Jeyamohan's Blog, page 747

July 13, 2022

புதுக்கவிதை என்னும் சொல்

சி.மணி அன்புள்ள ஜெ,தமிழ் விக்கி புதுக்கவிதையை Revival Poetry என்று மொழிபெயர்க்கிறது. (https://tamil.wiki/wiki/C._Mani). இதுதான் சரியான மொழிபெயர்ப்பா? நான் Modern Poetry என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். இதைப் பற்றி இணையத்தில் தேடியபோது Modernist Poetry என்ற பெயரும் தென்பட்டது (https://en.wikipedia.org/wiki/Modernist_poetry).Revival Poetry என்பதற்கு மதம் தொடர்பான ஒரு பொருளும் இருப்பது போல் தெரிகிறது.https://oxford.universitypressscholarship.com/view/10.1093/oso/9780197510278.001.0001/oso-9780197510278-chapter-1https://www.amazon.com/Things-Above-Revival-Poetry/dp/B09TBB3FYQநன்றிடி.கார்த்திகேயன்அன்புள்ள கார்த்திகேயன்,புதுக்கவிதை என்னும் சொல்லாட்சி எஸ்ரா பவுண்ட் பயன்படுத்திய New Poetry என்பதன் நேரடி மொழியாக்கம். க.நா.சு. அதைச் செய்தார். அதன்பின் அச்சொல் ஒரு கலைச்சொல்லாக நிலைகொண்டது. ஆனால் ஆங்கிலத்துக்கு தமிழில் இருந்து புதுக்கவிதை என்னும் சொல்லை மொழியாக்கம் செய்யும்போது  Modern Poetry என்பதே சரியான சொல். மறுமலர்ச்சிக்கால கவிதை என்னும் சொல்லாட்சிக்கே Revival Poetry என்பது பொருந்தும். இச்சொல்லாட்சிகள் பலசமயம் குழம்பிவிடுகின்றன. மாற்றிவிடுகிறோம். நன்றிஜெக.நா.சுப்ரமணியம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 13, 2022 11:31

பொன்னியின் செல்வன், கடிதங்கள்

 

பொன்னியின் செல்வன் நாவல்  யவனராணி- சாண்டில்யன் உடையார் -பாலகுமாரன் பர்ட்டன் ஸ்டெயின் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி

அன்புள்ள ஜெ

பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் நீங்கள் ஆற்றிய உரை கனக்கச்சிதமாக செதுக்கப்பட்ட உரை.மேடை ஏறிய பெரும்பாலானவர்கள் என்ன பேசுவது என்று தெரியவில்லை என்றார்கள்.ஆனால் நீங்கள் அதிகம் பேசப்போவதில்லை என்று ஆரம்பித்தீர்கள்.நீங்கள் எப்போதும் சொல்வது போல ஒரு ‘Anecdote’.

அந்த ஏழு நிமிட உரையின் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு கன்னி (பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை) ஆர்வமுடைய ஒருவருக்கு அது மிகப்பெரிய வாசலை திறக்கும். அதுபோல ஒவ்வொரு மேடையிலும் அதற்காக பணியாற்றிய முன்னோர்களையும் பெரியோர்களையும் நினைவு கூறிக்கொள்ளும் உங்களின் பணிவும் முதிர்வும் எனக்கு வியப்பளிக்கிறது.

இந்த ஆண்டு அடுத்தடுத்து நீங்கள் பணியாற்றிய திரைப்படங்களை பார்க்க ஆர்வமாக உள்ளேன்.என்னுடைய நண்பர் ஒருவர் தீவிரமான சிம்பு ரசிகர் அவருக்கு முன்பே வெந்து தணிந்தது காடு படத்தை பற்றி சில தகவல்களை சொல்லிக் கொண்டிருந்தேன்.ஏன் திடீர்னு இவ்ளோ ஆர்வம் என்று கேட்டார். ஏன்னா அது எங்க ஹீரோவுடைய கதை என்றேன்.

அன்பும் முத்தங்களும் ஜெ.

என்றும் அன்புடன் 

பிரகதீஷ்.

அன்புள்ள ஜெ

பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் நீங்கள் அந்த குறுகிய பொழுதைக்கூட தமிழுக்கும் தமிழ் வரலாற்றாய்வுக்கும் பங்களிப்பாற்றிய அறிஞர்களின் பெயர்களைச் சொல்ல பயன்படுத்தியதும் மிகமிக முக்கியமான ஒரு செயல்பாடு. உங்கள் பணி என்ன, பொறுப்பு என்ன என்று எப்போதும் உணர்ந்திருக்கிறீர்கள். ஓர் ஆய்வுமேடையில்கூட இன்றெல்லாம் இத்தனை குறிப்பாக முன்னோடி ஆய்வாளர் பெயர்களைச் சொல்வதில்லை. கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, சதாசிவப் பண்டாரத்தார் இருவரும் சோழர் வரலாற்றை எழுதியவர்கள். சோழர் கால நிலவுடைமை முறை பற்றிய பல கேள்விகளுக்கு விடையளித்தவர்கள் பர்ட்டன் ஸ்டெயின், நொபுரு கரஷிமா. சோழர்காலக் கலையை பற்றி விரிவாக ஆய்வுசெய்தவர் குடவாயில் பாலசுப்ரமணியம். இவர்களை அந்த மேடையில் எத்தனைபேர் கவனிப்பார்கள் என தெரியவில்லை. ஆனால் யூடியூபில் பார்க்கும் ஒரு ஐம்பதாயிரம் பேரில் ஐம்பதுபேர் இப்பெயர்களை ஞாபகம் வைத்துக்கொண்டு இவர்களை வாசித்தால்கூட தமிழுக்கு அது பெரிய கொடை

அரங்க.ராமசாமி

  

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 13, 2022 11:31

பொன்னியின் செல்வன், கடிதங்கள்

 

பொன்னியின் செல்வன் நாவல்  யவனராணி- சாண்டில்யன் உடையார் -பாலகுமாரன் பர்ட்டன் ஸ்டெயின் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி

அன்புள்ள ஜெ

பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் நீங்கள் ஆற்றிய உரை கனக்கச்சிதமாக செதுக்கப்பட்ட உரை.மேடை ஏறிய பெரும்பாலானவர்கள் என்ன பேசுவது என்று தெரியவில்லை என்றார்கள்.ஆனால் நீங்கள் அதிகம் பேசப்போவதில்லை என்று ஆரம்பித்தீர்கள்.நீங்கள் எப்போதும் சொல்வது போல ஒரு ‘Anecdote’.

அந்த ஏழு நிமிட உரையின் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு கன்னி (பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை) ஆர்வமுடைய ஒருவருக்கு அது மிகப்பெரிய வாசலை திறக்கும். அதுபோல ஒவ்வொரு மேடையிலும் அதற்காக பணியாற்றிய முன்னோர்களையும் பெரியோர்களையும் நினைவு கூறிக்கொள்ளும் உங்களின் பணிவும் முதிர்வும் எனக்கு வியப்பளிக்கிறது.

