சாரு நிவேதிதா's Blog, page 166
April 12, 2022
இன்றைய கவிதை: கனவில் வந்த பிள்ளையார் எறும்பு
சொன்னால் நம்ப மாட்டாய்நேற்று நீயென் கனவில் வந்தாய்இதோ இப்போதென் முன்னே தோன்றுகிறாய்கனவில் வருவதற்கு முன்உன்னைப் பற்றியெனக்குஎதுவுமே தெரியாதுகேள்விப்பட்டதோடு சரிதற்செயல் நிகழ்வாயிருக்க சாத்தியமில்லைகனவில் எத்தனையோ வரும் போகும்ஒரு பிள்ளையார் எறும்பு வருமாஅப்படியே வந்தாலும் மறுநாளேநேரில் தோன்றுமாஅதை விடுநீ வெகுவேகமாய் எங்கோ செல்கிறாய்சற்றே கொஞ்சம் நின்று என்னுடன் சௌக்கியம் பேசு என்ன அதிசயம் என்றால்உன் கூட்டாளிகள் இல்லாமல் தனியாகச் செல்கிறாய் இப்போது உன்னைப் பார்க்கும்போதுஎன் வாழ்நாள் பூராவும் நீஎன்னோடு இருந்திருக்கிறாய் என்பதைப் புரிந்து கொண்டேன்இருந்தும் இல்லாதிருந்திருக்கிறாய்அதனாலேதான் கனவில் தோன்றினாய் உன் ... Read more
Published on April 12, 2022 23:17
ஔரங்ஸேப் 100 விழா பேருரை பற்றி நிர்மல்
அதிகாரம் குறித்தும், அதைப் புரிந்து கொள்வதிலும், அதிலிருந்து எப்படி தப்பிக்க என்பது போன்றவற்றைக் குறித்து இங்கு பேசப்படும் பல செய்திகளுக்கு முற்றிலும் மாறுபாடான கருத்தைக் கொண்டிருப்பவர் சாரு. இன்னும் சொல்லப் போனால் அதிகாரம் குறித்து மிக நுணுக்கமாக, மைக்ரோ லெவலில் உள் மனதளவில் உரையாடுவது சாருவின் எழுத்துக்களில் ஒரு அங்கம். எல்லோரும் அதிகாரத்தை எதிர்த்து போராடுவோம் என்று சொன்னால், அது ஏதோ ஒரு அரசியல் அல்லது பொருளாதார அரசியல் அதிகாரத்திற்கு எதிரான போராட்டம் என எடுத்துக் கொள்வோம். சாரு ... Read more
Published on April 12, 2022 06:16
புரவி – கலை இலக்கிய மாத இதழ்
என் நண்பர்கள் கார்த்திகேயன் – அருண் இருவரும் வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் வாசகசாலை அமைப்பின் சார்பாக மேலும் ஒரு செயல்பாடு புரவி கலை இலக்கிய மாத இதழ். அச்சு இதழ்களெல்லாம் இணையத்துக்கு மாறிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்திலும் அச்சு இதழாக – அதிலும் மாத இதழாகக் கொண்டு வருவதற்குப் பெரும் துணிச்சல் வேண்டும். கார்த்திகேயனைக் கேட்ட போது தான் பார்த்து வந்த வேலையைக் கூட இதன் பொருட்டு விட்டு விட்டதாகச் சொன்னார். இவர்களைத் தமிழ் இலக்கிய வாசகர்களும் ... Read more
Published on April 12, 2022 06:00
April 11, 2022
ஒண்ணு ரெண்டு மூணு… இருபத்து மூணு
ஒண்ணு ரெண்டு மூணு என்ற பதிவின் தொடர்ச்சி இது. இன்னும் ஒரு மாத காலத்துக்கு என் வாழ்வில் எப்போதும் இருந்து வரும் ஒழுங்கு இருக்காது. உதாரணம் சொல்ல வேண்டுமானால், எப்போதும் போன் வந்தால் எடுத்து விடுவேன். எடுக்க முடியாவிட்டாலும் ஒரு மணி நேரத்தில் திரும்ப அழைத்து விடுவேன். அம்மாதிரி தினப்படி ஒழுங்கு ஒரு மாதம் இருக்காது. ஔரங்ஸேப் நாவலை பதிப்பகத்திடம் கொடுக்க வேண்டும். இப்போதைய வேகத்தில் செய்தால் பதிப்பகத்திடம் கொடுக்க ஒன்றரை ஆண்டு ஆகும் என்பது எனக்கு ... Read more
Published on April 11, 2022 22:57
இரண்டாம் கடவுள்
பற்றை விடு விடுதலை பெறு ததாகதர் கண்ட ஞானம் தேன்சிட்டு சொன்னது ஒரு ஞானம் யாரும் யாரையும் முழுமை செய்ய முடியாது என் பங்குக்கு நானுமொரு ஞானம் சொன்னேன் என் ஆவியை வார்த்தையாக்கித் தருகிறேன் இலக்கியத் திருட்டு என்றது தேன் சிட்டு விவிலியத்தின் நீதிமொழிகளில் சொல்லப்பட்டிருக்கிறதாம் அப்படியானால் நான் இரண்டாம் கடவுள் என்றேன்
Published on April 11, 2022 21:37
April 10, 2022
சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியின் ஒரு கவிதை
தமிழ்நாட்டில் வசிப்பதாலும் நான் பிரபலமாகித் தொலைந்து விட்டதாலும் அடக்கி வாசிக்கிறேன். சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியின் பின்வரும் கவிதையைப் பாருங்கள். தமிழ்நாட்டில் இப்போது எங்கு பார்த்தாலும் ப்யூகோவ்ஸ்கி ப்யூகோவ்ஸ்கி என்கிறார்கள். நான் இப்படி ஒரு கவிதை எழுதினால் என் பேரைச் சொல்வார்களா? கவிதைத் தலைப்பு Fuck Fuck she pulled her dress off over her head and I saw the panties indented somewhat into the crotch. it’s only human. now we’ve ... Read more
Published on April 10, 2022 17:00
நீண்ட நாள் தோழியின் இறுதி சந்திப்பு
அன்றைய தினம் Ten Downing பப்பில் சந்திக்கலாம் என்று திட்டம் மினி ஸ்கர்ட் அணிந்திருந்தாள் எட்டு மணியிலிருந்து ஒன்பதுக்குள் நாலு ரவுண்ட் அடித்தாள் நான் அப்போது குடிப்பதை நிறுத்தியிருந்ததால் கோக் குடித்தேன் ஆடலாமா என்றாள் கோக் குடித்து விட்டு ஆட உற்சாகமாக இல்லையென்றாலும் அவள் சுழன்று சுழன்று ஆடினாள் என்னைத் தவிர அத்தனை பேரும் இளைஞர்கள் என்பதை கவனித்தேன் புரிந்து கொண்டாற்போல் ’இளைஞர்கள் அலுப்பூட்டுகிறார்கள்’ என்றாள் சிரித்து வைத்தேன் எங்கிருந்தோ வந்த பத்திரிகையாளன் ஒரு புகைப்படம் எடுத்துக் ... Read more
Published on April 10, 2022 16:44
சூர்யதாரையை விழுங்கியவனைப் பற்றிய குறிப்பு
சூர்ய தாரையின் ஒரு துளியை ருசித்து விழுங்கினேன் அதன் பிறகு நடந்ததோர் அதிசயம் நினைத்த நேரத்தில் பறக்க முடிந்தது நினைத்த நேரத்தில் தேவர்களுடனும் கடவுள்களுடனும் தீர்க்கதரிசிகளுடனும் பேய் பிசாசுகளுடனும் பேச முடிந்தது பெண்கள் என்ன நினைக்கிறார்களென புரிந்து கொள்ள முடிந்தது மிருகங்களோடும் உறவாட முடிந்தது பசி மறந்தது உறக்கம் தொலைந்தது துக்கம் சந்தோஷம் கண்ணீர் சிரிப்பு மரணம் ஜனனம் விருப்பு வெறுப்பு வலி சுகம் இன்பம் துன்பம் நல்லது கெட்டது மலம் மூத்திரம் சந்தனம் பன்னீர் தென்றல் ... Read more
Published on April 10, 2022 02:59
April 9, 2022
ப்யூகோவ்ஸ்கியின் கவிதை வாசிப்பு
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியின் கவிதையை அறிமுகப்படுத்தினான் நண்பன் அப்படி ஒன்றும் பெரிதாக ஈர்க்கவில்லை ஆனாலும் அவனிடம் ஒரு வசீகரம் இருந்ததை உணர்ந்தேன் அவன் முகமே ஒரு வசீகரம் அவன் குடி ஒரு வசீகரம் ப்யூகோவ்ஸ்கியின் கவிதை வாசிப்பு என்றால் மேடையில் ஒரு கலயம் இருக்க வேண்டும் அதி குடியால் வாந்தி வரும்போது உதவும் கலயம் இனிமேல் குடித்தால் சங்குதான் என்றார் மருத்துவர் சரியென்று சொல்லிவிட்டு மீண்டும் குடித்தான் ப்யூக் அதற்குப் பிறகும் பத்து ஆண்டுகள் ... Read more
Published on April 09, 2022 23:05
சொற்களால் தின்னப்பட்டவன்
என் சொல் என் தேகம் என் சொல் என் சுவாசம் என் சொல் என் மரணம் என் சொல் என் தீர்வு ஒருநாள் என் சொற்களெல்லாம் திரண்டு வந்து என்னைப் புசிப்பது போல் கனாக்கண்டு எழுந்தேன் அது கனா அல்ல என் உடலை சொற்கள் தின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன் இதை எழுதும்போதே ரோமக் கால்கள் சிலிர்க்கின்றன ஆம் என் உடலை சொற்கள் தின்று கொண்டிருந்தன பார்த்துப் பார்த்து வளர்த்த உடல் சொற்களுக்குத் தீனியாவது கண்டு ஒருக்கணம் வருந்தினாலும் ... Read more
Published on April 09, 2022 01:45
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

