இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 94
January 15, 2018
வலுத்துப்போயிருக்கிறது வானதி மேம்

வானதி மேம் அச்சேறுமுன் அறிக்கையை ஒருமுறை வாசித்துப் பார்த்து எழுத்துப் பிழை நீக்கி தரக்கூடாதா?கடவுள் மறுப்புக் கொள்கை வலுத்துப் போயிருக்கிறது என்ற உங்கள் கருத்து கடவுள் மறுப்புக் கொள்கை உலுத்துப் போயிருக்கிறது என்று வந்திருக்கிறது
Published on January 15, 2018 21:58
அகவியின் தலித்திய கவிதைகள்
இந்தப் புத்தகத் திருவிழாவிற்கு மூன்று நூல்கள் வந்திருக்க வேண்டும்.( Vetrimozhi Veliyeetagam) என்மீது கொண்ட பேரன்பால் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார்கள். தொகுத்துத் தர இயலவில்லை. விடாது நச்சரித்துக்கொண்டிருந்த தம்பி திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் கோவத்தில் பேசுவதையே நிறுத்திக் கொண்டான். ஆனாலும் புத்தகத் திருவிழா முடிந்ததும் அவற்றைத் தொகுக்க வேண்டும். பெரம்பலூர் புத்தகத் திருவிழா சமயத்தில் கொஞ்சம் மெனக்கெட்டு சிறப்பாக வெளியீட்டு விழாவை பெரம்பலூரில் நடத்திவிட ஆசை. பார்ப்போம் இயற்கை என்ன செய்கிறது என்று. இரண்டு மூன்று நிறுத்தங்களுக்கு முன்னரே காலாவதியாகிவிட்ட பயணச்சீட்டோடுதான் என் பயணம் நகர்வதாகப் படுகிறது. பார்ப்போம்இந்தநிலையில் எனதுஇளைய தோழன் அகவி Vinayaga Moorthyயின் “தலித் கவிதையியல்” யாளி பதிப்பகத்தின் வழியாக வெளிவந்திருப்பது மகிழ்ச்சியாயிருக்கிறது. அட்டை மிக அழகாகவும் புத்தகத்தின் ஆழத்தை எடுத்துச் சொல்கிறவிதமாகவும் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.பெரம்பலூரில் இருந்து யாரேனும் எழுதமாட்டார்களா என்று என் நெஞ்சில் எப்போதும் கனன்றுகொண்டே இருக்கும் ஏக்கத்தை இந்தநூல் நிறைவு செய்திருக்கிறது.அகவி மிகப்பெரிய எழுத்துக்காரன். என்ன, அந்த இளைஞன் இன்னும் இதை உணர்ந்தானில்லை.அந்த உண்மையை இவன் உணாரும் புள்ளியில் இவனிடமிருந்து நிறைய வெளிவரும்.வாழ்த்துக்கள் அகவி. போக இன்னும் நிறைய இருக்கிறது.முடியும் அகவியால்.க. மூர்த்தி, Dhahir Batcha போன்றோரின் நூல்களை ஆவலோடு ஏங்கி எதிர்பார்க்கும் இந்தப் பொருட்டற்றவனின் ஆசையை இந்த இளைய தோழர்கள் அன்போடு பரிசீலிக்க வேண்டும்.வாசித்துவிட்டு எழுதுகிறேன்.இப்போதைக்கு என் வாழ்த்தும் முத்தமும் அகவி
Published on January 15, 2018 21:50
October 22, 2017
இப்படி யோசிப்போமே
