Jeyamohan's Blog, page 63
July 6, 2025
வெண்முரசு கூட்டுவாசிப்பு
தாங்கள் நலம் என நம்புகிறேன்.
வெண்முரசு வாசிப்பில் ஒரு புது முயற்சியாக ஒரு கூட்டு வாசிப்பை ஆரம்பித்துள்ளோம். முதல் அரும்பு என்ற பெயரில் என்ற பெயரில் ஆரம்பித்த எங்கள் குழு முதற்கனல் நாவலை முதல் ஐந்து பகுதிகளை வாசித்து விவாதித்தோம்.
மொத்தம் ஐந்து பேர் மட்டுமே பங்குபெற்றுள்ள குழுவில் உள்ள அனைவரும் வெள்ளிமலை வகுப்பில் நண்பர்களானவர்கள். குழுவில் உள்ள அனைவரும் வெண்முரசு நாவல் வரிசையில் ஒரு குறிப்பிட்ட அளவில் படித்து முடித்துவிட்டோம். உதாரணமாக நான் கிராதம் வாசித்து கொண்டிருக்கிறேன், நண்பர் சத்யகிரி இந்திர நீலம் வாசிக்கிறார். ஆயினும் மீண்டும் முதலில் இருந்து வாசித்து விவாதிக்க ஆரம்பித்து வாசிக்க ஆரம்பித்துள்ளோம்.
இதை ஒரு புது அனுபவமாக உணர்கிறேன். நமது பார்வையும் மற்றொர் பார்வையும் ஒரே விஷயத்தை எத்தனை கோணத்தில் அணுகுகிறது என்பதையும், அது தரும் திகைப்பையும், அய்யோ இத கவனிக்காம விட்டுட்டனே, ஓ இதை இப்படி கூட பாக்கலாமா, இத இப்படியும் யோசிக்கலாமா என்று அது விரியும் விதம் மிகவும் அற்புதமாக உள்ளது.
ஒவ்வொரு வாரமும் சந்திகிறோம். பகுதி பகுதியாகவும் பின் மாதத்தில் ஏதேனும் ஒரு நாள் மொத்தமாகவும் விவாதிப்பதாக உள்ளோம்.
நன்றி.
சரவணன் சிவராஜா
lcwsaravana@gmail.com
அன்புள்ள சரவணன்,
பல குழுமங்களில் வெண்முரசு கூட்டுவாசிப்பு நிகழ்வதை அறிவேன். வாசிப்பு எப்போதுமே அந்தரங்கமானதுதான். ஆனால் அதன் ஒரு பகுதி கூட்டுவாசிப்பாக நிகழமுடியும். கூட்டுவாசிப்பில் ஒருவர் கொள்ளும் பொருள் இன்னொருவரின் விடுபடல்களை நிரப்பும். ஆகவே ஒட்டுமொத்தமான ஒரு முழுமைவாசிப்பு அமையமுடியும். அதேபோல நாம் ஏதேனும் காரணங்களால் வாசிப்பை நிறுத்திவிட்டால் இன்னொருவர் அளிக்கும் தூண்டுதல் நம்மை வாசிக்கச் செய்யும்.
வெண்முரசு வெளிவந்த காலகட்டத்திலேயே கூட்டுவாசிப்புதான் நிகழ்ந்துகொண்டிருந்தது. வெண்முரசு விவாதங்கள் என்னும் இணையதளம் பல்வேறு கடிதங்களை தொடர்ச்சியாக வெளியிட்டது. அது வெண்முரசு மீதான வாசிக்கு கூர்மையடைய உதவியது.
ஜெ
வெண்முரசு விவாதங்கள் இணையப்பக்கம்வாழ்க்கையைப் பற்றிக்கொள்ளுதல்
I never thought about it in that angle. My idea about writing was that it is a kind of recording our ideas. You are narrating it as an evocation of ideas or concentrating or meditating to evoke the ideas.
Why should we write?
