இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 80

December 4, 2018

என் கல்வி என் உரிமை



”என் கல்வி என் உரிமை” அடுத்த பதிப்பு வந்துவிட்டது.

ஆறாவது பதிப்பு 

எவ்வளவுதான் அடக்கிப் பார்த்தாலும் அனைத்தையும் மீறி மகிழ்ச்சி கசியவே செய்கிறது
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 04, 2018 23:55

December 3, 2018

வாக்குகளையும் அம்பானி அதானிகளையும் தவிர....

ஒரு  காணொலி, அது வழிப் பொருந்திப் பெருகி வழியும் செய்திகள், அதனூடே மெல்லிசாய் நீண்டு பரவும் அரசியல் ஆகியவை குறித்து முடிந்த மட்டும் இன்று உரையாடலாம் என்று படுகிறது.

சமீபத்தில் புதுச்சேரியில் நடைபெற்ற தமுஎகச மாநில மாநாட்டில் ‘புதுகை பூபாலம்’ ( Pragadeeshwaran Poobalam ) கலைக் குழு நிகழ்த்திய நிகழ்ச்சியைத் தேடிப் பிடித்துப் பார்த்தேன்.

அதில் ஒரு இடத்தில் செந்திலும் பிரகதீஸ்வரனும் ஜப்பான் பிரதமரும் இந்தியப் பிரதமருமாய் மாறுவார்கள்.

ஜப்பான் பிரதமர் நமது பிரதமரைப் பார்த்து கூறுவார்,

“வாங்க, வாங்க, உங்களைப் பார்க்கத்தான் இந்தியா வந்தேன்”

உடனே இந்தியப் பிரதமர் பதில் கூறுவார்,

“வாங்க சார், வாங்க, நானும் உங்களைப் பார்க்கத்தான் இந்தியா வந்தேன்”

ஊர் ஊராய் சுற்றிக் கொண்டிருக்கிறார் நமது பிரதமர். அதைப் பகடி செய்ய வேண்டும். எதையாவது செய்யுங்கள் என்று திரு நாகேஷ் அவர்களிடம் ஒரு இயக்குநர் கூறியிருந்தால் அவர் ஒரு சக நடிகரைத் துணைக்கு வைத்துக் கொண்டு எப்படி செய்திருப்பாரோ அதைப் போலவே பிரகதீஸ்வரனும் செந்திலும் இணைந்து கலக்கியிருந்தார்கள்.

நாகேஷ் இன்று இருந்து இவர்களது நிகழ்ச்சியைப் பார்த்திருந்தால் இவ்வளவு எளிய முறையில் இதைக் கொடுக்க தன்னால் முடிந்திருக்காது என்றுகூட சொல்லி இருக்கலாம். அப்படி ஒரு கலக்கல்.

இங்கு டெல்டா பகுதியே சின்னாப்பின்னமாகிக் கிடக்கிறது. உலகத்தில் உலை கொதிக்க நெல்லைத் தந்தவன் ஒரு கவளம் சோத்துக்காக ஈர நெஞ்சத்தினர் யாரேனும் வேனில் கொண்டு வருகிறார்களா என்று வீதியில் தவம் இருக்கிறான்.

அவனைச் சுற்றி எங்கு பார்த்தாலும் தண்ணீர். ஆனால் ஒரு குவளை நல்ல தண்ணீருக்காக கையேந்தி நிற்கிறான்.

இப்படியே போனால் தாகமே விஷமாகி பலரை சாகடிக்கலாம்.

மாற்றுத் துணி இல்லை

ஏதுமற்று கட்டியிருந்த துணியோடு நிர்க்கதியாய் நிற்கிறான்.

அன்றுதான் பூப்படைந்தாள் ஒரு செல்ல மகள். தென்னந்தோபிற்குள் இருக்கிறது அவர்களது வீடு. வீட்டிற்கு அருகே குடில் கட்டி தங்க வைக்கிறார்கள். அந்தக் குடிலின்மேல் தென்னை மரம் ஒன்று விழுகிறது . நசுங்கிக் கொண்டே கதறுகிறாள்.

‘கஜா’ நமது பிரதமர் போல் பெருங்குரல் எடுத்து அலறுகிறது. பிரதமரின் பெருங்குரல் முன்னால் காணாமல் போகும் விவசாயியின் குரல்போல கஜாவின் பெருங்குரலின்முன் காணாமல் போகிறது அந்தக் குழந்தையின் வலிகுரல்.

தலைசுற்றி வீட்டுக்குள் அழைக்கவேண்டிய மகளுக்கு கோடித் துணிக்காக ஒரு தகப்பனும் தாயும்கூட ஒரு வேனிற்காகத்தான் கையேந்தி தவம் இருந்தார்கள்.

சாய்ந்த தென்னைகளைப் பார்த்து செத்தே போனான் ஒருவன்.

யாரேனும் வர மாட்டார்களா?

ஆறுதலாய் ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்களா?

தோள்பற்றி ஆசுவாசப்படுத்த மாட்டார்களா?

பார்த்துக்கலாம் விடு. நாங்கள் இருக்கிறோம் என்று நம்பிக்கையாய் ஒரு நாலு வார்த்தை பேச மாட்டார்களா?

தற்கொலை செய்து கொண்டவன் பிணம் பார்த்து,

“ஏண்டா, ஏண்டா, இப்படி. என்ன ஆச்சு. நான் இல்லையா. பார்த்துக் கொள்ள மாட்டேனா? நான் இருக்கேன் என்பதை எப்படிடா மறந்தாய்?” என்று ஒப்புக்கேனும் யாரும் பேச மாட்டார்களா?

என்றுதான் எம் மக்கள் ஏங்குகிறார்கள்.

செத்துப் போனவர்களைப் பார்த்து உயிரோடிருப்பவர்கள் பொறாமைப் படுகிறார்கள் என்ற உண்மை தெரியுமா பெரியோர்களே.

ஒரே ஒரு முறை வந்திருந்து எம் மக்களைப் பார்த்து வழக்கம்போல கொஞ்சம் பொய்களைப் பேசிவிட்டுப் போயிருந்தால்கூட போதும்.

தங்கள் அத்தனை சோகத்தையும் மறந்து சாய்ந்து கிடக்கும் தென்னையிலிருந்து நீர் அதிகமுள்ள இளநீராய்ப் பார்த்து உங்களுக்குக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, “பாரதப் பிரதமர் வாழ்க” என்று தங்களைப் பார்க்க வந்ததற்காய் எம் வெள்ளந்தி  மக்கள் உங்களை நூறாண்டு வாழவேண்டும் நீங்கள் என்று வாழ்த்திவிட்டுப் போயிருப்பார்கள்.

ஏன் பிரதமரே நீங்கள் வரவில்லை?

வாக்குகளையும் அம்பானி அதானியையும்ஒரு  காணொலி, அது வழிப் பொருந்திப் பெருகி வழியும் செய்திகள், அதனூடே மெல்லிசாய் நீண்டு பரவும் அரசியல் ஆகியவை குறித்து முடிந்த மட்டும் இன்று உரையாடலாம் என்று படுகிறது.

சமீபத்தில் புதுச்சேரியில் நடைபெற்ற தமுஎகச மாநில மாநாட்டில் ‘புதுகை பூபாலம்’ ( Pragadeeshwaran Poobalam ) கலைக் குழு நிகழ்த்திய நிகழ்ச்சியைத் தேடிப் பிடித்துப் பார்த்தேன்.

அதில் ஒரு இடத்தில் செந்திலும் பிரகதீஸ்வரனும் ஜப்பான் பிரதமரும் இந்தியப் பிரதமருமாய் மாறுவார்கள்.

ஜப்பான் பிரதமர் நமது பிரதமரைப் பார்த்து கூறுவார்,

“வாங்க, வாங்க, உங்களைப் பார்க்கத்தான் இந்தியா வந்தேன்”

உடனே இந்தியப் பிரதமர் பதில் கூறுவார்,

“வாங்க சார், வாங்க, நானும் உங்களைப் பார்க்கத்தான் இந்தியா வந்தேன்”

ஊர் ஊராய் சுற்றிக் கொண்டிருக்கிறார் நமது பிரதமர். அதைப் பகடி செய்ய வேண்டும். எதையாவது செய்யுங்கள் என்று திரு நாகேஷ் அவர்களிடம் ஒரு இயக்குநர் கூறியிருந்தால் அவர் ஒரு சக நடிகரைத் துணைக்கு வைத்துக் கொண்டு எப்படி செய்திருப்பாரோ அதைப் போலவே பிரகதீஸ்வரனும் செந்திலும் இணைந்து கலக்கியிருந்தார்கள்.