விஜய் தொலைக்காட்சியில் இன்று அழகில் சிறந்தவர்கள் கேரளப் பெண்களா? தமிழ்ப் பெண்களா? என்கிற தலைப்பில் நீயா நானா நடக்க இருப்பதாக அறிய முடிகிறது.பெண்களைக் கேவலப் படுத்துவது போல இந்தத் தலைப்பு இருப்பதாக நிறைய எதிர்விணைகளை முகநூலில் பார்க்க முடிகிறது. அவற்றில் சில மேம்போக்காகவும் சில மிக ஆழமாகவும் அமைந்திருக்கின்றன.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபோது கேரள முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் அந்த மாநிலத்தின் கவர்னரும் ஒரே விமானத்தில் பயனித்து சென்னை வந்து சென்னை விமான நிலையத்திலிருந்து ஒரே வாடகைக் காரில் வந்து மரியாதை செலுத்திவிட்டு அதே வாடகைக் காரில் விமான நிலையம் போய் அங்கிருந்து கேரளா போகிறார்கள்.இந்த எளிமைக்கு காரணம் அந்த மூவரில் தனிப்பட்ட வகையில் யாருமல்ல. அது அந்த மண்ணின் வெகுஜன அரசியலின் கலாச்சாரம். இந்தக் கலாச்சாரம் ஏன் தமிழ் மண்ணில் இல்லை என்கிற விவாதத்தை எந்த ஊடகமும் தொடங்க வில்லை?அந்த மநிலத்தில் முன்னாள் முதல்வர்கள் போதுப் பேருந்துகளில் மிக சகஜமாக பயணிக்கிறார்கள்.கல்வியில் மிகச் சிறந்து விளங்குகிறது.இவை பற்றியெல்லாம் ஏன் ஊடகங்கள் விவாதங்களைத் தொடங்குவதில்லை என்றெல்லாம் கேள்விகள் முகநூலில் எழுகின்றன.மகிழ்ச்சியாக இருக்கிறது.அங்கங்கு நமது எதிர்ப்பை நம்மால் முடிந்தவரைத்ந்திரண்டு காட்டினால் என்ன?
அல்லது கேரளாவிற்கும் நமக்குமான வேறுபாடுகள் குறித்து பொதுவெளியில் நாம் பேசினால் என்ன?
அல்லது கேரளாவிற்கும் நமக்குமான வேறுபாடுகள் குறித்து பொதுவெளியில் நாம் பேசினால் என்ன?
Published on October 22, 2017 01:09
September 27, 2017
என் வீட்டிலிருந்து...
கலைமணி மிக நேர்த்தியான கவிதைகளைத் தந்து கொண்டிருக்கிறாள். உரைநடைக்கு வா என்று அவ்வப்போது கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.
நல்ல வாசிப்பாளி. எந்திரக்கணக்காய் வாசித்துக் குவித்தவள். பழைய மாதிரி வாசிப்பதில்லை தற்போது.
நன்கு எழுத வரும். ஆனால் எழுதுவதில்லை.
என்ன செய்வது என்று குழம்பிக் கிடந்த பொழுதொன்றில் இருவரும் NCBH செல்ல வேண்டியத் தேவை வந்தது. இரண்டு மூன்றுமுறை”கீதாரி” யை எடுத்துப் பார்ப்பதும் வைப்பதுமாய் இருந்தாள். பார்த்துவிட்டேன்.
அவளுக்கேத் தெரியாமல் அதை வாங்கி “படி, தமிழ்ச்செல்வியின் எழுத்து நல்லா இருக்கும் என்று சொன்னேன்.
ஒரு அழகான ’ரைட் அப்’ கொடுத்திருக்கிறாள். ஒரு ரைட் அப் எப்படி தொடங்கப்பட்டு எப்படி நகர வேண்டுமோ அப்படி நகர்கிறது.
ஒரு தம்ளர் தண்ணீர்தான் . குற்றல நீர் வீழ்ச்சியையே அவளால் கொண்டுவந்து தரமுடியும் அவளால்.
இனி வாங்கிக் குவித்து வாசிக்க வைக்க வேண்டும்.
என் வீட்டிலிருந்து பெண்ணொருத்தி எழுதுகிறாள் என்ற திமிரோடு அதைப் பந்தி வைக்கிறேன். வாசித்து வாழ்த்துங்கள். மகிழ்ந்து நன்றி சொல்வேன்.
