Jeyamohan's Blog, page 18

September 27, 2025

மத்தகமும் சியமந்தகமும்- சாரதி

அன்புள்ள ஜெ,

நலமா? அக்டோபரில் உங்களை மீண்டும் நேரில் சந்திப்பதற்கும் பூன் தத்துவ முகாமில் கலந்து கொள்வதற்கும் ஆவலோடு காத்துகொண்டிருக்கிறோம். 

2024 பூன் முகாமிற்குப் பின்னர் கலிபோர்னியா வளைகுடா பகுதி நண்பர்கள் கடந்த 10 மாதங்களாக மாதமொரு முறை நேரில் சந்தித்து இலக்கிய வாசிப்பிலும் விவாதத்திலும் ஈடுபட்டு வருகிறோம். ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு எழுத்தாளர் என எடுத்துக்கொண்டு அவரது கதைகளை வாசித்து, அதையொட்டிய எண்ணங்களையும் வாசிப்பனுபவத்தையும் பகிர்ந்துகொள்கிறோம். நிற்க. டாலஸ் நண்பர்களின் சென்ற மாதப் பதிவுகளில் மத்தகம் நாவல் பற்றி திரும்ப திரும்ப குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்டவுடன், நாவலை மீண்டும் படிக்கும் ஆவல் என் மத்தகத்திலும் ஏறிவிட்டது. எங்கள் வளைகுடா கூடுகை பாடத்திட்டத்தைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு மத்தகத்தில் மூழ்கிவிட்டேன். கேசவனின் ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் காட்டிலும் நதியிலும் பாய்ந்து விழுந்து ஓடிக்கொண்டிருக்கும் யானைப்பாப்பான்களை போல, மத்தகத்தின் நடைவேகத்திற்கு ஈடுகொடுக்க வாசகனும் ஒரே ஓட்டமாக ஓட வேண்டியிருக்கிறது. 

மார்த்தாண்ட வர்மாவின் களித்தோழனாகி, அரசனுக்கிணையான அதிகார நிமிர்வோடு வரும் கேசவன், தவறிழைப்பவன் வாள்கொண்ட நாயரானாலும் தயங்காமல் தண்டிக்கிறான். தவறி எழுந்த ஒரேயொரு அவச்சொல்லையும் பொறுக்காது தன் பாகனையே காலிலிட்டு மிதிக்கிறான். ஆதிகேசவனுக்கும் மார்த்தாண்ட வர்மாவுக்கும் மட்டுமே தன் மத்தகம் மேல் இடம் கொடுத்தவன், இறுதியில் புதிய அரசனால் தன்முன் நீட்டப்பட்ட துப்பாக்கியைக் கண்டு அதிகார மாற்றத்தை உணர்ந்து கொள்வதும், கொலையும் கள்ளமும் புரியும் மூன்றாந்தர பாகன் பரமனின் கட்டளைக்கு்ப பணிந்து தன் மத்தகத்தில் அவனுக்கு இடம் கொடுப்பதும் மனச்சோர்வையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. ஆனால் மத்தகம் முன்வைப்பது உன்னதமான விழுமியங்கள் கூட அதிகாரத்தின் முன் மண்டியிடக்கூடும் வாழ்க்கையின் அந்த அவலத்தையும் சிறுமையையும் தான்.

கேசவனின் அதே நிலை தான் ராமலட்சுமிக்கும். தன் கணவனைக் கொன்ற அதே பரமனுக்கே உடன்பட்டு வாழவேண்டியிருக்கிறது. “செத்தவங்களுக்கு கவலை இல்ல. இருக்கவங்களுக்குல்லா வயிறுன்னு இருக்கு. அந்த தீயில மண்ண வாரி இடணுமே மூணு நேரம். அதுக்கு மானம் மரியாத எல்லாம் விட்டு ஆடணுமே” என்று அவள் சொல்லும் நியாயம் கேசவனுக்கும் பொருந்தும் என்றாலும் அதை ஏற்க மனம் ஏனோ மறுக்கிறது. என்ன இருந்தாலும் அவன் ஆனையில்லா?!

