இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 89

July 28, 2018

21.07.2018

விடுமுறை நாளொன்றில் பக்கத்து ஊரில் இருக்கும் தனது பாட்டி வீட்டிற்கு சென்றான் அந்தச் சிறுவன். நாள் முழுவதும் பாட்டி வீட்டில் உண்டு விளையாடி மகிழ்ந்துத் திளைத்திருந்த அந்தப் பிள்ளை மாலை அவனது ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தான்..கடலரண் சுவர்மேலே (DYKE) நடந்து வந்து கொண்டிருந்தான். அடிக்கடி கடல்நீர் ஊருக்குள் புகுந்து சேதாரத்தை ஏற்படுத்தும் பகுதிகளில்தான் அது உண்டாக்கும் பேரழிவுகளில் இருந்து அந்த ஊர்களைக் காக்கவே கடலரண் கட்டப்படும் என்ற அடிப்படை உண்மையை அவனது ஆசிரியைகளும் தாயும் பாட்டியும் அவனுக்கு பலமுறை சொல்லியிருக்கிறார்கள்.“அந்த சொவரு உடஞ்சா நம்ம ஊரு அழிஞ்சு போயிடும். நம்ம ஊரின் உசிரே அந்தச் சுவருதாண்டா” என்று அவனது பாட்டி அந்தச் சுவரின் முக்கியத்துவத்தை அவனுக்கு சோறோடு சேர்த்து ஊட்டியிருந்தாள்அன்று அவன் நடந்து கொண்டிருக்கும்போது அந்த சுவரில் ஒரு சிறிய துவாரம் ஏற்பட்டு அதன் வழியாக நீர் கசிந்து கொண்டிருப்பதைப் பார்ப்பான். நேரம் போகப் போக ஓட்டைப் பெரிதாகும். ஒரு புள்ளியில் அது சுவரை உடைக்கும். அப்படி உடைத்தால் கடல்நீர் ஊருக்குள் நுழைந்து ஊரை அழித்துவிடும் என்று பயந்தான். எப்படியேனும் நிகழப்போகும் ஆபத்தில் இருந்து அந்த ஊரைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தான்.உடனே கீழே இறங்கி அந்த்த் துவாரத்தில் தனது சுண்டு விரலை நுழைத்தான். நீர் நின்றது. ஆனால் கொஞ்ச நேரத்தில் அவனது விரல் அடைப்பையும் தாண்டி நீர் கசிந்த்து. சுண்டு விரலை எடுத்துவிட்டு மோதிர விரலை வைத்து அடைப்பான். அது தாண்டியும் நீர் வரவே கட்டை விரலை வைப்பான், பிறகு இரண்டு விரல்கள், ஒரு கட்டத்தில் கையை நுழைத்து அடைப்பான்.நிரின் குளிர்ச்சி கையை விறைக்கச் செய்ய்துவிடும் . அப்படியே மயங்கி போவான்.இதற்கிடையே பாட்டி வீட்டிற்கு போன குழந்தை வரவில்லையே என்று ஊரே திரண்டு அவனைத் தேடி ஒரு வழியாக விடியற்காலை அவனைக் கண்டு பிடிப்பார்கள்.உண்மை புலப்படும். அரணைப் பழுது பார்ப்பார்கள். அவைச் சுமந்து கொண்டுபோய் மருத்துவம் பார்த்து விழா எடுத்துக் கொண்டாடுவார்கள்.இது ஒன்றாம் வகுப்பில் நாம் படித்த கதை.