நாகேஷ் இன்று இருந்து இவர்களது நிகழ்ச்சியைப் பார்த்திருந்தால் இவ்வளவு எளிய முறையில் இதைக் கொடுக்க தன்னால் முடிந்திருக்காது என்றுகூட சொல்லி இருக்கலாம். அப்படி ஒரு கலக்கல்.

இங்கு டெல்டா பகுதியே சின்னாப்பின்னமாகிக் கிடக்கிறது. உலகத்தில் உலை கொதிக்க நெல்லைத் தந்தவன் ஒரு கவளம் சோத்துக்காக ஈர நெஞ்சத்தினர் யாரேனும் வேனில் கொண்டு வருகிறார்களா என்று வீதியில் தவம் இருக்கிறான்.

அவனைச் சுற்றி எங்கு பார்த்தாலும் தண்ணீர். ஆனால் ஒரு குவளை நல்ல தண்ணீருக்காக கையேந்தி நிற்கிறான்.

இப்படியே போனால் தாகமே விஷமாகி பலரை சாகடிக்கலாம்.

மாற்றுத் துணி இல்லை

ஏதுமற்று கட்டியிருந்த துணியோடு நிர்க்கதியாய் நிற்கிறான்.

அன்றுதான் பூப்படைந்தாள் ஒரு செல்ல மகள். தென்னந்தோபிற்குள் இருக்கிறது அவர்களது வீடு. வீட்டிற்கு அருகே குடில் கட்டி தங்க வைக்கிறார்கள். அந்தக் குடிலின்மேல் தென்னை மரம் ஒன்று விழுகிறது . நசுங்கிக் கொண்டே கதறுகிறாள்.

‘கஜா’ நமது பிரதமர் போல் பெருங்குரல் எடுத்து அலறுகிறது. பிரதமரின் பெருங்குரல் முன்னால் காணாமல் போகும் விவசாயியின் குரல்போல கஜாவின் பெருங்குரலின்முன் காணாமல் போகிறது அந்தக் குழந்தையின் வலிகுரல்.

தலைசுற்றி வீட்டுக்குள் அழைக்கவேண்டிய மகளுக்கு கோடித் துணிக்காக ஒரு தகப்பனும் தாயும்கூட ஒரு வேனிற்காகத்தான் கையேந்தி தவம் இருந்தார்கள்.

சாய்ந்த தென்னைகளைப் பார்த்து செத்தே போனான் ஒருவன்.

யாரேனும் வர மாட்டார்களா?

ஆறுதலாய் ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்களா?

தோள்பற்றி ஆசுவாசப்படுத்த மாட்டார்களா?

பார்த்துக்கலாம் விடு. நாங்கள் இருக்கிறோம் என்று நம்பிக்கையாய் ஒரு நாலு வார்த்தை பேச மாட்டார்களா?

தற்கொலை செய்து கொண்டவன் பிணம் பார்த்து,

“ஏண்டா, ஏண்டா, இப்படி. என்ன ஆச்சு. நான் இல்லையா. பார்த்துக் கொள்ள மாட்டேனா? நான் இருக்கேன் என்பதை எப்படிடா மறந்தாய்?” என்று ஒப்புக்கேனும் யாரும் பேச மாட்டார்களா?

என்றுதான் எம் மக்கள் ஏங்குகிறார்கள்.

செத்துப் போனவர்களைப் பார்த்து உயிரோடிருப்பவர்கள் பொறாமைப் படுகிறார்கள் என்ற உண்மை தெரியுமா பெரியோர்களே.

ஒரே ஒரு முறை வந்திருந்து எம் மக்களைப் பார்த்து வழக்கம்போல கொஞ்சம் பொய்களைப் பேசிவிட்டுப் போயிருந்தால்கூட போதும்.

தங்கள் அத்தனை சோகத்தையும் மறந்து சாய்ந்து கிடக்கும் தென்னையிலிருந்து நீர் அதிகமுள்ள இளநீராய்ப் பார்த்து உங்களுக்குக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, “பாரதப் பிரதமர் வாழ்க” என்று தங்களைப் பார்க்க வந்ததற்காய் எம் வெள்ளந்தி  மக்கள் உங்களை நூறாண்டு வாழவேண்டும் நீங்கள் என்று வாழ்த்திவிட்டுப் போயிருப்பார்கள்.

ஏன் பிரதமரே நீங்கள் வரவில்லை?

வாக்குகளையும் அம்பானி அதானியையும் தவிர யார் குறித்தும் எது குறித்தும் கவலைப்படவே மாட்டீர்களா பிரதமர் அவர்களே?

எங்கள் அழுகையின் வலி உமக்குப் புரியாதா? அல்லது எங்களது சோகத்தை உதாசீனம் செய்கிறீர்களா?

காவேரிக்கரையில் பிறந்து படித்து ஆளான உங்கள் ராணுவத்துறை அமைச்சர் பேரிடர் நிவாரணத்திற்கு மாநில அரசு கேட்டுக் கொள்ளாததால்தான் ராணுவத்தை அனுப்பவில்லை என்கிறார்.

கொஞ்சம்கூட ஈரமே இல்லையா தாயே?

சொல்லி அனுப்பினால்தான் சாவு வீட்டிற்கு வருவீர்களா மேடம்?

நீங்கள் வெளிநாட்டில் இருக்கும்போது இங்கே வந்த ஏதேனும் ஒரு நாட்டு அதிபர் விஷயத்தைக் கேள்விபட்டு எம் மக்களைப் பார்க்க இங்கு வந்து அந்த நேரம் நீங்கள் இந்தியா வந்தால் அவரைப் பார்க்க இங்கே வந்திருப்பீர்களா?

இல்லை வரட்டும் அவர் தில்லிக்கு என்று அப்போதும் இறுக்கமாகவே இருந்திருப்பீர்களா.

ஒன்று சொல்கிறேன் பிரதமர் அவர்களே,

இப்போது எம் மக்களிடம் ஏதும் இல்லை. எல்லாவற்றையும் இழந்து நிற்கிறான். வரமாட்டீர்களா என்று தவிக்கிறான்.

வர மறுக்கிறீர்கள்.

ஆறேழு மாதங்களுக்குள் எழுந்து விடுவான். தேர்தல் வரும். நீங்களும் வருவீர்கள்.

இப்போது ஏதுமற்று இருக்கும் அவனிடம் ஒரு வாக்கு இருக்கும் அப்போது.

அதற்குள் அவனுக்கு அந்த வாக்கின் பொருள் புரிந்திருக்கும்.

#சாமங்கவிய 17 நிமிடங்கள்
01.12.2018 தவிர யார் குறித்தும் எது குறித்தும் கவலைப்படவே மாட்டீர்களா பிரதமர் அவர்களே?

எங்கள் அழுகையின் வலி உமக்குப் புரியாதா? அல்லது எங்களது சோகத்தை உதாசீனம் செய்கிறீர்களா?

காவேரிக்கரையில் பிறந்து படித்து ஆளான உங்கள் ராணுவத்துறை அமைச்சர் பேரிடர் நிவாரணத்திற்கு மாநில அரசு கேட்டுக் கொள்ளாததால்தான் ராணுவத்தை அனுப்பவில்லை என்கிறார்.

கொஞ்சம்கூட ஈரமே இல்லையா தாயே?

சொல்லி அனுப்பினால்தான் சாவு வீட்டிற்கு வருவீர்களா மேடம்?

நீங்கள் வெளிநாட்டில் இருக்கும்போது இங்கே வந்த ஏதேனும் ஒரு நாட்டு அதிபர் விஷயத்தைக் கேள்விபட்டு எம் மக்களைப் பார்க்க இங்கு வந்து அந்த நேரம் நீங்கள் இந்தியா வந்தால் அவரைப் பார்க்க இங்கே வந்திருப்பீர்களா?

இல்லை வரட்டும் அவர் தில்லிக்கு என்று அப்போதும் இறுக்கமாகவே இருந்திருப்பீர்களா.

ஒன்று சொல்கிறேன் பிரதமர் அவர்களே,

இப்போது எம் மக்களிடம் ஏதும் இல்லை. எல்லாவற்றையும் இழந்து நிற்கிறான். வரமாட்டீர்களா என்று தவிக்கிறான்.

வர மறுக்கிறீர்கள்.

ஆறேழு மாதங்களுக்குள் எழுந்து விடுவான். தேர்தல் வரும். நீங்களும் வருவீர்கள்.

இப்போது ஏதுமற்று இருக்கும் அவனிடம் ஒரு வாக்கு இருக்கும் அப்போது.

அதற்குள் அவனுக்கு அந்த வாக்கின் பொருள் புரிந்திருக்கும்.

#சாமங்கவிய 17 நிமிடங்கள்
01.12.2018
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 03, 2018 20:08

December 1, 2018

மாலை முழுதும்.....

எப்போதும் இந்திய அரசு மொத்தத்தையுமோ அல்லது மனிதவள மேம்பாட்டுத் துறையையோ விமர்சித்துக் கொண்டோ அல்லது வைதுகொண்டோதான் இருப்போம் என்றெல்லாம் எம்மை யாரும் கருதிவிடக்கூடாது. எந்த உள்நோக்கமும் இல்லாமல் நல்லது செய்தால் கொண்டாடவே செய்வோம். மாறாக செயல்படும்போது அதை எதிர்த்து விமர்சிப்பதும் முடிந்த அளவு அதை எதிர்த்து களமாடவும் செய்கிறோம்.இன்றைக்கும்கூட மனிதவள மேம்பாட்டுத் துறை பள்ளிக்குழந்தைகளின் புத்தகப் பையின் எடை எந்தெந்த அளவில் இருக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையினை கொண்டாடி வரவேற்கிறோம். அதை அனைத்து மாநில அரசுகளும் கொஞ்சமும் சுணக்கம் இன்றி உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கோருகிறோம். செயல்படுத்தாத மாநில அரசுகளை மனிதவள மேம்பாட்டுத் துறை செயல்படுத்த நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும் என்று கோருகிறோம்.இந்த சுற்றறிக்கையை செயல்படுத்த மறுக்கும் மாநில அரசுகளை நிர்ப்பந்திக்கும் வகையில் அங்கங்கு உள்ள மாணவர் அமைப்புகளும், ஆசிரியர் அமைப்புகளும், அரசியல் இயக்கங்களும், சமூக அமைப்புகளும் தம்மால் முடிந்த அளவு களத்தில் இறங்க வேண்டும் என்றும் வேண்டுகிறோம். இடதுசாரி வெகுஜன அமைப்புகளிடமும் இடதுசாரி கட்சிகளிடத்தும் இந்தக் கோரிக்கையை கூடுதல் அழுத்தத்தோடு வைக்கிறோம்.அதே நேரம் என்ன களவானித்தனம் செய்தும் JNU மாணவர்களையோ அல்லது பேராசிரியர்களையோ காவிப்படுத்த முடியவில்லை என்பதற்காகவும் மனித நாகரீகத்திற்கு எதிராக இருக்கக் கூடிய காவிக் கோட்பாட்டிற்கு எதிரான அவர்களது போராட்டத்தை எதிர்கொள்ள முடியவில்லை என்பதற்காகவும் JNU நூலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் 75 விழுக்காட்டை மத்திய அரசு கை வைத்திருப்பதை கடுமையாக எதிர்க்கிறோம்.இரண்டு விஷயங்கள். இரண்டுமே புத்தகங்கள் குறித்த விஷயங்கள். ஆனால் இரண்டுமே ஒன்றோடு ஒன்று வலுவாக முரண்படும் விஷயங்கள்.கூடாது என்கிற இடத்தில் குவிப்பதும் குவிக்க வேண்டிய இடத்தில் குறைப்பதுமான அயோக்கியத்தனமான போக்குகளைக் குறித்து உரையாடலாம் என்று படுகிறது.முன்பெல்லாம் இப்படி வேடிக்கையாகப் பேசுவோம்,MA படிக்கிற பிள்ளை இரண்டு ஆண்டுகளாக ஒரே ஒரு மெமோபேடை சுருட்டி பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு கல்லூரி போகிறான். அதுவும் எதற்கென்றால் பேருந்தில் இடம் போடுவதற்கு என்று சொல்கிறான். அதே நேரம் LKG படிக்கிற குழந்தை 12 கிலோ புத்தக மூட்டையையை சுமப்பதற்கு நிர்ப்பந்திக்கப் படுகிறாள்.ஆனால் இன்றைக்கும் முதுகலை படிக்கும் மாணவன் சுமப்பதைவிட LKG படிக்கும் குழந்தை அதிக எடையுள்ள புத்தகப் பையினை சுமக்கிறாள்.தங்களின் எடையில் 35 விகித எடையில் புத்தகப் பையினை பள்ளிக் குழந்தைகள் சுமப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதை சுட்டிக்காட்டும் மனிதவள மேம்பாட்டுத்துறை அதைக் கண்டிக்கிறது.மூன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை புத்தகப் பையின் எடை 3 கிலோவைத் தாண்டக்கூடாது. ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு குழந்தைகளுக்கு 4 கிலோவையும் எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு குழந்தைகளுக்கு நான்கரை கிலோவும் பத்தாம் வகுப்பு குழந்தைகளுக்கு 5 கிலோவும்தான் அவர்களது புத்தகப் பையின் எடை இருக்க வேண்டும். இதற்கு மிகாமல் அந்தந்த மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கை கூறுகிறது.எனில், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு?புத்தகப் பையோடு அந்தக் குழந்தைகளை வரச்சொல்லும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதோடு அதன் நிர்வாகியை சிறையில் அடைத்துவிட வேண்டும்.குழந்தைகளின் குழந்தைமையை வணிகப்படுத்துவதை தடை செய்ய முயற்சிக்கும் இந்த சுற்றறிக்கையை கொண்டாடுகிறோம். இதுவே சட்டமாக வந்தால் கூட்டம் போட்டு கொண்டாடுவோம்.JNU மாணவர் பேரவைத் தேர்தல் என்பது உலகமே ஆவலோடு எதிர்பார்க்கும் ஒன்று. அதில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் இன்றைய மார்க்சிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் தோழர் யெச்சூரி.எப்படியேனும் அதைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று BJP தலையால் தண்ணீர் குடித்துப் பார்க்கிறது. தேர்தல் நடைமுறைகளில் என்ன தில்லு முல்லுகளை எல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்து பார்த்து விட்டது அந்தக் கட்சி. வன்முறையை பிரயோகித்துப் பார்த்து விட்டது. வழக்குகளை போட்டு மாணவர்களை அச்சுறுத்திப் பார்த்தது. சிறையில் தள்ளிப் பார்த்தது. என்ன செய்தும் பிள்ளைகள் காவியை ஒவ்வொரு முறையும் துறத்தி அடிக்கின்றனர்.மட்டுமல்ல, BJP யாரைத் தனது சித்தாந்த எதிரியாகப் பார்க்கிறதோ, யாருடைய பெயரைக் கேட்டால் கேட்ட மாத்திரத்திலேயே பயந்து நடுங்குகிறதோ அந்த இடதுசாரி பிள்ளைகளையே தொடர்ந்து தேர்ந்தெடுக்கிறார்கள்.ஆசிரியர் சம்மேளனத்திலும் இதேதான் நிலைமை.மோதி வெற்றிபெற முடியவில்லை. விட்டுவிட்டும் போக முடியவில்லை. ”ஏன் நம்மை நிராகரிக்கிறார்கள்?” என்று யோசித்தவர்களுக்கு அவர்களுக்கு சமூகம் குறித்த ஞானம் இருப்பது புரிகிறது. இந்த ஞானத்தை நூலகம் தருவதாக அவர்களால் யூகிக்க முடிகிறது.நூலகத்திற்கான செலவில் 75 விழுக்காட்டை நிறுத்துகிறார்கள்.கோவம் வருகிறது. வைகிறோம். வைதுகொண்டே எதிர்ப்போம். களமாடுவோம்.#சாமங்கவிந்து 30 நிமிடங்கள்
28.11.2018
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 01, 2018 22:52

65/66, காக்கைச் சிறகினிலே அக்டோபர் 2018

நேரடியாய் எதிர்ப்பது, மிரட்டுவது, கழுத்தறுப்பது என்பது ஒன்று. அணைப்பதுபோல் போல் நடித்துக் கொண்டே கழுத்தை அறுப்பது என்பது மற்றொன்று. பெறும்பாலும் ஆதிக்க நச்சு சக்திகள் இவற்றில் ஏதோ ஒரு வகையைச் சார்ந்திருப்பார்கள். RSS அமைப்பின் தலைவர்கள் இந்த இரண்டிலுமே தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு இடம் இல்லை. அவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடட்டும். இல்லை எனில் அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று நேரடியாக மிரட்டக்கூடிய RSS தலைவர்கள் நிறைய இருக்கிறார்கள்.இவர்கள் சொல்வதை செய்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். இஸ்லாமியர்களை தாக்குகிறார்கள், நடு வீதியில் கேமராக்களை இயக்கிக்கொண்டே இஸ்லாமிய பெண்களை வன்புணர்வு செய்கிறார்கள், மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் கூறி இஸ்லாமிய சிறுவர்களை இளைஞர்களை, பெரியவர்களை பொதுமக்கள் முன்னிலையில் கொலை செய்கிறார்கள். எரிக்கிறார்கள்.எட்டு வயதுக் குழந்தையை எட்டுபேர் சேர்ந்து எட்டு நாட்கள் ஒரு கோவில் வளாகத்தில் வைத்து வன்புணர்ந்து கொன்று போடுவார்கள். அந்தப் பாதகத்தை செய்தவர்கள் தேசபக்தர்கள் என்றும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் பேரணி நடத்துவார்கள்.அதைவிடக் கொடுமை “குழந்தையை வன்புணராமல் கிழவியையா வன்புணர முடியும் ?” என்று மந்திரிமார்களே கேட்பார்கள். கிழவியையும் இவர்களது அமைப்பினர் விட்டு வைக்க மாட்டார்கள்.எழுவது குழந்தைகளை தம் சொந்தக் காசை செலவழித்து காப்பாற்றி மருத்துவரை உச்சி முகர்ந்து பாராட்டி விருதுகளை வழங்கி சிறப்பு செய்வதற்கு பதிலாக அவர் இஸ்லாமியர் என்பதற்காக அவரை சிறியிலடைத்து கொடுமைப் படுத்துவார்கள்.இந்தக் கொடுமையாளர்கள் நேரடியாகக் களமிறங்கி ஏதோ ஒரு வகையில் தாக்குதலை நடத்தி இந்த பூமி உங்களுக்கானது அல்ல. ஒன்று மதம் மாறுங்கள் அல்லது பாகிஸ்தானுக்கு போய்விடுங்கள் என்று அச்சுறுத்துவார்கள்.இதைக்கூட புரிந்து அதற்கேற்ப எதிர்வினையாற்ற இயலும்.இது இப்படி என்றால் அமித்ஷாவோ ,”சுதந்திரத்திற்கு அடுத்த காலகட்டத்தில் இந்தியாவில் நடந்த மிகப் பெரிய போராட்டம் அயோத்திப் போராட்டம்தான்” என்கிறார்.வாத்த்திற்கு அயோத்திப் பிரச்சினை முக்கியமானது என்றேகூட கொள்வோம். ஒரு இடம் எந்தக் கடவுளுக்கு சொந்தமானது என்ற வழக்கினை அந்தந்த தெவங்களை நம்புகிற மனிதர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கொள்வோம். எந்த தெய்வத்தின் இடம் அது என்பதை மனித நீதிபதிகள் விசாரிக்கிறார்கள். வழக்கு இன்னும் முற்றாய் முடிந்துவிடவில்லை.முடியாத வழ்க்கினை ஒட்டி நிகழ்ந்துவரும் போராட்டத்தைத்தான் சுதந்திரப் போராட்ட அளவிற்கு கொண்டு போகிறார் அமித்ஷா.அவர் ஏதோ போகிற போக்கில் இதை சொல்லவில்லை. இதற்குப் பின்னால் ஒரு தேர்ந்த திட்டமிடல் இருக்கிறது. ஒரு வழிபாட்டு இடத்தின் உரிமைக்காக இந்தியாவின் இரு பிரிவினர் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்கிற உண்மையை அந்த இடத்திற்காக இந்தியர்கள் இஸ்லாமியர்களோடு போராடிக்கொண்டிருப்பதாக நிறுவ முயல்கிறார். இது ஆபத்தானது.வழக்கமாக இவர்கள் யாவரையும்விட அதிகமாகப் பேசும் மோகன்பகவத் இஸ்லாமியர்கள் இல்லாமல் இந்துநாடு இல்லை என்று கூறியுள்ளார்.இதை மேலோட்டமாகப் பார்த்தால் ஆஹா இஸ்லாமியர்கள் மீது எவ்வளவு அன்பு பாருங்களேன் என்று நினைக்கத் தோன்றும். இது இந்து நாடாம், ஆனால் இஸ்லாமியர்களும் இங்கு இருப்பதற்கு உரிமை உண்டாம்.எவ்வளவு மோசமான கருத்து திரிபு இது.இதுதான் சிரித்து அணைத்தபடி கழுத்தில் கத்தியை இறக்குவது.ஏனிப்படி விதவிதமாக அணுகுகிறார்கள். ஆறு மாதங்களில் தேர்தல் வருகிறதே அதற்காகத்தான்.இன்னும் அன்பாய் மூர்க்கமாய் எப்படி வேண்டுமானாலும் வருவார்கள், எதை வேண்டுமானாலும் பேசுவார்கள், எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.
*************************************************அவ்வபோது மல்லையா பேசப்படுகிறவராகவே இருக்கிறார்.மாண்பமை அருண்ஜேட்லி அவர்களைச் சந்தித்துவிட்டுதான் தான் இந்தியாவைவிட்டு வெளியேறியதாக மல்லையா கூறியிருக்கிறார். இதை சன்னமான குரலில் மறுக்க முயற்சித்த ஜெட்லி உள்ளிட்ட தலைவர்கள் அது சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டார்கள்.தம்மை மல்லையா சந்தித்தது உண்மைதான் என்பதை வேறு வழியின்றி ஜேட்லி ஒத்துக்கொள்ள வேண்டிய சூழல் வந்தது. சந்திப்பை ஒத்துக் கொண்ட அவர் அந்த சந்திப்பு வெறும் பதினைந்து நிமிடங்கள் மட்டுமே நடந்ததாகவும் அந்தச் சந்திப்பில் வங்கி அதிகாரிகளை சந்தித்து முறையாக செட்டில் செய்ய சொன்னதாக அருண்ஜேட்லி கூறியதாகவும் தகவல்கள் வெளியாயின.ஏறத்தாழ 9000 கோடி கடனை அடைக்க முடியாத ஒருவர் வெளிநாட்டில் செட்டிலாகக் கிளம்பும் முன் நிதி அமைச்சரை சந்திக்கிறார். இன்னும் சொல்லப்போனால் இந்த சந்திப்பு நிகழ்ந்தபோது மல்லையாவின் மீது கடுமையான செக்அவுட் நோட்டீஸ் இருந்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒருவர் நாட்டைவிட்டு ஓடிப்போகும் முன் அமைச்சரை சந்திக்கிறார். வங்கி விவரங்களை முடித்துவிட்டு செல்லுமாறு தான் அறிவுரை மட்டுமே கூறினேன் என்று ஒரு அமைச்சர் கூறுவது எப்படி சரியாகும்?அதுவும் இந்த சந்திப்பிற்குப் பிறகு மல்லையா மீதான செக்கவுட் நோட்டீஸ் தளர்த்தப் பட்டிருக்கிறது. அவ்வாறு தளர்த்தப் பட்டதால்தான் மல்லையாவால் தப்ப முடிந்திருக்கிறது என்று வருகிற தகவல்கள் அசாதாரணமானவை.முறையான ஆலோசனைக்குப் பிறகே செக்கவுட் நோட்டீஸ் தளர்த்தப்பட்டதாக வரும் செய்தியும் சாதாரணமானதும் அல்ல.நமது கோரிக்கை என்னவெனில் இது விஷயத்தில் மாண்பமை ஜேட்லி அவர்களை விசாரிக்க வேண்டும் என்பதே.*******************************************************************மிகுந்த ஆர்ப்பாட்டத்தோடு கருத்துக்களைத் திரிப்பதில் இவர்கள் வல்லவர்கள் என்பதை நாம் ஒத்துக்கொள்ளவே செய்கிறோம்.ஆனால் ஆர்ப்பாட்டமே இல்லாமல் அமைதியாகவும் இவர்கள் தங்களது அசிங்கமான திரிப்புகளை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பது பனாரஸ் பல்கலைக் கழகத்தில் நடந்த முதுகலை பொலிடிகல் சயின்ஸ் பிரிவிற்கான இரண்டு வினாக்களே சான்று.1) கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்தில் GST யின் கூறுகள் – விளக்கு
2) உலகமயமாக்கல் குறித்து முதலில் சிந்தித்தவர் மனு – விவரிகல்வி குறித்த விவாத்ததை பொதுத் திரளுக்கு புரிகிற மொழியில் பரவலாக்க் கொண்டு போகாவிட்டால் பாடப் புத்தகங்களைக்கூட கருப்பு மைக்குப் பதிலாக காவி மையிலேயே அச்சடிப்பார்கள்.புரிந்து கொள்வோம்.
***********************************************************************ரபேல் ஒப்பந்தத்தில் அம்பானி குழுமத்தை சேர்த்துவிட்டது மோடி அரசுதான் என்று பிராஸ் நாட்டின் அதிபர் கூறியிருக்கிறார்.மற்றவர்கள் கூறும்போது வன்மமாக மறுத்தவர்கள் இப்போது ஒப்பந்ததாரரே கூறும்போது அதற்கு முறையான பதிலை வெளியிட கடமைப் பட்டவர்கள் ஆவார்கள்.இல்லாது போனால் இவர்கள் எதை எல்லாம் ரகசியம் என்று சொல்கிறார்களோ அவை ப்ரான்ஸ் மூலமாகவே வெளிவரும்.
***************************************
JNU மாணவர்ப் பேரவைத் தேர்தல் உலகமே எதிர்பார்க்கக்கூடிய ஒன்று. மிச்சமே இல்லாமல் அனைத்துப் பொறுப்புகளுக்கும் இடதுசாரி மாணவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.எல்லாவகையான இடதுசாரிப் பிள்ளைகளும் ஒன்றாய் கைகோர்த்ததனால்தான் இந்த வெற்றி சாத்தியமாயிற்று.இதில் நமக்கான பாடம் இருக்கிறது.இந்தியாவைப் பொறுத்தவரை தேர்தல் ஜனநாயகமே சாத்தியம் என்பதை அவர்களும், அவர்கள் ஒன்றும் RSS காரர்கள் அல்ல என்பதை நாமும் உணரவேண்டும் என்பதே சின்னப் பிள்ளைகள் நமக்கு நடத்தி இருக்கும் பால பாடம்.கற்போம்.
**************************************************ஏறத்தாழ இதே நேரத்தில் தில்லி பல்கலைக் கழகத்தில் நடந்த தேர்தலில் பாஜக மாணவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.அங்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு எந்திரங்களின் மூலமாக மோசடி நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. எந்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் வாங்கித்தான் தேர்தலை நடத்தியதாக நிர்வாகம் கூறியது. அதை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.பிறகு தனியாரிடம் வாடகைக்கு வாங்கித்தான் தேர்தலை நடத்தியதாக சொல்லப்பட்டது. அதற்கும் தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. தனியாரிடம் வாக்கு எந்திரங்களை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது என்று தெளிவான விதி இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.போக தேர்தலில் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள மாணவர் போலியான பட்டச் சான்றிதழின் பேரிலேயே தில்லிப் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பிரிவில் சேர்ந்தவர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.எதற்கானத் தேர்தலாக இருந்தாலும் பாஜகவின் தேர்தல் அணுகுமுறை ஒன்றுதான் போலும்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 01, 2018 22:39

