இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 95

June 10, 2017

May 27, 2017

மக்கள் சொத்து...

இரண்டு நாட்களுக்கு முன்னால் Sarangapani Narayanasamy சாரை வழியில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் பகிர்ந்துகொண்ட ஒரு விஷயம் நெகிழ்த்தியது.

அந்தக் குடும்பத்தின் தலைவரும் இறந்து தலைவியும் இறந்துவிட்ட நிலையில் அவர்கள் வீட்டிற்கு எல்ஐசி பிரிமியம் இரண்டு தவணைகளை கட்டுமாறு கடிதம் போயிருக்குறது.

ஒரு விவரமும் புரியாத நிலையில் அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு எல்ஐசி அலுவலகம் வந்திருக்கிறாள் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் இறந்து போனவரின் குழந்தை.

அவர் 5 லட்சத்திற்கு பாலிசி எடுத்திருந்திருக்கிறார். மரணம் வரைக்கும் ஒழுங்காகக் கட்டிக் கொண்டிருந்திருக்கிறார். அவர் பாலிசி எடுத்திருந்தார் விவரம் யாருக்கும் தெரியாது.

சாரங்கபாணி சாரும் அவரது நண்பர்களும் ஒரே வாரத்தில் பணத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த LIC யவாப்பா தனியாருக்குத் தரத் துடிக்கிறீங்க பாவிகளா
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 27, 2017 02:04

May 26, 2017

ரெண்டு பீரியட் அளவுக்கு குறையாமல் நடக்கிறேன்

இன்றைய நடைபயிற்சியைத் தொடங்குவதற்காக வண்டியை நிறுத்தும்போது நடையை முடித்துவிட்டு வண்டியை எடுக்க வந்த இளம் ஆசிரியரோடான உரையாடலில் சொன்னான்,"தெனமும் ரெண்டு பீரியட் அளவுக்கு குறையாமல் நடக்கிறேன் சார்"குறைந்தது ஒன்றரை மணிநேரம் ஒவ்வொரு நாளும் நடக்கிறானாமாம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 26, 2017 19:19

கவிதை 80

ஓய்வா என்கிறாய்
ஓய்வுதான் என்கிறேன்
ஓய்விலிருந்த நான்
ஓய்விலிருந்தபடி
ஓய்வுதான் என்றவனிடம்
ஓய்வெடு என்கிறாய்
அழுத்துகிறேன் உன் எண்ணை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 26, 2017 19:07

போதும் மகளே.

யவனிகாவின் கவிதை குறித்து மயிலாடுதுறையில் பேசும்போது Kani Mozhi G சொன்ன இரண்டு விஷயங்கள் என்னை நெகிழ்த்தின1) Yavanika Sriram எந்த மண்ணையும் சுவிகீரித்துக் கொள்வதன் மூலம் அவரது கவிதைகள் எந்த நிலத்திற்கும் பொருந்திப் போகிறது.இது முழுக்க முழுக்க உண்மை. அதுமட்டும் அல்ல யவனிகா எந்த மண்ணின் உழைக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட ஏன் நடுத்தர மக்களையும் சுவீகரிப்பதன் மூலம் இவரது கவிதைகள் எல்லா மக்களோடும் பொருந்திப் போகிறது. இதை அங்கேயே சுட்டவும் செய்தேன்.என் தோழர்களைக் கொண்டாடும் யாருக்கும் நான் கடமைபட்டிருக்கிறேன் என்ற வகையில் கனிமொழிக்கென் அன்பு2) எட்வினைப் பற்றி நினைக்கும் தோறும் அவர் ஒரு அணுக்கமான அப்பனாகவே எனக்குப் படுகிறார் என்றாள் பிள்ளை.போதும் மகளே..
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 26, 2017 18:56

கவிதை 79

உறவினர் வீடுகளில் சாப்பிடுகிறீர்கள்
நண்பர்கள் வீடுகளில் சாப்பிடுகிறீர்கள்
உணவு விடுதிகளில் சாப்பிடுகிறீர்கள்
நேற்றும் இன்றும் தலித் வீடுகளில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்
இரண்டே இரண்டு வித்தியாசங்களோடு
அங்கங்கு சமைத்ததைத்தான் அங்கங்கு உண்டீர்கள்
தலித் வீடுகளைத் தவிர என்பது ஒன்று
கடைச் சாப்பாட்டை சாப்பிட
தலித் வீடுகளுக்கு போகும்போது மட்டும்தான்
இவ்வளவு கேமராவோடு போகிறீர்கள் என்பது இரண்டு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 26, 2017 18:44

May 22, 2017

யவனிகா எனும் பேராளுமை

நேற்று மாலை மயிலாடுதுறை AVC கல்லூரியில் தன் கவிதைகள் குறித்தான ஆய்வுரைகளுக்கு நன்றி தெரிவித்து ஏற்புரையாற்றினார் தோழன் Yavanika Sriram.