இந்த ஆண்டு அடுத்தடுத்து நீங்கள் பணியாற்றிய திரைப்படங்களை பார்க்க ஆர்வமாக உள்ளேன்.என்னுடைய நண்பர் ஒருவர் தீவிரமான சிம்பு ரசிகர் அவருக்கு முன்பே வெந்து தணிந்தது காடு படத்தை பற்றி சில தகவல்களை சொல்லிக் கொண்டிருந்தேன்.ஏன் திடீர்னு இவ்ளோ ஆர்வம் என்று கேட்டார். ஏன்னா அது எங்க ஹீரோவுடைய கதை என்றேன்.

அன்பும் முத்தங்களும் ஜெ.

என்றும் அன்புடன் 

பிரகதீஷ்.

அன்புள்ள ஜெ

பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் நீங்கள் அந்த குறுகிய பொழுதைக்கூட தமிழுக்கும் தமிழ் வரலாற்றாய்வுக்கும் பங்களிப்பாற்றிய அறிஞர்களின் பெயர்களைச் சொல்ல பயன்படுத்தியதும் மிகமிக முக்கியமான ஒரு செயல்பாடு. உங்கள் பணி என்ன, பொறுப்பு என்ன என்று எப்போதும் உணர்ந்திருக்கிறீர்கள். ஓர் ஆய்வுமேடையில்கூட இன்றெல்லாம் இத்தனை குறிப்பாக முன்னோடி ஆய்வாளர் பெயர்களைச் சொல்வதில்லை. கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, சதாசிவப் பண்டாரத்தார் இருவரும் சோழர் வரலாற்றை எழுதியவர்கள். சோழர் கால நிலவுடைமை முறை பற்றிய பல கேள்விகளுக்கு விடையளித்தவர்கள் பர்ட்டன் ஸ்டெயின், நொபுரு கரஷிமா. சோழர்காலக் கலையை பற்றி விரிவாக ஆய்வுசெய்தவர் குடவாயில் பாலசுப்ரமணியம். இவர்களை அந்த மேடையில் எத்தனைபேர் கவனிப்பார்கள் என தெரியவில்லை. ஆனால் யூடியூபில் பார்க்கும் ஒரு ஐம்பதாயிரம் பேரில் ஐம்பதுபேர் இப்பெயர்களை ஞாபகம் வைத்துக்கொண்டு இவர்களை வாசித்தால்கூட தமிழுக்கு அது பெரிய கொடை

அரங்க.ராமசாமி

  

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 13, 2022 11:31

தேசியகீதப் பயணம் -இளையராஜா

அன்புள்ள ஜெ,

அமெரிக்க நிலத்தில்  நீங்கள் விரிவாக பயணம் செய்து மீண்ட சமயத்தில் நானும் இந்திய நிலத்தில் ஒரு சுற்று சுற்றி மீண்டு விட்டேன். மே மாத இறுதியில் ஒரு நீண்ட கார் பயணம். சண்டிகரிலிருந்து தமிழ் நாடு. விடுமுறை நாட்களுக்குப் பின் ஜுன் இறுதியில் மீண்டும் காரிலே சண்டிகர்.

தில்லி-மும்பாய்-பெங்களூரு-சென்னை மாநகரங்களை இணைக்கும் இந்தியாவின் தங்க நாற்கரச்சாலைகளின் வழியாக தமிழ்நாடு. பின்பு ஸ்ரீநகர் கன்யாகுமரி சாலையில் மீண்டும் சண்டிகர்.  தேசிய நெடுஞ்சாலை 48 ல் சென்று நெடுஞ்சாலை 44 ல் திரும்பி வருவது. சுமார் 6000 கி. மீ பயணம்.

பயணத்தோழர்கள் வேறு யாருமில்லை. நித்யாவும் விஷ்வாவும்தான். அநேகமாக அனைத்து பயணங்களிலும் உடன் வருபவர்கள். இந்திய நிலத்தின் குறுக்குவெட்டைப் பார்ப்பது பயணத்தின் முதன்மையான நோக்கம்.  அப்புறம் இந்தியா பற்றிய ஒருவகையான crash course. (but without any CRASH ofcourse). ஆனால் பயலுக்கு இன்னும் வெண்மீசை இல்லாமல் மோர் கூட குடிக்கத் தெரியாது. இருந்தாலும் குழந்தைகளுக்கு சரியானவற்றை கையளிக்கும் கடமை பெற்றவர்களுக்கு இருக்கிறதே!

சண்டிகர்-தில்லி-ஜெய்பூர்-அகமதாபாத்-மும்பாய்- பூனா-பெங்களூர் வழியாக சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர். திரும்பிச் செல்லும் வழி சேலம்-பெங்களூர்-ஹைதராபாத்- நாக்பூர்- ஜான்சி- ஆக்ரா-தில்லி வழியாக சண்டிகர்.  இந்தியாவின் மேற்கின் ஓரமாக பயணம் செய்து இந்தியாவின் மைய நிலத்தின் வழியாக வீடு திரும்புதல் என்பது பயணத்திட்டம். ஒரு வருடத்திற்கு முன்னரே போட்ட திட்டம். பொது முடக்க விதிகள் அனைத்தும் தளர்ந்து இந்த வருடம்தான் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

ஸ்ரீநகர் கன்யாகுமரி சாலையில் திரும்பிச் செல்லும்போது ஒரே ஒரு detour மட்டும் செய்தோம். நாக்பூரிலிருந்து ஜபல்பூர் அருகே உள்ள பேடாகாட் சென்றோம். நீங்கள் மையநிலப் பயணத்தில் சென்ற ஊர்.  எரிமலை, இயற்கை வெண்ணீர், இமயத்தின் பாலை மலைகள் போன்றவை எப்போதுமே என்னை கவர்ந்திழுப்பவை.  பேடாகாட்டின் சலவைக்கல் பாறைகளை முதன்முதலில் புகைப்படத்தில்தான் பார்த்தேன்.  பார்த்த கணமே என் பக்கெட் லிஸ்டில் குறித்துக்கொண்டேன்.

பேடாகாட்டில் முதலில் செளசட் யோகினிகளையும் சிவன் பார்வதியையும் தரிசித்தோம். பின்பு நர்மதை ஆற்றின் பேடாகாட் நீர் வீழ்ச்சி மற்றும் சலவைக்கல் பாறைகளைப் பார்க்கச் சென்றோம்.

பேடாகாட் அல்லது தெளன்தார் நீர்விழ்ச்சியில் நர்மதையின் நீர் விழுந்து பாறைகளை அறுத்து இரு கிளைகளாகப் பிரிந்துச் செல்கிறது. அருவிக்கு மேலே கேபிள் காரில் பறந்து செல்லும்போது இதோ இப்போது விழப்போகிறோம் தலைகுப்புற விழுந்துவிட்டோம் என்ற திக் திக் எண்ண ஓட்டத்தை தவிர்க்க முடியவில்லை. அருவியின் கரையில் நின்ற எங்களை பூ போல சிறு துளிகளை தெளித்து நர்மதை வரவேற்றாள்.

