சாரு நிவேதிதா's Blog, page 160
May 31, 2022
நான்தான் ஔரங்ஸேப்… ஒரு சந்தேகம்…
பேய் வேகத்தில் ஔரங்ஸேப் நாவலின் செப்பனிடும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன். நிச்சயமாகச் சொல்கிறேன், இதுவரை நான் எழுதியதில் இந்த நாவல் உச்சமாக இருக்கும். பிஞ்ஜில் வெளியாகி இருப்பது பக்க வரையறைகளுக்கு உட்பட்டு எழுதியது. இப்போதுதான் அது முழுமையாகிக் கொண்டிருக்கிறது. எடிட்டிங்கில் என்னைத் தவிர ஐந்து பேர் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். ஃபைஸ் காதிரி, கொள்ளு நதீம், ப்ரஸன்னா, பிச்சைக்காரன். மற்றொருவர் பெயரை இப்போதைக்கு வெளியே சொல்ல முடியாது. அவருக்கு அன்புத் தொல்லை கொடுத்து நிறுத்துமாறு சொல்வார்கள், என் நலம் ... Read more
Published on May 31, 2022 07:17
May 27, 2022
the outsider – 3
எத்தனை பேர் சீலே வருவதற்கு ஆர்வப்பட்டு எழுதினார்கள் என்று கேட்டார் நண்பர். ஒத்தர் கூட இல்லை என்றேன். ”நீங்கள் எழுதியிருக்கும் லட்சணத்தைப் பார்த்தால் வர நினைப்பவர்களுக்குக் கூட அச்சம் வந்து விடும், இப்படியா பயமுறுத்துவது, எவன் வருவான்?” என்று கேட்டிருக்கிறார் ப்ரஸன்னா. ப்ரஸன்னா அமெரிக்காவில் இருப்பவர். சென்னையிலிருந்து கடலூர் போவது போல் சாந்த்தியாகோ கிளம்பிப் போகலாம். சீலேயர்கள் அமெரிக்கர்களை தங்கத் தட்டில் வைத்துத் தாங்குகிறார்கள். அமெரிக்கா ஒரு நரகம் என்று சீலேயர்களுக்குத் தெரியாது. சீலேயின் வறுமை அவர்களை ... Read more
Published on May 27, 2022 03:16
May 26, 2022
the outsider – 2
நானும் ஆவணப்பட இயக்குனரும் வரும் ஆகஸ்ட் மத்தியில் சீலே செல்ல இருக்கிறோம். பயணமே இரண்டு தினங்கள். போக இரண்டு, வர இரண்டு. வேறு எளிய வழி இல்லை. அமெரிக்கா வழியில் சென்றால் நேரம் குறையும். ஆனால் அமெரிக்கர்களிடம் போய்த் தொங்க முடியாது. வீசாவுக்கான நேர்காணல் தேதி கிடைக்கவே மூணு மாதம் ஆகும். சீலேயில் 15 நாள். ஆக, மொத்தம் 19 நாள். எங்களோடு வர விருப்பம் உள்ளவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம். போக வர டிக்கட் செலவு ... Read more
Published on May 26, 2022 06:46
May 24, 2022
the outsider – 1
துணுக்கு 1 ஆவணப் படத்துக்கான படப்பிடிப்புக்காக என் வீட்டுக்கு எதிரில் உள்ள பார்க்குக்குப் போனோம். மாலை நேரம். அங்கே கைலி அணிந்த ஒரு முதியவர் அமர்ந்திருந்தார். கசாப்புக் கடையில் வேலை செய்பவராக அல்லது வெங்காய மண்டி ஓனராகவோ இருக்கலாம். அப்படி ஒரு தோற்றம். ஆனால் கிட்டத்தில் பார்த்தபோதுதான் தெரிந்தது, அவர் ஒரு மைலாப்பூர் பிராமணர் என்று. மைலாப்பூர் பிராமணர்கள் எந்த காஸ்ட்யூமில் இருந்தாலும் சொல்லி விடுவேன். காவலாளி இங்கே படம் பிடிக்கக் கூடாதே என்று புன்சிரிப்புடன் சொன்னார். ... Read more
Published on May 24, 2022 09:36
நான்தான் ஔரங்ஸேப்…
