More on this book
Kindle Notes & Highlights
by
அசோகன் கே
Read between
January 23 - February 8, 2021
28.04.2009 ல் இலங்கையில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படாததைக் கண்டித்து, கருணாநிதி அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதம் தொடங்கினார். இலங்கை அரசிடம் பேசிவிட்டதாகவும் பேரழிவு ஆயுதங்கள் ஒருபோதும் பயன்படுத்தப்படாது என்று இலங்கை அதிபர் ராஜபக்ச உறுதியளித்திருப்பதாகவும் இந்திய அரசு உறுதியளித்ததன் விளைவாக உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். கடைசிக் கட்டமாக ராஜினாமா செய்யவும் தயாராக இருந்தார். அப்படிச் செய்தால், இந்திய அரசை வற்புறுத்த உள்ள வாய்ப்பும் பறிபோகும் என்று பலரும் சொல்லவே கைவிட்டார்.
அவர் முழுப் பொதுவுடைமைவாதி என்று என்னால் சொல்ல முடியாது. தமிழகத்தைத் தாராளமயம் நோக்கித் திருப்பியவர்களில் அவரும் ஒருவர். அதேசமயம், மாநில முதல்வர்களுக்குப் பெரிய அதிகாரங்கள் ஏதும் இல்லாத இந்நாட்டு அமைப்பில், தனக்கு வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் ஒவ்வொருவரும் எப்படிச் செயல்படுகிறார்கள் எனும் மதிப்பீடு முக்கியமானது. அப்படி நிறையக் காரியங்களைச் செய்திருக்கிறார் கருணாநிதி. கம்யூனிஸம் மீது எப்போதுமே ஒரு ஈர்ப்பு அவருக்கு இருந்தது. மக்ஸீம் கார்க்கியின் ‘தாய்’ நாவலைத் தமிழில் கவிதை வடிவில் அவர் மொழிபெயர்த்ததை இங்கு நினைவுகூரலாம். ஃபிடல் காஸ்ட்ரோவைப் பற்றி அவர் எழுதிய கவிதை ஸ்பானிஷில் மொழிபெயர்க்கப்பட்டு,
...more
இலங்கையில் நடந்த இறுதிப் போரில் கருணாநிதி இன்னும் கொஞ்சம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தால், பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம் – அப்படி அவர் அழுத்தம் கொடுக்கவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது.
காலையில் சீக்கிரமே எல்லா தினசரிகளையும் படித்துவிடும் பழக்கம் உள்ளவர் என்பதால், அவர் தொடர்பாக ஏதேனும் விமர்சனம் வைத்திருந்தால், படித்த கையோடு தொலைபேசியில் நம்மை அழைத்து விளக்கம் அளிப்பார். நாம் கூறும் கருத்து ஏற்புடையது எனில், உடனே அதை ஏற்றுக்கொள்வார். இது அரிய குணம் என்றே நினைக்கிறேன்.
தங்கள் கட்சியில் இருப்பவர்களை மட்டும் ‘தேசிய முஸ்லிம்கள்’ என்று அழைத்தது காங்கிரஸ்.
இந்தியாவே எங்கள் தாயகம் என்று இங்கேயே இருந்துவிட்ட முஸ்லிம்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைத் தொடங்கினார்கள். காயிதே மில்லத் அதன் தலைவரானார்.
தங்கள் கட்சியில் இருந்த முஸ்லிம்களை மட்டும் ‘தேசிய முஸ்லிம்கள்’ என்றது காங்கிரஸ்.
இஸ்லாமியர்கள் தங்கள் கடைகள், உணவகங்களில் பெயர்களை இந்துப் பெயரில் மாற்றி, வெங்கடாஜலபதி போன்ற சாமி படங்களையெல்லாம் கடைகளில் மாட்டிக்கொண்டு, தங்களையும் இந்துக்களாகக் காட்டிக்கொண்டு தொழில் நடத்த வேண்டிய சூழல் இருந்திருக்கிறது.
தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் எல்லாவற்றையும் தாண்டி முஸ்லிம் லீக் தாக்குப் பிடித்தது. அதற்குக் காரணம் இங்கே திராவிட இயக்கம்... அங்கே கம்யூனிஸ்ட் இயக்கம்.
‘திராவிட நாடு’ கோரிக்கையை காயிதே மில்லத் ஆதரிக்கவில்லை.
