இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 93
February 5, 2018
உங்கள் எதிர் பட்டியலில் சேர்த்தமைக்கு
மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் பிற மதத்தினரும் இறைநம்பிக்கை இல்லாதவர்களும் கடை வைத்திருப்பதால் தீவிபத்து குறித்து விசாரனை நடத்த வேண்டும் என்று திருமதி தமிழிசை கூறியிருப்பதாகத் தெரிகிறது.இந்த தீ விபத்தின் மீது அவருக்கு அங்கு கடை வைத்துள்ள பிற மதத்தவரின் மீதும் இறைநம்பிக்கை இல்லாதவர்களின் மீதும் சந்தேகம் இருப்பதையே இதன்மூலம் அவர் கூற வருகிறார்.பொதுவாக இதுமாதிரி விஷயங்களில் நான் தலை கொடுப்பது இல்லை. ஆனால் போகிற போக்கில் இறைநம்பிக்கை இல்லாதவர்களையும் அவர் இதில் கோர்த்து விட்டிருப்பதால் நமக்கான தேவை இருக்கிறது.இரண்டு நாட்களாக முகநூலில் ஒரு ஆழமான கருத்து வந்துகொண்டே இருக்கிறது. அதை எழுதியவருக்கு என் நன்றி. அந்தக் கருத்து இதுதான்,“ஆத்திகர்கள் தாம் வணங்கும் தெய்வத்தைத் தவிர ஏனைய தெய்வங்களை நம்ப மறுப்பவர்கள். நாத்திகர்கள் இருப்பதாய் ஆத்திகர்கள் நம்பும் எல்லா தெய்வங்களையும் நம்பாதாவர்கள்.”இந்த வகையில் ஆத்திகர்களும் 99.99999999999999999%
நாத்திகர்களே.மனிதர்கள் புழங்கும் எந்த ஒரு இடத்தின் பாதுகாப்பு குறித்தும், அது எந்த மதத்தின் வழிபாட்டு இடமாக இருப்பினும் நாத்திகன் அக்கறையோடே இருப்பான். காரணம் எல்லா மக்களும் அவனது மக்களே.நாத்திகனையும் உங்கள் எதிர் பட்டியலில் சேர்த்தமைக்கு நன்றி தமிழிசை
நாத்திகர்களே.மனிதர்கள் புழங்கும் எந்த ஒரு இடத்தின் பாதுகாப்பு குறித்தும், அது எந்த மதத்தின் வழிபாட்டு இடமாக இருப்பினும் நாத்திகன் அக்கறையோடே இருப்பான். காரணம் எல்லா மக்களும் அவனது மக்களே.நாத்திகனையும் உங்கள் எதிர் பட்டியலில் சேர்த்தமைக்கு நன்றி தமிழிசை
Published on February 05, 2018 02:06
ஈஸ்வரியம்மான்னா ஈஸ்வரியம்மாதான்
யாரோ ஒரு ஆண் தோழரின் குரலில் " செல்லாத்தா... செல்ல மாரியாத்தா" ஓடிக்கொண்டிருக்கிறது பேருந்தில்இதன் ஒரிஜினலை எல்.ஆர். ஈஸ்வரியம்மா பாடியிருப்பார்கள். நாத்திகனென்னை கிறக்கிக் கட்டிப்போட்ட பாடல் அது. இன்றென்னவோ ஈர்க்கவே இல்லை.எல்லாவற்றையும் நகலெடுக்காதீர்கள் கனவான்களே. எரிச்சல் வருகிறதுசான்சே இல்ல ஈஸ்வரியம்மான்னா ஈஸ்வரியம்மாதான்
Published on February 05, 2018 02:05
January 22, 2018
நல்லது நடக்கட்டும்.
வடகொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையிலான உறவுநிலையை எதனோடு ஒப்பிடுவது என்று யோசிக்க யோசிக்க எதுவுமே உருப்படியாக சிக்க மறுக்கிறது.திரு கருணாநிதி மற்றும் செல்வி ஜெயலலிதாவோடு ஒப்பிடலாமெனில் இவர்களுக்கிடையேயான வெறுப்பும் பகையும்கூட அந்த அளவு இல்லைதான். போதாமை இருக்கிறது.இதற்கு இன்னொரு காரணமும் உண்டுகாரணம் இருபக்கிற பகையை ஊதிப் பெரிதாக்க ட்ரம்ப் மாதிரி ஒரு பகையூக்கி இங்கே இல்லைஇந்நிலையில் அடுத்தமாதம் தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் தமது நாடு பங்கேற்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்தார்.இதைக்கொண்டாடிய தென் கொரியா தொடக்க விழா பேரணியிலும் தம்மோடு இணைந்து வடகொரியா பங்கேற்க வேண்டும் என்ற தனது ஆசையை சொன்னதுஇதுகுறித்து சுவிட்சர்லாந்தில் இருநாடுகளும்கூடி ஆலோசனை நடத்துகின்றனஇந்த முயற்சி விளையாட்டையும் கடந்து கொரிய தீபகற்பத்தில் அமைதியை கொண்டுவரும் என்ற நம்பிக்கை இருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் தாமஸ் பாச் கூறுகிறார்செலவின மசோதாவை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் ட்ரம்பிற்கு இந்த நம்பிக்கையை குலைத்து போடுவதற்கான அவகாசம் இல்லை என்பதே நல்லது நடந்துவிடும் என்ற நம்பிக்கையை பலப்படுத்துகிறதுநல்லது நடக்கட்டும்.
Published on January 22, 2018 02:41
January 20, 2018
தனியாருக்கு லாவம் எனில்....?
பெட்ரோல் வெல இந்த ஆறு வருஷத்துல எவ்வளவு ஏறிடுச்சு, போக போக்குவரத்து தொழிலாளிகளோட சம்பளத்த வேற எவ்வளவு ஒசத்தியாச்சு. போக்குவரத்துக் கட்டணத்த ஒசத்தாம என்ன பன்ன முடியும்? என்கிகிற லகுவான வாதம் பொதுத் தளத்தில் அங்கங்கே வைக்கப் படுகிறது.ரொம்ப நியாயம்போலத் தோன்றும் இந்தக் கருத்தில் நிறையவே நியாயம் இருக்கிறது.ஆனால் அதைவிட ஒரு பெருநியாயம் நம்மிடம் இருக்கிறது.டீசல் விலை ஆறு வருடங்களில் மிகக் கடுமையாக உயர்ந்திருக்கிறது.ஊழியர்களின் ஊதியம் உயர்ந்திருக்கிறதுஇரண்டையும் மறுக்க இயலாது. இரண்டின் காரணமாகவும் அரசுக்கு நிறைய செலவு என்பதையும் மறுக்க இயலாது.ஆனால் இதற்காகவெல்லாம் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தவேண்டிய அவசியம் இல்லை.2006 இல் இருந்து தனியார் பேருந்துகளுக்கும் பேருந்து கட்டணம் ஏற்றப்படவில்லை. ஆனால் இந்தச் செலவுகளைத் தாங்க இயலாமல் எந்தத் தனியார் நிறுவனமும் தனது பேருந்துகளை நிறுத்தவில்லை.இன்னும் சொல்லப்ப்போனால் நியாயமான இடைவெளியில் எல்லா தனியார் நிறுவனங்களும் புதிய பேருந்துகளை மாற்றவே செய்தன. ஒழுங்காகப் பராமரிக்கவும் செய்தன.உண்மையைச் சொல்வதெனில் பல அரசு நகரப் பேருந்துகளில் ஒலிப்பானைத் தவிர அனைத்தும் சத்தம் போடுகின்றன.கிழிந்த இருக்கைகள், சிதைந்த இருக்கைகள்.ஆனாலும் நான் தொடர்ந்து அரசுப் பேருந்துகளில் மட்டுமே பயணிப்பவன். ஓட்டுநர்களின் தயவினால்மட்டுமே எனது பயணங்கள் சேதாரம் இன்றி தொடர்கின்றன..தனியார் பேருந்துகளில் ஊதியம் குறைவு. ஆனால் அதை இயக்குவது எளிது. பல அரசுப் பேருந்துகளை இயக்கினால் முதுகுவலி வந்துவிடும்எந்த முதலாளியும் நட்டத்தோடு பேருந்துகளாஇ இயக்கி இருக்கமாட்டார்.. எனில் லாவம் இருக்கிறது.தனியாருக்கு லாவம் எனில்....?
