Jeyamohan's Blog, page 1701

December 27, 2016

December 26, 2016

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள்- 5

[image error]

இரண்டாம்நாள் மேலும் பெரிய அமர்வரங்கு ஏற்பாடுசெய்யப்பட்டது


 


 


அன்புள்ள ஜெமோ,


விஷ்ணுபுர விருது விழா நிகழ்வுகள் கட்டுரைகள் இன்னும் வரவில்லை, நண்பர்களின் தனிபட்ட பங்குபெற்ற அனுபவ பதிவுகள் இன்னும் வரவில்லை, வீடியோ பதிவுகள் எதுவும் இன்னும் பார்க்கவில்லை, ஆனால் விழா எவ்வளவு சிறப்பாக நடந்தது என்பதை நண்பர்கள் குறிப்புகள் மூலம் இங்கிருந்தே உணரமுடிகிறது. மிக சிறப்பான முறையில் நடந்தேறிரிக்கிறது.


ஒவ்வொருவருடமும் மேலும் மேலும் சிறப்பாக செய்து போய்கொண்டே இருக்கிறோம். அமைப்புக்கு வெளியே இருந்து வரும் பாராட்டுக்களை கேட்டுக் கொண்டே இருக்கிறேன். கிட்டதட்ட ஒவ்வொருவருடமும் ஒரு “கல்யாண விழா” நடத்திக் கொண்டிருக்கிறோம், எந்த அமைப்பு பலமும் இல்லாமல் நண்பர்களின் தன்னியல்பான ஈடுபாட்டை முன்வைத்து மட்டுமே. இது அவ்வளவு எளிதல்ல.


 


kkk


சிங்கப்பூர் காவிய முகாம் நடத்தியபோது, அவ்வளவு பேர் இலக்கியத்திற்காக தன் காசு செலவழித்து சிங்கப்பூர் வந்து கலந்து கொண்டுவிட்டு, விழா முடிந்தவுடன் மறுநாளே திரும்பி சென்றதற்கான காரணம் இலக்கியம் மட்டும் என்று நினைக்கவில்லை, அதற்கு முதறகாரணமாக உங்களையே உணர்ந்தேன். ஜெமோ ஜெமோவாக இருப்பதே காரணம் என்று. இவ்வளவு நண்பர்கள் ஒன்றிணைந்து இயங்குவதற்கு காரணம் நீங்களாகவே இருக்கிறீர்கள். அதை தாண்டிய இரண்டாவது காரணம், நமது விஷ்ணுபுர நண்பர்களிடையேயான இந்த நட்பார்ந்த இந்த உறவு.


[image error]


சு வேணுகோபால்


 


 


ஒவ்வொருவருடமும் எந்த கட்டயபடுத்தல்களும் இல்லாமல் ஒரு குடும்ப விழாவாக இவ்வளவு நண்பர்கள் தமிநாட்டின் ஒரு மிகபெரும் விழாவை இலக்கியத்தை முன்னிருத்தி நடத்துவது, இந்த விழாவை முன்னிறுத்தி நடக்கும் “சீசனல் கேம்” இல்லை, உலகின் பல இடங்களில் இருந்தாலும் வருடம் முழுவதும் தொடர்ந்து பேசி, விவாதித்து, பகிர்ந்து கொண்டிருக்கும் விஷ்ணுபுர நண்பர்களிடையேயான தொடர்ந்த நட்பார்ந்த உறவு. அதுதான் இதை இன்னும் உற்சாகமான, ஆத்மார்த்தமான கூடுகையாக, ஒவ்வொருவரின் குடும்ப விழாவாக மாற்றுகிறது. தமிழ் இலக்கிய உலகில் முன்மாதிரி அற்ற ஒரு தனித்த பெரும் நிகழ்வு இது என்றே கொள்கிறேன். மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களும், நன்றிகளும்.


அன்புடன்


சரவணன் விவேகானந்தன்


சிங்கப்பூர்


 


[image error]

சீனிவாசன்


 


அன்புள்ள ஜெ,


இந்த வருட விருதுவிழா மிகச் சிறப்பாக நடந்திருக்கிறதைக் கண்டு மிக மகிழ்ச்சியாய் உள்ளது. அதே சமயம் கலந்துகொள்ள முடியவில்லை என்கிற வருத்தமும் உள்ளது. விழாவும் கூடுகையும் பெரிதாகிக்கொண்டே வருவது சிறப்பு. அதே நேரம் நல்ல வளமான விவாதங்களும் உரைகளும் நிகழ்ந்துள்ளன என்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது. தேசிய அளவில் இது உயர்ந்து விரியும் நாள் தொலைவில் இல்லை.


இந்த வருட கிறிஸ்துமஸ் திருப்பலியில் ஃபாதர் உங்களுக்கு நிறைவான சந்தோஷத்தை தரும் மனிதர்களுக்காக செபியுங்கள் என்றபோது குடும்பத்தினருடன் உங்களையும் நம் நண்பர்களையும் நினைத்துக்கொண்டேன். உண்மையில் அப்போது எல்லோருடனும் மிக நெருக்கமாக உணர்ந்தேன்.


 


[image error]

கிருஷ்ணன்


 


இப்போது கொஞ்சம் அறிவியல் புத்தகங்களை வாசிக்கும் முயற்சியில் உள்ளேன். காலம் இதழுக்கு தொடுவுணர்வு குறித்த அறிவியல் தகவல்களுடன் ஒரு கட்டுரை அனுப்பியுள்ளேன். தொடர்ந்து சில அறிவியல் கட்டுரைகள் எழுதத் திட்டம்.


இன்று துவங்கி நாங்கள் இத்தாலி பயணம் செல்லவுள்ளோம். ரோம், அசிசி, பிளாரன்ஸ், பிசா, பதுவா, வெனிஸ் என பயணம். ஒரு திருப்பயணம் என்றே சொல்லலாம். :)


வீட்டில் எல்லோருக்கும் எங்கள் அன்பை தெரிவிக்கவும்.


அன்புடன்


சிறில் அலெக்ஸ்


 


முந்தைய பதிவுகள்


 


விஷ்ணுபுரம் விழாப்பதிவு1 விஷ்ணு


விஷ்ணுபுரம் விழாப்பதிவு 2


விஷ்ணுபுரம் விழாப்பதிவு3 ராகேஷ்


விஷ்ணுபுரம் விழாப்பதிவு4 சுரேஷ் பிரதீப்


விஷ்ணுபுரம் விழாப்பதிவு 5


விஷ்ணுபுரம் விழாப்பதிவு6


விஷ்ணுபுரம் விழாப்பதிவு7


விஷ்ணுபுரம் விழாப்பதிவு8 யோகேஸ்வரர்


விஷ்ணுபுரம் விழாப்பதிவு 9 சிவமணியன்


விஷ்ணுபுரம் விழாப்பதிவு 10 குறைகள்


விஷ்ணுபுரம் விழாப்பதிவு11 சசிகுமார்


விஷ்ணுபுரம் விழாப்பதிவு 12


உரைகள்


இராமுருகன் உரை


சுப்ரபாரதிமணியன் உரை


 


காணொளிகள்


ஜெயமோகன் உரை


வண்ணதாசன் உரை


நாஸர் உரை


கு சிவராமன் உரை


பவா செல்லத்துரை உரை


இரா முருகன் உரை


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2016 20:32

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள்- 5

[image error]

இரண்டாம்நாள் மேலும் பெரிய அமர்வரங்கு ஏற்பாடுசெய்யப்பட்டது


 


 


அன்புள்ள ஜெமோ,


விஷ்ணுபுர விருது விழா நிகழ்வுகள் கட்டுரைகள் இன்னும் வரவில்லை, நண்பர்களின் தனிபட்ட பங்குபெற்ற அனுபவ பதிவுகள் இன்னும் வரவில்லை, வீடியோ பதிவுகள் எதுவும் இன்னும் பார்க்கவில்லை, ஆனால் விழா எவ்வளவு சிறப்பாக நடந்தது என்பதை நண்பர்கள் குறிப்புகள் மூலம் இங்கிருந்தே உணரமுடிகிறது. மிக சிறப்பான முறையில் நடந்தேறிரிக்கிறது.


ஒவ்வொருவருடமும் மேலும் மேலும் சிறப்பாக செய்து போய்கொண்டே இருக்கிறோம். அமைப்புக்கு வெளியே இருந்து வரும் பாராட்டுக்களை கேட்டுக் கொண்டே இருக்கிறேன். கிட்டதட்ட ஒவ்வொருவருடமும் ஒரு “கல்யாண விழா” நடத்திக் கொண்டிருக்கிறோம், எந்த அமைப்பு பலமும் இல்லாமல் நண்பர்களின் தன்னியல்பான ஈடுபாட்டை முன்வைத்து மட்டுமே. இது அவ்வளவு எளிதல்ல.


 


kkk


சிங்கப்பூர் காவிய முகாம் நடத்தியபோது, அவ்வளவு பேர் இலக்கியத்திற்காக தன் காசு செலவழித்து சிங்கப்பூர் வந்து கலந்து கொண்டுவிட்டு, விழா முடிந்தவுடன் மறுநாளே திரும்பி சென்றதற்கான காரணம் இலக்கியம் மட்டும் என்று நினைக்கவில்லை, அதற்கு முதறகாரணமாக உங்களையே உணர்ந்தேன். ஜெமோ ஜெமோவாக இருப்பதே காரணம் என்று. இவ்வளவு நண்பர்கள் ஒன்றிணைந்து இயங்குவதற்கு காரணம் நீங்களாகவே இருக்கிறீர்கள். அதை தாண்டிய இரண்டாவது காரணம், நமது விஷ்ணுபுர நண்பர்களிடையேயான இந்த நட்பார்ந்த இந்த உறவு.


[image error]


சு வேணுகோபால்


 


 


ஒவ்வொருவருடமும் எந்த கட்டயபடுத்தல்களும் இல்லாமல் ஒரு குடும்ப விழாவாக இவ்வளவு நண்பர்கள் தமிநாட்டின் ஒரு மிகபெரும் விழாவை இலக்கியத்தை முன்னிருத்தி நடத்துவது, இந்த விழாவை முன்னிறுத்தி நடக்கும் “சீசனல் கேம்” இல்லை, உலகின் பல இடங்களில் இருந்தாலும் வருடம் முழுவதும் தொடர்ந்து பேசி, விவாதித்து, பகிர்ந்து கொண்டிருக்கும் விஷ்ணுபுர நண்பர்களிடையேயான தொடர்ந்த நட்பார்ந்த உறவு. அதுதான் இதை இன்னும் உற்சாகமான, ஆத்மார்த்தமான கூடுகையாக, ஒவ்வொருவரின் குடும்ப விழாவாக மாற்றுகிறது. தமிழ் இலக்கிய உலகில் முன்மாதிரி அற்ற ஒரு தனித்த பெரும் நிகழ்வு இது என்றே கொள்கிறேன். மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களும், நன்றிகளும்.


அன்புடன்


சரவணன் விவேகானந்தன்


சிங்கப்பூர்


 


[image error]

சீனிவாசன்


 


அன்புள்ள ஜெ,


இந்த வருட விருதுவிழா மிகச் சிறப்பாக நடந்திருக்கிறதைக் கண்டு மிக மகிழ்ச்சியாய் உள்ளது. அதே சமயம் கலந்துகொள்ள முடியவில்லை என்கிற வருத்தமும் உள்ளது. விழாவும் கூடுகையும் பெரிதாகிக்கொண்டே வருவது சிறப்பு. அதே நேரம் நல்ல வளமான விவாதங்களும் உரைகளும் நிகழ்ந்துள்ளன என்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது. தேசிய அளவில் இது உயர்ந்து விரியும் நாள் தொலைவில் இல்லை.


இந்த வருட கிறிஸ்துமஸ் திருப்பலியில் ஃபாதர் உங்களுக்கு நிறைவான சந்தோஷத்தை தரும் மனிதர்களுக்காக செபியுங்கள் என்றபோது குடும்பத்தினருடன் உங்களையும் நம் நண்பர்களையும் நினைத்துக்கொண்டேன். உண்மையில் அப்போது எல்லோருடனும் மிக நெருக்கமாக உணர்ந்தேன்.


 


[image error]

கிருஷ்ணன்


 


இப்போது கொஞ்சம் அறிவியல் புத்தகங்களை வாசிக்கும் முயற்சியில் உள்ளேன். காலம் இதழுக்கு தொடுவுணர்வு குறித்த அறிவியல் தகவல்களுடன் ஒரு கட்டுரை அனுப்பியுள்ளேன். தொடர்ந்து சில அறிவியல் கட்டுரைகள் எழுதத் திட்டம்.


இன்று துவங்கி நாங்கள் இத்தாலி பயணம் செல்லவுள்ளோம். ரோம், அசிசி, பிளாரன்ஸ், பிசா, பதுவா, வெனிஸ் என பயணம். ஒரு திருப்பயணம் என்றே சொல்லலாம். :)


வீட்டில் எல்லோருக்கும் எங்கள் அன்பை தெரிவிக்கவும்.


அன்புடன்


சிறில் அலெக்ஸ்


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2016 20:32

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவு 4- சுரேஷ் பிரதீப்

அன்புடன் ஆசிரியருக்கு,


வெள்ளிக்கிழமை நள்ளிரவு  பதிவினை பார்த்த போது கரூர் தாண்டி வந்து கொண்டிருந்தேன். உண்மையில் இறங்கி ஓடி விடலாமா என்ற மனநிலைக்கு சென்று விட்டேன். நாஞ்சில் நாடன் தொடங்கி ஒரு பெரும் பட்டியலை அளித்திருந்தீர்கள். நாஞ்சிலையும் கொஞ்சம் தேவதேவனையும் கொஞ்சம் முருகவேளையும் மட்டுமே அதுவரை வாசித்திருந்தேன். அதுவும் “ஒண்ணுமே வாசிச்சதில்லை சார்” ரொம்பவும் நம்பிக்கை இழக்க செய்திருந்தது.


குஜராத்தி சமாஜில் செந்தில் முதன்முதலில் கை கொடுத்து வரவேற்றார். அதன்பிறகு அதற்கு முந்தைய தயக்கங்கள் இப்போது தான் நினைவுக்கு வருகின்றன. கொல்லிமலை சந்திப்பு போலவே இரண்டு நாட்கள் இடையூறில்லாமல் கடந்தது மகிழ்ச்சியை தந்தது. வாசித்த ஆளுமைகளை அருகிருந்து பார்ப்பதே பிரமிப்பு தருகிறது. உங்களையும் நாஞ்சிலையும் வண்ணதாசனையும் பார்ப்பதில் அந்த பிரமிப்பை நான் அடைந்தேன். எழுத்தாளரை நேரில் சந்திப்பதில் என்ன கிடைக்கும் என்று புரிந்தது.


 


[image error]


பவாவையும் இரா.முருகனையும் வாசித்திருந்தேன். ஆனால் கேட்க வேண்டும் என்பதற்காக வலிய வரவழைத்துக் கொண்டு கேள்விகளை அவர்களிடம் கேட்க விழையவில்லை. கிட்டத்தட்ட அந்த தாடகை மலையடிவாரத்தவரை நாஞ்சில் நாடனிடம் காண முடிந்தது. சுவை குறித்து அவர் சொன்ன போது நீங்கள் சொன்னதைத் தான் மீண்டும் மீண்டும் எண்ணிக் கொண்டேன். நேர் உரையாடலிலும் தீதும் நன்றும் தொடரின் சரளமும் அவர் புனைவுகளை இயல்பாக ஊடறுக்கும் அங்கதத்தையும் சுவையையும் அவரிடம் காண முடிந்தது.


