Jeyamohan's Blog, page 1041
February 27, 2021
சென்ற மார்ச்சில்…
மார்ச்,2020சென்ற ஆண்டு மார்ச் மாதத்தை எண்ணிக்கொள்கிறேன். 2020 மார்ச் 6,7,8 தேதிகளில் ஈரோடு புதியவாசகர் சந்திப்பை நடத்தினோம்.அப்போதே கொரோனா எச்சரிக்கைகள் வரத்தொடங்கியிருந்தன. அன்று அது பெரிதாக தெரியவில்லை. அச்சம் உருவானது அதன்பின்னர்தான்.
கொரோனாவை அன்று இத்தனைபெரிதாக, உலகளாவிய அச்சமாக, கருதிக்கொள்ளவில்லை. அதற்கு கடுமையான தொடர்ச்சியான தடுப்புநடவடிக்கைகள் மட்டும் போதும், உலகையே மூடிவிடுவது மாபெரும் பொருளியலழிவை உருவாக்கும் என்பது என் எண்ணமாக இருந்தது. அப்பொருளியலழிவு காரணமாக மருத்துவ உதவிசெய்ய நிதியில்லாமலாகும் என நினைத்தேன். எபோலா, சிக்கன்குனியா போன்ற தொற்றுகளை கையாண்டதுபோலவே இதையும் கையாளலாம் என்று எண்ணினேன். பெங்களூரைச் சேர்ந்த இரு மூத்த மருத்துவர்களின் கருத்தை ஒட்டியே அந்த எண்ணம் உருவாகியது. [கொரோனா]
பின்னர் யுவால் நோவா ஹராரியும் அதையே சொல்லியிருந்தார். ஆறுமாதங்களுக்குப் பின் நான் சொன்னதைப்போலவே அரசின் அதீத எச்சரிக்கை தேவையற்றது என்று தெளிவாகியது. குமரிமாவட்டத்தில் மட்டும் பத்தாயிரம் படுக்கைகளை முன்னெச்சரிக்கையாக தயாரித்திருந்தனர். இரண்டாயிரத்துக்குமேல் எப்போதுமே தேவைப்படவில்லை. ஜூலையிலேயே அரசும் கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொண்டு வணிகத்தை முன்னெடுத்தது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையால் பெரிதாக ஒன்றும் ஆகவில்லை.
ஆனால் அக்கடுமையான எச்சரிக்கைநிலை இருந்தமையால் நோய்விழிப்புணர்ச்சி மக்களிடையே சென்று சேர்ந்தது என்று சொல்லலாம். அதோடு மூன்றுமாத முழுஅடைப்பால் உருவாகுமென அஞ்சிய மாபெரும் பொருளியலழிவும் உருவாகவில்லை. பொருளியல் சிக்கல் நீடித்தாலும் அழிவு என அதைச் சொல்லமுடியாது. நல்லதுதான்
சென்ற மார்ச்சில் தமிழக அரசு கொரோனாவை கையாள்வதைப் பற்றிய என் மதிப்பை எழுதியிருந்தேன். வைரஸ் அரசியல் இன்று ஓராண்டுக்குப்பின் அந்த மதிப்பு பலமடங்கு கூடியிருக்கிறது. தனிப்பட்ட அனுபவங்களால். [பின்னர் விரிவாக எழுதுகிறேன்]. கேரளம், தமிழகம் இரண்டு மாநிலங்களிலேயே எனக்கு நேரடி அனுபவம். ஆகவே உறுதியாக அதைப்பற்றியே சொல்லமுடியும். ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவும் ஏறக்குறைய இதே நிலையில் தான் என்றே செய்திகள் சொல்கின்றன
நமது பெரிய தேசத்தின் மக்கள்தொகையை வைத்துப் பார்க்கையில் நம் மருத்துவக்கட்டமைப்பு ஒரு மாபெரும் சாதனை என்றுதான் நினைக்கிறேன். தமிழக – கேரள மருத்துவக்கட்டமைப்பின் நேர்த்தியும், செயல்திறனும், ஊழியர்களின் அபாரமான அர்ப்பணிப்பும் உண்மையில் மெய்சிலிர்க்கவைப்பவை. எதுவுமே தெரிந்துகொள்ளாமல், அசட்டு அரசியல் காழ்ப்புகளிலேயே அன்றாடம் உழலும் மனங்கள் உருவாக்கும் எதிர்மறைச்சித்திரமும் கசப்பும் வெறும் உளச்சிக்கல்களே அன்றி உண்மைக்கு தொலைதூரமானவை.

நாம் கொரோனாவை எதிர்கொண்டதைப்போல உலகில் எந்த நாடும் இத்தனை மாபெரும் ஒருங்கிணைந்த இயக்கமாக செயலாற்றி வென்றிருக்காது. நமது மருத்துவர்கள் மேல் மக்களுக்கு நம்பிக்கை இருந்தது. அவர்கள் சுதந்திரமாகச் செயல்பட்டு தாங்களே மருத்துவவழிகளை, மருத்துக்கூட்டுகளை உருவாக்கிக்கொண்டு உயிர்களை மீட்டனர். சட்டச்சிக்கல்கள், நடைமுறைச்சிக்கல்களை அவர்கள் பொருட்படுத்தவில்லை. நமது அரசு மருத்துவமனைகள் பொதுவாக மிகத்தரமானவை, முற்றிலும் இலவசமானவை. அங்குள்ள கடைநிலை ஊழியர்வரை ஒவ்வொருவரிடமும் இருந்த அர்ப்பணிப்பை எண்ணி தலைவணங்குகிறேன்
முழு அடைப்பின்போது நோய் பற்றியே எண்ணிக்கொண்டிருக்காமல் ஆக்கபூர்வமாக இருப்போம் என ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறேன்.தனிமைநாட்கள், தன்னெறிகள்.ஊடகம் நோய் பற்றிய செய்திகளை அள்ளி வைத்துக்கொண்டே இருந்திருக்கிறது. அதை கவனிப்பது நம்மைச் சோர்வுக்குள் தள்ளும். நாம் நோய் பற்றி அறியவேண்டிய எச்சரிக்கைகளை அறிந்தபின் மேற்கொண்டு அதிலேயே வாழவேண்டியதில்லை. ஊடகம் எதிர்மறைச் செய்திகளால், பதற்றங்களால்தான் வாழமுடியும். அதற்கு நாம் நம்மை பலிகொடுக்கவேண்டியதில்லை
சென்ற பிப்ரவரி 2 அன்று இயக்குநர் பாலாவைப் பார்த்தேன். எட்டு மாதம் டிவி செய்திகளைப் பார்த்து உச்சகட்ட பதற்றத்தில் இருந்ததாகச் சொன்னார். நான் விடுத்த அந்த அறிவிப்பைப் பற்றிச் சொன்னேன். ‘அடாடா, நான் படிக்கவில்லையே, படித்திருந்தால் இந்த டிவியை அணைத்துப் போட்டிருப்பேனே. ஆறுஏழு மாசம் மரணபயத்திலேயே வாழவைச்சிட்டுதே’ என்றார். நான் வீட்டில் கொண்டாட்டமாகவே இருந்தேன் என்று சொன்னேன் [வீடுறைவு ] நாளும் பொழுதும் இனிதாகவே கடந்தன.
என் அறிவிப்பை பலர் பின்தொடர்ந்தனர். செய்திகளை தவிர்த்து அந்நாட்களை ஆக்கபூர்வமாக ஆக்கிக்கொண்டனர். அவர்களுக்கு வீடடங்கும், வீட்டிலிருந்தே வேலையும் உற்சாகமான நாட்களாக அமைந்தன என்று இப்போது சந்திப்புகளில் சொல்கிறார்கள். வாசிப்புப்பழக்கம் பெருகியது. குடும்பத்துடனான அணுக்கம் ஓங்கியது. வழக்கமான வாழ்க்கைச்சுழற்சியிலிருந்து விலகி இன்னொருவகையான வாழ்க்கையின் சுவையை அறியமுடிந்தது. நானும் கோடையின் எல்லா கொண்டாட்டங்களையும் அனுபவித்துக்கொண்டிருந்தேன். [கோடை.] மார்ச்சிலேயே இங்கே கோடைமழை வேறு தொடங்கிவிட்டது. [கோடை மழை]
மார்ச் மாதம் புனைவுக்களியாட்டு என ஒன்றை அறிவித்திருக்கிறேன்.[தனிமையின் புனைவுக் களியாட்டு] அதாவது வெறும் பதினைந்து நாட்களுக்கு. நான் சில கதைகள் எழுத நண்பர்கள் சில கதைகளை எழுத ஒரு பதினைந்துநாள் கதைகளில் வாழலாமே என்னும் அறிவிப்பு. ஆனால் அது நூறுகதைகளாக நீடித்து ஜூலை மாதம் 10 ஆம் தேதிவரை நீடித்திருக்கிறது. ஆச்சரியமான ஒரு நிகழ்வுதான் அது.
ஜனவரியில் காலம் இதழுக்காக எழுதிய எண்ண எண்ணக் குறைவதும், மலேசியாவின் வல்லினத்துக்காக எழுதிய யாதேவியும் நூறுகதைகளின் தொடக்கம் என்றாலும் புனைவுக்களியாட்டு என்றபேரில் தொடர்ச்சியாக எழுதியது மார்ச் 19ல் வெளிவந்த ஆனையில்லா கதைவழியாக. அது ஓர் உற்சாகமான கதை. இப்போது வாசிக்கையிலும் என்னையே வெடித்துச் சிரிக்கவைக்கிறது.
இன்று யோசிக்கும்போது அன்று சிக்கிக்கொண்டிருந்த நெருக்கடியையே அப்படி பகடியாக மனம் மாற்றிக்கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. ஆனால் அந்தக்கதை வழியாக அந்த சிக்கலை உடனே கடந்துசென்றுவிட்டேன். நூறுகதைகளுக்கும் ஊற்றுமுகம் அதுதான். சிக்கிக்கொண்ட யானை ஒன்று எளிதாக எடுக்கப்பட்டுவிட்டது. எல்லா நெருக்கடிகளையும் சிறியதாக ஆக்கிக்கொள்ள முடியும் என்று கண்டுகொண்டேன்.
