இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 91

May 4, 2018

என்ன செய்ய உத்தேசித்திருக்கிறீர்கள் துரைமார்களே?

இது இந்தியாவில் இருக்கிற ஒரு மாநிலம்நாங்கள் ஆயிரம் விமர்சனங்கள், கோவம், வெறுப்பு இன்னும் எத்தனையோ இருந்தபோதும் எங்களது தேசமென்றும் எங்களது மத்திய அரசாங்கம் என்றுதான் கருதி வாழ்கிறோம்கருப்புக் கொடியை எம் பிள்ளைகள் காட்டியதுகூட எங்களுக்கான நியாயமான தண்ணீர் உரிமையை எங்களுக்கு வாங்கித் தர மறுக்கிறாரே எங்கள் பிரதமர் என்ற கோவத்தை வெளிக்காட்டத்தான்ஒருக்கால் அடுத்தநாளே அவர் வாரியத்தை அமைத்து எங்கள் உரிமைக்கான அங்கீரத்தைக் கொடுத்திருந்தால் அதற்கு அடுத்த நாளே எம் பிள்ளைகள் பூங்கொத்தோடு பிரதமர் இல்லம் போயிருப்பார்கள்ஆனால் எம் மண்ணை தமது மண்ணாகவும் எங்களைத் தம் மக்களாகவும் கருத மறுக்கிறார்களோ எங்கள் துரைமார்கள் என்று கருதத் தோன்றுகிறதுஎன்ன வன்மம் எங்கள்மீது உங்களுக்கு?எதிரி நாட்டிற்கு படையை அனுப்புவதுபோல் ஒரு சிறிய மாவட்டத்திற்குள் ஆயிரக் கணக்கில் ராணுவத்தைக் குவித்திருக்கிறீர்கள்சூறையும் சமுத்திரமும் கலந்துகட்டி எம் மீனவர்களை வேட்டையாடியபோது ஏதோ கார்டூன் படம் பார்ப்பதுபோல் இருந்தீர்களே எங்கள் கனவான்களேநதிநீர்ப் பிரச்சினையில் இரண்டு மாநிலங்களுக்கிடையே கருத்து முரண்பாட்டில் நீதிபதியாய் இருந்து பரிபாலனித்திருக்க வேண்டிய நீங்களும் எங்கள் பிரதிவாதியாகவே மாறினீர்களேநீட் வேண்டாம் என்பது எங்கள் உரிமை. கேட்கிறோம். அதற்காக எம் பிள்ளைகளை ராஜஸ்தானுக்கு தேர்வு எழுத கூறுவது சகிக்கவே முடியாத வன்மம் அல்லவா?லண்டன் போகிறீர்கள். ஸ்டெர்லைட் நிறுவன அதிபர் வரவேற்பு விளம்பரங்களைத் தருகிறார். இப்போது ஆலையை விரிவு செய்வேன் என்கிறார். பொருத்திப் பாருங்கள் பெரியவர்களே?மீத்தேன் எடுத்தே ஆக வேண்டும் என்பதில் எப்படி இத்தனை கோர முகம்.என்ன செய்ய உத்தேசித்திருக்கிறீர்கள் துரைமார்களே?அல்லது என்ன செய்யச் சொல்கிறீர்கள்?
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 04, 2018 05:50

May 2, 2018

யார் அழைத்தது உங்களை?

"எந்த தலித் வீட்டிலும் தான் சாப்பிட முடியாது என்றும். தான் சாப்பிட்டு தலித் வீடுகளைத் தூய்மைப் படுத்த தான் ஒன்றும் ராமனல்ல" என்றும் உமாபாரதி கூறியிருக்கிறார்1) யார் அழைத்தது உங்களை?
2) தூய்மைபடுத்த எங்களிடம் விளக்கமாறுகள் உண்டு
3) இதற்கு நாடுபூராவிலும் உள்ள நீதிமன்றங்களில் வழக்குப் போட முடியாதா?
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 02, 2018 21:34