தேவதேவன் இணையத்தில் கிடைக்கும் “வால்பேப்பர்” கவிதைகளை மட்டும் வாசித்திருக்கிறேன். ஜினுராஜும் நானும் தேவதேவனை தனியே சந்திக்க திட்டமிட்டிருக்கிறோம். அதற்கான முழுமையான “முன் தயாரிப்புகளுடன்” கவிஞரிடம் பேசுவதே சரியென்பதால் அவரிடம் அறிமுகம் செய்து கொள்ளவில்லை. வினாடி வினாவிலும் மிகக் கூர்மையான கேள்விகள். பவாவின் கதை சொல்லல் குறித்து இணையத்தில் வாசித்திருக்கிறேன். நேரில் கேட்பது உற்சாகமூட்டும் அனுபவமாக இருந்தது. அதுவும் சரியாக அவர் கதை சொல்லும் நேரத்தில் கீழே அமர்ந்திருந்தோம். சம்மணமிட்டு அண்ணாந்து பார்த்து கதை கேட்பது சிறுவர்களுக்குரிய குதூகலத்தை அளிக்கிறது.


மறுநாள் சு.வேணுகோபலைத் தொடர்ந்து வண்ணதாசன் உரையாடல்களில் பங்கேற்றார். மிக மெல்லியவற்றால் ஆன மனிதர். தனுமை தொடங்கி சமீபத்தில் வாசித்த பூரணம் வரை அவரிடம் அந்த மென்மை தக்க வைக்கப்பட்டிருப்பதை காணும் போது வியப்பே ஏற்படுகிறது.


 


 


[image error]


“உள்ளே பெருமழைக்கு சற்றே நலுங்கும் கிணற்றுநீர் போல அந்தரங்கங்களை மட்டுமே எழுதும் எழுத்தாளருடன் உரையாடல்”. எனக்குப் பிடித்திருந்த உங்களுடைய வார்த்தைகளை அவரும் குறிப்பிட்டது நிறைவளித்தது. சிவபிரகாஷின் நேரடி உரையாடல் சற்றே அதிர்ச்சி கொள்ள வைத்தது. பாசங்கற்ற பேச்சுகளுக்கு பழகிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. பாவண்ணனும் சிலவற்றை பகிர்ந்து கொண்டார். நான் நினைத்தது போலவே தேவதேவன் அதிகம் பேசவில்லை. இரண்டாம் நாள் அமர்வுகளில் அடிக்கடி நீங்கள் எழுந்து வெளியே சென்று விட்டீர்கள்.


மாலையின் மேடை நிகழ்வுகளும் அலங்காரங்களும் செயற்கை தன்மைகளும் இன்றி அரங்கேறின.. வண்ணதாசனின் உரை நெகிழ வைத்து விட்டது. பேசிக் கொண்டிருக்கும் போது கொந்தளித்து தத்தளித்து மீண்டும் தன்னை தொகுத்துக் கொண்டு அவர் ஆற்றிய உரையை அப்படியே நினைவு மீட்ட முடியவில்லை எனினும் அவர் எழுத்துகளின் அழுத்தத்தை இவ்வுரையிலும் உணர முடிந்தது. இரா..முருகனின் வருகை அறிவித்தலுக்கு அடுத்த கடிதமாக செல்வராஜ் அவர்களின் கடிதம் இடம் பெற்றிருந்தது. மேடையில் வண்ணதாசன் சொன்னதையே ஒருவேளை செல்வராஜ் இதை படிப்பாரானால் நானும் அவரிடம் சொல்கிறேன். வண்ணதாசன் உங்களை சந்திக்க விரும்புகிறார். அதுவொரு வித ஏக்கமும் கூட.


 


[image error]


காசர்கோடு வி.மலையப்பனை உங்கள் மூலமாக வண்ணதாசன் சந்தித்தது போல செல்வராஜையும் சந்தித்தால் மகிழ்ச்சி.


எச்.எஸ்.சிவபிரகாஷ் விரும்பியது போல விஷ்ணுபுரம் விருது ஒரு இந்திய நிகழ்வாக விரியும் எனில் முதல் ஆளாக துள்ளிக் குதிப்பவன் நானாகவே இருக்கும்.


அன்புடன்


சுரேஷ் ப்ரதீப்


 


 


222222


அன்புள்ள சுரேஷ்


நான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு சார்ந்து வெளியே செல்ல நேரிட்டது. அத்துடன் ஒன்றும் தோன்றியது, நான் அரங்கிலிருக்கையில் எப்படியோ நானும் விவாதங்களுக்குள் பேசுபொருளாகிறேன் என. பேசுபவர்கள் என் நெடுங்கால நண்பர்கள், அவர்களால் என்னை நோக்கிப்பேசுவதைத் தவிர்க்கமுடியாது. ஆகவே அரங்கை கூடுமானவரை தவிர்க்கவேண்டுமென்று தோன்றியது


ஆனால் எச்.எஸ் சிவப்பிரகாஷின் அரங்கில் முழுமையாக இருந்தேன். அது ஒரு மாபெரும் ஞானசபையாக ஆகியதை கண்டேன்


ஜெ


 


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2016 20:31

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -3 ,ராகேஷ்

 


[image error]

மருத்துவர் கு சிவராமன் உரையாடல்


 


அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு,


சுமார் ஏழரை மணியளவில் நான் குஜராத்தி சமாஜம் இருந்த இடத்திற்கு வந்தடைந்தபோது வாசலில் தான் சகோதரர் சுநீல் கிருஷ்ணன் அவர்களும், சகோதரர் கடலூர் சீனு அவர்களும் சிரித்துக்கொண்டே இன்னும் இருவேறு நபர்களுடன் நின்றிருந்தனர். வந்தவர்களுக்கும், வந்துக்கொண்டே இருந்தவர்களுக்கும் துணை புரிந்தனர். சுமார் எட்டரை மணியளவில் நீங்கள் மீனாம்பிகை அவர்களுடன் என்ட்ரி கொடுத்தீர்கள்.


காலை உணவை ருசியுடன் சுவைத்து முடிந்தவுடன் முதல் அமர்வு சரியாக ஒன்பதரை மணிக்குள் தொடங்கியது. நாஞ்சில் நாடன் அவர்களின் எழுத்துலகம், அதோடு சொல் சேர்க்கை முறை மற்றும் அதன் சுவை வேறுபாடு மற்றும் கடவுளை அவர் பொதுவாக வணங்கும் முறையை பற்றி சொன்னபோது எழுந்த சிரிப்பலை அணைய வெகுநேரம் பிடித்தது. அவர் மிகவும் கோபமாய் சொன்ன பல தமிழ் வார்த்தைகளின் மறைவு மற்றும் சங்க இலக்கியத்தின் கொடை பற்றி பேசியது, தமிழை விரும்பி படிக்காமல் போகும் பலரை நினைத்து அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் வேதனை உண்டானது.


 


 


11


பின் சின்னதொரு தேநீர் இடைவெளி. அதற்கு பின் தொடங்கிய பாரதி மணி அவர்களின் அனுபவ பேச்சும், அவர் சொன்ன ரசவடை கதைமுதல், ராயல் சல்யூட் கதை வரை உள்ள பல அனுபவ கதைகளும் சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தாலும் அவர் சொன்ன பல உண்மைகள் பல பேருக்கு மன நெருடலை தந்தது உண்மைதான். அதிலும் நாடகத்துறையை பற்றி ஐயா சொன்னது. அவர் ஏன் அவரது நாடகத்துறை பற்றிய அனுபவத்தை மட்டும் கொண்டு தனியாக ஒரு புத்தகம் இன்னும் ஏன் எழுதாமல் இருக்கிறார் என வருத்தமும், வியப்பும் உண்டாகியது.


பின்னர் மதிய உணவை முடித்தபின் S.ராம்குமார் I.A.S  அவர்களின் தொகுப்புரையுடன் நடந்த இரா.முருகன் அவர்களின் கதைகளின் மீதான உரையாடல் மற்றும் அவரது பேச்சு ,அதிலும் அவரது கதைகளின் களம் மற்றும் பின்புலம் அதோடு அவரது மேஜிக்கல் ஸ்டோரிகளின் போக்கு பற்றி உரையாடியதும் பல கேள்விகளுக்கு அவர் சொன்ன பதில்களும் அவரை நெருங்கி அறிவதற்கு உறுதுணையாக இருந்தது.


 


[image error]

தேவதேவனிடமிருந்து ராஜமாணிக்கம் விருதுபெறுகிறார்


அதன்பின் பவா அவர்களின் பேச்சு அக்கூட்டத்தில் இருந்த மனிதர்களை எழும்ப விடாமல் கட்டி போட்டது என்று சொன்னால் அது ஒவ்வொருவரும் ஆமோதிப்பர். அவர் சொன்ன ஒவ்வொரு கதையும். அப்பப்பா…! மனிதர் பல உலகங்களுக்குள் அழைத்து சென்றுவிட்டார். அவர் வீட்டில் கிணறு வெட்டிய கதையில் நான் அவருடனே அந்த முதல் நீரை முகத்தில் வாங்கிக்கொண்டேன். பால் சக்கிரியாவின் கரடி கதை, சுவாமிஜியுடனான அவரது சந்திப்பு மற்றும் எத்தனையோ கதைகள். hats off to you பவா sir. நீங்கள் நிச்சயம் ஒரு பெரும் கதைசொல்லி தான். பல நாட்களுக்கு நண்பர்களிடம் சொல்ல பல பல கதைகளையும்  மனித மனங்களின்  ஓட்டங்களையும் கண்முன்னே கொண்டு வந்தீர்கள். முடிவில் அவர் முடித்த போது மனம் ஏங்கியது.


இலக்கிய வினாடி வினா. கடவுளே …. கையளவு கூட கற்கவில்லை என்று புரிந்தபோது மனம் தவித்த தவிப்பும், நம்மிடம் ஏதாவது கேட்டு விடுவார்களோ என்று பயந்த நிமிடமும் , அதே நேரம் ஒரு வெறியும் ஏறியதை சொல்லாமல் முடியாது.


 


 


[image error]

ராஜகோபாலன் தொகுத்து அமைத்த அமர்வு. இரா முருகன்


 


இரவுணவுக்கு பின்னர் தொடங்கிய Dr.சிவராமன் அவர்களின் மருத்துவ கேள்வி-பதில் மற்றுமல்லாது அவர் சொன்ன பல புதிய தகவல்கள் நிச்சயம் எங்களை போன்ற இளம் வாசகர்களுக்கு புதிய அனுபவம் தான். கலந்துரையாடல் வேளையில் Dr.சுநீல் அவர்களின் சில வாதங்களும் நிச்சயம் பல புரிதல்களை அனைவருக்கும் வழங்கியது. அதோடு quiz செந்தில் அவர்கள் சொன்ன இந்திய அரசு ஆராய்ந்து கண்டடைந்த முடிவுகளை நாம் செயல்படுத்தாமல் குப்பையில் போட்டதையும் ஆனால் அந்த தரமுடிவுகளை பக்கத்து நாடான பங்களாதேஷ் உபயோகித்து கொண்டிருப்பதையும் நினைத்த போது பலருக்கும் இந்திய அரசின் மேல் கோபத்தை வரவழைத்தது.


சு.வேணுகோபால் அவர்களது உரையுடன் தொடங்கிய மறுநாள் காலை அமர்வு விவசாயத்தை பற்றியும், அதன் வலிகளையும், நுட்பங்களையும், அதன் முறைகளையும் அதோடு அவர் பஷீர் மற்றும் பல எழுத்தாளர்களை பற்றியும் பேசியது பலரது எண்ணங்களை திருப்பிப் போட்டது. அவரின் பேச்சின் இடையில் வந்து சேர்ந்தார் இவ்விழாவின் நாயகன் “வண்ணதாசன்” என்ற அவர்களின் உயரம் ஒரு கம்பீரம் தான்.


வண்ணதாசன் ஐயாவின் பேச்சு கனிவுடன், மன நிறைவுடன், ஆனால் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் வாழவேண்டிய அவசியத்தை, அதன் அபத்தத்தை, அதன் சுருள்களையும் அவர் சொல்லியது ஆழ்மனதில் அவரது மெல்லிய வருடும் குரலினாலான பேச்சு சுமார் இரண்டு மணிநேரம் கடந்ததையே அறிய முடியவில்லை. இன்னும் அவர் நிறைய பேசமாட்டாரா …? என அனைத்து உள்ளங்களும் விருப்பப்பட்டது.


 


 


[image error]

மாணவர் பாரதி அனேகமாக எல்லா இலக்கிய வினாடிவினாக்களுக்கும் பதில்சொல்லி புத்தகப்பரிசுகளைப் பெற்றுக்கொண்டே இருந்தார். ’சக்கு இப்ப எப்டி இருப்பா?” என்னும் வரி எந்த நாவலில் பயின்றுவருவது என்னும் கேள்விக்கு பதிலாக அபிதா லா.ச.ரா என்று சொல்லி லா.சராவின் மகன் சப்தரிஷியிடமிருந்து பரிசைப்பெற்றுக்கொண்டார்


 


எச்.எஸ். சிவப்பிரகாஷ் அவர்களின் ஆங்கில உரை மற்றும் அவர் சொன்ன பல பதில்கள். மதுரை காண்டத்தை பற்றி அவர் சொன்ன விஷயங்கள் மற்றும் தமிழ் ,கன்னட இலக்கிய மரபு பற்றியும் அவர் நிறைய நிறைய தகவல்களை சொன்னது நிறைவாக இருந்தது.


மதியம் உணவை பீடாவுடன் முடித்த பிறகு நடந்த எழுத்தாளர்களுடனான கேள்வி-பதில் மற்றும் அதில் சுப்ரபாரதி மணியன், பாவண்ணன், தேவதேவன்  மற்றும் நாஞ்சில்நாடன் ஆகியோர் அளித்த பல பதில்கள் மிகவும் சுவையுடனும், வாசகர்களுக்கு உதவியாகவும் இருந்தது.


[image error]


எம் கோபாலகிருஷ்ணனிடமிருந்து பரிசுபெறுகிறார் சேலம் பிரசாத்


பின்னர் மாலையில் நடந்த விருது வழங்கும் விழாவில் பேசிய அனைவரது பேச்சும் “வண்ணதாசன்” என்ற ஆளுமையின் எழுத்துலகத்தை பற்றியும், ஒவ்வொரு கதையின், கவிதையின் தாக்கத்தையும் உணர முடிந்தது. ஆனால் இரண்டு நாள் இரு மணித்துளிகள் போல அதிலும் குறைந்த பட்சம் அங்கு நான் இருந்த நாற்பது மணி நேரத்தில் முப்பது மணி நேரத்துக்கும் மேல் எழுத்துலக ஆளுமைகளுடனும் அவர்களது எண்ணங்களையும், அறிவுரைகளையும் நெருக்கத்தில் இருந்து அறிந்துகொள்ள கிடைத்த வாய்ப்பும் அதற்கு உதவி புரிந்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கும் மிக பெரிய நன்றிகளை அனைவர் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறேன்.


ராகேஷ்


கன்யாகுமரி


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2016 19:52

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -2

[image error]அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு ,


வணக்கம்


முதன் முதலாக விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்து கொண்டேன். வளரும் தரமான வாசகர் வட்டத்தை வளர்த்து வருகிறீர்கள். பாராட்டுக்குரிய விஷயம்’. தமிழ் சமூகம் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது !


இரண்டு நாளும் இந்த இலக்கிய சந்திப்பு படைப்பாளி வாசகர் இருவரையுமே வளப்படுத்தும் வாய்ப்பாக அமைந்துள்ளது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அன்பர்களின் ஏற்பாடுகள், இன்முக சேவை பசுமையாக நெஞ்சில் பதிந்துள்ளது


நெஞ்சார்ந்த நன்றி !


