Jeyamohan's Blog, page 847

January 9, 2022

வரலாறு எனும் குற்றக்கதை- சௌந்தர்

தே ஓர் இலையின் வரலாறு வாங்க

அன்பு ஜெ சார்.

செப்டம்பர் 22, 1747 ல். ‘ஸ்விப்ட்’ எனும் தனியார் கண்காணிப்பு கப்பல் ஒன்று ராணியால் பணியில் அமர்த்தப்படுகிறது, கடல்கொள்ளையில் ஈடுபடுபவர்கள் தான் இதன் இலக்கு.. ‘ஸ்விப்ட்’ ரோந்து சுற்றும்போது சந்தேகத்திற்கிடமான ”த்ரீ பிரதர்ஸ்” எனும் கப்பல் மாட்டுகிறது. உடனே துப்பாக்கி சூடு, சுற்றிவளைப்பு, தப்பித்தல், இறுதியில் சரணடைதல். என ”கரீபியன் பைரைட்ஸ்” படத்திற்கு இணையான ஒரு கடற்கொள்ளை நாடகம்.

கொள்ளை கப்பலின் மாலுமியும் 7 பேரும் கைது செய்யப்பட, கடத்தல் செய்யப்பட்ட பொருள் சுங்க அலுவலகத்தில் வைத்து பூட்டப்படுகிறது. அடுத்த இரண்டு வாரத்தில் அறுபது கடத்தல்காரர்கள் ஆயுதங்களுடன் வந்து, சுங்க அலுவலகம் இருந்த நகரையே சூறையாடி, அலுவலகத்தை உடைத்து, கொள்ளை பொருளை மீட்டு அவரவர் பங்கு பிரித்து எடுத்துக்கொண்டு பிரிக்கின்றனர். அந்த பொருள் – தேயிலை.

ஒரு ஆங்கில படத்திற்கு இணையான இந்த காட்சி ஒரு ஆவணப்புத்தகத்தின் தொடக்க வரிகள் என்றால் அது எத்தனை சுவாரஸ்யமான நாவலாக இருக்கும் என்பதற்கு ”தே ” ஒரு சாட்சி. யுவால் ஹராரியின் சேம்பியன், வரைபட நாவலாக வந்தபோது, அதற்கு ஒரு அறிமுக வீடியோ தயாரித்து வெளியிட்டனர், அதில் ஒரு கோதுமை பேசும், எப்படி 12ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், நாடோடியாக திரிந்த மனித இனத்தை தன் வயப்படுத்தியது, அதன் பின்னான மனிதகுலம், எப்படியெல்லாம் கோதுமை எனும் பயிருக்கு அடிமையானது என்று சொல்லி சிரிக்கும். அதற்கு இணையான இன்னொரு ‘உயிரி’ தான் ‘தேயிலை’. ராய் மாக்ஸம் எழுதி தமிழில் சிறில் அலெஸ் மொழிபெயர்த்த, உலக அளவில் கவனிக்கப்பட வேண்டிய ஆவணப்படைப்பு தான்.

‘தே’ – ஒரு இலையின் வரலாறு. 

இந்நூல் ஒரு உலக-குடிமகனின் கண்கள் வழியாக பார்த்து அனுபவித்து, வாழ்ந்து எழுதப்பட்ட மூன்று மையச்ச்சரடுகள் வழியாக நமக்கு பெரும் வியப்பை தருகிறது. ஆகவே எந்தவிதமான விதந்தோதல்களோ, வெறுப்பின் சாயலோ அன்றி. ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் ஒரு சுவாரஷ்யமான நாவலுக்கு சற்றும் குறைந்ததல்ல.

முதல் சரடு:- 16ஆம் நூற்றாண்டில் தொடங்கி 2010 வரையிலான அரசியல் மற்றும் வரலாற்று பின்னணியில் பயணிக்கும் தேயிலையின் கதை.

இரண்டாவது சரடு :- சீனாவில், கி முவில் தொடங்கி இன்றுவரை நமக்கு வந்து சேர்ந்த தேயிலை எனும் உயிரியின் வேளாண் நுட்பங்கள் நிறைந்த கதை

மூன்றாவதாக தேயிலை மனிதனையும் மனிதன் தேயிலையையும் சார்ந்திருக்கும் கதை

முதல் சரடு :- சீனாவிலும், இந்தியாவின் ஒரு சில பகுதிகளிலும் மட்டுமே, பயன்பாட்டில் இருந்த தேயிலை எனும் பானம் 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் பிரித்தானிய அரசுக்கு அறிமுகமாகிறது. தேநீர் எனும் பானத்தின் மீது ஆங்கிலேயர்கள் கொண்டிருந்த வேட்கை. ஒரு அசுரக்குழந்தை என வளர வளர, சூழ்ச்சிகள், லாபவெறி, சுரண்டல்கள், இன்றுவரை எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் பிணங்கள், என இந்த அத்தியாயங்கள் முழுவதும், சரியான தரவுகளுடனும், தேதிவாரியான ஆவணங்களுடனும் வரலாற்றினூடாக பயணிக்க வைத்து, அதிகார போட்டி கொண்ட மனித மனங்களின் மீது மாபெரும் அவநம்பிககையையும், சலிப்பையும் உண்டாக்குபவை.

உதாரணமாக கி.மு 206 முதலே தேயிலையை விளைவிப்பதும் உபயோகித்தும், என வாழ்ந்து வந்த சீனர்களை தான் தனது தேயிலை தேவைக்காக நம்பியிருந்தது ஆங்கிலேய அரசு. இறக்குமதிக்கு இணையாக வெள்ளிக்கட்டிகளை கொடுக்க வேண்டியிருந்ததால், ஆங்கிலேய பொருளாதாரம் பலவீனம் அடைந்தது, உலகெங்கும் போர்களையும், கைபற்றலையும் செய்துகொண்டிருந்த பிரித்தானிய அரசுக்கு இது ஒரு பின்னடைவு. அதை சரி செய்ய ஒரு சூழ்ச்சியை கையாண்டது. தனது கட்டுப்பாட்டில் உள்ள காலனி நாடுகளில் ‘ஓப்பியத்தை’ பயிரிட்டு உலகை/ சீனர்களை ஓப்பியத்துக்கு அடிமையாக்கி, வெள்ளிக்கு ஈடாக ஓப்பியத்தை விற்று சமாளித்தது. வெள்ளிக்கட்டிகள், ஓப்பியம், தேயிலை என்கிற ஒரு முக்கோண இணைப்பை உருவாக்குதல். இப்படி எண்ணிலடங்கா சாதிகளின் மூலம் ஒரு உலக அதிகார மையமாக தன்னை நிறுவிக்கொண்டது.

இப்படி குறைந்தது ஆறு, ஏழு வரலாற்று சூழ்ச்சிகளாவது இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் நிகழ்ந்த ஆட்சி, அதிகார மாற்றங்கள், மனித இன முன்னேற்றம் என மூன்று நூற்றாண்டுகளுக்கு பின்னர் இன்றும் நமக்கு வந்து சேரும் இன்றைய தேநீருக்கு பின்னால் இருக்கும் அதிகார மையம் எவ்விதத்திலும் மாறவில்லை.

அந்த நூற்றாண்டில் இன- பேத- பொருளாதார அடிப்படையில் இருந்த மாபெரும் இடைவெளி குறைந்து, இன்று ‘நுகர்வோர்-உற்பத்தியாளர்- தரம்’ என்கிற இடைவெளியாக குறைந்து இருக்கிறது, எனினும் அடியில் எதுவும் மாறவில்லை, என்பதையும் சமீபத்திய அரசியல் நிலைகளை சமரசமின்றி முன்வைத்து செல்கிறார். கிட்டத்தட்ட ஒரு உலக மகா ‘அருங்காட்சியகம்’ சென்று காண்பது போல ஒவ்வொரு காட்சியையும் விவரிக்கிறார்.

இரண்டாவது சரடு – தேயிலை எனும் உயிரியின் வேளாண் வரலாறு, ஒரு கட்டத்தில் நாம் வேளாண் கல்வி சார்ந்த ஒரு நூலை படித்துக்கொண்டு இருக்கிறோம் என்கிற எண்ணத்தை அடைந்து, அதன் சுவாரஸ்யமான நடையால், மிகசரியான தகவல்களால் உள்ளிழுக்கப்படுவோம்.

வழக்கமாக இடுப்பளவு உயரமுள்ள தேயிலை தோட்டங்களில் நின்று ”செல்ஃபி” எடுத்துக்கொள்ளும் நமக்கு, தேயிலை என்பது நாம் காணும் செடியல்ல, 40 அடிகள் வரை உயரமாக வளரக்கூடிய மரம், என்றும் அதன் ஆணிவேர் 20 அடிகள் வரை மண்ணில் துளைத்து செல்லக்கூடியவை என்கிற வேளாண் தகவல்களில் இருந்து தொடங்குகிறார்.

சீனர்களே முதலில் தேநீரை அருந்துகிறார்கள். ஹான் அரச வம்சத்தினரின் கல்லறைகளில் தேயிலை கண்டுபிடிக்கப்படுகிறது. அதன் தேயிலை பாண்டத்தில் “ச்சா” எனும் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. நமக்கு ”வாய்க்கரிசி” எனும் சம்பிரதாயம் போல, இறந்த சீனர்களின் உதடுகளுக்கடியில் தேயிலையை பந்து போல சுருட்டி வைத்துள்ளனர்.

சீனத்திலிருந்து ஜப்பானுக்கு சென்ற தேயிலை இன்று தேநீர் விருந்து எனும் கலாச்சாரம் வரை வளர்ந்து வந்துள்ளது. ‘தி க்ளாஸிக் ஆஃப் டீ’ எனும் புத்தகத்தில் லூ.யூ

”தேயிலை தெற்கிலுள்ள ஒரு சிறப்புமிக்க மரத்திலிருந்து வருகிறது. பன்னிரண்டு அடி வரை இந்த மரம் வளரலாம், இம்மரங்கள் மிகவும் தடிமனானவை. அவற்றை கட்டிப்பிடிக்க இருவர் தேவை ” என்று குறிப்பிடுகிறார்.

சீனாவின் யுனான் மாகாணத்திற்கும், மியன்மாருக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்றும் ஒரு மரம் உள்ளது 1700வருட பழமையான இம்மரம் 108 அடி உயரமும், மூன்றடி சுற்றளவும் உள்ளது. கமெல்லியா உயிரினத்தை சார்ந்த தேயிலை, பிற செடிகளை விட குளிரை தாங்கும் சக்தி கொண்டவை, சிறிதளவு உறைபனியை கூட தாங்கிக்கொள்ளும்.

அஸ்ஸாம், சிலோன், கேரளா மலைகளை ஆங்கிலேய அரசு மிகச்சரியாக கண்டடைந்தது. அதன் சீதோஷ்ண நிலைக்கேற்ப தேயிலையை பயிரிட்டது, விதைகளை இறக்குமதி செய்தல், வளர்த்தல், உரமிடுதல் போன்ற அனைத்து வேளாண் சார் தகவல்களையும் துல்லியமாக ஆவணப்படுத்தியுள்ளார். உரங்கள் ஆங்கிலேயர் காலத்தில் தான் பயன்பாட்டிற்கு வருகிறது. சீனர்கள் மனித கழிவுகளை உரங்களாக பல நூற்றாண்டுகள் பயன்படுத்தியுள்ளனர். அவை நோய்த்தொற்றை கொண்டுவந்ததால், 19ஆம் நூற்றாண்டில் தான் கால்நடை கழிவுகள் உரங்களாக பயன்படுத்தப்படுகிறது.

