Gandhi Before India Quotes
Gandhi Before India
by
Ramachandra Guha1,500 ratings, 4.23 average rating, 199 reviews
Open Preview
Gandhi Before India Quotes
Showing 1-30 of 80
“காந்தி இந்தியன் ஒப்பீனியனில் இனி விளம்பரங்கள் வெளிவராது என்று அறிவித்தார். ‘விளம்பரங்கள் என்ற முறையே மோசமானது; தீங்கான போட்டியை ஏற்படுத்துகிறது; நாமோ அதை எதிர்ப்பவர்கள்; பலசமயம் பெரிய அளவில் பொய்யான தகவல்களைத் தருகிறது.’ கடந்த காலத்தில் அவ்விதழ் ‘எப்போதுமே எங்கள் அளவுகோல்களைக் கருத்தில்கொண்டே வந்திருக்கிறது; நம் மனசாட்சிக்கு ஒவ்வாத பல விளம்பரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இப்போது விளம்பரங்கள் முற்றாகவே நிறுத்தப்படும்.”
― Gandhi Before India
― Gandhi Before India
“அக்டோபர் மாதம் காந்தி மேத்தாவுக்கு, ‘நான் கூடிய விரைவில் இந்தியா திரும்பிச் சென்று, அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடவேண்டும் என்பதில் நீங்கள் குறியாக இருப்பது எனக்குத் தெரியும். இந்த யோசனை எனக்குப் பிடித்திருக்கிறது. இங்கே பொறுப்புகள் தீர்ந்த அதேகணம் நான் போய்விடுவேன்’ என்று எழுதினார். மேத்தா தனது நண்பர் தென்னாப்பிரிக்காவில் தங்கியிருப்பதன் மூலம் தங்கள் தாய்நாட்டைப் புறக்கணிப்பதாகக் குற்றம்சாட்டியதாகத் தெரிகிறது. ‘நான் முழு உலகத்துக்கும் பணி செய்யவேண்டும் என்ற மாயையில் வீழ்ந்துவிடுவேன் என்று நினைத்துவிடாதீர்கள். என் வேலை இந்தியாவில்தான் இருக்கமுடியும் என்று நான் நன்றாகவே உணர்ந்திருக்கிறேன்' என்றார் காந்தி.”
― Gandhi Before India
― Gandhi Before India
“கடைசியில் ஹரிலால் கிளம்பியபோது மே 16 அன்று காந்தியுடன் டால்ஸ்டாய் பண்ணையிலிருந்து சில மாணவர்களும் ஜோஹானஸ்பர்க் நிலையத்துக்கு அந்தப் பையனை வழியனுப்பச் சென்றனர். அந்த மாணவர்களில் ஒருவர் நினைவுகூர்ந்தபடி, ‘புகைவண்டி கிளம்பும் சமயம் பாபு ஹரிலாலை முத்தமிட்டு, அவர் கன்னத்தில் லேசாகத் தட்டிவிட்டுச் சொன்னார்: ‘உன் தந்தை உனக்குக் கெடுதல் செய்திருக்கிறார் என்று நீ நினைத்தால் அவரை மன்னித்துவிடு'.”
― Gandhi Before India
― Gandhi Before India
“காந்தியின் பார்வையில், வெவ்வேறு மதங்கள் என்பவை ‘ஒரே இடத்துக்கு இட்டுச்செல்லும் வெவ்வேறு பாதைகள் மட்டுமே. ஒரே இலக்கை அடையும்வரை, எந்தப் பாதையில் செல்கிறோம் என்பதற்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது? இதில் சண்டையிட்டுக்கொள்ள என்ன இருக்கிறது?’.”
― Gandhi Before India
― Gandhi Before India
“வன்முறைப் போராட்டத்தைவிட அஹிம்சைப் போராட்டத்துக்கு அதிகமான வீரம் தேவை என்றார் காந்தி. ‘யார் உண்மையான போராளி’ என்று கேட்டார். ‘மரணத்தைத் தன் நண்பனாகத் தன்னுடனே வைத்துக்கொண்டிருப்பவனா, மற்றவர்களின் மரணத்தைக் கட்டுப்படுத்துபவனா?’.”
― Gandhi Before India
― Gandhi Before India
“டால்ஸ்டாய் மேற்கொண்ட பல மாறுதல்களில் மிகவும் துன்பம் தருவதாக இருந்தது அவர் சிற்றின்ப நுகர்வை முற்றாக ஒதுக்கித் தள்ளியதுதான். அவரது இளமைக்காலத்தில் (அவரது வார்த்தைகளிலேயே), ‘தீவிரமாகப் பெண்களைத் துரத்துபவராக’ இருந்தவர். அவரது மனைவி ஒரு டஜன் தடவைக்குமேல் கருவுற்றார். தனது பண்ணைத்தோட்டத்தில் வேலைசெய்த குடியானவப் பெண்களுடன் அவருக்குத் தொடர்பிருந்தது. ‘கட்டுப்பாடற்ற இச்சை’ கொண்ட ஒரு மனிதரான அவர் நடுவயதில் மற்ற இன்பங்களைப்போல பாலியல் உறவையும் துறக்க முனைந்தார்.
டால்ஸ்டாய் எளிய வாழ்வைக் கைக்கொண்டது பரவலாகப் பேசப்பட்டது; பலர் அவரைப் பின்பற்றவும் செய்தனர். ஐரோப்பாவிலும், ஆசியாவிலும், வட அமெரிக்காவிலும் அவரைப் பின்பற்றியவர்கள் ராணுவசேவையில் இணைய மறுத்தனர்; கைத்தொழில், வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தினர்; சைவ உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்தனர்; சமய சகிப்புத்தன்மை பற்றிப் போதனை செய்தனர். தமது குருநாதர் எழுதியவற்றைப் படித்தும் அவரைப் பின்பற்றியும் இந்த டால்ஸ்டாயர்கள் டால்ஸ்டாய் தனது தாய்மண்ணில் செய்ததாக நம்பப்படுவனவற்றைத் தாமும் தமது நாடுகளில் செய்ய முனைந்தனர்.”
― Gandhi Before India
டால்ஸ்டாய் எளிய வாழ்வைக் கைக்கொண்டது பரவலாகப் பேசப்பட்டது; பலர் அவரைப் பின்பற்றவும் செய்தனர். ஐரோப்பாவிலும், ஆசியாவிலும், வட அமெரிக்காவிலும் அவரைப் பின்பற்றியவர்கள் ராணுவசேவையில் இணைய மறுத்தனர்; கைத்தொழில், வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தினர்; சைவ உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்தனர்; சமய சகிப்புத்தன்மை பற்றிப் போதனை செய்தனர். தமது குருநாதர் எழுதியவற்றைப் படித்தும் அவரைப் பின்பற்றியும் இந்த டால்ஸ்டாயர்கள் டால்ஸ்டாய் தனது தாய்மண்ணில் செய்ததாக நம்பப்படுவனவற்றைத் தாமும் தமது நாடுகளில் செய்ய முனைந்தனர்.”
― Gandhi Before India
“லண்டனில் காந்தியின் முதலாம் ஆண்டில், அவரது மாத செலவுகள் 12 பவுண்டுகள். இரண்டாம் ஆண்டில் அதை அவர் 4 பவுண்டுகளாகக் குறைத்துக்கொண்டார். சட்டைகளுக்குக் கஞ்சி போடுவதை விட்டுவிட்டார். இதற்கு உந்துதலாக இருந்தது ‘இங்கிலாந்தில் இருந்த சில மரபுக்கு மாறான மனிதர்கள்; நவநாகரிகத்தை கடவுள்போலத் தொழுவதை விட்டுவிட்டவர்கள்’. கோடைகாலத்தில் டிராயர்கள் அணிவதை நிறுத்தினார். இது சலவைக்காரருக்கான செலவைக் குறைத்தது. பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக எல்லா இடங்களுக்கும் நடந்தே போய்வரலானார். தபால்தலை செலவைக் குறைப்பதற்காக அவர் வீட்டுக்கு எழுதும் கடிதங்களை உறையில் இட்டு அனுப்புவதற்குப் பதிலாக அஞ்சலட்டைகளைப் பயன்படுத்த ஆரம்பித்தார். முடி வெட்டுபவரிடம் செல்வதற்குப் பதிலாகத் தானே சவரம் செய்துகொள்ள ஆரம்பித்தார். செய்தித்தாள்களைத் தானே வாங்குவதற்குப் பதிலாகப் பொது நூலகங்களில் படிக்க ஆரம்பித்தார்.”
― Gandhi Before India
― Gandhi Before India
“You gave us a lawyer; we gave you back a Mahatma.”
― Gandhi Before India
― Gandhi Before India
“கல்வி தொடர்பான அத்தியாயம் ஒன்றில் காந்தி இந்தியாவுக்குள் ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளின் பயன்பாட்டைத் தீவிரமாக ஆதரித்தார். இந்தியர்கள் அனைவரும் தம் தாய் மொழியை அறிந்திருக்கவேண்டும். இந்தியை ஓர் இணைப்பு மொழியாக முன்னெடுக்கலாம். அதை எழுத தேவநாகரி அல்லது பாரசீக எழுத்துக்களைப் பயன்படுத்த அனுமதிக்கலாம்; இதன் மூலம் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இன்னும் நெருங்கிய தொடர்பை உருவாக்க முடியும்.”
