சாரு நிவேதிதா's Blog, page 158

June 30, 2022

அமெரிக்கத் தமிழர்கள்

பின்வரும் இணைப்பில் உள்ள கட்டுரையின் ஒவ்வொரு வார்த்தையையும் என் வார்த்தையாகவும் கொள்ளலாம். அமெரிக்கத் தமிழர்களுக்குச் சொன்னவை… | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 30, 2022 03:00

June 29, 2022

குட் பை ஃபேஸ்புக்!

ஃபேஸ்புக்கில் இருப்பேன்.  ஆனால் என் தளத்தில் எழுதுவது எதையும் ஃபேஸ்புக்கில் கொண்டு வந்து கொடுக்க மாட்டேன்.  ஏனென்றால், ஃபேஸ்புக் கும்பல் என்பது தமிழ் மசாலா சினிமாவை ரசித்து விசிலடிக்கும் கும்பலைப் போன்றது.  ஆனால் வேடிக்கை பார்ப்பதற்காக ஃபேஸ்புக்கில் இருப்பேன். கார்த்திக் மரீன் எஞ்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்தபோது கல்லூரிக் கட்டணம் கட்ட பணம் இல்லை.  படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விடலாம் என்கிறாள் அவந்திகா.  வேறு வழியே இல்லை.  வங்கிக் கடன் எதுவும் கிடைக்கவில்லை.  வங்கியில் பணி புரிந்து கொண்டிருந்த ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 29, 2022 04:17

June 28, 2022

குடும்பம், தனிச் சொத்து, அரசு – 2

குடும்பம் என்பது ஒரு கொடூரமான அடக்குமுறை ஸ்தாபனம்.   அன்பு என்பதே அற்றுப் போன வறட்டுப் பாலைநிலத்துக்கு ஒப்பானது குடும்பம்.  என் நண்பர் ஒருவர் 65 வயதில் வாழ்வே அலுப்பாக இருக்கிறது, சாக விரும்புகிறேன் என்கிறார்.  இது பற்றி நான் எத்தனை பக்கம் எழுதியிருப்பேன்?  உங்கள் மனதில் அதெல்லாம் உறைக்கவில்லையா?  முதலில் அவர் தன் பெண்ணுக்காக வாழ்ந்தார்.  பெண்ணின் படிப்புக்காக உழைத்தார்.  பிறகு உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்று இப்போது பேத்திக்காக தன் எல்லா நேரத்தையும் செலவிடுகிறார்.  65 ஆண்டு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 28, 2022 00:15

June 27, 2022

குடும்பம், தனிச் சொத்து, அரசு

பேரன் பிறந்திருக்கும் சேதியை முகநூலில் அறிவித்திருந்ததற்கு 1200 பேர் விருப்பக் குறி இட்டிருக்கிறார்கள்.  அது இந்த சமூகத்தைப் பற்றிய என் புரிதலுக்கு உதவியது.  இந்த 1200 பேரில் பெரும்பாலானவர்கள் என் எழுத்தைப் படிக்காதவர்கள் என்றோ, அல்லது, படித்தும் அதிலிருந்து எதையுமே புரிந்து கொள்ளாதவர்கள் என்றோதான் முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.  ஒரு உயிர் இந்த பூமியில் தங்குவதற்காக வந்திருப்பது ஒரு கொண்டாட்டத்துக்கான விஷயம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.   ஆனால் சாரு நிவேதிதா என்ற எழுத்தாளனின் அடையாளம் குடும்பஸ்தன் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 27, 2022 22:58

always remember us this way…

எத்தனை ஆயிரம் முறை கேட்டிருப்பேன் இந்தப் பாடலை. எவ்வளவு கேட்டாலும் அலுக்காத பாடல். உயிரின் சிலிர்ப்பு. இந்தப் பாடல் இடம் பெற்ற படமான A star is born உம் எனக்கு மிகவும் பிடித்தமானது. https://www.youtube.com/watch?v=5vheN... Lady Gaga – Always Remember Us This Way (from A Star Is Born) (Official Music Video) – YouTube
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 27, 2022 05:23

June 26, 2022

மூன்று ரவுடிகள்

என் மகன் கார்த்திக்குக்கு பையன் பிறந்திருக்கிறான். நேற்று ராம்ஜி வாழ்த்து சொன்னார். அவந்திகாவுக்குத்தான் இப்போது மூன்று ரவுடிகளை சமாளிக்க வேண்டியிருக்கும் என்றேன். பாவம் சார் கார்த்திக், அவன் சாது பையன் ஆயிற்றே என்கிறார். எப்படி இருக்கு? என் பப்ளிஷரே என்னை ரவுடி என்று ஒத்துக் கொள்கிறார். ஏதோ கோபத்தில் ஏதாவது உளறியிருப்பேன், அதெல்லாம் ரவுடித்தனமா? நான் செய்யும் ரவுடித்தனமெல்லாம் நம் வடிவேலு சேஷ்டை மாதிரிதான். எல்லோரும்இப்போது என்னை தாத்தா என்று சொல்லும்போதுதான் பேஜாராக இருக்கிறது. சரி, கமலே ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 26, 2022 21:58

June 23, 2022

இன்னா செய்தாரை ஒறுத்தல்…

நாய்க்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது.  நாயைக் கல்லால் அடித்தால் குரைக்கும்.  குரைத்து விட்டுப் போய் விடும்.  குரைத்து விட்டோமே என்று குற்ற உணர்ச்சியால் பீடிக்கப்படாது.  நான் படுவேன்.  இப்படி வாரம் ஒருமுறை குரைத்து விட்டு, வாரம் பூராவும் குற்ற உணர்ச்சியால் பீடிக்கப்படுவேன்.  பிறகு அடுத்த வாரம், அடுத்த குரைப்பு.  ஆக, ஒவ்வொரு நாளுமே குற்ற உணர்ச்சியால் பீடிக்கப்பட்டவனாகவே வாழ வேண்டியது என் வரம்.  ஆனால் தினமும் குரைக்க மாட்டேன்.  குரைக்கவே கூடாது என்ற மன உறுதியிலும் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 23, 2022 22:22

fall of a sparrow…

நேற்று இரண்டாவது தடவையாக அழுதேன்.  முதல் முறை அழுத்து என் தம்பி ரங்கன் 40 வயதில் செத்த போது.  என்னைப் பார்க்க வேண்டும் பார்க்க வேண்டும் என்று அழைத்துக் கொண்டே இருந்தான்.  இப்படி செத்துப் போவான் என்று தெரிந்திருந்தால் ஓடிப் போய் பார்த்திருப்பேன்.  பார்க்காமலேயே போய் விட்டான்.  உடம்பு எலும்புக் கூடாக இருந்த்து.  இரண்டு மூன்று மாதங்களாக சாப்பிடவில்லையாம்.  அதற்குப் பிறகு நேற்றுதான் அழுதேன்.  பொதுவாக எந்த மரணமும் என்னை எதுவும் செய்வதில்லை.  அதற்கு விதிவிலக்காக அமைந்து ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 23, 2022 09:50

June 21, 2022

the outsider – 7

தெ அவ்ட்ஸைடர் ”Moth to a Flame பாடல் மூன்று தினங்களாக repeat mode இல் இருக்கிறது, தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்” என்று எழுதியிருக்கிறார் அன்னபூரணி.  அந்தப் பாடல் படமாக்கப்பட்டிருக்கும் விதம் பற்றியும் என்னைப் பற்றிய ஆவணப் படம் (the outsider) பற்றியும் எழுதியிருந்தேன்.  இனிமேல் ஆவணப் படம் பற்றி எதுவும் எழுத வேண்டாம் என்று கூறி விட்டார் இயக்குனர்.  அவர் சொன்ன காரணம் சரியாக இருந்த்தால் நானும் எழுத வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன்.  ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 21, 2022 05:05

June 20, 2022

விக்ரம் – இன்னும் கொஞ்சம்

என் நண்பர் வினித் ஒரு வினாவை எழுப்பி இருக்கிறார். பாராளுமன்றத்துக்குள் போய் வில்லனைப் போடுவதும் நகரத்தின் நடுவே பீரங்கியைப் பயன்படுத்துவதும் ஒன்றுதான் என்கிறார் வினித். வினித்துக்கு ஒன்று புரியவில்லை. விக்ரம் ஒரு சயன்ஸ் ஃபிக்‌ஷன் படம். அதை லௌகீக தர்க்கம் கொண்டு பார்க்கலாகாது. விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளைப் பார்த்தாலே அது ஒரு சயன்ஸ் ஃபிக்‌ஷன் படம் என்று புரியவில்லையா? மேலும், விக்ரம் படத்தில் நகரம் எங்கே வருகிறது? நரகம் வருகிறது. ஆனால் நகரம் வ்ரவே இல்லை. ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 20, 2022 22:53

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.