ராய் மாக்ஸம்’க்கு தேயிலை தோட்டத்தில் வேலைபார்த்த அனுபவம் இருந்ததால், தேயிலையின் ஒட்டுமொத்த சித்திரத்தையும் தெளிவாகவும் அனுபவ பூர்வமாகமும் முன் வைக்க முடிகிறது.

தேயிலை கிள்ளுவதில் உள்ள நுணுக்கங்களை, அங்கே நடைபெறும் தவறுகளை சுட்டிக்காட்டுகிறார், உதாரணமாக ’செடியின் நுனியில் உள்ள இரண்டு தளிர்கள் மற்றும் ஒரு மொட்டு என்பது தான் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் இலக்கு. கிள்ளும் தேயிலையின் எடைக்கு ஏற்ப கூலி என்பதால் மேலும் நான்கு இலைகளை ‘கிள்ளி போடுதல்’. போன்ற மனித தவறுகளை சுட்டிக்காட்டுகிறார்.

தேயிலை செடிகளுக்கான இடைவெளி, பார்வையிட செல்லவேண்டிய உகந்த நேரம் காலம், தோட்டத்திற்குள் பாதுகாப்பு முறைகள், என நம்மை ஒரு மலைத்தோட்டத்தின் நடுவே நிற்கவைத்து ஒவ்வொரு இலையையும் தொட்டுக்காட்டி ஒரு சிற்ப சாஸ்திரம் கற்றுக்கொடுக்கும் மனோபாவத்துடன் நம்முடன் பேசுகிறார்.

மூன்றாவது சரடு :- தேயிலையும் சில உயிரினங்களும்.

இந்நூல் முழுவதும் ஒவ்வொரு பத்து பக்கத்துக்கு ஒருமுறை இறந்தவர்களின் எண்ணிக்கை என ஒரு புள்ளிவிவரம் வருகிறது, அதில் 27000 என்பது மட்டுமே மிகக்குறைத்த எண்ணிக்கை. ஆம் தேயிலையின் பொருட்டு கடந்த முந்நூறு ஆண்டுகளில் மட்டும், கொத்தடிமைகள் என, புரட்சியாளர்கள், அரசியல் எதிரிகள் போதை அடிமைகள் அதீத உடலுழைப்பு என பல்வேறு காரணங்களில் கோடிகளில் கொன்று குவித்திருக்கிறார்கள்.

உதாரணமாக தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடிய சூழலில் அஸ்ஸாமை விட இலங்கை தேயிலை தோட்டங்கள் சாதகமானவை என்கிற நம்பிக்கையில் சென்ற 2,72,000 மக்களில் ஆங்கிலேய கணக்கெடுப்பின் படி 1849ல் 1,33,000 பேர் மட்டுமே உயிருடன் உள்ளனர், கிட்டத்தட்ட 55,000பேர் என்னவானார்கள் என்பதே தெரியவில்லை.

இது போல உலகம் முழுவதுமுள்ள தேயிலை தோட்டங்களை கணக்கில் கொண்டால். பஞ்சமும் போர்களும் கொன்று குவித்த மனிதர்களுக்கு சமமாகவே, தேயிலை தோட்டங்களும் கொன்று புதைத்து, தனக்கு உரமாக்கிக்கொண்டு செழித்து வளர்ந்து நிற்கிறது.

இந்த அத்தியாயத்தில் அடிமைகளை நடத்தும் விதம், கண்காணிகளின் வரம்புகள் மற்றும் மீறல்கள், தண்டனைகள், தோட்டங்களில் இருந்து தப்பித்தல் ஒரு சாரார் தோட்டங்களை நோக்கி வருதல், என அனைத்தையும் பதிவு செய்கிறார். மிகத்துயரமான முடிவு என்பது யானைகளுக்கு ஏற்பட்ட கொடுமைகள் தான். தோட்டங்கள் பெருகும் தோறும் யானைகளும் அடிமைகளாக பெருகின. வேட்டையாடப்பட்டன மனித உயிர்பலிக்கு இணையாகவே, யானைகளும் மூன்றில் ஒருபங்கு தங்களது இனத்தை இழந்தன. அனைத்திற்கும் பின்னிருந்தது. தேயிலை எனும் ‘யட்சி’.

காந்தியை பற்றிய சித்திரத்தை உருவாக்க ராய் முயல்கிறார் துரதிஷ்டாவசமாக தோட்டங்களும், தொழிலாளர்களும் காந்திக்கு எதிராகவே இருந்திருக்கின்றனர்.

மனிதஇனம் தோன்றியது முதல் போர்களும், புரட்சிகளும் முடிந்து அடுத்த காலகட்டம் என்பது ஒவ்வொரு முறையும் ஒரு யுகசந்தி. யுவால் சொல்வது போல் கோதுமை மனிதனை உண்டதும், மனிதன் கோதுமையை உண்டதும் ஒரு யுகசந்தி என்றால், அந்நிகழ்வை தேயிலையையும் – மனிதர்களையும் கருவியாக வைத்து மீண்டும் ஒரு யுகசந்தியை ஆகியிருக்கிறது இயற்கை.

முன்னுரையில் சிறில் அலெக்ஸ் ‘வரலாறு எனும் க்ரைம் நாவல்’ என்று தான் இந்த நூலை குறிப்பிடுகிறார். ஆம். ஒரு துப்பறியும் நாவலுக்கு இணையான கச்சிதமான மொழிபெயர்ப்பு தான், இந்த நூலின் முக்கியமான சுவாரஸ்யமே. ஒரு ஆவணப்புத்தகம் அல்லது வரலாற்று நூல் தரும் ஒரு சிறு சலிப்பு கூட வந்துவிடாமல், மொழியாக்கம் செய்திருக்கிறார். ராயுடனான, சிறிலின் நட்பும், தொடர் உரையாடலும், இந்த படைப்பை ஆகச்சிறந்த ஒன்றாக மாற்றியிருக்கிறது.

அன்புடன்

சௌந்தர்

***

ஓர் இலை, ஒரு வரலாறு- லோகமாதேவி

உப்பு வேலி வெளியீட்டு விழா – சிறில் அலெக்ஸ் அறிமுக உரை

உலகின் உப்பு- சிறில் அலெக்ஸ் முன்னுரை

வெண்முரசு விழா – சிறில் அலெக்ஸ்- வரவேற்புரை

யார் சத்ரு? – சிறில் அலெக்ஸ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 09, 2022 10:31

விஷ்ணுபுரம் விழா, கிருஷ்ணன் சங்கரன்

அன்புள்ள ஜெ,

தங்களுடைய விஷ்ணுபுரம் விருது விழா மின்னஞ்சலைக் கண்டவுடனேயே, வீட்டை விட்டுத் தப்பிக்கும் மகிழ்ச்சியில், கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்னேயே ரயிலில் முன்பதிவு செய்துவிட்டேன். தற்செயலாக பத்து நாட்கள் கழித்துப் பார்த்தபோதுதான் தெரிந்தது, காவியமுகாம் ஞாபகத்தில் டிக்கெட்டை மேட்டுப்பாளையம் வரை போட்டிருக்கிறேன். அங்கிருந்து ஊட்டி போவதற்காக. சரி, கோயமுத்தூரில் இறங்கிக் கொண்டால் போகிறது என்றால், விழாவிற்கு முதல் நாளே அங்கு வந்து சேருவதுபோல போட்டிருக்கிறேன். ஒருநாள் முழுதாகக் கையில். முக்குர்தி வனவிலங்குகள் சரணாலயம் செல்லலாமா? என்று கதிரிடம் கேட்டேன். அனுமதி கிடைப்பது மெத்தக் கடினமென்றார். குருவாயூர், திரிசூர் எங்காவது போகலாம் என்றால் ‘தொற்று’ச் செய்திகள் அதிகமாக இருந்தன. வேறுவழியில்லை, பலமுறை ‘பார்த்த’ ஊட்டிதான். ஒரு மாறுதலுக்காக இதுவரை பயணிக்காத மலைரயிலில் ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையம் வர முன்பதிவு செய்து கொண்டேன். ஏறுவதற்கு ஆறுமணி நேரம், இறங்க மூன்று மணி நேரம்தான்.

