வெண்முரசு கூட்டுவாசிப்பு
தாங்கள் நலம் என நம்புகிறேன்.
வெண்முரசு வாசிப்பில் ஒரு புது முயற்சியாக ஒரு கூட்டு வாசிப்பை ஆரம்பித்துள்ளோம். முதல் அரும்பு என்ற பெயரில் என்ற பெயரில் ஆரம்பித்த எங்கள் குழு முதற்கனல் நாவலை முதல் ஐந்து பகுதிகளை வாசித்து விவாதித்தோம்.
மொத்தம் ஐந்து பேர் மட்டுமே பங்குபெற்றுள்ள குழுவில் உள்ள அனைவரும் வெள்ளிமலை வகுப்பில் நண்பர்களானவர்கள். குழுவில் உள்ள அனைவரும் வெண்முரசு நாவல் வரிசையில் ஒரு குறிப்பிட்ட அளவில் படித்து முடித்துவிட்டோம். உதாரணமாக நான் கிராதம் வாசித்து கொண்டிருக்கிறேன், நண்பர் சத்யகிரி இந்திர நீலம் வாசிக்கிறார். ஆயினும் மீண்டும் முதலில் இருந்து வாசித்து விவாதிக்க ஆரம்பித்து வாசிக்க ஆரம்பித்துள்ளோம்.
இதை ஒரு புது அனுபவமாக உணர்கிறேன். நமது பார்வையும் மற்றொர் பார்வையும் ஒரே விஷயத்தை எத்தனை கோணத்தில் அணுகுகிறது என்பதையும், அது தரும் திகைப்பையும், அய்யோ இத கவனிக்காம விட்டுட்டனே, ஓ இதை இப்படி கூட பாக்கலாமா, இத இப்படியும் யோசிக்கலாமா என்று அது விரியும் விதம் மிகவும் அற்புதமாக உள்ளது.
ஒவ்வொரு வாரமும் சந்திகிறோம். பகுதி பகுதியாகவும் பின் மாதத்தில் ஏதேனும் ஒரு நாள் மொத்தமாகவும் விவாதிப்பதாக உள்ளோம்.
நன்றி.
சரவணன் சிவராஜா
lcwsaravana@gmail.com
அன்புள்ள சரவணன்,
பல குழுமங்களில் வெண்முரசு கூட்டுவாசிப்பு நிகழ்வதை அறிவேன். வாசிப்பு எப்போதுமே அந்தரங்கமானதுதான். ஆனால் அதன் ஒரு பகுதி கூட்டுவாசிப்பாக நிகழமுடியும். கூட்டுவாசிப்பில் ஒருவர் கொள்ளும் பொருள் இன்னொருவரின் விடுபடல்களை நிரப்பும். ஆகவே ஒட்டுமொத்தமான ஒரு முழுமைவாசிப்பு அமையமுடியும். அதேபோல நாம் ஏதேனும் காரணங்களால் வாசிப்பை நிறுத்திவிட்டால் இன்னொருவர் அளிக்கும் தூண்டுதல் நம்மை வாசிக்கச் செய்யும்.
வெண்முரசு வெளிவந்த காலகட்டத்திலேயே கூட்டுவாசிப்புதான் நிகழ்ந்துகொண்டிருந்தது. வெண்முரசு விவாதங்கள் என்னும் இணையதளம் பல்வேறு கடிதங்களை தொடர்ச்சியாக வெளியிட்டது. அது வெண்முரசு மீதான வாசிக்கு கூர்மையடைய உதவியது.
ஜெ
வெண்முரசு விவாதங்கள் இணையப்பக்கம்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
