Jeyamohan's Blog, page 2246
March 18, 2012
ஏழாம் உலகம் – ஒரு கடிதம்
அன்புள்ள எழுத்தாளர் ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம். நலமா? "நான் கடவுள்" திரைப்படம் வந்த நேரம். அப்பொழுது எனக்குப் புத்தகத்தின் மீது ஆர்வம் குறைவுதான். நண்பன் ஒருவன் "நான் கடவுள்" படம் "ஏழாம் உலகம்" புத்தகத்தின் உக்கிரத்தை 20% கூடத் திரையில் கொடுக்கவில்லை" என்று கூறினான்.
'நான் கடவுள்' படமே என்னை உலுக்கிய நிலையில், மீதி உலுக்கலையும் எதிர் கொள்ளத் தயாராய் "ஏழாம் உலகம்" புத்தகத்தை வாங்கினேன் (நான் வாங்கிய முதல் புத்தகம் இதுவே). கருப்பு நிற அட்டையின் கீழே வெள்ளை நிறத்தில் "ஏழாம் உலகம்". எனக்கு நண்பனின் வார்த்தைகளே மனதில் உலவிக்கொண்டிருந்தது. ஒரு நல்ல நாள் பார்த்துப் படிக்கத்தொடங்கினேன். சுத்தமான நாஞ்சில் நாட்டு மொழி (நானும் நாஞ்சில் நாட்டவன்தான்). 10, 20 பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை. ஏனென்றால் அப்பொழுது அதிகம் புத்தகம் படித்துப் பழக்கம் இல்லாதவன். "ஏழாம் உலகம்" எனது அறையில் அடங்கிக் கிடந்தது.
பின்னர் நான் புத்தக வாசிப்பில் ஆர்வம் கொண்டு சுஜாதா, பாலகுமரான், ஜெயகாந்தன் என்று ஆரம்பித்து சிறிது காலம் நாஞ்சில் நாடன், ராமகிருஷ்ணன் என்று உலவிக்கொண்டிருந்தேன். தங்களின் வலையை தினமும் படிக்கப் படிக்க உங்களது மொழி மெல்ல மெல்லப் புரியத்தொடங்கியது.
மீண்டும் ஒரு நாள் அலுவலகத்தில் நண்பர்கள் மூலம் "ஏழாம் உலகம்" பற்றிய பேச்சு. அந்த நண்பர்கள் (இருவரும் பலகாலம் புத்தகம் படிப்பவர்கள்) ஏழாம் உலகத்தைப் படிக்க முற்பட்டதாகவும், ஆனால் நாஞ்சில் நாட்டு மொழியைக் கடக்க இயலாமல் பாதியில் நிறுத்திவிட்டதாகவும் கூறினர். நாஞ்சில் நாட்டு மொழி, மற்றும் உங்களின் எழுத்தின் மீது எனது புரிதலின் முன்னேற்றம் ஆகியவற்றின் துணையோடு இம்முறை நான் "ஏழாம் உலகம்" படிக்கத் தயாரானேன்.
பிச்சைக்காரர்களின் இருள் உலகம். அந்த அடர் இருட்டிலும் சுடர்விடும் நக்கல், நையாண்டி, சிறு சிறு மகிழ்ச்சி, அவர்களை முதலாகக் கொண்டு பிழைக்கும் ஒருவன், வியாபார யுக்தி, அவனது குடும்பம் என்று நிகழ்வுகள் எங்கெங்கோ விரிகிறது. புத்தகத்தின் பல இடங்களில் அப்படியே புத்தகத்தை மூடி வைத்துவிட்டு மேலே படிக்கமுடியாமல் திணறியிருக்கிறேன். குறிப்பாக தனக்கு ஒரு ஊனமுற்ற குழந்தை (ஒற்றைவிரல்) பிறந்ததும் அதனை எவ்வாறெல்லாம் கொஞ்சினாள் என்று தாய் விவரிக்கும் இடம். அதே போல் அதன் தந்தையும் குழந்தையை முதல் முறை தொட முயலும் தருணம். அந்தத் தாய் ஓர் இடத்தில் கூறுவாள் "அந்த ஒற்றை விரல் கொண்ட கையினை மீண்டும் மீண்டும் தடவிக் கொடுத்தேன் அதில் விரல் வளர்ந்து விடாதா என்று ஒரு எண்ணத்தில்". என்னை மிகவும் உருக்கிய இடம். மூளையை மனது தோற்கடிக்கும் இடங்கள் பல. ஆனால் அதே "ஒற்றைவிரல்" கடைசியில் கதையைப் புரட்டிப் போட்டபோது மறுபடியும் புத்தகம் மூடினேன். இந்தப் புத்தகத்தை அப்படியே தமிழ்நாட்டில் திரைப்படமாக எடுக்கமுடியுமா என்பது சந்தேகமே!.
எனக்கு மிகப்பெரும், மிக முக்கியமான அனுபவத்தைக் கொடுத்த ஒரு அற்புதமான புத்தகம் "ஏழாம் உலகம்". சிக்னலிலும், கோவிலிலும் பிச்சைக்காரர்களைக் காணும் போதெல்லாம் ஏழாம் உலகம் முன்வந்து என்னை மிரட்டுகிறது. பலமுறை பிச்சைக்காரர்களைக் கடந்து சென்று பின்னர் புத்தகத்தின் மிரட்டலால் திரும்பி வந்து அவர்களுக்குப் பிச்சையிட்ட அனுபவமும் உண்டு.
