More on this book
Kindle Notes & Highlights
by
அசோகன் கே
Read between
January 23 - February 8, 2021
மூணு காலகட்டங்களைச் சொல்லலாம். முதலாவது, நெருக்கடி நிலைக் காலகட்டம். கட்சிக்காரங்களைக் கொத்துக் கொத்தா போலீஸ் சிறைக்கு அள்ளிக்கிட்டுப் போனதும் அவங்களைச் சித்திரவதைக்குள்ளாக்குனதும் கட்சியை முடக்குறதுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் அவரை ரொம்பப் பாதிச்சுச்சு. இரண்டாவது, இலங்கைத் தமிழர்கள் விவகாரம். வெவ்வேறு காலகட்டத்துல அது அவரைக் கடுமையாப் பாதிச்சுதுன்னாலும், இறுதிப் போர் நடந்தப்போ தவிச்சுப்போனார். ராஜிநாமா செஞ்சுடலாம்னுகூட அப்போ முடிவெடுத்தார். ‘இல்லை; இப்போ பதவியிலேயும் கூட்டணியிலேயும் இருந்து கொடுக்குற அழுத்தத்தைக்கூட வெளியே போய்ட்டா இலங்கைக்குக் கொடுக்க முடியாது; இலங்கைத் தமிழர்களுக்குப்
...more
திடீர்னு வீட்டுல புகுந்து, தலையணையெல்லாம் எடுத்து, “இதுக்குள்ளதான் பணத்தை ஒளிச்சி வெச்சிருந்தீங்களா?”ன்னு கேட்பாங்க.
தலைவருக்கு உதவியா இருந்த பலரைப் பிடிச்சுட்டுப் போய் அடிஅடின்னு அடிச்சுத் துவைச்சாங்க. கட்சிக்காரங்க பலரைச் சிறையில வெச்சு வதைச்சாங்க. போலீஸ் அடி உதையிலேயே சிட்டிபாபு செத்துப்போனார். தலைவர் கூட இருந்த பலர் அப்போ பயந்துக்கிட்டு வேலையை விட்டு ஓடிட்டாங்க.
கல்யாணத்து அன்னிக்கு எனக்கு, அழகிரிக்கு, ஸ்டாலினுக்கு எல்லோருக்கும் ஒரே மாதிரி டிரஸ். சின்னம்மாவோட நகைகளை எல்லாம் பொண்ணுக்குப் போட்டு சிங்காரிச்சிருந்தாங்க.
காலையில 7 மணிக்கு வருவேன், ராத்திரி 11 மணிக்குப் போவேன். மனைவிக்கும் பழகிடுச்சு, எங்களுக்கு ரெண்டு பையன், ஒரு பொண்ணு. அவங்களுக்கும் பழகிடுச்சு!
அவங்க விரும்பின படிப்பு கிடைக்கலை. அதைக்கூட தலைவர்கிட்டே எடுத்துக்கிட்டுப் போகலை. “நீங்க எடுத்த மதிப்பெண்ணுக்கு என்ன படிப்பு கிடைக்குதோ அதையே படிங்க”ன்னு சொல்லிட்டேன். ரெண்டு பேருமே இன்னிக்குத் தனியார் நிறுவனத்துலதான் வேலையில இருக்காங்க.
சனி, ஞாயிறு லீவு எடுத்தது இல்லை. ஒரு நல்லது கெட்டதுக்குப் போனதில்லை, ஊருக்குப் போக முடிஞ்சதில்லை. அக்கா, தங்கச்சி கல்யாணமா இருந்தாலும் - தலைவர் தலைமையில நடக்கும் - அதுக்கும் தலைவர் கூடவே போயிட்டு, தலைவர் கூடவே வந்துடுவேன்.
அதுவும் “ஊருக்குக் குடும்பத்தோட போயி ஒரு வாரம் தங்கிட்டு வாய்யா; எப்போதான் ரெஸ்ட் எடுக்கப்போற”ன்னு ஸ்டாலின் ரொம்ப வற்புறுத்தி, சொல்லி அனுப்பினதால!
இரண்டு முறை நீங்கள் கோபித்துக்கொண்டு போய்விட்டீர்கள் அல்லவா?
