இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 84
September 27, 2018
இதை இவ்வளவு காலம் சகித்ததே தவறு
கணவரது அனுமதி பெறாமல் திருமணமான அடுத்தவரோடு உடலுறவு கொள்வது குற்றம் என்றும் அதற்காக அந்த ஆணை தண்டிக்கவும் சொன்ன சட்டத்தைப் பற்றியும் அது தவறென்று நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது குறித்தும் நிறைய பேசலாம்.பேசுவோம்.முன்னதாக,கணவரின் அனுமதி தேவை என்று சொன்ன அந்த சட்டம் கணவரின் அனுமதி இன்றி வரும் பெண்ணோடு உறவு கொள்ள அவரது மனைவியிடம் அனுமதி பெறுவது குறித்து கவலைப்படாததே குற்றம்இதை இவ்வளவு காலம் சகித்ததே தவறுமற்றபடி இது எந்த அளவு சரி எந்த அளாவு தவறு, இதன் மேன்மை கீழ்மை குறித்தான எனது பார்வை குறித்து காக்கையில் (Kaakkai Cirakinile) எழுத இருக்கிறேன்
Published on September 27, 2018 10:11
பூனை ஸ்கெச் சாப்டாதுதானே?”
நிவேதி வந்திருக்கிறாள். காலையில் தூங்கிக் கொண்டிருந்தவனுக்கு முத்தம் கொடுத்து எழுப்பி விழித்ததும் குட்மார்னிங் என்று மழலையில் சொன்னாளென்ற வகையில் இந்த நாள் ஆசீர்வாதத்தோடு தொடங்கியிருக்கிறது.எழுந்ததும் மாமா, கிளம்புங்க அக்காவ பள்ளிக்கூடத்துல உட்டுட்டு (அப்போது கீர்த்தி பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள்) Ball லும் மெழுகு ஸ்கெச்சும் வாங்கிட்டு வரலாம்.Ball சரி, மெழுகு ஸ்கெச் எதுக்குப்பா?“ம், பூனை வரையப் போறேன்”“அய்யய்யோ, மெழுகுன்னா பூனை சாப்பிடுமே”“எப்புடி?””பூனைக்கு வாய் வரையறப்ப லபக்குன்னு புடிங்குக்கும்”“பரவல்லா, பூனைக்கு பக்கத்துல மொதல்ல சாசர்ல பால் வரஞ்சுக்குறேன். வரஞ்சதும் பூன பால் குடிக்கப் போயிடும். நீங்க ஸ்கெட்ச் வாங்கித் தாங்க”வாங்கி வரும்போது கேட்டாள்,“மாமா, பொய்தானே சொன்னீங்க, பூனை ஸ்கெச் சாப்டாதுதானே?”
Published on September 27, 2018 01:03
September 25, 2018
ஆனாலும் H.ராஜா கைது செய்யப் படவில்லை
மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் மாண்புமிகு ஜெயச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் சோபியா ஆஜரானார். விமானத்தில் பாரதிய ஜனதாக் கட்சியை எதிர்த்து “பாசிச பாஜக ஒழிக” என்று கோஷமிட்டதற்காக கைது செய்யப்பட்டவர். பிறகு அவரை எப்படியெல்லாம் ஒழுங்காக வளர்க்க வேண்டும் அவரது தந்தைக்கு ஏகத்துக்கும் பாடம் நடத்தியபிறகு நீதிமன்றம் அவருக்கு பினை தந்திருக்கிறது என்பதெல்லாம் அனைவரும் அறிந்ததே.அப்போது தாமதமாய் ஆஜரான புதுக்கோட்டை ஆய்வாளாரும் இந்த வழக்கின் விசாரனை அதிகாரியுமான திரு திருமலை அவர்களிடம் நிறைய கடிந்துகொண்ட மாண்பமை ஜெயச்சந்திரன் அவரை நிறைய கேள்விகள் கேட்டிருப்பதை இன்றைய THE HINDU வெளியிட்டிருக்கிறது. அவற்றுள் முக்கியமான சில,1) Why you (the police) are so keen on arresting the research scholar though she had not committed any serious offence?
2) Neither the caption of the flight nor the cabin crew had filed any complaint. However you had taken the girl to the police station and kept her there for more than seven hours. Do you know the provisions of criminal procedure coder in this regardமேலுள்ள கேள்விகளை இப்படி பெயர்க்கலாம்1) குறிப்பிட்டு சொல்லும்படியான எந்தஒரு பெருங்குற்றத்தையும் செய்யாத இந்த ஆராய்ச்சி மாணவியை கைது செய்வதில் நீங்கள் இவ்வளவு முனைப்பு காட்டவேண்டிய அவசியம் என்ன?