நீட்டே கூடாது என்று போராடிய நம்மை

எம் பிள்ளைகளுக்கான நீட் தேர்வு மையங்களை தமிழ்நாட்டில் அமைக்காமல் ராஜஸ்தானிலும் கேரளாவிலும் அமைப்பது ஏன்? என்ற குரல் வலுத்து வருகிறது.அது இன்னும் வலுக்கும்இன்னும் இன்னுமாய் வலுக்கும்போராட்டங்கள் வெடிக்கும்ஆமாம் நியாயம்தானேநியாயம்தான்வலிக்கிறதுதமிழ்நாட்டில் நீட்டே கூடாது என்று போராடிய நம்மை தமிழ்நாட்டில் நீட் தேர்வுமையங்கள் கேட்டு போராடவைத்ததுதான் அவர்களின் கயவாளித்தனம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 02, 2018 08:17

இது வதந்தியாகட்டும்

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் முதுகலை ”அரசியல் அறிவியல் “ பிரிவு வினாத்தாளில்1) கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் GST யின் கூறுகள் குறித்து விவரி
2) உலகமயமாக்கல் குறித்து முதலில் சிந்தித்த முதல் இந்தியச் சிந்தனையாளர் - நிறுவுஆகிய இரு வினாக்கள் இருந்ததாக சில நாட்களுக்கு முன் மிகுந்த கவலையோடு தெரிவித்திருந்தார் தோழர் Mangai Arasiகவலைப்படுவதற்கும் கவனம் குவிப்பதற்குமான விஷயம்தான்அரசியல் அறிவியலில் முதுகலை படிக்கும் பிள்ளையை இந்தக் கோணத்தில் சிந்திக்க வைப்பது எப்படித் தவறாகும் என்றுகூட கேட்கலாம். அந்தப் பதிவிலேயே கிட்டத்தட்ட அதே மாதிரி ஒருவர் கேட்டிருக்கிறார். அதற்கு மங்கையும் மிகச் சரியாகவே பதில் சொல்லி இருக்கிறார்அரசியல் அறிவியல் படிக்கும் பிள்ளைகள் இதுபோல பரந்துபட்டுத் தெளிவது அவசியம்தான்பிரச்சினை என்னவெனில்அவர்கள் GST கு எதிரான சிந்தனையாளர்கள் குறித்தோ அல்லது உலகமயலுக்கு எதிர்ச் சிந்தனையாளர்கள் குறித்தோ பிள்ளைகளை சிந்திக்க விடுகிறார்களா? முழு மனதோடு விவாதிக்க அனுமதிப்பார்களா?மார்க்சை, தந்தை அம்பேத்கரை, அமர்த்தியா சென்னுடைய மாற்றுப் பொருளாதாரப் பார்வையை சிலபசுக்கு வெளியே இருந்து பிள்ளைகள் சிந்திக்கக் கோருவார்களா?ஒரு அமைச்சர் சொல்கிறார்,கூகுளே நாரதரின் நீட்சி என்றுஒரு முதலமைச்சர் சொல்கிறார்,புராண காலத்தில் இணையம் இருந்ததென்றுஒரு மாநிலத்தில் 150 பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒரு குழந்தைகூட தேர்ச்சி பெறவில்லை என்றுரயில்வே பள்ளிகள் மூடப்படுகின்றனஅநேகமாக அடுத்த ஆண்டு முதல் நம் மண்ணில் பொதுப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேர்க்கை இருக்காது என்று தெரிகிறது ( இது வதந்தியாகட்டும்)நான்குபுறமும் கவலைகளே நம்மை சூழ்ந்திருக்கின்றனகுறைந்தபட்சம் இவை குறித்து அக்கறையோடு முதலில் பேசுவோம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 02, 2018 05:41

குறிப்புச் சீட்டு இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?