நாளை முதல் சிலகதைகளை எழுதலாம் என நினைக்கிறேன். புனைவுக்களியாட்டின் நினைவுகூர்தலாக
ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,2020
கொரோனோவும் இலக்கியமும் தனிமைநாட்கள், தன்னெறிகள். வைரஸ் அரசியல் தனிமையின் புனைவுக் களியாட்டு கொரோனா கோடை கோடை மழை பொற்கொன்றை! இன்றைய மலர் வான் அலை நாற்புறமும் திறத்தல் வீடுறைவுஇந்துவும் இந்துத்துவரும் – கடிதம்
அன்புள்ள ஜெ
நான் வெளிநாட்டில் வசிக்கும் ஓர் இந்தியன், இந்து,அதில் எனக்குப் பெருமையும் உண்டு. உங்கள் தளத்தில் வெளிவந்த கடிதத்தை வாசித்து மிகுந்த மனவருத்தமடைந்தேன்.ஒருவர் எங்கோ உங்களை கேவலமாக வசைபாடுவது வேறு. அதை நீங்களே எடுத்து எங்களுக்கு அளிப்பது வேறு. உங்கள் வாசகர்களின் மனம் அதைவாசித்தால் வருத்தத்துக்கு ஆளாகும்.
அந்த கடிதத்தின் மொழிநடை என்னை மிகுந்த கசப்புக்கு உள்ளாக்கியது. இந்து என்று சொல்லிக்கொள்பவர்கள் வெட்கி நாணவேண்டிய மொழி அது. முக்கால்நூற்றாண்டாக பிராமணர்களை இங்கே வசைபாடியிருக்கிறார்கள். அவர்களைக்கூட எந்த பிராமணரும் இந்த நடையில் திருப்பிப் பேசியதில்லை. ஓர் எழுத்தாளரை, சிந்தனையாளரை இப்படிப் பேசும் பழக்கம் இந்துமதத்தில் எப்போது வந்தது ? நான் நினைக்கும் இந்துமதம் இந்தியாவிலேயே இல்லையா? நினைக்க நினைக்க ஆயாசமாக இருக்கிறது
எம்.சத்யநாராயணன்
அன்புள்ள சத்யநாராயணன்,
அது இந்து மதத்தின் குரல் அல்ல. அது இந்துத்துவர்களின் குரல்.அதையே திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். அவ்வேறுபாட்டை இந்து மதத்தின் எதிரிகள் அழிக்க முயன்றுகொண்டிருக்கிறார்கள். இந்துத்துவர்களும் முயல்கிறார்கள். இந்துக்கள் அவ்வேறுபாட்டை உணர்ந்து பேணியாகவேண்டும்
அரசியல்மனநிலை என்று ஒன்று உண்டு. அது இங்கே ஒரு மூர்க்கமான பிடிவாதமாக, வெறியாக மாறிவிட்டிருக்கிறது. இன்றைய அரசியலே அப்படித்தான்.
ஒரு நிகழ்வு. சிலநாட்களுக்கு முன் இணையத்தில் நிகழ்ந்த ஒரு விவாதம் பற்றி ஒரு நண்பர் எழுதியிருந்தார். இங்கே இடதுசாரிகள் சிலர் நான் கௌரி லங்கேஷ், கல்பூர்கி கொலையை கண்டிக்கவில்லை என்றும் அவர்கள் கொலையுண்டதை ஆதரித்தேன் என்றும் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். மேடைகளில் பேசுகிறார்கள். கட்டுரைகள் எழுதுகிறார்கள்.
அதை வாசிப்புப்பழக்கமில்லாத ஒரு இடதுசாரிவெறியர் ஒரு விவாதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். வாசிக்கும் பழக்கமுள்ள சிலர் நான் அக்கொலைகளை கண்டித்து எழுதிய கட்டுரைகளை சுட்டி கொடுத்திருக்கிறார்கள்.
தமிழில் அன்று வெளிவந்த கட்டுரைகளிலேயே மிகக்கடுமையான கண்டனம் என்னுடையது. மற்ற கண்டனங்கள் கவனமான அரசியல்மொழியில் அமைந்த உணர்வற்ற எதிர்வினைகள். நான் ஒன்றுக்குமேற்பட்ட முறை கண்டனம் தெரிவித்திருக்கிறேன். அந்த விசாரணைகளை தொடர்ந்து சென்று மேலும் எழுதியிருக்கிறேன். மலையாளத்திலும் எழுதினேன். என் கட்டுரைகள் ஆங்கிலத்திலும் கன்னடத்திலும்கூட வெளியாயின.
ஆனால் அந்தச் சுட்டிகள் கொடுக்கப்பட்டதுமே அக்கண்டனங்கள் ‘மழுப்பல்கள்’ என்று சொன்னார்கள் இடதுசாரிகள். அதிலுள்ள குறிப்பான வரிகள் சுட்டிக்காட்டப்பட்டதும் அந்தவரிகளையும் ஏற்கமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். ’எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, தெரிவித்திருந்தால் அது எதிர்ப்பே அல்ல’ இதுதான் அவர்களின் நிலைபாடு
இது பிழையான புரிதல் அல்ல, இதுதான் அரசியல். ஓர் அரசியல்வெறியனைப் பொறுத்தவரை எதிர்க்கருத்து கொண்டவர்கள் எல்லாம் வெறுத்து ஒதுக்கவேண்டிய கீழ்நிலையாளர்கள். கீழ்த்தரமாக வசைபாடப்படவேண்டியவர்கள்.
அந்தந்த சாதியின் உளவியலை ஒட்டி வசை வெளிவருகிறது. எச்சில்பொறுக்கி என்பது இங்கே சமூகக்கீழ்நிலையில் இருக்கும் பழங்குடி- நாடோடி மக்களைக் குறிக்கும் வசை. அத்தகைய பல வசைகள் புழக்கத்திலுள்ளன.
சரி, ஒருவர் ஆதரித்தால் என்ன நிலைபாடு எடுப்பார்கள்? ஆதரித்தால் போதாது, முழுக்க ஆதரிக்கவேண்டும். ஒவ்வொன்றையும் ஆதரிக்கவேண்டும். முழுக்க ஆதரித்தால்கூட போதாது, அவர்கள் சொல்லும் ஒவ்வொரு வரியையும் அப்படியே சொல்லவேண்டும். அப்படிச் சொன்னால்கூட போதாது அக்கட்சிக்குள் அவர்கள் இருக்கும் உட்குழுவைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும். அக்குழு பெரும்பாலும் சாதிக்குழுவாகவே இருக்கும்.
இந்த அரசியல்சூழல் என்றுமுள்ளது, இன்று மூர்க்கமாகியிருக்கிறது. அதற்கு எல்லா குரல்களையும் பதிவிடும் சமூக ஊடகம் ஒரு காரணம். அதற்குமேல் இதைப் பொருட்படுத்தவேண்டியதில்லை.
இன்னொரு நிகழ்வு. சில ஆண்டுகளுக்கு முன்பு நான் எம்.ஜி.ஆரை கேலிசெய்து எழுதி அது விவாதமாக ஆகியது நினைவிருக்கலாம். அப்போது ஒருவர் என்னை தொலைபேசியில் அழைத்து கெட்டவார்த்தைகளால் வசைபாடிக்கொண்டே இருந்தார். நான் அன்று ஒரு கொள்கை வைத்திருந்தேன், அத்தனை தொலைபேசி அழைப்புக்களையும் எடுத்து அவர்களின் வசைகளை கடைசிவரை பொறுமையாகக் கேட்பேன்
ஓராண்டுக்குப் பின் அவரே அழைத்தார். அவர் ஒரு தையல்காரர். ”சார், நான்தான் போன வருஷம் உங்களை கெட்டவார்த்தை சொன்னவன்” என்று அறிமுகம் செய்துகொண்டார்
“சொல்லுங்க” என்றேன். அவர் பெயரே எனக்கு நினைவிருந்தது
“எட்டு வருசம் கழிஞ்சு எனக்கு குழந்தை பிறந்திருக்கு சார். என் வீட்டுக்காரி சொல்றா, நீங்க சரஸ்வதி கடாட்சம் உள்ளவரு. உங்களை திட்டினா குழந்தைக்கு படிப்பு வராதுன்னு”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை. எனக்கு கோபம் ஒண்ணும் இல்லை”என்றேன்
“இல்லைசார் நீங்க சாபம் போட்டா குழந்தைக்கு படிப்பு வராது சார்”
“நான் சாபம் போடல்லை. குழந்தையை வாழ்த்துறேன்… போருமா?”
அவருக்கு நம்பிக்கை வரவில்லை. அவருடைய விலாசம் வாங்கி குழந்தைக்கு ஒரு சிறு தொகை அனுப்பி வைத்தேன். கூடவே என் வீட்டருகே உள்ள கோயிலின் பிரசாதமும் அனுப்பினேன்,
இன்றுகூட அவ்வப்போது அவருடைய அழைப்பு வரும். குழந்தை பற்றிச் சொல்வார். நாகர்கோயிலில் நான் தாக்கப்பட்டபோது செய்தியை பார்த்துவிட்டு கண்ணீருடன் அழைத்தார். தொலைபேசியிலேயே விம்மினார். “அந்த ஊரு வேணாம் சார், நீ நம்மூருக்கு வந்திரு சார்” என்றார்.
அதுதான் இந்து மனநிலை. அவன்தான் இந்து. இந்த அரசியல்வெறியர்கள், சாதிவெறியர்கள் அல்ல. இந்த வெறியர்களே இந்துக்கள் என்று சொல்ல இந்து மதத்தின் எதிரிகள் முயல்வார்கள். வெறியர்களும் தாங்களே உண்மையான இந்துக்கள், மற்றவர்கள் போலிகள் அல்லது கோழைகள் என்பார்கள். நமக்காவது வேறுபாடு தெரிந்திருக்கவேண்டும். அந்த வேறுபாட்டை சொல்லிச்சொல்லி நிலைநாட்டவேண்டிய சூழல் இன்றுள்ளது
ஜெ
குரு- ஆளுமையும் தொன்மமும்
ஒரு நண்பர் இந்த வரியை அனுப்பியிருந்தார். “குரு நம்மில் ஒரு பகுதியாகிவிட்டபின் அவர் ஒரு மானுடரல்ல. ஒரு கோட்பாடாகிவிடுகிறார்”. ஹெச்.எஸ்.சிவப்பிரகாஷ் எழுதிய குரு -பழம்பெரும் ஞானத்தின் பத்துவாயில்கள் என்ற நூலில் இருந்து ஒருவரி.
அந்த வரியைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தேன். நான் என் ஆசிரியர்களை, குருவடிவான நித்யாவைப் பற்றி எழுதும்போது அந்த மனிதரைப்பற்றி எழுதவில்லை. அவருடைய ஆளுமைத்திறனைப்பற்றிக்கூட எழுதவில்லை. அவர் எனக்கு எவ்வகையில் பொருள்படுகிறார் என்றே எழுதுகிறேன். அவரை எப்படி நான் என் சிந்தனையாக, என் தரிசனமாக ஆக்கிக்கொண்டிருக்கிறேன் என்றே எழுதுகிறேன்.
ஆகவே நான் இல்லாமல் அவரைப்பற்றி என்னால் எழுத முடியாது. நான் ஆடி, அவர் மலை. மலை எத்தனையோ பெரிது, அசைவிலி, பேருரு. ஆடியால் அள்ளப்பட்ட மலையே நம்மால் காட்டப்படுகிறது.அதுவே இயல்வது என்பது ஒருபுறம், அது மட்டுமே உகந்தது என்பதே மேலும் பொருத்தமானது.
இதை எத்தனையோ முறை எழுதிவிட்டேன். ஆனாலும் முதிரா உள்ளங்கள் ‘அவரைப்பற்றி எழுதும்போது நீ எப்படி உன்னைச் சேர்த்துக்கொள்கிறாய்?’ என்று கேட்பதுண்டு. அவர்களுக்கு ஆசிரியர் என்பவர் ஓர் அனுபவநிலை என்று மட்டுமே பதில்சொல்ல முடியும்
குரு என நாம் குறிப்பிடுவது நாமுணர்ந்த ஓர் அக உருவகத்தை. ஆகவேதான் ஒரே ஆசிரியர் வெவ்வேறு மாணவர்களில் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறார். உளப்பதிவுகளில் தரவுகள்கூட மாறுபடுகின்றன. காலம்செல்லச்செல்ல அவரைப்பற்றிய சித்திரம் மங்கலடைவதில்லை, வளர்ந்து ஓங்குகிறது. அவர் இருந்தபோது சிறிதாக இருந்த பல நிகழ்வுகள் மிகப்பெரிய அழுத்தமும் ஆழமும் கொண்டவையாக ஆகின்றன.
ஆனந்த் ஸ்ரீனிவாசன்மாணவன் கொள்ளும் இந்த தன்வயத்தன்மையே ஆசிரியனை அழிவற்றவனாக ஆக்குகிறது. நெஞ்சிலிருந்து நெஞ்சுக்கு, சொல்லில் இருந்து சொல்லுக்கு சென்று வாழச்செய்கிறது. ஆசிரியர் என்பவர் வெறும் நினைவு அல்ல. அவர் வாழும் படிமம். காலப்போக்கில் தொன்மம்.
ஹெச்.எஸ்.சிவப்பிரகாஷ் கன்னட வீரசைவ மரபிலிருந்து வந்தவர். ஆனால் முழுக்கமுழுக்க நவீன இலக்கியவாதி. அவருடைய ஆன்மிக அனுபவங்கள் பற்றிய நூல்கள் நவீன உள்ளம் தொன்மையான ஆன்மிகத்தைச் சந்திக்கும் தருணங்களால் ஆனவை.
’குரு’ அவருடைய முக்கியமான நூல்களில் ஒன்று. ஆனந்த் ஸ்ரீனிவாசன் அதை அழகிய மொழியில் தமிழாக்கம் செய்திருக்கிறார். சென்ற சில மாதங்களில் வெளிவந்த நவீன ஆன்மிக நூல்களில் முதன்மையானது இது.
குரு-பழம்பெரும் ஞானத்தின் பத்து வாயில்கள். ஹெச்.எஸ்.சிவப்பிரகாஷ்- வாங்கஅந்தக்கதைகள்- கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன்,
“இறைவன் ” சிறுகதையை படித்தவுடன் முதலில் தோன்றிய கேள்வி ” இறைவன் யார்? என்பதுதான். நம் அனைவருக்கும் நன்றாக தெரியும் விடைதான்… இறைவன் என்பது “எழுத்தும் ஓவியமும் அவரவர்க்கு அவரவரின் கற்பனையும் என்று. அதை சுற்றித்தான் ஆயிரம் ஆயிரம் ஞானங்களும் தத்துவங்களும். ஆனால் அடிக்கட்டு கருணை. தாங்கள் இழந்ததை அல்லது தொலைத்ததை கேட்டு தன்னிடம் மன்றாடுபவர்களுக்கு கொடுக்கும் உள்ளம் எனவும் கூறலாம். இது ஒரு பகுதி.
இன்னொன்று : ” இறைவன் உண்மையில் நம் யில் இருக்கிறான்.நமது தொழிலில் தமது திறமையில் நமது கலையில் இருக்கிறான். அதில் கரைந்து போய் செய்து முடிக்கும்போது அவன் வெளிப்படுகிறான்.
அடுத்தது: இலக்கியம் என்பதே இறந்தகாலம்தானா? என உங்களுக்குள் கேட்டிருந்தீர்கள். நேசித்ததை ..கொண்டாடாமலே தன்னிடம் இருந்து பறிபோனதை ஒருவன் உயிர்ப்பித்து தரவேண்டும் என கேட்கும்போது அரவணைக்கிறவன் …தருகிறேன் என வாக்குகொடுப்பவன்.
மாணிக்கம் ஆசாரி வரைந்துகொடுக்கபோவதும் இசக்கி அம்மைக்கு ஒரு பகவதிதானே.
ஸ்டீபன் ராஜ் குலசேகரன்
இனிய ஜெயம்,
புனைவுக் களியாட்டுக் கதைகள் வரிசையில் பல கதைகள் சாரமான ஒன்றை நோக்கி சென்று அதை பரிசீலிப்பவையாக இருக்கிறது. இதில் பரிசீலிக்கப்படுவது hate and love relation .
காதல் வாழ்வின் ஊடலும் கூடலும் என்னவாக வெளிப்படுகிறது, அது என்னவாக புரிந்து கொள்ளப்படுகிறது. சாரத்தில் அது என்னவாக இருக்கிறது என்பதை அக் கடலே குறியீடாக மாறி அவர்களுக்கு உணர்த்துகிறது.
தர்க்கபூர்வமாக இது இதனால்தான் என அவர்கள் வகுத்து சொல்லும் எதுவும், அந்த அதர்க்க கடலின் ஒரு அலையே. அனுதினமும் சண்டையிட்டும் பிரிய இயலாமல் அவர்களை பிணைத்து வைப்பது எது என அவர்களால் அக வயமாக புரிந்து கொள்ள முடியாத அது, அதுவே புறத்தில் கடலாக அவர்களை ஏந்தி நிற்கிறது. அந்தக் கடலில் மிதக்கும் சிறு துரும்பு அவர்கள். கடலில் எழும் எல்லா அலையும் மீண்டும் கடலையே சேரும். சேந்து வாழ இயலாது என தர்க்க பூர்வமாக அறிந்து பிரிய முடிவு செய்தவர்களை, பிரிந்து வாழவும் முடியாது என அவர்களின் நிலையின் சாரத்தை காட்டிவிட்டது கடல்.
இனி என்ன செய்யப் போகிறார்கள்? என்னதான் செய்ய முடியும்?
கடலூர் சீனு
அன்புநிறை ஜெ,
தனிமையின் புனைவுக் களியாட்டு கதைகள் முழுவதையும் இரண்டு நாட்களாய் மீண்டும் தொடர்ச்சியாக வாசித்தேன்.
என்னவொரு பிரவாகம். எங்கிருக்கின்றன இவற்றின் ஊற்றுகள். அனைவருக்கும் கண்ணெதிரே இருந்தும் காணும் கண்ணற்று உதிரும் எண்ணற்ற தருணங்களை, பேரன்பை, மனிதத்தை, சிறுமையை, கண்ணீரை, மானுடத்தின் முடிவிலாக் கதையை தொட்டெடுத்து பெரும் மாலை உருவாகி வருகிறது. ‘பெருந்தச்சன் தொட்ட மரம் சில்பம்’ என்று சூழ்திருவில் வருவது போல ஒவ்வொன்றும் தங்கள் விரல்பட்டுக் கதையாகக் காத்திருந்தது போலும் காலம் காலமாக.
எங்கிருந்து தொடங்குவதெனத் தெரியவில்லை. பெருநதியின் வெள்ளத்தில் மூழ்கி எழ மூச்சு திணறுவது போல இருக்கிறது. இவையனைத்தையும் உள்வாங்கிக் கொள்ளவேனும் திடம் இருக்கிறதா என மலைப்பாக இருக்கிறது. மலைவிட்டிறங்கும் வான் நதியின் வேகம்.
பிரயாகையிலும் நீர்ச்சுடரிலும் கங்கை தோற்றுவாய் குறித்து வரும் இவ்வரிகளே இக்கதைப் பெருக்கிற்கு உரியவை:
மலைசரிந்து இறங்கி, மண் செழிக்க ஒழுகி, அழிமுகத்தில் கடலைச் சேர்ந்து விரிநீர் என்றானது கங்கை. அலையலையெனப் பெருகி தன்னைத் தானே நிறைத்துக்கொண்டது.
பரம்பொருளின் ஒருதுளியே பெருவெளி. அகண்டாகாசம் என அதைச் சொல்கின்றன யோகநூல்கள். அதை நிறைக்கும் பாலொளிப்பெருக்கு மண்ணில் இறங்குவது மானுடனின் அகவெளியிலேயே. அதை சிதாகாசம் என்கின்றன யோகநூல்கள். விண் நிறைத்து சித்தம் நிறைத்து பின் மண் நிறைத்துப் பெருகும் பேரன்பையே கங்கை என வணங்குகின்றன உயிர்க்குலங்கள்
வெண்முரசெனும் பெருநதி ஒரு புறமும் அன்றாடம் புதிது புதிதாக மலரும் இச்சிறுகதைகளின் நிரை ஒரு புறமும் என புனைவுகளின் கங்கைப் பெருக்கு இது. விரிசடை விரித்துத் தாங்கவும் உள்வாங்கவும் திறன் உலகுக்கு வேண்டும்.
