இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 88
August 6, 2018
65/66 காக்கைச் சிறகினிலே ஆகஸ்ட் 18
மருத்துவம் என்பது உயிர்காகாக்கும் நுட்பமான ஒரு துறை. கொஞ்சம் பிசகினாலும் சேதப்படுவது மனித உயிர். மனித உயிர் என்பது விலை மதிப்பிட இயலாத ஒரு உன்னதம். எனவேதான் நுட்ப மதியும் கூரிய ஞானமும் கொண்டவர்களை மருத்துவர்களாக உருவாக்க வேண்டும். அத்தகைய தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கத்தான் ”நீட் தேர்வு” என்றார்கள்.உயிர்காக்கும் நுட்பத்தையும் ஞானத்தையும் கொண்டவர்களாக மருத்துவம் படிக்கும் மாணவர்களை வார்த்தெடுக்க வேண்டுமே தவிர அத்தகைய நுட்பமும் ஞானமும் உள்ளவர்களைத்தான் மாணவர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது பொருந்தாதது மட்டுமல்ல, பித்தலாட்டமானதும் ஆகும்.ஞானத்தையும் நுட்பத்தையும் உள்ளவர்களைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் எனில் நாற்பது அல்லது ஐம்பது வயது நிரம்பிய மருத்துவர்களைத்தான் MBBS படிப்பிற்குத் தேர்ந்தெடுக்க வேண்டும்.இது அவர்களுக்கும் தெரியாதது அல்ல.“தோன்றிற் புகழொடு தோன்றுக” என்ற குறளை நாம் விமர்சிக்கிறோம். ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற குறளை அவர்கள் விமர்சிக்கிறார்கள். விமர்சிக்கிறோம், விமர்சிக்கிறார்கள் என்பதைவிட அதை நாமும் இதை அவர்களும் ஏற்க மறுக்கிறார்கள் என்பதும்தான் சாலப் பொருந்தும்.”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றால் பிறப்பால் அனைவரும் சமம் என்று பொருள்படும். அனைவரும் ஒன்றல்ல என்பது அவர்களது வாதம். உயர் குடியில் பிறந்தவர்களே உயர்ந்தவர்கள் மற்றவர்கள் அவர்களுக்கு ஏவல் பணியாற்ற பிறந்தவர்களே ஆகும் என்பது அவர்களது வாதம்.தோன்றும் போதே புகழொடு யாரும் பிறக்க முடியாது. ஒருவனுடைய செயலே அவனுக்குப் புகழைக் கொண்டுவர முடியும். புகலொடு பிறத்தல் என்பது ஏறத்தாழ உயர்க்குடியில் பிறத்தலே சிறப்பு எனப் பொருள் தரும். அனைவரும் பிறப்பால் ஏற்றத்தாழ்வு இல்லாதவர்களே என்பது நமது வாதம்.இந்த முரண்பாடே ”நீட் தினிப்பு” மற்றும் ”நீட் மறுப்பு” அவர்களையும் நம்மையும் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. இதைச் சொல்லுமிடத்து நாம் மிகத் தெளிவாகவே ”நீட்திணிப்பு” என்று அவர்களது நிலையை சுட்டுகிறோம். “நீடாதரவு” என்பது சற்றும் பொறுத்தமில்லாத பதம். எனவேதான் அவர்களை நீட்டைத் திணிப்பவர்களாக சொல்கிறோம்.”அந்தந்த காலங்களின் சிந்தனைகளை உருக்குபவர்களாகவும் அவற்றை நிரவிப் பங்கிடுபவர்களாகவும் ஆளும் வர்க்கத்தின் சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள்” என்பதாக மார்க்சும் ஏங்கல்சும் கண்டுணர்ந்தது இந்தியாவைப் பொறுத்தமட்டிலும் மிகச் சரியான ஒன்று.இவர்கள் ஒருபோதும் ஆளும் வர்க்கத்தை சிந்திக்க அனுமதிப்பதே இல்லை. தங்களது சிந்தனையை ஆளும் வர்க்கத்து சிந்தனையாக மாற்றுகிற லாவகம் இவர்களுக்கு கைவந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் சிந்திப்பதற்கான சிரமத்தை இவர்கள் ஒருபோதும் ஆளும் வர்க்கத்திற்கு தந்ததில்லை.அவர்களுக்கு சொத்து, சுகம், படாடோபம், மற்றும் அதிகாரம் என்பவை போதுமானதாக இருக்கிறது. இவர்களால் கரங்களால் இயங்க இயலாது. எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாது. அந்த நேரத்தில் ஆளும் வர்க்கம் இவர்களுக்காக களமேகி உழைக்கும் மக்களை நசுக்கி கசக்கும்.ஆளும் வர்க்கம் பெரும்பாலும் பணக்கார வர்க்கம். அந்த வகையில் ஆளும் வர்க்கத்தினரான செல்வந்தர்களுக்கும் உயர் மேட்டுக்குடியினருக்கும் இயல்பாகவே ஒரு ஒருங்கிணைவு ஏற்படுகிறது.இந்த ஒருங்கிணைவுதான் பேரதிக வன்மத்தோடு நம் குழந்தைகள் மீது தாக்குதலைத் தொடுக்கிறது.அவர்களது பள்ளிப் படிப்பு உசத்தியானது என்றும் நம் குழந்தைகளின் பள்ளிப் படிப்பு தரமற்றது என்றும் பச்சையாக பேசுகிறார்கள். ஆகவே நம் பிள்ளைகள் எவ்வளவுதான் மதிப்பெண் பெற்றிருந்தாலும் அது உபயோகமற்றது என்றும் கூறினார்கள்.ஆங்கிலத்திலே மருத்துவம் பயில்வதற்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்று சொன்னவர்கள்தானே இவர்கள். தமக்கு தெரிந்திருந்த மருத்துவம் அடுத்தவனுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக தமக்கு மட்டுமே தெரிந்திருக்க்க் கூடிய சமஸ்கிருதத்தை மருவத்திற்கான தகுதியாக்கினார்கள்.ஆங்கில வழியிலே மருத்துவம் படிப்பதற்கு சமஸ்கிருதம் எதற்கு? இது ஒரு சாதிக்காரர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க வேண்டும் எனும் சனாதனம் என்று உணர்ந்த அன்றைய சென்னை மாகான முதல்வர் பனகல் அரசர் ராமராய நிங்கா மருத்துவம் படிப்பதற்கு சமஸ்கிருதம் தேவையில்லை என்று உத்தரவிட்டார்.அன்று வாங்கிய அடியில் சற்று ஒளிந்திருந்தவர்கள் காங்கிரஸ் ஆட்சியின்போது அங்கிருந்த மெல்சாதிக்காரர்களின் துணையோடு மருத்துவத்திற்கான உரிமை தங்களுக்கு மட்டுமேயானது என்று நிலைநாட்ட எத்தனித்தார்கள். முழுக்க முழுக்க சனாதன ஆட்சி மத்தியிலும் அவர்களுக்கு ஏவலூழியம் செய்கிற மாநில சர்க்காரும் கிடைத்தவுடன் தாவிப் பறக்கிறார்கள்.1176 மதிப்பெண் பெற்ற நம் குழந்தை நீட்டில் வெற்றிபெறமுடியாது தற்கொலை செய்து கொண்டதும் “பார்த்தீர்களா, 1176 இல் ஒன்றும் இல்லை தகுதி இருந்திருப்பின் நீட்டில் தேர்ச்சி பெற்றிருக்கலாமே என்றார்கள்.நீட்டில் வெற்றி பெற்றவர்களால் ஏன் 1176 எடுக்க முடியவில்லை. எனில் நீட்டில் ஒன்றும் இல்லை என்ற எதிர் சிந்தனையை அரசின் துணையோடு இவர்கள் எதிர் கொண்டார்கள்.நீட் தேர்வு எழுதப்போகும் நம் குழந்தைகளை ஏதோ திருடர்களாஇ சோதிப்பதுபோல சோதித்து அசிங்கப் படுத்தினார்கள். அவற்றைப் பற்றி விவரிப்பது எனில் எனக்கு மூன்றுமாத கடைசிப் பக்கங்கள்கூட போதாது.