**********************************
NCBH புத்தக நிலையத்தில் இந்தப் புத்தகத்தைக் கையிலெடுத்துப் பார்த்துப் பின் வைத்துவிட்டேன். "சு.தமிழ்ச்செல்வியின் எழுத்து நல்லாயிருக்கும், படி பாப்பா" என்று தோழர்.இரா எட்வின் நூலை வாங்கிக் கையில் திணித்தார். பத்து நாட்கள் பொறுத்திருந்து கையில் எடுத்தேன் இன்று காலை 10 மணியளவில். இரு பிள்ளைகளுக்கும் விடுமுறை என்பதால் நானும் விடுப்பில்..ஒரு கையில் கீதாரியும் மறுகையில் தேநீர்த் தயாரிப்புமாய் 11/30 மணி..ஒரு கையில் கீதாரியும் மறுகையில்அரிசியுமாய் , 12 மணி..ஒரு கையில் கீதாரியும் மறுகையில்கரண்டியுமாய் சமையலில், 12/30 மணி..இப்படிவலது மாறினாலும் இடது மாறாமல் முழுவதும் படித்து முடித்தபோது 1/45.படித்து முடித்து ஒருமணிநேரம் கடந்துவிட்டது.ஆனால் புத்தகம் இப்போது இருகைகளிலும்.மூடி வைக்க மனமில்லை.வாழ்த்துச் சொல்லவா?கண்கலங்கி நின்ற வரிகளுக்காக வைது தீர்க்கவா?சொல்லுங்கள் தோழி சு.தமிழ்ச்செல்வி
நல்ல வாசிப்பாளி. எந்திரக்கணக்காய் வாசித்துக் குவித்தவள். பழைய மாதிரி வாசிப்பதில்லை தற்போது.
நன்கு எழுத வரும். ஆனால் எழுதுவதில்லை.
என்ன செய்வது என்று குழம்பிக் கிடந்த பொழுதொன்றில் இருவரும் NCBH செல்ல வேண்டியத் தேவை வந்தது. இரண்டு மூன்றுமுறை”கீதாரி” யை எடுத்துப் பார்ப்பதும் வைப்பதுமாய் இருந்தாள். பார்த்துவிட்டேன்.
அவளுக்கேத் தெரியாமல் அதை வாங்கி “படி, தமிழ்ச்செல்வியின் எழுத்து நல்லா இருக்கும் என்று சொன்னேன்.
ஒரு அழகான ’ரைட் அப்’ கொடுத்திருக்கிறாள். ஒரு ரைட் அப் எப்படி தொடங்கப்பட்டு எப்படி நகர வேண்டுமோ அப்படி நகர்கிறது.
ஒரு தம்ளர் தண்ணீர்தான் . குற்றல நீர் வீழ்ச்சியையே அவளால் கொண்டுவந்து தரமுடியும் அவளால்.
இனி வாங்கிக் குவித்து வாசிக்க வைக்க வேண்டும்.
என் வீட்டிலிருந்து பெண்ணொருத்தி எழுதுகிறாள் என்ற திமிரோடு அதைப் பந்தி வைக்கிறேன். வாசித்து வாழ்த்துங்கள். மகிழ்ந்து நன்றி சொல்வேன்.