எது கசிந்தாலும் அது ஆபத்தை கொண்டு வரும். கசிவது நீர் என்றாலும் எண்ணை என்றாலும் வேறு எதுவென்றாலும் அது நல்லது அல்ல. எண்ணெயும் நீரும் கசிந்தாலே ஊர் அழிந்து போகும் என்றால் ரகசியம் கசிந்தால் எவ்வளவு பேராபத்து விளையும் என்பதை சொல்லவும் தேவையில்லைசமீபத்தில் ஆதார் அட்டைகளின் ரகசியங்கள் விலைக்கு தரப்பட்டன என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவரவர் ரகசியம் அவரவர் உரிமை. அதில் தலையிடுவதே தவறானது எனில் அதைத் திருடி அடுத்தவருக்கு விற்பது எவ்வளவு பெரிய குற்றம்.2018 ஆம் ஆண்டு ஏறத்தாழ 13 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வினை எழுதியுள்ளனர். இவர்களில் சுமார் 2 லட்சம் மாணவர்களுடைய தேர்வு விவரங்களும் முகவரிகளும் தொலைபேசி எண்களும் அவர்களுடைய பொருளாதார பின்னணியும் குறித்த தகவல்கள் விற்பனைக்கு கிடைப்பதாக கிடைத்திருக்கக் கூடிய தகவல் ஒவ்வொரு குடிமகனையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கவே செய்யும்.மேற்சொன்ன தரவுகளை ஏதோவொரு இணையதளம் கைப்பற்றி வைத்திருப்பதாகவும் 2 லட்சம் தரக்கூடியவர்களுக்கு அந்த 2 லட்சம் குழந்தைகளின் தரவுகளை அவர்கள் விற்றுக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. அதை இன்னொரு ஊடக நிறுவனம் விலை கொடுத்து வாங்க பேரம் பேசிய போது தரப்பட்ட சேம்பிளை சோதித்துப் பார்த்தபோது அத்தனையும் உண்மை என்பது புலப்பட்ட்தாக அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளதாக இன்றைய தீக்கதிர் கூறுகிறது.இரண்ட் லட்சம் குழந்தைகளின் தரவுகள் இரண்டு லட்சம் ரூபாய். எனில் ஒரு குழந்தை பற்றிய தகவலின் விலை ஒரு ரூபாய் என்று ஆகிறது.
இதை விற்பதால் என்ன பெரிய லாபம் வந்துவிடப்போகிறது என்ற கேள்வி எழக்கூடும்.இதை வாங்குவதால் யாருக்கு என்ன லாபம்? இதை யார் பெறப் போகிறார்கள்இந்தக் குழந்தைகளில் பெரும்பான்மையோர் நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அல்லது நீட் தேர்வில் வெற்றி பெற்று போதுமான அளவு மதிப்பெண் இல்லாத காரணத்தினால் மருத்துவ கல்லூரிகளில் இடமில்லாது போனவர்கள்இப்பொழுது ஆள்சேராத தனியார் மருத்துவ கல்லூரிகள் ஒரு இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்தால் நீட்டில் வெற்றி பெற்று அதேவேளை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காது தவிக்கும் குழந்தைகளின் முகவரிகளும் அலைபேசி எண்களும் அவர்களது பொருளாதார பின்புலமும் அந்த கல்லூரிகளுக்கு கிடைத்துவிடும். அவர்கள் அந்த குழந்தைகளுள் வசதி படைத்தவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை அணுகி தங்கள் கல்லூரியில் அந்த குழந்தைகளுக்கு இடமளிப்பதாக பேரம் பேசி பணத்தை கறந்து கல்லூரிகளை மாணவர்களால் நிரப்புவதன் மூலம் தங்களது கல்லாக்களை பிதுங்க பிதுங்க நிரப்பிக் கொள்வார்4கள்.இன்னும் சில கல்லூரிகள் பணம் இல்லை என்று சொன்னாலும் பரவாயில்லை வங்கி கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று ஆசை காட்டத் தொடங்கி விடுவார்கள். வங்கிகளும் இதுபோன்ற கல்லூரிகள் அனுப்பும் கடன் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலனை செய்து அதைவிட சிக்கிரமாய் கடனை வழங்கிவிடுகின்றன. இதற்குரிய தரகுத் தொகை அந்த கல்லூரி களிடமிருந்து மிகச் சரியாகப் போய்விடும்.இது ஒருபுறமிருக்க நீட்டில் தோற்றுப்போன அதே நேரம் பணவசதியும் மருத்துவ படிப்பின் மீதான பேராசையும் கொண்டுள்ள மாணவர்களின் முகவரிகளையும் தொலைபேசி எண்களையும் நீட்டிற்கான பயிற்சியினை வழங்கும் நிறுவனங்கள் பெற்றுவிடுகின்றன. பிறகு அவர்கள் அந்தக் குழந்தைகளை அணுகி அவர்களை மூளைச் சலவை செய்து தங்களது பயிற்சி நிறுவனத்திற்கு இழுத்து வந்து விடுகிறார்கள்.இப்படியாக நீட் தேர்வு எழுதியவர்களின் விபரங்களை ஏதோ ஒரு வகையில் பச்சையாக சொல்லப்போனால் தேவையான அளவு லஞ்சம் கொடுத்து பெற்று ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இரண்டு லட்சத்திற்கு விற்பதன் மூலம் பல நூறு கோடிகளை ஒவ்வொரு வருடமும் சுருட்டி விடுவதற்கு இவர்களுக்கு ஏலும்.ஒரு குடிமகனின் ரகசியத்தை அவன் பாதுகாப்பதற்கு உரிய சூழலை உருவாக்கித் தருவது ஒரு நல்ல மக்கள் அரசின் கடமையாகும்.
அப்படி ஏதோ ஒரு குடிமகனின் ரகசியம் யாரோ ஒருவரால் களவாடப்படும் என்றால் களவாடிய அவனை நீதிமன்றத்தில் நிறுத்தி அவனை சிறை ப்படுத்த வேண்டிய பொறுப்பும் அரசிற்கு உண்டு.ஆனால் இங்கு அரசிடம் கையளிக்கப்பட்ட குழந்தைகளின் ரகசியங்கள் களவாடப்பட்டு விற்கப்பட்டு கல்லாக்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன.அது என்ன அவ்வளவு பெரிய ராணுவ ரகசியமா என்று பொதுவாக சொல்வது உண்டு. எந்த ஒரு தனிமனிதனின் ரகசியம் ரகசியமும் ராணுவ ரகசியத்திற்கு ஈடானதுதான். ராணுவத்திற்கு ராணுவ ரகசியம் எவ்வளவு முக்கியமோ ஒரு தேசத்திற்கு அந்த தேசத்தின் ரகசியம் எவ்வளவு முக்கியமோ அதற்கு கொஞ்சமும் குறைந்ததல்ல ஒரு தனிமனிதனுக்கு அவருடைய ரகசியம்.தேசத்தின் ரகசியத்தை அல்லது ராணுவத்தின் ரகசியத்தை கைப்பற்றி அயல் நாட்டுக்கு கடத்தும் ஒரு கயவனுக்கு என்ன தண்டனையோ அதற்கு கொஞ்சமும் குறையாத ஒரு தண்டனையை நீட் தேர்வு எழுதிய இந்தக் குழந்தைகளின் ரகசியத்தை கைப்படுத்தி கசிய செய்தவர்களுக்கும் வழங்க வேண்டும்.நீர் கசிந்தது. அந்தப் பிள்ளை கைவைத்து அடைத்தான். நீர் கசிந்தால் ஊர் அழியும் என்று அந்தப் பிள்ளைக்குத் தெரிந்திருந்த்து.ரகசியங்கள் கசிகின்றன. ரகசியங்கள் கசிந்தால் தேசம் தன் இறையாண்மையை இழக்கும் என்றும் நமக்குத் தெரியும்.நாமென்ன செய்யப் போகிறோம்?#சாமங்கவிய இரண்டு நிமிடம் இருக்கிற பொழுது21.07.2018
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 28, 2018 09:38