― Thenafricavil Gandhi (Tamil)
― Thenafricavil Gandhi (Tamil)
“நியாயமான வழிமுறைகளே நியாயமான விளைவுகளை உண்டாக்கும்; எல்லாவற்றிலும் இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் பெரும்பாலான நிகழ்வுகளில் அன்பு, இரக்கம் ஆகியவற்றின் சக்தி ஆயுதங்களின் சக்தியைவிட எல்லையற்ற அளவில் அதிகமானது. காந்தியைப்”
― Thenafricavil Gandhi (Tamil)
― Thenafricavil Gandhi (Tamil)
“பாரபட்சம் அவரை துன்பப்படுத்தியது. அவர், ‘இன்னொரு மனிதரின் சிந்தனைகள் மோசமானவை, நம்முடைய சிந்தனைகளே நல்லவை என்றும், நம்மிடமிருந்து வேறுபடும் பார்வை கொண்டவர்கள் நாட்டின் எதிரிகள் என்றும் சொல்வது கெட்ட பழக்கம்”
― Thenafricavil Gandhi (Tamil)
― Thenafricavil Gandhi (Tamil)
“நீ மட்டும் தைரியத்தைக் கைவிடாமல் இருந்து, தேவையான சத்தான ஆகாரங்களையும் எடுத்துக்கொண்டால் உடம்பு சரியாகிவிடும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நீ காலமாகிவிட்டால், நான் உயிருடன் இருக்கையில் என்னிடமிருந்து பிரிந்திருக்கும்போது நீ அப்படிச் செய்வதில் குற்றம் எதுவும் இல்லை என்று மட்டும் சொல்வேன். நான் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்றால், நீ இறந்துவிட்டாலும்கூட என்னைப் பொறுத்தவரை வாழ்ந்துகொண்டுதான் இருப்பாய். உன் ஆன்மாவுக்கு மரணமில்லை. நான் அடிக்கடி சொல்லியிருப்பதை மீண்டும் சொல்கிறேன்: உன் வியாதி உன்னை எடுத்துச் சென்றுவிடுமானால், நான் இன்னொரு திருமணம் செய்துகொள்ளமாட்டேன். 33 இந்தக்”
― Thenafricavil Gandhi (Tamil)
― Thenafricavil Gandhi (Tamil)
“Natal. That Jinnah wrote to Gandhi to commiserate”
― Gandhi Before India
― Gandhi Before India
“1910 ல் ஒரு நிருபருடன் உரையாடும்போது, ஹென்றி போலாக் குறிப்பிட்டார்: ‘எமது திட்டம், எப்போதும்போல, வன்முறை கொண்டதாகவோ, சீர்குலைக்க முயல்வதாகவோ இருக்காது; மாறாக, எங்கள் மக்கள் துன்பங்களை ஏற்றுக்கொள்வதாகவே இருக்கும்; அதிகாரிகள் தங்களைப் பற்றியே வெட்கம் கொள்ளும் வரையிலும் எங்கள் மக்கள் இந்தக் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்ளும் எண்ணம் கொண்டிருக்கிறார்கள்'.”
― Gandhi Before India
― Gandhi Before India
“ஒரு குஜராத்தி தலைமையாசிரியர் 1960 களில் குறிப்பிட்ட விஷயமும் இங்கு கவனிக்கத்தக்கது. அவர் 1960 ல் ராஜ்கோட்டில் காந்தியின் பழைய பள்ளிப் பதிவேடுகளைக் கண்டுபிடித்தார். தற்போது போற்றி வணங்கப்படும் ஒருவர், ஒழுங்கீனமான வருகைப் பதிவும் ரொம்ப சாதாரணமான மதிப்பெண்களும் பெற்றிருந்ததை அவை காட்டின. அந்த ஆசிரியர்- செயல்பாட்டாளர் எழுதினார், ‘காந்தி சாதாரணக் களிமண்ணிலிருந்து வீரர்களை உருவாக்கக் கூடியவர்’ என்று சொல்லப்படுவது மிகவும் சரியே. அவருடைய முதலாவதான மற்றும் சந்தேகமின்றி மிக வெற்றிகரமான பரிசோதனை அவர் மீது அவர் செய்துகொண்ட ஆன்ம பரிசோதனையே'.”
― Gandhi Before India
― Gandhi Before India
“காந்தியின் மிக ஆச்சரியகரமான சாதனைகளில் ஒன்று, 1907- 10 காலகட்டத்தில் ட்ரான்ஸ்வாலில் சுமார் 3000 இந்தியர்கள் கைதாகி சிறைசென்றார்கள் என்ற உண்மை. அந்தக் காலனி நாட்டிலிருந்த இந்தியர்களில் இது 35 சதவீதம்.”
― Gandhi Before India
― Gandhi Before India
“இதற்கிடையே ஃபீனிக்ஸில் காந்தியின் கவனம் மீண்டும் ஆசிரமத்தில் பாலியல் ஒழுக்கமீறல் நடந்திருக்கிறது என்ற வதந்தியால் திசை திரும்பியது. ஏப்ரல் மத்தியில் ஜெக்கி மேத்தா இன்னும் மணிலால் குறித்து காதல் உணர்வுடன் இருப்பதாகத்தான் சந்தேகிப்பதாக காந்தியிடம் கஸ்தூரிபா தெரிவித்தார். காந்தி அந்த ஊகத்தை நிராகரித்தார். கஸ்தூரிபா பிரன்ஜீவன் மேத்தாவின் மகள் குறித்து அதிகமாக முன்முடிவு கொண்டிருக்கிறார் என்பதே அவர் எண்ணம்; அவர் சமயம் கிடைக்கும்போதெல்லாம் ஜெக்கிமீது ‘நெருப்பை உமிழ்கிறார்’.
உடனே கஸ்தூரிபா, காந்தி ஜெக்கியைப் பாதுகாப்பதாகக் குற்றம்சாட்டினார். காந்தி, கஸ்தூரிபா தேவையற்ற அச்சம் கொண்டிருப்பதாகப் பதில் சொன்னார். இந்தக் கருத்து வேற்றுமை அச்சமூட்டும் சச்சரவாக மாறியது; காந்தி தம்பதியினரின் முப்பதாண்டுத் திருமண வாழ்வில் அதுவே ஆகத் தீவிரமான பிணக்கு என்று அது குறித்த எல்லா வர்ணனைகளும் காட்டுகின்றன. அந்தக் கணவரின் தரப்பு அவர் காலன்பாக்குக்கு எழுதிய கடிதத்தில் கோட்டுச்சித்திரமாகக் காட்டப்பட்டுள்ளது:
'அவள் உடனே கூச்சலிட ஆரம்பித்தாள். எல்லா நல்ல சாப்பாட்டையும் விலக்கச் சொல்லி அவளைச் சாகடிக்கப் பார்த்தேனாம். எனக்கு அவள்மீது சலிப்பு ஏற்பட்டுவிட்டதாம்; அவள் சாகவேண்டும் என்று நினைக்கிறேனாம்; நான் ஒரு படமெடுக்கும் பாம்பாம்... நான் பேசப்பேச அவள் இன்னும் இன்னும் விஷத்தை உமிழ்ந்தாள்... இன்றைக்கு இயல்பாகவே இருக்கிறாள். ஆனால் நேற்றைய சம்பவம் என் வாழ்வில் கற்ற பெரிய பாடங்களில் ஒன்று. அவள் என்மீது வைத்த குற்றச்சாட்டுகளை எல்லாம் உணர்ந்துதான் சொல்கிறாள். அவள் முரண்பாடான உணர்வுகளைக் கொண்டிருக்கிறாள். நான் அவளை ஒரு மகன் தாயைப் பார்த்துக்கொள்வதுபோலப் பார்த்திருக்கிறேன். ஆனால் நான் வைத்திருக்கும் அன்பு அவளது இயல்பை மாற்றுகிற அளவுக்குத் தீவிரம் கொண்டதாகவும் சுயநலமற்றதாகவும் இல்லை. ஆம், உலகப் பற்று இல்லாமல் பணிசெய்ய விரும்பும் ஒரு மனிதன் திருமணம் செய்துகொள்ளக்கூடாது. அவள் ஒரு மோசமான மனைவி என்று நான் புகார் சொல்ல முடியாது. மாறாக அவள் அளவுக்கு வேறு எந்தப் பெண்ணும் தன் கணவனின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஈடுகொடுத்திருக்க முடியாது. கூட்டிக்கழித்துப் பார்த்தால் அவள் என்னைக் கவிழ்த்துவிடவில்லை; மிக நல்லதொரு எடுத்துக்காட்டாக இருந்திருக்கிறாள். நான் சொல்லவருவது என்னவென்றால், நீங்கள் ஒரு குறிப்பிட்ட பெண்ணுடன் உங்களைப் பிணைத்துக்கொண்டு அதே சமயத்தில் மனித குலத்துக்காகப் பணியாற்ற முடியாது. இரண்டும் ஒத்துப்போகாது. இதுதான் அவளுக்குள் அவ்வப்போது சாத்தான் விழித்துக்கொள்வதற்கான நிஜமான காரணம். இல்லையென்றால் அவன் யாருக்கும் தெரியாமல் தூங்கிக்கொண்டே இருந்திருப்பான்'.”
― Gandhi Before India
உடனே கஸ்தூரிபா, காந்தி ஜெக்கியைப் பாதுகாப்பதாகக் குற்றம்சாட்டினார். காந்தி, கஸ்தூரிபா தேவையற்ற அச்சம் கொண்டிருப்பதாகப் பதில் சொன்னார். இந்தக் கருத்து வேற்றுமை அச்சமூட்டும் சச்சரவாக மாறியது; காந்தி தம்பதியினரின் முப்பதாண்டுத் திருமண வாழ்வில் அதுவே ஆகத் தீவிரமான பிணக்கு என்று அது குறித்த எல்லா வர்ணனைகளும் காட்டுகின்றன. அந்தக் கணவரின் தரப்பு அவர் காலன்பாக்குக்கு எழுதிய கடிதத்தில் கோட்டுச்சித்திரமாகக் காட்டப்பட்டுள்ளது:
'அவள் உடனே கூச்சலிட ஆரம்பித்தாள். எல்லா நல்ல சாப்பாட்டையும் விலக்கச் சொல்லி அவளைச் சாகடிக்கப் பார்த்தேனாம். எனக்கு அவள்மீது சலிப்பு ஏற்பட்டுவிட்டதாம்; அவள் சாகவேண்டும் என்று நினைக்கிறேனாம்; நான் ஒரு படமெடுக்கும் பாம்பாம்... நான் பேசப்பேச அவள் இன்னும் இன்னும் விஷத்தை உமிழ்ந்தாள்... இன்றைக்கு இயல்பாகவே இருக்கிறாள். ஆனால் நேற்றைய சம்பவம் என் வாழ்வில் கற்ற பெரிய பாடங்களில் ஒன்று. அவள் என்மீது வைத்த குற்றச்சாட்டுகளை எல்லாம் உணர்ந்துதான் சொல்கிறாள். அவள் முரண்பாடான உணர்வுகளைக் கொண்டிருக்கிறாள். நான் அவளை ஒரு மகன் தாயைப் பார்த்துக்கொள்வதுபோலப் பார்த்திருக்கிறேன். ஆனால் நான் வைத்திருக்கும் அன்பு அவளது இயல்பை மாற்றுகிற அளவுக்குத் தீவிரம் கொண்டதாகவும் சுயநலமற்றதாகவும் இல்லை. ஆம், உலகப் பற்று