செய்யாத தப்புக்குத் திட்டிட்டா என்னால தாங்க முடியாது. அவர் என்னை நிறையத் திட்டுவார். ஒருமுறை ரயிலில் போகும்போது திட்டிட்டார். அதுவும் நான் செய்யாத தப்புக்கு. சேர்ந்த புதுசுல அப்படி ஒரு நாள் ஆயிடுச்சு. ரயில்ல போய்க்கிட்டு இருக்கோம். நான் தனியா உட்கார்ந்து அழுதுக்கிட்டிருக்கேன். தலைவர்கூட அன்பில் தர்மலிங்கம் மாமா இருக்கார். அவர்கிட்ட சொல்லி, “யோவ் தப்பா திட்டிட்டேன். அவன் தாங்க மாட்டான். அழுதுக்கிட்டிருப்பான். நீ போய் சமாதானப்படுத்திக் கூட்டி வாய்யா!”ன்னு சொல்லி அனுப்பியிருந்தார். அன்பில் மாமா என்கிட்ட வந்து சொன்னார், “மாப்பிளை, இன்னிக்கு இல்லை; என்னிக்கும் இதை ஞாபகத்துல வெச்சிக்க. நாம விரும்பி
...more
என்னோட இந்தப் பிறவி தலைவருக்கானது சார். அவர் இல்லாம நான் இல்லை!
காலை கண் விழிப்பு சரியாக 4.30. ‘காலையில் சூரிய உதயத்துக்கு முன் எழுந்திருப்பவருக்கு, ஒரு நாள் இரண்டு நாட்களுக்குச் சமம்’ என்பார் கருணாநிதி.
கட்சியினர், அதிகாரிகள் தொடர்பான விமர்சனங்கள், குறைகள் வெளியாகியிருந்தால் கையோடு அழைத்து விளக்கம் கேட்பார். காலையில் கருணாநிதியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது என்றால், ‘அவர்கள் சம்பந்தமாகப் பத்திரிகைகளில் ஏதோ செய்தி வந்திருக்கிறது; அர்ச்சனை காத்திருக்கிறது’ என்பது தீர்க்கமான சமிக்ஞை.
ஒன்று, அறிவாலயத்தில் காலை நடை. அல்லது, வீட்டிலேயே யோகா.
வாசிப்பு, எழுத்து, சாப்பாடு எல்லாமே அவருடைய சின்ன படுக்கை அறையில்தான். இந்தப் படுக்கை அறையிலேயே கட்சி முன்னோடிகளைச் சந்திப்பதும் உண்டு. படுக்கை அறைக் கதவைத் தாண்டினால் வெளியே சின்ன வரவேற்பு அறை. பொதுவாக, மாற்றுக்கட்சித் தலைவர்கள், அதிகாரிகளுடனான சந்திப்புகள் அங்கே நடக்கும்.’ப்ரைவேட் ஸ்பேஸ்’ என்று ஒன்றை அவர் வைத்துக்கொள்வதில்லை.
கருணாநிதி வீட்டு வாசலில் காத்திருந்தால் அவரைப் பார்த்துவிடலாம் எவரும். மனு அளிக்க வரும் எளிய மக்கள் நேரில் இங்கு அவரைப் பார்த்து மனு தரலாம். நிச்சயம் உடனடி பதில் போய்ச் சேரும்.
மதியச் சாப்பாடு துணைவி ராஜாத்தி அம்மாள் வீட்டில்.
அசைவப் பிரியரான கருணாநிதி, ஆரம்பத்தில் மதியம் கறி, இரவு விரால் மீன் என்று விரும்பிச் சாப்பிட்டதுண்டு. பின்னாளில் எல்லாவற்றையுமே குறைத்துக்கொண்டார். பெரும்பாலும் சைவம் ஆனார். எதுவென்றாலும் அளவோடு என்றாக்கிக்கொண்டார்.
பெங்களூரில் வசித்துவந்த தமிழ்க் குடும்பம் எங்களுடையது. 1946 இனக் கலவரத்துக்குப் பின் அப்பாவைப் பறிகொடுத்து, சொத்துகளையும் இழந்து தமிழகம் வந்தோம்.
எவ்வளவோ பேரை எடுத்திருக்கிறேன், பெண்களில் எம்.எஸ்.சுப்புலட்சுமியும் ஆண்களில் கலைஞருமே நான் மிகவும் ரசித்துப் படமெடுத்த ஆளுமைகள்.
திருக்குவளையில் ஆரம்பக் கல்வியை முடித்தவர் மேல்நிலைக் கல்விக்காகத் திருவாரூர் வந்தார். அங்கு இடம் மறுக்கப்பட்டபோது, ‘படிக்க இடம் தராவிட்டால் கமலாலயக் குளத்தில் விழுந்து மாய்வேன்’ என்று கமலாலயக் குளம் நோக்கி அடியெடுத்து வைத்தார்.