பின்பு அருகில் உள்ள சலவைக்கல் பாறைகளைப் பார்க்கச் சென்றோம். படகு சவாரி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருப்பதால் பாறைகளுக்கு அருகில் சென்று பார்க்க முடியவில்லை. ஆற்றங்கரையில் உள்ள ஒர் அரசு தங்கும் விடுதியில்  இருந்துதான் சலவைக்கல் பாறைகளைப் பார்க்க முடிந்தது. அவசரநிலை வழிகாட்டியாகத் தன்னை சுயபிரகடனம் செய்துகொண்ட தற்காலிக வேலையில்லா படகோட்டி செய்த ஏற்பாடு.

விடுதியின் வெளிச்சுவரில் ஒரு சுவாரஸ்யமான புகைப்படத்தை கவனித்தேன்.  காந்தி 1941 ல் பேடாகாட் வந்து சலவைக்கல் பாறைகளைப் பார்த்தபோது எடுக்கப்பட்ட படம் பெரிதாக்கப்பட்டு சுவற்றில் மாட்டப்பட்டிருந்தது.

சற்றும் எதிர்பாராத  சில இடங்களில் காந்தி வந்துவிடுகிறார். ஹிமாசல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் கால்கா சிம்லா சாலை அருகே தாக்சாய் (Dagshai) என்ற ஆங்கிலேயர் கால கண்டோன்மென்ட் ஊர் உள்ளது. தாக்சாய் சிறைச்சாலையில்  1920 ல் பிரிட்டிஷ் ராணுவத்தைச் சேர்ந்த அயர்லாந்து புரட்சியாளர்களைச் சிறைவைத்திருந்தனர். அதை விசாரிக்க காந்தியே நேரில் தாக்சாய் வந்தார்.  ஆங்கிலேயர் கால தாக்சாய் சிறைச்சாலை இன்று அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. காந்தி இரவு தங்கியிருந்த செல்லில் அவர்  பயன்படுத்திய சர்க்கா மற்றும் மேசை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

காந்தியை கொன்ற பிறகு நாதுராம் கோட்சேவையும் தற்காலிகமாக தாக்சாய் சிறையில் வைத்திருந்தனர்.  நல்ல வரலாற்று புனைவு எழுதலாம்.  (இன்னொரு வரலாற்று முக்கியத்துவமும் தாக்சாய் சிறைக்கு உண்டு. கொமகாட்டு மாரு கப்பல் புரட்சியாளர்கள் சிலரை ஆங்கிலேயர்கள் தாக்சாய் சிறையில்தான் கொன்றார்கள்.)

ஊரின் பெயர்கள்தான் எத்தனை வகை ! மாநிலங்களின் பெயரில் நிலத்தை குறிக்கும் ஒட்டுதான் அதிகம் உள்ளன. பிரதேசம், ராஸ்டிரம், ஸ்தான், கண்ட் போன்ற ஒட்டுகள். மிசோரம் மாநிலத்தின் பெயரில் உள்ள ரம் மிசோ மொழியில் நிலத்தைக் குறிப்பது.  மேலும் கர், புரம், தீப் போன்ற ஒட்டுகள்

இந்தியாவின் கடவுளர்களில் பெயரில் அமைந்த ஊர்களில் ராமனின் பெயரில்தான் அதிக ஊர்கள் இருக்கிறதாமே! அதன்பின் கிருஷ்ணனின் பெயரில் என்கிறார்கள்.

அதிகாரம் கைமாற கைமாற பெயர்களும் மாற்றப்பட்டன என்கிறார்கள் அறிஞர்கள். உதாரணமாக சுல்தான் மற்றும் இஸ்லாமிய ஆட்சி காலங்களில் அகமதாபாத், சுல்தான்பூர், ஓளரங்காபாத், அடிலாபாத், நிஜாமாபாத் போன்ற பெயர்களைச் சூட்டினர். நேரடியாக மதத்தை சுட்டும் பெயர்கள். இஸ்லாம்பூர், அலகாபாத் போன்றவை. போர்வெற்றியை கொண்டாடும் விதமாக போடப்பட்ட பெயர்கள். ஃபதேகர், ஃபதேபூர். ஃப்தே என்றால் வெற்றி.

பின்பு அதிகாரம் ஆங்கிலேயர்கள் கைகளுக்கு மாறியபோது மீண்டும் பெயர் மாற்றங்கள். ஆனால் அவர்கள் இந்தியாவில் புதிதாக உருவாக்கிய ரயில் நிலையங்கள், மலை வாசத் தளங்கள், டீ எஸ்டேட்டுகள், கண்டோன்மென்ட் பகுதிகளுக்கு புதிய பெயர்களைப் போட்டனர். கிளட்டர்பக் கன்ஜ், மெக்கிளஸ்கி கன்ஜ், ஹேமில்டன் கன்ஜ் ரயில் நிலையங்கள்,  எலீனாபாத், மெக்லியோடு கன்ஞ், லான்ஸ் டவுன் என ஆங்கில சீமான் சீமாட்டிகளின் பெயர்களைச் சூட்டினர்.

மேலும் ஆங்கில உச்சரிப்பிற்கு வசதியாக பிராந்தியப் பெயர்களையும் மாற்றினர்.  உதகமணடலம் – ஊட்டி, கோழிக்கோடு-கேலிகட், கங்கா – கேன்ஜஸ், போன்றவை. ஆங்கில நாக்குகளுக்கு வெவ்வேறு மொழிகளில் அமைந்த இந்தியப் பெயர்கள் அளித்த பெரும் அதிர்ச்சியை கற்பனை செய்ய முடிகிறது.

சுதந்திரத்திற்குப் பின் அதிகாரம் நம்மிடம் வர மீண்டும் பெயர் மாற்றங்கள். தமிழ் நாடு தலைவர்களின் பெயர்களை மாவட்டங்களில் இருந்து நீக்க ஆந்திரா மற்றும் தெலுங்கானா தலைவர்களின் பெயர்களைக் கொண்டுவருகிறது. ரங்க ரெட்டி, பொட்டி ராமலு,  ஒய் எஸ் ஆர் போன்ற பெயர்கள்.

பஞ்சாப் ஹரியானா வயல்வெளிகளில் ஆரம்பித்து ராஜஸ்தானின் பாலை நிலத்தின் வழியே சென்று குஜராத்தின் வணிக நகரங்களில் நுழைந்து மஹாராஸ்டிரத்தின் காட் செக்‌ஷனின் ஏறி இறங்கி தக்காணத்தைத் நான்கு நாட்களில் தொட்டோம்.

பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா

திராவிட உத்கல வங்கா

விந்திய இமாசல யமுனா கங்கா…

தாகூரின் இந்தியாவை ஏறக்குறைய தரிசனம் செய்தாயிற்று. வங்கத்தையும் ஒரிசாவையும் தவிர.  இமயத்தையும் கங்கையும் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

ராஜஸ்தானின் வெயிலை ஈடுகட்ட கர்நாடகம் கொஞ்சம் குளிர்ந்து போல தெரிந்தது. ஆந்திரத்தில் சிவந்திருந்த மண் மத்திய பிரதேசத்தில் கருமை நிறம் கொண்டது. தக்காணத்தில் கொட்டியது போல அமைந்த பாறைக் குன்றுகளை புந்தேல்கண்ட் பகுதியின் மணற் குன்றுகள் சமன்செய்தன.

