More on this book
Kindle Notes & Highlights
by
அசோகன் கே
Read between
January 23 - February 8, 2021
தமிழகத்தில தேசியக் கட்சிகள் தலையெடுக்க முடியாமல் போய்விட்ட சூழல்ல, பிராமணர்களோட பரிபூரண ஆதரவு எம்ஜிஆருக்கு இருந்துச்சு. டெல்லியிலேயும் பெரும்பாலும் அவருக்கு ஆதரவான அலையே இருந்துச்சு. கலைஞருக்கு எல்லாம் அப்படியே நேர் எதிர்.
எம்ஜிஆருக்குப் பிறகு திமுக ஆட்சியில இருந்தப்போ வழக்கு வரும். ஆனா, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் ஆட்டோ வர ஆரம்பிச்சுச்சு.
ஹிட்லர் முகம்போல சித்திரிச்சு அட்டைப் படம் போட்டோம். கோபத்தோட உச்சத்துக்கே போயிட்டாங்க ஜெயலலிதா. அன்னிக்கு ஒரே நாள்ல எங்க மேல 105 வழக்குகள். அலுவலகம் புகுந்து அடிக்கிறாங்க. அப்போவெல்லாம் வெளியிலதான் ‘நக்கீரன்’ அடிச்சிக்கிட்டிருந்தோம். எந்த அச்சகத்திலும் அச்சிடக் கூடாதுன்னு மிரட்டல் போயிடுச்சு. பத்திரிகையே மூடுற சூழல் உருவாச்சு. கலைஞர் காதுக்கு இந்த விஷயம் எப்படியோ போய்ச் சேர்ந்துடுச்சு. பொதுவா, இப்படியான சூழல்கள் வரும்போது ஒரு கண்டன அறிக்கையோட முடிச்சுக்கிறதுதான் அரசியல்வாதிகள் செய்யுற வேலை. ஆனால், கலைஞர் கூப்பிட்டனுப்பினார். ‘‘நீங்க உங்க பத்திரிகையை ‘முரசொலி’ அச்சகத்துல அடிச்சிக்கலாம்’’னு
...more
இந்திரா காந்தியை ஹிட்லரா சித்திரிச்சு படம் வரையச் சொல்லி அதை ‘முரசொலி’யில போட்டவர் அவர்!
இதுதான் ‘நக்கீரன்’ திமுக ஆதரவுப் பத்திரிகையாக வழிவகுத்ததா? நாங்க திமுக ஆதரவுப் பத்திரிகைங்கிறதை ஏத்துக்க மாட்டேன்.
அவதூறு வழக்கு போடுறது வேற; பொடா வழக்கு போடுறது வேற இல்லையா? ஏதோ தேச விரோதி மாதிரி பொடா வழக்கு போட்டு 252 நாள் என்னைச் சிறையில அடைச்சு வெச்சிருந்தாங்க ஜெயலலிதா. அப்போவும் கலைஞர் குரல் கொடுத்தார். இதை ஒரு தேசிய விவகாரம் ஆக்கினார்.
மதுராந்தகத்தில் ஒரு தனிச் சிறையும்கூட ஏற்பாடாச்சு.
ஒரு நாள் ரஜினி என்னைக் கூப்பிட்டார். ‘‘கிருஷ்ணாதான் கருணாநிதியைப் பார்க்கப் போகணுமா? ஏன் கருணாநிதி இங்கே வர மாட்டாரான்னு அங்கே எதிர்க்கட்சிங்க ரொம்ப பிரச்சினை செய்றாங்க’’ன்னார். ‘‘நான் இது அநியாயமா இருக்கே! இப்படியெல்லாமாகூடப் பேசுவாங்க!’’ன்னு கேட்டேன். கலைஞர்கிட்ட பேசிக்கிட்டிருந்தப்போ இதைச் சொன்னேன். உடனே கொஞ்சமும் தயங்காம ‘‘அப்ப ஒண்ணு செய்வோம். தமிழ்நாடு சார்புல நீங்க முதல்ல அங்கே போய்ப் பார்த்துட்டு வாங்க. ரெண்டு நாள்ல நானும் வர்றேன்’’னார்.