2) அந்த விமானத்தின் தலைவரோ ஊழியர்களோ உங்களிடம் எந்தப் புகாரும் அளிக்காத நிலையில் நீங்கள் அந்த மாணவியைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஏழு மணிநேரத்திற்கும் மேலாக அவரை அங்கே வைத்திருந்திருக்கிறீர்கள். இந்த விஷயத்தில் குற்றவியல் விதிமுறைகளையும் நடைமுறைகளையும் நீங்கள் அறிவீர்களா?’விதி முறைகள் உங்களுக்குத் தெரியுமா?’ என்ற அவரது கேள்வி காவல்துறையினரை எதுவும் செய்துவிடாது. அவர்கள் எது செய்ய அரசு ஆசைப்படுகிறதோ அதை அவர்கள் செய்வார்கள். மற்றபடி விதிமுறைகளையும் நடைமுறைகளையும் அறியாதவர்கள் அல்ல அவர்கள். இந்த உண்மை திரு ஜெயச்சந்திரன் அவர்களும் அறிந்ததுதான். தாங்க மாட்டாத கோவத்தில் வந்து விழுகிற வார்த்தைகள் அவை.1) அந்த எந்த ஒரு பெருங்குற்றத்தையும் செய்யவில்லை
2) விமானத்தில் எது நடந்தாலும் அது குறித்த புகாரை அந்த விமானத்தின் தலைவரோ அல்லது சிப்பந்திகளோதான் தரவேண்டும். அப்படி யாரும் புகார் தராத நிலையில் அவரைக் கைது செய்தது தவறு
3) ஒரு பெண்ணை ஏழு மணிநேரத்திற்கும் மேல் காவல் வைத்திருந்தது தவறுமேற்சொன்ன விஷயங்களை சோபியாவின் தந்தையும் கூறினார், தலைவர்கள் கூறினார்கள், நாமும் கூறினோம். இப்போது மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினரே கூறுகிறார்.ஆக புகார் கொடுக்க வேண்டியவர்கள் எந்த ஒரு புகாரும் கொடுக்காத நிலையிலேயே திருமதி தமிழிசை கேட்டுக் கொண்டதற்காக அந்தக் குழந்தையை காவல்துறை கைது செய்து ஏழுமணி நேரத்திற்கும் மேலாக காவல் நிலையத்தில் வைக்கிறது காவல்துறை.ஒரு பெண் இன்னொரு பெண்மீது புகார் தருகிறார் என்றால் காவல்துறை இருவரையும் விசாரித்திருக்க வேண்டும்.இது ஒருபுறம் இருக்க, திரு H.ராஜா நீதிமன்றத்தையே கெட்ட வார்த்தையால் திட்டுகிறார். ஊருக்கு ஊர் அவர்மீது புகார் அளிக்கப் படுகிறது. அவரைத் தேடுவதற்காக தனிப்படைகளே அமைக்கப் படுகிறது.அவர் தலை மறைவாகி விட்டபடியால் அவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை என்று சொல்லப்படுகிறது. அடுத்தநாள் அவர் வேடசந்தூரில் காவல்துறை பாதுகாப்போடு அவர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.அங்கு அறநிலையத்துறை ஊழியர்களைக் கொச்சைப் படுத்தி பேசுகிறார். அதற்காகவும் அவர்மீது புகார் அளிக்கப் படுகிறது.ஆனாலும் அவர் கைதுசெய்யப் படவில்லை.தன்னிடம் விளக்கம் கேட்க நிதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்கிறார். இப்போதும் அவர் கைது செய்யப்படவில்லை.அந்த அளவிற்கு அசிங்கமாக பேசிவிட்டு நான் வீட்டிற்கு வந்தால் என் மனைவியும் மகளும் என்னை விளக்கமாறால் அடித்தே கொன்றிருப்பார்கள். ஊடகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களைக் குறித்து அவ்வளவு கேவலமாகப் பேசிய SV.சேகரை கைது செய்யாமல் அவருக்குப் பாதுகாப்பு அளித்தது காவல்துறை.இந்த நாடு யாருக்கானது என்ற கேள்விக்கு “கிட்டத்தட்ட அவாளுக்கானது” என்பது நாளுக்குநாள் உறுதியாகிக் கொண்டே வருகிறதா?அல்லது அவர்களை ஒன்றும் செய்யாதீர்கள் அவர்கள் இப்படியாக உளறுவதன் மூலம் ரஃபேலில் இருந்தும் மல்லையாவிலிருந்தும் மக்களின் கவனத்தை அவர்கள் வேறுபக்கம் இழுக்கட்டும் என்று வழிகாட்டுதல் வந்திருக்கிறதா?#சாமங்கவிந்து 34 நிமிடங்கள்
26.09.2018

Published on September 25, 2018 19:09
காக்கையின் வேண்டுகோள்