மத்தகம் வாசிப்பைக் குழுமத்தில் பகிர்ந்து கொண்டபோது டாலஸ் நண்பர்கள் பிரதீப் மற்றும் மூர்த்தி, பரமன் நகையைத் திருடுவதையும் கேசவன் நாராயணனின் இடத்திற்கு ஆசைப்பட்டு பின்னாலிருந்து தாக்குவதையும் குறிப்பிட்டுச் சொன்னார்கள். “தனக்குரியது என கேசவன் உணர்வதை நாராயணன் பெறுவதை சகிக்காமல்  மூத்தவனான நாராயணனை – அதுவரை யாரிடம் அடங்கியிருந்தானோ அவனை – அங்கிருந்து நகர்த்த  தாக்குகிறான். பரமனின் எண்ணத்தில் இந்த நிகழ்வும், அம்பிளியின் சிரிப்பும் வர, அவளை அடைய எண்ணும் அவன் மூத்தவனான அருணாச்சலத்தை கொல்கிறான்.” என மூர்த்தி குறிப்பிட்டார். அதே இடம் எனக்கு வேறொரு அர்த்தத்தையும் அளித்தது. கேசவன் தன்னைத் தாக்கியதும் நாராயணன் சட்டென ஒரு பிளிறிலில்  அதன் வயோதிகம் எனும் பலவீனத்தைப் பின்தள்ளி, கேசவனை அடக்கிவிடுகிறது. தன் காலுக்கு கீழே உள்ளவர்களை அதிகார நிமிர்வோடு நோக்கியிருந்த கேசவன், தனக்கு மேலுள்ள அதிகார அடுக்கை அப்போது உணர்ந்து கொள்கிறது. கதையின் முடிவில் பரமனின் பலவீனத்தைத் தாண்டி அவன் அதிகாரத்தை கேசவன் உணர்வதற்கும் அந்த இடம் ஒரு முக்கிய காரணம் என்று தோன்றுகிறது. கேசவனின் அந்தக் கீழ்மையை அறிந்திருந்ததனால் தான், பரமனும் தைரியமாக அருணாச்சலத்தைக் கொன்று கேசவன் மீதே பழியைச் சுமத்தத் துணிகிறான்.

எத்தனை முயன்றும் கேசவனின் இந்தச் சரிவை ஏற்க மனம் மறுத்தாலும், அந்த இடத்தில் நாம் என்ன செய்திருப்போம் என்பதை எண்ணிப் பார்க்கையில் மனம் நடுக்கம் கொள்கிறது. நான் பணிபுரியும் இடத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல நிர்வாக மாற்றங்கள், பணி நீக்கங்கள். முழுமனதோடு ஏற்றுக்கொள்ள முடியாத போதும் மத்தகத்தின் மீது மற்றவர்களை ஏற்றிக் கொண்டு தொடர்ந்து செல்லத்தான் வேண்டியிருக்கிறது.

இம்முறை மத்தகம் படித்த அதே நாட்களில், தற்செயலாக வில்லியம் டேல்ரிம்பிளின் 

The Empire (podcast)ல் கோஹினூர் பற்றி கேட்டுக்கொண்டிருந்தேன் (காந்தியைப் பற்றி பேசியதைக் காட்டிலும் நான்கு மடங்கு கோஹினூரைப் பற்றித்தான் பேசுகிறார்கள்!). கேசவனைப் போலவே இந்த வைரமும் அதிகாரச் சரிவின் மாபெரும் குறியீடல்லவா. கோஹினூருக்குண்டான பல புராணங்களில் ஒன்று அதை சியமந்தகம் என்கிறது. சூரியனின் துளியாக பூமிக்கு வந்த நாள் முதல், இளைய யாதவன் தொட்டு இன்று வரை எத்தனை அதிகார மாற்றத்தை அது கண்டுவிட்டது. கேசவனைப் போலவே அதன் வரலாறும் ரத்தத்தில் ஊறியது. முகலாயர்கள், ஈரானியர்கள், சீக்கியர்கள் எனத் தன்னை உடமையாக்குபவர்களை எல்லாம் அது தன் கைப்பொம்மையென ஆக்கி அவர்களைக் காவு வாங்கியது. ஆனால் காலமாற்றத்தில், அதிகாரத்தின் முன் அதுவும் பணிய வைக்கப்பட்டு அறுக்கப்பட்டு இன்று எங்கோ ஓர் இடத்தில் இருக்கிறது, அதன் மத்தகத்தின் மீது யாரை வேண்டுமானாலும் ஏற்றிக் கொண்டு!