லட்சக்கணக்கான தமிழர்கள் உயிரோடு சம்பந்தப்பட்ட விஷயம் இது கோபால். இன்னிக்கு நாம இறங்கிப்போனா நாளைக்கு காவிரி உட்பட பல விஷயங்கள்ல தமிழ்நாட்டோட இணக்கமா அவங்க வர இது உதவும். நாம இறங்கிப்போறதால ஒண்ணும் மோசம் போகப்போறதில்லை’’ன்னு சொன்னார். கிருஷ்ணாவை மட்டும் இல்லை; அனைத்துக் கட்சிக்காரங்களையும் சந்திச்சார். ராஜ்குமார் வீட்டுக்குப் போய் ஆறுதல் சொன்னார். எப்படியும் மீட்டுடுவோம்னார். அங்கே ஒரு பிரஸ்மீட் நடந்துச்சு. ரொம்ப ஆத்திரமூட்டுற வகையிலேயும் அவமானப்படுத்துற வகையிலேயும் கேள்விகள் கேட்டாங்க. எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டார். மறுநாள் இது சம்பந்தமா நான் கேட்டப்போ, ‘‘நாம தனி மனுஷன் இல்லை; பொது
...more
‘முரசொலி’யை வளர்த்தெடுத்ததில் கருணாநிதி குடும்பத்தினருக்கு முக்கியமான பங்குண்டு.
நெருக்கடிநிலைக் காலகட்டம். தணிக்கை என்ற பெயரில் எல்லாவற்றிலும் கை வைப்பார்கள் அதிகாரிகள். அப்படியும் ரொம்பப் பூடகமாக இலக்கிய நடையில் சில விஷயங்களை உள்ளே தள்ளிவிடுவார் தலைவர். அவற்றையெல்லாம் விலாவாரியாக விளக்கி ‘எப்படி இதையெல்லாம் விட்டார்கள் தணிக்கை அதிகாரிகள்?’ என்று கேட்டு ‘மக்கள் குரல்’ பத்திரிகையில் எழுதுவார்கள். விளைவாக, எழுதப்படும் எல்லாவற்றையுமே தூக்கிவிட ஆரம்பித்தார்கள் அதிகாரிகள். ஒருகட்டத்தில் வெறுத்துப்போய்தான், ‘வெண்டைக்காய் உடம்புக்கு நல்லது’, ‘விளக்கெண்ணெய் சூட்டைத் தணிக்கும்’ என்றெல்லாம் பகடிசெய்து எழுத ஆரம்பித்தார்.
அடிப்படையில் திமுக எதிர்ப்புணர்வு கொண்ட சில பிராமணர்கள் முன்னின்று அந்நாட்களில் நடத்திய பத்திரிகை ‘மக்கள் குரல்’.
இந்தியாவிலேயே அதிகம் குறிவைத்துத் தாக்கப்பட்ட இயக்கம் திமுக - தலைவர் கலைஞர். நாட்டிலேயே விளிம்புநிலையிலிருந்து வந்தவர்கள் அரசியலதிகாரத்தைக் கையில் எடுத்து, சமூக நீதியைக் கொண்டுவந்த வரலாற்றைக் கொண்ட இயக்கம் இது. அந்தக் காரணத்துக்காகவே தொடர் தாக்குதலுக்கும் உள்ளானது. தாக்குதலுக்குப் பதில் கொடுப்பவர்களைப் பார்த்துதான் இந்தச் சமூகம் எல்லாக் கேள்விகளையும் கேட்கிறது.
நீ இருக்குமிடந்தேடி யான் வரும் வரையில் இரவலாக உன் இதயத்தைத் தந்திடண்ணா.. நான் வரும்போது கையோடு கொணர்ந்து அதை உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா!
என்னதான் கருணாநிதியை நீங்கள் ஆத்திரமாகத் திட்டுங்கள். நேருக்கு நேர் சந்தித்தால் எந்தப் பெரிய மனிதரும் அவரிடம் சரணாகதி அடைந்துவிடுவார்கள். இந்திய அரசியலில் அந்தக் கவர்ச்சியுள்ளவர்களில் அவரும் ஒருவர். அதனால்தான் எந்த வீழ்ச்சிக்கு இடையிலும் எழுந்து நின்றுவிடுகிறார்.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு என்னை அவர் இசை அமைக்கச் செய்தது என் வாழ்நாள் பேறு! - எம்.எஸ்.விஸ்வநாதன்
இளம் வயதில் என்னை இரண்டு விஷயங்கள் பெரிதும் செதுக்கின. ஒன்று, திராவிட இயக்கம், மற்றொன்று, சினிமா. பகுத்தறிவு, சமத்துவம், சமூக நீதி, போன்றவற்றை எங்களுக்குக் கற்றுத்தந்த இயக்கம் அது. 50 வருடங்களாக திரைப்படத் தலைப்பு முதற்கொண்டு எல்லாவற்றிலும் தமிழைப் பயன்படுத்துகிறேன் என்றால், காரணம் கலைஞர்.
பிராமணர்களை அடுத்து சொற்ப அளவில் முதலியார்களும், அற்ப அளவில் பிள்ளைமார்களும் அரசாங்கச் சுகத்தை அனுபவித்தார்களேயன்றி, பொருளாதாரத்திலும் கல்வியிலும் பின்தங்கிக் கிடந்த பெரும்பான்மைத் தமிழர்கள் கண்களும் கைகளும் கட்டப்பட்டே கிடந்தார்கள்.
கருத்துகளை மக்களிடம் முன்னெடுத்துச் செல்வதற்கு மூன்றே மூன்று ஊடகங்கள் மட்டுமே அன்று வாகனங்களாயின. ஒன்று மேடை; இன்னொன்று பத்திரிகை; அடுத்தொன்று திரைப்படம். பெரியார் முதலிரண்டு ஊடகங்களை வெற்றிகொண்டார். கலை - சினிமா என்ற மூன்றாம் ஊடகத்தை முற்றிலும் வெறுத்தார். பெரியார் வெறுத்த மூன்றாம் ஊடகத்தை அண்ணாவும் - கலைஞரும் மிகக் கவனமாகக் கைப்பற்றினார்கள். அதில் அந்த இருவருக்கும் பொருளும் புகழும் கிடைத்தன. அதைவிட, யாருக்குச் சென்று சேர வேண்டுமோ அந்தக் கடைக்கோடி மக்களுக்கும் இயக்கத்தின் நோக்கம் சென்று சேர்ந்தது.
1950-களில் தமிழ்நாட்டு மக்கள்தொகை மூன்று கோடிதான். இவர்களில் கற்றோர் எண்ணிக்கை வெறும் 19%.
எழுத்து போடுதல்’ என்று சொல்வது எங்களூர் வழக்கம்)
மாடர்ன் தியேட்டர்ஸைப் பொறுத்த அளவில் வசனம், இசை என்பதெல்லாம் கூட்டுப் பொறுப்பு. வசனகர்த்தா பெயரே இல்லாமல்கூடப் படம் வெளியாகும். அந்த வழக்கத்தை மாற்றியவர் கலைஞர்.
அவருடைய வார்த்தைகள் வரலாற்றை மாற்றிக்கொண்டே இருக்கின்றன - இது ஃபிடல் காஸ்ட்ரோ பற்றி மார்க்வெஸ் சொன்னவை. ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி!’, ‘உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம்!’ கருணாநிதியின் இப்படியான பல வாசகங்கள் தமிழ்நாட்டு வரலாற்றை மாற்றியிருப்பதோடு, மார்க்வெஸின் வார்த்தைகளை ஒப்பிடலாம்.
படத்தை காங்கிரஸ் அரசாங்கம் தடைசெய்துவிடக்கூடும் என்ற பேச்சுகளாலேயே மக்களிடையே இந்தப் படம் மீதான ஆர்வம் பெருகியது.