More on this book
Kindle Notes & Highlights
by
அசோகன் கே
Read between
January 23 - February 8, 2021
தொழில் துறை வளர்ச்சி சார்ந்து நான் ஆர்வமாகப் பேசியபோது, ‘என்னை ஒரு முதல்வராகப் பார்க்காதே, நண்பனாகப் பார்’ என்றார். அப்படித்தான்
முரசொலி மாறனையும் என்னையும் அழைத்துக்கொண்டு கண் கட்டு, கடும் குளிர் எதையும் பொருட்படுத்தாமல், அமெரிக்காவில் தொழில் வளர்ச்சி சார்ந்து சில நகரங்களை எப்படி வளர்த்தெடுத்திருக்கிறார்கள் என்று சுற்றிப் பார்த்தார். அப்போது, ‘தொழில், வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டை நாட்டிலேயே முதல் நிலைக்குக் கொண்டுவந்துவிட வேண்டும்’ என்று சொன்னவர், அதன்படியே உழைக்கவும் செய்தார்.
இந்த 50 வருஷங்களில் திமுகவின் தொழில் கொள்கையில் பெரிய திசை மாற்றம், ஏற்றம் எல்லாமே இருந்திருக்கிறது. நாடு சோஷலிஸப் பாதையில் சென்றபோது, ‘தனியார் – அரசுக் கூட்டுக் கொள்கை’யில் இந்திரா அரசு முனைப்பாக இருந்தபோது, தமிழ்நாட்டில் ‘ஸ்பிக்’ போன்ற நிறுவனங்களைத் தொடங்குவதில் கலைஞர் உத்வேகத்துடன் இருந்தார். பல தொழிற்பேட்டைகளைத் தொடங்கினார். நாடு தாராளமயமாக்கல் பாதையை நோக்கித் திரும்பி, பன்னாட்டு நிறுவன முதலீடுகளை ஈர்க்கத் தொடங்கியபோது, இவரும் பாதையை மாற்றினார்.
குஜராத், மகாராஷ்டிரம் போலத் தமிழ்நாடு பாரம்பரியமான பெரிய தொழில் மாநிலம் கிடையாது. ஆனால், நாட்டின் முக்கியமான தொழில் மாநிலங்களில் ஒன்றாக இன்று வளர்ந்திருக்கிறது என்றால், முதலீட்டாளர்கள் இதை விரும்புகிறார்கள் என்கிற காரணத்தினால்தானே!
அவருடைய தொலைநோக்குப் பார்வைக்கு உதாரணமாக அவர் உருவாக்கிய தகவல் தொழில்நுட்பத் துறைக் கொள்கையைச் சொல்லலாம். ‘டைடல் பார்க்’ அதன் வெளிப்பாடுதானே? எல்லோரையும் முந்திக்கொண்டார் இல்லையா!
ஒரு தொழிலதிபர் ‘அவரைச் சந்திக்க முடியவில்லை’ என்று கூறி நான் கேட்டதே இல்லை.
அடிப்படையில் பிராமணர் அல்லாதோர் இயக்கத்தின் நீட்சி திமுக. தமிழகத்தின் பெருவணிகத்தைப் பொறுத்தவரை இன்றும் பிராமணர்கள் வசம் குறிப்பிடத்தக்க ஒரு பகுதி இருக்கிறது. ஒரு பிராமணராக, பாரபட்சத்தை நீங்கள் கருணாநிதியிடம் எக்காலக் கட்டத்திலேனும் உணர்ந்திருக்கிறீர்களா? அப்படியான உணர்வையெல்லாம் நான் பார்த்ததே இல்லை. ஒரு விஷயத்தை உறுதியாகச் சொல்ல முடியும். அவரைப் பொறுத்தவரையில் எல்லாவற்றிலும் தமிழ்நாடு முன்னிலையில் நிற்க வேண்டும். அது ஒரு நெருப்பு மாதிரி அவருக்குள் எரிந்துகொண்டே இருக்கும். இதில் பிராமணர் - பிராமணர் அல்லாதோர் அப்படியெல்லாம் இல்லை; தமிழ் – தமிழர் அப்படித்தான். தமிழகத்தைச் சேர்ந்த எந்தத்
...more
சா தியைக் காக்குமிடம் என்று சொல்லி மதத்தையும் கோயில்களையும் கடவுளையும் நிராகரித்தவர் பெரியார். அதேசமயம், சாதி ஒழிப்புப் பணியிலும் தமிழ்ச் சமூகத்தின் மேம்பாட்டுப் பணிகளிலும் ஆன்மிகவாதிகளுடன் கை கோப்பதில் அவருக்கு எந்தத் தயக்கமும் இருந்ததில்லை. குறிப்பாக குன்றக்குடி அடிகளாருடனான நட்பு. அதை அப்படியே தொடர்ந்தார் கருணாநிதி.
ஆன்மிகத்துக்கு திராவிட இயக்கத்தின் முக்கியமான பங்களிப்பாக எதைப் பார்க்கிறீர்கள்? அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டம். 1971-ல் அந்த மசோதா சட்ட மேலவையில் கொண்டுவரப்பட்ட போது, மறைந்த நமது குருமகா சந்நிதானம் அதை ஆதரித்துப் பேசினார்.
ஒரு இடத்தில் பொருளாதார முன்னேற்றம் நடக்க வேண்டும், தொழில் வளர்ச்சி வேண்டும் என்றால், முதலில் அங்கு சமூக நல்லிணக்கம் வேண்டும்.
ஆட்சிக்கு வந்தவுடன் கை ரிக்ஷாக்களை ஒழித்து ரிக்ஷா ஓட்டிகளுக்கு சைக்கிள் ரிக்ஷாக்களை வழங்கினார். இது பெரிய அளவில் கவர்ந்தது. ஏனென்றால், கம்யூனிஸ்ட்டுகள் கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக ஆண்ட வங்கத்தில் இன்னும் கை ரிக்ஷா நடைமுறையில் இருக்கிறது. கலைஞர் தன் ஆட்சியில் நிறைவேற்றிய சட்டங்களில் முக்கியமானது என்று நான் கருதுவது ‘அனைத்துச் சமூகத்தினரும் அர்ச்சகராகலாம்’ சட்டம்! ‘தாழ்த்தப்பட்ட மக்கள் கலெக்டராகவும் கமிஷனராகவும் இருப்பதைக்கூடப் பார்த்துவிட்டேன். ஆனால், 110 ஆண்டு கால வரலாற்றில் ஒருவர்கூட சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகவில்லை’ என்று ஒரு கூட்டத்தில் பேசினார் பெரியார். அதை உடனடியாக
...more
தேசியக் கட்சிகளுக்கு எதிரான உருப்படியான ஒரு மாநிலக் கட்சி அது என்பது.
நாட்டின் தென்கோடியில் உட்கார்ந்துகொண்டும் வடக்கை இயக்க முடியும் என்று நிரூபித்தவர்.
‘என்ன கிருஷ்ணா மட்டும் எப்போதும் சென்னைக்குப் போகிறார். ராஜ்குமாரை மீட்பதில் கருணாநிதிக்கு அக்கறை இல்லையா; அவர் பெங்களூரு வர மாட்டாரா?’ என்றெல்லாம் பேசினார்கள். என் சங்கடத்தைப் புரிந்துகொண்ட அவர் பெங்களூரு வந்தார். அனைத்துக் கட்சியினரிடமும் பேசினார். ராஜ்குமாரின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போதும் பத்திரிகையாளர் சந்திப்பில், சில பத்திரிகையாளர்கள் தனிப்பட்ட முறையில் அவரைத் தாக்கும் கேள்விகளைக் கேட்டார்கள். ‘ஏன் தமிழிலே பேசுகிறீர்கள், கன்னடத்தில் பேச மாட்டீர்களா?’ என்றெல்லாம் கேட்டார்கள். ஆனால், கருணாநிதி எல்லாவற்றையும் பொறுமையாக எதிர்கொண்டார்.
மீட்புக் காரியத்தில் நடிகர் ரஜினியை உள்ளே கொண்டுவந்ததும் அவர்தான். ரஜினி மூலமாக தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும் பல ரகசிய வேலைகளைக் கச்சிதமாக அரங்கேற்றினார்.
எங்கேயாவது இறங்கிப் பேசலாம் என்றால், இடையில் இரு மாநில எதிர்க்கட்சிகளும், விவசாய அமைப்புகளும் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கிக்கொண்டே இருந்தன.
போரின்போது இலங்கைத் தமிழர்களைக் காக்கக் கோரி, காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் எனக்கும் மாறி மாறி அவர் உருக்கமாகப் பேசிக்கொண்டே இருந்தார். ஒருமுறை நேரில் சந்தித்தபோது ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு, ‘அப்பாவி உயிர்களையாவது காப்பாற்றுங்கள். பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்கு உறுதி கொடுக்க வேண்டும். நம்முடைய நட்புக்காகவேனும் நீங்கள் எனக்காக இதைச் செய்ய வேண்டும். தனிப்பட்ட முறையில் நீங்கள் இலங்கை அரசிடம் எனக்காகப் பேச வேண்டும்’ என்றார். நாங்களும் எங்களால் முடிந்த அளவுக்கு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்தோம். நிச்சயமாக நான் என்னால் முடிந்தவரை எல்லா நடவடிக்கைகளையும்
...more
அண்ணா மேம்பாலம்
1973 ஜூலை 1 அன்று கருணாநிதி இந்த மேம்பாலத்தைத் திறந்துவைத்தார். அன்றைய நாட்களில் இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய மேம்பாலம் இது. சமீபத்திய பிரம்மாண்டமான, கத்திப்பாரா மேம்பாலம் கட்டப்பட்டதும் கருணாநிதி ஆட்சியில்தான்.
சாதி பேதம் களைந்த சமத்துவபுரங்கள்
தலித்துகள் 40%, பிற்படுத்தப்பட்டவர்கள் 25%, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 25%, மற்ற வகுப்பினர் 10% என்று வீடுகள் ஒதுக்கப்பட்டன. சாலை வசதிகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, பூங்கா, கல்விக்கூடங்கள் பொது மயானம் எனக் குடியிருப்புக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டன.
உழவர் சந்தை எனும் முன்னோடித் திட்டம்
தமிழ்நாடு முழுவதும், படிப்படியாக 103 உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டன. கடைக்கு வாடகை கிடையாது; காய்கறிகளுக்கு அரசுப் பேருந்தில் சுமைக்கட்டணம் கிடையாது; தராசும் படிக்கற்களும் இலவசம்; 18 வருடங்களுக்கு மேலும் வெற்றிகரமாகச் செயல்படுகின்றன உழவர் சந்தைகள். வேளாண் விளைபொருட்கள் விற்பனையில் புரட்சியை ஏற்படுத்திய முன்னோடித் திட்டம் இது.
டைடல் பூங்கா
நாட்டிலேயே முதன்முறையாக 1997-ல் தகவல் தொழில்நுட்பக் கொள்கை தமிழகத்திலேயே உருவாக்கப் பட்டது.
மருத்துவமனையாக மாறிய தலைமைச் செயலகம்
அண்ணாவின் பெயரில் ஒரு நூலகம்
மெட்ரோ ரயில்
அவரு மொதமொதல்ல ஆட்சிக்கு வந்தப்போ தமிழ்நாட்டு நிலபுலமெல்லாம் மிட்டா மிராசுங்க கையிலேயும் கோயில், மடங்கள் கையிலேயும் இருந்துச்சுங்க.
தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் வளம் பத்தாது. நிலத்தடித் தண்ணீரும் ஆழ்துளைக் கிணத்துப் பாசனமும்தான் நமக்குள்ள ஒரே வழி. அதைப் புரிஞ்சுதான் விவசாயிகளுக்கு மின்சாரம் இலவசம்னு கொண்டுவந்தார்! ஆறு, குளங்களை அரசாங்கம் அப்பப்போ தூர் வார்றதுங்கிறதை நடைமுறைக்குக் கொண்டுவந்தார். கூடவே, தரிசு நில மேம்பாட்டுத் திட்டம், சொட்டுநீர், தெளிப்புநீர்ப் பாசனத் திட்டங்களையெல்லாம் கொண்டுவந்தார். விவசாயி விளைவிக்கிற நெல்லைத் தனியார் வியாபாரிங்க கொறைச்ச விலைக்கு வாங்கி கொள்ளை லாபம் அடிக்கிறதுக்கு முடிவு கட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைக் கொண்டுவந்தார். காய்கறி, பழங்களை விற்க உழவர் சந்தைகளைக் கொண்டுவந்தார். ரெண்டு முறை
...more
எல்லாத்தையும்விட முக்கியம் ஒரு பிரச்சினையின்னு வந்தா ஆளு இங்கே ஓடி வந்துரும். காது கொடுப்பாருங்க. வாயை அடைக்க மாட்டார்!
எழுத்தின் வலிமையை உணர்ந்த திலகர், காந்தி, நேரு, இஎம்எஸ், அண்ணா வரிசையில் வைக்கத்தக்கவர் கலைஞர். - என்.ராம்
1968 ஏப்ரல்-மே மாதங்களில் முதல்வர் அண்ணா வாஷிங்டன் வந்திருந்தபோது கொலம்பியா பல்கலைக்கழக இதழியல் மாணவனாக நான் உடன் சென்றிருந்தேன். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு 1969-ல் புதிய முதல்வர் கலைஞரை ‘தி இந்து’ நாளிதழின் இளம் நிருபராகச் சந்தித்தேன். அன்று தொடங்கி, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டை நெருங்கும் எங்கள் இடையேயான நட்பு ஒரு அரசியல் பத்திரிகையாளர் - அரசியல் தலைவர் இடையிலான தொழில்ரீதியிலான உறவுக்கு அப்பாற்பட்டது. எல்லாக் காலகட்டங்களிலும் எளிதில் அணுகக் கூடியவராகவும் அவருடைய கருத்துகளோடு உடன்படாவிட்டாலும் - விமர்சித்தாலும் நட்பு பாராட்டக் கூடியவராகவுமே அவர் இருந்திருக்கிறார்.
ஆதிக்க சாதியினரின் அடக்குமுறை, மூடநம்பிக்கைகள், பிற்போக்குத்தனமான சமூகப் பழக்கவழக்கங்கள், பகுத்தறிவற்ற சிந்தனை ஆகியவற்றுக்கு எதிராக முற்போக்கான போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கும் திராவிட இயக்கத்தின் மீது எனக்கு மதிப்பு உண்டு.
மன்றத்தில் பேசுகையில் அவர் குரலில் ஆணவமோ ஆதிக்க உணர்வோ எள்ளலோ என்றைக்குமே எதிரொலித்ததே கிடையாது. நாடு முழுவதுமே உள்ள முதல்வர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இந்த விஷயத்தில் அவர் நல்ல உதாரணர்.
நீதிக் கட்சி 1916-ல் உருவானதற்குப் பிறகு உருவான திராவிட இயக்கம், இயல்பாக ஒரு இனவெறி இயக்கமாக மாறியிருக்க முடியும். மாறாக, அது தமிழ் மொழி, பண்பாடு, சமூக நீதி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தந்து, ஒரு கலாச்சார இயக்கமாக வலுப்பெற்றது. அதற்கான காரணம் இதுதான்: திராவிடர் கழகத்துக்கு ரத்தத்தையும் சதையையும் வழங்கிய கலாச்சார அடையாளங்கள் - திரிமூர்த்திகளான பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர்!
கருணாநிதி கதை-வசனம் எழுதி பட்டிதொட்டியெங்கும் பேசப்பட்ட ‘பராசக்தி’ படம் அரசியலில் ஏற்படுத்திய தாக்கத்தை மட்டுமே ஒரு தனி ஆய்வுக்குள்ளாக்கலாம்.
கருணாநிதியின் அறிவாற்றல் இரண்டு கல்கிகளுக்குச் சமம்.
‘தமிழன்’ நாளிதழில் வார ராசி பலன்கள் பகுதி உண்டு. ஜோதிடரிடமிருந்து அந்த வார பலன் வரவில்லை. பக்கம் அச்சுக்குப் போக வேண்டும். எனவே, முந்தைய வார ராசிபலன் பகுதியில் மேஷ ராசிக்கான பலனை விருச்சிக ராசிக்கும் துலாம் ராசிக்கானதைக் கும்ப ராசிக்குமாக மாற்றி பக்கத்தை அனுப்பிவிட்டோம். மறுநாள் கருணாநிதி அழைத்தார். ‘ஏன்யா, விருச்சிக ராசிக்கான பலன்ல சித்திரை நட்சத்திரம் எப்படி வரும்? அது துலாம் ராசியிலதான வரும்? என்னா ஜோசியமோ!’ என்று கடிந்துகொண்டார். பத்திரிகையின் ஒவ்வொரு எழுத்தையும் அவர் வாசிக்கிறார் என்பது மட்டும் அல்ல; தனக்குக் கொஞ்சமும் உடன்பாடில்லாத ஜோதிடத்தையும் கூட அவர் விட்டுவைக்கவில்லை என்பது
...more
கருணாநிதி அரசியலில் நுழைந்த காலத்தில், பிரதான பத்திரிகைகள் சுயமரியாதை இயக்கத்தின் வலிமையை உணரவோ, அங்கீகரிக்கவோ இல்லை. எனவேதான் சுயமரியாதை இயக்கத்தினர் தாங்களாகவே பத்திரிகைகளைத் தொடங்கி நடத்தினர்.
காங்கிரஸ் முன்னெடுத்த தேசியவாதம், மொழி உரிமைகளையும் இதர அடையாளம்சார் அரசியலையும் நாட்டை ஒன்றுபடுத்துவதிலிருந்து கவனத்தைச் சிதறவைக்கும் அம்சங்களாகக் கருதியது; இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையானது முதலில் திக, பிறகு திமுக மீதான இத்தகைய ஒதுக்குதலுக்குப் பின்னிருந்தது. 2. இந்திய இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த அறிவுஜீவிகள், ‘சாதியல்ல - வர்க்கம்தான் பிரச்சினை’ என்று கருதினர். சாதி காரணமாகவே மக்களில் பெரும்பாலானோர் அவமானத்துக்கு உள்ளானதைக் கருத்தில் கொள்ள இடதுசாரிகள் தவறினர்.
