Jeyamohan's Blog, page 860
December 29, 2021
அண்ணாச்சியுடன் இரண்டுநாள்- யோகேஸ்வரன் ராமநாதன்
விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள்
விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும்
கோவில்பட்டி கடை தெருவில் விக்கி அண்ணாச்சிக்கும் தனக்கும் இடையே நடந்த செல்லமான இலக்கிய சச்சரவொன்றினை சோ.தர்மன் விவரிக்க, குமரி ஆதவனோடு இணைந்து சிரித்தபடி, நானும், ஜி.எஸ்.எஸ்.வி நவீனும் கோவை ரயில்நிலைய டீ கடையில் உடன் நின்றிருக்கையில் சனிக்கிழமை காலை மணி ஏழு முப்பத்தி ஆறு.
இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக விக்கி அண்ணாச்சியின் மகன் பிரேம், மருமகள், பேரக்குழந்தைகளை நானும் ஷாகுலும், ரயில் நிலையத்தில் வரவேற்று ஃபார்சூன் சூட்ஸ் ஓட்டலில் ஒருக்கப்பட்டிருந்த அறையில் தங்க வைத்து மீண்டிருந்தோம்.
வழக்கறிஞர் செல்வராணி விக்ரமாதித்யனின் துணைவியை கௌரவிக்கிறார். அருகே யோகாசோ.தர்மன் மற்றும் குமரி ஆதவன் இருவரையும் அவர்களுக்கென ஒருக்கப்பட்டு இருந்த அறைகளில் தங்க வைத்து,ராஜஸ்தானி பவன் ”திவான்” அறைக்கு திரும்பி, அறையில் சிந்தனையோட்டத்துடன் அமர்ந்திருந்த குவிஸ் செந்தில் அண்ணனிடம் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து உசாவி முடித்தபின், அகர வரிசைப்படியும், ஒதுக்கப்பட்ட அறை எண் வரிசை படியும், தயாராக இருந்த, தங்குமிடம் முன் பதிவு செய்திருந்தவர்களின் பட்டியலை கையளித்தார்.
நண்பர்கள் வரத்தொடங்கியிருந்தார்கள். பனிபடர்ந்த ஹெல்மட்டை கழட்டியபடி “ என் பெயர் உமா மகேஸ்வரி. ரூம் அலாட்மெண்ட் செய்வதில் உதவுவதற்காக நேரமே செந்தில் அண்ணன் என்னை வரச்சொன்னார்..” என்றபடி உள்ளே வந்த வாசகியை, குருஜி சௌந்தர், லோகமாதேவி,ரம்யா ஆகியோரோடு இணைக்க, தடுப்பூசி செலுத்தியதற்கான விபரங்களை கேட்டறிந்து, அறை விபரங்கள் தெரிவித்து சாவி அளிக்கும் பணியை இலக்கிய அரட்டை அடித்தபடி ஆரம்பித்தது அக்குழு.
சுருதி டிவி கபிலனுக்கு சிவாத்மா கௌரவம் செய்கிறார்ஐந்து இடங்களில் [ராஜஸ்தானி பவன், குஜராத் சமாஜ், டாக்டர் பங்களா, ராஜா நிவாஸ், ஹெச்.ஆர் ரெஸிடன்ஸி] ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்குமிடங்களின் அறைகள், குவளைகளில் நிரம்பும் தண்ணீராய் மெல்ல நிரம்பியபடி இருந்ததை பட்டியலில் டிக் செய்யப்பட்ட எண்கள் காட்டின.
காலை சிற்றுண்டிக்கான பதார்த்தங்கள் மண்டபத்தை அடைந்துவிட்டதற்கான அறிகுறியாய், மசால் வடை மணம் நாசியில் ஏற ”நாஞ்சில்நாடன் இன்னும் இருபது நிமிடங்களில் தயாராக இருப்பார்” நரேனின் வாட்சப் செய்தி, வடை சாப்பிடும் எண்ணத்தை பின்னுக்கு தள்ளியது.
இம்முறை வழித்துணையாக காளிபிரசாத். காளியின் ”ஆள்தலும் அளத்தலும்” நூலுக்கான நாஞ்சிலின் முன்னுரை வரிகளை பேசி முடிக்கையில், போர்டு மீட்டிங்கில் கலந்து கொள்ள அலுவலகம் கிளம்பும் தோரணையில் நாஞ்சில் தயாராக வாசலில் நின்றிருந்தார். “வென் ஆர் யூ கோயிங் டு செண்ட் தட் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் டூ கஸ்டமர் மேன்…. ஐ ஹேவ் பீன் ஆஸ்கிங் யூ திஸ் சின்ஸ் மார்னிங்…” என் அலுவலக சூழலை ஒரு கணம் நினைவில் கொள்ள வைத்தார். தலையை உதறிபடி ஸ்டீயரிங் பிடிக்கலானேன்.
கடைசி சந்திப்பிற்கு பிறகு சரியாக 24 மாதங்கள் ஆகியிருந்தாலும், முந்தா நேத்து விட்ட இடத்தில் இருந்து தொடர்வது போல ஆரம்பித்தது இலக்கிய உரையாடல்.
நாஞ்சில் கம்பனை தொட்டபோது நான் குனியமுத்தூர் செல்லும் டவுன் பஸ்ஸை முந்த தொடங்கியிருந்தேன்.
“அருந்தும் மெல் அடகு ஆர் இட அருந்தும்”-”அந்தாளுக்கு கீரன்னா ரொம்ப புடிக்கிமே… அய்யோ நா இங்க மாட்டிக்கிட்டேனே… இப்ப அவனுக்கு யாரு கீர சமச்சி கொடுப்பாங்க….” என்று சுந்தரகாண்டத்தில் சீதை படும் அங்கலாய்ப்பையும், “அடகு” என்ற சொல் எப்படி “கீரை” என்ற பதத்தில் பயன்படுகிறது என்றும், அவ்வாறில்லாமல், எப்படியெல்லாம் அச்சொல் உரைகளில் அவஸ்தைபடுத்தப்படுகிறது, என்று சீற்றத்தோடு சொல்லி முடிக்கையில் ராஜஸ்தானி சங் வந்திருந்தோம்.
இறைவணக்கபாடலுக்கு, ஆரம்பிக்கப்பட்ட முதல் நாள் காலை தொடங்கி, இரண்டாம் நாள் மாலை வரை மொத்தம் 12 அமர்வுகள். முக்கியமாக கவனித்த விசயம்.
அ) நேர ஒழுங்கு: அனைத்து அமர்வுகளிலும் கடைபிடிக்கப்பட்ட நேர ஒழுங்கு. விஷ்ணுபுர இலக்கிய வட்டத்தின் அமர்வுகளை பற்றி சொல்லும்போதெல்லாம் ”அங்க கெடுபிடி ரொம்ப ஜாஸ்தி..” என்ற வால் ஒட்டப்படும். இவ்வருட நிகழ்வின் முடிவில், எழுத்தாள நண்பர்களும், விக்கி அண்ணாச்சி, சோ.தர்மன், ஜெ.தீபா. செந்தில் ஜெகந்நாதன் உள்ளிட்டோர் விடைபெறுகையிலும் சொல்லி சென்றதில் முதலானது நமது அமர்வுகளில் கடைபிடிக்கப்படும் நேர ஒழுங்கு.
ஆ) கேள்விகளின் உள்ளடக்கம்: பெரும்பாலான கேள்விகள், கேட்கப்படும் முன்பு, கேள்வி எதை பற்றியது என்பதை பிரேம் ஆஃப் ரெபரென்ஸ் மூலம் வரையறுத்து, சரியான சொல்லாடல்கள் மூலம் வடிவமைத்து, சரியான வடிவத்தில் கேட்கப் பட்டவை.
இ) எழுத்தாளர்- பங்கேற்பாளர்கள் உரையாடல்கள்: இரு திசை அம்புகள் என ஆரம்பித்து, ஒன்றோடொன்று தொடுத்துக்கொண்டு அம்பு மாலையாக மேலெழும்பி, அமர்வுகளை மேலே எடுத்து சென்றபடி இருந்ததை அனேகமாக அனைத்து அமர்வுகளிலும் அவதானித்தேன்.
ஈ) மட்டுறுத்தல்: விவாதத்தின் போக்கு சற்றே விலகும் சூழல் முற்படும்போதெல்லாம். சிறு குச்சி கொண்டு நீரோட்டத்தின் போக்கை மடைமாற்றும் செயலை அமர்வை ஒருங்கிணைத்த நண்பர்கள் சரியாக கையாண்டார்கள். மட்டுறுத்துனர் செய்ய வேண்டியவை. தவிர்க்க வேண்டியவை, இரண்டையும் நண்பர்கள் மிகச்சரியாக கையாண்டனர்
உ) ஜெயமோகனின் பங்களிப்பு: இரு நாள் அமர்வுகள் நீங்கள் ஒரு சொல்லும் உரைக்கவில்லை. ஒரு கேள்வியும் எழுப்ப வில்லை. எல்லா அமர்வுகளிலும் பார்வையாளராகவே இருந்தீர்கள்.முழுக்கவே பங்களிப்பாளர்களின் அரங்காக நடந்து முடிந்தது. [கவிஞர் சின்னவீரபத்ருடு அமர்வில், அவரின் பதிலை தொகுத்து சொல்ல நீங்கள் மைக் பிடித்த ஒரு நிகழ்வை தவிர]
ஊ) மைக் பிடுங்கிகள்: அமர்வுக்கு சற்றும் சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்டு நேரத்தை காவு கொண்டு, உற்சாக மனநிலையை குலைக்கச் செய்யும் மைக் பிடிங்கிகள் அனேகமாக இல்லை என்றே சொல்ல வேண்டும்.
[அந்தியூர் மணியும், அனங்கனும், ராகவும், நானும் அரங்கின் நான்கு மூலையிலும் நின்றிருந்தது கூட காரணமாய் இருக்கலாம்… ”பௌன்ஸர்களை கொண்டு பார்வையாளர்களை பயமுறுத்துகிறதா விஷ்ணுபுர இலக்கிய வட்டம்..? ” என்று கேள்வி கேட்டு உங்களுக்கு கடிதம் வந்தாலும் வரலாம்…]
ஆனால் இவை அனைத்தும் ஓரிரவில் நடந்துவிடவில்லை. ”பாலாடையில் தேன் கலந்து மருந்தளிப்பது” போல மெல்ல மெல்ல உருவாகி வந்த புரிதல்.
எ) உணவு இடைவேளையில் ஈரோடு கிருஷ்ணனிடம், அப்சர்விங் பவர் குறித்து பேசிக்கொண்டு இருந்தேன். திருச்செந்தாழை அமர்வில், போகன் சங்கரின் கேள்வியை மூன்று அலகாக பிரித்து தேர்தெடுத்த மெட்டாபஃருடன் கேள்வியை கிருஷ்ணன் முன் வைத்த விதம். [உதாரணம்: ”நாங்க தூக்கி போட்ட பழய சட்டய, புது சட்டன்னு நினைச்சி நீங்க எடுத்து போட்டுக்கிட்டு இருக்கீங்க…”]
ஏ) அதேபோல கவிஞர் சின்னவீரபத்ருடு அவர்கள் அமர்விலும், கவிஞர் சொன்ன விசயங்கள் சரியான சொல்லாடலில் அவைக்கு சொல்லப்படவில்லை என்றதும், நீங்கள் அதை அழகாக அடுக்கி, படிநிலைகளாக பிரித்து சொன்ன விதம்,
இலக்கிய வாசகர்களுக்கு, இவை இரண்டும் முக்கியமான வழிகாட்டல்.
திருச்செந்தாழை தனக்கு பொன்னாடை அணிவிக்கையில், காலணிகளை அகற்றிவிட்டு அதனை ஏற்றுக்கொண்ட விதம், அந்த மேடையை எந்தளவுக்கு எண்ணுகிறார் என்பதை வெளிப்படுத்தியது.. ஈரோடு கிருஷ்ணன் “திருச்செந்தாழையின் மைக் வேலை செய்கிறதா..?” என்று கேள்வி எழுப்பும் அளவுக்கு, அமர்வின் ஆரம்பத்தில் சிறு மனத்தடையுடனே தனது அமர்வை தொடங்கினார்.
அனேக இளம் படைப்பாளிகள் சந்திக்கும் லௌகீக சிக்கலை, கணக்கு போடும் கால்குலேட்டராக தன் குடும்பத்தினரால் தான் பார்க்கப்படுவதை, தான் அவ்வாறல்ல என்ற புரிதலை ஏற்படுத்த முயலும் தத்தளிப்புகளை தெளிவாக முன்வைத்தார். அமர்வின் முடிவில் அவரது குரலிலும், உடல் மொழியிலும் ஏற்பட்டிருந்த நிமிர்வை கண்டுகொள்ள முடிந்தது…. இந்நிமிர்வு அவருடைய அடுத்த கட்ட எழுத்துகளிலும் தொடர்ந்து வெளிப்படட்டும்.
“அண்ணாச்சி போட்டு வச்சிருக்குற பாதைய குறுக்காம இருந்தா போதும்” என்ற தன்னுடைய நிலைப்பாட்டை தமிழினியின் இணைய இதழ் குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்லும் முன்பாக தெரிவித்த கோகுல் பிரசாத்.
காளிபிரசாத்தின் படைப்புகள் எல்லாவற்றையும் காளியை விட அதிக முறை படித்துவிட்டு வந்து அமர்வை ஒருங்கிணைத்த லோகமாதேவி. மேடைக்கு கீழிருந்து பேசும் காளிபிரசாத்தின் இயல்பான அங்கதங்கள் மேடையிலும் நடந்தது. குறிப்பாக ஹாகுல் அமீது கேட்ட கேள்விக்கு ஷாகுல் அடிக்கடி சொல்லும் “ஏசப்பா…” என்றை வாக்கியத்தை கொண்டே பதில் சொன்னது.
சுஷில் குமாரின் அமர்வில் தான் கற்றுகொண்ட பாடங்கள், செல்ல வேண்டிய தூரங்கள் குறித்த தெளிவு வெளிப்பட்டது.
திரைத்துறையிலும், இலக்கியத்திலும், இரட்டை குதிரை சவாரி செய்யும் செந்தில் ஜெகன்நாதன் தனது ரசனைகளை தெளிவாக முன் வைத்தார். அமர்விற்கு பின்பான தனி உரையாடலில் வெளிப்பட்ட செந்தில் ஜெகன்நாதன், அமர்வின் மூலம் பெற்றவைகளை பிரதிபளித்தார்.
”சங்கம் பொயட்ஸ் கிவ்ஸ் மீ த கான்பிடன்ஸ் டு எக்ஸ்பிரஸ் மைசெல்ஃப் வித்தவுட் ஹெசிட்டேஷன்…”தான் சந்தித்து வந்த இலக்கிய அவைகள் யாவும் “பென்ஷனர்ஸ் ஆக்டிவிடி” என்ற அளவில் இருக்க, இத்தனை இளம் வயதினைரை இலக்கிய கூட்டத்தில் பார்பதில் ஏற்படும் சந்தோசத்தை வெளிப்படுத்தியடி அமர்வை ஆரம்பித்தார் தெலுங்கு கவிஞர் சின்ன வீரபத்ருடு.
”மை பொயட்ர்ரி சர்வைவ்டு ஈவன் ஆப்டர் த டிரான்ஷலேசன்” – சுபஸ்ரீயின் மொழிபெயர்ப்பை பற்றி அங்கத்தோடு சொல்லி, ”நல்ல கவிதையென்பது சந்தத்தையும், அர்த்தத்தையும் இணையாக அளிக்க வேண்டும்” என்ற புரிதலை, தெலுங்கு கவிதை ஒன்றினை அழகாக பாடி காண்பித்தார்.
”கத்துக்கறதுக்காகவும். வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்காகவும். இலக்கியத்தை பார்கிறேன். முதல் நாள் அமர்வுகளில் இருந்து கலந்து கொள்வதற்கு காரணமும் அதான்.” இவர் ஏன் இந்த நிகழ்வுக்கு…?- என தனக்கான கேள்வியை அதற்கான விடையை தானே சொல்லிக்கொண்டார் இயக்குனர் வசந்த் சாய்.
தொண்ணூத்தொண்பதுக்கும் நூறுக்கும் இடையேயான அந்த மெல்லிய கோடு பற்றி அவர் சொன்ன விசயம், மிகவும் யோசிக்க வைக்கும். மேலும், ஒரு திரைப்படத்தை பார்கையில் எந்த முன் முடிவுகள் இல்லாமல் பாருங்கள் [Do not start from – or +. Start from Zero] என்ற குறிப்பு முக்கியமானது.