ஓர் இருள் உலகத்தைக் கதைக்களனாகக்கொண்டு எழுதப்பட்ட ஒரு அற்புதமான புத்தகம் "ஏழாம் உலகம்". அதனை எழுதவேண்டும் என்ற எண்ணமே பாராட்டத்தக்கது. "ஏழாம் உலகம்" அனைவரும் படித்து அறியவேண்டிய ஓர் அனுபவம். இன்றும் "நான் கடவுள்" திரைப்படம் பார்க்கும் போதெல்லாம் எனக்கு நண்பனின் வார்த்தைகளே மனதில் தோன்றுகிறது.
இப்படிக்கு,
பிரவின் சி.

ஏழாம் உலகம். கிழக்கு வெளியீடு
அன்புள்ள பிரவின்,
ஏழாம் உலகத்தை நிறுவுவது அந்த மொழியும்கூடத்தான். எருக்குவும் குய்யனும் வேறு மொழியில் பேசியிருக்கமுடியாது. பொதுவாக எந்த ஒரு நாவலுக்குள்ளும் நுழைவதற்கு ஒரு மனத்தயாரிப்பு தேவை. அந்த உலகுக்குள் நுழைவது வரை ஒரு தடுமாற்றம் இருக்கும். புனைவுகளை அதிகம் வாசிக்காதவர்களுக்கு அந்தத் தடுமாற்றமே தடையாக அமைந்து விடலாம்.
உங்கள் வாசிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஏழாம் உலகம் இருளைப்பற்றிய நாவல். ஆனால் ஒளியைப்பற்றிப் பேசுகிறது. இருள் இல்லாமல் ஒளியை அறியமுடியாதே.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
ஏழாம் உலகம் — விமர்சனம்
ஏழாம் உலகம்- விமர்சனம்
கதைகளின் வழி
ஏழாம் உலகம்-கடிதம்
கடிதம்
கடிதங்கள்
ஏழாம் உலகம், கடிதங்கள்
ஏழாம் உலகம்: மீண்டும் எதிர்வினைகள்
ஏழாம் உலகம்: கடிதங்கள்
ஏழாம் உலகம் :கடிதங்கள்
காந்தியின் சனாதனம்-4
காந்தி டுடே இதழில் எழுதும் கட்டுரையின் நான்காம்பகுதி
தொடர்புடைய பதிவுகள்
காந்தியின் சனாதனம்-3
காந்தியின் சனாதனம்-2
காந்தியும் சனாதனமும்-1
இந்திய நிர்வாகம் — கடிதம்
அதிகாரமும் கலங்கலும் — கடிதம்
கலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] — 3
காந்தியும் கடவுளும்
காந்தியும் லோகியாவும்
கடிதங்கள்
பாரதி விவாதம் 8 — விமர்சனம் எதற்காக ?
காந்தி-சுபாஷ் , கடிதம்
கேள்விகள்
காந்தி,அனந்தமூர்த்தி
காந்தியின் எதிரிகள்
உப்பும் காந்தியும்
உப்பு,மேலும் கடிதங்கள்
உப்பு-கடிதங்கள்
உலகின் மிகப்பெரிய வேலி
காந்தியும் மேற்கும் -குகா
நைபால்
March 17, 2012
தொன்மத்தின் உண்மை
அன்புள்ள ஜெ மோ அவர்களுக்கு,
வணக்கம்.
கீழே உள்ள முகவரியில் திரு தேவ் தத் என்பவர் இதிகாசங்களுக்கு இன்றைய நவீன கால விளக்கங்கள் அளிக்கிறார். பல விஷயங்கள் வேறு பல விளக்கங்களையும் அறிய ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஏனெனில் அப்படி ஒரு இன்றைய கால சூழ்நிலைகளுக்கு ஒப்ப ஒரு புதுப் பார்வை முன் வைக்கப்படுவது நல்லதே. தேவையும் கூட.
http://devdutt.com/category/video/page/3
அன்புடன்,
திருச்சி வே. விஜயகிருஷ்ணன்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
காந்தியின் சனாதனம்-3
காந்தி எந்த அளவுக்குச் சனாதனி? சனாதன இந்துக்கள் என்று சொல்லப்படும் வரிசையில் காந்தியை எங்கே வைக்க முடியும்? இந்த வினாவுக்குப் பல கோணங்களில் பதில்கள் சொல்லப்பட்டுள்ளன. காந்தி தன்னை சனாதன இந்து என்று அவரே சொன்னதை அடிப்படையாகக் கொண்டு இந்திய முற்போக்கினரும் இந்து மரபின் எதிரிகளும் அவர்கள் சனாதன இந்துமதம் மீது சொல்லும் எல்லா குற்றச்சாட்டுக்களுக்கும் அவரை பாத்திரமாக்கி தங்கள் நோக்கங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள். இன்னொருபக்கம் அவரை சனாதன இந்துமதத்தின் உண்மையான எதிரி என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். இந்த இரண்டாவது நோக்கு இன்று வலுப்பெற்று வருகிறது.
