இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 87
August 27, 2018
குழந்தைகளையும் பஞ்சு மிட்டாயையும் சேர்த்து வைக்க மெனக்கெடும் கவிதைகள்

யாழிசை மணிவண்ணனின் “பஞ்சு மிட்டாய் பூக்கும் மரம்” கவிதை நூலை முன் வைத்து”மழையின் தாளம் கேட்குது
மனிதா மனிதா
வெளியே வா”என்ற பாடலை கலை இரவு மேடைகளில் கேட்கும்போதெல்லாம் மனசு சிலிர்த்து போகும்.மழையை யார் எப்படி எழுதினாலும் நனைந்து பழக்கப் பட்டிருக்கிறோம்.ஈரமே அதன் ஜீவன் என்பதால் எந்த இசைக் கோர்வையைக் காட்டிலும் மழையின் சத்தம் உன்னதமானது.எவ்வளவோ வாசித்து விட்டோம் மழை குறித்தும் மழையின் இரைச்சல் குறித்தும்.”துளிகள் உடையும் சப்தம்”என்று மழை விழும் ஓசையை யாழிசை மணிவண்ணன்சொல்வது புதிது மட்டும் அல்ல. அது நுட்பத்தின் உச்சம்ஆஹா, துளிகள் உடைவதால் உண்டாகும் மழையின் வலி சத்தியமாய் தமிழுக்கு புதுசு.“தெளிந்த குளத்தில் தெரிகிறது
ஒரு வெளிறிய வானம்
அந்தப் பறவையின் பெயர் தவளை”ஒரு காட்சியை அப்படியே அழகுறப் பதிவது என்பதுகூட ஹைகூவிற்கான ஒரு கூறு என்று கூறப்படுகிறது. பாருங்களேன் எப்படி ஒரு காட்சிப் பதிவு.தெளிவான குளமாம், அதற்குள் தெரிவது வெளிறிய வானமாம், தவளை பறவையாம். உள்ளே இருப்பது வானமெனில் அங்கே இருக்கிற தவளை பறவை இல்லாமல் வேறு என்னவாம்.அவன் அறந்தாங்கியில் இருந்தால் ஒரு எட்டு ஓடிப்போய் முத்தம் இட்டுவிட்டு ஓடி வந்துவிடலாம்.இந்தக் கவிதையில் மீட்டர் கூடலாம் குறையலாம். அதைவிடுத்துப் பார்த்தால் நேர்த்தியான ஹைகூ இது.குழந்தைகளைத் தேடி
ஊருக்குள் நுழைகிறது
பஞ்சுமிட்டாய் பூக்கும் மரம்என்கிறான். யார் யாரைத் தேடுவது? பஞ்சு மிட்டாய் குழந்தைகளையா? அல்லது குழந்தைகள் பஞ்சு மிட்டாயையா? இவன் யாரைக் கொண்டாடுகிறான்? குழந்தைகளையா அல்லது பஞ்சு மிட்டாயையா? எதற்கு இவ்வளவு மெனக்கெடுகிறான் இந்தப் பிள்ளை?குழந்தைகளையும் பஞ்சு மிட்டாயையும் சேர்த்து வைக்க மெனக்கெடுகிறது இவன் கவிதை.குழந்தைகளுக்காக பஞ்சு மிட்டாய் மரத்தை சுமப்பவனை வியாபாரி என்கிறோம். இவனோ கவிஞன் என்கிறான்.ஒரு கவிதை இதைவிட என்ன செய்துவிடும்? அல்லது இதைவிட என்ன செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்?பனை வெல்லமும்
பொடி செய்த சீரகமும்
கடல் கடந்து அனுப்பியிருக்கிறாள்
இருமலுக்கு நன்றிஎன்கிறான். சன்னமாய் அழுதுவிட்டேன். நாலு வரிகளுக்குள் ஒரு குறும்படத்தை விரிக்கிற வித்தை இருக்கிறது இவனிடம்.சிங்கப்பூரில் இருந்து புதுக்கோட்டைக்கு ஒருவன் அலை பேசுகிறான். பேச்சினூடே இருமல். பதறிப் போகிறாள். அழுகிறாள். மருத்துவ மனைக்கு அழைத்துப்போகக்கூட ஆள் இல்லையே. ஒரு கஷாயம் வைத்துக் கொடுக்கவும் வாய்ப்பில்லையே?மருந்துப் பொடி செய்கிறாள். விடுப்பில் அங்கிருந்து வந்திருப்பவர்களைத் தேடி பிடிக்கிறாள். பொடியை அனுப்புகிறாள். இணையாள் கைபட்ட பொடி வந்ததும் பூரிக்கிறான். ஊருக்கு வேண்டுமானால் அது மருந்துப் பொடி. அவனுக்கு அந்த டப்பி நிறைய அவளது அன்பு.பெற்றோர் பெண்டு பிள்ளைகளைப் பிரிந்து சம்பாதிப்பதற்காக புலம் பெயர்ந்த இளைஞனின் வலியை எவ்வளவு லகுவாக கவிதை ஆக்கியிருக்கிறான்.ஆண்டபரம்பரையின் பிணத்தில்
அடுக்கியிருந்த சாண விரட்டிகளில்
ஆதி திராவிடனின் கை ரேகைகள்சாணி மிதிப்பதைப்போல் சாதியை மிதிக்கிறது இந்தக் கவிதைகிழிந்த சுவரினை
தையலிட்டிருந்த்து
எறும்புச் சாரைஎன்கிறான்.சில இடங்களில் செதுக்கி இருக்கலாம் என்பது தவிர கவிதையை மட்டுமே எழுதியிருக்கிறான். சாயல்களற்ற கவிதைகளின் தொகுப்பு. சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.“இத்தொகுப்பில் இருளை எரிக்கும் கொண்டு வந்திருக்கிறார் யாழிசை. நமது விளக்குகளில் ஏந்திக் கொள்வோம்” என்கிறார் கரிகாலன்.ஏந்திக் கொண்டேன்.#சாமங்கவிய 36 நிமிஷங்கள்
27.08.2018
Published on August 27, 2018 20:16
26.08.2018
அலைபேசியின் அழைப்பொலி கேட்டு எடுத்துப் பார்த்தால் மெசஞ்சரில் நா. விச்வநாதன் அழைத்துக் கொண்டிருந்தார். ஒருவிதமான குற்ற உணர்வு அப்பிக்கொண்டது. எடுப்பதா? அல்லது கொஞ்சம் பேசுவதற்குரிய தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பிறகு நாமே அழைத்து பேசிவிடலாமா என்று குழம்பிப் போனேன்.காரணம் மூன்று நாட்களுக்கு முன்னமே அவர் மெசஞ்சரில்“எட்வின், உங்களோடு பேச வேண்டும். என்னிடம் உங்கள் எண் இல்லை. நிச்சயமாக உங்களிடமும் என்னுடைய எண் இருக்காது. என்னுடைய எண் தந்திருக்கிறேன். அவசியம் பேசுங்கள்” என்றிருந்தார்.மூன்று நாட்களாய் முடியாமல் போனது. அந்தக் குற்ற உணர்வு ஒருபுறம் தடுத்தாலும் எனக்குள்ளிருந்த நாவியின் குரலுக்கான தாகம் அலைபேசியை காதுக்கு இழுத்துப் போனது.வாரம் இரண்டு முறையேனும் மணிக்கணக்கில் கேட்ட குரல். மாதம் ஒன்று அல்லது இரண்டு கூட்டங்கள் தஞ்சையில் இருக்கும் எனக்கு அப்போதெல்லாம்.கேட்டபோதெல்லாம் Kaakkai Cirakinile கு எழுதிக் கொடுத்தார்.