இன்று எல்லோரும் போற்றும் காமராஜர் ஆட்சிக் காலத்தில்கூட முஸ்லிம்களை போலீஸ் வேலையில் எடுக்க யோசிக்கும் நிலை இருந்தது என்பது பலருக்கு ஆச்சரியம் தரலாம். அதுதான் உண்மை.
உருது பேசும் முஸ்லிம்களையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது,
உமறுப்புலவருக்கு மணி மண்டபம் கட்டியது, முஸ்லிம்களின் கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காகச் சிறுபான்மையினர் நல இயக்குநரகம் தொடங்கியது; உருது அகாடமி, முஸ்லிம் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, அரசு விடுதிகள், ஆதரவற்ற, கணவனால் கைவிடப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு மகளிர் உதவும் சங்கம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் பயிற்சி, உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம், உலமா ஓய்வூதியம் அதிகரிப்பு, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்துக்குச் சட்டப்படியான அங்கீகாரம், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் தொடங்கி, சிறு வணிகர்களுக்கான கடன் ஏற்பாடு என்று எவ்வளவோ செய்திருக்கிறார்.
திரைப்படங்களில் வெற்றிகரமான வசனகர்த்தாவாகவும் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். ஆனாலும் அந்தத் தடத்தில் அவர் தொடரவில்லை. அதைப் போலவே ஆற்றல்மிக்க பேச்சாளராகவும் அவர் வெளிப்பட்ட தருணங்கள் உண்டு. இருந்தாலும் மேடைகளை அவர் விரும்பியதில்லை. ஆனால், எழுத்தில் தீராத ஆர்வம் கொண்டிருந்தார்.
சென்னை பிரஸ் கிளப் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்து, அதன் முதல் தலைவராகவும் மாறன் பொறுப்பில் இருந்திருக்கிறார். 1967-ல் தமிழகத்தின் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்காக அண்ணா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். அப்போது அவருக்குப் பதிலாக அவராலேயே தென்சென்னை தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கப் பட்டவர் மாறன்.
‘உயிர் பிழைத்திருந்தால்தானே உரிமை பேச முடியும்?’
ராயபுரத்தில் வாங்கிய அந்தச் சின்னக் கட்டிடத்துக்கு ‘அறிவகம்’ என்று பெயர் சூட்டினார் அண்ணா. பிறகு, தேனாம்பேட்டையில் 1964-ல் ‘அன்பகம்’ உருவானது.
ஒருவழியாக வேலை தொடங்கி ‘அறிவாலயம்’ நிமிரத் தொடங்கியபோது, ‘கட்டிட அனுமதியில் கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்துவிட்டது. உடனே பணியை நிறுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தை ஏவியது எம்ஜிஆர் அரசு. வேலையை நிறுத்திவிட்டுக் கட்டிட அனுமதியைப் புதுப்பிக்க விண்ணப்பித்தது திமுக. அப்போது, ‘பொதுப் பயன்பாட்டுக்காக 10% இடத்தை ஒதுக்க வேண்டும்’ என்றார்கள். அப்படி ஒதுக்கியதும், ‘அந்த இடத்தை மாநகராட்சி பெயரில் பத்திரப் பதிவுசெய்து தந்தால்தான் அனுமதி’ என்றார்கள். இப்படிச் சொன்னதையெல்லாம் செய்தும் அடுத்தடுத்து குடைச்சல்கள் வரவும், பிரச்சினையை 18.1.1986 அன்று சட்ட
...more
கட்சி அலுவலக நிர்வாகச் செலவுகளை எதிர்கொள்ளத் தக்க வகையில் அந்த வளாகத்திலேயே ஒரு திருமண மண்டபமும் கட்டப்பட்டது, கருணாநிதியின் நிர்வாகத் திறனுக்கான சான்று.
“இது ஆபீஸ் இல்ல சார். சென்னையில காங்கிரஸோட ‘சத்யமூர்த்திபவன்’ தொடங்கி பாஜகவோட ‘கமலாலயம்’ வரைக்கும் எல்லா இடங்கள்லேயும் நீலச் சட்டை போட்ட தனியார் செக்யூரிட்டி களைத்தான் வெளியே பார்க்க முடியும். இங்கே மட்டும்தான் தொண்டரணிப் பாதுகாப்பு. வெளியேயும் சரி, உள்ளேயும் சரி; கட்சிக்காரங்கதான். இந்த ஆபீஸ்ல யாரும் யாரையும் சார்னு கூப்பிடுறதில்லை. எல்லாருமே அண்ணன், தம்பிதான்.