சாரதி 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 27, 2025 11:31

லட்சுமண ஐயர், விலையில்லா நூல்கள்

அன்புள்ள ஆசிரியருக்கு,

தங்களுக்கு கோபிசெட்டிபாளையம் G.S. லக்ஷ்மண ஐயர் என்ற காந்தியத்தின் சாட்சி மனிதரைப் பற்றி தெரிந்திருக்கும். நாங்கள், குக்கூ நண்பர்கள் மூலமாக இரு வருடங்களுக்கு முன்புதான் இவரைப் பற்றி அறிந்தோம். அதிலிருந்து இவரைக்குறித்து கிடைக்கும் தகவல்களும், இவரை அறிந்தவர்கள் வாயிலாக தெரியும் நிகழ்வுகளும், அவர் விட்டுச்சென்ற நிறுவனங்களும், அவர் வாழ்ந்த தியாக வாழ்க்கையும், அவர் அளித்த கொடைகளும் எங்களை மீள முடியாத வியப்பில் ஆழ்த்திக்கொண்டிருக்கின்றன. இத்தகைய மனிதர்களும் நம்மிடையே வாழ்ந்திருக்கிறார்கள், அவர்களைப் பற்றிய தகவலோ, நினைவுகளோ நம்மில் பலருக்கும் நாம் வாழும் தற்காலத்தில் பெரும்பாலானவர்களுக்கும் இல்லை என்பது இன்னொரு வியப்பு.

கோபிசெட்டிபாளையத்தில் அவருடைய தந்தையார் ஸ்ரீனிவாச ஐயரால் தொடங்கப்பட்டு இவரால் தொடர்ந்து நடத்தப்பட்டு, 120 வருடங்களுக்கும் மேலாக  தொடர்ந்து நடந்து வரும் வைர விழா பள்ளியில் படித்த திரு ‘அக்னி’ தங்கவேல் ஐயா அவர்கள் திரு லக்ஷ்மண ஐயரின் நினைவை தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டி, அங்கு ஐயரால் நிறுவப்பட்ட ஹரிஜன மாணவர் விடுதியின் மேல் கட்டமைப்பு பணிகளை (ஒரு நூலகம் நிறுவுவது உட்பட) மேற்கொண்டுள்ளார். அந்த முயற்சியில் இணைந்து செயல்பட குக்கூ நண்பர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளார்.

அக்டோபர் 5, 2025 அன்று நடக்கப் போகும் திறப்பு விழாவில், 2011-இல் காலமான ஆனால் அதற்கு முன்பே மறைக்கப்பட்டும் மறக்கப்பட்டும் போன ஐயரைப் பற்றிய ஒரு நினைவூட்டலை ஒரு புத்தக வடிவில் கொண்டுவரலாம் என்று உத்தேசித்துள்ளோம். இந்த புத்தகம் கவிஞர், வாசிப்பாளர் மற்றும் இளைஞருமான திரு ஞானசேகரனின் எழுத்தில் வெளி வருகிறது. ஐயர் தலித் மக்களுக்காக செய்த சேவைகள், அவற்றின் தற்போதைய வடிவம், அந்தப் பள்ளியில் படித்த மாணவர் சிலரின் நினைவுக்குறிப்புகள், அவர் தொடர்பான சில படங்கள்,  பொருந்தக்கூடிய சில கட்டுரைகள் போன்றவை இந்த புத்தகத்தில் இடம்பெற உள்ளன. அத்துடன் காலச்சுவடு மாத இதழில் பிரசுரமான இவரது நேர்காணல், பாவண்ணன் எழுதிய சில குறிப்புகள், இவரைக் குறித்து தினமணி மற்றும் வேறு இதழ்களில் வந்த செய்திக் குறிப்புகள் மற்றும் சில கட்டுரைகள் போன்றவற்றையும் இந்த புத்தகத்துடன் இணைப்புகளாக வைக்க உத்தேசித்திருக்கிறோம்.

இந்தப் புத்தகம் தன்னறம் நூல்வெளியின் விலையில்லா வெளியீடாக வரும்.

