழுந்தார்.

அத்தருணத்தில் அந்த முதிய பெண் ஒன்று செய்தாள். தன் காலைத்தூக்கி அவர் தலையை ஓங்கி மிதித்தாள். “ச்சீ , நபும்சகனே, முடியாதெனில் செத்துபோ” என்று சொல்லி அவர் தலைமேல் காறி உமிழ்ந்துவிட்டு வெளியே சென்றாள்.

அவரால் எழமுடியாதென்றும் கூவ முடியாதென்றும் அவள் அறிந்திருந்தாள். அங்கே நிகழ்ந்ததை அவர் அப்படியே வெளியே சொல்லவே முடியாது. அவளுக்கான குற்றத்தை அவர் கற்பனைசெய்ய பொழுது தேவைப்பட்டது. வெளியே சென்ற அவள் அன்றிரவே கிளம்பி எங்கோ சென்றுவிட்டாள்.

மயங்கி விழுந்த அரசர் ஏவலர்களால் கண்டடையப்பட்டு. மருத்துவமனைக்கு கொண்டு சென்று ஆங்கில மருத்துவரால் தூங்க வைக்கப்பட்டு, மறுநாள் விழித்தெழுந்து அனைத்தையும் நினைவுகூர்ந்து கூச்சலிட்டு கத்தினார். நெஞ்சில் அறைந்துகொண்டு கூவினார். ”அவளைப் பிடியுங்கள் அவளைப்பிடியுங்கள்” என்றார். ”எனது அரிய நகையொன்றை அவள் திருடிவிட்டாள். எனது மணிமாலையை அவள் பிடுங்கிச்சென்றாள். அவள் இங்கே கொண்டுவரப்படவேண்டும்” என்று ஆணையிட்டாள்.

ஆனால் அவள் கிளம்பி பாட்னாவுக்குச் சென்றுவிட்டதாக ஏவலர் சொன்னார்கள். ”பாட்னாவுக்குச் சென்று பிடியுங்கள்” என்று அவர் சொன்னார்.

”அது பிரிட்டிஷ் அரசின் பகுதி நாம் அங்கு சென்றால் நாம் தான் குற்றவாளிகளாவோம். அவள் திருடியதற்கு சான்றுகள் இருந்தால் நாம் முறையான கடிதம் வழியாக பாட்னாவின் கவர்னரிடம் முறையிடலாம்” என்றார் திவான்.

”என்ன சொல்கிறாய்? முறையிடுவதா?” என்று சொல்லி படுக்கையில் எழுந்து கையை ஓங்கியபடி அரசர் கூவினார்.

”முறையிட மட்டும் தான் முடியும் என்றபின் இங்கும் நாம் முறையிட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்” என்றார் திவான்.

உடல் நடுங்க உதடுகள் துடிக்க கண்ணீர் வழிய படுக்கையில் படுத்திருந்த அரசர் அப்படியே மல்லாந்து படுத்து கண்களை மூடிக்கொண்டு உதடுகளை இறுக்கி ஒரு மெல்லிய வலிப்புக்கு ஆளானார். அவருடைய பற்கள் கிட்டித்து உதட்டோரம் எச்சில் கோழை வழிந்தது.

அதற்கும் மறுநாள் மாலைதான் ஃபணீந்திரநாத் தேஷ்பாண்டே சிறுமைப்படுத்தப்பட்டு வாடியா ராஜ் ஜமீந்தாரியில் இருந்து தப்பி ஓடினார். அது அவர் வாழ்க்கையில் திருப்புமுனையாக ஆகியது.

புதிய அரசர் ஆட்சிக்கு வந்த பிறகு வாரம் தோறும் வெள்ளியன்று காலைமுதல் மாலை வரை நிகழும் கவியரங்கும், செவ்வாயன்று  காலைமுதல் மாலை வரை நிகழும் சோதிட அரங்கும் நின்றுவிட்டன. ஆனால் சோதிடர்களும் புலவர்களும் அங்கேயே அரசுப் பணியில்தான் இருந்தனர். அவர்களுக்கு இல்லங்களும் ஆண்டுதோறும் செலவுக்கான மானியங்களும் அளிக்கப்பட்டன. ஒவ்வொரு நாளும் அரண்மனையிலிருந்து வீட்டுத்தேவைக்கு உரிய பொருட்களையும் சிறு பரிசுகளையும் அவர்கள் பெற்று வந்தனர். அரசு அதிகாரிகளும் திவானும் அரசனை அணுகுவதற்கான வழியாக திகழ்ந்தமையால், கோரிக்கைகளை அரசர் முன் எடுத்துச்செல்லும் அணுக்கம் அவர்களுக்கு இருந்தமையால், குடிமக்கள் அவர்களுக்கு தானியங்கள் காய்கறிகள் என்று கொடையளித்தும் வந்தனர். ஆகவே அவர்கள் சமஸ்தானத்தில் வறுமையில்லாமல் வாழ்ந்தனர். சிறு சேமிப்புகளும் கொண்டிருந்தனர்.  செல்வந்தர்களாகவும் திகழ்ந்தனர்.

புதிய அரசர் ரண்பீர்சந்த் மகாதாப்  வந்தபிறகு மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது ஓரிரு மாதங்களுக்கு ஒருமுறையோ மட்டுமே அந்த அவைகள் கூடலாயின.  புதிய அரசர் சம்ஸ்கிருதத்திலோ இந்துஸ்தானியிலோ  உருதுவிலோ அடிப்படைப் பரிச்சயம் மட்டுமே கொண்டவராக இருந்தார். இலக்கியத்தில் அவருக்கு எந்த வகையிலும் ஆர்வம் இருக்கவில்லை. ஒருவரின் உள்ளம் கற்பனையை இழந்துவிட்டதென்றால் அது தரவுகளையே உண்மையெனக் கொள்ளலாகிறது. தரவுகள் வளர்ந்து கற்பனைக்கு எதிராக நிலைகொள்ளுகையில் இலக்கியத்தை அவை முற்றாக மறுக்கத் தொடங்குகின்றன. ஒவ்வொரு அவையிலும் தன் மூதாதையர் புகழ் பாடப்படும்போது ஏளனச்சிரிப்புடன் தரவுகளை எடுத்துவைத்து ’இவை முற்றிலும் பொய். இங்கே என்னை புகழும்பொருட்டு உளறுகிறீர்கள்’ என்று அரசர் எள்ளி நகையாடினார். சோதிட ஊகங்கள் சொல்லப்படும்போது முந்தைய ஊகங்கள் என்ன ஆயின என்று கேட்டு அச்சோதிடர்களை இழிவுபடுத்தினார்.

மெல்ல பல மாதங்களுக்கு ஒருமுறையே அந்த அவை கூடுவதாயிற்று. அரசரின் பிறந்த நாளை ஒட்டியும் முந்தைய அரசரின் நினைவு நாளை ஒட்டியும் மட்டுமே அவை கூடுவது அதன்பின் வழக்கமாயிற்று. அவ்வாறு மறைந்த அரசரின் நினைவு நாளை ஒட்டி நிகழ்ந்த சோதிட அரங்கில் தேஷ்பாண்டே அன்று தான் கணித்துக் கொண்டு வந்திருந்த புதிய அரசருக்குரிய பலன்களை சம்ஸ்கிருதத்தில் அனுஷ்டுப்பு சந்தத்தில் பதினெட்டு செய்யுள்களாக எழுதி அவையில் வாசிக்கக் கொண்டுவந்திருந்தார். அவை உண்மையில் அவருடைய தந்தை எழுதி அதே அவையில் வாசித்த செய்யுட்களை அவர் பழைய ஏட்டுச்சுவடியில் இருந்து பார்த்து நகல் எடுத்தவைதான். அவரால் எப்போதுமே செய்யுள் எழுத முடிந்ததில்லை.

அரசர் மிகத்தாமதமாகத்தான் அறைக்கு வந்தார். அவருடைய ஆடைகள் உடலில் தளர்வாக தொய்ந்து தொங்கின. கண்கள் கலங்கி ஒரு கண்ணிலிருந்து நீர் வழிந்துகொண்டிருந்தது. சிறு வெண்ணிற கைக்குட்டையால் அதை ஒற்றிக்கொண்டிருந்தார். அவ்வப்போது கோணலாக  தடித்து ஒருபக்கமாக தொங்கிய உதடுகளிலிருந்து எச்சில் வழிந்தது அதையும் துடைத்துக்கொண்டார். நன்கு கூன் விழுந்து, கழுத்து சதைகள் கன்றுக்குட்டியின் கழுத்துபோல இழுபட்டு தொங்கி, கைகால்கள் சுள்ளி போல் மெலிந்து ஒரு பேயுருவாக அரியணையில் அமர்ந்திருந்தார். அவர் முற்றிலும் நிலைகுலைந்து இருப்பதை அனைவரும் உணர்ந்தாலும் வாசிப்பதன் பதற்றத்தில் இருந்த ஃபணீந்திரநாத் மட்டும் அதை அறியவில்லை.

அவர் தாள்களைப் புரட்டும் ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. அவர் வாசிக்க ஒப்புதல் கேட்டு அரசர் முன் நின்றிருந்தார். அரசர் பித்தளை தாலத்தில் காறித்துப்பிக் கொண்டே இருந்தார். காகிதத்தை புரட்டி ஓசையை எழுப்பிக்கொண்டே இருந்த தேஷ்பாண்டே ’நான் செய்யுளை வாசிக்கலாமா அரசே?’ என்று பணிந்து கேட்டார்.