‘எட்வின்’ என்றதுமே கண்கள் கசிய ஆரம்பித்துவிட்டன. “தோழர், எப்படி இருக்கீங்க?” என்று கேட்கிறேன்.அதை பிறகு சொல்வதாகவும், பேச வந்ததை முதலில் பேசிவிடுவதாகவும் கூறுகிறார். விஷயம் ரொம்ப எளிமையானது.தஞ்சையில் ‘வாசகர் வட்டம்’ ஆரம்பித்திருக்கிறார்கள். அடுத்த கூட்டத்தில் “கறிசோறு” நாவல் குறித்து உரையாற்ற யாரை அழைப்பது என்று பேசிக்கொண்டிருந்தபோது யாரோ ஒரு தம்பி “கறிசோறு” குறித்து எட்வின் பேசிக் கேட்டால் நல்லா இருக்கும் என்று சொல்லியிருக்கிறான். லைனில் வந்துவிட்டார்.”எட்வின், எனக்குத் தோணல, அந்தப் பையன் சொன்னதும் உங்களத் தேடினேன்” என்று அவர் சொல்ல சொல்ல “நம்ம யாருமே கண்டுக்கறதில்லயே என்கிற வழமையான நமது ஆதங்கம் காற்றிலே கறைந்து போனது. ”நாமளும் ஆளுதாண்டா” என்கிற திமிர் மீண்டும் ஒட்டிக் கொண்டது.பொதுவாவே தஞ்சையில் பேசுவதென்றால் அலாதியான சுகம். ஒத்துக் கொண்டிருக்கிறேன். அநேகமாக செப்டம்பர் ஒன்பது அன்று தஞ்சையில் உரையாற்றுகிறேன்.இனிதான் முக்கியமே.இப்ப சொல்லுங்க தோழர், “எப்படி இருக்கீங்க? ஊர் எப்படி இருக்கு?””நானும் நல்லா இருக்கேன். ஊரும் நல்லா இருக்கு.என்ன ஊரும் நானும் ஒட்டாம இருக்கோம். கிட்டத் தட்ட ஊர்விலக்கம்தான்”அவர் விரும்பாத ஒரு விஷயத்தை, இத்தனை காலம் பொதுவெளியில் அவர் குறித்து சொல்லாத ஒரு விஷயத்தை இப்போது வைக்கிறேன். அவர் பிறப்பால் ஒரு பார்ப்பணர். எப்போதும் அக்ரஹாரத்திற்கு எதிராகவே நிற்பவர். சனாதனம் மிதிப்பவர். இடைசாதி அரசியலையும் மூர்க்கமாய் எதிர்ப்பவர். ஏறத்தாழ எனக்குத் தெரிய எந்தக் காலத்திலும் ஊர் அவரை ஏற்றதே இல்லை. எனவே சிரித்துக் கொண்டே என்ன விஷயம்? என்கிறேன்ஒன்றும் இல்லை. 150 தலித்துகளை அழைத்துக் கொண்டு கோவிலுக்குப் போயிருக்கிறார்.. ஜீவாவும் (Jeeva Kumar) இன்னொரு பையனும் இறுதிவரை கூட நின்றதாகக் கூறினார். ஜீவகுமார் இறுதிவரை கூட நின்றார் என்பதைக் கேட்டதும் ஒருவிதமான திமிர் ஒட்டிக் கொண்டது.இதை செய்தால் ஊர் விலக்கி வைக்காமல் கொண்டு கொடுக்கவா செய்யும்.சிரித்தேன்.”புரயோஜனம் உண்டா?”“இல்லாம, வெள்ளி வெள்ளி எழுபது எண்பது பேர் நம்ம பெண்கள் கோயிலுக்குள்ள போய் சாமி கும்பிட்டுட்டு வராங்க”அவர் நம்ம பெண்கள் என்று சொன்னது தலித் பெண்களை. அவர் நாத்திகர்.செப்டம்பர் ஒன்பது கலகக்காரர் நாவியைப் பார்க்க ஷாலோடு தஞ்சைக்கு போகிறேன்#சாமங்கவிய ஒரு மணி ஐந்து நிமிடங்கள்
26.08.2018
26.08.2018
Published on August 27, 2018 01:28
August 25, 2018
ஒரு பள்ளியை மூடுவதென்று முடிவெடுத்துவிட்டார்கள் என்றால்…
ஒரு குறிப்பிட்ட அரசுப் பள்ளியை இழுத்து மூடவேண்டும் என்றுமுடிவெடுத்து விடுகிறார்கள். மூடுவதற்குரிய காரணங்களைச் சொல்லாமல் அதை அவர்களால் செய்ய இயலாது. எனவே அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்ற ஒரு பட்டியலைத் தயாரிக்க அமர்கிறார்கள்.
காரணங்களைத் தேடி அவர்கள் மண்டையைப் போட்டு குழப்பிக்கொள்ளத் தேவை இல்லை.
தேநீர்க் கடைக்காரர் கலியனிடம் சர்க்கரை கம்மியாய் ஒரு கோப்பை தேநீரை வாங்கிப் பருகிக் கொண்டே அன்றைய தினசரியை அவர்கள் மேம்போக்காக மேயத் தொடங்குகிறார்கள்.
‘மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் ஏதோ ஒரு ஊரின் அரசுப் பள்ளி ஒன்று மூடப் பட்டதாக ஒரு செய்தி அதில் வந்திருக்கிறது. இப்போது அவர்களுக்கு தெளிவாகப் புரிந்துவிடும், ஒரு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தால் அந்தப் பள்ளியை மூடிவிடலாம்.
என்ன சோதனை என்றால் அவர்கள் மூட வேண்டும் என்று ஆசைப்படுகிற பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு குறைவில்லை.
கொஞ்சம் யோசிக்கிறார்கள். மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டால் பள்ளியைப் பூட்டலாம் என்றால் மாணவர்களை பள்ளிக்கு வரவிடாமல் தடுத்துவிட்டாலும் பள்ளியை பூட்டமுடியும் என்று புரிந்து கொள்கிறார்கள்.
அவர்களிடம் அதிகாரம், ஆள்பலம், மற்றும் பணபலம், இருக்கிறது. இவற்றைப் பயன்படுத்தி பள்ளிக்கு குழந்தைகளை வரவிடாமல் தடுக்க முடியுமா என்று யோசிக்கிறார்கள்.
1) பள்ளியின் உள்கட்டமைப்பினை (INFRASTRUCTURE) சிதைப்பதன் மூலம்2) மிகவும் அத்தியாவசிமான பராமரிப்புகளையும் மராமத்துகளையும்கூட செய்யாமல் விடுவது3) தேவையான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை நியமிக்காமல் விடுவது4) குழந்தைகள் கடந்துவரும் சின்னச் சின்னக் காட்டாறுகளில் பாலங்களைக் கட்டாமல் விடுவது அல்லது மராமத்து பார்க்காமல் விடுவது5) பள்ளி சரியில்லை, பாதுகாப்பானதாக இல்லை என்ற புரளியை மக்கள் நம்புகிறமாதிரி கிளப்பிவிடுவது.6) பிள்ளை பிடிக்கிறவர்கள் நடமாடுவதாய் புரளிகளை கிளப்புவது7) அடியாட்களை களமிறக்கி பிள்ளைகளை வர விடாமல் தடுப்பது
பள்ளியின் உள்கட்டமைப்பை சேதப்படுத்துவது
பள்ளி வளாகத்திற்குள் இரவு வேளைகளில் நுழைந்து கூட்டமாக மது அருந்திவிட்டு காலி பாட்டில்களையும் இதரக் குப்பைகளையும் அங்கேயே போட்டு விட்டு வந்துவிடுவது.
