P.A. Krishnan's Blog, page 9
June 23, 2021
மற்றைய மாநிலத்தவர்கள் தமிழகத்தில் பணியாற்றக் கூடாதா?
“தமிழ்நாட்டில் எதன் அடிப்படையில் வெளிமாநிலத்தினருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் வரும் காலங்களில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்” என்று இன்றையச் செய்திகள் சொல்கின்றன. இது அரசியல் சட்டத்திற்கு முற்றிலும் புறம்பானது. திமுகவினர் அரசியல் சட்டத்தை மதிக்காமல் இருப்பதில் எந்த வியப்பும் இல்லை. ஆனால் மற்றைய கட்சியினர், குறிப்பாக காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சியினர் வாயை மூடிக் கொண்டு இருக்கக் கூடாது. ஆனால் அவர்கள் வாயைத் திறப்பார்களா என்பது ஐயத்திற்குரியது.
இனி அரசியல் சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.
Article 16(2) states that “no citizen shall, on grounds only of religion, race, caste, sex, descent, place of birth, residence or any of them, be ineligible for, or discriminated against in respect or, any employment or office under the State”
இது மிகத் தெளிவாக இந்தியக் குடிமகனுக்கும் எந்த மாநிலத்திலும் வேலை செய்ய உரிமை உண்டு என்பதைச் சொல்கிறது. இதற்கு மாறாக ஏதாவது விதி விலக்கு அளிக்கும் உரிமை நாடாளுமன்றத்திற்குத்தான் இருக்கிறது.
பிரதீப் ஜெயின் வழக்கில் (1984) உச்சநீதி மன்றம் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.
“Some of the States are adopting ‘sons of the soil’ policies prescribing reservation or preference based on domicile or residence requirement for employment or appointment… Prima facie this would seem to be constitutionally impermissible though we do not wish to express any definite opinion upon it, since it does not directly arise for consideration.”
2002ல் உச்சநீதி மன்றம் இவ்வாறு சொல்லியிருக்கிறது:
We have no doubt that such a sweeping argument which has the overtones of parochialism is liable to be rejected on the plain terms of Article 16(2) and in the light of Article 16(3). An argument of this nature flies in the face of peremptory language of Article 16(2) and runs counter to our constitutional ethos founded on unity and integrity of the nation.
உத்திரப் பிரதேசத்தில் உள்ளூர் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்ததை அலகாபாத் உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.
எனவே தமிழ் நாட்டுச் சட்டமன்றத்திற்குள் வாட்களைச் சுழற்றினாலும் உச்சநீதி மன்றத்திற்கு முன்னால் பணிந்துதான் ஆக வேண்டும். இது போன்று பல மாநிலங்களில் ‘மண்ணின் மைந்தர்கள்’ என்ற முட்டாள்தனமான கொள்கை தூக்கிப் பிடிக்கப் பட்டிருக்கிறது என்பது உண்மை. ஆனால் எங்கும் இது நடைமுறைக்கு வந்ததாகத் தெரியவில்லை. இதையும் மீறி திமுக அரசு செயற்பட்டால் உச்சநீதி மன்றம் சொல்லியிருக்கும்படி அது இந்தியாவின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பதாகத்தான் இருக்கும். அதற்கு எதிராக மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என்பது உறுதி.
இந்திய மக்கள் எல்லோரும் ஓர் விலை எல்லோரும் ஓர் நிலை. இதை குறுங்குழு இனவாதிகளால் மாற்றவே முடியாது.
June 21, 2021
திரு ஸ்டாலின் அமைத்திருக்கும் பொருளாதார ஆலோசனைக் குழு
முதலில் திரு ஸ்டாலினுக்கு என் வாழ்த்துகள் உரித்தாகின்றன. சமூகநீதி நாடகத்தை விட தமிழகத்தின் சரிந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தைத் தூக்கிப் பிடித்து நிறுத்துவதுதான் முக்கியம் என்ற நிலைப்பாட்டிலிருந்து அவர் எடுத்திருக்கும் முடிவு மிகவும் சரியானது. பொருளாதாரம் சரியாகும் போது சமூகநீதியின் அடித்தளம் நிச்சயம் வலுப்பெறும். உடனடியான சமூகநீதிச் செயற்பாடுகள் ஏதும் மிகப் பெரிதாக நடக்க எந்த சாத்தியமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
திரு அரவிந்த் சுப்ரமணியம் தொற்றுக்கு முன்னாலேயே இந்தியப் பொருளாதாரத்தின் நிலைமை சரியில்லை என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறார். அவர் சொல்வது உண்மையும் கூட. தமிழ்நாடு இந்தியாவிலிருந்து விதிவிலக்கல்ல. தமிழ்நாட்டின் பொருளாதாரத் தடுமாற்றத்திற்கு திமுகவும் அதற்கு ஆலோசனை கொடுத்துக் கொண்டிருந்த திராவிட முழு முட்டாள்களும் நிச்சயம் பத்து சதவீதமாவது பொறுப்பேற்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்த எல்லாத் திட்டங்களையும் கண்ணை மூடி எதிர்ப்பதுதான் அவர்கள் வேலையாக இருந்தது. மத்திய அரசு எதிர்ப்பையே தூக்கிப் பிடித்துக் கொண்டு வெற்றி பெற்ற பிறகு மத்திய அரசின் ஒத்துழைப்பை அளவிற்கு அதிகமாக எதிர்பார்ப்பது சரியாக இருக்காது. மேலும் வருங்கால நோபல் பரிசு பெறக் கூடிய பொருளாதாரப் பெரும்புலி திரு தியாகராஜன் நேற்று வரை காற்றில் வாளைச் சுற்றிக் கொண்டிருந்தார் என்ற செய்தி மத்திய அரசிற்குச் செல்லாமல் இருக்காது.
திரு சுப்ரமணியம் இந்தியாவைக் குறித்துச் சொன்னது இது: . The underlying primary deficit of the Centre and states combined is typically about 3 per cent of GDP (including about 1 percentage point in debt increases from recapitalising banks and assuming public enterprise debt). So, shifting the primary balance into a modest surplus would require an adjustment of 4 percentage points of GDP. But non-interest expenditure is only roughly 20 per cent of GDP. Consequently, if tax increases were ruled out, then a sudden adjustment would require non-interest spending to be cut by no less than 20 per cent (4 divided by 20 times 100). Clearly, this would be politically impossible.
தமிழகத்தைப் பொறுத்தவரை பற்றாக்குறை ஜிடிபியில் 5%. சென்ற வருடம் எல்லா மாநிலங்களிலும் அதிகக் கடன் வாங்கிய மாநிலம் தமிழ் நாடு. இந்தியாவைப் பொறுத்தவரை அதன் கடன் சுமை ஜிடிபியில் 90%. தமிழகத்தைப் பொறுத்தவரை அது வாங்கியிருக்கும் கடன் தமிழக ஜிடிபியில் 23%.