இந்த ஆண்டு தேர்வு எழுத விண்ணப்பித்த நம் குழந்தைகளை 3000 கிலோமீட்டர்வரை அலைய விட்டார்கள்.தமிழில் தேர்வெழுதப் போனால் 49 கேள்விகள் தவறாக இருந்தன. CHEETA என்று ஆங்கிலத்திலும் சீதா என்று தமிழிலும் வினாக்கள் இருந்தன.இதை எதிர்த்து CPIM கட்சியைச் சார்ந்த மாநிலங்களவ உறுப்பினர் சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடுக்கிறார். வழக்கின் போக்கில் வழக்கறிஞர் ஒருவர் மாணவர்களுக்காக வழக்குத் தொடுக்க ரெங்கராஜன் யார் என்றுகூட கேட்டதாகவும் நீதிபதிகள் அதை பொருட்படுத்தவில்லை என்றும் தோழர் TKR ஒரு நேர்காணாலில் கூறுகிறார்.ஒரு வழியாக நீதிமன்றம் தவறாகக் கேட்கப்பட்ட 49 கேள்விகளுக்கும் உரிய 196 மதிபெண்ணை தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறியது.அப்போதுகூட தோழர் TKR இதனால் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டவர்களை இடையூறு செய்ய வேண்டாம். 196 மதிப்பெண் கூடும்போது தகுதி பெறுகிற எம் குழந்தைகளுக்கு கூடுதலாக இடம் ஒதுக்கி அதைக் கொடுங்கள் என்றுதான் கேட்டார்.CBSE இதை அந்த அளவோடு விட்டிருக்க வேண்டும். அது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறது. தாங்கள் மொழிபெயர்க்கவில்லை எனவும் மொழிபெயர்த்தது தமிழ்நாட்டின் ஏற்பாட்டில், எனவே தாங்கள் இதற்கு பொறுப்பேற்க இயலாது என்று கூறியதை உச்சநீதி மன்றம் ஏற்றிருப்பது மிகவும் கவலைக்குரிய விஷயம்.கண்களில் நீரழுத்தம் சோதிக்க முகாம் ஏற்பாடாகிறது என்று கொள்வோம். சோதனையில் சோதிக்கும் கம்பி குத்தி பலருக்கு கண்களில் ரத்தம் வருகிறது. சரி செய்ய சொல்கிறோம் . மறுக்கிறார்கள். நீதிமன்றம் போகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் கூறுகிறது.கண்களை சரி செய்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் பாதிக்கப் பட்டவர்கள் காத்திருக்கிறார்கள். முகாமை ஏற்பாடு செய்திருந்த மேலமைப்பு மேல் கோர்ட்டிற்குப் போகிறது. தாங்கள் நேரடியாக அந்த சோதனையை செய்யவில்லை என்றும். அந்த வேளைக்காக த்ங்களது துணை அமைப்பு ஒன்றினை தாம் பணித்திருந்ததாகவும் இது அவர்கள் செய்த பிழை என்றும், எனவே பாதிக்கப் பட்டவர்களுக்கு தங்களால் ஏதும் செய்ய முடியாது என்றும் வாதிடுகிறது.அவர்களது வாதத்தைக் கேட்ட கோர்ட் அதை ஏற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கத் தேவை இல்லை என்றும் கூறுகிறது. கண்களில் ரத்தம் கசிய பாதிக்கப் பட்டவர்கள் நிற்கிறார்கள்.யார் கிழித்தது என்பது பிரச்சினை இல்லை. கிழிந்த கண்களுக்கு நியாயமே இல்லையா நீதிமான்களே.இப்போது அடுத்த ஆண்டுமுதல் பொறியியல் படிப்பிற்கும் நீட் என்று ஆரம்பித்து விட்டார்கள்.
நீட்டே வேண்டாம் என்று போராடினோம்.குளறுபடிகளோடு தேர்வை நடத்தினார்கள்.இவ்வளவு குளறுபடிகளா என்றோம்.தேர்வெழுத 3000 கிலோமீட்டர் அலைக்கழித்தார்கள்.உள்ளூரிலே மையம் இல்லையா என்று கொதித்தோம்.வினாத்தாளைத் தவறாகத் தயாரித்தார்கள்.வினாத்தாளை சரியாக தயாரிக்க வேண்டாமா என்கிறோம்.இப்போது பொறியியலுக்கும் நீட் என்கிறார்கள்.பொறியியலுக்குமா என்போம்.அவர்களுக்கு நம்மை என்ன செய்யவேண்டும் என்று தெரிகிறது. என்ன செய்ய வேண்டும் என்பதை நாமும் தெளிவாய் முடிவெடுப்போம்.

Published on August 06, 2018 02:08
August 5, 2018
06.08.2018
நமது மண்ணின் கல்வி அடையாளங்களுள் மிக முக்கியமான ஒன்று “அண்ணா பல்கலைக் கழகம்” அண்ணாப் பல்கலைக் கழகத்து “பொறியியல் பட்டம்” என்பது உலக அளவில் ஓரளவிற்கு மதிப்புமிக்கது. அதுவும் அண்ணா பல்கலைக் கழத்து வளாத்திற்குள்ளேயே படிக்கிற வாய்ப்பு கிடைத்தவர்கள் பேறுபெற்றவர்களாகவே கருதப்பட்டு வந்தனர்.அண்ணா பல்கலைக்கழகத்தில் மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டலில் ஏகத்திற்கும் ஊழல் நிகழ்ந்திருப்பதாக கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. இரண்டு நாட்களாக எங்கு திரும்பினாலும் இதுபற்றிய செய்திகளாகவே கிடைக்கின்றன. ஒரு இரண்டு ஆண்டு காலத்திற்குள் அல்லது கொஞ்சம் பெருந்தன்மையோடு அணுகினால் மூன்று ஆண்டு காலத்திற்குள் ஏறத்தாழ 2 லட்சம் மாணவர்கள் பணம் கொடுத்து ஒன்று தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள் அல்லது தங்களது மதிப்பெண்ணை உயர்த்தி கொண்டிருக்கிறார்கள்.இந்த வகையில் பேராசிரியை உமா அவர்களுக்கு ஏறத்தாழ 200 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கிறது. அவருக்கு உடந்தையாக இருந்த திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரி முதல்வரான பேராசிரியர் சிவகுமார் அவர்களும் ஏகத்திற்கும் சம்பாதித்து இருப்பதாய் செய்திகள் சொல்கின்றன.தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பேராசிரியையாக பணியாற்றி வரும் பேராசிரியை திருமதி உமா அவர்கள் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு துறை அதிகாரியாக வேலை பார்த்த பொழுது ஏறத்தாழ 10 பேராசிரியர்களின் துணையோடு லஞ்சப் பணத்தை வாரிச் சுருட்டி இருக்கிறார் என்ற தகவல்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறதுஅண்ணா பல்கலைக்கழகம் என்பது இந்த நாட்டின் கல்விக்கான அடையாளங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இந்த பல்கலைக்கழகத்திலேயே இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருப்பது ஆச்சரியத்தை தருகிறதுமாணவர்கள் மட்டுமல்லாது பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகங்களும் தங்களது கல்லூரியின் தேர்ச்சி விழுக்காட்டை அதிகப்படுத்தி தருவதற்காக நிறைய லஞ்சம் கொடுத்து இருக்கிற தகவல்களும் தெரியவருகிறதுஏறத்தாழ இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் சுமார் 2 லட்சம் மாணவர்கள் லஞ்சம் கொடுத்து தங்களை தகுதிப்படுத்திக் கொண்டிருப்பது உலக மட்டத்தில் நமது கல்வியின் தரத்தை அதிலும் குறிப்பாக தொழில் நுட்பத்தின் தரத்தை கேவலப்படுத்தும் ஒரு காரியமாகும்.