சீட்டு விளையாடிவிட்டு சீட்டுக் கட்டுகளையும் கொண்டு சென்ற தின்பண்டங்களின் ஈவையும் காகிதக் குப்பைகளையும் அங்கேயே போட்டுவிட்டு வருவது.
சுவற்றில் அசிங்க அசிங்கமாக கிறுக்கி வைத்துவிட்டு வருவது
பள்ளியில் அங்கங்கே அசுத்தம் செய்துவிட்டு வருவது
கூரையை, மேசை, டெஸ்க் மின்விசிறி உள்ளிட்ட தளவாடப் பொருட்களை சேதப்படுத்திவிட்டு வருதல் போன்றவை ஆகும்.
இவற்றின் மூலம் பள்ளிக்கு வரும் குழந்தைகளின் முகச்சுளிப்பைத் துவங்கி வைப்பது. இவை தொடருகிற பொழுது பள்ளிப் பிள்ளைகளுக்கு பள்ளியின்மேல் ஒருவிதமான அருவெறுப்பை ஏற்படச் செய்வது என்று தொடங்கி அந்தப் பள்ளி படிப்பதற்கு உகந்த இடமல்ல என்கிற தோற்றத்தை ஏற்படுத்துவது. இவற்றின் மூலம் இந்தப் பள்ளி நம் பிள்ளைகளுக்கு ஏற்ற பள்ளி இல்லை என்பதை பெற்றோர்களிடம் ஏற்படுத்துவது. கொஞ்சம் கடன் பட்டாலும் பரவாயில்லை நல்ல தனியார் பள்ளிகளில் தமது குழந்தைகளை சேர்த்துவிட வேண்டும் என்ற மனநிலைக்கு அவர்களை தயார் படுத்துவது.
உரிய பராமரிப்புகளையும் மராமத்துகளையும் மறுப்பது
பள்ளியை அன்றாடம் சுத்தம் செய்வது, அறைகளில் சேர்ந்துள்ள ஒட்டடைகளை எடுப்பது, தண்ணீர்த் தொட்டிகளை உரிய காலத்திற்குள் தூய்மைப் படுத்துவது, கழிவறைகளை சுத்தம் செய்து உரிய திராவகங்களை தெளித்து சுகாதாரம் பேணுவது, பள்ளி வளாகத்தில் புதர் அண்டாமல் பார்த்துக் கொள்வது, மின் கசிவு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது போன்றவை பள்ளியின் அன்றாடப் பராமரிப்புப் பணிகள் ஆகும்.
மின்தடையோ, மின்கசிவோ ஏற்பட்டால் அதை உடனே சரி செய்வது, நீர் இறைக்கும் மின் மோட்டார்கள் பழுதுபட்டால் அவற்றை உடனே பழுதுநீக்கி சரி செய்வது, தரையில் கட்டிடங்களில் ஏதேனும் சேதாரம் ஏற்படும்போது அதை சரி செய்வது, மேசைகள், நாற்காளிகள், பெஞ்ச்சுகள், டெஸ்குகள் போன்றவற்றில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அவற்றை சரி செய்வது ஆகியவை மராமத்துப் பணிகள் ஆகும்.
இவற்றை செய்ய மறுப்பது அல்லது தமக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி இவற்றை செய்ய விடாமல் தடுப்பது.
இதன்மூலம் பெற்றோர்களை தம் பிள்ளைகளை வேறு தனியார் பள்ளிகளை நோக்கி நகர்த்துகிற மனநிலைக்கு பெற்றோர்களைத் தள்ளுவது.
ஆசிரியர் மற்றும் ஊழியர் பற்றாக்குறையை ஏற்படுத்துவது
ஆசிரியர் மற்றும் ஊழியர்களிடம் பிரச்சினைகளை ஏற்படுத்தி அவர்களை நிர்வாக மாறுதல் மூலம் வெளியிடங்களுக்கு அனுப்பிவிட்டு அந்த இடங்களை நிரப்பாமல் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி பார்த்துக் கொள்வது. ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கு யாரேனும் வருவதற்கு முயற்சி செய்தால் வரவிடாமல் பார்த்துக் கொள்வது.
போதுமான ஆசிரியர்களும் ஊழியர்களும் இல்லை என்கிற நிலையில் தமது பிள்ளைகளை தனியார் பள்ளிகளுக்கு கொண்டு செல்லும் நிர்ப்பந்தத்தை பெற்றோருக்கு ஏற்படுத்துவது.
பாதுகாப்பின்மை குறித்து வதந்திகளைப் பரப்புதல்
மேலே விவரித்தவைபோக பள்ளிக்கு குழந்தைகள் வரும் காட்டாறு பாலங்களை சேதப் படுத்துவது அல்லது அங்கு அமர்ந்து சாராயம் அடித்துக் கொண்டு குழந்தைகளுக்கு அச்சத்தைக் கொடுப்பது.
பாதுகாப்பு குறித்த அச்சத்தை, பிள்ளை பிடிக்கிறவர்கள் அலைகிறார்கள் என்ற அச்சத்தை வதந்திகளின்மூலம் பரப்புதல்.
பள்ளிக்கு குழந்தைகள் வரும் வழியில் அவர்களை மறிப்பது அச்சமூட்டுவது போன்ற காரியங்களை செய்தல்.
ஒரு அரசுப் பள்ளியை மூடுவது என்று செல்வாக்குள்ளவர்கள் முடிவெடுத்து விட்டால் வழக்கமாக மேலே விவரிக்கப்பட்ட விஷயங்களைக் கையில் எடுப்பார்கள்.
இதை இவர்கள்தான் செய்கிறார்கள் என்று யாரும் அறியாதபடி பார்த்துக் கொள்வார்கள். சிலநேரங்களில் எந்தவிதமான கவனக்குவிப்பையும் கடந்து அவர்களது அடையாளம் வெளிப்பட்டால் பலநேரங்களில் அதுகுறித்து எந்தவிதமான வெட்கமும் இன்றி வலம் வருவார்கள்.
இவர்கள் இவ்வளவும் செய்த பிறகும் பிள்ளைகள் பள்ளிக்கு வருவது தொடர்ந்தால் என்ன செய்வது என்று இவர்களுக்கு கீழ்வரும் சம்பவம் சொல்லித்தருகிறது.
கும்பகோணம் அருகே நீலத்தநல்லூர் இருக்கிறது. அங்கு ஒரு அரசுப் பள்ளி இருக்கிறது. இந்தப் பள்ளியில் திருநல்லூர், பறட்டை, தேவனாஞ்சேரி, ஊருடையான்நத்தம், அந்தியூர், கழுக்காணிவட்டம், இணைபிரியாள்வட்டம் போன்ற ஊர்களில் இருந்து குழந்தைகள் வந்து படிக்கிறார்கள்.
கும்பகோணத்திலிருந்து காவற்கூடம் வரைக்குமான அரசுப் பேருந்து நீலத்தநல்லூர் வழியாக இயக்கப் படுகிறது. இந்தப் பேருந்து பிற்பகல் 3.50 மணி வாக்கில் நீலத்தநல்லூரைக் கடக்கிறது.
நீலத்தநல்லூர் அரசுப்பள்ளி சரியாக 4.10 மணிக்கு முடிகிறது. இதற்கு அடுத்த பேருந்து இரண்டுமணி நேரம் கழித்தே நீலத்தநல்லூரைக் கடக்கிறது.
ஆக, 4.10 கு பள்ளி முடிந்த மாணவர்கள் ஏறத்தாழ இரண்டுமணி நேரம் பேருந்திற்காக காத்திருக்க வேண்டியுள்ளது என்ற செய்தியை 10.08.2018 ஆம் நாளிட்ட “இந்து தமிழ்” கூறுகிறது.