இல்லாமல் பணிசெய்ய விரும்பும் ஒரு மனிதன் திருமணம் செய்துகொள்ளக்கூடாது. அவள் ஒரு மோசமான மனைவி என்று நான் புகார் சொல்ல முடியாது. மாறாக அவள் அளவுக்கு வேறு எந்தப் பெண்ணும் தன் கணவனின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஈடுகொடுத்திருக்க முடியாது. கூட்டிக்கழித்துப் பார்த்தால் அவள் என்னைக் கவிழ்த்துவிடவில்லை; மிக நல்லதொரு எடுத்துக்காட்டாக இருந்திருக்கிறாள். நான் சொல்லவருவது என்னவென்றால், நீங்கள் ஒரு குறிப்பிட்ட பெண்ணுடன் உங்களைப் பிணைத்துக்கொண்டு அதே சமயத்தில் மனித குலத்துக்காகப் பணியாற்ற முடியாது. இரண்டும் ஒத்துப்போகாது. இதுதான் அவளுக்குள் அவ்வப்போது சாத்தான் விழித்துக்கொள்வதற்கான நிஜமான காரணம். இல்லையென்றால் அவன் யாருக்கும் தெரியாமல் தூங்கிக்கொண்டே இருந்திருப்பான்'.”
― Gandhi Before India
“மார்ச் 11 அன்று காந்தி தன் ஒன்றுவிட்ட அண்ணன் மகன் சகன்லாலுக்கு எழுதிய கடிதத்தில், தான் கேள்விப்பட்ட விஷயம் பற்றி, ‘ஜோஹானஸ்பர்க்கில் என் உயிரைப் பறிக்கச் சதிசெய்து வருகிறார்களாம். அது மிகவும் வரவேற்கத் தக்கது; நான் செய்துவரும் வேலைக்கு அது சரியான முடிவாக இருக்கும்’ என்று குறிப்பிட்டார். ஒருவேளை தான் கொல்லப்பட்டால், தனது குடும்பம் என்ன செய்யவேண்டும் என்று காந்தி சில அறிவுறுத்தல்களைத் தந்திருந்தார். அவர்கள் நிலத்தில் குடியானவர்களைப்போல எளிமையாக வாழவேண்டும். காந்தி ஐந்து விதவைகளைப் பராமரிக்க வேண்டியிருந்தது. இவர்கள் அவரது தமக்கை, அவரது காலமான இரு அண்ணன்களின் மனைவியர், இன்னும் இரண்டு குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர். காந்தி இப்போது அவரது விரோதிகளால் கொல்லப்பட்டால், இதற்கான பணத்தைப் பிரன்ஜீவன் மேத்தாவிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். ஆனாலும் நாளடைவில் அவரவர் மகன்கள் தம் விதவைத் தாயார்களுக்கான பொறுப்பை எடுத்துக்கொள்ளவேண்டும்; ஹரிலால் கஸ்தூரிபாவைக் கவனித்துக்கொள்ள வேண்டியதும் இதில் அடக்கம்.”
― Gandhi Before India
― Gandhi Before India
“கஸ்தூரிபாவின் உயிருக்கு இனி ஆபத்தில்லை என்றால், இப்போது அவரது கணவரின் உயிர் ஆபத்தில் இருந்தது. விசாரணை கமிஷன் ஒருதார மணங்களை மட்டுமே அங்கீகரிக்கும் என்ற செய்தி டிரான்ஸ்வாலிலிருந்த இஸ்லாமிய வியாபாரிகளை எட்டியது. இந்த வியாபாரிகள்தான் காந்தியை தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்து வந்தவர்கள்; அவர்கள் அவரது இயக்கத்துக்கு நிதியளித்திருக்கிறார்கள்; அவர் தலைமையின்கீழ் அவர்களில் பலர் சிறைசென்றிருக்கிறார்கள். ஆனால், ஒரு ஆண் பல மனைவியரைக் கொண்டிருப்பது அவர்களது சமய நம்பிக்கையின் மையமான அம்சங்களில் ஒன்று. இப்போது அவர்கள் காந்தி தங்கள் நலன்களுக்கும், அதைவிட முக்கியமாக அவர்களது மதத்துக்கும் துரோகம் செய்துவிட்டதாகக் குற்றம்சாட்டினர்.”
― Gandhi Before India
― Gandhi Before India
“சிறையில் காந்தி தன் தலையை மொட்டையடித்துக்கொண்டு வெள்ளை ஆடைகளையே உடுத்திவந்தார். காலணிகள் அணியவில்லை. டர்பன் குதிரைப்பந்தைய மைதானத்தில் கூடிய 5000 பேர் மத்தியில் உரையாற்றிய அவர், இந்திய வேலை நிறுத்தக்காரர்கள்மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கேள்விப்பட்டதும் தன் உடையணியும் முறையை மாற்றிக்கொண்டாதாகத் தெரிவித்தார். அவரது நாட்டு மக்களைத் துளைத்த துப்பாக்கிக் குண்டுகள் அவரது இதயத்தையுமே துளைத்தன. இனிமேல் அவர் ஒரு பிணைத்தொழிலாளி போன்றே உடையணிவார்.”