**********************************

NCBH புத்தக நிலையத்தில் இந்தப் புத்தகத்தைக் கையிலெடுத்துப் பார்த்துப் பின் வைத்துவிட்டேன். "சு.தமிழ்ச்செல்வியின் எழுத்து நல்லாயிருக்கும், படி பாப்பா" என்று தோழர்.இரா எட்வின் நூலை வாங்கிக் கையில் திணித்தார். பத்து நாட்கள் பொறுத்திருந்து கையில் எடுத்தேன் இன்று காலை 10 மணியளவில். இரு பிள்ளைகளுக்கும் விடுமுறை என்பதால் நானும் விடுப்பில்..ஒரு கையில் கீதாரியும் மறுகையில் தேநீர்த் தயாரிப்புமாய் 11/30 மணி..ஒரு கையில் கீதாரியும் மறுகையில்அரிசியுமாய் , 12 மணி..ஒரு கையில் கீதாரியும் மறுகையில்கரண்டியுமாய் சமையலில், 12/30 மணி..இப்படிவலது மாறினாலும் இடது மாறாமல் முழுவதும் படித்து முடித்தபோது 1/45.படித்து முடித்து ஒருமணிநேரம் கடந்துவிட்டது.ஆனால் புத்தகம் இப்போது இருகைகளிலும்.மூடி வைக்க மனமில்லை.வாழ்த்துச் சொல்லவா?கண்கலங்கி நின்ற வரிகளுக்காக வைது தீர்க்கவா?சொல்லுங்கள் தோழி சு.தமிழ்ச்செல்வி
Published on September 27, 2017 08:09
September 16, 2017
நானூறு தேவதைகளின் தகப்பன்
மிகுதியான மன இறுக்கத்தோடு அமர்ந்திருக்கிறேன்.சந்தியா தலைமையில் ஐந்தாறு குட்டித் தேவதைகள் அறைக்குள் படை எடுக்கின்றனர். இந்தப் பிள்ளைகள் பேச ஆரம்பித்தால் நரசிம்மராவே சிரிப்பார். பார்த்த மாத்திரத்தில் இறுக்கம் ஓடிவிட்டது.“வாங்ங்ங்க... வாங்ங்ங்க”“சார், எனக்கு பின்னடி உக்காந்திருப்பாள்ள...”“இப்படி கிட்டக்க வாங்க மேடம்” என்றவாறே பிள்ளையை இடுப்போடு அணைத்தவாறே, “ ம்ம்ம், சொல்லுங்க. என்ன செஞ்சா அவ உங்கள”“தலையிலேயே அடிக்கிறாங்க சார். ஒரு தாட்டினா பரவாயில்ல. அடிச்சுக்கிட்டே இருக்கா. இப்ப வாங்க , என்னானு கேளுங்க”“ இதுக்குத்தான் இத்தன எரும வந்தீங்களா? ( எருமை என்றால் தேவதை என்பது என் பிள்ளைகளுக்குத் தெரியும்)”“அதுக்கு எதுக்கு நான் வந்துக்கிட்டு. அவளுக்கு நான் உன் ப்ரண்டுன்னு தெரியாம இருக்கும். ““ம்”“நேரா போ”“ம்”“போயி, நான் எட்வினோட ப்ரண்டு. என்ன வம்பிழுத்தா எட்வின் வருவான். அடிப்பான்னு சொல்லு போ”போய்விட்டார்கள்.கொஞ்ச நேரம் கழித்து நான் வகுப்புகளைச் சுற்றிப் பார்க்க கிளம்புகிறேன். மரத்தடியில் குழந்தைகளை அமரச் செய்து தம்பிகள் அரவிந்தும் சுந்தரமூர்த்தியும் எதையோ வாசிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களோடு நிற்கிற போது அந்த தேவதைப் பட்டாளம் வருகிறது.“என்ன சாமி, சொன்னியா?”“சொன்னேன்”“என்ன சொன்ன?”“நான் எட்வினோட ப்ரண்டு. ஏங்கிட்ட வம்பு வச்சுகிட்டா அவன் வருவான், அடிப்பான்னு சொன்னேன்”“ஐ, அப்புறம்?”“அவ எட்வின் எனக்கும் ப்ரண்டுதான் எனக்கும் வருவான் சொல்றா. வந்து என்னான்னு கேளுங்க”அரவிந்தும் சுந்தரமூர்த்தியும் அதிர்கிறார்கள்.நானூறு தேவதைகளின் அப்பன் நான்.( ஹெட் மாஸ்டர அவன் இவன் என்று சொல்லலாமா என்று யாருக்கேனும் நெருடல் வருமெனில் இந்த தேவதைகளின் அப்பனிடம் அதற்கான பதில் எதுவும் இல்லை. ரொம்ப உறுத்துமெனில் அவர்கள் என்னை உதறிச் செல்லலாம்)