சோ.தர்மன் அவர்களுடனானது, முதல் நாளின் இறுதி அமர்வு. காலை முதல் தொடர் அமர்வுகளின் இருந்தவர்களை கிஞ்சித்தும் சோர்வுற செய்யாமல் கலகலப்பான அமர்வாக ஆக்கினார் சோ.தர்மன்.
முதல் நாள் அமர்வுகள் முடிந்தபின், நாஞ்சிநாடனை அழைத்துகொண்டு அவர் வீட்டை நோக்கி பயணிக்கையில், மறுநாள் எத்தனை மணிக்கு அழைக்க வரவேண்டும் என்று கேட்ட போது, ”நேத்து வந்த மாதிரி வாங்களேன்…” என்றார். பிறகு தான் இருவருமே உணர்தோம், இவை அனைத்தும் ஒரே நாளில் நடைபெற்றவை… நாள் இன்னும் முடியவில்லை என்று….
விக்கி அண்ணாச்சியின் அமர்வு, சிகரம். தாமிரபரணியோடும்.அதன் நிலப்பரப்போடும் தன்னை ஒப்பிட்ட தருணத்தில், அரங்கம் முழு கவனக்குவிப்போடு அமர்ந்திருந்ததை பார்க்க முடிந்தது.பேச்சினூடாக படிமங்களை தவழவிட்டபடி இருந்தார் அண்ணாசி.குறிப்பிட்டவைகளில் முக்கியமான படிமம் குடத்தை திருப்பி போட்டு பெண்கள் நீச்சல் கற்றுக்கொள்ளுதல்.
இரண்டாம் நாள் மதிய உணவுக்கு பின் ஒரு மெது நடை செல்ல விரும்பினார் விக்கி அண்ணாச்சி.”ஒரு நாவல பத்தி ஒருத்தர்ட்ட பேசலாம். ஒரு கவிதைய பத்தி இன்னொருத்தர்ட பேசலாம், சிறுகதய பத்தி வேறொருத்தர்ட பேசலாம்… ஆனா….. எல்லாத்த பத்தியும் ஜெயமோகன்ட்ட பேசலாம்…”க.நா.சு முதல் கண்டராதித்யன் வரை சென்று வந்த நடைப்பேச்சு, மைய புள்ளியாய் ஜெயமோகனை வைத்தே இருந்தது.
மாலை விருது விழா நிகழ்வை நினைவூட்டி, அண்ணாச்சியை தங்குமிடம் அழைத்து சென்றேன்.மனைவி பகவதி அம்மாளிடம் தேங்காய் எண்ணைய் கேட்டார் அண்ணாச்சி.. “இப்ப என்னா பொண்ணா பாக்க போறாங்க… அவார்டு தான கொடுக்க போறாங்க…எல்லா இது போதும்….”
“பாத்தியா, என்னோட தலை முடி நீளத்த விட உங்க அண்ணாச்சி தாடி நீளமாருக்கு…” அண்ணாச்சியை கை காட்டி பகவதி அம்மாள் சொல்ல… “போடி இவள….” என்று பகவதி அம்மாவிற்கு கேட்காத அளவில் முணுமுணுத்தபடி கண்களால் என்னிடம் சிரிக்க ஆரம்பித்தார்.
கதிர் முருகன் ராஜஸ்தானி பவன் பொறுப்பாளர் வினோதுக்கு கௌரவம் செய்கிறார்“அப்பாவுக்கு/மாமனாருக்கு எதோ ஒரு விழா. நம்மளையும் கூட கூப்பிட்ருக்காங்க…. “ என்ற மனநிலையில் அண்ணாச்சியின் மகனும், மருமகளும், பேரக்குழந்தைகளும் இருந்ததை, சனி காலை அவர்களை ரயில் நிலையத்தில் இருந்து அழைத்து வருகையில் அவதானித்து இருந்தேன்.விழாவின் மறுநாள் வழியனுப்ப ரயில் நிலையம் அழைத்து செல்கையில் அவர்களின் பார்வை கோணங்கள் வெகுவாக மாற்றி இருந்தன.
விக்கி அண்ணாச்சி பற்றி கவிஞர் ஆனந்த்குமார் இயக்கிய ”வீடும் வீதிகளும்” விருது நிகழ்வை வேறு தளத்திற்கு எடுத்து சென்றது.அடுத்த ஆண்டு முதல் ஆவணப்படத்தில் ஆங்கில சப் டைட்டில் சேர்க்கவேண்டுமென்று “Focus area for 2022 plan” ல் நானும் குவிஸ் செந்திலும் குறித்துக் கொண்டோம்.
டைனமிக் நடராஜன்“அப்பாவ பத்தி நமக்கு நல்லா தெரியும்.. ஆனா சில சமயங்கள்ல மத்தவங்களோட கேள்விக்கு பதில் சொல்ல முடியாது…. இப்ப… இந்த ஆவணப்படம் எல்லா கேள்விக்கும் பதில் சொல்லியிருக்கு….”இடது புறம் கடந்து செல்லும், இரு சக்கர வாகனம் ஒன்றை உற்று பார்த்தபடி சொல்லிக் கொண்டு இருந்தார் அண்ணாச்சியின் மகன் பிரேம்.
”மாமா வீட்ட விட்டு கிளம்புனா, வீடு திரும்புற வரைக்கும் மடியில நெருப்ப கட்டிகிட்டு இருப்போம்…ஆனா… இப்ப இந்த நிகழ்வுல இவ்ளோ பேர் பாராட்டும்போது, இவ்ளோ பெரிய நிகழ்வு நடக்கும்போது…..நான் நினைக்கவேயில்ல….” வாக்கியத்தை முடிக்காமல் மௌனமாகிவிட்டார் அண்ணாச்சியின் மருமகள்.
”அண்ணாச்சி எவ்ளோ மக்கள சம்பாதிச்சி வச்சிருக்குறாரு பாத்தியா யோகேசு….” – பகவதி அம்மாள்.
விருது விழாவுக்கு பிறகு ஒரு வித பரவச நிலைக்கு சென்று விட்டார் அண்ணாச்சி… ”நாம லேட்டா சாப்டுவோம்.. இப்ப டீ வாங்கித் தா…” படியிறங்கி இரவு நடையை ஆரம்பித்தோம். தனக்குள் பேச முற்பட்டு, தன்னை மறுத்து தலையை ஆட்டியபடி என தன்னுள் தளும்பியபடி இருந்த அண்ணாச்சியை தொந்தரவு செய்யாமல் மௌனமாக உடன் நடந்தபடி இருந்தேன்.
ஞாயிறு இரவு, மணி பதினொன்று முப்பது. இரவுணவுக்கு சம்மதம் தெரிவித்தார் அண்ணாச்சி. அருகாமை கடையொன்றில் “நான் கடவுள் ஆக்டர்” என்ற அடைமொழியொடு பரிசாரகரால் ஐஸ் போடாத மாதுளை ஜூஸ் அண்ணாச்சிக்கு விளம்பப் பட்டது.
”இலக்கியம் என்ன கொடுக்கிறது…?” என்ற கேள்வி..மீண்டும் மீண்டும் நம் முன் வைக்கப்படுகிறது. இந்த இருநாள் நிகழ்வுகளில் ஒரு இலக்கிய வாசகன் பெற்று செல்லும் கொடை என்பதை எண்ணிப்பார்த்தால் தெரியக்கூடும்.
ரம்யா, விக்னேஷ் உள்ளிட்டவர்களை மேடைக்கு எதிரே பார்கையில், அவர்கள் எதிர்புறம் மேடைக்குச் செல்லும் நாள்கள் அதிகமாய் இருக்கப் போவதில்லை என்றே நினைக்க தோன்றுகிறது. வருடங்கள் செல்ல செல்ல, தமிழ் இளம் எழுத்தாளர்களில் பிரதானமானோர் விஷ்ணுபுர இலக்கிய வட்டத்தில் உருவான எழுத்தாளர்களாக அமைகிறார்கள். விட்டிலாய் கீழிறங்காமல் விண்மீனாய் மேலெழும்பிய வண்ணம் இருக்கட்டும்.
”Unity through Diversity” – மத்திய அமைச்சர் திரு.ஜெய்ராம் ரமேஷ் அவர்கள் உரையுனூடாக குறிப்பிட்டது.“விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களிடையே, இலக்கிய ரீதியாக பல தரப்பட்ட கருத்து நிலைப்பாடுகள் இருந்தாலும், முக்கிய முன்னெடுப்புகளில் ஓர் உருவாய் இணைந்து செயலாற்றுவதென்பது ஒவ்வொரு படிநிலைகளாக கூடியபடி இருக்கிறது.
நாஞ்சில் நாடன், பாவண்ணன், சு.வேணுகோபால், மோகனரங்கன், எம்.கோபாலகிருஷ்ணன், லக்ஷ்மி மணிவண்னன், போகன் சங்கர், சாம்ராஜ், அமிர்தம் சூர்யா உள்ளிட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள் தொடர்ச்சியாக இலக்கிய அமர்வுகளில் கலந்துகொண்டு வாசகர்களோடான தொடர் உரையாடலில் இருப்பது மகிழ்வை அளிக்கிறது.
விழாவில் ஸ்ருதி டிவி கபிலனுக்கு மரியாதை செய்தது நிறைவளிக்க கூடியதாய் அமைந்தது.அனைத்து நிகழ்விலும் பின்புலமாய் நின்றிருக்கும் நமது ”விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள்.
விக்கி அண்ணாச்சியின் அணுக்கனாய் மூன்று நாட்கள் உடனிருக்கும் வாய்ப்பு கிடைத்தது என்னுடைய நல்லூழ் என்றே நினைக்கிறேன். திங்கள் மதிய உணவிற்கு பின்பான இளைப்பாறுதலின் போது, ஜி.எஸ்.எஸ்.வி நவீன் உடனிருக்க “இருநாள் நிகழ்வுகள் + விருது விழா”விற்கு முன்பான உங்களின் மனநிலை குறித்தும், தற்போதைய மனநிலை குறித்தும் எப்படி உணர்றீங்க அண்ணாச்சி..” என்று கேட்டேன்…
இடக்கையால் தாடியை தடவியபடி “ கொஞ்சம் பதட்டமா தா இருந்தேன்… குறிப்பா சொல்லனும்னா, இங்க வந்து, இந்த நிகழ்வுல கலந்துக்கிற நண்பர்களை, சின்ன புள்ளைகளை பாத்ததுக்கு பின்னாடி, நாம ஒன்னும் அவ்ளோ ஆயாசப்பட தேவையில்லைன்னு தோண ஆரம்பிச்சிருக்கு…” என்றார்.
”தமிழிலக்கியத்தின் கண்ணி அறுபட்டு போகாமல் தொடரும்னு வச்சிக்கலாமா…” என்று கேட்டதற்கு ”ஆமா…” என்று ஆமோதித்தபடியே தன் பிரத்யேக சிரிப்பை ஆரம்பித்தார்.
தெலுங்குக் கவிஞர் சின்ன வீரபத்ருடு தன்னுடைய அமர்வில் முக்கிய விசயம் ஒன்றை குறிப்பிட்டார்.”தேர் வீதிகளில் ஓடும் தேர், மற்ற வீதிகளில் ஓட, தேரில் மாற்றங்கள் செய்தாக வேண்டும். மோட்டார் காராக உருமாற வேண்டும்”. தமிழிலக்கிய ரத வீதிகளில் தேர் ஓட்டிய “விஷ்ணுபுர இலக்கிய வட்டம்” ரத வீதியை தாண்டிய தேரோட்டத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டபடி இருக்கிறது. திங்கள் அன்று செய்தித்தாள்களில் வெளிவந்த குறிப்புகள் அதற்கான கட்டியம்.
செவ்வாய் காலை, அண்ணாச்சி வீடடைந்ததை உறுதிபடுத்திக்கொள்ள போன் செய்தேன்… “யோகேஸ்வரா… எப்படி இருக்க…” என்றபடி பேச ஆரம்பித்தார். நான் வீடு திரும்பிக் கொண்டு இருந்த ரயில் நீடாமங்கலத்தை தாண்டியிருந்தது. இருபுறமும் பச்சையாய் தெரியும் வயல்வெளிகளை நோக்கிக் கொண்டு இருந்தேன்.. முகம் கொள்ளா சிரிப்புடன், குழந்தையின் குதூகலத்துடன் பேசிக்கொண்டிருக்கும் அண்ணாச்சியின் முகம், பச்சைவயல்களினோடே அலையலயாய் ஏறி இறங்கியவண்ணம் தெரிய ஆரம்பித்தது.
“புதியவன்” – கோவையில் இருந்து அண்ணாச்சி ஊர் திரும்பிய சொகுசு பேருந்தின் பெயர்.பாபநாசம் வந்தடைந்த தாமிரபரணியாய், அகம் அடங்கிய அண்ணாச்சியாய் , புதியவனாய், வெளிப்படுவாராக!
நட்புடன்,
யோகேஸ்வரன் ராமநாதன்.
��������������������������������� ������������, ���������������������������
��������������������������� ������������������������������������������������������������������������������������ ������������������������
������������������������ ������������������������ ���������������������������������,
��������������� ��������������������� ��������������������������������� ��������������������� ��������������������������������� ��������������� ������������������������������������. �� ��������������������������� ������������������������������������������������ ������������������������������������ ������������������������������.�������� ��������������� ��������������������������������������� ������������������ ������������������������ ������������������������ ��������������������������� ��������������������������� ��������������. ������������������������ ��������������� ������������ . ������. ������������������,�� ������������. ������������������������������������������ ������������������������������ ������������������������������������ ������������ ��������������������������������������������������� ������������������ ���������������������������.
��������� ��������������� ������������������������������ ������������������ ��������������������������� ������������������ ��������������������������� ��������������� ��������� ������������������������������ ���������������������������, ������������ ��������������������������������������� ������������������ ������������������������������ ������������������������������������������ ������������ ������������������ ������������������������������������ ��������� ���������������������������.�������������������������������������� ������������������������������������ ��������������������� ������������ ������������������ ������������������ ������������������ ������������������ ������������������������ ������������������������ ������������������������ ������������������������������ ������������������������������������ ������������������������������������������������ ������������ ��������������������������� ���������������������������������.�������������������������������������������� ��������������������� ������������������������ ��������������������������������� ������������������������ ������������������ ��������������������� ��������������� ��������� ��������������������������� ������������������������. ������������ ������������������������������ ��������� ���������������������������������������������, �������������������������������������� ������������������������
��������������������������� ������������������������ ������������ ��������� ������������������������������ ��������� ������������������������ ������������������������ ������������������������ ������������������ ��������������� ���������������������������������.��������������������������������� ������������������ ������������������������ ��������������������������� ��������������������� ��������� ������������������������ ������������������������. �������������������������������� ��������������� ��������������������� ������������ ������������������������ ���������������������������������������, ��������������������������������� ��������������������� ������������������������������������������ ���������������.
��������������������������������������� ������������
������������.������������������������ ���������������������������������
���������������������.
��������������������������������� ������������������������������ ��������������� ������������������������������������ ��������������������������� ��������������������������������� ��������������������������������������������������������� ������������������ ������������ 2014������������������������ ������������������������������������ ��������������������� ������������������������������������������ ������������ ������������������������ ��������������������� ������������������������������������������������. ������������������������������ ���������������������������, ������������������������������������������ ������������������������������, ���������������������������, ������������������������������������������ ������ ��������������������� ������������������������������. (������������ ��������������������������� ������������������������ ������������������ ��������������������������������� ������������������������ ��������� ������������������������ ���������������������������������. ��������������� ��������������������� ��������������������������� ��������������������������� ������������������������ ������������������������ ���������������������������������) ����������������������� ����������������������������������������������������������� ��������������������������������������� ������������������, ��������������������� ��������������� ������������������ ������������ ��������������������� ��������������� ��������������������������������������������� ��������������������������� ������������������������������������������������ ��������������������������� ��������������������������������� ��������������������������������������� ������������������������. ��������������� ������������������������������ ������������������������ ��������������������� ������������ ������������������������������ ���������������������������, ������������������ ������������������������������������ ��������� ��������������������������������� ��������������������� ������������������ ��������������������� ���������������������.
��������������� ��������������������������� ������������ ��������� ��������������� ��������������� ������������������������������������������������������������.�� ������������ ��������������������� ��������������� ������������������������������������������������������������������������������. ����������������� ��������������� ������������������������������ ��������������� ��������������������� ������������������ ������������������ ������������������, ������������������������ ��������� ��������������������� ������������������������������, ������������������������������������, ��������������������� ��������������� ��������������������� ��������������������� ������������������������������, ��������������� ��������������� ������������������������������ ������������������ ��������������� ���������������������������, ��������������������� ��������������������������������������� ������ ��������������������������������� �������������������������������������������� ������������������������ ������������������������ ���������������������������������������������. ������������ ��������������� ��������������������������������� ���������������������������, ��������������������������������� ��������������������� ������������������ ������������������������������ ��������������������� ���������������������������������������������������������������������.�� ������������������������ ��������������������� ��������������������� ��������������� ������������������������������������ ������������������������ ���������������������������������, ������������ ������������������������������������ ��������������������� ������������������������������������ ��������������� ������������������ ��������������� ���������������������������������������������������. ��������� ������������������ ������������������ ������������������������ ���������������������������������.
���������������
���������������������������������.
������������������������������ ������������������������, ������������������������������������������ ������������������������������������������������ ������������������������������������������������������ ������
��������������������������������� ������������������������������������������������ ��������������������������������� ������������������������������������������. ������������ ��������������������������������� ���������������������������������������������������������������. ��������������������������� ������������������������ ��������������������������������������������� ������������������������ ��������������������� ������������ ��������������������������������� ��������������������������������� ��������������������� ������ ���������������������������. ������������������ ��������������������������������� ��������������������������������� ��������� ������������������ ������ ������������������������������. ��������������� ��������������������������������� ��������������������������������� ������������ ������������������������������������������ ������������������������������. ��������������������� ������������������. ��������������� ��������������������� ��������������������������������������������������� ��������� ��������������������������������������� ��������������������������� ������������������������������������.
��������������������������������������� ������������. ������������ ��������������������������������������� ��������� ��������������������� ������������������������ ������������������������. ������������������������������������������ ������������������������������������ ��������������� ������������������������������������������ ������������. ��������������������� ������������������������������������������������, ������������������������������ ��������������������� ������������������������������������������ ��������� ��������������������������������� ���������������������������������������. ��������������������������������� ��������������������������������������� ������������������ ������������������������ ������������������������������������������. ��������������������������������������������� ������������������������������������ ���������������������������. ������������������������������������������������ ��������������� ��������������������� ������������������������������������������������ ������������������������������������������������������. ��������������� ��������������������� ��������������� ���������������������������. ������������������ ������������������������������������ ��������������������������������� ��������������� ������������������������������������ ��������������������� ��������������������������������������� ��������������������������� ������������������������������������������ ��������������������� ���������������������������. ��������������������� ��������������� ��������������������� ��������������� ���������������������������. ��������������� ������������������������ ��������������� ������������������ ������������������������ ���������������������. ��������������������� ��������������������������������������������� ���������������������������������.
��������������� ������������������������������������������ ��������������������������������������������� ���������������������������������������. ������������������ ��������� ��������������� ������������������ ���������������������������. ��������������������������������� ������������������ ���������������������������. ������������������ ��������������������������������� ��������������������������� ��������������������� ������������������������������. ��������������������������� ��������������� ��������� ���������������������������. ����������������������������������������� ��������������������������� ���������������. ������������������������������������������ ������������������������������. ������������ ������������. ������������ ������������������������������������������. ��������� ������������ ������������ ������������ ������ ��������������������� ��������������������������������������������� ������������������������������. ��������������������������������������� ������������������������ ���������������, ��������������� ������������������������������ ��������������������������� ��������������������������� ��������������������������������������� ���������������������. ������������������������������������������ ������ ������������������ ������������������������ ���������������������������������.
���������.���������.������������������������������������������
விஷ்ணுபுரம் விழா, கடிதங்கள்
மகிழ்மலர் இறைவாழ்த்துஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
முதல் முறையாக விஷ்ணுபுரம் இலக்கிய விருதுகளில் பங்கு கொள்கின்றேன். பொதுவாகவே இலக்கியவாதிகளின் சந்திப்புகள் இனிமையானவை. பல மூத்த எழுத்தாளர்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது குறிப்பாக திரு. நாஞ்சில் நாடன் திரு . சோ. தருமன், திரு. விக்ரமாதித்யன் போன்றோரின் சந்திப்புகள் இளம் எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும்.
இது போன்ற நிகழ்வுகள் மக்களை இலக்கியம் நோக்கி அழைத்துச் செல்ல மிக உறுதுணையாக இருக்கும், இளம் வாசகர்களுக்கு உண்டான தயக்கங்களை போக்குவதற்கும் இந்த வகையான சந்திப்புகள் வகை செய்கிறது. முதன்முறையாக புத்தகத்தில் மட்டுமே கண்ட உங்களை நேரில் கண்டது அற்புத அனுபவமாக இருந்தது இதுபோன்ற முயற்சிகள் வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் உள்ள இடைவெளியை குறைக்கிறது. படைப்பாளிகளின் படைப்பு ஏற்படும் சந்தேகங்களை நேரடியாக கேட்டு அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது. மேடை வடிவமைப்பு மிக நேர்த்தியாகவும், வசீகரமாகவும் இருந்தது
உங்களுடன் உரையாடிய அந்த சில நிமிடங்களை என் நினைவில் மீண்டும் மீண்டும் கொண்டு வந்து மகிழ்கிறேன்.விஷ்ணுபுரம் விருது வழங்கும் நிகழ்வில் உங்களது உரை சிறப்பாக இருந்தது. மறக்க இயலாத நாளாக மாற்றிய திரு ஜெயமோகன் அவர்களுக்கும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கும் நன்றி.
தமிழ்க்குமரன் துரை
திரு.ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம்.
விஷ்ணுபுரம் விழாவிற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை வருடாவருடம் அதிகரித்திருக்கிறது என்பது நான் 2014லிருந்து தொடர்ச்சியாக வந்துக் கொண்டிருப்பவள் என்ற முறையில் மிகுந்த பெருமையளிக்கிறது. எண்ணிறைந்த வாசகர்கள், திட்டமிடப்பட்ட நிகழ்வுகள், அரங்குகள், உணவுக்கூடங்கள் என எல்லாமே கனகச்சிதம். (நான் எப்போதும் தங்குமிட வசதியை கோருவதில்லை என்பதால் அது குறித்து சொல்லவில்லை. ஆனால் அதுவும் கச்சிதமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை) இம்முறை மட்டுநிறுத்துனர்கள் அறிமுகப்படலம் தாண்டி, சபையில் நிலவி விடும் சிறு மௌனத்தை இட்டு நிரப்புபவர்களாக இருந்தாலே போதுமென்றளவுக்கு கேள்விகள் தெளிவாகவும் கச்சிதமாகவும் இருந்தது. சின்ன வீரபத்ருடு அரங்கில் நீங்கள் அவர் கூறியவற்றை உள்வாங்கி, அடுத்த நிமிடங்களில் அதை திரள்வாக்கி சொன்னது உங்கள் இடத்தை“ சொன்னது.
ஆரம்ப நாட்களில் இதனை ஒரு கூடல் என்று திட்டமிட்டிருக்கலாம். சிறு நிகழ்வு என்று உத்தேசிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இன்றோ இந்நிகழ்வு தமிழ் இலக்கிய உலகின் திரண்ட முகமாக, அடையாளம் காண வேண்டிய படைப்புகள், படைப்பாளிகள், தன்னறம் போன்ற நிறைவான காந்திய அமைப்புகள், அழிசி போன்ற தன்னலமற்று இயங்கி வரும் கலைஞர்கள், வளர்ந்த எழுத்தாளர்கள் என எல்லோரையும் முன்னிறுத்தும் கலாச்சார நிகழ்வாக மாறியிருக்கிறது. இதன் மையம் நீங்கள்தான் என்றாலும், இவ்விழாவில் நீங்களோ உங்கள் படைப்புகளோ எங்குமே முன்னிறுத்தப்படுவதில்லை. அடையாளம் காணப்பட வேண்டிய தமிழ் படைப்பாளிகளை உயர்த்தி பிடிப்பதோடு, மற்ற மாநிலங்களின் முக்கிய படைப்பாளிகளை இங்கு கொண்டு வந்து நிறுத்துகிறீர்கள். இது மேலும் மேலும் வளர்ந்து பெருகட்டும்.
நன்றி
கலைச்செல்வி.
யோகேஸ்வரன் ராமநாதன், செல்வராணியுடன் விக்ரமாதித்யனின் துணைவியார்அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விருதுவிழாவிலும் நிகழ்விலும் கலந்துகொண்டேன். நான் ஆறாண்டுகளாக வந்துகொண்டிருக்கிறேன். வண்ணதாசன் விழாவில் கலந்துகொண்டபின் இதைப்போல இன்னொரு விழா விஷ்ணுபுரம் அமைப்புக்கு அமையாது என எண்ணினேன். அதற்கு வண்ணதாசனின் கரிஷ்மாவும் ஒரு காரணம் என நினைத்தேன். ஆனால் அதிலிருந்து ஆண்டுதோறும் விழா வளர்ந்துகொண்டே இருக்கிறது. இம்முறை உச்சம். ஆனால் இன்னும் நாலைந்தாண்டுகளில் இது மிகச்சிறியதாக தெரியுமென நினைக்கிறேன்.
மிகச்சிறப்பான விழா. இந்த விழாவைப்பற்றி ஒரே வரியில் இப்படிச் சொல்வேன். பார்வையாளர்களை முக்கியமாகக் கருதி நிகழ்த்தப்பட்ட விழா. பொதுவாக இலக்கியவிழாக்கள், கூட்டங்கள் எல்லாம் பார்வையாளர்களை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. அரைமணிநேரம் பேசவேண்டியவர் ஒன்றரை மணிநேரம் பேசிக்கொல்வார். பேசத்தெரியாதவர் பேசிக்கொண்டே இருப்பார். கேள்விகேட்கிறேன் என்று எழுந்து சம்பந்தமில்லாமல் உளறித்தள்ளுவார்கள். ஏண்டா வந்தோம் என்று ஆகிவிடும். அன்றாட வாழ்க்கையில் சுயதொழிலில் மண்டை காய்ந்துதான் இலக்கிய நிகழ்ச்சியின் அறிவிப்பை பார்த்துவிட்டு கிளம்பி வருகிறோம். வந்தால் ஏண்டா வந்தோம் என்று ஆகிவிடும். ஆனால் நாலைந்து மாதம் கடந்து மீண்டும் வருவோம். இதுதான் இலக்கியவாசகனின் தலையெழுத்து.
இங்கே ஒருவார்த்தைகூட அர்த்தமில்லாமல் பேசப்படவில்லை. ஒருவர் கூட எல்லை கடந்து பேசவில்லை. தேவையில்லாத எவருமே பேசவில்லை. அதைவிட மிகச்சரியான நேரத்தில் எல்லாம் நடைபெற்றது. இன்றைக்கு நேரம் மிக முக்கியம். எல்லாருக்குமே அவசரங்கள் உள்ளன. மிகக்கச்சிதமாக நிகழ்ந்தது. நல்ல உணவு. நல்ல புத்தகக்கடைகள். ஒரே குறை நல்ல காபி டீ ஏற்பாடு செய்திருக்கலாம் என்பதுதான். நிகழ்ச்சியில் ஜெய்ராம் ரமேஷ், சின்ன வீரபத்ருடு ஆகியோரின் அரங்குகள் மிகச்சிறப்பாக இருந்தன. திருச்செந்தாழை சோ தருமன் சிறப்பாக பேசினார்கள்.
ஆர்.எஸ்.சண்முகசுந்தரம்
ஸ்ரீராகமோ- சினிமாவில் இருந்து மேடைக்கு
சில பாடல்கள் வளர்வது வியப்பூட்டுவது. கடந்தகால ஏக்கம் துள்ளும் பாடல்களுக்கு கேரளத்தில் என்றும் முதன்மை இடம் உண்டு. ஏனென்றால் மலையாளிகளில் பெரும்பாலானவர்கள் கேரளத்துக்கு வெளியே வாழ விதிக்கப்பட்டவர்கள். கேரளமே அவர்களுக்கு ஓர் ‘இழந்த சொர்க்கம்’ தான். அவற்றில் ஒன்று இப்பாடல்.
1994 ல் வெளிவந்த பவித்ரம் என்னும் சினிமாவுக்காக ஓ.என்.வி. குறுப்பு எழுத, சரத் இசைமைத்த பாடல் இது. சரத் வாசுதேவன் என்னும் சரத் அன்று 25 வயதான இளைஞர். பாலமுரளிகிருஷ்ணாவின் மாணவர். தன் பதினாறு வயதிலேயே பின்னணிப் பாடகராக அறிமுகமானார். தன் இருபத்தொரு வயதில் இசையமைப்பாளர் ஆனார். அவர் இசைமைத்த இடண்டாவது படம் இது.
சரத்சரத் பின்னர் பல படங்களுக்கு இசையமைத்தார். இசைக்கான விருதுகளையும் பெற்றார். இன்று இசைநிகழ்வுகளின் நடுவராக அறியப்படுகிறார். அவருடைய பிற்காலப் பாடல்கள் பெரும்புகழ் பெறவில்லை. தமிழில் அவர் தாரை தப்பட்டை படத்துக்காக இளையராஜா இசையமைப்பில் பாடிய ‘இடறினும்’ பரவலாக அறியப்பட்ட பாடல்
பவித்ரம் மரபிசைப் பாடல்கள் நிறைந்தது. இப்படத்தில் இப்பாடல் இன்று கேரளத்தின் ஒரு ‘கல்ட் கிளாஸிக்’ பெரும்பாலான இசைநிகழ்வுகளில், குடியரங்குகளில் இது ஒலிக்கிறது.
சினிமாவில் யேசுதாஸ் பாடியது. சுமாராகவே காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இசைமெட்டில் இருந்த நேர்த்தி மொத்த இசையொழுங்கில் இல்லை என்றே சொல்லவேண்டும். ஆனால் அதை பின்னணி இசை இல்லாமல் வெறுமே வாயால் பாடும்போது ஆழ்ந்த உணர்வுத்தளம் உருவாகிறது. அதைக் கண்டடைந்து பரப்பியவர் அகம் இசைக்குழுவின் ஹரீஷ் சிவராமகிருஷ்ணன் .
வெவ்வேறு அரங்குகளில் வெவ்வேறு வகையில் இப்பாடலை விரித்தெடுத்து ஓர் உச்சத்தையே அடைந்திருக்கிறார்கள் அகம் குழுவினர். மூலவடிவை விட நூறு மடங்கு பிரபலமானது ஹரீஷ் பாடிய வடிவம். பல மேடைகளில் பலவகையான விரிவாக்கங்கள், பலவகையான பாடுமுறைகளில் பாடியிருக்கிறார்.
இவ்வாறு நிகழ்வது இந்திய சினிமாவிலேயே அரிதானது. ஏற்கனவே ‘செம்பகத் தைகள் பூத்த மானத்து’ போன்ற பாடல்கள் சினிமாப்பாடல்களாக இருந்து உம்பயி போன்ற கஸல் பாடகர்களால் மேடைகளில் கஸல் வடிவில் புகழ்பெறச் செய்யப்பட்டன. ஆனால் இப்பாடல் அந்த பாணியில் ஒருவகை உச்சம்.
ஸ்ரீராகமோ தேடுந்நு நீ
ஈ வீணதன் பொன் தந்தியில்
ஸ்னேகார்த்ரமாம் ஏதோ பதம்
தேடுந்நு நாம் ஈ நம்மளில்
நின் மௌனமோ பூமானமாய்
நின் ராகமோ பூபாளமாய்
என் முன்னில் நீ புலர் கன்யயாய்
பிலாவிலப் பொன் தளிகையில்
பால்பாயசச் சோறுண்ணுவான்
பின்னெயும் பூம்பைதலாய்
கொதி துள்ளி நில்குவதெந்தினோ
செங்கதளிக் கூம்பில்
செறு தும்பியாய் தேனுண்ணுவான்
காற்றினோடு கெஞ்சி
ஒரு நாட்டு மாங்கனி வீழ்த்துவான்
இனியுமீ தொடிகளில் களியாடான் மோகம்.
கோயிலில் புலர்வேளையில்
ஜயதேவ கீதாலாபனம்
கேவலானந்தாம்ருத
திரயாழியில் நீராடி நாம்
புத்திலஞ்ஞிச் சோட்டில்
மலர்முத்து கோர்க்கான் போகாம்
ஆனகேறா மேட்டில் இனி
ஆயிரத்திரி கொளுத்தாம்
இனியுமீ நடகளில்
இளவேல்கான் மோகம்
ஸ்ரீராகமோ- ஹரீஷ் மேடைநிகழ்வு-2
ஸ்ரீராகத்தையா தேடுகிறாய் நீ
இந்த வீணையின் பொன் தந்தியில்?