அன்பினில்


விசிறி சங்கர்


[image error]


அன்புள்ள ஜெ


இரண்டு மகிழ்ச்சிகரமான நாட்கள்.


உதவிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. (செந்தில், ரங்கா, காளி பிரசாத், மீனாம்பிகை, கடலூர் சீனு மற்றும் பெயர் தெரியாத நண்பர்கள் பலர் ).


நான் எந்த வகையில் பங்கேற்க முடியுமென்றாலும், பளுவை பகிர முடியும் என்றாலும் தயவு செய்து தெரியப்படுத்துங்கள். வெறுமே வந்து விருந்தோம்பலை மட்டும் நுகர்ந்து சென்றதில் ஒரு guilty உணர்வு.


கேட்க நினைத்ததில், பகிர நினைத்ததில் சில மட்டுமே கேட்க முடிந்தது. பகிர முடிந்தது. இதையே ஆரம்ப படிக்கல்லாக கொண்டு, தொடர எண்ணம் இருக்கிறது. இரா.முருகன் சிறந்த நண்பராகிவிட்டார். நாஞ்சிலுடன் சற்று கூடுதலாகவே பேச முடிந்தது.


பாரதி மணி, பவா செல்லத்துரை, சிவப்ரகாஷ், வேணுகோபால், டாக்டர் சிவராம் முதலியோருக்கு வணக்கங்கள்.


தேவதேவனுடன் ஒரு நீண்ட உரையாடல். பாதி உறக்கத்திலும் பேசிக் கொண்டே இருப்பது போல உணர்வு.


நன்றி


அன்புடன்


முரளி


 


[image error]


அன்புள்ள ஜெ


விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழ்வுகளுக்கு எல்லா வருடமும் வந்துகொண்டிருப்பவன் நான். தமிழகத்தில் மிகச்சிறந்த இலக்கியவிழா என்று இதைச் சந்தேகமில்லாமல் சொல்வேன். விழா மட்டும் அல்ல ஒரு கல்யாண வீடு போல இரண்டுநாட்கள் சேர்ந்து அமர்ந்து பேசி சிரித்து சாப்பிட்டு கடைசியில் ஒரு பெரிய நிகழ்ச்சி. இந்த வருடம் இருமடங்கு பெரியதாகவும் இருமடங்கு சிறப்பாகவும் அமைந்துவிட்டது. அரங்குகளில் ஒன்றுகூட சோடை போகவில்லை. நாஞ்சில்நாடன் நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே களைகட்டிவிட்டது. இந்த முறை நிகழ்ச்சிகள் உச்சநிலையில் இருந்ததற்குக் காரணம் பங்கெடுத்தவர்களின் நகைச்சுவை உணர்ச்சிதான். பாரதிமணி நாஞ்சில் பவா செல்லத்துரை இரா.முருகன் சு.வேணுகோபால் அத்தனைபேரின் நிகழ்ச்சிகளும் உச்சகட்ட நகைச்சுவையுடன் கொண்டாட்டமான அனுபவங்களாக இருந்தன. மறக்கமுடியாத நிகழ்ச்சி. மறக்கமுடியாத நாட்கள்


மகாதேவன்


[image error]


ஜெ


இந்தவருடம் விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழ்ச்சிதான் சென்ற பத்தாண்டுகளில் நான்கலந்து கொண்ட மிகமிகச்சிறந்த இலக்கிய நிகழ்ச்சி மட்டும் அல்ல பொது நிகழ்ச்சி என்றே சொல்வேன். இரண்டு நாட்கள். முதல்நாள் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 11 மணிவரை 13 மணிநேரம். மறுநாள் 9 மணிக்குத்தொடங்கி மாலை 430 வரை ஏழரை மணிநேரம். அத்தனை நேரம் நிகழ்ச்சிகள் ஒரு கணம்கூடத் தொய்வடையவில்லை. ஒரு நிமிடம் கூட வீணாகச் செல்லவில்லை. இப்படி ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததை ஒரு பெரிய சாதனை என்றுதான் சொல்வேன். உங்கள் நண்பர்கள் ஒவ்வொருவரும் முழு ஈடுபாட்டுடன் நிகழ்ச்சியை அமைத்ததை நினைக்கையில் இப்படி ஒரு குழு வேறு உண்டா என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது


எஸ்.சிவக்குமார்


[image error]


 


அன்புள்ள ஜெயமோகன்


விஷ்ணுபுரம் விழா இம்முறை ஒரு உச்சகட்ட வெற்றி சார். ஒவ்வொரு ஆண்டும் இதற்காகக் காத்திருந்து வந்து கொண்டாடி கண்கலங்கி நெகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்வதே வழக்கமாக ஆகிவிட்டது. ஆனால் இந்தமுறை கூட்டம் பலமடங்கு. அரங்கு போதாமல் இடம்மாற்றிக் கொண்டே இருந்தீர்கள். அதன்பின்னரும் அரங்குகள் போதாமல் நின்றுகொண்டே இருந்தார்கள். விவாத அரங்கிலேயே முந்நூறுபேர். விழாவில் ஆயிரம்பேர் அரங்கில். கீழே காணொளி இணைக்கப்பட்ட இடத்தில் முந்நூறு பேர். இத்தனைபேர் நின்றுகொண்டும் தரையில் அமர்ந்தும் ஒரு இலக்கிய விழாவை கொண்டாடுவதென்பது இதுவரை காணமுடியாத அனுபவம். அதுவும் வெற்றுப்பேச்சு சம்பிரதாயங்கள் ஆடம்பரங்கள் என்று ஒன்றுமே இல்லை. எந்தவகையான நாடகத்தனமும் இல்லை. அறிவுத்தீவிரம் மட்டும்தான். இதைப்போல ஒரு நிகழ்வு மனதிலிருந்து இறங்க இன்னும் பலவாரங்களாகும்


செல்வராஜன் சாம்


[image error]


அன்புள்ள ஜெ சார்


விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழ்ச்சிகள் அனைத்துமே மிகச்சிறப்பாக இருந்தன. அத்தனை அரங்குகளும் கிளாஸிக் என்று சொல்லும்படி இருந்தன. ஒரு நிகழ்ச்சியை எப்படி நடத்தவேண்டும் என்று உங்கள் அமைப்பினரிடம்தான் பாடம் கேட்கவேண்டும். இப்படி ஒரு இலக்கியத் திருவிழாவை இனிமேல் வேறு எவராவது அமைக்கமுடியுமா என்பது ஒரு சவால்தான். அற்புதம்.


ஆனால் உச்சம் என்பது அந்த இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சி. இனி அதைப்போல எல்லா இடத்திலும் நிகழ்ச்சி செய்வார்கள் என நினைக்கிறேன். இலக்கியத்தை துளித்துளியாக அங்கே இங்கே என்று தொட்டுச்செல்லும் ஒரு பெரிய பரவசம் எனக்கு ஏற்பட்டது


முரளிதரன்


1


அன்புள்ள ஜெ


இந்த வருடம் விஷ்ணுபுரம் விருதுவிழாதான் இதுவரை நடந்ததிலேயே மிகச் சிறந்தது. கூட்டம் பலமடங்கு. பலரும் வெளியூரிலிருந்து வந்தவர்கள். ஆனால் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து ஒரு துளிகூட வீணாகாமல் கொண்டு சென்ற விதத்தால்தான் இந்த விழா சிறப்பாக அமைந்தது என நினைக்கிறேன். இது போல ஒரு நிகழ்ச்சி நூறு புத்தகங்களை வாசித்ததற்குச் சமானமானது


நிகழ்ச்சியின் உச்சகட்டம் என்றால் பாவண்ணனின் பேச்சுதான். நான் நெகிழ்ந்துபோய்விட்டேன்


பரவசத்துடன்


குமாரசாமி அருண்


 


படங்கள்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2016 19:40

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -1, விஷ்ணு

111


அன்புள்ள ஆசிரியருக்கு,


இந்த ஆண்டு விருது வண்ணதாசனுக்கு என்ற அறிவிப்பு வந்ததும் மகிழ்வாக இருந்தது. என்னை பாதித்த முதல் எழுத்தாளர் வண்ணதாசன். அவரின் அகம் புறம் தொடர் விகடனில் வரும்போது எனக்கு 17 வயது. ஒரு அட்டைப்பட சினிமா செய்திக்காக தற்செயலாக ஆனந்த விகடன் வாங்கியபோது கடைசியாக வாசித்த பகுதி தான் அகம்புறம் கட்டுரையின் முடிவில் ஏதோ இனம் புரியாத ஒரு அழுத்தம் மனதை நெகிழ்வாக்கியது. அதை வாசிப்பதற்காகவே ஆனந்த விகடனை தொடர்ந்து வாங்கினேன். அதன் பின் துரதிர்ஷ்டவசமாக வண்ணதாசனை விட்டுவிட்டு ஆனந்த விகடனை வாசிக்க ஆரம்பித்திருந்தேன். அதன் பின் ஒரு எழுத்து என்னை பாதிக்க ஏழு ஆண்டு காலம் ஆகியது.


ஜெயமோகனின் நவீன தமிழ் இலக்கியம் அறிமுகம் என்ற புத்தகத்தை தோழி தற்செயலாக பரிசளிக்க அது இன்னொரு திறப்பாக என் உடைதலாக இருந்தது. இதுவும் தற்செயல் நிகழ்வு தான். இவை எனக்கு நிகழவே இல்லையென்றால் நான் எதையும் வாசித்திருப்பேனா என்பது சந்தேகம் தான். அதன் பின் இலக்கியம் வரலாறு ஆன்மிகம் தத்துவம் என ஜெ எனக்கு ஒவ்வொன்றாக அறிமுகம் செய்தார். நான் தவறவிட்டுவிட்ட ஒரு எழுத்தாளரை திரும்பவும் வாசிக்க விஷ்ணுபுரம் விருது ஒரு வாய்ப்பாக அமைந்தது. அவ்வகையில் இதுவும் எனக்கு ஒரு நிமித்தம் தான். நான் ஒரு நல்ல வாசகனா? என்பது எனக்கே இன்னமும் தெரியவில்லை. ஆனால் நான் தொடர்ந்து வாசித்து கொண்டு இருக்கிறேன். என்றாவது ஒருநாள் அந்த நிலையை அடையக்கூடும்.


வண்ணதாசனின் கதைகள் மென்மையாக தொடங்கிய போதும் என்னை அதன் ஆழத்திற்கு இழுத்துச் சென்று நான் அறியாத கணத்தில் என்னை நெகிழச் செய்துவிடுகின்றன. ஐம்பது சிறுகதைகளை வாசித்திருப்பேன் அவற்றில் பெரும்பாலானவற்றில் நான் நெகிழ்ந்து போயிருக்கிறேன். அவற்றின் நுண்மைகளை அறிந்து கொள்ளும் அளவிற்கு வாசித்திருக்கிறேன் என்பதை பவா அவர்கள் எச்சம் சிறுகதையை வைத்து பேசும்போது உணர்ந்தது கொண்டேன். மீண்டும் அவற்றையெல்லாம் வாசிக்க வேண்டும் என்ற தூண்டுதல் இருக்கிறது.


விஷ்ணுபுரம் விருதிற்காக வெள்ளிக்கிழமை காலையிலேயே நாகர்கோவில் பேசேன்ஜர் ரயிலில் கிளம்பிவிட்டேன். கிறிஸ்துமஸ் வருவதால் ஜெமோவின் இதுவரை இணையத்தில் சில கட்டுரைகளை மட்டுமே வாசித்திருந்த சிலுவையின் பெயரால் புத்தகத்தை பயணத்தின் போதே வாசித்து முடித்தேன். கிருஸ்துமஸ் நாளில் ஒரு வாசகனாக கிறிஸ்துவை நினைத்துக் கொள்ள வேறென்ன செய்துவிட முடியும்.


 


[image error]


இரவு நன்றாக உறங்கினால் தான் மறுநாள் நடக்கும் நிகழ்வுகளை நன்றாக கவனிக்க முடியும் என்பதற்காகவே வெள்ளிக்கிழமையே கிளம்பியிருந்தேன். கோவையில் எனது டிப்ளமோ வகுப்பை படிக்கும் போதுதான் வண்ணதாசனை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். அதே கோவையில் அவருக்கான விழா. மார்கழியின் இரவு மெல்லிய குளிரோடு இருக்க வேடிக்கை பார்த்து கொண்டே சற்று நேரம் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சுற்றினேன். எனது கல்லூரி காலங்களில் எந்த கவலையும் இன்றி சுற்றிய இடங்கள் சற்றே மாறித்தான் போய் இருந்தன முழுவதும் மாற்றமடையவில்லை என்பது ஒரு ஆறுதல் தான் இன்னமும் நான் பழைய எச்சங்களை கண்டுகொள்ள முடிந்தது. கோயம்புத்தூர் என்றாலே அழகான பெண்களும் நினைவில் வரும். நான் இருக்கும் இந்த வெள்ளிக்கிழமை இரவில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக தங்கள் சொந்த ஊருக்கு செல்ல இளைஞர்களும் அழகான பெண்களும் வெளியேறி சென்று கொண்டிருந்தார்கள். நானோ அவர்களின் எதிர்திசையில் ஊரினை விட்டு வெளியேறி வந்திருந்தேன். அவரவருக்கு அவரவர் கொண்டாட்டங்கள்.


நவீனமான கவர்ச்சியான விடுதிகளை பார்த்துக் கொண்டே ஒரு குறைந்த வாடகையில் விடுதியின் அறையை தேடிக்கொண்டிருந்த காந்திபுரம் சந்துகளில் அந்த முதியவரின் அழைப்பை ஏற்று அவரின் விடுதியில் ஒரு படுக்கையுள்ள ஒரு அறையை கேட்டேன். எல்லா அறையிலும் இரண்டு படுக்கைகள் தான் இருந்தன. நான் எனக்கு ஒரு படுக்கை போதும் என்று வலியுறுத்தி மாடிப்படிக்கு கீழே ஒரு அறையை பெற்றுக்கொண்டேன். அதன் ஓரத்தில் பழைய மர சாமான்கள் போட்டு வைத்திருந்தார்கள். ஒரு இரவுக்கு இது போதும் என நினைத்து அந்த அறையை பெற்றுக்கொண்டேன். பின்னிரவில் ஒரு சத்தத்தை கேட்டு கண்விழித்த போது கட்டிலின் ஓரத்திலிருந்து கதவில் தனக்கான பாதையை அமைக்கும் பணியில் அந்த பெருச்சாளி ஈடுபட்டிருந்தது. நல்ல வேளை காலை கடிக்கவில்லை என்பது சற்றே நிம்மதி தான்.


உறக்கம் கலைந்த இரவில் பெருச்சாளியின் பணிக்கு எந்தவித தொந்தரவும் தராமல் கட்டிலில் படுத்தபடியே அதை பார்த்துக் கொண்டிருந்தேன். என் தலை சற்றே அசையும் அதிர்வுகளை கூட உணர்ந்து ஓடி ஒளிவதும் பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து தன் பணியை தொடர்வதுமாக சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது பெருச்சாளி. ஒருபக்கம் தூக்கம் கலைந்த எரிச்சல் இந்த இரவில் ஒரு பெருச்சாளியை கொல்ல வேண்டுமா என்ற கேள்வி. தூங்கினால் கடித்து விட்டால் என்ன செய்வது என்ற பயம் வேறு. ஏறத்தாழ ஒருமணி நேரம் சென்றிருக்கும் அந்த பெருச்சாளியின் செயல்களிலிருந்து அது கருமமே கண்ணாக இருப்பது தெரிந்தது. ஒரு வேளை அந்த பெருச்சாளியும் கீதையை வாசித்திருக்கலாம். அதன் பின் என்னையெல்லாம் ஒரு தடையாகவே பொருட்படுத்தாமல் வேலையை தொடர்ந்தது. நானும் காலையில் இன்னும் அதிகமான எழுத்தாளர்களை இலக்கியவாதிகளை எதிர்கொள்ள வேண்டியதிருப்பதால் சாரி பெருச்சாளி உன்னை மட்டுமே என்னால் இந்த இரவில் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.