இதைவிட முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது.மாலை ஆறுமணிக்கு பேருந்து ஏறும் அந்தக் குழந்தைகள் வீடுபோய் சேர்வதற்கு எப்படியும் ஏழு அல்லது ஏழரை ஆகிவிடும்.
அந்தக் குழந்தைகளுக்கான மாலை நேரத்துப் பேருந்துப் பிரச்சினையை மட்டுமே இங்கு பார்த்தோம். காலையில் பள்ளிக்கு வரும்போதும் இத்தகைய பிரச்சினைகள் அந்தக் குழந்தைகளுக்கோ அல்லது வேறு பள்ளி அல்லது பள்ளிகளைச் சார்ந்த குழந்தைகளுக்கோ இருக்கக் கூடும்.
உதாரணமாக பள்ளி 9.30 கு துவங்குகிறது என்று கொள்வோம். பெருந்து 7.30 கு அந்த ஊரைக் கடக்கிறது. அடுத்தப் பேருந்து 10 மணிக்கு கடக்கிறது என்று கொள்வோம். ஒன்று குழந்தைகள் பள்ளிக்கு இரண்டு மணி நேரம் முன்னமே வந்து காத்திருக்க வேண்டும். அல்லது தாமதமாக வர வேண்டும். கூலித் தொழிலாளிகளின் பிள்ளைகள் பட்டிணியோடு வந்து காத்திருக்க வேண்டும்.
சில குழந்தைகளுக்கு இரண்டு நேரமும் பிரச்சினையாகி விடும்.
இவை அந்தக் குழந்தைகளை ஏதோ ஒரு புள்ளியில் இடைநிற்கச் செய்துவிடும்.
இப்போது கொஞ்சம் யோசிப்போம்.
பள்ளி நேரத்திற்கு வெகு முன்னமோ அல்லது பள்ளிவிட்டு வெகுநேரம் கழித்தோ அந்த ஊருக்குப் பேருந்து வரும் எனில் அந்தக் குழந்தைகள் இடைநிற்க ஏதுவாகும்.
கொஞ்சம் மாற்றி யோசித்தால்,
அந்தப் பள்ளியை மூடவேண்டும் என்று நினைப்பவர்கள் பேருந்துகளை முன்னமோ அல்லது பின்னரோ இயக்க செய்துவிட்டால்கூட பள்ளிக்கு குழந்தைகளின் வரத்து குறைந்துவிடும். இது ஏதோ ஒரு புள்ளியில் அந்தப் பள்ளி மூடப்படுவதற்கான காரணமாக அமைந்துவிடும்.
இவ்வளவு எதற்கு என்று கேட்கத் தோன்றும்.
பள்ளிநேரத்திற்கு ஏற்ப அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும். பொதுப் பள்ளிகள் இருக்கும் இடத்திற்கு பள்ளி தொடங்குவதற்கும் முடிவதற்கும் ஏற்றாற்போல் அரசுப் பேருந்துகளை இயக்கு என்ற கோரிக்கை அனைத்து அமைப்புகளின் அனைத்து மட்டங்களிலுமான கோரிக்கையாக இருக்க வேண்டும்.
நன்றி: தீக்கதிர் 26.08.2018
Published on August 25, 2018 20:49
ஞானத்தில் யாமொன்றும் ஏழைகளும் அல்ல

ஞானம் எமக்கு புதிதுமல்ல
ஞானத்தில் யாமொன்றும் ஏழைகளும் அல்ல
எல்லோருக்கும் போலவே எமெக்கும் இருக்கு ஞானம்.
வெளிப்படுத்த இயலாமல் அங்கங்கே நீளும் தடைகளை உடைப்பதில்தான் சிக்கலே எமக்கு.
வாழ்த்துக்கள் தம்பி முனைவர் திருமா....
Published on August 25, 2018 11:11
August 20, 2018
நீட்பயிற்சி முழுச்சோறு, பாடங்கள் ஊறுகாய்த் தொக்கு
தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் "PROCEEDIGS OF THE DMS" என்றொரு சுற்றறிக்கையினை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியிருக்கிறது.”சிறப்புக் கட்டணம்” தவிர வேறு கட்டணம் எதேனும் வசூலிக்கப்பட்டால் அந்த மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் திரும்பப் பெறப்படுவதுடன் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த சுற்றறிக்கை மிகக் கடுமையாக எச்சரிக்கிறது.வாங்குகிற கட்டணத்திற்கு முறையான ரசீதுகளை நிறைய பள்ளிகள் தருவதில்லை. பல பள்ளிகளில் கட்டணம் என்ற பெயரில் வாங்கப்படுகிற முழுப் பணத்திற்கும் ரசீது தருவதில்லை. அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மட்டும் ரசீது தருவார்கள்.ஆனாலும் பெரும்பான்மை பெற்றோர்கள் இந்தக் கொள்ளைக்கு எதிராக சன்னமாகக்கூட தங்களது எதிர்ப்புகளைப் பொது வெளியில் வைப்பதில்லை.
இந்தக் கொள்ளைக்கு எதிராக பெற்றோர்களை களமேக விடாமல் தடுக்கும் சில காரணங்கள்,1) பள்ளியில் இடம் கிடைத்தால் போதும் என்கிற மனநிலை
2) தாம் இதுகுறித்து ஏதேனும் கேட்கப் போய் கேட்டால் அது தம் குழந்தைக்கு பிரச்சினைகளைக் கொண்டு வந்து சேர்க்குமோ என்ற அச்சம்
3) தலையிட்டு நியாயம் கோரி போராடுவதற்கான காலம் தம் கைவசத்தில் இல்லாதது
4) சிலருக்கு பிப்ரவரி மாதம் வாக்கில் பள்ளிகளில் இருந்து பெறப்படும் ரசீது அவர்களது வருமான வரியைக் குறைக்க உதவுகிறதுஆனால் இவை எல்லாம் வழமைதான். இதற்காகவெல்லாம் பள்ளிக் கல்வி இயக்குநரகம் இந்த சுற்றறிக்கையை அனுப்பியிருக்கும் என்று நாம் நம்பவில்லை. இது தெளிவாக ஏதோ ஒன்றின் பெயரால் மெட்ரிக் பள்ளிகள் வசூலிக்கும் கட்டணத்திற்கு எதிராக இருப்பதாகவே தோன்றுகிறது.“schools should not collect any fee other than the tuition fee under the guise of conducting special coaching classes” என்று அந்த அறிக்கை தெளிவுபடக் கூறுகிறது.’சிறப்பு பயிற்சி வகுப்புகள்’ என்பது நிச்சயமாக நீட் தேர்விற்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளையே குறிக்கும் என்பதில் நமக்கு சந்தேகம் இல்லை.’சிறப்பு பயிற்சி வகுப்பு’ என்ற முகமூடி அணிந்துகொண்டு வேறு எந்த வகையான கட்டணத்தையும் பள்ளிகள் வசூலிக்கக் கூடாது என்கிறது அந்த அறிக்கை. சிறப்பு பயிற்சி என்ற முகமூடியோடு வேறு வகுப்புகளை நடத்தக்கூடாது என்பது அந்தச் சுற்றறிக்கையின் அடுத்தப் பகுதியில் இருக்கிறது. எனில், இந்த முகமூடி பயிற்சியை விடவும் வசூலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை அரசு உணர்ந்துள்ளது என்பதோடு அது குறித்து பள்ளிகளை எச்சரிக்கவும் செய்கிறது.“பள்ளி நேரங்களில் வேறு எந்த வகையான பயிற்சிகளையும் மேற்கொள்ளக் கூடாது” என்றும் அந்த அறிக்கை தெளிவு படுத்துகிறது.எனில், பள்ளி நேரங்களில் பல பள்ளிகள் வேறு வகையான பயிற்சிகளை மேற்கொள்கின்றன என்பது தெளிவாகிறது. எனில்,1) எந்த வகையான பள்ளிகள் வேறுவகையான பயிற்சிகளை குழந்தைகளுக்கு வழங்குகின்றன?
