சாரு நிவேதிதா's Blog, page 162

May 8, 2022

சில முன்னோடிகளைப் பற்றிய என் பேருரைகள்

சி.சு.செல்லப்பா – https://drive.google.com/file/d/1HcXZ... – https://drive.google.com/file/d/1vZIA... – https://drive.google.com/file/d/19k-j... – Part 1 – https://drive.google.com/file/d/16136... – Part 2 – https://drive.google.com/file/d/1ywFq... புதுமைப்பித்தன் பகுதி 1 புதுமைப்பித்தன்-1 (1).mp4 – Google Drive புதுமைப்பித்தன் பகுதி 2 நன்றி: சதீஷ்வரன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 08, 2022 06:35

May 7, 2022

அது ஒரு நம்ப முடியாத கதை

அறுபத்தொன்பது வயதில் வாய்த்ததில்லை என் வசிப்பிடத்தில் ஒரே ஒரு இரவின் தனிமை உளறுகிறேன் என்பீர் அதுவொரு நம்ப முடியாத கதை மகன் திருமணம் மும்பை பவய் ஹீராநந்தானியில் காலையில் விமானத்தில் சென்று இரவில் விமானத்தில் திரும்பினாள் மனைவி அப்பன் சாவுக்குப் போகவா வேண்டாமா எனக் கேட்டாள் இதோ கூப்பிடு தூரத்தில் இருக்கும் சின்மயா நகர்தான் பெற்றோர் வீடு மாடியிலிருந்து தெரியும் மெரினா கடற்கரை சென்றதில்லை உணவகம் போனதில்லை சினிமா கல்யாணம் காது குத்து எதுவுமில்லை வீடே சொர்க்கம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 07, 2022 23:39

கண்ணாடியெனும் நதி

தனித்து விடப்பட்ட முதல் இரவு நான் நினைத்தது போல் அத்தனை சுகமாயில்லை தனிமைதான் உன்னை அச்சு அசலாய்க் காண்பிக்கும் கண்ணாடி மனிதரின் அருகமை  உன் அனுமதியில்லாமலேயே நீ நடி உன்னை ஏதோ ஒன்று அழுத்துகிறது எதிர்மறை எண்ணங்களால் நிரப்பப்பட்ட காற்று சுவாசிக்க சிரமப்படு சகிப்புத்தன்மையை இழந்து விட்டதாக அஞ்சு தெளிவின்மையில் உழல் எதன் மீதும் ஆர்வமோ பெரும் ஆசையோ இல்லாத சமநிலை வாழ்க்கையை அலுப்பூட்டச் செய்கிறது உணர்வுகளை வெளிப்படுத்தவில்லையென்றாலும் கட்டுப்படுத்தாமல் உலவ விட்டால் நலம் இவ்வுலகம் இவ்வாறானது ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 07, 2022 22:14

சுபிமல் மிஸ்ரா: அராத்து

சுபிமல் மிஸ்ரா எனக்கு சமீபத்திய அறிமுகம். வங்காள சாரு நிவேதிதா. ஆனால் எனக்கு ஏழு வயதாக இருக்கும்போது நான் இருபத்தேழு வயதில் எழுதியதை எழுதியிருக்கிறார். என்னை விட பத்துப் பன்னிரண்டு வயது பெரியவர். சந்திப்பதற்காக கொல்கொத்தா செல்லலாம் என்று நினைத்தேன். மிகவும் நோய்வாய்ப்பட்டு பேசக் கூட முடியாமல் இருப்பதாக அறிந்தேன். அவருக்குப் பிடித்த எழுத்தாளர்கள் வில்லியம் பர்ரோஸ், கேத்தி ஆக்கர் போன்றோர். என் ஸீரோ டிகிரியை நான் கேத்திக்குத்தான் சமர்ப்பணம் செய்தேன். சுபிமல் பற்றி அராத்து: சாரு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 07, 2022 07:20

என்புதோல் போர்த்த உடம்பு

நகர மாந்தர் பலருக்குப் பூனைகளின் மீதான பரிவு அதிகரித்திருக்கிறது பூனை உணவுக் கடையில் அலைமோதுகிறது கூட்டம் பூனை மலஜலம் கழிப்பதற்கான நறுமண மண் பூனைகள் தள்ளியாடும் பந்து பூனைகள் விளையாடும் (கொல்லவும் முடியாத உயிர்க்கவும் தெரியாத) செயற்கை எலி இந்த எலிக்கு மட்டும் கிராக்கி அதிகம் பூனைகளுக்கான பிரத்யேக பிஸ்கட் பூனை வீடு பூனைக் கூண்டு பூனைக்குப் பிடித்த மீன் உணவிலேயே பத்து ரகம் பதினைந்து விதம் பூனைச் சட்டை பூனைக்கான மணி நான் வாங்கியவற்றுக்குப் பதினேழாயிரம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 07, 2022 00:04