அரசு கட்டுமானப் பணிகளுக்குச் செலவிடுவதை விட மிக அதிகமாக அரசு ஊழியர்களின் சம்பளம் ஓய்வூதியம் போன்றவற்றிற்கும், மக்களுக்கு இலவசங்களை வழங்குவதற்கும் செலவிட்டுக் கொண்டிருக்கிறது. மத்திய அரசாவது ரகுராம் ராஜன் பரிந்துரை செய்தது போல கரன்சி நோட்டுகளை அச்சிடலாம. அந்த சாத்தியம் தமிழக அரசிற்குக் கிடையாது. அதிக வரி வசூலிக்கும் வழியும் ஏறத்தாழ அடைக்கப்பட்டு விட்டது. தமிழத்தின் கடன் சுமையும் வருடத்திற்கு 30% வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. மிக அதிக வட்டி வீதத்தில் (8%) அரசு கடன் வாங்கிக் கொண்டிருக்கிறது.
எனவே மக்கள் மீது வரிச்சுமையை அதிகரிக்காமல், அரசு ஊழியர்களுக்கு சம்பளமும் கொடுத்து, ஓய்வூதியமும் கொடுத்து சமூகநலத் திட்டங்களையோ, கட்டமைப்புத் திட்டங்களையோ நடைமுறைப் படுத்துவது கடினமான வேலை. ஆனால் இக்கடினமான வேலையை இக்குழுவினால் செய்ய முடியாவிட்டால் யாராலும் செய்ய முடியாது.
பொறுத்திருந்து பார்க்கலாம்.
..
June 20, 2021
Pre-Gandhi Freedom movement and Caste
It has now become fashionable among some writers to brush the leaders of our Freedom movement, especially the ones who were active before the Gandhian era, with the casteist tar and portray them as ones who upheld caste privilege. Nothing can be more false than such a lazy portrayal. Let us analyze the pre-Gandhi freedom movement dispassionately, by examining the ideologies of the greatest stalwarts of the era – Bal Gangadhar Tilak, Lala Lajpat Rai and Bipin Chandra Pal. The trio were affectionately called ‘Lal, Bal Pal.’
Lala Lajpat Rai (1865-1928) had always been of the view that social reform would help the people become more vigorous and justice-loving. He said that there was a natural correlation between social and political work and he pointed that “political freedom is, after all, a consequence of national efficiency” and national efficiency cannot be achieved without such social and economic conditions as will make the nation ‘as a whole self-confident, self-reliant, physically fit, morally reliable and intellectually alert.”
As a leader of the Arya Samaj, to the principles of which he remained committed throughout his life, he was always impatient with the evils of the Hindu society. He favoured equality of sexes, eradication of untouchability, remarriage of widows, female education and reformation of religious practices on a rational basis. He considered the rigidity of the caste system as the bane of Hindu society and a Himalayan barrier on the path to social and national progress. Yes, he was totally against conversions to Christianity and he never denied the fact that he was for the revival of Hinduism. But the revival he envisaged was a caste-less revival. Yes, he believed in varna dharma but not in one’s inheritance of it by birth.
He was a hugely respected leader, and it was to avenge his death that Bhagat Singh shot and killed Saunders.
Bipin Chandra Pal (1858-1932) was one the giant trees that crashed in the Gandhi storm. He started off as a believer of the British rule, became its fiery opponent and later made his compromises with it. After his first wife passed away, he married a widow and joined the Brahmo Samaj, which, stoutly denounced the caste system. Pal was also an ardent proponent of gender equality. It was to celebrate his release that VOC and Siva made speeches in March 1908 which caused their arrests and imprisonment, which in turn culminated in the murder of Ashe.
In his view, the Hindu revival was highjacked by Brahmins whose idea of revival was the resurrection of medieval Hinduism and the social supremacy of the Brahmins. He however felt that the Brahmin brand of revivalism was considerably weakened “under the influence of modern ideas and the conditions of modern life.”
Bal Gangadhar Tilak (1856-1920) was the prime mover our freedom movement before Gandhi arrived on scene. He was an orthodox Chitpavan Brahmin and conservative in his outlook. But what is forgotten is that he said clearly that Vedas were no longer the monopoly of the Brahmins and anyone who wanted to study them could do so. He also said that there was nothing sublime about the Vedic rites and women did not become inferior just because they were denied a major role in these rites.
What were his political views?
In 1891, the very first year his magazine Kesari appeared Tilak wrote: ” A country may be rich or poor, free or in Bondage, but its majority population consists of those who live by their bodily labour and unless and until they are happy and contented, their country cannot be regarded as prosperous or progressive.”
In 1907, he said: “It is not enough only to have a Swadeshi ruler. We have got them in our Native States now. The more important question is how much power the people possess in the Swaraj and not whether the ruler is indigenous or alien. When we ask our people to make efforts for Swaraj we mean that the people must get political power. From this point of view, the rule in Russia, even if native, is not Swaraj. The same holds good in the case of Germany. … The more the poeple get enlightened anywhere the more will they demand democratic Swaraj.“
It is thus clear that Tilak’s idea of Swaraj embraced the whole people, without distinction of caste and creed.
He elaborates on this point in his famous speech in Lucknow session of the Congress in the year 1916.
“It has been said by some that we have yielded too much to the Muslims. I am sure I represent the sense of the Hindu community all over India and I say that we could not have yielded too much. I would not care if the right of self-government are granted to the Muslim community only. I would not care if they are granted to Rajputs. I would not care if they are granted to the lowest classes of the Hindu population, if the British Government considers them more fit than the educated classes of India for exercising those rights…Then the fight will be between them and other sections of the Indian community and not, as at present, a triangular fight… We have to fight a third party and therefore it is very important that we should stand untied on this platform, united in race, united in religion and united as regards all shades of different political opinion. We have forged this weapon of unity and that is the most important event of the day.”
Tilak was very clear that the people should first get political power. When he is writing on Gandhi he says this: Some people appear to believe that if the condition of the country is to improve, they must be reform of society and when that is done, political reform will come. Gandhi’s life teaches us how erroneous this belief its. For all kinds of reforms and improvements, the leaderss of the nation must have at least some power to enforce reforms. All wisdom and intelligence are futile in the absence of power. Therefore efforts must chiefly be directed towards establishing this fundamental basis.”
Now the question to be asked is, which of these voices is casteist? The answer, if you are honest, will be none of them is.
June 18, 2021
ஆஷ் கொலை
நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் செய்த செயல்களுக்குக் காரணங்களில் ஒன்று சாதி என்று சொல்வது தடித்தனத்தின் உச்சம்.