― Gandhi Before India
― Gandhi Before India
“காந்தி சிறையிலிருந்து எழுதிய ஒரேயொரு கடிதம் மட்டுமே இன்றுவரை தப்பிப் பிழைத்திருக்கிறது. ஆல்பர்ட் வெஸ்டின் சகோதரி தேவிக்கு எழுதப்பட்ட அக்கடிதம் ஃபீனிக்ஸில் இருந்த பையன்களின் அன்றாட நடவடிக்கைகள்பற்றி விசாரித்துவிட்டு, அவரிடம், ‘தேவதாஸிடம் என்னிடம் பல சமயங்களில் செய்துகொடுத்திருக்கும் வாக்குறுதிகளைக் கடைப்பிடிக்கும்படி நினைவுபடுத்துமாறு’ கேட்டுக்கொண்டது. ‘என் ஓய்வு நேரங்களில் பெரும்பகுதி தமிழ் கற்பதில் செலவாகிறது’ என்று தெரிவித்தார் காந்தி. இந்த சமீபத்திய சத்தியாக்கிரகத்தில் தமிழர்கள்தான் அதிகப்படியாகப் பிரகாசித்திருந்தார்கள்; அவர்களது தலைவர் அதற்காக அவர்களிடம் உரியமுறையில் நன்றி கொண்டிருந்தார் என்று தெரிகிறது.”
― Gandhi Before India
― Gandhi Before India
“காந்தி சியர்ல் தீர்ப்பு மாற்றப்படவேண்டும் என்று கோரியபோது, அமைச்சர், ‘மிக ஆரம்ப நாட்களிலிருந்து, தென்னாப்பிரிக்காவில் ஐரோப்பிய நாகரிகம் அறிமுகமானதிலிருந்து, இந்நாட்டின் சட்டம், ஒரு ஆண் ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து, அத்திருமணம் நடப்பிலிருக்கும்வரை வேறு யாரும் உள்ளே வர முடியாமல் இருக்கும்படியகவே இருக்கிறது. அங்கீகாரம் பெற்ற திருமண அதிகாரியால் நடத்திவைக்கப்பட்ட திருமணங்களை மட்டுமே அங்கீகரித்துள்ளது’ என்று காந்தியிடம் சொன்னார்.
இதனால் விளையக்கூடிய தாக்கம் மிகப்பெரியதாகவும், அபாயகரமானதாகவும் இருந்தது. இந்துக்கள், முஸ்லிம்களின் திருமணங்கள் தனிப்பட்ட நிகழ்ச்சிகளிலேயே நடத்திவைக்கப்பட்டன; அவற்றை பூசாரிகளோ இமாம்களோ நடத்திவைத்தார்களே தவிர அரசு நியமித்த அல்லது அங்கீகரித்த பதிவாளரோ, திருமண அதிகாரியோ அல்ல. அமைச்சரின் விளக்கம், தென்னாப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கான இந்தியத் திருமணங்களை சட்டப்படி செல்லாததாக்கும். காந்தி, கஸ்தூரிபா காந்தி ஆகியோருடையது உட்பட.”
― Gandhi Before India
இதனால் விளையக்கூடிய தாக்கம் மிகப்பெரியதாகவும், அபாயகரமானதாகவும் இருந்தது. இந்துக்கள், முஸ்லிம்களின் திருமணங்கள் தனிப்பட்ட நிகழ்ச்சிகளிலேயே நடத்திவைக்கப்பட்டன; அவற்றை பூசாரிகளோ இமாம்களோ நடத்திவைத்தார்களே தவிர அரசு நியமித்த அல்லது அங்கீகரித்த பதிவாளரோ, திருமண அதிகாரியோ அல்ல. அமைச்சரின் விளக்கம், தென்னாப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கான இந்தியத் திருமணங்களை சட்டப்படி செல்லாததாக்கும். காந்தி, கஸ்தூரிபா காந்தி ஆகியோருடையது உட்பட.”