July 27, 2018

20.07.2018

இது நிச்சயமாக ராகுலின் தினம்.எனில், நிச்சயமாக இது காங்கிரசின் தினம்.ஆமாம், இன்று பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி அவர்களின் உரையானது பிரதமர் மோடி அவர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க இயலாத ஒரு உரையாக இருந்தது. உண்மையை சொல்லப்போனால் காங்கிரஸ்காரர்களே பாராளுமன்றத்தை ராகுல் இப்படி தெறிக்கவிடுவார் என்று கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். திருமதி சோனியா பூரிப்பின் உச்சத்திற்கே சென்றிருப்பார். தொடர்ந்து தோற்றுக் கொண்டு இருந்த பிள்ளை. 'சிறுபிள்ளை ஒருபோதும் வெள்ளாமையைக் கொண்டு வந்து சேர்க்கப் போவதில்லை' என்றும் கட்சிக்கு உள்ளும் வெளியும் இருந்து வரும் நக்கல் கலந்த விமர்சனங்களைக் கேட்டுக் கேட்டு நொந்துபோயிருந்த அந்தத் தாய்க்கு “இன்றை” பரிசளித்திருக்கிறார் ராகுல்.ஆனால் நமக்கு அப்படி இல்லை. தோழர் ஜோதிமணியுடனான உரையாடல்கள் ஊடகங்களின் வழியாக நாம் அறிகிற சராசரி ஆளுமை அல்ல ராகுல் என்பதை உணர்த்திக் கொண்டே இருந்தன. அதை Kaakkai Cirakinile வில் எத்தனையோ முறை எழுத நினைத்து தட்டிப் போயிருக்கிறது. அதை அவர் இன்று வெளிப்படுத்தி இருக்கிறார்.முப்பது ஆண்டுகளாக உரையாற்றிக் கொண்டிருப்பவன் என்ற முறையில் அவரது உரையின் செறிவும் உடல்மொழியும் மிகத் தேர்ந்த ஒரு தலைவனுக்குரியது என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.பாதி அவைக்கும் மேல் பெருங்குரலெடுத்து இவரது உரைக்கெதிராக கூச்சலிட்டுக் கொண்டிருக்கும்போது எங்கு நிறுத்த வேண்டுமோ அங்கு நிறுத்தி எவ்வளவு நிறுத்த வேண்டுமோ அவ்வளவு நிறுத்தி அந்தப் பெருங்கூச்சலை தவிடுபொடி ஆக்கியிருக்கிறார் ராகுல்.அனைத்தையும் பேச முயன்று வெற்றி பெற்றிருக்கிறார்.ஆணவத்தின் உச்சியிலேயே எப்போதும் அமர்ந்திருக்கும் மோடியை மோதி நொறுக்கிப் பொடியாக்கி தேசத்தின் எட்டுத் திக்கிலும் ஊதித் தள்ளியிருக்கிறார். ஒவ்வொரு மேடையிலும் அழுவார் பொய் சொல்வார் கைகளை விரித்து கதை சொல்வார் மோடி. அவற்றின் எந்த ஒரு புள்ளியிலும் உண்மை இருக்காது. ஆனால் இன்றைக்கு மோடியின் முகத்தில் தெரிந்த பதட்டம் உண்மையானது. இந்த வகையில் மோடியின் உண்மையான முகத்தை உலகுக்கு காட்டிய ராகுலை தேசமே கொண்டாடுகிறது.தன் கண்களைப் பார்க்கிற தைரியம் பிரதமருக்கு இல்லை என்று ராகுல் கூறியது ரசனை கலந்த அரசியல் தெறிப்பு.வழக்கமாக கைகளை நீட்டி ஆவேசமாக எதையாவது பேசும் திருமதி நிர்மலாவை அவர் நேர்கொண்டதும் பதறிப்போன நிர்மலா அதே கைநீட்டலோடு ராகுலை எதிர்கொள்ள முயன்றதும் கண்கொள்ளாக் காட்சிகள்.வழக்கமாக பாரதிய ஜனதாக் கட்சி தாக்குதலை நிகழ்த்தும் காங்கிரஸ் தற்காத்தலை நிகழ்த்தும். இன்று அது தலை கீழாக மாறியிருக்கிறது.திருமதி நிர்மலாவை இவ்வளவு பதறிக் கதற வைத்த்தற்காக ராகுலுக்கு தமிழ் மண்ணின் சிறப்பு நன்றி.எல்லாம் போக ராகுல் எவற்றை எல்லாம் சாடினாரோ அதே சாடல்களுக்கு கடந்த கால காங்கிரசும் தகுதி பெற்றதே.நான் விரும்புகிறேனோ இல்லையோ யார் விரும்புகிறார்களோ இல்லையோ இந்த நாடு ஒருநாள் ராகுலின் கைகளுக்குள் வரும். அப்போது இந்த சாடல்களுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆட்சியைத் தர வேண்டும்.இது ராகுலின் தினம்.இது காங்கிரசின் தினம்.இதை எதிர்க் கட்சிகளின் தினமாகவும் மாற்ற வேண்டும்.காங்கிரசும் எதிர்க் கட்சிகளும் இன்றை தமதாக்கிக் கொண்டால் தேசம் கொஞ்சம் பிழைக்கும்.அன்பும் முத்தமும் நன்றியும் ராகுல்#சாமங்கவிய 23 நிமிடங்கள் இருந்தபொழுது
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 27, 2018 22:49