மனிதகுல விரோதிகளான பெரியாரிஸ்டுகள் அவ்வாறு சொல்வதில் வியப்பில்லை. பட்டியலினத்தவர்கள் அவ்வாறு சொல்வதிலும் வியப்பில்லை. அவர்களுக்கு அயோத்திதாசர் எழுதியதையெல்லாம் நியாயப்படுத்த வேண்டிய கட்டாயம். திருமாவளவனுக்கு திராவிட இயக்கத்திற்கு வால் பிடிக்க வேண்டிய கட்டாயம். ஆனால் காந்தி, நேரு பெயரைச் சொல்லிக் கொண்டு அலைபவர்கள் இவ்வாறு சொல்வது வெட்கக் கேடு. காந்தியும் நேருவும் சாதியைத் தூக்கிப் பிடிப்பதற்காகத்தான், பார்ப்பன-பனியா ஆட்சியை அமைக்கத்தான், சுதந்திரம் வாங்கினார்கள் என்று சொல்வதற்கும் வாஞ்சி சாதிவெறி உந்துதலின் பெயரில் ஆஷைச் சுட்டார் என்று சொல்வதற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.
சுதந்திரப் போராட்ட வீரர்களில் பலர் சாதிய நிலைப்பாட்டை எடுத்தார்கள் என்பதில் உண்மையிருக்கிறது. ஆனால் அவர்கள் வெள்ளையரை விரட்ட வேண்டும் என்று சொன்னதற்கும் அவர்களின் சாதிய நிலைப்பாட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பிரிட்டிஷ் அரசு சாதிகளை மிகப் பாதுகாப்போடு வைத்திருந்தது. அவர்களுக்கு சட்டம் ஒழுங்கு முக்கியம். இந்தியப் பழக்க வழக்கங்களில் தலையிட மாட்டோம் என்று விக்டோரிய மகாராணி 1858லேயே வாக்குறுதி கொடுத்து விட்டார். தீண்டாமையைத் தடுக்கவும் பிரிட்டிஷார் எந்த முயற்சியும் செய்யவில்லை என்பதுதான் உண்மை. தீண்டாமை ஒழிக்கப்பட்டது விடுதலைக்குப் பின்புதான்.
சாதிய பழக்க வழக்கங்களில் கை வைத்தால் கலகங்கள் நிகழும் என்பது பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு நிச்சயம் தெரிந்திருந்தது. அதுவும் பட்டியலினத்தவரை ஆதரித்து எதைச் செய்தாலும் எல்லாச் சாதியினரும் சேர்ந்து கொள்வார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. திருநெல்வேலியில் பட்டியலினத்தவர் பிணத்தை சாதி இந்துக்கள் தெருவழியாக எடுத்து சென்றதனால் 1858ல் கலவரம் நிகழ்ந்து பலர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். எனவே இது போன்ற நடவடிக்கையை ஆஷ் செய்திருக்க வாய்ப்பே இல்லை. இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்து ஆண்டுகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் பல சாதிக் கலவரங்கள் நிகழ்ந்தன என்று பேட் தன் கெசட்டீரில் பதிவு செய்திருக்கிறார். ஆஷ் அருந்ததியருக்கு உதவியிருந்தால் அது மிகப் பெரிய சர்ச்சையாக பட்டியலினத்தவர்களுக்குள்ளேயே வெடித்திருக்கும். அது பதிவு செய்யப்படமால் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே ஆஷ் அருந்ததியருக்கு ஆதரவளித்தார், அருந்ததியரை பிராமணத் தெரு வழியாகச் செல்ல அனுமதித்தார் என்று சொல்வதெல்லாம் கட்டுக்கதை. இக்கூற்றிற்கு எந்த ஆதாரமும் கிடையாது. ஆதாரம் இருந்தால் அதைக் காட்ட வேண்டும். அவ்வாறு ஆதாரம் இருந்தாலும் அதனால் வாஞ்சி பாதிக்கப்பட்டார் என்பதற்கும் ஆதாரம் வேண்டும். நடந்திருக்கலாம் என்று கதையளப்பது வரலாறு ஆகாது. அயோத்திதாசர் பிரிட்டிஷ் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததனால் வாஞ்சி சாதி வெறியர் ஆகி விட மாட்டார்.
வாஞ்சிநாதன் பெரிய தத்துவவாதியல்ல. அவரை வெள்ளையரைக் கொலை செய்யத் தூண்டி விட்டது நீலகண்ட பிரம்மச்சாரி என்பது வழக்கு விசாரணையில் தெரிய வருகிறது. வாஞ்சி இக்கொலையைத் தனிமனிதனாகச் செய்யவில்லை. அவருக்கு துப்பாக்கி சுடுவதில் புதுச்சேரியில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆஷ் உயர்சாதியை அவமானப் படுத்தினார் என்பதற்காக அவரைச் சுடுவதற்கு வவேசு ஐயர் உட்பட நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாஞ்சிக்குப் பயிற்சி அளித்து அவருக்கு துப்பாக்கியும் கொடுத்தார்கள் என்று சொல்வது மூடத்தனம் மட்டுமல்ல. காலித்தனம்.
வாஞ்சி சனாதனம் என்று தன் கடிதத்தில் சொல்வதால் அவர் பட்டியலினத்தவரின் விரோதி என்று சொல்வதும் தற்குறித்தனம். அவர் சனாதன தர்மம் என்று சொல்வது அரவிந்தரின் தாக்கத்தால் என்பது தெளிவு. அவருக்கு பயிற்சி அளித்தவர்கள் அனைவரும் அரவிந்தரின் ஆளுமையால் கவரப் பட்டவர்கள்.
அரவிந்தர் என்ன சொல்கிறார்?
“The caste system was once productive of good, and as a fact has been a necessary phase of human progress through which all the civilisations1 of the world have had to pass. The autocratic form of Government has similarly had its use in the development of the world’s polity, for there was certainly a time when it was the only kind of political organisation that made the preservation of society possible. The Nationalist does not quarrel with the past, but he insists on its transformation, the transformation of individual or class autocracy into the autocracy, self-rule or Swaraj, of the nation and of the fixed, hereditary, anti-democratic caste-organisation into the pliable self-adapting, democratic distribution of function at which socialism aims. In the present absolutism in politics and the present narrow caste-organisation in society he finds a negation of that equality which his religion enjoins. Both must be transformed. The historic problem that the present attitude of Indian Nationalism at once brings to the mind, as to how a caste-governed society could co-exist with a democratic religion and philosophy, we do not propose to consider here today. We only point out that Indian Nationalism must by its inherent tendencies move towards the removal of unreasoning and arbitrary distinctions and inequalities. Ah! he will say, this is exactly what we Englishmen have been telling you all these years. You must get rid of your caste before you can have democracy. There is just a little flaw in this advice of the Anglo-Indian monitors, it puts the cart before the horse, and that is the reason why we have always refused to act upon it.”
The Unhindu Spirit of Caste Rigidity – Bande Mataram. September 20, 1907
சாதியை எவ்வாறு அணுகுவது என்பதில் அக்கால கட்டத்தில் பல சர்ச்சைகள் நடந்து கொண்டிருந்தன. நம் விடுதலைப் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் அதை வெவ்வேறு கோணங்களில் அணுகினார்கள். வாஞ்சி போன்றவர்களுக்கு இது போன்ற விஷயங்களில் தெளிவு இருக்க வாய்ப்பில்லை என்று சொன்னால் அதில் உண்மையிருக்கலாம். ஆனால் அவருடைய ஒரே குறிக்கோள் ஆங்கில அரசைச் சாய்ப்பது என்பது அவருடைய கடித்தத்திலிருந்து மிகத் தெளிவாக விளங்குகிறது. அதற்காக தன்னைக் ‘கடையேன்’ என்று சொல்லிக் கொண்டு அவர் எடுத்த முயற்சிதான் ஆஷ் கொலை. அதற்கும் சாதி வெறிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
இந்திய ஒருமைப்பாட்டின் இரண்டு முழு விரோதிகள்
தமிழ்நாட்டில் இன்று இந்திய ஒருமைப்பாட்டின் முழு விரோதிகளைக் கொண்ட குழுவினர் இருவர் வெளிப்படையாக இயங்கி வருகிறார்கள்.
ஒன்று பெரியாரியவாதிகள்.
ஒரு குறிப்பிட்ட குழுவினரை அக்குழுவில் பிறந்தவர் என்ற ஒரே காரணத்திற்காகப் பழித்துக் கொண்டிருப்பதை ஹிட்லர் செய்து கொண்டிருந்தான். அதைத்தான் பெரியாரியவாதிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். அவன் மனிதகுல விரோதி என்றால் இவர்களும் எந்த சந்தேகமும் இல்லாமல் மனிதகுல விரோதிகள்தாம். ஹிட்லர் செய்ததைத்தான் இவர்கள் எந்த வெட்கமும் இல்லாமல் செய்து கொண்டு வருகிறார்கள்.
இது திரு கொளத்தூர் மணி சொல்லியிருப்பது:
“பெரியார் தமிழ்நாடு தமிழருக்கே’ என்று தனித் தமிழ்நாடு கோரிக்கையைத்தான் முன்வைத்தாரே தவிர, மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்களைச் சேர்த்து திராவிட நாடு விடுதலையை முன்வைக்கவில்லை. திராவிடம் என்பது ஏதோ நிலப்பரப்புக்கான அடையாளம் இல்லை. அது இந்துத்துவ எதிர்ப்பின் குறியீட்டுச் சொல். நாங்களும் தனித் தமிழ்நாடு கேட்கிறோம், தமிழ் தேசியவாதிகளும் தனித் தமிழ்நாடு கேட்கிறார்கள். ஆனால், அவர்கள் வெறுமனே மண்ணுக்கான விடுதலையை முன்வைக்கிறார்கள். நாங்கள் மக்களுக்கான விடுதலையை முன்வைக்கிறோம். ‘திராவிடர்’ என்ற சொல், பார்ப்பனர் அல்லாத மக்கள் என்ற பொருளில்தான் பெரியாரால் பயன்படுத்தப்பட்டது.”
இது தெளிவாக, இவர்கள் அமைக்கவிருக்கும் திராவிடநாட்டில், பிராமணருக்கு இடம் இல்லை என்று சொல்கிறது. மக்கள் என்றால் பிராமணர்கள் அல்லாதவர் என்று சொல்வது அப்பட்டமான நாஜி இனவெறி. மனிதகுலத்திற்கே எதிரான வெறி. அழித்தொழிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்திற்குத் சொந்தக்காரர்கள் பெரியாரிய வாதிகள். இவர்கள் இந்திய ஒருமைப்பாட்டின் விரோதிகள் என்பதும் வெளிப்படை. இவர்கள் கணக்கில் இந்திய ஒருமைப்பாட்டிற்குத் தமிழ்நாட்டில் ஆதரவளித்து தீவிரமாக இயங்குபவர்களில் மிக முக்கியமானவர்கள் பிராமணர்கள். எனவே இந்திய ஒருமைப்பாட்டைச் சாட வேண்டுமானால் பிராமணர்களைச் சாடினால் போதும் என்ற உத்தியை இவர்கள் காலம் காலமாகக் கையாண்டு வருகிறார்கள். மத்தியில் இருப்பது பார்ப்பன அடிவருடி அரசு என்று இவர்கள் தொடர்ந்து சொல்லி வருவதன் காரணமும் அதுதான். ஆனாலும் அடிப்படையில் முழுப் பிரிவினைவாதிகள் என்றாலும் இன்றுவரை அதிகம் வன்முறையில் இறங்காதவர்கள். நாளை எப்படி இருக்கும் என்று யாராலும் உறுதி சொல்ல முடியாது.
இரண்டு பிரபாகரன் ஆதரவாளர்கள்.
பிரபாகரன் தமிழர்களையும், முன்னாள் இந்தியப் பிரதமரையும் கொன்ற கொலைக் குற்றவாளி. இவர் தலைமை தாங்கிய விடுதலைப் புலிகள் செய்த கொலைகளின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதவை. இவர்களை ஆதரிப்பவர்கள் வன்முறைக்கு அஞ்சாதவர்களாகத்தான் இருப்பார்கள். பிரபாகரன் ஆதரவாளர்களும் இந்திய ஒருமைப்பாட்டின் முழு எதிரிகள். தனித்தமிழ்நாடு கனவைக் கண்டு கொண்டிருப்பவர்கள். பயங்கரவாதத்தின் இலக்கணம் என்று சொல்லக் கூடிய புலிகளின் இயக்கத்தை, இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரிப்பவர்கள்.
இதில் பெரியாரியவாதிகளாக இருப்பவர்களில் சிலர் (கொளத்தூர் மணி அல்ல) பிரபாகரன் ஆதரவாளர்களை விமரிசித்துக் கொண்டிருக்கிறார்கள். இது கொளத்தூர் மணி போன்ற பெரியாரியவாதிகளையும் பிரபாகரன் ஆதரவாளர்களையும் பொங்க வைத்து விட்டது. இரு குழுவினருக்கும் பெரிய தகராறு. வாதங்கள் வலுப்பெறுவதால் வண்டவாளங்கள் வெளியாகின்றன. இந்திய அரசு இவ்வாதங்களைக் கவனிக்க வேண்டும். இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான சக்திகள் பேசிக் கொண்டிருக்கும் வரையில் அரசும் கண்காணித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் இவர்களில் சிலர் பேச்சோடு மட்டும் நிறுத்துவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ராஜீவ் காந்தி கொலை செய்யப்படும் வரை இந்தியத் தலைவர்கள் மீது புலிகள் கையை வைக்க மாட்டார்கள் என்றுதான் எல்லோரும் நம்பிக் கொண்டிருந்தார்கள். இந்திய அரசு ராஜீவ் காந்தி விவகாரத்தில் கோட்டை விட்டது போலக் கோட்டை விடக் கூடாது.