வாசிக்கலாம் என்று அரசர் கையை அசைத்தார். ஃபணீந்திரநாத் தேஷ்பாண்டே அச்செய்யுளைப் படிக்கும்போது அரசர் கண்ணையும் வாயையும் துடைத்தபடி மேலும் மேலும் குனிந்து முன்னால் விழுந்துவிடுபவர் போல தளர்ந்து கொண்டிருந்தார். அரசர் தன்னை கவனிக்கவில்லை என்ற எண்ணத்தில் பணீந்திரநாத் மேலும் சற்று உரக்க அச்செய்யுளை படித்தார். எங்கோ ஓரிடத்தில் அவர் முற்றிலும் கவனிக்கவில்லை என்ற எண்ணம் அவருக்கு சீண்டலாக அமையவே ,தன்னியல்பாக உருவான எரிச்சலில்  ஒரு செய்யுளை மிக உரத்த குரலில் படித்தார்.

சட்டென்று எவரோ தன்னை நோக்கி அதட்டுவது போல் உணர்ந்த அரசர் திகைத்து ”யார்?” என்றார். அவை திடுக்கிட்டு அமர்ந்திருந்தது. தன் முன் நின்றிருந்த தேஷ்பாண்டேயைக் கண்டு அவர் தன்னை ஏதோ சொல்லிவிட்டார் என்று எண்ணிய அரசர் ”வாடா இங்கே” என்றார்.

அந்தணரை அவ்வாறு அவமதிப்பாக அழைத்ததில் அவையே திகைத்தது.

“டேய் வாடா! இங்கே டேய் அருகே வாடா” என்று அரசர் கூவினார்.

இருகைகளையும் கூப்பி உடலை நன்கு வளைத்து கண்ணீர் வழிய  மன்றாடியபடியே தேஷ்பாண்டே அரசரை நோக்கி சென்றார். “மன்னிக்கவேண்டும். மன்னிக்க வேண்டும். தெரியாமல் நிகழ்ந்த பிழை… மன்னிக்கவேண்டும் அரசே. என் தலையை தங்கள் பாதங்களில் வைக்கிறேன். தெய்வமாக நின்று  மன்னிக்கவேண்டும்” என்று சொல்லி நடுங்கிக்கொண்டே அருகே சென்றார்.

“அருகே வா! அருகே வா நாயே! கேடுகெட்ட நாயே  அருகே வா!” என்று அரசர் கூவிக்கொண்டே இருந்தார். ஃபணீந்திரநாத் அருகே சென்றதும் இருகைகளையும் அரியணையின் கைப்பிடியில் ஊன்றி தள்ளாடி எழுந்து வாயில் தேங்கியிருந்த கோழையை அவர் முகத்தில் உமிழ்ந்து ”தூ கேடு கெட்ட நாயே! அதட்டுகிறாயா? வெளியே போடா! இனி இந்த அவையில் உன் முகத்தை பார்த்தால் வெட்டி நாய்களுக்குப்போடுவேன். வெளியே போ! வெளியே போடா!” என்றார்.

“வெளியே போகிறேன் அது தங்கள் ஆணை. ஆனால் நாளை திரும்ப வர ஒப்புதல் அளிக்கவேண்டும். எனக்கு குழந்தைகளும் குடும்பமும் இருக்கின்றன” என்று ஃபணீந்திரநாத் தேஷ்பாண்டே மன்றாடினார்.

“போ வெளியே. இனி எப்போது நீ என் கண் முன் நீ வருகிறாயோ அபோது இன்னொரு பிரமாணனைக் கொண்டு உன்னை வெட்டி வீழ்த்துவேன்” என்று அரசர் கூவினார்.

அப்படியே பின்னகர்ந்து சுவரில் முட்டிக்கொண்டு நின்று, நடுங்கி விசும்பி அழுதபடியே ஃபணீந்திரநாத் தேஷ்பாண்டே வெளியே சென்றார். தன் இல்லத்தை அடைந்தபோது அவர் நடக்க முடியாதபடி உடல் தளர்ந்திருந்தார். வெவ்வேறு இடங்களில் நின்றும், சுவர்களையும் தூண்களையும் பிடித்துக்கொண்டும்தான் அவர் இல்லத்தை வந்தடைந்தார்.

“இனி இந்த நகரில் நான் இருக்க முடியாது, இங்கு என்னால் வாழ முடியாது” என்று அவர் தன் மனைவியிடம் சொன்னார். அவர் மனைவி ஓசையின்றி அழுதுகொண்டிருந்தாள். அவருடைய இரு குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்தன. மூத்தவனுக்கு ஏழுவயது. பெண்ணுக்கு ஐந்து வயது. அவர்களைப் பார்த்தபடி அவர் மனைவி கண்ணீர்விட்டாள்.

அன்று மாலை வரை அழுதுகொண்டிருந்த ஃபணீந்திரநாத் தேஷ்பாண்டே நள்ளிரவில் தன் இல்லத்தில் ஒரு பானையிலிட்டு புதைத்து வைத்திருந்த தங்கநாணயங்களையும் வெள்ளி நாணயங்களையும் பழந்துணியில் கட்டி அதை ஒரு மஞ்சள் துணியில் பொதிந்து தலையில் வைத்துக்கொண்டு வாடியா ராஜ் ஜமீந்தாரியை விட்டு வெளியேறினார்.

(மேலும்)

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.