1960-களின் தொடக்கத்தில் கருணாநிதி மற்றும் திமுக மீது பிரதான பத்திரிகைகளின் அணுகுமுறை மாறியது. தங்களுடைய பத்திரிகைக்காக கருணாநிதி தொடர் எழுத வேண்டும் என்று அவை விரும்பின. ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற அவருடைய சுயசரிதம் முதலில் ‘குமுதம்’ இதழில் தொடராக வெளிவந்தது. அவருடைய அரசை ‘குமுதம்’ விமர்சிக்கத் தொடங்கியதும் அடுத்து ‘தினமணி கதிர்’ இதழில் எழுதினார். நெருக்கடி நிலை அமலுக்குப் பிறகு நடந்த பொதுத் தேர்தலில் எம்ஜிஆர் தொடங்கிய கட்சியிடம் திமுக தோற்ற பிறகு, பிரதான பத்திரிகையுலகிலும் நுழைய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு ‘குங்குமம்’ வார இதழைத் தொடங்கினார். ஊடகத்தில் ஒவ்வொரு தொழில்நுட்ப முன்னேற்றம்
...more
1969-ல் அகில இந்திய வானொலி ஒலிபரப்பில், கருணாநிதி வாசித்த இரங்கல் கவிதை லட்சக்கணக்கான தமிழர்களின் கண்களில் நீரைப் பெருக்கச் செய்ததுடன் அவருடைய கவித் திறமையைக் கேட்டுப் பலரும் அவர்பால் ஈர்க்கப்படவும் காரணமாக இருந்தது. அண்ணாவுக்குப் பிறகு திமுகவுக்கும் ஆட்சிக்கும் யார் தலைமை ஏற்பது என்ற கேள்விக்கான விடையை அந்தக் கவிதை ஒலிபரப்பே தந்தது.
ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்க அஞ்சி, தாங்கள் கூற விரும்புவதை மட்டும் கூறிவிட்டு நடையைக் கட்டும் இன்றைய அரசியல்வாதிகள் பலரின் மத்தியில், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஊடகங்களைச் சந்திப்பவர் கருணாநிதி. எப்படிப்பட்ட கேள்விகளுக்கும் நிதானமிழக்காது பதில் அளிப்பார்.
பத்திகளைப் படித்த கையோடு காலையில் அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும். பிடித்தால் பாராட்டுவார். பிடிக்காவிட்டால் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவார். அதேபோல நானும் பல முறை எனக்குச் சரியென்று பட்டதைப் பட்டவர்த்தனமாகப் பேசியிருக்கிறேன். அவர் முதல்வர் என்று ஒருநாளும் யோசித்ததில்லை. அவருடன் அப்படிப் பேசும் சுதந்திரம் அவரது ஆட்சியில் பத்திரிகையாளர்களுக்கு இருந்தது. எத்தனை எளிமையாக அவரை அணுக முடிந்தது... இன்றும் வியப்பு ஏற்படுக்கிறது எனக்கு!
ஒரு முன்னாள் நடிகைக்கும், ஒரு வசனகர்த்தாவுக்கும் இடையே நடக்கும் இதிகாசப் போராக, ஒரு சமனற்ற போட்டியாகத் தோன்றும்.
மாநில மொழிகளின் முக்கியத்துவத்தை டெல்லி அரசுக்குத் தெளிவுபடுத்திய பெருமை திமுகவைச் சேர்ந்தது.
திமுக ஒரு ஜனநாயக அமைப்பு என்று கருணாநிதி சொல்வதுண்டு. ஆனால், அவருடைய அனுமதியும் சம்மதமும் இல்லாமல் கட்சியில் எதுவும் நடக்காது. அவருடைய ஆளுமையும் திறமையும் அரசியல் சாணக்கியமுமே கேள்விகளுக்கு அப்பாற்பட்டவராக அவரை ஆக்கியது.
எனக்குன்னு ஏதாவது அரசியல் சித்தாந்தம் இருந்துச்சான்னா, ‘எனக்கு மட்டுமில்ல; என் குடும்பத்துக்கே அது இருந்ததில்லை’னு சொல்வேன். எங்க அப்பா சொல்வார் ‘நாம சோத்துக் கட்சி’ன்னு.
குறிப்பா மனித உரிமைகள் கடுமையா நசுக்கப்பட்ட காலகட்டம்.