November 25, 2018

இதுமாதிரியான அதிகாரம் என்பது 58 வயதுவரைதான்

திரு.தர்மராஜ் ஒரு காவலர்.21.11.2018 அன்று அவரது தாயாருக்கு நினைவுநாள். அவருக்கு திதி கொடுக்கவேண்டும் என்பதற்காக தனது அதிகாரியான திரு.ரவிக்குமாரிடம் விடுப்பு கேட்கிறார்.விடுப்பு மறுக்கப்படுகிறது.பணிக்கு வருகிறார். மறுவிக்கொண்டே இருந்தவர் ஒரு புள்ளியில் தனது வாக்கி டாக்கா மூலம் இது குறித்து கண்காணிப்பு அறைக்கு புகார் தருகிறார். அதன்பிறகு கொஞ்சம் ஆசுவாசப் படுகிறார்.இதன்பிறகு ரவிக்குமார் மறுவத் தொடங்குகிறார்அன்றையப் பொழுதின் ஒருபுள்ளியில் ரவிக்குமார் சாலையை நிர்வகித்துக் கொண்டிருந்தபோது அந்தவழியாக தனது இரண்டு சக்கர வாகனத்தில் தர்மராஜ் வருகிறார்ரவி ஓடிச்சென்று அவரை எட்டி உதைக்கிறார்தர்மராஜ் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகிறார்அவரது வாயில் மதுவை ஊற்றி அவர் போதையில் இருந்ததாக மருத்துவ சான்று பெற்று அவரை பணியிட்ட நீக்கம் செய்ய வைத்து இருக்கிறார்சாலை ஓரத்தில் இருந்த ஒரு கடையின் சிசிவி கேமராவில் ரவி எட்டிஉதைத்த காட்சி பதிவாகி இருக்கவே உண்மை வெளியே வருகிறதுதர்மராஜ் பணிக்குத் திரும்பி இருக்கிறார்ரவி பணியிட மாற்றம் பெருகிறார்ரெண்டு விஷயங்கள்பொது1) பணியிட மாற்றம் என்பது போதவே போதாது. அவரை தற்காலிக பணிநீக்கம் செய்து அவர்மீது கொலைவழக்கு பதிய வேண்டும்2) இதுமாதிரியான அதிகாரம் என்பது 58 வயதுவரைதான் என்பதை ரவி மாதிரி அதிகாரிகள் உணர வேண்டும்25.11.18
பிற்பகல் 3.05
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 25, 2018 23:30

November 13, 2018

ஆதலினால்கவாத்துசெய்வோம்

"கஜா" புயல் அதிதீவிர புயலாக உருவெடுக்கும். அநேகமாக நாளை மதியம் வாக்கில் பாம்பனுக்கும் நாகைக்கும் இடையே அது 120 வேகத்தில் கரையைக் கடக்கும். அதன் பாதிப்பு 13 மாவட்டங்களில் இருக்கும் என்கிறார்கள்விஞ்ஞானம் வளர்ந்திருப்பதன் விளைவு இவைஅரசும் ஆலோசனைகளை நடத்துகிறதுகடலூர் மக்கள் எதன்பொருட்டும் தன்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என்று ஒரு அமைச்சர் கூறியிருப்பதை நான் கொண்டாடவே செய்கிறேன்மக்களும் எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளார்கள்மூன்று விஷயங்கள்1) இதுமாதிரி புயல்களை எதிர்கொள்ளும் அளவிலான மீனவக் குடியிருப்புகள்2) இதுமாதிரி கடலுக்குள். போகமுடியாத காலங்களில் மீனவர்களுக்கான மாற்று ஏற்பாடு3) "தானே" கடலூரைத் தாக்கியபோது ஏராளமான மரங்கள் விழுந்தன. அது உண்டாக்கிய சேதம் அளவற்றது.மரங்களை உரிய முறையில் அவ்வப்போது கவாத்து செய்திருந்தால் அவ்வளவு சேதம் இருந்திருக்காது என்று சொல்லப்பட்டது"கஜா" வந்து போகட்டும்.மரங்களை கவாத்து செய்வதை அரசு இயக்கப்படுத்த வேண்டும்கவாத்து செய்வதால்1) நீர் செலவு குறையும்2) மரங்கள் பலப்படும்3) சேதம் குறையும்#ஆதலினால்கவாத்துசெய்வோம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 13, 2018 20:27

November 12, 2018

பிரிதின்நோய் தம்நோய்போல்....