2) என்னென்ன பயிற்சிகளை அவை குழந்தைகளுக்கு வழங்குகின்றன?நிச்சயமாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இத்தகைய பயிற்சிகளை பள்ளி வேலைநேரத்தில் வழங்குவதில்லை. வழங்குவதில்லை என்பதைவிட வழங்க இயலாது என்பதே உண்மை. சுயநிதிப் பள்ளிகளில்தான் இதுமாதிரியான அத்துமீறல்கள் நிகழ்வதற்கு வாய்ப்புண்டு.கராத்தே, யோகா, இசை, நடனம், தப்பாட்டம் ஓவியம் உள்ளிட்டு எத்தனையோ வகையான பயிற்சிகளை பொதுவாக பள்ளிகள் தமது பிள்ளைகளுக்கு வழங்குகின்றன. இவை பெரும்பாலும் மாலை, காலை அல்லது விடுமுறை நாட்களில் நடைபெறும். இதற்காக தனியாக கட்டணம் வசூலிக்கப் படுவதும் உண்டு. தேறும் தொகையில் கற்றுத் தரும் பயிற்சியாளர்களுக்கு வழங்கியதுபோக பள்ளிகளுக்கும் ஒதுங்கும். பல நேரங்களில் ஒதுங்கும் தொகை மிகக் கணிசமாகவும் இருக்கும். பல பள்ளிகளில் பள்ளி நிர்வாகம் கைவிட்டு பயிற்சி கொடுப்பவர்களுக்கு தரவேண்டிய சூழலும் ஏற்படுவது உண்டு.இந்த வட்டத்திற்குள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் வந்துவிடும். ஆனால் அரசின் சுற்றறிக்கை கூறும் பயிற்சிகள் இவை அல்ல என்பதை அறிக்கையை போகிற போக்கில் வாசித்தாலே புரியும்.மேற்சொன்ன பயிற்சிகளுக்கு ஒரு குழந்தைக்கு ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 200 ரூபாய்க்குமேல் வசூலிக்க முடியாது. இந்தத் தொகைக்காகவெல்லாம் மேற்சொன்ன சுற்றறிக்கையை இயக்குநரகம் அனுப்புவதற்கான வாய்ப்பில்லை. எனில், அந்த சுற்றறிக்கைக்கான தேவைதான் என்ன? அந்த சுற்றறிக்கையின் கீழ்வரும் பகுதி இந்த சுற்றறிக்கைக்கான தேவையை நமக்குப் புரிய வைக்கிறது.“it is expected that the teaching should not promote one particular career option without realising the aptitude of the students”’கற்பித்தல் என்பது மாணவர்களின் விருப்பம் இன்றி அவர்களது கவனத்தை ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தொழில் நோக்கி ஒருபோதும் திருப்பக்கூடாது’ என்கிறது அந்த சுற்றறிக்கை.இந்த சுற்றறிக்கை மூன்று விஷயங்களை முன்வைக்கிறது1) ‘சிறப்புக் கட்டணம்’ தவிர வேறு கட்டணமெதையும் வசூலிக்க்க் கூடாது
2) பள்ளி நேரத்தில் வேறு பயிற்சிகளைத் தரக்கூடாது
3) ஒரு குறிப்பிட்ட தொழில் நோக்கி மாணவனது கவனத்தை கல்வி திருப்பக் கூடாதுஇந்த மூன்று காரியங்களையும் செய்து கொண்டிருப்பவை கார்பரேட் பள்ளிகள்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான்.’தரமான கல்வி, நல்ல மதிப்பெண்’ என்கிற அளவையெல்லாம் தாண்டி ‘நீட்டில் வெற்றி உறுதி’ எம் பள்ளியில் உங்கள் குழந்தைகளை சேருங்கள் பள்ளிகள் அழைக்கின்றன.மருத்துவக் கல்லூரிக்கு மதிப்பெண் தேவை இல்லை, நீட் தான் தேவை என்றானதும் கார்பரேட் பள்ளிகள் தங்களது வழமையான பாணியை மாற்றிக் கொண்டுள்ளன. இப்போது பல பள்ளிகளில் குழந்தைகள் 35 அல்லது 40 மதிப்பெண் எடுத்தால் போதும் என்கிற அளவில் கற்பித்தலை சுறுக்கிக் கொண்டு நீட் தேர்விற்கான பயிற்சியை முழுநேரமும் தரத் தொடங்கிவிட்டன. நீட் முழுச்சோறாகவும் பாடங்கள் ஊறுகாய்த் தொக்காகவும் மாறிப்போயின.இதற்காக லட்சக் கணக்கில் பணத்தைக் கறக்கத் தொடங்கி விட்டன. ஏதோ பள்ளிக் கல்வியே மருத்து கல்லூரிகளுக்கு மாணவர்களை வார்த்தெடுத்து தரும் பட்டறைகள்தான் என்பதான ஒரு மாய பிம்பத்தைக் கட்டமைத்து விட்டன இந்தப் பள்ளிகள்.ஏறத்தாழ பத்து லட்சம் குழந்தைகள் மேல்நிலை பொதுத் தேர்வினை எழுதுகிறார்கள். இவர்களில் அயல்நாடு சென்று மருத்துவம் படிப்பவர்களையும் சேர்த்தால்கூட பதினையாயிரம் குழந்தைகள் தேற மாட்டார்கள். மிச்சம் ஒன்பது லட்சத்து எண்பத்தி ஐயாயிரம் குழந்தைகளில் ஒன்றரை லட்சம் குழந்தைகள் பொறியியல் படிக்கிறார்கள். மீதமிருக்கிற எட்டு லட்சத்தி சொச்சம் குழந்தைகளுள் டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளை நோக்கி ஒரு லட்சம் குழந்தைகள் சென்றுவிட்டாலும் மீதம் இருக்கிற ஏழு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் கலை அறிவியல் கல்லூரிகளுக்குத்தான் செல்ல வேண்டும்.ஆக பத்து லட்சம் மாணவர்களில் வெறும் பதினையாயிரம் மாணவர்களை மட்டுமே முன்னிலைப் படுத்துகிற பள்ளிகளை நோக்கித்தான் இந்தச் சுற்றறிக்கை விடப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.ஒரு பெரிய கார்பரேட் பள்ளியில் 2000 மாணவர்கள் மேல்நிலக் கல்வியில் படிப்பதாக வைத்துக் கொள்வோம். எவ்வளவுதான் அதிகமாக வைத்துக் கொண்டாலும் 50 பேருக்குமேல் மருத்துவத்திற்கு தேர்ச்சிபெறப் போவதில்லை.இந்த 50 குழந்தைகளுக்காக எஞ்சி இருக்கிற 1950 குழந்தைகளிடமும் காசைக் கறந்து அவர்களைக் கசக்கிப் பிழிவது எவ்வளவு வன்முறை.ஆக இந்த அளவில் இந்தச் சுற்றறிக்கை மிக அவசியமான ஒன்றாகும்.காசைக் கறப்பது, பள்ளி நேரத்தை நீட் பயிற்சிக்காக ஒதுக்குவது, மாணவர்களது கவனத்தை அவர்களது விருப்பத்திற்கு மாறாக ஒரு துறை நோக்கி திருப்புவது ஆகிய செயல்களை ஏராளமான பள்ளிகள் செய்கின்றன என்பதால்தான் இந்த சுற்றறிக்கையை இயக்குநரகம் வெளியிட்டிருக்க வேண்டும்.கஞ்சத்தனமே இல்லாமல் இந்தச் சுற்றறிக்கையைப் பாராட்டி வரவேற்கிறோம்.இந்த சுற்றறிக்கையை பள்ளிகளுக்கு அனுப்பி ஒருமாதத்திற்கும் மேல் ஆகிறது. நமக்கு இரண்டு கேள்விகள் இருக்கின்றன1) விதிகளின்படி நடந்துகொள்ளாத எத்தனைப் பள்ளிகளின்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது? அல்லது,