மரியாதைக்குரிய பிரதமர் அவர்களுக்கு,வணக்கம்.நீங்கள் நலமென்பதும் நாங்கள் யாரும் நலமில்லை என்பதும் நீங்கள் அறிவீர்கள் என்பது எனக்குத் தெரியும்.எங்கள் மண்ணைக் கடந்து கர்நாடகம் சென்றிருக்கிறீர்கள்.மகிழ்ச்சிராகுலுக்கு இல்லாத, எந்தக் குறிப்பும் இல்லாமல் 15 நிமிடம் பேசுகிற ஆற்றல் உங்களுக்கு இருப்பதாக ஒரு கூட்டத்தில் உரையாற்றியிருக்கிறீர்கள்.ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக மேடையில் இருப்பவன் என்ற வகையில் அதன் நிறை குறைகள் எனக்குத் தெரியும் என்பதோடு குறிப்பிருக்கிறதா இல்லையா என்பதில் எதுவும் இல்லை. என்ன பேசுகிறோம் என்பதிலும் , கேட்கிறமாதிரி பேசுகிறோமா என்பதிலும் இருக்கிறது எல்லாம்.இன்னும் சொல்லப்போனால் மக்களுக்கான உரையாக இருக்கும் பட்சத்தில் நாம் ஒழுங்காகப் பேசாவிட்டாலும் மக்கள் அதைப் புரிந்து கொள்ளவே செய்வார்கள்.சரி,குறிப்பே இல்லாமல் அப்படி என்னதான் பேசினீர்கள்?இரண்டு மாநிலங்களில் எரிந்துகொண்டிருக்கிற காவிரிப் பிரச்சினைப் பற்றி பேசினீர்களா?காஷ்மீரில் சிதைக்கப்பட்ட ஆசிஃபா குறித்து பேசினீர்களா?குழந்தைகளை சிதைத்தால் தூக்கு என்று நீங்கள் சொல்லி 12 மணி நேரத்திற்குள் நீங்கள் இப்போது நிற்கும் பெங்களூருவிலிருந்து ஈரோடு வந்துகொண்டிருந்து குழந்தையை உங்கள் கட்சியைச் சேர்ந்த ப்ரேம் ஆனந்த் என்பவர் வல்லுறவு கொள்ள முயன்று கைது செய்யப்பட்டிருக்கிறாரே. அது குறித்து பேசினீர்களா?உத்திரப் பிரதேசத்தில் 17 வயது குழந்தையை சட்டமன்ற உறுப்பினரே சிதைத்து சிறை பட்டிருப்பதைப் பற்றி பேசினீர்களா?கற்பழிப்பெல்லாம் சகஜம் என்பதாகப் பேசும் உங்கள் கட்சி மந்திரிமார்களைப் பற்றிப் பேசினீர்களா?எம் தந்தை அம்பேத்கரை பார்ப்பணர் என்று சொன்னவரை திட்டி ஏதேனும் பேசினீரா?இவை பற்றி எதுவும் பேசமால் நீங்கள் எதைப் பற்றி எவ்வளவு நேரம் பேசினால் என்ன? பேசாவிட்டால் என்ன?குறிப்புச் சீட்டு இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?நன்றி.அன்புடன்,
ஒரு தமிழ் வாக்காளன்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 02, 2018 05:40

April 26, 2018

ஆணவ அரசியலின் ஒரு சிறு கூறு




இது போர்ஜரிக் குற்றமென்று சொன்னால் தவறு செய்தவர்களாவோம்எந்த அயோக்கியத் தனத்தையும் செய்வோம் என்ற அவர்களது ஆணவ அரசியலின் ஒரு சிறு கூறுமற்றபடி செய்தவன் இஸ்லாமியனா இந்துவா கிறிஸ்தவனா என்பதில் எங்களுக்கு எப்போதும் வேறுபாடு எதுவும் இல்லைமதவெறி பிடித்தவர்களின் அரசியல் அதுஎவன் செய்தாலும் அவனைத் தண்டிக்கக் கோருவோம்.ஆனால் அதில் கோட்பாட்டோடுகூடிய அரசியல் இருப்பின் அதை அம்பலப்படுத்தவும் செய்வோம் அதை
பின் குறிப்பு
*****************
கீதா என்ற பெயரும் படங்களும்தான் போலி செய்தி உண்மை என்கிறான் தம்பி Muralikrishnan Chinnadurai.அவன் சரிபார்க்காமல் சொல்ல மாட்டான். அது உண்மை எனும் பட்சத்திலும் நமது பதிவு சரிதான். செய்தவன் எவனாயினும் அவன் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவனேஉண்மை தெரிந்ததும் விரிவாய் பேசுவோம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 26, 2018 10:08