Published on September 16, 2017 00:02
September 2, 2017
கவிதை 082
நீங்கள் கொடுத்த பாடத்திட்டம்தான்
நீங்கள் கொடுத்த புத்தகங்கள்தான்
நீங்கள் கொடுத்த கேள்வித்தாள்தான்
நீங்கள் கொடுத்த தாளில்தான்
நீங்கள் குறித்து கொடுத்த நாளில்தான் நீங்கள் அனுப்பிய கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில்தான் எழுதினாள்
நீங்கள் அனுப்பிய ஆசிரியர்கள்தான் திருத்தினார்கள்
இத்தனைக்குப் பிறகுதான் இவ்வளவு எடுக்கிறாள்.நீங்கள் மதிப்பிட்ட உங்கள் பிள்ளையைத்தான் அவன் தகுதி இல்லாதவனு சொன்னான்நீ போட்ட மதிப்பெண் செல்லாதுன்றான்நீ போட்ட மதிப்பெண்ணை அவன் அசிங்கப் படுத்தியதும் குழந்தை நாண்டுக்கறாஅசிங்கம் பார்க்க நமக்கேது நேரம்எம் எல் ஏ ஓடிப்போயிடப்போறான்
அவனக் கவனி
நீங்கள் கொடுத்த புத்தகங்கள்தான்
நீங்கள் கொடுத்த கேள்வித்தாள்தான்
நீங்கள் கொடுத்த தாளில்தான்
நீங்கள் குறித்து கொடுத்த நாளில்தான் நீங்கள் அனுப்பிய கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில்தான் எழுதினாள்
நீங்கள் அனுப்பிய ஆசிரியர்கள்தான் திருத்தினார்கள்
இத்தனைக்குப் பிறகுதான் இவ்வளவு எடுக்கிறாள்.நீங்கள் மதிப்பிட்ட உங்கள் பிள்ளையைத்தான் அவன் தகுதி இல்லாதவனு சொன்னான்நீ போட்ட மதிப்பெண் செல்லாதுன்றான்நீ போட்ட மதிப்பெண்ணை அவன் அசிங்கப் படுத்தியதும் குழந்தை நாண்டுக்கறாஅசிங்கம் பார்க்க நமக்கேது நேரம்எம் எல் ஏ ஓடிப்போயிடப்போறான்
அவனக் கவனி
Published on September 02, 2017 09:50
July 29, 2017
வந்து சந்திக்கிறேன்...

இது நடந்து 25 ஆண்டுகள் இருக்கும். ஈரோட்டில் கலை இரவு. உரையாற்ற வேண்டிய யாரோ கல்ந்துகொள்ள இயலாத காரணத்தால் மாற்று உரையாளனாய் கலந்து கொள்கிறேன்.தோழர் முத்து சுந்தரம் நிகழ்ச்சியைத் தொகுத்துக் கொண்டிருக்கிறார். பேசி முடித்துவிட்டு இறங்கியதும் கை கொடுக்கிறார். வெடவெடன்னு கை காலெல்லாம் உதறுகிறது. காரணம் RMS என்ற அந்தப் பேராளுமையின் ஆட்டோகிராப் வாங்கிவிட மாட்டோமா என்று மனது அலைந்து கொண்டிருந்த நேரம். பக்கத்தில் நிற்பதையே பிறவிப் பெரும் பயனாய் நினைத்தால் என் ஹீரோ என் கையைப் பிடித்தப் பிடி நழுவாமல் என் உரையைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.அன்றையத் தேதியில் மேடை உலகின் உச்சத்தில் இருந்த ஒரு உரையாளுமை மேடையில் நடை பழகிக் கொண்டிருந்த ஒரு துரும்பொத்த என்னிடம் அவ்வளவு இயல்பாக பெசியது என்னை பிசைந்து போட்டது. ‘கன்வின்ஸ் பன்ன முயற்சிக்கிறீங்க தோழர். குரல் நெகிழ்ந்து அதற்கு ஒத்துழைக்கிறது. உடையமல் குரலை உச்சத்திற்கு கொண்டு போகிறீர்கள். பெரிசா வருவீங்க’ என்பது மாதிரி சொல்கிறார்.