2) அனைத்து மெட்ரிக் பள்ளிகளும் ‘நீட் பயிற்சி’யை நிறுத்திக் கொண்டனவா?தீக்கதிர் 12.08.2018

Published on August 20, 2018 23:06
August 15, 2018
10.08.2018
மக்களுக்கான மருத்துவர் கழகம் அமைப்பின் பெரம்பலூர் மாவட்ட கிளையின் சார்பாக 22.07.2018 அன்று ஒரு கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார் மருத்துவர் கருணாகரன்வலதுசாரி திருப்பமும் இடதுசாரி மாற்றும் என்ற தலைப்பில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தேன். 25 லிருந்து 30 வரையிலான எண்ணிக்கையில் உள்ளூர் மருத்துவர்கள் வந்திருந்தார்கள். அவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கதுஉரையின் ஊடே ஊக வணிகம் குறித்து பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மருத்துவர்களுக்கு அல்லது அங்கு இருந்த பெரும்பான்மை மருத்துவர்களுக்கு ஊக வணிகம் குறித்து அவ்வளவாக புரிதல் இல்லை என்பதை உணர முடிந்தது.என்னைப் பொறுத்தவரை மருத்துவர்கள் மருத்துவம் குறித்து மட்டுமே அப்டேட் ஆகியிருந்தால்கூட போதுமென்று நினைப்பவன். காரணம் அவர்கள் உயிர் காக்கும் பணியைச் செய்பவர்கள். அவர்கள் நேரம் முழுவதையும் மருத்துவத்திற்கே தியாகம் செய்வதைத் தவறு என்று கருதுபவனும் அல்ல.ஆனாலும் மனிதர்களான அவர்களுக்கும் ஓய்வும் பொழுது போக்கும் சமூகப் பார்வையும் அவசியமானதுதான்.அதுவும் மக்களுக்கான மருத்துவர்களுக்கு சமூகத்தின் இந்தப் புள்ளியின் உண்மை நிலவரம் அவசியம் புரிந்திருக்க வேண்டும்தான்.அப்போதுதான் ஏற்கனவே எல்லா வகையான கார்ப்பரேட்களாலும் வற்ற சுரண்டப்பட்ட நோயாளிகளிடம் தாமும் சுரண்டலாகாது என்ற ஈரம் அவர்களுக்கு சுரக்கும்.ஊகம் என்பது கற்பனை. எனவே ஊக வணிகம் என்பது ஒரு கற்பனை வணிகம்.இந்த கட்டமைப்பில் வணிகம்தான் கற்பனையே தவிர லாபம் சர்வ நிஜமானது. ஆனால் இந்த லாபம் உழைப்பவனுக்கோ அல்லது உழுபவனுக்கோ ஒருபோதும் போய் சேர்வதில்லைஇந்த ஊக வணிகத்திற்கு மூலதனம் இணைய வசதியோடு கூடிய ஒரு கணினியும் இணைய வங்கி சேவையில் பரிமாற்றம் செய்ய வசதியாக வங்கிக் கணக்கில் போதுமான அளவு பணமும் மட்டுமே.ஊக வணிகத்தின் மூலம் துவரம் பருப்பு வணிகத்தில் ஈடுபடக்கூடிய ஒருவர் இணையத்தை திறக்கிறார். இணையத்தை திறந்ததும் அவர் துவரம்பருப்பு எங்கெல்லாம் ஊக வணிகத்தின் மூலம் கிடைக்கும் என்று தேடுகிறார். துவரம் பருப்பின் அன்றைய விலை எவ்வளவு என்று பார்க்கிறார்.ஒரு பேச்சுக்காக நேற்றைக்கு ஆயிரம் ரூபாய்க்கு விற்ற துவரம் பருப்பு இன்றைக்கு 800 ரூபாய்க்கு விற்பதாக தெரியவந்தால் நேற்றைவிட இன்று அதன் விலை குறைவு என்று கண்டு அதில் முதலீடு செய்ய விரும்புகிறார்உடனே அவர் செய்ய வேண்டிய விஷயம் உரிய தொகையை எந்த நிறுவனத்திடம் துவரம் பருப்பு இருக்கிறதோ அந்த நிறுவனத்திற்கு பணத்தை அனுப்பி வைக்கிறார்அவர்கள் பணத்தை பெற்றுக் கொண்டதும் துவரம்பருப்பை இவர்கள் கணக்கில் வைப்பார்கள். இப்பொழுது இணையத்தை திறந்து பார்த்தால் ஊக வணிகத்தில் இவரிடம் ஆயிரம் மூட்டை துவரம் பருப்பு இருக்கும்.அடுத்த நாள் இன்னொரு ஊக வணிகர் இணையத்தை திறந்தால் இவர் கணக்கில் ஆயிரம் மூட்டை துவரம் பருப்பு இருப்பது அவருக்கு தெரிய வரும்ஒரு மூட்டை துவரம் பருப்பு ஆயிரம் ரூபாய் என்று ஊக மார்க்கெட்டில் இன்று நிர்ணயிக்கப் பட்டிருப்பதாக வைத்துக் கொள்வோம்.இப்பொழுது இன்றைக்கு துவரம் பருப்பு வாங்க ஆசைப் படுபவர் நேற்றைக்கு 800 ரூபாய்க்கு விற்ற துவரம் பருப்பு இன்றைக்கு ஆயிரம் ரூபாய்க்கு நகர்ந்திருக்கிறது. எனில், நாளையோ அதன் மறுநாளோ இது ஆயிரத்தி இருநூறு நோக்கி நகரக் கூடும். ஆகவே இதில் முதலீடு செய்தால் இரண்டே நாளில் பெரிய லாபம் கிட்டும் எனக் கருதி அவரிடமிருந்து 1200 ரூபாய் விலைக்கு இருக்கிற துவரம்பருப்பு முட்டைகள் அனைத்தையும் வாங்கிக் கொள்வார்விஷயம் என்னவென்றால் முதல் நாள் இவர் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்து இருப்பார். அடுத்த நாள் இவர் இடத்திலே ஒருவர் ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் கொடுத்து வியாபாரம் செய்திருப்பார்.இவர் ஒரு லட்சம் ரூபாய் நேற்று கொடுத்ததும் இன்று அவரிடமிருந்து ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் பெற்றதும் நிஜத்திலும் பரிமாறப்பட்டு இருக்கும்ஆனால் ஒரு பருக்கை துவரம்பருப்பு கூட யாரிடத்திலும் இருந்திருக்காது. இன்னும் சொல்லப்போனால் ஒரு கிராம் துவரம்பருப்பையும் ஊக வணிக காரர்கள் ஒருபோதும் கொள்முதல் செய்வதில்லை.இதே கதைதான் தங்கம் மற்றும் எந்த பொருளாயினும் ஊக வணிக நிலைப்பாடு ஆகும். பொருளே இல்லாமல் பொருளையே கொள்முதல் செய்யாமல் அதன் மீது முதலீடு செய்வதும் கொள்முதல் செய்யப்படாத பொருளை விற்பனை செய்வதும் தான் ஊக வணிகம்இதுகுறித்து சினத்தோடும் பகடியோடும் இவ்வளவு பேசிய நமக்கு இதையெல்லாம் மிகச்சிறிய ஒன்று என்று சொல்லத்தக்க வகையில் ஒரு காரியத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் செய்திருக்கிறதுஅம்பானி அவர்கள் ஒரு பல்கலைக்கழகத்தை திறக்க வேண்டும் என்று அவர் மனைவிக்கோ பிள்ளைகளுக்கோ கூட தெரியாத அளவில் ஆசைப்பட்டிருக்கிறார். அவர் ஆசைப்பட்ட பல்கலைக்கழகத்தை கட்டமைப்பதற்கு உரிய இடத்தைக்கூட அவர் இன்னும் தேர்வு செய்யவில்லை.