நீங்களாகவே பதறி எதிலும் சிக்கிக் கொள்ள வேண்டாம் யுவர் எக்ஸலன்சி

தேவையே இல்லாமல் மட்டுமல்ல உரிமையே இல்லாத இடங்களிலும் நீங்கள் உங்களை நீதிபதியாகவே கட்டமைத்துக் கொள்கிறீர்கள்அப்படித்தான் இப்போதும் முதல்வர் மீதும் அமைச்சர்கள் மீதும் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்தரமே இல்லை என்று சொல்லியிருக்கிறீர்கள்உங்களிடம் கொடுக்கப்பட்ட முகாந்திரங்களே இல்லாத குற்றச்சாட்டுகள் எவை ?விசாரிக்கிற அதிகாரம் உங்களுக்கு இல்லை என்றாலும் ஒரு வாதத்திற்காகக் கேட்கிறேன்யார் யாரை விசாரித்தீர்கள்?புகார் கொடுத்தவர்களை விசாரனைக்குட்படுத்தினீர்களா?யார் யார் இடத்தில் குறுக்கு விசாரனை செய்தீர்கள்இத்தனையுமேன் கேட்கிறேன் என்றால், மோசமான தீர்ப்பில்கூட இவை எல்லாம் இருக்கும்விடுங்கள்நீங்களாகவே பதறி எதிலும் சிக்கிக் கொள்ள வேண்டாம் யுவர் எக்ஸலன்சி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 26, 2018 10:07

தமிழ் மக்கள் மறந்திருப்பார்கள் என்பதைத் தவிர

ஏதோ ஒரு அதிசயம் நடந்து ஒருவாரம் ஊடகங்கள் எல்லாம் இயங்க இயலாசூழல் ஏற்பட்டால்தமிழிசை ராஜா போன்றோரை தமிழ் மக்கள் மறந்திருப்பார்கள் என்பதைத் தவிர வேறு என்ன நிகழ்ந்துவிடப் போகிறது?
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 26, 2018 09:56

April 25, 2018

இதில் “பிறப்பு” இல்லவே இல்லையா?

நேற்றைக்கு ஒரு மகத்தான, சோர்ந்து கிடந்த உள்ளங்களை உசுப்பிவிடுகிற மாதிரியான ஒரு பேரணி சென்னையில் நடந்திருக்கிறது.உண்மைய சொன்னால் சென்னை குலுங்கி இருக்கிறது.வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் உச்சநீதிமன்றத்தின் ஆனையைத் திரும்பப் பெறவேண்டும் என்கிற கோரிக்கைக்கான பேரணி அது.