காக்கையை ( Kaakkai Cirakinile) ஆரம்பித்து ஏழு ஆண்டுகள் ஆயிற்று.ஒரு உண்மையை சொல்லி விடுகிறேன்,2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நாளன்று சென்னை இக்சாவில் வைத்து காக்கையை வெளியிட்டபோது இவ்வளவு காலம் காக்கையை கொண்டுவர முடியும் என்று நாங்கள் கருதவில்லைமாற்றிதழின் வாழ்நாளைப் பொறுத்தவரை "செந்தூரம்" இதழை வெளிட்டு அதன் ஆசிரியர் செந்தூரம் ஜெகதீஷ் சொன்னதுதான் சாசுவதம். அன்று அவர் சொன்னார்,"இந்த இதழ் நிச்சயம், அடுத்த இதழ் லட்சியம்"இதைத்தான் காக்கை வெளியீட்டு விழா அன்றும் குறிப்பிட்டேன்.ஆனால் காக்கையின் 85 வது இதழ் அச்சுக்குப் போயிருக்கிறதுநிறைய எழுத்தாளர்களை காக்கை வழி அறிமுகம் செய்திருக்கிறோம்நிறைய படைப்பாளிகளுக்கு காக்கை இளைப்பாற இடம் தந்திருக்கிறதுவாசகர்களை ஏமாற்றாமல் இயன்றவரை தரமாய் வழங்க முயற்சித்திருக்கிறோம்விளம்பரங்கள் கிடைக்கவில்லைநியாயமான முறையில் எவ்வளவோ முயன்றும் நூலக வாசலை எங்களால் எட்ட முடியவில்லைஎந்தவிதமான உதவிக்கும் ஊழியர்களை வைத்துக் கொள்ளுமளவு வசதி இல்லாததால் எல்லா வேலைகளையும் நாங்களேதான் பார்க்கிறோம்உண்மையை சொன்னால் நமது அலுவலகத்தில் போர்டுகூட இல்லைஆனாலும் மாதாமாதம் காக்கையை சரியாகக் கொண்டுவந்து உங்களிடம் சேர்க்கிறோம்போகிற இடமெல்லாம் நண்பர்கள் கொண்டாடுகிறார்கள். நேற்று பாண்டியில் ஒரு கூட்டம். உள்ளே நுழைந்ததும் தோழர் Jk தன்னை அறிமுகம் செய்து கொண்டதும் அறிவுறுவோன் அவர்களையும் உங்களையும் சந்திக்க வேண்டும் என்றிருந்தேன். என்கிறார்காக்கை படைப்பாளிகளை கொண்டு சேர்க்கவும் செய்கிறதுஎல்லாம் சரிதான்மகிழ்ந்து கரைகிறோம்தான்ஆனாலும் நண்பர்களேநிதிச்சுமை கடுமையாக உள்ளது.கடன் சுமை கவலை தருகிறதுஇதழ் தொடர்ந்து வேண்டுமெனில் சந்தா அவசியம்இதுவரை சந்தா செலுத்தாத நண்பர்கள் இரண்டாண்டு சந்தா 500 ரூபாய் அனுப்பிவிட்டு எனக்கும் தகவல் தாருங்கள்இதை உங்களிடம் கேட்கும் உரிமை எனக்கு உண்டுA/c Name ..kaakkai
A/c No .. 60111010005660
IFSC . . Synb0006011ede
Bank. .syndicatebanks
Triplicane
.. chennai 600005Address. Naakkai
288dr nadesanroed.triplican
Chennai.5#சாமங்கவிய ஒரு மணி 21 நிமிடம்
A/c No .. 60111010005660
IFSC . . Synb0006011ede
Bank. .syndicatebanks
Triplicane
.. chennai 600005Address. Naakkai
288dr nadesanroed.triplican
Chennai.5#சாமங்கவிய ஒரு மணி 21 நிமிடம்
Published on September 25, 2018 10:02
September 21, 2018
வேசியின் மகனென்றே என்னை அப்போதும் அழைக்கலாம்
மிக நாகரிகமான வார்த்தைகளால் நான் வைக்கும் விமர்சனங்களே அவர்களை கோவப்படுத்துகிறது போல."வேசி மகனே" என்றும் இன்னும் மோசமாகவும் ஆரம்பித்திருக்கிறார்கள்அவர்களிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்க முடியும்ஆனால் நான் மாறமாட்டேன் தோழாமுகம் காட்டுநேரில் வாஅனைவரையும் அறிமுகம் செய்து வைக்கிறேன்உனக்கு என்ன வயதென்று தெரியாதுநீ என் அம்மாவை அழைத்த மாதிரியே என் மனைவியையும் மகளையும்கூட "வேசி" என்றும் அழைக்கலாம்சத்தியமாய் கோவப்பட மாட்டோம்அப்போதும் வீட்டில் அனைவரும் அன்பளிப்போம்குடிக்கிற சூடில் தேநீர் பருகிக் கொண்டே விவாதிப்போம்அதற்குப் பிறகும் திட்டலாம் நீபெயர் சொல்லுஅவசியம் வா தோழாஉன்னைமாதிரிப் பிள்ளைகளை பிஜேபி மாதிரி கட்சிகள் காவுகொள்வதை தடுக்க முடியாத கோவம்தான் எங்கள்மீது எனக்குஎன்ன சொல்லநேரில் பார்த்தால் நீ என்னை அப்பா என்றும் அழைக்கக் கூடும்நீ என்னை வேசியின் மகனென்றே அப்போதுமழைத்தாலும் என்னால் மகனாக மட்டுமே உன்னை கொள்ள முடியும்மீண்டும் சொல்கிறேன்,உன்னைமாதிரிப் பிள்ளைகளை பிஜேபி மாதிரி கட்சிகள் காவுகொள்வதை தடுக்க முடியாத கோவம்தான் எங்கள்மீது எனக்குஅவசியம் வா#சாமம்கவிந்து ஒரு மணி எட்டு நமிடம்
Published on September 21, 2018 18:43
நானும் கூறுகிறேன், குரலற்றவர்களின் குரலே இந்த நூல்

முனைவர் செல்வக்குமாரியின் “திருநங்கையரின் பால்நிலையும் வாழ்நிலையும்” நூலிற்கான எனது அறிமுக உரை
