Find & Share Quotes with Friends
எறும்புகள் Quotes
எறும்புகள்: ஆறு கால் மனிதர்கள்
by
நக்கீரன்15 ratings, 4.73 average rating, 1 review
எறும்புகள் Quotes
Showing 1-20 of 20
“எறும்புகளானது அதன் உருவத்தோடு ஒப்பிடும்போது உயிரினங்களிலேயே மிகப்பெரிய மூளையுடையது. இரண்டரை இலட்சம் மூளைச்செல்கள் அதற்குண்டு. இருப்பினும், மனிதரைப் போலத் தான் வாழும் புவியையே அழித்து வாழத் தம் மூளையை அது பயன்படுத்துவதில்லை. நம்மைப் போலப் பேராசை இல்லாதது அதற்குக் காரணமாக இருக்கலாம்.
உண்மையில் எறும்புகள் என்பவை ஆறுகால் மனிதர்கள். தம் உடல் எடையோடு ஒப்பிடுகையில் மனிதர் அளவுக்கு வேகமாக ஓடக்கூடியவை. மேலும் தம் உடல் எடையைவிட 50 மடங்கு வரை சுமையைத் தூக்கிச் செல்லும் திறன் வாய்ந்தவை. மனிதரால் தம் உடல் எடையைபோல இருமடங்கு அளவுதான் தூக்கமுடியும். உலகிலுள்ள ஒட்டுமொத்த மனிதர்களின் எடைக்கு இணையாக எறும்புகளின் எடை இருப்பதாக, அதாவது ஒரு மனிதருக்கு ஈடாக ஒன்றரை கோடி எறும்புகள் உலகில் உள்ளதாக உயிரியல் அறிஞர் எட்வர்ட் ஓ. வில்சன் கணக்கிட்டுள்ளார்.
எப்படிப் பார்த்தாலும் எறும்புகள் என்பது ஆறுகால் மனிதர்களே. நேரம் கிடைத்தால் எறும்புகளை சற்று உற்றுப் பாருங்கள். மனிதர்களாகிய நாம் ஒருவரையொருவர் சந்திக்கையில் கைகுலுக்குவது போல அவையும் தம் உணர்கொம்புகளால் நலம் அலாவுவதைக் கவனிக்கலாம்.
இனி, நாமும் நம் அன்புக்கரத்தை அந்த எறும்புகளோடும் சற்றுக் குலுக்குவோம்.”
― எறும்புகள்: ஆறு கால் மனிதர்கள்

“முன்னோர்களையும் எறும்புகள் கடித்திருக்கும்தானே? அவர்கள் அதை எப்படிச் சமாளித்தார்கள்? உண்மையில் அவர்கள் எறும்புகளை ஒழிக்கவும் இல்லை, விரட்டவும் இல்லை. மாறாக, அவற்றை கொல்லையில் எறும்புப் புற்றுகள் இருக்குமிடம் தேடிச்சென்று, ஆதரித்தார்கள். வீட்டு வாசலில் அரிசிமாவால் கோலமிட்டார்கள். நொய்யரிசி இட்டார்கள். தங்களுக்குப் போதிய உணவு கிடைத்ததால் எறும்புகள் அனாவசியமாக வீட்டுக்குள் நுழையாமல் இருந்தன. மேலும், வீடானது சுத்தமாக இல்லையென்றால்தான் துப்புரவாளர்களான எறும்புகள் அங்கு நுழையும். அதற்கு இடம் கொடுக்காமல் இருந்தாலே போதும்.”
― எறும்புகள்: ஆறு கால் மனிதர்கள்
― எறும்புகள்: ஆறு கால் மனிதர்கள்
“எறும்புகள் நமக்கு முன்னே புவியில் தோன்றிய உயிரினம். எனவே, இப்புவியில் வாழும் உரிமை நம்மைவிட அவற்றுக்கே அதிகம். எனவே, எறும்புகளின் தொல்லை இருந்தால் அதை ஒழிப்பதை விடுத்து, அவற்றை நம்மிடமிருந்து விலக வைக்க வேண்டும். அதற்குச் சில இயற்கையான வழிமுறைகள் உள்ளன.
எறும்புகளுக்குச் சிட்ரஸ் மணம் பிடிக்காது என்பதால் எலுமிச்சை சாறு, ஆரஞ்சுத் தோல் ஆகியவற்றைப் பிழிந்துவிடலாம். அதுபோல் கால்சியம் கார்பனேட்டும் பிடிக்காது என்பதால் சாக்பீசால் கோடு போடுவது, அதைப் பொடி செய்து உதிர்ப்பது என்று விரட்ட முடியும். உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றைத் தூவுவது பிற வழிகள். எப்படியாயினும் போரக்ஸ் எனும் எறும்புக்கொல்லி மட்டும் வேண்டாம்.”

“எறும்புகளிலேயே நச்சுத்தன்மை உடையது இருவகை எறும்புகள்தாம். ஒன்று மத்திய மற்றும் லத்தீன் அமெரிக்காவில் காணப்படும் ‘புல்லட் எறும்புகள்.' மற்றொன்று, ஆஸ்திரேலியாவில் உள்ள 'ஜேக்ஜம்பர்' எனும் எறும்புகள். இதுதவிர, ஆப்பிரிக்காவில் உள்ள 'டிரைவர்' எறும்புகளும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய எறும்பினமே. ஆனால், இங்கு அத்தகைய ஆபத்தான எறும்புகள் ஏதுமில்லை. இங்குப் பொதுவாகக் காணப்படும் எறும்புகள் சிற்றெறும்பு, கட்டெறும்பு, பிள்ளையார் எறும்பு, முசுறு எனப்படும் முயிறு, கடுத்துவாய் ஆகியவை.
இவற்றில் பிள்ளையார் எறும்பு மட்டுமே கடிக்காத எறும்பு. அதனால்தான் அது சாமி எறும்பு போலும். ஆனாலும் எறும்புகளைத் தேடிக் கொல்லும் மக்கள்தாம் ‘எறும்பீஸ்வரர்' என்ற பெயரில் இறைவனையும் திருவெறும்பூரில் வழிபடுகின்றனர்.”
― எறும்புகள்: ஆறு கால் மனிதர்கள்
இவற்றில் பிள்ளையார் எறும்பு மட்டுமே கடிக்காத எறும்பு. அதனால்தான் அது சாமி எறும்பு போலும். ஆனாலும் எறும்புகளைத் தேடிக் கொல்லும் மக்கள்தாம் ‘எறும்பீஸ்வரர்' என்ற பெயரில் இறைவனையும் திருவெறும்பூரில் வழிபடுகின்றனர்.”
― எறும்புகள்: ஆறு கால் மனிதர்கள்
“மனிதர்கள் மட்டும் இப்படி எறும்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. வேறு பல உயிரினங்களும் எறும்புகளுடன் ஒருங்கிணைந்த வாழ்வை வாழ்கின்றன. பலவகை தாவரங்கள் எறும்புகளைத் தங்களுக்குள் வாழ அனுமதித்துத் தங்களைத் தாக்கும் பூச்சிகளிடமிருந்து காத்துக்கொள்கின்றன. சிலவகைப் பறவைகள் எறும்புகளைத் தங்கள் உடலில் கடிக்கவிட்டுக் கொள்வதன் மூலம் உடலில் தொல்லைக் கொடுக்கும் ஒட்டுண்ணிகளைக் குறைத்துக் கொள்கின்றன.
மரங்கொத்திகளின் முதன்மை உணவுகளில் ஒன்று எறும்புகள். ஆனால், ஒருவகை மரங்கொத்திகள் (Rufous woodpecker) மரங்களில் கூடுகட்டும் எறும்புகளின் கூட்டில்தான் தம் முட்டைகளையிடும். அந்த எறும்புகளோ அவற்றை எதிரியாகக் கருதாது. அதன் முட்டைகளையோ அல்லது அதிலிருந்து வெளிவரும் குஞ்சுகளையோ எறும்புகள் எதுவுமே செய்வதில்லை.”

“லத்தீன் மொழியில் எறும்பின் பெயர் ஃபார்மிகா. ஆக, ஃபார்மிக் அமிலம் என்கிற அமிலத்தின் பெயரே எறும்பிலிருந்து எடுக்கப்பட்டதுதான். எறும்பு கடிக்கும்போது இந்த அமிலம்தான் நம் தோலில் செலுத்தப்படுகிறது. இந்த அமிலத்திலிருந்துதான் ஆய்வுக்கூடங்களில் பயன்படும் இதன் துணை வேதிப்பொருள்களான ஃபார்மால்டிஹைட், ஃபார்மலின் ஆகியவை உருவாக்கப்படுகின்றன.”
― எறும்புகள்: ஆறு கால் மனிதர்கள்
― எறும்புகள்: ஆறு கால் மனிதர்கள்
“அமேசானில் உள்ள தொல்குடி மக்களில் ஒரு பிரிவினர் கொடிய வலியைத் தரும் ஒரு வகை எறும்பைத் (Tocandira Ant) தங்கள் உடலில் கடிக்க விடுகின்றனர். இது கொசுக்களினால் பரவும் மலேரியா போன்ற நோய்களுக்கான எதிர்ப்புத்தன்மையைத் தங்கள் உடலில் வளர்க்கிறது என்பது அவர்களது நம்பிக்கை. நவீன மருத்துவ வசதிகள் ஏதுமில்லாமல் வசிக்கும் இம்மக்களின் நம்பிக்கையின்படியே இவர்களின் பகுதியில் பல்லாண்டு காலமாக நோய்த் தாக்குதலும் அதிகமில்லை. இதுவொரு ஆய்வுக்குரிய செய்தி.”
― எறும்புகள்: ஆறு கால் மனிதர்கள்
― எறும்புகள்: ஆறு கால் மனிதர்கள்
“அதேபோல் தோட்டத்தில் ஒரு மரத்தின்கீழ் எறும்புப் புற்றுகளைக் கண்டால் அவற்றை அழிக்காமல் விட்டுவிடுவர். ஏனென்றால், அம்மரத்தின்கீழ் நிலத்துக்குள் எறும்புகளால் காற்றோட்டம் ஏற்பட்டு அம்மரம் நன்றாகக் காய்க்கும் என்ற கமுக்கத்தை அவர்கள் நன்கறிவர். ஆனால், இன்றைய தலைமுறையினரோ தேடித் தேடி எறும்புகளை அழிக்கின்றனர்.
பிட்சர் தாவரம் என்ற ஒரு பூச்சிக்கொல்லித் தாவரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது ஒரு கிண்ணம் போலக் காட்சியளிக்கும். அது தனக்குள் விழும் அனைத்துப் பூச்சிகளையும் பசையில் ஒட்ட வைத்துத் தனக்கு உணவாக்கிக் கொண்டுவிடும். ஆனால், அது எறும்பை மட்டும் ஒன்றும் செய்யாது. இத்தாவரத்தின் கருணைகூட இன்று மனிதரிடத்து இல்லை.”

“மேலும், நிலத்தடியில் இருக்கும் சுவையான நீரைக் கண்டறிந்து, கிணறு தோண்டவும் அவர்கள் எறும்புகளையே நம்பினர். ஒரு படி நவதானியத்தை உடைத்துக் கிணறு தோண்ட தீர்மானித்த இடத்தில் முதல்நாள் மாலையில் தூவிவிடுவர். அந்த இடத்தில் நல்ல தண்ணீர் இருக்கிறதா, இல்லையா என்று மறுநாள் காலையில் போய்ப் பார்த்தால் தெரிந்துவிடும். எறும்புகள் அங்கேயே புற்று தோண்டி தானியங்களைச் சேமித்தால் அவ்விடத்தில் நல்ல தண்ணீர் இருக்கிறது எனப் பொருள். உடனே, அங்கேயே கிணறு தோண்டுவர். மாறாக, அவை தானியங்களை வேறிடத்துக்கு எடுத்துச்சென்று சேமித்தால் அவ்விடத்தின் கீழே தண்ணீர் உள்ளது என்பதை அறிந்து அங்கே கிணறு தோண்டுவர்..”
― எறும்புகள்: ஆறு கால் மனிதர்கள்
― எறும்புகள்: ஆறு கால் மனிதர்கள்
“பண்டைய உழவர்களுக்கும் எறும்புகளுக்கும் இருந்த நெருக்கம் அலாதியானது. ‘முயிறு' என்று ஒரு வகை எறும்பு இருக்கிறது. இது பண்டைத் தமிழில் 'முசிறு' என்று இருந்திருக்க வேண்டும் என்பார் அறிஞர் பி.எல்.சாமி. இதனை 'முசுறு’, 'முசுட்டெறும்பு', 'முசுட்டை' என்றும் அழைப்பர். ‘மூசு' என்பது கூட்டமாக மொய்ப்பதைக் குறிக்கும். (மூசு வண்டறை பொய்கையும் போன்றதே') மூசு + ஊறு (செய்பவை) இணைந்து முசுறு ஆகியிருக்கலாம் என்பது அவரது கூற்று.
இது மரங்களில் இலைகளைத் தைத்து கூடுகட்டும் எறும்பு. பெரும்பாலும் கட்டெறும்புகளைக் கொன்றே மரத்தைக் கைப்பற்றும். வேறு சில வகை எறும்புகள் மரத்திலுள்ள பூவையும் பிஞ்சையும் வாட வைத்துவிடும். ஆனால், முயிறு வாழும் மரங்களில் விளைச்சல் பெருகும். எனவே, உழவர்கள் இதன் வருகையை விரும்புவர்.
பொதுவாக, அன்றைய உழவர்கள் எறும்புகளைக் கொன்றதில்லை. மாறாகச் சர்க்கரை அல்லது வெல்லப்பாகு கலந்த நீரை வயலில் தெளித்துவிட்டு, எறும்புகளை அங்கு வரவழைப்பர். அவை அந்த இனிப்பு நீரை உறிஞ்சி முடித்ததும் தீமை செய்யும் பூச்சிகளைத் தின்னத் தொடங்கிவிடும். உழவர்கள் பூச்சிக்கொல்லிகளை நம்பி வாழாத காலம் அது.”

“சுருக்கமாகச் சொன்னால், மனிதர்கள் காடுகளை அழிப்பது பெருகும்போது எறும்புகள் இடம்பெயர்ந்து 'அட்டகாசம்' செய்வதற்காக மனிதக் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலைகளில் கல்குவாரிகள் அமைந்த இடங்களில் குறிப்பிட்ட ஒரு வகை எறும்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கல்குவாரி இல்லாத பகுதிகளில் இவை காணப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுபோல வயற்காடுகளில் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்படுவதாலும் அவை அவ்விடத்தை விட்டு இடம் பெயர்ந்து நம்மிடம் வருகின்றன.
இந்நிகழ்வை மனித இடப்பெயர்ச்சியோடு ஒப்பிடமுடியும். உலகமயமாக்கலால் வேளாண் தொழில் குறைந்து மனிதர்கள் உள்நாட்டு அகதிகளாக நகரத்துக்கு இடம் பெயர்வது போலத்தான் இதுவும். அதாவது, வீடுநோக்கி வரும் அகதிகளாகத்தான் எறும்புகளை நாம் கருதவேண்டும். நம் முன்னோர்களும் அவற்றை அவ்வாறே கருதினர். அவர்கள் எறும்புகளை எதிரிகளாகக் கருதாமல் நண்பர்களாகக் கருதியதால் அதன் செய்கைகளைக் கூர்ந்து கவனித்துப் பல செய்திகளை அவற்றிடமிருந்து கற்றுக்கொண்டனர்.
இடப்பெயர்வில் எறும்புகளுக்கு நுண்ணறிவு உண்டு. அவை தம் முட்டைகளுடன் இடம் பெயர்ந்து வீட்டுக்குள் நுழைந்தால் மழை வரப்போகிறது என நம் முன்னோர்கள் அறிவர். அதேபோல மழைக் காலத்தில் வீட்டின் தரைப்பகுதியில் வசிக்கும் எறும்புகள் சுவரின்
மேலேறத் தொடங்கினால் வெள்ளம் வரப்போகிறது எனப்பொருள். அண்மையில் நிலநடுக்கங்கள் வருவதையும் எறும்புகள் முன்கூட்டியே அறிகின்றன என்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.”

“எறும்புகளில் ஏறத்தாழ 12,000 வகைகள் உண்டு. காடுகள்தான் அதன் ஆதி இருப்பிடம். காடுகளிலும் அவை கவிகைகளில், மரங்களில், சிதைந்த கட்டைகளில், இலைமக்குகளில், தரைகளில், மண்ணுக்கடியில் எனப் பலவகைப்பட்ட இடங்களில் வசித்தவை. காட்டில் ஏற்படும் சிறுமாற்றமும் இவற்றின் வாழ்வியலில் பெரும் பாதிப்பை உருவாக்குகிறது.”
― எறும்புகள்: ஆறு கால் மனிதர்கள்
― எறும்புகள்: ஆறு கால் மனிதர்கள்
“எறும்பின் உருவத்தை மனிதரின் உருவத்தோடு ஒப்பிட்டால் நாம் கட்டும் கட்டடங்களைவிட உயர்ந்த கட்டடங்களை அவை கட்டுகின்றன. குகைப் பாதைகள், பாலங்கள், பாதாள அறைகள் என அனைத்துவிதக் கட்டுமானப் பணியிலும் மனிதரைக் காட்டிலும் எறும்புகளே முன்னோடிப் பொறியாளர்கள்.
எறும்புகள் குழுவாக வாழும் புற்று அமைப்பை நம் நகரங்களோடு ஒப்பிட முடியும். அதன் குழுவில் தாய்ப்பூச்சி, பாதுகாவலர்கள், பணியாட்கள் என்பது போன்றவை நம் அரசு அமைப்பை ஒத்திருக்கின்றன. தொடக்கக் காலத்தில் மனிதர்களிடம் இருந்த தாய்வழிக் குமுகாய அமைப்பை எறும்புகள் இன்றும் இழக்காதிருப்பது இவற்றின் கூடுதல் சிறப்பு.”

“ஆக, மனிதர்களின் பல தொழில்களை எறும்புகள் ஏற்கனவே செய்து வருவதால் ஸ்மித்சோனியன் இயற்கை வரலாற்று அருங்காட்சிய நிறுவனத்தின் ஆய்வாளர் மார்க் மோஃபெட் (Mark Moffet) என்பவர் இவ்வாறு கூறுகிறார். “நாம் கருதுவது போலச் சிம்பன்சிக்கும் மனிதருக்கும் உள்ள ஒற்றுமையைவிட மனிதருக்கும் எறும்புகளுக்கும் இடையேதான் நெருக்கமான பிணைப்புள்ளது."
சிம்பன்சிகளிடம் இல்லாத ஆனால், மனிதர்களுக்கும் எறும்புகளுக் கும் உள்ள பொதுவான சில கூறுகளை அவர் பட்டியலிடுகிறார். பொதுச் சுகாதாரம், உள்கட்டமைப்பு, பொருட்களின் விநியோகம் மற்றும் சேவை, சந்தை, இடமாற்றச் சிக்கலை எதிர்க்கொள்ளல், வரிசை, கூட்டுழைப்பு என நீள்கிறது அப்பட்டியல்.
இவற்றோடு, எறும்புகளின் தூய்மை பற்றிய ஒரு செய்தியினையும் இணைத்துக் கொள்ளலாம். ஜெர்மனியின் ரெசன்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் டாமர் சேக்ஸ் மற்றும் அவரது குழுவினர் எறும்பைக் குறித்த ஓர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போதுதான் எறும்புகளின் தூய்மைப் பேணல் பற்றித் தெரியவந்தது. எறும்புகள் தம் புற்றின் ஓரத்தில் கழிவறைக்கென்று தனி இடம் ஒதுக்கியுள்ளதை அவர்கள் கண்டறிந்தனர். கழிவறையைக் கட்டி, இருப்பிடத்தைத் தூய்மையாக வைத்திருப்பது மனிதர்களே என்கிற பெருமையும் இனி நமக்கில்லை. அதிலும் எறும்புகளே முன்னோடிகள். மேலும், எறும்புப் புற்றில் நம் சமையலறையில் காணப்படுவதுபோல வீணாக்கப்பட்ட உணவுகளும் கிடையாதாம்.”

“வேளாண்மையும், கால்நடை வளர்ப்பும் தொடக்கக்கால மனிதர்களின் முதன்மைத் தொழில். கால்நடை வளர்ப்பு என்பதும் மனிதர் கண்டுபிடிப்பல்ல. அதுவும் எறும்புகளின் கண்டுபிடிப்பே.
செடிகளைத் தாக்கும் செடிப்பேன் வகைகளில் ஒன்று அசுவினி. அது செடியிலுள்ள சாற்றினை உறிஞ்சிப் பால் போன்ற இனிப்பான ஒருவகை நீர்மத்தைச் சுரக்கின்றது. எறும்புகளானது அந்த நீர்மத்தைக் குடித்துத் தம்மை பேணிக் கொள்கின்றன. எனவே, அசுவினிகள், 'எறும்புகளின் பசுக்கள்' என அழைக்கப்படுகின்றன. மேய்ச்சல் நிலம் ஓரிடத்தில் அழிந்துவிட்டால் மனிதர்கள் கால்நடைகளை வேறிடத்துக்குக் கொண்டு செல்வது போல, ஒரு செடியில் இருக்கும் அசுவினிகளுக்கு ஆபத்து ஏற்பட்டால் எறும்புகள் அவற்றைத் தூக்கிச் சென்று வேறொரு செடியில் பாதுகாப்பாகச் சேர்த்துவிடும்.”

“உலகின் முதல் விவசாயிகள் யார் தெரியுமா? இது என்ன கேள்வி, மனிதர்கள்தான் என்று சட்டென்று பதில் வரும். உங்கள் பதில் தவறு. சரியான பதில் எறும்புகள் என்பதே.
என்னது எறும்புகளா? எறும்புகளாவது வேளாண்மை செய்வதாவது? மனிதர்கள் வேளாண்மையைத் தொடங்கும் முன்னரே, ஏன் மனித இனம் தோன்றும் முன்னரே அதாவது, ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்னரே வேளாண்மை செய்யத் தொடங்கிய உயிரினம்
எறும்புகள்தாம்.
எறும்புகளில் இலைவெட்டி எறும்புகள் என்று ஓர் இனம் உண்டு. அவை இலைகளைக் கத்தரித்து எடுத்துச்செல்லும். அந்த இலைகள் உண்ணுவதற்கு அல்ல. அவற்றை புற்றில் சேர்த்துப் பதப்படுத்தி, மட்கவைத்து அதில் காளான்களை வளர்க்கின்றன. காளான்களே எறும்புகளின் முதன்மை உணவு. இந்தக் காளான் வளர்ப்பு முறையைத்தான் இன்று மனிதர்களுக்காக வேளாண்மைப் பல்கலைக் கழகங்கள் கற்றுத் தருகின்றன.”

“பூச்சிக்கொல்லிகளில் உள்ள வேதிப்பொருள் தீமை செய்யும் பூச்சிகளின் உடலில் நுழைகையில் அந்த நஞ்சின் வீரியம் பத்து மடங்காக அதன் உடலில் பெருகுகிறது. அப்பூச்சிகளைத் தின்னும் நன்மை செய்யும் பூச்சிகளின் உடலுக்கு இடம் மாறியதும், அது இருபது மடங்காகப் பெருகுகிறது. இந்த உயிரிகளைத் தின்னும் பறவைகளின் உடலிலோ அது முப்பது மடங்காகப் பெருகி, இப்பறவைகளைத் தின்னும் மனிதரின் உடலில் நாற்பது மடங்காகத் தங்கிவிடுகிறது. அதைப்போன்றே, உயிர்கொல்லிகளின் நஞ்சு வைக்கோலில் இருந்து மாட்டுக்கும், மாட்டின் பாலிலிருந்து மனிதருக்கும் வந்து சேருகிறது.
எழுபது கிலோ எடையுள்ள ஒரு மனிதர் இறப்பதற்கு 100 மிலி அளவுள்ள உயிர்க்கொல்லியே போதுமானது. இந்நிலையில் உயிர்க் கொல்லிகள் படிந்த உணவுகளை உட்கொள்ளுவதன் மூலம் ஏழெட்டு ஆண்டுகளுக்குள்ளாகவே 100 மிலி அளவுக்கு மனித உடலில் நஞ்சு சேர்ந்து விடுகிறது. ஆனால், நஞ்சு கொஞ்சம் கொஞ்சமாக உடலில் சேருவதால் உடனடி இறப்பைக் கொண்டு வருவதில்லை. மாறாக இரத்தக் கொதிப்பு, சக்கரை நோய். மலட்டுத் தன்மை, பார்வைக் குறைபாடு, மனநலப் பாதிப்பு, புற்றுநோய் ஆகியவற்றை அன்பளிப்பாக அளிக்கிறது.”

“எறும்புகள்தாம் மண்ணுக்குள் காற்றோட்டத்தையும், நுண்சத்துக்கள் பயிரின் வேருக்குச் செல்லவும் வழிவகுப்பவை. மேலும், பருத்தியைத் தாக்கும் பூச்சிகளின் முட்டைகளைத் தின்று அதைப் பாதுகாத்தும் வந்தன.”
― எறும்புகள்: ஆறு கால் மனிதர்கள்
― எறும்புகள்: ஆறு கால் மனிதர்கள்
“பொதிகை மலையில் வசிக்கும் காணிப் பழங்குடியினர் எறும்பைச் 'சோனான்' என்றழைப்பர்”
― எறும்புகள்: ஆறு கால் மனிதர்கள்
― எறும்புகள்: ஆறு கால் மனிதர்கள்
“எறும்பு, நம் கண்களுக்கு ஓர் அற்ப உயிராகத் தெரிந்தாலும், இயற்கைக்கு அது ஆற்றும் பங்கு பெரியது. உண்மையில், மனிதரைவிட எறும்பினால்தான் இயற்கைக்கு நற்பலன் கிடைக்கிறது. எதிர்காலத்தில் மனிதர்களா அல்லது எறும்புகளா என்று இயற்கையின் முன்பு ஒரு தேர்வு நடந்தால், அது கண்டிப்பாக மனிதர்களைத் தவிர்த்துவிட்டு எறும்புகளைத்தான் தேர்வு செய்யும். ஏனெனில், மனிதர்கள் வேறெந்த உயிரையும் மதிக்காத சுயநலவாதிகள். எறும்புகளோ பொதுநலவாதிகள். இதற்கு ஓர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.
ஆப்பிரிக்காவில் வாஸாங் என்று ஒரு பகுதியுள்ளது. அங்கு நிறைய மஞ்சள் நிறத் தினைக்குருவிகள் வாழ்கின்றன. மழைக்காலத்தில் அக்குருவிகள் உண்பதற்குத் தினைகள் கிடைக்காது. அப்போது அவை வெயிலடிக்கும் நேரத்தில் எறும்புப் புற்றுகளுக்கு அருகில் சென்று இனிமையாகப் பாடும். அதைக் கேட்ட எறும்புகள், புற்றில் தாம் சேமித்து வைத்துள்ள தினைகளை வெளியே எடுத்து வந்து வெயிலில் காய வைக்கும். அத்தானியங்களைத் தமக்கு தேவையான அளவில் தினைக்குருவிகள் உண்ணும். அதை எறும்புகளும் அனுமதிக்கும். எறும்புகளின் இந்த உதவிக்கான நன்றிக்கடனை அறுவடைக் காலத்துக்கு முன்பு தினைக்குருவிகள் திருப்பிச் செலுத்திவிடும். எப்படியெனில், வயலில் தினைகள் முற்றியதும் குருவிகள் கதிரின்மேல் அமர்ந்து தினைகளை உதிர்க்கும். அவற்றை எறும்புகள் எடுத்துச்சென்று, தம் புற்றுகளில் சேமித்துக் கொள்ளும்.”