அன்பில் நனைந்த ஏதோ பாடலை
தேடுகிறோம் நாம் நம்மிடையே
உன் மௌனம் பூத்தவானமாகியது
உன் காதல் பூபாளமாகியது
என் முன் நீ புலரிமகளானாய்!
பலா இலைப் பொன் கிண்ணத்தில்
பால்பாயசச் சோறு அருந்த
மீண்டும் கைக்குழந்தையென
ஆசைகொண்டு ஏன் நிற்கிறேன்?
செங்கதலி வாழைப்பூவில்
சிறு தும்பியென தேன்குடிக்க
காற்றிடம் மன்றாடி
ஒரு நாட்டு மாம்பழம் வீழ்த்த
இனியும் இந்த தோட்டத்தில்
விளையாடி அலைய மோகம்கொண்டேன்
கோயிலில் விடிகாலையில்
ஜயதேவ கீதத்தின் ஆலாபனை
தூய ஆனந்தத்தின் அமிர்த
அலையாழியில் நீராடினோம் நாம்
பூத்த இலஞ்சி மரத்தடியில்
மலர்முத்து கோக்கச் செல்வோம்
யானை ஏறா மேட்டில் இனி
ஆயிரம் தீபங்கள் கொளுத்துவோம்
இனியும் இந்த வாசல்களில்
இளைப்பாறவே விழைகிறேன்
என் உரைகளின் பிரச்சினைகள்
வணக்கம் ஐயா,
YouTube இல் வெந்து தணிந்த காடு ட்ரைலர் பார்த்து, அதை அலசி பார்த்ததில், கதை by B Jeyamohan என்று பார்த்தேன். இன்னும் சற்று தேட நீங்கள் பிறந்த ஊர் திருவரம்பு என்று தெரியவர எனக்கு ஆர்வம் தூண்டியது. நான் எனது பதினான்கு வயது வரை அருமனை மற்றும் குலசேகரம் பகுதில் மாறி மாறி வாசித்தேன். ரப்பர் தோட்டங்களில் கிரிக்கெட் விழையாடிருக்கிறேன்.
தங்கள் மேடை பேச்சு மற்றும் பேட்டிகளை YouTube இல் கேட்டு உங்களை பற்றி எனக்கு ஒரு ஐந்து நாட்களாக தெரியும் . நான் இந்த கடிதம் எழுதும் காரணத்தை கடைசியில் கூறுகுறேன்.
நீங்கள் உங்கள் பேச்சில் பிறருடைய கருத்துகளையும் ஆமோதித்து, அது உங்கள் எண்ணத்துக்கு எதிர்மறையா இருந்தாலும் அதுயும் சரி தான் என்று வெளிப்படையாக எதிர்த்து ஆதரித்து உள்ளீர்கள். ( சீ என்கின்ற மலையளத்து கதை).
“சாருவின் கலாட்டா கேள்விகளுக்கு ஜெயமோகனின் ஜாலியான பதில்” – இந்த காணொளில் எந்த கேள்விற்கும் தடுமாறாமல், கேட்குற எங்களுக்கு உங்கள் பதிலில் எந்த சமாளிப்பும் இல்லை என்று தோன்றியது. ராஜா மற்றும் பாரதி பாஸ்கர், திரு ரஜினி காந்த் அவர்களை பற்றி கேட்டயுடன், எனக்கு அவ்வளவு நட்பு இல்லை என்று உண்மையை சொன்னீர்கள்.
அமெரிக்கவில் கறுப்பின மக்கள் இன்னும் பல துன்பங்கள் படுகிறார்கள் என்று ஒரு காணொளில் சொல்லும் போது வியப்பாக இருந்தது, ஏனென்றால் நான் கேள்விப்பட்ட அமெரிக்கா “Black Lives Matter”.
சில காணொளி பார்த்தயுடன் உங்கள் பேச்சில் ஈர்க்கப்பட்டு மேலும் பல காணொளிகள் பார்க்க வேண்டும் என்று ஆர்வம் உண்டானது. மன்னிக்கணும் ஐயா உங்கள் எழுத்துகளை இன்னும் படிக்க ஆரம்பிக்காவில்லை. இரண்டு முறை வெண்முரசு படிக்க ஆரம்பித்து மேலே தொடரமுடியவில்லை. அந்த அளவிற்கு எனக்கு தமிழ் புலமையில்லை, மற்றும் வாழ்க்கை அனுபவம், விமர்சனம் போன்ற விஷயங்களில் தான் எனக்கு ஆர்வம் அதிகம்.
நான் இந்த கடிதம் எழுதும் காரணம், நாம் எவ்வளவு தான் வேறு இடங்களுக்கு சென்றாலும் நமது உச்சரிப்புகளில் விளவங்கோடு உச்சரிப்பு கண்டிப்பாக இருக்கும். இது இயற்கையே. ஆனால் பலரும் அதை அப்படி பார்க்காமல் கேலி செய்யுறார்கள் . நாடுகடத்தப்பட்டால் ஆஸ்திரேலியா செல்ல விரும்புகிறேன் என்று நீங்கள் சொல்ல, உங்களுக்கு ஆஸ்திரேலியா சொல்ல வராது என்று YouTube கமெண்ட் இல் ஒருவர் கேள்வி எழுப்பிருப்பார்.
நீங்கள் மேடையில் சிறப்பாக பேசினாலும் ஒரு சில வார்த்தைகள் அப்படியே விளவங்கோடு உச்சரிப்பு வந்து விடுகிறது. அதிலும் குறிப்பாக “பெரிய” மற்றும் “நிறைய” ஆகிய இரு வார்த்தைகள் அதிகம் பயன்படுத்துகிறீர்கள், அப்படியே விளவங்கோடு உச்சரிப்புடன். இந்த இரு வார்த்தைகளின் உச்சரிப்புக்கு கொஞ்சம் கவனம் செலுத்தினால் நான் மிக மகிழ்ச்சி அடைவேன். இது என்னுடைய தாழ்மையான கருத்து.
இப்படிக்கு
வெந்து தணிந்த காடு மற்றும் விடுதலை ஆகிய படங்களை ஆவலுடன் எதிர்பார்க்கும்,
Jerkin Kenneth
அன்புள்ள ஜெர்க்கின்
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை. என் உச்சரிப்பில் மலையாளம் இருப்பதாக நண்பர்கள் சொல்வதுண்டு. ஆனால் கல்குளம்- விளவங்கோடு மக்களுக்கு தெரியும், அது என் ஊரின் உச்சரிப்பு நெடி. அது என் அடையாளம். அதை மாற்றிக்கொள்ள நான் ஏதும் செய்வதில்லை. என் வாசிப்பு, உரையாடல் வழியாக இயல்பாக அமையும் மாற்றங்கள் வரட்டும்.
என் உச்சரிப்பில் நிறைய குறைகள் உண்டு. என் சொற்றொடர்களில் கடைசிப்பகுதியை மூச்சாக வெளிவிடுகிறேன். என் குரலுக்குப் பழகியவர்களால் மட்டுமே என் உரைகளை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஓர் அகவைக்குப் பின் எவரும் குரல், உடல் பழக்கங்களை மாற்றிக்கொள்ள முடியாது. உடலும் அகமும் பழகிவிட்டிருக்கும்.
ஜெ
December 28, 2021
விஷ்ணுபுரம் விழா -1
விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள்
விழாவுக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கும்போது எல்லாவகையான பிரச்சினைகளும் எழுந்து வரும். அறைகள் பதிவுசெய்வது முதல். இது தங்களைப் போன்ற தன்னார்வலர்களால், எழுத்தாளர்களால் செய்யப்படுவது என்பது பலருக்கும் நினைவிருப்பதில்லை. ஆகவே முடிவில்லாத கோரிக்கைகள். பெரும்பாலும் அனைத்துமே நிறைவேற்றப்பட்டுவிடும். ஆனாலும் பல எஞ்சியிருக்கும். நான் சுக்குவெந்நீர்தான் குடிப்பேன், அதை தனியாக ஏற்பாடு செய்து தரவேண்டும் என்பதில் தொடங்கி நான் இன்னின்னாருடனேயே தங்குவேன் என்பது வரை.
ஆனால் சில கோரிக்கைகளை பரிசீலிப்பது கொஞ்சம் கஷ்டம். பெயர் சொல்ல விரும்பாத ஓர் இளைஞர் கேட்டார், ‘சார் போகன் சங்கர் எங்க தங்கறாரோ அந்த பில்டிங்ல எனக்கு எடம் வேண்டாம். வேற எடம் குடுக்க முடியுமா?’
ஏதோ இலக்கியச் சண்டைபோல என எண்ணி “ஏன்? என்ன பிரச்சினை?”என்றேன்
“அவரு நிறைய பேய் விஷயங்கள் சொல்றார்”
“அப்படியா?”என்றேன் “நீங்க எதுக்கு அதையெல்லாம் கேக்கறீங்க?”
“இல்லசார், அப்டி பேய்க்கதை சொல்ற இடத்திலே நிஜம்மாவே பேய்கள் வந்திடும். நான் போனவாட்டி பாத்தேன்”
“நேரிலயா? பேயையா?”
“ஆமா, ஆனா தெளிவா இல்லை…ஒரு மாதிரி நிழல் மாதிரித்தான்… ஒண்ணுக்கு போக எந்திரிச்சு நடக்கிறப்ப….”
இலக்கியவாதிகளின் நரம்புச் சிக்கல்கள் இலக்கியத்திற்கு மிகப்பெரிய வாய்ப்புகள். அந்த இளைஞர் நல்ல கதையாசிரியர் ஆவார் என நினைக்கிறேன்.
விஷ்ணுபுரம் விருது விழா தொடங்கப்பட்டு 12 ஆண்டுகளாகின்றன. அதை அவ்வப்போது திகைப்புடனும் நிறைவுடனும் நானே சொல்லிக்கொள்கிறேன். தமிழில் தொடங்கப்பட்ட இலக்கிய விருதுகள், இலக்கிய அமைப்புகள் இத்தனை காலம் தொடர்ச்சியாக நீடிப்பது அரிது. முன்பைவிட பெரிதாக வளர்வது அரிதினும் அரிது.
இந்த விழா இவ்வண்ணம் நீடிப்பதற்கு நவீனத் தொழில்நுட்பம் அளிக்கும் தொடர்புகள் மிகப்பெரிய காரணம். இந்த இணையதளம் அதன் விளைவு. இத்தனை குறைவான செலவில் இவ்வளவுபெரிய தொடர்புவலையை, அமைப்பை இருபதாண்டுகளுக்கு முன்பு உருவாக்கியிருக்க இயலாது. முன்பு இலக்கியம் சிற்றிதழ்களுக்குள் சிறையுண்டிருந்தது. இணையமே அதற்கான வாசல்களை திறந்தது. இன்றும்கூட பெரிய அச்சிதழ்கள் சீரிய இலக்கியத்திற்கு எதிரானவையே. உதாரணமாக, தமிழ் ஹிந்து நடத்திய இலக்கியவிழாவுக்கு வைரமுத்துதான் நாயகனாக இருந்தார்.
இலக்கியமென்னும் இயக்கம் மீது நம்பிக்கை கொண்டு வந்துகொண்டே இருக்கும் இளைஞர்கள் இவ்விழா வ்வண்ணம் பெரியதாக மாற இன்னும் பெரிய காரணம். இதற்கான ஒரு தேவை நம் சூழலில் இருந்துகொண்டே இருக்கிறது. ஒன்றுகூட, உரையாட, கற்க.
வேறெந்த மொழியிலும் இல்லாத ஒரு போக்கு தமிழில் உண்டு. இங்கே இலக்கியத்தை நாம் நிறுவிக்கொண்டே இருக்கவேண்டும். இலக்கிய அடிப்படைகளை திரும்பத் திரும்பப் பேசி, கேளிக்கை எழுத்துக்கும் பிரச்சார எழுத்துக்கும் இலக்கியத்துக்குமான வேறுபாட்டைச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். ஏனென்றால் இலக்கியத்திற்கு எதிரான வணிக- அரசியல் சக்திகள் இங்கே மிகமிக ஆற்றல்கொண்டவை.
செந்தில்குமார்- விழா ஒருங்கிணைப்பாளர்கேளிக்கை எழுத்து – பிரச்சார எழுத்து -இலக்கியம் என்னும் பிரிவினையை நாம் எத்தனை விளக்கினாலும் ஒரு வாசகர் தன்னளவில் வாசித்து உணர்ந்தாலொழிய அதைப் புரிந்துகொள்ள முடியாது. வாசிக்காதவர்கள் உண்டு. உணர்ந்துகொள்ளும் ஆற்றலற்றவர்களும் உண்டு. அவர்கள் தொடர்ச்சியாக இலக்கியத்தை மறுத்து வணிக எழுத்தை, பிரச்சார எழுத்தை முன்வைத்துக்கொண்டேதான் இருப்பார்கள். இலக்கியத்தை மட்டம்தட்டிக்கொண்டும் இருப்பார்கள். ஏனென்றால் இலக்கியம் அவர்களின் இருப்பையே கேள்விக்குரியதாக்குகிறது. இலக்கியம் வணிக எழுத்தோ, பிரச்சாரமோ அல்ல என்பதன் கண்கூடான சான்றே அத்தளங்களில் உள்ளவர்கள் அடையும் பதற்றமும், அவர்களின் தொடர் எதிர்ப்பும்தான்.
இலக்கியத்தின் அழகியல் சார்ந்த தனி இயக்கமுறையை எவருக்காகச் சொல்கிறோம் என்றால் அதை உணரும் திறன்கொண்டவராக இருந்தும் சூழலால் திசைதிருப்பப்படும் இளைய தலைமுறையினரை நோக்கி மட்டுமே. அவர்களிடம் சென்றபடியே இருக்கவேண்டியிருக்கிறது. தலைமுறைக்குச் சிலர் என ஒரு வட்டம் அதற்கு உருவாகும். அதற்குள் இலக்கியம் திகழும். உலகமெங்கும் அவ்வாறே. அமெரிக்காவில் அவ்வட்டம் பெரியது, நம்முடையது மிகச்சிறியது, அவ்வளவுதான் வேறுபாடு. அவ்வட்டத்தை நாம் முடிந்தவரை விரித்தெடுக்க முயலவேண்டும். இவ்விழாக்களின் நோக்கம் அதுவே.
அறுபடாமல் இவ்வியக்கத்தை நிலைநாட்டுவது ஒன்றே எங்கள் இலக்கு. நேற்று சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், பிரமிள், க.நா.சு, சி.சு.செல்லப்பா புதுமைப்பித்தன் என பலர் அவ்வியக்கத்தை தலைமுறை தலைமுறையாக நடத்தி நமக்குக் கையளித்திருக்கிறார்கள். அது நம் கையில் இருந்து முன்செல்லும். பழிக்கப்பட்டாலும் ஒதுக்கப்பட்டாலும் தளராமல் அது என்றும் இப்பண்பாட்டின் மையமென நீடிக்கும். அதை அவ்வண்ணம் கொண்டுசெல்லும் கடமை நமக்குண்டு.
விஷ்ணுபுரம் முதல் விருதுவிழா 2010ல் நிகழ்ந்தபோதே அவ்வண்ணம் இது முன்செல்லும் என்னும் நம்பிக்கையை அடைந்தேன். அன்று புதிதாக வந்து சேர்ந்த இளைஞர்கள் பலர் இருந்தனர். அவர்களில் பலர் விழாவை தாங்கள் ஏற்றுக்கொண்டு முன்னெடுத்தனர். இந்த பன்னிரண்டு ஆண்டுகளில் அவர்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களில் சிலர் இன்று அறியப்படும் எழுத்தாளர்கள். இன்று விழா பலமடங்கு பெரிதாகிவிட்டிருக்கிறது.
ஜெய்ராம் ரமேஷுடன் ராம் குமார்இது என்னைச் சார்ந்து நிகழலாகாது. என் படைப்புகள் பேசப்படவே கூடாது என்பது ஒருபக்கம். அது நான் என்னை முன்வைப்பதாக ஆகிவிடும். இந்த விழாவின் நாயகர் விருதுபெறுபவர். முக்கியத்துவம் விருந்தினர்களாக வரும் படைப்பாளிகளுக்கு மட்டுமே. முதல் விழா முதல் நெறி இதுவே. அதை விட முக்கியமானது இவ்விழா நடப்பதிலும் நான் முதன்மைப் பங்கு வகிக்கலாகாது, இது தானாகவே நடக்கவேண்டும் என்பது.
