சாரு நிவேதிதா's Blog, page 165

April 17, 2022

இன்றைய இரண்டாவது கவிதை: காற்றிலாவது…

காற்றிலாவது… அவளுக்குப் பதினாறு வயது பேரழகு என்று நீங்கள் எதைச் சொல்வீர்களோ அதையெல்லாம் மீறிய அழகு ஒருநாள்  கைகாலை அசைக்க முடியவில்லை பேச முடியவில்லை சப்தநாடியும் செயலிழந்து போனது LGMD என்றார் மருத்துவர் இனிமேல் அந்தப் பெண்ணுக்கு ஆட்டமில்லை  ஓட்டமில்லை பௌதிக இயக்கமில்லை  துன்ப சாகரத்தில் வீழ்ந்தது  குடும்பம் வாழ்க்கை அபத்தமென்றார் நண்பர் ஜோ எல்லாம் கர்மா என்றாள் மூதாட்டி இன்று எனக்கொரு  ஜனன செய்தி வந்த போது எதுவொன்றும் சொல்லத் தோணாமல் விக்கித்து நின்றேன் தாள ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 17, 2022 23:41

லும்ப்பன் சூழ் உலகு

பபத்தாண்டுகளாகப் பேட்டியே கொடுத்ததில்லையாம் இப்போதுதான் கொடுத்த்திருக்கிறான் இந்த  நடிகனின் பேட்டியைக் கேளென்றான் நண்பன் பிரபல நடிகன்  பிரபலத் தொலைக்காட்சி மூணே நாளில் நூறு லட்சத்தைத் தாண்டிய பார்வையாளர்கள் ‘சீறும் பாம்பை நம்பலாம் சிரிக்கும் பெண்ணை நம்பாதே’ என்ற வாசகத்தை மூணு சக்கர  வாகனத்தில் எழுதிச் செல்லும் ஒருவனிடம் ரூபாய் ஆயிரம் பத்தாயிரம் கோடி கிடைத்தால் என்ன ஆவான் அவன்? திக்கினான் திணறினான் உளறினான் நெளிந்தான் தலையில் நூறு கிலோ புகழ் மூட்டை கூடவே ஆணவமும் அகங்காரமும் பிதுங்கித் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 17, 2022 21:52

விபரீதம்

எனக்குப் பிடித்த நாவல் புயலிலே ஒரு தோணி என்கிறார் நடிகர் விஜய் மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டுகிறார்கள் சென்னையில் முதலமைச்சர் தன் வீட்டிலிருந்து தன்னுடைய காரைத் தானே ஓட்டிக் கொண்டு தலைமைச் செயலகம் செல்கிறார் நாலு காலில் தவழ்ந்து சென்று தன் தலைவியை நமஸ்கரித்த முன்னாள் மந்திரி தலைவியின் பெயர் சொல்லி அழைக்கிறார் மற்றவர்கள் பேசுவதைக் கூர்ந்து கேட்கிறார் கமல்ஹாசன் இலக்கிய நூல்களின் விற்பனை ஒரு கோடியைத் தாண்டுகிறது பிரபலத் தமிழ் எழுத்தாளனிடம் அப்பாய்ண்ட்மெண்ட் கேட்டு ஆறு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 17, 2022 01:31

April 16, 2022

எழுத்தாளனும் சமூகமும்…

எழுத்தாளர்கள் கொண்டாடப்படவில்லை என்று நான் அடிக்கடி எழுதுவதைக் கண்டு பலரும் சந்தேகம் கொள்கிறார்கள், முகம் சுளிக்கிறார்கள், சிலர் கோபப்படுகிறார்கள். சிலருக்கு உண்மையிலேயே புரியவில்லை. இதை விடவும் எழுத்தாளனை ஒரு சமூகம் எப்படிக் கொண்டாட முடியும் என்பது அவர்களின் கேள்வி. ஒரே ஒரு உதாரணம் தருகிறேன். இன்னமும் ஒரு சினிமாக்காரரை ஒரு எழுத்தாளன் சந்திக்க வேண்டும் என்றால் – வசனம் எழுதுவதற்காக அல்ல – சாதாரணமாக ஒருவரை ஒருவர் நட்பு ரீதியாக சந்திப்பதைச் சொல்கிறேன் – எழுத்தாளன்தான் நடிகரையோ ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 16, 2022 18:10

April 15, 2022

இலக்கியமும் சினிமாவும்…

தளவாய் சுந்தரம் என் நீண்ட கால நண்பர்.  மிக நீண்ட காலம்.  என்னுடைய ராஸ லீலா நாவலில் ஒரு அத்தியாயத்தில் அவர் இடம் பெறுகிறார்.  அவர் பணி புரியும் வாவ் தமிழா இணைய இதழுக்கு நான் அளித்த பேட்டியின் பதிவை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இந்தப் பேட்டியைக் கண்டதும் ஒரு முடிவு எடுத்தேன்.  இனிமேல் எந்தப் பத்திரிகைக்கும் பேட்டி அளிக்கும் போது சினிமா பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்வதில்லை.  அது இப்போது எடுத்த முடிவு.  முடிவு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 15, 2022 22:14

