More on this book
Kindle Notes & Highlights
by
அசோகன் கே
Read between
January 23 - February 8, 2021
ஒரு மருத்துவரோட மகன் மருத்துவராகுறதுல, பேராசிரியரோட மகன் பேராசிரியராகுறதுல இருக்குற நியாயம் அரசியல்லகூட இருக்கலாம்தானே! இங்கே திமுகவுல இன்னொரு பாரம்பரியம் இருக்கு - இது குடும்பமா கட்சியில இருக்குற, கட்சிக்கு உழைக்குற கட்சி. எங்க கட்சி மாநாடுகளுக்கு நீங்க வாங்க... கட்சிக்காரங்க எப்படிக் கணவன், மனைவி, பிள்ளைகள்னு குடும்பம் குடும்பமா வருவாங்கன்னு அங்கே காட்டுறேன். இன்னிக்கு அப்பா, நாளைக்குப் பிள்ளைன்னு கட்சிக்கு உழைக்கிறவங்களை அவங்க குடும்பமா இருக்கிறதை மட்டும் காரணம் காட்டிப் புறக்கணிச்சுட முடியாது.
‘ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு’ன்னு.
கட்சிக்குள்ள இருக்குற பிரச்சினைகளைப் பத்தியெல்லாமும் சொல்வார். ‘ஆனா, இதையெல்லாம் தெரிஞ்சுக்கோ, வெளியில விவாதிக்காதே!’ன்னு சொல்வார்.
சின்ன வயசுல அண்ணா பிறந்த நாள் கூட்டம் நடத்துறப்போ ஒருமுறை கொஞ்சம் பெரிசா பந்தலைப் போட்டுட்டோம். தெருவுல இருக்குற கிருஷ்ணன் கோயிலை இந்தப் பந்தல் மறைச்சுடுச்சு. அப்போலாம் எங்க தெரு பிராமணர்கள் அதிகம் வசிச்ச தெரு. எங்க குடும்ப டாக்டர் கிருஷ்ணன் - அவரும் பிராமணர்தான் - ‘மூணு நாளைக்கு வீட்டிலிருந்தபடி சுவாமியைச் சேவிக்க முடியாம செஞ்சுட்டான் உங்க பிள்ளை!’ன்னு தலைவர்கிட்ட சொல்லிட்டார். அன்னிக்கு சாயுங்காலம் கூட்டத்துல பேசினப்போ, “நேற்று ஸ்டாலின் கனவில் வந்த கிருஷ்ணன், ‘எல்லோரும் வீட்டிலிருந்தே என்னைக் கும்பிடுகிறார்கள், ஒரு மூன்று நாட்களுக்காவது கோயிலுக்கு வந்து கும்பிடச் செய்’ என்று சொல்லித்தான்
...more
இரவு படுக்கைக்குப் போகும்போது அவர் கையில ஏதாவது ஒரு புத்தகம் இருக்கும். அன்றாடம் நேரில் நூறு பேரையாவது சந்திச்சுடுவார். இது ரெண்டையும் தக்கவெச்சுக்கணும்னு நெனைக்கிறேன்!
தலைவருக்கும் மறைந்த மாறன் மாமாவுக்கும் நடைபெற்ற வாக்குவாதங்கள், சிறு மோதல்கள் கட்சி வட்டாரங்களில் பிரசித்தி பெற்றவை. எப்போதும் தனக்குச் சரி என்று பட்டதை எவ்வித வெளிப்பூச்சும் இல்லாமல் பேசக் கூடியவர் மாறன். சில நேரங்களில் இருவருக்கும் இடையிலான உரசல் கொஞ்சம் பெரிதாகி, அவர் கோபித்துக்கொண்டு போகும் அளவும் போய்விடும்.
“உங்க அப்பாகிட்ட சொல்லு... எல்லா நேரத்துலேயும் அரசியல்வாதியாவே இருக்கக் கூடாதுன்னு” என்று சொல்லிவிட்டு வண்டியில் ஏறிப் போய்விட்டர்.
தலைவரும் பேராசிரியரும் நாகநாதனும்தான் நான் என்ன படிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். நான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற தலைவரின் கருத்தை என்னிடம் வலியுறுத்திப் பேசி, என்னைச் சம்மதிக்கவைத்தவர் துரைமுருகன்.