― Gandhi Before India
“மார்ச் மாதம் மூன்றாம் வாரத்தில் கேப் டவுன் நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பு இந்தியத் திருமணங்களின் செல்லுபடித்தன்மையை கேள்விக்குள்ளாக்கியது. ஹாசன் ஈசாப் என்ற, போர்ட் எலிசபெத்தில் வேலை செய்த முடி திருத்தும் தொழிலாளி ஒருவர் இந்தியாவுக்கு விடுமுறைக்கு வந்தபோது பால் மரியம் என்ற பெண்மணியை மணந்துகொண்டார். அவர் திரும்பிவந்தபோது, தன் மனைவி தன்னுடன் வசிப்பதற்காக அனுமதிச்சீட்டுக்கு விண்ணப்பித்தார். பால் மரியம்தான் அவரது ஒரே மனைவி என்றபோதிலும், நீதிமன்றம் அவரைத் தன் கணவருடன் சேர்ந்துகொள்ள அனுமதிக்க மறுத்துவிட்டது. இஸ்லாமிய மதம் பலதார மணத்தை அனுமதிப்பது இதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. நீதிபதி சியர்ல் என்பவர் கூறினார், ‘இந்த நாட்டு நீதிமன்றங்கள் மொகமதிய திருமணங்கள் என்று சொல்லப்படுபவற்றை சட்டப்படியான இணை சேரலாக அங்கீகரிக்க மறுத்து முகத்தைத் திருப்பியே வந்திருக்கின்றன. காரணம் மனைவி என்ற முறையில் அனுமதிக்கப்படும் பெண் ‘வந்திறங்கிய மறுநாளே அவளது கணவனால் கைவிடப்படலாம்.’ குறைந்தபட்சம் ஒரு மனைவியாவது அனுமதிக்கப்படவேண்டும் என்ற வாதத்துக்குப் பதிலாக நீதிபதி, ‘முதலாவதாக வந்து சேருபவருக்கா முதலாவதாக மணந்துகொள்ளப்பட்டவருக்கா என்று தெரியவில்லையே’ என்று கேலியாகச் சொன்னார்.”
― Gandhi Before India
― Gandhi Before India
“காந்தி தன் மூத்த மகன் விஷயத்தில் கடுமையாக அடக்கியாள்பவராக இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. காந்தி தன்னால் தன் பெற்றோரின் விருப்பங்களைச் சார்ந்திருக்காமல் தன்னிச்சையாகத் தன் வழியைத் தீர்மானித்துக்கொள்ள முடிந்தது எப்படிப்பட்ட பெரும்பேறு என்பதை உணர்ந்திருக்கவில்லை. மோகன்தாஸ் மெட்ரிகுலேஷன் முடிக்கும் சமயம் காபா காந்தி உயிருடனிருந்திருந்தால் அவர் தன் மகனைக் காலா பாணியைக் கடந்து லண்டனுக்குப் போக அனுமதித்திருக்கவே மாட்டார். 1893ல் அவரது அன்னை உயிருடனிருந்திருந்தால் அவர் ஒருவேளை தன் மகனை மீண்டும் ஒருமுறை ஆபத்தான கடற்பயணம் மேற்கொண்டு தென்னாப்பிரிக்கா செல்ல அனுமதிக்காமலிருந்திருக்கக்கூடும். புலம்பெயர்ந்த வாழ்வில் அவரால் வீட்டுப் பெரியவர்களின் தலையீடு இல்லாமல் தொழிலிலும் அரசியல் செயல்பாட்டுப் பணியிலும் தன் விருப்பத்துக்கேற்பப் பயணிக்க முடிந்தது.”
― Gandhi Before India
― Gandhi Before India
“இந்தியாவில் பெற்ற பள்ளிக்கல்வியில் திருப்தியின்றி, தன்னை பாரிஸ்டர் தகுதி பெற லண்டனுக்கு அனுப்பி வைக்கும்படித் தன் தந்தையிடம் வேண்டினார். காந்தியோ, மக்களுக்குச் சேவை செய்ய பாரிஸ்டராவதோ மருத்துவராவதோ தேவையில்லை என்று சொல்லிவிட்டார். பகவான் ராமகிருஷ்ணர், சீர்திருத்தவாதி தயானந்த சரஸ்வதி, மாவீரர்களான சிவாஜி, ராணா பிரதாப்-இவர்கள் யாரும் ஆங்கிலக் கல்வி பயிலவில்லை; ஆனாலும் வியக்கத்தக்கவிதத்தில் தாய்நாட்டுக்காகத் தொண்டாற்றினார்கள். ஹரிலால் பதிலுக்கு ராணடே, கோகலே, திலகர், லஜபதி ராய் போன்றவர்களைக் குறிப்பிட்டார்: நிறையப் படித்த இவர்களும் நாட்டுக்கு மேலான விதத்தில் தொண்டாற்றியிருக்கிறார்கள்.”
― Gandhi Before India
― Gandhi Before India
“1911 ஏப்ரலில் காந்தி மீண்டும் கேப் டவுனுக்குச் சென்றார். இம்முறை அவர் நான்கு வாரங்கள் தங்கி, குடியேற்றச் சட்டத்தில் தான் விரும்பிய மாற்றங்களைக் கொண்டுவர நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஆவேசமாக ஆதரவு திரட்டினார். சோன்யா ஸ்லேஷின் ஜோஹானஸ்பர்க்கிலேயே தங்கி அலுவலகத்தைக் கவனித்துக்கொண்டார். எனவே காந்தி தானே கடிதங்களைத் தட்டச்சு செய்ய வேண்டியிருந்தது. எழுதவேண்டிய கடிதங்களோ ஏராளமாக இருந்தன: சந்திக்க நேரம் கேட்கும் கடிதங்கள், சந்தேகத்துக்கு விளக்கம் கேட்கும் கடிதங்கள், தனது பார்வையை விளக்கும் கடிதங்கள். அவரது விரல்கள் மிகக் களைத்துப் போனதால் அவர் தன் குடும்பத்துக்குக் கடிதம் எழுத இடதுகையைப் பயன்படுத்த வேண்டியதாயிற்று.”