திருச்சியிலிருந்து திண்டுக்கல் 100 கிலோமீட்டர். ஒன்னேமுக்கால் மணிநேரம்தான் பயணம்.

கீழத்தஞ்சை பகுதியில் 50 கிலோமீட்டர் பயணத்திற்கு ரெண்டுமணி நேரமாகிறது.

காரணம் அங்கு சாலைகள் நேராகவும் இங்கு வளைந்து வளைந்துமாயும் இருக்கிறது.

இதற்கு காரணம் சாலை கட்டமைப்பிற்கு அங்குபோல் இங்கு நிலங்களை கையகப் படுத்த முடியாது. காரணம் அங்கு சாமானியனிடமும் இங்கு ஆண்டைகளிடமும் நிலமுருப்பதுதான்.

ஆக, நாடு நல்லா இருக்கனும்னா நெலம் சாமானியர்களிடம் இருக்கனும்

இவ்வளவு எளிமையா சொல்லமுடியுமா யவனிகா.

என் அணைப்பும் முத்தமும்

தம்பிகள் துவாரகா சாமிநாதன் முருக தீட்சண்யா Kavingnar Thambi மூவருக்கும் என் அன்பும் முத்தமும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 22, 2017 09:05

யாராவது இருக்கிறீர்களா என்ன?

நேற்று வல்லத்தைக் கடந்து போகும்போது தாஜூபாலும் அவரது கவிதைகளும் என்னை தொந்தரவு செய்யத் தொடங்கவே அதை பதிவாக்கினேன்.

அதற்குப் பின்னூட்டமிட்டிருந்த தோழர் Sundarappa Kamaraj எந்தெந்த ஊரைக் கடக்கும்போதெல்லாம் யார் யார் நினைவுகளைத் தவிர்க்க முடியவில்லை என்றொரு பட்டியல் போட்டிருந்தார்

பெரம்பலூரை நினைத்தால் உன் பெயரும் கூடவே நினைவுக்கு வருகிறது எட்வின் என்று யாராவது இருக்கிறீர்களா என்ன?
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 22, 2017 06:01

May 20, 2017

வல்லம் தாஜுபால்

வல்லம் தாண்டிக் கொண்டிருக்கிறேன். வழக்கம் போலவே தோழர் வல்லம் தாஜுபாலின் நினைவு வருகிறது.

ரொம்ப காலமாச்சு தலைவனை சந்திச்சு.

எனக்குப் பிடித்த என் தலைமுறைக் கவிஞர்களுள் ஒருவர். சன்னமான கவிதைத் தெறிப்புகளால் அரங்கங்களை வசப்படுத்திக் கொள்வார்.

"தேசியக் கொடியில்
 வெள்ளைக் கொஞ்சம்
விலகிக் கொண்டதால்
பச்சையும் காவியும்
 அடித்துக் கொள்கின்றன"

என்று நச்செனப் போடுவார். கொடிப் பிரச்சினை வந்தபோது பாரதி எழுதிய

"பட்டுத் துகிலெனலாமோ
 அதில்
 பாய்ந்து சுழற்றும்
 பெரும் புயற் காற்று
 மட்டு மிகுந்தடித்தாலும்
 அதை மதியாத உணர்வுகொள்
 மாணிக்கப் படலம்
 இந்திரன் வச்சிரம் ஓர்பால்
 அதில் எங்கள் துலுக்கர்
 இளம்பிறை ஓர்பால்"

என்ற கவிதையோடு பொருத்திப் பார்ப்பேன்

"காட்பரீஸ்
 கம்மர்கட்
இனிப்பிலும்
வர்க்க பேதம்" என்பார்.

நுட்பமான கவிஞர்.

யாரேனும் அவரைச் சந்தித்தால் கேட்டதாக சொல்லுங்கள் தோழர்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 20, 2017 20:38

அனுமதி மறுப்பீர்கள் எனில்....

இறுக்கிப் பிடித்த வாளோடும் நெஞ்சுநிறைய குரோத்தோடும் மனிதத்திற்கு எதிரான வன்மமும் அசிங்கமும் கலந்த குரலோடும் நகரும் காக்கி பேரணிக்கு அனுமதிப்பீர்கள்.

நடந்து முடிந்த இனப்படுகொலையில் செத்துப்போன என் மக்களுக்காக கூடி மெழுகு கொளுத்தி அழுது அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பீர்கள் எனில் நீங்களும் உங்கள் அதிகாரமும் அழிவின் விளிம்பிற்கு அருகே போய்விட்டீர்கள்

நாசமாய் போவீர்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 20, 2017 18:09

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.