ஊட்டிக்குப் பேருந்தில், பார்க்காத கோத்தகிரி வழியாக. வழக்கமாக பேருந்தில் ‘திம் திம்’  மென்று அதிரும் பாடல்ஒலி அன்று மென்மையாக ஒலித்தது ஆச்சரியமாக இருந்தது.  அதைவிட ஆச்சரியம் பக்கத்தில் இருந்தவர் பாடல் சத்தத்தைக் குறைக்கச் சொல்லி சத்தமிட்டது. பிறகுதான் கவனித்தேன், ரயிலில் போர்வை கிடையாதென்பதால் காதில் வைத்து நன்றாக அடைத்து விட்டிருந்த பஞ்சை எடுக்க மறந்திருந்தேன். அதனால்தான் எல்லாமே ‘அளவாக’க் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறது. பயணிகள் அநேகமாக எல்லோரும் உள்ளூர்ப் பயணிகள்தான். கோத்தர்கள், தோடர்கள், படுகர்கள். வட்டமுகம், உருண்டை மூக்கு எல்லோருக்குமே. படித்தால் அரசு வேலை கிடைத்துவிடும் என்று நினைக்கிறேன். வழியில் கோடப்பமந்து, மேல கோடப்பமந்து போன்ற ஊர்களைப் பார்த்தேன். ‘மந்து’ என்றால் கோத்தர்களின் குடியிருப்பு. ஒற்றைக்கல் அருகில் இருந்ததால் ‘ஒற்றைக்கல் மந்து’. அது பின்னால் ஆனது ‘ஒட்டக்க மண்ட்’. அது ‘ஊட்டி’ யும் ஆனது பிற்பாடு.(நன்றி: தியடோர் பாஸ்கரன்).என்ன, இந்த முறை Rack & Pinnion (இந்தியாவில் ஊட்டி மற்றும் டார்ஜிலிங்கில் மட்டுமே உள்ளது) முறையில் இயங்கும் மலைரயில் அனுபவம் மறக்கமுடியாத ஒன்று. இயற்கை ஆர்வலர்கள் கண்டிப்பாகப் பெற வேண்டிய சற்றே திகிலூட்டும் (நடுவே ஏழெட்டு குகைகள், வண்டிக்கு முன்னே பாறை விழுந்து ரண்ணிமேடு வரை மூன்று கிலோமீட்டர் பின்னோக்கிப்பயணம் என்று பல கூடுதல் திகில் தருணங்கள் அன்று) அனுபவம். இருநூற்றைம்பது சிறு, குறும் பாலங்கள், அதன் கீழே நாம் காணும் அதல விதல சுதல பாதாளங்கள். பேருந்துகளில் சென்றால் நாம் காண முடியாத காடுகள், அருவிகள், மலைச்சிகரங்கள், சரிவுகள், வெயிலில் பொன்னொளிரும் பச்சைப் பாலைவனங்களாய்த் தேயிலைத் தோட்டங்கள், சிற்றோடைகள், மேகக்கூட்டங்கள். எங்கு நோக்கினும் ‘வானகமே, இளவெயிலே, மரச்செறிவே’ என்று இருக்கிறது. ‘செல்’லில் படம் எடுக்காது கண்ணால் எல்லாவற்றையும் பருகி எடுத்தவர்கள் பாக்கியவான்கள். லவ் டேல், கேத்தி, அரவங்காடு, வெலிங்டன், குன்னூர்,  ரண்ணிமேடு, ஹில் குரோவ்,கல்லார் என்று ‘ஸ்டேஷன்கள்’ இடையே. எங்கும் பயணியர் ஏற்ற இறக்கம் கிடையாது. ரயில் கடக்கும்போது பச்சைக்கொடியாட்டுவது மட்டுமே (அதாவது ஒரு நாளைக்கு இரண்டே முறை) ஒரே பணி அங்குள்ள ‘ஸ்டேஷன் மாஸ்டர்’ களுக்கு. ஒரு எழுத்தாளனுக்குக் கிடைக்கவேண்டிய லட்சியப் பணி இதுவே என்று நினைத்துக்கொண்டேன். அன்று இரவு கோவை வந்து காந்திபுரத்தில் ரூம் போட்டுத் தங்கி விட்டு டிச 25 ஆம் தேதி காலை 8.30 க்கு ராஜஸ்தானி பவன் வந்து சேர்ந்தேன்.நான் கலந்து கொள்ளும் முதல் விஷ்ணுபுரம் விழா. இரண்டு நாட்கள் செறிவான இலக்கிய அனுபவம். தொடர்ந்து நல்ல அமர்வுகள், கேள்விகள். உங்களுடனான, நண்பர்களுடனான,பிற எழுத்தாளர்களுடனான இலக்கிய அரட்டைகள். உங்களுடைய நகைச்சுவையான, ‘வாத்தியாரே கவுத்துட்டயே!” (இந்தத் தலைப்பிலேயே தனியாக கட்டுரை எழுதலாம்) பொன்னியின் செல்வன் அனுபவங்கள். விக்கி அண்ணாச்சியின் குறும்படத்தில் அவர் துணைவியாரின் ‘நடிப்பு’ க்ளாப்ஸ் அள்ளியது. அதைப் பார்த்தபோது எனக்கு சிறுவயதில் (ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எண்பதுகளில்) தூர்தர்ஷனில் பார்த்த பாரதிதாசன் துணைவியாரின் பேட்டி நினைவுக்கு வந்தது. அதாவது அடுத்த அறையில் படித்துக்கொண்டிருந்தவன் ‘புருஷன என்ன வாங்கு வாங்கறா பாரு?’ என்ற என் அப்பாவின் சத்தம் கேட்டு, ஓடிச் சென்று பார்த்தேன்.தன் கணவர் மீது கொண்ட வெறுப்பும் விலக்கமும் ஒவ்வொரு வார்த்தையிலும், உடல் மொழியிலும் பிரதிபலிக்கும் ஒரு பேட்டி. “ஆமாம், திடீர்னு அஞ்சு பேரைக்கூட்டிட்டு வருவாரு, வான் கோழி பிரியாணி செஞ்சு போடுன்னுவாரு. என்ன பண்ணுவேன், நானு ஒத்தப் பொம்பள” என்று மனம் குமைந்தார். கவிஞரின் பாடல் எதோ ஒன்றைக் கட்டுரையாளர் எடுத்துக்கொடுக்க அதை வேண்டாவெறுப்பாகப் பாடி முடித்தார். அவ்வளவு இல்லாவிட்டாலும் திருமதி விக்கிரமாதித்தனுக்கும் சொல்ல நிறைய இருக்கும் என்பது  குறும்படத்திலேயே பதிவு செய்யப்பட்டது சிறப்பு. சோ. தர்மனின் பேச்சைக் கேட்டபிறகு, ‘சிரிச்சுத்தான் ஆத்திக்கிடணும்’ என்று கி.ரா சொன்னதுபோல நினைத்திருப்பாரோ பகவதியம்மாள்?. ஆனால், எதுவும் கடந்துபோகும் என்று அவருக்கும் சிந்த ஆனந்தக்கண்ணீர் மிச்சமிருந்தது. விக்கிரமாதித்தன் அண்ணாச்சியோ  விசும்பி விசும்பிச் சிரித்துக்கொண்டிருந்தார்.  படம் முடிந்தபோது பலருக்கும் ஒரு உளம்பொங்கிய உணர்வு. நிறைவான விழா. விழாவின் ஆரம்பத்தில்தான் அந்தப்பெண் என்ன அழகாகப் பாடினாள்?  ஊருக்குக் கிளம்புமுன் விடைபெற்றுக்கொள்ளும்போது, எல்லோரும் உணரும்படி, நீங்கள் விம்மிப் பூரித்து மகிழ்ச்சியால் நிறைந்திருந்தீர்கள். இதுபோன்ற கணங்கள் தொடர்ந்து வாய்க்கட்டும் என்று நினைத்துக் கொண்டேன்.சிறுசிறு தவிர்க்கக்கூடிய குறைகள். ‘லிப்ட்’ கதவை யாருமே மூடுவதில்லை. ஒரு நாளைக்கு ஏழெட்டு முறையாவது நாலாவது மாடிக்கு ஏறிஇறங்குவது கடினமாகத்தான் இருந்தது. அதேபோல் அறையிலிருந்து கடைசியாக வெளியேறுபவர் சாவியை  தரைத்தள ‘செக்யூரிட்டி’ யிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் முதலிலேயே கூறியிருந்தால் தாமதங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். அதேபோல அமர்வுகளில் கேள்வி கேட்பவர்கள் ஒன்றுக்கு மேல் கேள்விகள் இருந்தால், முதல் கேள்விக்கு பதில் கிடைத்த பிறகு மட்டுமே இரண்டாவது கேள்வியைக் கேட்கவேண்டும் என்று அமர்வு ஆரம்பிக்கும்போதே அறிவுறுத்தப்பட வேண்டும். அல்லது நீங்கள் விழாவின் விதிகளிலேயே இதனைச் சேர்த்துக்கொள்ளலாம்.திருமூலநாதன், ஜெயகாந்தன் ராஜு, ‘கவிஞர்’ கல்பனா ஜெயகாந்தன், அந்தியூர் மணி, கடலூர் சீனு என்று பழைய நண்பர்களோடு மீண்டும் அளவளாவ ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி.  பழவேற்காடு பூநாரை கூட்டத்தைக் கண்டு களித்தபோது (அந்த அனுபவத்தை ‘நீளகண்ட பறவையைத்தேடி’ என்று உங்கள் தளத்தில் நான் எழுதியிருக்கிறேன்) அங்கு எங்களை வழிநடத்திச் சென்ற பறவையியலாளர் திரு.சுப்ரமணியன் சங்கரை விழாவில் கண்டது ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி.நல்ல உணவு. மேடையில் நீங்கள் (மயிலாடுதுறை பிரபுவின் ஆகிருதியிலேயே இருந்த) விஜய் சூரியனின் பெயரைக் குறிப்பிட்டதை அவரிடம் கூறினேன். ‘அப்பிடி ஒரு தப்பு நடந்திருக்க வாய்ப்பில்லயே’ என்கிற முகபாவத்தோடு கேட்டுக்கொண்டிருந்தார். திரும்ப ‘அவர் பாராட்டினாருங்க’ என்று சத்தமாகக் கூறினேன். முகபாவத்தில் மாற்றமில்லை. கோயம்புத்தூர் குளிர் பிரதேசம்தான். ஒரு வாரத்தில் மீண்டுவிடுவார் என்று நினைக்கிறேன்.அன்புடன்,கிருஷ்ணன் சங்கரன்

பிகு

இந்தக் கேள்வி விஷ்ணுபுரம் விழாவில் திருச்செந்தாழை அமர்வினை ஒட்டி. அமர்வின் முதல் கேள்வியை நான் கேட்டேன். ‘ஆபரணம்’ கதையில் தம்பியை ஏமாற்றி(சரியான வார்த்தையல்ல, அனுபவமில்லாத தம்பியின் வியாபாரத்தில் தலையிட்டு மட்டுறுத்தாமல்) அண்ணனும், அண்ணியும் ஆபரணங்களாகச் சேர்க்கிறார்கள். பாகம் பிரித்துச் சென்றும் விடுகிறான் தம்பி. கதை முழுதும், பாகம் பிரித்து தனியாய்ப் போன தம்பியைப் பார்க்க வரும் அண்ணன், அண்ணி மற்றும் தம்பி மனைவியின் மனஓட்டங்களும், மனஅவசங்களும் தான். பல உள் மடிப்புகள் கொண்ட, வாசகனின் முழு மனக்குவிதலையும் கோரும் ஒரு கதை. அதில் கதை ஏறக்குறைய முடியும் தறுவாயில் தம்பி தன் அண்ணனின் கணக்குப்பிள்ளையிடம் கூறும் ஒரு வார்த்தையில் புதிய பரிமாணத்தை அடைந்துவிடும். (நான் இப்போதும் அது என்ன என்று கூறவில்லை, சொன்னால் spoiler தான்). இந்த இடத்தில் கதை புரிந்தவர்கள், கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்மில் Iteration Loop போல, மறுபடியும் முதலில் இருந்து கதையைப் படிக்காமல் இருக்க முடியாது. அவ்வாறு வாசகர்கள் கதையைத் திரும்பப் படிக்கவேண்டும் என்று ஒரு உத்தியாக தம்பியின் கூற்றை அப்படி வைத்தீர்களா, அல்லது தற்செயலாகவா? என்பதே நான் அவரிடம் கேட்ட கேள்வி. திருச்செந்தாழை சற்றே உளம்குவியாமல் இருந்தார் என்று நினைக்கிறேன், அவரால் சட்டென்று கேள்வியை உள்வாங்க முடியவில்லை. நானும் கதையைப் பாராட்டிவிட்டு அத்தோடு முடித்துக்கொண்டேன்.

இதனைத் தொடர்ந்து போகன் சங்கர் சரம்,சரமாக தொடர் கேள்விகளைக் கேட்டார். அநேகமாக எல்லாம் உரைநடை கவிதையாவதை, இரண்டுக்குமான இடைவெளி இல்லாமல் போவதைப் பற்றியவை. முக்கியமாக, கதாபாத்திரங்களின் பொதுஅறிவு மற்றும் நுண்ணுணர்வு பேச்சுமொழியில் (Dialogue)  எந்த அளவில் வெளிப்படுகிறதோ, அந்த அளவில்தான் கதையின் விவரணைகளிலும் (Narration) இருக்கவேண்டும் என்ற போகன் சங்கரின் கூற்று. என்னுடைய கேள்வி இதைப்பற்றியதே. போகனின் கூற்று எல்லாக் கதைகளிலும் சரியா? கதைசொல்லி கூறும் தற்கூறலாக உள்ள கதைகளுக்கு அவர் கூறுவது பொருந்தலாம். கதாசிரியன் படர்கையில் கூறும் கதைகளுக்கு, அதாவது ‘ஆபரணம்’ போன்ற கதைகளுக்கு அவர் கூற்று பொருந்துமா?

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

***

அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன்,

இத்தகைய அவைகளில் எந்த விவாதமும் அங்கேயே முடிவடைவதில்லை. இதை நீங்கள் இன்னொரு முறை அவரிடம் கேட்கலாம்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 09, 2022 10:31

அ.வெண்ணிலாவின் சாலாம்புரி-வெங்கி

சாலாம்புரி- வாங்க

அன்பின் ஜெ,

நலம்தானே?

வண்ணதாசன் ஐயாவும், மரபின் மைந்தன் முத்தையா அவர்களும் வெண்ணிலாவின் “சாலாம்புரி” நாவல் குறித்து உரையாடிய நிகழ்வின் காணொளிப் பதிவினை முழுமையாகப் பார்த்தேன் (பாரதி டிவி). வெண்ணிலாவும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். மிக நல்ல நிகழ்வு. மனதுக்கு நெருக்கமாக அமைந்தது. நாவலின் பல்வேறு இடங்கள் கலை மனங்களின் ஆழ்ந்த உள்வாங்கலின் ஒளிகொண்டு துலங்கி நெகிழ் மொழியில் வெளிப்பட்டது நாவலின் ஒட்டுமொத்த சித்திரத்தை உருவாக்கிக் கொள்ள பேருதவியாய் இருந்தது.

விஷ்ணுபுர விருது நிகழ்வில்தான் நான் முதல்முதலாக வண்ணதாசன் ஐயா அவர்கள் பேசிக் கேட்டது. முத்தையா அவர்களின் எழுத்துக்களுக்கு முன்னால் அவரின் குரல்தான் எனக்கு முதலில் பரிச்சயம் 2000-த்தில். அவரின் குரல் மூலமாகத்தான் அவர் எழுத்துக்களை, அவரின் பண்பாட்டு பங்களிப்பை வந்தடைந்தேன். அவரை மேலும் அறிந்துகொள்வதற்கு உதவியது உங்களின் இணையதளம்தான்.

“சாலாம்புரி” 1957-ம் வருடத்திய நாவல். 1949-ம் ஆண்டு திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து அண்ணாதுரை அவர்களால் துவக்கப்பட்ட “திராவிட முன்னேற்றக் கழகம்” எழுச்சி பெற்று முதன்முதலாய் சட்டப் பேரவைத் தேர்தலைச் சந்தித்த வருடம். அக்காலகட்டத்தில் நெசவாளர் குடும்பங்கள் அதிகமிருந்த அம்மையப்ப நல்லூர் எனும் அழகான கிராமத்தில் எளிய மனிதர்களின் வாழ்வியலில் நடந்தேறிய அரசியல் சார்ந்த மாற்றங்கள், கொள்கை சார்ந்தும், அப்போதுதான் வேர்பிடிக்கத் தொடங்கியிருந்த நாத்திகம், பகுத்தறிவு, சுயமரியாதை சித்தாத்தங்கள் சார்ந்தும் அந்த வெள்ளந்தி மனங்கள் அடைந்த அறிமுகங்களையும், தடுமாற்றங்களையும், தங்களை ஓரிடத்தில் நிலை நிறுத்திக் கொள்வதற்கான அவர்களின் நகர்வுகளையும் ஒரு குறுக்கு வெட்டுச் சித்திரமாக சொல்லிச் செல்கிறது “சாலாம்புரி”.

வெண்ணிலாவின் பதினைந்து வயதிற்குள்ளான அவரின் நினைவடுக்கில் பதிந்த, பார்த்த, கேட்ட மனிதர்களின் வாழ்க்கைச் சித்திரம். ஏன் ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முந்தைய ஒரு சமூக வாழ்வை இப்போது எழுதிப் பார்க்கத் தோன்றியது என்பதற்கு வெண்ணிலா பதில் சொன்னார். கொள்கை, சித்தாந்த, மத வேறுபாடுகளால் மிக எளிதில் பிளவுறும், புண்படும், பிரிவினைவாதம் தலைதூக்கும் இக்காலகட்டத்தில், எத்தனை முரண்கள் கொண்டிருந்தாலும், வாழ்வியலில் அவை பாதிக்காதவாறு, ஒன்றுடன் ஒன்று இணைந்து முரண்பட்டு இயங்கி “மனிதம்” எனும் புள்ளி சிதையாதவாறு எப்படி அச்சமூகம் நகர்ந்து பயணித்தது என்பதை நினைவுகளில் திரும்பிப் பார்க்க வேண்டும் போலிருந்தது என்றார். நெற்றியில் திருநீறில்லாமல் பார்க்க முடியாத முகங்களின் மனங்களில் நாத்திகம் நுழையும் போதிருந்த தருணத்தின் சிக்கல்கள் தன் பால்ய கால அனுபவங்களோடு இணைந்து மேலெழுந்து எழுத வைத்ததாகச் சொன்னார். கிழமைகள், பொழுதுகள், சகுனங்கள் எப்படி காரண காரியங்களோடு இணைந்து அம்மனங்களில் ஆழப் பதிந்திருந்தது என்பதையும் குறிப்பிட்டார் (“செவ்வாய்க்கிழமையும் அதுவுமா வீட்டுல கொஞ்சம் கூட அரிசி வைக்காம எல்லாத்தையும் கொண்டு வந்துட்டியா?”; அம்மு இப்போதும் வீட்டில் வெள்ளிக்கிழமைகளில் கண்ணாடிப்பொருள் உடைந்தால் விசனமுறுவார்; அதுபோல் வெள்ளிக்கிழமைகளில் யாருக்கும் பணம் கொடுப்பதும் இல்லை ;) ). வெண்ணிலா விவரித்த பால்யத்தின் அந்தத் திருவிழாக் காட்சிகள்…ஆஹா.

நாவலில் ஓர் உரையாடல் – “கடவுள் இல்லைன்ற கொள்கை நம்மூர்ல ஜெயிக்க வாய்ப்பே இல்ல. உன்னையும் என்னையும் போல ஊருக்கு பத்து பேர் வேணும்னா சொல்லிட்டிருக்கலாம். ஆனா யதார்த்தத்துல கடவுள் இல்லைன்னு பேசிட்டு வீட்டுக்கு வந்து கிருத்திகைக்கு சோறு படைச்சி காக்காய்க்கு சோறு வச்சிட்டுதான் சாப்பிடணும். நமக்கும் கடவுளுக்கும் என்ன பங்காளி சண்டையா? சாமி மேல என்ன கோபம்? அவர் இருந்தா இருந்துட்டுப் போகட்டுமே. அவர் பேரச் சொல்லி நான் உசத்தி நீ தாழ்த்தின்னு சொல்றதுதானே வேணாம்னு சொல்றோம்”

சார்ந்திருக்கும் கட்சியின் கொள்கைகள் வேறாயினும், பல காலம் மனதினுள் ஊறிப்போன சமயம் சார்ந்த நம்பிக்கைகளை விடமுடியாமல் தடுமாறும் சில கதாபாத்திரங்களின் வார்ப்பு நன்கு வெளிப்பட்டிருப்பதாக முத்தையா குறிப்பிட்டார் (நடராஜனின் தாய்மாமா சபாபதி சொல்கிறார் “வெளியில் சொன்னால் சிரிப்பார்கள். பேருக்கு திமுக காரன்; கற்பனையெல்லாம் சிவபெருமான்”. நடராஜனே ஓரிடத்தில் குறிப்பிடுகிறார் “சின்ன வயசுல ‘கஷ்டம் வராம பார்த்துக்க முருகப்பா’னு உள்ளுக்குள்ள கைகூப்புவேன். இப்ப உள்ளுக்குள்ள கும்புடணும்னா தெளிவா இல்லாம பல முகங்கள் வருது”).

வண்ணதாசன் ஐயா, நடராஜனும், வடிவேலுவும் பேசிக்கொண்டே நடந்துசெல்லும் அந்தப் பின்னிரவிலிருந்து தன் உரையாடலைத் துவங்கினார். எழுபதுகளின் திராவிட அரசியலைப் பேசிய தமிழ்மகனின் “வெட்டுப்புலி” (சரித்திரப் பின்னணியில் எழுதப்பட்ட நாவலான தமிழ்மகனின் படைவீட்டிலும் மறை அடையாளமாக திராவிட அரசியல் இருக்கலாமென்று தான் நினைப்பதாகவும் குறிப்பிட்டார்), கலாப்ரியாவின் “வேனல்” நாவல்களைக் குறிப்பிட்டு, “சாலாம்புரி”-யில் அதற்கு முன் சென்று துவக்ககால திராவிட அரசியலைக் களமாகக் கொண்டதற்காக வெண்ணிலாவை நிறைவுடன் பாராட்டுவதாகத் தெரிவித்தார். கங்காபுரம், இந்திரநீலத்தை விட “சாலாம்புரி”-யில் வெண்ணிலா ஒரு நல்ல நாவலாசிரியராக பரிணமித்திருப்பதை தான் உணர்ந்ததாகவும் குறிப்பிட்டார். நாவலின் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் ஆழ்ந்து விரிவாகப் பேசினார். எழுத்தாளனாகவும், வாசகனாகவும் “சாலாம்புரி”யில் உரையாடல்கள் மிகச் சிறப்பாக வந்திருப்பதை சுட்டிக்காட்டினார். இறுதியாக எம்.வி.வி-யின் “வேள்வித் தீ”, சுப்ரபாரதி மணியனின் “தறி” வரிசையில் “சாலாம்புரி”யும் தனக்கான இடத்தைத் தக்கவைக்கும் என்று வாழ்த்தினார்.

நிகழ்வில் வெண்ணிலா சொன்னது போல் “கொள்கை, கோட்பாடுகளைக் கடந்து வாழ்தலுக்கான நெறியாக அன்புதான் இருக்கிறது”. “சாலாம்புரி” வெண்ணிலாவின் பால்யத்தின் இடைவிடாத தறிச் சத்தங்களின் ஓசைகளினூடே வெண்துணியில் சிவப்பும் கறுப்புமாய் சாயங்கள் ஏறும் ஒரு நெசவு…

வெங்கி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 09, 2022 10:30

அருட்செல்வப் பேரரரசன்- பேட்டி

அருட்செல்வப் பேரரசன் முழு மகாபாரதத் தொகுதிகள் வாங்க இராமாயணம் முழுமையாக – இணையதளம் முழு மகாபாரதம் இணையதளம் ஹரிவம்சம் இணையதளம்

அருட்செல்வப் பேரரசன் பேட்டி. முழுமகாபாரதத்தை மொழியாக்கம் செய்த அருட்செல்வப் பேரரசனை பொதிகை தொலைக்காட்சிக்காக சித்ரா பாலசுப்ரமணியம் பேட்டி

அரசன் ராமாயணம் தொடக்கம்

‘அரசன் பாரதம்’ பாராட்டுவிழா

அருட்செல்வப் பேரரசன் சந்திப்பு

‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்

விழா 2- அருட்செல்வ பேரரசன் பதிவு

கங்கூலி பாரதம் தமிழில்

ஹரிவம்சம் தொடக்கம் – அருட்செல்வப் பேரரசன்

அருட்செல்வப் பேரரசன் பேட்டி- கல்கி

அருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…

அரசன் பாரதம் -சீனு

அரசன் மகாபாரதம்- சாரு நிவேதிதா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 09, 2022 10:30

January 8, 2022

தளிருலகு

நித்ய சைதன்ய யதியிடம் பின்னாளில் பல ஆண்டுக்காலம் பலரும் நினைத்து கேலிசெய்யும் கேனத்தனமான கேள்விகள் பலவற்றை நான் கேட்டிருக்கிறேன். அவற்றில் முதன்மையானது அவர் குழந்தைகளிடம் கொஞ்சி விளையாடுவதைப் பற்றி நான் கேட்டதுதான். ”நீங்கள் துறவி, துறவிகள் குழந்தைகளிடமும் பெண்களிடமும் பழகக்கூடாது என்பது துறவின் நெறி அல்லவா?”

நித்யா “நான் குழந்தைகள் முன் வெறும் கிழவன்” என்று சுருக்கமாகப் பதிலளித்தார். எனக்கு அவர் சொன்னது புரியவில்லை. வெவ்வேறு புகைப்படங்களில் அவர் குழந்தைகளுடனும் சிறுமிகளுடனும் விளையாடும் காட்சி உள்ளது. அப்போதிருக்கும் சிரிப்பும் உடல்மொழியில் வெளிப்படும் எடையற்ற தன்மையும் அவரிடம் வேறெப்போதும் இருப்பதில்லை.

பின்னர் துறவு பற்றி இன்னொரு ஆய்வாளர் விளக்கினார். “துறவு என்பது ஒன்று அல்ல. எல்லா மரபுகளுக்கும் துறவின் நெறிகளும் ஒன்றல்ல. சைவ வைராகிகளுக்கு பெண்களும் குழந்தைகளும் முழுக்கமுழுக்க விலக்கப்படவேண்டியவர்கள். உண்மையில் அவர்களுக்கு பொன்,வெள்ளி, அருமணிகள், பூஜைக்குரியவை அல்லாத மங்கலப்பொருட்கள் அனைத்துமே விலக்கப்படவேண்டியவைதான்”

”ஆனால் சைவ வைராகிகளின் நெறிகளை கடைப்பிடிக்கும் சைவ ஆதீனகர்த்தர்கள் பொன்பொருள் அனைத்தையும் கையாள்வதில் தடையில்லை என்றும் நெறியுள்ளது. அவர்கள் பொன்னால் ஆபரணம் அணிந்துகொள்கிறார்கள். பொன்னால் மூடி அவர்களை வழிபடுவதையும் காண்கிறோம்” என அந்த ஆய்வாளர் தொடர்ந்தார்.

“துறவுநெறிகள் என்பவை அந்த மெய்யியல் கொள்கையின் அடிப்படையில், அதற்குரிய பயிற்சிகளின் அடிப்படையில், அத்துறவிகள் ஆற்றவேண்டிய பணிகளின் அடிப்படையில் வகுக்கப்படுகின்றன. செயல்களுக்கேற்ப, தனிநபர்களுக்கு ஏற்ப விதிவிலக்குகள் அளிக்கப்படாத எந்த துறவுநெறியும் எங்கும் இல்லை.”

முழுமையான உலகியல் துறவு என்னும் கருதுகோள் மகாபாரதத்திலேயே இருந்தாலும்கூட அன்று அது மையமான போக்காக இருக்கவில்லை. மகாபாரத ரிஷிகள் மணம்புரிந்துகொண்டவர்கள், பலர் ஊனுணவு உட்பட அனைத்தும் உண்பவர்கள். முழுத்துறவை மையப்போக்காக நிறுவியவர்கள் சமணர்கள். பின்னர் பௌத்தர்கள். பௌத்த சங்கத்தின் நெறிகளே இன்று இந்து மத துறவியர் மடங்களுக்கு மட்டுமல்ல கிறிஸ்தவத் துறவியர் மடங்களுக்கும் மரபென வகுக்கப்பட்டுள்ளன.

அந்த துறவுநெறிகளுடன் பௌத்த மடங்களாகத் திகழ்ந்த அஜந்தா குகைகளில்தான் பேரழகிகளின் படங்கள் உள்ளன. அவற்றை வரைந்தவர்கள் பௌத்த துறவியரே என நம்பப்படுகிறது. அதை பலவாறாக விளக்கியிருக்கிறார்கள் என்றாலும் மிகச்சிறந்த விளக்கம் அவை உலகியலை கலையினூடாக உன்னதமாக்கிக் கொள்பவை என்பதுதான்.

பெண்ணழகு, பொன்னழகு, மலரழகு, நகர்களின் அழகு என இவ்வுலகில் நம்மைக் கவரும் அனைத்தும் கலையென மாறும்போது தூய கருத்துருவமாக ஆகின்றன. பொருள்வய அழகென அவை திகழும்போது கொள்ளவும், வெல்லவும் தூண்டும் விழைவுகளை உருவாக்குகின்றன. அந்த விழைவுகளை முற்றாக அகற்றி அவற்றிலுள்ள அழகை மட்டுமே முன்வைப்பவை அந்த ஓவியங்கள்.

கலையின் வழி அதுவே.   Sublimation. உன்னதமாக்கல். ஆகவேதான் கடுந்துயர் நமக்கு உலக அனுபவமென அமையும்போது அதை விலக்கவும் கடக்கவும் துடிக்கிறோம். ஆனால் இலக்கியமென, கலையென ஆகும்போது அதில் திளைக்கிறோம்.

அத்வைத மரபுகளில் வெவ்வேறு வகையான துறவுநெறிகள் உள்ளன. சில மரபுகள் முழுக்கமுழுக்க கலையையும் இலக்கியத்தையும் இசையையும் விலக்குபவை. உன்னதமாக்கல் நிகழ அனுமதிக்காமல் அவ்வண்ணமே உலகியலை அணுகுபவை. கலையிலக்கியத்தை அனுமதிக்கும் மரபுகளின் நெறிகள் வேறு. நாராயண குருகுலம் என்றும் கலையிலக்கியத்திற்கு இடமுள்ளது. அஜந்தா குகைகளைப் போல.

நித்யா பின்னர் குழந்தைகளைப் பற்றிச் சொன்னார். “நான் தூய இருப்பாக உணரும் தருணம் குழந்தைகளிடமும் மலர்களிடமும் அமைவதே. ஒவ்வொரு நாளும் மலர்களைப் பார்க்கும் வாழ்க்கையே உயர்ந்தது என எண்ணுகிறேன். குழந்தை என மலர் என வந்து நம் முன் நிற்பது பிரம்மத்தின் தூய தருணங்களில் ஒன்று”

“குழந்தையை உணர முதுமை தேவையாகிறது” என்று நித்யா சொன்னார். “இளமையில் நம்மை நாம் எனும் ஆணவம் நிறைந்திருக்கிறது. நாம் ஆற்றப்போகும் செயல்கள், நமது வெற்றிகள் நம் மேல் ஏறி அமர்ந்திருக்கின்றன. மெல்லமெல்ல காலம் நம்மை இறுக்கம்தளரச் செய்யும்போது நாம் குழந்தைகளைக் கண்டடைகிறோம். இங்கு ஓயாது நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மகத்தான நிகழ்வை கண்கூடாகக் காண ஆரம்பிக்கிறோம்”

அன்றும் அதை யோசித்திருக்கிறேன். உணர்ந்ததில்லை. இன்று, ஓர் இலக்கியவிழாவில், ஒரு பொது நிகழ்வில் குழந்தை ஒன்றை காண்கையில் உள்ளம் மலர்ந்துவிடுகிறது. இச்சொற்கள் எவற்றுக்கும் பொருளில்லை என்று அப்போது தோன்றிவிடுகிறது. குழந்தைகளின் உலகத்திற்குள் செல்வதைப்போல நிறைவென வேறொன்றும் தோன்றுவதில்லை.

குழந்தைகளின் உலகுக்குள் பெரியவர்கள் செல்வதற்கு முதன்மையான வழி என்பது பெரும்பாலும் குழந்தைகளைக் கவனித்துக்கொண்டிருப்பதுதான். குழந்தைகளுடன் நாம் ‘விளையாட’ ஆரம்பித்தால் நாம் குழந்தைகளை நம்மை நோக்கி இழுக்க ஆரம்பிக்கிறோம். குழந்தைகள் நம்மை கவரும்படி நடந்துகொள்ள ஆரம்பிக்கின்றன. இல்லையேல் நம்மை தொந்தரவுசெய்கின்றன. ஏனென்றால் அவை உண்மையிலேயே பெரியவர்களாக விரும்புகின்றன.

குழந்தைகள் உலகத்தை அறிந்துகொண்டே இருக்கின்றன. புத்தம்புதிய உள்ளம் உலகை அறியமுயல்கையில் ஒரு புத்தம்புதிய உலகம் பிறந்தெழுகிறது. அந்த உலகம் நமக்கு புதியது. அதற்குள் நுழைவதற்கு குழந்தைகளை வெறுமே கவனிப்பதே மிகச்சிறந்த வழி.

இந்தியப்பெருநிலத்தில் நான் சென்ற எல்லா ஊர்களிலும் குழந்தைகளைக் கையிலெடுத்திருக்கிறேன். நான் கற்பனையே செய்யமுடியாத எதிர்காலத்து இந்தியாவை தொட்டு எடுப்பதுபோல என்று நினைத்துக்கொள்வேன். எத்தனையோ முகங்கள் நினைவிலெழுகின்றன. பூட்டானில் நான் விளையாடிய சிறுவர்களுக்கெல்லாம் இப்போது குரல் உடைந்திருக்கும். லடாக்கில் நான் கையிலெடுத்து கொஞ்சிய அந்தப் பெண்குழந்தை ’பேமா’ இப்போது பள்ளிக்குச் சென்றுவிட்டிருப்பாள்

அந்த உலகின் விந்தைகள் எப்போதுமே எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் ஆட்கொள்கின்றன. நான் முன்பொருமுறை அ.முத்துலிங்கம் அவர்களுக்கு எழுதினேன், ‘குழந்தைகள், விலங்குகளின் இயல்புகளை எழுதத்தெரியாதவர் பெரிய கலைஞர் அல்ல’. எனக்கு பிடித்தமான பெருங்கலைஞர்களின் உலகில் வரும் குழந்தைகளை நான் மறந்ததே இல்லை. அவர்களே குழந்தைகளாக மாறி நின்றிருக்கும் வடிவங்கள் அல்லவா அவை? நித்யாவின் சொற்களில் சொல்லப்போனால் இமையமலையே கூழாங்கல்லாக மாறி நம் கைகளுக்கு வந்து சேரும் நிலை.

அன்று அதை வியப்புடன் கேட்டுக்கொண்டு ‘நான் குழந்தைகளைப் பற்றி எழுதியதே இல்லையே’ என்று சொன்ன அ.முத்துலிங்கம் பின்னர் தன் பேத்தி அப்சரா பற்றி அற்புதமான சித்திரத்தை தன் கதைகளினூடாக உருவாக்கினார்.

தமிழ்க் கவிஞர்களில் முகுந்த் நாகராஜன், ஆனந்த் குமார் இருவரும்தான் அழகான குழந்தைச் சித்திரங்களை கவிதையில் உருவாக்கியவர்கள். ஆனந்த்குமாரின் மகனை ஈரோட்டில் ஓர் ஓட்டலில் சந்தித்தேன். மாபெரும் கதைசொல்லி. தன்நடிப்புடன் உற்சாகமாக தன் உலகைப்பற்றிச் சொன்னபோது ஆனந்த்குமார் சிறியவராக மாறி அப்பால் விலகிவிட்டார்.

“நீ போன அங்கெல்லாம் பாம்பு இருக்குமே. என்ன பண்ணினே?” என்று நான் கேட்டேன். “நான் காலை விரிச்சு விரிச்சு நடப்பேன். கதவு தொறந்திருக்குன்னு பாம்பு நடுவாலே போயிடும்” என்று அவன் சொன்னான்.

எத்தனை மகத்தான புனைகதையிலும் ஆசிரியனுக்கு புனைவேது மெய்யேது என்று தெரிந்திருக்கிறது. அது ஒரு குறைதான். குழந்தைக் கதைசொல்லிகளின் உலகம் உண்மை மாயை என்பது அழியும் இரண்டின்மையை எய்திவிட்டிருப்பது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 08, 2022 10:35

மழை தழுவும் காட்டின் இசை

விஷ்ணுபுரம் பதிப்பகம்

சமீபத்தில் காடு இரண்டாம் முறை வாசிக்க ஆரம்பித்து நேற்று முடித்தேன். முதல் முறை போலவே இம்முறையும், அந்த இசைமழை ஆரத்தழுவி என்னை மூழ்கடித்தது. இந்த முறை சற்று அதிகமாகவே.

முதல் வாசிப்பு நிகழ்ந்தது ஓசூரில். அநேகமாய் 2004 அல்லது 2005-ல் இருக்கலாம். ஜெ-யின் எழுத்துக்களுடன் அறிமுகமில்லாத காலம். ஓசூர் நூலகத்தில் உறுப்பினராகி மூன்று கார்டுகளில் புத்தகங்களை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தேன். ஓசூர் நூலகம் அப்போது தளி ரோட்டில் பெரிய ஏரியை ஒட்டி இருந்தது. எப்போதுமே நூலகத்தில் புத்தக அடுக்குகளில் நல்ல புத்தகங்களைத் தேடி எடுக்க முடியாது. அதனால் புத்தகங்கள் மாற்றச் சென்றால், முதலில் நூலகருக்கு அருகில் மற்றவர்கள் திருப்பியிருக்கும் புத்தகங்களில்தான் தேடுவது. ரமணி சந்திரன்களுக்கும், சுஜாதாக்களுக்கும் நடுவில் ஒருநாள் அப்படிக் கிடைத்ததுதான் காடு.

வீட்டிற்கு எடுத்து வந்து, அவ்வார இறுதியில் சனி இரவு படிக்க ஆரம்பித்தேன். கீழே வைக்கவே முடியாமல், அதிகாலை இரண்டு மணி வரை வாசித்துக்கொண்டிருந்தேன். அம்மு எழுந்து வந்து “இன்னும் தூங்கலயா பாவா? எட்டு மணிக்கு ஆஸ்ரம் போகணும் இல்லயா?” என்றார்.

***

அன்று ஞாயிறு ஆஸ்ரம் போகும்போது காடையும் உடன் எடுத்துச் சென்றேன். ஆஸ்ரமத்தின் மரங்களினடியில், விநாயகர் மண்டபத்தில், பரந்த தியான அறையில், வசிப்பிட குடில்களுக்கு மத்தியில்…எல்லா இடங்களிலும் காடு-டன்தான், காட்டை வாசித்துக் கொண்டுதான் இருந்தேன். இயல் ஊஞ்சலிலும், ஆஸ்ரமத்தில் வேலை செய்யும் சாரதாவோடும் விளையாடிக் கொண்டிருந்தார். மல்லிகா சமையலறையில் கலாம்மாவுக்கு உதவி செய்துகொண்டிருந்தார். காடு – அபாரமான வாசிப்பனுபவம் தந்தது. மனம் முழுவதும் பசுமையாகி விட்டது மாதிரி, விரிந்து பரவி…சின்னப் புற்களெல்லாம் விஸ்வரூபமெடுத்து புன்னகைத்தன. மரங்களின், செடிகளின் இலைகள் ஆனந்தப் பச்சையாக மாறியிருந்தன. ஆஸ்ரமத்திலிருந்து மாலை கிளம்பும்போது தூறல் போட்டது. வழியெல்லாம் இரண்டு பக்கமும் பச்சை. குளித்துத் தலைதுவட்டி, கூந்தல் தொங்க விட்டு உலர்த்தும் அடர் பச்சையின் யௌவனம். மனது மிகவும் சந்தோஷமாயிருந்தது.

எனக்கு, மனதில் முதலில் சட்டென்று ஒட்டிக்கொண்டது அந்த பசுமைக் குறிஞ்சிதான். மழை பெய்யும் காடு…என் கல்லூரி வாழ்க்கையில் மறக்கமுடியாத இரு பயணங்கள்/இரு வகுப்புகள் குறிஞ்சியில் நான் கழித்த நாட்கள். ஒன்று வால்பாறையில் நாங்கள் பங்குகொண்ட தேயிலை தொடர்பான பயிற்சி வகுப்புகள். மற்றொன்று ஏற்காட்டில் – காபி பயிர் தொடர்பாக. பயிற்சிக் காலங்களில் தோட்டக்கலை ஆராய்ச்சிப் பண்ணைகளில் அங்கேயே தங்கியிருப்போம். அந்த நாட்களில் நான் அடைந்த பரவசங்களை, இனிய நினைவுகளை எல்லாம் காடு மேல் கொண்டு வந்தது. தடியன் குடிசை, பேச்சிப் பாறை, கல்லார் மற்றும் பர்லியார், குன்னூர்…வகுப்புகளுக்காகப் பயணித்த எல்லா இடங்களும் அந்த அடர் வனத்தின், குளிரின் மணத்தோடு உள்ளெழுகின்றன.

***

குட்டப்பனின் வாழ்வு கிரி சொன்னதுபோல் ஒரு ஜென்ம ஈடேற்றம்தான்.

குரிசு பற்றி, குட்டப்பன் “அவனுக்க வாசிப்பும் அவனும். கேட்டுதா கொச்சேமான்…இண்ணேத்து இவன் ஒரு தாளைக் காட்டி, குட்டப்பா இது என்னலே எளுத்து எண்ணு கேக்குதான். எளுத்தை சொரண்டி கையில குடுத்தேன். கொசுவு செத்து ஒட்டியிருக்கு ஏமான்…” – சிரித்து கண்ணீர் வந்துவிட்டது. குட்டப்பன் சட்டென்று அணுக்கமாகி ஆரம்பத்திலேயே மனதில் நெருங்கியிருந்தான்.

“…துக்கங்களில சீக்கிரம் மறக்குத துக்கம் மரணம்தான்னு அப்பன் சொல்லியதுண்டு…” குட்டப்பனின் வார்த்தைகள் இன்னும் மனதில் சுழல்கின்றன. குட்டப்பனின் பேச்சு எல்லாமே அனுபவங்களின் வண்ணம் கொண்டு நிகழின் குரல்போல ஞாபகத்தில் எழத்தான் செய்கின்றன.

குரிசை வளர்த்த ஃபாதரின் கதை குட்டப்பனின் வார்த்தைகளில் விரியும்போது மேலும் சிரிப்பு.

“அதொக்க ஒரு காலம் ஏமானே. இனியிப்பம் கரஞ்சாலும் வராது. இப்பமும் அவனெக் கண்டாலும் எனக்கு சங்கில ஒரு குளிரு வரும். செத்து மன்ணடஞ்சாலும் அது மறக்குமா? ஏமான் கண்டுட்டுண்டா, சின்னாளப் பட்டுக்கு நெறமும் பூவும் ஒக்கெ கீறி நாறிப் போனாலும் கரை மட்டும் மங்காம இருக்கும். வலிஞ்சு நாறி அடுக்களை துணிக்கு சீலயாட்டு ஆனாலும் எடுத்து பாத்தா கரயும் சுட்டியும் கன்ணு முளிச்சு பாக்கும். அது மாதிரியாக்கும்.”-சிநேகம்மை பேசும்போது எனக்கும் சிநேகம்மையின் கைபிடித்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது.

அந்த ஐந்தாம் அத்தியாயம், காஞ்சிர மரம், அட்டகாசமான ஒரு சிறுகதை. “திருவனந்தபுரம் அரண்மனையில் இளையராஜா பாலராமா வர்மாவுக்கு பதினெட்டு வயதில் தீராத வாத ரோகம் வந்தது…“ வரியில் ஆரம்பித்து, சரசரவென்று விரைந்த மனம், “அதாக்கும் சங்கதி, கேட்டுதா ஏமானே…“ என்ற குட்டப்பனின் குரல் கேட்டுத்தான் நிலை திரும்பியது. கச்சிதமான, விறுவிறுப்பான…என்னை மயக்கிய அத்தியாயம். ஒரு குறுநாவலை, ஒரு அத்தியாயமாய் சுருக்கியது போல்… ஜெ வார்த்தைகளையும், வாக்கியங்களையும் எப்படி அமைத்திருக்கிறார் என்று கவனிப்பதற்காகவே மறுபடி மறுபடி வாசித்துக்கொண்டிருந்தேன்.

முதல் வாசிப்பில் நீலியின் “அய்யோ ஞாக்கு நேரமாயி. அச்சன் வருந்ந சமயமாயி…” சிணுங்கல்கள் மனதில் நிறைந்திருந்ததென்றால், இரண்டாம் வாசிப்பில் குட்டப்பன் மனம் முழுக்க பரவி நிறைந்திருந்தான்.

கிரியின் காட்டின்/மலையின் அனுபவங்கள், நீலியுடனும், அய்யருடனும், குட்டப்பனுடனும், கபிலருடனும் ஒரு உணர்வுகள் மிகுந்த கவிதை என்றால், கீழே அவன் வாழ்வு 180 டிகிரி திரும்பிய, பசுமை நிறமிழந்து தரைதொட்டு பழுப்பு நிறம் கொண்ட, உலகியலின் நிதர்சனத்தை அப்பட்டமாய் மனதில் அறையும் அத்தியாயங்கள். இரண்டுமே நிஜம்தான் இல்லையா?. கிரி காட்டில் இருக்கும்போதான அத்தியாயங்களில் சட்டென்று உயர் எழுந்து பறந்த மனது, நாவலின் முடிவான அத்தியாயங்களில் நிதர்சனத்தை உணர்ந்து, வாழ்வின் முழுமையை தரிசித்தது. நீலியின் உன்மத்தம் பிடித்த கிரியின் எண்ணங்களை ஜெ எப்படி எழுதியிருக்கிறார் என்று இம்முறை கூர்ந்து கவனித்தேன்.