இதில் அனைவரும் கவனிக்கத் தவறுகிற ஒரு விஷயம் இருக்கிறது.பள்ளிக் கல்வி என்றாலே அது CBSE மட்டும்தான். பொறியியல், தொழில் நுட்பம் எனில் NIIT மற்றும் IIT தான் என்பதாக மேட்டுக்குடி வர்க்கம் நிறுவ முயற்சித்துக் கொண்டிருக்கும் வேளையில் அண்ணா பல்கலைக் கழகத்தின் மதிப்பைக் கெடுக்கும் வேலையை செய்வதற்கு அவர்கள் இது போன்ற காரியங்களை திட்டமிட்டு தங்களது வலையில் விழுந்த ஆட்களைக் கொண்டு செய்திருப்பார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது.இதை நேர்மையாக விசாரித்தால் பல கார்பரேட் கல்லூரிகளின் முகத்திரைக் கிழியக்கூடும். ஏன் என்று கேட்டால் சென்ற பாராவில் நமக்கு ஏற்பட்டிருக்கும் அய்யம் உண்மை எனில் அவர்களது வலையில் கார்பரேட் கல்லூரிகளே விழுவதற்கான வாய்ப்பு அதிகம்.இது ஒரு புறம் இப்படி சுழன்று கொண்டிருக்க ஏதோ ஒரு பத்திரிக்கையில் ஒரு மூலையில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ஒரு இயக்குனராக பணியாற்றிவந்த திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் தனது பணி ஓய்வு நாளான 31 7 2018 அன்று அவரது பணிக்காலத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி பணியிடை பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்
நமக்கு சில கேள்விகள் இருக்கின்றனதமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் இயக்குனராக பணிபுரிந்த ஒருவர் தனது பணி காலத்தில் முறைகேடாக நடந்து கொண்டார் என்பது அரசுக்கு அல்லது துறைக்கு அவரது பணி ஓய்வு நாளின் போது தான் தெரிய வந்ததா?அதற்கு முன்னரே அவரது முறைகேடுகள் பற்றி தெரிய வந்திருப்பின் அவரது பணி ஓய்வு நாள் வரைக்குமான அரசின் நடவடிக்கை என்ன? ஒழுங்கான ஒரு செட்டில்மெண்ட் குறித்த எதிர்பார்ப்பு அரசுக்கோ துறைக்கோ இருந்ததா?தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள திருமதி உமா அவர்களும் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களும் செல்வாக்கு மிக்கவர்கள். இந்த நிலையில் அவர்கள் வெளியில் இருந்தால் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி விசாரணையை ஊனப்படுத்தி விட மாட்டார்களா?எதற்கு சுற்றி வளைத்துக் கொண்டு,அவர்கள் இருவரும் ஏன் கைது செய்யப்படவில்லை?#சாமங்கவிந்து 29 நிமிடங்கழித்து

Published on August 05, 2018 22:31
65/66 காக்கைச் சிறகினிலே ஜூலை 2018
“சிதைவுற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ?” என்று கேட்டான் பாரதி.
“சிதைவுற்றழியும் பொருட்களின் பட்டியலில் தமிழ் மண்ணையும் தமிழர்களின் வாழ்வையும் சேர்ப்பீர்களா?” என்று மாநில மற்றும் மத்திய ஆட்சியாளர்களைப் பார்த்து கேட்கத் தோன்றுகிறது.
இப்போதுதமிழில் ”நல்லா வச்சு செய்றாங்க” என்ற ஒரு சொல்லாடல் வைரலாக வலம் வருகிறது. ‘தமிழ்ப்பூமியை நல்லா வச்சு செய்றாங்க ஆட்சியாளர்கள்’ என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். அப்படி வைத்து செய்துகொண்டிருக்கிறார்கள் நம்மை.
1
8000 விளைநிலங்களை அழித்தும் எட்டு மலைகளைக் குடைந்தும் வனத்தை அழித்தும் சேலத்திற்கு சென்னைக்கும் இடையேயான ‘எட்டுவழி சாலை’ போடப்படுகிறது.
தமிழ்மண்ணின் கனிம வளத்தை பெருமளவு அழித்து இப்படி ஒரு சாலையை இவ்வளவு அவசரம் அவசரமாகக் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன?
இந்தசாலையைக் கட்டமைப்பதற்கு 2200 ஹெக்டேர் நிலம் தேவைப்பட்டதாகவும் ஆனால் தான் வெறும் 1900 ஹெக்டேர் நிலத்தைதான் கையகப் படுத்தி இருப்பதாகவும், அப்படி கையகப்படுத்தப்பட்ட 1900 ஹெக்டேரிலும் 400 ஹெக்டேர் தரிசு நிலம் என்றும் சொல்கிறார் முதல்வர். அவர் சொல்ல வருவது இதுதான்,
2200 ஹெக்டேர் விளைநிலம் தேவைப்பட்டபோது தரிசு நிலம் போக வெறும் 1500 ஹெக்டேர் மட்டுமே எடுத்திருக்கிற என் பெருந்தன்மையைக் கொண்டாடுங்கள் என்பதுதான் அது. உங்கள் பெருந்தன்மையைக் கொண்டாடுவதற்குமுன் உங்களிடம் சில கேட்கவேண்டும் முதல்வர் அவர்களே
1) 1500 ஹெக்டேர் விளைநிலம் என்பது என்ன அவ்வளவு சுளுவா? அந்த விளைநிலத்து விளைச்சலை ஈடுகட்டுவதற்கு என்ன திட்டம் இருக்கிறது உங்களிடம்?2) 400 ஹெக்டேர் தரிசு நிலம்தானே என்கிறீர்கள். அந்த 400 ஹெக்டேர் நிலத்தை விளைநிலமாக்க வேண்டும் என்று உங்களுக்கு ஏன் தோன்றவில்லை?
தனிப்பட்டஎவருக்காகவும்இதை செய்யவில்லை என்று சொல்கிறார் முதல்வர்.
எங்களதுசந்தேகமே அங்குதான் முதல்வரே?
போராடிநீட்டை நீக்குங்கள், போராடி பேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்யுங்கள் என்று நாங்கள் உங்களிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறோம். அதற்கெல்லாம் துளியும் முயற்சி செய்யாத நீங்கள் வேண்டவே வேண்டாம் என்று எல்லோரும் போராடிக்கொண்டிருக்கும்போது எட்டுவழிச் சாலையை அவசரம் அவசரமாக நிறைவேற்ற முயற்சிப்பதும் அதற்கு எதிராக தேநீர்க்கடையில் கருத்து சொல்வதுகூட தேசவிரோதம் என்பதாக நடவடிக்கை எடுப்பதும் எங்களுக்குள் வலுப்படுத்துகிறது அந்த சந்தேகத்தை,
தனிப்பட்டயாருக்காகவோதான்எட்டுவழி சாலையை நீங்கள் கட்டமைப்பதாகத் தோன்றுகிறது. கேள்வி இதுதான்,
யார்அவர்கள்?
2
பிரதமர்மோடி அவர்களுக்கு மிகவும் வேண்டிய ஒருவருக்காக கேரளாவில் ஒரு துறைமுகம் கட்டமைப்பதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. துறைமுகம் என்பது முழுக்க முழுக்க மத்திய அரசின் அதிகாரத்தின்கீழ் வருகிறது. எனவே அதில் குறுக்கிடுவதற்கு கேரள அரசிற்கு அதிகாரமோ வாய்ப்போ இல்லை.
அந்தத்துறைமுகத்தைக்கட்டமைக்க ஏறத்தாழ முப்பது லட்சம் டண் பாறை தேவைப்படுகிறது. கேரளாவின் கனிமவளம் இதனால் பாதிக்கப்படும் என்பதால் கேரள அரசு பாறைகளைத் தருவதற்கு மறுத்துவிட்டது. எவ்வளவு முயற்சி செய்தாலும் கேரள அரசு தனது கனிம வளத்தை இழக்காது என்பதை உணர்ந்துகொண்ட மத்திய அரசு இதற்காக தமிழக அரசை அணுகி உள்ளதாகவும், தமிழக அரசு இதற்கு ஒப்புக் கொண்டுவிட்ட்தாகவும் கலைஞரது பிறந்தநாள் விழாவில் உரையாற்றும்போது திரு பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.
ஆற்றில்நீருக்காகப் போராடிக் கொண்டிருந்தோம். பிறகு நீரோடு மணலுக்காகவும் போராடுகிறோம். இப்போது எங்களை பாறாங்கற்களுக்காகவும் போராட வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியிருக்கிறீர்கள்.
நீருக்காகஅடுத்த மாநிலத்து அரசுகளோடு போராடிக் கொண்டிருப்பதிலாவது ஒரு அர்த்தம் இருக்கிறது. மணலுக்காகவும், பாறைகளுக்காகவும் எமது அரசோடே போராட வேண்டியிருப்பதுதான் அசிங்கமாக இருக்கிறது.
நமதுநதி, நமது மணல், நமது மண், நமது மலை. எனில் நமது பாறைகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை உங்களுக்கு யாரைவிடவும் பேரதிகமாய் இருக்கிறது என்பதை உணருங்கள். அப்படி எல்லாம் இல்லை என்று நீங்கள் கருதுவீர்கள் எனில் மாற்றிக் கொள்கிறேன்,
எங்கள்நதி, எங்கள் மணல், எங்கள் நீர், எங்கள் மலை. இதுதான் சரி எனில்,
எங்கள்மலைகளை உடைத்து எவனுக்கோ தருவதற்கு நீங்கள் யார்?
**************************************************************
அமெரிக்கதமிழ்ச் சங்கங்கள் ஒன்றிணைந்து ஒரு நிகழ்ச்சயினை வரும் 29.06.2018 அன்று ஏற்பாடு செய்துள்ளன. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு தொல்லியல் அறிஞர் திரு அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களைக் கோரின. அதை திரு அமர்நாத் அவர்களும் ஏற்றுக் கொண்டார். ஆனால் இதற்கு மத்திய அரசு அனுமதி தருவதற்கு மறுத்து விட்டது.
அமர்நாத்அவர்கள் மரியாதைக்குரிய தொல்லியல் அறிஞர். அவர் அயல்நாடு சென்று உரையாற்றினால் நமது மண்ணின் தொண்மையின் ஆழ அகலங்களை ஆதாரத்தோடு நிறுவி வருவார். அதன்மூலம் நமது மண் மீதான தொண்மமும் கீர்த்தியும் அதிகரிக்கவே செய்யும். அப்படி இருக்கும்போது மத்திய அரசு இதற்கு ஏன் தடை விதிக்கிறது?
திருஅமர்நாத் அவர்களை ‘அந்த ஆள்’ என்று ஒருமுறை நமது ராணுவ மந்திரி விளித்தார். ராணுவ மந்திரி என்பது மத்திய அரசின் மிக முக்கியமானதும் சக்தி வாய்ந்ததுமான துறை என்கிறவகையில் திரு அமர்நாத் மீதான அமைச்சரின் எரிச்சலை அமைச்சரவையின் எரிச்சலாகவே கொள்ளலாம். எனில், இதை திரு அமர்நாத் மீதான மத்திய அரசின் எரிச்சலாகவே கொள்ளலாம்.
அவர்மீதுஇவ்வளவு எரிச்சலும் அமெரிக்காவில் நடக்கும் நிகழ்ச்சியில் அவரது பங்கேற்பிற்கு தடை விதிப்பதும் ஏன்?
காரணம்மிகவும் எளிமையானது. திரு அமர்நாத் அவர்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றால் நிச்சயமாக “கீழடி” குறித்து உரையாற்றுவார். இன்றைய அந்த கிராமம் 3500 ஆண்டுகளுக்கு முன்னால் நகரமாக இருந்த உண்மையை எடுத்து வைப்பார். 3500 ஆண்டுகளுக்கு முன்னால் அங்கு நாகரிகம் சிறந்திருந்ததை, மதச்சார்பற்று இருந்ததை, எவ்வளவு தோண்டியும், எவ்வளவு தேடியும் எந்தவிதமான மதச் சின்னங்களோ தடயங்களோ கிடைக்காத சிறப்பையும் எடுத்து வைப்பார்.
இவையெல்லாம்மத்திய ஆளுங்கட்சிக்கு ஆகாது. அகழ்வில் ஏதேனும் இந்துமத தடயங்கள் கிடைத்ததாய் சொல்லி இந்தியாவின் தொண்மம் என்பது இந்துமதம் என்று நிறுவ எத்தணித்தவர்கள். அதற்கு தடையாக உண்மையின் பக்கம் நின்றவர் திரு அமர்நாத்.
அந்தநிகழ்வில் அவரது பங்கேற்பானது இரண்டு வகையில் அவர்களுக்கு இடைஞ்சலானது. இந்துமதம் இந்தியாவின் பூர்வமதம் அல்ல என்று நிறுவுவார். 3500 ஆண்டுகளுக்கு முன்னரே மதக்கசப்பற்ற ஒரு தொண்ம சமூகம் தமிழ் மண்ணில் இருந்ததை எடுத்து வைப்பார்.
சிந்துவை, அகர்தலாவை நாம் இந்தியா என்று ஏற்பதுபோல் கீழடியை அவர்கள் இந்தியாவாக ஏற்கவில்லை என்பதை உணர்ந்தே இருக்கிறோம். அந்த வகையில் அவர்களது எதிர்ப்பு நமக்கு ஆச்சரித்தைத் தரவில்லை. தமிழ் மண்ணின் தொண்மத்தையும் புகழையும் மேலெடுக்கும் அவரது பயணத்திற்கான அனுமதிக்காக மாநில அரசு எந்தவிதமான முயற்சிகளையும் செய்யவில்லை என்பதிலும்கூட நமக்கு ஆச்சரியம் ஏதும் இல்லை.
************************************************************
”லங்கேசைக் கொன்றிருக்கக் கூடாது என்று நினைக்கிறேன்” என்று அவரைக் கொன்றவர் என்று கைது செய்யப்பட்டுள்ள பரசுராம் வாக்மோர் கூறியுள்ளதாக பத்திரிக்கைகள் கூறுகின்றன.
”ஒருவரைக் கொல்வதன் மூலம் நமது மதத்தைக் காப்பாற்ற உதவ வேண்டும்” என்று 2017 ஆண்டு மே மாதத்தில் தம்மை அணுகிய ஒரு கூட்டம் தம்மை தொடர்ந்து அதற்காக தயாரித்ததாகவும் 03.05.2017 அன்று தன்னை பெங்களூரு அழைத்துச் சென்று ஐந்தாம் தேதி துப்பாக்கி தந்ததாகவும் கூறியிருக்கிறான்.
காரைவிட்டுலங்கேஷ் இறங்கியதும் ஒரு இருமலின் மூலம் அவரது கவனத்தைத் திருப்பி சுட்டுக் கொன்றதாகவும் கூறியிருக்கிறான்
1) பன்சாரே, கல்புர்கி, லங்கேஷ் மூவரும் ஒரே ரகத் துப்பாக்கியால் சுடப்பட்டது உறுதியாகி உள்ளதால் லங்கேஷை கொன்றது பரசுராம்தானா என்கிற அய்யம் எழுகிறது2) ஒருவரைக்கொல்வதன் மூலம்தான் ஒரு மதத்தை காப்பாற்ற முடியும் எனில் அது எந்த மதமாக இருந்தாலும் நாசமாகப் போகட்டும்3) ஒருகொலைகாரனுக்கேஅவர்களை ஒரு கூட்டம் என்று அடையாளப்படுத்த தெரிந்திருக்கும்போது அந்தக் கூட்டத்திடம் இன்னும் எவ்வளவு காலம் நாட்டை விட்டு வைத்திருப்போம்?