ஆகவே நான் கூடுமானவரை அனைத்தில் இருந்தும் என்னை விலக்கிக் கொண்டிருக்கிறேன். இன்று விழா ஒருங்கிணைப்பு, விருந்தினர்களை முடிவுசெய்வது உட்பட எதிலும் என் பங்கென ஏதுமில்லை. முழுக்க முழுக்க விஷ்ணுபுரம் நண்பர்களின் பெரும்பணி இது. ஒவ்வொரு ஆண்டும் என் பங்களிப்பை திட்டமிட்டே குறைக்கிறேன். நான் முற்றாக இல்லாமலாகும் போதும் இது தொடரவேண்டும் என விரும்புகிறேன். இளைய தலைமுறையினரின் வழி இது தொடருமென்னும் நம்பிக்கையையும் அடைந்திருக்கிறேன்.
இசை, ஏ.வி,மணிகண்டன்அந்நம்பிக்கை மீண்டும் உறுதியான நாள் இன்று. நான் டிசம்பர் 24 அன்று காலையிலேயே கோவை வந்துவிட்டேன். நண்பர்களுடனான அரட்டையும் சிரிப்புமாக ஒருநாள் சென்றது. காலையிலேயே பல நண்பர்கள் வந்தனர். மாலை சென்னை நண்பர்கள். விஷ்ணுபுரம் சந்திப்புகள் என்றால் நிரந்தரமாக ஒரு கல்லூரிச் சூழல் நிலவும். கேலியும் சிரிப்பும். இந்த விழாக்கள் இத்தனை தீவிரமாக நீடிப்பதற்கான காரணம் அந்த நட்புச்சூழலே.
நான் முன்னரே ஒரு முடிவை எடுத்திருந்தேன், இம்முறை விவாத அரங்குகளிலும் கூடுமானவரை பேசலாகாது என்று. வழக்கமாக அரங்குகள் சற்று சம்பிரதாயமாக ஆகின்றனவா, ஆழ்ந்துசெல்லாமல் இருக்கின்றனவா, கேட்டாகவேண்டிய கேள்விகள் தவறுகின்றனவா என்று ஐயம் வந்தால் நான் எழுந்து கேள்விகள் கேட்பேன். அரங்கில் இளம் படைப்பாளிகள் இருந்தால் சற்று கூடுதலாகவே கேள்விகளைக் கேட்பேன். இம்முறை அதை தவிர்த்து என் இன்மை எந்த அளவுக்கு தெரிகிறது என்று பார்த்தேன். எவ்வகையிலும் அது அங்கே ஒரு பொருட்டாக இல்லை. அது நிறைவளித்தது.
யோகேஸ்வரன்விஷ்ணுபுரம் விருந்தினர் அரங்கின் முழுவிவாதமும் அரங்கின் கூட்டான உளவிசையால் முன்னெடுக்கப்பட்டது. இன்றைய வாசிப்புச் சூழலில் இயல்பாக எழும் எல்லா வினாக்களும் எழுந்து வந்தன. அவற்றுக்கான பதில்களில் எப்போதுமே ஒரு ஆச்சரியம் எஞ்சும். இலக்கியம் சார்ந்த பதில்கள் ஊகிக்கக்கூடியவை, ஆனால் அந்த ஊகம் எப்போதும் தோற்கடிக்கவும்படும். அதுவே நேருக்குநேர் சந்திப்பின் ஆற்றல்.
இந்த விருந்தினர் அரங்கு கலவையானது. இலக்கியத்திற்குள் நுழையும் படைப்பாளிகள் முதல் சாதித்தவர்கள் வரை பலதரப்பட்டவர்கள் இங்கே அவைகொள்கின்றனர். ஒவ்வொருவரிடமும் வாசகர்களுக்குக் கேட்க ஏதேனும் சில உள்ளன. என்னென்ன கேள்விகள் வரும் என்பதை எவராலும் ஊகிக்கமுடியாது.
அதேபோல கேள்விகளுக்கு பதிலளிப்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி உள்ளது. காளிப்பிரசாத் பெரும்பாலான கேள்விகளை ஒருவகையான விலக்கத்துடனும் நகைச்சுவையுடனும் எதிர்கொண்டார். மாறாக செந்தில் ஜெகன்னாதன் நடுக்கத்துடன், வாழ்க்கைப்பிரச்சினையை எதிர்கொள்பவர் போல பதில் சொன்னார். விக்ரமாதித்யனோ சோ.தர்மனோ ஒரு கேள்வியில் இருந்து நெடுந்தொலைவு சென்றனர். செந்தில் ஜெகன்னாதன் சுருக்கமான சரியான பதில்களை மட்டும் சொன்னார்.
அதேபோல எம்.கோபாலகிருஷ்ணன் கேள்விகளுக்கு கோட்பாடாகவோ கொள்கையாகவோ எதையும் ஆக்கிவிடக்கூடாது, தனிப்பட்ட அபிப்பிராயம் என்னும் எல்லைக்குள் நின்றபடியே எதையும் சொல்லவேண்டும் என்னும் தமிழ்ச் சிற்றிதழ்மரபுக்குரிய எச்சரிக்கையுணர்ச்சியுடன் பதில் சொன்னார். பெரும்பாலான கேள்விகளுக்கு அறுதியான எதையும் சொல்லாமல் தன் புனைவுலக அனுபவம், தன் வாசிப்பனுபவம் சார்ந்து மட்டுமே விளக்கம் அளித்தார். இத்தகைய விளக்கங்கள் பெரும்பாலும் எதையும் குறிப்பாக உணர்த்தாதவையாக, ஆனால் அந்த ஆசிரியனின் புனைவுலகம் மற்றும் அவன் ஆளுமைக்குள் செல்லும் வழிகளாக அவை திகழ்கின்றன.
இன்னொரு எல்லையையும் குறிப்பிட்டாகவேண்டும். கோகுல் பிரசாத் ஒருவகையான ’தூய’ அகவய உலகை இலக்கியத்தில், கலையில் எதிர்பார்ப்பவர் என்று உரையாடல்கள் காட்டின. நேர் மறு எல்லையில் ஜா. தீபா எல்லாவற்றையும் சமூகச்சூழலில் வைத்துப்பார்ப்பவராக, சமூக விசைகளின் விளைவாக அலைக்கழிக்கப்படுவதாக வாழ்க்கையை அணுகுபவராகத் தோன்றினார். தீபாவின் உலகம்தான் சோ.தர்மனுக்கும். புனைவின் யதார்த்தம் வழியாக உலகை சித்தரிக்கும் பா.திருச்செந்தாழையும் புனைவின் உருவகத்தன்மை, தொன்மங்கள் வழியாக ஓர் உலகை உருவாக்கும் சுஷீல்குமாரும் இரு எல்லைகள்.
கலைடாஸ்கோப்பை திருப்புவதுபோல ஒருமணிநேரத்திற்கு ஒருவர் என வெவ்வேறு படைப்பாளிகள் மேடையிலமர்ந்து தங்களை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பதென்பது ஓர் அரிய இலக்கிய அனுபவம். இலக்கியவிழாக்களின் கொடை என்பது இதுதான்.
விவாதங்களில் பங்கெடுத்தவர்களில் பலரும் தமிழின் முதன்மையான இலக்கிய ஆளுமைகள். சு.வேணுகோபால், லக்ஷ்மி மணிவண்ணன், போகன் சங்கர், சாம்ராஜ், பாவண்ணன், விஷால்ராஜா, அமிர்தம் சூரியா என தங்களுக்கான தனி அழகியல் பார்வையும் நிலைபாடுகளும் கொண்டவர்களின் கருத்துக்களே அரங்கை தமிழிலக்கியக் களத்தின் மாதிரிவடிவமென ஆக்கின. இங்கு பேசப்பட்ட கருத்துக்கள் வெளியிலும் நீட்சிபெறும் என நினைக்கிறேன்.
இம்முறை நிகழ்வுக்கு முந்தைய ஆண்டுகளை விட பங்கேற்பு மிக அதிகம். பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். அதை சின்ன வீரபத்ருடு மேடையில் வியந்து சொல்லிக்கோண்டே இருந்தார். நான் சிறிய இடைவேளைக்காக அரங்கைவிட்டு வெளியே சென்றாலும் புகைப்படம் எடுத்து, நூல்களில் கையெழுத்திட்டு, ஒவ்வொருவரிடமும் ஓரிரு சொற்கள் பேசி அரங்குக்கு மீள நெடுநேரமாகியது.
அடிப்படையான சில வினாக்கள் வினாக்களாக எழுப்பப்பட்டு விவாதிக்கப்பட்டன. ஒன்று, புனைவெழுத்தாளர் எந்த அளவுக்கு ஒரு சூழலில் ஒட்டுமொத்தமாக முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கு தன்னை கொடுக்கலாம் என்பது. ஜா.தீபா அரங்கில் மணிவண்ணன் அதை முன்வைத்தார். உண்மையில் நாம் நம் அனுபவத்தை ஒட்டி சிந்திப்பதாகவே எண்ணுவோம். ஆனால் நம்மையறியாமலேயே சூழலில் உள்ள பொதுக்கருத்துக்களைச் சொல்லிக்கொண்டிருப்போம். கருத்தியல் எழுத்தாளனின் அந்தரங்க உண்மை நோக்கி அவன் செல்வதை தடுக்கிறது என்று அவர் சொன்னார்
இன்னொரு விவாதம் புனைவுமொழியில் கவிதைத்தன்மை எந்த அளவுக்கு உதவியானது என்பது. கவிதை தன் இயல்பான சுதந்திரத்துடன் முன்னகர்கிறது. அது விட்டுச்சென்ற தடங்களைத் தொடர்ந்து சென்று அதன் பலவீனமான நகல்களை உரைநடையாளர்கள் புனைவுமொழியில் உருவாக்குகிறார்களா? புனைவுமொழியில் தன்னியல்பான கவிதை சாத்தியமா? பா.திருச்செந்தாழை அரங்கில் போகன் அந்த வினாவை எழுப்பினார்.
தொன்மங்களை உண்மையான வாழ்க்கை அனுபவங்களுக்கு மாற்றாக முன்வைக்க முடியுமா, அது ஒருவகையில் பழமைக்கு தப்பிச் செல்வதல்லவா என்ற கேள்வி சுஷீல்குமார் அரங்கில் எழுந்து வந்தது. வெறும் யதார்த்தச் சித்திரம் மட்டுமே புனைவுக்கு போதுமா என்ற கேள்வி செந்தில் ஜெகன்னாதன் அரங்கில் எழுந்து வந்தது. ஏற்கனவே விஷால்ராஜா கட்டுரையாக எழுதிய கேள்விதான் அது. கோகுல் பிரசாத்திடம் அவர் ஹெர்ஷாக் போன்ற திரைப்படைப்பாளிகளைப் பற்றிப் பேசும்போது அவர்களுக்கு பண்டைய ஓப்பராக்களின் காலம் முதல் இருந்து வரும் அழகியல் தொடர்ச்சியை பற்றி அறியாமல் பொதுவாக மதிப்பிடுகிறாரா என்ற வினா எழுப்பப்பட்டது.
இத்தகைய அடிப்படைக் கேள்விகளுக்கு அந்த ஆசிரியரிடம் அவருடைய பதிலைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாமே ஒழிய அறுதியான முடிவை நோக்கிச் செல்லமுடியாது.அவற்றை அரங்குகளுக்கு வெளியேதான் பேசி நீட்சிபெறச் செய்யவேண்டும். ஆனால் அவை அங்கே ஆக்கபூர்வமான ஓர் உரையாடற்களத்தை உருவாக்கின.
ஜெயகாந்த் ராஜுவிழாக்களில் மட்டுமே நம்மால் ஒருநாளுக்கு நான்கு சினிமா பார்க்கமுடியும். பன்னிரண்டு மணிநேரம் இசைகேட்க முடியும். எட்டு மணிநேரம் இலக்கியம் பேச முடியும். களியாட்டாக நிகழும் கல்வியே மெய்யான கல்வி. இந்நிகழ்வை விழா என ஆக்கிக்கொள்ளவேண்டும் என்னும் ஆவல் இருந்தது. மெல்லமெல்ல பெரிய விழாவாக ஆகிக்கொண்டிருக்கிறது. ராஜகோபால் விவாத அரங்கை ஒருங்கிணைக்க அனங்கன், கதிர்முருகன், ஷாகுல் ஹமீது ஆகியோர் உதவிசெய்தனர்.
அரங்குகள் முடிய இரவு ஒன்பது தாண்டிவிட்டது. அதன்பின் உணவு. இம்முறை எல்லா அரங்குகளிலும் ஏறத்தாழ நாநூறு பேர் கலந்துகொண்டனர். மதிய உணவுக்கு ஐநூறு பேர். ஒரு நடுத்தரத் திருமணம்போல. சிறப்பான விருந்து உணவு. வழக்கம்போல என் பிரியத்திற்குரிய விஜய்சூரியனின் ஏற்பாடு.
அதன்பின் வழக்கம்போல அரட்டைகள். என் அறைக்குள் நண்பர்கள் வந்தபடி இருந்தனர். வசந்த் உடனிருந்தார். ஒருகட்டத்தில் அறைக்குள் ஐம்பதுபேர் வரை நெருக்கியடித்து அமர்ந்திருந்தனர். வேடிக்கைகள் சிரிப்புகளினூடாக சென்ற நூறாண்டுகளில் தமிழ் வார இதழ்கள், வணிக இலக்கியம் வளர்ந்து வந்த பாதையும் அவ்வுலகின் மையமான ஆளுமைகளும் பற்றி நினைவுகூர்ந்து பேசிக்கொண்டே இருந்தோம். நண்பர் மது சம்பது அவற்றைப்பற்றி ஒரு நூலாவது நான் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்
பன்னிரண்டு மணிக்கு வலுக்கட்டாயமாக அவையை கலைத்தோம். வெவ்வேறு இடங்களில் அரட்டை சிறப்பாக நடைபெற்றது என்றார்கள். விக்ரமாதித்யனும் லக்ஷ்மிமணிவண்ணனும் பேசிய ஒரு கூட்டமும், சோ.தர்மன் பேசிய ஒரு கூட்டமும் கலைந்து நண்பர்கள் திரும்பி வந்தனர். மீண்டும் ஒரு உரையாடல் என் அறையில். அவர்களைக் கலைக்க இரண்டரை மணி ஆகியது. அதன்பின் நானும் கிருஷ்ணனும் அஜிதனும் ஷாகுல் ஹமீதும் மீண்டும் பேச ஆரம்பித்து நான்கு மணி ஆகியது.
ஷாகுல் அவர் தூங்கி இரண்டுநாள் ஆகிறது என்று பரிதாபமாக கோரினார். சரி என்று நான் படுத்துக்கொண்டேன். கிருஷ்ணன் வேண்டுமென்றே அவர் அருகே சென்று அமர்ந்து கப்பல் பற்றிய ஐயங்களை கேட்டார். கையால் தலையை முட்டுக்கொடுத்து குழறும் குரலில் அந்த ஐயங்களுக்கு பதில் சொன்னார். ஒருவருக்கு நன்கு தெரிந்த ஒன்றை ஐயமாக நாம் கேட்டால் அந்தப்பதிலைச் சொல்லாமல் அவரால் தூங்க முடியாது என்பது கிருஷ்ணனின் கண்டுபிடிப்பு
நாங்கள் நான்கு மணிக்கு தூங்கி ஆறு மணிக்கே எழுந்தோம். ஷாகுலை நாலரை மணிக்கே வந்து சேரும் விருந்தினர்கள் கூப்பிட்டு எழுப்பிவிட்டனர். அவர் கிளம்பிச் சென்றிருந்தார். காலையில் எழுந்தபோது நடுவே கொஞ்சநேரம் தூங்கியதாகவே தோன்றவில்லை. ஒரேநாளின் நீட்சி என்றே தோன்றியது.
எழுதும் முறை எது?
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நீண்ட காலமாக உங்களிடம் இந்தக் கேள்வியை கேட்க வேண்டும் என்ற ஆசை.
நீங்கள் மிகவும் வேலைப்பளு உள்ளவர். நிறைய படிக்கிறீர்கள். உங்களுக்கு வரும் கடிதங்களை படித்துப் பார்த்து பதில் எழுதும் போது நீங்கள் கைப்பட எழுதுவீர்களா ? இல்லை. மென்பொருள் ஏதும் கொண்டு (app) ஆடியோ மூலம் சொல்வதை மொழிமாற்றம் செய்து கொள்வீர்களா?
நன்றி,
சத்ய நாராயணன்
ஆஸ்டின் டெக்சாஸ்
அன்புள்ள சத்யா,
நான் கையால் எழுதுவதில்லை. தட்டச்சு செய்கிறேன். என்எச்எம் மென்ம்பொருள் பயன்படுத்தி, ஆங்கில எழுத்துக்கள் வழியாக தமிழை எழுதுகிறேன்.