19.07.2018

இன்று மிக மகிழ்ச்சியான ஒரு சம்பவத்தைப் பந்தி வைத்துவிட்டு படுக்கப் போகலாம் என்றிருந்தேன்.தட்டலாம் என்று முகநூலைத் திறந்தால் மிகவும் அதிர்ச்சிகரமான தகவல்கள் இரண்டைப் பார்க்க நேர்கிறது.அந்த சம்பவத்தை காக்கைச் சிறகினிலே கடைசி பக்கத்தில் வைத்து விடுகிறேன்தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் தோழர் கலை மணிமுடி அவர்கள் காலமானார் என்ற செய்தி ஒன்று.ஆகச் சமீபத்தில்கூட அவரது பதிவுகளைப் பார்க்க முடிந்தது. மிக நல்ல தோழர். கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஏதோ கல்வி குறித்த தனது பதிவில் கல்வித்துறையில் உள்ள ஏதோ ஒரு பிரச்சினைக்கெதிராக கல்வியாளர்கள் ஒன்று திரள வேண்டும் என்றும் அதற்கான ஒருங்கிணைப்பை இவர்கள் செய்யலாமே என்றும் சொல்லியிருந்தார். அந்த இரண்டோ அல்லது மூன்றோ ஆன இவர்கள் பட்டியலுள் நானும் இருந்தேன்.அவரோடு அது குறித்து உரையாட விரும்பி அவரது எண் கேட்டு அவரது இன்பாக்சில் அணுகினேன். இன்றுவரை அதை தோழர் பார்க்கவே இல்லை.அடுத்தடுத்து பிரச்சினைகள் வந்துகொண்டே இருப்பதால் அவர் குறிப்பிட்ட பிரச்சினை மறந்து போனது.எண் கேட்டு நான் அவரை அணுகிய நாளில் அவரது பதிவைப் பார்த்தால் அது என்ன என்று புரிந்துவிடும்.அவர் விரும்பிய அந்த தலையீட்டினை செய்ய முயற்சிப்பேன்.அதுதான் அவருக்கான அஞ்சலியாக இருக்கும்.இதுவரைக்குமான உங்களது மக்களுக்கான செயல்பாடுகளுக்கு என் சார்பிலும் காக்கை சார்பிலும் நன்றி சொல்லிக் கொள்கிறேன் தோழர்.
********************************எந்த ஊர், எந்தப் பள்ளி என்று தெரியவில்லை. ஆனால் எனது இன்றைய தூக்கத்தைக் கெடுப்பதற்கு கிடைக்கிற செய்தியில் போதாமை இருக்கிற அந்தச் செய்தி போதுமானதாக இருக்கிறது.ஏதோ ஒரு பள்ளியில் ஒரு தலித் சத்துணவு அமைப்பாளராகவோ அல்லது சமையல்காரராகவோ இருக்கிறார். வந்திருக்கிற செய்தியின் அடிப்படையில் இருந்து பார்த்தால் அவர் சமையல் செய்பவராகத்தான் இருக்கக் கூடும். எது வாகவோ இருக்கட்டும். அது பிரச்சினையில்லை.ஒரு கீழ்சாதிப் பெண் சமைக்கும் உணவை எம் பிள்ளைகள் உண்பதா? அதை ஏற்கவே மாட்டோம். அவர் அந்தப் பள்ளியில் இருந்தால் அந்தப் பள்ளிக்கு எம் பிள்ளைகளை அனுப்ப மாட்டோம் என்று சிலர் சொல்லவே அந்த ஊழியரைப் பணியிட மாற்றம் செய்திருப்பதாக அறிய முடிகிறது.இன்னொரு ஊருக்கு அவரை மாற்றினாலும் அங்கும் ’அந்த மக்கள்’ இதையேதான் செய்வார்கள்.சரியின்று இதை அனுமதித்தால் நாளை ,”கீழ்சாதி வாத்தியார்” எம் பிள்ளைகளுக்கு சொல்லித்தருவதா என்று கிளம்புவார்கள்.பிறகு மருத்துவர்களிடம் வருவார்கள்.இதுதான் அவர்களாது நீண்ட கால செயல் திட்டம்.நீ எப்படியோ கஷ்டப்பட்டு மருத்துவம் படி. அதை எங்களால் தடுக்க முடியாது. ஆனால் உம்மை நோயாளிகள் அணுகாத மருத்துவர்களாக எங்களால் மாற்ற முடியும் என்று கொக்கரித்து கிளம்புவார்கள்.தலித் கடை வைக்கலாம். வாங்க வர மாட்டார்கள். சரி தலித் கடையில் தலித் வாங்கலாம் என்றால் அதுவும் முடியாது.தகுதி பெறுங்கள். எங்களால் தடுக்க முடியவில்லை. ஆனால் உங்கள் தகுதியை முடக்கிப் போட எங்களால் முடியும் என்று பச்சையாக கூறுகிறார்கள்.அவர்தான் சமைப்பார் பிள்ளைகளை அனுப்புவதும் அனுப்பாததும் உங்கள் இஷ்டம் என்பது கூட தவறுதான். ஆனால் குறைந்த பட்சம் அதையாவது இந்த அரசு செய்ய முன்வர வேண்டும்.நேர்மையான செயல்பாட்டை இந்த அரசு செய்ய விரும்பினால் தலித் சமைத்தால் எம் பிள்ளைகளை ப் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று சொன்ன குற்றத்திற்காக அவர்களைக் கைது செய்ய வேண்டும்.#சாமங்கவிந்து ஒரு மணி பத்து நிமிடங்களை ஒட்டி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 27, 2018 06:31