பெருகுக கங்கை!
மிக்க அன்புடன்,
சுபா
100. வரம் [சிறுகதை] 99. முதலாமன் [சிறுகதை] 98. அருகே கடல் [சிறுகதை] 97. புழுக்கச்சோறு [சிறுகதை] 96. நெடுந்தூரம் [சிறுகதை] 95. எரிமருள் [சிறுகதை] 94. மலைவிளிம்பில் [சிறுகதை] 93. அமுதம் [சிறுகதை] 92. தீவண்டி [சிறுகதை] 91. பீடம் [சிறுகதை] 90. சிந்தே [சிறுகதை] 89. சாவி [சிறுகதை] 88. கழுமாடன் [சிறுகதை] 87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை] 86. தூவக்காளி [சிறுகதை] 85. சிறகு [சிறுகதை] 84. வண்ணம் [சிறுகதை] 83. ஆபகந்தி [சிறுகதை] 82. ஆமை [சிறுகதை] 81. கணக்கு [சிறுகதை] 80. சுக்ரர் [சிறுகதை] 79. அருள் [சிறுகதை] 78. ஏழாவது [சிறுகதை] 77. மணிபல்லவம் [சிறுகதை] 76. மூத்தோள் [சிறுகதை] 75. அன்னம் [சிறுகதை] 74. மலையரசி [சிறுகதை] 73. குமிழி [சிறுகதை] 72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை] 71. செய்தி [சிறுகதை] 70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2 70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1 69. ஆகாயம் [சிறுகதை] 68. ராஜன் [சிறுகதை] 67. தேனீ [சிறுகதை] 66. முதுநாவல்[சிறுகதை] 65. இணைவு [சிறுகதை] 64. கரு [குறுநாவல்]- பகுதி 1 64. கரு [குறுநாவல்]- பகுதி 2 63. ‘பிறசண்டு’ [சிறுகதை] 62. நிழல்காகம் [சிறுகதை] 61. லாசர் [சிறுகதை] 60. தேவி [சிறுகதை] 59. சிவம் [சிறுகதை] 58. முத்தங்கள் [சிறுகதை] 57. கூடு [சிறுகதை] 56. சீட்டு [சிறுகதை] 55. போழ்வு [சிறுகதை] 54. நஞ்சு [சிறுகதை] 53. பலிக்கல் [சிறுகதை] 52. காக்காய்ப்பொன் [சிறுகதை] 51. லீலை [சிறுகதை] 50. ஐந்து நெருப்பு[ சிறுகதை] 49. கரவு [சிறுகதை] 48. நற்றுணை [சிறுகதை] 47. இறைவன் [சிறுகதை] 46. மலைகளின் உரையாடல் [சிறுகதை] 45. முதல் ஆறு [சிறுகதை] 44. பிடி [சிறுகதை] 43.. கைமுக்கு [சிறுகதை] 42. உலகெலாம் [சிறுகதை] 41. மாயப்பொன் [சிறுகதை] 40. ஆழி [சிறுகதை] 39. வனவாசம் [சிறுகதை] 38. மதுரம் [சிறுகதை] 37. ஓநாயின் மூக்கு [சிறுகதை] 36. வான்நெசவு [சிறுகதை] 35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை] 34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை] 33. வான்கீழ் [சிறுகதை] 32. எழுகதிர் [சிறுகதை] 31. நகைமுகன் [சிறுகதை] 30. ஏகம் [சிறுகதை] 29. ஆட்டக்கதை [சிறுகதை] 28. குருவி [சிறுகதை] 27. சூழ்திரு [சிறுகதை] 26. லூப் [சிறுகதை] 25. அனலுக்குமேல் [சிறுகதை] 24. பெயர்நூறான் [சிறுகதை] 23. இடம் [சிறுகதை] 22. சுற்றுகள் [சிறுகதை] 21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை] 20. வேரில் திகழ்வது [சிறுகதை] 19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை] 18. தங்கத்தின் மணம் [சிறுகதை] 17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை] 16. ஏதேன் [சிறுகதை] 15. மொழி [சிறுகதை] 14. ஆடகம் [சிறுகதை] 13. கோட்டை [சிறுகதை] 12. விலங்கு [சிறுகதை] 11. துளி [சிறுகதை] 10. வேட்டு [சிறுகதை] 9. அங்கி [சிறுகதை] 8. தவளையும் இளவரசனும் [சிறுகதை] 7. பூனை [சிறுகதை] 6. வருக்கை [சிறுகதை] 5. “ஆனையில்லா!” [சிறுகதை] 4. யா தேவி! [சிறுகதை] 3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை] 2. சக்தி ரூபேண! [சிறுகதை] 1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]வெண்முரசின் கிருஷ்ணன் – ரகுராமன்
மரபு, “கிருஷ்ணன்” என்ற மாபெரும் பிம்பத்தின் மீது பூச பட்ட அணைத்து வண்ணங்களையும் குழைத்து ஜெ நம் கற்பனை வானில் ஒரு பெரும் வானவில்லை வரைந்து செல்கிறார். நீங்கள் எப்பிடி பார்தாலும் அவன் உங்கள் பார்வைக்கு ஏற்ற மாதிரியே தெரிகிறான்.
February 26, 2021
இருத்தலியம் தமிழில்
மார்ட்டின் ஹைடெக்கர்அன்பின் ஜெயமோகன்
நான் தற்போது இருத்தலியல் படித்துவருகிறேன். அல்பேட் காமு தஸ்தவிஸ்கி போன்றவர்களை இருத்தலியலின் எழுத்தாளரகள் என்று பொதுவாக அடையாளப்படுத்துகிறார்கள்.
உங்களது இயக்கத்தை என்னால் அடையாளப்படுத்த முடிகிறது செய்யும் விடயத்தில் தொடர்ச்சியாக அதே வேளையில் தனித்துவமாக இயங்கியபடி எந்த அரசியல் குழுவோடு இல்லாது பயணிக்கிறீர்கள்.
தமிழில் இலக்கியங்கள் எதையும் நான் அறிந்தவரை இருத்தலியல் முற்றாக அடையாளபடுத்த முடியவில்லை
மேலும் இருத்தலியல் இந்திய சித்தாந்தங்களுக்கு முக்கியமாக பவுத்தத்திற்கு எதிரானது என நினைக்கிறேன். தமிழில் இதை தனது எழுத்துகளில் வைத்தவர்கள் யார் ?
அன்புடன்
நோயல் நடேசன்
சார்த்ர்அன்புள்ள நடேசன்,
இருத்தலியல் எந்தவகையான சாராம்சவாத [Essentialism] கொள்கைக்கும் எதிராகவே இருக்கமுடியும்.பௌத்தம் மட்டுமல்ல வேதாந்தம் ,சைவசித்தாந்தம் உட்பட எல்லா மையம்சார்ந்த சிந்தனைகளையும் அது நிராகரிக்கும். ஒற்றைவரியில் சொல்லப்போனால் அது மனிதனின் சாராம்சம் என்ன என்று உசாவி, அப்படி ஒன்று இருக்கிறதா என்ற ஐயத்தை முன்வைக்கும் ஒரு சிந்தனைமுறை.
இருத்தலியலில் இரு போக்குகள் உண்டு. ஒன்று மார்ட்டின் ஹைடெக்கர் வழிவந்த அகநிகழ்வியல் [Phenomenology] பார்வைகொண்ட, சாராம்சவாத மறுப்பு நோக்கு கொண்ட இருத்தலியல். பொதுவாக அதையே நாம் இருத்தலியல் என்று இங்கே சொல்கிறோம். இலக்கியத்தில் தீவிரமாகச் செல்வாக்கு செலுத்தியது அதுதான்.
இன்னொன்று மார்க்ஸிய நோக்கில் முன்வைக்கப்பட்ட அன்னியமாதல் கோட்பாடு [Alienation]. முதலாளித்துவச் சூழலால் உழைப்பிலிருந்து அன்னியப்படும் மனிதன் அதன்விளைவாக சமூகம் இயற்கை ஆகியவற்றிலிருந்தும் அன்னியப்படுகிறான். அதை ஒரு தனிக்கொள்கையாக முன்னெடுத்தவர் அல்தூசர் [ Louis Althusser]. இது இருத்தலியலின் மார்க்சியக் கோணம்
தமிழில் ஆச்சரியமான ஒரு நிகழ்வு உண்டு. முதல்வகை இருத்தலியலும் அன்னியமாதலும்தான் இங்கே இலக்கியத்தில் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தின.அவை நேரடியாக இலக்கியப்படைப்புக்கள் வழியாகவே வந்துசேர்ந்தன. அல்பேர் காம்யூவின் அந்நியன் [மொழியாக்கம் வே.ஸ்ரீராம்] இங்கே தீவிரமான பாதிப்பைச் செலுத்திய ஒரு நாவல். அந்நாவலின் நேரடியான மொழியை, தன்வயக்கூற்றை இங்குள்ள பல புனைவுகள் பின் தொடர்ந்தன.
அல்பேர் காமு
வெ.ஸ்ரீராம்ஆனால் வெளியே தெரியாமலேயே அதேயளவுக்கு செல்வாக்கு செலுத்திய இரு நாவல்கள் உண்டு. அவை இருத்தலியல் உள்ளடக்கம் கொண்டவை. ஆனால் அப்படி வெளிப்படையாக தெரியவில்லை, அப்படி விவாதிக்கப்படவில்லை. அவை அளித்த உணர்வு அன்னியமாதல் சார்ந்ததே. ஹெர்மன் ஹெசியின் சித்தார்த்தா [மொழியாக்கம் திரிலோக சீதாராம்] பேர்லாகர் க்விஸ்டின் அன்புவழி. அல்லது பரபாஸ். [மொழியாக்கம் க.நா.சு]
ஆனால் இங்கே இந்த இருத்தலியப்பார்வையின் தத்துவ உள்ளடக்கம் விவாதிக்கப்படவில்லை. இந்த சிந்தனைமரபின் எந்த முக்கியமான கோட்பாட்டு நூலும் மொழியாக்கம் செய்யப்படவில்லை. இருத்தலியத்தின் பிதாமகர்களின் கட்டுரைகள் வாசிக்கப்பட்ட செய்தியே சிற்றிதழ்சார்ந்த இலக்கியச்சூழலில் காணக்கிடைக்கவில்லை. மார்ட்டின் ஹைடெக்கர், சார்த்ர் போன்றவர்களைப் பற்றிய பேச்சுக்கள் இங்கே இல்லை. இலக்கியத்திலிருந்து இலக்கியத்துக்கான ஒரு பரிமாற்றமாகவே இந்த இருத்தலிய- அன்னியமாதல் சிந்தனைகள் வந்தமைந்தன.
ஆனால் மார்க்சிய கோணத்திலான அன்னியமாதல் பற்றி முக்கியமான நூல் ஒன்று வெளிவந்துள்ளது. எஸ்.வி.ராஜதுரை எழுதிய ‘இருத்தலியமும் மார்க்சியமும்’ தமிழில் பெரிதும் வாசிக்கப்பட்ட கோட்பாட்டு நூல்களில் ஒன்று அது. சார்த்ர் பற்றியும் அவர் நூல் எழுதியிருக்கிறார்.ஆனால் மார்க்ஸியக் கோணம் கோட்பாட்டாளர்கள் நடுவே ஏராளமாக பேசப்பட்டதே ஒழிய அந்தக்கோணத்தில் புனைவிலக்கியம் ஏதும் வரவில்லை. எஸ்.வி.ஆர் உருவாக்கிய நூல்களுக்கு புனைவிலக்கியத்தில் எந்தச் செல்வாக்கும் இல்லை.
அல்தூசர்இது ஏன் என்பது ஆய்வுக்குரியது. என் ஊகம் இதுதான். இங்கே மார்க்ஸிய இலக்கியம் பொதுவான களச்செயல்பாட்டின் ஒரு பகுதியாகவே நிலைகொண்டது. ஆகவே களயதார்த்தமே இலக்கியமாகியது. ஒடுக்குமுறையை, சுரண்டலமைப்பை, அதன் பண்பாட்டு உள்ளீடுகளைப் பேசுவதற்கான யதார்த்தவாதச் சித்தரிப்பே அதன் அழகியலாக நிலைகொண்டது. இங்கே மார்க்ஸியம் கோட்பாடு சார்ந்து பேசப்படவே இல்லை. அடிப்படைக் கோட்பாடுகளில் மார்க்ஸிய எழுத்தாளர்கள் ஆர்வம் காட்டவுமில்லை. மார்க்ஸிய வரலாற்றுவாதமேகூட இங்கே புனைவில் வெளிப்படவில்லை.
ஆகவே மார்க்ஸிய சிந்தனையின் ஒரு சிறு பகுதியான அன்னியமாதல் இங்கே பொருட்படுத்தப்படவில்லை. மேலும் அது இளம் மார்க்ஸின் சிந்தனைகளின் ஒரு பகுதி என்றும், செவ்வியல் மார்க்ஸியத்தில் அன்னியமாதல்கோட்பாட்டுக்கு இடமில்லை என்றும் இங்குள்ள முன்னோடிகள் கருதி அதை நிராகரித்தனர். அந்தக் கோணத்தை ஏற்றுக்கொண்டு மேலே விவாதித்த மார்க்ஸிய முன்னோடி என்றால் கோவை ஞானி மட்டுமே.
சார்த்ர் பற்றி சாரு நிவேதிதா ஒரு சிறுநூல் எழுதியிருக்கிறார். ஆனால் அது சார்த்ரை ஒரு புரட்சியாளராக சித்தரிக்கும் நூல். பொதுவாக இங்கே மார்க்சியர்களே இருத்தலியம் பற்றி கோட்பாட்டு அடிப்படையில் பேசினார்கள். அதை இலக்கியவாதிகள் விவாதிக்கவே இல்லை. அவர்களிடம் புனைவுகள் வழியாக வந்த இருத்தலியல் அறியாத செல்வாக்கையே செலுத்தியது.இந்த முரண்பாடு விவாதிக்கத்தக்கது.
எஸ்.வி.ராஜதுரை
தமிழில் நேரடியாகவே இருத்தலியச் சிந்தனைகளைப் பேசிய படைப்புக்கள் ஒருசில உள்ளன. சம்பத் எழுதிய இடைவெளி அவ்வகையில் முதலில் சொல்லப்படவேண்டியது. ஆர்வமூட்டும் ஒரு சிறு தகவல், சார்த்ர் எழுதிய ‘துளை’ என்ற கட்டுரையின் பாதிப்பை இந்நாவலில் காணலாம் – துளை என்னும் அக்கட்டுரை சொல்புதிது இதழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
நகுலனின் நினைவுப்பாதை இருத்தலியல் சிக்கல்களை நாட்குறிப்புகள், உளக்கொந்தளிப்புகள் வழியாக பதிவுசெய்யும் ஒருநாவல். அது இருத்தலின் பொருட்டு ஒன்றையொன்று வேவுபார்க்கும் இரு ஆளுமைகளாக தன்னை பிரித்துக்கொண்ட ஒருவனின் வெளிப்பாடு. நகுலனும் நவீனனும் மாறிமாறி வெளிப்படுகிறார்கள். இருத்தலியலை இந்திய மாயாவாதத்துடன் இணைத்துவிடும் ஒரு நுண்முயற்சியும் அதிலுண்டு.
தலைப்பே நேரடியாக இருத்தலியல் சார்ந்த சுட்டு கொண்ட ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே’ மார்க்கரெட் மிச்செல் எழுதிய ‘Gone with the Wind நாவலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி. சினிமாவில் விவியன் லே சொல்லும் ஆற்றல்மிக்க வசனமாக வந்தது. பாடல் ஒன்றின் முதல்வரியாக புகழ்பெற்றது. ஜி.நாகராஜனின் நாவல் தமிழின் இருத்தலியல் நாவல்களில் சிறந்தது என நினைக்கிறேன்
அசோகமித்திரனின் ‘தண்ணீர்’ முக்கியமான இருத்தலியல் நாவல். தண்ணீர் தமிழில் உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த இருத்தலியப் படிமம். தண்ணீர்தேடித்தவிக்கும் ஒரு நகரின் பின்னணியில் ஈரமிழந்துபோன உறவுகளின் கதையாக இந்நாவல் விரிகிறது. அதன் கதைமாந்தரும் வெவ்வேறுவகையில் அன்னியமாகிவிட்டவர்கள்தான்
சா.கந்தசாமியின் அவன் ஆனது எல்லாவகையிலும் ஓர் இருத்தலியல் நாவல், இருத்தலுக்கு ஆதாரமான அடையாளங்கள், தனித்தன்மைகள் ஆகிய அனைத்தையும் அகற்றிவிட்டு ஒருவன் இருத்தலெனக்கொண்டுள்ளது என்ன என்று ஆராய்கிறது
நாடகங்களில் இந்திரா பார்த்தசாரதியின் ‘போர்வைபோர்த்திய உடல்கள்’ முக்கியமான இருத்தலியல் படைப்பு.
எழுபதுகளில் வந்த பலநாவல்களில் இருத்தலியல் சார்ந்த உள்ளடக்கம் உண்டு. ஆனால் அவை மேலைநாட்டிலிருந்து கடன்வாங்கிய சிந்தனைகளாக இல்லை. இந்தியச்சூழலில் அறுபதுகளில் ஜவகர்லால்யுகம் உருவாக்கிய நம்பிக்கைகள் சிதைந்தன. எழுபதுகளில் அதற்கு மாற்றாக எழுந்த இடதுசாரி இயக்கங்கள் பற்றிய எதிர்பார்ப்புகளும் அழிந்தன. அந்தச் சோர்வே இருத்தலியம் நோக்கி இங்கிருந்த எழுத்தாளர்களை ஈர்த்தது.
இன்னொரு பக்கம் ஃப்ராய்டிய சிந்தனைகள் அறிமுகமாகி சமூகத்தை ஒட்டுமொத்தமாக பார்ப்பதற்குப் பதிலாக தனிமனிதனின் அகமாக பார்க்கும் கோணத்தை அறிமுகம் செய்தன. விளைவாக தனிமனிதன் மீதான நம்பிக்கையிழந்த நோக்கு உருவாகியது. அதுவும் இருத்தலியத்தை அடையாளம் கண்டுகொண்டு ஏற்றுக்கொண்டது
இங்குள்ள இருத்தலியல் உள்ளடக்கம் கொண்ட நாவல்களின் சிந்தனைக் கட்டமைப்பு மூன்றுவகையிலாக அமைந்திருக்கும்.
அ. தேடல்கொண்ட தனிமனிதன் இருண்மையைக் கண்டடையும் வீழ்ச்சி. அது வரலாற்று இருண்மை, ஆன்மிக இருண்மை, சமூக உறவுகளின் இருண்மை- எதுவாகவும் இருக்கலாம்.
ஆ. சமகால அரசியல், தத்துவம் ஆகியவை முற்றாக மானுடனைக் கைவிடுவது. அவற்றை நம்பிய மனிதர்கள் சென்றடையும் வெறுமை.
இ. மானுட உறவுகளுக்குள் வெறும் காமமும் அடையாள உருவாக்க விழைவும் மட்டுமே அடங்கியிருக்கிறது என உணர்தல். அதை உணரும் கதாபாத்திரங்கள் தன்னுள் சுருண்டுகொள்கின்றன.
இருத்தலியல் சார்ந்த மேலே சொன்ன உணர்வுநிலைகள், கருத்துக்கள் இருந்தாலே அது இருத்தலியச்சார்பு கொண்ட ஆக்கம் எனலாம். ஏனென்றால் அது அன்றைய சூழலின் பொதுவான உளநிலை. ஒவ்வொருவரும் அதில் அறியாமலேயே பங்குகொண்டனர்
[image error]
இருத்தலிய உள்ளடக்கம் கொண்டவை என நான் நினைக்கும் வேறு தமிழ் நாவல்கள்
ஒரு புளியமரத்தின் கதை- சுந்தரராமசாமி
கிருஷ்ணப்பருந்து – ஆ.மாதவன்
புனலும் மணலும்- ஆ.மாதவன்
பதினெட்டாவது அட்சக்கோடு -அசோகமித்திரன்
பசித்த மானுடம்- கரிச்சான்குஞ்சு
இன்று- அசோகமித்திரன்
நாய்கள்- நகுலன்
வாக்குமூலம் -நகுலன்
மரப்பசு- தி.ஜானகிராமன்
என் பெயர் ராமசேஷன்- ஆதவன்
காகிதமலர்கள்-ஆதவன்
தந்திரபூமி- இந்திரா பார்த்தசாரதி
சுதந்திரபூமி- இந்திரா பார்த்தசாரதி
பள்ளிகொண்டபுரம்- நீலபத்மநாபன்
சாயாவனம் – சா.கந்தசாமி
தொலைந்துபோனவர்கள்- சா. கந்தசாமி
வாசவெஸ்வரம் – கிருத்திகா
புகைநடுவில் -கிருத்திகா
நேற்றிருந்தோம் -கிருத்திகா
நகுலன்
சிலநாவல்களை இருத்தலியல் நாவல்கள் என்று சொல்லத்தோன்றும். ஆனால் ஆய்வுக்குப்பின் தவிர்த்திருக்கிறேன். க.நா.சுவின் ஒருநாள், பொய்த்தேவு ஆகியவை இருத்தலியல் நாவல்கள் அல்ல, அவை இந்திய வேதாந்தப் பார்வை கொண்டவை. அவற்றின் கதைநாயகர்கள் வெறுமையை சென்றடையவில்லை. உலகியல்பொருள் கடந்து முழுப்பொருள் சார்ந்த ஓர் உணர்வையே கண்டடைகிறார்கள்
ஜே.ஜே.சிலகுறிப்புகள் இருத்தலியல் சார்ந்த பல குறிப்புகள் கொண்டது. ஆனால் இருத்தலியல் நாவல் அல்ல, அதைக்கடக்கும் முதல் தமிழ் முயற்சி. அதற்கடுத்த பின்நவீனத்துவ கால நாவல்களின் தொடக்கம். அது இருத்தலை ஆராயவில்லை. மாறாக இருத்தலென்பது எப்படியெல்லாம் சூழலால், தன் ஆணவத்தால் கட்டமைக்கப்படுகிறது என்று பேசுகிறது. ஜே.ஜே.யை ஆல்பேர் காம்யூவுடன் சம்பந்தப்படுத்தி தொடங்கும் முதல்வரி, காம்யூவின் சாவை குறிக்கும் அச்சொற்றொரர் அவ்வகையில் முக்கியமான ஒன்று
நாஞ்சில்நாடனின் மிதவை, என்பிலதனை வெயில்காயும் போன்றவற்றில் தனிமனிதன் சென்றடையும் வெறுமை உண்டு. ஆனால் அவை தத்துவார்த்தமானவை அல்ல, முற்றிலும் உலகியல் சார்ந்தவை.
இருத்தலியல் முற்றாக அழிந்துவிடுவதில்லை. அது என்றும் நிலைகொள்ளும் ஒரு வாழ்க்கைநோக்கு. ஆகவே அந்த தீவிரப்புயல்மையக் காலம் கடந்தபின்னரும் அத்தகைய ஆக்கங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. எஸ்.ராமகிருஷ்னனின் உறுபசி அத்தகைய நாவல். இருத்தலின் வெறுமைக்கும் அதை காமம்கொண்டு நிறைக்கும் முயற்சிக்குமான கொந்தளிப்பான தேடல் என அந்நாவலைச் சொல்லமுடியும்
அன்புடன்
ஜெ
சிரிக்காத புத்தர் இருத்தலியலும் கசாக்கின் இதிகாசமும் – கஸ்தூரிரங்கன் சம்பத்தின் இடைவெளி பற்றி ஓநாயின் தனிமை சோர்பா எனும் கிரேக்கன் – அருண்மொழி நங்கை நகுலனின் உலகம்கவிதைக்குள் நுழைபவர்கள்…
பொதுவாக உலகம் முழுக்கவே கவிதைகளுக்கு கவிஞர்கள்தான் வாசகர்கள். எழுதும் கவிஞர்கள், எழுத எண்ணும் கவிஞர்கள். கவிதை பற்றி எழுதுபவர்கள் கவிஞர்கள் மட்டுமே. ஒருவகையில் அதுவே இயல்பானது. ஏனென்றால் கவிதை என்பது ஒரு பொதுவான ‘பொருட்கோள்சூழல்’ கொண்டது. அதை நான் ஒரு நாடகம் என்பேன். ஒவ்வொரு தனிக்கவிதையும் அந்த நாடகத்தின் ஒரு வசனம் போல. எவர் எங்கே எவரிடம் ஏன் சொன்னது என்பது அந்த நாடகத்தால்தான் பொருள்கொள்கிறது.
அந்த நாடகம் ஒரு கவிச்சூழலின் அனைவரும் சேர்ந்து தொடர்ந்து உருவாக்கிக்கொண்டே இருப்பது.புதிதாக உள்ளே நுழைபவர்களுக்கு அந்த நாடகம் தெரிவதில்லை. ஆகவே திகைக்கிறார்கள். அக்கவிதைகளில் தங்கள் வாழ்க்கையுடன் எவ்வகையிலேனும் தொடர்புகொள்ளும் சிலவற்றை மட்டும் எடுத்துக்கொள்கிறார்கள். பெரும்பாலும் அவை உறவு- பிரிவு சார்ந்த எளிமையான உணர்ச்சி வெளிப்பாடுகளாக இருக்கும். அல்லது அவர்கள் ஏற்கனவே அறிந்த அரசியல் கருத்துக்களை கொஞ்சம் வேறுவடிவில் சொல்பவையாக இருக்கும்
தீவிரமான கவிதையை கவிதைச்சூழலுக்கு வெளியே இருக்கும் இலக்கியவாசகன் வாசிப்பதைக் கவனிக்கநேர்வது ஓர் இனிய அனுபவம். அவனுடைய தத்தளிப்பும் ஆர்வமும் கண்டடைதல்களும் முக்கியமானவை. அவனை அடையும்போது ஒருவகையில் கவிதை தன் வழக்கமான எல்லையை மீறிச் செல்கிறது. அவ்வாறு மீறிச்செல்வது கவிதையின் சாகசங்களில் ஒன்று, ஆனால் அதுவும் நிகழ்ந்தபடியே இருக்கவேண்டும்.
தீவிரமான கவிதைக்கு வரும் அந்த ‘வாசகன்’ உண்மையில் எதிர்காலத்தில் இருக்கிறான். இன்று பொதுவாசகர்கள் கொண்டாடும் எல்லா கவிதைகளும் அவை எழுதப்பட்ட காலகட்டத்தில் அன்றிருந்த சின்னஞ்சிறிய கவிதைச்சூழலுக்குள் மட்டுமே புழங்கியவைதான். அவை பேசப்பட்டு பேசப்பட்டு உள்வாங்கப்பட்டன. வெவ்வேறுவகையில் பொதுச்சமூகத்தால் அவை பொருளேற்றம் செய்யப்பட்டன. அதன்பின் எளிமையாக புழங்க ஆரம்பித்தன. அவ்வாறு எதிர்காலத்தில் உருவாகப்போகும் வாசகச்சூழலில் இருந்து ஒருவர் காலத்தை தாவிக்கடந்து இப்போதே அக்கவிதையை வாசித்துப் பார்க்கிறார்
என் இளமையில் நான் முன்னோடியான தேர்ந்த விமர்சகர்கள் மற்றும் சகப்படைப்பாளிகளின் கருத்துக்களை மட்டுமே பொருட்படுத்தினேன். இணைய உலகம் உருவானபின் ஒவ்வொருநாளுமென எனக்கு வந்துகொண்டிருக்கும் வாசகர்கடிதங்கள் வழியாக இலக்கியவாதி அல்லாத வாசகர்களிடம் என் படைப்புக்கள் உருவாக்கும் உளப்பதிவை, அவர்களுடன் உரையாடி அப்படைப்புக்கள் அடையும் புதிய பொருளேற்றத்தை பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவையே மேலும் முக்கியமானவை என்னும் எண்ணம் இன்று உருவாகிவிட்டிருக்கிறது.
ஏனென்றால் இலக்கியப்படைப்புக்கள் முதன்மையாக வாசகர்களுக்கே எழுதப்படுகின்றன. வாசக எதிர்வினைகள் வழியாக ஓர் உரையாடல் உருவாகிறது. மெல்லமெல்ல ஒரு சொற்களம் திரண்டு வருகிறது. வாசகர் கடிதங்களில் உள்ள மொழிப்போதாமைகள், புரிதல்சிக்கல்கள் ஆகியவற்றை கருத்தில்கொண்டாலும்கூட அவற்றிலுள்ள புதிய பார்வைகள், நுண்தளங்கள் இலக்கியவாதிகளால் பெரும்பாலும் முன்வைக்கப்படுவதில்லை என்றே சொல்லவேண்டும். ஏனென்றால் இலக்கியவாதி தன்முனைப்பையே கருத்து என்ற பேரில் பெரும்பாலும் முன்வைக்கிறான். வாசகன் படைப்பின் முன் கொள்ளும் உண்மையான, திறந்த உள்ளம் கொண்ட ஈடுபாடு அவனில் இல்லை. அவனிடமிருப்பவை கணக்குகள். தன்முனைப்பின் கணக்குகள், அதன்பின் தன்னுடைய சாதி, மதம் சார்ந்த பற்றுக்கள்.
ராதாகிருஷ்ணன் மிக எளிய வாசகராக 2010 வாக்கில் அறிமுகமானவர். முறைமைசார் கல்வி பயில வாய்ப்பில்லாதவர். தொழிலாளராக வாழ்க்கையை தொடங்கி இன்று சுயதொழில் செய்கிறார். தொடர்ந்து வாசிப்பவர். மொழியை கைவசப்படுத்த எழுத்தினூடாக தொடர்ந்து முயல்கிறார். தன் அனுபவங்கள் மற்றும் உணர்வுகளைச் சார்ந்து மட்டுமே சிந்திக்கிறார்
ராதாகிருஷ்ணன் லக்ஷ்மி மணிவண்ணனின் கவிதைகள் பற்றி எழுதியிருக்கும் இக்குறிப்பு அதனால் மிக முக்கியமான ஒன்று என நினைக்கிறேன்
கடலொரு பக்கம் வீடொருபக்கம் -நூல் பற்றி- ராதாகிருஷ்ணன் மதிப்புரைலக்ஷ்மி மணிவண்ணனின் கடலொரு பக்கம் வீடொருபக்கம்- கவிஞர் சங்கரராமசுப்ரமணியன்
விவாதமொழி- கடிதம்
அன்புள்ள ஜெ
நான் இடதுசாரி எண்ணம் கொண்டவன். நீங்கள் வெளியிட்ட பகுதியில் உள்ள கடிதங்களில் வலதுசாரிகள் உங்களை சோ -எஸ்.வி.சேகர் மொழியில் கிண்டல்செய்கிறார்கள், இடதுசாரிகள் மொட்டைவசை அளிக்கிறார்கள் என்று இருந்தது
இடதுசாரிகளை நீங்கள் விமர்சிக்கிறீர்கள். ஆகவே அவர்களும் விமர்சிக்கிறார்கள். இடதுசாரிகள் இரண்டு வகை. கருத்துக்களை கொள்கைகளையும் அடிப்படைத்தத்துவங்களையும் கொண்டு எதிர்ப்பவர்கள் உண்டு. அவர்கள் கொஞ்சம் குறைவுதான். பொதுவாக அன்றைக்குள்ள அரசியல் வியூகத்தின் ஒரு பகுதியாக எதிர் கருத்தாளர்களை விமர்சிப்பதுதான் இடதுசாரிகளின் வழக்கம். அவற்றில் அபூர்வமாகச் சில அடித்தளக்குரல்கள் கடுமையாக இருக்கும். ஆனால் இடதுசாரிகளின் விமர்சனம் எப்போதுமே அறிவுபூர்வமானது
மொட்டைவசை என்றால் எது தெரியுமா? இந்து ‘சிந்தனையாளர்’ ஆக அறியப்படும், உங்கள் முன்னாள் நண்பர்களாலும் மகிழ்ந்து கொண்டாடப்படும், இந்து அமைப்பில் முக்கியமான பொறுப்பில் இருப்பவரான ராஜசங்கர் விஸ்வநாதன் என்பவர் எழுதிய இந்த வரிகள்தான். இந்த வகையில் ஒரு கீழ்த்தரமான வசையை இடதுசாரிகள் உங்கள்மேல் இத்தனை ஆண்டுகளில் எழுதியிருக்கிறார்களா? எந்த எழுத்தாளரைப்பற்றியாவது எழுதியிருக்கிறார்களா?
இங்கே இணையத்தில் பேசிக்கொண்டிருக்கும் மொத்த இந்துத்துவக்கும்பலும் இதே தரம் கொண்டவை. இதே மனிதர் கொஞ்சகாலம் முன்பு உங்களுடைய ‘சிடி’ ஒன்று திராவிட இயக்கத்தின் கையில் மாட்டியிருப்பதனால் நீங்கள் கட்சிமாறி பேசுகிறீர்கள் என்றும் அந்த சிடி அவர் கைக்கும் வந்துவிட்டது என்றும் ஒரு பதிவுபோட ஒருகாலத்தில் உங்களுடன் வந்து குலவிக்கொண்டிருந்த அத்தனை கும்பலும் சென்று அங்கே இளித்து வைத்தனர்
உங்கள் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன். இந்தக்குரலுக்கு தலையாட்டும் கும்பல் என்ன கருத்துநாகரீகம் பேணுகிறது? அவர்கள் பண்பாடு, நாகரீகம் என்ற வார்த்தைகளையே பேசலாமா? இவர்கள்தான் இந்துப்பண்பாட்டின் காவலர்கள் என்றால் அந்தப் பண்பாடு தமிழனுக்கு தேவையா?
என்.ராஜேஷ்குமார்
முகநூல் குறிப்பு
மன்னிக்கவும் ஜி. இந்த ஜெயமோகன் எனும் ஆள் எந்த ஒரு நெறியற்ற முறையற்ற எச்சைப்பொறுக்கி. நீங்கள் எந்த அடிப்படையிலே இந்த ஆளின் அங்கீகாரத்தை கோருகிறீர்கள் என தெரியவில்லை. எதுக்கெடுத்தாலும் மற்றவர்களை வசைபாடும் பிறவி அதுவும் அதன் அல்லைக்கை முண்டங்களும்.
நீங்கள் எழுதிய கடிதத்துக்கு என்ன எதிர்வினை ஆற்றியிருக்கீறது என பாருங்கள். எங்கேயேனும் அந்த த்ராவிட் ஆட்களையோ அல்லது மற்ற மத ஆட்களையோ ஏதேனும் சொல்லியிருக்கிறதா? இல்லை திட்டுவது இந்து மதத்தின் ஆச்சார அனுஷ்டான வாதிகளையும் என்னைப்போன்ற இந்துத்துவ ஆட்களையும் தான். இந்த எச்சைபொறுக்கிக்கு இந்து மதம் அழியவேண்டும் என்பது தான் குறி. அதுக்குத்தான் இந்த பசப்பு வார்த்தைகள்.
இந்த ஆளின் கருத்துப்படி சைவசித்தாந்தம் என்பதே வேறு குறீப்பிட்ட மதத்திலெ இருந்து வந்தது. சைவகுரவர்களின் கொடுமைப்படுத்தலை எழுதுவதே அந்த குறிப்பிட ஆட்கள் கொடுமைப்படுத்தப்பட்டதை போன்றது என நம்முடைய வரலாற்றை மறுப்பதிலே இந்த எச்சைபொறுகிக்கு பேரின்பம்.
நீங்கள் எதற்கு இந்த ஆளின் ஏற்பை நோக்கீனீர்கள் என புரியவில்லை. தனியே பேசுவோம். [ராஜசங்கர் விஸ்வநாதன்]
கதைகளின் முடிவில்
அன்புள்ள ஜெ
கொந்தளிப்பான ஓர் ஆண்டு முடியப்போகிறது. இந்த ஆண்டின் நினைவுகள் என்னென்ன என்று பார்த்தால் முதலில் வெண்முரசின் முடிவு. அடுத்தபடியாக நூறு சிறுகதைகள். கொரோனா எல்லாம் இதற்கு பின்புலம்தான். காலம்போகப்போக கொரோனா மறந்து நினைவில் சுருங்கிவிடும். இவைதான் வரலாறாக நிலைகொள்ளும்
கே.ஆர்.ராஜ்மோகன்
அன்புள்ள ஜெ,
இந்த lockdown இல் உங்கள் சிறுகதைகளே நாட்களை எதிர்நோக்க செய்தன. ஒவ்வொரு கதையையும் படித்த உடன் உங்களுக்கு மின்னஞ்சல் எழுத வேண்டும் என்று எண்ணுவேன், அனால் அலைபேசியில் type செய்ய சோம்பேறித்தனம். 70 நாட்களுக்கு பிறகு இப்பொழுதுதான் என் வீட்டிற்கு திரும்பினேன். இரண்டு விஷயங்கள்..
வீட்டில்balcony எல்லாம் இலை, சருகுகள்நிரம்பி, மழைநீர் drain ஆகாமல், வீடு முழுவதும் நீர். மொட்டை மாடியிலும் நீர் தேங்கி நின்றது. நான் சென்று drainage ஐ அடைத்து இருந்த சருகுகளை நீக்கும்பொது இரண்டு அண்டங்காக்கைகள் என்னை பார்த்த வண்ணம் இருந்தன. நான் ஏணியில் இறங்கும் பொது மாரி மாரி பறந்து வந்து என்னை தாக்க ஆரம்பித்தன. அங்கு எங்கோ அவைகள் கூடு கட்டியிருக்க வேண்டும் என்றும், நானறிந்த அளவில் கூடு போன்ற எதையும் நான் கலைக்கவில்லை என்றும், என்னை நானே சமாதானம் செய்துகொள்கிறேன். இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்களாக, நான் வெளியில் சென்றால் அந்த காகங்கள் கரைகின்றன. நிழல்காகம் கதையில் வருவது போல் இனி நடக்குமா என்று பயப்படுகிறேன் !!
70 நாட்கள்திருச்சியில் மலைக்கோட்டைஅருகே இருந்தேன். அங்கே யானை கோட்டம் மிகச்சிறியதானது. இன்னும் சிறிதாக இருந்தால் யானை கதையில் வருவதுபோல் அது அங்கே சிக்கிக்கொண்டு விடும். யானை அதிலே 24/7 நிறுத்தப்பட்டிருந்தது. தினமும் அதன் நிலை எண்ணி மனம் வருந்துவேன். ராஜன் கதை படித்த அன்று, இந்து அறநிலையத்துறை அமைச்சருக்கு tweet செய்தேன். அவ்வளவே என் activism. கேரளத்தில் மலப்புறத்தில் யானை கொல்லப்பட்ட செய்தி மனம் சோர்வடைய செய்கிறது. நான் இயல்பாகவே மனிதனின் குரூரம் எல்லையற்றது என்று நினைப்பவன். இதுவரை எதுவும் என் மனதை பாதித்தது இல்லை. அனால் இது ஏதோ செய்கிறது. என்னவென்று தெரியவில்லை.
அன்புடன்,
ஸ்ரீராம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். தாங்களும் தங்கள் குடும்பமும் நலமுடன் என்றும் இருக்க எனது அன்பும், ஆசையும். ஒரு குழந்தையிடத்தில், உனக்கு எந்த பொம்மை பிடிக்கும் என்றால், ஒரு நாள் கரடி பொம்மை பிடிக்கும் என்று சொல்லும், இன்னொரு நாள் குரங்கு பொம்மை, மற்றொரு நாள் இரண்டும் பிடிக்கும் என்று சொல்லும்.
இந்த நான்கு நாட்களாக, ‘நிழல்காகம்’ என் உள்ளம் முழுதும் நிறைந்து இருக்கிறது. காகங்கள் அண்டாமல் இருப்பதற்காக, அவற்றின் இனத்தில் சிலவற்றைப் பிடித்து குடலை வெட்டி நீக்கி புடம் செய்து தொங்கவைத்தவரை துரத்தி துரத்தி கொத்திய காகங்கள், பனிப்பொழிவில் சேமித்த வைத்த கோதுமையைக் கொடுத்து பசியாற்றிய அவரது பேரனை துரத்தி துரத்தி முத்தமிடுகின்றன. அசிதரையும், அவருடன் விளையாடும் காகங்களையும் நினைத்திருப்பதே ஒரு தியானத்தில் இருப்பதைப் போல உணர்கிறேன்.
காகத்தை விரட்ட கருப்புத்துணி கட்டி தேங்காய் கொப்புரையைக் காய வைப்பது, விவசாயப் பின்னனி நிறைந்த என் சிறுவயது வாழ்க்கையில் வருடந்தோரும் வந்து செல்லும் நிகழ்வு. கருப்புத்துணிக்கு பதில் , காகத்தை அடித்துத் தொங்க விட என் பாட்டன் ஒரு பொழுதும் நினைத்திருக்க மாட்டார். குலதெய்வ கோவிலில், ஆட்டுக் கிடாய் வெட்டுவதை தடுத்து நிறுத்தியவர் அவர். தலையில் தண்ணீர் தெளித்த பின் ஆடு தனது தலையை சிலிர்த்து துள்ளியதும், சாங்கியம் முடிந்தது என்று சொல்லி , அதை ஏலத்திற்கு விற்று, வந்த வருமானத்தை கோவில் நிதியாக மாற்றுவது என அவரும், அவர் பங்காளிகளும் முடிவு எடுத்தார்கள் என்று என் தந்தை பெருமையாக சொல்வார்.
பத்து வயது சிறுவனாக இருந்தபொழுது, தொடர்ந்து இரு வாரங்களாக, ஊரை ஒட்டியிருந்த என் தாய்மாமன் தோட்டத்து கடவுப்படலைத் திறந்து காலடி வைத்ததும், காகம் ஒன்று கீழிறங்கி வந்து தோளுக்கு மேலே பறந்து தலையை உரசியதுபோல் செல்லும். ‘நிழல்காகம்’ கதை , அன்றைய சிலிர்ப்பை மீட்டெடுத்தது எனினும், என் பாட்டனும், முப்பாட்டனும் உயிர்களின் மேல் வைத்த அன்பினால், அந்தக் காகம் என்னுடன் விளையாட வந்திருக்கும் என்று இன்று எடுத்துக்கொள்கிறேன்.
உங்களின் கதைகள் சொல்வது பொதுபுத்திக்கு அமானுஷ்யம் போல் தோன்றுவது, அறிவியல்படியும் சரி என்று திரும்ப திரும்ப நிறூபனம் ஆகிவிடுகின்றன. நான், ராதா, ஜெய் மூவருமே இந்தக்கதை பற்றி பேசும்பொழுது BBC செய்திப்பத்திரிகையில் வாசித்த ஒரு செய்தியை நினைவு கூர்ந்தோம். சிறுமி ஒருவள், அவள், நான்கு வயதாக இருக்கும்பொழுது , அவள் சிந்தும் உணவை காகங்கள் எடுப்பதையும், அதற்காக அவைகள் காத்திருப்பதையும் கவனித்தவள், கொஞ்சம் பெரியவளானதும், தனது மதிய உணவை பங்கிட்டுக்கொள்ளும் கருணை உள்ளம் உடையவள் ஆகிறாள். வீட்டுத் தோட்டத்தில், கிண்ணங்களில் கடலைப் பருப்பு, தண்ணீர் என்று காகங்களுக்கு வைப்பதை அவளும், அவள் சகோதரனும் வழக்கமாக்கிக் கொள்கிறார்கள். உணவைத் தேடிவந்து உண்ணும் காகங்கள், அவளுக்கு மினுமினுக்கும் பரிசுப் பொருள்களை வீட்டுத் தோட்டத்தில் விட்டுச்செல்ல ஆரம்பிக்கின்றன. ஊதா நிற லெகோ பீஸ், மஞ்சள் நிற பாசி, பேப்பர் கிளிப் என்று அதன் வாயில் என்னவெல்லாம் கவ்வ முடியுமோ அவைகளை கொண்டு வந்து பரிசாக இட்டுச் செல்கின்றன.
இதை நேர்முகம் கண்ட பத்திரிகையாளர், காகங்களைப் பற்றி அதிகம் தெரிந்த University of Washington, விரிவுரையாளரிடம், இதுவெல்லாம் சாத்தியமா என்று கேட்கிறார். அவர், “பல நாட்கள் பழக்கத்தில் காகங்கள், தனக்கு உணவு கொடுப்பவனை அணுக்கமாக அறிந்து கொள்கிறது. அவைகள் பரிசு கொடுப்பது சாத்தியமே. எனக்குத்தான் அவைகள் கொடுத்ததில்லை” என்கிறார்.
இது போன்ற கட்டுரைகளை எப்பொழுதுமே சேமித்துவைத்திருக்கும் ஜெய், இந்தக் கடிதத்துடன் இணைப்பதற்காக, கேட்டதும், இரண்டரை வினாடியில் அந்த நிரலை எனக்கு அனுப்பி வைத்தான்.
அன்புடன்,
வ. சௌந்தரராஜன்
ஆஸ்டின்
100. வரம் [சிறுகதை] 99. முதலாமன் [சிறுகதை] 98. அருகே கடல் [சிறுகதை] 97. புழுக்கச்சோறு [சிறுகதை] 96. நெடுந்தூரம் [சிறுகதை] 95. எரிமருள் [சிறுகதை] 94. மலைவிளிம்பில் [சிறுகதை] 93. அமுதம் [சிறுகதை] 92. தீவண்டி [சிறுகதை] 91. பீடம் [சிறுகதை] 90. சிந்தே [சிறுகதை] 89. சாவி [சிறுகதை] 88. கழுமாடன் [சிறுகதை] 87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை] 86. தூவக்காளி [சிறுகதை] 85. சிறகு [சிறுகதை] 84. வண்ணம் [சிறுகதை] 83. ஆபகந்தி [சிறுகதை] 82. ஆமை [சிறுகதை] 81. கணக்கு [சிறுகதை] 80. சுக்ரர் [சிறுகதை] 79. அருள் [சிறுகதை] 78. ஏழாவது [சிறுகதை] 77. மணிபல்லவம் [சிறுகதை] 76. மூத்தோள் [சிறுகதை] 75. அன்னம் [சிறுகதை] 74. மலையரசி [சிறுகதை] 73. குமிழி [சிறுகதை] 72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை] 71. செய்தி [சிறுகதை] 70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2 70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1 69. ஆகாயம் [சிறுகதை] 68. ராஜன் [சிறுகதை] 67. தேனீ [சிறுகதை] 66. முதுநாவல்[சிறுகதை] 65. இணைவு [சிறுகதை] 64. கரு [குறுநாவல்]- பகுதி 1 64. கரு [குறுநாவல்]- பகுதி 2 63. ‘பிறசண்டு’ [சிறுகதை] 62. நிழல்காகம் [சிறுகதை] 61. லாசர் [சிறுகதை] 60. தேவி [சிறுகதை] 59. சிவம் [சிறுகதை] 58. முத்தங்கள் [சிறுகதை] 57. கூடு [சிறுகதை] 56. சீட்டு [சிறுகதை] 55. போழ்வு [சிறுகதை] 54. நஞ்சு [சிறுகதை] 53. பலிக்கல் [சிறுகதை] 52. காக்காய்ப்பொன் [சிறுகதை] 51. லீலை [சிறுகதை] 50. ஐந்து நெருப்பு[ சிறுகதை] 49. கரவு [சிறுகதை] 48. நற்றுணை [சிறுகதை] 47. இறைவன் [சிறுகதை] 46. மலைகளின் உரையாடல் [சிறுகதை] 45. முதல் ஆறு [சிறுகதை] 44. பிடி [சிறுகதை] 43.. கைமுக்கு [சிறுகதை] 42. உலகெலாம் [சிறுகதை] 41. மாயப்பொன் [சிறுகதை] 40. ஆழி [சிறுகதை] 39. வனவாசம் [சிறுகதை] 38. மதுரம் [சிறுகதை] 37. ஓநாயின் மூக்கு [சிறுகதை] 36. வான்நெசவு [சிறுகதை] 35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை] 34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை] 33. வான்கீழ் [சிறுகதை] 32. எழுகதிர் [சிறுகதை] 31. நகைமுகன் [சிறுகதை] 30. ஏகம் [சிறுகதை] 29. ஆட்டக்கதை [சிறுகதை] 28. குருவி [சிறுகதை] 27. சூழ்திரு [சிறுகதை] 26. லூப் [சிறுகதை] 25. அனலுக்குமேல் [சிறுகதை] 24. பெயர்நூறான் [சிறுகதை] 23. இடம் [சிறுகதை] 22. சுற்றுகள் [சிறுகதை] 21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை] 20. வேரில் திகழ்வது [சிறுகதை] 19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை] 18. தங்கத்தின் மணம் [சிறுகதை] 17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை] 16. ஏதேன் [சிறுகதை] 15. மொழி [சிறுகதை] 14. ஆடகம் [சிறுகதை] 13. கோட்டை [சிறுகதை] 12. விலங்கு [சிறுகதை] 11. துளி [சிறுகதை] 10. வேட்டு [சிறுகதை] 9. அங்கி [சிறுகதை] 8. தவளையும் இளவரசனும் [சிறுகதை] 7. பூனை [சிறுகதை] 6. வருக்கை [சிறுகதை] 5. “ஆனையில்லா!” [சிறுகதை] 4. யா தேவி! [சிறுகதை] 3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை] 2. சக்தி ரூபேண! [சிறுகதை] 1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]
அழலை அறிதல்
கான் புக தர்மன் குந்தி வசம் ஆசி வாங்க வருகையில், குந்தி அத் தருணத்தை தன்னை அறிவதன் வழியாகவே அதற்க்கான பொறுப்பை ஏற்கிறாள் அதன் வழி கடக்கிறாள். ”ஆம் இது அனைத்துக்கும், நானே துவக்கம், நானே காரணம்” என்று முதன் முறையாக தனது விழைவின் விளைவைக்ண்டு கூறுகிறாள்.
அழலை அறிதல்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