கக்கர், சபர்மதி, தாப்தி, கிருஷ்ணா, துங்கபத்ரா, கோதாவரி, நர்மதா,  பேத்வா, சம்பல், யமுனா முதலிய ஆறுகளைக் கடந்தோம். ஆரவல்லி, மேற்கு தொடர்ச்சி, விந்திய சத்புரா மலைத்தொடர்களில் ஏறி இறங்கினோம். தெலுங்கானா மற்றும் மத்திய பிரதேச வனங்களிலும் மஹாராஸ்டிரத்தின் பென்ச் தேசிய பூங்காவின் ஊடே கொஞ்சம் திகிலுடன் சென்றோம்.

மொத்தமாக ஒன்பது நாட்கள். ஏழு இரவுகள் இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் தங்கி ஒன்பது மாநிலங்களின் விதவிதமான உணவு வகைகளை வழியில் உண்டோம்.

இந்தப் பயணத்தில் என்ன அடைந்தோம்?

அதை பட்டியல் போடுவது கடினம்தான். ஆனால் என் விழிகள் அடுத்தப் பயணத்திற்காக மேலும் கூர்மை அடைந்திருக்கின்றன.

ஜய ஹே!

அன்புடன்,

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 13, 2022 11:31

July 12, 2022

வெண்முரசு நாள் வாழ்த்து

இன்று குருபூர்ணிமா நாள். இன்று என் நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்நாள் நாம் ஒரு புதிய கல்வியை தொடங்கும் நாளாக, தொடரும் கல்வியை புதுப்பிக்கும் நாளாக அமையட்டும்

 

ஜெ

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 12, 2022 11:35

கபிலன், முதல்கவிஞன்

தமிழின் முதற்பெருங்கவிஞன். காதலை, குறிஞ்சியின் குளிரை, பாடியவன். கபிலன் நான் முப்பதாண்டுகளாக எண்ணி எண்ணி வாசித்துக்கொண்டிருக்கும் கவிஞன். நல்லவேளை, அவன் நினைவாக ஒரு குன்று உள்ளது. கபிலர்குன்று ஒரு சிறிய பள்ளிப்படை. ஆனால் அங்கே தமிழின் பெருங்காவிய மரபின் தொடக்கம் அமைந்துள்ளது

கபிலர் கபிலர் கபிலர் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 12, 2022 11:34

சம்ஸ்கிருதம் குறைவான மலையாளம்

அன்புள்ள ஜெ

நாமக்கல் கட்டண உரை பற்றிய அறிவிப்பை கண்டேன். வாழ்த்துக்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் ஆன அரங்கின் தேவை பற்றி நீங்கள் எண்ணுவது புரிகிறது.

எழுத்தாளர் ஜெயமோகனுக்கு வணக்கங்கள்…

என் பெயர் சரண்யா. தஞ்சையில் இருந்து எழுதுகிறேன்.. அண்மைக் காலங்களில் தமிழல்லாத பிற திராவிட மொழிகள் கற்கலாம் (இலக்கியச் சுவை அறிய வேண்டி) என ஆவல் வந்ததின் விளைவாக மலையாள மொழி கற்கத் தொடங்கினேன். தற்போது ஒரு 70% மலையாளம் பேசவும் அதன் லிபி படிக்கவும் தெரியும்.

பழமையான இலக்கியங்கள் வாசிக்கலாம் என ‘ராமசரிதம்’ தொடங்கினேன். அது ஏறக்குறைய தமிழ் போலவே இருக்கிறது. சமகால இலக்கியம் வாசிக்கலாம் என சிறந்த எழுத்தாளர்களை இணையத்தில் தேடி தக்கழி சிவசங்கரன் பிள்ளை மற்றும்

வாசுதேவன் நாயர் ஆகியோரின் நூல்களை மின்னூலாக வாங்கி முதலில் தகழியாரின் ‘கயறு’ (കയർ) தொடங்கினேன். உட்பொருள் கனமாக இருந்தாலும் பெருமளவு சமஸ்கிருதச் சொற்கள் இருப்பதால் வாசிப்பதில் பல நேரம் தடுமாறுகிறேன். திராவிட இயல்புடைய சொற்களும் சமஸ்கிருதமும் ஒரே படைப்பில் வாசிக்க எனக்கு கடினமாக இருப்பதாக உணர்கிறேன்.

பெரும்பாலான வெகுஜன நாவல்களைக் (Prathilipi app) கூட அதே Style பயன்படுத்தி எழுதுகிறார்கள் என நினைக்கிறேன்.

எனக்கு தயை கூர்ந்து திராவிட மொழியாள்கை அதிகமும் சமஸ்க்ருத வாக்குகள் குறைவாகவும் இருக்கும் மலையாள படைப்புகள் மற்றும் எழுத்தாளர்களின் பெயர்களை வாசிப்பதற்கு பரிந்துரைக்க வேண்டுகிறேன். புதினம், கவிதை, சிறுகதை என எதுவாயினும் சரி.

நன்றிகளுடன்

சரண்யா சச்சிதானந்தம்.

தஞ்சை.

 

அன்புள்ள சரண்யா

 

மலையாளமே தொல்தமிழும் சம்ஸ்கிருதமும் இணையாகக் கலந்ததுதான். ஆகவே சம்ஸ்கிருதம் கலவாத மலையாளம் என்பது மிக அரிதானது.

அதிலும் மலையாள அறிவியக்கம் என்பது பெரும்பாலும் சம்ஸ்கிருதச் சாய்வு கொண்டது. ஆகவே ஒரு நூல் நவீனமாக ஆகுந்தோறும், அறிவாந்தது ஆகுந்தோறும் சம்ஸ்கிருதம் கூடிவரும்.

பச்சமலயாள இயக்கம் என ஓர் இயக்கம் தொடங்கியது. அதன் முன்னோடிகளில் ஒருவர் எம்.கோவிந்தன். சம்ஸ்கிருதச் சொல்லாட்சிகளைக் குறைப்பது அவ்வியக்கத்தின் நோக்கம். நான் அவ்வியக்கத்தைச் சேர்ந்தவன். என் ஆசிரியர் ஆற்றூர் ரவிவர்மா எம்.கோவிந்தனின் மாணவர். ஆனால் அவ்வியக்கம் வெற்றிபெறவில்லை. மலையாளத்தில் நான் சம்ஸ்கிருதம் குறைவாக எழுதுபவன்.

மலையாள எழுத்துக்களில் குறைவான சம்ஸ்கிருதம் கொண்ட எழுத்து வைக்கம் முகம்மது பஷீர் எழுதியது (ஆனால் வேடிக்கையாக சம்ஸ்கிருதச் சொல்லாட்சிகளை பயன்படுத்தியிருப்பார்)

கல்பற்றா நாராயணன், டி.பி.ராஜீவன் போன்றவர்களின் நூல்களிலும் ஒப்புநோக்க சம்ஸ்கிருதம் குறைவு

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 12, 2022 11:30

கூகிளுடன் இருத்தல் – கடிதம்

அன்புள்ள ஜெ,

இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று தோன்றியது.