சொல்லி எழுதவைப்பதில்லை. அந்த மென்பொருளுக்கு நானும் எனக்கு அதுவும் பழகவில்லை. அது மிக உதவியானது என நண்பர்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். எனக்குச் சரிவரவில்லை.
எல்லா கடிதங்களும் தட்டச்சு செய்யப்படுபவையே
ஜெ
விஷ்ணுபுரம் விழா 2021- கதிர் முருகன்
விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள்
அன்புள்ள ஜெ வணக்கம்…
என்றென்றும் நினைவில் நிற்க்கப்போகும் மற்றுமொரு இரண்டு நாட்கள். விஷ்ணுபுரத்தின் மூலம் இதுவரை நிகழ்ந்தவற்றிலேயே எல்லாவகையிலும் பிரம்மாண்டமான உணர்வுப்பூர்வமான மகத்தான இலக்கியவிழா இதுவே என உணர்கிறேன்.
இரண்டு நாட்களில் பன்னிரண்டு அமர்வுகள் ஆவணப்படம் திரையிடல் மற்றும் விருது விழா. மூன்று நூல்கள் வெளியிட்டு அறிமுக விழா. ஒவ்வொரு அமர்விலும் நானூறு பேருக்கு அருகில் வாசகர்கள். சில அமர்வுகளில் அமர இடம் இல்லை. இந்த நிகழ்வை ஒட்டி சிறுகதைகள் நாவல்கள் கவிதைகள் கட்டுரைகள் என ஆயிரம் பக்கங்களுக்கு மேல் வாசிக்க வேண்டி இருந்தது.
உங்களாலும் நண்பர்களாலும் பங்கேற்ற படைப்பாளிகள் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளின் பக்கங்களே 500க்கும் மேல் இருக்கும். சுபாவின் மொழிபெயர்ப்புகள் லோகமாதேவி அக்கா மற்றும் ரம்யாவின் கட்டுரைகள் விஷால் ராஜாவின் செந்தில் ஜெகநாதன் சிறுகதைகள் குறித்த கட்டுரை எல்லாம் தரத்திலும் அளவிலும் விரிவானவை.
கவிஞர் விக்ரமாதித்தன் அவர்களின் நீண்ட படைப்பு வாழ்க்கையில் இத்தனை ஆண்டுகளில் அவர் படைப்புகள் குறித்து எழுதப்பட்டதை விட இந்த விருதை ஒட்டி எழுதப்பட்து அதிகம். விருதின் பரிசுத் தொகையும் ஒன்றிலிருந்து மூன்று லட்சங்கள் என எல்லாவற்றிலுமே ஒரு புதிய உச்சம்.
24 ம் தேதி வெள்ளி காலை ரயில்வே ஸ்டேஷனில் உங்களை பார்த்த உடனேயே விழா மனநிலை பற்றிக் கொண்டது. நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து குவிய குவிய வெள்ளி மாலை ராஜஸ்தானி மண்டப வாயிலை பார்த்த பொழுது விழா நாள் அமர்வுகளின் தேநீர் இடைவேளையில் நின்று பேசிக்கொண்டிருக்கும் உணர்வுதான் எழுந்தது.
விருது வழங்கத் தொடங்கிய ஆரம்ப ஆண்டுகளில் மாலை ஓற்றை விழா என துவங்கி அடுத்தடுத்து நண்பர் சந்திப்புகள் அதிகரித்து ஒரு நாள் இரண்டு நாளாக வளர்ந்து வரையறுக்கப்பட்ட திட்டமிட்ட அமர்வுகளாக விரிந்து இவ்வாறாக மலர்ந்துள்ளது. வரும் ஆண்டுகளில் மூன்று நாள் நான்கு நாள் ஒரு வார கலைத்திருவிழாவாக கூட மாறும் என்ற எண்ணம் தோன்றியது.
முதல் அமர்வே கச்சிதமான தொடக்கம். தமிழினி மின் இதழ் ஆசிரியரும் உலக திரைப்பட விமர்சகருமான கோகுல் பிரசாத் அவர்களுடையது.நரேன் நெறிப்படுத்தினார்.
கோகுலின் பதில்கள் மேடையில் உரையாற்றும் மொழி நடையில் இல்லை. நான்கு பேருக்குள் பேசிக்கொள்ளும் சாதாரண பேச்சு வழக்கும் இல்லை.இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு நடையில் மென்மையான குரலில் பேசியது அழகாக இருந்தது.தமிழினி 36 இதழ்கள் தன் ஆசிரியத்துவத்தில் கொண்டு வந்துள்ளார். அவர் பார்வையில் உலகின் தலைசிறந்த 100 திரைப்படங்கள் குறித்த விமர்சனத்தை எழுதியுள்ளார் (நூலாக வர இருக்கிறது). குறிப்பிடும்படியானன வாசிப்பும் கொண்டுள்ளதால். நிமிர்வுடன் அரங்கை எதிர் கொண்டார்.
கலை என்றால் என்ன. கிளாசிக் என்பதின் வரையறை என்ன. விமரிசகனின் எல்லை என்ன என்பதிலெல்லாம் உறுதியான நிலைப்பாடுகளை முன்வைத்தார்.தமிழினி மின்னிதழை முன்னோடி முதன்மையான இதழ் என்று குறிப்பிட்ட பொழுது அவருடைய இளமைக் காலத்திலேயே பதாகை சொல்வனம் எல்லாம் வந்து விட்டதாக கூறினார்
மேலும் அமிர்தம் சூர்யா அ.முத்துலிங்கம் கதைகள் மீதான அவருடைய காட்டமான விமர்சனத்தை குறித்து எழுப்பிய கேள்விக்கு இளம் வயதில் அவ்வாறு எழுதி விட்டேன் இப்போது எனில் அவ்வாறு கூறியிருக்க மாட்டேன் என்று பதில் கூறினார்.
விஷால்ராஜாஇந்த நிகழ்வை வெறும் ஒலி வடிவில் யாராவது கேட்டால் இவருக்கு ஒரு ஐம்பது அறுபது வயது இருக்கும் என்று எண்ணி விடுவார்கள்:)தற்போதைய தீவிரம் குறையாது இருக்கும் பட்சத்தில் கலை இலக்கியத் துறைகளில் மிக முக்கியமான இடத்தை வந்தடைவார் என்று தோன்றியது.கோகுல் பிரசாத் அவர்களின் அரசியல் சமூகவியல் பண்பாட்டு பார்வைகளில் எனக்கு நிறைய முரண்பாடுகள் இருந்தாலும் முழு அமர்வையும் மிகவும் ரசித்தேன்.
இந்த மேடையை கேள்விகளை மிக நேர்மையோடு எதிர் கொண்டார் என்ற எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்தது எனக்கு. நரேன் எப்போதும் போல மிகச் சிறப்பாக அமர்வை நடத்தினார்.
இரண்டாம் அமர்வு எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் அவர்களுடன் சௌந்தர் ஜி ஒருங்கிணைப்பில் இனிமையாக நிகழ்ந்தது.
நாவல்கள் சிறுகதைகள் கவிதைகள் மொழிபெயர்ப்புகள் இதழாசிரியர் என 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கிய உலகில் ஆழங்கால் பட்டவர். தான் பிறந்த ஊர் தன் குடும்பம் சார்ந்த நெசவுத் தொழில் பற்றிய பின்னணிகள். ஒவ்வொரு பத்தாண்டிலும் தொழில்களில் சமூகச் சூழல்களில் ஏற்படும் மாற்றங்கள் ஆண் பெண் உறவில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றிய அவரின் விளக்கங்களை எல்லாம் கேட்பதற்கு ஒரு மணி நேர அமர்வு எவ்வகையிலும் போதுமானதல்ல.
ஆத்மார்த்திஅவருடைய வாழ்க்கை அனுபவம் வாசிப்பு மற்றும் படைப்பு மனம் எல்லாம் சேர்ந்து கைதேர்ந்த உரையாடல்காரராக இனிய கதைசொல்லியாக உயர்ந்து நிற்கிறார்.புனைவும் நிஜமும் சந்திக்கும் புள்ளி அதன் மூலம் அவர் அலுவலகத்தில் எதிர்கொண்ட சிக்கல்கள். இத்தனை ஆண்டுகளில் தன் பணிச் சூழல் குறித்து ஏண் எதுவுமே எழுதியதில்லை என்பதையெல்லாம் விவரித்தது அபாரம்.
ஹிந்தியில் இருந்தும் ஆங்கிலத்தில் இருந்தும் மொழிபெயர்ப்பதில் இருக்கும் வேறுபாடுகள் குறித்த அவரின் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். எம் கோபாலகிருஷ்ணன் அவர்களின் படைப்புலகிற்குள் ஆழ்ந்து செல்ல இந்த அமர்வு பல்வேறு வகைகளில் மிகவும் உதவியாக இருந்தது.தெளிவு முதிர்ச்சி நிதானம் இந்த மூன்றும் மொத்த அமர்விலும் முயங்கி நின்றது.
மூன்றாவது அமர்வு எழுத்தாளர் நண்பர் காளிப்ரசாத் லோகமாதேவி அக்கா ஒருங்கிணைப்பில்.
தன் சிறுகதைத் தொகுப்பு மற்றும் மொழி பெயர்ப்பின் மூலம் வாசகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள காளி 35 கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.நம்மில் ஒருவராக சாதாரணமாக பழகிக் கொண்டிருந்த ஒருவர் திடீரென ஒரு ஆளூமையாக உருவெடுத்து வந்ததன் ஆச்சரியம் எனக்கு அந்த அமர்வு முழுவதுமே இருந்தது.
சாம்ராஜ்பொதுவாகவே காளி பிரசாத் எதையுமே நேரடியாக சுருக்கமாக கணம் கூடிய தொனியில் பேசுபவர் அல்ல. எந்த ஒன்றை சொல்வதற்கும் இன்னொன்றை உதாரணமாக சொல்லி தான் அவரால் கூற முடியும். அந்த உதாரணங்கள் பெரும்பாலும் பகடியாக இருக்கும். அவரின் இந்த இயல்பு அமர்வில் வெளிப்பட்டது. ஆயினும் கூடுதலாக ஆழமும் துல்லியமும் கூடியிருந்தது அவரின் பதில்களில்.
நான்காவது அமர்வு.எழுத்தாளர் நண்பர் சுஷீல்குமார் சுரேஷ் பாபுவின் மட்டுறுத்தலில்
சுஷீல் எழுதத் தொடங்கிய குறுகிய காலத்திலேயே இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை கொண்டு வந்துவிட்டார். கதைகளும் பரவலாக படிக்கப்பட்டு வாசகர்களை ஈர்த்துள்ளதை அமர்வில் உணர முடிந்தது.கேள்விகளை அவர் எதிர்கொண்ட விதத்தில் பதில்களின் தரத்தில் இருந்த முதிர்ச்சியும் நிதானமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
நாஞ்சில்நாட்டு முன்னோடி எழுத்தாளர்களின் மொழிநடையின் வட்டார வழக்கின் பாதிப்பு எனக்கு இருக்கலாம் ஆனால் என்னுடைய தரிசனம் வேறாகத்தான் இருக்கும் என்று போது அவரிடம் வெளிப்பட்ட உறுதி ஆச்சரியத்தை தந்தது.
ஐந்தாம் அமர்வு எழுத்தாளர் செந்தில் ஜெகநாதன் ஈரோடுசந்திரசேகர் ஒருங்கிணைப்பில் நிகழ்ந்தது.
அவருடைய கதைகள் எனக்கு பிடித்து இருந்தது அவர் குறித்து விஷால் ராஜா எழுதிய கட்டுரையும் முக்கியமானது என்பேன்.
கிருஷ்ணன் சங்கரன்(மிகுந்த யோசனைக்குப் பின்னரே கீழே உள்ளதை எழுதுகிறேன்) இலக்கியம் மற்றும் திரைத்துறை குறித்த அவருடைய பார்வைகள் மற்றும் அரங்கில் இருந்து வந்த கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் எல்லாமே அதீதமான கச்சிததன்மை கொண்டுள்ளதாக எனக்குத் தோன்றியது. ஒரு சொல் அவரிடம் இருந்து வெளிப்பட வேண்டும் என்றாலும் அவருக்குள் இருக்கும் எடிட்டரின் அனுமதி பெற்றே வர முடியும் என்பது போன்ற.மாறாத திட்டவட்டமான கருதுகோள்களோடு இருக்கிறார்.
ஆனந்தகுமார் மற்றும் சுஷீல் குமார் நூல்கள் வெளியீடுடன் மதிய அமர்வுகள் நிறைவடைந்தது.
ஆறாவது அமர்வு எழுத்தாளர் ஜெ.தீபா அவர்களுடன்.ரம்யா மட்டுறுத்தினார்.
ஆவணப்பட மற்றும் திரைத்துறை அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். சு.வேணுகோபால் லக்ஷ்மி மணிவண்ணன் போகன் சங்கர் போன்ற சமகாலத்தின் முக்கியமான படைப்பாளுமைகளின் கேள்விகள் இந்த அமர்வின் முக்கியமான பகுதி என்பேன்.
திரு ஜெ.தீபா அவர்களின் கதைகளை படித்துள்ளேன்.முகநூலில் சமகால நிகழ்வுகளுக்கான அவரின் எதிர்வினைகளையும் தொடர்ந்து படித்து வருபவன் என்ற வகையில் அவர் எழுத்துக்களுக்கான உந்து சக்தியை எதிர்ப்புணர்வின் மூலம் அடைகிறாரோ என்று தோன்றுகிறது.
ஆணாதிக்கத்தையோ மரபின் சிக்கல்களையோ எதிர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் இருந்து எழுந்தாலும் படைப்புச் செயல்பாடு என்பது ஆயிரம் விமர்சனங்களை விட எல்லா வகையிலும் மேலானது தான் எனினும் சு.வேணுகோபால் அவர்கள் கேட்டதை போல ஆண்களின் உலகையும் ஆண்கள் படும் துயரங்களையும் அவர் எழுதுவார் எழுத வேண்டும் என்று விரும்புகிறேன்.
ஏழாவது அமர்வு ஈரோடு கிருஷ்ணன் மட்டுறுத்தலில் எழுத்தாளர் திருச்செந்தாழை அவர்களுடையது.
நெடுங்காலமாக எழுதிக் கொண்டிருந்தாலும் திருச்செந்தாழை அவர்களின் சமீபத்திய சிறுகதைகள். மொழி கூறும் முறை மற்றும் கதை களம் என பல்வேறு காரணங்களால் பெரும் பாராட்டுக்களை பெற்றது.
நாள் ஒன்றிற்கு சராசரியாக ஐநூறு மனிதர்களை சந்திக்கும் வியாபார பின்னணி கொண்டிருப்பதாகவும் தான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனுமே ஒவ்வொரு நாவல்கள் என குறிப்பிட்டார்.
சுஷீல்குமாரின் ‘சப்தாவர்ணம்’ நூல்வெளியீடுதன் தொழிலில் வெல்வதற்கு ஒரு கால்குலேட்டரை போல செயல்பட வேண்டும் எனவும் ஆதாயம் இல்லாத ஒருவனிடம் மூன்று வரிகளுக்கு மேல் பேசக்கூடாது ஐந்து நிமிடத்திற்கு மேல் ஒருவனிடம் பேசினால் நிச்சயமாக அவ்வுரையாடல் மூலம் லாபம் வர வேண்டும் என்பதுதான் அவருடைய தினசரி வாழ்வு எனக் குறிப்பிட்டார். இதன் உச்சமாக வாழ்க்கை என்பதே ஒரு வியாபாரம் வியாபாரம் என்பது போரே என்றார்.
ஈரோடு கிருஷ்ணன் தன் இரும்புப் பிடிக்குள் மொத்த அமர்வையும் வைத்திருந்தார். இடைவெளி இன்றி அனைவரையும் கிருஷ்ணனால் சிரிக்க வைக்க முடிந்ததை மிகவும் ரசித்தேன்.தேவதச்சன் அவர்களுடனான சந்திப்பு அனுபவங்களை திருச்செந்தாழை கூறியதை மறக்கவே முடியாது.
ஆனந்த்குமார் டிப் டிப் டிப் கவிதைநூல் வெளியீடுஎன் உரைநடை கவிதையைப் போல் இருக்கிறது என்பது எனது வெற்றி அல்ல கவிதையின் தோல்வி என்று கூறினார். கடைசி டினோசர் கவிதைத் தொகுப்பை தாண்டும் அல்லது இணையான கவிதைகள் கடந்த 20 ஆண்டுகளில் வெளி வரவே இல்லை என்றும் கூறினார்.இந்த மன நிலையை அவர் வந்தடைந்ததன் காரணங்களை விளக்கி ஒரு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும்.
எட்டாவது அமர்வு எழுத்தாளர் சோ.தர்மன் ஜிஎஸ்எஸ்வி நவீன் ஒருங்கிணைப்பில்.
அமர்வு தொடங்கும் போது மணி இரவு எட்டு காலை முதல் இடைவிடாத உரையாடல்கள் பெரும்பாலோனோர் முந்தைய நாள் இரவில் பயணம் செய்து உறக்கம் கெட்டு வந்திருந்தனர். அத்தனை சோர்வையும் பறந்தோடச் செய்தது சோ.தர்மன் அவர்களின் உற்சாகமும் ஆழமும் நிரம்பிய உரை. கிட்டத்தட்ட நவீனுக்கும் பார்வையாளர்களுக்கும் எந்த வேலையும் இல்லை வெடித்து சிரிப்பதை தவிர.
நூல் வெளியீடு: கல்பனா ஜெயகாந்த் எழுதிய கவிதைநூல் “இம்ம் என்றமைந்திருக்கும் ஆழ்கடல் – கல்பனா ஜெயகாந்தின் கவிதைத் தொகுப்பு யாவரும் பதிப்பகம்கோவில்பட்டி எழுத்தாளர்களின் பின்னணி தேவதச்சன் அவர்களுடனான இவரின் உறவு அவர் செய்து வரும் விவசாயம் அதன் மூலம் அவர் பெற்ற இயற்கை அறிதல்கள் என பல தளங்களை தொட்டார்.14 முறை ஜெயில் சென்று வந்த அனுபவம். வனவாசிகள் உடனான அவரின் ரகசிய சந்திப்புகள் நரிக்குறவர்கள் உடன் முயல் வேட்டைக்கு சென்ற போது கிடைத்த அனுபவங்கள் என ஒவ்வொன்றும் ஒரு நாவலுக்கான களங்கள்.
தன்னுடைய புத்தகங்கள் எதிலும் கைப்பேசி எண் முகவரி குறிப்பிடுவதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருப்பதன் காரணம் வந்து குவியும் கவிதை தொகுப்புகளை தவிர்ப்பதற்காகத்தான் என்றார் :))
பிரியம்வதா [மொழிபெயர்ப்பாளர்]பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் பறவைகள் மற்றும் தூக்கணாங் குருவிக் கூட்டை வைத்து பருவமழையை கணிப்பது எப்படி என அரிய தகவல்களின் களஞ்சியம் ஐயா அவர்கள்.
சுதந்திரம் பெற்ற போது தமிழகத்தில் இருந்த 39,600 கண்மாய்களில் பெரும் பகுதி அழிந்து விட்டதை கவனப்படுத்தினார். அரசும் மக்களும் நீர்நிலைகளுக்கு செய்துவரும் அநீதியை இன்றும் வேளாண்மை செய்து வரும் ஒரு விவசாயியாக எழுத்தாளராக நம் காலத்தின் அறத்தின் குரலாக ஓங்கி ஒலித்தார்…
இரண்டாம் நாள் ஞாயிறு காலை ஒன்பதாம் அமர்வு. கவிஞர் வடரேவு சின்ன வீரபத்ருடு அவர்கள் அமர்வு பல வகைகளில் மிக முக்கியமானது.
மகத்தான ஆசிரியர் ஒருவரால் தெலுங்கு கவிதையைப் பற்றியும் இலக்கியம் பற்றியும் நிகழ்த்தப்பட்ட மிக முக்கியமான உரை இது.
ஐம்பெருங்காப்பியங்கள் ஆழ்வார்கள் நாயன்மார்கள் பாரதியார் வேதங்கள் உபநிடதங்கள் சங்க இலக்கியம் மேற்கத்திய தத்துவம் என விரிந்த தளங்களை தொட்டு அழகிய உதாரணங்களோடு பேசினார்.
இலக்கியத்தின் நோக்கமும் பயன்பாடும் பலவாக இருந்தாலும் ஆதார நோக்கம் தன்னை அறிதலே ஞானத் தேடலே. வேதங்களில் கவி என்பவன் ரிஷி கடவுளை அறிந்தவன்.ஒரு கவிதை பிறக்கும் தருணத்தை தேவையை தைத்திரீய உபநிஷத்தின் பஞ்சகோச தத்துவத்தை முன்வைத்து அபாரமான உதாரணங்களோடு விளக்கினார்.
ஒரு சூழல் அல்லது நிகழ்வு தனக்குள் நிகத்தும் மாற்றங்களை உற்று கவனிப்பதன் மூலம் தன்னை அறிந்து அதன் மூலம் உலகை அறிந்து உண்மையை அறிவதே கவிதை எனும் செயல்பாடு என்றார்.
ராஜகோபாலன், கதிர்முருகன், சௌந்தர்ராஜன்முற்போக்கு வலது இடது செல்ஃப் கான்சியஸ் சோசியல் கான்சியஸ் என்ற பிரிவுகள் கவிதைக்குள் இல்லை கவிதை நிகழ்வது ஒன் கான்சியஸ் கவிதை என்பது கவிஞனுக்குள் நிகழும் ரசவாதம் என்றார். ரஸ்ஸல் அவர்களின் தத்துவம் பற்றி கட்டுரையை குறிப்பிட்டு அறிவியலும் தத்துவமும் சந்திக்கும் வேறுபடும் புள்ளிகளை கவிதையோடு இணைத்தது பெரும் திறப்பு.
அரங்கில் இருந்த இளைஞர்களைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தார் ஆந்திராவில் பொதுவாக இலக்கியம் என்பது பென்ஷனர்ஸ் ஆக்டிவிட்டி இவ்வளவு இளைஞர்கள் அதிலும் பெண்கள் இந்த நிகழ்வுக்கு வந்தது குறித்து பெருமகிழ்ச்சி அவருக்கு.
சந்தத்திற்கு முக்கியத்துவம் தரும் ஸ்ரீ ஸ்ரீ அவர்களின் ஒரு கவிதையையும் உள்ளடக்கம் தான் முக்கியம் என்று கூறும் இஸ்மாயில் அவர்களின் ஒரு கவிதையையும் வாசித்து காண்பித்தார். இத்தனை ஆண்டு காலத்தில் இரண்டுமே முக்கியம் என்ற இடத்திற்கு தான் வந்து சேர்ந்து உள்ளதாக குறிப்பிட்டார்.
மொழிபெயர்ப்பில் எது இழந்து போகிறதோ அதுவே கவிதை மொழிபெயர்த்தாலும் இழக்காமல் எஞ்சியிருக்கும் தன்மையை கொண்டதே கவிதை என்ற மேற்கோளுடன் நிறைவு செய்தார்.வடரேவு சின்ன வீரபத்திருடு அவர்களுக்கு நன்றி…
பத்தாவது அமர்வு இயக்குனர் வசந்த் சாய் அவர்களுடயது.
எவ்வித அறிமுகமும் தேவையில்லாதவர். மாபெரும் வெற்றிப் படங்களை இயக்கியவர்.தன்னுடைய அனைத்து பின்னணிகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு இலக்கியம் மேல் பெரும் பற்றும் மரியாதையும் கொண்ட ஒரு வாசகராக அமர்வில் வெளிப்பட்டார்.
18 வயதில் பாரிசுக்கு போ படித்ததை ஜெயகாந்தன் மீதான அவரின் பிரம்மிப்பை பகிர்ந்தவர். தன் ஒட்டுமொத்த வாழ்நாளின் உச்சம் என்பது தன் இருபதாவது பிறந்தநாளில் அசோகமித்திரன் அவர்களை சந்தித்தது தான் என்று குறிப்பிட்டார் .
பத்திரிக்கைத் துறையில் இலக்கியத்தில் திரைத்துறையில் அவருடைய நெடுங்கால அனுபவங்களை மிகுந்த உயிர்ப்போடு பகிர்ந்து கொண்டார்.
பதினொன்றாம் அமர்வு கவிஞர் விக்ரமாதித்தன் அண்ணாச்சியுடையது எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணன் ஒருங்கிணைத்தார்.
ஏற்கனவே அவரை நான் சந்தித்திருந்த தருணங்களிலும் சரி விழாவுக்கு அழைத்து வந்தபோதான தருணங்களிலும் சரி நான் கவனித்தவரையில் அவருள் இருந்து அவரை இயக்குவது ஒரு துடிப்பான குழந்தை.
சமீபத்தில் அவரைப்போல் மொத்த உடலும் குலுங்கும் படி அடிவயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்கும் ஒருவரை நான் பார்க்கவில்லை.அமர்விலும் அது வெளிப்பட்டது.
அவருடனான உரையாடல் என்பதைவிடவும் தமிழ் மொழியின் பெருங்கவிகளின் மரபிலிருந்து ஒருவர் தன் சொற்களால் வந்திருந்தவர்களை ஆசீர்வதித்தாகத்தான் நான் உணர்ந்தேன்.
பன்னிரண்டாம் அமர்வு திரு. ஜெயராம் ரமேஷ் அவர்களுடன் ராம்குமார் அவர்கள் ஒருங்கிணைத்தார்.
நெடுங்காலம் பாரத தேசத்தின் தலைவிதியை நிர்ணயம் செய்யும் உயர் பதவிகளில் இருந்தவர் என்பதையெல்லாம் கடந்து துறந்து எள்முனையளவும் அவையெல்லாம் வெளிப்படாத ஒரு தூய அறிஞராக எழுத்தாளராக அரங்கினை கட்டி ஆண்டார்.
குறைந்த காலத்தில் இத்தனை நூல்கள் எப்படி எழுத முடிந்தது என்ற ராம்குமாரின் கேள்விக்கு.பல ஆண்டுகள் அதிகார பீடங்களில் இருந்துவிட்டு இனி அது இல்லை என்பதை செரித்துக்கொள்ள அதிலிருந்து வெளிவர இரண்டு மாதங்கள் பிடித்ததாக கூறி னார். அதன் பின்பு தன்னுடைய நேரம் முழுவதையும் வாசிப்பிலும் ஆய்வுகளிலும் எழுதுவதிலும் செலவிட்டதாக கூறினார். அந்த வகையில் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு தன்னுடைய நன்றியை குறிப்பிட்டார். ஒருவேளை வென்றிருந்தால் அமைச்சராக தொடர்ந்து இருப்பார் புத்தகங்கள் வந்திருக்காது என்று வேடிக்கையாக குறிப்பிட்டார்.
கீரனூர் ஜாகீர்ராஜாஆசிய ஜோதி நூலைப் பற்றி அவர் விவரிக்கையில் எத்தனை ஆர்வத்துடனும் பக்தியுடனும் அப்பணியை மேற்கொண்டார் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. தன்னுடைய பதினைந்தாவது வயதிலேயே ஆசிய ஜோதி நூலை படித்து இருக்கிறார். அதன்பின்பு அவர் வாழ்நாள் எல்லாம் அந்நூல் அவரை தொடர்ந்து இருக்கிறது.
நேருவை அம்பேத்கரை மகாத்மா காந்தியை நாராயண குருவை விவேகானந்தரை ராமகிருஷ்ண பரமஹம்சரை அயோத்திதாசரை இலட்சுமி நரசுவை எல்லாம் அந்நூல் ஈர்த்ததை விவரித்தார்.
15 ஐரோப்பிய மொழிகளிலும் 12 ஆசிய மொழிகளிலும் 12 இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. எட்வின் அர்னால்ட் அவர்களின் லைட் ஆஃப் ஆசியா நூல். மொழிபெயர்க்கப்பட்ட நாடுகளிலெல்லாம் சமூக ரீதியான பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் புத்தர் சிறிதளவேனும் இருந்துகொண்டிருக்கிறார் என்றார்.மியான்மர் இலங்கை போன்ற புத்தமத நாடுகளின் வன்முறையைப் பற்றி காளி எழுப்பிய கேள்விக்கு எல்லா இசங்களைப் போலவே புத்திசமும் பிரச்சனை தான் என்றார்.
தொழில் வளர்ச்சி பொருளாதாரம் நகரமயமாக்கம் போன்றவற்றின் பக்க விளைவுகளான இயற்கை சூழியல் பேரழிவுகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ஆம் இது மிக முக்கியமான பிரச்சனை இதை தீர்ப்பதற்கான ரகசிய மந்திரங்களோ டெக்ஸ்ட் புக் ஆன்சர்களோ இல்லை என்று கூறினார்.ஆயினும் சுற்றுச்சூழல் மாசுபடுவதை எவ்வகையிலேனும் நாம் தடுத்து நிறுத்த வேண்டும் இல்லையேல் ஆஸ்துமா முதல் கொரோனா வரை பல்வேறுவிதமான சிக்கல்களுக்கு அது காரணமாகி விடும் என்றவர்.
பத்தாண்டுகளுக்குள் இந்தியாவில் ஓடும் அனைத்து வாகனங்களும் மின்சார மயமாக்கப்பட்ட வேண்டும் அந்த மின்சாரமும் மரபுசாரா எரிசக்தி மூலமாக உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்றார். அதோடு ஒவ்வொரு தனிமனிதனும் தன்னளவில் சூழியல்
சார்ந்த விழிப்போடு செயல்பட வேண்டும் என்றார். கட்டிடங்கள் கட்டுவது முதல் சாலை அமைப்பது வரை எல்லா செயல்பாடுகளிலும் இயற்க்கை சார்ந்த கவனம் இல்லாவிடில் பெரும் விளைவுகளை நாம் சந்திப்போம் என்றார். மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த பொழுது அவர் எடுத்த பல முக்கியமான முடிவுகளுக்கு பின்னாலுள்ள கரிசனத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது.
உலகளாவிய சுற்றுச்சூழல் சார்ந்த செயல்பாடுகளுக்கு இந்திராகாந்தி அவர்கள் எப்படி முன்னோடியாக இருந்தார் என்பதை குறிப்பிட்டு இயற்கை சார்ந்த நேசமும் விழிப்பும் கொண்ட முதலும் கடைசியுமான ஒரே பிரதமர் இந்திராகாந்தி என்றார்.
கோவை நகர் உடனான அவரின் தொடர்புகள் ஆனைகட்டி சலீம் அலி பறவைகள் சரணாலயம் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்ததில் அவரின் பங்கு அவர் மனைவி ஒரு தமிழர் மாமனார் ஒரு எழுத்தாளர் என குறிப்பிட்டார்.
கை தேர்ந்த உரையாடல்காரர் பல்துறை அறிஞர் அன்பான மனிதர் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.
ஆனந்த்குமாருக்கு மதுசூதன் சம்பத் வாழ்த்துஆவணப்படம்
கடந்த 11 ஆண்டுகளில் நிகழ்ந்த விருது விழா புகைப்பட தொகுப்பு சில நிமிடங்களில் பார்த்த பிறகுகவிஞர் ஆனந்த் குமார் அவர்கள் எடுத்த வீடும் வீதிகளும் என்ற ஆவணப்படம்
திரையிடப்பட்டது. இயக்குனர் வசந்த் சாய் அவர்கள் தான் சமீபத்தில் பார்த்ததிலேயே மிகச் சிறந்த ஆவணப்படம் இது என்றார்.
விழா
கடந்த ஆண்டுகளை விட ஒரு பேச்சாளர் கூடுதல் எனினும் பேசிய ஒவ்வொருவரும் குறித்த நேரத்திற்குள் தங்கள் உரையை அழகாக கவிஞரையும் விஷ்ணுபுரம் அமைப்பையும் வாழ்த்தி நிறைவு செய்தனர்.
திரு ஜெயராம் ரமேஷ் அவர்கள் பேசும்பொழுது இவ் விழாவிற்கு செல்ல வேண்டாம் என்று அவருக்குத் தரப்பட்ட அழுத்தங்களை குறிப்பிட்டு அரசு மற்றும் கார்ப்பரேட் நிதி உதவி இல்லாமல் இந்தியாவிலேயே நிகழும் முக்கியமான பெரிய இலக்கிய விழா இது என்றார்.
உங்களுரை வழக்கம்போல…
சங்க கால கவி தொடங்கி இன்று வரை நீளும் தொடர்ச்சியின் மாலையின் ஒரு மலர் அண்ணாச்சி என்றீர்கள்.உப்புக்கும் பாடி புளிக்கும் பாடுமொரு கவி மரபில் வந்தாலும் தருவைப்புல் போல தன்னைத்தானே கொளுத்தி உலகின் வெளிச்சமாகும் புரட்சியும் தியாகமும் நிறைந்த தற்பலியாளர் நிரை என்று நீங்கள் கூறிய இடத்தில் ஒரு கணம் உறைந்தேன்.