யாருக்கு வரும் இப்படியொரு மனசு. எல்லோரும் கேட்கிறார்கள் , ‘எப்படி எட்வின் நாலு வார்த்த நல்லா பேசினாலே இப்படி இளைஞர்களைக் தோளில் தூக்கிக் கொண்டாடுகிறீர்களே’ என்று.அது உண்மையெனில் அந்த ஒரு சொட்டு ஈரத்தை அந்த இரவில் அந்தப் பெருஞ்சுனையில் இருந்துதான் எடுத்து வந்திருக்க வேண்டும். செலவழிக்க செலவழிக்க தீர்ந்துபோகாமல் என்னிடம் ஈரம் சுரப்பதற்கு ஒரே காரணம் அது முத்து சுந்தரம் என்னும் சுனையின் துளி.அப்போது எங்களது சங்கத்தின் மாநில அலுவலகத்தின் கீழ்ப் பகுதியில்தான் குடியிருந்தார். அடிக்கடி என்பதைவிட மாதம் மூன்று முறையேனும் சென்னை செல்லும் வழக்கத்தில் இருந்த நேரம் அது. ஒருமுறை அப்படித்தான் நுங்கம்பாக்கம் ரயிலடியில் இறங்கி அலுவலகம் நோக்கி நடக்கத் தொடங்குகிறேன்.இயற்கை உபாதை ஆரம்பமாகிறது. ஆட்டோ பிடித்து அலுவலகம் போனால் பூட்டிக் கிடக்கிறது. அலுவலக செயலாளர் ரவி எங்கோ போய்விட்டார். பொதுக் கழிவறையும் அந்தப் பகுதியில் கிடையாது.அப்போது வீட்டில் இருந்து எட்டிப்பார்த்த தோழரின் இணையர் ’என்ன எட்வின் ரவி இல்லையா? வாங்க உள்ள’ என அழைத்து உட்கார வைத்து தேநீர் தருகிறர். எனக்கோ கலக்குகிறது. கேட்கவும் கூச்சம்.எனது அவஸ்தையைப் புரிந்துகொண்ட தோழர் ‘என்ன தோழர் ரெஃப்ரெஷ் பண்ணனுமா. போங்க’ என்று வழிகாட்டுகிறார். நான் வெளியே வருவதற்குள் தோழர் RMS வந்துவிட்டார். தோழர் நடந்ததை சொன்னதும் கடகடவென சிரித்தவாறே “டாய்லெட் போகனும்னு சொல்ல வேண்டியதுதானே எட்வின்’ என்கிறார்..நீங்க இல்லையா அதனாலதான் என்று முடிப்பதற்குள் கன்னத்தில் அறை விழுகிறது எனக்கு.தோழமைக்குள் இதுமாதிரி விஷயங்களில் கூச்சம் கூடாது என்று கத்துக் கொடுத்தது அந்தச் செல்ல அறை.ஒருமுறை DPI செல்கிறேன். இப்போதைய தொடக்கக் கல்வி இயக்குனரான கார்மேகம் சார் அப்போது JD HS ஆக இருந்தார். அவரது அறைக்குள் நுழைகிறேன். உள்ளே அப்போது ஈரோட்டில் பயிற்சி மாவட்டக் கல்வி அலுவலராக இருந்த அருள்முருகன் சார் வரவேற்கிறார். இப்போது அவர் இணை இயக்குனராக இருக்கிறார்.எப்படிப் போகிறது DEO பணி என்று கேட்கிறேன். பணி எல்லாம் சிறப்பாகத்தான் போகிறது என்றும் ஊதியம் பெறுவதில்தான் இழுபறி நிகழ்வதாகவும் சொன்னார். அவரது நேர்முக உதவியாளர் பயங்கர ஸ்ட்ரிக்ட் என்றும் எல்லா ஆவணங்களையும் கொடுத்தால்தான் ஊதிய ஃபைல் அவரிடம் இருந்து நகருமென்றும் பெருமையோடு சொன்னார்.ஆக அவரது அதிகாரிக்கான ஊதிய ஃபைலையே சரியாக இருந்தால்தான் நகர்த்தக் கூடியவர். அவ்வளது கறார்.எத்தனைப் பெற்றோம்?