Published on January 20, 2018 10:34
வாழ்க கேட்கும் வளமுடன்.
மணல வெளிமாநிலத்துக்கு அனுப்பி கொள்ள அடிக்கிறான். எவனாச்சும் கேக்கறானா?பெட்ரோல் விலைய வாராவாராம் ஏத்துறான். எவனாச்சும் கேக்கறானா?வெங்காயம் வெல அப்பப்ப வானத்த தாண்டுது. இத எவனாச்சும் கேக்கறானா?இன்னிக்கு பஸ் கட்டணத்த தாறுமாறா ஏத்திருக்கான். யாராச்சும் கேக்கறானா?ஆமா நாம எதத்தான் கேட்போமாம்?எவனாச்சும் கேக்கறானானு கேட்போம்.வாழ்க கேட்கும் வளமுடன்.
Published on January 20, 2018 08:44
January 17, 2018
அணில் கடித்த கொய்யா
அணில் கடித்த கொய்யான்னா டேஸ்டாதானிருக்கும் என்று சொன்ன பொடிசிடம் இன்னொரு பொடிசு சொன்னது "டேஸ்டான கொய்யாவதான் அணில் கடிக்கும்"
Published on January 17, 2018 23:23
பெரம்பலூர் புத்தகக் கண்காட்சிகளின் அடையாளம்
கல்வி நிலையங்களே பெரம்பலூரின் அடையாளம்.பெரம்பலூரை ஒரு மிக நவீன வசதிகளைக் கொண்ட பேரூர் என்றும் சொல்லலாம், மிகக் குறைந்தபட்ச நவீன கட்டமைப்புகளைக் கொண்டிருக்கும் சிறு நகர் என்றும் கொள்ளலாம்.உண்மையைச் சொன்னால் எது ஒன்றை படிப்பதற்காகவும் எங்கள் ஊர் குழந்தைகள் வேறு ஊருக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை. மருத்துவக் கல்லூரி உள்ளிட்டு எல்லாம் உண்டு எங்கள் ஊரில்.அந்தமான் உள்ளிட்டு எல்லா மாநிலங்களில் இருந்தும் இங்கு வந்து படிக்கும் குழந்தைகளையும் சேர்த்து எங்கள் ஊரில் உயர்கல்வி படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகம்.இதில் ஏறத்தாழ 75 சதவிகிதம் பிள்ளைகளாவது எங்கள் ஊரில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு வந்து நூல்களை வாங்கும் வழக்கத்தில் இருப்பவர்கள். அதிலும் பலர் பலமுறை வந்து வாங்கிப் படிக்கும் ஆர்வம் உள்ளவர்கள்.பக்கத்து ஊர் மக்களும் திருவிழாவிற்கு போவதுபோல் வர ஆரம்பித்திருந்த நேரம்.நிகழ்சீகளை நடத்துவதற்கு ஸ்பான்சருக்கும் பிரச்சினையே இல்லாத ஊர்.இதுவரை ஆறு பதிப்பகங்கள்வழி பத்து நூல்கள் வந்திருக்கு. அவறில் சில பதிப்பகங்கள் பெரம்பலூர் கண்காட்சியில் ஸ்டால் எடுத்த்வர்கள். அவர்களில் யாரும் முகம் சுழிக்கும் அளவிற்கு விற்பனை இருந்ததும் இல்லை.கல்வி நிலையங்களே பெரம்பலூரின் அடையாளம் என்று தொடங்கினேன். தொடர்ந்து நடந்தால் புத்த்கக் கண்காட்சிகளே பெரம்பலூரின் அடையாளமாக மாறும்.இப்படி இருக்க அதைத் தொடர்வதில் இவர்களுக்கு என்ன தயக்கம்?இந்தத் துறையில் அனுபம் உள்ள என்களைப் போன்றவர்களை அழைத்துப் பேசினால் எந்தச் சிக்கல் தீர்ந்து போகாது?அருள்கூர்ந்து தொடர்ந்து நடத்துங்கள்.சத்தியம் செய்கிறேன்ஒருநாள் பெரம்பலூர் புத்தகக் கண்காட்சிகளின் அடையாளமாக மாறும்.
Published on January 17, 2018 07:22
January 16, 2018
எதனால் மரணம்?

சந்தேகத்திற்கிடமான ஒரு மனிதனின் மரணம் குறித்து விசாரிக்கத் தேவையில்லை என்று சொல்வது அவரது மகனே ஆயினும் அந்தக் கூற்றுக்காகவே அவனும் அவசியம் விசாரிக்கப்பட வேண்டியவன்
Published on January 16, 2018 06:29
எதைப் பேசக்கூடாதென்று யார் அவரை நெருக்குகிறார்கள்?

தன்னை என்கவுண்டர் செய்வதற்கு முயற்சி நடப்பதாக வும் ராஜஸ்தான் காவல்துறை தன்னை இம்சிப்பதாகவும் திரு தொகாடியா கூறுகிறார்.அவர் இருப்பது குஜராத்தில்அவரைக் கைது செய்ய வந்திருப்பது ராஜஸ்தான் காவல்துறைஇரண்டு மாநிலங்களிலும் மத்தியிலும் அவரது சொல் பேச்சைக் கேட்கக்கூடிய பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சி.அவர்களது ஆட்சி நடக்கக்கூடிய குஜராத்தில் அவர் மாயமாகிவிட்டதாக காவல்துறை சொல்கிறது.இல்லை சர்க்கரை அளவு கணிசமாகக் குறைந்துவிட்டதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை கூறுகிறதுதனது வாயை அடக்க அரசு முயல்கிறது என்கிறார். எனில்எதைப் பேசக்கூடாதென்று யார் அவரை நெருக்குகிறார்கள்?2015 இல் இவர்மீது ராஜஸ்தானில் பதியப்பட்ட வழக்குக்காக இவரை இப்போது தேடி வந்ததாக ராஜஸ்தான் காவல்துறை சொல்கிறது. எனில்,1) இவ்வளவு காலம் எப்படி , ஏன் இவரைக் கைது செய்யாமல் விட்டு வைத்தார்கள்?
2) இவ்வளவு காலம் விட்டு வைத்தவர்கள் இப்போது அவரைத்தேடுவதற்கு அவரே குறிப்பிடுவதுபோல ஏதேனும் உள்குத்து இருக்கிறதா?தொகாடியா கலவரத்தைத் தூண்டும்விதமாகப் பேசியதற்காக வழக்கு எனில் தமிழ்நாட்டில் அவர் இதைவிடக் கொடூரமாக பேசியதற்கு ஏன் வழக்குள் ஏதும் இல்லை?மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவரை சென்று சந்தித்த ஹர்திக் பட்டேல் மற்றும் காங்கிரச் தலைவர்களது இந்த செயலை மனுஇதாபமான நடவடிக்கையாகவே கொள்வோம் இப்போதைக்கு.நமது அய்யங்களும் தெளிவுபெற வேண்டும், அவரும் நலம் பெற வேண்டும்.
Published on January 16, 2018 03:01
அவர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை?

தோழர் P. Sakthi Balan ஒரு சிறிய காணொலியை அனுப்பி வைத்திருக்கிறார்.ஒரு கூட்டத்தில் திரு எச் ராஜா பேசியதை பிடித்து ஒளிபரப்பினார்களா அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியேவா என்பது தெரியவில்லை. அதில் ,இரண்டு சாதிகளின் பெயரைச் சொல்லி அவர்கள் கோவிலுக்கு போகக்கூடாது என்று உரக்கப் பேசுகிறார்.இரண்டு சந்தேகங்கள்1) அது தொலைக்காட்சி தயாரித்த நிகழ்ச்சி எனில் அதை எப்படி ஒளிபரப்பினார்கள்?
2) இப்படிக் கேவலமாகப் பேசிய அவர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை?(அது எந்தத் தொலைக்காட்சி என்பதை அறிந்த நண்பர்கள் அறியத் தாருங்கள்)பயமாய் இருக்கிறது ஒரு பெரிய தேசியக்கட்சியின் தேசிய செயலாளரை அவன் இவன் என்று பேசிவிடுவோமோ என்று
Published on January 16, 2018 00:56
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)