காந்தியின் சனாதனம் பற்றி காந்தி டுடே இதழில் எழுதிவரும் கட்டுரையின் மூன்றாம் பகுதி
தொடர்புடைய பதிவுகள்
காந்தியின் சனாதனம்-2
காந்தியும் சனாதனமும்-1
இந்திய நிர்வாகம் — கடிதம்
அதிகாரமும் கலங்கலும் — கடிதம்
கலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] — 3
காந்தியும் கடவுளும்
காந்தியும் லோகியாவும்
கடிதங்கள்
பாரதி விவாதம் 8 — விமர்சனம் எதற்காக ?
காந்தி-சுபாஷ் , கடிதம்
கேள்விகள்
காந்தி,அனந்தமூர்த்தி
காந்தியின் எதிரிகள்
உப்பும் காந்தியும்
உப்பு,மேலும் கடிதங்கள்
உப்பு-கடிதங்கள்
உலகின் மிகப்பெரிய வேலி
காந்தியும் மேற்கும் -குகா
நைபால்
அண்ணா ஹசாரே- காந்திய போராட்டமா?
March 16, 2012
மோதல்-நிலைப்பாடு – கடிதம்
ஆசிரியருக்கு ,
வகுப்பறையில் பாடம் நடக்கிறது. ஆசிரியர் சிக்கலான விஷயங்களை விளக்குகின்றார். எனக்கு விளங்கிக் கொள்வதில் சந்தேகம் வருகிறது. "சார். இப்படியா சொல்றீங்க?" என்பது போன்ற கேள்விதான் என்று நினைத்துக் கேட்டேன். தவறாக ஆகிவிட்டது. மன்னியுங்கள்.
இது பரபரப்பான சம்பவம் என்றோ, உடனுக்குடன் செய்தியென்றோ நினைத்துக் கேட்கவில்லை. நெடுநாளாகவே ஒரு உயரிய மக்கள் ஆட்சி விழுமியம் கொண்ட குடிமை சமூகம் குறித்த பல கேள்விகள் மனதில் உண்டு. அதன் இயங்கு முறை, குறைபாடுகள், செயல்பாட்டாளர்கள் மற்றும் அதன் மனசாட்சி எனப் பலவடிவங்கள் குறித்து யோசித்துப் பார்ப்பேன். தங்களது கட்டுரைகள் மிகப் பெரிய வழியில் உதவுகின்றன. அந்த வகையில் காவலமைப்பும், அதன் சமூகத் தாக்கமும் என்பது குறித்த கட்டுரையாகத்தான் தங்களது கட்டுரையை நினைத்துப் படித்தேன்.
எந்த சமூகப் பிரச்சினையும் ஆம் இல்லை என்ற இருமை சிந்தையில் அடங்காது எனப் பலமுறை சொல்லி இருக்கிறீர்கள். எல்லா விஷங்களுக்கும் ஒரு முரணியக்கம் உண்டு, அது ஒரு புள்ளியில் சமரசமயப்படுவதில்தான்அந்தப் பிரச்சனை தீர்வை நெருங்க முடியும் என்பதும் நீங்கள் பல கட்டுரைகளில் சொன்னதுதான். குடிமை சமூகப் பிரச்சனைகளான சாதி,ஊழல் குறித்த உங்கள் கட்டுரைகள் இந்த வகை இருமை தாண்டிய முரணியக்கம் விளக்கும் கருத்துக்களை மிக அழகாய்ச் சொல்லி இருந்தன.
காவல் அமைப்பு, அதன் வலிமை, அதில் நேரும் சிக்கல்கள், உயிர்ச் சேதங்கள் குறித்து முன்பிருந்தே ஒரு சிக்கலான குழப்பம் உண்டு. இந்த வகை என்கவுண்டர் செயல்படும் முறை குறித்து பாலா உங்களுக்கு எழுதிய கடிதத்தில் கருத்துக் கூறியிருந்தார். இவை மெல்ல மெல்ல ஒரு கதாநாயக குணத்திலிருந்து எதிர்அமைப்புக்குச் செல்லக் கூடியவை எனக் குறிப்பிட்டு இருந்தார். அவர் அருகிலிருந்து இந்தச் செயல்பாடுகளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் சொல்லி இருந்தார். இந்தக் கட்டுரை இந்த வகைச் செயல்பாடுகளின் இயங்கு தன்மையின் ஒரு பகுதியை மட்டும் அதிக அளவில் முன்வைத்து அது அவ்வாறு தொடர்ந்து இயங்கும்போது அதில் உருவாகும் வடிவ மாற்றம் குறித்து அதிகமாய் சொல்லவில்லையோ எனத் தோன்றவும் உங்களிடம் கேள்வி கேட்டேன். இதில் உயிர்ச்சேதங்கள் அதிகம் என்பது எனது குழப்பத்தை அதிகரித்தது. அது எனதுபுரிதலின் குழப்பமே. நன்றி.
-நிர்மல்
அன்புள்ள நிர்மல்,
தயவுசெய்து இதை தனிப்பட்ட விமர்சனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மனம் புண்படுவது, மன்னிப்புக் கோருவது எதிலும் பொருள் இல்லை. இது மிகச்சாதாரணமான விஷயம்.
சிந்தனையில் நாம் செய்யும் பிழைகளைப் பொதுவாக நம்மால் காண முடியாது. அதை இன்னொருவர் கறாராகச் சுட்டிக்காட்டும்போதே அது நம்மை அறையும். அப்படி நம் அகங்காரம் அறைபட்டாலொழிய நம்மை நாம் நகர்த்திக் கொள்ளமுடியாது.
நான் இத்தகைய அறைகளைத் தொடர்ந்து பெற்றபடித்தான் என்னை முன்னகர்த்திக் கொண்டிருக்கிறேன். ஆகவே சிந்திக்கக்கூடியவர் என எனக்குத் தோன்றும் ஒருவரை உடைக்கத் தயங்கவே மாட்டேன்.
நீங்கள் சொன்ன அதே கோணத்தில் இன்னும் ஆவேசமாக எதிர்வினையாற்றிய சிலரை என் கவனத்துக்குக் கொண்டுவந்தார்கள். அவர்களின் அசட்டுத் தன்னம்பிக்கையைக் கண்டு சிரித்துக்கொள்வதைத் தவிர ஒன்றும் செய்வதற்கில்லை.
எந்த ஒரு கருத்துநிலையையும் புரிந்துகொள்ளத் திராணியற்றவர்கள், சம்பிரதாயமான அரசியல் விவகாரங்களை மட்டுமே சிந்தனை என எண்ணிக்கொள்பவர்கள் அவர்கள். சென்ற பத்து வருடத்தில் அடிப்படைப் புத்திசாலித்தனத்தின் ஒரு கீற்றைக்கூட ஒருவரியைக்கூட வெளிப்படுத்தாதவர்கள். அந்த அறியாமையின் மேல் நின்று எவரையும் விமர்சிக்கவும் கிண்டல்செய்யவும் துணிபவர்கள்.அந்த அறியாமையின் தன்னம்பிக்கையை எவராலும் உடைக்கமுடியாது.
நான் உடைக்க முயல்பவர்கள் எல்லாருமே உண்மையாகவே சிந்திக்க முயல்பவர்கள். சொல்வது சரிதானா என்ற ஐயம் கொண்டவர்கள். சிந்தனைகளின் பல சாத்தியங்களைப்பற்றிய நம்பிக்கை கொண்டவர்கள். அந்த நிலையில்தான் உங்களைப்பற்றிச் சொன்னேன்.
அரசுசார் படுகொலைகளை எந்த வகையிலும் எப்போதும் ஆதரித்ததில்லை. மானுட அறத்துக்கே இழுக்கான செயல் என்றே அவற்றை நினைக்கிறேன். ஒரு பழங்குடிச்சமூகம் கூட விசாரிக்காமல் கொலைசெய்யாது.
ஆனால் அவற்றைப்பற்றி ஒரு உக்கிரநிலையில் பேசுபவர்கள் அந்த எதிர்ப்பின் நடைமுறைப் பயனைப்பற்றி யோசிக்கிறார்களா என்பதே என் எண்ணம். அந்தத் தரப்பைப்பற்றி சிந்திக்காமல், அதை முற்றிலும் எதிர்மறையாக முத்திரைகுத்திப் பேசுவது செயல்பாட்டாளர்களுக்கு மட்டுமே பொருத்தமானது.
சரி, அதை விடுங்கள். நான் சொல்ல வருவது இதுதான். தமிழில் பொதுவாகவே நமக்கு இப்படி முரணியக்க ரீதியாகச் சிந்தித்துப் பழக்கமில்லை. ஒற்றைவரிகளே நமக்குத் தேவை. அதிலிருந்து வெளிவருவதற்கு ஒரு அதிர்ச்சி தேவைப்படுகிறது. அதைத் தொடர்ந்து வெகுதூரம் செல்லவேண்டியிருக்கிறது.
நான் சுட்டிக்காட்டியது அதைத்தான். நட்புடனும் நல்லெண்ணத்துடனும். தொடர்ந்து பேசுவோம்.
ஜெ
ஏன் பொதுப்பிரச்சினைகளைப்பேசுவதில்லை?
பொதுப்பிரச்சினையும் புரிதலும்..
தொடர்புடைய பதிவுகள்
பொதுப்பிரச்சினையும் புரிதலும்
காந்தியின் சனாதனம்-2
காந்திடுடே இதழில் எழுதும் கட்டுரையின் இரண்டாம்பகுதி
தொடர்புடைய பதிவுகள்
காந்தியும் சனாதனமும்-1
இந்திய நிர்வாகம் — கடிதம்
அதிகாரமும் கலங்கலும் — கடிதம்
கலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] — 3
காந்தியும் கடவுளும்
காந்தியும் லோகியாவும்
கடிதங்கள்
பாரதி விவாதம் 8 — விமர்சனம் எதற்காக ?
காந்தி-சுபாஷ் , கடிதம்
கேள்விகள்
காந்தி,அனந்தமூர்த்தி
காந்தியின் எதிரிகள்
உப்பும் காந்தியும்
உப்பு,மேலும் கடிதங்கள்
உப்பு-கடிதங்கள்
உலகின் மிகப்பெரிய வேலி
காந்தியும் மேற்கும் -குகா
நைபால்
அண்ணா ஹசாரே- காந்திய போராட்டமா?
அண்ணா ஹசாரே- மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன?
March 15, 2012
காந்தியும் சனாதனமும்-1
காந்தி டுடே இதழில் நான் எழுத ஆரம்பித்திருக்கும் நீள்கட்டுரை: காந்தியும் சனாதனமும் – காந்தி டுடே
தொடர்புடைய பதிவுகள்
காந்தியும் மேற்கும் -குகா
இந்திய நிர்வாகம் — கடிதம்
அதிகாரமும் கலங்கலும் — கடிதம்
கலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] — 3
காந்தியாயணம்
காந்தியும் கடவுளும்
காந்தியும் லோகியாவும்
பாரதி மகாகவியே
மகாகவி விவாதம்
கடிதங்கள்
பாரதி விவாதம் 8 — விமர்சனம் எதற்காக ?
பாரதி விவாதம் -6 — இறை,உரைநடை
பாரதி விவாதம் 4 — தாகூர்
பாரதி விவாதம் — 1- களம்-காலம்
காந்தி-சுபாஷ் , கடிதம்
கேள்விகள்
காந்தி,அனந்தமூர்த்தி
காந்தியின் எதிரிகள்
உப்பும் காந்தியும்
உப்பு,மேலும் கடிதங்கள்
டாக்டர் தெபெல் தேவ்
அன்புள்ள ஜெ ,
இவரை நான் நேராக சந்தித்துள்ளேன. பசுமைப் புரட்சிக்கு முன்பு இந்தியாவில் 110000 அரிசி வகைகள் இருந்தன, அதனை FAO-வும் அங்கீகரித்துள்ளது, இதில் 90% சதவிகிதம் பசுமைப்புரட்சி அழித்துவிட்டது, பசுமைப் புரட்சியே ஒரு பெரிய தோல்வி என்றும் இவர் கூறினார். அதனைப் பலவகையில் ஒப்புக்கொள்ள வேண்டியதுதான் என்று பட்டது .
Green Revolution என்ற வார்த்தை அமெரிக்காவில் உருவாகி அதனை இந்திய அரசியல்வாதிகள் அப்படியே ஈ அடிச்சான் காப்பி அடிச்சு இதனை விவசாயிகள் மீது திணித்தனர். இதனால் நாம் இழந்த பாரம்பர்ய விவசாயம் மிக அதிகம். அதற்கு மேல் நமது விவசாயத் தற்கொலைகள், பூச்சிக் கொல்லி மருந்துகள். இதெல்லாம் நமக்குத் தெரிந்ததுதான். ஆனால் நாம் இழந்த விதைகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 14000 வருடத்தின் ஞானம். இது இயற்கையும் மனிதனும் சேர்ந்து நிகழ்த்திய ஆட்டம், இதனைப் பசுமைப் புரட்சி 30 வருடத்தில் அழித்துவிட்டது.
இவர் செய்யும் வேலை மிக முக்கியமான ஒன்று. இவர் தனியாளாக 720 அரிசி வகைகளை ஒவ்வொரு அரிசி வகையின் மரபணுத் தொகுப்பைக் கண்டறிந்து தொகுத்து அதனை எந்த ஒரு கம்பெனியும் மரபணு மாற்றம் செய்து விற்க முடியாதபடியும்,விவசாயிகளே அதனை ஒருவருக்கு ஒருவர் பரிமாற்றம் செய்ய வழிவகுத்துள்ளார். அந்த அரிசிவகைகள் அனைத்தும் விவசாயிகளுக்கு சொந்தம் என்று ஒரு புத்தகமும் பதிப்பித்துள்ளார். இவரின் நேர்காணல் , மற்றும் இணைய தளம்:
http://www.youtube.com/watch?v=x7WiKL953sY&feature=BFp&list=FLSIv0fba-0HjVLiqXxZ95Tw
சில வகை அரிசிகள் ஒரு நெல்லில் மூன்று அரிசி, ஒரு நெல்லில் இரண்டு அரிசி, 10 அடி ஆழம் இருந்தாலும் வளரக்கூடிய நெல், வெள்ள எதிர்ப்பு, வறட்சி எதிர்ப்பு, வெள்ள வறட்சி இரண்டும் சேர்ந்த எதிர்ப்பு சக்தி, உப்புத்தண்ணீரில் வளரக்கூடிய நெல், இது மாதிரி ஒவ்வொரு அரிசிக்கும் ஒரு குணநலன் உண்டு. நிறமும் வேறுபடும். மரபணு மாற்றத்தால் வாசனையையோ, நிறத்தையோ பாரம்பரிய அரிசியைப்போல் கொண்டுவர இயலவில்லை. மரபணு மாற்றம் ஒரு தொழில்ரீதியான விளையாட்டே தவிர, அது அறிவியல் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறினார்.
மரபணு மாற்று வந்தால் உணவின் பன்முகத்தன்மை மாறிவிடும். சில கம்பெனிகள் கையில் உலக உணவுப் பாதுகாப்பு போய்விடும். விளைச்சல் மிகுந்த பாரம்பரிய அரிசிகள் உள்ளன. அதனை சர்வதேசக் கம்பெனிகளால் அறிவு சலவை செய்யப்பட்ட வேளாண் பல்கலைகழகங்கள் சீண்டக்கூட வரவில்லை. ஆனால் சர்வதேசக் கம்பெனிகள் மரபணு மாற்றம் கொண்டுவந்த அரிசியை இவர்கள் இறக்கிவிட ஆவலுடன் இருக்கிறார்கள்.