தானே போலீஸாரை அழைத்து, பெற்ற மகனையே அவர்களிடம் ஒப்படைத்தார். தலைவரின் சொல்லுக்கு மறு சொல் பேசாமல் அண்ணன் ஸ்டாலினும் சிறைக்குச் சென்று பல துன்பங்களை அனுபவித்தார்.
எங்கள் வீட்டுக்குப் பூ விற்றவரைக்கூட விசாரணை என்ற பெயரில் கூட்டிச்சென்று அடித்து உதைத்து அனுப்பியிருக்கிறார்கள். எத்தனையோ குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் தலைவரை வந்து சந்தித்துச் சென்ற அதே வீட்டில் வைத்துதான் அவரை நள்ளிரவில் கைதுசெய்து இழுத்துச் சென்ற நிகழ்வும் நடந்தேறியது.
குடும்ப விஷயங்களில்கூட கட்சியின் முக்கிய தலைவர்களோடு கலந்து ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுவது என்பதுதான் வழிமுறையாகவே இருந்திருக்கிறது!
இந்தப் பிறவி தலைவருக்கானது! சண்முகநாதன் பேட்டி
இதுவரை சண்முகநாதன் தன் வேலையைத் தாண்டி யாரிடமும் பேசியதில்லை. தன் வாழ்வில் அவர் அளித்த முதல் பேட்டி இது.
அப்பா நாகஸ்வர வித்வான். வாழ்ந்து கெட்ட குடும்பம்.
அவர் கூட்டத்தை போலீஸ் ரிப்போர்ட் பண்ணுறதுக்காக என்னை அனுப்பியிருந்தாங்க. அப்போது அவர் எதிர்க்கட்சி வரிசையில இருக்கார். பேச்சை நான் எடுத்திருந்த குறிப்பின் அடிப்படையில அவர் மேல கேஸ் விழுந்துச்சு. அப்போ அவர் பேச்சை நான் எடுத்த குறிப்போட ஒரு பிரதியை அவருக்கும் அனுப்பியிருக்காங்க. படிச்சுப்பார்த்தவர், “என் பேச்சை ஒரு மனுஷன் அப்படியே எழுதியிருக்காரே!”னு ஆச்சரியமாயிருக்கார். அப்போ அவர்கிட்ட தமிழ் ஷார்ட் ஹேண்ட் எழுத ஆள் கிடையாது. திமுக ஆட்சிக்கு வந்தவுடனே நான் யார்னு கண்டுபிடிச்சுட்டார். “உன்னைப் பொதுப்பணித் துறை அமைச்சர் பார்க்கணும்னு சொன்னாருப்பா”னு சேதி வந்துச்சு. நான் பயந்துட்டேன். கோபாலபுரம்
...more
எங்க அப்பா கோதண்டபாணி திககாரர். அவருக்குத் தலைவரைத் தெரியும். ஒருமுறை திருவாரூர் பக்கம் போனப்போ எங்கப்பாவைப் பார்த்திருக்கார். “உங்க பையனை பிஏவா வெச்சிக்கலாம்னு கூப்பிட்டா, ‘வர மாட்டேன்’னு போயிட்டான்!” என்று அவரிடம் சொல்லியிருக்கிறார் தலைவர். எங்கப்பா உடனே எனக்குக் கடிதம் போட்டார். “பணம் பெருசில்லடா தம்பி, அவரு பெரிய மனுஷன். அவருக்கு உதவியா இருக்குறது பெரிய காரியம்”னு எழுதியிருந்தார். அப்பாவுக்குப் பயந்துகிட்டு திரும்பவும் கோபாலபுரம் வந்தேன். “என்னய்யா, அன்னிக்கு வரலைன்னு போன?”ன்னாரு தலைவர். “எங்க அப்பா கடிதம் எழுதியிருக்காருய்யா”ன்னேன். “சரி, ஏற்பாடு பண்றேன்”னார். ஆனா, அதுக்குள்ளேயே அவர் வேறு
...more
அம்மா (தயாளு), சின்னம்மா (ராசாத்தி)
1976-ல் ஆட்சி போச்சு. எல்லாரும் அவர்கிட்டேயிருந்து விலகிட்டாங்க. நான் மட்டும் தினம் வீட்டுக்கு வந்துக்கிட்டிருந்தேன்.