இது போன்ற விவாதங்கள் ஏன் எழுவர் விடுதலையை இந்திய அரசு என்றும் அனுமதிக்கக் கூடாது என்பதையும் தெளிவாக்குகின்றன. புலிகளின் ‘ உறங்கும் அறைகள்’ (sleeper cells) இன்றும் தமிழ்நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கலாம். இவர்கள் வெளியில் வந்தால் உறங்கும் அறைகள் விழித்துக் கொண்டு தமிழ்ப்பிரிவினை வாதம் இன்னும் வேகம் பெறும் அபாயம் இருக்கிறது. வேகம் பெற்றால் அமைதி விடை பெற்றுக் கொண்டு விடும். எழுவரை வெளியில் விட வேண்டும் என்று சொல்பவர்களில் பலர் இந்திய ஒருமைப்பாட்டிற்கு நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ எதிராகச் செயல்படுபவர்கள் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. மத்தியில் இருக்கும் அரசு எந்த அரசாக இருந்தாலும் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராகச் செயல்படாது என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கிறது. எந்த மாறுடையில் வந்தாலும் பிரிவினைவாதத்திற்கு எதிராக மிகக் கடுமையாக இயங்க இந்திய அரசு தயங்கக் கூடாது.
June 15, 2021
The Margarine Marxists of Tamil Nadu and their Lumpen Supporters
One of the reasons why I quit debating on Facebook is that it has never been a place for healthy debates. It is full of Nazis and other assorted fanatics who will drown what you write with inanities, circular arguments, empty rhetorics and plain abuses. These lumpens have seriously impaired brains and if you took them and collected them in one big hall, you still wouldn’t have enough IQ points to make a half-wit. Please don’t mistake me. I have no problem with people with low IQ, unlike the Ubermensch finance minister of Tamil Nadu, but I know better than to applaud them or have them constantly around me. But the Margarine Marxists of Tamil Nadu seem to be thrilled with their company. In a post on the wall of a pompous editor of an English fortnight, a lumpen speaks about the physical appearance of a person and says he is so skinny that if he were to be flayed nothing substantial would remain. The editor finds this comment mirthful, and he calls himself a Marxist.
This was what Marx said and how prescient he is!
“The lumpenproletariat, this scum of the decaying elements of all classes, which establishes headquarters in all the big cities, is the worst of all possible allies. It is an absolutely venal, an absolutely brazen crew. Every leader of the workers who utilizes these gutter proletarians as guards or supports, proves himself by this action alone a traitor to the movement.”
The Margarine Marxists of Tamil Nadu are the textbook definitions of the traitors to the Communist movement and there is no wonder they use lumpens to get cheap thrills. It never occurs to them that Communists don’t score victories by merely winning Brownie points on Facebook.
There are of course several Communists who work sincerely and selflessly among the proletariat and the peasants. But unfortunately, many of those who are visible to the public are proving to be betrayers of the very idea of Communism. One MP brazenly says that his DNA is different from the Northerners. I consider it a shame to call such persons Communists. The public have rightly identified them as miserable camp-followers of the Dravidian movement.
If you are a communist or a Marxist, you should be totally free of racism. You should be a true internationalist and view the world through Marxist and humanist prism. But many Marxists of Tamil Nadu, especially the ones who preen themselves in public, swear by Periyar and try to justify, either overtly or covertly, the brazen racist theories of his. Many of them are unashamedly regional chauvinist and promote unscientific theories of Tamil glory.
The history of modern Tamil Nadu, when it is written, would gratefully acknowledge the glorious work by the Communists in the years preceding our independence and in those that immediately followed it. However, it would also note, with total contempt, the steep fall of the Communists both in the ideological and the popular arenas in the subsequent years, their despicable collaboration with the Periyarist Nazis, thier miserable adherence to tailism and their constant waiting at the high table of the DMK. I am sure it would also mention in passing the Margarine Marxists and the cheap and shameful thrill they got out of the cacophonous rabble surrounding them.
June 14, 2021
கிஷோர் கே சுவாமி கைது
பேசியதற்காகவும் எழுதியதற்காகவும் கைது செய்யப்படுவதை நான் என்றும் ஆதரித்ததில்லை. பல ஆண்டுகளாக என் நிலைப்பாடு இதுதான். கறுப்பர் கூட்டத்தினரைக் கைது செய்த போதும் அது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று நான் கண்டித்தேன்.
இன்று கிஷோர் கே சுவாமி கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் சாக்கடைத்தனமாகப் பேசியும் எழுதியும் வந்தார் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் அவர் வன்முறையைத் தூண்டி விடவில்லை. அவர் மீது வழக்குத் தொடரலாம். வழக்கில் நீதி மன்றம் தண்டனை கொடுத்தால் வரவேற்கலாம். மாறாக அவரை கைது செய்து சிறையில் அடைப்பது ஜனநாயகக் கொள்கைகளுக்கு நேர்மாறானது. அவர் சாட்சிகளைக் கலைப்பார் என்று கூடச் சொல்லமுடியாது. ஏனென்றால் அவர் கைது செய்யப்பட்து அவர் பேசியது, எழுதியதின் அடிப்படையில். எனவே எந்த வகையிலும் அவர் கைது செய்யபட்டதை நியாயப்படுத்த முடியாது.
இதை யார் நியாயப்படுத்துகிறார்கள்?
திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்தவர்கள். இவர்கள் அடிப்படையில் ஜனநாயகத்தில் எந்த நம்பிக்கையும் இல்லாதவர்கள். திராவிடத் தலைவர்கள் பிராமணர்களைப் பற்றியும் பாரதப் பிரதமர் மோதியைப் பற்றியும் திரு எடப்பாடி பழனிசாமியைப் பற்றியும் கொச்சையாகப் பேசப்பட்டபோதும் வரவேற்றவர்கள். வெளிப்படையாக மிரட்டுபவர்கள்
இவரால் அவதூறு செய்யப்பட்ட பெண்கள். இவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. ஆனால் நியாயம் குறுக்குவழியில் வரக்கூடாது. நீதிமன்றம் வழியாகத்தான் வர வேண்டும்.