எதிர்மறை எண்ணங்களை வளர்ப்பதிலும், பிரிவினைவாத அரசியலை உயர்த்திப் பிடிப்பதிலும், உரக்கப்பேசி மூடக்கருத்துகளை நிலைநாட்டுவதிலும் முனைந்து, லக்ஷ்மண ஐயர் போன்ற உண்மையான தியாகிகளையும் நற்செயல் புரிந்தோர்களையும் மறைத்து, தகுதியில்லாதவர்களை முன்னிறுத்தும் மூடர் கூட்டத்துக்கு நடுவே, காந்தியத்தைப் பற்றியும் தலித் அரசியலைக் குறித்தும் ஒரு சரியான, நடுநிலையான புரிதலையும் நம்பிக்கையையும் நீங்கள் உங்கள் எழுத்தின் மூலம் எங்களுக்கு அளித்துக்கொண்டே இருக்கிறீர்கள். அவ்வாறு நம்பும் ஒரு குழுவுக்காகவே, அது எவ்வளவு சிறு குழுவாக இருந்தாலும் சரி, இந்தப் புத்தகம் கொண்டுவரப்படுகிறது.   

ரவீந்திரன்–மீனாக்ஷி

ravindran.appasamy@gmail.com

பகுத்தறிவு, பெரியார், தமிழ் உள்ளம்

இங்கே பெரியாரின் வைக்கம் பங்களிப்பு உண்மையில் என்ன என்றுகேட்டால் வசைபாடுகிறார்கள். கதைகளை உருவாக்குகிறார்கள். ஒரு பகுத்தறிவுவாதிதான் தமிழ்தான் உலகத்தின் தொன்மையான மொழி என்று சொன்னால் அதற்கு முதலில் ஆதாரம் கேட்கவேண்டும்.

பகுத்தறிவு, பெரியார், தமிழ் உள்ளம்

If a child is already addicted to the internet, introducing him to nature may not be effective. Because to observe nature and be in it, we need patience and a keen mind. Internet addiction ruins our patience and our observation skills.

Internet addiction and nature
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 27, 2025 11:30

அஞ்சலி: ரமேஷ் பிரேதன்

ரமேஷ் பிரேதன், இந்த ஆண்டுக்கு விஷ்ணுபுரம் விருதுக்காக தெரிவுசெய்யப்பட்டிருந்தார். கடந்த 12 ஆண்டுகளாக உடல்நிலை நலிவுற்றிருந்தார். மிகு உயர் ரத்த அழுத்தம். அது ஒரு மரபணுச்சிக்கல். அதன் விளைவான பக்கவாதம்.

நானும் நண்பர்களும் சென்ற ஆண்டுகளில் தொடர்ந்து உடனிருந்தோம். 22 ஆம் தேதி நான் அவரிடம் பேசியபோது உடல்நிலை சிறிது முன்னேற்றம் இருப்பதாகவே சொன்னார். 25 ஆம் தேதி வரை நன்றாக இருந்தவர் 26 அன்று உடல்நலிவுற்றார். இதய அடைப்பு மற்றும் மூளைக்குழாய் வெடிப்பு. மயக்க நிலை நீங்காமல் இன்று (27 செப்டெம்பர் 2025) இல் புதுச்சேரியில் மாலை 520க்கு மரணமடைந்தார்.

நம் நண்பர்களின் தொடர்புக்கு

சிவாத்மா 9488084372

கடலூர் சீனு 7010697022

இறுதிச்சடங்குகள் நாளை (28 செப்டெம்பர் 2025) அன்று மாலை 3 மணிக்கு நிகழும்

ரமேஷ் பிரேதன்
27, அங்காளம்மன் கோயில் தெரு,
அங்காளம்மன் நகர்,
முத்தியால்பேட்டை,
புதுச்சேரி- 605003.

https://maps.app.goo.gl/9gDunZDWRnLW9...