― Gandhi Before India
― Gandhi Before India
“காந்தி அவ்வப்போது மகன்லாலுக்குக் கடிதம் எழுதி அவரது முன்னேற்றம்பற்றி விசாரித்து வந்தார். ‘தமிழ் படிப்பதை விட்டுவிடாதே’ என்று ஒரு கடிதம் ஆரம்பித்தது. ‘உன்னைத் தவிர வேறு யாரும் தமிழில் புலமை பெற முடியாது என்று எனக்கு எப்போதுமே தோன்றிக்கொண்டிருக்கிறது’ என்று இன்னொன்று கூறியது.”
― Gandhi Before India
― Gandhi Before India
“ஹென்றி போலாக்குக்கு டர்பனில் அளிக்கப்பட்ட வரவேற்பைத் தொடர்ந்து இயக்கத்தின் தற்போதைய நிலையைப்பற்றி விவாதிக்க ஒரு கூட்டமும் நடைபெற்றது. காந்தி ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்ததும் கூட்டம் ‘தமிழ்! தமிழ்!’ என்று கூச்சலிட்டது. காந்தி, தன்னை ஜெனரல் ஸ்மட்ஸ் மீண்டும் ஒருமுறை சிறைக்கு அனுப்பினால் அந்த மொழியைக் கற்றுக்கொள்ளத் தனக்கு அவகாசமும் ஓய்வும் கிடைக்கும் என்று பதில் சொன்னார்.”
― Gandhi Before India
― Gandhi Before India
“ஆஃப்ரிக்கர்களுடன் ஒன்றாக வேலை செய்த காந்தி, அவர்களின் கஷ்டங்களை இன்னும் தெளிவாக உணர்ந்தார். 'இந்த மண்ணில் ஆரம்பம் முதல் வசிப்பவர்கள் நீக்ரோக்கள் மட்டுமே' என்று அவர் இந்தியன் ஒப்பீனியன் இதழில் எழுதினார். ‘நாம் அவர்களிடமிருந்து நிலத்தை பலத்தால் பிடுங்கிக் கொள்ளவில்லை; அவர்களின் நல்லெண்ணம் காரணமாகவே நாம் இங்கு வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மாறாக, வெள்ளையர்களோ, நாட்டை ஆக்கிரமித்து தமக்கு சொந்தமாக்கிக் கொண்டார்கள்.’ இந்தச் சிந்தனை கவனத்தைக் கவர்வது, புதியது- முன்பு பிரித்தானிய மதிப்பீடுகளையும், நிறுவனங்களையும் புகழ்ந்தே பழக்கப்பட்டிருந்த காந்தி, இப்போது அதற்கு மாறாக ஆஃப்ரிக்காவில் அவர்கள் இருப்பதும், ஆட்சி செய்வதும் முறைமையற்றவை என்று சுட்டிக்காட்டினார். நேட்டாலுக்கு வந்த முதல் வருடத்தில் அவர் வெளிப்படுத்திய ஆஃப்ரிக்கர்கள் குறித்த அனுதாபமற்ற, விரோத மனோபாவத்திலிருந்து இப்போது மிகவும் முன்னேறியிருந்தார் என்பது தெளிவு.”
― Gandhi Before India
― Gandhi Before India
“த யூனியன் ஆஃப் யூரோப்பியன்ஸ் இன் சௌத் ஆஃப்ரிக்கா (தென்னாப்பிரிக்க ஐரோப்பியர்களின் கூட்டமைப்பு) அந்த நாட்டில் வாழ்ந்த ஆசியர்களுமீது விரோதம் கொண்டிருந்தது. ஆனாலும் தனிப்பட்ட ஐரோப்பியர்கள் அனுதாபம் கொண்டவர்களாக இருந்தனர்; அவர்களில் ஹெர்மான் காலன்பாக் முதன்மையானவர். மே 30 ஆம் தேதி அந்த கட்டடக்கலை நிபுணர் ஜோஹானஸ்பர்க்குக்கு வெளியில் ஒரு பண்ணையை இந்தியர்களுக்குக் கொடையாக அளித்தார். போராட்டம் தொடரும்வரை, ‘சத்தியாக்கிரகிகளும் அவர்களது ஏழைக் குடும்பங்களும்’ அந்தப் பண்ணையில் ‘வாடகையோ வேறு கட்டணமோ இன்றி’ வசித்துக்கொள்ளலாம். அந்தப் பண்ணை 1000 ஏக்கர்களுக்கு மேல் பெரியது. அங்கு பழ மரங்கள் பலவும், இரண்டு கிணறுகளும், ஒரு சிறு நீரூற்றும் இருந்தன. அந்த நிலம் நகரத்திலிருந்து இருபத்தொரு மைல் தள்ளி இருந்தாலும், லாலே என்ற புகைவண்டி நிலையத்துக்கு அருகிலேயே அமைந்தருந்தது. காலன்பாக்கின் ஒப்புதலுடன் காந்தி அந்தப் பண்ணைக்கு டால்ஸ்டாயின் பெயரை வைத்தார்.”
― Gandhi Before India
― Gandhi Before India
