ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில் ஓடுபவர்களின் வேகத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். மின்னஞ்சல்களுக்கு பதில் கூட எழுதவில்லை. ஔரங்ஸேப் சம்பந்தமாக ஒரு அவசர வேலை. ஆனாலும் வாசகசாலை நண்பர்கள் நேர்காணல் என்று அழைத்ததால் போய் விட்டேன். ஆறு மணிக்குத்தான் நேர்காணல் என்றாலும் பன்னிரண்டுக்கே அண்ணா நகர் கிளம்பி விட்டேன். மதிய உணவை ராம்ஜி பட்டியாலா ஹவுஸில் வாங்கிக் கொடுத்தார். நான் பஞ்சாபி உணவின் தீவிர விசிறி. சாப்பாடு பிரமாதமாக இருந்தது. நேர்காணலுக்கு நிறைய நேரம் இருந்ததால் கிங் ரிச்சர்ட் ...
Read more
Published on April 01, 2022 22:59