புகழ் பெற்ற திருவாரூர் ஆழித் தேர் முடங்கிக் கிடந்தது. தேரைச் சீரமைத்துத் தேரோட்டம் நடத்தினார்.
ரூ.100 கோடியில் திருவாரூரில் கொண்டுவரப்பட்ட மத்தியப் பல்கலைக்கழகம் இங்கு கொண்டுவரப்பட்ட திட்டங்களில் மகுடம். இதேபோல, பிறந்த ஊரான திருக்குவளையில் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி, அருகிலுள்ள திருத்துறைப்பூண்டியில் மத்திய பல் தொழில்நுட்பக் கல்லூரி அமையவும் வழிவகுத்தார். அரசியல்வாதிகள் ஆரம்ப காலத்தில் போட்டியிடுவதற்குச் சொந்த ஊரைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். கருணாநிதியோ, பிற்காலத்தில் திருவாரூரைத் தேர்ந்தெடுத்தார்.
கோபாலபுரம் பகுதியின் நான்காவது தெருவின் 15-ம் எண் கொண்ட இந்த வீடு, உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளைக் காட்டிலும் எந்த வகையிலும் மேம்பட்டதல்ல.
அவர் வீட்டை யாரேனும் குறி வைக்கிறார்கள் என்றால், உடனடியாக அரணாகச் சூழ்ந்துவிடும் தொண்டர்கள் இருக்கப் பயம் ஏன்?
1955-ல் வாங்கியது இந்த வீடு (அவர் சட்ட மன்ற உறுப்பினர் ஆனது 1957-ல்). பிராமணரல்லாதோர் இயக்கத்திலிருந்து வந்த கருணாநிதி வாங்கிய இந்த வீட்டின் முன்னாள் உரிமையாளர் ஒரு பிராமணர், சரபேஸ்வரய்யர். மேலும், பிராமணர்கள் பெரும்பான்மையாக அந்நாட்களில் வசித்த பகுதி இது என்பது இதிலுள்ள ஒரு சுவாரசியம்.
வரவேற்பறையின் இடது ஓரம் கருணாநிதியின் ‘வலது கரம்’ சண்முகநாதனுக்கானது. சுமார் 50 சதுர அடி அளவேயுள்ள சின்ன இடம்.
நெருக்கடி நிலைக் காலகட்டத்தில் ஓட்டுநர்கள் பாதியில் ஓடுவது வாடிக்கையான நிலையில், கட்சிக்காரர்களே கருணாநிதியின் ஓட்டுநர் பொறுப்பேற்றார்கள். அப்படியானவர்களில் முக்கியமான இருவர் மு.கண்ணப்பன், டி.ஆர்.பாலு.
ல் தன் மகன்கள் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு மூவர் பெயரிலும் வீட்டை எழுதி வைத்திருந்த கருணாநிதி, 2009-ல் அதை ஏழை மக்களுக்கான பொது மருத்துவமனையாக மாற்றப்போவதாக அறிவித்தார்.
என்ன முயன்று ஒன்றும் செய்ய இயலாத நிலையிலிருந்த கருணாநிதியின் ‘தமிழர் தலைவர்’ பட்டத்தை இந்தப் போர் பலி வாங்கிவிட்டது!
அது தேவனோ, தேவியோ... சக்தி ஒன்று இருக்கிறது. அதுதான் இயற்கை. அதற்கு கை, கால் இருக்கிறது, வரம் கொடுக்கும் ஆற்றல் இருக்கிறது என்பதையோ, அது ஒருவரை வாழ வைக்கும் அல்லது கெடுக்கும் என்று சொல்வதையோ என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் வீட்டிற்கு அருகிலேயே வேணுகோபாலன் கோயில். என்றைக்காவது அங்கு சென்றிருக்கிறீர்களா? நான் வெளியூர் செல்லும்போது யாராவது அன்பின் காரணமாக வேல்கள், விநாயகர், அம்பாள் சிலைகளைப் பரிசாகத் தந்தால், அவற்றை இந்தக் கோவிலுக்கு அனுப்பிவிடுவேன். நான் அனுப்பிய அந்தப் பொருட்கள் போயிருக்கின்றன. நான் போனதில்லை.
நேரு நாத்திகத் தலைவர்தான். ஆனால், அவருடைய காங்கிரஸ் இயக்கம் நாத்திக இயக்கம் இல்லையே?