July 26, 2018

17.07.2018

அந்தக் குழந்தையை பதினேழுபேர் வண்புணர்ந்திருக்கின்றனர்ஏழு மாதங்களாகத் தொடர்ந்து வன்புணர்ந்திருக்கின்றனர்கத்தியைக் காட்டி மிரட்டி அந்தப் பிஞ்சை வன்புணார்ந்திருக்கின்றனர்வன்புணரப்பட்டக் குழந்தை ஒரு மாற்றுத் திறனாளிஇந்த வழக்கில் அந்தப் பதினேழுப் பேருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் வழக்காடப் போவதில்லைஅவர்களை நடுரோட்டில் வைத்து சுட்டுக் கொல்ல வேண்டும்ஏழு மாதங்களாக ஒரு சின்னஞ்சிறு பிள்ளையை கூட்டாக வன்புணர்ந்திருக்கிறார்கள் என்பதறிந்த பிறகும் எப்படி சிலர் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்என்றெல்லாம் வரும் பதிவுகள் நம் நெஞ்சைக் கிழிக்கின்றனஇப்படி ஏதோ ஒரு குழந்தை வன்புணரப்படாத ஏதேனும் ஒரு மாதம் ஆகச் சமீபத்தில் நம்மைக் கடந்து சென்றிருக்கிறதா?நாம் கொந்தளித்து அவற்றிற்கெதிராக எப்போதாவது எதிர்வினையாற்றாது இருந்திருக்கிறோமா?தொடர்ந்து எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதற்காக இந்த வெறித்தனம் நின்றுபோயிருக்கிறதா?குறையவில்லை என்பதால் நம் எதிர்வினையும் கண்ணீரும் பொருளற்றது அல்லது பலமற்றது என்று கொள்ள முடியுமா?இவற்றுக்கான வேர்க்காரணங்கள் குறித்து நாம் கவனம் குவிக்கவோ எஜுகேட் செய்யவோ நாம் தவறியிருக்கிறோம்நமது கோவத்தையும் அழுகையையும் கொட்டித்தீர்த்துவிட்டு நகர்ந்து விட்டோம்இந்தக் கேவலமான வெறியோடு திரிந்த பதினேழுபேரும் எப்படி ஒருங்கிணைந்தார்கள்?இவர்களை ஒன்றிணைத்த மையச் சரடு எது?இந்த அசிங்கமான வெறியை எப்படி ஒருவர் மற்றவருக்கு கடத்தினர்?இன்னும் பச்சையாக சொல்வதெனில் இவர்கள் எப்படித் தங்களை அடையாளம் கண்டு கொண்டனர்?இந்தக் குழந்தையை எப்படி இவர்கள் தேர்ந்தெடுத்தனர்?பொருளாதார வசதியற்ற இவர்களால் போதைக்கும் மற்றதற்கும் எப்படி செலவு செய்ய முடிந்தது?எனில், இதற்குப் பிண்ணனியில் படமெடுக்கும் கூட்டம்போன்றுஎவையேனும் இருக்கின்றனவா?அந்தக் குழந்தையின் சம்மதமின்றி இது நடந்திருக்காது என்று சொல்பவர்கள் இவர்களைவிடவும் குற்றவாளிகள் அல்லவா?குறைந்த பட்சம் இவற்றின் மீது நாம் இதுமாதிரி நகர்வுகளை முன்னெடுக்கலாமா?படைப்பாளிகளும் பதிவர்களும் இவற்றிற்கெதிராக கூட்டாக கையெழுத்திட்டு ஒரு பிரகடனத்தை வெளியிடலாமா?மாவட்டங்கள் தோறும் ஆர்ப்பாட்டம் தெருமுனைப் பிரச்சாரம் உண்ணாவிரதம் போன்ற எதிர் நடவடிக்கைகளில் ஈடுபடலாமா?வேறு என்னவெல்லாம் செய்யலாம்?#சாமங்கவிவதற்கு 26 நிமிடங்கள் இருக்கும்போது
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 26, 2018 11:25