ஒருவேளை தமிழ் விக்கியில் பயனர் கணக்கு தொடங்கினால் Biography-ல் என்ன எழுதுவது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஒற்றை சொல்லில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. நான் கண்டடைந்த சொல் (?!) : சொல்வதற்கேதுமில்லையாதலாலிங்கேதுமில்லை!!! இது தமிழ் இலக்கண விதிகளின்படி சரியா என்று எனக்கு தெரியவில்லை. (கடைசியாக இலக்கணம் படித்தது பள்ளி இறுதியாண்டில்.)

இதை Google Translate-ல் முயற்சித்தால் என்ன என்று நினைத்தேன். முதலில் “சொல்வதற்கு ஏதுமில்லை. ஆதலால் இங்கு ஏதுமில்லை.” என்று கொடுத்தேன். “Nothing to say. So there is nothing here.” என்று, சரியாகவே, மாற்றப்பட்டது. பின் “சொல்வதற்கேதுமில்லையாதலாலிங்கேதுமில்லை” என்று கொடுத்தேன்.

நான் Google தடுமாறலாம் என்று நினைத்தேன். ஆனால் மிக சுருக்கமாக “There is nothing to say.” என்று மொழிபெயர்த்துவிட்டது. நேரடி மொழிபெயர்ப்பாக “Since there is nothing to say, there is nothing here” என்று கொடுத்திருக்கலாம். ஆனால் இவனிடம் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை என்பதை புரிந்து கொண்டு செறிவாக (succinctly) மொழிபெயர்த்தது மகிழ்ச்சியாகவே இருந்தது!

(அது மொழிபெயர்த்ததா இல்லை அதை பற்றி சொல்வதற்கு தன்னிடம் ஏதும் இல்லை என்று சொல்கிறதா என்ற ஐயம் எழாமல் இல்லை.)

 

நன்றி

டி.கார்த்திகேயன்

 

அன்புள்ள கார்த்திகேயன்

கூகிள் மொழியாக்கம் ஆண்டுக்கு ஆண்டு மேம்பட்டே வருகிறது. அது தமிழ் கற்றுக்கொண்டு வருகிறது.

ஆகவே அது சரியாகத்தான் வேலைபார்க்கிறது. நீங்கள்தான் ரொம்பவும் வெட்டியாக இருக்கிறீர்கள் போல

வெட்டியாக இருப்பவர்கள் தமிழ் விக்கிக்கு ஏதாவது செய்யலாமே?

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 12, 2022 11:30

July 11, 2022

ஜூலை 13-குரு பூர்ணிமை,வெண்முரசு நாள்

நாளை  குருபூர்ணிமை. வியாசனின் நாள். மலைக்குமேல் நண்பர்களுடன் ஒரு கூடுகை. ஆகவே ஒருவேளை இணையத்தில் தோன்ற முடியாமல் போகலாம். முயற்சி செய்கிறேன். இந்த நிலவை மீண்டும் வெண்முரசுடன் கொண்டாடுவோம். 

ஒரு படைப்பை இப்படி ஒரு நாளை அறிவித்து ஏன் கொண்டாடவேண்டும் என்னும் கேள்வி முன்னரும் எழுந்தது. வெண்முரசு வாசித்து முடிக்கத்தக்க, கடந்துசெல்லத்தக்க ஒரு படைப்பு அல்ல. அதை நோக்கி வாசகர் மீண்டும் மீண்டும் வந்தாகவேண்டியுள்ளது.  வெவ்வேறு மனநிலைகளில், வெவ்வேறு வினாக்களுடன். அது இயல்பாகவும் நிகழலாம். ஆனால் அதற்கென ஒரு நாள் அமையும்போது அது ஒரு மாறாநெறியாக ஆகிறது. அதை நம் அகம் தவறவிடுவதில்லை. இந்நாளில் வெண்முரசை வாசிக்காதவர்கள் வாசிக்க ஆரம்பிக்கலாம். எங்காவது விட்டுவிட்டவர்கள் மீண்டும் தொடங்கலாம். 

முடித்தவர்கள் ஒன்று செய்யலாம், வெண்முரசின் ஏதேனும் ஒரு பக்கத்தை கைபோன போக்கில் எடுத்து புரட்டிப்பார்த்து படிக்க ஆரம்பிக்கலாம். செவ்வியல் படைப்புகளின் இயல்பு, அவை எந்தப் பக்கத்தில் தொடங்கினாலும் ஆழமானவையாகவும், தனித்து இலக்கியத்தன்மையுடன் நிலைகொள்வனவாகவும் இருக்கும் என்பது.

ஜெயமோகன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 11, 2022 11:36

என் ஆணவம்

சியமந்தகம் இணைய தளத்தில் தொடர்ச்சியாக என்னைப்பற்றி நண்பர்கள் எழுத்தாளர்கள் வாசகர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் அவற்றை உடனடியாக நான் படிப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட மனநிலையில் படிக்கிறேன். கூடுமானவரை அவை அளிக்கும் உணர்ச்சிகளை என்னிலிருந்து விலக்கிக்கொள்ள முயற்சி செய்கிறேன்.

தமிழில் ஒரு எழுத்தாளருக்கு முன்பெப்போதும் இத்தனை பெரிய பாராட்டுகள் நம் சூழலில் இருந்து வந்ததில்லை. தமிழில் மாபெரும் வணிக நட்சத்திரங்களாக இருந்த எழுத்தாளர்கள் உண்டு. அவர்கள் விருதுகளும் அங்கீகாரங்களும் பெற வாய்த்ததுண்டு. ஆய்வேடுகள் அவர்களைப்பற்றி எழுதப்பட்டதுண்டு. கருத்தரங்குகளும் மாநாடுகளும் அவர்களைக் கௌரவிக்கும் பொருட்டு நடத்தப்பட்டதும் உண்டு. ஆனால் இத்தனை ஆத்மார்த்தமான உணர்ச்சிகரமான பாராட்டுரைகள் அவர்களுக்கு மிக அரிதாகவே வந்திருக்கும்

இன்று எழுத்தாளர்களைப்பற்றிய விக்கி பீடியா பதிவுகளுக்காக அவர்களைப்பற்றி எழுதப்பட்டவற்றை பேசப்பட்டவற்றைப் பார்க்கும்போது பெரும்பாலானவை ஒருவகை சம்பிரதாய உரைகளாக இருப்பதைக்காண்கிறேன். அவர்கள் முன்வைக்கும் அந்த பாராட்டுரைகளிலிருந்து அந்த ஆசிரியனை வகுத்துச் சொல்லக்கூடிய சரியான ஒரு  பத்தியை எடுத்து தமிழ் விக்கிக்குப் பயன்படுத்துவதே மிக கடினமாக இருக்கிறது. இத்தகைய சூழலில் இத்தகைய ஆழ்ந்த எதிர்வினைகள் மிக அரிதானவை

ஆனால் எனக்கு நானே அந்தச் சொற்களுக்கு எதிர்வினையாற்றக்கூடாது என்று ஆணையிட்டுக்கொள்கிறேன். அவற்றுக்கு உடனடியாக என்னிலிருந்து எதிர்வினையாற்றுவது என்னுடைய ஆணவம்தான். அந்த எதிர்வினை என்னை முட்டாளாக ஆக்கிவிடக்கூடும். ஆன்மிகமாக மிகச்சிறியவனாக ஆக்கிவிடக்கூடும் அது பிறிதொருவனே என்று நான் எனக்கு சொல்லிக்கொள்கிறேன். அது எழுதுபவனை எழுதும் கணங்களில் திகழ்பவனை நோக்கி எழுதப்படுவது. நான் வேறொருவன். நான் இங்கிருக்கிறேன். நான் எனது ஆசிரியர்களின் மாணவன் என்று அன்றி வேறெப்போதும் என்னைப்பற்றி பெருமிதம் கொள்ளலாகாது என்று சொல்லிக்கொள்கிறேன்.

