சாரு நிவேதிதா's Blog, page 159

June 20, 2022

விக்ரம் – விமர்சனம்

விக்ரம் புத்திஜீவிகளுக்குப் பிடிக்கவில்லை என்று தெரிகிறது.  அவர்களின் எதிர்பார்ப்பு வேறு மாதிரி இருக்கிறது.  வணிக/பொழுதுபோக்கு சினிமா என்றால் ஒரு பாட்ஷா, ஒரு கில்லி மாதிரியாகவாவது இருக்க வேண்டாமா?  ரசிப்பதற்கான நுணுக்கங்கள் – அவை கலாபூர்வமாக இல்லாவிட்டாலும் ஜனரஞ்சகமாகவேனும் – ஒன்றிரண்டு இருக்க வேண்டாமா?  பொழுதுபோக்கு சினிமா என்றால் அது இப்படியா மொண்ணையாகவும், தட்டையாகவும் இருக்க வேண்டும் என்பது அவர்களின் ஆதங்கம். விக்ரம் எனக்குப் பிடித்தது.  எந்த அளவுக்கு என்றால், தமிழர்களுக்கு எந்த அளவு பிடித்ததோ அந்த அளவுக்கு.  ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 20, 2022 06:15

June 18, 2022

முதல் நாள் அனுபவம்

இந்திய நகரங்களிலேயே ஆகக் கொடூரமானது சென்னை.  இந்த நகரத்துக்கு வந்து இதையே தங்கள் வாழ்விடமாகக் கொண்ட எழுத்தாளர்கள் பலர் சென்னையை ஆகா ஓகோ என்று புகழ்ந்து எழுதுவதைக் கண்டு அவர்கள் மீது இரக்கம் கொண்டிருக்கிறேன். எல்லா வகையிலுமே ஆக மோசமான விஷயங்களையும் கலாச்சாரத்தையும் கொண்ட நகரம் சென்னை. இன்று காலை அவந்திகா மும்பை சென்றதும் வீட்டுக்கு வந்தேன்.  வீட்டில் தனியாக இருப்பது புதிய அனுபவம்.  அதிலும் பணிப்பெண்கள் வீட்டு வேலையை முடித்து விட்டால் நான் பாட்டுக்கு எழுத்து வேலையைப் பார்க்கலாம்.  நண்பர்கள் யாரும் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 18, 2022 03:04

June 17, 2022

the outsider – 6 (moth to a flame)

ஸ்வீடிஷ் ஹவுஸ் மாஃபியா எனக்கு மிகவும் பிடித்த பாப் இசைக்குழு. அவர்கள் தெ வீக் எண்டுடன் சேர்ந்து உருவாக்கிய பாடல் moth to a flame. இதன் காட்சிகள் மிக அற்புதமானவை. பெர்ஃப்யூம்: கொலைகாரனின் கதை என்ற படத்தின் கடைசிக் காட்சியில் வருவதைப் போன்ற நிர்வாண மனித உடல்கள் இப்பாடலின் சிறப்பு அம்சம். இப்பாடலை நம் ஆவணப் படக் குழுவினரின் பார்வைக்குக் கொண்டு வருகிறேன். ஒளிப்பதிவின் உச்சபட்சங்களில் ஒன்று இது. இந்த அளவுக்கு செய்ய நம்மிடம் சாதனங்கள் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 17, 2022 04:22

புதிய அனுபவம்

என் வீட்டில் இதுவரை நான் தனியாகவே இருந்ததில்லை. காரணம், முப்பது ஆண்டுகளாக அவந்திகா வெளியூர் சென்றதில்லை. சென்ற மாதம் ஒரு வாரம் அவள் மும்பை சென்ற போது எனக்குக் கிடைக்கும் தனிமை சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். அப்படி இல்லை. காரணம், என்னை நம்பி வாழும் பத்து பூனைகள். பூனை சேவையிலேயே ஒரு வாரமும் போய் விட்டது. பணிப்பெண்ணும் இல்லாததால் முழு நேரமும் வேலை. ஆனால் இந்த முறை அவந்திகா மும்பை செல்லும் போது இரண்டு பணிப்பெண்கள் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 17, 2022 00:17

June 16, 2022

the outsider – 5

லத்தீன் அமெரிக்க சினிமா என்ற தலைப்பில் 1980 வாக்கில் நான் ஒரு புத்தகம் எழுதினேன்.  அதில் உள்ள படங்கள் இந்தியாவில் சினிமாவைக் கற்பிக்கும் கல்வி நிலையங்களிலேயே கூட பேசப்பட்டதில்லை.  பார்க்கப்பட்டதும் இல்லை.  அந்த சினிமாவையெல்லாம் பார்த்திருக்கக் கூடிய இன்னொருவர் கமல். (அப்படிப்பட்டவர் விக்ரமாக மாறியது தமிழ்நாட்டின் விபரீத விசித்திரங்களில் ஒன்று!!!) மற்றபடி இந்தியாவில் க்ளாபர் ரோச்சாவின் (Glauber Rocha) பெயரைக் கூட யாரும் கேள்விப்பட்டிருக்கக் கூடிய வாய்ப்பு இல்லை.  நான் எழுதியது 1980இல்.  க்ளாபர் ரோச்சாவின் சினிமா ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 16, 2022 02:18