இதன் பின்புலத்தில் வரப்போகும் மசோதா "BRAI" (biotechnology regulatory Authority of India), மரபணு மாற்றத்தைப் பற்றி BRAI தவிர யாரும் எதிர்க்கருத்து தெரிவிக்க இயலாதபடி ஒரு மசோதா. வெளிநாட்டு வேளாண் கம்பெனிகளுக்குத் தகுந்தபடி அதில் அனைத்து எதிர் வாதங்களும் வராதபடி அரசு மட்டுமே முடிவெடுக்க முடியும். அதிலும் வேளாண் விஞ்ஞானிகளே முடிவெடுக்க முடியும்.
இதையும் கூடங்குளத்தையும் ஒரு அளவுக்கு ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. எந்த விஞ்ஞானி அவர் கற்றதை எதிர்த்துக் கருத்து சொல்லுவார், யாரும் கூறமாட்டார்கள். கைல துட்டு வாயில தோசை. முற்றிலும் அயோக்கியத்தனமான ஒன்று என்னவென்றால் மரபணு மாற்றத்தைப் பற்றி எதிர்க்கருத்து இருந்தால் சிறையாம். இந்த மசோதா வந்தால் விதையும் விவசாயியின் கையை விட்டுப் போய்விடும். விதைதான் விவசாயியின் உயிர் நாடி. விதையை விவசாயி விலை கொடுத்து வாங்கும் நிலைமை வந்தால், இந்திய கிராமங்கள் முற்றிலும் விற்கப்பட்டுவிடும்.
நம்மாழ்வார் அய்யா தலைமையில் தமிழ்நாட்டிலும் பாரம்பரிய விதைகள் சேமிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அதனைப் பற்றி இந்தத் தலைமுறையினருக்குப் போதுமான அளவு விஷயம் சென்றடைவதில்லை. அவர்கள் உண்ணும் உணவின் பன்முகத்தன்மை முற்றிலும் அழிக்கப்படும் நிலைமை உள்ளது. அந்த தளத்தில் இவர்கள் ஆற்றும் பணி மிகமுக்கியமான ஒன்று .
நன்றி
லட்சின் என்கிற லக்ஷ்மி நரசிம்ஹன்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
March 14, 2012
செத்தவரை, ஆவூர், உடையார் புரம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
சமீபத்தில் சென்று வந்த செத்தவரை, தொட்டி, கஞ்சியூர், ஆவூர், உடையாநத்தம் போன்ற ஊர்களைப் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன்.
செத்தவரை தமிழ்நாட்டில் உள்ள பழமையான பாறை ஓவியப் பகுதி ஆகும். இந்த கிராமம் செஞ்சியில் இருந்து வேட்டவலம் போகும் வழியில் இருக்கிறது. இங்குள்ள அய்யனார்மலை என்ற பாறைக்குன்றில் சிவப்பு வண்ணத்தில் வரையப்பட்ட பல ஓவியங்கள் காணப்படுகின்றன. பெரும்பாலும் விலங்கின ஓவியங்களே காணப்படுகின்றன. தமிழ்நாட்டிலேயே மீன் உருவம் உள்ள பாறை ஓவியம் இங்குதான் இருக்கிறது. விரல்களுடன் கூடிய மனித உள்ளங்கை ஓவியங்களும் நிறைய இருக்கிறது. இங்குள்ள மான் வடிவம் மிகவும் அழகானது. இதன் காலம் கி மு 1500.
தொட்டி கிராமம் திருக்கோயிலூருக்கு அருகில் சங்கராபுரம் செல்லும் சாலையில் உள்ளது. இங்குள்ள சிறிய குன்றில் உள்ள பஞ்ச பாண்டவர் படுக்கை சற்று வித்தியாசமானது. இந்தப் படுக்கைகள் மிகவும் சிறியவை. சிறுவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இதைக் கொண்டு சமணத்துறவிகளில் சிறுவர்களும் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லை. இந்தப் படுக்கைகளுக்குப் பின்புறம் உள்ள இரண்டு படுக்கைகள் பெரியவை. இதன் காலம் கி பி பத்தாம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது.
கஞ்சியூர் குன்றில் உள்ள குகையில் இரண்டு இடங்களில் ஐந்து படுக்கைகளாக மொத்தம் பத்து கற்படுக்கைகள் காணப்படுகின்றன. படுக்கைகளுக்கு அருகில் ஒரு கல் இருக்கையும் இருக்கிறது. குகைகளின் மேலே வெள்ளை வண்ணத்தில் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. பெரும்பாலும் சிந்து சமவெளி குறியீடுகள். பல அழிந்து போயுள்ளன. இந்தக் குன்றின் அருகில் உள்ள கிராமத்தில் சமணர்கள் சிலர் வாழ்ந்து வருகிறார்கள்.