***

கல்லூரியில் படிக்கும் போது தேயிலை பயிர் பயிற்சிக்காக வால்பாறையில் தங்கியிருந்தபோது, ஒருநாள், பக்கத்திலிருக்கும் தனியார் பண்ணையைப் பார்க்க அழைத்துச் செல்லப்பட்டோம். கல்லூரிப் பேருந்தில் சென்று இறங்கியதும், பண்ணையின் மேலாளர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, பண்ணை இயங்கும் முறைகள் பற்றி சிறு அறிமுகம் தந்துவிட்டு, பண்ணையை சுற்றிக்காட்ட அழைத்துச் சென்றார். நானும் கொஞ்சதூரம் சென்றுவிட்டு, சரிவுகளில் ஏறி இறங்க முடியாமல், திரும்பி வந்து பேருந்து அருகில் நின்றுகொண்டேன். மழை வரும்போலிருந்தது. மேகங்கள் அடர்த்தியாய் மூடியிருந்தன. ஸ்வெட்டரை மீறியும் குளிர் இருந்தது. பேருந்து ஒரு மரத்தினடியில் நிறுத்தப்பட்டிருந்தது. அருகில் ஓடு வேய்ந்த ஒரு சிறிய கட்டிடம். அலுவலகமாகவோ ஸ்டோராகவோ இருக்கவேண்டும். பக்கத்தில் சிமெண்ட் தளம் போட்ட நீண்ட அகலமான களம்.

மழை மெலிதாய் தூற ஆரம்பித்தது. பேருந்தினுள் ஏறி உட்கார்ந்துகொண்டேன். தூரத்தில் சரிவில் வரிசை வீடுகள் தெரிந்தன. மலைப்பிரதேசங்களில் பயணிக்கும்போதெல்லாம் ஏன் மனம் சட்டென்று அமைதியாகி விடுகிறது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஒரு நிதானம் புகுந்துவிடுகிறது. குன்னூர், ஊட்டி பயணிக்கும் ஒவ்வொரு முறையும் இந்த வித்தியாசத்தை உணர்ந்திருக்கிறேன். மேட்டுப்பாளையம் வரை இருக்கும் மனது வேறு. மேலே ஏற ஆரம்பித்ததும் மனம் வேறு தளத்திற்கு நகர்ந்துவிடும்.

பேருந்தை நோக்கி ஒரு குட்டிப்பெண் ஒரு ப்ளாஸ்டிக் கூடையைத் தூக்கிக்கொண்டு வருவது தெரிந்தது. நான் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தேன். பேருந்து அருகில் வந்து “மாமா…” என்றது. நான் கீழிறங்கி “என்ன பாப்பா…” என்றேன். முகத்தில் தூய்மையும், விகசிப்பும். கூடையை என்னிடம் கொடுத்து “அம்மா எல்லாருக்கும் கொடுக்கச் சொன்னாங்க…” என்றது. கூடை நிறைய பழங்கள்; ஆரஞ்சுகளும், ஆப்பிள்களும். நான் வாங்கிக்கொண்டு “ரொம்ப தேங்க்ஸ் குட்டி…மழை தூறுதே… அப்பறமா வந்துருக்கலாமே…” என்று சொல்லிவிட்டு “பாப்பா பேரென்ன…வீடு எங்கயிருக்கு?” என்றேன். “கயல்” என்று சொல்லிவிட்டு தூரத்து வரிசை வீடுகளை சுட்டிக்காட்டியது. நண்பர்களும், மேலாளரும் மழையினால் சீக்கிரமே திரும்பினர். “இவங்க கயல்…நமக்கு ஃப்ரூட்ஸ் கொண்டு வந்துருக்காங்க…” என்று நண்பர்களிடம் சொன்னேன். நண்பிகள் கயலின் கன்னம் நிமிண்டினார்கள். கயல் சிரித்துக்கொண்டும், நெளிந்துகொண்டும் எங்கள் மத்தியில் குட்டி தேவதை போல் உரையாடியனார். காலி கூடையை திரும்ப வாங்கிக்கொண்டு குடுகுடுவென்று ஓடினார். இன்னும் கொஞ்சம் வெளிச்சம் குறைந்து தூறல் அதிகமாகியது. தூரத்தில் கயல் விரைவது தெரிந்தது. பேருந்தினுள், பையில் ஸ்நாக்ஸ்கள் இருந்தன. கயலுக்கு கொடுத்திருக்கலாம்.

எனக்கு அம்மாவின் ஞாபகமும், வகுப்புத் தோழி மைத்ரியின் முகமும் மனதுக்குள் மேலெழுந்தது. மைத்ரி என்ன செய்கிறார் என்று கண்கள் அலைபாய்ந்து தேடியது. மைத்ரி கலாவிடம் பேசிக்கொண்டு எப்போதும்போல் உதடுகள் பிரியாமல் புன்னகைத்துக் கொண்டிருந்தார். மைத்ரி, கிட்டத்தட்ட குறிஞ்சியின் நீலி. ஆனால் சிவந்த நீலி. ஊட்டியைச் சேர்ந்தவர். படுகர் வகுப்பு. உடன் இளமறிவியல் தோட்டக்கலை படித்துக்கொண்டிருந்தார். ”சுனைப்பூ குற்று தைஇவனக்கிளி…” கபிலனின் பெருமூச்சுடன் தலைகுனிந்துகொண்டேன்.

ஏற்கனவே மலையின், மழையின் நெகிழ்விலிருந்தேன். மனம் இன்னும் அமைதியில் ஆழ்ந்தது. குறிஞ்சிப் பூக்களைப் பார்க்க நீலியுடன், கிரி மரக்கிளைகளினூடே செல்லும் அந்த மழைப் பயணம் ஈரமாய் மனதில் இன்னும்…

#”இதுதான் தேவலோகம்” என்றேன். “கீழே மேகங்கள் பாத்தியா?”

“தேவலோகம்நு வச்சா?”

“தெய்வங்கள் இருக்கிற இடம்?”

“தெய்வங்ஙள் காட்டிலல்லே.”#

ஆம்…தெய்வங்கள் காட்டில்தான்…காடு கடவுள்தான்..

வெங்கடேஷ் சீனிவாசகம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 08, 2022 10:34

டிசம்பர், பொன் முத்துக்குமார்

நான் அறையில் உள்ள ஒரு நாற்காலியில் அமர்ந்து, எதிரிலிருந்த வட்டவடிவ கண்ணாடி மேஜையில் அவர் பாதி படித்திருந்த புத்தகத்தை கையில் எடுத்தேன். பக்கத்திலிருந்த நீண்டு அகன்றிருந்த கண்ணாடி ஜன்னல் சென்னையின் நெரிசலை ஓவியமாக தீட்டிக் கொண்டிருந்து. இது நான் சற்றும் எதிர்பார்க்காத ஒரு தருணம்.

டிசம்பர்- பொன் முத்துக்குமார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 08, 2022 10:31

இசையிருவர்

நாதஸ்வரம் பற்றி இந்து நாளிதழின் துணையாசிரியரும், நாதஸ்வர – தவுல் ரசிகருமான கோலப்பன் ஒருமுறை சொன்னார். “நாதஸ்வரம் மட்டும் ரொம்ப நல்லா இருந்தா மட்டும்தான் கேக்கமுடியும். இல்லேன்னா வெறும் சத்தம்தான். சுமாரான வாசிப்புன்னு ஒண்ணு கிடையாது”

ஏனென்றால் சுமாராக வாசிப்பவர்கள் விட்டு விட்டு மூச்சிழுப்பார்கள். இசையலைகளை துண்டு போட்டு சிதைப்பார்கள். மூச்சு தீர்ந்துவிடும் உச்சத்தில் கூசவைக்கும் அபஸ்வரம் வெளிப்படும். ஆகவே நான் நாதஸ்வரத்தை ஓர் ஐந்து நிமிடம் கேட்பேன். அதிலேயே செவிகொடுப்பதா வேண்டாமா என்று முடிவுசெய்துவிடுவேன்.

சமீப காலமாக நல்ல நாதஸ்வரம் காதில் விழுவது அரிதாகிவிட்டது. ஏனென்றால் செலவு மிகுதி. கொங்குநாட்டில் பெருஞ்செலவில் திருமணவிழாக்களை நடத்துபவர்கள், நூறு வகை உணவுகளை பரிமாறி வீணடிப்பார்கள். ஆனால் மிகச்சுமாரான உள்ளூர் நாதஸ்வரக்காரர்களை கொண்டுவந்து வாசிக்கவைத்து அருங்கொடுமை செய்வார்கள். அரிதாக செவிகளின் விழுந்த நல்ல இசை சித்தார்த் பிரதித் இருவரும் இசைத்தது.

ஆனால் சினிமாப்பாட்டுகளுக்கு இவர்கள் வாசித்தவையே அதிகமும் காணக்கிடைக்கின்றன. இந்த இசை பிரபலமாக இதெல்லாம் தேவைப்படுகின்றனவோ என்னவோ. நாதஸ்வரம் இவர்கள் கையில் இனிதாக குழைகிறது. அபஸ்வரமே இல்லை. வாழ்க

https://www.youtube.com/channel/UCkv_mA-NwST-NgAiAkMxwdw

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 08, 2022 10:31

விஷ்ணுபுரம் விழா கடிதங்கள் 9

விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள் விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும்

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்

 

அன்பு ஜெ,

விஷ்ணுபுரம் விழா பதிவுகள் , படங்கள் , உரைகளை எல்லாம் கேட்டேன் . நிறைவாக இருந்தது . அமர்வுகள் மட்டுமே பதிவு செய்யப்படாது இருந்தது ( அதற்கான காரணங்களையும் சொல்லியிருக்கிறீர்கள் ) . அதுவும் கூட சில நண்பர்களின் கடிதங்களில் நினைவில் இருந்து சிறப்பாக தொகுத்து எழுதப்பட்டிருந்தது .விழாவுக்கு வர முடியவில்லை என்ற ஏமாற்றத்தை இவை ஓரளவு போக்கின . ஆனால் நேரில் உங்களையும் நண்பர்களையும் ,பெரும் வாசக சூழலையும் சந்திப்பது எழுத்தில்  நிகர் செய்ய முடியாத அனுபவம் தான்.

ஆவணப்படமும் சிறப்பாக வந்திருந்தது , ஆவணப்படம் இன்னும் விரிவாகவும் ‘ஆவணப்படுத்தும்’ தன்மையுடனும் இருந்திருக்க வேண்டும் என்று சில விமர்சனங்களை பார்த்தேன் ., ஆவணப்படங்களை விழாவுக்குக்கு, விவாதங்களுக்கும் கட்டுரைகளுக்கும் முழுமை அளிக்கும் வகையில் ஒரு supplement என்று தான் விளங்கிக் கொள்கிறேன் . முழுநீள ஆவணப்படம் என்பது அதனளவில் ஒரு தனித்த முன்னெடுப்பு . விழா குறித்தும் , ஆவணப்படம் குறித்தும் பேஸ்புக்கில் பதிவு எழுதியிருந்தேன் .

இந்த ஆண்டுக்கான திட்டங்கள் குறித்து உங்கள் குறிப்பு பார்த்தேன் . நாட்டார் தெய்வங்களை முன்வைத்த உருவாகவிருக்கும் நாவல் தமிழுக்கு முக்கியமான பங்களிப்பாக இருக்கும் . அசோகவனமும் கீதை உரையும் நெடுங்காலம் எதிர்பார்த்ததே .

உங்கள் விக்கிபீடியா சார்ந்த சிக்கல்களையும் வாசித்தேன் . நான் விக்கி பங்களிப்பாளன் அல்ல ஆனால்  தக்க காரணங்களோ, எச்சரிக்கையோ  இல்லாமல் பதிவுகள் முற்றாக அழிக்கப்பட்டது தவறுதான் . தமிழ் இலக்கியத்துக்கான தனி விக்கி அமைப்பதும் நல்ல முன்னெடுப்பு தான் பல பெரும் நிறுவனங்கள் தங்கள் நிறுவன தேவைகளுக்கு இது போன்ற தனிப்பட்ட விக்கிகளை ஏற்கனவே பயன்படுத்துகின்றன . தகவல்களை ஏற்றுவதை விட அதை புதுப்பித்து படியே வைத்திருப்பதே கடினமான பணி . அதை கருத்தில் கொண்டு திட்டமிட்டு செய்தால் இந்த முயற்சி சிறப்பாக கைகூடும் .

இதை எழுதும் போதே நண்பர் சாகுல் அழைத்திருந்தார் .நீங்கள் கையெழுத்திட்டு சாகுல் அனுப்பிய புத்தகங்கள் வந்து சேர்ந்திருந்தன . நன்றி . அடுத்த விழாவை நேரில் காணும் வாய்ப்பு அமையட்டும்

அன்புடன்

கார்த்திக்

அன்புள்ள ஜெ,

நெடுநாட்களாக நினைத்த கனவொன்று நிறைவேறியதைப் போல விஷ்ணுபுரம் விழாவில் கலந்து கொண்டது இருக்கிறது. இரண்டாவது நாள் விழாவில் மட்டுமே கலந்து கொள்ள முடிந்தது. ஆனால் இத்தனை ஆண்டுகள் எப்படி நடத்தியிருப்பீர்கள் என அறிந்து கொள்ள முடிந்தது.நான் நிறைய மார்க்ஸிய சிறு அமர்வு கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன்.அங்கு ஆழமான நிறைய விவாதங்கள் நடப்பதை கண்டிருக்கிறேன். ஆனால் ஒரு குறுகிய வட்டத்துக்குள் முடிந்து விடுகிறதே என நினைத்து கவலைப்பட்டதுண்டு.விஷ்ணுபுரம் நிகழ்வு என்பது இலக்கியத்திற்கான ராஜபாட்டை . பல எழுத்தாளர்களும் பல வாசகர்களும் ஒரே இடத்தில் சங்கமமாவது இங்கு தான். நான் பார்த்து வியந்த விஷயங்கள்

இளம் எழுத்தாளர்களை கெளரவிப்பது

2உங்களை எவ்வகையிலும் முன்னிறுத்தாமல் ஒரு பார்வையாளனாய் இருத்திக் கொள்வது

நிகழ்ச்சிக்கான நேர ஒழுங்கு குறிப்பாக ஒரு நிகழ்வு முடிந்தவுடன் அடுத்த நிகழ்வு தொடங்குவது.

4.நான் இயக்குனர் வசந்திடம் கேட்ட வினாவிற்கு மிக அருமையாக பதில் தந்தார். பலரும் திரையுலகில் எழுத்தாளர்களின் பெயரைக் கூட டைட்டில் கார்டில் போடுவதில்லை என்ற ஆதங்கத்தை தெரிவித்தார்.

5.ஒரு பெரிய எழுத்தாளர் என்ற எந்த பகட்டுமின்றி தேநீர்  வர தாமதம் என்றதும் நீங்கள் அங்குமிங்கும் சென்று அதற்கான வழி தேடியதை அருகில் நின்று கவனித்தேன

6.வாசகர்களுக்கு தங்குமிடம், உணவு கொடுத்து இலக்கிய விருந்து படைப்பது தமிழகத்தில் விஷ்ணுபுரம் நிகழ்வு மட்டுமே .

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எனக்கு பேரனுபவம்.கடைசி வரை உங்களுடன் பேச முடியாமல் போனது மட்டும் என் துரதிருஷ்டம்.

மாறாத அன்புடன்

ஆ.செல்வராஜ்

பட்டுக்கோட்டை

திசையெட்டும் தமிழ்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 08, 2022 10:30

January 7, 2022

சிறைப்பட்டவர்களின் வழிகள்

அன்புள்ள ஜெ

இந்த கேள்வியை தங்களை நேரில் சந்திக்கையில் கேட்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஆயினும் எனக்கு அவ்வளவு பொறுமை காக்க முடியாததால் இந்த கடிதம்.

தற்போது இந்த வாரம் கவிதை பயிலரங்கு கோவையில் நடந்தது. இதே போன்ற பல அரங்குகளை வருடம் முழுவதும் ஒருங்கமைக்கிறீர்கள். இந்த அரங்குகளில் கலந்து கொள்வது பலரது புரிதலை, உத்வேகத்தை பெருமளவு மேம்படுத்தி விடுவதை பார்க்கிறேன். இவற்றில் நேரடியாக கலந்து கொண்டு அடைபவற்றை வேறெவ்வகையிலும் நிகர் செய்ய முடியாது என்று அறிகிறேன். உங்கள் அருகமர்ந்து கற்க கூடியவற்றை வேறெப்படி அடைய முடியும்!

இவற்றில் கலந்துகொள்ள என் உடற்குறையை பெரும் தடையாக உணர்கிறேன். இந்த வாழ்க்கை என்னை கண்டடைந்த கலைக்கு, அதில் என்னை முற்றளித்து கொள்ள பெரிய அனுகூலம் ஒன்றை கொடுக்கையிலேயே இப்படி ஒரு தடையை வைக்கிறது. இதை நான் எப்படி கடந்து வெல்வது ?

அதற்கான வழியை நானே தான் தேடி கண்டடைய வேண்டுமா ? தங்களிடமிருந்து கிடைக்கும் வழிகாட்டல் என்னை தெளிவுப்படுத்தும்..

அன்புடன்

சக்திவேல்

***

அன்புள்ள சக்திவேல்,

உங்கள் உடல்நிலைச்சிக்கல் எனக்குத் தெரியும். நேரில் வந்திருந்தபோதும் இதைக் கேட்டீர்கள். நான் அப்போது ஒன்று சொன்னேன். உங்களுக்கு உடல்சார்ந்த வரையறைகள் உள்ளன. உடல்நிலை சிறப்பாக இருப்பவர்கள் எல்லாரும் விடுதலை கொண்டவர்கள் என்று அதற்குப்பொருள் இல்லை. ஒருநாளில் 18 மணிநேரம் வேலைசெய்தால் மட்டுமே வாழமுடியும் என்னும் நிலையில் இருப்பவர், பெரும் குடும்பப்பொறுப்புகளை வாழ்நாள் முழுக்க சுமப்பவர் உங்களைவிட சிறைப்பட்டவர்தான்.

அத்தகையவர்கள் என்ன செய்ய முடியும்? நேர்ச்சந்திப்புகள், இலக்கியக் கூடுகைகள், இலக்கியவிழாக்கள் மிக மிக முக்கியமானவை. இலக்கியத்தை ஓர் இயக்கமாக ஆக்குபவை அவைதான். நம்மைப்போன்ற பிறரை சந்திக்கிறோம். சமானமானவர்களுடன் உரையாடுகிறோம். நாம் இங்கிருக்கும் ஒரு தனிச்சமூகம் என்னும் உணர்வை அடைகிறோம். அத்துடன் இத்தகைய நிகழ்வுகளிலேயே நாம் தீவிரமாக இலக்கியம் போன்ற கலையில் முழுமூச்சாக நாள் முழுக்க திளைக்கிறோம். ஆகவே இவை தவிர்க்கக்கூடியவை அல்ல. ஆனால் இவற்றை அடையும் படியான வாழ்க்கைச்சூழல் அனைவருக்கும் இல்லை. பலர் வாழ்க்கையில் கட்டுண்டவர்கள்.

அவர்கள் செய்யக்கூடுவது ஒன்றே. அவர்கள் தொடர்ச்சியாக முயலவேண்டும். முடிந்தவரை நேர்ச்சந்திப்புகளுக்கான ஆர்வத்தையும் முயற்சிகளையும் தக்கவைக்கவேண்டும். ‘நம்மால் எப்படி முடியும்’ என சோர்வுநிலையை உருவாக்கிக்கொண்டு சாத்தியமான வாய்ப்புகளை நழுவவிடக்கூடாது. ‘அதெல்லாம் தேவையே இல்லை’ என்று போலிக்கொள்கைகளை உருவாக்கிக் கொள்ளக் கூடாது.

அப்படி என்றால் அதற்குரிய வாய்ப்புகள் அமையும். இணையான உள்ளம் கொண்டவர்களுடன் உரையாட இன்று பல வாய்ப்புகளை தொழில்நுட்பம் அளிக்கிறது. நாம் சூம் உரையாடல்களில் ஈடுபடலாம். குழுமங்களில் உரையாடலாம். எப்போதேனும் தனிப்பட்ட சந்திப்புகளை நிகழ்த்திக்கொள்ளவும் கூடலாம்.

அத்துடன், இந்த இழப்பு நமக்கு உள்ளது என்னும் பிரக்ஞை இருக்குமென்றால் அதை ஈடுகட்டும் அளவுக்கு விசையுடன் மற்ற தளங்களில் செயல்படலாம். நேர்ச்சந்திப்புகள் பல மாதங்களுக்கு நீளும் ஊக்கத்தை அளிக்கின்றன. அவை இயலாதென்பவர்கள் அந்த ஊக்கத்தை தாங்களே தங்கள் வாசிப்பின் வழியாக சிந்தனை வழியாக உருவாக்கிக் கொள்ளலாம். நம் மூளையின் மிகச்சிறப்பான ஓர் அம்சம் என்னவென்றால் நம்மால் நம் மூளையை மகிழ்ச்சியாகச் செயல்படவைக்கும் செரட்டோனின் போன்ற சுரப்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதே. நம்மை நாமே ஊக்கப்படுத்த முடியும், செயலுக்குத் தூண்டமுடியும்.

குறிப்பாக உங்களைப்போன்ற வரையறைகள் உள்ளவர்கள் எந்நிலையிலும் தன்னிரக்கச் சிந்தனைகளுக்குச் செல்லக்கூடாது. செரட்டோனினைப்போலவே சோர்வை உருவாக்கும் சுரப்புகளையும் நாமே உருவாக்கிப் பெருக்கிக்கொள்ள முடியும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். தன்னிரக்கம் சார்ந்து பேசுபவர்களை தவிர்த்துவிடுங்கள். அக்குரல்களுக்கு உள்ளும் புறமும் இடமளிக்காதீர்கள். ‘ஊக்கத்துடன் செயல்படச்செய்யும் புறச்சூழல் எனக்கு இல்லை. ஆகவே என் அகம் ஊக்கத்துடன் இருந்தாகவேண்டும். எந்நிலையிலும் அதை தளர்வடைய விடமாட்டேன்’ என்று உங்களுக்கு நீங்களே ஆணையிட்டுக்கொள்ளுங்கள்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 07, 2022 10:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.