விதிவிலக்கு உண்டு. பண்டித நேரு அடிப்படையில் இலக்கிய உள்ளமும், படைப்பாளிக்கான பண்பட்ட திறனும் கொண்டிருந்தவர்.
மூதறிஞர் ராஜாஜி அவர்களின் எழுத்திலும், பேச்சிலும் இலக்கியத்தின் குணாதிசயங்கள் இயங்கிக்கொண்டிருப்பதைக் காணலாம். பேரறிஞர் அண்ணா இலக்கியப் பேரரசன்.
தலைசிறந்த 10 புத்தகங்களைப் பட்டியலிடுங்களேன்? 1.திருக்குறள், 2.தொல்காப்பியம், 3.புறநானூறு, 4.சிலப்பதிகாரம், 5. பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், 6.அண்ணா எழுதிய ‘பணத்தோட்டம்’, 7. கார்க்கியின் ‘தாய்’, 8. நேருவின் உலக வரலாறு, 9.அண்ணல் காந்தியின் ‘சத்திய சோதனை’, 10.ராகுல் சாங்கிருத்தியானின் ‘வால்கா முதல் கங்கை வரை’.
செய்ய நினைத்து - செய்ய இயலாமல் போன காரியங்கள் என்ன? மத்தியில் தமிழும் ஆட்சி மொழி; சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழும் பயன்பாட்டு மொழி; மாநில சுயாட்சி -இவைதான் இன்னும் முழுமையாக முடியாமல் இருக்கின்ற காரியங்கள்.
திமுகவை வழிநடத்த, ஒரு தலைமைக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்? தலைவன்-தொண்டன் என்ற எண்ணம் சிறிதும் இன்றி, அண்ணன்-தம்பி என்ற பாசப்பிணைப்பு, கட்சித் தோழர்களின் பொதுவாழ்விலும் குடும்ப வாழ்விலும் அக்கறை, கட்சித் தோழர் எவரிடமும் பகை-வெறுப்பு பாராட்டாத பண்பு, எல்லோரும் பின்பற்றும் லட்சிய மாதிரியாகத் திகழுதல், பகுத்தறிவு - சுயமரியாதை, இனவுணர்வு காத்திடும் போர்க்குணம், அரசியல் நிகழ்வுகளின் போக்கை முன்கூட்டியே தீர்மானிக்கும் பார்வை, சமரசம் இல்லாத கொள்கைப்பிடிப்பு போன்றவையே தலைமைக்கான தகுதிகள்.
இரண்டில் ஒன்று பார்க்கும் பிடிவாதக் குணம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது? அம்மா, அப்பா… அப்புறம் அன்றைக்குத் தொடங்கி என்னை விரட்டிக்கொண்டிருக்கும் சாதியப் பாகுபாடுகள். ஆமாம், சாதியப் பாகுபாடுகள் என் மீது போட்டிருந்த விலங்குகளை உடைக்க வேண்டும் என்றால், அயராத போராட்டம்தான் அதற்கு ஒரே வழி என்பதைத்தான் என்னுடைய வாழ்க்கை எனக்குச் சொல்லிக்கொடுத்தது.
திமுக மீதான பலரின் காழ்ப்புணர்வுக்குப் பின்னணியிலும்கூட என்னைப் போன்ற ஒரு எளியவன் தலைமையில் அது இயங்குவதைத் தாங்கிக்கொள்ள முடியாத ஆற்றாமை இருப்பதை உணர்ந்திருக்கிறேன்.
திமுகவின் போர்க் குணம் குறைந்துவிடவில்லை; என்றைக்கும் அது குறையவும் குறையாது. இன்றைக்கும் ஜனநாயகத்துக்குப் பாதகமான ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டால், திமுகவிடமிருந்து அந்தப் போர்க் குணத்தை நீங்கள் பார்க்கவே செய்வீர்கள்.