நிறையபேரின் வயிற்றெரிச்சலை அது சம்பாதித்திருக்கிறது. எந்தவிதமான முகமூடியையும் அணிவதற்குள்ளாகவே அவரை அறியாமலேயே மருத்துவரிடம் இருந்து வரும் எரிச்சலோடான எதிர்வினையை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.பலபேரின் மௌனம்தான் இதைவிடவும் எதைவிடவும் மோசமானதாய் எனக்குத் தெரிகிறது.இது இடைச்சாதி அரசியலின் கோரமுகம். பார்ப்பணீயத் தளைகளில் இருந்து இடைச்சாதியின் முழுமையான விடுதலைக்கு தலித் விடுதலை என்பது மறுக்க இயலாத நிபந்தனை.அதுகுறித்து பேசும்போது அங்கும் உள்ளடுக்குப் பிரச்சினைகள் இல்லையா? என்று கேட்கிறார்கள். இருக்கிறதுதான். ஆனால் நமக்கு ஒரு கேள்வி இருக்கிறது. அங்கும் உள்ளடக்குப் பிரச்சினை இல்லையா என்ற கேள்வியை ஏன் கேட்கிறீர்கள்.1) அந்த உள்ளடுக்குப் பிரச்சினையும் தீர வேண்டும் என்பதாலா?
2) அங்க அடுக்குப் பிரச்சினை இருக்குள்ள அப்ப இங்கயும் இருக்கும் என்கிறீர்களா?அடுக்குகளே இல்லாத ஒரு சமூகம்தான் தீர்வு.முதலில் தலித் விடுதலையை சாத்தியமாக்குங்கள். தலித்துகளின் உள்ளடுக்கு தீர்வதற்கும் உதவுங்கள்.விடுத்து,
தலித் பேரணியால் நான் ஒரே இடத்தில் முக்கால் மணிநேரம் ந்ற்க வேண்டியதாய் போனது என்று என்று நடிகை ஒருவர் புலம்ப, பார்த்தீர்களா பார்த்தீர்களா பொதுமக்களை எவ்வளவு இம்சை செய்கிறார்கள் என்று சிலர் கிளம்பி விட்டனர்.இந்த முனகல்களை Hராஜா, குருமூர்த்தி, நாராயணன் போன்றவர்கள் ஊதிப் பெரிதாக்க முயல்வார்கள்.நமக்கிருக்கும் கேள்வி,எங்கள் பேரணி பொதுமக்களை இம்சித்தது என்று சொன்னால்நாங்கள் பொதுமக்கள் இல்லையா?உங்கள் பிள்ளைகள் ஏசி காரிலே பள்ளிக்கு போகும்போது பலநேரம் படிக்கட்டுகளே இல்லாத அரசுப்பேருதுக்காக எம் பிள்ளைகள் காத்துக் கிடக்கிறார்களேஉண்மையை சொல்லுங்கள்,இதற்கு உங்கள் உழைப்பு மட்டும்தான் காரணமா?எனில், நாங்கள் உழைக்கவே இல்லையா?நெஞ்சைத் தொட்டு நினைத்துப் பாருங்கள் இதில் “பிறப்பு” இல்லவே இல்லையா?உங்களுக்கு முக்கால் மணிநேரம் பாதிப்பு. எங்களுக்கு அடிப்படை உரிமைகளே இல்லாத நிலைஎங்களையும் பொதுமக்களாக ஏற்கும்வரை குறித்து வையுங்கள் இது தொடக்கம்தான்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 25, 2018 10:44