ஆக, பல்கலைக்கழகத்திற்கான ஆசிரியர்கள் இல்லை, மாணவர்கள் இல்லை, கட்டடங்கள் இல்லை, ஒரு பெயர் பலகை கூட இல்லை. ஏன் அந்த பல்கலைக்கழகம் கட்டப்படுவதற்கு உரிய இடம் கூட இன்னும் பதிவு செய்யப்படாத ஒரு சூழலில் அந்த பல்கலைக்கழகம் ஆகச் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று என்று கூறி மனிதவள மேம்பாட்டுத்துறை ஏறத்தாழ ஆயிரம் கோடி ரூபாய் அந்த பல்கலைக்கழகத்திற்கு விருதாக அறிவித்திருக்கிறதுபேராசிரியர்களோ மாணவர்களோ இல்லாத அந்த பல்கலைக்கழகத்திற்கு விருது கிடைத்த மாத்திரத்தில் அவசர அவசரமாக அம்பானி அவர்கள் துணைவேந்தரை நியமிக்கிறார். இப்பொழுது அம்பானியின் பல்கலைக்கழகத்திற்கு வேந்தரும் துணைவேந்தரும் இருக்கிறார்கள். இப்பொழுதும் அந்த பல்கலைக்கழகத்திற்கு முதல்வர் கிடையாது பேராசிரியர் கிடையாது ஊழியர்கள் கிடையாது மாணவர்கள் கிடையாது வகுப்பறை கிடையாது தேர்வு கிடையாது எனில் உலகத்தில் முதல் முதலாக கல்வியை ஊகப் பொருளாக வணிகம் செய்த பெருமையை அம்பானி பெறுகிறார்திரு அம்பானி அவர்கள் மாணவர்களே இல்லாத அந்தப் பல்கலைக்கழகத்தில் படிப்பதாக சொல்லப்படும் மாணவர்களுக்கு அரசிடமிருந்து ஸ்காலர்ஷிப் பெற்றுத் தரக்கூடும்மாணவர்களே இல்லை ஊக்கத்தொகை எப்படி கிடைக்கும் என்று கேட்டால் மாணவர்களே இல்லை யாருமே இல்லை ஆனால் விருது கிடைத்திருக்கிறதே. இது மட்டும் ஏன் கிடைக்காது என்று பரிசீலிக்க ஆசைப்படுகிறேன்இவையெல்லாம் சொல்லிவிட்டு மருத்துவர்களிடம் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் ஊக வணிகம் சரி, ஊக கல்வி சரி, ஊக வைத்தியம் என்று ஒன்று வந்து விட்டால் தேசத்தின் நிலைமை என்னவாகும் என்று கொஞ்சம் யோசனை செய்யுங்கள் என்று சொன்னவன் மருந்துகளை ஊகத்தில் விட்டால் நோயாளிகளின் கதி என்ன ஆகும்? என்று நான் சொன்னபோது அந்த மருத்துவர்களின் கண்களிலே ஒரு மிரட்சி தெரிந்ததுமருத்துவத்துறையில் ஊக மருத்துவம் என்று ஒன்று வந்துவிட்டால் இவர்கள் மருத்துவரே இல்லாமல் செவிலியர் இல்லாமல் மருத்துவ கூடமும் இல்லாத நிலையில், நோயாளியும் இல்லாமல் எத்தனை பைபாஸ் சர்ஜரி செய்து முடிப்பார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.ஒன்றே ஒன்றுஅருள்கூர்ந்து விழித்துக் கொள்வோம்#சாமங்கவிய ஒரு மணி பதினேழு நிமிடம்
10.08.2018
10.08.2018
Published on August 15, 2018 10:28
August 12, 2018
மெரினாவில் கலைஞர் எனில் அவர்கள் கொதிப்பதையும்
கலைஞரை மெரினாவில் வைத்தது சரியா தவறா என்பது வேறுசரி என்பவர்கள் அதற்காகவும் சரி இல்லை என்பவர்கள் அதற்காகவும் அவரவர் பக்கங்களில் உரையாடலாம்கலைஞரை அடக்கம் செய்ததால் மெரினா போனால் குளிக்கனும் பூணூல் மாத்தனும் என்று பகிரங்கமாக பேசமுடியும் என்பதுஅசிங்கம்,குற்றம்.தண்டிக்கப்பட வேண்டும்மெரினாவில் கலைஞர் எனில் அவர்கள் கொதிப்பதையும்தந்தை அம்பேத்கர் சிலைகள் ஊரில் இருப்பதால் சில ஊர்கள் கொதிப்பதையும் சேர்த்தே கண்டிப்போம்
Published on August 12, 2018 05:50
நாம் அறியாத தாகவும் அவர் அறித்ததாகவும்
சாமி சிலையைக் காணோம்தன்னிடம் போலீஸ் வரக்கூடும் என்று ஊகிக்கிறார்முன்ஜாமீன் கோருகிறார் TVS முதலாளிஒன்றோடு ஒன்றுக்கு தொடர்பிருக்கிறதுஇல்லாமலும் இருக்கலாம்ஆனால்,அவரா?அடுக்குமா?எத்தனைக் கோடி இந்தக் கோவிலுக்காக செலவு செய்கிறார்?அவரிடம் இல்லாத காசா?அவர் நினைத்தால் இதே போல் எத்தனை செய்ய முடியும்இப்படியெல்லாம்கூட குரல்கள் வருகின்றனநண்பர்களே,பணத்தால் அளந்துவிட முடியாது அந்த சிலையைஅந்த சிலையைக் கடத்த பணம் தாண்டியும் வேறு காரணம் இருக்கலாம்அவை நாம் அறியாத தாகவும் அவர் அறித்ததாகவும் இருக்கக் கூடும்
Published on August 12, 2018 05:42
August 10, 2018
09.08.2018
“அடுத்த தேர்தலிலும் பாஜக வென்றால் இந்தியா “இந்து பாகிஸ்தான் ஆகலாம்” என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த திரு சசிதரூர் கூறியிருக்கிறார்.இதைக் கேட்டதும் பாஜக நண்பர்கள் ஆகாயத்திற்கும் பூமிக்குமாய் குதிக்கத் தொடங்கினார்கள்.இந்த அளாப்பறைகளினூடே குறுக்கிட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளார் தோழர் யெச்சூரி அவர்கள் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம்
ஒன்பதாம் நாளன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் நடைபெற்ற ”வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் எழுபத்தி ஐந்தாவது ஆண்டு விவாத்த்தில் கலந்து கொண்டு தான் உரையாற்றும் போது இதே கருத்தை வெளியிட்டதாகக் கூறியுள்ளதாக 15.07. 2018 தீக்கதிர் கூறுகிறது. இதில் யாருக்கேனும் அய்யம் இருக்குமானால் அவரது அந்த உரையானது மாநிலங்களவையின் அவைக் குறிப்பில் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதில் யாருக்கேனும் அய்யம் இருக்குமானால் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு இதை சரி பார்த்துக் கொள்ளலாம். இது விஷயத்தில் குய்யோ முறையோ என்று சத்தம் போடுபவர்களில் 99 விழுக்காடு RSS மற்றும் பாரதிய ஜனதாக் கட்சியினர்தான். அவர்களுக்கு இதை சரி பார்ப்பதில் ஏதும் சிரமம் இருக்கப் போவதில்லை.இரண்டு விஷயங்கள்,1) இவர்கள் அலறும் அளவிற்கு ஆபத்தான கூற்றா?