16.07.18

வண்ணக்கதிரில் வந்திருந்த கவிதையை வாசித்துவிட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் செல்லத்துரை அழைத்தபோதுதான் விழித்தேன். கவிதையை அவரால் முடிந்தமட்டும் கொண்டாடித் தீர்த்தார். அந்தக் கவிதை இதுதான்,”துப்பிவிட்டுக் கடக்கின்றனர்
அன்பிற்காக யாசித்தபடி நீளும்
என் காலி கோப்பையில்
அவரவரவரும்
தம்மீதான யாரோ யாரோவின் அன்பாலும்
யாரோ யாரோவின் மீதான தமது அன்பாலும்
நுரைத்துப் பொங்குகிறது
யாரோ யாருக்கான யாரோ யாரின்
அன்பு
பருக முடிகிறது என்னால்
யாரோ யாருக்கான யாரோ யாருடைய
அன்பையும்
பருகுகிறேன்
அநிச்சையாக நீள்கிறதென் காலிக்கோப்பை
யாரேனும் ஒருவர் துப்பாமலா போவார்கள்
எனக்கே எனக்கான
ஒரு சொட்டு அன்பை”முடித்ததும் இன்று தமுஎச கூட்டம் இருக்குபோல என்றார். நான் ஏற்கனவே வேறு ஒரு கூட்டத்திற்கு நாள் கொடுத்த விவரத்தை சொல்லி வர இயலாமையை விளக்கினேன்.சரி சரி ஆதவனிடம் பேசுங்கள் என்றார்.***********அடுத்து தோழர் Aadhavan Dheetchanya அவர்களோடு வர இயலாமை குறித்து விளக்கிவிட்டு, “சொல்லுங்க தோழா செய்யறேன்” என்றேன்.அதன் பொருள் அதுதான். இப்பவும் சொல்கிறேன்<“சொல்லுங்க ஆதவன், செய்கிறேன்”*************************
பிறகு சிறுவாச்சூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடந்த பெருந்தலைவர் பிறந்த தின விழாவிற்கு புறப்பட்டு போனேன்.பொதுவாகவே வாட்ஸப் க்ரூப் என்றால் ஒருவிதமான அலுப்பே தோன்றுவது பொது புத்தியாகிப் போன காலத்தில் “நம்ம ஊரு நல்ல ஊரு” என்ற வாட்ஸப் க்ரூப் பிள்ளைகள் தமது ஊரின் ஊஒது பள்ளியை தத்தெடுத்து கோடை முழுக்க அந்தப் பள்ளி ஆசிரியைகளோடு இணைந்து வீடு வீடாகப் போய் பிரச்சாரம் செய்து ஒன்றாம் வகுப்பில் 17 குழந்தைகளை சேர்த்துள்ளனர்.சென்ற ஆண்டு முதல் வகுப்பு சேர்க்கை 13 என்பதை சேர்த்துப் பார்த்தால் இதன் வலிமை புரியும். சென்ற ஆண்டைவிட பெரும்பாண்மை பள்ளிகளில் இந்த ஆண்டு சேர்க்கை குறைவு என்ற உண்மை இந்த அமைப்பின் பிள்ளைகளையும் அந்தப் பள்ளியின் ஆசிரியைகளையும் கை எடுத்து கும்பிட வைக்கிறது.இளைஞர்களும் பெற்றோர்களும் என்று ஒரு நூறுபேர் திரண்டிருந்தனர். அனைத்துவகையான கல்வித்துறை அதிகாரிகளும் வந்திருந்தனர்.எப்படி பாரதியின் கனவை காமராசர் நிறைவேற்றினார் என்று பேசிவிட்டு பொதுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டிய அவசியத்தை சொல்லிவிட்டு வந்தேன்.யுவான் சுவாங் மேல்படிப்பிற்காகாக நாளந்தாவில் இருந்து காஞ்சி வந்தார் என்ற ஒரு தகவல் இருப்பதை சொல்லி அது உண்மை எனில் அதை வரலாறாக்க வேண்டும் என்றும் சொல்லி வந்தேன்.கிராம மக்கள் கல்வி அரசியலை மிக நுட்பமாக உள் வாங்குகிறார்கள்.அந்தப் பள்ளியை கொண்டுபோக வேண்டும் என்ற வெறி வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்களுக்கு இருக்கிறது.போக எவ்வளவு மறுத்தும் கவர் கொடுத்தார்கள். 2000 இருந்தது. அவர்களில் நால்வருக்கான இரண்டாண்டு சந்தாவாக அதை Kaakkai Cirakinile கு அனுப்பிவிட்டேன்வாழ்த்துவோம்*************************************இன்று தம்பி க. மூர்த்தி யின் பிறந்த நாள். காலையில் வாழ்த்து சொல்ல அழைத்திருந்தேன். எடுக்கவில்லை. இரவு அழைத்து வாழ்த்தைப் பெற்றுக் கொண்டார்.நீண்டு பேசினோம். நிறைய கிடைத்தது. நம்பிக்கை துளிர்த்தது.60 கிலோவும் கங்காக இருக்கிறார். ஊதிப் பெரிதாக்குவோம். தேசத்தின் அல்லனவற்றை, குறிப்பாக சாதியை பொசுக்கட்டும்
***************
#சாமங்கவிந்து ஆறு நிமிடங்கழித்து16.07.2018
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 26, 2018 11:05