March 3, 2018

65/66 காக்கைச் சிறகினிலே மார்ச் 2018


வேலைக்குப் போவது, சம்பாதிப்பது, செலவு செய்வது என்ற சுழற்சியில் அந்த மனிதருக்கு அயற்சி வருகிறது. இவற்றைத் தொடர்வதற்காக அல்ல தான் பிறப்பெடுத்தது என்று உணர்கிறார். இந்தச் சமூகத்திற்கு எதையாவது உருப்படியாய்  செய்யவேண்டும் என்று படுகிறது. இருக்கிற வேலையை ராஜினாமா செய்கிறார். அதன்பொருட்டு தனது கைக்கு வந்த பணத்தோடு சேரவேண்டிய  புள்ளியின் இலக்கு ஏதுமின்றி ராஜஸ்தானின் ஏதோ ஒரு சலனமற்ற கிராமத்திற்கு வந்து சேர்கிறார். 
அவர் ஒரு ஆயுர்வேத மருத்துவரும்கூட.
அந்தப்பகுதியில் பெருவாரியான மக்கள் மாலைக்கண் நோயினால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். அதற்கான மருந்துகளைத் தருவித்து அவர்களுக்கு வழங்குகிறார்.  ஆனால்மருந்துகள் தமக்குத் தேவை இல்லை, தமக்கான பிரதானத் தேவை அவை அல்ல என்கிறார்கள். மாலைக்கண் நோயைவிட ஒரு பெரும் நோயினால் தாங்கள் பாதிக்கப் பட்டிருப்பதாகக் கூறிய அந்த மக்கள் ‘தாகம்’ என்ற கொடும் நோய் தங்களைத் தாக்கி இருப்பதாகவும் ‘தண்ணீர்’ தருமாறும் ஊனுருக உயிர்க் கசிய கையேந்தி நிற்கிறார்கள்.
அந்தப்பகுதி மக்கள் ஒருகுடம் குடி தண்ணீரைக் கொண்டு வருவதற்காக பத்துமணி நேரம் நடக்கவேண்டியுள்ள அவல நிலையைக் காண்கிறார். தினமும் குளிக்க வேண்டும் என்பது அவர்களது கனவாகவும் பண்டிகைக்குப் பண்டிகை அதாவது வருடத்திற்கு இரண்டுமுறை குளிப்பதுகூட பெரும் செல்வந்தர்களுக்கே வாய்க்கும் வாய்ப்பென்பதையும் உணர்கிறார்.
நிலங்கள்வறண்டு போனதால் விவசாய வேலையின்றி இளைஞர்களும் தொழிலாளிகளும் பிழைப்புக்காக எங்கெங்கோ புலம்பெயர்ந்து போயிருக்கும் அவலத்தையும் உணர்கிறார்.
ஏதேதோசெய்கிறார். தண்ணீரால் அந்தக் கிராமம் ஆசீர்வதிக்கப் படுகிறது.  தாகம் தீர்ந்தால் எப்படி இருக்கும் என்பதை அந்தப் பகுதியின் சின்னப் பிள்ளைகள் முதல்முறையாக உணர்ந்தார்கள். தீபாவளிக்குத் தீபாவளி குளித்துக் கொண்டிருந்த மக்கள் தினந்தோறும் குளிக்க ஆரம்பித்தனர். வயல்களும் விளைநிலங்களும் மீண்டும் உயிர் பெற்றன. புலம் பெயர்ந்து போயிருந்த இளைஞர்களும் விவசாயிகளும் ஊர் திரும்பினர்.
வறண்டு, வெடித்து, இளைஞர்களையும் விவசாயிகளையும் தொலைத்திருந்த கிராமம் கிராமமாக அந்த மனிதர் பயணித்தார். அவர் போகிற ஊரையெல்லாம் தண்ணீர் தந்து ஆசீர்வதித்தார். அவர் போகிற மண் எல்லாம் தமது குழந்தைகளை அள்ளி அணைத்தன.
அதிசயங்களைச்செய்வதற்கு அவர் ஒன்றும் அவதாரப் புருஷரெல்லாம் இல்லை. அவர் ஒரு சாதாரண மனிதர். எதைச் செய்ய வேண்டுமோ, நாம் எதைச் செய்யத் தவறி இருக்கிறோமோ அந்த எளியக் காரியங்களைத்தான் அந்த மனிதர் வெற்றிகரமாக செய்துகொண்டிருந்தார்.
வறண்டபூமிதேடி நடந்தார். கால்பட்ட இடமெல்லாம் நீர்பற்றிக் கொண்டது. எனவே ராஜேந்திரசிங் என்ற அந்த மனிதர் ‘தண்ணீர் மனிதர்’ என்று அழைக்கப் பட்டார்.
