“நீங்கள் அலட்சியமாக இருந்தால் அது நடக்கவும் கூடும்”

”பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் பக்கோடா விற்கப் போகவேண்டியதுதான் “ என்று சமீபத்தில் உத்திரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் கூறியதை சலனமற்று தலைவர்கள் கடந்துபோவார்கள் என்றால் கிட்டத்தட்ட அதுதான் உண்மையாகவும் போகலாம்இந்திய அரசியலில் அகிலேஷ் சிறு பிள்ளையாக இருக்கலாம். ஆனால் அவரது இந்தக் கூற்று எழுபது வயது தலைவர் ஒருவரின் அனுபவத் திரட்டாய் வந்திருக்கிறது. வள்ளுவனும் மிகச் சரியாய் சொல்கிறான்“எப்பொருள் யார் யார் வாய்கேட்பினும்” என்று.மதவெறிக்கு எதிரான அனைத்து தலைவர்களும் சிறுபிள்ளை சொன்னதுதானே என்று உதாசீனப்படுத்திவிட்டு கடந்துவிடாமல் அந்தக் கூற்றை சற்று ஆழமாய்ப் பரிசீலிக்க வேண்டும்.இந்தியா முழுமையும் காவியடிக்கவேண்டும் என்பதற்கு அவர்கள் என்ன விலையானாலும் தருவதற்குத் தயாராக இருக்கிறார்கள்.ஒரு உறுப்பினர்கூட தம் கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கபடாத மாநிலங்களிலும் உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைப்பதற்கு அவர்களுக்கு எந்த விதமான கூச்சமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏறத்தாழ இதை ஒட்டியான நிகழ்வுகளை நாம் சமீப காலங்களில் பார்த்தபடியேதான் இருக்கிறோம்.ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை என்று தீர்க்கமாகத் தெரிந்தாலும், நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றுப்போவோம் என்று தெரிந்த நிலையிலும், பெரும்பான்மைக்கும் அதிகப்படியான நிலையில் எதிரே திரண்டு விட்டார்கள் என்பது தெளிவாகிட்ட நிலையிலும், ஆளுநரை வைத்து தனிப்பெரும் கட்சி என்கிற அளவை வைத்து ஆட்சிக்கு வருகிறார்கள்.அவர்களது திட்டம் இவைதான்,1) நம்பிக்கை வாக்கெடுப்பிற்குள் அமைச்சர் பதவி, பணம், இன்னும் என்னவெல்லாம் சொல்லி சபலப்படுத்த முடியோ அவற்றையெல்லாம் செய்து எதிரணி எம் எல் ஏக்களை வளைப்பது
2) அல்லது, இருந்தவரை ஒரு நாளோ ஒரு வாரமோ, 15 நாட்களோ இருந்துவிட்டுப் போவதுஇதை கர்நாடகாவில் பார்த்தோம். பார்த்துக் கொண்டும் இருக்கிறோம்.கேரள மக்களுக்கு பேரிடர் காலத்தில் வழங்கிய அரிசிக்கான விலையைக்கூட கொடுக்க இருக்கிற நிவாரணா நிதியில் இருந்து பிடித்துக் கொள்வோம் என்று நெஞ்சில் ஒரு சொட்டு ஈரமும் இல்லாமல் கூறும் இரக்கமற்றவர்களாக பாஜக இருக்கிறார்கள்.தில்லியில் பாண்டியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை ஆளுநர்களைக் கொண்டு முடக்கிப் போடுகிறார்கள்தமிழ்நாட்டில் அவர்களுக்கென்று கன்னியாகுமரியில் இரண்டு வார்டுகளையும் ஒன்றிரண்டு ஊராட்சி மன்றங்களையும்பிடிக்க முடியும். அவ்வளவுதான்.அந்த நிலையிலேயே அவர்கள் இங்கு போடும் ஆட்டம் இருக்கிறதே, அப்பப்பா சொல்லி மாளாது.தூத்துக்குடி குழந்தை ஒருவர் விமானம் விட்டு இறங்கும்போது “பாசிஸ்ட் பாஜக ஒழிக” என்று கோஷமிட்டிருக்கிறார். அவர் கனடாவில் உயர் படிப்பு படிக்கும் குழந்தை. அந்த விமானத்தில் பாஜகவின் தமிழ்மாநிலத் தலைவர் திருமதி தமிழிசையும் வந்திருக்கிறார். அவர் வந்ததால்தான் இந்தக் கோஷமே போட்டதாக குற்றம் சுமத்துகிறார்கள்.விமான சிப்பந்திகள் யாரும் புகார் கொடுக்காத நிலையிலும் தமிழிசை கோழிசொன்னதை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு அவரைக் கைது செய்து அவரது கடவுச் சீட்டை முடக்க முயற்சி செய்கிறார்கள்.அதே நேரம் H ராஜா என்ற அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் கிறுக்கன் அரைபோதையில் உளறுவதைவிடவும் கேவலமாக அனைவரையும் தாறுமாறாக பேசுகிறார்.காவலர்கள் அவரைத் தேடுகிறார்கள். அதே சமயத்தில் வேறு ஒரு இடத்தில் காவலர்களின் பாதுகாப்போடு அவர் பொது மேடையில் பேசுகிறார்.இந்த ஆட்சியை வைத்துக் கொண்டு அவர்கள் விளையாண்டுக் கொண்டிருக்கிறார்கள்.அதிமுகவை அவர்களோடு கூட்டாளியாய் நின்று ரஜினி மற்றும் உதிரிக் கட்சிகள் ஆதரவோடு வெற்றிபெற வைத்து மந்திரி சபையில் இடம் பிடிப்பது, அதை வைத்து கட்சியைக் கொண்டுபோவது என்பது அவர்கள் திட்டம். இதெல்லாம் சாத்தியம் இல்லை என்று அலட்சியமாக யாரேனும் இருந்தால் அவர்களுக்கு சொல்வோம்“நீங்கள் அலட்சியமாக இருந்தால் அது நடக்கவும் கூடும்”உத்திரப் பிரதேசத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். அவர்கள் தந்தை அம்பேத்கருக்கே ஞானஸ்தானம் செய்கிறார்கள். ஆக்சிஜன் இல்லாமல் குழந்தைகள் கொத்து கொத்தாய் செத்ததையே அலட்சியமாய் கடந்து போகிறவர்கள்.அங்கு அவர்களை ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்கிற நிலைதான் இருந்தது. இடைத்தேர்தல் வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களாய் இருந்த முதல்வரும் துணை முதல்வரும் பதவிகளை ராஜினாமா செய்யவே வந்த இடைத்தேர்தல் அது. இரண்டு தொகுதிகளிலும் பாஜக மண்ணைக் கவ்வியது.காரணம் மாயாவதியும் அகிலேசும் கரம் இணைத்தது.அந்த அனுபவத்தில்தான் அகிலேஷ் சொல்கிறார்.அதைக் கேட்டால் நாடு பிழைக்கும்.இதில் காங்கிரசுக்கும் இட்துசாரிகளுக்கும் திமுக லாலு சந்திரசேகர் சந்திரபாபு இன்னும் அனைவருக்கும் பெரும் பொறுப்பு இருக்கிறது.பாஜகவை வீழ்த்த இவர்களை ஒன்றிணைக்க பொதுமக்கள் வீதிக்கு வந்தும் போராட வேண்டும்அல்லது அகிலேஷ் சொன்னதுதான்#சாமங்கவிய 21 நிமிடங்கள்
19.09.2018
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 20, 2018 00:18
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.