ஆவூர் திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் போகும் வழியில் உள்ள ஒரு கிராமம். பாண்டியர்கள், சோழர்கள், நவாப்கள் ஆண்ட நெடிய வரலாறை உடைய ஊர். இங்கு உள்ள முக்கிய தொழில் கோரைப்பாய் பின்னுவது. ஏறக்குறைய 400 குடும்பங்கள் 200 வருடங்களாக இந்த குடிசைத் தொழிலில் இருக்கின்றனர். பெரும்பாலும் இசுலாமியக் குடும்பங்கள். 1971 இல் இருந்து இயந்திரங்களுக்கு மாறியுள்ளனர். திருப்பூர் போன்று, மையப்படுத்தப்படாத, இந்தியத்தொழில் கூறை உடையது இந்த குடிசைத்தொழில். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சில இளைஞர்களும் வேலை செய்கின்றனர். தற்போது கடுமையான மின்வெட்டால் இந்தத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
உடையானத்தம், கீழ்வாலை பாறை ஓவிய இடத்திற்கு அருகில் உள்ள ஊர் . இங்கிருந்து வடக்கே 3 கி மீ தூரத்தில் உள்ள ஆதிலியம்மன் கோவிலுக்கு சற்று முன்னே 'விசிறிப்பாறை' என்றழைக்கப்படும் பழங்காலத் தாய் தெய்வ வடிவம் ஒன்று உள்ளது. அருகில் உள்ள கீழ்வாலை, செத்தவரை, புறாக்கல் (அரை நாள் அலைந்தும் இந்த இடத்தைக் கண்டறிய முடியவில்லை) போன்ற பாறை ஓவியக் குன்றுகளும், இந்தத் தாய் தெய்வ வடிவத்தையும் வைத்துப் பார்க்கும் போது இந்தப் பகுதியில் வரலாற்றுக்கு முற்பட்ட மனிதர்கள் பெருமளவில் வாழ்ந்து இருக்கிறார்கள் என்று கூறலாம். இந்தப் பயணத்திற்கு உதவியவர்கள் யுவராஜ், பாலசுப்ரமணியன் என்ற இரண்டு சிறுவர்கள். கிட்டத்தட்ட 2 கி மீ என்னோடு வெயிலில் நடந்து வந்து உதவினார்கள். அதிலும் ஒருவன் செருப்பில்லாமல் வந்தான். இருவரும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், என்னுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அடிக்கடி தயங்கியபடி தங்களை எஸ் சி என்று கூறிக் கொண்டனர். பின்னர் புகைப்படம் அனுப்புவதற்காக முகவரி கேட்ட போது, எஸ் சி மாரியம்மன் கோவில் தெரு என்று சொன்னார்கள். (இன்னொரு மாரியம்மன் கோவிலை எம் பி சி மாரியம்மன் கோவில் என்றனர்). சங்கடமாகப் போய்விட்டது.
தொட்டியைத் தவிர அனைத்து இடங்களும் விழுப்புரம்-திருவண்ணாமலை சாலையில் உள்ளன.
இவை குறித்து இணையத்தில் பதிவு செய்தவற்றை இணைத்துள்ளேன்.
நன்றி,
தங்கள் அன்புள்ள,
சரவணக்குமார்.
விக்கிபீடியா கட்டுரை
1) http://en.wikipedia.org/wiki/Settavarai
2) http://en.wikipedia.org/wiki/Kanchiyur
யு டியூப் காணொளிகள்
செத்தவரை
2) http://www.youtube.com/watch?v=X4eF62iSva4&feature=related
3) http://www.youtube.com/watch?v=fO1rdTtDyMA&feature=related
தொட்டி
1) http://www.youtube.com/watch?v=D-gjFSDj9YA&feature=related
2) http://www.youtube.com/watch?v=p6hNHPWLdEk&feature=related
கஞ்சியூர்
2) http://www.youtube.com/watch?v=QpswRhPtBjE&feature=related
3) http://www.youtube.com/watch?v=784jIK_yPjs&list=UUppaK1uqALtjRqhta8L0EKw&index=2&feature=plcp
ஆவூர்
1) http://www.youtube.com/watch?v=YqTIgMQ5_8w&feature=related
2) http://www.youtube.com/watch?v=_0PRmgorpQ8&feature=related
3) http://www.youtube.com/watch?v=_Aj4wFZnvV8&feature=related
உடையாநத்தம்
1) http://www.youtube.com/watch?v=fMCWgPyc0nA&list=UUppaK1uqALtjRqhta8L0EKw&index=1&feature=plcp
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
செத்தவரை,ஆவூர், உடையார் புரம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
சமீபத்தில் சென்று வந்த செத்தவரை, தொட்டி, கஞ்சியூர், ஆவூர், உடையாநத்தம் போன்ற ஊர்களை பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.
செத்தவரை தமிழ்நாட்டில் உள்ள பழமையான பாறை ஓவிய பகுதி ஆகும். இந்த கிராமம் செஞ்சியில் இருந்து வேட்டவலம் போகும் வழியில் இருக்கிறது. இங்குள்ள அய்யனார்மலை என்ற பாறை குன்றில் சிவப்பு வண்ணத்தில் வரையப்பட்ட பல ஓவியங்கள் காணப்படுகின்றன. பெரும்பாலும் விலங்கின ஓவியங்களே காணப்படுகின்றன. தமிழ்நாட்டிலேயே மீன் உருவம் உள்ள பாறை ஓவியம் இங்குதான் இருக்கிறது. விரல்களுடன் கூடிய மனித உள்ளங்கை ஓவியங்களும் நிறைய இருக்கிறது. இங்குள்ள மான் வடிவம் மிகவும் அழகானது. இதன் காலம் கி மு 1500.