அன்பும் அடக்கமும்…

இப்படி ஒரு தலைப்பில் நான் ஒரு குறிப்பு எழுதுவேன் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. அந்த அளவுக்குத் தேய்வழக்காகி விட்ட சொற்கள் அவை. ஃபேஸ்புக்கில் நண்பர் அய்யனார் விஸ்வநாத் ஒரு பிரபல இசையமைப்பாளரையும் ஏ.ஆர். ரஹ்மானையும் ஒப்பிட்டு, ரஹ்மானின் மார்க்கெட்டிங் பற்றிப் புகழ்ந்திருந்தார். இப்போது ரஹ்மான் இருக்கும் இடத்துக்கு அவரது மார்க்கெட்டிங் முக்கியக் காரணம் என்பது நண்பரின் கருத்து. கே.ஏ. குணசேகரன் சம்பந்தப்பட்ட இசையமைப்பாளரைப் புகழ்ந்து – கிட்டத்தட்ட கடவுள் ரேஞ்ஜுக்கு – ஒரு புத்தகம் எழுதினார். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 15, 2022 17:44

லும்பன் சூழ் உலகு: அராத்து

பீஸ்ட் பற்றிய பதிவில் லும்பன் என ஒரு வார்த்தையை குறிப்பிட்டு இருந்தேன். ஜகன் வெங்கடேஷ் என்ற நண்பர் ஒரு கமெண்ட் இட்டு இருந்தார். அவர் கமெண்ட் :- அது லும்பன் இல்லை “லம்பென்”lumpenproletariat – மார்க்சிய சிந்தனையில் மிகவும் இழிவான சொற்களில் ஒன்றாகும். மீதி கூகுள் …இந்த தமிழ் எழுத்தாளர்களால் (அதாவது தமிழ்ல எழுதறவங்க இலக்கியவாதியில்லை )நாம படற கஷ்டம் இருக்கே ஊபருக்கு பதிலா உபேர்னு கத்துகொடுப்பாய்ங்க..நாம அசிங்கப்பட்டு கஷ்டப்பட்டு அவமானப்பட்டு அத மாத்திக்கனும்அய்யா அந்த audio ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 15, 2022 17:18

April 14, 2022

தாசியின் வீடு

கேள்விகள் என்னைத் திக்பிரமை கொள்ளச் செய்கின்றன கேள்விகள் என்னைத் திணற  அடிக்கின்றன கேள்விகள் என்னை மூச்சு முட்ட வைக்கின்றன கேள்விகள் என்னை அச்சுறுத்துகின்றன காரணமென்னவென்று அந்தப் பக்கமாக  வந்த ஒரு அணுக்க தெய்வத்திடம் கேட்டேன் கேள்விகளின் கதவுகள் மூடியிருக்கின்றன உன்னுடைய உண்மை கேள்விகளின் கோட்டைக் கதவுகளைத்  திறக்க முடியாமல் வழுவற்று வீழும்போது திக்கித் திணறி ஒரு பொய்யைச் சொல்கிறாய் அவ்விதமாகத்தான் சிருஷ்டித்திருக்கிறான் படைத்தவன் விசனப்படாதே சிருஷ்டியை உன் தர்க்கம் கொண்டு புரிந்து கொள்வது கடினம்  என்றபடியே பக்கத்திலிருந்த ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 14, 2022 04:18

April 13, 2022

எத்தனை நாள் கிடந்த வாழ்வு

கவிதை என்னைத் தேடி வரவில்லை நானும்  தேடிப் போகவில்லை ஆனாலும் எப்படியோ சந்தித்துக் கொண்டோம் தாமதம்தான் சற்றுமுன் நடந்திருக்கலாம் எல்லாமே கொஞ்சம் முன்னால் நடந்திருக்கலாம்தான் உன் காயங்களுக்கு மருந்திடுவதற்காகவே வந்தேன் என்றது கவிதை என்ன காயமோ என்ன மருந்தோ பசித்த ஒரு நாயின் அழுகுரல் என் அமைதியைத் துளைக்க இறைச்சித் துண்டுகளை எடுத்துக் கொண்டு குரல் வந்த திசை நோக்கிச் சென்றேன் ஒரு துணுக்கைக் கூட விடாமல் விழுங்கியது நாய் எத்தனை நாள்  நொந்த பசி எத்தனை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 13, 2022 09:21

சொற்கடிகை : 26. நண்டுக் குழம்பு

சுமார் ஆறு வயதிலிருந்து நண்டுக் குழம்புக்கும் எனக்குமான உறவு தொடங்குகிறது.  அசைவத்திலேயே எனக்கு ஆகப் பிடித்தது நண்டுக் குழம்புதான்.  நண்டு வறுவலை விட குழம்புதான் இஷ்டம்.  எல்லாவற்றிலுமே அப்படித்தான்.  உருளைக் கிழங்கு போன்ற ஒன்றிரண்டு ஐட்டங்கள் மட்டுமே வறுவல் பிடிக்கும்.  மற்றபடி எல்லாம் குழம்புதான்.  கொரோனா காலகட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக நண்டு சாப்பிடாமல் ஏக்கமாகப் போய் விட்டதால் அவந்திகா போரூர் ஏரியில் பிடித்த பெரிய உயிர் நண்டுகளை ஒரு நண்பர் மூலமாக வாங்கி வரச் சொல்லி, அந்த ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 13, 2022 07:11

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.