அவர்என்ன செய்தார் என்பதை இறுதியில் பார்ப்போம். அவர் மிகச் சமீபத்தில் தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார்.
தெற்காசியாமற்றும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட நாட்டு மக்கள் தண்ணீருக்காக வேறு நாடுகளுக்கு புலம் பெயர வேண்டிய அவசியம் மிகவும் சமீபித்திருப்பதாகக் கூறினார். அவர் கூறுவது உண்மை என்பதையே சமீபத்தில் நமக்கு கிடைக்கும் செய்திகளும் உறுதி செய்கின்றன.
தென்ஆப்பிரிக்காவின் ‘கேப்டவுன்’ நகரம் வரும் ஏப்ரல் பதினாறாம் நாளன்று (16.04.2018) ‘ZERO WATER CITY’ யாக மாறும் என்ற செய்திதான் அது. உண்மையும் அதுதான். அந்த்த் தேதியில் அந்த நகரம் சுத்தமாய் வறண்டு சொட்டுத் தண்ணீருமற்ற மண்ணாகத்தான் மாற இருந்தது. நினைத்துப் பார்க்கவே பயங்கரமாய் இருக்கிறது. சொட்டுத் தண்ணீரும் இல்லை என்றால் அந்த பூமி மனிதன் வாழத் தகுதியற்ற பூமியாக மாறிவிடுமே. மனிதன் வாழ்வதற்குத் தகுதியற்றதாக மாறும் எனில் இருக்கிற மனிதர்கள் என்ன செய்வது?. இப்படியாகக் குழம்பிக்கிடந்த மக்களுக்கு ஒரு தற்காலிக நல்ல சேதி வந்தது.
கேப்டவுனிற்கு அருகில்உள்ளது ‘கிரபவ்’ என்ற நகரம். அந்த மக்கள் பத்தாயிரம் கோடி லிட்டர் தண்ணீரை கேப்டவுனிற்கு வழங்க முன் வந்திருக்கின்றனர்.
எவ்வளவுதான்சிக்கனத்தோடு பயன்படுத்தினாலும் கேப்டவுனின் ஒரு நாளையத் தேவை நூறுகோடி லிட்டர். ஒரு நாளைக்கு நூறுகோடி லிட்டர் வேண்டும். பத்தாயிரம்கோடி லிட்டர் வருகிறது. எனில் அந்த்த் தண்ணீரைக் கொண்டு இன்னுமொரு நூறுநாட்களை அந்த மக்களால் சமாளிக்க முடியும்.
அதாவதுஏப்ரல் 16 வரவேண்டிய ஆபத்து நூறுநாட்கள் தள்ளிவைக்கப் பட்டிருக்கிறது. 
பத்துநாட்களுக்கு முன்னர் ‘THE HINDU” நாளிதழ் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது. குஜராத்தில் உள்ள நர்மதா அனையில் கடந்த பதினைந்து ஆண்டுகால சராசரி இருப்பு அளவில் ஏறத்தாழ 45 விழுக்காடு தண்ணீரே தற்போது உள்ளது என்றும் எனவே இந்தமுறை விதைத்தலை நிறுத்தி வைக்குமாறும் சர்தார் சரோவர் நர்மதா நிகாம் குஜராத் விவசாயிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. சௌராஷ்ட்ரா மற்றும் வடக்கு குஜராத் பகுதிக்கான  குடிநீர்த் தேவையை மட்டுமே இருக்கிற தண்ணீரைக் கொண்டு ஜமாலிக்க முடியும் என்றும் அது தெரிவித்துள்ளது.
ஆயிரம்தான்நமக்கு அவர்களோடு பிரச்சினை என்றாலும் பெங்களூரு நகரமும் ஆக விரைவில் ‘ZERO WATER CITY’ ஆக மாறக்கூடுமென்கிற செய்தியை நம்மால் ரசிக்க முடியாது.   
தமிழ்நாட்டில் ஒரு குடம் தண்ணீருக்காக பத்துக் கிலோமீட்டர் கால்கடுக்க நடக்கவேண்டியுள்ளது என்பதை நம்மால் மறுக்கவே இயலாது.அதுவும் காவேரியில் நமது உரிமையில் ஏறத்தாழ 15 டிஎம்சி தண்ணீரை உச்சநீதி மன்றம் மறுத்திருக்கிற நிலையில் நமது அவலத்தை ஒரு தனி நூலில்கூட அடக்கிவிட முடியாது என்பதே உண்மை.