Published on August 05, 2018 05:20
August 4, 2018
30.07.2018
உணரப்படுகிறமாதிரி எதுவும் நடந்திருக்கக்கூடாதுஒருக்கால் அது உண்மைதான் என்றால் அதை ஏற்கத்தான் வேண்டும்இன்றைய நான் என்பது அவர் இல்லாமல் இல்லைஇங்கு “நான்” என்பது என்னை மட்டும் சுட்டும் ஒருமையும் அல்ல. அது பன்மைஎழுத்திலக்கியத்தையும் பேச்சிலக்கத்தையும் அரசியல் படுத்தியதில் அவரது பங்கு அலாதியானதுதிரை இலக்கியத்தை அரசியல்படுத்தியதிலும் அவரது பங்கு அசாதரணமானதுதமிழ் மண்ணின் இன்றைய நிலையில்ஒடுக்கப்பட்ட மக்களின் இன்றைய கல்வி நிலையில்பெண்களுக்கான ஒதுக்கீடுஇட ஒதுக்கீடுsca உள் ஒதுக்கீடுஅனைத்திலும்அவருக்கான பங்கு உண்டுகொஞ்சம் அழுது கரைந்துதான் நன்றி சொல்ல முடியும்உண்மையெனில் கொஞ்சம் அதை செய்து கொள்கிறேன்இல்லையெனில் கொஞ்சம் மகிழ்ந்து கரைகிறேன்#சாமங்கவிந்த புள்ளியில்
30/07/2018
30/07/2018
Published on August 04, 2018 22:32
வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்பதே போதாது
வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்பதே போதாது என்பதும் இருக்கிற அளவில் கூட யார் மீதும் ஒழுங்கான நடவடிக்கைகள் இல்லை என்பதும்தான் உண்மையான நிலவரமாக இருக்க இருக்கிற சட்டத்தையும் நீர்த்துப்போகிறமாதிரி திருத்தங்களைக் கொண்டு வந்தது மத்திய அரசு.கடுமையான எதிர்ப்புகள், துப்பாக்கிச்சூடு 15 பேர் அளவில் பலி என்று நகர்த்தும் அரசு நிமிர்ந்தே இருந்ததுஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்று தலித் அமைப்புகள் அறிவித்திருந்த பந்த், பஸ்வான் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்களின் நெருக்குதல் ஆகியவை அரசை பணிய வைத்திருக்கிறதுநடப்புக் கூட்டத் தொடரிலேயே திருத்தங்கள் திரும்பப் பெறப்படும் என்று தெரிகிறதுஇப்பவும் நியாத்திற்கான போராட்டத்தில் உயிர்நீத்த எம் மக்களுக்கென் வணக்கம்
Published on August 04, 2018 22:12
August 3, 2018
03.08.2018
நெகிழ்வுகளும் ஒரு கோரிக்கையும்
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய
திரு ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம்.முதலில் கலைஞர் விரைந்து குணமடைய வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்உங்கள்மீது எத்தனையோ விமர்சனங்கள் இருப்பினும் தற்போதைய தமிழகச் சூழலை உங்களை நிராகரித்துவிட்டு எதிர்கொள்வது எவ்வளவு தவறான முடிவுகளைத் தரும் என்பதை உணர்ந்தவனாகவே இருக்கிறேன்அதேபோல் இடதுசாரிகள், விசிக மற்றுமுள்ள ஜனநாயக அமைப்புகளை நிராகரித்துவிட்டு தற்போதைய தமிழக சூழலை நீங்கள் எதிர்கொள்வதும் மோசமான விளைவுகளையே தரும் என்பதை உணர்ந்தவராகவே நீங்களும் இருக்கிறீர்கள் என்பது எமது நம்பிக்கையை பலப்படுத்துகிறதுஇந்த விஷயத்தில் கழகத் தோழர்கள் சிலரது எதிர்மறையான குறுக்கீடுகள் ஒற்றுமையை சிதைத்துவிடாமல் நீங்கள் கவனம் கொள்வீர்கள் என்பதையே தங்களது சமீபகால நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.ஆனால் அதற்கல்ல இந்தக் கடிதம்.முதலில் ஒரு பாராட்டுகலைஞர் அவர்கள் மருத்துவமனையில் மரணம் வெல்ல போராடிக் கொண்டிருக்கிறார். ஒரு புள்ளியில் விடைபெற்றுக் கொண்டார் என்று நம்புகிறமாதிரி செய்தி கசிகிறது. என்னையறியாமல் கண்ணீர் கசிகிறது. காரணம் ரொம்ப எளிதானது, "இன்றைய என்னில் அவரும் இருக்கிறார்" என்பதுதான் அதுஇந்தப் புள்ளியில் ஏதோ ஒரு பிரியாணிக்கடையில் திமுக தோழர் ஒருவர் தனது நண்பர்களோடு புகுந்து இலவசமாக பிரியாணி கேட்டு அடிதடியில் இறங்குகிறார். கடை ஊழியர்கள் சிலர் இதனால் காயம் படுகிறார்கள்கேள்விப்பட்டதும் அந்தக் கடைக்கு நேரே செல்கிறீர்கள். தவறுக்கு வருத்தம் சொல்கிறீர்கள். காயப்பட்ட வர்களுக்கு ஆறுதல் கூறுகிறீர்கள். இழப்பை சரி செய்வதாக உறுதி தருகிறீர்கள்சம்பந்தப்பட்ட நபரை கட்சியிலிருந்து தற்காலிகமாக வெளியேற்றுகிறீர்கள்ஒருமுறை DYFI கருத்தரங்கம் ஒன்றில் பேசிக் கொண்டிருக்கிறேன். அப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவரான திரு வெற்றி கொண்டான் அவர்கள் குறித்து பேசும்போது "போகிற போக்கில் அன்று வெற்றி கொண்டான் பேசிவிட்டு போனான்" என்று போகிற போக்கில் பேசி விட்டேன். வழக்கமாக அப்படிப் பேசுபவன் அல்ல.பேசி முடித்து மேடையிலிருந்து இறங்கியதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர்களில் ஒருவரான தோழர் இந்துராஜ் என்னை அழைக்கிறார்."நீயே இப்படி மரியாதை இல்லாமல் வயதில் மூத்தவரை அவன் என்று எப்படி பேசுகிறாய்? நீயே இப்படி பேசினால் இளைய தோழர்கள் இன்னும் வேகமா தவறு செய்வார்களே" என்று கடிந்து கொள்கிறார். நான் அப்படி பேசியமைக்காக அவரிடம் மன்னிப்பு கேட்ட அனுபவம் எனக்கு இருக்கிறது.இப்போதும் அதற்காக உங்களிடமும் திமுக தோழர்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.ஆனாலும் தமிழகத்தில் வெகு ஜன அரசியல் இயக்கங்களில் 'நீங்கள் பாதிக்கப்பட்ட கடை நோக்கி சென்று வருத்தம் தெரிவித்து ஆறுதல் கூறி இழப்புகளை சரி செய்கிறேன் என்று சொன்னது' மிகவும் புதிய ஒன்று.அது மட்டுமல்ல தமிழக அரசியலின் எதிர்காலம் நாகரிகத்திற்கு உரியதாக இருக்கும் என்று நம்பிக்கையை அது தருகிறதுநீங்கள் நினைத்திருந்தால் பாதிக்கப்பட்டவர்களை வரவழைத்துகூட வருத்தம் தெரிவித்து இருக்க முடியும்உங்களது இந்த செயலுக்காக நான் எனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்உங்களது தந்தையும் தலைவருமான கலைஞர் அவர்கள் மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கும் ஒரு துயரமான பொழுதில் நீங்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கும் தோழர் தா பாண்டியன் அவர்களை நலம் விசாரிப்பதற்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சென்று அவர் கரம் பற்றி அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்துகிறீர்கள்சத்தியமாய் நெகிழ்ந்து போனேன் சார்இந்தக் காலக்கட்டத்தில் மூன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு சின்னக் குழந்தை 'அவளது கலைஞர் தாத்தா' விரைவில் குணம் பெற வேண்டும் என்று எழுதிய கடிதத்தை உதாசீனப்படுத்தாமல் அந்தக் குழந்தையை நேரில் சந்தித்து அவளோடு நீங்கள் அளவளாவிய அந்த அன்பினைக் கண்டும் நெகிழ்ந்து போயிருக்கிறேன்கேரளாவில் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கேரள முதல்வர் தோழர் பினரயி விஜயன் அவர்கள் வருகிறார். அங்குள்ள தோழர்கள் அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்று