ஒரு இடத்திற்கு அன்பில் போகிறார். அங்குள்ள விஷயங்கள் குறித்து அதிகாரியிடம் கேள்வி கேட்கிறார். ‘எல்லாம் சரி, நீ யார்?’ என்கிறார் அதிகாரி. ‘திமுக மாவட்டச் செயலாளர்’ என்கிறார் அன்பில். ‘அப்படியென்றால்?’ என்கிறார் அதிகாரி. அன்பில் சொல்கிறார், ‘கலெக்டர் மாதிரி!’
இடையில் துண்டு மட்டும் கட்டிக்கொள்ள வேண்டும் மேலுக்குத் துண்டு அணியக் கூடாது என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. தோளில் துண்டு போடக் கூடாது, காலுக்குச் செருப்பு அணியக் கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. “இசை வகுப்புகள்தான் உண்மையில் எனக்கு அரசியல் வகுப்புகளாக இருந்தன; சாதிகளின் படிநிலையில் மேலே இருந்த சிலர், பெரும்பாலான மக்களைத் தாழ்ந்தவர்களாகவும் தங்களை உயர்ந்தவர் களாகவும் கருதிக்கொண்டு, குரூரமான மகிழ்ச்சியோடு மட்டம் தட்டுவதைப் பார்த்தேன். பெரும்பாலான மக்களை நாம் இழிவாக நடத்துகிறோம் என்ற உணர்வுகூட அவர்களுக்கு இல்லை” என்று கருணாநிதி நினைவுகூர்கிறார்.
யார் எங்கே அமர்வது, என்ன விதமான பாடல்களைப் பாடுவது, எந்த இடத்தில் யார் பாட வேண்டும் என்பதெல்லாம் சாதி அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட்டன.
அண்ணா, இரா.நெடுஞ்செழியன், க. அன்பழகன், கே.ஏ.மதியழகன் போன்ற திமுகவின் முன்னணித் தலைவர்களைப் போல பல்கலைக்கழகத்தில் பயின்றவர் அல்ல கருணாநிதி.
இந்த ஐம்பெரும் காப்பியங்களின் சிறப்பு என்னவென்றால்... இவை பவுத்தம், சமணம் ஆகியவற்றின் சிறப்புகளைக் கூறுபவை; யாகம் வளர்த்தல், பலி கொடுத்தல் போன்ற பிராமணியப் பழக்கவழக்கங்களைச் சாடுபவை.
இதையடுத்து காவிரி டெல்டா பகுதியில் விவசாயத் தொழிலாளர்களிடையே இடதுசாரிகளுக்கு இருந்த செல்வாக்கை திமுக கைப்பற்றவும் உதவியது.
அவருடைய சமூக நீதிக் கொள்கையின் ஒரு அம்சம்தான் தமிழகத்தின் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு, அனைத்துக் கிராமங்களுக்கும் சாலைகள் மற்றும் பேருந்துப் போக்குவரத்து வசதி என்ற திட்டங்களாகும். தமிழகத்தில் 1969-லேயே கிராமப்புறங்களில் 100% மின் இணைப்புகள் வழங்கத் தீவிரம் காட்டினார் கருணாநிதி. இந்த இலக்கை அடைந்ததில் தமிழகம்தான் முதலிடம் வகித்தது.
நெருக்கடி நிலைப் பிரகடனத்தை எதிர்த்த ஜெயப்பிரகாஷ் நாராயண் முக்கிய எதிர்க்கட்சிகளை இணைத்து ஜனதா கட்சியை உருவாக்கியபோது, அதனுடன் சேர்ந்த முதல் பெரிய கட்சி திமுகதான். தேசிய முன்னணி அரசு அமைந்ததில் தான் ஆற்றிய பங்கை கருணாநிதி எப்போதுமே மகிழ்ச்சியுடன் நினைவுகூர்வார்.
நாட்டிலேயே முதன்முறையாகத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்,
அதிகார யுத்தமோ, பனிப்போரோ இல்லாமல் தொடர்ந்து 40 ஆண்டுகளாக ஒரு கட்சியின் தலைவரும், பொதுச்செயலாளரும் ஒரே நேர்க்கோட்டில் பயணிப்பது அரிதிலும் அரிதானது.