பெரியப்பா கொடுத்த சிலை வடிவமைப்புல வள்ளுவரோட ஒரு கால் நேரா ஊன்றியும், இன்னொரு கால் கொஞ்சம் வளைஞ்சும் இருக்கும். ‘ஜைன விக்கிரகங்கள் எல்லாம் நேரேத்தானே நிற்குது? வள்ளுவர் ஏன் வளைஞ்சுருக்கார்?’னு கலைஞர் கேட்ருக்கார். ‘முக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய கருத்தை உலகுக்குக் கொடுத்தவர் வள்ளுவர். அவர் ‘பங்க நிலை’யில் நிக்கிறதுதான் அழகு’ன்னு பதில் சொல்லியிருக்கார் பெரியப்பா. சிலையை இரு கூறா பிரிச்சு உருவாக்கினார் பெரியப்பா. அறத்துப் பாலைக் குறிக்கிற மாதிரி அறபீடம் 38 அடியிலும், பொருள், இன்பத்துப் பாலைக் குறிக்கிற மாதிரி சிலை 95 அடியிலும்னு 133 அடியை வகுத்தார். பீடத்துல யானைகள் வேணும்னு கலைஞர்தான்
...more
கலைஞர்தான் நம்ம சனங்களுக்கு நல்லது செய்வாரு. நாம இப்ப உட்கார்ந்திருக்கிற இந்த வீடுகூட அவர் கட்டித் தந்ததுதான். நாம கலைஞர் கட்சியில இருந்தாதான் குடித்தெருவுல சைக்கிள்ல போக முடியும். செருப்பு போட்டுக்கிட்டுப் போக முடியும். தோள்ல துண்டு போட்டுக்கிட்டுப் போக முடியும். குடித்தெரு டீக்கடையில டீ குடிக்க முடியும். டீ குடிச்ச டம்ளர கழுவி வைக்க வேண்டியதில்ல. நம்ம ஆளுங்களுக்குத் தனி டம்ளர் இருக்காது. தரையில உட்கார்ந்து இட்லி சாப்பிடாம பெஞ்ச்சுல உட்கார்ந்து இட்லி சாப்பிடலாம். பண்ணை வேல செய்ய வேண்டாம். என்னை மாதிரி மீசையும் கிருதாவும் வெச்சிக்கலாம். கட்சி வேட்டி கட்டிக்கலாம். கட்சித் துண்டு போட்டுக்கலாம்.
...more
நம்மள மாதிரி சாதாரணக் குடும்பத்து ஆட்கள்ங்கிறதால, திராவிட இயக்கத் தலைவர்கள் மேல ஒரு ஈர்ப்பு.
பெரியாருக்கு அரசு மரியாதை, இலங்கை போய் வந்த இந்திய ராணுவத்தை வரவேற்க மறுத்தது
ஆங்கிலேயரிடம் தொடங்கி திராவிட நாடு கேட்டுவந்தது திராவிட இயக்கம். “இனி, இந்திய ஒன்றியத்தில் பிரிவினைக் கோரிக்கைகளை அனுமதியோம்” என்று நேரு அரசு எப்போது பிரிவினைவாதத் தடுப்புச் சட்டம் மூலமாகத் தமிழர்களின் அரசியல் குரலான திமுகவை முடக்க முற்பட்டதோ அப்போது பிரிவினை முழக்கத்தைக் கைவிட்டது அது.
1977-ல் தவறிக் கீழே விழுந்து தலையில் அடிபட்டு நினைவிழந்த 79 வயது செல்வநாயகத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்புடன், தமிழகத்தின் தலைசிறந்த நரம்பியல் நிபுணர்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைத்தார் கருணாநிதி. ஆனாலும் முடியவில்லை. செல்வநாயகத்தின் மறைவு இலங்கைப் போராட்டக் களம் பெருமளவில் ஆயுதப் போராட்டக் களமாக மாறவும் சகோதர யுத்தங்களுக்கும் வழிவகுத்தது. இலங்கைத் தமிழர்கள் உரிமைப் போராட்டத்தில் சகோதர யுத்தத்தை எப்போதுமே அங்கீகரித்ததில்லை திமுக. இந்த
இலங்கைப் போரில் தமிழ் மக்கள் அடைந்த தோல்வியில் சகோதர யுத்தத்தின் பங்கு என்ன என்பதுகுறித்து இன்றுவரை யாரும் பரிசீலனையோ ஆய்வோ செய்யவில்லை.
1985-ல் மதுரையில் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இலங்கைத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில், வாஜ்பாய், என்.டி.ராமராவ், எச்.என்.பகுகுணா, ராமுவாலியா, உபேந்திரா, அப்துல் ரஷீத் காபூர், ஜஸ்வந்த் சிங், ராச்சய்யா, சுப்பிரமணியன் சுவாமி, உன்னிகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். டியுஎல்எப்
1990-ல் சென்னை கோடம்பாக்கத்தில் ஈபிஎல்எப் இயக்கத்தின் தலைவர் பத்மநாபா கொல்லப்பட்ட சம்பவம், திமுக அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியது.