சாரு நிவேதிதா's Blog, page 169
April 2, 2022
ஔரங்ஸேபும் டால்ஸ்டாயும்
அன்புள்ள சாரு… ஒரு கூர்மையான வாசகன் “கூடு விட்டுக் கூடு பாய்தல்” என்பதை உங்கள் எழுத்துகளில் பல இடங்களில் காண முடியும் என்றாலும் 106ஆவது அத்தியாயத்தை கண்டிப்பாக சாரு எழுதும் வாய்ப்பு கிடையாது. கடித உதாரணமாக சாருவாகிய நீங்கள் இலக்கிய கடிதங்கள் எத்தனையோ கொடுத்திருக்க முடியும் Letter to a Hindu என்ற டால்ஸ்டாய் கடிதத்தை அந்த இடத்தில் ஒளரங்ஸேப் மட்டுமே நினைவுகூர்ந்திருக்க முடியும் அந்தக் கடிதத்தைப் பெற்ற தாரக் நாத் தாஸ் மிகப் பெரிய வங்காள ... Read more
Published on April 02, 2022 08:58
April 1, 2022
ஒரு நேர்காணல்
ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில் ஓடுபவர்களின் வேகத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். மின்னஞ்சல்களுக்கு பதில் கூட எழுதவில்லை. ஔரங்ஸேப் சம்பந்தமாக ஒரு அவசர வேலை. ஆனாலும் வாசகசாலை நண்பர்கள் நேர்காணல் என்று அழைத்ததால் போய் விட்டேன். ஆறு மணிக்குத்தான் நேர்காணல் என்றாலும் பன்னிரண்டுக்கே அண்ணா நகர் கிளம்பி விட்டேன். மதிய உணவை ராம்ஜி பட்டியாலா ஹவுஸில் வாங்கிக் கொடுத்தார். நான் பஞ்சாபி உணவின் தீவிர விசிறி. சாப்பாடு பிரமாதமாக இருந்தது. நேர்காணலுக்கு நிறைய நேரம் இருந்ததால் கிங் ரிச்சர்ட் ... Read more
Published on April 01, 2022 22:59
March 31, 2022
ஔரங்ஸேப் – ஓர் அறிமுகம்
நான்தான் ஔரங்ஸேப்.,. நாவலை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன். அது ஒரு பெரும்பணி. இன்னும் கொஞ்சம் எழுதிச் சேர்க்கிறேன். நிச்சயமாக இது பிஞ்ஜில் வந்ததை விட வேறு விதமாக இருக்கும். அடிப்படை அமைப்பு மாறாது. எக்ஸைல் முன்பு 350 பக்கமாகவும், பிறகு 1000 பக்கமாகவும் விரிந்தது போல. இதெல்லாம் திட்டமிட்டுச் செய்ததல்ல. அரபி, அறபி – எப்படி எழுதுவது என்று கொள்ளு நதீமிடம் கேட்டேன். அதேபோல், Master of the Jinn என்ற நாவலை ஆங்கிலத்திலும் கூடவே தமிழிலும் படித்துக் ... Read more
Published on March 31, 2022 04:01
March 30, 2022
25 விருப்பக் குறிகள் (சிறுகதை)
மேற்கத்திய எழுத்தாளர்களை எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, மாரியோ பர்கஸ் யோசா. சுமார் 25 நாவல்கள் எழுதியிருப்பார். அதில் பதினஞ்சு நாவல்கள் ஆயிரம் பக்கம் இருக்கும். என்ன ஆச்சரியகரமான விஷயம் என்றால், அந்த இருபத்தஞ்சையும் ஒரே ஆள்தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பார். அப்படியானால் அவர் தன் வாழ்க்கையையே யோசாவுக்காக அர்ப்பணித்திருக்க வேண்டும். இதைப் போலவேதான் காப்ரியல் கார்ஸியா மார்க்கேஸ், போர்ஹெஸ் என்று எல்லோரும். ஒரே ஒரு ஆள்தான் மொழிபெயர்ப்பாளர். ஒரு ஆள் ஒரு எழுத்தாளருக்கு. வாழ்நாள் பூராவும். இது ஏன் ... Read more
Published on March 30, 2022 18:13
March 29, 2022
முதல் நூறு 17: நிழல் உலக அனுபவங்கள்
17. அன்பான சாரு, நான் அரசு வேலையில் இருக்கிறேன். பத்து நாட்களுக்கு முன்பு எந்தத் தவறும் செய்யாத என்னிடம் ஒரு மேல் அதிகாரி ஏதோ ஒரு கோபத்தினால் நான் கொண்டு போன கோப்பினை என் முகத்தில் விட்டெறிந்தார். கோபமும், அழுகையுமாக வந்தது. என்னதான் சுமரியாதை இருந்தாலும் பணிக்கு ஆபத்தோ, பணியிடை மாறுதலோ வந்துவிடக் கூடாதென்று பல்லைக் கடித்துக்கொண்டு அறையை விட்டு வந்துவிட்டேன். இதையெல்லாம் தாண்டி எப்படி பக்குவமாக, நிதானமாக, மகிழ்ச்சியாக வாழ்வது? ப்ரியா பதில்: இந்தக் காலத்திலும் ... Read more