ஒரு குழந்தை அவரது தாயாரிடம் நச்சரித்துக் கொண்டிருப்பதாக அந்த தாயார் தனது முகநூலில் பதிவிட்டிருக்கும் செய்தியை அவரிடம் கூறுகிறார்கள்வீடு எங்கு இருக்கிறது என்று வினவுகிறார் தோழர் பினரயி. வீடு அருகில் தான் என்று தோழர்கள் கூறவே தோழர்களோடு அந்த குழந்தையின் வீட்டிற்குச் சென்று அவளோடு சற்று நேரம் விளையாடிக்கொண்டிருந்துவிட்டு அவர் பொதுக்கூட்டத்திற்கு வந்த அனுபவம் சமீபத்தியதுகேரளாவில் இடதுசாரிகளிடம் மட்டுமல்ல காங்கிரஸ் தலைவர்களிடமும் இது மாதிரியான போக்குகளை நம்மால் காண முடிகிறதுஉம்மன் சாண்டி என்று அழைத்த குழந்தையை நோக்கி போய் குனிந்து அவள் கோரிக்கையைக் கேட்டு அதை நிறைவேற்றிய அன்றைய முதல்வர் உம்மன் சாண்டியை இப்போது நினைத்தாலும் நெகிழ்வேன்இது கேரளப் பண்பாட்டுக் கூறுதமிழகத்தில் அப்படி ஒரு சூழல் வராதா என்று ஏங்கி கிடந்த எங்களுக்கு ஒரு நம்பிக்கையைத் தந்து இருக்கிறீர்கள்எம்எல்ஏக்களை பர்ச்சேஸ் செய்யமாட்டேன். இந்த அரசை போராடித்தான் வீழ்த்த வேண்டும் நீங்கள் உங்கள் உறுப்பினர்களோடு பேசிக் கொண்டிருந்ததாக கேள்விபட்டபோது உங்கள்மீதான நம்பிக்கை இன்னும் கூடியதுஇப்போது நான் கூறவரும் விஷயம்தான் மிக முக்கியமானதும் உங்களிடம் ஒரு கோரிக்கையை உரிமையோடு வைப்பதற்கான தேவையையும் தந்திருக்கிறதுதிரு எடப்பாடி அவர்களின் தலைமையிலான தமிழக அரசு சேலத்திலிருந்து சென்னையை நோக்கிய எட்டு வழிப்பாதையை கட்டமைப்பதற்காக மலைகளை குடையவும் விவசாய நிலங்களை முறையின்றி கையகப்படுத்தவும் ஆன செயல்களை செய்யத் துவங்கி இருக்கிறதுஇதனால் அந்தப் பகுதியில் விவசாயம் பெரிதும் பாழ்பட்டுப் போகக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளதுமலைகளைக் குடைவதன் மூலம் கனிமவளம் பெருமளவில் பாதிக்கப்படும்போக இந்த முயற்சி என்பது ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினரின் போக்குவரத்து பயன்பாட்டிற்கு அல்ல. இது பெருமுதலாளிகளின் சரக்கு போக்குவரத்திற்கான ஒரு திட்டம்.அமைய இருக்கிற எட்டு வழி சாலையில் எட்டு ட்ராக்களில் இரண்டு மட்டுமே கார் மற்றும் பொதுப் பயண போக்குவரத்திற்கானது என்பதும் மற்றவை கனரக சரக்கு வாகனங்களுக்கானவை என்றும் செய்திகள் நமக்குச் சொல்கின்றனஅதுவும் அதிவேகத்தில் செல்லக்கூடிய பணக்கார கார்கள்மட்டுமே அந்த ட்ராக்களில் போகமுடியும் என்பது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லைஆக, ஆறு ட்ராக்களில் கனரக வாகனங்களும் மிச்சமிருக்கிற இரண்டு ட்ராக்களில் அவற்றின் முதலாளிகளும்தான் பயணிக்க முடியும் என்று ஆகிறதுஇந்த நிலையில் இந்த கொடூரமான, மக்களை பெரிதும் பாதிக்கக்கூடிய ஒரு முயற்சியை தடுத்து நிறுத்த தியாகமும் வீரமும் செரிந்த ஒரு நடை பயணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்திருக்கிறதுதிருவண்ணாமலையிலிருந்து சேலம் நோக்கிய அந்த அமைதி வழி நடைபயண போராட்டத்திற்கு தமிழக அரசு தடைவிதிக்கிறதுசொன்னபடி தடையை மீறி நடை பயணத்தை தொடங்கிய தோழர்களை அரசு கைது செய்து ரிமாண்ட் செய்யாமல் வீட்டிற்கு செல்வதென்றால் வெளியே விடுகிறோம் என்கிற பெயரில் ஏறத்தாழ 23 மணி நேரம் மண்டபத்திலேயே வைத்து அதிக அளவு காரம் கலந்த உணவை கைது செய்யப்பட்ட தோழர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்எது செய்தாலும் எது வேண்டுமானாலும் செய்யுங்கள் எங்கள் நடை பயணம் நிற்காது என்கிற முனைப்போடு தோழர்கள் களமிறங்கி இருக்கிறார்கள்அது குறித்துக் கூட பிறகு பேசலாம்நடைபயணத்தை தடை செய்தது தவறு என்றும் கைது செய்யப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் இத்தனைக்குப் பிறகும் தங்களது போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களை பாராட்டுவதாகவும் கூறியிருக்கிறீர்கள்இந்த அறிக்கைக்காக உங்களை நன்றியோடு வணங்குகிறேன்உங்களது இந்த நிலை, போராடிக் கொண்டிருக்கும் எங்கள் தோழர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும் என்பதை நான் மறுக்க விரும்பவில்லைஆனால் இது கடந்து உங்களிடம் எனக்கு ஒரு கோரிக்கை இருக்கிறதுஅரசு செய்வது அநியாயம் என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள்.அரசின் அடாவடித்தனமான இந்த போக்கிற்கு எதிர் நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள்.இந்த செயலுக்கு எதிரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டம் சரி என்று உணர்ந்து இருக்கிறீர்கள்.இந்த நடைபயணத்தை தடை செய்ததும் ஊழியர்களை கைது செய்ததும் தவறு என்று உணர்கிறீர்கள்.அதற்கு எதிராக பலமானதொரு குரல் கொடுத்து இருக்கிறீர்கள்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களின் நெஞ்சார பாராட்டியிருக்கிறார்கள்.மரியாதைக்குரிய தோழர் ஸ்டாலின் அவர்களே எனது அன்பான கோரிக்கை ஒன்று தான்.இத்தனையையும் உணர்ந்த நீங்கள், அரசின் அடாவடித்தனத்திற்கு எதிரான ஒரு கடமைகளை செய்திருக்க வேண்டிய நீங்கள், அதை செய்து கொண்டு இருக்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களோடு என் தொண்டர்களும் களமேகுவார்கள் என்று சொல்லியிருந்தால் அதிர்வு கூடியிருக்குமே சார்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த செயலோடு இந்த புள்ளியில் இணைந்தாலும் அந்தப் போராட்டம் வலுப்பெறும் தானேஒருக்கால் இப்படியான ஒரு போராட்டத்தை நீங்கள் கையெடுத்திருந்தால் மகிழ்ந்து இணைந்திருப்போம்வெற்றி பெறவேண்டும் என்று நீங்கள் வாழ்த்திய போராட்டத்தை சன் மற்றும் கலைஞர் குழும ஊடகங்கள் கண்டு கொள்ளாததை நீங்கள் கண்டித்திருந்தால் மகிழ்ந்திருப்போம்கலைஞர் விரைவில் குணமடையவும்இந்தக் கொடூரமான ஆட்சியை ஆதரவு சக்திகளை அரவணைத்து நீங்கள் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன்மிக்க நன்றிஇரா.எட்வின்#சாமங்கவிய ஒரு மணி இருபத்தி ஐந்து நிமிடங்கள்

Published on August 03, 2018 11:05
29.07.2018
“அறிவை விரிவு செய்; அகண்டமாக்கு!”என்கிறார் புரட்சிக் கவிஞர்.“நான் மட்டும் உள்துறை அமைச்சராக இருந்தால் அறிவு ஜீவிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டிருப்பேன்”என்று கூறியிருக்கிறார் கர்நாடக பாரதிய ஜனதாக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திரு பசனகவுடா பாட்டீல் .ஏன் அறிவை விரிவு செய்ய வேண்டும் என்பதற்கும் ஏன் அறிவாளிகளைக் கொல்ல வேண்டும் என்பதற்கும் இருவரும் காரணங்களையும் சொல்லியிருக்கிறார்கள்.அறிவை விரிவு செய்தால் ,”விசாலப் பார்வையில் விழுங்கு மக்களை!