ரமேஷ் பிரேதன். தமிழ் விக்கி

 விஷ்ணுபுரம் விருது 2025 ரமேஷ் பிரேதனுக்கு…

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 27, 2025 05:22

September 26, 2025

பொன்னி, அரு.பெரியண்ணன் -ஒரு விழா

நான் நடத்தும் இந்து தத்துவ வகுப்புகள் பல அணிகளாக நடந்துகொண்டே இருக்கின்றன.முதலாவது தத்துவ வகுப்பின் ஏழாவது அணி சென்ற வாரம் நிகழ்ந்தது. இம்முறை 95 பேருடன். அது ஒரு மூன்று நாள் விழா. நான் உடனடியாக அமெரிக்க செல்ல இருப்பதனால் அடுத்த வாரமே ஐந்தாவது நிலை தத்துவ முகாமின் நான்காவது அணியையும் நிகழ்த்தலாம் என்று தோன்றியது .அதற்கும் 60 பேர் வரவிருக்கிறார்கள். இந்த இடைவெளியில் நாகர்கோவிலுக்கு சென்று வர வேண்டாம் என்று அங்கேயே தங்கி விட்டேன். அமெரிக்கா செல்வதற்கு முன்பு எழுதி முடிக்க வேண்டிய சில வேலைகளும் மிஞ்சி இருந்தன. அவற்றை தீவிரமாக எழுதலாம் என்று எண்ணினேன்.

உண்மையில் அங்கே குடும்பத்துடன் ஒரு நான்கு நாட்கள் தங்கலாம் என்றுதான் எண்ணினேன். அருண்மொழி, அஜிதன், சைதன்யா எவருமே வரமுடியாத நிலை. வெவ்வேறு பணிகளில் அவர்கள் சிக்கிக் கொண்டதனால் நான் மட்டுமே அங்கு தங்கும்படியாக இருந்தது. நல்ல வேலையாக ஜி.எஸ்.எஸ்.வி நவீனும் கிருபாலட்சுமியும் அனைவரையும் விட மேலாக மானசாவும் அங்கே வந்தார்கள். ஒரு குழந்தை ஓர் இடத்தை எந்த அளவுக்கு அழகுறச் செய்யும் என்பது மனசா அங்கு வந்தபோதுதான் தெரிந்தது. மிகப் பெரிய வெளி அந்த இடம். அதை முழுக்கவே அந்த கைக்குழந்தை நிரப்பி இருப்பது போல் இருந்தது. அவளுடைய ஒளி நிறைந்த காற்று, ஒளி நிறைந்த மரங்கள். ஒளிர்ந்து நிறைந்த சூழல். எங்கிருந்தோ அவளுடைய பாடும் குரல் பேசும் குரல் ட்டுக் கொண்டே இருந்தது.

நடுவே ஒரு சிறு பயணமாக சென்னை வர வேண்டி இருந்தது. என்னுடைய திட்டத்திலேயே அது இல்லை. அது சற்று கடுமையான பயணமும் கூட. மலைப்பகுதியிலிருந்து ஈரோடு வந்து இறங்கி, ஈரோட்டில் இருந்து சென்னை வந்து, சென்னையிலிருந்து அன்றே திரும்பி மீண்டும் ஈரோடு வந்து, மீண்டும் காரில் மலைக்கு திரும்ப வேண்டும். ஆனால் அந்த கடுமையான பயணத்தை நான் செய்ததற்கு காரணம் அரு.பெரியண்ணன் என்னும் இதழியல் முன்னோடி ஒருவரின் நூற்றாண்டு விழாவை அவருடைய குடும்பத்தினர், குறிப்பாக அவருடைய பெயரன் கார்த்திக் சிதம்பரம் கொண்டாடுவதுதான்.

தமிழகத்தில் அவ்வாறு இலக்கிய முன்னோடிகள், இதழியல் முன்னோடிகளின் வாரிசுகள் அவர்களை நினைவு கூர்வதோ மதிப்பதோ மிக அரிதானது. அதிலும் அண்மைக் காலத்தில் அமெரிக்காவில் அல்லது பிற நாடுகளில் குடியேறிய பிறகு தங்களுடைய பெற்றோரையோ தங்களுடைய முன்னோரையோ எந்த வகையிலும் இந்த இளைஞர்கள் எண்ணிக் கொள்வதில்லை. தங்களுக்கென்று ஒரு மரபு இருப்பதையே அவர்கள் நினைப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் முழுமையாக இந்தியாவுடன் எல்லா அடையாளங்களை வெட்டி விடவே முயல்கிறார்கள். வருவதே பிடிப்பதில்லை. ஆனால் சென்ற இடத்தில் மொழி சார்ந்தும், சாதி சார்ந்தும், மதம் சார்ந்தும், அரசியல் சார்ந்தும் ஒரு சிறு குழுவையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். ஏனென்றால் அங்கே அவர்கள் தனியாக இருக்க முடிவதில்லை. சேர்ந்து சாப்பிடுவதற்கும் அரட்டை அடிப்பதற்கும் வம்புகளுக்கும் ஒரு குழு தேவையாகிறது.