நாவலர் நெடுஞ்செழியன் தலைமை இந்த இயக்கத்தைக் காப்பாற்றாது; கலைஞருடைய தலைமைதான் காப்பாற்றும் என்று உணர்ந்து ஏற்றுக்கொண்டவன் நான்.
நரிக்குறவர்களுக்கும் திருநங்கைகளுக்கும், புதிரை வண்ணார்களுக்கும் நலவாரியங்கள் அமைத்துத் தர வேண்டும் என்ற எனது கோரிக்கைகளை அவரைத் தவிர வேறு எவரும் நிறைவேற்றியிருக்க மாட்டார்கள்.
1996 சட்ட மன்றத் தேர்தலில் திமுக வென்று ஆட்சியமைத்தது. கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் சட்ட மன்றத் தொகுதியில் பாஜக சார்பில் வென்றேன். அதுவரை தென்னிந்தியாவில் பாஜகவுக்கு ஒரு எம்எல்ஏகூடக் கிடையாது.
1960-களில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டங்களின்போது தஞ்சாவூர்தான் அதன் மையம்.
முதல்வர் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், துறைச் செயலாளர் பதவியில் இருப்பவர்கள்தான் பங்கேற்பார்கள். அதற்குக் கீழே உள்ளவர்களைக் கூட்டத்துக்கு அழைக்கும் மரபு கிடையாது. ஆனால், இவர் அதை உடைப்பார்.
அண்ணா சாலையை ‘மவுண்ட் ரோடு’ என்று சொன்னால், “என்ன சீஃப் செக்ரட்டரி, நீங்களே இப்படிச் சொல்லலாமா?” என்பார். ‘பிற்பட்டோர்’ என்றால் கோபம் வரும். “பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர்” என்று திருத்துவார்.
அவருடைய வேகத்துக்கு ஈடுகொடுத்த தலைமைச் செயலர்கள் என்றால், முதன்மையானவர் கே.என்.நம்பியார். அடுத்தது சபாநாயகம்.
2006 முதல் அமைச்சரவைக் கூட்டம். ஒரு பேப்பரை எடுத்து எழுத ஆரம்பித்தார். “தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றும் வகையில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்” என்று. பக்கத்திலிருந்து பார்த்தவர்களுக்குத்தான் தெரியும், இவை ஒவ்வொன்றுக்கும் பின்னிருந்த கனவுகள்!
காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரங்கள். தன் காலத்துக்குள் எப்படியாவது தீர்வு கண்டுவிட வேண்டும் என்று முயன்றார். இதற்காக அண்டை மாநில முதல்வர்களிடம் தன்னைக் குறைத்துக்கொண்டு பல முறை அவர் நடந்துகொண்டிருக்கிறார். இதெல்லாம் வெளியுலகுக்குத் தெரியாது. அவ்வளவு இறங்கிப் பேசுவார். டெல்லியுடன் இணக்கமான உறவை அவர் தொடர்ந்து பராமரித்ததில் இந்தக் கணக்கெல்லாமும் உண்டு.
மிகுந்த மனஉளைச்சலைக் கொடுத்த பிரச்சினை என்றால், இலங்கையில் நடந்த இறுதிப் போர்! அந்தக் காலகட்டம் முழுவதும் அவர் துடித்துக்கொண்டிருந்தார். தன்னாலான எல்லா முயற்சிகளையும் எடுத்தார். எஸ்.எம்.கிருஷ்ணாவிடமும் மன்மோகன் சிங்கிடமும் சோனியாவிடமும் எவ்வளவு மன்றாடியிருக்கிறார்!
“பதவி விலகினால் நிலைமை மேலும் மோசமாகும்; எந்த அழுத்தத்தையும் இலங்கைக்குக் கொடுக்க முடியாது” என்று பலரும் சொல்லக் கேட்டுதான் அந்த முடிவைக் கைவிட்டார்.
உண்ணாவிரதத்தின்போது பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் இருவரும் அவரிடம், “இலங்கை அதிபர் ராஜபக்சவிடம் நேரடியாகப் பேசிவிட்டோம். அழிவை ஏற்படுத்தும் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்த மாட்டோம் என்று அவர் உறுதியளித்துள்ளார். இலங்கை அரசு தாக்குதலை நிறுத்திவிட்டது” என்று உறுதியாகப் பேசினார்கள்.