கலப்படக் கம்யூனிஸ்டுகள். இவர்கள் தினமும் மார்க்ஸை அவமரியாதை செய்கிறார்கள். நாளை தமிழகத்தின் வரலாறு எழுதப்படும் போது இவர்கள் ஹிட்லரியத்திற்குக் குடை பிடித்தவர்கள் என்றுதான் அழைக்கப்படுவார்கள்.
கடைசியாக சில தமிழ்நாட்டின் அரையணா அறிஞர்கள். கீழ்மையின் அடிமட்டத்தை தொட்டு விட்ட பின்னும் இன்னும் கீழே போக மண்ணைத் தோண்டிக் கொண்டிருப்பவர்கள். கனவு இல்லத்திற்காக வாயில் வாளியைக் கட்டிக் கொண்டு காத்துக் கொண்டிருப்பவர்கள்.
இவர்கள் எல்லோரையும் (சில பெண்களைத் தவிர) ஒன்று சேர்ப்பது இன வெறி. ஜனநாயகப் பண்புகளை இவர்கள் தங்களுக்கு வசதியாக இருந்தால் தூக்கிப் பிடிப்பார்கள். இல்லையென்றால் ஒதுக்கித் தள்ளி வ்டுவார்கள். கிஷோர் கே சுவாமி பிராமணராக இருப்பது இவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது.
வெட்கக்கேடு!
June 13, 2021
எல்லோரும் அர்ச்சகர்/பூசாரிகள் ஆகலாமா?
என் நிலைப்பாட்டை நான் பல தடவைகள் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.
திரும்பவும் சொல்கிறேன். அரசு கையில் இருக்கும் கோவில்களில் எல்லாச் சாதியினரும் பெண்களும் திருநங்கையரும் அர்ச்சகர்கள்/பூசாரிகள் ஆகலாம் என்பதுதான் என் நிலைப்பாடு. ஆனால் இதை பெரியாரிய நாஜிகள் போன்றோ திராவிடக் கோமாளிகள் போன்றோ கலப்படக் கம்யூனிஸ்டுகள் போன்றோ, போன்றோ தடித்தனமாக அணுகக் கூடாது.
பிராமணர்கள் அர்ச்சகர்களாக இருக்கும் கோவில்களில் மட்டும் இந்த நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது. பிராமணர் அல்லாதார் பூசாரிகளாக இருக்கும் கோவில்களிலும் இதே நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.உள்ளூர் மக்கள் சம்மதம் இல்லாமல் அவ்வூர் கோவில்களின் இருந்து வரும் பாரம்பரியத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது. பெரிய கோவில்களைப் பொறுத்தவரையில், – உதாரணமாக மதுரை மீனாட்சி, அறுபடை வீடுகளில் இருக்கும் கோவில்கள், ஸ்ரீரங்கம், சமயபுரம் மாரியம்மன், மருதமலை, காஞ்சிபுரம் கோவில்கள் போன்ற வருமானம் அதிகம் இருக்கும் புகழ் பெற்ற கோவில்களுக்கு – தமிழகம் முழுவதிலிருந்தும் பக்தர்கள் வருவதால், தமிழக இந்து மக்களிடையே ஒரு பொது வாக்கெடுப்பு எடுத்து, அவர்கள் அனுமதி பெற்றுத்தான் பாரம்பரியத்திற்கு மாறாக எந்த முடிவையும் எடுக்க வேண்டும். எந்தெந்த கோவில்களுக்கு தமிழகம் முழுவதும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை வருமானத்தைப் பொறுத்து அரசே நிர்ணயம் செய்யலாம். தமிழகத்தில் செலவை விட வருமானம் அதிகம் வரும், ஆனால் அதிகம் புகழ் பெறாத ‘உள்ளூர்’ கோவில்கள் பல இருக்கின்றன. அவற்றில் உள்ளூர் இந்து மக்களிடம் வாக்கெடுப்பு நடத்திய பிறகுதான் பாரம்பரியத்திற்கு மாறாக எந்த முடிவையும் எடுக்க வேண்டும். தமிழகத்தில் வருமானமும் இல்லாமலும், குறித்த நேரங்களில் பூசை நடக்காமலும் இருக்கும் கோவில்கள் ஏராளமாக இருக்கின்றன. இவற்றிற்கு அரசு எந்த அர்ச்சகரை வேண்டுமானால் நியமனம் செய்யலாம். ஆனால் அவர்களுக்கு அரசு ஒழுங்காக சம்பளம் கொடுக்க வேண்டும். மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒப்பேற்றக் கூடாது. உள்ளூர் இந்து மக்கள் நியமனத்தை எதிர்த்தால் அவர்களே நிதி திரட்டி எந்த முறையில் கோவிலில் பூசை நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அந்த முறையில் பூசை நடக்க அனுமதிக்க வேண்டும்.இந்து மக்கள் எவ்வாறு தங்கள் வழிபாட்டு முறையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்து மக்கள் மட்டுமே தீர்மானிக்க வேண்டும். அறநிலையத்துறைக்கோ அல்லது அரசிற்கோ இந்த அதிகாரம் கிடையாது. ஆனால் தமிழக அரசு தாங்கள் பெரியார் வழியில் வந்தவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக இந்து மக்களைக் கலந்து கொள்ளாமல் முடிவு எடுக்கும் வாய்ப்பு நிச்சயம் இருக்கிறது. ஆனால் அது வெத்து வேட்டு முடிவாகத்தான் இருக்கும். இந்தியாவின் எந்த நீதி மன்றமும் அதை நிச்சயம் அனுமதிக்காது. ஒன்றியம் என்று அலறுவது போன்ற, நீட் தேர்வை நிறுத்த உயிரையே கொடுப்போம் போன்ற திராவிடப் போலி நாடகங்களில் ஒன்றாகத்தான் அது இருக்கும்.
June 11, 2021
இரண்டு தொடர்கள் – The Family Man -2 and John Adams
The Family Man – 2 ( Amazon Prime)
தமிழகத்தில் இருக்கும் பிரிவினை வெறியர்களையும் விடுதலைப் புலிகளின் பணத்தில் அரசியல் நடத்துபவர்களையும் இத்தொடர் உலுப்பி விட்டிருக்கிறது. படுகொலைகள் செய்தே உலகத்தின் கவனத்தை ஈர்த்த விடுதலைப் புலிகள் ஆதாரவாளர்களுக்கு தொடர் பிடிக்காததில் எந்த வியப்பும் இல்லை.