“பாவம் சின்ன வயசு. இவரு வயசுக்கு செகரட்ரி வரைக்கும் ஆகலாம் மாமா; வேலையை விடச் சொல்ல வேண்டாம். எதிர்க்கட்சித் தலைவருக்கும் ஒரு பிஏ வெச்சிக்கலாம் மாமா. அந்த இடத்துக்குச் சண்முகநாதனைக் கேட்டு வாங்கிடுவோம்”னு மாறன் சொன்னாரு. அவருக்கு என் மேல ரொம்பப் பிரியம் உண்டு. கோபம் வரும். திட்டுவாரு. ஆனா, ரொம்பப் பிரியமா இருப்பார்.
ஆனா, முதல்வரா இருந்த எம்ஜிஆர் வேற கோபத்துல ‘முடியாது’ன்னு கோளாறு கொடுத்தார். தலைவருக்குக் கோபம் வந்திருச்சி. அப்படின்னா, “எனக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியே வேண்டாம்”னு சொல்லிவிட்டார். நாஞ்சிலாருக்கு விஷயம் தெரிஞ்சு எம்ஜிஆர்கிட்ட பேசினார். “இதையெல்லாம் மறுத்தால் பெரிய கெட்ட பெயர் வந்துவிடும்”னு அவர் சொல்லவும் எம்ஜிஆர் ஏத்துக்கிட்டார்.
திமுகல அவரு இருந்தப்போ என்னை எம்ஜிஆருக்கு ரொம்பப் பிடிக்கும். கல்யாணம் ஆனவுடனே என்னையும் மனைவியையும் அழைச்சு விருந்தெல்லாம் கொடுத்தார். ஒன்பது வெள்ளி டம்ளர் பரிசளிச்சார். அவர் முதலமைச்சர் ஆனதும் நான் அவருக்கு பிஏவாக இருக்கணும்னு கூப்பிட்டு அனுப்பினார். அது என்ன கணக்குன்னா, தலைவருக்கு யாரெல்லாம் பலமா இருக்காங்களோ, அவங்களையெல்லாம் தன் பக்கம் இழுத்துடணும்கிற கணக்கு. நான் மறுத்துட்டேன்.
எம்ஜிஆர்கிட்டேயும் உண்டு. பின்னாடி ஜெயலலிதாகிட்டேயும் உண்டு. ரெண்டு பேரோட பழிவாங்கல் கதைகளும் நிறைய உண்டே! என்ன, யாரும் எழுத மாட்டாங்க! என்னையே சும்மா விடலையே எம்ஜிஆர்? எனக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாம பால் கமிஷன்ல தொடர்புபடுத்தி, ஏதோ ஒரு கொள்ளைக்காரனைக் கைதுசெய்யுற மாதிரி என்னை அவர் ஆட்சியில நடத்தினாங்க. அப்போ போலீஸ் மிதிச்சதுல அடிபட்ட எங்கப்பா பிழைக்கலையே! பழிவாங்குற எண்ணத்துலதானே தலைவர் தன்னோட சொந்த வீடு மாதிரி அன்றாடம் போய்ப் பார்த்துப் பார்த்துக் கட்டின புதிய தலைமைச் செயலகம் கட்டிடத்தை மருத்துவமனையா மாத்தினாங்க ஜெயலலிதா!
பிரிஞ்சு போய்க் கட்சி ஆரம்பிச்சதுக்கு அப்புறம்கூட, காரில் எம்ஜிஆர்கூடப் போகும்போது ஒருத்தர் பேச்சுவாக்குல ‘கருணாநிதி’ன்னு சொல்லப்போவ, “கலைஞரை என் முன்னாடி கருணாநிதின்னு சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம்?”னு கேட்டுப் பாதி வழியில வண்டிலேர்ந்து அவரை இறக்கிவிட்டிருக்கார் எம்ஜிஆர்.
திமுகவோட வளர்ச்சி இந்தியா முழுக்க மாநிலக் கட்சிகள், கீழ்நிலைச் சமூகங்களோட எழுச்சிக்கு வழிவகுத்துடும்; அதனால அதுக்கு அணை போடணும்னு நெனைச்சாங்க. பலரையும் குறிவெச்சவங்க. அண்ணா இருக்கும்போதே எம்ஜிஆரை வருமான வரித் துறையை வெச்சி நெருக்கிட்டாங்கன்னு பேச்சு வந்துடுச்சு. அண்ணா இருக்கும்போதுதானே 1964-ல மேலவை உறுப்பினர் பதவியை எம்ஜிஆர் ராஜினாமா செய்றார்... அதேசமயத்துலதானே ‘காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி!’னு பேசுறார்... அண்ணா மறைவுக்குப் பின்னாடி எம்ஜிஆருக்கான நெருக்கடிகள் அதிகரிச்சதுதான் பிளவோட மையம்.
“எனக்கு சுகாதாரத் துறை அமைச்சகம் வேணும். அதனால நான் ஷூட்டிங்குலேர்ந்து திரும்புற வரைக்கும் அமைச்சரவையை அறிவிச்சுட வேணாம்”னு தகவல் அனுப்பினார் எம்ஜிஆர்.
“அமைச்சரவையைக் கொடுத்துடலாம்; ஆனா, அமைச்சரவையில இருக்குறப்போ சினிமாலேர்ந்து ஒதுங்கி இருக்கணும்”னு முடிவெடுத்தாங்க. அந்த முடிவை நான்தான் எம்ஜிஆர்கிட்ட கொண்டுபோய்ப் படிச்சுக் காண்பிச்சேன். “அப்ப முடியாதுன்றாங்க, அப்படித்தானே!”ன்னு கோபமா கேட்டார்.
ஜெயலலிதாவை மதுரைக் கூட்டத்துல கட்சிக்குள்ள கொண்டுவரணும்னு நெனைச்சார். அதுக்கும் கட்சிக்குள்ள எதிர்ப்பு இருந்துச்சு. இதுக்கெல்லாம் தொடர்ச்சியாகத்தான் திருக்கழுக்குன்றம் பொதுக்கூட்டத்தில் கணக்கு கேட்டு அவர் பேசினார்.
பேச்சு போய்க்கிட்டே இருந்துச்சு. “சரி, இன்னிக்கு ஆற விட்டு நாளைக்குப் பேசிக்கலாம்”னு சொல்லிக் கூட்டத்தை அவர் முடிச்சப்போ, “நீங்க இப்படி இழுப்பீங்கன்னு சொல்லித்தான் நான் நியூஸை அனுப்பிட்டேன்”ன்னார் நாவலர். அதாவது, வெளியில நின்ன பத்திரிகையாளர்கள் மத்தியில “எம்ஜிஆர் மேல நடவடிக்கை எடுத்துட்டோம்”னு செய்தி போயிட்டு. தலைவர் பதறிப்போய் “என்ன இப்படிச் செஞ்சுட்டீங்க!”ன்னு சொல்லி “ஓடிப்போய் செய்தியை நிறுத்துப்பா”ன்னு என்னை அனுப்பினார். ஆனா, அதுக்குள்ளேயே செய்தியை டெல்லிக்கு அனுப்பியாச்சுன்னுட்டார் பிடிஐ நிருபர் வெங்கட்ராமன்.
கட்சி பிளவுபட்டதுல டெல்லியின் சதி இருந்தது”ன்னு தலைவர் பல முறை சொல்லியிருக்கிறார்.
திராவிட இயக்கத்துலேர்ந்து வந்த ரெண்டுல ஒரு கட்சிதான் ஆட்சியில இருக்க முடியும்கிற சூழல் ஏற்பட்டதுல ஒரு சந்தோஷம் அவருக்கு இருந்துச்சு. 1979-ல ஒரு இணைப்பு முயற்சி நடந்துச்சு. பிஜு பட்நாயக் மத்தியஸ்தம் செஞ்சார். ரெண்டு பேரும் பேசினாங்க. கிட்டத்தட்ட எல்லாம் முடிஞ்சிடுச்சுன்னு நெனைச்சோம். மறுநாளே வேலூர் கூட்டத்தில் வேறு மாதிரி பேசினார் எம்ஜிஆர். இடையில் என்ன நடந்துச்சுன்னு தெரியலை. அதே மாதிரி அவரோட இறுதிக் காலத்துல அப்படி ஒரு சூழல் நெருங்குச்சு. ஆனா, அவரைச் சுத்தி இருந்தவங்க அதை விரும்பலை.
எந்தப் பதவியில இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி; காலையில 4.30 மணிக்கு எழுந்துடுவார். நான் காலையில 7.30 மணிக்கு இங்கே வருவேன். அதுக்குள்ள எல்லாப் பத்திரிகைகளையும் படிச்சுட்டு, உடற்பயிற்சி முடிச்சிக் குளிச்சுட்டு, ‘முரசொலி’ கடிதம் முடிச்சுட்டுத் தயாராகிடுவார். நாளெல்லாம் வேலை முடிச்சு இரவு படுக்கைக்குத் திரும்ப 11 மணி ஆயிடும். அப்புறம்தான் நான் வீட்டுக்குக் கிளம்புவேன். அப்புறமும் 12 மணி வரைக்கும் ஏதாவது வாசிச்சுட்டுதான் படுப்பார்.
உரைகளை டிக்டேட் பண்ணும்போது ஏதோ இன்னொரு ஆள் அவருக்குள்ளே புகுந்துகிட்ட மாதிரி இருக்கும்.
சமத்துவபுரம், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டம், உள்ளாட்சியிலேயும் அரசுப் பணிகள்லேயும் பெண்களுக்கு இடஒதுக்கீடு, உள்ஒதுக்கீடு இதையெல்லாம் கொண்டுவந்த தருணங்கள்ல அவ்ளோ பெருமிதமா இருந்தார். அந்த சந்தோஷத்தை நம்மளையும் தொத்திக்க வைப்பார். தமிழ்நாடு எல்லாத்துலேயும் முதல்ல வரணும்; சமூக நீதியைக் கொண்டுவரணும்… அதான் அவருக்கு!
வெள்ளத்துல புழல் ஏரி உடைஞ்சுடும்கிற சூழல்னு ஒருமுறை தகவல் வந்தப்போ அதிகாலை 4 மணிக்கு எழுந்து ஓடினார். முதல்வரே இப்படி ஓடி வந்தா அதிகாரிங்க எப்படிச் சும்மா இருக்க முடியும்? அத்தனை பேரும் மெனக்கெட்டு, ஒரு பெரிய படையையே இறக்கிப் பெரிய வெள்ள அபாயத்துலேர்ந்து சென்னையைக் காப்பாத்தினார். அப்போ ‘தினமணி’யில் ‘தூங்காத கருணாநிதி!’ன்னு ஒரு தலையங்கம்கூட எழுதியிருந்தாங்க.
நிறைய மாற்றங்களைக் கொண்டுவரணும்னு நெனைச்சு ஆட்சிக்கு வந்தவங்களுக்கு, மாநில அரசுகளோட கையில ஒண்ணும் இல்லைங்கிறதுதான் ஆட்சிக்கு வந்த பின்னாடி தெரிஞ்சுச்சு.
“இது ராணுவத்துக்குச் சொந்தமான கட்டிடம். மத்திய அரசைக் கேட்காமல் நாம் வெள்ளைகூட அடிக்க முடியாது”ன்னு சொன்னாங்க அதிகாரிகள். தமிழ்நாட்டு மக்களோட முழு ஆதரவைப் பெற்ற ஒரு முதலமைச்சருக்கு அந்த மாநிலத்தோட தலைமைச் செயலகத்தைச் சுத்தப்படுத்துறதுக்குக்கூட டெல்லிகிட்ட அனுமதி கேட்கணும்னா இது அக்கிரமம் இல்லையா? அதிகாரம் இல்லாத பதவியை வெச்சிக்கிட்டு மக்களுக்கு என்ன செய்ய முடியும்கிற கோபம்தான் மாநில சுயாட்சிக் கோரிக்கைக்கான உந்துசக்தி. அப்பவே தலைமைச் செயலகத்துக்கு ஒரு புதுக் கட்டிடம் கட்டணும்னு தலைவர் முடிவெடுத்துட்டார்.