அணைந்துகொள்! உன்னைச் சங்கம மாக்கு
மானிட சமுத்திரம் நானென்று கூவு!”என்கிறார் புரட்சிக் கவிஞர்.அறிவை விரிவு செய்தால் பார்வை விசாலப்படும்.பார்வை விசாலப்பட்டால் மக்களை மக்களாக உள்வாங்க அறிவு வழிநடத்தும்மக்களை ஆரத்தழுவி அவர்களோடு மக்களாக இரண்டறக் கலந்து மனிதச் சமுத்திரத்தின் ஒரு துளி தானென்று அவனுக்கு அறிவு உணார்த்தும்ஆகவேதான் புரட்சிக்கவிஞர் மனிதனை அறிவைக் கொள்ளுமாறு பரிந்துரை செய்கிறார்.அறிவு வந்தால் அவர்கள் நமது நாட்டிற்கு எதிராக கோஷமிடுகிறார்கள் என்றும் . அறிவாளிகள் பாகிஸ்தானைவிட ஆபத்தானவர்கள் என்றும் பசனகவுடா பட்டீல் கூறியிருக்கிறார்.எனில், அறிவிலிகள் மட்டுமே தேசப்பற்றாளர்கள் என்று கூற வருகிறாரா பசனகவுடா என்ற அச்சம் நமக்கு எழுகிறது.அறிவு விரிவுபட்டால் எல்லா மக்களையும் தன்னைப் போல் ஒருவனாக பார்க்கத் தூண்டும் என்கிறார் பாரதிதாசன்அறிவு விரிவுபட்டால் ஜாதி அடிபடும் என்கிறார் புரட்சிக்கவிஞர்நமக்கு ஒரு விஷயம் தெளிவுபடுத்த இருக்கிறதுமார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளார் தோழர் எச்சூரி அவர்கள் மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும் நாளில் அவரது தேசப் பற்றினை மெச்சி புகழ்ந்த பாரதிய ஜனதாக் கட்சியினர் குறிப்பாக வெங்கையா நாயுடு போன்றவர்கள் அவர் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக வரவேண்டும் என்ற கருத்தை இதய சுத்தியோடு வைத்தனர்.ஒரு தகவலுக்காக சொல்கிறேன்,தோழர் யெச்சூரி அவர்கள் CBSE தேர்வில் த்ந்ந்சத்தில் முதல் மாணவனாக வந்தவர்.எல்லா அரசுகளுக்கெதிராகவும் மக்களுக்காக சமரசமே இன்றி போராடிக் கொண்டிருப்பவர்எல்லா அரசுகளாலும் பேரதிக நெருக்கடிக்குள்ளாகியவர்.ஆனால் அவரால் பெரிதும் எதிர்க்கப்பட்ட பாஜக வினரே அவர் மீண்உம் அவைக்கு வர வேண்டும் என்று சொல்லுமளவிற்கு இருந்தவர்அறிவாளிகள் சாதிக்கு எதிராகப் போராடுவார்கள்,அறிவாளிகள் சமத்துவத்திற்காகப் போராடுவார்கள்,அறிவாளிகள் மதச்சார்பின்மைக்காக உயிரையும் கொடுப்பார்கள்,இவை அவர்களுக்கு ஆபத்தானவைஅவர்களுக்கு மதார்பின்மையை தங்களாது செருப்பைவிடக் கேவலமாக்க் கொள்கிற எதிர்மறை அறிவாளிகளும் இவர்கள் தரும் மண்ணை பிரியத்தோடு பெற்று தலையிலே போட்டுக் கொள்பவர்களுமே போதுமானவர்கள்திரு பசனகவுடா, நாங்கள் பாரதிதாசனின் பிள்ளைகள்.#சாமங்கவிந்து 21 நிமிடம்

Published on August 03, 2018 10:48
27.07.2018

இன்று Geetha Narayanan மற்றும் Susila Anandஆகியோரது நிலைத் தகவல்களில் நான் இந்தப் படத்தை பார்த்தேன்.
நான் பார்த்த மிக நல்ல பத்து புகைப்படங்களுள் நிச்சயமாய் இதுவும் ஒன்று
நீரின் வருகையை எப்படிக் கொண்டாடுகிறார்கள் பாருங்கள் இந்தத் தாய்மார்கள்?
அந்த மண் எவ்வளவு அழுக்காக இருக்கும் என்பது நதிக்கரைகளைப் பற்றித் தெரிந்தவர்களுக்குத் தெரியும்.
எந்தவித அசூசையும் இன்றி அந்த அசுத்தமான இடத்தில் அவர்களால் அங்கு மண்டியிட்டு முத்தமிட முடிகிறது என்றால் அந்த நீரின் முக்கியத்துவத்தை அவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள் என்று பொருள்.
வாடிய பயிரைக் கண்டதும் வள்ளளார் வருந்தினார் ஆனால் விவசாயி தற்கொலை செய்கிறான். என்ன காரணம் என்றால் வாடியப் பயிர் அவனது பயிர். அவனது தாய்களும் சகோதரிகளும் குழந்தைகளும் இவர்கள்.
எந்த நீர் தங்கள் மண்ணை முத்தமிடாததால் தங்கள் பயிர் வாடியதோ,
எந்தத் தண்ணீர் வராததால் தங்கள் பயிர் வாடியதைக் கண்டு தங்கள் தந்தையை தாத்தனை சகோதரனை இழந்தார்களோ,
அந்தத் தண்ணீர் தம் மண்ணிற்கு வந்த குதூகலம் அவர்களுக்கு,
தம் பயிர் இனி வாடாது இந்தத் தண்ணீர் தம்மை காக்கும் என்ற நம்பிக்கை,
பயிர் வாடாது என்பதால் அந்தக் காரணத்திற்காக தம் குடிசைகளில் இருந்து தற்கொலை நிகழாது என்ற நிம்மதி,
அவர்களுக்குத்தான் தெரியும் ஒவ்வொரு சொட்டு நீரின் முக்கியத்துவம்.