*********************************************************************
திவ்யபாரதி பர்கவுன்சிலில் தன்னை பதிவு செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தன்னை பார் கவுன்சில் உறுப்பினராகப் பதிவு செய்துவிட்டு வந்த திவ்யா நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக ஷர்மிளா என்ற ஒரு திருநங்கை தன்னை பார்கவுன்சிலில் பதிவு செய்திருக்கும் செய்தியை முகநூலில் பதிந்திருந்தார். நீண்ட போராட்டத்திற்குப் பிறகே திவ்யா தனக்கிருந்த தடையை உடைக்க முடிந்தது. ஆனால் அதைவிடவும் பேரதிகமாய் ஷர்மிளா பார்கவுன்சிலில் இணைந்திருந்ததை மகிழ்ந்து கொண்டாடியிருந்தார்.அந்த மகிழ்ச்சியில் திளைத்திருந்த வேளையில் தோழர் பெண்ணியம் செல்வக்குமாரியிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. தாம் எழுதியுள்ள “திருநங்கையர் பால்நிலையும் வாழ்நிலையும்” என்ற ஆய்வுநூலுக்கு ஒரு வாழ்த்துரை எழுதித் தருமாறு அவர் கேட்டிருந்தார்.இரண்டும் ஒரே புள்ளியில் நிகழ்ந்தது சத்தியமாய் தற்செயல்தான்.அந்த நூலுக்கான தன்னுரைக்கு “குரலற்றவர்களின் குரல்” என்று அவர் தலைப்பிட்டிருந்தார். இந்த நூலை வாசித்து முடித்ததும் நமக்குத் தோன்றியது இதுதான்,ஏன் இவர் இந்த நூலுக்கு “குரலற்றவர்களின் குரல்” என்று தலைப்பு வைத்திருக்கக் கூடாது?திருநங்கை என்றோ திருநம்பி என்றோ யாரும் பிறப்பதில்லை. ஆணென்றும் பெண்ணென்றும்தான் அனைவருக்கும் பிறப்பு நிகழ்கிறது. பிறகெப்படி திருநங்கைகளும் திருநம்பிகளும் காணக் கிடைக்கிறார்கள்?திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் குறித்து கருத்தெடுக்க விழைவோர் அவசியம் கவனம் குவிக்க வேண்டிய அடிப்படையான எளிய கேள்வி இது.எல்லா மனிதர்களுக்குள்ளும் ஆண் தன்மையும் இருக்கும், பெண் தன்மையும் இருக்கும். பெண் தன்மையே இல்லாத வறட்டு ஆணோ அல்லது ஆண் தன்மையே இல்லாத வறட்டு பெண்ணோ சாத்தியமே இல்லை. இந்த வகையில் பால்நிலையைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.1) ஆண் உடலில் ஆண் தன்மை பேரதிகமாகவும் பெண் தன்மை குறைவாகவும் உள்ளவர்கள் ஆண்கள்
2) பெண் உடலில் பெண் தன்மை பேரதிகமாகவும் பெண் தன்மை குறைவாகவும் உள்ளவர்கள் பெண்கள்
3) ஆண் உடலில் ஆண் தன்மை குறைவாகவும் பெண் தன்மை பேரதிகமாகவும் உள்ளவர்கள் திருநங்கைகள்
4) பெண் உடலில் பெண் தன்மை குறைவாகவும் ஆண் தன்மை பேரதிகமாகவும் உள்ளவர்கள் திருநம்பிகள்வறுமையின் காரணமாக தங்கள் பிள்ளையின் ஆண்குறியை அறுத்து திருநங்கை போலாக்கி பாலியல் தொழில் ஈடுபடுத்தி பிழைப்பை ஓட்டும் பெற்றோர்களும் இருப்பதாக இந்த நூலில் ஓரிடத்தில் செல்வக்குமாரி பதிகிறார். இதுமாதிரி பிள்ளைகளின் நிலைமை கொடுமையினும் கொடுமை.இவர்களுள் ஆண் தன்மையே மிகுதியாய் இருக்கும். ஆனால் ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டு ஆண்களுக்கு விருந்தாக்கப்படும் ஆண்கள் இவர்கள்.குறிப்பிட்ட காலம் வரைக்கும் இவர்கள் குடும்பத்தோடு ஐக்கியமாய் விளையாண்டு மகிழ்ந்து கொண்டாடி வாழவே செய்கிறார்கள். ஏதோ ஒரு புள்ளியில் தான் ஆணல்ல என்பதை உணரத் தொடங்குகிறார்கள். இதை உணரும் போது அவர்கள் அநேகமாக பதின் பருவத்தை அடைந்தவர்களாக இருக்கிறார்கள். அதன்பிறகு இவர்கள் வீட்டைவிட்டு வெளியேறி விடுகிறார்கள்.ஆனால் திருநம்பிகளால் அப்படி வெளியேறவும் வாய்ப்பில்லை. பல குடும்பங்களில் திருநம்பிகள் கௌரவக் கொலை என்ற பெயரில் கொலை செய்யப்பட்டு விடுகிறார்கள்.இப்படி வீட்டைவிட்டு வெளியேறும் திருநங்கைகள் எப்படி ஒன்றிணைந்து குடும்பமாய் சங்கமிக்கிறார்கள் என்ற எதார்த்தத்தை மிக நுட்பமாக ஆய்வு செய்து இந்த நூலூலில் பதிவு செய்திருக்கிறார் முனைவர் செல்வக்குமாரி.