அது எத்தனை வருஷக் கனவுன்னு ஜெயலலிதாவுக்குத் தெரியும்; அதனாலதான் அதை மருத்துவமனையாக்கிச் சிதைச்சார்!
பொதுவா ஒரு குணம் உண்டு அவருகிட்ட. தனிப்பட்ட விஷயங்கள் அவரை ரொம்பத் துளைக்காது. பொது விஷயங்கள்தான் கடுமையா பாதிக்கும். எனக்குத் தெரிஞ்சு அவரைக் கடுமையா பாதிச்ச விஷயங்கள்னா இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை, அண்ணா, எம்ஜிஆர், முரசொலி மாறனோட மரணங்கள்.
எம்ஜிஆர் மரணமுமா? ஆமா சார். அவர் மருத்துவமனையில இருந்தப்போ ‘நானும் பிரார்த்திக்கிறேன்’னு எழுதினாருல்ல... அப்பவே டிக்டேட் செய்யும்போது கண்ணெல்லாம் கலங்கும். எம்ஜிஆர் இறந்த இரவு முழுக்க கண்ணீர் வடிச்சார். நானே அழுதேன் சார். அரசியல் வேற - அன்பு வேறல்ல!
திமுகவோட வரலாற்று வெற்றின்னா அது 1971 தேர்தல் வெற்றிதான். 184 சீட் ஜெயிச்சது.
1991-லன்னு நெனைக்கிறேன்... அலகாபாத்துலேயும் பாட்னாவுலேயும் பேசினார். “நான் ஒரு தேச விரோதி. உங்களைச் சந்திக்க வந்திருக்கிறே”னு ஆரம்பிக்கிறார். அடுத்து ராமரைப் பத்தி. நான் அரண்டுபோன கூட்டங்கள் அவை.
நெருக்கடி நிலைக்கு அப்புறம் ஆட்சிக்கு வந்தபோது இந்திராவே தலைவர் சொல்றதுக்கு நிறைய மதிப்பளிச்சு செஞ்சுருக்கார். ஏனைய எல்லாத் தலைவர்களையும் வரவேற்பறையில சந்திக்குற பழக்கம் கொண்ட மன்மோகன் சிங் இவரை மட்டும் வாசலிலேயே வந்து வரவேற்பார்; வழியனுப்புவார்.
அவருக்கு இதயத்துக்கு நெருக்கமா இருந்தவர் வி.பி.சிங். ஒரு ராஜ பரம்பரையில பிறந்திருந்தும் சாதி ஒழிப்புலேயும் சமூக நீதியிலேயும் அவர் காட்டின அக்கறைதான் இதுக்கான முக்கியமான காரணம்.
அவருடைய ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் மிகமிக முக்கியமான ஒருவராக இருந்தவர் யார் - உங்கள் பார்வையில்? மாறன்!
கட்சியோட டெல்லி முகமாகவும் சித்தாந்த முகமாகவும் ஒரு காலகட்டம் முழுக்க அவர் இருந்திருக்கார்.
தப்பு பண்ணுற கட்சிக்காரங்களை உள்கட்சிக் கூட்டங்கள்ல பிடிபிடின்னு பிடிச்சுடுவார்.
மாறனோட மனைவிகிட்ட ஒருமுறை தலைவர் சொன்னது ஞாபகத்துக்கு வருது: “உனக்கு 35 வருஷமாத்தான் மாறனைத் தெரியும். எனக்கு அவன் பிறந்ததில் இருந்தே தெரியும்!”ன்னார்.
சம்பத், கண்ணதாசனுக்கெல்லாம் ஏற்பட்ட கோபமே தலைவரோட பேச்சுக்கு அண்ணா பெரிய மதிப்பு கொடுக்குறார்ங்கிறதாதானே இருந்துருக்கு!
1959 சென்னை மாநகராட்சித் தேர்தல்ல, ‘30 இடங்கள்ல போட்டியிட்டால் போதும்’னு நெனைக்குற அண்ணாகிட்ட ‘90 இடங்கள்ல போட்டியிடுவோம்’னு சொல்லி 45 இடங்களையும் ஜெயிக்கவெச்சு மாநகராட்சியை முதல் முறையா கைப்பற்றுகிற முடிவுக்கு இவர்தானே காரணமா இருந்திருக்கார்!