"உழவ ரோதை
மதகோதை
யுடைநீ ரோதை
தண்பதங்கொள்
விழவ ரோதை
சிறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி”
என்பான் இளங்கோ.
காவிரிநீர் தமிழ் மண்ணை தொடும் பும்புள்ளியில் மதகின் கரைத் தொட்டு ஓடும் நதியின் ஓசையோடு உழவர்கள் மகிழ்ந்து எழுப்பும் ஓசையும் கேட்டு நடக்கும் காவிரியே வாழிய நீ என்பான்.
அந்தக்காலத்து உழவன் மகிழ்ச்சியை ஒத்திருக்கிறது இந்தப் பெண்களின் மகிழ்ச்சி
சொல்ல இரண்டு இருக்கிறது
1) நடந்த காவிரி இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஷோலாஷ் காடுகளை அழித்ததால் மலையிலிருந்து மழைநீர் வழக்கமாக இறங்குவதற்கு எடுத்துக் கொள்ளும் கால அவகாசத்தைவிட குறைந்த காலத்தில் இறங்கி விடுகிறது.
நதியில் மணல் குறைந்து போனதால் நடந்த நதி ஓட ஆரம்பித்திருக்கிறது. மலையில் ஷோலாஷ் காடுகளை வளர்ப்பதிலும் மணால் கொள்ளையைத் தடுப்பதிலும் முயல வேண்டும்
2) தங்கள் மண்ணை முத்தமிடும் நீரை மண்டியிட்டு முத்த்மிடும் அந்தப் பெண்களிடம் நீர் மேலாண்மையைக் கொடுக்க வேண்டும்
#சாமங்கவிந்து 35 நிமிடங்கழித்து
27.07.2018
Published on August 03, 2018 10:13
July 29, 2018
அஜித் AV AV

29.07.2018
Published on July 29, 2018 10:08
26.07.2018
மாண்புமிகு பன்னீர்செல்வம் அவர்கள் மிகுந்த அதிகாரம் மிக்கவர். தனக்கிருக்கக்கூடிய அதிகாரத்தை தனக்காக எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற நுட்பம் அறிந்தவர்.ஆனானப்பட்ட நிர்மலா அம்மையாரையே தான் சொன்னதை செய்துதர வைக்கும் வித்தை தெரிந்தவர்.கீழடியிலிருந்து திரு அமர்நாத் அவர்களை இடம் மாற்றம் செய்த சில நாட்களில் மாண்புமிகு நிர்மலா அவர்கள் கீழடி வருகிறார். அப்போது அங்கு கூடிய பொதுமக்கள் அவரை மறித்து ஒழுங்காகவும் நேர்மையாகவும் பணியாற்றிக் கொண்டிருந்த திரு அமர்நாத் அவர்களை ஏன் மாற்றினீர்கள் என்று கேட்டபொழுது வலது கையை வேகமாக நீட்டி எதிரே இருந்தவர்களை அறைந்துவிடுகிற மாதிரியானதொரு கோவத்தில் ,“ஏன் அந்த ஆளு மட்டும்தான் வேலை பார்ப்பாரா?” என்று அவர் கத்திய தோற்றம் அவர் எவ்வளவு பயங்கரமானவர் என்பதைக் காட்டியதுகுரங்கணி தீப்பிடித்தது. அங்கு சிக்கிக் கொண்ட குழந்தைகள் கருகிய போதுகூட ராணுவ ஹெலிகாப்டர் ஆம்புலன்சை அனுப்ப மறுத்தவர்மீனவர்கள் கடலில் செத்து மிதந்தபோது குற்றுயிராக கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களைக் காப்பாற்றுவதற்காக ராணுவ ஹெலிகாப்டர்களைத் தர மறுத்தவர்தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்காக
பிரதமர் ஒரு இரங்கலைக்கூட சொல்லவில்லையே என்று சென்னை வந்த அவரிடம் வினவியபோது,“அப்படியா, அவரிடம் கேட்டு சொல்கிறேன்” என்று கோவமும், பகடியும், ஆணவமும் ஒரு சேர கூறியவர்அவர் இவ்வளவு ஆணவத்தோடு நடந்து கொண்டதற்கு காரணம் பாதிக்கபட்டவர்கள் தமிழ் பேசுகிறவர்கள் என்பது.தன் தம்பி பாலமுருகனை மதுரையிலிருந்து சென்னை மருத்துவ மனைக்கு அழைத்துப்போக ராணுவ ஹெலிகாப்டர் அம்புலன்சை அனுப்ப வைத்து ஆனானப்பட்ட நிர்மலா அவர்களின் பதவிக்கே சிக்கலைக் கொண்டு வந்திருப்பவர்அவரின் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின்மீது விசாரனை ஆரம்பமாகிவிட்டது என்று முதல்வர் கூறியிருக்கிறார்இந்தச் சூழலில் சக்தி வாய்ந்த நிர்மலா அவர்களையே தனக்காக சட்டத்திற்கு புறம்பான காரியத்தை செய்ய வைத்த பன்னீர் அவர்களின் முன் சாமானிய சாட்சிகளும் வழக்கறிஞர்களும் என்ன பாடு படுவார்கள்?எனவே இந்த வழக்கு முடியும்வரை அவரை பதவி நீக்கம் செய்வதுதானே முறை.
*******************************மரியாதைக்குரிய மாறன் சகோதரர்களை சிறப்பு நீதிமன்றம் விடுவித்ததற்கு எதிராக CBI சென்னை உயர்நீதின்றத்தில் ‘மறுசீராய்வு மனு’வினை (REVITION PETITION) உயர்நீதிமன்றம் விசாரனைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறது. விசாரித்த நீதியரசர் திரு ஜெயச்சந்திரன் அவர்கள் ஒரு இடத்தில்,“the special court had discharged all seven accused from the case though maran brothers and mr.kannan had not filed discharge petitions at all. nevertheless the trio had participated in the hearing on the discharge plea of the other accused and therefore the lower court came to the conclusion that all of them were entitled to the benefit " (THE HINDU 26.07.2018)என்கிறார்.. இதைத் தமிழ்ப்படுத்தினால்”மாறன் சகோதரர்களும் திரு கண்ணன் அவர்களும் தங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று முறையிடாத போதும் மற்றவர்கள் தங்களை விடுவிக்கக் கோரி தொடுத்த முறையீட்டின் மீதான விசாரனையில் இவர்களும் வந்து அமர்ந்திருந்ததால் அவர்களையும் சேர்த்து விடுவித்திருக்கிறது”ரெண்டு விஷயம்1) விடுவியுங்கள் என்று மனுவே தராதவரையும் நீதிமன்றத்திற்கு வந்தார்கள் என்பதற்காகவே விடுவித்த சிறப்பு நீதி மன்றத்தின் பெருந்தன்மை2) எதற்கும் கவனமாக இருங்கள் நீதியரசர் அவர்களே***********************************”பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் இலக்கு. அதற்காக மாநில கட்சியின் பிரதமர் வேட்பாளாரையும் ஏற்போம்” என்று கூறியிருக்கிறார் திரு ராகுல்அதை தேர்தலுக்குப் பிறகு பார்க்கலாம் ராகுல்.ஆனால் இதுதான் சரியான பார்வை. தேர்தலுக்குப் பிறகு கூட்டணிக் கட்சிகள் கூடி யார் பிரதமர் என்பதை முடிவெடுங்கள்.ஒற்றுமையாய் ஒன்றாய் ஒரு செயல்திட்ட முன்வரைவோடு தேர்தலை எதிர் கொள்ளுங்கள். தேர்தலுக்குப் பின் அதை செயல்படுத்த முயற்சி செய்யுங்கள்என் வாழ்த்துக்களும் வணக்கமும் ராகுல்.#சாமங்கவிய 42 நிமிடங்கள் இருக்கும்போது

Published on July 29, 2018 09:43
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)