இளைய திருநங்கை ஒருவர் திருநங்கைக் குடும்பத்திற்குள் நுழையும்போது அவரை மூத்த திருநங்கை சுவீகரித்து குடும்பத்து உறுப்பினராக அந்தத் திருநங்கையை ஏற்கும் வைபவத்திற்கு “ரீத்” என்று பெயர் என்பதை போகிற போக்கில் எழுதி நகர்கிறார் ராஜகுமாரி. ஆனால் இந்த நுட்பமான விஷயத்தைக் கண்டடைய அவர் எவ்வளவு உழைத்திருக்க வேண்டும் என்பது நமக்கு புரியவே செய்கிறது.தனது குடும்பத்தில் ஆணாக வாழ்ந்து கொண்டு அரவாணியர் குடும்பத்தில் அரவாணியராக வாழ்பவர்களும் உண்டு என்கிறார் ராஜகுமாரி. இது எவ்வளவு ஆபத்தானது என்பதும் தான் பிறந்த குடும்பத்தில் ஆணாக வாழும் ஒவ்வொரு நிமிடமும் அவருக்கு பாதுகாப்பில்லாத மணித்துளிகள்தான். இதில் அவரை ஆணென்று நம்பி அவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பங்கள் எத்தனிக்கும்போது அவரது நிலை மிக மிக கடுமையான ஒன்றாக அமையும்.இதுபோக அரவாணியரை திருமணம் செய்துகொள்ளும் ஆண்களும் இருப்பதாகவும் அவர்களில் பலர் ரகசியமாக தங்களது குடும்பத்தைக் கட்டமைப்பதாகவும் இந்த நூல் கூறுகிறது. அவர்களில் பலர் குடும்பத்திற்கு பயந்து வேறு ஒரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டு இங்கும் அங்குமாக வாழ்க்கை நடத்துவதையும் ஏதோ ஒரு புள்ளியில் இது அவர்களது குடும்பத்திற்கு தெரிய வரும்போது அவர்களின் மிரட்டலுக்கு பயந்து திருநங்கையரை கைவிட்டு நகர்வதையும் இந்த நூலில் காணமுடிகிறது.அவ்வாறு கைவிடப்பட்ட பிரிவாலுழலும் திருநங்கை ஒருவரின் வேதனைக் குரலை ஈரம் சொட்டச் சொட்ட பதிவு செய்திருக்கிறார் ராஜகுமாரி.”தோல்விக்கு சுமை” என்ற சிறுகதை திருநங்கையருக்கு சொத்தில் பங்கில்லை என்ற அவலத்தை தோலுரிப்பதை மேற்கோளிடும் ஆசிரியர் தகப்பனின் சொத்தில் திருநங்கையருக்கும் பங்கு வேண்டும் என்ற கருத்தை முன் வைக்கிறார். நிச்சயமாக அதற்கான போராட்டங்களை மிக வலுவாக முன்னெடுக்க வேண்டிய கடப்பாடு இந்தச் சமூகத்திற்கு இருக்கிறது.இந்நூலின் முடிவுரையில் இந்தியக் குற்றவியல் சட்டம் 377 எப்படி அரவாணியரின் பாலுறவு உரிமையை இயற்கைக்கு மாறானது என்று காரணங்காட்டி தடை செய்த கேட்டினை சுட்டுகிறது. அதற்கு எதிராக உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்ததையும் அதை மத அமைப்புகளும் சில அரசியல் கட்சிகளும் பழமைவாத அமைப்புகளும் எதிர்த்ததையும் இந்த நூலின் இறுதிப் பகுதி மிகச் சரியாக அம்பலப்படுத்துகிறது.உச்சநீதிமன்றத்தின் அந்த சிறப்புமிக்க தீர்ப்பிற்கு எதிராக செய்யப்பட்டுள்ள மேல்முறைட்டின் தீர்ப்பு எப்படி இருக்குமோ என்று இந்த நூல் எழுப்பும் அய்யம் நம்மை வெகுவாகக் கவலைகொள்ளச் செய்கிறது. ஒருக்கால் தீர்ப்பு பாதகமாக வந்தால் இந்தக் கவலை நம்மை அந்தத் தீர்ப்பிற்கு எதிராக களமாடத் தூண்டும்.அந்த வகையில் இது அரவாணியர் குறித்த ஆய்வுநூல் மட்டுமன்று. இது அரவாணியரை ஆதரவோடு அரவணைத்துக் கொள்கிற அவர்களுக்கு ஆதரவான நூல்.அரவாணியர் குறித்து உலவுகிற புனைவுக் கருத்துக்களை பொய்யென்று நிறுவுகிற நூல்.அரவாணியர்களுக்கு ஆதரவான சக்திகளை அடையாளாம் கண்டு அவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்காக்க் களமாட்த் தூண்டுகிற நூல்.இலக்கியத்திலிருந்தும், நீதிமன்றத் தீர்ப்புகளில் இருந்தும் சமூகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இந்த நூலுக்கான தரவுகளை சேகரித்திருக்கிறார் முனைவர் செல்வக்குமாரி.இதற்காக ராஜகுமாரி நிறையத் தேடித் தேடி வாசித்திருக்கிறார். நிறைய நடந்திருக்கிறார். நிறைய உழைத்திருக்கிறார். நிறைய எதிர்வினைகளை நிச்சயமாக அவர் சந்தித்திருப்பார். நிறை இழந்துமிருப்பார் நிச்சயமாக.