ஆனால் இது எளிய செயல் அல்ல. இதை சொல்லும்போதே இதிலொரு உணர்ச்சிகரம் வந்துவிடுகிறது. அந்த உணர்ச்சிகரமேகூடச் சற்று பொய்யானது. ஆயினும் திரும்ப திரும்ப அதை சொல்லிக்கொண்டு தான் இதைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. ஏனெனில் நான் என்னை இங்கு நிறுத்திவிட எண்ணுபவன் அல்ல. ஆற்ற வேண்டிய அனைத்தையும் ஒவ்வொரு நாளும் எதிர்காலத்தில் பார்த்துக்கொண்டிருப்பவன். ஆற்றியவற்றிலிருந்து கூடுமானவரை முழுமையாக என்னை விலக்கிக்கொண்டிருப்பவன். மேலும் செயல்படுவதற்கான ஆற்றலாக என்னிடம் இருப்பது அதுதான்.

எனில் என்னிடம் ஆணவம் இல்லையா? மிக ஆணவம் கொண்ட ஒருவனாகவே நான் இச்சூழலில் அறியப்பட்டிருக்கிறேன். அது எனக்கு நன்றாகத் தெரியும். எனக்கு வரும் கடிதங்கள் அதை சுட்டிக்காட்டுவதும் உண்டு. இருவகையில் அந்த ஆணவத்தை எனது வாசகர்கள் அல்லது எனது நண்பர்களான எழுத்தாளர்கள் உணர்ந்திருக்கலாம்.

ஒன்று நான் என்னை முன் வைக்கும் விதத்தில் உள்ள தன்நிமிர்வு.  இந்நூற்றாண்டின் தமிழின் தலைசிறந்த எழுத்தாளன் என்றும், இன்று உலகில் வாழும் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவன் என்று மட்டுமே நான் என்னை எப்போதும் முன்வைக்கிறேன். எனது எழுத்துக்களை படிக்காதவர்களும், படித்து உணராதவர்களும் அது  ஒரு அபத்தமான தற்பெருமைக்கூற்றென்று நினைக்கலாம் என மிக நன்றாகவே எனக்குத் தெரியும். அதை ஏற்காத சீரிய வாசகர்களும் சிலர் இருக்கலாம்.

இரண்டு, நான் எனது சமகாலத்தை விமர்சனம் செய்து கொண்டு வகுத்துரைத்துக்கொண்டும் மதிப்பிட்டுக்கொண்டும் இருக்கிறேன். இப்படி விமர்சனம் செய்வதற்கும் மதிப்பிடுவதற்கும் நான் யார் எனும் கேள்வி எழுந்துகொண்டே இருக்கிறது. இலக்கிய படைப்புகளை இலக்கிய ஆளுமைகளை நான் மதிப்பிடுகிறேன். இலக்கியம் சாராத சமூக அரசியல் விஷயங்களை முன்வைக்கிறேன். அவற்றில் வெளிப்படும் ஆணவம் குறித்து சாதாரண வாசகர்கள் எப்போதும் எரிச்சலடைகிறார்கள்.

நான் என்னில் பிறர் உணரும் ஆணவம், நானே என்னில் உணரும் ஆணவம் என இரண்டை அறிகிறேன். எனது இரண்டு வகையான ஆணவங்களையும் ஒன்றிலிருந்து ஒன்று விலக்கிக்கொள்ளவே முயல்கிறேன். தனிப்பட்ட முறையில் ஆணவம் கொண்டவனாக நான் இருக்க விரும்பவில்லை. அது அளிக்கும் சிறுமை என்னை சூழலாகாதென்றும் அதனூடாக நான் எனக்கே ஒரு கேலிக்குரிய ஆளுமையாக ஆகிவிடக்கூடாதென்றும் எப்போதும் கவனமாக இருக்கிறேன். மறுபக்கம் ஒரு படைப்பாளியாக எத்தனை நிமிரமுடியுமோ அத்தனை நிமிர்ந்து இக்காலகட்டத்தின் முன் நிற்கவேண்டும் என்றும் விரும்புகிறேன்.

இதை படைப்பாணவம் என்று திரும்பத்திரும்ப நான் சொல்லிக்கொள்கிறேன். அது எனது முன்னோடிகளிடமிருந்து நான் பெற்றது. பி.கே.பாலகிருஷ்ணனோ ஜெயகாந்தனோ சுந்தர ராமசாமியோ அந்நிமிர்வின் வடிவங்களாகவே எனக்கு அறிமுகமானார்கள். அது கலையிலக்கியங்களில் எந்த மதிப்பும் இல்லாதவர்களும், உண்மையில் கலையிலக்கியங்களைக் கண்டால் அகத்தே எரிச்சல்கொள்பவர்களும் நிறைந்த இச்சமூகத்தின் முன் நிற்கும்போது உருவாகும் உளநிலை.

அறிவார்ந்தும் ஆன்மீகமாகவும் பின்தங்கிய ஒரு மூன்றாமுலக தேசத்தின் பண்பாட்டின் முன் நின்று ஓர் எழுத்தாளன் கொள்ள வேண்டிய தன்னிலை அது. அந்நிலையில் மட்டுமே அவன் செயல்பட முடியும். சூழ ஒலிக்கும் சிறுமைகளுக்கு சற்றே செவிகொண்டால் வெறும் சோர்வே எஞ்சும், செயல்கள் நின்றுவிடும்.

எண்ணிப்பாருங்கள், ஏழாண்டுகள் ஒவ்வொரு நாளும் பெரும் தவமென இயற்றி ஒரு படைப்பை எழுதிய பிறகு அதைப்புரட்டி கூடப் பார்க்காமல், அதன் உள்ளடக்கம் என்னவென்று அறிய எளிய முறையில் கூட முயலாமல், அசட்டுத்தனமான கருத்துக்களை சொல்லும் ஒருவனை எதிர்கொள்வதற்கு எழுத்தாளனுக்கு வேறு கருவிகள் என்ன? இச்சூழலில் அவன் தருக்கி நிமிர்ந்தாலொழிய இலக்கியம் படைக்க முடியாது. இச்சூழலை நோக்கி அவன் தன் கருத்துக்களை சொல்வதற்கு அந்தப்படைப்பாணவம் மிக இன்றியமையாதது.