தொட்டி கிராமம் திருக்கோயிலூருக்கு அருகில் சங்கராபுரம் செல்லும் சாலையில் உள்ளது. இங்குள்ள சிறிய குன்றில் உள்ள பஞ்ச பாண்டவர் படுக்கை சற்று வித்தியாசமானது. இந்த படுக்கைகள் மிகவும் சிறியவை. சிறுவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இதை கொண்டு சமண துறவிகளில் சிறுவர்களும் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லை. இந்த படுக்கைகளுக்கு பின் புறம் உள்ள இரண்டு படுக்கைகள் பெரியவை. இதன் காலம் கி பி பத்தாம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது.
கஞ்சியூர் குன்றில் உள்ள குகையில் இரண்டு இடங்களில் ஐந்து படுக்கைகளாக மொத்தம் பத்து கற்படுக்கைகள் காணப்படுகிறது. படுக்கைகளுக்கு அருகில் ஒரு கல் இருக்கையும் இருக்கிறது. குகைகளின் மேலே வெள்ளை வண்ணத்தில் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. பெரும்பாலும் சிந்து சமவெளி குறியீடுகள். பல அழிந்து போயுள்ளன.இந்த குன்றின் அருகில் உள்ள கிராமத்தில் சமணர்கள் சிலர் வாழ்ந்து வருகிறார்கள்.
ஆவூர் திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் போகும் வழியில் உள்ள ஒரு கிராமம். பாண்டியர்கள், சோழர்கள், நவாப்கள் ஆண்ட நெடிய வரலாறை உடைய ஊர். இங்கு உள்ள முக்கிய தொழில் கோரைப்பாய் பின்னுவது. ஏறக்குறைய 400 குடும்பங்கள் 200 வருடங்களாக இந்த குடிசை தொழிலில் இருக்கின்றனர். பெரும்பாலும் இசுலாமியக் குடும்பங்கள். 1971 இல் இருந்து இயந்தரங்களுக்கு மாறியுள்ளனர். திருப்பூர் போன்று, மையப்படுத்தப்படாத, இந்திய தொழில் கூறை உடையது இந்த குடிசை தொழில். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சில இளைஞர்களும் வேலை செய்கின்றனர். தற்போது கடுமையான மின்வெட்டால் இந்தத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
உடையானத்தம், கீழ்வாலை பாறை ஓவிய இடத்திற்கு அருகில் உள்ள ஊர் . இங்கிருந்து வடக்கே 3 கி மீ தூரத்தில் உள்ள ஆதிலியம்மன் கோவிலுக்கு சற்று முன்னே 'விசிறிப்பாறை' என்றழைக்கப்படும் பழங்கால தாய் தெய்வ வடிவம் ஒன்று உள்ளது. அருகில் உள்ள கீழ்வாலை, செத்தவரை, புறாக்கல் (அரை நாள் அலைந்தும் இந்த இடத்தைக் கண்டறிய முடியவில்லை) போன்ற பாறை ஓவியக் குன்றுகளும், இந்தத் தாய் தெய்வ வடிவத்தையும் வைத்துப் பார்க்கும் போது இந்தப் பகுதியில் வரலாற்றுக்கு முற்பட்ட மனிதர்கள் பெருமளவில் வாழ்ந்து இருக்கிறார்கள் என்று கூறலாம். இந்தப் பயணத்திற்கு உதவியவர்கள் யுவராஜ், பாலசுப்ரமணியன் என்ற இரண்டு சிறுவர்கள். கிட்டத்தட்ட 2 கி மீ என்னோடு வெயிலில் நடந்து வந்து உதவினார்கள். அதிலும் ஒருவன் செருப்பில்லாமல் வந்தான். இருவரும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள். ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால், என்னுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அடிக்கடி தயங்கியபடி தங்களை எஸ் சி என்று கூறிக் கொண்டனர். பின்னர் புகைப்படம் அனுப்புவதற்காக முகவரி கேட்ட போது, எஸ் சி மாரியம்மன் கோவில் தெரு என்று சொன்னார்கள் (இன்னொரு மாரியம்மன் கோவிலை எம் பி சி மாரியம்மன் கோவில் என்றனர்). சங்கடமாகப் போய்விட்டது.
தொட்டியைத் தவிர அனைத்து இடங்களும் விழுப்புரம் -திருவண்ணாமலை சாலையில் உள்ளன.
இவை குறித்து இணையத்தில் பதிவு செய்தவற்றை இணைத்துள்ளேன்.
நன்றி,
தங்கள் அன்புள்ள,
சரவணக்குமார்.
விக்கிபீடியா கட்டுரை
1) http://en.wikipedia.org/wiki/Settavarai
2) http://en.wikipedia.org/wiki/Kanchiyur
யு டியூப் காணொளிகள்
செத்தவரை
1) http://www.youtube.com/watch?v=54Fzes...
2) http://www.youtube.com/watch?v=X4eF62...
3) http://www.youtube.com/watch?v=fO1rdT...
தொட்டி
1) http://www.youtube.com/watch?v=D-gjFS...
2) http://www.youtube.com/watch?v=p6hNHP...
கஞ்சியூர்
1) http://www.youtube.com/watch?v=ksy6U6...
2) http://www.youtube.com/watch?v=QpswRh...
3) http://www.youtube.com/watch?v=784jIK...
ஆவூர்
1) http://www.youtube.com/watch?v=YqTIgM...
2) http://www.youtube.com/watch?v=_0PRmg...
3) http://www.youtube.com/watch?v=_Aj4wF...
உடையாநத்தம்
1) http://www.youtube.com/watch?v=fMCWgP...
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