இன்றைக்குள்ள வாழ்க்கை என்பது 60 வயதுக்குள் தீர்ந்துவிடுகிறது. முன்பு எப்போதுமே இல்லாத அளவுக்கு இன்று லௌகீக வாழ்க்கை சவால் நிறைந்ததாக இருக்கிறது. முன்பும் போராட்டம் இருந்தது. ஆனால் இன்று முழுநேரமும் அதிலேயே கிடக்கவேண்டியிருக்கிறது
வாழ்க்கையைப் பற்றிக்கொள்ளுதல்வாழ்க்கையைப் பற்றிக்கொள்ளுதல்
I never thought about it in that angle. My idea about writing was that it is a kind of recording our ideas. You are narrating it as an evocation of ideas or concentrating or meditating to evoke the ideas.
Why should we write?
இன்றைக்குள்ள வாழ்க்கை என்பது 60 வயதுக்குள் தீர்ந்துவிடுகிறது. முன்பு எப்போதுமே இல்லாத அளவுக்கு இன்று லௌகீக வாழ்க்கை சவால் நிறைந்ததாக இருக்கிறது. முன்பும் போராட்டம் இருந்தது. ஆனால் இன்று முழுநேரமும் அதிலேயே கிடக்கவேண்டியிருக்கிறது
வாழ்க்கையைப் பற்றிக்கொள்ளுதல்July 5, 2025
வெண்முரசு- குருபூர்ணிமா சிறப்புச் சலுகை
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு
குரு பூர்ணிமா 2025 – வெண்முரசு நாளின் சிறப்பு நிகழ்வாக இன்று முதல் ஜுலை 10 குரு பூர்ணிமா நாள் வரை பதிப்பகத்தில் நேரடியாகவோ ஆன்லைனிலோ வெண்முரசு நூல்கள் வாங்குபவர்களுக்கு சிறப்பு சலுகையாக 5% தள்ளுபடி உண்டு என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். (முழுத்தொகுப்புக்கும் தனி நூல்களுக்கும்)
நன்றி
விஷ்ணுபுரம் பதிப்பகம்
நிழல்களுடன் ஆடியது-3
வெயிலில் அலைந்த களைப்பும் இரவில் வழக்கம் போல உள்ளங்குளிரும்படி உணவுண்டதும் சேர்த்து கிருஷ்ணன் உடனடியாகத் தூங்கத்தொடங்கினார். நல்ல வளமான குறட்டை. நான் ஒன்பதரை மணிக்கு படுத்து பத்து மணிக்கு தூங்கிவிட்டேன். அன்று மாலை நாகா கட்டிலிருந்து அன்று திரும்பி வரும்போது வழி தவறி இருட்டில் பிரதிஷ்டானபுரியின் சிறு சந்துகளினூடாக சுற்றி வந்திருந்தோம். முற்றிலும் வழி தவறிவிட வாய்ப்பே இல்லை. அவ்வளவு சிறிய நகரம். ஆனாலும் ஒரு சில நிமிடங்களில் ஒரு பதற்றம் வரத்தான் செய்தது. ஏனெனில் அதில் எங்கும் பெரிய வெளிச்சமும் இல்லை. தெரு நாய்கள் செல்லும் இடமெல்லாம் எங்களை நோக்கி குரைத்துக்கொண்டிருந்தன.
நான் ஒரு மணிநேரம் தூங்கியிருக்கக்கூடும். ஏதோ ஓர் உணர்வு ஏற்பட்டு விழித்துக்கொண்டபோது விடுதியில் எனது இடது கைப்பக்கம் இருந்த நாற்காலியில் ஒருவர் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். மங்கலான நிழலுரு. ஆனால் கண்களும் சிரிப்பும் மிகத்தெளிவாக இருந்தன. குழந்தைகளுக்குரிய கண்கள் வாய் நிறைந்த வெண்பற்களுடன் கூடிய சிரிப்பு. உடலோ முகமோ தெளிவடையவில்லை. அது கானபூதி என்று எனக்குத் தெரிந்திருந்தது. ஆனால் எந்த வியப்போ அச்சமோ ஏற்படவில்லை. தொடர்ந்து பல நாட்களாக சந்தித்து உரையாடி வரும் ஒருவர் வழக்கம்போல இயல்பாக அங்கு வந்து அமர்ந்திருப்பதாகத்தான் எண்ணினேன். அவரைப் பார்த்து புன்னகைத்து விட்டு கழிப்பறைக்கு சென்று சிறுநீர் கழித்துவிட்டு வெளியே வந்தேன். அப்போதுதான் ஓர் அதிர்ச்சி போல நான் அந்த நாற்காலியில் எவரையோ பார்த்ததை நினைவு கூர்ந்தேன்.