அவருக்கு இந்தி தெரியாது. ஆனால், ஆங்கிலம் பேசுவார். என்ன நினைக்கிறாரோ அதை ஆங்கிலத்தில் அவரால் வெளிப்படுத்த முடியும். பிரதமரே ஒரு விஷயத்தைச் சொன்னாலும், தனக்கு உடன்பாடு இல்லை என்பதை முகத்துக்கு நேரே சொல்லிவிடுவார். ரொம்ப விரிவாகப் பேச வேண்டியதிருந்தால் மட்டும்தான் “நீ பேசுய்யா” என்பார். அப்புறம் டெல்லி அரசியல் ஆர்வம் இருந்திருந்தால், எந்த மொழியையும் வசப்படுத்திக்கொண்டிருக்கக் கூடியவர்தான் அவர். கணினி கற்றுக்கொள்ளும்போது அவருக்கு 70 வயது. அவர் நினைப்பு முழுக்க தமிழ், தமிழர் என்றுதான் இருந்தது. டெல்லிக்குச் செல்வதைவிடவும் டெல்லிக்கு இணையான அதிகாரத்தை சென்னைக்குப் பெற வேண்டும் என்று செயல்பட்டவர்
...more
படிக்காமல் ஒரு கோப்பில்கூட கலைஞர் கையெழுத்துப் போட மாட்டார். கோப்புகளைத் தேங்கவிட மாட்டார். ஒரே நாளில் 250 கோப்புகளில் கையெழுத்திட்ட நாட்கள் உண்டு!
ஒவ்வொரு மாநில அதிகாரியோடும் அங்குள்ள சூழல்கள், சவால்களை விசாரித்துக்கொண்டுவந்த பிரதமர் மன்மோகன் சிங், என் முறை வந்தபோது, “ஓ, தமிழ்நாடா? தமிழ்நாட்டைப் பற்றி எந்தப் பிரச்சினையும் இல்லை. பிரச்சினைகள் உள்ள பாக்கி ஆட்களிடம் பேசிவிட்டு வந்துவிடுகிறேன்” என்றார் சிரித்தபடி.
காவல் நிலையங்களில் புகுந்து கட்சிக்காரர்களை ஆளுங்கட்சியினர் விடுவித்துச் செல்வது என்பது இன்னமும் பல மாநிலங்களில் இயல்பான ஒன்று. ஆனால், கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே தேவையில்லாமல் காவல் துறைச் செயல்பாடுகளில் தலையிட மாட்டார்கள். மற்றவர்கள் தலையிடுவது தெரியவந்தால் அனுமதிக்க மாட்டார்கள்.
அரசியலுக்காக சாதி, மதக் கலவரங்களை உருவாக்குவது அல்லது கலவரங்கள் உருவாகையில் அரசியல் நலன்களுக்காக குற்றத்தரப்பைப் பாதுகாப்பது என்கிற மாதிரியான அணுகுமுறை இரு கட்சிகளிடமும் இருந்ததே கிடையாது.
நாட்டிலேயே நாம்தான் கமாண்டோ படை தொடங்கினோம். அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தொடங்கினோம். அடர்த்தியான எண்ணிக்கையில் காவல் நிலையங்களை அமைத்திருக்கிறோம்.
ஒரு ஆட்சியாளராக யாருடைய காலகட்டம் உங்களுக்குச் சவாலானதாக இருக்கும்? எந்த அதிகாரியைக் கேட்டாலும் கருணாநிதியைத்தான் சொல்வார். எந்த நேரம் அழைப்பார், எதுகுறித்து விசாரிப்பார் என்று யூகிக்கவே முடியாது. காலை 5 மணிக்கு போன் அடித்து, “ஏங்க, ‘தீக்கதிர்’ பத்திரிகையில இப்படி ஒண்ணு வந்துருக்கே, உண்மையா?” என்பார். சின்ன பத்திரிகைகள், கட்சிப் பத்திரிகைகளைக்கூட உதாசீனப்படுத்த மாட்டார். திடீரென்று, “சில்லறைக் கடைகளில் என்ன விலை விற்கிறார்கள் என்பது முதற்கொண்டு தமிழ்நாடு முழுக்க பருப்பு, தக்காளி விலை வேண்டும்” என்பார். எந்த விஷயத்திலும் அவர் கையில் ஒரு தரவுகள் பட்டியல் இருக்கும். நாம் கொடுப்பதோடு அதை
...more
அதே மாதிரி எல்லா விஷயங்களையும் அவரிடம் மறுத்தும் பேசலாம். ‘ஆமாம்சாமி’களை அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது!