மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் பிற மதத்தினரும் இறைநம்பிக்கை இல்லாதவர்களும் கடை வைத்திருப்பதால் தீவிபத்து குறித்து விசாரனை நடத்த வேண்டும் என்று திருமதி தமிழிசை கூறியிருப்பதாகத் தெரிகிறது.இந்த தீ விபத்தின் மீது அவருக்கு அங்கு கடை வைத்துள்ள பிற மதத்தவரின் மீதும் இறைநம்பிக்கை இல்லாதவர்களின் மீதும் சந்தேகம் இருப்பதையே இதன்மூலம் அவர் கூற வருகிறார்.பொதுவாக இதுமாதிரி விஷயங்களில் நான் தலை கொடுப்பது இல்லை. ஆனால் போகிற போக்கில் இறைநம்பிக்கை இல்லாதவர்களையும் அவர் இதில் கோர்த்து விட்டிருப்பதால் நமக்கான தேவை இருக்கிறது.இரண்டு நாட்களாக முகநூலில் ஒரு ஆழமான கருத்து வந்துகொண்டே இருக்கிறது. அதை எழுதியவருக்கு என் நன்றி. அந்தக் கருத்து இதுதான்,“ஆத்திகர்கள் தாம் வணங்கும் தெய்வத்தைத் தவிர ஏனைய தெய்வங்களை நம்ப மறுப்பவர்கள். நாத்திகர்கள் இருப்பதாய் ஆத்திகர்கள் நம்பும் எல்லா தெய்வங்களையும் நம்பாதாவர்கள்.”இந்த வகையில் ஆத்திகர்களும் 99.99999999999999999%
நாத்திகர்களே.மனிதர்கள் புழங்கும் எந்த ஒரு இடத்தின் பாதுகாப்பு குறித்தும், அது எந்த மதத்தின் வழிபாட்டு இடமாக இருப்பினும் நாத்திகன் அக்கறையோடே இருப்பான். காரணம் எல்லா மக்களும் அவனது மக்களே.நாத்திகனையும் உங்கள் எதிர் பட்டியலில் சேர்த்தமைக்கு நன்றி தமிழிசை
Published on February 05, 2018 02:06