ஜா ஜா க்விஸ் செந்தில் விஜய் சூரியன் பங்களிப்பு பற்றி புதிதாக சொல்ல வேண்டியதில்லை.எப்போதும் போலவே இந்த ஆண்டும்.
இவ்வாண்டு விழாவில் சுபாவின் பங்களிப்பு மிகமிக முக்கியமானது . மொழிபெயர்ப்புகள் செய்தது அனைத்து படைப்புகளையும் படித்து வந்து முக்கியமான கேள்விகளை அமர்வுகளில் எழுப்பியது. விழா ஏற்பாடுகளில் பயண முன் பதிவுகளில் விருந்தினர்களை அழைத்து வந்து கவனித்ததில். ஒரு அமர்வை வெற்றிகரமாக மட்டுறுத்தியதில் ஆவணப்படத்தில் மிகச்சிறப்பாக பேசியதில் என மிகுந்த அர்ப்பணிப்புடன் பங்களித்திருக்கிறார்.
சாம்ராஜ் அமிர்தம் சூர்யா குமரி ஆதவன் விக்னேஷ் ஹரிஹரன் ரம்யா லோகமாதேவி அமர்வுகளில் சிறந்த கேள்விகளை எழுப்பினார்கள்.
சனியன்று இரவு இரண்டு பேர் படுக்கும் வசதி கொண்ட உங்கள் அறையில் ஒரு அங்குல இடைவெளியின்றி 70 பேருக்கு மேல் இரவு பன்னிரண்டு வரை நீங்கள் பேச கேட்டுக்கொண்டிருந்தோம்.
காலையும் மதியமும் இரவும் நாற்பது பேர் ஐம்பது பேராக சென்று தேநீர் அருந்துவதும். ஞாயிறு இரவு விழா நிறைந்த பின் ராஜஸ்தானி சங்க படிகளில் அமர்ந்து பேசி சிரித்ததும் அமர்வுகள் அளவுக்கே முக்கியமானவை.குக்கூ- தன்னறம் நண்பர்கள் வழக்கம் போல அழகிய துணிப்பையும் நாட்காட்டியும் அனைவருக்கும் இலவசமாக வழங்கினார்கள்.
எவ்விதக் கட்டணமும் இல்லாமல் 200 பேருக்கு மேல் தங்க வைத்து 400 பேருக்கு ஆறு வேளை உணவும் தேநீரும் அளிப்பதற்கு காரணமாய் அமைந்த உலகெங்கிலும் இருக்கும் உங்களது வாசக நன்கொடையாளர்களுக்கு எனது வணக்கங்கள்…
பலமுறை கூறியதுதான் எனினும் இதை சொல்லாது மனம் நிறையாது.இலக்கியம் எனும் செயல்பாட்டின் மீது உங்களுக்கு இருக்கும் பெருமதிப்பும் அர்ப்பணிப்போடு கூடிய தீவிரமும்தான் இவ்வளவு மகத்தான வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட போகிற அறிவுவேள்விக்கு மூல காரணம் அதற்கு என்பணிவான வணக்கங்களும் நன்றிகளும்… கவிஞர் வீரபத்ருடூ கூறியதை போல more than true human being.
வெள்ளி காலை 7 மணிக்கு ரயில் நிலையத்தில் இருந்து உங்களை அழைத்துக்கொண்டு ராஜஸ்தானி சங்கம் வந்தேன் ஒவ்வொரு நண்பர்களாக வந்து கூடினார்கள் திங்கள் மாலை ஏழு மணிக்கு ரயில் நிலையத்தில் நீங்கள் விடை பெற்றுச் சென்றீர்கள் அதன்பின்பு விக்ரமாதித்தன் அண்ணாச்சியை பத்து மணிக்கு பேருந்து ஏற்றி விட்டோம் ஒவ்வொரு நண்பர்களாக விடைபெற்றுச் சென்றனர்.
வீடு திரும்புகையில் ராஜஸ்தானி சங்கம் வரை சென்று சில நிமிடங்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தேன்…நான்கு நாட்கள் நான்கு நொடிகள் என கரைந்துவட்டது என்றென்றும் இருக்கப்போகும் நினைவுத்தடங்களை பதித்துவிட்டு….
மு.கதிர் முருகன்
கோவை
விஷ்ணுபுரம் விழா, கடிதங்கள்
ஆசிரியருக்கு வணக்கம்,
இந்தியாவின் மிக முக்கியமான இலக்கிய திருவிழாவான விஷ்ணுபுரம் விருது விழா (2021) மிக சிறப்பாக நடந்து முடிந்தது.
சனி, ஞாயிறு இருதினமும் எழுத்தாளர் களை சந்தித்து அவர்களின் படைப்புகளை குறித்த விவாத அமர்வுகன் தொடர்ந்து நடைபெற்றது. எழுத்தாளர்கள் நல்ல வாசகர்களை சந்தித்த தருணம். உதாரணம் இளம் வாசகன் விக்னேஷ் ஹரிஹரன் கேட்ட கேள்விகள்.
இறுதியாக ஆவண பட திரையிடக்குப் பின் ,விருதும், கேடயமும் ,வழங்கி வாழ்துரையும் ஏற்புரையும் முடிந்து குழு புகைப்படம் எடுத்த பின் மேடையிலிருந்து கீழிறங்கி வந்ததும் விழாக்குழுவின் தூண்களில் ஒன்றான நண்பர் மேகலாயா கலெக்டர் ராம்குமார் புன்னகையுடன் கட்டிதழுவினார் . விழாவை மிகச்சிறப்பாக நடத்தி முடித்துவிட்டோம் எனும் மகிழ்ச்சியின் வெளிப்பாடு அது.பின்னர் அதுபோலவே குவிஸ் செந்தில் அண்ணாவும், ஜாஜாவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் .
அமெரிக்கா விலிருந்து சங்கர் பிராதப், சிஜோ,மணிகண்டன், பாலாஜி அபுதாபி யிலிருந்து ஜெயகாந்த்ராஜு, கல்பனா குடும்பம், சவுதியிலிருந்து ஒலி சிவக்குமார் என உலகம் முழுவதும் இருந்து இந்த விழாவுக்கு வந்திருந்தனர்.
இரு தினமும் அனைவருக்கும் 6 வேளை உணவும், தங்குமிடம் வழங்கினோம். இறுதி நிகழ்வான விருது வழங்கும் நிகழ்வில் 500 பேர் வரை கலந்துகொண்டிருக்கலாம்.
அமெரிக்காவின் ராலே நகரிலிருந்து புறப்படும் முன் ஆவண பட இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம் என்னை அழைத்து சொன்னார் “ஷாகுல் விழாவுக்கு வருகிறேன் சந்திப்போம் ” என.உடல் நலமின்றி அவரால் கலந்து கொள்ள முடியாமல் போனது. பெரும் ஏமாற்றமாக இருந்தது.
வெகு சிறப்பாக இந்த விழா நடக்க நிதி முக்கிய காரணம் . 500 ரூ முதல் லட்ச ருபாய் வரை உங்கள் வாசகர்களே இதை வழங்கினர். முழுக்க முழுக்க வாசகர்களின் பங்களிப்பால் நடந்த பெரு விழா இது.
உலகம் முழுவதும் இருந்து பொருளுதவி செய்த நண்பர்கள் அனைவருக்கும் விழாக்குழு சார்பாகவும் , எங்கள் வழிகாட்டி ஜெயமோகன் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .
மிக்க நன்றியுடன்
ஷாகுல் ஹமீது,
நாகர் கோவில்.
அன்புள்ள ஜெ
இந்த ஆண்டும் விஷ்ணுபுரம் விழாவில் கலந்துகொண்டேன். இலக்கியவிழா என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதற்கே உதாரணமாக அமைந்த பெருவிழா. ஒவ்வொரு ஏற்பாடும் பார்த்துப் பார்த்துச் செய்யப்பட்டிருந்தது. இன்று இத்தகைய விழாக்களை ஒரு கார்ப்பரேட் அமைப்புதான் செய்யமுடியும். நான் அவ்வாறு நிகழ்வுகளை அமைத்திருக்கிறேன். ஆனால் முழுக்க முழுக்க நண்பர்களின் உழைப்புக்கொடையால் நிகழ்ந்த விழா என்பது உண்மையிலேயே திகைப்பூட்டுவது.
எல்லா அரங்குகளும் மிகச்சிறப்பாக இருந்தன. வசந்திடம் ஒரு பெரியவர் திரைப்படங்களில் வன்முறை பற்றி ஒரு வழக்கமான கேள்வியைக் கேட்டார். சின்ன வீரபத்ருடுவிடம் ஒருவர் அதேபோல ஒரு அப்பாவித்தனமான கேள்வியை கேட்டார். ஆங்கிலக் கவிதைகளில் தேன்மெழுகுதான் இருக்கிறது, நம் கவிதைகளில் தேன் இருக்கிறது என்பதுபோல. அந்த இரண்டு கேள்விகளைத் தவிர்த்தால் 12 மணிநேரம் நடந்த எல்லா விவாதங்களுமே ஆழமானவை. எல்லா கேள்விகளுமே சீரிய பதில்களை உருவாக்கியவை.ஒவ்வொன்றுக்கும் ஒரு பதிலைச் சொல்ல என்னால் முடியும். ஆனால் நான் வெறும் பார்வையாளராகவே இருந்தேன்.
இந்த அற்புதமான நிகழ்வை ஒருங்கிணைத்த நண்பர்களுக்கு என் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவியுங்கள்.
சரவணக்குமார்
அதுலம், இணையவழி தமிழ்க்கல்வி
அன்பும் மதிப்பும் மிக்க ஆசிரியருக்கு,
பல முறை தங்களுக்கு கடிதம் எழுத வேண்டுமென்று எண்ணம் மனதில் எழும். நான் மிகவும் மதிக்கின்ற ஆளுமை தாங்கள் என்பதால் ஒரு பொழுதும் தங்களின் மதிப்புமிக்க நேரத்தை வீணடிக்கக் கூடியதாக இருக்க கூடாது என்பதற்காக பலமுறை சிந்தித்த பிறகே எழுதுகிறேன்.ஈரோட்டில் நடைபெற்ற சில இலக்கிய கூட்டங்களில் தங்களை அருகாமையிலிருந்தும், தொலைவிலிருந்தும் பார்த்திருக்கிறேன். தங்களை நெருங்குவதற்கு அவ்வளவு தயக்கம் என்னுள் இருந்தது. “விஷ்ணுபுர இலக்கிய” விழாவில் இரண்டு முறை கலந்து கொண்ட பொழுதும் கூட தங்களின் பேச்சையும்,நிகழ்வையும் அரங்கின் கடைக்கோடியிலிருந்து கேட்டுக் கொண்டும், நிகழ்வை கவணித்துக் கொண்டும் இருந்திருக்கிறேன்.எப்பொழுதும் அந்த பேரறிவுப் பிரமாண்டத்தின் முன் நான் சிறு துரும்பு என்றே கருதுகிறவன்.
தங்களின் “தன்மீட்சி” நூல் வாசிப்பு அனுபவம் குறித்து ஒரு கட்டுரை எழுதி மதுரையில் சித்திரை முதல் நாளன்று நடைபெற்ற “கல்லெழும் விதை” நிகழ்வில் தங்களிடம் பரிசும் ஆசியும் பெற்ற அந்த கணம் அவ்வளவு நெஞ்சினிக்க கூடியதாக நினைவில் பதிந்திருக்கின்றது. சில வார்த்தைகள் பேசிவிட்டு தங்களின் தொலைபேசி எண் வழங்கினீர்கள். ஒரு நாள், ஒரு பொழுது, ஒரு கணம் என்றாலும் ஒரு மாணவனாக தங்கள் முன், தங்களின் எழுத்தின் முன் முழுமையாக ஒப்புக்கொடுத்த நாள் அது. முன்பே வாசித்திருந்த “வெள்ளையானையும்”, “இரவும்” மீண்டும் வாசிக்கையில் பிறிதொரு பரிமாணத்தைக் காட்டின.
ஒரு தனியார் கல்லூரியில் உதவிப்பேராசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருக்கும் நான் மாணவர்களிடம் வாசிப்பு ஆர்வத்தை உருவாக்கவும், வளர்க்கவும் தங்களின் “அறம்” சிறுகதைகளை வகுப்பில் சொல்வதுண்டு, உண்மையில் கணிப்பொறியியல் ஆசிரியனான நான் அன்றைக்கான பாடங்கள் முடிந்தபிறகு பெருவிருப்பத்தோடு அதை செய்திருக்கிறேன். பிறகொரு சமயம் சில காரணங்களை முன்னிட்டு வேறு பணிகளுக்கு மாறலாம் என முடிவுசெய்த பொழுதும் கூட எனக்கான ”சொதர்மமாக” நான் கண்டறிந்த ஆசிரியப்பணியை விட்டு விலக மனம் ஒப்பவில்லை.. அதன் நீட்சியாகவே தமிழ் மொழியை பிழையற பேசவும், எழுதவும் குழந்தைகளுக்கு கற்றுத்தரும் எண்ணம் உதித்தது. என்றும் அன்பிற்குறிய வழிகாட்டிஅண்ணன் சிவராஜ் அவர்களின் மேலான வழிகாட்டுதலோடும், முதுகலை தமிழ் இலக்கியமும், இளங்கலை கல்வியியலும் படித்திருக்கின்ற என் மனைவி உமாமகேஸ்வரி அவர்களின் ஒத்துழைப்புடனும் ஒரு குருபூர்ணிமா தினத்தில் உங்களிடத்திலான என் மானசீக ஆசி வேண்டுதலோடு ஒரு பேரெண், ஒப்பற்ற, முடிவிலி என்கின்ற பொருள்படும்”அதுலம்” என்ற பெயரில் இணைய வழி தமிழ் கற்றல் மையம் அண்ணன் பழனியப்பன் ராமநாதன் அவர்களின் இரண்டு மகன்கள் ஆதிநாராயணன், மணிகண்டன் ஆகியோரை மாணாக்கர்களாகக் கொண்டு துவங்கப்பட்டது. தொடர்ச்சியாக தமிழ்நாடு, வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் என மாணவர்கள் பல இடங்களில் இருந்து வகுப்புக்கு வந்துகொண்டு இருக்கிறார்கள்.
வகுப்புகளுக்கு மாணவர்கள் வரத்துவங்கிய பிறகு நான் இன்னும் மொழியை தீவிரமாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன். யாப்பிலக்கணம் கற்றுக்கொள்ள சில இளைஞர்கள் வருகிறார்கள். சிறுகதை எழுதுவது குறித்து சிலர் பயிற்சியளிக்க கேட்டபொழுது தங்களின்”சிறுகதை ஒரு சமயற்குறிப்பு” படித்து விட்டு பயிற்சியளித்தேன். வகுப்பிற்கு வருகின்ற மாணவர்கள் பலரின் பெற்றோர் பலர் உங்களது வாசகர்களாக இருப்பதும் என்னோடு தொலைபேசியில் பேசும் பொழுது தங்கள் படைப்புகள் குறித்து உரையாடுவதும் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.
யதார்த்தத்தில் தான் வாழும் வாழ்க்கைக்கும், தான் பேசும் மொழிக்கும் இடையேயான தூரம் என்பது குழந்தையின் மனநிலையில் குழப்பத்தைத் தரக்கூடியது. ஆகவே, தகுந்த திறன்பெற்ற ஓர் ஆசிரியர் வாயிலாகத் தாய்மொழியின் அடிப்படைகளை லயித்துக் கற்கும்பொழுது, ஓர் மொழியில் ஒளியடையும் ஆத்மவிளைவு அக்குழந்தைக்குப் புலப்படும். அதன்பின் அக்குழந்தை எல்லா மொழியையும் நேசிக்கத்துவங்கிவிடும். அதுலம்’ தமிழ் கற்றல் மையம், தமிழை ஆழமுறக் கற்பிப்பதற்கான பெருமுயற்சிப்பாதையில் தன்னை செலுத்திக்கொள்கிறது. இந்த முன்னெடுப்பிற்கான முயற்சியில் தங்கள் பங்களிப்பை வழங்கிய குக்கூ நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கும் இந்த கணம் இந்த முன்னெடுப்பு தொடரவும் அதுலம் மேலும் வளரவும் தங்கள் ஆசியை கோருகிறேன்.
ம.கோவர்த்தனன்
சு.உமாமகேஸ்வரி கோவர்த்தனன்
அதுலம் இணையவழி தமிழ் கற்றல் மையம்,ஈரோடு
8012361168, 9944484988
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