 


 


[image error]


மார்கழி குளிரில் நான் எதிர்பார்த்து காத்திருந்த அந்த தினம் விடிந்துவிட்டது. வடகோவை பேருந்தில் ஏறி குஜராத்தி சமாஜை அடைந்தேன். எதிர்கொண்டழைத்த ஒரு நண்பர் ஒரு அறையில் எனக்கும் ஒரு படுக்கையை ஒதுக்கி தந்தார். சகஜமாக நண்பர்களை அறிமுகம் செய்து கொண்டேன். கடலூரில் இருந்து வந்த ஒரு வாசகர், சுரேஷ் பிரதீப், சுசில் அவர்களையும் அறிமுகம் செய்து கொண்டேன். ஜெயும் உள்ளே வந்து எங்களை வரவேற்றார். ஊட்டியில் எங்களுக்காக நிகழ்வுகளை ஒருங்கமைத்த மீனா அக்காவிற்கும் என் வருகையையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டேன்.


முதல் அமர்வு எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுடன் முதல் அமர்வு. சுற்றிலும் வாசகர்கள் சூழ நாஞ்சில் அவர்களுடன் உரையாடல் தொடங்கியது. அவரின் படைப்பை பற்றி ஆரம்பித்த உரையாடல் அவரின் தலைப்புகளில் வழக்கத்தில் இருந்து மறைந்த பழம் தமிழ் சொற்களை பயன்படுத்துவது குறித்த வாசகர் ஒருவரின் கேள்வி அவரை பழந்தமிழ் இலக்கியத்திற்கும் இட்டுச் சென்றது. தமிழின் சொல்வளம், கவிதைகளில் உள்ள இசைநயம், அதற்கு தேவைப்படும் ஒரு பொருட் பன்மொழி போன்ற மொழியை செழுமைப்படுத்தும் சொற்கள் குறித்து நாஞ்சிலின் உரை ஆழமாக சென்றது.


சங்க இலக்கியங்கள், கம்பராமாயணம் என செய்யுள்களில் இருந்து ஏராளமான எடுத்துக்காட்டுகள் கூறி நாஞ்சில் வேறொரு உலகில் நிகழ்ந்துகொண்டிருந்தார். வட்டார வழக்கு பற்றிய நண்பரொருவரின் கேள்விக்கு பெரும்பாலான வட்டார வழக்கு சொற்கள் பழந்தமிழ் இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டவைதான் என்ற நாஞ்சிலின் பதிலும் அதற்கு நாஞ்சில் அளித்த எடுத்துக்காட்டுகளுமாக உரை சுவாரஸ்யமாக அவ்வப்போது “ஆறு மலையாளிகளுக்கு நூறு மலையாளம்” என ஜெமோவும் அவ்வப்போது சொல்ல அவை அதிர்ந்து கொண்டிருந்தது.


பாரதியாரின் வார்த்தைகளிலுள்ள இணைவுகள் பற்றிய அராத்துவின் கேள்விக்கு நாஞ்சில் பாரதியின் பாடல்களையும் அவற்றில் பாரதியின் ஆழ்மனதில் நிகழ்ந்த சொற்களின் இணைவும், பாஞ்சாலி சபதம் பற்றிய அவரது முயற்சியையும் பாரதி ஒரு யுகத்தின் திருப்புமுனை கம்பனைப் போல அது எப்போதாவது நிகழ்வது என்றார். நாஞ்சில் அவர்கள் மஹாராஷ்டிராவில் இருந்த போது அந்த மனிதர்களை பற்றியும் அவர்களின் விருந்து உபசாரம் (அந்த சோள ரொட்டியை நானும் பகிர்ந்து கொண்டேன்) பற்றியும் ஈரானிய தேநீர் கடைகளில் நுழைய தயங்கும் அவர்களின் சமூக பழக்கவழக்கங்கள் குறித்தும் கல்லூரியில் சேர முடியாமல் இக்கட்டான சூழ்நிலையில் இருந்த அவரின் நண்பருக்கு உதவிசெய்த கல்லூரி கிளார்க் பின் அவரோடு அவர் நண்பர் அருந்திய தேனீர் எல்லாம் நெகிழச் செய்தன. சகமனிதர்கள் எங்கும் இருக்கிறார்கள் அன்போடு, நாம் தான் அவர்களை காணத்தவறுகிறோம் என்ற நாஞ்சிலின் சொற்களும் அதுவே வண்ணதாசனின் படைப்புலகமும் கூட அல்லவா? சரியான தொடக்கம் தான் என நினைத்துக் கொண்டேன்


 


 


[image error]


நவீன கவிதையில் இசைநயம் இல்லாதது அவற்றை நினைவில் வைத்துக்கொள்ள இயலாதது பற்றியும் சொற்களின் முக்கியத்துவம் பற்றியும் நாஞ்சில் கவிஞர் தேவதேவனிடம் ஒரு கேள்வியையும் முன்வைத்தார். மறுநாள் கடைசி அமர்வில் தேவதேவன் சொற்கள் வெறும் கருவிதான் சொற்களை கடந்திருக்கும் மௌனம் தான் மிக முக்கியம் என்கிற பொருளில் தன் பதிலை சொன்னார் (எனக்கு புரிந்த அளவு). திரும்ப நாஞ்சில் அவர்கள் அப்படியென்றால் மௌனத்தால் ஒருவருக்கொருவர் உரையாடிக் கொள்ளுங்கள் மௌனத்தால் கேள்விகளை கேட்டு மௌனத்தால் பதில்களை பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்.


இரண்டாவது அமர்வு எழுத்தாளர் இரா. முருகன் அவர்களுடன் தொடங்கியது. அவருடைய எழுத்துலகம் பற்றிய அறிமுகத்திலிருந்து அவரின் படைப்புகளுக்கான களம் அவற்றின் மாய எதார்த்தம் போன்றவை பற்றிய கேள்விகளும் பதிலுமாக உரையாடல் நீண்டது. இரா.முருகன் அவர்களின் சில சிறுகதைகள் மட்டுமே வாசித்திருந்ததால் என்னால் அவ்வளவாக உரையாடலுடன் இணைய முடியவில்லை.


பாட்டையாவிற்கு என்பது வயதை கடந்திருந்தாலும் இளைஞர்களை விட அவர்தான் நிகழ்வுகளில் சுறுசுறுப்பாக கலந்து கொண்டவர். தன் நாடக உலகத்தைப் பற்றியும் அதில் அவர் வளர்ந்து வந்த இளமை பொழுதுகளையும் பின்னர் அவரின் டெல்லி வாசம் அங்கு நிகழ்ந்த தமிழ் நாடகத்திற்கான முயற்சி இந்திரா பார்த்தசாரதி அவர்களின் நாடகங்கள், மற்றும் க.ந.சு. விற்கும் அவருக்குமான உறவு என பல செய்திகளை பகிர்ந்து கொண்டார். இடையிடையே கலகலப்பான சிரிப்புகளுக்கிடையே அரங்கு நிறைந்திருந்தது.


கடைசியாக அவரின் பார் பற்றி சொல்லும் போது அரங்கு மேலதிக கவனத்தோடு கடந்த காலத்திற்குள் சென்று அங்கே ராயல் ஸ்காட்ச் அருந்திக் கொண்டிருந்தது. அதையும் பாட்டையா ஜெமினி கணேசனுக்கு பாடம் எடுப்பது எங்களுக்கெல்லாம் பாடம் எடுப்பது போல இருந்தது ராயல் ஸ்காட்சிற்கான வணக்கங்களை நாங்கள் தெளிவாக கற்றுக்கொண்டோம். எங்கே நம்மக்கள் டாஸ்மாக்கிற்கு கிளம்பி விடுவார்களோ ஒரு கணம் யோசித்தேன் மறுகணம் ராயல் ஸ்காட்ச்யை குடித்தவர்களால் எப்படி டாஸ்மாக்கிற்கு செல்ல முடியும் என்றும் தோன்றியது. அதிகார உலகத்தில் அவரின் தொடர்புகள் என அனைத்தையும் ஒளிவு மறைவின்றி சொல்லிய அவரது பண்பும் என்னை கவர்ந்தது. அவரின் புள்ளிகள் கோடுகள் கோலங்கள் புத்தகத்தை வாசிக்க வேண்டும். உற்சாகமான மனிதர்கள் அந்த நெருப்பை தான் செல்லுமிடம் எல்லாம் பரவச் செய்கிறார்கள் ஜெமோவின் உவமை போல அது மின்மினி நெருப்பு போல சுகமானது.


 [image error]


ஆஜானுபாகுவான கருத்த மனிதரின் வெள்ளை சிரிப்புகளும் கைகளை விரித்து அவர் சொல்லிய கதைகளும் என்னையே அப்படியே அனைத்துக் கொள்வதை போலவே இருந்தன. அந்த அணைப்பின் கனிவில் இருந்து இன்னமும் நான் வெளியே வரவில்லை என்பதை இந்த பதிவை எழுதும் போதும் உணருகிறேன். பால் சக்கரியாவின் ஒரே ஒரு கதையை மட்டும் நான் வாசித்திருந்தேன் (மூன்று குழந்தைகள்). பவா இன்னொரு உலகத்திற்குள் காட்டிற்குள் என்பதே பொருத்தமாக இருக்கும் அழைத்துச் சென்றார். எல்லா ஆண்களையும் ஒரு கணம் அந்த கரடியின் மீது பொறாமை படுமளவிற்கு செய்து விட்டார். அந்த மாலையில் நண்பர்கள் அனைவரும் அவர்களின் மனதின் ஆழத்திலிருந்து சிரித்திருப்பார்கள்.


பவா தன் மனிதர்களை பற்றி சொல்லிய நீர் கதையும் வேறு ஒரு உலகிற்குள் அழைத்துச் சென்றது. அறம் மானுடர் மேல் தன்னை நிகழ்த்திக் கொள்ளும் கணங்களில் கண்ணீர் துளிர்க்காமல் நான் கடந்து போனதில்லை. அவ்வாறே பவாவின் கதையிலும் நிகழ்ந்தது.


அசோகமித்திரனுக்கான பாராட்டுவிழாவில் அவரின் கரங்களை பற்றி மேடையில் அமர்ந்திருக்கும் பவாவையும் அந்த இரவில் அவர் முன் விரிந்திருக்கும் மக்கள் கூட்டத்தினையும் நினைத்துக்கொள்கிறேன்.


யோகிராம் அவர்களுடன் பவாவின் அனுபவம், திருவண்ணாமலையின் கலை இலக்கிய இரவுகள் என பவாவின் சொற்களின் வழியே அவர் வாழும் உலகத்திற்குள் அந்த மாலையில் சென்று வாழாதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள் என உறுதியாக நம்புகிறேன். இறுதியாக பவா அவர்களின் கைகளை பற்றிக்கொண்ட தருணங்கள் அப்படியே இருக்கட்டும் ஒரு உயிருள்ள சித்திரமாக.


இரவு உணவு முடிந்த பின் மருத்துவர் கு.சிவராமானுடன் கலந்துரையாடல் நிகழ்ந்தது. அலோபதிக்கு மாற்றாக உள்ள மருத்துவ முறைகள் அலோபதியுடன் இணையும் புள்ளிகளையும் விலகும் புள்ளிகளையும் குறிப்பாக புத்தூர் கட்டு தொடர்பான பதிலில் விளக்கினார். அவர் மாற்று மருத்துவ அடிப்படைவாதிகளிலிருந்தும் அலோபதி அறிவியல் அடிப்படைவாதிகளிலிருந்தும் வேறுபட்டு தேவைப்படும் இடங்களில் இரண்டும் இணைந்து செயல்படும் முறையினை பற்றியும் சமகால பேலியோ டயட்டினால் பிற்காலத்தில் உருவாகும் பிரச்சனைகளை பற்றியும் கீடோசிஸ் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு பேலியோ எந்த விளக்கத்தையும் தராதது பற்றியும் அதன் மூலம் ஏற்படும் மறைமுக பிரச்சனைகள் தொடர்பாகவும் கவனப்படுத்தினார்.


இந்தியாவில் மருத்துவ முறையிலுள்ள சிக்கல்கள் ஊட்டச்சத்து தொடர்பான தேசிய கொள்கைகள் (Iodine and Vitamin D) வகுக்கப்படுவதில் கார்பொரேட் நிறுவனங்களுக்கு உள்ள பங்கு மற்றும் சித்தா ஆயுர்வேத மருத்துவ முறைகளில் கார்போரேட் நிறுவனங்களால் ரெடிமேடு மருந்துகள் தயாரிக்கும் விதத்தில் உள்ள அபத்தங்கள் என உரையாடல் நீண்டுகொண்டே சென்றது. தற்கால ஆராய்ச்சியில் கண்டறியப்பட்ட புற்றுநோய்க்கான வாய்ப்புகள் தினந்தோறும் உணவில் இறைச்சி (red meat) சேர்த்துக் கொள்வதால் அதிகமாவது பற்றியும் பேசினார். நவீன அறிவியல் முறையிலுள்ள மருந்து சோதனைகளுக்கு சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகளை உட்படுத்த சொல்வதிலுள்ள அபத்தத்தையும் சிக்கல்களையும் எடுத்துக் கூறினார்.


சித்த மருத்துவக் கல்லூரிகளிலுள்ள நோயை கண்டறிவதற்கான பயிற்சி முறைகளில் உள்ள சிக்கல்கள் என துறை சார்ந்து அவருடைய உரையாடல் நீண்டது. நண்பர்களில் இருந்த அலோபதி மற்றும் சித்த ஆயுர்வேத மருத்துவர்கள் துறை சார்ந்து பேசிய விஷயங்கள் புரியா விட்டாலும் எனக்கு புரிந்த அளவு பெற்றுக்கொண்டேன். நவீன அறிவியலின் அடிப்படைகளையே நாம் முறையாக கற்காத போது அதனுடைய போதாமைகளை வரையறைகளை கடந்து பார்க்கும் பார்வையெல்லாம் சாத்தியமாக இன்னமும் நெடுங்காலம் ஆகக் கூடும். அதுவரை அறிவியலையும் நம்பிக்கை சார்ந்து மட்டுமே அணுகிக் கொண்டிருப்போம் என்று தோன்றியது.. அவருக்கு என்னுடைய நன்றிகள்.


 


 


 


[image error]


ஒருநாள் தொடக்கத்திலிருந்து முடிவுவரை வெவ்வேறு ஆளுமைகளுடன் செறிவான உரையாடல்கள் நிகழ்ந்து அதில் நான் பங்கு கொண்டு என்னை செறிவாக ஆக்கிக் கொண்டேன். இரவில் படுக்கையில் விழுந்தும் களைப்படையாமல் மனம் முழுக்க சொற்கள் நிரம்பியிருந்தது.