இதற்கு விதிவிலக்காக கார்த்திக் சிதம்பரம் இருக்கிறார். வெற்றிகரமான ஒரு தொழில் நிபுணராக இருந்தபோதிலும் கூட இந்தியா திரும்பி இங்கும் ஒரு வாழ்க்கை அமைத்துக் கொண்டதும் சரி, தன்னுடைய தாத்தாவின் பண்பாட்டு கொடையை மதித்து அதை முன்னெடுக்கும் பொருட்டு சில நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் சரி, மிக மிக அரிதான ஒரு செயல்.  முன்னுதாரணமான ஒன்று .நானறிந்தவரை இது இன்று நகரத்தார் சமூகத்தில் மட்டுமே இருந்து கொண்டிருக்கும் ஓர் உயர் பண்பு .

தமிழ் பண்பாட்டுக்கே நகரத்தார் சமூகத்தின் கொடை என்பது மிக முக்கியமான ஒன்று.  ஒருமுறை கேரளத்தில் ஒரு விவாதத்தில் ஒரு குறிப்பிட்ட சாதி (எழுத்தச்சன்) மலையாள பண்பாட்டுக்கு அளித்த மிகப்பெரிய கொடையைப் பற்றிய விவாதத்தில் அதை விடவும் அதிகமான கொடை அளித்த சமூகம் என்று தமிழகத்தில் நாட்டார் நகரத்தார் சமூகத்தைச் சொல்ல முடியும் என்று நான் குறிப்பிட்டிருந்தேன். இங்கு வருவதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது அதுதான். சென்ற முறை இதேபோல வாணிமகாலில் பழ. கருப்பையாவுக்கு அவர் மகன் கரு.ஆறுமுகத்தமிழன் எடுத்த விழாவிலும் கலந்துகொண்டேன்.

வாணி மஹாலில் விழா நிகழ்ந்தது .காலை 10 மணி விழாவிற்கு அரங்கு நிறைக்கும் அளவுக்கு பெரும் கூட்டம். என்னுடைய உரைக்காக வந்த பலரை கண்டேன். என் நண்பர்களையும் பார்த்தேன். அங்கும் என்னைச் சந்தித்து கையெழுத்து நூல்களில் வாங்கிக் கொள்வதற்கு வாசகர்கள் வந்தது என்பது ஆச்சரியமான விஷயம்தான். பெரும்பாலானவர்கள் அரு.பெரியண்ணன் அவர்களின் குடும்பம், சுற்றம். அரு.பெரியண்ணன் அவர்கள் மு.கருணாநிதி அவர்களுக்கு நீண்டகாலம் நெருக்கமாக இருந்தவர். முரசொலி பெரியண்ணன் என்றே அறியப்பட்டவர். அவருடைய வாழ்க்கை வரலாறு மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னுரையுடன்தான் வெளிவந்துள்ளது.

முதல்முறையாக நான் இளமையிலேயே படித்திருந்த லேனா தமிழ்வாணன் அவர்களை பார்த்தேன். அதே மாறாத இளமையுடன் இருந்தார் என்று தோன்றியது. அமைச்சர் ரகுபதி பேசினார். சென்னை கிறிஸ்தவ கல்லூரி மாணவர்கள் பொன்னி இதழ்களை எண்ணிம வடிவத்தில் சேமிப்பதற்கான பணிகளை செய்து இருக்கிறார்கள் . அரு.பெரியண்ணனின் பேரன் கார்த்திக் சிதம்பரம் தொகுத்த இரண்டு நூல்கள் அங்கு வெளியிடப்பட்டன. ஒன்றுபொன்னி இதழ்களின் தொகுப்பு. இன்னொன்று அரு.பெரியண்ணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு. நூல்களை அமைச்சர் திரு ரகுபதி வெளியிட அதை பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா  பெற்றுக்கொண்டார்.