எத்தனை கற்றோம்?அவரது சங்கப் பணிகளும் தியாகமும் பற்றிப் பேசுவதற்குரிய தகுதி பெறவே எனக்கு இன்னும் கொஞ்சகாலம் ஆகும்.போய் வாருங்கள் RMS. வந்து சந்திக்கிறேன்
Published on July 29, 2017 22:40
June 16, 2017
வேண்டல்....
எமது பள்ளியில் எளிய அளவில் ஒரு வாசிப்புக் கூடம் ஏற்பாடு செய்ய இருக்கிறோம்.உங்களிடம் உள்ள பழைய குழந்தைகள் நூல்களை அனுப்பி உதவுங்களேன்இரா எட்வின்
தலைமை ஆசிரியர்
அருள்மிகு மாரியம்மன் மேல்நிலைப் பள்ளி
சமயபுரம் 621112
செல் 984259759
தலைமை ஆசிரியர்
அருள்மிகு மாரியம்மன் மேல்நிலைப் பள்ளி
சமயபுரம் 621112
செல் 984259759
Published on June 16, 2017 08:45
June 12, 2017
குறைந்தபட்சம் குடிநீரையேனும்
நேற்று நெய்வேலியில் நடைபெற்ற கடலூர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாமில் உரையாற்றிவிட்டு வந்தேன். அது குறித்து பிறகு பேசலாம். CITU வின் இரண்டாவது சுரங்கக் கிளை வெளியிட்டிருந்த துண்டறிக்கை ஒன்று கிடைத்தது. அதில் பத்துப் பதினைந்து கோரிக்கைகள் இருந்தன.ஏறத்தாழ இத்துப்போன நிலையிலிருக்கும் லாரியில் சுரங்க ஊழியர்களுக்கு குடிநீர் வழங்கப் படுகிறது. இதனால் நீரோடு இரும்புத்துருவும் கலந்து வந்து விடுகிறது. அதனால் ஊழியர்களின் உடல்நலம் ம்கவும் பாதிக்கப் படுகிறது. எனவே சில்வர் கண்டெய்னர்களி குடிநீர் கொண்டுவந்து வழங்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும் நிறைவேற்றாத நிர்வாகம் இப்போதேனும் அதை நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் ஒரு கோரிக்கை இருந்தது.சுரங்கத்திற்குள் கரியோடு கரியாய் வெந்து சாகும் ஊழியர்களை பலமுறை இதற்காக கோரிக்கை வைக்க வைத்ததே பாவம்.குறைந்தபட்சம் நல்ல குடிநீருக்காவது நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்
Published on June 12, 2017 09:19
கவிதை 81
கடத்தித் தொலைத்திருக்கலாம்
ஒரு பார்வை வழியாக
தனது மகிழ்ச்சியை
முயற்சித்திருக்கலாம்
திருப்தியா என்று அறிந்துகொள்ளவேனும்
குறைந்த பட்சம்
சொல்லாமல் கொள்ளாமல்
ஜோலி முடிந்ததும் ஓடத் தொடங்கிய ஆண்நாயை
முடிந்த அளவு வைது தீர்த்த பெண்நாய்
தாளவே தாளாமல்
விரட்டிப் போய்
கடித்துவிட்டு நகர்ந்தது பின் தொடையை
காயத்தை நக்கத் தொடங்கியது
ஆண்நாய்
புணர்வு செமபோல
என நினைத்தபடி
ஒரு பார்வை வழியாக
தனது மகிழ்ச்சியை
முயற்சித்திருக்கலாம்
திருப்தியா என்று அறிந்துகொள்ளவேனும்
குறைந்த பட்சம்
சொல்லாமல் கொள்ளாமல்
ஜோலி முடிந்ததும் ஓடத் தொடங்கிய ஆண்நாயை
முடிந்த அளவு வைது தீர்த்த பெண்நாய்
தாளவே தாளாமல்
விரட்டிப் போய்
கடித்துவிட்டு நகர்ந்தது பின் தொடையை
காயத்தை நக்கத் தொடங்கியது
ஆண்நாய்
புணர்வு செமபோல
என நினைத்தபடி
Published on June 12, 2017 08:40
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)