தமிழ்ச்சூழலில் எழுத்தாளர்களிடம் கருத்து கேட்பதில்லை. அவன் கருத்துக்களுக்கு எவரும் செவி கொடுப்பதும் இல்லை. தமிழ்ச் சூழலின் மனநிலை என்பது அதிகாரத்திலிருக்கும் அரசியல்வாதிகள், புகழ்பெற்ற திரைநடிகர்கள், பெரும் செல்வந்தர்கள் மட்டுமே ஏதேனும் கருத்து கூற தகுதி கொண்டவர்கள் என நம்புவது. பிறர் கூறும் கருத்துக்களைக்கேட்டு உண்மையிலேயே அவர்கள் துணுக்குறுகிறார்கள். கருத்து சொல்ல இவன் யார் என்கிறார்கள். எரிச்சலும் நிலையழிவும் கொள்கிறார்கள். அக்கருத்தை கவனிப்பதில்லை, அதைச் சொன்னவனை சிறுமைசெய்யவும் ஏளனம் செய்யவும் முன்னால் வருகிறார்கள்.

சென்ற முப்பதாண்டுகளில் எப்போதெல்லாம் சமூகம், அரசியல் குறித்து நான் கருத்து சொல்லியிருக்கிறேனோ அப்போதெல்லாம் பெரும்பான்மையான மக்கள் ’யாரிவன்?’ என்று பதற்றத்துடன் கேட்பதை நான் பார்த்திருக்கிறேன். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பும் கூட, வெண்முரசு எனும் நாவலை எழுதியபின்னும் கூட, மகாபாரதம் பற்றி நான் சொன்ன ஒரு கருத்து பொதுவெளியில் உள்ளவர்களால் நேர்கொள்ளப்படும்போது  ‘யாரிவன்?’ என்ற கேள்வி பெருகி வருகிறது. நம் சூழலின் நிலை இது.

இருந்தும் ஓர் எழுத்தாளன் என நான் என் கருத்துக்களை கூறியாகவேண்டும். எழுத்தாளனின் பணி என்பது சமூக விமர்சனமே. சமூகம் விரும்பும் கருத்துக்களை கூறுவதல்ல. சமூகத்தை தன் கருத்துக்களால் மகிழ்வித்து எதையும் பெற்றுக்கொள்வதல்ல. வாக்கோ பணமோ அல்ல. எழுத்தாளனின் நோக்கம் என்பது முதன்மையாக நேர்மையான சமூக விமர்சனம் மட்டுமே. ஒருவகையில் சமூகத்தை சீண்டுவதும், சிந்திக்கவைப்பதும் அவன் பணி.

எழுத்தாளன் நின்றுகொண்டிருக்கும் இடம் என்பது ஒரு சமூகம் நின்றிருக்கும் அறத்தின், சிந்தனையின் சராசரியிலிருந்து பல மடங்கு முன்னால் சென்றிருப்பது. அச்சமூகத்தின் சிந்தனையாளர்கள் எவரும் அவனுக்கு இணையாக உடன் வருவதில்லை. உயர்தத்துவவாதியுடனும் கவிஞனுடனும் மட்டுமே எழுத்தாளனுக்கு உரையாடல் உள்ளது. சமூகம் கொண்டிருக்கும் சராசரி சிந்தனைகளிலிருந்து பல மடங்கு காலத்தாலும் பார்வையாலும் முன்னால் சென்றுவிட்டிருப்பவன் எழுத்தாளன்.

ஆகவே அவன் தன் பார்வையை முன்வைக்கும்போது அச்சமூகம் அதிர்ச்சியும் ஒவ்வாமையும் கொள்வது இயல்பே. அவர்கள் அவன் மீது மதிப்பில்லாதவர்கள், அவன் எவர் என்றே தெரியாதவர்கள் எனில் அவர்கள் எதிர்வினையாற்றுவது மிக கீழ்நிலையிலேயே இருக்கும். எப்போதுமே இழிவுபடுத்துவது, அவதூறு செய்வது, ஏளனம் செய்வது என்பதாகவே இருக்கும்.

முப்பதாண்டுகளுக்கு முன்னரே அதை எவ்வண்ணம் நிகழும் என்பதை மிக நன்றாக அறிந்த பிறகுதான் நான் எழுதவே தொடங்கினேன். ஏனென்றால் நான் இப்போது சொல்வதை சுந்தர ராமசாமி திரும்பத் திரும்ப சொல்லியிருக்கிறார். ‘மேதைகளை கண்ணீர்விடவைத்த சமூகம் இது’ என ஒரு கட்டுரையில் சொல்கிறார். ஆகவே நான் எதிர்பாராத எதையும் இச்சமூகம் எனக்கு இதுவரை அளித்துவிடவில்லை. இச்சமூகத்தில் இருந்து எதையும் நான் எதிர்பார்க்கவில்லை. பணம், பரிசு எதையும்.

ஓர் எழுத்தாளனாக என்னுடைய தரப்பை சலிக்காமல் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும் என்ற உறுதி என்னுள் இருக்கிறது. அதற்கு என்னுடைய படைப்பாணவம் மிக இன்றியமையாதது. இந்த அறிவுச் சார்பற்,ற அறிவு எதிர்ப்பு கொண்ட சமூகத்தை பார்த்து அவர்களின் தலைக்கு மேல் நிமிர்ந்து நின்று நான் எழுத்தாளன் என்று சொல்லும்போது நான் என்னை மட்டும் உத்தேசிக்கவில்லை. நான் முன்வைப்பது என்னுடைய ஆளுமையை மட்டும் அல்ல. நான்  முன்வைப்பது எழுத்தாளன் என்னும் அடையாளத்தை. புலவன் என்று, எழுத்தாளன் என்று உலகம் முழுக்க ஈராயிரமாண்டுகளில் உருவாக்கிவைக்கப்பட்டிருக்கும் ஓர் ஆளுமைச்சித்திரத்தை. கபிலர், வள்ளுவர், கம்பர் முதல் வரும் ஒரு முகத்தை.

அதை தமிழர்கள் அறியமாட்டார்கள். அவர்களில் ஒரு சிலரையேனும் அப்படி ஒரு ஆளுமை உண்டென்றும் அது கவனிக்கப்படத்தக்கதென்றும் மதிக்கப்படத்தக்கதென்றும் அறிவுறுத்த  இந்த நிமிர்ந்த குரலால் முடியுமென்று நான் எண்ணினேன். முப்பதாண்டுகளில் அது அவ்வாறு நிகழ்ந்ததை என் கண்ணால் பார்க்கவும் செய்தேன். என்னைச் சூழ்ந்திருக்கும் தீவிரமான வாசகர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் அந்த நிமிர்வை நம்பி என்னை அணுகியவர்கள். அந்நிமிர்வைக் கொண்டு எழுத்தாளன் என்றால்  உயர்ந்த ஆளுமை என்பதை புரிந்துகொண்டவர்கள். தாங்களும் அந்த நிமிர்வை அகத்தே அடைந்தவர்கள். ஆகவே எச்சூழலிலும் தனித்து நிற்க, தன்வழியே செல்ல துணிவு கொண்டவர்கள்.