June 15, 2022

வெட்டிக் கதை (சிறுகதை): அராத்து: என்னுடைய பின்னுரையுடன்…

நேற்று ஹைதராபாத்துக்கு ரயிலில் வந்தேன். நம்பிள்கு சைட் லோயர். பொழுது போகாமல் அங்கிருந்து தான் விக்ரம் அடித்தேன். பொன்னுமணி சவுந்தர்யா போல ஒரு நங்கை. பார்த்தவுடன் ஆந்திரா என தெரியும் படி வனப்பு. அன்னார் தன்னுடைய மாமியார் உடன் வந்திருந்தார். சௌந்தர்யா அவ்வப்போது என்னுடன் பேச முற்படுவதாக எனக்கு ஒரு பிரமை. அந்தக்கால ஐஸ்வர்யா ராயே என்னுடன் பேச முற்பட்டாலும் ரயிலில் லோயர் பர்த்தில் நான் இருந்தால் கண்டு கொள்ள மாட்டேன். அப்பர் பர்த்துக்கு மாறச் சொல்லுவார்கள். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 15, 2022 08:10

June 14, 2022

the outsider – 4

இந்த ஜூன் தொடக்கத்திலிருந்தே நம் இணைய தளத்தில் எதுவும் எழுதவில்லை.  காரணம், ஆவணப் படத்தின் படப்பிடிப்பு.  இரண்டு ஷெட்யூல்கள் முடிந்தன.  முதல் ஷெட்யூல் சென்னை.  இரண்டாவது ஷெட்யூல் நாகூர், தஞ்சாவூர்.  நாகூர் நான்கு நாட்கள்.  தஞ்சாவூர் ஒருநாள்.  முதல் ஷெட்யூல் ரஷ் நான்கு மணி நேரம்.  அதைத் தமிழ் சினிமாவின் லெஜண்ட் ஒருவர் நேற்று பார்த்தார்.  நான் செல்ல முடியவில்லை.  நாகூரிலும் – குறிப்பாக தஞ்சாவூரிலும் கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பு நடந்ததால் வேர்த்துக் கொட்டி வேர்த்துக் கொட்டி ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 14, 2022 22:16

June 13, 2022

விக்ரம் : அராத்து

விக்ரம் இந்தப் பதிவு முதன்மையாக விக்ரம் படம் பற்றிய விமர்சனம் அல்ல. ஏனென்றால் , இந்தப் படத்தை விமர்சிக்கப் பெரிதாக ஒன்றுமில்லை. இவ்வளவு ஒழுங்கீனமாக எடுக்கப்பட்ட படத்தை நான் சமீபத்தில் பார்த்த நினைவில்லை. தோன்றியதை எல்லாம் இஷ்டத்துக்கு அடித்து விட்டிருக்கிறார்கள். கதையில் , திரைக்கதையில் , காட்சிகளில் ஒரு தெளிவும் இல்லை. இது கிடக்கட்டும் , இந்தப் படம் எப்படி கமல் வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு இமாலய வெற்றி பெற்றது என்பதை புரிந்து கொள்ள முயல்கிறேன். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 13, 2022 18:08

June 4, 2022

June 2, 2022

க்ளப் ஹவுஸ் கதை நேரத்தில் என் வாசிப்பு

ஃபாத்திமா பாபு கடந்த 298 நாட்களாகத் தொடர்ந்து க்ளப் ஹவுஸில் தமிழ்ச் சிறுகதைகளை வாசித்து வருகிறார். சாதனை என்ற சொல்லெல்லாம் சாதாரணம். அசாத்தியமான விஷயம். நாளை மறுநாள் சனிக்கிழமை 300ஆவது நாள். அந்த நாளைக் கொண்டாடும் விதத்தில் ”உங்கள் கதையை நீங்களே படித்தால் என்ன?” என்று கேட்டார். அது அவரது பெருந்தன்மையும் அன்பும். கரும்பு தின்னக் கூலியா? விரைவில் வெளிவர இருக்கும் நான்தான் ஔரங்ஸேப் நாவலில் பாபரின் பேருரை ஒன்று வருகிறது. அதைப் படிக்கலாம் என்று முடிவு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 02, 2022 06:58

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.