விடுதலைப்புலிகளைத் தவறுதலாகச் சித்தரித்திருக்கிறார்கள் என்று இங்கு இருக்கும் இந்திய விரோதிகள் அலறுகிறார்கள். புலிகள் இந்திய ராணுவத்தை பற்றிச் செய்த அவதூறுகள் கொஞ்ச நஞ்சம் இல்லை. இவர்கள் அவை அனைத்தும் உண்மை என்றே இன்று வரை எந்த வெட்கமும் இன்றிப் பரப்புரை செய்து வருகிறார்கள். இந்தியர்களால், இந்தியர்களுக்காக எடுக்கப்பட்ட தொடரைப் பார்த்தால் இவர்களுக்கு வலிக்கிறது. தொடரில் புலிகள் அவதூறு செய்யப்படவில்லை. அவர்கள் தரப்பு நியாயமும் தெளிவாக எடுத்துச் சொல்லப்படுகிறது.
பிராபகரன் உயிரோடு இருக்கிறார் என்று இன்று வரை இவர்களில் பலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உயிரோடு இருந்தால் எங்கே இருப்பார்? பாரீஸ் கிருஷ்ணபவனில் இட்லி சாப்பிட்டுக் கொண்டிருப்பாரா? இயக்கத்தை முற்றிலும் அழிய விடாமல் காப்பாற்ற எல்லா முயற்சிகளும் செய்து கொண்டிருப்பரா இல்லையா? அவருக்கு ‘தூங்கும் அறைகள்’ (sleeper cells) தேவையாக இருக்காதா? அப்படி இருக்கும் பட்சத்தில் அவை எங்கே இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன? இந்தியாவிற்கு எதிராக வேலை செய்து கொண்டிருக்கும் அயோக்கியர்களும் அடியாட்களும் துரோகிகளும் மிகவும் சுதந்திரமாகத் திரியும் தமிழ்நாட்டில்தானே அவை இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன? அவற்றில் சில உறக்கத்திலிருந்து விழித்துச் செயல் படுகின்றன என்று சித்தரிப்பதில் என்ன தவறு? இன்றும் ராஜிவ் காந்தி படுகொலையை நியாயப்படுத்தும் கயவர்கள் இருக்கிறார்களா இல்லையா? இந்தியப் பிரதமரை இவர்கள் மறுபடியும் கொலை செய்யத் தயங்க மாட்டார்கள் என்று சித்தரிப்பதில் என்ன தவறு? அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் சிலர் செயல்படத் தயாராக இருப்பார்கள் என்று சித்தரிப்பதில் என்ன தவறு?
இனி தொடருக்கு வருவோம்.
தொடர் விறுவிறுப்பாகச் செல்கிறது என்று பலர் சொல்லிவிட்டார்கள். உண்மைதான். பல இடங்களில் logical ஓட்டைகள் இருந்தாலும் மொத்தத்தில் ஒரு நம்பகத் தன்மையைத் தொடர் கொண்டு வந்துவிடுகிறது. நடித்தவர்கள் அனைவரும் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். சமந்தா போன்ற திறமை மிக்க நடிகையை நாம் இதுவரை எவ்வாறு பயன்படுத்தியிருக்கிறோம் என்பதுதான் விவாதப் பொருளாக இருந்திருக்க வேண்டும். தொடரில் தமிழகமும் சரியாகத்தான் காட்டப்பட்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஆனால் புலிகளுக்கு ஆதரவாக ஒரு முழுக் கிராமமும் சேர்ந்து செயல்படுகிறது என்பது மிகை. இன்றையத் தமிழக மக்கள் என்றுமே உண்மைநிலை என்ன என்பதை அறிந்து செயல்படுபவர்கள். ஈழப் போராளிகள் தமிழ்நாட்டு மக்களைத் தேவைப் பட்டால் பயன்படுத்துவார்கள், தேவையில்லாவிட்டால் உதறித் தள்ளிவிடுவார்கள் என்பதை தமிழ்மக்கள் அறிந்தே இருந்திருக்கிறார்கள். இங்கு இருக்கும் சில இந்திய விரோதிகளையும் புலிகளுக்கு கூலிக்கு அடியாட்களாகச் செயல்படுபவர்களைத் தவிர தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை என்பதே உண்மை.
John Adams ( Disney Hotstar – premium)
John Adams is a not an easy series to watch. You have to have at least a rudimentary knowledge of the US history to appreciate it. If you do, the series is endlessly captivating. The dialogues are splendid and they bring out the almost insurmountable difficulties the founding fathers of the US faced in the late Eighteenth and the Early Nineteenth Centuries in keeping the nation as one.
John Adams was one of the founding fathers. Although his contemporaries regarded John Adams as one of the most pivotal figures of the revolutionary era of the US, his reputation took a considerable beating in the 19th century. It has however been soaring heavenwards ever since the modern edition of his correspondence appeared a few decades ago, which prompted a rediscovery of his unimpeachable honesty, his mature political thought, and his astounding perspective on American foreign policy.
The series covers his life brilliantly. It starts with the famous trial of the British officers and soldiers who are being accused of massacring innocent civilians of Boston. Largely owing to Adams’s amazing defence, they are acquitted by the Jury. Slowly, he veers around to the conclusion that independence from Britain is the only answer. He goes to France to be the second in command to Benjamin Franklin, but being unused to diplomatic niceties, he quickly falls out with him and is relegated to a diplomatic post in Netherlands. But it is he who drafts the Treaty of Paris which heralds the secession of hostilities between Britain and the American Colonies and seals the recognition of Britain of their independence. He later becomes the ambassador of the US to Great Britain. On return to the US, He serves as the Vice President to George Washington for two terms and on his retirement becomes the second President of the US. He follows a very careful policy of ‘no war’ with either Britain or France (when they are fighting with each other) much to the chagrin of the pro-French Thomas Jefferson. Throughout his life, his advisor is his perceptive wife. It is she who steers him through troublesome times with unshakable support. The series also covers his personal life and the tragedies he meets in his long life of 90 years.
I will recommend this series to the ஒன்றியம் comedians of the DMK and other sundry separatists of Tamil Nadu. There is an uncanny resemblance between the founding fathers of the US and ours. Benjamin Franklin, John Adams, Thomas Jefferson, George Washington and Alexander Hamilton were all fiercely independent and constantly fought among themselves. Still, when the interest of the nation came to the fore, they stood as one. The same was the case with India. Remember, the US was in danger of being torn asunder during the days of the Civil War, which happened after 85 years of independence. Several attempts were to settle the disputes between the North and the South amicably without shedding blood but they all miserably failed. Eventually the Unionists won a resounding victory but the loss of lives was the most horrendous in the history of the US. India too is at the crossroads almost 75 years after independence. Some ஒன்றியம் comedians and a few other assorted idiots think they can seek separation without bloodshed. They live in a jejune world. Every Indian has an equal stake in every square inch of his country. No sane Indian will allow a set of lunatics and traitors to claim separation and attain it without a fight. The Central Government in India is much more powerful than the Unionists were in the 19th century and it will pulverize the separatists in no time.