2) தோழ்ர் யெச்சூரி போன வருடமே இந்தக் கருத்தைக் கூறியிருக்கும்போது திரு சசிதரூர் அவர்களை அவர்கள் குறிவைத்து குதற முற்படுவது ஏன்?உண்மையை சொல்லப்போனால் நமது மண்ணின்மீது அவர்கள் கொண்டிருக்கும் ஆழமான பிடிப்பிலிருந்து வந்து விழுந்த வார்த்தைகள் அவை.அவர்களை அலற வைத்த வார்த்தை இந்து பாகிஸ்தான்’ என்பது. பாகிஸ்தான் என்று வந்து விட்டதாம். அது தேசத்திற்கு விரோதமான வார்த்தையாம். பாகிஸ்தானோடு எப்படி ஒப்பிடப் போச்சு என்று குதித்து ஓய்ந்திருக்கிறார்கள்.அடப் பாவிகளா, இந்துபாகிஸ்தானாக இந்தியா மாறிவிடக்கூடாது என்பதைத்தானே அவர்களும் கூறுகிறார்கள். நீங்கள் மீண்டும் வந்தால் இந்தியா ‘இந்துபாகிஸ்தான்’ ஆகிவிடுமே என்ற அவர்களது கவலை அவர்களது அப்பழுக்கில்லாத தேசபக்தியில் இருந்தும் ஈரங்கசியும் மனிதாபிமானத்தில் இருந்து வந்தது.தோழர் யெச்சூரியும் தரூரும் இந்தியா இந்தியாவாக இருக்கவேண்டும், ஒருபோதும் இந்து பாகிஸ்தானாக மாறிவிடக் கூடாது என்று கூறுகிறார்கள்அதை நீங்கள் தவறு என்று சொன்னால் இந்தியா இந்துபாகிஸ்தானாக நீங்கள் ஆசைப் படுகிறீர்கள் என்றுதானே அர்த்தம்.இவர்கள் யெச்சூரியை விட்டுவிட்டு தரூரைப் பிடித்துக் கொண்டு சாமியாடுவதற்கு காரணம்தோழருடையது மாநிலங்களவையின் அவைக் குறிப்பில் உள்ளதுதரூரினுடையது சமூக வலைத்தளத்தில் இருக்கிறதுசமூக வலைதளம் வீரியம் மிக்கது#சாமங்கவிய 16 நிமிடங்கள்

Published on August 10, 2018 10:13
August 8, 2018
08.08.2018
“முதன்மையான வாசகனை இழந்து விட்டோம்” என்ற தலைப்பிட்டு வந்திருக்கிறது இன்றைய ‘தீக்கதிர்’.யோசித்துப் பார்த்தால் இதுதான் இழப்பின் முத்தாய்ப்பான சாரம்.கலைஞருக்கு பேச வருமா என்றால் யாரைவிடவும் செம்மையாக பேச வரும் என்பதே நமது பதில்.அவருக்கு கவிதை வருமா என்றால் தமிழ்க் கவிதையை அரசியல் படுத்தியதில் அவரது பங்கு அலாதியானது என்பதே நமது பதில்.கலைஞருக்கு எழுத வருமா என்று கேட்டால் சட்டென ஒற்றை வரியில் நம்மால் சொல்லிவிட முடியாதுசினிமாவும் காட்சி ஊடகங்களும் வாசகனை ரசிகனாக மாற்றிக் கொண்டிருக்கும்போது ‘பராசக்தி’ வசனம் ரசிகனை வாசகனாகவும் மாற்றியதுரசித்து ரசித்து வாசித்த வாசகன் கலைஞர்கருக்கிலேயே அவரது வாசிப்பு தொடங்கிவிடும் என்பது அவரது எழுத்து மீதான காதலுக்கு கட்டியம் கூறுகிறதுஅவர் எழுத்தை எவ்வளவு நம்பினார் என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்ல வேண்டுமெனில் இதை சொல்லலாம்நெருக்கடி காலத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஊழியர்கள் திரு ஸ்டாலின் உட்பட சிறைப் படுத்தப்பட்டிருக்கின்றனர்முக்கால்வாசி துருப்பிடித்த துரும்புகளே இவ்வளவு ஆட்டம்போடுகிற வேளையில் முரட்டுத்தனத்தின் மொத்த வடிவமாய் விளங்கிய திருமதி இந்திரா அவர்கள் அவரது கொடூரத்தின் உச்சத்தில் இருந்த நேரம்அதை எதிர்த்து பேச இயலாதுபத்திரிக்கைத் தணிக்கை அப்போது இரட்டைத் தணிக்கையாக இருந்த நேரம்பக்கத்தில் தோழர்கள் இல்லாத நேரம்தனது செய்திகளை மக்களுக்கு எப்படிக் கொண்டுபோவது என்று யோசித்த கலைஞர் தனது கருத்துக்களை துண்டறிக்கைகளை அச்சடித்து ஒரு கையில் தனது கட்சிக் கொடியை பிடித்தபடி அண்ணா சாலையில் நின்று அவற்றை பொது மக்களுக்கு விநியோகித்தார் என்பது வரலாறுகழியில் கட்டப்பட்ட கட்சிக் கொடியை கையில் பிடித்தபடி துண்டறிக்கைகளை நேற்றுவரை முதல்வராக இருந்த ஒருவர் விநியோகிப்பதை நினைத்துப் பார்க்கிறேன்என்னை அறியாமல் கண்கள் முட்டுகிறதுதனது எழுத்தை தானே மக்களுக்கு விநியோகித்திருக்கிறார் என்றால் அந்த எழுத்துக்கள் மக்களை களப்படுத்தும் என்ற அவரது நம்பிக்கையைக் காட்டுகிறதுதனது எழுத்து நெருக்கடிக்கு எதிராக மக்களை அணிதிரட்டும் என்ற அவரது நம்பிக்கை அதுஎழுத்தின் மீது வெறிகொண்ட காதலோடு வாழ்ந்த அவர் என் எழுத்தை வாசிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கிருந்ததுஒரு நூலைக்கூட அவரிடம் கொண்டுபோக முடியவில்லைகுறிப்பாக எனது ”எது கல்வி?” நூலை அவர் வாசிக்க வேண்டும் என்பது என் ரகசிய ஆசையாகவேப் போனதுஎத்தனை வாசித்த கலைஞரே என் எழுத்தை வாசிக்காமல் போனது இருவருக்கும் இழப்புதான்நானாவது தன்னடக்கம் தவிர்த்து என் நூல்களை அவருக்கு கொடுத்திருக்கலாம்அல்லது அவராவது என் தன்னடக்கம் மறைந்து அவருக்கு என் நூல்களை வழங்கும்வரை சில ஆண்டுகள் வாழ்ந்திருந்து வாசித்துவிட்டுப் போயிருக்கலாம்#சாமங்கவிய ஒரு மணி ஒன்பது நிமிடங்கள் இருக்கும்போது
Published on August 08, 2018 22:37
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)