உண்மையாகப் பார்த்தேனா அல்லது தூக்கத்தின் நீட்சியில் வந்த கனவா என்று எனக்குச் சொல்ல முடியவில்லை. தர்க்க பூர்வமாகப் பார்த்தால் அது கனவின் நீட்சிதான். ஏனெனில் தூங்கும்போது கானபூதியைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் உண்மையாகவே கானபூதியைப் பார்த்தேன் என்று நம்ப விரும்பினேன். எனக்கு அத்தனை பிரியமான ஒன்றாக அக்கதை சொல்லும் பிசாசு இருந்தது என்பது அளித்த குதூகலத்தை இப்போதும் நினைவு கூர்கிறேன். கைகள் நடுங்கும் அளவுக்கு, கண்ணீர் மல்கும் அளவுக்கு பரவசம்.
கணிப்பொறியை எடுத்து மீண்டும் அதே சொற்றொடரை எழுதி நாவலைத் தொடங்கினேன், முற்றிலும் வேறொரு கோணத்தில். நான் என்று அங்கு உருவாகி வந்த கதாபாத்திரம் நான் அதை எழுதும் கணத்திற்கு முன்புவரை எனக்குச் சற்றும் தெரியாதது. அவன் பெயர் துக்காராம் என்பதும் அவன் ஒரு பங்கி என்பதும் எல்லாம் அந்த இரண்டு நாட்களில் பைத்தான் நகரில் இருந்த அனுபவத்தால் உருவாகி வந்தவை. சமகாலத்தில் ஒரு தலித்தின் பார்வையினூடாக மட்டுமே கானபூதியும், அதன் கதைகளில் விரியும் குணாட்யரும், குணாட்யரின் பெருங்காவியத்தின் பேசுபொருளாகிய இந்திய பண்பாட்டின் புதைந்திருக்கும் வேர்ப்பிடிப்பும் வரமுடியும் என்பது ஓரிரு பத்திகளுக்குள்ளேயே எனக்குத் தெரிந்துவிட்டது. இத்தனை எளிதாக உணரக்கூடிய, இத்தனை மறுக்கமுடியாத ஒன்று எனக்கு அதற்குமுன் ஏன் தோன்றவில்லை என்பதை யோசித்தால் அது விந்தைதான். ஆனால் எப்போதும் அது அப்படித்தான்.
காலையில் கிருஷ்ணன் எழும்போது இரண்டு அத்தியாயங்கள் எழுதி முடித்திருந்தேன் கிருஷ்ணனிடம் ”இரண்டு அத்தியாயங்கள் எழுதிவிட்டேன்” என்று சொன்னேன். “இன்று ஏப்ரல் 22, என்னுடைய பிறந்தநாள். இன்று முதல் அதை வெளியிடப்போகிறேன்” என்றேன்
“ஏற்கனவே மூன்று எழுதிவிட்டீர்களே, அப்படியானால் ஐந்து ஆகிவிட்டதா?” என்றார்.
“இல்லை மொத்தமாக இரண்டுதான் எழுதியிருக்கிறேன். அதுவும் இப்போதுதான் எழுதியிருக்கிறேன் இதோ” என்றேன்.
“ஒன்று வெளியாகிவிட்டதா?” என்றார்.
“ஆமாம் நேற்றிரவு எழுதி முதல் அத்தியாயத்தை உடனடியாக வெளியிட்டுவிட்டேன். இரண்டாம் அத்தியாயம் இங்கு இருக்கிறது”
”அப்படியென்றால் நம்முடைய பயணம் …நாம் திரும்பிப்போகவேண்டுமே….அதில் எப்படி எழுதமுடியும்?” என்று அவர் கேட்டார்.