மேற்சொன்னவற்றின் விளவுதான் இந்த நூல்.எனக்கு சில ஆசைகள் உண்டுஎனக்கொரு மகன் எனக்கொரு மகள் என்று கூறுவதைப்போல எனக்கொரு மகன் ஒரு திருநங்கை என்று இயல்பாகக் கூறக்கூடிய காலம் ஒன்று வரவேண்டும்.திருநங்கைகளுக்கும் திருநம்பிகளுக்கும் சொத்தில் பங்குண்டு என்று சட்டம் வரவேண்டும்.திரு நங்கைகள்மீது செலுத்தப்படும் அதே அளவு கவனம் திருநம்பிகள்மீதும் செலுத்தப்பட வேண்டும்.இவ்வளவு மெனக்கெட்டு மிக நுட்பாக இந்த நூலைக் கொண்டு வந்திருக்கும் செல்ச்வக்குமாரிக்கு என் வாழ்த்துக்கள்.அன்புடன்,
இரா.எட்வின்
Published on September 21, 2018 10:28
September 20, 2018
“நீங்கள் அலட்சியமாக இருந்தால் அது நடக்கவும் கூடும்”
”பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் பக்கோடா விற்கப் போகவேண்டியதுதான் “ என்று சமீபத்தில் உத்திரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் கூறியதை சலனமற்று தலைவர்கள் கடந்துபோவார்கள் என்றால் கிட்டத்தட்ட அதுதான் உண்மையாகவும் போகலாம்இந்திய அரசியலில் அகிலேஷ் சிறு பிள்ளையாக இருக்கலாம். ஆனால் அவரது இந்தக் கூற்று எழுபது வயது தலைவர் ஒருவரின் அனுபவத் திரட்டாய் வந்திருக்கிறது. வள்ளுவனும் மிகச் சரியாய் சொல்கிறான்“எப்பொருள் யார் யார் வாய்கேட்பினும்” என்று.மதவெறிக்கு எதிரான அனைத்து தலைவர்களும் சிறுபிள்ளை சொன்னதுதானே என்று உதாசீனப்படுத்திவிட்டு கடந்துவிடாமல் அந்தக் கூற்றை சற்று ஆழமாய்ப் பரிசீலிக்க வேண்டும்.இந்தியா முழுமையும் காவியடிக்கவேண்டும் என்பதற்கு அவர்கள் என்ன விலையானாலும் தருவதற்குத் தயாராக இருக்கிறார்கள்.ஒரு உறுப்பினர்கூட தம் கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கபடாத மாநிலங்களிலும் உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைப்பதற்கு அவர்களுக்கு எந்த விதமான கூச்சமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏறத்தாழ இதை ஒட்டியான நிகழ்வுகளை நாம் சமீப காலங்களில் பார்த்தபடியேதான் இருக்கிறோம்.ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை என்று தீர்க்கமாகத் தெரிந்தாலும், நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றுப்போவோம் என்று தெரிந்த நிலையிலும், பெரும்பான்மைக்கும் அதிகப்படியான நிலையில் எதிரே திரண்டு விட்டார்கள் என்பது தெளிவாகிட்ட நிலையிலும், ஆளுநரை வைத்து தனிப்பெரும் கட்சி என்கிற அளவை வைத்து ஆட்சிக்கு வருகிறார்கள்.அவர்களது திட்டம் இவைதான்,1) நம்பிக்கை வாக்கெடுப்பிற்குள் அமைச்சர் பதவி, பணம், இன்னும் என்னவெல்லாம் சொல்லி சபலப்படுத்த முடியோ அவற்றையெல்லாம் செய்து எதிரணி எம் எல் ஏக்களை வளைப்பது
2) அல்லது, இருந்தவரை ஒரு நாளோ ஒரு வாரமோ, 15 நாட்களோ இருந்துவிட்டுப் போவதுஇதை கர்நாடகாவில் பார்த்தோம். பார்த்துக் கொண்டும் இருக்கிறோம்.கேரள மக்களுக்கு பேரிடர் காலத்தில் வழங்கிய அரிசிக்கான விலையைக்கூட கொடுக்க இருக்கிற நிவாரணா நிதியில் இருந்து பிடித்துக் கொள்வோம் என்று நெஞ்சில் ஒரு சொட்டு ஈரமும் இல்லாமல் கூறும் இரக்கமற்றவர்களாக பாஜக இருக்கிறார்கள்.தில்லியில் பாண்டியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை ஆளுநர்களைக் கொண்டு முடக்கிப் போடுகிறார்கள்தமிழ்நாட்டில் அவர்களுக்கென்று கன்னியாகுமரியில் இரண்டு வார்டுகளையும் ஒன்றிரண்டு ஊராட்சி மன்றங்களையும்பிடிக்க முடியும். அவ்வளவுதான்.அந்த நிலையிலேயே அவர்கள் இங்கு போடும் ஆட்டம் இருக்கிறதே, அப்பப்பா சொல்லி மாளாது.தூத்துக்குடி குழந்தை ஒருவர் விமானம் விட்டு இறங்கும்போது “பாசிஸ்ட் பாஜக ஒழிக” என்று கோஷமிட்டிருக்கிறார். அவர் கனடாவில் உயர் படிப்பு படிக்கும் குழந்தை. அந்த விமானத்தில் பாஜகவின் தமிழ்மாநிலத் தலைவர் திருமதி தமிழிசையும் வந்திருக்கிறார். அவர் வந்ததால்தான் இந்தக் கோஷமே போட்டதாக குற்றம் சுமத்துகிறார்கள்.