அதிகாலையில் ஜெ நடைப்பயிற்சிக்கு வழக்கமாக உரையாடல் நிகழும் என்பதை ஊட்டி சந்திப்பில் அறிந்திருந்த போதும் எப்படியோ மறந்து விட்டேன். காலையில் தொடங்கிய உரையாடலில் நான் செல்லும் போதே எழுத்தாளர் சு.வேணுகோபால் பேச ஆரம்பித்திருந்தார். இயல்பாக மனிதர் போகிற போக்கில் மாடுகளையும் வயல் வரப்புகளையும் சித்திரமாக காட்டி வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் சென்றார். பஷீர் பற்றிய உரையாடல் நீண்டு சென்றது.


இறுதியாக ஜெமோ பஷீர் ஒரு சூபி ஞானி எனக்கூறி அவரின் தரிசனத்தை அடைய மீண்டும் குழந்தைகளாக வேண்டும் அல்லது ஞானமடைய வேண்டும். அவரின் கதைகள் அத்தகைய தரிசனத்திலிருந்து உருவானவை. பஷீர் தான் தீவிரமாக எழுதியவற்றையெல்லாம் தீக்கிரையாக்கியது பற்றியும் அதன் பாதிப்புகள் வராமல் பார்த்துக் கொண்டது பற்றியும் ஜெ மூலமாக அறிந்து கொண்டேன். பாத்திமாவின் ஆடு என்ற அவரது நாவலை மட்டுமே படித்திருக்கிறேன். அந்த ஆடு கதையில் வரும் இடங்களையும் பஷீரிடமிருந்து எல்லோரும் எல்லாவற்றையும் பெற்றுக் கொண்ட பின்பு கடைசியாக இருந்த அந்த நாற்காலியிலும் ஒரு கோழி அமர்ந்து சாவகாசமாக ஒருகண்ணை திறந்து பார்க்கும் இடத்தையும் ஜெ சுட்டிக் காட்டினார். வாசிப்பை மெருகேற்றிக் கொள்ள இதுபோன்ற உரையாடல்கள் எனக்கு பயனுள்ளதாக இருந்தன.


பின்னர் தொடர்ந்த எழுத்தாளர் சு.வேணுகோபால் தன்னுடைய உலகங்களுக்கு மீண்டும் இழுத்துச் சென்றார். அவர் எழுதிய முதல் நாவல் தொடர்பான சுவாரஸ்யமான செய்தியையும் விவசாயியின் வீழ்ச்சியை ஒரு விவசாயியாக வாழ்ந்து பார்த்த அனுபவத்தையும் அவருக்கும் அண்ணனுக்கும் உள்ள தொடர்பையும் காளைகளை பற்றியும் அவரின் சொற்கள் மிக அருகாமையை உணரச் செய்தது. பின்னர் தனக்கும் வண்ணதாசன் கதைகளுக்கும் உள்ள தொடர்பையும் பற்றி சொல்லிச் சென்றார். இன்னமும் அவரின் படைப்புகளை வாசித்திருக்கவில்லை வாங்கி வைத்த நிலம் என்னும் நல்லாள் புத்தகம் திறக்கப் படாமல் காத்திருக்கிறது. வெகு சீக்கிரத்தில் அந்த கணம் எனக்கு அமைவதாக.


 


[image error]


வண்ணதாசன் அவர்கள் எழுத்தாளர் சு வேணுகோபால் அவர்களை தொடர்ந்து பேச ஆரம்பத்தில் ஜெ, வண்ணதாசனின் வாசகர் மலையப்பனைப் பற்றி நினைவுப்படுத்த தன் கனவுகளில் மெல்ல அவர் ஆழ்ந்து கடந்த காலத்தின் நினைவு அடுக்குகளில் எங்கோ மறைந்திருந்த அந்த வாசகரின் அன்பையும் அதன்பின் அவருடனான கடிதப் போக்குவரத்தையும் சொல்லிச் சென்றார். காசர்கோட்டில் ஜெ அந்த வாசகரை அவரின் சலூனில் சந்தித்து பின் வண்ணதாசனுக்கு எழுதியதை பற்றியும் உரையாடல் மெல்ல மெல்ல பற்றிக்கொண்டது.


வண்ணதாசனின் பெண்கள் எங்கும் இருக்கிறார்கள். இரண்டு பெண்கள் அரங்கில் அவரின் எழுத்துக்கள் தங்களை பாத்தித்ததைப் பற்றியும் அதன் மூலம் தங்கள் வாழ்க்கையை பற்றிய பார்வைகள் மாறியதையும் அன்பின் கணங்களில் நெகிழ்ந்து கொண்டிருந்தார்கள். பறவையின் மிகச் சிறந்த இறந்தகாலம் பறந்தகாலமாக தானே இருக்க முடியும்.


கன்னட எழுத்தாளர் H.S.சிவப்ரகாஷ் அவர்களுடனான உரையாடல் தமிழ் மொழியின் பழந்தமிழ் இலக்கியங்கள் பக்தி இலக்கியங்கள் மற்றும் இந்திய தத்துவ மரபுகளின் மேலுள்ள ஆழமான புரிதல்களும் அவரின் பதிலில் வெளிப்பட்டன. சிலப்பதிகாரத்தில் தான் முதல் முதலாக பிருந்தாவனம் பற்றி சொல்லப்பட்டிருப்பதாகவும் அதன் பின்னரே பக்தி இலக்கியங்களிலும் பாகவத மரபிலும் எடுத்தாள பட்டதையும் சுட்டிக் காட்டினார். சைவ மதம் பற்றியும் குறிப்பாக காஸ்மீர் சைவம் குறித்தும் ஒரு வாசகர் கேட்க அதை பற்றி அவர் விளக்கியதும் தொடர்ந்த உரையாடலில் சாத்தியப்பட்டது. மிகுந்த நிதானத்துடன் ஆழமான புரிதலுடன் கம்பீரமாக வெளிப்பட்ட அவரின் சொற்களையே இதை எழுதும் போதும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.


அய்யா பாரதிமணி அவர்கள் கேட்டே தமிழ் நாடகத்தின் மீது ஒளிவுமறைவற்ற விமர்சனத்தை கேட்டபோது. தான் அவ்வாறு முழுவதும் தமிழ் நாடகங்களை பற்றி கூர்ந்து நோக்கியிருக்காததால் அதைப்பற்றி வேறு எதையும் சொல்வது சாத்தியமில்லை என கடந்து சென்ற விதமும் என்னை கவர்ந்தது. அவரின் படைப்புகளுக்காக லிங்காயத் அடிப்படைவாதிகள் தந்த நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட பிரச்சனைகளையும் வெறுப்பின்றி கடந்தவர் என்பது அவரின் நிதானமே காட்டுகிறது.


தேர்ந்த ஞானத்தின் கரைகளில் அவர் அவ்வாறு தான் இருக்க முடியும். காந்தியை போல எதிரிகளின் செயலின் முறைகளின் மேல்தான் வெறுப்பே தவிர எதிரிகளின் மீது அல்ல. தன் படைப்பை அவர்கள் எதிர்த்ததைப் பற்றியல்ல எதிர்த்த முறைகளையே அவர் விமர்சிக்கிறார். அவரை அரசியலில் இருந்து காப்பாற்றிய இ எம் எஸ் நம்பூதிரி பாடு பற்றியும் மரபில் தேர்ந்த அறிவு பற்றியும் சொன்னபோது தமிழகத்திற்கு அவ்வாய்ப்பு அமைவதற்கான சாத்திய கூறுகளே இல்லை.


விழாவில் பேசும்போது விஷ்ணுபுரம் இலக்கிய செயல்பாடுகளின் மீது அவர் திருப்தியுற்றிருப்பதையும் தேர்ந்த வாசகர்களால் அளிக்கப்படும் விருது அரசாங்கத்தாலோ அதன் நிதியுதவியிலோ பன்னாட்டு நிறுவனங்களின் பின்புலத்திலோ நிகழாத இந்த விழா அபூர்வமானது தான். அவரின் கோரிக்கையான வேற்று மொழி எழுத்தாளர்களுக்கும் இது அளிக்கப்பட வேண்டும் என்பதும் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாகவும் கூறிய விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அவரை சிறந்த முறையில் கௌரவித்திருக்கிறது.


 


[image error]


 


பின்னர் மத்திய உணவு இடைவேளைக்குப் பின் தொடர்ந்த உரையாடலில் எழுத்தாளர் பாவண்ணன் கன்னடத்தின் நாடகங்களை போல தமிழ் நாடகங்கள், நிகழ்த்து கலைகள் ஏன் வளரவில்லை என்பதற்கு அவர் சொன்ன பதில் கன்னடத்தில் பெரும்பாலான யக்ஷகான குழுக்களின் முன்பதிவு 2022 வரை முடிந்துவிட்டதாகவும் அதை போன்ற வரவேற்புகள், அதன் மக்கள் கொண்டுள்ள ஈடுபாடு போன்றவையே அவற்றை அழியாமல் வைத்திருப்பதாகவும் கூறினார்.


மேலும் ஒரு நாடகத்தை அரங்கேற்ற ஒரு வருடத்திற்கு மேலாக பயிற்சி செய்து பின் அடுத்த வருடம் முழுவதும் கன்னட நிலமெங்கும் அந்த நாடகத்தை அவர்கள் நடத்துவது பற்றியும் கேட்டபோது நான் ஒரு நவீன நாடகம் கூட பார்த்தது இல்லை என்பதையும் நினைத்துக்கொண்டேன். இறுதியாக பாவண்ணன் அவர்கள் பேசிய unconditional love பற்றி பேசும்போது மனிதர்கள் இன்னமும் ஈரத்தோடு இருக்கிறார்கள் என நிறைய எடுத்துக்காட்டுகள் கூறினார். ஒருவகையில் எழுத்தாளர்களும் அவர்களில் சேர்த்திதானே சமூகத்தின் மீதும் மனிதர்கள் மீதும் unconditional love இல்லையென்றால் வாழ்க்கையை உயிரை பணையம் வைத்து ஏன் எழுத போகிறார்கள்?


[image error]


விழா முடிந்ததும் மெல்ல மெல்ல திருவிழாவின் முடிவுதரும் வெறுமைகள் என்னை சூழ எனது ஊருக்கான பயணத்தை தொடங்கினேன். விழா அரங்கு நிறைந்ததை போலவே என் மனமும் கூடவே வயிறும் நிறைந்திருந்தது. முதல் நாள் மதியம் உணவு ஏறத்தாழ நம் மக்களுக்கே சரியாக இருந்தது. உணவு பரிமாறி விட்டு இறுதியாக சாப்பிடும் போது தான் பார்த்தேன் அங்கே துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த பெண்களுக்கு உணவில்லை என்பதை உடனே சக நண்பர் ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது முன்னரே அவர்கள் வெளியில் சென்று சாப்பிட போதுமான பணத்தை வழங்கி விட்டதாக கூறினார். இப்படி எல்லா விதங்களிலும் பூரணமாய் தன் பங்களிப்பை வழங்கி எனது வாழ்வின் மிகச்சிறந்த இரண்டு நாட்களை தங்கள் இடைவிடாத உழைப்பின் மூலம் கனிய செய்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் அனைவருக்கும் ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கும் என் அன்பையும் நன்றியையும் தெரிவித்து கூடவே கடமையும் பட்டுள்ளேன் என்பதையும் நினைவில் கொள்கிறேன்.


அன்புடன்


விஷ்ணு


 


மேலும் படங்கள்


 


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2016 19:02

விவேக் ஷன்பேக் மொழியாக்கம் -ஓர் ஐயம்

1


 


அன்புள்ள ஜெமோ,


 


உங்களைச் சீண்டவோ, சில்லறை வம்புக்காகவோ இதைக் கேட்கவில்லை. நான் சமீபத்தில் ஒரு கடையில் விவேக் ஷன்பேக் கதைகளை நீங்கள் மொழியாக்கம் செய்த நூலை வாங்கினேன். அதை வம்சி வெளியிட்டிருந்தது. கூடவே நின்ற நண்பர் ஒரு ஜெமோ வெறுப்பாளர். ஒரு கதைகூட வாசித்ததில்லை. அவர் வாசிக்கும் தகுதி உங்களுக்கு இல்லை என்பார். ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு குறை சொல்வார். அன்றைக்கு அந்த நூலை காட்டி அதில் பலர் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள், உங்கள் பெயர் மட்டும் அட்டையில் உள்ளது, இது மோசமான வியாபார தந்திரம் என்று வசைபாடினார். இந்த ஏமாற்றுவேலையை நீங்கள் ஏன் தட்டிக்கேட்கக்கூடாது என்றுகேட்டார். முதல்முறையாக இதுசரிதானே என நினைத்தேன். ஆகவே இதை எழுதுகிறேன்


 


சரவணக்குமார்


 


 


அன்புள்ள சரவணக்குமார்,


 


உங்கள் அறச்சீற்றத்துக்கு பாராட்டுக்கள்.


 


ஆனால் விவேக் ஷன்பேக் தமிழில் அறியப்படாத எழுத்தாளர். அவர் எழுதிய அந்நூல் 300 பிரதிகள் அச்சிடப்பட்டது. அதில் வணிக மோசடியால் குவிக்கப்பட்ட பணம் பல லட்சங்கள் இருக்க வாய்ப்பில்லை. ஆகவே ஊழலுக்கெதிரான உங்கள் கொந்தளிப்பை நீங்கள் கொஞ்சம் கட்டுக்குள் வைக்கலாம்.


 


ஒருபதிப்பகம் ஒரு அயல்மொழி ஆசிரியரின் ஆக்கத்தை மக்களிடம் கொண்டுசென்று சேர்க்க அறியப்பட்ட ஓர் எழுத்தாளரின் பெயரை பயன்படுத்தியிருந்தால் என்ன பிழை? சரி, வணிகமே என்றாலும் அதில் என்ன ஊழல்? அதில் கதைகளை மொழியாக்கம் செய்தவர்களின் பெயர்கள் தெளிவாகவே உள்ளே அளிக்கப்பட்டுள்ளன. முதல்பக்கத்தைப்புரட்டிப்பார்க்கும் எவருக்கும் தெரியும். அட்டையை மட்டுமே பார்க்கும் ஆசாமிகள் வாசகர்களா என்ன?


 


கடைசியாக , உண்மையில் நிகழ்ந்தது என்ன என்பது பற்றி. 2009 டிசம்பரில் நான் விவேக் ஷன்பேக் கதைகளை மொழியாக்கம்செய்யத் தொடங்கினேன். காரணம் அப்போது புனைவுலகிலிருந்து சற்று வெளிவந்திருந்தேன். மொழியாக்கம் செய்வதென்பது புனைவுலகுக்குள் நம்மை செலுத்திக்கொள்வதற்கான நல்ல வழி. அன்றைய வேகத்தில் இரண்டுநாட்களுக்கு ஒரு கதைவீதம் மொழியாக்கம் செய்தேன்


 


ஆகவே நூலை 2010 ஜனவரி புத்தகக் கண்காட்சிக்குள் நூலை முடித்துத் தருவதாக ஷைலஜாவிடம் சொன்னேன். அதை நம்பி அவர் நூலுக்கான அட்டையும் அச்சிட்டுவிட்டார். பொதுவாக அட்டைகளை நான்குநான்கு நூல்களுக்காகத்தான் அச்சிடுவார்கள் என நீங்கள் அறிந்திருப்பீர்கள்.


 


ஆனால் நான் நினைத்தபடி மொழியாக்கம் செய்ய முடியவில்லை. என் மனம் விலகிவிட்டது. ஆகவே நூல் வெளிவரவில்லை. பலமாதகாலம் நூல்திட்டம் அப்படியே கிடந்தது. 2011ல் நான் அறம் தொகுதியை எழுதினேன். அது அளித்த உத்வேகம் என்னை பல இடங்களுக்குக் கொண்டுசெல்ல மீண்டும் மொழியாக்கம் செய்யவே முடியவில்லை


 


அட்டை பழையதாகி அட்டைக்கான செலவு இழப்பாக ஆகும் என ஷைலஜா அஞ்சினார். என்னை போனில் அழைத்துக் கட்டாயப்படுத்திக்கொண்டே இருந்தார். 2012  புத்தகக் கண்காட்சி நெருங்கியது. ஆகவே நான் 2011 ஆகஸ்ட் வாக்கில்  என் குழுமத்தில் என் நிலைமையை விவரித்து, கதைகளையும் அளித்து இவற்றை மொழியாக்கம் செய்துதரமுடியுமா என நண்பர்களிடம் கேட்டேன். அவர்கள் மொழியாக்கம் செய்தனர். அதுதான் நூலாகியது. ஆகவே அட்டையில் என்பெயர் மட்டும் உள்ளது. உள்ளே அனைவர் பெயரும் உள்ளது


 


அதில் நான்குகதைகள் நான் மொழியாக்கம் செய்தவை. மற்றவர்கள் ஆளுக்கொன்றாக மொழியாக்கம் செய்தனர். நான் முன்னுரை எழுதினேன். விவேக் ஷன்பேக் போன்ற ஒரு சீரிய படைப்பாளியை தமிழுக்குக் கொண்டுவர முடிந்ததில் மகிழ்ச்சி. இப்படியெல்லாம்தான் எல்லா நூல்களும் வெளிவருகின்றன.


 


உங்கள் நண்பரைப்பற்றி எச்சரிக்கையாக இருங்கள்.என் மேலான வெறுப்பு வேறுவிஷயம். இத்தனைச் சிறிய விஷயத்தில் இப்படி ஒரு  ‘வணிகச்சதியை’ ப்பார்ப்பவர்  இதே தொழிலாக இருக்கும் மிகமிக ஆபத்தான மனிதர். தனிப்பட்ட செய்திகள் எதையும் அவரிடம் சொல்லாதீர்கள். அதிகபட்சம் ஐநூறுரூபாய்க்குமேல் அவரை நம்பாதீர்கள்.


 


 


ஜெ


 


சில்லறை [கன்னடச் சிறுகதை]


நம் வழியிலேயே நாம் விவேக் ஷன்பேக்


 



ஜாமீன் சாஹேப்-2
ஜாமீன் சாஹேப்- [விவேக் ஷன்பேக்]-1

 


 


 



விவேக் ஷன்பேக் சிறுகதை- 4
விவேக் ஷன்பேக் சிறுகதை 3
விவேக் ஷன்பேக் சிறுகதை- 2

 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2016 10:35

பின் தொடரும் நிழலின் குரல் -கடிதம்

IMG_8991


 


விஷ்ணுபுரம் வாசித்து முடித்ததும் அடைந்த உணர்ச்சிக் கொந்தளிப்புகளை கடிதம் மூலம் வெளிப்படுத்தலாம் என்று எண்ணி இருந்தேன், ஆனால் விஷ்ணுபுரம் வாசகர் விவாதங்களைப் படித்ததும் அங்கு நான் பதிவு செய்ய ஏதும் இல்லை என்ற வெறுமையில் கடிதம் எழுதாமல் கடத்திவிட்டேன்.


பின் தொடரும் நிழலின் குரல் வாசித்ததும் நம் வாசகர் விவாதங்களை அலசாமல் கடிதம் எழுதிவிட்டேன், இல்லை என்றால் இதற்கும் தைரியம் வந்திருக்காது என்று நினைக்கிறன். தங்கள் வாசகப் பரப்பில் உள்ள வாசகர்களை பல படிநிலைகளாக  எடுத்துக்கொண்டால், நான் தற்பொழுது தான் ஆரம்பப் படிகளில் அடி எடுத்து வைத்திருப்பேன் என்று நினைக்கிறன், அவர்களைப் படித்தால் கடிதம் எழுத வராது என்பதால் உங்களுக்கு எழுதிய பிறகு படிக்கலாம் என்று இருக்கிறேன்.


 


பின்தொடரும் நிழலின் குரல்:


நாவலின் தலைப்புக்கு ஏற்றாற்போலவே கதை முழுதும் பயணப்படும் நிழலும் அதன் உண்மைக் குரலும் இப்படைப்பின் உச்சம் என்பேன். யாருடைய குரல் அது?, புகாரி , வீரபத்திர பிள்ளை, அருணாச்சலம் யாருடைய குரல் அல்லது வாசகனாகிய என்னுடையதா அல்லது எங்கள் ஆசான் ஜெமோ … இல்லை இது உண்மையின் குரல், “ஒவ்வொருவனின் அகம் பேசும் உண்மையின் குரல்” என்பதே இந்நாவலின் ஒட்டுமொத்த  படிமம் குறியீடு என்று  எண்ணுகிறேன்.


நாவல் அக்கால கம்யூனிச சித்தாந்த மனிதர்களின் கதாபாத்திரத்தைக் கையாண்டிருந்தாலும், அரசன் முதல் ஆண்டி வரை அனைவரும்  அப்படித்தானே.  உண்மைக்கும், அகிம்சைக்கும், அறத்திற்கும் எதிராக நம்ஒவ்வொருவரும் செய்யும் செயல்களை, அவை அனைத்தும் சரி என்பதற்காக நாமே கற்பித்துக்கொள்ளும் தர்க்க பூர்வ காரணங்கள்  அனைத்தையும், யாரோ ஒருவன் போல் நம்மிலிருந்து  தனித்து நின்று வேடிக்கை பார்க்கும் நம் “அகத்தின் வெளிப்பாடு” தான் அந்த நிழல் , அது தொடர்ந்து எழுப்பும் “குற்ற உணர்வு” தானே அந்த குரல். யாரால் தான் தப்ப முடியும் அந்த “பின் தொடரும் நிழலின்” குரலுக்கு .


இரண்டாவது இந்நாவலின் தொகுப்பு (Editing) என்னை அதிகம் கவர்ந்தது. நிறைய கதைகள் வெறும் கடிதம் வாயிலாக வெளிப்பட்டிருப்பது ‘எங்களுக்கும் கொஞ்சம் வேலை கொடுங்கள்’ என்று சிந்திக்க ஏங்கும் வாசகர்களுக்குரியது.


நிறைய கவிதைகள் இருந்தது, என்னால் அவற்றை உள்வாங்கி கொள்ள முடியவில்லை மன்னித்துவிடுங்கள்.


நாவலில் வரும் நாடகம் (மனநல மருத்துவமனையில் நடைபெறும் நாடகத்திற்குள் வரும் மனநல மருத்துவமனை ) நான் சிரித்து ரசித்தது, நல்ல timing comedy . இந்நாவலில் ஜெமோ வின் நகைச்சுவை குணம் வெளிப்படும் இடம் இந்த நாடகமே!.


ட்ராஸ்கியின்  இறப்பு  ராமலிங்கத்தை பாதித்தது, புகாரின் இருப்பு வீரபத்திர பிள்ளையை, கார்க்கியின் இறப்பு யாரையோ, வீரபத்திர பிள்ளையின் இறப்பு  அருணாச்சலத்தை என்றால் நான் பாதிப்படைந்தது சிறுவன் நிகிதா (அண்ணாவின் வளர்ப்பு மகன்) இறந்த போது. ஜெமோ, இந்நூலை வாசித்தவர்கள் எதனை பேர் இதை உணர்திருப்பாரகள் என்று உணர்வு கொள்கிறேன்.


சைபீரிய வதை முகாமில் புகாரின் மனைவி “அன்னா” வுடன் இருந்த அனைவருமே மரணம் அடைந்திருப்பார்கள். பல முறை கற்பழிப்பு, கடும் குளிர், பசி, உழைப்பு சுரண்டல் என பல இன்னல்கள் நடுவிலும் தன் காக்கும் லட்சியத்தின் பொருட்டு அன்னா 50 ஆண்டுகள் அவ்வதை முகாமில் வாழ்ந்து உயிருடன் திரும்புவாள். அவ்வதை முகாமில் அவளுடன் அவளது தோழி,  அத்தோழியின் பால்ய குழந்தை நிகிதா மற்றும் பலர் இருப்பர். குறைந்தது 20 பக்கங்களாவது வதை முகாமில் அந்த கடும் குளிரில் அவர்களின் வாழ்க்கை காட்டப்பட்டிருக்கும். அதில் குழந்தை நிகிதாவின் விளையாட்டு, மகிழ்ச்சி,பசி, தாகம் என்று காட்சிகள் சித்திரப்படுத்தப்பட்டிருக்கும். அக்குழந்தையின் தாய் இறக்கும்போது குழந்தை ஏதும் புரியாமல் இருப்பது, பாலுக்காகவும்  தூங்கவும் இறந்த தாயின் உடலை நாடுவது என்று நிகிதாவின் செயல்கள் மூலம் அக்குழந்தை வாசகர்ஆழ்மனதில் அவர்களை அறியாமலே வேரூன்றி விட்டிருக்கும்.


பிறகு புத்தகத்த்தின் பல பக்கங்கள் கடந்து, அன்னா நீதி மன்றத்தில் அளிக்கும் வாக்கு மூலத்தில், தங்கள் சைபீரிய வதைமுகாமில்  அனுபவித்த கொடுமைகளையும், அடைந்த இழப்புகளையும் சொல்லும்பொழுது  ஒரு கொசுறு வாரியாக “என் வளர்ப்பு மகன் நிகிதா,  பின் மண்டை கோடரியால் பிளக்கப்பட்டு கொல்லப்பட்டான்” என்று வரும். இவ்வரியை நான் பலமுறை படித்தேன், அவ்வளவு எளிதாக இவ்வரியை என்னால் கடக்க முடிய வில்லை. மீண்டும் பின்சென்று சைபீரிய வதை முகாமை படிக்க செய்தது. இவ்வ்ளவு பெரிய எழுச்சியை ஒரு வரியால் உருவாக்க உங்களால் எளிதில் முடிகிறது ஜெமோ.


மொத்தத்தில் “பின் தொடரும் நிழலின் குரலை” எப்படி சொல்வது? ஒரு கம்யூனிஸ்டின் மனப்போராட்டம் என்றா?அமைப்பு ஒன்றில் தனி மனிதனுக்கு என்று எந்த தனிக் கருத்தும் இருக்கக் கூடாது என்றா?’எனக்கு எவ்வளவு வரும்’ என்ற எளிய தொழிலாளியின் எளிய எண்ணம் ஒரு மாபெரும் லட்சிய அமைப்பின் பாதையை தீர்மானிக்கும் விதியையா?காரல் மார்ஸ் தான் நாம் அடைந்திருக்கும் கடைசி சித்தாந்தி என்றா?லெனினும், ஸ்தாலினும் மார்க்ஸின் நீட்சி அல்ல, அவர்கள் முசோலினி, ஹிட்லரின் நீட்சிகள் என்றா?பேரமைப்புகள் உருவாகும் தோறும் கேட்கும் பலிகளையா ?


மண்ணுடன் உறவாடும் விவசாயிகளின் மனங்களும், இயந்திரத்துடன் போராடும் தொழிலாளர்களின் கைகளும், ஒன்று சேர்ந்து உருவாக்க முடியாத சமத்துவத்தையா? உருவாக்க முனைந்து பேரழிவு கொண்ட ரஷ்ய கம்யூனிசத்தையா?


அனைத்தையும் பொறுப்போம், மீட்பர் வாள் ஏந்தி வருவார் என்று நம்பும் மக்களின் அறியாமையையா? வாளேந்தி வரமால் திறந்த இதயம் கொண்டு வரும் மீட்பரையே எதிர்க்கும் அறிவின்மையையா?


மார்க்சிசம், மதங்களில்  இருந்து உணர்வுகளையும் மரபுகளையும் எடுத்து முரணியக்க தத்துவம் மூலம், அறிவும் உணர்வும் ஒன்றை ஒன்று சமன் செய்த ஒன்றாக விரிவடைய வேண்டும் என்பதையா?


 


பாண்டியன் சதீஷ்குமார்


 

தொடர்புடைய பதிவுகள்

ஓர் இலக்கு, ஒரு கனவு -பின் தொடரும் நிழலின் குரல்
பின் தொடரும் நிழலின் குரல் – அறம்
புதுயுக நாவல்
என்னை வாசிக்கத் தொடங்குதல்
வாசிப்பு – இருகடிதங்கள்
மின்தமிழ் பேட்டி -1
வரலாறும் இலக்கியமும்
துணை இணையதளங்கள்
அரசியலின் அறம்
பின் தொடரும் நிழலின் குரல் -இலட்சியவாதத்தால் கைவிடப்படுதல்
பின்தொடரும் நிழலின் குரல்களைப்பற்றி…
வரலாற்றின் மனசாட்சியை தீண்டும் குரல்
வெண்முரசும் நவீனத்துவமும்
கடுங்குளிர் கவிதைகள்- 1
ஒரு முதற்கடிதம்
பின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்
பின் தொடரும் நிழலின் குரலில் ஆசிரியன்
காடு, விஷ்ணுபுரம், வெறும்முள்-கடிதங்கள்
வாசிப்பின் தடைகள் -கடிதம்
நாவல்- கடிதங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2016 10:33

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 69

[ 13 ]


சண்டன் நீராடி எழுந்து சடைத்திரிகளை தன் தோள்மேல் விரித்து கைகளால் ஒவ்வொரு சரடாக எடுத்து ஈரம் போக உதறி பின்னுக்கு எறிந்தபடி நடந்தான். அவனுடைய மரவுரி ஆடையைத் துவைத்து அழுத்திப் பிழிந்து கைகளில் எடுத்தபடி ஜைமினி பின்னால் சென்றான். சுமந்துவும் வைசம்பாயனனும் பைலனும் தங்கள் ஆடைகளைப் பிழிந்தபடி பின்தொடர்ந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் அகத்தே  அவன் சொற்களையே மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தனர்.


ஏதோ ஒரு கணத்தில் பைலன் இனி அங்கு ஒரு நாளும் தங்கியிருக்க முடியாதென்று உணர்ந்தான். அவ்வுணர்வு எழுந்ததுமே உள்ளம் பொங்கியெழுந்தது. அங்கிருந்து கிளம்பவேண்டுமென உடல் தவித்தது. அங்கு  தங்கும் ஒவ்வொரு நாளும் சென்றடையும் இலக்கு அகன்று போகிறது. பின்னர் தோன்றியது,  அக்கணம் வரை இலக்கென்று ஏதும் இருக்கவே இல்லை என்று. அது  பிறர் அறியாது தனிமையில் வருடி மகிழும் ஓர் இனிய கற்பனையாகவே இருந்தது. எங்கிருந்தோ ஒரு ஆசிரியன் எழுந்து வந்து அவன் தலையைத் தொட்டு வாழ்த்தி தன் சொல்வளையத்திற்குள் எடுத்துக் கொள்கிறான். வான்நிறைந்த நீராவி குளிர்கலத்தில் பனித்து சொட்டாவதுபோல மெய்மை திரண்டு எழும் ஒரு மனிதர்.


ஆனால் அது அவன் வாசித்து அறிந்த நூல்களில் இருந்தும் கேட்டறிந்த கதைகளில் இருந்தும் உருவான உளஓவியம் மட்டுமே. அவன் விழைவதென்ன என்று அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. இல்லத்திலிருந்து எழுந்து கதைகளுக்குள் சென்றுவிடவேண்டுமெனும் விழைவு. காலந்தோறும் அப்படி கிளம்பிக்கொண்டே இருக்கிறார்கள். அனைத்தையும் கலைத்து கடந்து செல்லும் ஓர் ஆசிரியன் என்றால் அவனுக்கு அனைத்து இலக்கணங்களும் தெரிந்திருக்கவேண்டும். இம்மண்ணை நோக்கி ஒன்றை சொல்லும் தகுதி உடையவனுக்கு பெரும் கனவுகள் இருக்கவேண்டும். கனவில் உலாவும் ஒருவன் வாழ்ந்து அறிந்திருக்கவேண்டும் அனைத்தையும். ஒன்றிலாது பிறிதொன்றிலை.


நான்கு முனைகளிலும் முழுமைகொண்ட ஒருவன் இருக்க முடியுமா என்ன? கவிஞனும் அறிஞனும் பித்தனும் பெருஞ்சூழ்ச்சியாளனுமான ஒருவன்.  எங்கோ அப்படி ஒருவன் இருந்தாக வேண்டும். ஏனெனில் அது சொல்லப்பட்டுவிட்டது. நினைவுக்கு எட்டிவிட்டது. சென்றடையும் தொலைவென்ன என்பதே வினா.  சண்டன் சொன்ன அனைத்தும் மறுசொல் இலாத உண்மை என்று உறுதிகொண்டது உள்ளம். அழைத்துச்செல்பவன் அறியாச்சிறுவனே. ஏனெனில் உக்ரன் ஒவ்வொரு கணத்திலும் முழுவிசையுடன் இருந்தான். எய்யப்பட்டு  இலக்கு நோக்கி செல்லும் அம்பிற்கு மட்டுமே அவ்விரைவு இயல்பு. அவன் வழி பிழைக்க வாய்ப்பே இல்லை.


அவர்கள் குடில்களுக்குச் சென்றபோது தெற்குமூலையில் இருந்த சூதர்குடிலில் இருந்து சுதையின் உரத்த குரல் கேட்டது. “அடித்து கொன்றே விடுவேன். கொன்றேவிடுவேன்! பொய் சொல்லவில்லை, கொன்றே விடுவேன். நில்!” மூங்கில் படல் கதவைத் திறந்து உக்ரன் வெளியே ஓடி வந்தான். வந்த விரைவில் வெளியே கால் பிழைக்க முழங்கால் ஊன்றி மண்ணில் விழுந்து புரண்டெழுந்து மீண்டும் ஓடி வந்தான். ஜைமினி ஓடிச்சென்று அவன் இரு கைகளையும் பற்றிக்கொண்டான். “ஓடாதே, நில்! நில் மூடா!” என அன்னையின் குரல்கேட்டது.


குடிலுக்குள்ளிருந்து இடையில் கைவைத்து வெளியே வந்த சுதை “பிடியுங்கள் அவனை! பிடித்து நிறுத்துங்கள்… இதோ வருகிறேன்” என்றாள். பைலன் “என்ன ஆயிற்று?” என்று கேட்டான். “உணவு ஊட்டிவிடவேண்டுமென்றான், வாய் திறந்தால் நூலும் நெறியுமாக பேசித்தள்ளுகிறானே, ஓரிடத்தில் அமர்ந்து சற்று உணவை அள்ளி உண்டாலென்ன கேடு இவனுக்கு? பருப்பும் நெய்யுமிட்டு அன்னத்தைப் பிசைந்து இலைமேல் வைத்துவிட்டு பால் எடுக்க அப்பால் சென்றேன். தரையில் இருந்து மண்ணை அள்ளி அன்னத்தில் கலந்து வைத்துவிட்டு அமர்ந்திருக்கிறான். அறிவுடையோன் செய்யும் செயலா இது? அன்னத்தில் மண் கலந்தால் தெய்வங்கள் எப்படி பொறுக்கும்?”


ஜைமினி குனிந்து “என்ன இது, சூதரே? தாங்கள் இதை செய்யலாகுமா? தாங்கள் அறியாததா?” என்றான். “அந்த அன்னம் எறும்புகளுக்குரியது. அவை என்னை வாழ்த்துவதை நான் முன்னரே கேட்டுவிட்டேன்” என்றான் உக்ரன். முதல் கணம் அவன் உண்மையாகவே ஏதோ சொல்கிறான் என்று ஜைமினி எண்ணினான். கண்களில் வந்து சென்ற சிரிப்பின் சிறு மிளிரைக் கண்டதும் தானும் சிரித்தான்.  இருபுயங்களிலும் அவனை பற்றித்தூக்கி தன் தோள்மேல் அமர்த்திக்கொண்டு  முழங்காலில் மண் இருந்ததை கைகளால் தட்டியபடி “காலையில் நீராடுவதோ தெய்வங்களுக்கு பூசெய்கையோ உங்களுக்கு வழக்கமில்லையா, இளம் சூதரே?” என்றான்.


“நான் புலரிக்கு முன்னரே எழுந்து வெளியே சென்று காகங்களை பார்த்தேன்” என்றான் உக்ரன். “குருவிகளும்கூட இங்கு நிறைய இருக்கின்றன.” “காகங்களிடம் பேசினீரா?” என்றான் ஜைமினி. “இந்த ஊரே காகங்களுக்கு புகழ்பெற்றது” என்று சண்டன் சொன்னான். “ஆம், காகங்கள் அதை அறிந்திருக்கின்றன. பல காகங்கள் அடர்காட்டிலிருந்து இங்கு வருகின்றன. இங்குள்ள பெண்டிர் முதல் நாளிரவே காகங்களுக்கு உணவை அள்ளி வீசிவிட்டு படுக்கிறார்கள். காலையில் காகங்களின் குரல் கேட்டே நான் எழுந்தேன்” என்றான் உக்ரன். கையைத் தூக்கி “காகங்கள் இந்த ஊரை அன்னவயல் என அழைக்கின்றன” என்றான். அவன் நகையாடுகிறானா என பைலன் நோக்கினான். ஆனால் அவன் முகம் விசையுடனிருந்தது. “அவர்கள் இங்கே இந்த மனிதர்களை வரவழைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு அவர்கள் ஆணையிடுகிறார்கள்” என்றான் உக்ரன்.


“வருகிறேன்” என்று சொல்லி சண்டன் முன்னே சென்றான். “அவனை இறக்கி விடுங்கள். அவன் ஏதாவது உண்ணவேண்டுமல்லவா? இந்த வயிற்றை வைத்து அவனை நான் எப்படி துரத்திப் பிடிப்பது?” என்றாள் சுதை. “நன்று விறலியே, நாங்களே இவனுக்கு ஏதாவது வேள்வி  அன்னத்தை ஊட்டிவிடுகிறோம்” என்று வைசம்பாயனன் சொன்னான். “நீங்கள் ஓய்வெடுங்கள்” என்றான் சுமந்து. “இத்தனை சிறிய உடலை வைத்துக்கொண்டு இவ்வளவு சொற்களை எங்கிருந்து எடுக்கிறான் என்றே எனக்குப்புரியவில்லை. சொல்லெடுத்து சொல்லெடுத்தே உள் ஒழிந்து ஒரு நாள் சருகாக உதிர்வான் மூடன்” என்று முணுமுணுத்தபடி உள்ளே சென்றாள் சுதை.


“தாங்கள் உண்பதற்கென்ன, சூதரே?” என்று ஜைமினி கேட்டான். “உண்ணும்போது என் உள்ளோடும் சொற்பெருக்கு முறிவடைகிறது. ஐந்து கவளம் உணவென்றால் ஐந்து முறை இடைவெளி வருகிறது” அவனை தோளில் வைத்து ஆட்டியபடி “கங்கையை கோடரியால் பிளக்க முடியுமா?” என்ன என்றான் ஜைமினி சிரித்தபடி, “முடியாது. ஆனால் அலை கிளப்ப முடியும்” என்றான் உக்ரன். “எதற்கும் மறுமொழி சொல்கிறார்” என்றான் சுமந்து. “ஆம், வாயிலேயே நான்கு அடிபோட்டால் ஒழுங்குக்கு வருவான். அதை அவன் தந்தை செய்வதில்லை” என்று குடிலுக்குள் சுதை சொன்னாள்.


அவர்கள் அந்தணர்களுக்குரிய  குடில்களுக்குள் சென்றனர். ஜைமினி உக்ரனை இறக்கி விட்டுவிட்டு “இது சூதஆசிரியரின் மரவுரி. நான் கொடியில் காயப்போட்டுவிட்டு வருகிறேன்” என்று வெளியே சென்றான். இடுப்பில் கைவைத்து குடிலில் நின்ற உக்ரன் “அழகிய குடில், அந்தணர்களுக்கு மட்டும் சிறந்த குடில்களை  அளித்திருக்கிறார்கள்” என்றான். “ஆம், அவர்கள் வேள்வி செய்து வேதம் புரப்பவர் அல்லவா?” என்றான் பைலன். “நன்று. வேதமும் அவர்களை நன்கு புரக்கிறது” என்றபடி உக்ரன் சுற்றுமுற்றும் பார்த்தான். அங்கிருந்த அரணிக்கட்டை அவன் நோக்கை கவர ஓடிச்சென்று அதை எடுத்து “அரணிக்கட்டை, நான் இதை உரசி அனல் எழுப்பப் போகிறேன்” என்றான்.


“அதை உரசுவதற்கு தோளில் ஆற்றல் தேவை” என்றான் வைசம்பாயனன் தன் மரவுரியை உதறி நீண்ட கழியில் மாட்டி மேலேயிருந்த மூங்கிலில் காயப்போட்டபடி. “சிறிய தோள்களுக்கு சிறிய அனல் வரும்” என்றான் உக்ரன். வைசம்பாயனன் “அனல் அந்த மரக்கட்டையின் ஆழத்தில் அமர்ந்திருக்கிறது. அதுவரைக்கும் உங்கள் விசை சென்றாலொழிய அது வெளியே வரவிரும்பாது” என்றான் வைசம்பாயனன். விழிகள் சுருக்கி ஏறிட்டு “ஏன்?” என்றான் உக்ரன். “ஏனெனில் தன்னை எரித்தபடியேதான் அந்த அனல் வெளிவர முடியும்” என்றான் வைசம்பாயனன். சிறுவனின் கண்கள் மாறுபட்டன. “ஆம், பிறிதொரு அனல் வந்து அவ்வனலை எழுப்ப வேண்டியிருக்கிறது” என்றான். அவன் சொல்வதென்ன என்று புரியாமல் அனைவரும் திரும்பிப்பார்த்தனர். அவன் அரணிக்கட்டையை ஒன்றோடொன்று தட்டிப்பார்த்தான்.


பைலன் “இளம் சூதரே, தாங்கள் ஏதேனும் ஆசிரியரை தேடிப்போவதைப்பற்றி எண்ணியிருக்கிறீர்களா?” என்றான். “ஆசிரியரா…?” என்று அவன் விழிதூக்கிப் பார்த்தான். “எனக்கா? என்றான். “ஆம், தங்களுக்கு சொல் முழுமையையும் வேத மெய்மையையும் கற்பிக்கும் ஒருவர்?” குனிந்து அரணிக்கட்டையை நோக்கி “எனக்குத்தான் எந்தை கற்பித்துக் கொண்டிருக்கிறாரே?” என்றான் உக்ரன். “தாங்கள் கற்றதற்கு அப்பால் உள்ளவற்றை  கற்பிப்பவர்” என்றான் சுமந்து. அவன் அதை தட்டியபடி மூக்கை உறிஞ்சினான். “ஆம். அப்படி ஒருவர் இருக்கலாம். ஆனால் நான் இதுவரை அவரைப்பற்றி எண்ணியதில்லை” என்றபின் “நான் சூதனல்லவா? எனக்கு சூதர்கள் பாடல்களை கற்பிப்பார்கள். ஆனால் அவர்கள் கற்பிக்கத் தொடங்கும்போதே அந்தப்பாடல் எனக்கு முன்னரே முழுமையாகத் தெரியும் என்பதை ஒவ்வொரு முறையும் உணர்கிறேன்” என்றான்.


“பாடலுக்கு அப்பால் செல்லும் ஒரு உள்ளம் கொண்டவர் நீங்கள். மெய்மையறிந்த நா கொண்டவர். நேற்று இவ்வூரே அதை உணர்ந்து நிற்கிறது” என்றான் சுமந்து. அவன் சொல்வதென்ன என்று புரியாதவன்போல உக்ரன் விழிதூக்கிப் பார்த்தான். பின்னர் “அரணிக்கட்டையில் காத்திருக்கும் அனலின் பெயரென்ன?” என்றான்.  உள்ளே வந்த ஜைமினி “சூதரே, எங்களிடம் இன்று சண்டர் ஒன்று சொன்னார். இவர்கள் கேட்பது அதைப்பற்றியே” என்றான். என்ன என்று வினவுவதுபோல அவர்களை நோக்கினான் உக்ரன்.


வைசம்யாபனன் “நாங்கள் நால்வரும் எங்கள் இயல்புக்கிணைந்த மெய்யாசிரியர் ஒருவரைத் தேடி இல்லம் விட்டிறங்கி வந்தோம். அந்நால்வரும் ஒருவராகவே எங்களை அணுகக்கூடும் என்றார் சண்டர். அவ்வொருவரை தேடிச்செல்லும் தகைமை கொண்டவர் தாங்களே என்றார்”  என்றான். “எங்கள் நால்வரையும் நீங்களே வழிகாட்டி அழைத்துச்செல்லவேண்டும் என்றார் சண்டன்” என்றான் பைலன்.


“நானா…?” என்றபின் அவன் அரணிக்கட்டையை மேலே தூக்கி “இதை நான் பெரியவனான பிறகு கடைந்து நிறைய தீயை எடுப்பேன். இந்தக்காடுகள் அனைத்தையுமே எரியூட்டுவேன்” என்றான். அவன் உள்ளம் முழுமையாக அதில் திரும்பவே அதை தரையில் வைத்து பிள்ளைக்கட்டையால் தாய்க்கட்டையின் புழைக்குள் செருகி கைகளால் உருட்டத் தொடங்கினான். ஜைமினி அருகே வந்து அவன் முகத்தைப்பற்றி மேலே தூக்கி “சூதரே, ஆசிரியர் என்று எவரையாவது தாங்கள் தேடிச் செல்கிறீர்களா? தங்கள் உள்ளத்தில் ஏதேனும் முகம் எழுகிறதா? கனவிலேனும் வழி தென்படுகிறதா? இன்று உங்களை நம்பியே நாங்களும் திசைதேர வேண்டியவர்களயிருக்கிறோம்” என்றான்.


“நான் ஆசிரியர் என்று எவரையும் உணரவில்லையே” என்றான் உக்ரன். “ஆனால் இந்த அரணிக்கட்டையில் அனல் எடுக்க எனக்கு யாரோ கற்பிக்கப்போகிறார்கள் என்று இப்போது தோன்றுகிறது” என்றவன் எழுந்து நின்று “நான் சென்று குலத்தலைவரிடம் கேட்கிறேன், ஒரு வேளை அவர் எனக்கு இதை கற்பிக்கக்கூடும்” என்றான். சற்று எரிச்சலுடன் அரணிக்கட்டையை வாங்கி அப்பால் வைத்துவிட்டு ஜைமினி சொன்னான் “இளம் சூதரே, தங்கள் உள்ளம் தாங்கள் எண்ணுவதைவிட பலநூறு மடங்கு ஆழம் கொண்டது. பாதாள கங்கை பெருகி மேலெழும் சிறுதுளை போன்றவர் தாங்கள். சொல்க, உங்கள் உள்ளத்தில் ஒரு பெயரேனும் எழுகிறதா?”


உக்ரன் அவனை உதறி “ஆ, அது என்னுடைய அரணிக்கட்டை. இனி அதை நான்தான் வைத்திருப்பேன்” என்றான். கடுமையாக “சொல்லுங்கள்!” என்றான் ஜைமினி. “அது என்னுடையது… என்னுடையது…” என்று அவன் கூச்சலிட்டன். “அவரை விடுங்கள், ஜைமின்யரே” என்றான் பைலன். “ஒரு கணம் முதிராக்குழவியாகவும் மறுகணம்  மெய்யுணர்ந்த ஆசிரியனாகவும் மாறி  ஏதோ ஒன்று இச்சிற்றுடலில் இருந்து நம்முடன் விளையாடுகிறது. அதை ஒருபோதும் நம்மால் முழுக்க புரிந்துகொள்ள முடியாது.” உக்ரன் “என்னுடைய அரணிக்கட்டை… என்னுடைய அரணிக்கட்டை… என்னுடைய அரணிக்கட்டை…” என்று  கால்களை மாறி மாறி உதைத்தபடி வெறியுடன் வீறிட்டான். அவன் கழுத்தில் நரம்புகள்  புடைத்தன.


“என்ன குரல்… காதுக்குள் கொண்டுவந்து கொம்பை ஊதியதுபோல் இருக்கிறது. அவரை வெளியே விடுங்கள்” என்றான் வைசம்பாயனன். ஜைமினி பிடியை விட்டதும் பாய்ந்து சென்று அரணிக்கட்டையை எடுத்து அதன் பிள்ளைக்குழவியையும் அப்பாலிருந்து தேடி எடுத்து அவற்றை இருகைகளிலும் வைத்தபடி உதடுகளைப் பிதுக்கி பகையுடன் கூர்ந்து பார்த்து “போடா” என்றான்.  பின்னர் பாய்ந்து வந்து ஜைமினியை அடிக்கத் தொடங்கினான். வேடிக்கையாக சிரித்தபடி அதைத்தடுத்த ஜைமினி சிறுவன் மேலும் மேலும் வெறிகொண்டு பற்களை கிட்டித்தபடி அடிப்பதை அறிந்து எப்படி தடுப்பது என்று தெரியாமல் பின்னடைந்தான். அவன் முழங்கயிலும் மணிக்கட்டிலும் பட்ட அடி நன்றாகவே வலித்தது.


பைலன் வந்து உக்ரனைப் பிடித்து இழுத்து அப்பால் தள்ளினான். நிலத்தில் விழுந்த அவன் மூச்சிரைக்க எழுந்து பற்கள் தெரிய சிறுநெஞ்சு உலைய கண்களில் நீர் நிறைந்திருக்க “கொல்வேன்… கொல்வேன்… உங்கள் அனைவரையும் கொல்வேன்” என்று கூச்சலிட்டான். “சரி” என்றான் பைலன். “நான் அரணிக்கட்டையை கொளுத்தக் கற்றுக்கொள்ளும்போது உங்கள் மரவுரியைத்தான் முதலில் கொளுத்துவேன்” என்றான். கைகளை உதறிக்கொண்டிருந்த ஜைமினி அறியாமல் புன்னகைத்து “அதுவரைக்கும் நன்று” என்றான். “நீங்கள் நால்வருமே அறிவிலிகள்” என்றான் உக்ரன். “நான் உங்கள் தலைமயிரை கொளுத்துவேன்.”


“சரி அதற்கென்ன?” என்றான் ஜைமினி. மேற்கொண்டு என்ன சொல்வது என்று தெரியாமல் தலையை சற்று சாய்த்தபடி “நான் மேலும் பெரியவனாகும்போது உங்கள் நால்வரையுமே கொளுத்துவேன்” என்றான். ஜைமினி “நன்று, அவ்வாறே ஆகுக!” என்று சிரிக்க பைலன் சேர்ந்துகொண்டான். உக்ரன்  ”இதை நான் கொண்டுசென்று குலத்தலைவரிடம் கொடுக்கிறேன். அவர் எனக்கு பால் தருவார். அதைக் குடித்ததும் எனக்கு தோளில் ஆற்றல் வரும். அதன் பிறகு நான் இதைக் கடைந்து அனலை எடுப்பேன். உங்களுக்கு தரமாட்டேன்” என்றபின் அதை மார்போடணைத்தபடி வெளியே சென்றான்.


சுமந்து “அவரிடம் எந்த நேர்வினாவும் எழுப்புவதில் பொருளில்லை” என்றான். அவர்கள் திரும்பிப் பார்த்தனர். “இதற்குள் நீங்கள் இதை உணராதது விந்தையே. கதை சொல்லும்போது மட்டுமே அவர் மெய்யறிவர் போலிருக்கிறார். பிற தருணங்களில் எல்லாம் சின்னஞ்சிறுவராகவே தோன்றுகிறார்” என்றான். “உண்மை” என்றான் வைசம்பாயனன். “அவரை அழைத்து ஒரு கதை சொல்லும்படி கேளுங்கள், சொல்லமுடியாது. எதுவுமே நினைவுக்கு வராது. ஒரு வினா எழுப்புங்கள், விடை அவருக்கு தெரிந்திருக்காது. அவரே தானாகவே சொல்லத் தொடங்கினால் விண்முனிவர் வந்து நாவிலமர்கிறார்கள். சூதமூதாதையர் வந்து விரல்களை எடுத்துக்கொள்கிறார்கள்” என்றான் சுமந்து.


“ஆம்” என்றான் பைலன்.  “அவரை பேசவைக்கலாம். இத்தருணத்தில் அவர் நாவில் தானாக எழும் கதை எதுவோ அதைக்கொண்டு நாம் புரிந்துகொள்ளவேண்டும்” என்று சுமந்து சொன்னான். “அவரை எப்படி சொல்லவைப்பது?” என்றான் வைசம்பாயனன். “அவர் தன்னியல்பாக கதை சொல்லவைக்க நம்மால் முடியும்” என்று சுமந்து சொன்னான் “அவரை மீட்டி சொல்பெருக வைப்பது ஒரு முதற்சொல்லே.” பைலன் “ஆம், நேற்று அவர் கதை சொன்னதைப் பார்த்தபோது நானும் அதையே எண்ணினேன்” என்றான்.


ஜைமினி “ஆம், அவர் உள்ளத்தில் ஒரு சொல் சென்று விழுகிறது. தேனுண்ட எடையால் நிலத்துதிர்ந்த தேனீ போல ரீங்கரித்தபடி தன்னைத் தானே அது சுற்றி வருகிறது. எங்கோ ஒரு புள்ளியில் தன் கொடுக்கை எடுத்து அது கொட்டுகிறது. அக்கணத்தில் அவரிடம் இருந்து அவர் கொண்டிருக்கும் அச்சிறுவனின் உடலும் உள்ளமும் மறைகின்றன. சொல்லென அவருக்குள் குடியிருக்கும் தெய்வம் எழுகிறது. பிறகு அவர் சொல்வதெல்லாம் பிறிதொரு மொழி” என்றான். “அதைத்தான் நானும் உணர்கிறேன். அவரை ஊழ்கத்திலாழ்த்துவது நாம் பேசிக்கொண்டிருப்பதில் இருந்து எழும் ஒரு சொல். தற்செயலாகவே அது நிகழ்கிறது” என்று சுமந்து சொன்னான்.


“அச்சொல்லை எப்படி கண்டடைவது? எப்படி அவரிடம் அதை சேர்ப்பது?” என்றான் வைசம்பாயனன். “நாம் பேசுவது எதையும் அவர் விழிசெவி கொடுத்து கேட்பதில்லை. வேறு ஏதோ ஒன்றில் ஈடுபட்டு விளையாடிக் கொண்டல்லவா இருக்கிறார்?” என்றான் பைலன். “ஆம், அவரிடமென ஒரு சொல்லும் நாம் சொல்லலாகாது. ஆனால் அவர் காதில் அச்சொல் இயல்பாக விழவேண்டும். எச்சொல் அவரை மீட்டுகிறதெனக் கண்டுகொண்டால் அதையே மீளமீளச் சொல்லவேண்டும். இது ஒரு முயற்சிதான், பார்ப்போம்” என்றபின் சுமந்து எழுந்து வாயிலை நோக்கினான். மார்போடு அரணிக்கட்டைகளை அணைத்தபடி உக்ரன் வருவது தெரிந்தது.


“இங்குதான் வருகிறார்” என்றான் சுமந்து. ஜைமினி  ”குலத்தலைவர் அரணிக்கட்டை பற்றவைக்க கற்றுக்கொடுக்கவில்லை போலும்” என்றான்.  முகம் தளர்ந்திருக்க குடில் வாயிலுக்குள் வந்த உக்ரன் “நான் இந்த சிற்றூரை தீச்சொல்லிட்டு எரிக்கப் போகிறேன்” என்றான். ஜைமினி சிரித்தபடி “ஏன்?” என்றான். அவன் சினத்துடன் புருவம் நெரிபட “நான் மிகச்சிறியவனென்று அவர் சொல்கிறார். அவர் கிழவர். நீர் நாளைக்கே செத்துப்போய்விடும் என்று அவரிடம் சொன்னேன். நான் தீச்சொல்லிட்டபோதுகூட அவரும் அவரது துணைவியும் மூன்று மகள்களும் சிரித்தனர்” என்றான்.


ஜைமினி சிரித்துவிட்டான். அதைக்கண்டு உக்ரனும் முகம் மலர்ந்து “அவர்களில் ஒருத்தி எனக்கு பால் கொண்டு வந்து தந்தாள். அவள் அழகி. அவளுக்கு ஏழு மைந்தர் பிறப்பார்கள்” என்றான். பைலன் “நீங்கள் அதை அருந்தினீர்களா?” என்றான். “ஆம், அது சூடான பாலாகையால் அதை அருந்தினேன். அதன் பிறகு அவர்கள் என் எதிரிகள் என்றாலும் நான் அரணிக்கட்டையை கடைந்தபின் அவர்களுக்கு தீச்சொல்லிடப்போவதில்லை என்றேன். ஏனென்றால் அவர்கள் குலத்தில் ஒன்பது வீரர்கள் பிறப்பார்கள்” என்றான். “அப்படியென்றால் எங்களை எரிக்க வந்தீர்களா?” என்றான் ஜைமினி.


உக்ரன் மிக இயல்பாக அரணிக்கட்டையை கீழே வைத்து அரைநழுவிய மரவுரியை ஏற்றி அணிந்தபடி “உங்களை காலமும் எரிக்கமுடியாது. நீங்கள் நால்வரும் அழியாச்சொல் கொண்டவர்கள். ஒற்றைச்சொல்லின் நான்குமுகங்கள் நீங்கள்” என்றான். மீண்டும் அரணிக்கட்டையை கையில் எடுத்துக்கொண்டு மூக்கை உறிஞ்சியபடி “நான் உள்ளே வந்தால் இந்த அரணிக்கட்டையை நீங்கள் பிடுங்கிக் கொள்வீர்கள்” என்றான்.  ஜைமினி “ஆம், சில சமயம்” என்றான். உரத்தகுரலில் “பிடுங்கிக் கொண்டால் நான் தீச்சொல்லிடுவேன்” என்று கூவினான்.


பைலன் “அந்த அரணிக்கட்டை தங்களுடையது, சூதரே, அதை தாங்களே வைத்துக் கொள்ளலாம்” என்றான். “அப்படியென்றால் இதை கொண்டுபோய் என் முழவின் பக்கம் வைத்துவிட்டு வருகிறேன். அது என் முழவு, அதை எவரும் எடுக்கக்கூடாது என்று அன்னையிடமும் தந்தையிடமும் மூன்று முறை சொன்னேன்” என்றான். “தந்தை உங்கள் ஆசிரியரா? அவரை நீங்கள் நன்கு அறிவீர்களா?” என்றான் வைசம்பாயனன். அவன் அதை கேட்டதாகத் தெரியவில்லை. “ஆசிரியரென்றால் அவரை அடிமுடி காணவேண்டுமல்லவா? அவ்வாறு நீங்கள் அவரை கடந்துவிட்டீர்களா?” என்று சுமந்து கேட்டான்.


ஆசிரியர் என்ற சொல் அவன் காதில் விழுந்ததா என ஒருவரை ஒருவர் விழிகளால் கேட்டுக்கொண்டனர். அவன் உள்ளே வந்து அரணிக்கட்டையை தரையில் வைத்து “எனக்கு இதைவிட பெரிய அரணிக்கட்டை வேண்டும் நான் அதன் மேல் ஏறி நின்று கடைவேன்” என்றான். மீண்டும் இடையில் மரவுரி நழுவியது. ஜைமினி முழந்தாளிட்டு அமர்ந்து அதை சரியாகக் கட்டினான். “ஆசிரியனை நல்ல மாணவன்தான் முற்றறிய முடியும்” என்றான் பைலன். “அவ்வளவு பெரிய அரணிக்கட்டை எனக்குத் தேவை. அதன் அடிமுடி நான் காண்பேன்” என்றான் உக்ரன். “ஆனால் அரணிக்கட்டைகளை சிறுவர்களிடம் கொடுக்கக்கூடாது. நெருப்பு சிறுவர்களை நண்பர்களாக நினைத்துவிடும்” என்றான்.


ஜைமினி உடனே அவன் நெஞ்சில் விழுந்த சொல்லை அடையாளம் கண்டு கொண்டான். விழிகளால் பிறருக்கு குறிப்புகாட்டியபின் “அடிமுடி காண்பதற்குப் பெயர்தான் கற்றல். அடியிலிருந்து முடி வரை ஒன்றை அறிந்தபின்னர் நாம் அதன் பகுதியாகிறோம்” என்றான். “ஆசிரியனை அடிமுடி காண்பது மாணவருக்கு இயலுமா?” என்றான் பைலன். “இவ்வளவு பெரிய அரணிக்கட்டை… இதன் அடிமுடியை யார் காணமுடியும்?” என்று வைசம்பாயனன் சொன்னான். “ஏன்?” என்று உக்ரன் கேட்டான். “இதற்குள் அனலிருக்கிறதே. அனலின் அடிமுடி காண்பது எளிதா என்ன?” என்றான் பைலன்.


உக்ரனின் விழிகள் மாறுவதை நால்வரும் நோக்கினர். கண்கள் விரிந்து இதழ் ஒரு சொல்லை திரும்பத் திரும்ப சொல்லலாயிற்று. விழிகூர்ந்தபோது அடிமுடி என்னும் சொல் அவன் நாவில் திகழ்வதை காணமுடிந்தது. பைலனை நோக்கிவிட்டு “ஆசிரியனை அடிமுடி காணுதல்தான் கல்வி” என்றான் வைசம்பாயனன். “ஆனால் எவரேனும் மெய்யாசிரியனை அடிமுடி காணமுடியுமா?” என்றான் பைலன். “காணமுடியும். நாமும் அடிமுடி அறியா பேருருவர் ஆகி அருகே நின்றால்” என்றான் சுமந்து.


“அனற்பெருந்தூண்” என்று உக்ரன் சொன்னான். கைகளைத் தூக்கி விழிகள் தெறித்து நிற்க “அனலின் அடிமுடியின்மை” என்றான். “அனற்பெருந்தூண். இருபுறமும் விசும்பு சூடி நின்றிருந்தது அது” என்றான். அவனுக்குப்பின்னால் எவரோ வந்து நிற்பதுபோல தோன்றி ஜைமினிக்கு மெய்சிலிர்த்தது. “அனல்நெடுந்தோற்றம். மகாருத்ரம்” என்றான் உக்ரன்.


தொடர்புடைய பதிவுகள்

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 67
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 68
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 66
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 63
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 62
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 47
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 46
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 41
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 40
வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 36
வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 35
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 28
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 22
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 14
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 13
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 65
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 12
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 7
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 64
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 6
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2016 10:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.