“இங்குதான் இன்னும் இரண்டு நாட்கள் இருக்கப்போகிறோமே. குறைந்த ஐந்து அத்தியாயங்கள் எழுதிய பிறகுதான் நாம் இங்கிருந்து போகப்போகிறோம்” என்று சொன்னேன்.
முந்தைய நாள் நாகா கட்டிலிருந்து திரும்பி வரும்போது மீண்டும் அங்கு செல்ல வேண்டியதில்லை என்று கிருஷ்ணனிடம் சொல்லியிருந்தேன். அது ஒருவகையான தொந்தரவை உருவாக்குகிறது, அந்தப்பாழடைதல் எனக்குப் பிடிக்கவில்லை என்றேன். ஆனால் அன்று மாலை மீண்டும் அங்கேயே செல்லலாம் என்று சொன்னேன். திரும்பத்திரும்ப அங்கேயே சென்றுகொண்டிருந்தோம். மொத்த நாவலுமே அங்கேதான் நிகழவிருக்கிறது என்று அப்போது எனக்குத் தெரியாது.
அங்கிருந்த மேலும் இரண்டு நாட்களில் ஐந்து அத்தியாயங்களை எழுதி முடித்தபிறகுதான் கிளம்பினேன். அப்போது நாவலில் ஒரு சிறு பகுதிதான் எனக்குள் உருவாகியிருந்தது. அதன் வடிவம், பேசுபொருள், அது சென்றடையும் தரிசனம் எதுவுமே தெளிவாக இல்லை. அதில் வரும் ஒரு கதாபாத்திரம் கூட என்னுள் இல்லை. துகாராமின் கதாபாத்திரம்கூட என்னுள் திரண்டிருக்கவில்லை. கோதாவரியின் கரையில், பிரதிஷ்டானபுரியின் இடுபாடுகள் எஞ்சிய பைத்தான் நகரில், பங்கிகளின் குடும்பம் ஒன்றில், கானபூதி என்னும் கதை சொல்லும் பிசாசு ஒரு மொழிவெளிப்பாடாக தோன்றிக்கொண்டே இருக்கிறது. தனது முடிவில்லாத அழைப்பை முன்வைத்துக் கொண்டே இருக்கிறது. என்னுள் இருந்தது அவ்வளவு மட்டும்தான்.
அந்த ஒரு சரடை பிடித்துக்கொண்டு என் முழு அக ஆற்றலையும் அதன் மேல் செலுத்தி ஓர் அத்தியாயத்தை எழுதி முடித்து விடுபடுவதை மட்டுமே செய்துகொண்டிருந்தேன். கான யானை கைவிடு பசுங்கழை போலத்தான் என் உள்ளம் ஒவ்வொரு அத்தியாயத்திற்குப் பின்னரும் மீண்டு கொண்டிருந்தது. எழுதி முடித்தபின் அந்த எழுத்தின் மீட்டல் என்னிடம் எப்போதுமே இருக்கும். ஆனால் இந்த நாவல் மட்டும்தான் எழுதி முடித்த அத்தியாயத்தில் இருந்து முழுமையாகவே வெளிவந்து, அப்படியே முற்றிலும் மறந்து விடுபட்டு நான் எழுதியது.