Nations are not built by tinpot Nazis or half-baked rabble rousers or ஒன்றியம் comedians. Nations are built by statesmen who think long and hard before taking every step. History will always come to their rescue. John Adams tells us succinctly how history does its rescue act.
June 9, 2021
ஒரு தற்கொலையும் ஒரு பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டும்
திமுகவிற்காக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரும் தமிழன் பிரசன்னாவின் மனைவி நேற்று தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். ஆனால் சமூக ஊடகங்களில் எப்போதும் போல பல வதந்திகள் உலாவத் துவங்கி விட்டன. என்னைப் பொறுத்தவரை காவல்துறையினர் விசாரணை செய்து ஒரு முடிவிற்கு வரும்வரை கூச்சல் போடாமல் அமைதியாக இருப்பதைத்தான் நேர்மையானவர்கள் செய்வார்கள். இது போன்ற சம்பவம் பூணூல் போட்ட பிரபலம் ஒருவர் வீட்டில் நடந்திருந்தால் சிலர் பெருங்கூத்தாடியிருப்பார்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் அவர்கள் செய்வார்கள் என்பதால் அத்தகைய செயற்பாடு நியாயம் ஆகி விடாது.
அரசு அதிகாரியாக இருக்கும் இளைஞர் ஒருவர் மீது ஆனந்த விகடன் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியிருக்கிறது. அவர் முன்னுக்கு வந்து கொண்டிருக்கும், மிகவும் அறிவுத் திறன் கொண்ட இளைஞர். அவருடைய எதிர்காலமே இப்போது கேள்விக்குறியாக ஆகி விட்டது என்பதில் ஐயம் இல்லை. ஆனந்த விகடன் மிகுந்த பொறுப்புணர்வோடுதான் நடந்து கொண்டிருக்கும் என்று கருதுகிறேன். அவ்வாறு நடந்து கொண்டிராத பட்சத்தில் ஆனந்த விகடன் மீது அவர் அவதூறு வழக்குத் தொடர வேண்டும்.
அரசு அதிகாரிகள் எவ்வாறு நடந்து கொள்ள வெண்டும் என்பதற்கு தெளிவான வழிமுறைகள் இருக்கின்றன. ஒரு வழிமுறை (Every Government servant shall at all times do nothing which is unbecoming of a Government servant). அரசு அதிகாரி எவ்வாறு நடந்து கொள்ளக் கூடாதோ அவ்வாறு எல்லா நேரங்களிலும் நடந்து கொள்ளக் கூடாது என்று சொல்கிறது. இது போன்ற பாலியற் குற்றச்சாட்டுகளை இந்த வழிமுறையை அவர் மீறினாரா இல்லையா என்ற கோணத்தில்தான் விசாரிக்க வேண்டும். ஆனந்த விகடன் கட்டுரை பொதுவெளியில் இருப்பதால் நிர்வாகம் எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் இருக்க முடியாது. எடுக்கா விட்டால் வெளிப்படையாக குற்றம் சாட்டப்பட்ட பிறகும் அரசு ஏதும் செய்யாமல் இருக்கிறது என்ற குற்றச்சாட்டிற்கு அரசு ஆளாக நேரிடும். எனவே நிர்வாகம் ஆனந்த விகடனைத் தொடர்பு கொண்டு அவர்களிடம் இருக்கும் ஆதாரங்களைக் கேட்டு உடனடியாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.
நான் அதிகாரியாக இருந்த காலகட்டத்தில் பாலியல் அத்துமீறல்கள் சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருந்தன என்பதுதான் உண்மை. அலுவலங்களில் வேலை பார்க்கும் பெண்களே அத்துமீறல்களைச் சகித்துக் கொண்டு போகும் நிலையில்தான் இருந்தார்கள் என்பதும் கசப்பான உண்மை. விசாகா சட்டங்கள் வந்த பிறகுதான் நிலைமை சற்று மாறத் துவங்கியது.
இது நான் 2018ல் எழுதியது.
“என்னுடைய உதாரணத்தையே சொல்கிறேன். நான் பணியில் இருந்த நாட்களில் பல பெண்களோடு பழகும் வாய்ப்புக் கிடைத்தது. சிலர் எனக்கு இணையான அதிகாரிகள். மற்றவர்கள் என்னிடம் வேலை பார்த்தவர்கள். பல முறைகள் பெரும் வீழ்ச்சிக்கு மிக அருகாமையில் இருந்திருக்கிறேன். இப்போது நினைத்தால் என்னை வெட்கப்பட வைப்பவை. ஆனால் என்னைப் பிடித்து இழுத்து வைத்திருந்தது என்னுடைய மனைவியின் அன்பு. எளிமையான, நேரடியான அன்பு. பாலுணர்வுக்கு பல மடங்கு மேம்பட்ட அன்பு. அதனுடன் அவளுக்கு என் மீது இருந்த நம்பிக்கை. ஆண்களுக்கே உரித்தான நாய்க்குணத்திற்கு மாற்றாக அவை அமைந்தன. நாய்க்குணம் இல்லாமல் இருந்ததில்லை. ஆனால் அதைக் கட்டுப்படுத்தி ஓரளவு வெற்றி பெற முடிந்தது நான் செய்த தவப்பயன் என்றுதான் சொல்ல வேண்டும். நேர்மையாக வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று உண்மையாக நினைக்கும் ஒவ்வொரு ஆணும் தன்னைச் சுற்றி அறம் சார்ந்த வட்டம் ஒன்றை வரைந்து கொள்கிறான். அதன் விட்டத்தை அவன் வாழும் சமுதாயம் நிர்ணயிக்கிறது. அது இன்னும் குறுகலாக இருக்கக் கூடாதா என்ற நினைப்பு எப்போதும் இருந்து கொண்டிருந்தால் நல்லது.”
அந்த இளைஞர் என்னுடன் சில ஆண்டுகள் தொடர்பில் இருந்தார். மிகுந்த மரியாதையுடன் நாகரிகம் பேணுபவராகத்தான் எனக்குத் தெரிந்தார். அவர் இக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரங்கள் அற்றவை, தவறானவை என்று நிறுவினால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.
அரசு வேலைகளில் இருக்கும் இளைஞர்கள் பெண்களோடு பழகுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இச்சம்பவம் உறுதி செய்கிறது. அத்துமீறல்கள் எவை என்பதைத் தீர்மானிப்பவர்கள் பெண்கள். இந்த அடிப்படை உண்மையை நம் இளைஞர்கள் உணர்ந்து கொண்டாலே போதும்.
P.A. Krishnan's Blog
- P.A. Krishnan's profile
- 17 followers