அன்வர் பாட்ஷா என்ற இளைஞன் நேற்று பள்ளப்பட்டியில் இருந்து மதுரைக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்திருக்கிறான். அவனுக்கு வயது இருபது. பேருந்து வாடிப்பட்டி அருகே வந்தபொழுது அவனுக்கு வலிப்பு வந்திருக்கிறது. வலிப்பு அவனுக்கு அடிக்கடி வரக்கூடியதுதானாம்.வலிப்பு வந்ததும் பேருந்தை நிறுத்தி அந்த இளைஞனை பேருந்தை நிறுத்தி இறக்கிவிட்டு சென்று விட்டார்களாம்.வலிப்பால் துடித்துக் கொண்டிருந்தவனை இறக்கிவிடுவது என்பது எப்படி?பேருந்தை நிறுத்தி அந்த இளைஞனை கீழே தள்ளிவிட்டு சென்றிருக்கிறார்கள்.கொடுமை என்னவென்றால் அந்தப் பேருந்தில் ஏறத்தாழ முப்பதுபேர் பயணம் செய்துகொண்டு இருந்திருக்கிறார்கள்.அடிக்கடி வலிப்பு வருகிற வழக்கம் இருக்கிறது என்றால் இத்தகைய பயணங்களின் பொழுது அதை அந்த இளைஞன் எதிர்பார்த்திருக்கவே செய்வான். எனில், அவனது சட்டைப் பையிலோ அல்லது கைப்பையிலோ அதற்கான மாத்திரைகள் இருந்திருக்கக் கூடும்.அதைத் தேடிப் பார்த்து அதற்கான மாத்திரைகள் இருந்திருப்பின் யாரேனும் கொண்டு வந்திருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து அந்த மாத்திரையோடு ஒரே ஒரு முடக்கு தண்ணீரை மட்டும் செலவு செய்திருந்தால் போதும் அந்தப் பிள்ளை பிழைத்திருப்பான்.அப்படி மாத்திரைகள் இல்லாத பட்சத்தில் போகிற வழியில் உள்ள ஏதேனும் ஒரு மருத்துவ மனையில் நிறுத்தி சேர்ப்பித்துவிட்டுப் போயிருந்தாலும் அந்தப் பிள்ளை பிழைத்திருப்பான்.யாரேனும் ஒரு பயணி அவனோடு கொஞ்ச நேரம் இருந்திருந்தால் போதும் அவனது முகவரி கேட்டு அவனை அவனது குடும்பத்தாரிடம் ஒப்படைத்திருக்கலாம்.“பெற்றால்தான் பிள்ளையா?” என்றெல்லாம் கேட்கிறோமே அந்தப் பேருந்தில் அந்த வயது குழந்தையின் பெற்றோர்கள் யாருமே இல்லாது போயிருந்தார்களா?வழக்கமாக குப்பைகளைக் கூட்டி சுத்தம் செய்யும் வழக்கம் இல்லாத அந்த அரசுப் பேருந்தில் அன்று மனிதத்தை மட்டும் சுத்தமாக வழித்து துடைத்து விட்டார்களா?கீழே கிடந்த அந்தக் குழந்தையை அவனைக் கடந்துபோன ஒருவரும் சரியாக கண்டு கொள்ளாது போகவே அவன் செத்துப் போயிருக்கிறான்.மீண்டும் சொல்கிறேன் அவனுக்கு வயது இருபது.அவனை நிராகரித்து கடந்துபோன ஒவ்வொருவரும் கொலைகாரர்களே.அப்படி அவசரமாய் அவனைக் கடந்து போய் என்னத்தை சாதித்து விட்டார்கள்?இது இப்படி இருக்க எல்லா ஓட்டுநர்களுமே இப்படித்தான். எல்லா நடத்துநர்களுமே இப்படித்தான். எல்லாப் பயணிகளுமே இப்படித்தான் என்றெல்லாம் கருதிவிடக் கூடாது.ஆறேழு ஆண்டுகள் இருக்கும். அப்போதெல்லாம் கள்ளக்குறிச்சியில் இருந்து திருச்சி செல்லும் அரசுப் பேருந்து தடம் எண் 329 இல்தான் பள்ளிக்கு போவது வழக்கம்.அந்த வகையில் அந்தப் பேருந்தின் ஓட்டுநர்கள் இயக்குநர்கள் அனைவரையும் தெரியும். மாலையும் பலநேரம் அந்தப் பேருந்துதான். அதுபோல ஒருநாள் மாளை பெரம்பலூரில் இறங்கி ஓட்டுநர் சுப்ரமணியன் மற்றும் நடத்துநர் முருகன் ஆகியோரோடு தேநீர்ப் பருகிக் கொண்டிருக்கிறேன்.அப்போது அங்கு வந்த இளம் பெண் ஒருவர் சுப்ரமணியன் காலைத் தொட்டு வணங்கவே அவர் ஒதுங்கி “நல்லா இரு சாமி. பாப்பா எப்படி இருக்கு?” என்றார். “நல்லா இருக்காங்கண்ணா. மாமியார் வச்சிருக்காங்க அவள”“ஊருக்கா சாமி. உக்காருப்பா வரேன்” என்கிறார்.“சொந்தக்காரப் பொண்ணா மணி?”“இல்லீங்க சார்” என்றவர் கூறியது இதுதான்,ஒருநாள் மதியம் ஷிஃப்டில் இந்தப் பெண் அவரது குழந்தையோடு திருச்சிக்குப் போயிருக்கிறார். குழந்தை வீர் வீரென்று அழுதிருக்கிறள். அது வழமையான குழந்தையின் அழுகையாகப் படவில்லை.அழுது அழுது முகமெல்லாம் வீங்கி சிவந்து எங்கே செத்துவிடுமோ என்ற பயம் அனைவருக்கும் வந்துவிட்டது. சமயபுரத்திற்கு அருகில் சாலையின் வலதுபுறம் SRM மருத்துவக் கல்லூரி இருக்கிறது. சுப்ரமணி பேருந்தை செக்யூரிட்டி தடுக்க தடுக்க உள்ளே விட்டு ஸ்ட்ரெச்சர் ஏற்பாடு செய்து வந்ததும் தனது எண்ணைக் கொடுத்துவிட்டு அழைக்குமாறு சொல்லிவிட்டு பேருந்தைத் திருப்பி இருக்கிறார்.இரண்டு இளைஞர்கள் உதவிக்காக இறங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.ஒன்றும் இல்லை குழந்தையின் காதில் எறும்பு புகுந்திருக்கிறது. தகவல் சுப்ரமணிக்குப் போயிருக்கிறது. அந்தப் பெண்தான் அவர்.என்ன சொல்வது,அறிவினான் ஆகுவது உண்டோஅன்வர் பாட்ஷா என்ற இளைஞன் நேற்று பள்ளப்பட்டியில் இருந்து மதுரைக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்திருக்கிறான். அவனுக்கு வயது இருபது. பேருந்து வாடிப்பட்டி அருகே வந்தபொழுது அவனுக்கு வலிப்பு வந்திருக்கிறது. வலிப்பு அவனுக்கு அடிக்கடி வரக்கூடியதுதானாம்.வலிப்பு வந்ததும் பேருந்தை நிறுத்தி அந்த இளைஞனை பேருந்தை நிறுத்தி இறக்கிவிட்டு சென்று விட்டார்களாம்.வலிப்பால் துடித்துக் கொண்டிருந்தவனை இறக்கிவிடுவது என்பது எப்படி?பேருந்தை நிறுத்தி அந்த இளைஞனை கீழே தள்ளிவிட்டு சென்றிருக்கிறார்கள்.கொடுமை என்னவென்றால் அந்தப் பேருந்தில் ஏறத்தாழ முப்பதுபேர் பயணம் செய்துகொண்டு இருந்திருக்கிறார்கள்.அடிக்கடி வலிப்பு வருகிற வழக்கம் இருக்கிறது என்றால் இத்தகைய பயணங்களின் பொழுது அதை அந்த இளைஞன் எதிர்பார்த்திருக்கவே செய்வான். எனில், அவனது சட்டைப் பையிலோ அல்லது கைப்பையிலோ அதற்கான மாத்திரைகள் இருந்திருக்கக் கூடும்.அதைத் தேடிப் பார்த்து அதற்கான மாத்திரைகள் இருந்திருப்பின் யாரேனும் கொண்டு வந்திருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து அந்த மாத்திரையோடு ஒரே ஒரு முடக்கு தண்ணீரை மட்டும் செலவு செய்திருந்தால் போதும் அந்தப் பிள்ளை பிழைத்திருப்பான்.அப்படி மாத்திரைகள் இல்லாத பட்சத்தில் போகிற வழியில் உள்ள ஏதேனும் ஒரு மருத்துவ மனையில் நிறுத்தி சேர்ப்பித்துவிட்டுப் போயிருந்தாலும் அந்தப் பிள்ளை பிழைத்திருப்பான்.யாரேனும் ஒரு பயணி அவனோடு கொஞ்ச நேரம் இருந்திருந்தால் போதும் அவனது முகவரி கேட்டு அவனை அவனது குடும்பத்தாரிடம் ஒப்படைத்திருக்கலாம்.“பெற்றால்தான் பிள்ளையா?” என்றெல்லாம் கேட்கிறோமே அந்தப் பேருந்தில் அந்த வயது குழந்தையின் பெற்றோர்கள் யாருமே இல்லாது போயிருந்தார்களா?வழக்கமாக குப்பைகளைக் கூட்டி சுத்தம் செய்யும் வழக்கம் இல்லாத அந்த அரசுப் பேருந்தில் அன்று மனிதத்தை மட்டும் சுத்தமாக வழித்து துடைத்து விட்டார்களா?கீழே கிடந்த அந்தக் குழந்தையை அவனைக் கடந்துபோன ஒருவரும் சரியாக கண்டு கொள்ளாது போகவே அவன் செத்துப் போயிருக்கிறான்.மீண்டும் சொல்கிறேன் அவனுக்கு வயது இருபது.அவனை நிராகரித்து கடந்துபோன ஒவ்வொருவரும் கொலைகாரர்களே.அப்படி அவசரமாய் அவனைக் கடந்து போய் என்னத்தை சாதித்து விட்டார்கள்?இது இப்படி இருக்க எல்லா ஓட்டுநர்களுமே இப்படித்தான். எல்லா நடத்துநர்களுமே இப்படித்தான். எல்லாப் பயணிகளுமே இப்படித்தான் என்றெல்லாம் கருதிவிடக் கூடாது.ஆறேழு ஆண்டுகள் இருக்கும். அப்போதெல்லாம் கள்ளக்குறிச்சியில் இருந்து திருச்சி செல்லும் அரசுப் பேருந்து தடம் எண் 329 இல்தான் பள்ளிக்கு போவது வழக்கம்.அந்த வகையில் அந்தப் பேருந்தின் ஓட்டுநர்கள் இயக்குநர்கள் அனைவரையும் தெரியும். மாலையும் பலநேரம் அந்தப் பேருந்துதான். அதுபோல ஒருநாள் மாளை பெரம்பலூரில் இறங்கி ஓட்டுநர் சுப்ரமணியன் மற்றும் நடத்துநர் முருகன் ஆகியோரோடு தேநீர்ப் பருகிக் கொண்டிருக்கிறேன்.அப்போது அங்கு வந்த இளம் பெண் ஒருவர் சுப்ரமணியன் காலைத் தொட்டு வணங்கவே அவர் ஒதுங்கி “நல்லா இரு சாமி. பாப்பா எப்படி இருக்கு?” என்றார். “நல்லா இருக்காங்கண்ணா. மாமியார் வச்சிருக்காங்க அவள”“ஊருக்கா சாமி. உக்காருப்பா வரேன்” என்கிறார்.“சொந்தக்காரப் பொண்ணா மணி?”“இல்லீங்க சார்” என்றவர் கூறியது இதுதான்,ஒருநாள் மதியம் ஷிஃப்டில் இந்தப் பெண் அவரது குழந்தையோடு திருச்சிக்குப் போயிருக்கிறார். குழந்தை வீர் வீரென்று அழுதிருக்கிறள். அது வழமையான குழந்தையின் அழுகையாகப் படவில்லை.அழுது அழுது முகமெல்லாம் வீங்கி சிவந்து எங்கே செத்துவிடுமோ என்ற பயம் அனைவருக்கும் வந்துவிட்டது. சமயபுரத்திற்கு அருகில் சாலையின் வலதுபுறம் SRM மருத்துவக் கல்லூரி இருக்கிறது. சுப்ரமணி பேருந்தை செக்யூரிட்டி தடுக்க தடுக்க உள்ளே விட்டு ஸ்ட்ரெச்சர் ஏற்பாடு செய்து வந்ததும் தனது எண்ணைக் கொடுத்துவிட்டு அழைக்குமாறு சொல்லிவிட்டு பேருந்தைத் திருப்பி இருக்கிறார்.இரண்டு இளைஞர்கள் உதவிக்காக இறங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.ஒன்றும் இல்லை குழந்தையின் காதில் எறும்பு புகுந்திருக்கிறது. தகவல் சுப்ரமணிக்குப் போயிருக்கிறது. அந்தப் பெண்தான் அவர்.என்ன சொல்வது,அறிவினான் ஆகுவது உண்டோ
பிரிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடைஎன்கிறான் வள்ளுவன்.அடுத்தவன் நோயை, அடுத்தவன் வலியை தன் நோய்போல் தன் வலிபோல் பாவிப்பதை இரக்கம் என்றோ கருணை என்றோகூட அவன் சொல்லவில்லை. அதுதான் அறிவு என்கிறான்.உலகத்தில் எவன் சொல்லி இருக்கிறான் இப்படி?இரக்கம் கருணை மனிதம் அறிவு ஏதுமற்றுப் போனோமா நாம்?#சாமங்கவிய 37 நிமிடங்கள்12.11.2018 போற்றாக் கடைஎன்கிறான் வள்ளுவன்.அடுத்தவன் நோயை, அடுத்தவன் வலியை தன் நோய்போல் தன் வலிபோல் பாவிப்பதை இரக்கம் என்றோ கருணை என்றோகூட அவன் சொல்லவில்லை. அதுதான் அறிவு என்கிறான்.உலகத்தில் எவன் சொல்லி இருக்கிறான் இப்படி?இரக்கம் கருணை மனிதம் அறிவு ஏதுமற்றுப் போனோமா நாம்?#சாமங்கவிய 37 நிமிடங்கள்
12.11.2018
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 12, 2018 20:43

