சாரு நிவேதிதா's Blog, page 164

April 23, 2022

27, சொற்கடிகை பற்றி ஒரு கேள்வி

கார்ல் மார்க்ஸ் ஒரு கேள்வி கேட்டிருந்தார். இத்தாலி இந்தியாவை விட ஏழை நாடு என்று நீங்கள் உண்மையிலேயே நினைக்கிறீர்களா? இதற்கு நான் ஒரு அம்பது பக்கமாவது பதில் எழுத வேண்டும். ஔரங்ஸேபில் மூழ்கிக் கிடக்கிறேன். அப்படி அம்பது பக்க பதிலை எழுதினால் கடைசி வரியாக இத்தாலியை விட இந்தியா ஏழை நாடு என்று முடிப்பேன். இத்தாலியின் ஏழ்மை பற்றி அத்தனை கதைகள் – பஸோலினி காலத்திய கதைகள் அல்ல – இன்றைய கதைகள் – உண்மைக் கதைகள் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 23, 2022 08:32

27. சொற்கடிகை

”நாளை நானே அரசு மீன் கடைக்குச் சென்று நண்டு வாங்கி வரலாம் என்று முடிவெடுத்து விட்டேன்.”  இருபத்தாறாவது அத்தியாயத்தை மேற்கண்டபடி முடித்திருந்தேன்.  எழுதின தினம் ஏப்ரல் 13.  ஆனால் திட்டமிட்டபடி மறுநாள் நண்டு வாங்கப் போகவில்லை.  காலண்டரில் அன்று சிவப்பு மை அடித்திருந்தது.  ஏன் என்று பார்த்தால் சித்திரை ஒன்று.  வருடப் பிறப்பு அன்று எப்படி அசைவம்?  இதோ ஏப்ரல் 23 ஆகி விட்டது.  இன்னும் நண்டு வாங்கப் போகவில்லை.  ஒருநாள் கைமணம் என்ற கடையிலிருந்து வரவழைத்தேன். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 23, 2022 06:28

April 22, 2022

தேவதையும் ரத்தக் காட்டேரியும்

எனக்கொரு வாட்ஸப் சேதி வந்தது ஹாய், நான்தான் உன் பக்கத்து வீட்டுப் பஞ்சவர்ணக் கிளி எப்படி நம்புவது உடனே வந்தது செல்ஃபீ ஒரு சோபாவில் அமர்ந்திருந்தது கிளி என் எஜமானர் வாங்கிக் கொடுத்தார் என்றது அதற்குப் பிறகு வந்தன ஏராளமான வாட்ஸப் சேதிகள் ஒருநாள் குட்மார்னிங் வந்தபோது இனிமேல் இப்படி அனுப்பாதேயென பதில் அனுப்பினேன் இளைய கிளி என்பதால் சர்வ சாதாரணமாகப் பறந்தன சிகப்பு நிற இதயக் குறிகள் வீட்டில் பார்த்தால் ரகளையாகுமே என்று இனிமேல் வேண்டாம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 22, 2022 20:38

சொல்

எறும்பின் காலம் வேறு மனிதனின் காலம் வேறு பட்சிகளின், நட்சத்திரங்களின் காலம் வேறு.இது யார் சொன்னது எனக் கேட்டது பக்கத்து வீட்டுப் பலவர்ணக் கிளி. காலத்தைப் பேசியவரின் பேர் சொன்னேன்அதற்கும் எனக்குமிடையே சொற்களின் வழியே ஒரு சிநேகிதம் மலர்ந்தது வளர்ந்தது மலர்வதற்கு நட்பு என்ன மலரா வளர அதுவொரு கொடியா என்றது பஞ்சவர்ணம் பேரை மாற்றாதே அடையாளமிழந்து என்னால் வாழ முடியாது என்று கத்தியது கிளி  முன்பு வாழ்ந்த பேருக்கு இது பரவாயில்லை எனத் தலையசைத்தது.ஒருநாள் எங்கள் தத்துவ உரையாடலின் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 22, 2022 03:00

April 21, 2022

இன்றைய வெனிஸ் மாநாடு

இன்று வெனிஸில் நடக்க இருக்கும் அறிவியல் – கலை மாநாடு பற்றி நேற்று எழுதியிருந்தேன். இந்தியாவிலிருந்து இரண்டு நரம்பியல் நிபுணர்கள் அங்கே அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயன்ஸில் பணி புரிபவர்கள். இலக்கியத்தில் நான். போயிருக்கலாமோ என்று நேற்றிலிருந்து யோசனை ஓடிக் கொண்டிருக்கிறது. எனக்கு ஸல்மான் ருஷ்டி மீது பெரிய ஆர்வம் இல்லை. ஆனால் அலெக்ஸாந்தர் க்லூஜை சந்தித்து அளவளாவியிருக்கலாம். பரவாயில்லை என்று தேற்றிக் கொண்டேன். ஔரங்ஸேப் முக்கியம். முடிக்க வேண்டும். முடிக்க வேண்டும். முடிக்க வேண்டும். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 21, 2022 21:45

22 ஏப்ரல் வெனிஸில் என் சிறுகதை வாசிப்பு

Fondazione Prada அமைப்பின் ஓவிய – சிற்ப – இலக்கிய விழா நாளை மாலை வெனிஸில் தொடங்குகிறது.  எனக்கு அழைப்பு இருந்தும் ஔரங்ஸேபை முடிக்க வேண்டியிருப்பதால் நான் செல்லவில்லை.  உலகம் முழுவதிலும் இருந்து 32 எழுத்தாளர்கள் இந்த விழாவுக்காகவே எழுதிய புதிய கதைகளை நாளை ஜார்ஜ் கைடால் வாசிக்கிறார்.  இதில் ஹானான் அல்-ஷேக்கின் ஒரு கதையை நான் மொழிபெயர்த்திருக்கிறேன்.  அலெக்ஸாந்தர் க்லூஜ் மிக முக்கியமான எழுத்தாளராக உலகம் முழுதும் அறியப்பட்டவர்.  கண்காட்சி நவம்பர் வரை இருப்பதால் பிறகு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 21, 2022 07:04

April 20, 2022

இன்னொரு கவிதை: மகிழ்ச்சி

நீ நினைப்பதுபோல் நான் மகிழ்ச்சியாக இல்லை என்றாள் மகிழ்ச்சி என்றேன் பிறிதொரு நாள் இவ்வுலகில் நீதானென் ஒரே மகிழ்ச்சி உன்னை ஒருக்கணமும் பிரிந்திருக்க சம்மதியேன் என்றாள் மகிழ்ச்சி என்றேன் இப்போது மகிழ்ச்சி குறித்து நானும் முதல்முறையாக யோசிக்க ஆரம்பித் திருக்கிறேன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 20, 2022 17:53

இளம் காலை நேரத்தில் ஒரு கவிதை: மீனாட்சி எனும் சாதகப் பட்சி

1வருகை________கருப்புத் தோல் பரட்டைத் தலை அழுக்கு வேட்டிவியர்த்த உடல்காலில் செருப்பில்லைஒருகையில் ஜோசியக் கிளிக்கூண்டுஇன்னொரு கையில்இரண்டாக மடித்த பிளாஸ்டிக் விரிப்பு“ஐயாவுக்குத் தான் ஜோசியம் பார்க்கணும்” என்றுஎன்னைக் காட்டிச் சொன்னார் நண்பர்தலைக்கு அம்பது ரூபாய் எனவிலை வைப்பது போல்கட்டணத்தைச் சொன்னவாறே“தாராளமாகப் பார்க்கலாம்” என்றபடிவிரிப்பை விரித்து  அமர்ந்தான் கிளி ஜோசியன் (2)வாக்கு______“அம்மா மீனாட்சி, ஐயாவுக்கு ஒரு சீட்டு எடு”கதவு திறந்து வெளியே வந்துகட்டிலிருந்து ஒரு சீட்டெடுத்துக் கொடுத்தாள் மீனாட்சிஎன்ன படமோ எது பார்த்தானோ“திருஷ்டி இருக்கிறது ஐயா, நிறைய திருஷ்டி இருக்கிறதுஅந்த திருஷ்டியை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 20, 2022 15:54

April 19, 2022

இந்த இளம் காலை நேரத்தில் ஒரு கவிதை: மாடப்புறா சொன்ன கதை

தர்ஹாவின் மாடங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான புறாக்களில் நானும் ஒருத்தி எங்களுக்கு யாரும் பெயரிடுவதில்லை என்றாலும் உங்களுக்கு என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் நிமித்தம் நானே எனக்கொரு பெயர் சூட்டிக் கொண்டேன் பர்வீன் பந்துவில் வரும் ப பயத்தில் வரும் ப அல்ல இதிலொன்றும் எனக்குப் பிரச்சினை இல்லை இதை நான் சொல்லக் கேட்டு எழுதுபவன் ஆட்சேபிக்கலாம் எஜமானின் அருள் நாடி வருவோரும் செல்வோரும் பலருண்டு சிலபேர் இங்கேயே சிலநாள் தங்கிச் செல்வதுமுண்டு குளுந்த மண்டபத்தில் அமர்ந்து தன் கதையை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2022 17:35

April 18, 2022

இன்றைய மூன்றாவது கவிதை: காடு சுடும் மணம்

வீட்டுக்குப் பின்னே சுடுகாடு சிறு வயதில் தெரிந்த மரண மணம்  மழைக் காலத்தில் அதிகமுமுண்டு முதல் மழை விழுந்த மண்  அம்மா சாணி மிதித்து றாட்டி தட்டும் மணம் கண்ணில் விழும் தூசைப் போக்க பக்கத்து வீட்டு அத்தாச்சி பீய்ச்சி அடிக்கும் முலைப்பால்  அத்தையின் வாய்  அம்மாவின் கை  நைனாவின் ரத்தினம் பொடி  கோழிப் பீ தாழம்பூ தைத்த சடை போட்டு வரும் அக்காக்களின் மணம் தர்ஹாவின் கொமஞ்சான்  எஜமானின் அருள்  மனாராக்களில் வாசம் செய்யும் புறாக்களின் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 18, 2022 09:12

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.