திருச்சி சிவா எம் பி யின் பேச்சு சுவாரசியமாக அமைந்தது. அவர் அந்த நூல்களை படித்து விட்டு வந்து பேசியது ஆச்சரியமாக இருந்தது .பொதுவாக அரசியல்வாதிகள் அவர் செய்வதில்லை என்பதை நான் பார்த்திருக்கிறேன். அவருடைய குரல், தோரணை ஆகியவற்றில் தமிழகத்தின் சிறந்த பேச்சாளர் ஒருவருடைய சொல்விளக்கத்தைப் பார்த்தேன். அறிமுகம் செய்து கொண்ட போது ‘உங்களைப் பற்றி கேட்டிருக்கிறேன். ஏராளமான கருத்து முரண்பாடுகள் இருக்கின்றன. கடுமையான கருத்துக்களை நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் நீங்கள் எழுத்தாளர், உங்களுக்கு செல்வதற்கு உரிமை இருக்கிறது’ என்றார். ஒரு திமுக விழாவில் என்னைப்போன்ற ஒருவன் சிக்கலின்றிக் கலந்துகொள்வதற்கான காரணமும் இந்த பண்பாட்டுப்பார்வைதான்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 26, 2025 11:35

ச.கலியாணராமன்

எழுத்தாளர், நாடக ஆசிரியர். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றினார். பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளையும் நாடகங்களையும் எழுதினார். சிறார்களுக்கான சில படைப்புகளை எழுதினார்.

ச.கலியாணராமன் ச.கலியாணராமன் ச.கலியாணராமன் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 26, 2025 11:33

ரமேஷ் பிரேதன், வாழ்த்துக்கள்

அன்பின் ஜெ!

2025-ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது ரமேஷ் பிரேதனுக்கு என்கிற அறிவிப்புடன் இன்றைய பொழுது புலர்ந்தது. இது இந்த வரிசைத் தொடரில் 15-வது விருது. 

நிறுவப்பட்ட தொடக்க ஆண்டுகளில் ஆ, மாதவன், தெளிவத்தை ஜோசப், ஞானகூத்தன் ஆகியோருடன் குறிப்பாக அபி, விக்ரமாதித்யன், வண்ணாதாசன், சீ.முத்துசாமி ஆகியோர் தங்களின் 75-வது வயதுக்குப் பிறகு இந்த விருதுகளைப் பெற்றுள்ளனர். சாருவுமேகூட எழுபதை தொட்டு விட்டிருந்தார்.

மற்றபடி அதற்கடுத்த நிரையில் ஒருவர் விடாமல் அனைவருமே (விஷ்ணுபுர) விருதைப் பெற்ற போது அறுபது வயதைக் கடந்து விட்டிருந்தனர். ஒருவகையில் விஷ்ணுபுரம்தான் அவர்கள் பெற்ற முதல் அங்கீகாரமாகும். (2018-ன் விருதாளரான) பேராசிரியர் ராஜ் கௌதமன் கூட தன் கடைசி காலங்களிலேயே இவ்வாறான ஒரு அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறார்.  

இவை எந்தளவுக்கு படைப்பாளியை, இலக்கியவாதியைக் கொண்டாட தமிழ்ச் சமூகம் தாமதப்படுத்தி வந்திருக்கிறது என்பதற்கு சாட்சியங்களாகும்.

யுவன் சந்திரசேகரன் விருதைப் பெற்றபோது ஜெ.வின் சம காலத்தவருக்கு அங்கீகாரம் என்று பேசினர், ஆனால் யுவன் ஜெ.வைவிட வயதில் சில ஆண்டுகளேனும் மூத்தவர். ஆனல் அந்த விமர்சனத்தை ஒரு பிரிகோடாக கொண்டு பார்த்தால் ஜெ.வைவிட ஓரளவு இளையவரான ரமேஷ் பிரேதன் தேர்வாகியிருப்பது இன்னொரு கட்டத்தின் தொடக்கம் என கொள்கிறேன்.

1980-களின் இடைக்காலத்தில் எழுதத் தொடங்கியபோது ரமேஷுக்கு வெறும் 22 வயது, இந்த 2025-ல் கிட்டத் தட்ட நாற்பது ஆண்டுகள் சிறுகதை, நாடகம், கவிதை எனவும் தலித், விளிம்புநிலை எழுத்தின் மீது பெருமளவு கவனக் குவிப்பையும் செய்தவர் ரமேஷ்.

இரண்டு தனிநபர்கள் ஒன்று சேர்ந்து எழுதுவதும், பிற்காலங்களில் தனி வழியை கண்டடையும் சூழலில் – அந்த கூட்டுப் பிரதியில் ஒருவரின் பங்கை மதிப்பிடுவதில் வாசகனுக்கு சிக்கல் எழுவது இயல்பானதே. எனினும் தலித், விளிம்புநிலை குறித்து ரமேஷ் எழுதியவை காத்திரமானது, தொடர்ச்சியானது, Gen-z எனப்படும் தலைமுறையினரில் இன்று எழுதிக் கொண்டிருக்கும் பலர் மீது இவருடைய செல்வாக்கு எத்தகையது என்பது தனி ஆய்வுக்குரியது.

இனி அடுத்த மூன்று மாதங்களுக்கு கூடுமானவரை ரமேஷின் படைப்புலகை இன்னும் நெருக்கமாக படிக்க இந்த விருது ஒரு காரணமாகும், அந்த வகையில் ரமேஷுக்கு வாழ்த்துக்கள், விஷ்ணுபுரம் அமைப்புக்கு பொதுவாகவும் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் என் நெஞ்சார்ந்த நன்றி. விழா நாட்களில் கோவையில் சந்திப்போம். 

கொள்ளு நதீம், ஆம்பூர்.

அன்புள்ள ஜெ,

ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டிருப்பது நிறைவளிக்கிறது. இதுவரை விருதுபெற்றவர்களில் அவரே வயதில் இளையவர், 61 அகவை நிறைவடைந்தவர். அவருடன் எழுத வந்தவர்களில் தேவி பாரதி, சோ.தர்மன், சு.வெங்கடேசன், ஜோ.டி.குரூஸ் போன்ற பலர் சாகித்ய அக்காதமி விருதைப் பெற்றுவிட்டனர். பாவண்ணன், சுகுமாரன் என பலர் இயல் விருதையும் பெற்றுவிட்டனர். (சாகித்ய அக்காதமி விருது இன்றைக்கு தமிழில் பலகோடி ரூபாய் பெறுமானமுள்ளதாக ஆகிவிட்டது) ரமேஷ் பிரேதன் பிரபஞ்சன் விருது போன்ற சில விருதுகளையே பெற்றுள்ளார். அவர் பெறும் முக்கியமான விருது இது. தமிழ்ச்சூழலில் கௌரவிக்கப்படாத படைப்பாளிகள் ஒவ்வொருவரையாகத் தேடி விருதை அளித்துக்கொண்டிருக்கிறது விஷ்ணுபுரம் அமைப்பு.

ரமேஷ் பிரேதனின் சொல் என்றொசு சொல், பொந்திஷேரி ஆகிய நூல்களை வாசித்துள்ளேன். அவருடைய படைப்பு ஆழமான வாசகர் கவனத்தைக் கோருவது. அந்த வகையான படைப்புக்களை அவற்றை எப்படி வாசிப்பது என்னும் ஒரு கூட்டுவிவாதம், பயிற்சி வழியாகவே வாசிக்கமுடியும். அத்தகைய வாசிப்புக்கு இந்த விருது வழிவகுக்கும் என நினைக்கிறேன். யாவரும் பதிப்பகம் அவருடைய பெரும்பாலான நூல்களை வெளியிட்டுள்ளது. அவருக்கு வாழ்த்துக்கள். அவர் நூல்களை வாசித்து விவாதிக்கவிருக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

எஸ்.ராமச்சந்திரன்

உடல்நலிந்த நிலையில் இருக்கும் ரமேஷ் பிரேதனுக்கு தனிப்பட்ட முறையில் உதவிசெய்ய விரும்புபவர்கள் செய்யலாம்.

RAMESH . MS.B. A/C. No. 32821202848STATE BANK OF INDIAMUTHIALPET BRANCHIFSC CODE: SBIN0015420
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 26, 2025 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.