May 6, 2022

easy on me…

Adele எனக்கு மிகப் பிடித்த பாடகி. அடிக்கடி கேட்கும் பாடகி. ஆனால் இவருடைய மிக அதிகமாக விற்றிருக்கும் இந்தப் பாடலை இப்போதுதான் கேட்டேன். உடனடியாக ஒரு கிளாஸ் வைனை அருந்தி விட்டு இந்தப் பாடலுக்கு ஆட வேண்டும் என்று தோன்றுகிறது. எனக்கு cradle of filth குழுவின் hard rock பாடல்களும் பிடிக்கும். இது போன்ற மென்மையான பாடல்களும் பிடிக்கும். நீங்களும் கேட்டு இன்புறலாம். https://www.youtube.com/watch?v=U3ASj...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 06, 2022 03:46

ஜிக்லோ எனும் பசி நாய்

உன்னைப் பற்றி எடுக்க வேண்டும் ஒரு ஆவணப் படம் உன் சுயசரிதம் சொல்லென்றான் நண்பன் சில காலம் நான் ஜிக்லோவாக இருந்தேன் என்று  தொடங்கினேன் ஆனால் நான் ஜிக்லோவாக இருந்தபோது ஜிக்லோ பெயர் தெரியாது ஒரு சமயம் எனக்கொரு மருத்துவனோடு நட்பு ஏற்பட்டது எடுத்த எடுப்பில் தொடையில் கை வைத்தான் அதுவரை நான் ஓரினச் சேர்க்கையாளன் அல்ல என்றாலும் அவன் ஸ்பரிசம் கிளர்ச்சியூட்டியது தொடர்ந்து சிலமுறை ஆடை களைந்து போகம் தரித்தோம் ஒருநாள் அவன் மனைவி மீதான ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 06, 2022 02:00

May 4, 2022

கனவில் ஒரு கவிதை

“நீயும் கனவிலா வர வேண்டும், இதையும் மறந்துவிடுவேனே?” “கவலை கொள்ளாதே, கனவிலும் இருப்பேன், நனவிலும் இருப்பேன்.” ஒவ்வொரு எழுத்தாக வார்த்தையாக வாக்கியமாக அர்த்தமாக படிமமாக எல்லாவற்றையும் எழுதிக் காண்பித்தது. “மேலே கேள் என்ன வேண்டும்?” “கனவு, மறந்து விடும் இல்லையா?” என்று புலம்பினேன் ”இதோ பார், இது கனவல்ல, கனவு போல் தோன்றுகிறது. இதன் பெயர்  நனவு, அவ்வளவுதான் கவலை விடு.” “என்னைப் பற்றி உனக்குத் தெரியாது எனக்கு மறதி அதிகம். நனவில் கனவு மறந்து விடும்.” ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 04, 2022 05:32

May 3, 2022

தனியாக வாழ்தல்…

அவந்திகா ஒரு வாரம் மும்பை செல்கிறாள்.  இதுவரை அவள் எந்தப் பயணமும் செய்ததில்லை.  ஊருக்கும் போனதில்லை.  ஏதாவது ஆன்மீகக் கூட்டம் என்று போனாலும் மறுநாளே வந்து விடுவாள்.  இப்போதுதான் முதல் முறை.  அதனால் எனக்கு வீட்டில் தனியாக வாழ்வது எப்படியிருக்கும் என்று தெரியாது.  வாஷிங் மெஷின் போடுவதற்கு சொல்லிக் கொடு என்றேன்.  உனக்கு வராது, நீ கெடுத்து விடுவாய் என்றாள்.  இதுவரை மாப் போட்டதில்லை.  பணிப்பெண் கிடையாது.  பாத்திரம் தேய்ப்பது சுலபம்.  தினந்தோறுமே 75 சதவிகிதம் நான் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 03, 2022 23:13

பாரிஸும் சீலேயும்…

ஆவணப்படத்துக்கான நிதி திரட்டல் தொடர்பாக இன்னும் ஒரு விஷயம்.  சில ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ராம் என் துருக்கி பயணத்துக்கான மொத்த செலவையும் ஏற்றுக் கொண்டார்.  அதனால்தான் நிலவு தேயாத தேசம் என்ற என் பயணக் கட்டுரை நூல் கிடைத்தது.  அது போல, இப்போதைய சீலே பயணத்துக்கு நீங்கள் பணம் தர முடியாது போனால் சீலேவுக்கான என் டிக்கட் செலவை ஏற்கலாம்.  நானும் இயக்குனரும் செல்வோம்.  சாத்தியம்தான்.  தமிழில் உள்ள எல்லா பதிப்பகங்களும் என் புத்தகத்தை வெளியிட ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 03, 2022 02:43

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.