July 1, 2018

கவிதை 086

என்ன சொல்லு என்கிறான் லேஷந் தான் வரைந்து வந்ததைக் காட்டிகாகம்போல் இருந்ததுகாகம்போல இருக்கென்றேன்அது காகம்தான்
நீதான் போல என்கிறான்நான்போலதான் போல நான்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 01, 2018 00:22

June 10, 2018

அவர்களைப் புறக்கணியுங்களேன்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களுக்கு ஏன் பிரதமர் இரங்கலைக்கூட தெரிவிக்கவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவரிடம் கேட்டு சொல்வதாகத் திமிரோடு சொல்லியிருக்கிறார் நிர்மலா.எமது வலியை இழப்பை இதைவிட அசிங்கமாக எவராலும் கேலி செய்ய முடியாது.ஊடகத் தோழர்களிடம் ஒன்று,கொல்லப்பட்டவர்கள் உங்கள் மக்கள்தானே? எனில், இந்த வலியும் இழப்பும் உங்களுக்குமானதுதானே?எனில்,உங்கள் இழப்பை கேவலப்படுத்திய அவர்களைப் புறக்கணியுங்களேன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 10, 2018 06:29

May 27, 2018

வேண்டாம் தமிழிசை

வேதாந்தா நிறுவனம் விரும்பினால் மோடியே வருவார். மோடியும் வேதாந்தாவும் பேசினால் அவர்களுக்கு டீ எடுத்துத் தரக்கூட உங்களை வைத்துக் கொள்ள மாட்டார்கள். உங்களை சந்திக்க நேரம் கேட்டார்களா அவர்கள்.வேண்டாம் தமிழிசை. அய்யாவோட பொண்ணும்மா நீ. ஓவரா அசிங்கப்படாத
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 27, 2018 06:19

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.