கவிதை 089

மூன்றாவது வீட்டை ஒட்டி
வந்து கொண்டிருக்கிறது காற்று
எனக்கே எனக்கான பாடலை சுமந்தபடிதெருக்கதவைத் திறக்கிறேன்திறந்து கிடக்கிற தெருப்பக்கத்து வீட்டு வாசல்களில்
பாடலைப் பருகியபடியே
யாரேனும் ஒருவரேனும் நிற்கின்றனர்
என்னைப்போலவேமெல்ல மெல்ல லேஷந்த் வீட்டை நெருங்குகிறது
காற்றுதிறந்த கதவின் வழி வருகிறான் லேஷந்த்
காதே உடம்பாகவீட்டைக் கடந்து கொல்லைத் தெருவிற்கு நகர்கிறதுஓவ்வொன்றாய்த் திறக்கின்றன வீடுகள்
கொல்லைத் தெருவிலும்எல்லா வாசல்களிலும்
காதே உடம்பாய் நிற்கும் அனைவரும்
அவர்களுக்கே அவர்களுக்கான பாடாலாய்த்தான்
நினைத்துக் கொண்டிருக்கக் கூடும்
என்னைப் போலவே
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 12, 2018 20:34

November 11, 2018

குறள் ஒருபோதும் மனுதர்மத்தின் சாரமாக இருக்க இயலாது.

"குடி செய்வார்க்கில்லை பருவம்
மடிசெய்து
மானம் கருதக் கெடும்."தந்தை பெரியாருக்கு மிகவும் பிடித்தமான குறள் இது என்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் எழுதியிருக்கிறார்.1956 ஆம் ஆண்டில் ஒருநாள் தந்தை பெரியாரும் அடிகளாரும் ஒன்றாக மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு மகிழுந்தில் பயணம் செய்கிறார்கள். கார் கிளம்பி சற்று நேரத்திற்கெல்லாம் தந்தை பெரியார் தான் கொண்டு வந்திருந்த பையில் இருந்து திருக்குறள் புத்தகத்தை எடுக்கிறார். மேலே உள்ள குறளை எடுத்தவர் அந்தப் பக்கத்தை அடிகளாரிடம் நீட்டுகிறார். அந்தக் குறிப்பிட்டக் குறளுக்கு என்ன பொருள் என்று அடிகளாரிடம் கேட்டிருக்கிறார் பெரியார்.தன் இனம், இனம் என்பதை தனது குழு என்று சுறுக்கிக் கொள்வதுகூட பிழையாகாது, சிறப்புற, பயனுற அல்லது இதுபோல ஏதோ ஒன்று உற ஏதாவது செய்ய வேண்டும் என்று கருதுபவன் அந்தக் காரியத்தை எப்போது தொடங்குவது என்று யோசித்துக் கொண்டு இருக்க மாட்டான். அவனுக்கு நல்ல காலம், கெட்ட காலம், உகந்த காலம், உகந்த காலமின்மை என்பது எல்லாம் இல்லை.தன் குடி உயர உழைக்க நினைப்பவன் எல்லா நேரமும் அதற்காக சோம்பாது உழைத்துக் கொண்டே இருப்பான். மட்டுமல்ல, தன் இனம் அல்லது குடி அல்லது குழு சிறப்படைவதற்காக உழைப்பவன் தனது மானம் குறித்தும் கவலைப்பட மாட்டான். தன் மானம் குறித்து கவலைப்படுவதுகூட தன் இன உயர்விற்கான தடையாக அமையக்கூடும்.எனவே காலம் பார்க்காது, சோம்பாது, தனது மானமே கெட்டாலும் பரவாயில்லை என்று உழைப்பவனால் மட்டுமே தனது இனத்தை மேலெழுப்ப இயலும்.இவ்வாறாக அந்தக் குறளுக்கான பொருளை பெரியாருக்கு எடுத்துரைத்திருக்கிறார் அடிகளார்.ஒரு தேர்ந்த தமிழ் அறிஞர்போல, ஒரு தேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் போல பெரியார் அவர்கள் தமிழ் இலக்கியம் குறித்து தன்னோடு உரையாடிக் கொண்டு வந்ததாக அடிகளார் எழுதுகிறார்.ஒரு தேர்ந்த தமிழறிஞர் போல, ஒரு தேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் போல இலக்கியங்களைக் குறித்து அடிகளாரிடம் பேசிக்கொண்டு வந்த பெரியாருக்கா அந்தக் குறளுக்கு பொருள் தெரியாமல் இருந்திருக்குமா? இந்த அய்யம் நியாயமானதுதான். இந்த எளிய குறளுக்கான பொருள் பெரியாருக்கு தெரிந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம்.பிறகு ஏன் இதற்கான பொருளை அடிகளாரிடம் கேட்கிறார் பெரியார்?பொதுவாகவே பரிமேலழகர் போன்ற குறளுக்கான உரையாசிரியர்கள் பல இடங்களில் மனம் போன போக்கிலும் தங்களது கோட்பாடுகளின் வெளிச்சத்தின் வழியாகவும் குறளுக்கு பொருள் சொல்லிப் போயிருப்பதாக உணர்கிறார் பெரியார்.திரு நாகசாமி போன்றவர்கள் “மனுவின் சாரமே திருக்குறள்” என்று இன்றைக்கு எழுதத் துணிகிறார்கள் என்றால் பரிமேலழகர் போன்றவர்கள் அன்றைக்கே அதற்கான முயற்சியைத் தொடங்கி இருந்தார்கள் என்பதையும் பெரியார் உணர்ந்தே இருந்தார்.எனவேதான் தனக்கே தனக்கென்று எழுதப் பட்டிருப்பதாய் தான் உணர்ந்து தெளிந்த அந்தக் குறள் குறித்து அய்யமறத் தெளிவு பெறுவதற்காகவே அடிகளாரிடம் அவர் கேட்டிருக்கக் கூடும்.இந்தக் குறளை பெரியாருக்கென்றே வள்ளுவர் எழுதினாரா அல்லது இந்தக் குறளின் படியே பெரியார் வாழ்ந்தாரா என்பதை பிரித்து உணர இயலாதபடி பெரியாரின் வாழ்க்கையும் இந்தக் குறளும் ஒன்றோடு ஒன்று இரண்டறக் கலந்து கிடக்கிறது.தனது சமூகம் மேம்பாடு அடைய விரும்புபவன் எப்படி இருப்பான் அல்லது எப்படி இருக்க வேண்டும் என்று இந்தக் குறள் கூறுகிறது. எந்தக் குலத்தில் பிறந்தவன் என்ற குறிப்பெல்லாம் இந்தக் குறளில் இல்லை.மட்டுமல்ல,“பிறப்பொக்கும்” என்று சனாதனத்தின் செவிட்டில் அடித்து சொல்கிறது குறள்.பிறப்பொக்கும் என்பது மனுதர்மத்திற்கு எதிரானது. “பிறப்பொக்காது” என்பதை நிறுவனப்படுத்தி இருக்கிற நூலே மனுதர்மம்.“பிறப்பொக்கும்” என்பது மனுதர்மத்திற்கான வள்ளுவரின் எதிர்வினையே ஆகும்.மனுதர்மத்தின் சாரத்தை எம் தந்தை ஒருபோதும் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்.எம் தந்தை ஏற்றுக் கொண்ட ஒன்று மனுதர்மத்தின் சாரமாக இருக்க வாய்ப்பே இல்லை.அதற்காகவெல்லாம் மட்டுமே நாங்கள் இதை சொல்ல வில்லை“உழுதுண்டு வாழ்வாரை தொழுதுண்டு” வாழச் சொல்லும் குறள்ஒருபோதும் மனுதர்மத்தின் சாரமாக இருக்க இயலாது.#சாமங்கவிய இரண்டு மணி இருபது நிமிடம்
11.11.2018
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 11, 2018 22:22

செம சுள்ளாப்பு

மூன்று நாட்களாக லேஷந்த் சார் மருத்துவமனையில் இருந்தார். டெங்கு என்று பயந்து போனோம்.அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்த அன்று பார்த்துவிட்டு வந்து விழுந்தவன்தான் எனக்கு டெங்கோ என்றோ அச்சம் வந்துவிட்டதுஇருவருக்கும் டெங்கு இல்லைஇந்த நிலையில் சார் நேற்று டிஸ்சார்ஜ் ஆனார்.அவரது வீட்டிற்குப் போய் சற்று நேரத்திற்கெல்லாம் அழுதுகொண்டே இங்கு வந்துவிட்டார்.என்ன வேணும் தம்பிக்கு?சொல்லாமல் அழுதார்.“அவனுக்கு ரெய்ன் கோட் வேணுமாம்” கீர்த்தனா சொன்னாள்.மதியம் வண்டியை எடுத்துக் கொண்டு ஒரு வழியாய் ஆதித்தியா மால் போனேன்ஒரு வழியாய் என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது, வண்டியின் சைட் ஸ்டாண்ட் போடக்கூட முடியவில்லை, அப்படியொரு பலஹீனம்.ரெய்ன்கோட் இல்லை என்றதும் திரும்பினால் அண்ணனும் தங்கையுமாய் இரண்டு குழந்தைகள் உள்ளே நுழைந்தார்கள்நம்மாலதான் சும்மா இருக்க முடியாதே,யாருடா இது?பாப்பா?யாரோட பாப்பா?என்னோட பாப்பா.ஒங்க பாப்பாவ நான் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிடவா?சரினு சொன்னவன் அவகிட்ட திரும்பி,“தாத்தாவோட போடி”பய நம்மவிட சுள்ளாப்புதானு நினைக்கறதுக்குள்ளஅவனைக் கட்டிப் புடிச்சிட்டு அழ ஆரம்பிச்சுட்டா.பதறிப்போய் “ ஏன் சாமி, ஏன் சாமி” நு கேட்கவேதாத்தா கருப்பா இருக்காங்க பயமா இருக்குங்கறாசரி சரி கூட்டிட்டு போகல நு சொல்லிட்டு கிளம்பறேன்”தாத்தா”திரும்பிப் பார்க்கிறேன்கண்ணடிச்சுட்டே டாட்டா காட்டுறாசெம சுள்ளாப்பு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 11, 2018 22:17

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.