Published on March 29, 2022 10:00
March 28, 2022
ஒரு இலக்கியத் திருட்டு
நான் இருபது ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்த கருத்துகளைத் திருடி கவிதை எழுதி விட்டார் ஒரு கவிஞர். ஸ்பானிஷ் கவிஞரான அவருக்கு தமிழ் எப்படித் தெரியும் என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது. என்னுடைய அந்தக் கட்டுரை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்படவில்லை. இருந்தும் எப்படி இந்த இலக்கியத் திருட்டு நடந்தது என்று தெரியவில்லை. வன்மையாகக் கண்டிக்கிறேன். இதை என் கவனத்துக்குக் கொண்டு வந்த ஸ்ரீராமுக்கு நன்றி. என்னிடமிருந்து திருடியவர் பெயர் நிகானோர் பார்ரா. கீழே கவிதை: I’m Not a ... Read more
Published on March 28, 2022 23:41
காட்டுமிராண்டிகளின் சமூகம்
வில் ஸ்மித் என்ற நடிகரின் மனைவியை ஆஸ்கர் மேடையில் ஒரு காமெடி நடிகர் bodyshame பண்ணி விட்டார். அதற்கு எதிர்வினையாக வில் ஸ்மித் அந்தக் காமெடி நடிகரை மேடைக்குப் போய் கன்னத்தில் பளார் என்று அறைந்தார். காணொலியைப் பார்த்தேன். பளார் என்றுதான் அறைந்தார். இந்தச் சம்பவம் குறித்து தமிழகத்தின் புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் அத்தனை பேரும் வில் ஸ்மித்தைப் பாராட்டி எழுதிக் குவிக்கிறார்கள். உலகெங்கிலும் ஒடுக்கப்படும் இனம் என்று பார்த்தால் பெண்களும் அதில் உண்டு. பெண்களை விட ... Read more
Published on March 28, 2022 22:31
March 27, 2022
கேள்வி 100: 16ஆவது கேள்வி. நேரில் சந்திக்க இயலுமா?
16. வணக்கம், நான் நேசராஜ் செல்வம். ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியன். உங்களுடன் CPMG அலுவலகத்தில் பணியாற்றி இருக்கிறேன். தற்போது ஓய்வூதியம் மட்டுமே பெற்று வருகிறேன். நான் உங்களுக்கு என்னால் இயன்ற போது பணம் அனுப்ப விரும்புகிறேன்.உங்களது நிபந்தனைகள் கடுமையாக இருப்பதால் ஓய்வூதியம் பெறும் நான் பண உதவி செய்ய தடையேதும் உளதோ என தெரிவியுங்கள். மேலும் தற்போது நான் கிருஷ்ணகிரி நகரில் வாசம். பெரும்பாலான உங்கள் நூல்களை வாங்கிப் படித்துள்ளேன். ஔரங்ஸேப் பற்றி சொல்ல வார்த்தைகள் ... Read more
Published on March 27, 2022 22:12
எவ்வளவோ எழுதியிருக்க வேண்டியவர்…
அமிர்தம் சூர்யா என் மீது அன்பு மிகக் கொண்டவர். என் இளவல். அதை விட முக்கியமாக, என்னைப் போலவே அல்லது அதை விட அதிகமாகவே வெகுளி. சமீபத்தில் அவர் இப்படி எழுதியிருந்தார். ”சாரு நிவேதிதாவின் எழுத்தாற்றலை புகழ்ந்து இன்னும் எவ்வளவோ எழுதியிருக்க வேண்டியவர் என்று ஆதங்கம்.காட்டினார்…” சூர்யா ஒரு நண்பரைச் சந்திக்கிறார். இலக்கியவாதிகளின் சந்திப்பில் எத்தனையோ பேசுவோம். அதையெல்லாம் நாம் நம்முடைய சொந்தக் கருத்தாக வெளியே முன்வைப்போம் என்று சொல்வதற்கு இல்லை. பல விஷயங்கள், பல அபிப்பிராயங்கள் ... Read more
Published on March 27, 2022 02:51
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