’மூன்றாவது உலகப்போர் என்று ஒன்று நிகழுமானால் அது நிச்சயமாகத் தண்ணீருக்காகத்தான் இருக்கும்’ என்று கவிஞர் வைரமுத்து ஒருமுறை கூறியது எவ்வளவு தீர்க்கதரிசனம் என்பதை இப்போது உணர முடிகிறது.
தமிழ்நாட்டில் தலைவிரித்தாடும் குடிநீர்ப்பஞ்சம் எத்தகையது என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்திருக்கிறோம். அதை எப்படி எதிர்கொள்வது என்பதே நமது பிரதானக் கவலை என்பதும் அதற்கு நமக்கு உரிய பங்கை காவிரியில் போராடிப் பெறுவதும் ஒன்று என்பதையும் உணர்ந்தே இருக்கிறோம்.
ஆனால்இந்தப் பூமியின் எந்த ஒரு பகுதி சுத்தமாய் நீரற்று வறண்டு போனாலும் அதற்காகக் கவலைப்படும் மனிதாபிமானம் நமக்கு உண்டு என்பதை உண்மைதான். ஆனால் அதைவிடவும் மிக முக்கியமான ஒன்று உண்டு. உலகின் எந்த ஒரு மூலை நீரற்று வறண்டாலும் அது நம்மையும் பாதிக்கவே செய்யும்.
ஏறத்தாழ50 நாடுகளில் இருந்து மக்கள் தண்ணீருக்காக புலம்பெயர வேண்டிய ஆபத்து சமீபத்தில் இருக்கிறது என்று ராஜேந்திரசிங் கூறுகிறார். மூன்றாவது உலகப்போர் என்று ஒன்று நிகழுமானால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்ற வைரமுத்துவின் கூற்று உண்மையாவதற்குரிய அறிகுறியின் துவக்கப் புள்ளியாக இதைப் பார்க்காவிட்டால் நாம் வீழ்ந்து அழிந்து போவோம்.
வேலைஇன்மை, உள்நாட்டுப் பிரச்சினைகள் போன்ற காரணங்களால் மக்கள் புலம் பெயர்வது தவிர்க்கமுடியாத வாடிக்கை. ஆனால் குடிதண்ணீருக்காக மக்கள் அயல்நாடுகளுக்கு புலம்பெயர வேண்டிய அவலத்தை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.
வேலைவாய்ப்பின் பொருட்டானபுலம்பெயர்தல்என்பது இருவழிப் பிரயோகம். இவனுக்கு வேலை வேண்டும், அவனுக்கு வேலைக்கு ஆள் வேண்டும். இவன் போகாவிட்டால் அவனுக்கு வேலை கிடைக்காது என்ற நிலையில் இது அந்த மண்ணில் வேலைக்கு ஆட்கள் தயாராகும் வரையில் சாத்தியமானது.
மற்றகாரணங்களின் பொருட்டு புலம்பெயர்தல் மிகவும் சிக்கலானது. இவனது வருகை தனது மண்ணின் நீராதாரத்தையும் அழித்துப் போடுமோ என்ற அச்சமும் எப்படி இவனை பராமரிப்பது என்ற கவலையும் அவனுக்குள் எழுவது இயற்கை.
பலநாடுகள்புலம் பெயர்தலை அனுமதிப்பதில்லை அதுவும் ட்ரம்ப் வந்த பிறகு இது வலுப்பெற்றுள்ளது.
எண்ணெய்க்காகப் போர்தண்ணீருக்காகப்போர் என்பதும் சாத்தியமே.
ராஜேந்திரசிங் செய்தஎளிய காரியங்களான,
1)   மறைந்துபோனநீர்நிலைகளை, சிறுசிறு ஓடைகளைக் கண்டடைந்து உயிர்ப்பித்தல்2)   தடுப்பணைகளைஉருவாக்குதல்3)   மழிபெறுவதற்கான இயற்கைவழியிலான ஏற்பாடுகளைச் செய்தல்போன்றவற்றைசெய்வோம்.
காவிரியில்நமது பங்கை சமரசமற்றுப் போராடிப் பெறுவது நமது உரிமை. ராஜேந்திரசிங் செயத்தைப் பின்பற்றுவது இன்னொரு உலகப்போரைத் தடுப்பதற்கான நமது கடமை.   

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 03, 2018 18:13

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.