எழுத்தாளன் என்னும் ஆளுமைக்கெதிரான நக்கல்களும் காழ்ப்புகளும் எங்கிருந்தெல்லாம் வருகின்றன என்பதை சமூக வலைத்தளங்களை ஒரு முறை சுற்றி வந்தாலே காண முடியும். பாமரர்கள், ஒன்றும் அறியாதவர்கள், தங்கள் இயல்பான அறிவெதிர்ப்பு மனநிலையை கைக்கொள்கிறார்கள். கூடவே அறிவுச் செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருப்பவர்களில் சிலரும் உள்ளனர். அவர்கள்  வெற்று அறிவாளிகள். மிக மேலோட்டமாக எதையாவது செய்து கொண்டிருப்பவர்கள். எழுத்தாளன் என்ற ஆளுமையின் ஆழுளம் சார்ந்த தீவிரத்தை புரிந்துகொள்ள முடியாதவர்கள்.

அவர்கள் எழுத்தாளனை தொடர்ந்து சிறுமைப்படுத்தவும் எதிர்க்கவும் முயல்வார்கள். அவன் கருத்துக்களை திரிக்க முயன்றுகொண்டே இருப்பார்கள். ஏனெனில் ஒரு வெற்று அறிவாளியின் இடத்தை எழுத்தாளர்கள்தான் தொடர்ந்து கேள்விக்குள்ளாகுகிறார்கள். உலகமெங்கும் படைப்பிலக்கியவாதிகளுக்கு எதிராக மேலோட்டமாக வெற்றிலக்கியவாதிகள்  கூச்சலிட்டுக்கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். அதற்கான கருவிகள் அவர்களுக்கு உண்டு. அதை அவர்கள் ஆய்வு என்றும் கோட்பாடு என்றும் சொல்லிக்கொள்கிறார்கள். உண்மையில் அது நெடுங்காலமாக குதர்க்கம் என்று சொல்லப்படும் ஒருவகையான தர்க்க முறைதான். எந்த ஒரு படைப்பிலிருந்தும், எக்கருத்திலிருந்தும் தனக்குரிய ஒன்றை திரித்து எடுத்துக்கொள்வது அது. அப்படி திரித்து எடுத்துக்கொள்வதற்கு எதிர்வினையாற்றுவது. தர்க்கமற்ற தர்க்கம், அதுவே குதர்க்கம் எனப்படுகிறது.

அதற்கு எந்தவகையான அறிவு மதிப்பும் இல்லை. ஆனால் எல்லாக்காலத்திலும் அது இருந்தது. கம்பனுக்கு எதிராக காளிதாசனுக்கு எதிராக அது நின்றிருந்த கதைகளை நாம் கேட்டிருப்போம். இன்றும் அதே கருவிகள் அவ்வண்ணமே செயல்படுகின்றன. அவர்களை ஓர் அனுதாபத்துடன் அன்றி  பார்க்க முடியாது.  ஏனெனில் அறிவுச்செயல்பாடுக்கான  பெரும்  உழைப்பு அவர்களிடம் இருக்கிறது. ஆனால்  அவர்கள் அதிலிருந்து எதையும் பெற்றுக்கொள்வதில்லை. அறிந்தவற்றை தொகுத்துக்கோள்ளவும் தங்கள் அந்த அறிவாக மாற்றிக்கொள்ளவும் அவர்களால் இயல்வதில்லை. வைக்கோலை தின்ற பசு அதை செரிக்க முடியவில்லை என்றால் அது வைக்கோல்பசுவாக ஆகிவிடும்தானே?

அவர்களிடம் சுய அறிவென்பது இல்லை. ஆகவே அவர்கள் எங்கிருந்தெல்லாமோ அறிவுக் கருவிகளை பெற்றுக்கொள்கிறார்கள். புதிது புதிதாகக் கொண்டுவருகிறார்கள். அதைக்கொண்டு  எழுத்தாளனை உடைத்துவிடலாம் என்று கற்பனை செய்கிறார்கள். இரவு பகலாக அந்த உடைப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள். அவ்வப்போது உடைத்துவிட்டோம் என்ற பெருமிதத்தை அடைகிறார்கள். திரும்பத் திரும்ப அவர்களால் எழுத்தாளர்களின் சிலைகளின் மீது ஒரு சிறு கீறலைக்கூட போட முடியவில்லை என்பதையும் காண்கிறார்கள்.

அவர்கள் போரிடுவது எழுத்தாளனுடன் அல்ல, எழுத்தாளம் பற்றி அவர்கள் கொண்டிருக்கும் பிம்பத்துடன். அது ஆடிப்பாவையுடன் போரிடுவதுபோல. மேலோட்டமான அறிவாளிகளால் படைப்பிலக்கியவாதியை ஒன்றுமே செய்ய முடியாது என்று வரலாறெங்கும் நிரூபிக்கப்பட்டுவிட்டபோதும் கூட அவர்கள் அதை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு வழியில்லை.  அச்செயலினூடாகவே அவர்கள் தங்கள் இருப்பை தங்களுக்குத் தாங்கள் நிறுவிக்கொள்ள வேண்டும். அதனூடாகவே அவர்கள் வாழ்கிறார்கள்

மூன்றாவதாக, ஏதேனும் ஒரு அரசியல் தரப்பை எடுத்துக்கொண்டு அதன் பிரச்சாரமாக தங்களுடைய முழுச்செயல்பாடை ஆக்கிக்கொண்டவர்கள் அவர்களில் அந்த அரசியல் செயல்பாடினூடாக அதிகாரத்தையும் பணத்தையும் அடைபவர்கள் ஒரு சாரார். வெறுமே ஓர் அடையாளத்துக்காக அதில் ஒரு நிலைபாடு எடுத்துக்கொண்டு ஆவேசமாக  அதை முன்வைப்பவர்கள் இன்னொரு சாரார். முதல் சாரார் தெளிவான நோக்கம் கொண்டவர்கள். அதன் பொருட்டு அவர்கள் செய்வது அனைத்தும் திட்டமிட்டவை. அவர்களின் உலகமே வேறு. அவர்கள் இங்கே எவரையேனும் அடிப்பது வேறெங்கோ ஊதியம் பெற்றுக்கொள்ள.

இரண்டாவது சாரார் தனித்து தங்களுக்கென ஒரு சிந்தனையை உருவாக்கிக்கொள்ளும் திறனற்றவர்கள். திரளாக மட்டுமே சிந்திக்கமுடியும் என்னும் பலவீனம் கொண்டவர்கள். தங்களுக்கு ஆதரவாக பத்து பேர் வராது ஒழிந்தால் பதறிவிடுபவர்கள். அந்த பத்து பேரை சேர்த்துக்கொள்ளும் பொருட்டே அவர்கள் கட்சி நிலைபாடு எடுக்கிறார்கள். ஏதேனும் ஒரு தரப்பை தங்களின் அடையாளமாக சூடிக்கொள்கிறார்கள்.

அவ்வாறு ஒரு தரப்பைச் சூடிக்கொள்ளும்போது முதலில் வருவது அதன் மீதான ஆழ்ந்த அவநம்பிக்கைதான் .ஏனெனில் மனிதன் சூடிக்கொள்ளும் எந்த à

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 11, 2022 11:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.