ஓர் அத்தியாயத்தில் நிகழ்பவை எனக்கே விந்தையானவை. ஓர் அத்தியாயம் எங்கு திருப்பங்கள் கொள்கிறது எந்த உச்சத்தை அடைகிறது என்பது அதை எழுதிய பிறகு மட்டுமே எனக்குத் தெரிந்தது. இதன் வாசகர்களும் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இதில் என்ன நிகழ்கிறது என்பதை வியப்புடன்தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்று தோன்றுகிறது. இந்நாவலின் வடிவம் பற்றிய எந்த புரிதலையும் எவரும் இது உருவாகிவந்த பரிணாமத்தின்போது ஊகித்திருக்க முடியாது. தொடர்ந்து இந்த நாவல் உருமாறிக்கொண்டிருந்தது. ஒருவகையான விழிப்புநிலை பைத்தியக்காரத்தனம்தான் இதன் வடிவம். இதை தொடராக வெளியிட்டது இப்படி ஒரு கட்டாயம் இல்லை என்றால் இதை நான் எழுதி முடித்திருக்க மாட்டேன் என்று தோன்றியமையால். இப்படி வெளியிட்டதனால் என் வாசகர்கள் என்னுடனேயே வந்து இதை வாசித்தனர். அவர்களும் இதன் ஆக்கத்தில் உடனிருந்தனர். நீங்கள் எழுத்தாளனின் எழுத்தறையில் அவனுடன் அமர்ந்து அவன் எழுதும்போதே வாசித்தீர்கள்.
முதலில் இந்நாவலின் களம், பேசுபொருள் பற்றிய ஓரு வியப்பும் அச்சமும் மட்டுமே என்னிடம் இருந்தன. பின்னர் அதன் சமூகவியலும் அரசியலும் திரண்டு வந்தன. அதன்பிறகு சமூகவியலுக்கும் அரசியலுக்கும் அடிப்படையாக இருக்கும் நீண்ட மரபு தன்னை அதற்குள் நிகழ்த்திக்கொள்ளத் தொடங்கியது. உண்மையில் அது மிகச்சரியான ஒரு பாதைதான். ஒரு தனிக்குடும்பம், அக்குடும்பம் அமைந்திருக்கும் அரசியல் மற்றும் சமூகச்சூழல், அச்சூழலைக் கட்டமைத்திருக்கும் மிகப்பெரிய வரலாற்றுப்பின்னணி, அந்த வரலாற்ற்றை உருவாக்கிய தொன்மப்பின்னணி என கச்சிதமான ஓர் அடுக்கு இப்போது தெரிகிறது. சமகாலத்திலிருந்து இறந்த காலத்தின் முடிவற்ற ஆழம் வரை, ஒரு கட்டிடத்தின் முகப்பிலிருந்து அதைத்தாங்கி நின்றிருக்கும் அடித்தளம் வரை, சொல்லப்போனால் அவ்வடித்தளம் நின்றிருக்கும் மண்ணின் ஆழம் வரை ஒரு பயணம். பிரதிஷ்டானம் என்றால் அடித்தளம் என்று பொருள். வேர் என்றும் ஒரு பெயர் உண்டு. இந்நாவல் வேர்களுக்குச் செல்வது, வேராலானது. அதை எழுதிய பின்னரே கண்டுபிடித்தேன்.
எனது எந்த நாவலிலும் இல்லாத ஒரு கதையற்ற கதைத்தன்மை இதில் வாய்த்தது. இதை மேலைஅழகியலின் ‘Meta epic’ வடிவம் கொண்ட நாவல் எனலாம். ஆனால் இந்தியப் புராணங்களின் வடிவத்தை கொண்டதும்கூட. இது ஒரு பெரிய கதைக்குவியல். கதாசரித சாகரம் போலவே தொன்மம், யதார்த்தம் எல்லாமே கலந்துள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள் ஒன்றுடன் முட்டி மோதி செல்கின்றன. ஒருகதை உருவாக்கும் வினாவுக்கு இன்னொரு கதை விடையாகிறது. ஒரு கதை உருவாக்கும் பதிலின்மைக்கும் இன்னொரு கதையே தொடர்ச்சியாகிறது. நாம் பண்பாடென்றும், வரலாறென்றும் எண்ணிக்கொள்வதெல்லாமே கதைகள்தான். கதைகள் என்பவை எந்தவகையிலும் தொடர்ச்சியற்றதாகிய மானுட வாழ்க்கைநிகழ்வுகளில் இருந்து மனிதன் உருவாக்கிக்கொள்ளும் தொடர்ச்சிகளின் தொகுப்புதான். அவற்றைத் தொகுப்பது வெவ்வேறு காலங்களில் நாம் அவற்றுக்கு அளிக்கும் அர்த்தம் மட்டும்தான். அவ்வாறு நாம் வாழ்க்கைக்கு அளிக்கும் அர்த்தங்களின் இயல்பை, சிக்கலை மட்டும் தான் இந்த நாவல் பேசுகிறது என்று தோன்றுகிறது.
முற்றிலும் திட்டமிடாமல், முற்றிலும் ஆராய்ச்சி எதுவும் செய்யாமல், ஒவ்வொரு நாளும் எழுந்தமர்ந்து முந்தைய அத்தியாயத்தின் கடைசிப் பத்தியை படித்துவிட்டு அதன்பின் என்ன தோன்றுகிறதோ அதை மட்டும் எழுதிக்கொண்டு சென்று முடித்த நாவல் இது. இதற்கான ஆய்வுகள் அனைத்தையுமே ஏற்கனவே சொன்னதுபோல நாற்பதாண்டுகளாக செய்து வந்திருக்கிறேன். இதனுடைய தரவுகளும் தரிசனங்களும் இதற்கு முன்பு நான் எழுதிய விஷ்ணுபுரத்திலிருந்து வெண்முரசு வரையான பெருநாவல்கள் அனைத்திலுமே ஏற்கனவே உள்ளன.
இதை என்னை எழுதவைத்தவை நிழல்கள். என்னுடன் நிழல்கள் இருந்துகொண்டே இருந்தன. நான் அவற்றுடன் உரையாடிக்கொண்டே இருந்தேன். அதிகாலை நடையின்போது அவற்றுடன் சத்தமாகவே, கைகளை வீசியும் சிரித்தும் பேசிக்கொள்ள முடியும். என்னை நன்கறிந்திருக்கும் பார்வதிபுரத்தின் நாய்கள் மிரண்டு என்னைப் பார்த்தாலே குரைக்க தொடங்கின. ஆகவே நேராகவே மையச்சாலையில் ஏறி பார்வதிபுரம் சந்திப்பு வழியாக மேம்பாலம் மேல் ஏறி நடப்பேன். அங்கே அவ்வேளையில் மானுட அசைவே தென்படாது. ஆனால் நிழல்களின் குரல்கள் கேட்டுக்கொண்டிருக்கும். சிரிப்புகள், சீண்டல்கள். கண்ணுக்குப் படும் எந்த நிழலும் சட்டென்று தெளிவான உருவாகத் திரண்டுவிடும். கண்ணை சற்று திருப்பினால் மீண்டும் ஏதேனும் பொருளின் நிழலாக ஆகிவிடும்.
இந்நாவல் இத்தனை திசைகளுக்கு விரிந்தமைக்குக் காரணம் நிழல்கள்தான். அவை என்னை ஆளுக்கொரு திசைக்கு இழுத்தன. எது வென்றதோ அதன் திசைக்கு நான் சென்றேன். அங்கே உடன்வந்த இன்னொரு நிழல் என்னை மீண்டும் இழுத்துக்கொண்டு, சீறிக்கொண்டு இருந்தது. மாபெரும் ஊசலாட்டம்- எட்டு திசைகளுக்கும்.
(மேலும்)
மானின் நிழல்இந்து பைபிள்
[image error]ஹிந்து பைபிள் என்னும் ஆரியர் சத்தியவேதம் சே.ப.நரசிம்மலு நாயுடு எழுதிய தொகை நூல். பிரம்ம சமாஜ வழிபாட்டு நோக்கத்துக்காக எழுதப்பட்டது. இந்து மதநூல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மொழியாக்கம் செய்யப்பட்ட பகுதிகளும், இந்து மதக் கொள்கைகளை விளக்கும் பகுதிகளும் அடங்கியது.
இந்து பைபிள்
இந்திய ஆன்மிகம்- கடிதம்
அன்புள்ள ஜெ,
எங்கும் ‘எட்டிப் பார்ப்பதும்’ , ‘விலகிச் செல்ல’ எத்தனிப்பதும் பொதுவான மனித இயல்பு. மந்தையின் மிகப் பெரும்பான்மை ஒரு கணத்துக்கும் குறைவான நேரத்தில் எட்டிப் பார்த்து விட்டு உடனே பார்வையைத் திருப்பிக் கொண்டு விடும். அறிய முடியாமை குறித்த பேரச்சம் இயல்பாகவே அதை வழி தவறாமல் கட்டியிழுத்துக் கொள்ளும். மிகச் சிலவே கட்டுக்களை விடுவித்துக் கொண்டு செல்லும் துணிவைக் கொண்டிருக்கும். பலநூறு கட்டுக்களில் ஓரிரண்டை மட்டுமே பிடித்துக் கொண்டு மற்றவற்றை மீறிச் செல்ல முயன்று கொண்டே இருக்கும். மீறல் தொடங்கி படிப்படியாக நிகழ நிகழ அரிதானதொரு சாகசத்தை நிகழ்த்தும் பெருமித உணர்வுடன் முன் செல்லும். சாகசத்தின் பூரிப்பு , அங்கேயே முழு பலத்துடன் இருந்து கொண்டே இருக்கும் அச்சத்தின் பெருவிசையை சிறிது சமன் செய்து எச்சரிக்கை உணர்வு உண்டாக்கும் செயலின்மையை நீர்க்க வைத்து முன்செல்ல உதவுகிறது. இரு பெருவிசைகளுக்கு இடையே திகழும் சமநிலையின் அனுபவம் கணந்தோறும் செறிவாகிக் கொண்டே செல்லும். அச்செறிவின் எடை ஒரு கட்டத்தில் மனத்தின் இருக்கும் ஒரே கட்டினை துண்டிக்கையில் அதலம் திறந்து பேருருவின் காட்சி கிடைக்கிறது. முழு உயிரும் முழு தன்னுணர்வுடன் உச்சபட்ச விழிப்புணர்வுடன் அடியற்ற உணர்வனுபவத்தில் , பிரக்ஞை மட்டுப்பட்டு புத்தி தவிதவித்து , ஏதேனும் ஒரு ‘பிடி’ கிடைக்குமா என தேடி , ஏதேனும் ஒன்றை கண்டடைந்து மீளும். கணத்திற்கும் குறைவான நேரத்தில் நிகழும் இவ்வனுபவம் மரணத்திற்கு நிகரான அழுத்தத்துடன் இருக்கும். அதை அனுபவித்தவன் தன்னுள் ஏதோவொன்று நிரந்தரமாக மாறியிருப்பதை உணர்வான்.
மயிர் மின்னிதழில் அஜிதன் அவர்களது சிறுகதை – ஒரு இந்திய ஆன்மீக தரிசனம் – வாசித்தேன்
கதைநாயகன் மனித கழிவுகள் பிரக்ஞையின்றி உருவாக்கும் அருவருப்பை வெல்வதன் வழியாக ‘எட்டிக் குதிக்க’ முயல்பவன். அதில் ரகசியமான பெருமிதமும் கொண்டவன். கழிவுகளின் காட்சி தரும் அசூசையை வெல்ல முடிகிற அவனுக்கு அது தன்மேல் படக்கூடும் என்னும் சிறிய எண்ணமே பலமடங்கு அசூயை உண்டாக்குகிறது. இந்த ‘கைப்பிடியுடன்’ இருளில் இறங்குபவன், மேலும் மேலும் என அருவருப்புணர்வை வென்ற படி மெதுவாகச் செல்பவன், எந்தவித கைப்பிடியும் இல்லாது ஏற்கனவே இறங்கியிருக்கும் ஒருவனைக் காண்கையில் ஏற்படும் திகைப்பின் கணத்தில் தனது பிடியும் தளர, தன்ணுணர்வு தடுமாறும் கணத்தில் அழகின்மையின் பேருருவை உணர்கிறான். பெரும் அலறலுடன் விஸ்வரூப தரிசனத்தின் விளைவான அறிதலால் தன்னையறியாமல் கை கூப்பியபடியே மீண்டெழ முயன்று வெளிவருகிறான். அந்தரவெளியில் நிற்பவனின் புன்னகையும் அவனுக்குத் தெரிகிறது.
ஒரு அனுபவக் குறிப்பு என்பதிலிருந்து சிறந்த கதையாக இதை மாற்றுவது கதை நாயகன் சட்டென்று அணையும் இருளில் பெரும் கூச்சலுடன் தத்தளிக்கையில் உன்மத்தனின் மென் சிரிப்பே. அவனை நோக்கிய பயணத்தில் இருக்கும் கதைநாயகன், அந்த கணத்தில் உன்மத்தனாகவே மாறி மீண்டுவிடுகிறான்.
பொதுப் போக்கில் குரூரமான அழகின்மையாக மட்டுமே தெரிகின்ற கழிவறை காட்சிகள் உண்மையில் நமது வாழ்க்கையே. சைவ சித்தாந்த சொற்களில் சொன்னால், மும்மலத்தில் உழலும் புழுக்கள் நாம். பேருருவ காட்சி – அது மிகத் தூய அழகானுபவமோ , இங்கு காட்டப்படுவது போன்று அசூசையின் மூச்சு முட்டுகிற காட்சியோ – அத்வைதம் கூறுகின்ற இரண்டற்ற ஒன்றின் வெளிப்பாடே. கழிவிலும் பிரபஞ்ச தரிசனத்தை அடைய முடியும் என்பது பிரமிப்பாக இருக்கிறது.
கதையின் தலைப்பில் உள்ள நஞ்சு மிகக் கூரியது. இந்தியா உண்மையில் ஒரு மாபெரும் கழிவறையே. இந்த மாதிரியான ‘தரிசனம்’ இப்போதைக்கு இந்தியாவில் மட்டுமே சாத்தியம். தலைப்பை நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறேன்.
shankaran e r
சித்தாந்தம் இதழ், ஜூலை
அன்புமிக்க ஜெ
சித்தாந்தம் இதழின் நான்காவது இதழ் தற்போது வெளி வருகிறது. இதில் முக்கியமாக சைவ சித்தாந்தத்தின் அடிநாதம் என்று சொல்லப்படுகிற வினைக் கொள்கை தொடர் புதியதாக ஆரம்பிக்கப்படுகிறது. இந்த இதழில் இருந்து, வினை கொள்கையை பற்றி விரிவான விளக்கம் இனி வெளிவரும். மேலும் வழக்கம் போல் மற்ற கட்டுரை தொடர்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன
சூளை சோமசுந்தர நாயகர் அவர் சித்தி அடைந்தபோது ஜே. எம் நல்லுசாமி பிள்ளை அவர்கள் எழுதிய கடிதம் இதில் வெளியிட்டப்படுகிறது.
படித்து பயன் பெறலாம்.
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை.
இப்படிக்கு
செ. பவித்ரா
உ. முத்துமாணிக்கம்
சித்தாந்தம் இதழ் ஜூலைஆதித்தகரிகாலன் கொலை, கடிதம்
You’re right when you say that literature is regarded as a luxury and upper-middle-class fashion here. In fact, both the lower class and middle class believe that literature is merely a hobby for the uppermost class. But in fact, the upper class are practically illiterate.
Literature and the upper classநான் உங்கள் காணொளி ஒன்றைப் பார்த்து உண்மையில் அதிர்ச்சி அடைந்தேன். ஆதித்த கரிகாலன் பிராமணர்களால் கொலைசெய்யப்பட்டார் என்று இங்கே அரைநூற்றாண்டாக அரசியல்வாதிகள் பிரச்சாரம் செய்கிறார்கள். அண்மையில் பொன்னியின் செல்வன் வெளிவந்தபோது அந்தப்பிரச்சாரம் உச்சம் அடைந்தது.
ஆதித்தகரிகாலன் கொலை, கடிதம்July 4, 2025
வா.மு.சேதுராமன். அஞ்சலி
மரபுக்கவிஞரும், சர்வதேச அளவில் தமிழ்ப்பணிகளை ஒருங்கிணைத்த பன்னாட்டு தமிழுறவு மன்ற நிறுவனருமாகிய வா.மு.சேதுராமன் மறைந்தார். அஞ்சலி.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