பல தினங்களாக இங்கே வரவில்லை. ஒரு வாரம் படப்பிடிப்பு. மற்ற தினங்களெல்லாம் இரவு பகலாக ஔரங்ஸேப் செப்பனிடும் பணி. இன்று வரை 400 பக்கங்களை செப்பனிட்டிருக்கிறேன். நாலு பேர் படிக்கிறார்கள். இதில் ஒருவர் அசுரன். அனுப்பினால் அரை நாளில் திருப்பி அனுப்பி விடுகிறார். நூறு நூறு பக்கமாக அனுப்புகிறேன். நூறு பக்கத்தை எப்படி ஒருவர் அரை நாளில் திருத்தம் செய்ய முடியும். செய்கிறார். இன்னும் 650 பக்கம் வரலாம். மொத்தம் 1,60,000 வார்த்தைகள் உள்ளன. அநேகமாக அடுத்த ... Read more
Published on May 24, 2022 09:18
May 20, 2022
அய்யன் சீரீஸ்
Published on May 20, 2022 07:35
வள்ளலாரோடு ஒரு சம்பவம்
வள்ளலாராகவே இருந்தாலும் என்னோடு பழகும் போது கத்தியை எடுத்து விடுகிறார் என்று பலமுறை எழுதியிருக்கிறேன் அல்லவா? அது போன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்தது. அவர் ஒரு இனிமையான மனிதர். இனிமை என்றால் அப்படி ஒரு இனிமை. யாருக்கும் எந்தத் தீங்கும் நினையாதவர். மனதில் கூட. அவர் எனக்கு நண்பரானார். அவர் சில மாதங்களுக்கு முன்புஎன்னிடம் ஒரு உதவி கேட்டார். அதை விவரிப்பதற்கு முன்பாக இருபது ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். அவர் ... Read more
Published on May 20, 2022 01:27
May 19, 2022
ஆவணப் படம்
இன்னும் ஐந்து ஆண்டுகளில் எனக்கு புக்கர் விருது கிடைக்கலாம். அதுவரை விடை பெறாமல் இருந்தால். கிடைக்காமலும் போகலாம். முன்னேயே சொன்னாயே என்று என்னைப் பிடிக்கக் கூடாது. இங்கே நான் சொல்லப் போகும் விஷயத்துக்கு புக்கர் முக்கியமல்ல. அது ஒரு உதாரணம். ஒரு தோது. புக்கரோ கிக்கரோ கிடைத்தால் எனக்குப் பாராட்டு விழா நடத்துவார்கள்தானே? அப்போது சிலர் மேடைக்கு வந்து பொன்னாடை போர்த்தி கௌரவிப்பார்கள். கௌரவிக்கட்டும். எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் முதல் வரிசையில் வினித் அமர்ந்திருப்பான். அவனிடம் ... Read more
Published on May 19, 2022 08:14
இசை நிலவு வைன்
இன்றைய நிலவு முழுமையாகக் காண்கிறது கண்டு வெகு காலம் ஆயிற்று வைன் அருந்தினான் இசை கேட்டான் வைன் அருந்தினான் இசை கேட்டான் வைன் அருந்தினான் இசை கேட்டான் இசை வைன் நிலவு இசை நிலவு வைன் நிலவு வைன் இசை நிலவு வைன் இசை நிலவு வைன் இசை நிலவு வைன் இசை நிலவு வைன் இரவு கழிந்தது காலை புலர்ந்தது நிலவைக் காணோம் அவனையும் காணோம்
Published on May 19, 2022 07:00
May 16, 2022
ரகசியம்
இதுவரை யாரிடமும் சொல்லாதஒரு ரகசியம் சொல்கிறேன் கேள் என்றேன் வேண்டாம் என்றாள் அதன் பிறகு அவளுக்கான கதவை மூடி விட்டேன் போயும் போயும் ஒரு ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ள முடியாதவளிடம் சொற்களைப் பகிர்ந்து என்ன பயன்?
Published on May 16, 2022 05:17
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