விமான சிப்பந்திகள் யாரும் புகார் கொடுக்காத நிலையிலும் தமிழிசை கோழிசொன்னதை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு அவரைக் கைது செய்து அவரது கடவுச் சீட்டை முடக்க முயற்சி செய்கிறார்கள்.அதே நேரம் H ராஜா என்ற அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் கிறுக்கன் அரைபோதையில் உளறுவதைவிடவும் கேவலமாக அனைவரையும் தாறுமாறாக பேசுகிறார்.காவலர்கள் அவரைத் தேடுகிறார்கள். அதே சமயத்தில் வேறு ஒரு இடத்தில் காவலர்களின் பாதுகாப்போடு அவர் பொது மேடையில் பேசுகிறார்.இந்த ஆட்சியை வைத்துக் கொண்டு அவர்கள் விளையாண்டுக் கொண்டிருக்கிறார்கள்.அதிமுகவை அவர்களோடு கூட்டாளியாய் நின்று ரஜினி மற்றும் உதிரிக் கட்சிகள் ஆதரவோடு வெற்றிபெற வைத்து மந்திரி சபையில் இடம் பிடிப்பது, அதை வைத்து கட்சியைக் கொண்டுபோவது என்பது அவர்கள் திட்டம். இதெல்லாம் சாத்தியம் இல்லை என்று அலட்சியமாக யாரேனும் இருந்தால் அவர்களுக்கு சொல்வோம்“நீங்கள் அலட்சியமாக இருந்தால் அது நடக்கவும் கூடும்”உத்திரப் பிரதேசத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். அவர்கள் தந்தை அம்பேத்கருக்கே ஞானஸ்தானம் செய்கிறார்கள். ஆக்சிஜன் இல்லாமல் குழந்தைகள் கொத்து கொத்தாய் செத்ததையே அலட்சியமாய் கடந்து போகிறவர்கள்.அங்கு அவர்களை ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்கிற நிலைதான் இருந்தது. இடைத்தேர்தல் வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களாய் இருந்த முதல்வரும் துணை முதல்வரும் பதவிகளை ராஜினாமா செய்யவே வந்த இடைத்தேர்தல் அது. இரண்டு தொகுதிகளிலும் பாஜக மண்ணைக் கவ்வியது.காரணம் மாயாவதியும் அகிலேசும் கரம் இணைத்தது.அந்த அனுபவத்தில்தான் அகிலேஷ் சொல்கிறார்.அதைக் கேட்டால் நாடு பிழைக்கும்.இதில் காங்கிரசுக்கும் இட்துசாரிகளுக்கும் திமுக லாலு சந்திரசேகர் சந்திரபாபு இன்னும் அனைவருக்கும் பெரும் பொறுப்பு இருக்கிறது.பாஜகவை வீழ்த்த இவர்களை ஒன்றிணைக்க பொதுமக்கள் வீதிக்கு வந்தும் போராட வேண்டும்அல்லது அகிலேஷ் சொன்னதுதான்#சாமங்கவிய 21 நிமிடங்கள்
19.09.2018

Published on September 20, 2018 00:18
September 19, 2018
கவிதை 087
ஒரு எட்டு நீ வந்து போனது
போகிற போக்கில் நிகழ்ந்ததோ
என்னைப் பார்ப்பதற்கென்றேவோ
எதுவாயினும்
இனித்தது நீ வந்ததால்
கனவு
போகிற போக்கில் நிகழ்ந்ததோ
என்னைப் பார்ப்பதற்கென்றேவோ
எதுவாயினும்
இனித்தது நீ வந்ததால்
கனவு
Published on September 19, 2018 22:58
September 18, 2018
ராஜாவை விடவும் மோசமானவர்கள்
கடந்த இருபத்தி நான்குமணி நேரத்திற்குள் தமிழ்நாட்டில் இரண்டு சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன
1) இரண்டு தனிப்படைகள் உயிரைக் கொடுத்து நாடு பூராவும் தேடிக்கொண்டிருக்கும் திரு H.ராஜா அவர்கள் நேற்று மாலை வேடசந்தூரில் ஒரு கூட்டத்தில் அண்மையில் நிகழ்ந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தி உரையாற்றியிருக்கிறார்
2) பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்மாநிலத் தலைவர் திருமதி தமிழிசை எதிரிலேயே அவர் கேட்ட ஒரு நியாயமான் கேள்விக்காக பாஜகவினரால் கொலைவெறியோடு தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநரான கதிர் அவர்களை திருமதி தமிழிசை அவர் வீடு தேடி சென்று ஆறுதல் கூறியிருக்கிறார்திருமயம் என்று நினைக்கிறேன். விநாயகர் சதுர்த்தி அன்று அங்கு நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்திற்கு தடை செய்யப்பட்டிருந்த பாதையின் வழியாக பிள்ளையாரை எடுத்துச் செல்ல முயன்றபோது அதை அங்குள்ள காவலர்கள் நீதிமன்றத் தடையானையை சுட்டிக்காட்டி அதைத் தடுக்க முயன்றிருக்கிறார்கள். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில்தான் திரு H.ராஜா அவர்கள் உயர்நீதிமன்றத்தையும் காவலர்களையும் போதையில் உள்ள ஒரு மூன்றாம்தர குடிகாரனைவிடவும் தரக்குறைவாக பேசியது.அங்குள்ள காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவரைப் பிடிப்பதற்காக இரண்டு தனிப்படைகள் அமைக்கபட்டு அவர்களும் அவரை வலைபோட்டுத் தேடி வருகிறார்கள். பிரச்சினைப் பெரிதாவதை உணர்ந்துகொண்ட திரு ராஜா அவர்கள் அந்தக் குரல் தன்னுடையதில்லை என்று கூறிவிட்டார்.தனிப்படைக் காவலர்களால் தேடப்பட்டுக் கொண்டிருப்பரான திரு ராஜா அவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்போடு நேற்று இரவு வேடசந்தூரில் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றி இருக்கிறார்.இரண்டு விஷயங்கள் என்னை ஆச்சரியப்பட வைக்கின்றன,1) எந்தக் காவலர்களை அவ்வளவு கேவலமாகப் பேசினோமோ அந்தக் காவலர்களின் பாதுகாப்பில் பேசுகிறோமே என்ற என்ற கூச்சம் கொஞ்சமும் இல்லாது திரு ராஜா கொஞ்சம்கூட சலனமே இல்லாமல் உரையாற்றியது2) நம்மை அவ்வளவு கேவலமாகப் பேசிய, இன்னும் சொல்லப்போனால் தமது சகாக்களால் தேடப்பட்டுவரும் குற்றஞ்சுமத்தப்பட்ட ஒருவரைப் பிடித்து தம் சகாக்களிடம் ஒப்படைக்காமல் அவருக்கு பாதுகாப்புத் தருகிறோமே என்ற குற்ற உணர்ச்சியே இல்லாமல் அவருக்கு பாதுகாப்பு கொடுத்த காவலர்கள்அங்கும் அவர் நிதானமாகப் பேசினாரா என்றால் இல்லை/. அங்கும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை மிகவும் கொச்சையாகப் பேசியிருக்கிறார். அதற்காக அங்குள்ள காவல்நிலையத்தில் அவர்மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை.தொடரப்பட்டிருப்பின் நடவடிக்கை எடுக்க வேண்டி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை எனில் பதிவு செய்வதும் அவசியம்.அதைவிட அவர் தலைமறைவாகிவிட்டார் என்று செய்தி வெளியிட்டுள்ள பத்திரிக்கையை மேடையில் நின்றவாறு தூக்கிக் காட்டி “சிங்கம் இங்கதாண்டா இருக்கு. முடிஞ்சா கை வைத்துப் பார்” என்று பாஜகவின் ஊழியர் ஒருவர் திமிராகப் பேசியிருக்கிறார்.ராஜாவை விடவும் மோசமானவர்கள் அந்த மனிதரைப் போன்றவர்கள்.முதலில் அவர்மீது ஒரு வழக்குப் போட வேண்டும்.திரு ராஜா திருந்துவதாகத் தெரியவில்லை. சட்டம்தான் அவரைத் திருத்த வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல. அதற்காக நிர்வாகத்திற்கு போராட்டங்களின் வாயிலாக நாம் கவனப்படுத்த வேண்டும்இரண்டாவதாக பாஜக ஊழியர்களால் மரண வெறியோடு தாக்கப் பட்ட திரு கதிர் அவர்களின் வீடு சென்று திருமதி தமிழிசை ஆறுதல் கூறியிருக்கிறார்.இரண்டில் ஏதோ ஒரு காரணத்திற்காக இதை திருமதி தமிழிசை செய்திருக்க வேண்டும்1) செய்த தவறுக்கு வருந்தி அதை செய்திருக்க வேண்டும்2) கேமராவில் பதிவாகி வைரலாகி விட்டது. இனி வேறு வழியில்லை. வழக்குப் பதிவாகி தமக்கும் பிரச்சினை வரும் முன் நிலைமையை சரி செய்துவிடலாம் என்பதற்காக செய்திருக்கலாம்முதல் காரணம் எனில் அவரை வாழ்த்தலாம். இரண்டாவதுதான் எனில்,கேமராவில் பதிவான கதிரைத் தாக்கியவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும்ஒரு கேள்வி என்னைக் குடைந்துகொண்டே இருக்கிறது.திரு கதிர் அடி வாங்கியதிலிருந்து அவர் வீட்டிற்கு தமிழிசை போனது வரை நேரில் சென்று கதிரை அரவணைக்க நாம் ஏன் தவறினோம்?#சாமங்கவிய 24 நிமிடங்கள்
17.09.2018

Published on September 18, 2018 18:46
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)